சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்

image330“அனைத்துப் படைப்புகளும் ஒன்றே” எனும் ஒற்றுமையை பாரதத்தின் வரலாறு முழுக்க வேதாந்தம் வலியுறுத்தி வந்துள்ளது. அதனால், இந்த ஒற்றுமையை மானுடர்கள் தன் ஆன்மாவில் உணர முடிந்தது. ஆனால், ஏற்றதாழ்வுகளும் சாதி உணர்வும் அதிகார அந்தஸ்து பேதங்களும் இந்த ஆன்மிக சமத்துவத்தை தனிமனிதன் உணராதவாறு செய்கின்றன என்பதும் வரலாறு.

இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஏற்றதாழ்வு இருந்திருக்கிறது. அதனுடன் அந்த ஏற்றத்தாழ்வை மீறியும் எதிர்த்தும் அனைத்து மக்களும் ஆன்ம சொரூபியரே எனும் அத்வைத சமத்துவ குரலும் தொடர்ந்து ஒலித்த படியே இருந்துள்ளது.

அத்வைதத்தின் ஆன்மநேய சமத்துவ ஒளிக்கு சத்தியகாமனும் ரைவகரும் வேதகால எடுத்துக்காட்டுக்கள் ஆவர். சமுதாயம் ஒதுக்கிய தொழுநோயுற்ற பெண்கள் வேதத்தில் மந்திர த்ருஷ்டர்களாகப் போற்றப்படுகின்றனர். [ஆன்மீக சக்தியைத் தூண்டும் மந்திரங்களைக் கண்டறிந்தவர்கள் மந்திர த்ருஷ்டர்கள். உதாரணமாக, காயத்ரி மந்திரத்தைக் கண்டறிந்த விசுவாமித்திரர் ஒரு மந்திர த்ருஷ்டர்.]

vivek2வரலாற்றுக் காலங்களில் அந்த சமத்துவ ஞானக்குரல் புத்தர் மூலமாக ஒலித்தது. சங்கரர் மனீஷா பஞ்சகம் மூலம் காசியில் அதே வேதாந்த மானுட நேயத்தை பிரகடனம் செய்தார். ராமானுஜர் வைணவத்தை அனைத்து மக்களையும் அணைக்கும் ஆன்மிக மக்கள் இயக்கமாகக் கண்டார். தாழ்த்தப்பட்டவர் கொண்டு வந்ததால், அவர் கொண்டு வந்த எள்ளை சுவாமியின் நைவேத்யத்திலேயே சேர்த்தார் ராகவேந்திரர்.

இந்த பாரத ஞான மரபின் தொடர்ச்சியை நாம் ராமகிருஷ்ண-விவேகானந்த மரபில் பரிபூரணமாகக் காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியுணர்வை முழுமையாகத் தாண்டிய நிலையில், தனது தலை முடியால் தாழ்த்தப்பட்டவரின் கழிவறையை சுத்தம் செய்தார். தாழ்த்தப்பட்டவரிடம் புகையிலையைக் கேட்டு வாங்கினார் விவேகானந்தர். சாதிவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹூக்காக்களை சாதி வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி மனிதர்கள் மனிதர்களிடையே ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை சிறுவயதிலேயே விவேகானந்தர் உடைத்தார்.

தொடரும் இந்த பாரத சரித்திரத்தில் மற்றொரு மாபெரும் ஆளுமையாக திகழ்பவர் அம்பேத்கர் ஆவார். அம்பேத்கார் திறந்த மனமும் சிறந்த சிந்தனைத்திறனும் கொண்டவராக இருந்தார். அவரது குடும்பம் ராமானந்த-கபீர் பக்தி மார்க்கத்தில் வந்ததாகும்.

சாதிக் கொடுமைகளை தாமே அனுபவித்து வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் அம்பேத்கர். அவரது ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் முழுக்க முழுக்க அஹிம்சை முறையிலேயே நடத்தினார். உதாரணமாக, காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவு போராட்டத்தில் மேல்சாதியினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட போதும் அம்பேத்கர் தமது மக்களை அமைதி காக்கச் சொன்னார்.

இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.

சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

பாரத தேசிய ஒற்றுமை என்பது என்ன ?

ஒருமைப்பாடே பாரதத்தின் அடிப்படைத் தன்மையாக உள்ளது. இந்த அடிப்படைத் தன்மையின் இயற்கை என்ன ?

சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்,

‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1

p08அரசியல் அதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகள் மட்டுமே ஒரு தேசத்தின் ஒற்றுமையை நிர்ணயிக்கின்றனவா எனும் கேள்விக்கு பின்வருமாறு அம்பேத்கர் பதிலுரைக்கிறார்,

‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2

சமுதாய பிரச்சினைகள் பற்றி அறிய இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது என்பது அம்பேத்கரின் கருத்து.

ஆனால் இன்றைய அறிவுஜீவி என தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இவ்வாறு கேட்கலாம்:

“இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரியரென்றும் திராவிடரென்றும் இரு வேறு இனத்தவர்கள் அல்லவா?

அவர்கள் எப்படி ஒரே இனத்தவர்கள் ஆக முடியும்?

ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன?

‘இந்தியா’ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க மேல்சாதி கட்டமைப்பல்லவா ?

பல தேசிய இனங்களின் தொகுப்புதானே இந்தியா?”

இத்தகைய கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பரப்புகிற பலர் டாக்டர். அம்பேத்கரின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பு வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் ?

இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.

ஆரிய இனவாதம் குறித்து சுவாமி விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

aryans-011

‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும்.

சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன்.ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’களை பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை , ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர், ஆரியரன்றி வேறல்ல.’ 3

டாக்டர் அம்பேத்கர் மிகுந்த தடைகளுக்கு எதிராக வேதங்களை தாமே கற்றறிந்தவர். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் செய்த இனரீதியான தவறான வியாக்கியானங்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அவருக்குத் தந்தன. உதாரணமாக, அனாஸா என்பதை மாக்ஸ்முல்லர் அ-நாஸா என பதம் பிரிப்பதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். சாயனரின் பதப்பிரிப்பே சரியானது என அவர் கருதினார்.

டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.
‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:

1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.

2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.

3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4

நாம் வாழவேண்டுமென்றால்

ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் களைய வேண்டும். இந்த அவசியத்தை ஸ்வாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்,

‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால், ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால் நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…

நம் மதமே ‘என்னைத்தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ‘5

இதே கருத்தை அம்பேத்கரும் கூறியுள்ளார். காத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார்,

‘சாதியத்தின் விளைவே தீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘6

சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்

sanskrit2ஸ்வாமி விவேகானந்தர் சமஸ்கிருதம் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதன் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்.

சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை ஸ்வாமி முன் வைக்கிறார்:

‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ..எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.’7

“தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்” எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்,

‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.’

மேலும் அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அதுவே சமுதாய ஏற்ற தாழ்வுகளை போக்கிடும் வழி என்றும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டார் அவர்.

அன்று மதத்தின் பெயரில் நிலவிய மானுடத் தன்மையற்ற நடத்தைகளால் முழுமையாக அந்த அமைப்பில் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களும், அவரே அனுபவித்த துயரமும் அவரது வார்த்தைகளில் கடினத்தை ஏற்றியிருந்திருக்கலாம்.  இருந்த போதும் இந்த மண்ணின் ஆன்மிக ஊற்றிலிருந்தே இத்துயரத்தை துடைக்கும் அமுதம் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  எனவேதான் அவர் இந்த மண்ணின் மைந்தரான புத்த பகவானின் காருண்ய வழியை தேர்ந்தெடுத்தார்.

sikh-festivalsபுத்த வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் அவர் குரு கோவிந்த சிங்கின் கால்ஸா பாதையை டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார். சுவாமி விவேகானந்தரையும் மிகவும் ஆகர்ஷித்த ஒரு ஆன்மிக வடிவமாவார் குரு கோவிந்தர்.

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காக திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளை காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழி சொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனைப் போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன்.”

என்று விவேகானந்தர் முழங்கினார்.9

பகவான் புத்தரிடம் விவேகானந்தரின் மனம் இயல்பாகவே லயித்தது. புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர்.

‘புத்தசமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால் அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.”

என அவர் கூறினார்.10

அம்பேத்கருடன் நடந்த சந்திப்பு ஒன்றில், இந்த நூற்றாண்டின் சிறந்த இந்தியர் என சுவாமி விவேகானந்தரை அம்பேத்கர் கருதியதாக ஜவஹர்லால் நேருவின் அந்தரங்க காரியதரிசி பதிவு செய்திருக்கிறார்.11

பாரதம் குறித்த அடிப்படையான பார்வை குறித்தும், பாரதத்தின் மேன்மைக்கான செயல்திட்டம் குறித்தும் சுவாமி விவேகானந்தரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி எத்தனை ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது மேலே கூறியுள்ளவற்றால் தெரியும். இந்த இருதய ஒற்றுமை எப்படி வந்தது?

சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுட துன்பத்தைக் கண்டு இரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுட துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையை துறந்து அதற்காக உழைத்தனர். அத்தகைய இரு பேரான்மாக்களின் பார்வைகளின் தேசத்துக்கான நல்வழிப்பார்வை ஒன்றானது அதிசயமல்லவே.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

  1. லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III
  2. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter-IV
  3. சுவாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
  4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII,
  5. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். VII
  6. டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
  7. சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
  8. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.
  9. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். III
  10. சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை 26 செப்டம்பர் 1893
  11. எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3: https://jeyamohan.in/?p=4715

13 Replies to “சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்”

  1. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை முன்னிலைப் படுத்துங்கள். இந்து மதத்தையும், இந்தியாவையும், உலகையும் அதுவே உய்வித்து விடும்.

    கிருஷ்ணர், அர்ஜூனர், நசிகேதஸ், முனிவர்கள், சித்தர்கள், புத்தர்கள், ஆதி சங்கரர், இயேசு கிறிஸ்து, முஹம்மது நபி அனவைரின் கருத்துக்களையும் மிகச் சரியாக ஒருங்கிணைத்து, தன்னுடைய சொந்தக் கருத்தையும் அதிலே சரியாக இணைத்து இந்த உலகை ஆக்கபூரவமான அமைதிப் பாதிக்கு இட்டுச் செல்லும் ஆற்றலே சுவாமி விவேகானந்தர்.

    அம்பேத்கர் இந்தியாவின் மிகச் சிறந்த தேசிய தலைவர்களில் ஒருவர், கடுமையான உழைப்பாளி, மிகச் சிறந்த அறிவாளி, மாபெரும் போராட்டக் காரார் . பதவிக்காகவோ, காசுக்ககவோ, தன் வாரிசுகளுக்காகவோ அரசியல் செய்யாத ஒழுக்க சீலர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியா அவருக்கு எல்லா இந்தியர்களும் நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம். அம்பேத்காரும் ஒருங்கிணைப்பு சக்தியே. இதை நாம் சரியாகப் புரிய வைப்போம்.

  2. நான் எழுதியதில் ஒரு சிறு திருத்தம். உலகில் முதல் ஒருங்கிணைப்பு நல்லிணக்க கருத்தாளர் கிருட்டினரே . ஆன்மீகத்தில் மிச்சம் எதுவும் இருக்கிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லா முறைகளையும் அவர் சொல்லி இருக்கிறார். கிருட்டினர் , அர்ஜூனர்…. இவர்கள் எல்லோருமே ஒன்றாகியது போல செயல் பட்டவர் விவேகானந்தர் என்று சொல்லலாம்.

    மற்றபடி புத்தரும் ஒரு இந்துவே.ஒரு மனிதன் விடுதலைக்கு முயல்வதே இந்து மதத்தின் முக்கியக் குறிக்கோள் என்பதை நினைவு படுத்தவே புத்தர் முயன்றார். புத்தர் இந்து மத ஞானியே.

    இந்திரியார்த்தேஷு வைராக்கிய மன அஹங்கார ஏவ ச,
    ஜன்ம மிருத்யு ஜரா வியாதி சுக துக்க அனுதர்சன

    என்று கீதையிலே ஞானிக்கு உள்ள இலக்கணத்தைக் குறிப்பிட்டு உள்ளது.

    புத்தரும் அதே போல ஒரே நாளில் ஒரு நோயாளி , வயதனவன், ஒரு பிணம் ஆகியவற்றைக் கண்டு கீதையில் சொன்னது போலவே இந்த வாழ்க்கையை சீர் தூக்கிப் பார்த்து, துன்பத்தில் இருந்து விடுதலை பெற முயன்றவர்.

    அம்பேத்கர் பல விடயங்களையும் யோசித்தே செயல் பட்டு இருக்கிறார். அம்பேத்கருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் என்ன வென்றால் அது இந்திய சமுதாயத்தின் ஜாதி வேறுபாடுகளை அகற்றி, சமத்துவ சமுதாயமாக ஆக்குவதே. அது முடியாத காரியமல்ல.

    விவேகானந்தர் இந்து மதத்தின் சார்பாக சிகாகோ சென்றாலும், புத்த மதத்தைப் பற்றியும் உரை ஆற்றி இருக்கிறார். இந்துக்கள் புத்தரை என்றுமே மறந்தது இல்லை. பிறப்பு இறப்பு சுழற்ச்சிக் கோட்பாடு , துறவு முறை, துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடையும் இலட்சியம் என பவுத்த மதம் உண்மையில் இந்து மதத்தின் ஒரு பிரிவே.

  3. அரவிந்தன்
    என்னுடைய நீண்ட நாள் விருப்பத்தை செயல்படுத்தி விட்டீர்கள். நன்றி.
    அன்புடன்
    சுப்பு

  4. Not Related to this article.

    The RajaGopuram of SriKalahasti Temple has collapsed. I am very sadden.
    Imagine, when this temple was built by Krishna Deva Raya at that time what kind of celebrations, the temple should have seen. Now the government of India has brought such a shame to Vijayanagar Empire and their Kings.
    Kadavulay!!!

    Kreshna 🙁

  5. அம்பேத்கர் ஆன்மீக வாதிதான்! தமிழகத்தின் குழப்பமான அரசியல் சூதாட்டத்தில், வெறுப்பினை வளர்க்கும் அரசியல்வாதிகளால் அம்பேத்காரையும் நாத்திகவாதியைப் போல சித்தரிக்கின்றனர் இது ஒரு சோகம்தான்! என்ன செய்வது?

  6. அம்பேத்கார் பெயரில் உள்ள பல கட்சிகள், அம்பேத்கார் ஏன் கிருஸ்துவ மதத்துக்கு மாறவில்லை என்று யோசிக்க வேண்டும், சொல்ல போனால் அவர்கள் சொன்ன ஆசை வார்த்தை, துணை வைஸ்ராயாக ஆக்குகிறேன் என்பது. ஹைதராபாத் நிஜாம் பல கோடி ரூபாய்களை காண்பித்து முஸ்லிமாக மதமாற்ற முயற்சித்தும் அவர் அங்கு செல்லவில்லை என்பதை யோசிக்க வேண்டும். அண்ணல் இன்று அவர்கள் தரும் எலும்பு துண்டுக்காக, தங்கள் இன மக்களை கிருஸ்துவர்களாகவும் முஸ்லீம்களாகவும் மதம் மாற அனுமதிகிரார்கள் அல்லது தூண்டுகிறார்கள். இந்த எஸ்.சி எஸ்.டி. ஒதுக்கீடி கிருஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளித்தால், உண்மையான அந்த மக்களுக்கு இட ஒதிக்கீடு பொய் சேராது. மாறாக கிருஸ்துவ முஸ்லீம்களே அனுபவிப்பார்கள். ஒ தலைவர்களே நீங்கள் இந்த நாட்டுக்கு செய்யும் பெரிய புண்ணியம், டாக்டர் அம்பேத்கார் போல உங்களை நம்பியுள்ள மக்களை கிருத்துவ முஸ்லீம் மத மாற்றிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்.

  7. அன்புடையீர்

    அறுபத்தொன்று ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு முடிவடைந்த இந்த நன்னாளை வாழ்த்தி வரவேற்போம். இதில் மேலும் மேல்முறையீடு அதாவது அப்பீல் இருந்தாலும் இனி நீண்ட காலம் பிடிக்காது. ஒரு நீண்ட வழக்கு தீர்ப்பு வந்திருப்பது மிக நல்லது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    சு பாலச்சந்திரன் 30.9.2010 10.05 pm IST சென்னை

  8. thannai hindhu enRu veLippadaiyaagach chollikkoLLath thayangugiRa evarum amaedhkarin vazhi vandhavargaL ena aaga mudiyaadhu enbadhu ikkauurai tharum theLivaana marRum aadhaarap poorvamaana mudivu. paNigaL thodara iRaivan aruLattum.

  9. தன்னை இந்து என்று வெளிப்படையாக சொல்லிக்கொள்ளத் தயங்குகிற எவரும் அம்பேத்காரின் வழி வந்தவர்கள் என ஆக முடியாது என்பது இக்கட்டுரை தரும் தெளிவான மற்றும் ஆதாரப்பூர்வமான முடிவு. பணிகள் தொடர இறைவன் அருளட்டும்.

    சு. இராதாகிருஷ்ணன்.

  10. தேச தலைவர்கள் எப்போதும் மக்களின் நன்மைக்கு தான் பேசவும் எழுதவும் செய்தனர். யார் எதை சொன்னாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற மனபக்குவம் வர வேண்டும்.

  11. ஆ. நீ. அவர்களே! அருமையான கட்டுரை. சுவாமி விவேகானந்தரும் , அண்ணல் அம்பேத்கரும் வலியுறுத்திய தீண்டாமை ஒழிப்பை, நாம் சமுதாய அளவில் அடைந்து விட்டோமா? ஆதிக்க வாதிகள் அந்த நிலையினை அடைய விடுவார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *