எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்

மனிதச் சிந்தனையும் ஆளுமையும் புறச்சூழல்களினாலும் வாழ்க்கை அனுபவங்களாலும் உருவாவதாக நமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பெரும்பாலும் இது உண்மையென்றே நாம் நம் அனுபவங்களிலிருந்தும் பார்த்து, இச்சிந்தாந்தத்தை ஏற்று வந்திருக்கிறோம். ஆனால் மனித மனதின் விசித்திரங்களை என்னவென்று சொல்வது?

buchenwald-1945-wiesel-is-on-the-second-row-of-bunks-seventh-from-the-leftஎலீ வீஸல் தனது நினைவுகளை, தன் சிறுவயதுப் பிராயத்துக்குப் பின்தள்ளிப் பார்க்கும்போது, அவர் தன் தந்தையுடன் நாஜிகளின் சிறைமுகாம்களில் ஒன்றான ஆஸ்விட்ஸில் பசியிலும் பட்டினியிலும் கொடும் சித்திரவதையிலும் இரையாகி, தினமும் மரணத்தையே எதிர்நோக்கியிருந்த நிலைக்குத்தான் இட்டுச்சென்று உறைகின்றன, அந்த நினைவுகள். அந்நிலையிலும் சிறுவனான தனக்குக் கிடைக்கும் உணவையும் கூட, தன் தந்தையுடன் பகிர்ந்து கொள்ள அவரைத் தடுப்பது, பக்கத்தில் நின்று முறைக்கும் சிறைக்காவலர்கள் மட்டுமல்ல; சிறைமுகாமின் கொடூரங்களால் தன் தந்தையுடன் சேர்ந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மற்ற யூதக் கைதிகளும் கூடத்தான். “நீ வாழவேண்டியவன். நானும் உன் தந்தையும் இன்றோ நாளையோ, மறு கணமோ சாகக் காத்திருப்பவர்கள். நீ உனக்குக் கொடுத்ததை உன் தந்தைக்குக் கொடுப்பதால், உன் தந்தை உயிர் காப்பாற்றப்படப் போவதில்லை. நீ வாழவேண்டியவன். நீ உன் தந்தைக்காக இரக்கப்படுவதில் அர்த்தமில்லை,” என்று அவர்கள் இவனுக்குச் சொன்னது இரக்கமற்ற வார்த்தைகளாகத் தோன்றினாலும் ஒரு கொடூர உண்மையைத்தான் சொல்லின.

இன்று அந்தச் சிறுவன் 1986-ம் வருட உலக அமைதிக்கான நோபெல் விருதைப் பெற்ற, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியனாகவிருக்கும் எலீ வீஸல்.

ஆனால் இந்த விபரங்கள் ஒன்றும் அப்படி அதிசயிக்கத்தக்கன அல்ல. அந்தச் சிறுவன் அன்று அறிந்தது ஆஸ்விட்ஸ் சிறைமுகாமில் யூதர்கள் அனுபவித்த கொடூரங்களும் ஜனசம்ஹாரமும்தான். ஆனால் அவனும் உலகமும் அறிய நேர்ந்தது, யூதர்கள் ஓர் இனமாக தனிமைப் படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. ஐரோப்பிய கண்டம் முழுதும் தழுவிய இன எதிர்ப்புப் படுகொலைகள். தன் கண் முன்னேயே தன் தந்தை யூதன் என்ற காரணத்துக்காக சித்திரவைதைக்குட்பட்டு இறந்தார். இந்நிலையில் தன் இன அழிவுக்குக் காரணமானவர்கள் மேல் அளவு கடந்த வெறுப்பு எலீ வீஸலின் ஆளுமையை ஆக்கிரமித்திருக்கவேண்டும். சிறு வயதில் அந்தச் சூழலில் தனக்கு வெறுப்பு இருந்ததென்றாலும், போர் முடிந்த பிறகு அந்த வெறுப்பு தன்னை அண்டாதவாறு தன்னைக் காத்துக்கொண்டதாகச் சொல்கிறார் எலீ வீஸல். அத்தகைய வெறுப்பு தன்னிடம் வளர்ந்திருந்தால் அது இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கும் என்று சொல்லும் வீஸல், அதற்கான சாத்தியப்பாடுகள் இருந்த போதிலும் ஆனால் தான் தேர்வு செய்து கொண்டது வெறுப்பு அல்ல, பழி தீர்க்கும் உணர்வும் அல்ல. இத்தகைய தன் தேர்வு இயல்புக்கு மாறானது என்றும் சொல்கிறார் வீஸல்.

anatomy-of-hate-oslo-conferenceஇவை வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை, வீஸல் எதிர்கொள்ளும் உலக பிரச்சினைகள் தொடங்கி, அன்றாட சின்னச் சின்னப் பிரச்சிச்னைகளை அவர் எதிர்கொள்ளும் முறைவரை, இத் தேர்வுகள் கொள்கை சார்ந்ததல்ல; ஆளுமையின் குணம் சார்ந்தது; இவை வெற்று வார்த்தைகள் அல்ல; அவரது உள்ளார்ந்த தேர்வுகளின், சிந்தனையின் வெளிப்பாடு என்று தெரிகிறது. அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளிலில் தொடங்கி, இனங்களிடையே, நாடுகளிடையே வெடித்தெழும் போராட்டங்கள் வரை எல்லாமே பேசித் தீர்வுக்காணக்கூடியவையாகவே எலீ வீஸல் கருதுகிறார். அவர் படிப்பிக்கும் வகுப்புகளில் மாணவர்களிடையே எழும் கறுப்பு-வெளுப்புப் பிரச்சினைகளாகட்டும், ஆண் பெண் பாலியல் ஏற்றத் தாழ்வுகளாகட்டும், நாடு தழுவிய போராட்டங்களாகட்டும், அவர் தன்னளவில் இரு தரப்பையும் கூட்டிப் பேசியே தீர்வு கண்ட சம்பவங்களை ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். இவை ஏதும் தன் சாதனைகள் என்று காட்டும் முனைப்பில் அல்லாது ருட்ஜர்ஸ் என்னும் இன்னொரு பல்கலைக் கழக பேராசிரியருடன் நிகழ்ந்த தொடர்ந்த உரையாடலில் அவ்வப்போது தன்முன் எதிர்வந்த பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றைத் தன் வழியில் எப்படி எதிர்கொண்டார் என்பதாகவும் சொல்லிச் செல்கிறார். தன் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பேராசிரியர்களை வன்முறை காட்டி பயமுறுத்தியபோது, மாணவர்கள் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, அவர்களது வன்முறை, இனப் பிரச்சினையாகவும் உருவெடுக்கும் அபாய நிலையில், தான் செய்யக் கூடியது அந்தப் பிரச்சினைக்கான மாணவர்களைத் தன் அலுவலகத்துக்கு அழைத்து ஒரு மணி நேரமானலும் சரி நான்கு மணி நேரமானலும் சரி அவர்களுடன் பேசித்தான் அவர்களைப் புரிய வைப்பேன் என்று சொல்லும் வீஸல், ஆஸ்லோவில் தான் ஏற்பாடு செய்திருந்த ‘Anatomy of Hate’ என்னும் கருத்தரங்கிறகு, அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலை பெற்றிருந்த நெல்ஸன் மண்டேலாவையும், அவரைப் பல பத்தாண்டுகளாகச் சிறையில் தள்ளிய தென்னாப்பிரிக்க அரசின் அமைச்சர் ஒருவரையும் அழைத்திருந்தார். அந்த மேடையிலேயே அந்த அமைச்சர் நெல்ஸன் மண்டேலாவை நோக்கி, தான் நிறவெறியுடன் பிறந்து வளர்ந்ததாகவும் இப்போது அதன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் காத்திருப்பதாகவும் சொன்னது எல்லோர் நெஞ்சையும் நெகிழ்வித்தது என்று வீஸல் சொல்கிறார். இதன் அடுத்த கட்டத்தில்தான் இருவரது அங்கு தொடங்கிய உரையாடல் மண்டேலாவை அதிபராகத் தேர்ந்தெடுப்பதில் முடிவுற்றது என்றும் அதன் தொடக்கத்தைத்தான் அக்கருத்தரங்கம் சாதித்தது என்றும் வீஸல் கருதுகிறார்.

எந்தப் போராட்டமும் பிரச்சினையும் இரண்டு தரப்புகளும் உட்கார்ந்து பேசித் தீர்க்கப்படவேண்டும், அது சாத்தியம் என்று வீஸல் நம்புவது ஒரு லட்சியக் கனவாக நமக்குத் தோன்றலாம். ஆனால் அவர் அந்த நம்பிக்கையில் திடமாகவே இருக்கிறார். யூத இனப்படுகொலை நேர்ந்தது; ஜெர்மன் கலாசாரம், யூதக் கலாசாரத்தை எதிர்த்து சண்டையிடவில்லை; யூதக் கலாசாரத்தையே, யூத இனத்தையே ஒழிக்க நினைத்தது. யூதர்களாக இருப்பதே ஜெர்மன் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஆக, யூதர்களை ஒழிப்பது சட்டத்தின்படி தேவையான ஒரு காரியமாகியது. இதைத் தொடர்ந்து வீஸல் சொல்கிறார், “எந்தக் கலாசாரமும், அது இந்துவோ வேறு எதுவுமோ, அதுவும் என்னுடைய கலாசாரத்துக்கு இணையான சிறந்த ஒன்று தான். ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதே சமூக உறவாடலின் விளைவாக இருக்கவேண்டும்.”

சிறைமுகாமிலிருந்து வெளிவந்ததும், அவர் யூத மதப் பற்று மிக்கவரானார். எந்த விஷயத்திலும் அவர் மேற்கோள் காட்டுவது, சிறப்பாக எடுத்துப் பேசுவது யூத மத சித்தாந்தங்களும் சட்டங்களும் அடங்கிய தால்மூதைத்தான். அவர் இஸ்ரேலைக்கூட மதநெறி சார்ந்த நாடாகவே கருதுகிறார். அதே சமயம் யூதர்கள் ஏன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மற்றவர்களின் வெறுப்பிற்கு இரையாகி இடம்பெயர்ந்து அலையும் நிலைக்கு விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தன்னைக் கேட்டுக்கொள்கிறார். எந்த மதநெறியும் அறம் சார்ந்து, ஒழுக்கம் சார்ந்தே இருக்கவேண்டும் என்று சொல்கிறவர், அதே போல் மற்றவர் மதநெறியும் அறம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக அங்கீகரிக்கவேண்டும் என்றும் சொல்கிறவர், வரலாற்றின் நிர்ப்பந்தங்களுக்கு இரையாகி, தன்னைக் காத்துக்கொள்ள, தான் வாழ ஓர் இடம்வேண்டி தன்னைக் காத்துக்கொள்ள தம்மை இணைப்பது வரலாற்றில் இரையாகிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையாக இருப்பதன் காரணத்தை; அவர் இஸ்ரேலின் இறைசார்பைப் பார்க்கவில்லை.

elie-wiesel-leaving-nazi-deathcamp-at-the-age-of-15-apr-27-1945வீஸலின் ஆளுமையைச் சொல்லும் இன்னுமொரு சம்பவம், அமெரிக்கர்கள் ஜெர்மனியில் முன்னேறி வரும்போது நாஜி அரசு சிறைமுகாம்களிலிருந்த யூதர்களை, நாளொன்றுக்கு பத்தாயிரம் என்ற கணக்கில் எங்கோ கப்பலில் ஏற்றி, கண்காணாத இடத்திற்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ எலீ வீஸல் இருந்த குழந்தைகள் பகுதி தொடப்படாத காரணத்தால் அமெரிக்கர்கள் முன்னேறி வந்தபோது அவர்கள் பாதுகாப்பில் வந்தார்கள். அவர்களில் கறுப்பினத்தவர்களும் இருந்தார்கள். எலீ வீஸல் சொல்கிறார். வதைமுகாம்களில் இருந்த சிறுவர்களைவிட அவர்கள்தான் கொலைகார நாஜிகள் மீது ஆத்திரப்பட்டார்கள். பின், கோபம்மேலிட்டு அழவும் செய்தார்கள். தங்களிடமிருந்த ரேஷன் பொருள்களையெல்லாம் முகாமிலிருந்த குழந்தைகளுக்கு வீசி எறிந்தார்கள். ஆனால் அவற்றைச் சாப்பிடும் முன், பிரார்த்தனை செய்யவே அந்தச் சிறுவர்கள் விரும்பினார்களாம். அதற்கான பிரார்த்தனைக் கூடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களைக் கைவிட்டுவிட்ட கடவுளிடம் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்ததாக எலீ வீஸல் சொல்கிறார்.

நோபல் விருது பெற்ற சமயம் நெல்லி சாக்ஸ் என்ற பெண் கவிஞரைச் சந்தித்துப் பேசியது பற்றி மிக மன நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் வீஸல் சொல்கிறார், “நெல்லி சாக்ஸ் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை தாம் பயன்படுத்தவே முடியாது மனம் இறுகிப் போய்விட்டதாகவும் அதற்குக் காரணம் அந்த வார்த்தைகளை நாஜிகள் தம் கொடூரச் செயல்களுக்குப் பயன்படுத்தியதே காரணம் என்றும் சொன்னார். அவர் மன நோய்க்கு ஆளாகி சிகித்சை பெற வேண்டியதாயிற்று. ஒரு கவிக்கு தன் மொழியுடன் ஆன பிணைப்பில் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.”.

இதற்கு அடுத்த படியாக மேலும் வீஸல் சொல்கிறார், “எப்போதெல்லாம் மொழியின் மீது தாக்குதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் மனித மனத்திற்கும் ஆன்மாவிற்கும் ஊறு நேர்கிறது. மொழி ஒரு நினைவுச் சின்னம். மொழியின் பிரயோகங்கள் அது பெறும் மாற்றங்கள் அம்மக்கள் கூட்டம் பெற்ற மாற்றங்களைச் சொல்லும். ஒரு வாக்கியத்தை ஆராய்ந்தால் அந்த வாக்கியத்தைப் பயன்படுத்திய மக்களின் எல்லா விவரங்களையும் அறிய முடியும்,” என்று வீஸல் விளக்குகிறார். “மக்கள் மீதான தாக்குதல் மொழியின் மீதான தாக்குதலையும் உள்ளடக்குகிறது,” என்கிறார் வீஸல்;

elie-wieselதங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும் வெறுப்பின், பழிதீர்த்தலின் விளைவாகக் கருதி அதை ஒப்புக்கொள்வதில்லை. வெறுப்பு, பழிதீர்த்தல் என்ற இரண்டு எதிர்மறை கருதுகோள்கள் வீஸலின் பெரும்பாலான தீர்வுகளைத் தீர்மானிக்கின்றன. “கொமேனியைப் பாருங்கள். கடவுள் மீதான அன்பு, விசுவாசம் என்ற பெயரில் எத்தகைய வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது! கடவுள் சார்பால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்கள் எத்தனை, எத்தனை?… பைபிள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில், இருப்பில் உள்ள ஆவணங்களில், ஆகச் சிறந்த மனித நேய ஆவணங்களில் ஒன்றாக நான் நம்புகிறேன்.. இருந்தும் அதிலும் கூட சில கடுமையான பக்கங்கள் இருக்கின்றன- நம் எதிரிகளை நாம் எப்படி நடத்தவேண்டும், தண்டிக்கவேண்டும் என்பதைச் சொல்லும் பகுதியைப் போல். புனித நிலத்திற்கு ஜோஷ்வா வந்து சேரும்போது கனானை வெற்றிகொள்வது என்ற நிகழ்வை என்னால் பெருமித உணர்வோடு ஏற்க இயலவில்லை. இயலவே இல்லை,” என்கிறார். மேலும் வேறோரிடத்தில் அவர், “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது,” என்கிறார்.

வீஸல் தன் வாழ்க்கையின் தொடக்கத்தையே மறைமுகமாகக் குறிப்பிட்டு வேறோரிடத்தில் சொல்கிறார்: “ஒரு மகனின் தந்தை கொலையாளி ஒருவரால் சாகடிக்கப்பட்டு விட்டதாக வைத்துக்கொள்வோம். சரி, அந்த மகன் சென்று, தன் தந்தையைக் கொன்றவனைக் கொலைசெய்து விடுகிறானென்றால், அதன் மூலம் கிடைப்பது என்ன? நடந்த துன்பியல் நிகழ்வு முன்பு இருந்ததைப் போல் அத்தனை உண்மையாக இனி இல்லாமல் போய் விடுகிறது. இப்போது வேறொன்று சமன்பாட்டில் இடம் பெறுவதாகிவிடுகிறது. பழிதீர்த்துக்கொள்ளல் என்ற செயல்பாட்டை நாம் ஆரம்பித்து விடலாகாது…. முதலில் பழிதீர்க்கப்படவேண்டியவர்கள் SS-தானே? ஆனால், அந்த SS-ஐ ஆதரித்து அதற்கு உதவி செய்த குழுக்கள் எத்தனையோ இருந்தன. நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் ஓரமாக நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். பின் நாம் ஹங்கரிக்குப் போகவேண்டியிருக்கும். அங்கேயும் கணிசமான அளவில் ஹங்கரி நாஜி வெறியர்கள் என்னுடைய சொந்த ஊரில் SS-க்கு உதவி செய்து வந்தார்கள். ஜெர்மானியர்களைவிட அதிக அளவு இவர்கள் யூதர்களை அடித்துதைத்தும் அவமானப் படுத்தியும் துன்புறுத்தினார்கள். ருமேனியா, போலந்து, மற்றும் உக்ரெய்ன் ஆகிய இடங்களிலும்கூட இதுதான் நடந்தது. நாம் எங்கே நிறுத்துவது?

இது ஏதும் Utopian என்று சொல்லத்தக்க லட்சியக் கனவு அல்ல. வெகுவாக நடைமுறை விவேகம் என்று சொல்லத்தகுந்த ஒன்றுதான். இதுவும் பிரக்ஞைபூர்வமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒன்றல்ல,” என்று எலீ வீஸல் சொல்கிறார்.

இது தனிநபர் சார்ந்த அறவியல்; இயல்பாக உருவானது; பாரம்பரியமாகத் தொடர்வது; தந்தையர்களின் நற்பண்புகள் என்று தொடர்வது. அவர் தாத்தா, கொள்ளுத் தாத்தா சொல்வாராம், “வேண்டாம், நீ அதைச் செய்யாதே. நீ செய்யத் தக்க காரியம் இல்லை அது. நாம் ஒரு போதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை,” என்று. பின், எலீ வீஸல் தொடர்ந்து சொல்கிறார், “இரண்டாயிரம் வருட யூத வரலாறு வெறுப்பும், தண்டனையும் கொன்றுகுவித்தலுமான வரலாறுதான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பழிக்குப் பழி என்று நடந்துகொள்ள முற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?” அதே சமயம் வேறோரிடத்தில் ஒரு கசப்பான உண்மையையும் பார்க்கவேண்டியிருக்கிறது. “இஸ்ரேலில் எனது மதம், அதன் வரலாறு காரணமாய், வருந்தத்தக்க அளவில், மிக அதிகச் செல்வாக்குடையதாய் விளங்குகிறது. மதங்கள் மிக அதிகமாக அரசியலோடு கலக்கின்றன. அது எனக்கு உடன்பாடான விஷயமில்லை.”

அவர் உடன்படுகிறாரோ இல்லையோ, கொமேனிக்கு அதிகாரம் வந்தடைந்ததும் ஈரான் என்னவாயிற்று என்பது அவருக்கே தெரியும். அவரும் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து வேறிடத்தில், “எனக்குக் கவலையளிக்கும் விஷயம் மதம் என்பது அதன் உச்சபட்ச அடிப்படைவாதப் போக்கில் எழுச்சி பெற்று வருவது தான். அஸர்பைஜான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் இரண்டிலுமாகச் சேர்ந்து 700 லட்சம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு, உலகில் மத அடிப்படைவாதிகளின் மேலாதிக்கத்தின் கீழே 200 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இஸ்ரேலைப் பொருத்தவரையிலும் இதே நிலைமைதான்…” என்று சொல்லிச் செல்கிறார். 200 கோடி முஸ்லீம்கள் மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் தீவிரமடைவது எங்கே? இவர்களிடையில் இஸ்ரேலும் தன் மதத் தீவிரவாத்த்தைக் கையாளும் தற்காப்பு எங்கே? எது காரணம்? எது விளைவு? அவரவர் தரப்பு நியாயத்துக்குக் காரணத்தையும் விளைவையும் மாற்றி வாதிடலாம்தான். வலுத்த கையின் சொல் அம்பலமேறும். இதில் எலீ வீஸல் கூறும் வட்டமேஜையைச் சுற்றி உட்கார்ந்து கருத்து பரிமாறிக்கொள்வதில் எந்தப் பிரச்சினை தீரும்? எத்தனை ஆண்டு இனவெறியின் ஆளுகைக்குப் பின், உலகளாவிய எதிர்ப்புக்குப் பிறகு, ஒரு தென்னாப்பிரிக்க அமைச்சர் நெல்சன் மண்டேலாவின் அருகே அமர முடிந்தது? அது ஏன் ஹிட்லரோடு, ஸ்டாலினோடு, மாவோவோடு, பால் பாட்டோடு சாத்தியமாகவில்லை? மகாத்மா எவ்வளவு விட்டுக்கொடுத்த போதிலும் ஏன் ஜின்னாவோடு சாத்தியமாகவில்லை? சாத்தியமாகாது போனபின் நடந்த வரலாறு என்ன? இன்னும் ஒரு பேரழிவு தானே!

ஆனால் நம் நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் என்னவாக இருந்தாலும், எலீ வீஸல் போன்ற ஒரு குரலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும். வெகு அபூர்வமாக ஒலிக்கும் குரல் இது. இப்படிப்பட்ட ஒரு குரல் 1948- வருடம் ஜனவரி மாதம் 30 தேதி தொடர்ந்து எழாது பலவந்தமாக நசுக்கப்பட்டது.

எலீ வீசல் யூத இறையியலாளர்குழுக் கதை ஒன்று சொல்கிறார்: இரண்டு நபர்கள் தற்செலாக சந்தித்துக் கொள்கின்றனர். முதலாமவன் கானகத்தில் தனியாக வழிதெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்குள் பயமும் பீதியும் பரவுகிறது. அந்தச் சமயத்தில் அவன் இன்னொரு மனிதனைப் பார்க்கிறான். மனம் மகிழ்ந்து அவனிடம் ஓடிச்சென்று, “உன்னை இங்கே காண்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். தயவு செய்து இங்கிருந்து வெளியேறும் வழியை எனக்குக் காட்டு,” என்று கேட்கிறான். அதற்கு இரண்டாமவன் சொல்கிறான், “நானும் வழியைத் தொலைத்தவன்தான். என்னால் உனக்குச் சொல்லமுடிவது, நான் வந்த வழியாகச் செல்லாதே. ஏனெனில் அந்த வழியாகத் தான் வழிதொலைத்து இங்கே வந்திருக்கிறேன்,” என்று அந்தக் கதை முடிகிறது. பின் வீஸல் சொல்கிறார், “இந்த நூற்றாண்டு மறுபடியும் இருபதாம் நூற்றாண்டுக்குத் திரும்பிச் செல்லாமல் இருக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.”

ஆனால் நமக்குத் தெரியும், நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரே பாடம், வரலாற்றிலிருந்து எதையுமே நாம் கற்றுக்கொள்வதில்லை என்பது தான்.

சமாதானத்திற்கான நோபல் விருது பெற்ற நூல்– எலீ வீஸலுடனான உரையாடலைப் படிப்பது ஓர் அரிய அனுபவமாக இருந்தது. இதைச் சாத்தியமாக்கிய சந்தியா பதிப்பகத்துக்கும், தமிழில் மொழிபெயர்த்த லதா ராமகிருஷ்ணனுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.

 

conversations-with-elie-wiesel-coverஎலீ வீஸல் உரையாடல்கள்: உரையாடுபவர் ரிச்சர்ட் டி. ஹெஃப்னர் (Richard D Heffner)
தமிழில்: லதா ராமகிருஷ்ணன்
சந்தியா பதிப்பகம்,
நியு டெக் வைபவ்,
57, 53வது தெரு,
அசோக் நகர்,
சென்னை-83.

விலை ரூ 135.

 

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

9 Replies to “எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்”

 1. தமிழில் இது போன்ற கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவை.

  சில பெயர் உச்சரிப்பு திருத்தங்கள்

  ஈலை, எலியன்று !

  தமிழில் டபிள்யூ இணையாக எழுத முடியாததால், கடைசிப் பெயர் (உ)வீஸல் என உச்சரிக்கப்பட வேண்டும்.

 2. யூதர்களுக்கான சித்திரவதைக் கூடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவதும் பொய் என்று சில மதக் குழுக்கள் மிக உறுதியாக நம்புகின்றன. பரப்பவும் செய்கின்றன.

  இந்தியாவில் நடந்த அத்தனை தீவிரவாதச் செயல்களையும் இந்துக்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்ட அநியாயங்கள் என்றும் அவர்கள் சொல்லி வருகின்றனர்.

  உண்மை எது என்பதை பிரச்சாரங்கள் நிர்ணயிக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். இது கலிகாலத்தின் மோசமான கட்டம்.

  இந்த இருட்டுப் பாதையின் மறுமுனையில் ஈசல் வெளிச்சங்களாக ஈலை உவீசல்களும், காந்திகளும், நாராயண குருக்களும், விவேகானந்தர்களும், சத்ரபதி சிவாஜிகளும், கோவிந்த சிம்மங்களும், கபீர் தாசர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், இருக்கின்றனர். இவர்கள் பூமியில் அதிகரிப்பது ஒன்றுதான் மானுடம் தழைக்க ஒரே வழி.

  இவர்கள் அதிகரிக்க இவர்களின் குண நலன்களை நம்மிடம் அதிகரித்துக் கொள்ளுவதுதான் செயல்முறை வாய்ப்பு.

  இந்த நேர்மையை தைரியத்தை வாழ்ந்து காட்டும் வெங்கட் சாமிநாதன் கள்தான் நம்பிக்கை லேகியங்கள்.

 3. எலீ வீசல் இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர் என்ற வகையிலே அவருக்கு என்னுடைய மனப் பூர்வமான அனுதாபங்கள். இந்த உலகில் எந்த ஒரு மனிதனும் ,மத, மொழி, இன, சாதிக் காரணங்களுக்காக துன்புறுத்துத்தப் படவோ, தள்ளப் படவோ கூடாது என்பது என்னுடைய உறுதியான கொள்கை. வெறுப்புக் கருத்துக்கள் இலாதவர் என்ற வகையிலே அவரைப் பாரட்டுகிறேன்.

  ஆனால் பைபிள் விடயத்தில் எலீ வீசல் உண்மைக்கு புறம்பாக எழுதி, பூசி மொழுகி இருக்கிறார்.

  //… பைபிள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில், இருப்பில் உள்ள ஆவணங்களில், ஆகச் சிறந்த மனித நேய ஆவணங்களில் ஒன்றாக நான் நம்புகிறேன்.. இருந்தும் அதிலும் கூட சில கடுமையான பக்கங்கள் இருக்கின்றன- நம் எதிரிகளை நாம் எப்படி நடத்தவேண்டும், தண்டிக்கவேண்டும் என்பதைச் சொல்லும் பகுதியைப் போல். புனித நிலத்திற்கு ஜோஷ்வா வந்து சேரும்போது கனானை வெற்றிகொள்வது என்ற நிகழ்வை என்னால் பெருமித உணர்வோடு ஏற்க இயலவில்லை. இயலவே இல்லை,” என்கிறார். //

  பைபிளை படிப்பவர் யாரும் அதிலே பாதிக்குப் பாதி, பக்கத்துக்குப் பக்கம் இன அழிப்பு, இனப் படுகொலை கருத்துக்கள் உள்ளதை எளிதில் அறிய முடியும்.

  உலகிலே இன அழிப்பு, இனப் படுகொலை சித்தாந்தத்தை முதலில் உருவாக்கியது பைபிளே. அதற்க்கு முன் இன அழிப்பு, கோட்பாடாக உருவாக்கப் பட்டு செயல்படுத்தப் பட்டதாக தெரியவில்லை. இன அழிப்பு, இனப் படுகொலை கருத்துக்களை கர்த்தர் என்னும் கடவுள் சொல்லிக் கொடுத்ததாக மோசஸ் யூதர்களிடம் சொல்லி இனப் படுகொலை செயல்கள் ஆரம்பமாகிறது. கர்த்தர் என்னும் அவர்களின் கடவுளே அவர்களுக்கு போரிலே உதவியாக இருந்து இன அழிப்பை செய்து முடித்து அழிந்தவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து யூத இனத்தை வளர்த்ததாக – நான் சொல்லவில்லை- பைபிள் சொல்லுகிறது!

  இப்படிக் கடவுளின் பெயரால் இன அழிப்பு செய்வது, மனசாட்சியையும் மழுங்க அடித்து மூர்க்கத்தனமான இனப் படுகொலை & நில ஆக்கிரமிப்பு செய்ய உதவியாக இருந்ததால், இதே கோட்பாட்டை பிற ஆபிராகாமிய மதங்களும் மனப் பூர்வமாக தத்து எடுத்துக் கொண்டு விட்டன. இவ்வாறாக உலகில் இன்று நிலவும் இத்தனை பூசல், இரத்த ஆறுக்கும் முக்கியக் காரணம் மோசஸ் சொன்னதாக பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கருத்துக்களும், அவருக்குப் பிறகு ஜோஷ்வா, தாவீது…. ஆகியோர் கர்த்தரின் கூட்டணியுடன் செய்த தொடர்ச்சியான கைங்கர்யமுமே.

  பின்னர் அது குருசெடு போர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து, இப்போது ஈராக் போர் குருசெடு போரே என்று போப்பிடம் ஜார்ஜ் புஷ் விளக்கும் அளவுக்கு இப்போதும் தன் கோர முகத்தை காட்டுகிறது.

  இப்போது எலீ வீஸல் தானே பாதிக்கப் பட்டதால் கொஞ்சம் உண்மையை சொல்கிறார்.

  ஆனால் இங்கே நம்முடன் பிறந்த தமிழர்களும் இந்த முரட்டு கொடூர இன அழிப்பு சிந்தாந்ததுக்கு அடிமையாகி, கடவுள்தானே, அவர் இன அழிப்பு செய்வது, கம்ப்யூட்டரில் நாம் பைல்களை அழிப்பது, டெலீட் செய்வது போன்றது தான் என்று இனப் படுகொலைக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு மூளை சலவை செய்து கொண்டு உள்ளனர்.

  கீழே உள்ள சுட்டியை அழுத்தினால் நீங்கள் நேராக அறிந்து கொள்ளலாம். .

  https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/09/barabarics-god/#comment-691

  இந்த உலகத்திலே மனிதம் வாழ ஒரே வழி வெறுப்பு சிந்தனையைக் குறைப்பதுதான். வேறு வழியே இல்லை. வெறுப்பு சிந்தனை தானாகவே மோதலை , போரை , உயிர் இழப்பை உண்டாக்கியே தீரும். இதை இப்போது எலீ வீசல் உணர்ந்து இருக்கிறார். இதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கிருஷ்ணர் அழகாக சொல்லி இருக்கிறார்.

  அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

  ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

  க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

  ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

  யோகி (யோக நெறியில் நிற்பவன்)

  யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

  த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

  மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

  யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

  ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

  பல்லாயிரம் வருடங்களாக இந்திய சமுதாயம் இந்தக் கருத்தையே பின்பற்றி வாழ்ந்து உள்ளது.

  இனப் படுகொலையை பக்கத்துக்குப் பக்கம் நியாயப்ப படுத்தும் பரிசுத்த வேதாகமத்துக்கு மனித நேய சர்டிபிகேட் தரும் எலீ வீசலை விட எருத்துக்காரன்பட்டி கண்ணப்பன் உறுதியானவன்.

  நரேந்திரன் , விவாகனந்தராக மாறி உலகுக்கு மிக அரிய பணியை செய்து இருக்கிறார். அதை தொடர்ந்து செய்து உலக மக்களை , மனிதத்தை காக்கும் படியான செயலை செய்வதற்கான பொறுமையும், கருத்தும், பண்பாடும், வழிமுறையும், இந்து மதத்திடமே, இந்திய மக்களிடமே உள்ளது.

  எலீ வீசலின் நூலை தமிழில் மொழி பெயர்த்தது நல்ல வேலைதான். அதை விட முக்கியமான, மிக அவசியமான வேலை பகவத் கீதையை எலீ வீசலிடம் கொடுத்து அதில் உள்ள அத்வேஷ்டா கருத்துக்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதுதான்.

  எலீ வீசலின் நூலை இந்தியர்கள் படிப்பதை விட, இந்தியர்களின் பகவத் கீதையை எலீ வீசல் படிப்பதுதான் முக்கியமானது.

  எலி வீசலின், தந்தையும், உறவினரும், இனமும் சந்தித்த சித்திரவதை, இன அழிப்பை இனி இந்த உலகில் யாரும் சந்திக்க வேண்டாம் என்று எலீ வீசல் உண்மையாக விரும்புபவரானால், அவர் பகவத் கீதையை உலகில் எல்லோருக்கும் எடுத்து சொல்வார். எலீ வீசல் நேர்மையானவர் என்றே நான் கருதுகிறேன். எனவே நாம் யாராவது எலீ வீசலை சந்திக்க நேர்ந்தால், நாம் அவரிடம் பகவத் கீதை நூல் ஒன்றின் பிரதியை அளிக்க வேண்டும். உலக அமைதிக்கு, நியாயத்துக்கு, அன்புக்கு, நட்புக்கு அதுவே வழி.

  எலீ வீசலை நமக்கு அறிமுகப் படுத்திய லதா ராதாகிருஷ்ணன் அவர்கள், சந்தியா பதிப்பகம், வெங்கட் சாமிநாதன் ஐயா , தமிழ் ஹிந்து ஆசிரியர் குழாம் ஆகியோருக்கு நன்றி.

  பெரிய பின்னூட்டம் ஆகி விட்டது, குறைக்க முடியவில்லை, பொறுக்க வேண்டுகிறேன்.

 4. அன்னியப் பெயர்களின் உச்சரிப்பைத் திருத்தியதற்கு நன்றி. இப்படித் தெரிந்தவர் சொன்னாலொழிய திருத்தமான உச்சரிப்பு சாத்தியமில்லை.ஆனால் தமிழ் நாட்டில் அன்றாடம் கேட்கும் பெயர்க்ளையே தன் இஷ்டத்திற்கு கொலை செய்யும் மரபு ஆழமாகப் பதிந்துள்ளது. த்ரிணமூல், திருணாமுல் எனத்தான் உச்சரிக்கப்படும், எழுதப்படும். அஸருத்தீன், அஸாருதீன் ஆவார். பூலன் தேவி புலான் தேவி ஆவார்.இப்படி நிறைய.

  திருச்சிக்காரருக்கு நாளை பதில் சொல்கிறேன். இப்போது வேறொரு காரியத்துக்கு ஓட வேண்டியிருக்கிறது. மன்னிக்கவும்.

 5. அருமையான புத்தக அறிமுகம் வெ.சா.

  எலி வீசல், காந்தி ஆகியோர் உருவாக்கும் இத்தகைய நுண்ணிய அற உணர்வு முக்கியமானது, சுவர்களைத் தாண்டி மக்களின் மனங்களில் ஊடுருவும் வல்லமை கொண்டது. தங்கள் மதம் மீது அபிமானமும், அதே சமயம் பிற மதங்களின் அப்பட்டமான காட்டுமிராண்டித் தனத்தின் வெளிப்பாடுகளைக் கண்டும் அவற்றை முற்றாக நிராகரிக்க முடியாத தன்மையும் கொண்டவர்கள் இவர்கள்..

  // “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது,” என்கிறார். //

  கூரிய சிந்தனை.. “an appeaser is one who feeds the crocodiles thinking that he will be last one to be eaten up” என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் மேற்கோளுடன் இதைப் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது!

 6. திரு. ஜடாயு அவர்களே,

  வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவே விரும்புகிறேன். ஆனாலும் சில விடயங்களை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

  //தங்கள் மதம் மீது அபிமானமும், அதே சமயம் பிற மதங்களின் அப்பட்டமான காட்டுமிராண்டித் தனத்தின் வெளிப்பாடுகளைக் கண்டும் அவற்றை முற்றாக நிராகரிக்க முடியாத தன்மையும் கொண்டவர்கள் இவர்கள்//

  பிற மதங்களை நிராகரிப்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் ஒவ்வொருவரும் தன் மதம் கூறிய கருத்துக்கள் எப்படி இருக்கிறது என்று முதலில் மன சாட்சியிடம் உரசிப் பார்க்க வேண்டும். எலீ வீசல் அதை செய்தாரா?

  எலீ வீசலின் தாய் மதமே இந்த உலகில் உள்ள வெறுப்புக் கருத்துக்களுக்கும், காட்டு மிராண்டி கருத்துக்களுக்கும் ஊற்றுக் கண்ணாக உள்ளது என்கிற உண்மையை சொல்ல நாம் தயங்கவில்லை.
  பிற ஆபிரகாமிய மதங்களும் அந்த அடிப்படைக் கருத்துக்களையே தங்களின் அடிப்படையாக அமைத்து உள்ளன. இதை எல்லாம் மூடி மறைத்து தன்னுடைய மத புத்தகத்துக்கு ((பைபிள் ) எலீ வீசல் வக்காலத்து வாங்கி ஏதோ ஒரு சில கடுமைகள் நடந்தது போல பாவ்லா காட்டுகிறார், அல்லது ஆக்க பூர்வமான அன்புக் கருத்துக்களை இதுவரை அவர் படிக்காமல் இருந்திருக்கக் கூடும், எனவே இலுப்பைப் பூ சர்க்கரை என்று எண்ணி பைபிளை பாராட்டி இருக்கக் கூடும்.

  எனவே தான் பகவத் கீதை புத்தகத்தை எலீ வீசலுக்கு அனுப்ப வேண்டும் என்று எழுதுகிறேன். பகவத் கீதையை, உப நிடதங்க்களை படித்த பின்னும், எலீ வீசல் வெளிப்படையாக, திட்டவட்டமாக பைபிளை கண்டிக்காவிட்டால், எலீ வீசல் ஒரு வேஷதாரி என்றே கருதப் பட முடியும்.

  பைபிளின் காட்டு மிராண்டிகளை விட கொடூரமான இன அழிப்பு சித்தாந்தங்களை நான் பல முறை தமிழ் இந்து தளத்தில் எழுதி இருக்கிறேன். Let me repeat here for ready reference:

  //கர்த்தர் எனப் படும் கடவுள் மோசே என்பவருக்கு உதவி செய்து யூதர்களை எகிப்து நாட்டில் இருந்து அரபிய பாலைவனப் பகுதிக்கு அழைத்து வந்தார் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

  யாத்திராகமம் அதிகாரம் : 3

  7.அப்போது கர்த்தர் எகிப்தில் இருக்கிற என ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து , ஆளோட்டிக்களினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்கிரலைக் கேட்டேன்.

  8.அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும் , அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி , கானானியரும் , ஏத்தியரும், எமோரியரும் பெரிசியரும் ஈவியரும் , எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் , தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்திலே கொண்டு போய் சேர்க்கவும் இறங்கினேன்.

  யாத்திராகமம்,அதிகாரம் : 20

  உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே.

  இப்படி எகிப்தில் இருந்து வந்த யூதர்களுக்கு புதிய இடத்தை தருவதாக கர்த்தர் என்னும் கடவுள் சொல்லியிருப்பதாக யூதர்களுக்கு நம்பிக்கை அளிக்கப் பட்டுள்ளது.

  மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

  “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது, அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”//

  ஒருவரை விடுதலை செய்வது நல்லதே. ஆனால் விடுதலை செய்தவர்களை குடி ஏற்ற ஏன் இன்னொருவரின் இடத்தைப் பிடுங்க வேண்டும். மெய்யான ஜீவனுள்ள கடவுளாக இருந்தால் அவர்கள் குடியேற புது நிலப் பரப்பை உருவாக்கி, அங்கே ஆறுகள் ஓடும்படி செய்து இருக்கலாமே.

  இப்படி இன்னொரு இனத்தை படுகொலை செய்து அவர்களின் நிலத்தை அடித்துப் பிடுங்க வேண்டியதில்லையே?” என்கிற கேள்வியை அறிங்கர்கள் முன் வைக்கின்றனர்.

  அப்படியானால் இந்தக் கடவுள் என்பது காட்டுமிராண்டிகள் படைத்த கற்பனை என்று சொல்வது சரிதானோ என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

  மோசசுக்குப் பிறகு பிறகு அதே கர்த்தர் என்னும் இன அழிப்பு ஸ்பெசளிஷ்ட்டை கடவுள் என்றும் அவர் கட்டளை போட்டு, திட்டம் தீட்டி, கூட இருந்து போர் செய்ததாகவும் , ஜோஷுவா என்பவர் மூலம் யூதர்கள் இனப் படுகொலையை தொடர்ந்து நடத்தி உள்ளனர்.

  இதை எல்லாம் நாம் சொல்லவில்லை. பைபிள் சொல்லுகிறது. பரிசுத்த வேதாகமம் என்ற புத்தகத்தில் இருந்து நமக்கு கிடைத்த பரிசுத்த தகவல்களையே, நாம் இங்கே அப்படியே வார்த்தை பிறழாமல் எழுதி இருக்கிறோம்.

  https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/09/barabarics-god///

  ஒரு இன மக்களைத் திரட்ட கடவுளின் பெயரைப் பயன் படுத்தி , அதே கடவுளின் பெயரால் இன அழிப்பு கோட்பாட்டை உருவாக்கி பல இனங்களை அளித்து உள்ளனர்.

  வூரில் எல்லா வீட்டையும் கொளுத்தி விட்டு, அந்த தீ தன் வீட்டுக்கும் பரவும் போது ஐயோ, என்ன்று அலறுகிற நிலையே யூதர்களின் பரிதாப நிலை என்பதையே சொல்ல வேண்டியுள்ளது.

  அதிர்ஷ்ட வசமாக காந்தியின் தாய் மதமானது வெறுப்புக் கருத்துக்கள் இல்லாத மதமாக எல்லா உயிரையும் சினேகா பூர்வமாக அணுக சொல்லும் மதமாக அமைந்து விட்டது.

  பைபிள் இருக்கும் வரை உலகில் வெறுப்புக் கருத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும். பைபிளின் அடித்தளம் எலீ வீசலின் தாய் மதமான யூத மதம்.

  எனவே எலீ வீசல் திட்ட வட்டமாக முடிவே எடுக்க வேண்டும். எலீ வீசல் வெறுப்புக் கருத்துக்களின் பக்கமா, அல்லது அன்புக் கருத்துக்களின் பக்கமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தெளிவாக தேர்ந்து எடுக்க வேண்டும். வெறுப்புக் கருத்துக்களை தடவிக் குடுக்கும் யாரும் வெறுப்பு கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பதாகவே கருத முடியும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று செயல் படுவதாகவே இருக்கும்.

  யூதர்கள் உட்பட உலகில் உள்ள எல்லோரும் பாதுக்காக்கப் பட வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறேன். ஆனால் யூதர்கள் உருவாக்கிய கொள்கை ஸ்மால் பாக்ஸ் வைரசை விட ,எய்ட்ஸ் வைரஸை விட கொடுமையானது.

  இரட்சிப்பு யூதர்களின் வழியாக வருகிறது என்றார் யூதர்களை இரட்சிக்க வந்த யூதரான இயேசு கிறிஸ்து. உண்மையில் யூதர்களால் உலகுக்கு கிடைத்த “இரட்சிப்பு” இந்த இனப் படுகொலைகளும் , அதற்க்கு காரணமான வெறுப்புக் கருத்துக்களுமே.

 7. அன்புள்ள திருச்சிக்காரன் அவர்களுக்கு,

  இப்படி அழைப்பது என்னவோ போல இருக்கிற்து. நண்பர் என்று எழுதலாம் பாந்தமாக இருக்கும். ஆனால் இங்குள்ள எந்த நண்பருக்கு என்ற கேள்வி எழும். போகட்டும்.

  போன தடவை எழுதிக்கொண்டு இருக்கும் போது திடீரென்று மின் வெட்டு குறுக்கிட்டதால், அவசர அவசரமாக கடைசி வரியை எழுதி முடித்தேன். பின் இப்போது தான் இங்கு வருகிறேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு வரும் இந்த பின்னூட்டத்தை யாரும் படிக்கும் சாத்தியம் உண்டா என்பது தெரியவில்லை.

  ஈலை வீசலின் சமாதான ஆளுமையில் காணும் சில கரும்புள்ளிகளை நானும் குறிப்பிட்டிருக்கிறேன். சில சமயம் அதீத உடோப்பியன் கனவுகளாகத் தோன்றுகிறது அவரது “பேசி முடிவு காணவேண்டும்’ என்ற கருத்து.சில சமயங்களில் இஸ்லாத்தின் வன்முறையேயாகிவிட்ட சரித்திரத்தை அவ்வளவாக அவர் பெரிது படுத்தாமல் விடுவதும் உறுத்துகிறது. சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்பும் வன்முறையும் கொண்டுள்ள முஸ்லீம் நாடுகளின் சரித்திரம் அறிந்தும் இஸ்ரேலின் மதச் சார்பு பற்றி அவர் கூறியுள்ளதும் எனக்கு சரியாகத் தோன்றவில்லை.

  கிறித்துவ யூத ஆரம்பங்களும் வன்முறைகளைக் கொண்டது தான். ஆனால் அவர்கள் இன்றும் அந்த சரித்திரத்தை இன்றைய வழிகாட்டலாகக் கொள்ளவில்லை. மிஷனரிகளைத் தவிர. ஆனால் முஸ்லீம்கள் இன்றும் குரானையும் ஹதீஸ்களையும் இன்றைக்கான உபதேசங்களாக தங்களை உருவேற்றிக்கொள்கிறதை அவர் கவனிக்கவில்லை.

  நம் மகாத்மா காந்தி போன்று ஈலை வீஸலும் வன்முறையாளருடன் சமரசமாகப் போவ்தாகத் தான் தோன்றுகிறது அவரது ‘பேசித் தீர்த்துக்கொள்ளும்’ கொள்கையும். நமக்கும் உலகத்துக்கும் தான் மகாத்மா ஒரு சமாதான தேவதை. பாகிஸ்தானியர்களுக்கு அவர் ஒரு கேலிப் பொருள். இன்றும். இப்போதும். முஸ்லீம்கள் பொருட்படுத்துவது வன்முறையைத் தான்.

  பகவத் கீதையைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். முஸ்லீம் முல்லாக்களின் மத பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறீர்களோ என்னவோ. அவர்களும் பகவத் கீதை ஸ்லோகங்களை ( அத்தியாய்ம், ஸ்லோகம் எண் குறித்துத்தான் கீதையின் மேற்கோளைச் சொல்வார்கள். இது கூட்டத்தை இம்ப்ரெஸ் செய்வதற்கு) மேற்கோள் காட்டுவார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு சிலவேயான ஸ்லோகங்கள் கண்ணன் அர்ச்சுனனுக்கு தயங்காதே, உறவினர்கள் என்று பார்க்காதே, போரிடு, அது தான் உன் தர்மம். அது தான் க்ஷத்திரியன்னான் உன் கடமை” என்று தான் அவர்களுடைய கிருஷ்ணனும் சொல்கிறார் என்று முடிப்பார்கள். இதை நான் பன்முறை கேட்டிருக்கிறேன். மற்ற எதுவும் அவர்கள் கண்களுக்குப் படாது. திக, பிரசாரங்கள் போல,அவர்களுகு என்று பொறுக்கி மேற்கோள் காட்டி பேச விஷயங்கள் கிடைக்கும். அதன் தாத்பர்யமோ, சந்தர்ப்பமோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. பட்டை போட்ட குதிரைகள். அவர்கள் குறிக்கோளில் அவர்கள் தீவிரமாகவே இருக்கிறார்கள். அவர்களை பகவத் கீதையோ, மகாத்மா காந்தியோ திருத்த முடியாது.

 8. அன்பிற்கும் , மதிப்பிற்குமுரிய திரு. வெங்கட் சாமி நாதன் ஐயா அவர்களே.

  ஆபிரகாமிய மதங்கள் எல்லாவற்றின் அடிப்படை யூத மதமே. இசுலாமிய மதம் முழுக்க முழுக்க யூத மதத்தை ஒட்டியே அமைக்கப் பட்டு உள்ளது. யூத மதத்தின் ஒவ்வொரு கான்செப்டும் அப்படியே இசுலாத்தில் உள்ளது. இறைவன் நமக்காக போரிடுவார் அல்லது போரில் உதவி செய்வார் (அதனால் இன வாதம், இன அழிப்பு பற்றி கவலையில்லை) என்பதை உலகில் முதலில் சொல்லியது மோசசே. அவரின் அந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்ததை கண்ட முஹம்மத் அதே கான்செப்டை அரேபியருக்கு அறிமுகப் படுத்தினார். எல்லா யூதர்களுக்கும், எல்லாக் கிறிஸ்தவருக்கும் இது நன்றாகத் தெரியும் . ஆனால் தங்களின் திட்டத்தை அப்படியே வெற்றிகரமாக தங்களுக்கு எதிராக முகம்மது திருப்பியதைக் கண்டு திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். யூத மத்தில் இன வாதமும் , மத வாதமும் சரி விகிதத்தில் கலந்து இருந்தது. முஹம்மத் தன்னுடைய கான்செப்டை விரிவு படுத்த இன வாதத்தை விட்டு மத வாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்.

  இதைப் பற்றி விரிவாக விளக்க வேண்டும். பின்னூட்டத்திலே விளக்க இயலாது.

  இரண்டாவதாக இப்போது இஸ்ரேல் செய்வது மூவாயிரம் வருடங்களுக்கு முன்பாக அவர்களின் முன்னோர்கள் செய்ததே. தாவீது என்னும் யூத இளைங்கர், கோலியாத்து என்னும் பலம் பொருந்திய பாலஸ்தீனியனை கல் வீசி கொன்று , பாலஸ்தீன பகுதிகளை பிடித்தார். அதே வேலையை அதே முறையில் அப்படியே செய்கிறார்கள். ஜெருசலேம் எங்களுக்கு சொந்தம் என்பதற்கு ஆதாரம் பைபிளில் இருக்கிறது என்று இப்போது (எண்பதுகளில்) இஸ்தக் ராபின் கூறியதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

  கிருஷ்ணர் போரைத் தூண்டவில்லை. பாண்டவரின் நாடு, அந்து மாநிலங்கள், ஐந்து கிராமங்கள், அந்து வீடுகளாவது குடுத்தால் போதும் என்று சாமதானம் பேசினார். வூசி முனை இடம் கூட கொடுக்க முடியாது என்று முரட்டுப் பிடிவாத வெறுப்புக் கருத்துக்களுக்கு அடிமையாகி பேசினான் துரியோதனன். சகோதர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயன்றான். சகதோரர் மனைவியை புடவையை இழுத்து அவமானப் படுத்தினான். கிரிஷ்ணரிடம் அவருடைய நாராயணப் படை வேண்டும் எனக் கேட்டது துரியோதனன் தான். கிர்ஷ்ணர் ஆயுதன் ஏந்திப் போர் புரியக் கூடாது என்று துரியோதனன் சொன்னதையும் அவர் ஒத்துக் கொண்டார்.

  மகா பாரதப் போர், இன அழிப்பு போரோ, மத சகிப்புத்தன்மையால் அமைந்த போரோ அல்ல. அது பங்காளிகளுக்கு இடையே ஏற்ப்பட்ட வரப்பு தகராறு போன்றது. இதை எல்லாம் நாம் தான் தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும். எடுத்து சொல்ல முடியும்.

  சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும் போது, எந்த ஒரு இந்துக் கடவுலாவாது, தான் ஒரு இனத்தை மட்டும் காப்பாற்றுவேன் என்று சொன்னதாக காட்ட முடியுமா என்று சவால் விட்டார்.

  பகவத் கீதை தான் ஆன்மீக நூல். அது உயிரின் தத்துவம் பற்றி விவரிக்கிறது!

  We need to have confidence. We have to first think and analyse ourselves. We have been good, virteous, our philosophy is impeccable and the last hope ofthe mankind.

  We can prove the merits of our philosophy based on logical thinking, analysis and rataionalism. We are not trying to promote the same just for the reason that it is our religion, but the world needs it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *