தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்

the_karate_kid_11984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ‘ தி கராத்தே கிட்’ திரைப் படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ‘ தி கராத்தே கிட்’ . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கிறது. பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்துள்ளனர்

டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் ‘ட்ரே பார்க்கரி’ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை வாய்ப்புக்கள் சீனாவுக்கு இடம்பெயர, பிழைப்புக்காக மகனுடன் பெய்ஜிங்கில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். முற்றிலும் அமெரிக்க பழக்க வழக்கம் கொண்ட சிறுவன் ட்ரே பார்க்கர் பெய்ஜிங் சூழலில், மஞ்சள் கலாச்சாரத்தில் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் திரைக்கதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க கதை தொடங்குகிறது.

ட்ரே வீதியில் விளையாடச் செல்லும்போது, வயலின் பயிற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு சீனச் சிறுமியைச் சந்தித்துப் பேசுகிறான். ட்ரேவின் கேசத்தில் செய்யப்பட்டிருக்கும் ஆப்பிரிக்க மணப்பின்னல் அலங்காரத்தை அவள் ஆர்வத்துடன் தொட்டுப் பார்க்கிறாள். இது அவள் மேல் பற்று கொண்டிருக்கும், தெருவின் ரவுடிப்பையன்  ‘செங்’கிற்கு ஆத்திரமூட்ட, செங் ட்ரேவைக் நையப் புடைக்கிறான். அத்தோடு நில்லாமல் பள்ளியிலும் செங்கின் அடாவடிகள் தொடர பரிதவித்துப் போகிறான் ட்ரே. பெய்ஜிங்கின் மிகப்பெரிய குங்ஃபு பள்ளியில் செங் பயிற்சி பெறுவதை அறிந்து கொள்கிறான் ட்ரே.

அதிர்ஷ்டவசமாக, ட்ரே தங்கியிருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்பின் மராமத்துப் பணியாளராக இருக்கும் திருவாளர் ஹான் (ஜாக்கி சான்), ட்ரேவுக்குக் குங்ஃபு கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார். செங் கற்றுக்கொள்ளும் குங் ஃபு பள்ளியின் மாஸ்டரும், திரு. ஹானும் , சீன சிறுவர் குங்ஃபு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்கள் இருவரும் மோதுவார்கள் எனவும் அதுவரை ட்ரேவுக்கு மற்ற சிறுவர்கள் எந்த தொந்திரவும் தரலாகாது எனவும் ஒப்புக்கொள்கின்றனர்.(1984 ம் வருடத்திய கராத்தே கிட்டிலும் இது உண்டு.) ஹானின் கடுமையான பயிற்சியின் விளைவாக திறம்பெறும் ட்ரே, சீன குங்ஃபு சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் செங்கை சந்திப்பது கதையை முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

the_karate_kid_2இந்தப் படத்தின் பலமாக அமைவது பெய்ஜிங்கின் தொழில் வளர்ச்சி, சீனப் பெருஞ்சுவரின் கம்பீரம், பசுமை மிகுந்த மலைகள் ஆகியவற்றைக் காண்பிக்கும் காமெரா படத்தொகுப்பு. குறிப்பாக, குங்ஃபு பயிற்சிக்கு எழில் மிகுந்த மிக நேர்த்தியான இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் இரயில் பயணக் காட்சிகள், மலைக்கோட்டையின் பழங்காலக் கட்டிட அமைப்பு, பிரம்மாண்டம் ஆகியவற்றை ஒரு சுற்றுலா போலக் காண்பித்திருப்பது கொடுத்த பணத்துக்கு இதமாக இருக்கிறது. கடைசி நாள் குங்ஃபு பயிற்சியை நிழல் ரூபத்தில் காண்பிப்பதும் அருமை. படத்தின் மற்ற இரண்டு பலங்கள் ஜாக்கி சானும், நகைச்சுவையும். ஐம்பத்தாறு வயதாகும் ஜாக்கி சான் திரைப் படத்தில் வரும் காட்சிகள் சற்று குறைவென்றாலும் அவருக்கே உரிய வேகமும், வாடிக்கையான ஹாஸ்யமும் சேர்த்து அசத்துகிறார். படம் நெடுக அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்தை தொய்வில்லாமல் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றன.

ஆனால் முதிர்ச்சியுள்ள ரசிகர்கள் படத்தில் வரும் ஓட்டைகளை எளிதாகக் காணலாம். சாதாரண ரசிகர்களுக்கு, படத்தில் உள்ள குங்ஃபு பயிற்சிக் காட்சிகளில் நல்ல ஆழமும், கடுமையும் த்ரில்லிங்காக அமையும் என்றாலும் உண்மையான குங்ஃபு அல்லது கராத்தே டெக்னிக் என்பது ஒரு மருந்துக்குக் கூட கிடையாது. சாம்பியன்ஷிப் போட்டியிலோ சண்டையை விட வெகு வேகமாகக் கேமரா சுழன்று தலைகளையே திரும்பத் திரும்பக் காட்டுகிறது. என்ட்டர் தி டிராகன் , தி ப்ளெட் ஸ்போர்ட் படங்களில் வந்த அதே மாதிரி போட்டி என்றாலும் சண்டையின் ஆழம் ஒரு 10% கூட கிடையாது. இறுதிப் போட்டியின் கடைசிச் சுற்று எதிர்பாராத விதமாக வெறும் அரை நொடியில் முடிகிறது. இதெல்லாம், தற்காப்புக்கலை ஆர்வத்துடன் படம்பார்க்கச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்கும். ட்ரே பார்க்கராக நடிக்கும் ஜேடன் ஸ்மித்துக்கு, வில் ஸ்மித் போன்று நடிப்போ சண்டையோ எடுபட இன்னும் சில வருடம் பிடிக்கும். இவ்வளவு ஏன், தலைப் பின்னலும், தளிர் முகமும் கொண்டு ‘சிறுமியோ?’ என சில சமயம் எண்ண வைக்கும் அளவுக்கு பாத்திரத்துக்கு பொருத்தமில்லாத உருவம். இந்நிலையில் ட்ரேவின் காதலும், சீனக் காதலியின் அரை நிமிட தப்பாட்டமும் அமெரிக்காவில் மட்டுமே ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. செங்கின் வன்மத்துக்கும் போதுமான காரணம் இல்லை.

The Karate Kid 2 (2010) Trailer

மொத்தத்தில் அப்பட்டமான குறைகளுடன் அமைந்த ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்
படம் முடிகையில் அமெரிக்க ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது, அவர்கள் இன்னும் அமெரிக்க வீண் பெருமையில், கற்பனையில் லயித்து இருக்கிறார்கள் என்பதையே காட்டியது. பத்திரிகைகள் இப்படத்தைப் பாராட்டியும், குறிப்பாக ஜேடன் ஸ்மித்தின் காதல், சண்டை, நடிப்புத் திறமைகளைப் புகழ்ந்து எழுதி இருப்பதும் இவர்கள் , ‘politically correct’ ஆக இருக்க விரும்புவதையே காட்டுகிறது.

8 Replies to “தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்”

 1. Pingback: Indli.com
 2. What has this movie got to do with Tamil Hindu?
  If you want to document this as a social happening, which heralds the change happening in the globe, then you would be shocked by the way China has started projecting its history.
  For example, there are documentaries that are show world war history from china’s point of view. It would be shocking to the folks who are so used to the western version of the history.
  Infact, I thought that the History channel is completely taken over by christians and chinese.

  These are things that we have to learn from Chinese. Instead of spending money on IPL and movies, if we can build these india centric documentaries and educate public, that would be a good service. Do we have any good quality documentary that shows how Cholas conquered south-east asia? Or Do we have any documentary on ancient tamil architects & architecture (not just temples, but also canals/dams etc).
  There is so much to do. Let us not waste time commenting about phoren movies.

  p.s. I also realise that our public is more keen to see Manada Mayilada rather than good quality documentaries. But we can atleast target hindu schools and show it to the students as an educational program, so that atleast the next generation is enlightened.

 3. சமீப காலமாக தமிழ் ஹிந்துவின் சுருதி குறைந்து போய் உள்ளது .கரூரில் நடந்த ஹிந்டுமுன்னணி மாநாடு பற்றி எந்த தகவலும் வரவில்லை .கன்னியாகுமரியில் நடந்த ஸ்ரீனிவாச திருகல்யாணம் பற்றிய தகவலும் இல்லை .செய்திகள் தருவதை விட்டுவிட்டு லிங்க் கொடுக்கிகிறார்கள்.யாருக்காகவோ பயந்து வேலை செய்வது போல் உள்ளது .கேரளாவில் நடந்த ஹிந்துக்களுக்கு எதிரான கொலைகள் பற்றிய தகவலோ அல்லது ஆர் எஸ் எஸ் பிராந்திய சங்க மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர் எஸ் எஸ் பயிற்சிக்கு வந்த மோகன் பகவத் பற்றிய தகவலும் வரவில்லை.கராடே கிட் திரைப்படத்தால் ஹிந்து கலாச்சாரத்திற்கோ அல்லது ஹிந்து மத வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை.பின் ஏன் இந்த திரை விமர்சனம் .பல மாதங்களாக எந்த புதிய செய்திகள் இல்லை கட்டுரைகள் தான் உள்ளன.எனக்கு ஏதோ இந்த தளம் விஷமிகளின் கைக்கு மாறிவிட்டதோ என எண்ண தோன்றுகிறது .Please visit http://www.haindavakeralam.com for updates daily.

 4. // செய்திகள் தருவதை விட்டுவிட்டு லிங்க் கொடுக்கிகிறார்கள்.யாருக்காகவோ பயந்து வேலை செய்வது போல் உள்ளது //

  // பல மாதங்களாக எந்த புதிய செய்திகள் இல்லை கட்டுரைகள் தான் உள்ளன.எனக்கு ஏதோ இந்த தளம் விஷமிகளின் கைக்கு மாறிவிட்டதோ என எண்ண தோன்றுகிறது .Please visit https://www.haindavakeralam.com for updates daily. //

  அன்புள்ள சதீஷ், தயவு செய்து இப்படிப் பட்ட விபரீத கற்பனைகளை பரப்ப வேண்டாம்.

  கன்யாகுமரி நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய சர்சங்கசாலக்ஜி அவர்கள் கலந்து கொண்ட பிறகு சென்னை வந்தார். அப்போது தமிழ்ஹிந்து பிரத்யேகமாக அவரைப் பேட்டி எடுத்து வெளியிட்டதே.. நீங்கள் படிக்கவில்லையா?

  நான் பார்த்த வரையில், இது ஒரு “செய்தி” தளம் அல்ல (சில சமயம் சில செய்திகள் scroll barல் வருகிறது.. ஆனால் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்வதில்லை) செய்திகள் தெரிந்து கொள்ள நமக்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. இந்த தளத்தில் பல ஒரிஜினலான கட்டுரைகள் வருகின்றன. இந்து கலாசாரம், அரசியல் பற்றி ஒரு அருமையான perspective இவைகளில் கிடைக்கிறது. புதிய பார்வைகள், சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் கிடைக்கின்றன. சொல்லப் போனால் இது போன்ற கிரியேடிவ் ஆன, விரிவான அலசல்கள் கொண்ட கட்டுரைகள் உங்களுக்கு வேறு எந்த ஆங்கில இந்துத்துவ தளத்திலும் கிடைக்காது.

  Pl dont compare this with Haindavakeralam. Both websites are doing great service to Hindutva. But their style, approach and content are very very different – thats ok I think. We need great thoughts and ideas for Hindutva to flourish – not just news, campaigns and political statements, isnt it?

  HK is manily a comprehensive, consolidated news site. Plus, They have the regular Sangh Parivar prachara material. But TH is more of a “thougt” and “ideology” site. Look at the sheer spectrum of topics it overs – philosophy, arts, science, literature, cinema, sociology, history etc. etc.

  Dont demean the site,seeing with your narrow outlook.

 5. // கராடே கிட் திரைப்படத்தால் ஹிந்து கலாச்சாரத்திற்கோ அல்லது ஹிந்து மத வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை.பின் ஏன் இந்த திரை விமர்சனம் //

  தவறு.

  கராத்தே கிட் படம் இந்தியாவின் பல நகரங்களில் சக்கைப் போடு போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்கள் இதைப் பார்க்கிறார்கள். நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ இந்து இளைஞர்கள் மீது இந்தப் படம் (& இது போன்ற படங்கள்) தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே அதைப் பற்றீப் பேசவேண்டியது முக்கியம்.

  குறிப்பாக இந்தப் படத்தில் ஒரு பரந்த் சமூக, கலாசார விமர்சனம் உள்ளது. தனது சுருக்கமான பதிவில் நண்பர் கார்கில் ஜெய் அதனை விரித்து எழுதவில்லை, ஆனால் கோடி காட்டுகிறார். ஒரு மேற்கத்திய,அமெரிக்க சிறுவன் கீழைநாட்டு (சீன) கலாசாரத்தை எப்படி உள்வாங்கிக் கொள்கிறான்? கராத்தே போன்ற ஒரு கலையைக் கற்கும்போது குரு-சிஷ்ய உறவு எப்படி பரிணமீக்கிறது ? நமது பள்ளிக்கூட கல்வி முறைக்கும் இதற்கும் உள்ள தொடர்பு/வித்தியாசம் என்ன? ஒரு சாதாரண casual சிறுவன் எப்படி, எந்த சூழ்னிலைகளில் உத்வேகம் ததும்பும் மனிதனாக மாறுகிறான்? இப்படி பல சிந்தனைகளை இந்தப் படம் விதைக்கிறது.. இந்தப் படத்திலிருந்து ஹிந்துக்களும் சரி, ஹிந்து சமூகமும் சரி கற்றுக் கொள்வதற்கு, எண்ணிப் பார்ப்பதற்கு ஏராளம் உள்ளது.

  உங்கள் மறுமொழியைப் பார்த்து நீங்கள் சங்க ஸ்வய்ம்சேவகர் என்று அறிகிறேன். நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்து விட்டீர்களா? இல்லையென்றால் பாருங்கள். *உங்களுக்கு* கட்டாயம் பிடிக்கும் :))

  இதற்கு முன்பு கராத்தே கிட் முதல் பாகமும் அருமையான படம் தான்.

 6. கட்டுரையை முதலில் எழுதும்போது 1 ) ‘ஜாக்கி சான் புகழ் நட்சத்திரமாக இருந்தும் இந்த பாத்திரத்தை ஏற்றுக் கொண்டது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது’ என்றும் 2 ) ‘ஜாக்கி சான் ஜியுஜிட்சுவை (ஜப்பானிய போர்க்கலை) வம்பிழுப்பது சீனர்களின் வெற்று பெருமையையும், சீனா ஜப்பானிடம் அடைந்த தோல்வியின் வடு சீனர்களை இன்னும் வாட்டுகிறது என்பதையும் காண்பிக்கிறது’ எனவே எழுத நினைத்தேன்.

  பிறகு இரண்டாவது வேண்டாம், ஒரு மிதமான பொழுதுபோக்கு படத்துக்கு மன – உளவியல் அலசல்கள் கொஞ்சம் ஓவர் என்று குறை கண்டுபிடித்து நாலு பேர் பதிவு செய்து ஏசுவார்களே விட்டுவிட்டேன். மேலும் இந்திய நடிகர்கள் போலல்லாது அவராவது நல்ல தேச பக்தனாக நாட்டின் மேல் பெருமை கொண்டுள்ளாரே என்ற எண்ணமும் தோன்றியது. இரண்டாவதை எழுதாமல் விட்டுவிட்டேனே என்று சமன் செய்ய, புகழவும் வேண்டா.. இகழவும் வேண்டா என்று முதலாவதையும் எழுதவில்லை.

  கடைசியில் இப்போதும் குறை சொல்லி நாலு பதிவு. இதில் என்ன ஒரு வருத்தம் என்றால், இதில் குறை சொல்லி எழுதிய எவருமே என் நண்பரான ஜெயக்குமார் எழுதிய ‘தோற்றுப்போன நாடுகளைப்’ பாராட்டி ஒரு வார்த்தையும் பதிவு செய்யவில்லை. குறை மற்றும் சொல்வதால் என்ன பயன்?

 7. நீங்கள் கூறியது அதனையும் ஒத்துகொள்கிறேன் ஹிந்து முன்னணி நடத்திய கரூர் மாநாடு பற்றி எந்த நாளிதழிலும் வரவில்லை (பசுத்தாய் ) தவிர .நம் ஹிந்து அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சி நமது தளத்தில் வரவில்லை என்றால் அல்கொய்தாவின் தளத்திலா வரும்.இது போன்ற நிகழ்சிகள் (ஈரோடு மாரியம்மன் கோவில் போராட்டம் போன்ற நிகழ்வுகள் ) ஹிந்து முன்னணி மாநாடு போன்ற நிகழ்வுகள் வெளியிட்டால் தான் எங்களுக்கும் நமக்காக யாரவது இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றும் .பாரத் மாதா கி ஜெய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *