சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

muththarammanதெருக்கோவில்கள் இந்து நகரிய பண்பாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் ஆன்மிக வாழ்வாதாரமாக அவை திகழ்கின்றன. நகர்களில் குடிசை வாழ் மக்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து புலம் பெயர்பவர்கள். இவர்கள் தங்கள் கிராம குல தெய்வங்களையும், வழிபடு தெய்வங்களையும் (குறிப்பாக அம்மன்) சென்னைக்கு தங்களுடனேயே உணர்வுபூர்வமாகக் கூட்டி வந்து பிரதிஷ்டை செய்கின்றனர். சென்னை நகரம் முழுவதும் இத்தகைய அம்மன் கோயில்கள் நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இடம்பெற்று அருள் பாலிக்கின்றன. சென்னையில் பெருகி வரும் சமூக பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதன் விளைவாக இம்மக்கள் அனுபவிக்கும் மன அழுத்தங்களுக்கு மருந்தாக, தாய் தெய்வம் உறையும் தெருவோரக் கோயில்களே ஆன்மிக சரணாலயமாக விளங்குகின்றன.

சில இடங்களில் இத்தெய்வ கோவில்கள் நடைபாதைகளில் கூட இருக்கலாம். ஆனால் நடைபாதைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எத்தனையோ இடைஞ்சல்களுடன் ஒப்பிடுகையில் – அரசியல்வியாதியின் ஃபிளக்ஸ் பேனர் முதல் நடிகர் மன்ற ஆக்கிரமிப்பு வரை – இந்த கோவில்கள் அப்படி ஒன்றும் மிகப் பெரிய இடைஞ்சல்கள் இல்லை. இவை இந்த மண்ணின் மிக நெடிய பண்பாட்டுச் சின்னங்கள். இந்தியா போல நீண்ட தாய் தெய்வ வழிபாட்டுப் பாரம்பரியம் வேறெந்த நாட்டுக்கும் இல்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், இந்தக் கோவில்களை நமது அரசுகளும் பொதுப் பணித்துறையும் எத்தனை கவனத்துடன் அணுக வேண்டும் என்பது புரியும்.

சென்னை கோபலபுரம் பகுதியில் பழமையான அம்மன் கோயிலை இடித்துத் தகர்க்கும் நகராட்சி (24 மார்ச் 2010)

கோயிலை இடித்தது மட்டுமல்லாமல் தெய்வச் சிலைகளையும் அப்புறப் படுத்தி விட்டனர்: குமுறும் பொதுமக்கள்

பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக, போக்குவரத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக உருவாகி விட்ட ஒருசில நடைபாதைக் கோவில்களை வேறு வழியே இல்லை என்னும் கட்டத்தில் அவற்றிற்கு உரிய மரியாதை அளித்து இடமாற்றம் செய்ய வேண்டும் தான். ஆனால் அதைக் கண்மூடித் தனமாக செய்தல் கூடாது.அந்தக் கோவில்கள் சமீப காலத்தவையா அல்லது 100-200 வருடங்களாக இருந்து வருபவையா, அவற்றை ஆன்மிக அமைதிக்காக நாடும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை எவ்வளவு ஆகிய விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். நகராட்சியினரோ, பொதுப்பணித் துறையினரோ அப்படிச் செய்யும் போது அந்தக் கோவில்களை மாற்று இடங்களில் அமைத்து, பழைய கோயில்களில் வழிபடப் பட்டு வந்த அதே தெய்வச் சிலைகளை நிறுவி ஏழை மக்களின் இறைவழிபாடு தொடர வழி செய்ய வேண்டும். அதற்கு ஆகும் செலவில் கணிசமான அளவையும் அந்தத் துறையினரே ஏற்க வேண்டும். அது தான் ஜனநாயகமான வழிமுறை.

கட்டப் பட்டு 25 வருடங்களுக்கு மேல் ஆன வழிபாட்டுத் தலங்கள், அவை நடைபாதையிலேயே இருந்தாலும் கூட, கண்மூடித்தனமாக இடித்தல் சட்டப் படி குற்றம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சென்னையில் இந்த அரசுத் துறையினர் செயல்படுவதும் விதம் இப்படி இல்லை. அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் – இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அவர்கள் செயல்பாடுகள் இருக்கின்றன. இது சரியான வழிமுறை அன்று.

மக்களின் உணர்வுகளை நசுக்கி மிதித்து கோயிலை இடித்த போலீஸ் அராஜகம்

இவ்வாறு கோவில்கள் இடிக்கப்படும் போது அன்னிய மத ஆக்கிரமிப்புக்கள் மட்டும் விதிவிலக்காக விடப்படுகின்றன. இது அரசு கடைப்பிடிக்கும் அப்பட்டமான போலி மதச்சார்பின்மை மற்றும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதத்தவர்களுக்கு காட்டும் அதீத சலுகை தவிர வேறொன்றுமில்லை.

இதனைக் கண்டித்து  சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ உள்ளது. ஆலய பாதுகாப்பு இயக்கம் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துகிறது.

இடம்:  பனகல் கட்டிடம், சைதாப்பேட்டை (கலைஞர் கருணாநிதி நினைவு வளைவு அருகில்)
நாள்:   14 ஜூலை 2010,  புதன்கிழமை.
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

அனைவரும் வாரீர் ! ஆதரவு தாரீர்!

26 Replies to “சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்”

  1. ஒரு ஆலோசனை
    sms குறுஞ்செய்திகள் மூலம் சென்னைவாழ் மக்கள் எல்லோருக்கும் அனுப்பி இந்த கூட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் வழிநடத்தலாம்.

  2. தெய்வத்தை விட மக்கள் சுகாமாக காரில் போவது தான் முக்கியமாகி விட்டது
    திருச்சி மெயின் கார்ட் கேட் சந்திப்பில் ஒரு தர்கா போக்கு வரத்துக்கு செம்ம இடைஞ்சல எனக்கு தெரிஞ்சு பல பல வருசங்களா இருக்கு – அத என்ன பண்ணலாம்னு இருக்காங்களாம்

  3. காட்டிற்குள் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களையும் வழிபாட்டு கலாச்சாரத்தையும் காக்க வேண்டும் என்றெல்லாம் கூட்டம் கூட்டி பேட்டி கொடுப்பவர்கள் நகரத்திலேயே பிறந்து வளர்ந்து அந்த மன்னிலேயே பரம்பரையாக நகரப்பழங்குடி மக்களின் வழிபாட்டு கலாச்சார ஆதாரத்தை அழிக்க நினைக்கும் இந்த நாத்திக மற்றும் இத்தாலி அரசைப் பற்றி அனைவருகும் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்துக்களே தி மு க விற்கும் காங்கிரஸிர்கும் ஜென்மத்திற்கும் ஓட்டளிக்க கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்!

  4. இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாகும் ‘திருவாரூர் ஒளரங்கசீப்’ கருணாநிதியுடன் சுமார் ஐந்தாண்டுகள் கூட்டணி அமைத்திருந்ததற்காக பாரதிய ஜனதாக் கட்சி இந்துக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அக்கூட்டணியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பிற இந்து இயக்கங்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய போராட்டங்களில் கலந்துகொள்ள தமிழக இந்துக்கள் முன்வருவர்.

  5. ஹிந்து இயக்கங்கள் அனைத்தும் ஒற்றுமையுடன் இந்த போரட்டத்தை முன்னின்று செய்ய வேண்டும் ,
    நம் ஒற்றுமையை வெளிபடுத்த , வலிமை வெளிபடுத்த வேண்டிய தருணம் இது .
    நம்மோடு நிச்சியம் தெய்வங்கள் துணை உண்டு .

  6. //திருச்சி மெயின் கார்ட் கேட் சந்திப்பில் ஒரு தர்கா போக்கு வரத்துக்கு செம்ம இடைஞ்சல எனக்கு தெரிஞ்சு பல பல வருசங்களா இருக்கு – அத என்ன பண்ணலாம்னு இருக்காங்களாம்//
    எல்லோரும் அங்கே நின்னு நமாஸ் பண்ணனும் தா.ந. அரசு ஆடர் போட்டாலும் போடுவாங்க!
    திருச்சி மட்டும்மல்ல பல ஊர்களில் இதுபோல் உள்ளது.

  7. இந்துக்கள், தங்கள் வீடுகள் இடிக்க படும் வரை ஒன்றிணைய மாட்டார்கள். அவர்களை ஒன்றிணைக்க பாடுபடுபவர்களையும் மதிக்க மாட்டார்கள்.
    உலகிலேயே அதிக தலைமுறையாக உறங்கி கொண்டிருக்கும் இனம் “இந்துக்கள்”. இவர்களை எழுப்புவது கடினம்.
    ஆகவே மக்களே நான் என்ன சொல்கிறேன் என்றால் அடுத்த தேர்தலில் கிடைக்க போகும் இலவசங்களுக்காக கனவு காண்போம்.!!!
    உறக்க கலக்கத்துடன்……..

  8. சென்னையில் ஆலய பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்ட நிகழ்வினை ஒரு செய்தியாகவும் இயலுமாயின் புகைபடத்துடன் வெளிஇடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  9. போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும், அறிவுஜீவி(?) களும் இருக்கும்வரையும், இந்துக்கள் ஒன்று சேராதவரையும் இது நிகழத்தான் செய்யும். இந்துக்கள் ஒன்றுபடுதல்தான் தற்போதைய அவசரத்தேவை.

  10. பாரதீய ஜனதா ,ஆர் எஸ், எஸ் மன்னிப்பு கேட்கும் வரை ஹிந்துக்கள் தங்கள் மீது நடக்கும் தாக்குதல்களை கண்டித்து ஒன்று பட மாட்டர்கள்
    பேஷ் பேஷ்- நல்ல தமாஷ்
    நீங்கள் ஹிந்துவாக இருப்பதே பீ ஜே பீ ,ஆர்ர் எஸ் எஸ் இவர்களுக்காகத் தான் பாருங்கள் !
    எவ்வளவு பெரிய த்யாகம் செய்து விட்டீர்கள்?

    அவர்கள் மன்னிப்பு கேட்காத வரை ஹிந்து எதிரிகள் உங்கள் வீடு புகுந்து அடித்தால் கூட சும்மா இருப்பீர்கள்!
    ஆஹா வாழ்க உங்கள் அறிவு, வளர்க உங்கள் சூரத் தனம்
    அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டால் ,உடனே கிளம்பி விடுவீர்கள் – யார் அது ஹிந்துக்களை அவமதித்து என்று
    ஐயோ.நெஞ்சு பொறுக்குதிலையே இந்த ஹிந்துக்களை நினைத்து விட்டால்

    இரா.ஸ்ரீதரன்

  11. //பாரதீய ஜனதா ,ஆர் எஸ், எஸ் மன்னிப்பு கேட்கும் வரை ஹிந்துக்கள் தங்கள் மீது நடக்கும் தாக்குதல்களை கண்டித்து ஒன்று பட மாட்டர்கள்//

    மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், ’ஆரூர் ஒளரங்கசீப்’பின் முன்னாள் கூட்டாளிகளை நம்பி, அவர்கள் தலைமையில் போராட முன்வர மாட்டார்கள் என்பதே என் கருத்து.

  12. கோவை பிக் பஜார் மெயின் ரோட்டில் ஒரு தர்கா போக்கு வரத்துக்கு செம்ம இடைஞ்சல எனக்கு தெரிஞ்சு பல பல வருசங்களா இருக்கு – அத என்ன பண்ணலாம்னு இருக்காங்களாம் ???????????? சிஎம் குடுக்கும் பலம் இது !!!!!!!!!!!! இந்த முறை ஆட்சியை மாற்ற வேண்டும்

  13. வினோத் சார் ,
    “இந்துக்கள், தங்கள் வீடுகள் இடிக்க படும் வரை ஒன்றிணைய மாட்டார்கள். அவர்களை ஒன்றிணைக்க பாடுபடுபவர்களையும் மதிக்க மாட்டார்கள்.”
    வீடுகளை இடிச்சாலும் பக்கத்து வீட்டின் இடித்த அளவை பர்ர்த்து சந்தோசமோ , சங்கடமோ படுவார்களே அன்றி தடுக்கவோ ,எதிர்க்கவோ மாட்டார்கள் .

    “உலகிலேயே அதிக தலைமுறையாக உறங்கி கொண்டிருக்கும் இனம் “இந்துக்கள்”. இவர்களை எழுப்புவது கடினம்”.
    தூங்கிட்டுஇருந்தா எழுபிறலாம் ,எல்லாம் தெரிஞ்சும் துங்கரமாதிரி நடிச்சா என்ன பண்ணறது .
    நம்பிக்கை வையுங்கள் ஐயா. மாற்றம் ஏற்படும்

    ரெண்டு நாளா ஸ்ரீதர்ஜி அவர்களை காணோமே என்று பார்த்தேன்,
    ஆனால் இப்படி ஒரு கோபத்துடன் ஆவேசத்துடன் …….
    உங்கள் கோபம் ஞாயமானதே .
    இந்த கோபத்தை தமிழ் ஹிந்து வாசகர்களின் இடத்தில விதைப்போம் ,மாற்றங்கள் நிகழ வழி வக்குப்போம் .

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  14. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் தொடர்பான போராட்டம் நமவர்களுக்கு சாதகமாக நிகழ்வுகள் அமைந்துள்ளதாக திரு. சேக்கிழான் அவர்கள் ,அதுதொடர்பான
    ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி! – இல்
    மறுமொழிஇல் விவரமாக இன்று விவரித்துள்ளார்.
    இம்மக்ழ்சியான செய்திய அள்ளித திரு. சேக்கிழான் அவர்கள்ளுகும்.

    இதனை தலைமை ஏற்று நடத்தியவர்களக்கும் அவர்களோடு சேர்ந்து களத்தில் நின்று போராடிய அத்துனை பேர்களுக்கும் , தமிழ் ஹிந்து வாசகர்கள் அத்துனை பேர்களின் சார்பாக மரியாதை கலந்த நன்றியுடன் வாழ்த்துகளையும் சமர்பிக்கிறோம் .

    இதைபோலவே சென்னையில், மற்றும் பிற ஊர்களிலும் நடக்கும் அநியாயதில் இருந்தும் நல்ல செய்தி வரும் .

    தெய்வம் துணை உண்டு
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  15. பா.ரெங்கதுரை என்பவரின் கமெண்ட் அருவெறுக்கத்தக்கதாக உள்ளது. வேண்டுமென்றே ஹிந்து ஒற்றுமையை குலைக்க போடப்படும் கமெண்டாக உள்ளது. தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு ஏன் வேண்டுமென்றே இப்படி ஒரு அவதூறை அனுமதிக்கிறது?

  16. பாஜக மன்னிப்பு கேட்கவேண்டுமா? அப்படியானால் வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கமுடியாமல் போனால் பரவாயில்லையா? யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று பிஜேபி அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் மன்னிப்பு என்றெல்லாம் பேசி சிரிக்க வைக்கவேண்டாம்!

  17. இந்த ஹிந்துக்களே மிகவும் வேடிக்கையான மனோ பாவம் கொண்டவர்கள்
    தனது தகப்பனாருடன் சிறிது கருத்து வேறுபாடு என்றால் கூட அவரை வெறுப்பார்கள். மற்றவர்களிடம் அவரை அவமானப் படுத்துவார்கள் .
    சகோதரர்களுடன் மனக் கசப்பினால் வாழ் நாள் பூராவும் கூட பேசாமல் இருப்பார்கள்
    சொத்து தகராறினால் அவர்களைக் கொலை கூட செய்வார்கள்
    ஆனால் தங்கள் கலாசாரத்தையும் சமயத்தையும் மிகக் கேவலமாக் இழிவு படுத்துபவர்களைக் கண்டு கண்கள் விரிய வியந்து கொண்டிருப்பார்கள்
    அவர்களிடம் வாலைக் குழைப்பார்கள்
    அவர்கள் செய்யும் மிகப் பெரிய அட்டூழியங்களையும் கண்டு கொள்ள மாட்டார்கள்
    அதைப் பற்றிப் பேச மாட்டார்கள்
    அனால் இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையே ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கங்களைப் பற்றி மட்டும் உட்கார்ந்த இடத்திலிருந்தே விமர்சனம் செய்வார்கள்

    பீ ஜெ பீ ,ஆர்ர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் தான் இவர்களுக்கு மிக எளிய இலக்கு. ஏனென்றால் அவர்கள் வீட்டிற்கு ஆள் அனுப்பி கல்லால் அடிக்க மாட்டார்கள் .
    இந்த இயக்கங்கள் மட்டும் அப்படியே அப்பழுக்கற்றவைகளாக இருக்க வேண்டும் .இவர்கள் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்தபடியே சொல்லும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் .அவர்கள் அதைச் செய்ய வில்லை இதை செய்யவில்லை என்று ஓயாமல் சொல்வார்கள்.

    இந்த இயக்கங்கள் மட்டுமே நம் நாட்டில் உண்மையான ஜனநாயக இயக்கங்கள் என்பதை மறந்தே விடுவார்கள் .சர்வாதிகாரம் மற்றும் ஒரு குடும்ப, தனி மனித எதேச்சாதிகாரம் உள்ள காங்கிரஸ் ,திமுக,அதிமுக இவைகளில் ஒற்றுமை ,கட்டுப்பாடு இருப்பது என்ன அதிசயம்?
    ஆனால் ஹிந்து இயக்கங்களில் ஒரு தலைவர் ஏதாவது சிறிது முணுமுணுத்து விட்டால் கூட உடனே ‘ அவங்களுக்கு ஒத்துமை இல்ல சார்,அவங்க வரவே முடியாது’ என்று ‘வாழ்த்துவார்கள்’.

    ஒரு கட்சி நடத்துவது எவ்வளவு கடினம்.அதுவும் நெல்லிக்காய் மூட்டை போல் உள்ள நம் சமுதாயத்தில் ஜனநாயக மரபுடன் அதைச்செய்வது மிகக் கடினம் என்பதை மறந்து விடுவார்கள்.
    அவர்களின் ஒரு நிகழ்சிக்குக் கூட போக மாட்டர்கள்
    ஒரு பைசா கூட சேவை காரியங்களுக்கு கொடுக்க மாட்டர்கள்
    அட குறைந்த பட்சம் சும்மா இருக்கவும் மாட்டார்கள்
    இவர்கள் வீட்டிலிருந்த படியே தங்களுக்குத் தாங்களே பேசிக்கொண்ட யுக்திகளை இந்த இயக்கங்கள் பின் பற்றவில்லை ,அதனால்தான் அவை வெற்றி பெறவில்லை என்றுஇவர்களுக்குக் குறை இருந்துகொண்டே இருக்கும்.
    இவர்கள் போக்கு’ என்னிக்கும் போடாத மகராசி போடவில்லை, தினம் போடற – – – ஏன் போடவில்லை’ என்று ஒரு பிச்சைக்காரன் கேட்டானாம் அது போலத்தான் உள்ளது.
    நாம்தான் பீ ஜெ பீ, நாம்தான் ஆர்ர் எஸ் எஸ் என்று ஒவ்வொரு ஹிந்துவும் நினைக்க வேண்டும்

    இரா.ஸ்ரீதரன்

  18. பாரதீய ஜனதாவையோ அல்லது வேறு ஹிந்து இயக்கங்க ளை யோ கேலி செய்வது மிக எளிது .அது நம் மேலேயே நாம் உமிழ்ந்து கொள்வது போன்றது
    ஆனால் அந்த நிலைமைக்கு நாம்தான் காரணம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் இந்த மாதிரி கேலி செய்ய மாட்டோம்.
    ஹிந்துக்கள் ,குறைந்த பட்சம் விஷயம் தெரிந்தவர்கள் எல்லோரும் கட்டுப்பாடாக ஓட்டுப் போட்டால் இந்த நிலை இருக்குமா?.

    இரா.ஸ்ரீதரன்

  19. தற்பொழுது யாழ் பானத்தில் உள்ள கோவில்க்கு பான்ட் மேற்கத்திய உடைகள் அணிந்து உள்ளே அனுமதி இல்லை ஆண் பெண் இரு பாலருக்கும் .நடை பாதை கோவில்கள் முப்பது வருடங்கள் முன்பு எளிமையான மக்கள் கொண்டாடி விழாக்கள் எடுத்தனர் .ஆனால் இப்பொழுது உள்ளவர்கள் நிலத்தை வளைப்பதற்கு ம்,பணம் சம்பாதிப்பதற்கும் பயன் படுகிறது.அதனால் இடித்தால் மசூதி கிறிஸ்தவ எல்லா கோவில்களையும் இடிக்க வேண்டும் .போராட்டம் அப்படிதான் நடந்தால் பயன்.வெறும் நடை பாதை கோவில்களை இடிக்க வேண்டாம் என்ற போராட்டம் உபயோகம் இல்லை .இருக்கும் பழமையான கோவில்களை புனறு தாரணம் செய்வோம் .அதற்க்கு இந்து மக்கள் சக்தியை அழையுங்கள்.கேரளாவை போல கோவில்களில் பூஜை நடக்க செய்வோம் .உடை பாரம்பரியத்தை வலயுருத்துவோம் ஏழை எளிய மக்களிடம் பக்தி பாடல்களை பரப்பி வருவோம்.இவைகள் போராட்டத்தை விட வலிமையானது .

  20. like this they also many temples in the tambaram to medavakkam, and tamabaram kishkintha road in that way there no need to clear wht to do with these fellows god only knows.

  21. எல்லா நாட்டிலும் இந்துக்கள் நேரிடும் அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. கேரளா நாட்டில் போக்குவரத்து அமைச்சர் சபரிமலைக்கு போகும் வண்டிகளில் ஐயப்பனின் படம் வைக்ககூடாது என்று உத்தரவு போட்டார். ஆனால் ஹிந்து இயக்கங்கள் அதை எதிர்த்து போராடினதினால் அந்த உத்தரவு ரது செய்யப்பட்டது. எக்கச்சக்கமான கூட்டம் வந்து பக்தர்கள் மிக சிரமபட்டுகொண்டிருக்கும் இந்த தருவாயில் அவர்களுக்கு இப்போள் உள்ளதைவிட கூடுதல் இடம் ஒதுக்கி பக்தர்களுக்கு தங்கும் வசதி அதிகரிக்க வேண்டும் என்று கேட்டதிற்கு எந்த வித மான பதிலும் தராமல் இருக்கிறார்கள். உலகம் போற்றும் ஐயப்ப சாமியின் பக்தர்களுக்கு தேவையான சௌகர்யம் செய்யாதது தவறு என்று எல்லாவரும் நினைக்கின்றார்கள்.

  22. I read a news that the temple properties are being appropriated by the ruling party people with the help of minister in some places in Salem district. This is wrong. Just because it is the hindu temple property that people think they can misappropriate to their own benefit. Hindu organizations should start agitation immediately to preserve and protect our temple properties. Our temples are the representative bodies of our heritage and culture. It is our birthright to take care of them.

  23. நடைபாதைக்கோயில்கள் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோயில்கள் என்றும், பொய்யாக பெயர் சூட்டப்பட்டவை பற்றி உண்மை நிலவரம் என்ன தெரியுமா? எங்கள் தெருவில் சுமார் எழுபது வருடத்துக்கு முன்னர் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அப்போது எங்கள் தெருவில் பள்ளிக்கூடங்களோ, வியாபாரக்கடைகளோ கிடையாது. பின்னர் சி பி எஸ் ஈ பள்ளி, ஸ்டேட் போர்டு பள்ளி மற்றும் கடைகள் அனைத்தும் காலப்போக்கில் வந்தன.பள்ளிகள் வந்தபின்னர் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. கலைஞர் மஞ்சளார் ஆட்சியில் அந்த கோயிலையும், அதனுடன் சேர்ந்து இருந்த மிக பிரம்மாண்டமான அரசமரத்தையும் , ஒரு வேப்பமரத்தையும் சேர்த்து வெட்டி, இடித்து அப்புறப்படுத்தி விட்டனர். பல தாய்மார்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதன் விளைவே கொடுங்கோலன் கலைஞர் ஆட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டது.

    பாஜகவினர் அரசியல் ஆதாயத்துக்காக மஞ்சளுடன் கூட்டு சேர்ந்திருக்கலாம் , அது அவர்கள் தலைஎழுத்து.இதே போல, பல ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டபோது அவை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் கட்டப்பட்டன. பின்னர் அந்த கோயில்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரி, பெரியகடைகள் இவை வந்தபின்னர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, ஒண்டவந்த பிடரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக , ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து தள்ளியது மஞ்சளாட்சி. மஞ்சளாட்சி ஒழிந்ததும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இடிக்கப்பட்ட பல அற்புதமான கோயில்கள் மீண்டும் எப்போது வரும்? போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிற திமுக போன்ற புறம்போக்கு குடும்ப கட்சிகளின் கட்டிடங்களைஇடிக்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *