நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்… எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்… 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்…. கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக் கூடாது என்றும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் புரட்சிகரமானவை… தமிழகத்தின் மாபெரும் தலித் இயக்க முன்னோடி, இந்து சமுதாய சிற்பி சுவாமி சகஜானந்தர் குறித்த விரிவான கட்டுரை இது…

View More ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 04

அம்பேத்கர் இயோலாவில் மதமாற்றம் பற்றிய அறிவிப்பு செய்தவுடன் இந்தியா முழுவதுமே ஒரு அதிர்வலை ஏற்பட்டது. முக்கியமாக சில தீண்டப்படாத தலைவர்களிடையே அந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தலித் தலைவர்கள் இந்த யோசனையை நிராகரித்து விட்டனர்.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 04

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 03

[…] அம்பேத்கருடைய போராட்டங்களுக்கு வீர சாவர்க்கர் ஆதரவு அளித்தார். பல பிராமணர்களும், உயர்சாதி இந்துக்களும் ஆதரவு அளித்தனர். […] அம்பேத்கர் உடலளவிலும் ஆன்மீக நோக்கிலும் பூணூல் அணிவதன் சிறப்பை விளக்கினார். இதன் மூலம் வேதங்களை ஓதுகின்ற உரிமையை மீண்டும் பெற்றுவிட்டதாகத் தீண்டத்தகாத சமூகத்தினரைப் பாராட்டினார். அவருடைய பிராமண நண்பரான தேவராவ் நாயக் 6, 471 பேர்களுக்குப் பூணூல் அணிவித்துக் காயத்திரி மந்திரம் உபதேசித்தார். […]

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 03

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02

இஸ்லாமிய எதிரிகளுக்குப் பயந்து கோவிலை மூடி வைத்திருந்த சரித்திரங்கள் நமக்குத் தெரியும். ஆனால் சொந்த சகோதரர்கள் எங்கே கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து புகழ்பெற்ற கோவிலை சனாதன இந்துக்கள் மூடி வைத்திருந்ததை அறிவீர்களா? ஆம். தம் சொந்த இன மக்கள் கோவிலில் நுழையக்கூடாது என்ற காரணத்திற்காக. ஒருநாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. ஒரு வருடக்காலமாக சனாதன இந்துக்கள் கோவிலை மூடி வைத்திருந்தனர்.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

View More கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்

இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.

சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

View More சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்