எது உழைப்பாளர் தினம்?

மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் எனக் கூறப்படுகிறது. இது அகில உலக உழைப்பாளர் தினமா? இது எப்படி ஆரம்பித்தது ?

இதன் வேர்களை நாம் அலசுவோம்.

வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886ல் மே 1ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு வெடிகுண்டு தாக்குதல் சிகாகோவில் நடந்தது. அதில் காவல்துறையினர், தொழிலாளர் உட்பட 12 பேர் இறந்தனர். இதன் பின்விளைவாக தொழிலாளர்களின் தினசரி வேலைக் கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. russian_poster

இந்த நாளை ஐரோப்பிய அமெரிக்க இடதுசாரி இயக்கங்கள் உலகத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கத் தொடங்கின.  சோவியத் அரசு உருவான போது அவர்களுக்கு வருடாந்திர சடங்கோற்சவங்கள் தேவைப்பட்டன. அதற்காகத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்பட்டது மே 1. உலகெங்கும் உள்ள சோவியத் தொண்டரடிப்பொடிகள் அதை அப்படியே சிரமேற்கொண்டு தங்கள் நாடுகளில் செயல்படுத்த ஆரம்பித்தனர். இதுதான் மே ஒன்று சர்வ தேசத் தொழிலாளர் தினமான கதை.

இக்கதையின் ஊடே ஓடும் ஐரோப்பிய மையப் போக்கினை அதிகம் விளக்கத் தேவையில்லை.

தொழிலாளர் தினமாகச் சொல்லப்படும் மே 1 அது தோன்றிய அமெரிக்காவில் இன்று பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டது.$ அந்தக் கொண்டாட்டத்திற்கு மாறாக வேறு பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவை அனைத்தும் கிறுத்துவத்துக்கு முந்தைய பேகெனீயக் (Pagan) கொண்டாட்டங்கள். இந்த பேகெனீய மே 1 கொண்டாட்டங்கள் பல தெய்வ வணக்கம் செய்கிற, செழுமையையும் இயற்கை மேன்மையையும் கொண்டாடுகிற நிகழ்வுகளாக இருக்கின்றன.

வரலாறு சொல்லும் இந்த உண்மை ஒருபுறம் இருக்கட்டும். தொழிலாளர் தினத்தை தொழிலாளர்களுக்காக உண்மையாகக் கொண்டாடத்தான் முடியவில்லை. ஆனால், தொழிலாளர் தினம் அனுசரிக்கும் ஐரோப்பிய மையவாதப் பார்வை கொண்டவர்களால் அவர்கள் கூறிய பாட்டாளிகளின் பொன்னுலகையாவது கொண்டுவர முடிந்ததா ?

இல்லை. அப்படிப்பட்ட பொன்னுலகம் இன்னமும் நம்பிக்கையில் உயிர்வாழும் வெற்றுக் கனவாகவே இருக்கிறது. ஏனெனில், இந்த ஐரோப்பிய மையவாதப் பார்வை கொண்டவர்கள் ஆலைத் தொழிலாளர்களை உன்னத போராட்ட குணம்கொண்ட மேன்மக்களாக சித்தரித்தனர். அதே சமயம் மண் சார்ந்த, விவசாயம் சார்ந்த மக்களைப் பிற்போக்கானவர்களாக அவர்கள் கருதினர். அதனால், அவர்கள் ஆண்ட நாடுகளில் எல்லாம் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடின.

13உதாரணமாக, பாட்டாளிகளின் சுவர்க்கமான சீனாவை எடுத்துக் கொள்வோம். மா சேதுங்கின் “மகா முன்னகர்தல்” (Great Leap Forward) பெரும் பஞ்சத்தைச் சீனாவில் உருவாக்கியது. 1.4 கோடிகளிலிருந்து 1.6 கோடிகள்வரை மக்கள் இந்த பஞ்சத்தில் இறந்திருக்க வேண்டும் என 1980ல் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸு ஸுங்காய் வெளியிட்ட புள்ளியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சீனப் பொருளாதார நிபுணரான அவர் 1981ல் இன்னும் அதிகமான புள்ளி விவரங்களை வெளியிட்டார். சீனா முன்னேற்றத்துக்கு கொடுத்த “இரத்தப்பணம்” என அவர் அதை விவரித்தார். இதன்படி, புள்ளி விவரங்கள் சொல்லுவதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக மக்கள் இறந்திருக்க வேண்டும். 1960ஆம் ஆண்டில் மட்டும் 90 இலட்சம் மக்கள் இறந்திருந்தார்கள் என அவர் தெரிவித்தார். இன்றைக்குச் சீனா வெளியில் காட்டும் ‘சாதனைகள்‘ அனைத்தும் இந்த கோடிக்கணக்கான பிணங்களின் மீது உருவானவைதான்.

chineseboyvictimoffamineஇந்த மானுட இழப்பிற்கான காரணத்தை நாம் உணர்ந்து கொள்வது மிக அவசியம். சீனப் ‘புரட்சி’ ஏற்பட்ட போது ஒரே இரவில், சீனா முழுவதையும், கிராமப்புற விவசாய பொருளாதாரத்திலிருந்து தொழில்மயமான ஆலை உற்பத்தி பொருளாதாரத்துக்கு முற்றிலும் மாற்றவேண்டும் என விரும்பினார் மா சேதுங். அதனால், பேகென்களைப் போல மண் சார்ந்த, கிராமங்களில் நடைபெறும் விவசாயத்தைச் செய்யாமல், ஐரோப்பிய மையவாதப் பார்வையான சோஷலிச சுவர்க்கம் நோக்கும், நகரம் நோக்கிய ஆலைகள் சார்ந்த வேலைகளை மக்கள் செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவு என்ன? மா சேதுங் எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றமா ? இல்லை. உணவுத் தட்டுப்பாடு.

முதல் பஞ்சம் ஹுனான் பிரதேசத்தில் 40 இலட்சம் மக்களை காவு வாங்கியது.

பஞ்சத்தின் உச்சத்தில் தவித்த கிராமப்புற மக்களுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கட்சி பிரதிநிதிகள் அதிரடி கட்டளைகளைக் கொடுத்தனர்:

மக்கள் தங்கள் சொந்த வீட்டில் நடக்கும் மரணங்களைக் கூட வெளியே தெரிவிக்கக் கூடாது.

அவ்வாறு தெரிவிப்பது தேசத்தின் முன்னேற்றத்தின் உத்வேகத்துக்கு ஊறுவிளைவிக்கும்.

21 இந்த ‘அறிவுரைகள்‘ உள்நாட்டில் செய்யப்பட்ட பிரச்சாரங்கள். முற்றிலும் வேறுபட்ட பிரச்சாரம் வெளியுலகிற்குச் செய்யப்பட்டது.  இதன்படி பஞ்சத்தின் உச்சக்கால கட்டத்தில்கூட (1959ல்) ஒரு சீனனுக்கு 1050 கிலோ தானியங்கள் கிடைக்கும் என வெளியுலகுக்குச் சொல்லப்பட்டது.

ஆனால், சீன அரசுக் கிட்டங்கிகளில் இருந்த தானியங்களின் அளவு மிக மிகக் குறைவு. அங்கே உண்மையில் இருந்த தானியங்கள் உண்மையிலேயே விநியோகிக்கப்பட்டு இருந்தால் ஒரு சீனனுக்கு 186.5 கிலோக்கள் மட்டுமே கிடைத்திருக்கும்.

இருந்தாலும், இந்த கொடூர பஞ்சங்களால் பொய்யான நம்பிக்கை உடைபட கம்யூனிஸ்ட்டுகள் விரும்பவில்லை. கிராமம் சார்ந்த பேகென்களின் தொழிலான விவசாயத்தைவிட, நகரம் சார்ந்த ஐரோப்பிய மைய வாதப் பார்வை முன்வைக்கும், ஆலைகள் சார்ந்த தொழில்களே உயர்ந்தவை எனக் கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக நம்பினர். தான் தோற்றுவித்த மூடநம்பிக்கைகளை உறுதியாக்க கம்யூனிசம் முனைந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கம்யூனிசப் பிரதிநிதிகள் தங்கள் நாடு ஆசிய விவசாய நாடு என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டனர். அத்தகைய தாழ்வான நிலையிலிருந்து தாங்கள் மீண்டு வந்துவிட்டதாக அவர்கள் பிரகடனப்படுத்தினர்.

1950களின் கதை மட்டுமல்ல இது. மாவோவின் “நெடும் பீடுநடை” (Long March), பீடைநடையாக இன்றைக்கும் சீன கிராமப்புறங்களில் பிணமருந்திக் கொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து பிணமருந்திக் கொண்டு இருக்கும் இந்தக் காலத்திலும்கூட, இந்தப் பீடைநடையின் உண்மைத் தன்மையை மறைத்து, அது குறித்த உயர்வான பிம்பங்களை உருவாக்கும் உத்திகளை தொடர்ந்து கம்யூனிசமும் செய்து வருகிறது. பீடைநடையும் பிரச்சாரமும் கைகோர்த்து பவனி வருகின்றன.

உதாரணமாக, ஜனவரி 26, 1995ல் “நெடும் பீடு நடை-2” எனும் பெயர் வைக்கப்பட்ட ராக்கெட் ஒன்று சீனாவிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது. சில கணங்களில் அது அருகாமையிலிருந்த கிராமங்களின் மீது விழுந்தது.

பிப்ரவரி 14, 1996ல் செலுத்தப்பட்ட அடுத்த பீடுநடை இதே போல, அதுவும், கிராமங்களின் மீதுதான் விழுந்தது.

மா சேதுங் ஆரம்பித்த “பெரும் பீடு நடை” கிராமங்களை அழித்தது போல, அதே பெயரில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் கூட, அதே போலக் கிராமங்களையே அழித்தது வேதனையான ஒற்றுமை. ஆனால், இந்த உண்மை வெளியே தெரியலாமா ?

இந்த விண்ணூர்தி செலுத்தப்படுவதைக் காண வந்திருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சீன இராணுவத்தால் ஐந்து மணிநேரம் அடைத்து வைக்கப்பட்டனர். அழிக்கப்பட்ட கிராமங்கள் படமெடுக்கப்படுவது தடை செய்யப்பட்டது. இந்த விண்ணூர்திகள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏவல் செய்ய உருவாக்கப்பட்டவை. எனவே, மேற்கத்திய நாடுகளும் இதைப் பெரும் பிரச்சினை ஆக்கவில்லை. சீன விண்ணூர்திக்காக எத்தனை கிராமவாசிகள் பலியானார்கள் என்பது உலகுக்குத் தெரியவே போவதில்லை.hambre3

உண்மையும் உயிர்களும் பலியாவது கம்யூனிசம் எனும் சித்தாந்தத்திற்குக் கவலைக்குரியவை இல்லை. கம்யூனிச சித்தாந்தத்தில் உயிர்கள் முக்கியமானவையும் இல்லை. அதிலும் ஒரு விவசாயியின் உயிருக்கு மதிப்பு கிடையாது. தொடக்க கட்டங்களில் மட்டுமே, புரட்சிகளில் ஈடுபடத் தேவைப்படும் மக்கள் மந்தைக்காக மட்டுமே, உழவர்கள் மார்க்சியத்தில் பேசப்படுவார்கள்.

புரட்சிக்கு பிறகு ஏற்படும் பொன்னுலகில்‘ உழைக்கும் பாட்டாளி வர்க்கமென்பது நகர்ப்புற ஆலைத் தொழிலாளிகள் மட்டுமே. வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொள்ளப்பட வேண்டிய வெறும் எரிச்சல்கள் மட்டுமே கிராமப்புற விவசாயிகள். அவர்களைக் காவு கொடுப்பதும் பூச்சிகளைப் போல அழித்தொழிப்பதும் மார்க்சிய சித்தாந்த வாதிகளுக்கு பிரச்சினையே இல்லை. இந்த மனோபாவம்தான், விவசாயிகளுக்குச் சம்பந்தம் இல்லாத ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமான மே 1ஐ “உலக உழைப்பாளிகள் தினம்” என அறிவிப்பதிலும் உள்ளது.

41மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1.

ஆனால், நமது மனசாட்சி இந்தக் கேள்விகளைக் கேட்கக்கூடும். தொழிலாளர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா ? அவர்கள் ஒரு தேசத்தின் முதுகெலும்பு இல்லையா ?

ஆம். அவர்கள் நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால், நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும்.

51அப்படிப்பட்ட ஒரு தினம் ஐரோப்பிய மையவாதம் சார்ந்த, பேகெனிய மரபுகளை ஒதுக்குகிற, மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தொழிலாளர் தினமாக இருக்க முடியாது. ஆனால், கிராமங்களை நோக்கிய, பேகனீய மரபு கொண்ட, மண் சார்ந்த, பன்மையில் ஒருமை காணுகிற ஒரு இந்துத்துவ கொண்டாட்ட தினமாக மட்டுமே அப்படிப்பட்ட ஒரு தினம் இருக்க முடியும்.

ஏனெனில், மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் நம் தேசத்தின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது.

அங்கே தொழில் என்பது ஒரு சாபம். வேறுவழியின்றி மேற்கொள்ளப்படும் ஒரு கடின சூழல். அதிலிருந்து பெறும் விடுப்பே சந்தோஷம். ஏன் இப்படி இருக்கிறது ?

ஏனெனில், மேற்கத்திய இறையியல் தொழில் செய்வதை, உழைப்பதை ஒரு சாபமாகக் கருதுகிறது. மேற்கத்திய இறையியல் காட்டும் சுவர்க்கத்தில் உழைப்பே கிடையாது.

31உழைப்பின்றி சர்வமும் கிடைக்க மனிதன் வாழ்ந்த வாழ்வே பொன்னுலகாக வர்ணிக்கப்படும் ஏடன் தோட்டம். அத்தகைய வாழ்வை மனிதர்களுக்குத் தடை செய்து, உழைத்துப் பிழைக்கும்படி சபித்ததுதான் ஆபிரகாமிய ஆண்டவன் மனிதருக்குத் தந்த தண்டனை. அந்த உழைப்பு எனும் தண்டனையை ஐரோப்பிய மையவாதப் பார்வையால் எப்படிக் கொண்டாட முடியும் ?

ஆனால், பாரதத்திலோ உழைப்பு என்பது ஒரு படைப்பூக்கச் செயல். இறைவனே ஆதி தொழிலாளிதான். விஸ்வகர்மா எனும் முதல் தொழிலாளி.

தொழில் என்பது இங்கு வழிபாடு. உழைப்பு ஒரு சாதனை. தன் உழைப்பால் உணவு உற்பத்தி செய்து, வியர்வையால் உணவை இங்குள்ளோர் உருவாக்குவர். அங்கனம் உருவாக்கிய உணவை நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், பகுத்துண்பதே பண்பாடு. கிராமத்து மனிதர்களைக் கொல்லாமல், பல்லுயிர் ஓம்புதல் மனிதனை வானுறையும் தெய்வத்துள் சேர்க்கும் ஆத்மசாதனை.

an-indian-potter-arranges-011இந்த வாழ்க்கை முறையின் தொன்ம வடிவுதான் விஸ்வகர்மா.

மண்பாண்டமும் மரச்சட்டகமும் செய்யும் நம் தொழிலாளர்கள், எதையும் தன் வியர்வையால் உருவாக்கும் நம் தொழிலாளர்கள் விஸ்வகர்மாவின் உயிர் வடிவங்கள்.

அவர்களை வணங்குவோம். அவர்களாக விளங்குவோம்.

வையகம் மேன்மையுற சமுதாயம் அனைத்தும் இன்புற உலகத் தொழிலாளர்களே உலகை ஒன்றுபடுத்துவோம்.

இவ்வருடத்திய உழைப்பாளர் தினம் நமக்குப் பழக்கமான கிரிகேரியன் நாட்காட்டியின்படி செப்டம்பர் 17 அன்று (மே 1 அல்ல) வருகிறது. அதாவது, வானவியல் வளர்த்த விவசாயிகளான நமது மூதாதையர் பின்பற்றிய பஞ்சாங்கத்தின்படி, நமது தொழிலாளர் தினம் கன்யா சங்கிராந்தி அன்று வருகிறது. அதற்கு நம் முன்னோர் இட்ட பெயர்: விஸ்வகர்மா ஜெயந்தி.

$ செப்டம்பர் மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமையையே உழைப்பாளர் நாளாக அமெரிக்கா அனுசரிக்கிறது.

மேலதிகம் அறிய:

26 Replies to “எது உழைப்பாளர் தினம்?”

  1. அற்புதம்! இத்தகைய எண்ணங்கள் இங்கே வெளியில் தெரியாமலும் தெரிவிக்கப்படாமலும் உள்ளது! தொழிலாளர்களை வாழ்த்தி, எல்லோரும் உழைத்து உழைப்பின் உயர்வை உணர்ந்து உலகுக்கு உணர்த்துவோம்! நன்றிகள் பல!

  2. புதிய விதமான கட்டுரை. வாழ்த்துகள்.

  3. விஸ்வகர்மா ஜெயந்தியே நமது நாட்டின் பாரம்பரியமான தொழிலாளர் தினம். செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வரும். வடஇந்திய மாநிலங்கள் பலவற்றில் தொழிலாளர் தினம் அன்றுதான் கொண்டாடப் படுகிறது. நமத நாட்டின் மிகப் பெரிய தொழிலாளர் அமைப்பாக முதலாவது இடத்தில் இருந்து வருகின்ற பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) விஸ்வகர்மா தினத்தையே தொழிலாளர் தினமாக கடைப்பிடித்து வருகிறது. கம்யூனிஸ்ட் தொழிற் சங்கம் மற்றும் எந்த ஒரு தொழலாளர் கொள்கையும் இல்லாத தி மு க தொழிற்சங்கம் போன்றவைகள்தான் மே முதல் நாளை தொழிலாளர் தினம் என்று சொல்லி நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். நமது பாரம்பரிய தொழில் கடவுள் விஸ்வகர்மாவே ஆகும். எனவே அன்றைய தினமே தொழிலாளர் தினம் ஆகும்.

    வித்யா நிதி

  4. இன்றும் பெரும்பாலான உழைப்பாளர்கள் ஆயுதபூஜை நாளையே தங்களது உழைப்பாளர் நாளாக கொண்டாடுகின்றனர்.

    மே தினம் வெறும் கோஷம் போடுவதற்குத்தான். அந்த தொழிலாளர்களும் ஆயுத பூஜை நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

  5. வித்தியாசமானக் கட்டுரை.

  6. மிகவும் முக்கியமான கட்டுரை. கம்யூனிசம் என்பது ஒரு மதமே என்பதற்கான ஆதாரங்களைத் தரும் கட்டுரை.

    ஆபிரகாமிய மதங்கள் அழிக்கும் குணம் வாய்ந்தவை என்பதற்கான இன்னொரு ஆதாரம்.

    சீனாவின் அராஜகம் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் இந்தியாவில் அதிகம் கிடைப்பதில்லை.

    இந்த உண்மைகளை வேறு எந்தத் தளத்திலும் நாம் காணமுடியாது.

    அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்குள் இன்னும் எத்தனை தகவல்கள் இருக்கின்றனவோ?

    வாழ்த்துக்கள். நன்றிகள்.

  7. நல்ல சிந்தைக்குரிய விஷயம் சொல்லிய அர்விந்த் நீலகண்டனுக்கு பாராட்டுக்கள். சற்று பழு தமிழில் கட்டுரை இருந்திருந்தால் எளியவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்..
    நன்றி.

  8. GOLDENAGE IS A MIRAGE !!!!

    Sri Aravindan Neelakantan has written a very interesting, thought provoking as well as inspiring article.

    As Indians we must look at things from Indian prespective. Unfortunately due to colonial rule for over two centuries, we still ape the West and hence we are not able to come out of that mndset.

    Communism though failed miserably in many conutries all over the world, still does provide shelter for a few opportunist Indian politicians ! Therefore we will not be able to come out of the same.

    Whether we celebrate May Day or Vishwakarma day or anyother day to commemorate the worker, what is his present status in the Indian Industrial scene. Despite globalisation, global markets, e-trade & commerce etc. has his status improved ? That is a million dollar question ?We have growig retrenchments, VRS (CRS to be precise), closure of industries here and there. The process of re-engineering has resulted in exploiting workmen without even recognising his fundamental rights by inculcating Hire & Fire culture. Though these things are done under various disguise.

    The disparity between rich and poor is growing everyday. As mass media like TV, Internet, Newpapers, email ec.bring everything that is happening around the world into our drawing room, n this growing materilistic age poor are becoming disturbed to find the lavish lifestyle of rich be it a IPL match or related partying,marriage of a politician / industrialist/ sports person / ickon etc.

    There is a need for all of us to introspect and adhere to “inclusive growth” !

  9. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் அறியாத பொருளே இல்லை. அவர் ஒரு ‘என்ஸைக்க்ளோபீடியா’

  10. hareram

    very intersting article,gaining lot of knowledge…. hindus confident are boosted by this
    site.keep going.

  11. இறைவ்னே ஒரு தொழிலாளி, ‘விஸ்வகர்மன்’ என்று எடுத்துக் காட்டித் தொழில் செய்வதே இன்பம் என்றும் அது இந்துத்வம் என்றும் ‘சபத்’ ஓய்வு தொழிலைச் சாபம் என்று கருதும் மேற்கத்திய இறையியல் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது என்றும் மே1 உண்மையில் தொழிலாளர்களைப் போற்றும் நாளல்ல, இது மக்களைக் கொன்று குவித்த அரக்க சித்தாந்தத்தின் கருத்தாக்கம் எனத் தெள்ளத் தெளிவாக்க விள்க்கியுள்ள்ளார். இந்துத்த்வம் வழ்க்கைப் பண்பாட்டுநெறி என்பதற்கு மற்றுமொரு சான்று. நன்றி அரவிந்தன்

  12. >சற்று பழு தமிழில் கட்டுரை இருந்திருந்தால் எளியவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்..<

    சேர், இதன் அர்த்தம் என்ன சேர்?

    -தமிழ்ஹிந்துகாவல்நாயர்

  13. Dear Mr/ Ms Tamilhinduwatchdog

    தாங்கள் ஆங்கிலத்தில் Tamilhinduwatchdog என்று தாங்கள் பெயரைப் போட்டுவிட்டு அதைத் தமிழில் எழுதும்போது தமிழ்ஹிந்துகாவல்நாயர் என்று போடுவது முறையாக இல்லை. நாயர் என்பது கேரளத்தில் உள்ள ஒரு பிரிவினரைக்குரிக்கும் சொல். இது பெயர் முடிவில் வரும்போது அப்பிரிவைச்செர்ந்தவரைக் குறிக்கும் என்பது தமிழ் மரபு அல்லது இலக்கணம். அப்படியானால், இப்பிரிவினரை ஆங்கிலத்தில் dog என்று அழைப்பதற்கு ஒப்பாகிறது.

    நான் சொல்வதைச்சொல்லிவிட்டேன். கேட்பது கேட்காததும் தாங்கள் விருப்பம்.

  14. பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி
    //அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் அறியாத பொருளே இல்லை. அவர் ஒரு ‘என்ஸைக்க்ளோபீடியா’//

    அன்புள்ள முத்துகுமாரசாமி அய்யா,

    உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் உண்மை என்னவென்றால் இன்றைய கணினி சூழ்நிலையில் ஒரு சாதாரண ஆர்வமுள்ளவனும் ஒரு விஷயத்தில் ஆழமான புலமை உள்ளவனாக காட்டிக்கொள்ள முடியும் என்பதற்கான பிரத்யட்ச உதாரணம்தான் அரவிந்தன் நீலகண்டன். எனவே நான் என்ஸைக்ளோபீடியா எல்லாம் இல்லை. ஒரு எளிய தமிழ் ஹிந்து மட்டுமே. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றி

    அரவிந்தன் நீலகண்டன்

  15. ஒரு நாய் தன்னை மரியாதையாக அழைத்துக்கொண்டால் இப்படி இலக்கணமும் தமிழ் மரபும் போட்டு வாங்கும் என யாம் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மன வருத்தத்தோடு வாலாட்டிக்கொண்டே எம் பெயரை மாற்றிக்கொள்கிறோம்.

    இன்று முதல் யாம் தமிழ்ஹிந்துகாவல்பட்டி என்றறியப்படுவோம்.

    இப்படி பட்டி என்பதும் யாரையாவது இழிக்கும் என்றால், மீண்டும் யாம் எம் பெயரை மாற்றிக்கொள்ளத் தயங்கோம்.

    — தமிழ்ஹிந்துகாவல்பட்டி.

  16. simply superb article.
    Shri Aravindan, as you have told anybody who is having
    interest can collect lot of information from net but it
    requries people like Shri Arvindan to present it in a
    superb manner. Hats off to you.

    RGK

  17. ”கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிளாளி விவசாயி”
    ”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவர் எல்லாம் கொழுத்துண்டு பின்செல்லுபவர்”
    எனவே உழவர் தினம் அனுசரிப்பதும் அந்நாட்களில் அவர்களுக்கு பாதபூஜை செய்வதும் சாலசிறந்ததாகும்.
    நம் நாடு விவசாயத்தை நம்பியுள்ள நாடு அரசாங்க பட்ஜட்டில் குறைந்தது 25 சதவிகிதம் விவசாயத்திற்க்கு ஓதுக்குவது மிகவும் அவசியம்
    அதற்காக ஆலைதொழிலாளிகளை புறம்கணிக்கவேண்டும் என்பதுஅல்ல ஆனால் அவர்கள் இரண்டாம்பஷ்ஷ முக்கியத்துவம் ஆனவர்கள். அவர்களும் அவுட்சோர்ஸிங் என்ற பெயரில் இன்று ஏமாற்றப்படுகிறார்கள்.
    ஆனால் எந்தமுக்கியத்துவமும் இல்லாத ஒரு கூட்டம் சுகபோகம் அனுபவிக்கிறது என்றால் அது அரசு ஊழியர்களே ஆவார்கள். (Government Servant ) அரசு ஊழியர் என்றால் ஐகோர்ட் டவாலி முதல் நாட்டின் ஜனாதிபதி வரையில் எல்லோரும் தம் வாழ்க்கையை சமுகசேவைக்காக அற்பணிக்கிறேன் என்ற உருதிமொழி எடுக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள். இந்த பட்டியலில் ஆசிரியர்கள் டாக்டர்கள் வக்கீல்கள் போலிஸ் சேர்க்கபடவேண்டியவர்கள் ஆவார்கள். இந்தஎண்ணம் இல்லாதவர்கள் (Simple living & high thinking ) தயவுசெய்து மேற்சொன்ன வேலைகளை ஏற்காமல் இருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்க்கு நல்லது.

  18. தற்பொழுது தமிழ் நாட்டில் அரசாங்க பணியில் இருப்பவர் எண்ணிக்கையைவிட ஓய்வு ஊதியம் பெருபவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் பலர் வேலைபார்த்த ஆண்டுகளைவிட ஓய்வு ஊதியம் பெற்றுவரும் ஆண்டுகள் அதிகம். அவர்களுக்கு பணியில் இருப்பவருக்கு அவ்வப்போது அளிக்கப்படும் எல்லா சலுகைகளிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கூட்டி ஓய்வு ஊதியம் அளித்து வருகிறார்கள். அரசாங்க ஊழியர் ஓய்வு பெரும்பொழுது 5000 ரூபாய் ஓய்வு ஊதியம் பெருகிறார் என்றால் அவர் 70 வயது நெருங்கும்போது அதுவே 10000 ரூபாய் அளவிற்கு உயர்துவிடுகிறது.
    ஆனால் ஆலைதொழிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவருக்கு அவரது வைப்புதொகையை பொருத்து அந்தபணம் ஒரு சாதாரணவங்கியில் டிபாஸிட் செய்தால் வரும் வட்டிதொகையை அளவே ஓய்வு ஊதியமாக நிர்ணயம் செய்கிறார்கள். அவர் இறக்கும் வரையில் அந்ததொகையில் எந்தமாற்றமும் இல்லை.
    ஆனால் எந்தபாதுகாப்பும் இல்லாமல் நமக்கு சோறுபோடும் விவசாயிக்கு நாம் பட்டை நாமத்தை போட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க ஸெக்யூலரிஸம் !! வளர்க ஜனநாயகம் !!!

  19. தேச பக்தர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு ,

    உங்கள் கட்டுரையில் உழைப்பும், அறிவும், ஆராய்ச்சியும் வெளிப்படாது இருந்ததே இல்லை. உங்களை என்சைக்ளோபீடியா என்று மட்டுமல்ல, ஒரு quick reference என்றும் கூறலாம். Great. thank you.

    @ tamihinduwatchdog,

    நாயர் என்பது ஒரு சாதியைக் குறிக்காது. அல்சேஷன், பொமரேனியன், பூடுல், டாஷந்த், ராஜபாளையம், சிப்பிப்பாறை, ஷேப்பெர்ட் ஆகியவையே ஜாதிகள்.
    அதிலும் பொதுவாக ஷெபர்ட், ராஜபாளையம், சிப்பிப்பாறை முதலானவை சிறந்த காவல் நாய்கள், மற்றவை காவல் நாய்கள் இல்லை. மேலும் உங்களை விளிக்க காவல் பட்டி என்பது மரியாதையான பெயர் அல்ல. திருக்காவல்பட்டியார் என்றோ அல்லது தமிழ்ஹிந்துகாவல்பட்டியார் என்றோ அழைப்பதே தமிழ் வீரமரபாம்.

  20. அற்புதமான கட்டுரை…

    ஆனால் இதை ஆளும் அரசாங்கம் புரிந்து கொள்ளுமா? எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி வளர்ச்சி என்ற பெயரில் இவர்கள் செய்யும் அநியாயம் அதிகம்.

  21. அதி அற்புதமான கட்டுரை ஒன்றை ஆய்வு நோக்கில் தந்துள்ள அரவிந்தன் நீல கண்டனுக்குப் பாராட்டுக்கள். கட்டுரையின் நிறைவு ஆயுத பூஜை நாளை உழைப்பாளர் நாளாக முன் வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த என்னை விஸ்வ கர்ம ஜெயந்திக்கு அழைத்துச் சென்றிருப்பது வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

  22. அன்புள்ள அநீ,

    வழக்கம் போலவே மிகச் செறிவான கட்டுரை. ஆனால் கீழ்கண்ட வரிகள் தான் குழப்புகின்றன .

    //ஏனெனில், மேற்கத்திய இறையியல் தொழில் செய்வதை, உழைப்பதை ஒரு சாபமாகக் கருதுகிறது. மேற்கத்திய இறையியல் காட்டும் சுவர்க்கத்தில் உழைப்பே கிடையாது.//

    அப்படியெனில், மேற்கின் முன்னேற்றம் முழுக்கவும் பணக்காரர்கள் எளியவர்களை முற்றச் சுரண்டியதால் தான் என்கிறீர்களா ?

  23. மிக அருமையாக சாதித்திருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். மேற்கத்தியப்பார்வையில் உழைப்பே சபிக்கப்பட்ட நிலைதான். கிறிஸ்தவ இறையியல் நோக்கில்தான் இன்னும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஐரோப்பிய மையவாதிகள் இன்னும் உழைப்பைத்துன்பமாக சாபமாக கருதுகிறார்கள். ஆகவே அவர்களது உழைப்பாளர் தினமும் அபத்தமே. உழைப்பை வழிபாடாக மோக்ஷ சாதனமாக கர்ம யோகமாக காணும் நமக்கு அவர்களது உழைப்பாளர்தினமாகிய மேதினம் பொருந்தாது. சாக்ஷாத் இறைவனையே உழைப்பாளியாகக் காணும் விஸ்வர்கர்ம ஜயந்திதான் உழைப்பாளர் தினம் கொண்டாடுவதற்கு பொருத்தமானது. என்ற ஸ்ரீ அ நீ அவர்களின் வாதம் ஆணித்தனமானது மிக ஆழ்ந்த பொருளுடையது. மேற்கத்திய மாயையால் தாழ்வு மனப்பான்மையில் மூழ்கிக்கிடக்கும் இடதுசாரிகளுக்கு இது உறைக்காது. அவர்கள் இப்படித்தான் பொருந்தாதக்கேள்வியைக்கேட்பார்கள்.
    shankaran “அப்படியெனில், மேற்கின் முன்னேற்றம் முழுக்கவும் பணக்காரர்கள் எளியவர்களை முற்றச் சுரண்டியதால் தான் என்கிறீர்களா ? ”
    முன்னேற்றம் என்பதே மூலதனம் குவிதல் அதாவது உழைப்பை சுரண்டுதல் என்பது மார்க்சியத்தின் ஆதாரசுருதி. அதை இங்கே அ நீ பேசவில்லை. உழைப்பு என்றாலே தாழ்வாகப்பார்க்கும் அடிப்படை அபிராஹாமியப்புரிதல் ஐரோப்பிய வரலாற்றுப்பார்வையான மார்க்சியத்திலும் உள்ளது என்பதே கட்டுரையாளரின் கருத்து. மேற்கத்திய நாடுகள் எப்படிப்பொருளாதார வளர்ச்சியடைந்தன என்பதை அ நீ இங்கு சொல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *