மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 4 (இறுதி பாகம்)

முஸ்லீம்களுக்கு இன்றுள்ள பிரச்சினைகளைப் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பகுதியில் பிரச்சினைகளுக்கான தீர்வைப்பற்றி அலசுவோம்.

கடினமான தீர்வு

jihadworksbothways576x432– சில கிறிஸ்தவ கடும்போக்காளர்கள் கூறுவது போல பெரும்பாலான தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்பதால் உலகில் உள்ள 120 கோடி முஸ்லீம்களையும் கொல்ல முடியாது. சாத்தியமும் கிடையாது. நியாயமும் கிடையாது.

– சில கிறிஸ்தவ கடும்போக்காளர்களின் கூற்றுப்படி 120 கோடி முஸ்லீம்களையும் மனம் மாற்றி பின் மதம் மாற்றுவது கனவிலும் முடியாது. அது நியாயமும் கிடையாது.

– மற்ற மதத்தினர் எந்த சீர்திருத்தத்தை முன்வைத்தாலும் அதைத் தங்கள் மதத்தில் தலையீடு என்பதாக முஸ்லீம் கடும்போக்காளர்களால் பரப்ப முடிகிறது. அதனால் மற்ற மதத்தினர் எந்த சீர்திருத்தத்தையும் செய்வது யதார்த்தத்தில் நடக்க முடியாது.

– இன்றுள்ள நிலை தொடரவும் இடம் கொடுக்க முடியாது. அதாவது கடும்போக்காளர்களின் வழியில் முஸ்லீம்கள் சென்றால் முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க முடியாது.

images51எனக்குத் தெரிந்து இந்த பிரச்சினை தீர ஒரே ஒரு வழிதான் உள்ளது. சீர்திருத்தத்தை விரும்பும் மிதவாத முஸ்லீம்கள் பெரிய அளவில் தங்கள் மதப்புத்தகங்களுக்கான புதிய விளக்கங்களை அளிக்க முன்வர வேண்டும். சில முன்னாள் முஸ்லீம்களைப் போல குரான், ஷரியா போன்றவை தவறு என்று விளக்கமளித்தால் மீண்டும் கடும்போக்காளர்களின் ஆதிக்கம்தான்  ஏற்படும்.

அதற்குப் பதிலாக தங்கள் மத புத்தகங்களின் பிரச்சினைக்குரிய பகுதிகள் 1300 வருடங்களுக்கு முன்னதான அரேபிய மன நிலையுடைய மனிதர்களுக்காக எழுதப்பட்டது. அவற்றின் கடுமையான விளக்கங்களை காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வது தவறாகாது என்பதை அழுத்தம் திருத்தமாக மிதவாத முஸ்லீம்கள் கூற வேண்டும்.

உடனடியாக நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். ஏற்கெனவே இப்படிப்பட்ட மிதவாத முஸ்லீம்கள் உள்ளார்கள். அவர்களால் கடும்போக்கு மதகுருமார்களின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லையே?

இன்றிருக்கும் மிதவாதிகள் ஒரு அளவிற்கு மேல் மதகுருமார்களின் எதிர்ப்பை சந்திக்க முடியவில்லை. யாரேனும் முயற்சித்தாலும் உடனடியாக அவர் “இஸ்லாத்துக்கு எதிரி” என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார். இங்குதான் மிதவாத முஸ்லீம்களுக்கு மேற்கத்திய நாடுகள் இடம் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக அமேரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் இன்று இருக்கும் முஸ்லீம் விரோத மனநிலையை மிதவாதிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு சால்ஜாப்புகள் செய்து தப்பிக்காமல் அதை நேருக்கு நேராக அணுக வேண்டும்.

உலகில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள நாடுகளை மூன்று விதமாக பிரித்து கொள்ளலாம்.

 1. ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகள்– இங்கு எந்த சீர்திருத்தமும் இன்றைய நிலையில் சாத்தியமில்லை.ஏன் என்ற காரணம் அனைவருக்கும் தெரியுமாதலால் இந்த கட்டுரையில் விளக்க வேண்டியதில்லை.
 2. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள்– இங்கு மிதவாத முஸ்லீம்கள் இருந்தாலும் சீர்திருத்தங்களுக்கு தேவைப்படும் சட்ட மற்றும் சமூக கட்டமைப்புகள் இல்லை.evil-bert-and-bin-laden உதாரணமாக, முஸ்லீம்களுக்கான தனி சட்டம் இந்தியாவில் உள்ளது.பர்தா போட்டு கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று மேற்கு வங்க பல்கலைகழக மாணவர் சங்கம் ஒரு முஸ்லீம் பெண்ணை வற்புறுத்த முடிகிறது.நபிகள் நாயகத்தை பற்றிப் பேசினார் என்றவுடன் ஒரு கிறிஸ்துவ பேராசிரியரின் கை கேரளாவில் துண்டிக்க படுகிறது.ஷா பானு வழக்கில் ஆட்சியாளர்களே பயந்து ஒரு பெண்ணிற்கு அநியாயம் செய்தார்கள்.பெரிய அளவில் இவற்றிற்கு இந்திய முஸ்லீம் சமூகத்தில் எதிர்ப்பும் இல்லை.ஆகவேதான் இந்த நாடுகளிலும் முஸ்லீம் சீர்திருத்தங்கள் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்.
 3. மேற்கூறிய காரணங்களால்தான் அமேரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிகளான ஐரோப்பிய,ஆஸ்திரேலிய நாடுகள் இவ்விஷயத்தில் முக்கிய பங்காற்ற முடியுமென்று நம்புகிறேன். குறிப்பாக அமேரிக்காவில் சுதந்திரம் பரிபூர்ணமாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தவாதிகளுக்கு சட்ட ரீதியான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பேயில்லை. அமேரிக்க முஸ்லீம் சமூகம் மத்திய கிழக்கு முஸ்லீம் சமூகத்தைப் போன்ற நிலையில் இல்லை.அறிவியலின் சக்தியையும், தனி மனித சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் எழுச்சியையும் நேரடியாக அமேரிக்க முஸ்லீம்கள் காண்பதால் சமூகத்தில் சீர்திருத்தங்களுக்குக் கண்டிப்பாக ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

images31சமய குருமார்களிடமும் அமேரிக்காவில் வித்தியாசம் இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மதகுருமார்கள் ஜிஹாத்தை வெளிப்படையாக ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தத் தொனியில் பேசும் மதகுருமார்கள் அமேரிக்காவில் மிகவும் குறைவு.

நான் ஏற்கெனவே கூறியபடி டாக்டர். ஜேஸ்ஸர் போன்றவர்கள் முஸ்லீம்களாக இருந்து கொண்டே அதன் மதபுத்தகங்களுக்கான புதிய விளக்கங்களை அளிக்க முடியும் என்று தீர்மானமாக நம்புகிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் தங்கள் முன்னெடுப்புகளை மேலும் வெளிப்படையாக முஸ்லீம் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.

முடிவுரை:

கட்டுரையின் முதலில் ஆரம்பித்த விஷயத்திற்கு வரலாம். அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகே கட்டப்பட இருக்கும் மசூதி அமேரிக்கர்களின் பொது விவாதத்திற்கு பெரிய அளவில் வந்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை, அமேரிக்க அதிபர் ஒபாமாவும் அந்த மசூதியை ஆதரிப்போர் கூறும் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அமேரிக்கா ஒரு சாதாரண மூன்றாம் தர ஜனநாயகத்தை (Banana Republic) அனுசரிக்கும் நாடு அல்ல. அந்த சமூகம் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டது. மத சுதந்திரம் என்பதை இன்றுவரை சரியான நிலையில் பேணிக் கொண்டிருக்கும் நாடு. ஆகவே எந்த மதத்தினரும் அமேரிக்காவின் எந்த பகுதியிலும் சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் தங்கள் வழிபாட்டு இடத்தை கட்டிக் கொள்ள இயல வேண்டும். இது அவர்களின் அரசியல் சட்டம் அறைகூவும் மிகவும் முக்கியமான நிலைப்பாடு. எவ்வளவு சதவிகித மக்கள் இந்த புதிய மசூதியை எதிர்த்தாலும் அமேரிக்க அரசு இதை அதிகாரபூர்வமாக தடுக்க முயலவில்லை. இனியும் தடுக்காது என்பது நமக்கு கிடைத்திருக்கும் சரியான சமிக்ஞை.

mg_00732ஆனால், முஸ்லீம் சமூகம் இந்த விஷயத்தை எப்படி அணுகப்போகிறது என்பதை மற்றவர்களைப் போலவே நானும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

இதுவரை, அமேரிக்க முஸ்லீம்கள், இது அரசியல் சட்டத்தால் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை என்றும், இந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால், இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மிதவாத அமேரிக்க முஸ்லீம்கள் கீழ்வரும் புதிய பத்து கட்டளைகளை (என் கற்பனைகள்) “New Ten Commandments”ஐ அனுசரிப்போம் என்று அறைகூவல் விட வேண்டும். இதற்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும், பல முஸ்லீம் மத குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற முஸ்லீம்  நாட்டு சமூகங்களிலிருந்து எதிர்ப்பு வந்தாலும் தாங்கள் இதிலிருந்து கீழிறங்க மாட்டோம் என்ற உறுதி பாட்டை கொள்ள வேண்டும்.

பெரும்பாலான அமேரிக்க முஸ்லீம்களிடம் இந்த புதிய உறுதிப்பாட்டை பரப்பி அமேரிக்காவின் மைய நீரோட்டத்துடன் கலந்து வாழ தாங்கள் தயார் என்பதை “சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பிற அமேரிக்கர்களை” நம்பச் செய்ய வேண்டும்.

முதல் படியாக இந்த புதிய மசூதி பெரும்பாலான அமேரிக்கர்களை பயம் கொள்ளச் செய்திருப்பதால் மிதவாத முஸ்லீம்கள் தாங்களாகவே முன்வந்து அதை வேறு இடத்தில் கட்டிக்கொள்ள முன் வர வேண்டும்.

இது முதல் முன்னெடுப்பு மட்டுமே!


மிதவாத முஸ்லீம்களின் புதிய பத்து கட்டளைகள்:

(என் கற்பனைகள்)

The New Ten Commandments

இவற்றையோ அல்லது இவற்றைப் போன்ற சீர்திருத்தங்களையோ முஸ்லீம்கள் நடைமுறைபடுத்தித்தான் தீர வேண்டும். மனித குலம் அமைதியுடன் வாழ அவர்கள் சில முன்னெடுப்புகளை எடுத்துத்தான் தீர வேண்டும். அவர்களது நற்கதிக்கு வேறு வழி இல்லை.

no20shariahஅமேரிக்க முஸ்லீம் மிதவாதிகள் கீழ்வரும் 10 கட்டளைகளை செயல்படுத்த உறுதிப்பாடு எடுத்து கொள்ளும் தொனியில் கீழ்வரும் கற்பனையை எழுதியுள்ளேன்.

(1) நாங்கள் குடியேறிய நாட்டின் அரசியல் சட்டத்தை முழுமையாக ஏற்போம். எங்கள் மத நம்பிக்கைகள் அரசியல் சட்டத்திற்கு முரணாகும் பட்சத்தில் அரசியல் சட்டத்தின் மாட்சிமையை மட்டுமே ஏற்போம்.

(2) தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ, நாங்கள் ஷரியா என்னும் மத சட்டங்களை சிறிய அளவிலோ அல்லது முழுமையாகவோ அனுசரிக்க உரிமை கோர மாட்டோம்.

(3) நாங்கள் ஜிஹாத்தை, குறிப்பாக முஸ்லீம் அல்லாதோரை அழிக்க வேண்டும் என்று பேசும் எந்த மதகுருமாரையும் ஆதரிக்க மாட்டோம். அப்படிப்பட்ட மசூதிகளை பகிஷ்கரிப்போம்.

(4) முஸ்லீம் அல்லாதோரின் பயங்களை போக்க முயற்சிகள் எடுப்போம். யாரையெல்லாம் அமேரிக்க அரசு தீவிரவாதிகள் என்று தடை செய்கிறதோ அவர்களை எதிர்ப்போம். எந்த குழுக்களையெல்லாம் அமேரிக்க அரசு தடை செய்கிறதோ அக்குழுக்களுக்கு பண உதவியை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டோம்.

(5) எங்கள் குழந்தைகளை அமேரிக்க சமூகத்தின் பன்முகத்தன்மையை விளக்கி வளர்ப்போம். மற்ற மதத்தினரை அழிக்க வேண்டும் என்ற பழைய சம்பிரதாயங்களை வேரறுக்க முயல்வோம்.

 

untitled6அமேரிக்க சமுதாயம் அளித்திருக்கும் பெண்ணுரிமையை எங்கள் வீட்டு பெண்களுக்கும் முழுமையான அளவில் அளிப்போம்.

குறிப்பாக பெண்களை பர்தா அணிய வற்புறுத்த மாட்டோம்.

பெண் குழந்தைகளுக்கு முஸ்லீம் நாடுகளில் செய்யப்படும் மர்ம உறுப்பில் இருக்கும் கிலிடோரிஸை நீக்கும் முறை (Female Genital Mutilation) மேற்குலக நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தடை  செய்யப்பட்டிருப்பதால் அதை நாங்கள் அனுசரிக்க மாட்டோம்.

(6) பன்றிக் கறியை நாங்கள் சாப்பிடாவிட்டாலும், பொது இடங்களிலும் உணவு விடுதிகளிலும் மற்றவர்களின் உரிமையை மதித்து நடப்போம். ஹலால் உணவை (மட்டுமே) பரிமாறுமாறு உணவு விடுதிகளை வற்புறுத்த மாட்டோம்.

எங்கள் வழிபாட்டு இடங்களில் நாய்களை அனுமதிக்க இயலவில்லை என்றாலும், பொது இடங்களில் மற்றவர்களின் நாய்கள் வைத்துக்கொள்ளும் உரிமையை மதித்து நடப்போம்.

(7) ஒரு ஆண் பலதார மணம் புரிவதை எதிர்ப்போம்.

(8) எங்களின் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மற்ற மதத்தினரின் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதத்துடன் சம நிலையில் இருக்க முயல்வோம். அவசியம் ஏற்படின் எங்கள் சமூகத்தினுள் பிரச்சாரம் செய்து இந்த அதிகரிப்பு விகிதத்தை குறைக்க முயல்வோம்.

(9) எங்களுக்கு கிடைத்திருக்கும் அதே மத சுதந்திரம் இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினருக்கும் கிடைத்திட முழு முயற்சி செய்வோம். குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகளில் மற்ற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலங்களை கட்டி வழிபட அந்நாடுகளுக்கு எங்களால் முடிந்த நெருக்கடிகளை கொடுப்போம்.

மேலும் உலகின் எந்த மதராஸாக்களிலும், புனிதப்போர் என்னும் ரீதியில் ஜிஹாத்தை கற்றுக் கொடுப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்வோம்.

(10) எங்கள் இனத்தின் உணர்வுபூர்வ பிரச்சினையான பாலஸ்தீனிய நெருக்கடிக்கு, “யூதர்களுக்கு தனிநாடு- பாலஸ்தீனியர்களுக்கு தனி நாடு” என்னும் பெரும்பான்மையான நாடுகள் மற்றும் மக்களின் நிலையை முழுமையாக ஏற்போம். சில தீவிரவாத குழுக்கள் முன்வைக்கும் கொள்கையான, முதலில் சிறிய பாலஸ்தீனிய நாடு, பின் முழு பிராந்தியமும் பாலஸ்தீனம் என்னும் நிலையை முழுமையாக எதிர்ப்போம். எதிர்காலத்தில் ஏற்படும் ஒப்பந்தத்திற்கு பின் ஒரே ஒரு அங்குல நிலத்தையும் இஸ்ரேலிடமிருந்து பறிக்க மாட்டோம் என்று கூற உலக முஸ்லீம் சமூகத்தை நிர்பந்திப்போம்.

இன்றிருக்கும் சூழ்நிலையில் முஸ்லீம் சமுதாய சீர்திருத்தங்கள் மேற்குலக முஸ்லீம் சமூகத்தில் மட்டுமே நடக்க முடியும் என்ற கருத்தை ஏற்கெனவே சுட்டி காட்டினேன்.

அமேரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டப்பட இருக்கும் இந்த புதிய மசூதி பல விவாதங்களை தோற்றுவித்திருப்பது மிகவும் நல்லதே என்பது என் கருத்து. இந்த இக்கட்டான நேரத்தில் மிதவாத முஸ்லீம்கள் தங்கள் முன்னெடுப்புகளை அமேரிக்காவில் தொடங்கினால், அது ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் பரவும். சில காலங்களில் இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் இந்த சீர்திருத்தங்கள் ஏற்பட்டால், சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளிலும் உள்ள கிறுக்கு ஆட்சியாளர்களுக்கும் திருந்துவதை தவிர வேறு வழி இருக்காது.

அமேரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் முதிர்ச்சி அடைந்த ஜனநாயகம் இருப்பதால் இச்சீர்திருத்தங்களுக்கு தோன்றும் எதிர்ப்புகளை மட்டுபடுத்த வழி இருக்கும்.

bart20islamஅடுத்து முஸ்லீம் அல்லாதோர் இச்சீர்திருத்தங்களுக்கு நேரடியாக ஆதரவை அளிக்காவிட்டாலும் இவற்றை முன்னெடுப்பவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். உதாரணமாக சுஃபி இனத்தை சேர்ந்த முஸ்லீம்கள் ஜிஹாத் என்பதை “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும் ஆன்மீக போராட்டம்” என்றே ஏற்று கொள்கிறார்கள். இசை போன்ற கலைகள் மூலம் ஒரு மனிதனை ஆன்மீக நெறிபடுத்தலுக்கு இட்டுச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட கொள்கைகளை உடைய முஸ்லீம்களை இனம் கண்டு அவர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்குவதன் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

மேற்கூறிய கற்பனைகள் நடக்கவே நடக்காது என்று கூறுபவர்களுக்கு அமேரிக்க முன்னாள் அதிபர் திரு. கென்னடியின் சொற்பொழிவின் ஒரு பகுதியை தருகிறேன். அமேரிக்க விஞ்ஞானிகளின், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 12,1962ல் பேசியது இது.

“We choose to go to the moon. We choose to go to the moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard, because that goal will serve to organize and measure the best of our energies and skills, because that challenge is one that we are willing to accept, one we are unwilling to postpone, and one which we intend to win”

hearing_the_moderate_muslimsஎன் கட்டுரையின் சில பகுதிகள் ஏற்க படாமல் போகலாம். ஏன் தமிழ் இந்துவில் வெளிவருவதால் பல முஸ்லீம்களால் படிக்கப் படாமல் கூட போகலாம். (தமிழ் இந்து வாசகர்களுக்கு என் கருத்தை சொன்னதோடு திருப்தி அடைய வேண்டியதுதான்). ஆனால் சில முஸ்லீம் மத புத்தக விளக்கங்கள் சங்கடமாக உள்ளன என்பதும்,அவை காலத்திற்கேற்றபடி புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும், சீர்திருத்தங்கள் உடனடியாக ஆரம்பமாக வேண்டும் என்பதும் நிதர்சனமான உண்மை.

இன்றளவில் இவை என்னுடைய கற்பனை மட்டுமே. இது கற்பனையாக மட்டுமே இருக்குமா அல்லது செயல் வடிவம் பெறுமா என்பது காலத்தின் கையில் (மிதவாத முஸ்லீம்களின் கையில்) உள்ளது.

(முற்றும்)

32 Replies to “மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 4 (இறுதி பாகம்)”

 1. அருமை! நன்றி! ஆழமான கருத்துக்கள்! எல்லோரும் ஒன்று பட்டு உலகை நல் வழியில் நடக்கச் செய்ய முடியும்! ஹிந்துக்கள் ஒன்று படவும், உயர்வடையவும் முடியும்!

 2. மிதவாத இஸ்லாம் என்று ஒன்றும் இல்லை. உங்கள் விருப்பங்கள் நிறைவேறினால் அவை மேலும் பிரச்னைகளுக்குத்தான் இட்டுச் செல்லும்.

  உதாரணமாக சூஃபி இஸ்லாமை எடுத்துகொள்ளுங்கள். சூஃபி இஸ்லாம் மதவாதம் அற்ற மிதவாத இஸ்லாம் என்று வைத்துகொள்ளுங்கள். அதன் பயன் என்ன? முஸ்லீம்களை மிதவாதிகளாக மாற்றவில்லை. மாறாக இனிப்பான முகத்தை முஸ்லீமல்லாதவர்களுக்கு காட்டி அவர்களை முஸ்லீம்களாக மாற்றியது. இப்படிப்பட்ட முதல் தலைமுறை முஸ்லீம்கள் சூஃபி மிதவாதம் என்று பேசுவார்கள். அவர்களது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகளின் பிள்ளைகள் மீண்டும் இஸ்லாமின் அடிப்படையான குரான் ஹதீஸில்தான் நிற்பார்கள். இஸ்லாமின் அடிப்படையான குரான் ஹதீஸ் ஆகியவை மிதவாதம் அற்றவை.

  ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், தமிழ்நாட்டில் வஹாபிஸமே இல்லை. தமிழ்நாட்டில் சூஃபி தர்க்காக்களும், தமிழ்நாட்டு பாரம்பரிய இஸ்லாமும்தான் இருந்தன. இந்த முஸ்லீம்கள் தமிழ்நாட்டு இந்துக்களுடன் ஒருதாய் பிள்ளைபோலத்தான் பழகி வந்தார்கள். எப்போது இந்த முஸ்லீம்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரான் ஹதீஸை படிக்க ஆரம்பித்தார்களோ அப்போது ஆரம்பித்தது வினை. ஆஹா இதுதான் குரன ஹதீஸில் இருக்கிறதா என்று தீவிரவாத பாதைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

  நீங்கள் சொல்லும் மிதவாத இஸ்லாமால் இந்துக்கள்தான் ஏமாறுவார்கள். இனி பூதத்தை பாட்டிலில் அடைக்கமுடியாது.

 3. அருமையான கட்டுரை. தமிழ் ஹிந்து மிக நல்ல பணியை செய்து வருகிறது. வருங்காலத்தில் கட்டுரையில் சொன்னது போல இசுலாமியரிடம் மாற்றங்கள் நிகழும் என்று அளவற்ற அருளாளனை வேண்டுவோம்.

  ஒரு கேள்வி, இந்த கட்டுரை எழுதியவர் புனைப் பெயரில் எழுதும் ஒரு முஸ்லிம் தானே?

 4. இப்போதைக்கு நீங்கள் சொல்லும் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. பிறகு எப்போது நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு பல நூற்றாண்டாகலாம். அதற்கு, அன்றைய சூழல் கை கொடுக்கும். கல்வியறிவு, பெண் சுதந்திரம் இரண்டும் சரியான அளவு, சமுகத்தில் ஏற்படும் போது- சில வியத்தகு மாற்றங்கள் நிச்சயம் வரும். சில நூற்றாண்டுகள் முன்பு வரை, கிறித்தவம் எவ்வளவு பயங்கரமான மதமாக இருந்தது. ஐரோப்பாவில். மதத்தின் பெயரால் கிறித்தவம் செய்யாத படுகொலைகளா. இன்று அதெப்படி மாறியது. ஆனால் அதற்குள்ளாக பல மதங்கள், பல கலாசாரங்கள் அழிந்து போய் இருக்கும். இது நடக்கும். இது வியப்பாக இருக்கலாம். பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக நீர்த்து போகாத மதமாக ஏதேனும் உள்ளதா. மாற்றம் என்கிற வார்த்தையை தவிர உலகில் மாறாதது ஏதும் இல்லை

 5. வணக்கம்,

  ////மிதவாத இஸ்லாம் என்று ஒன்றும் இல்லை.//// இருக்கலாம் சகோதரா(ரி?)
  ஆனாலும் மிதவாத இஸ்லாமியர் உண்டு. என்னிடம் சில நண்பர்கள் நிறையவே நடந்த சம்பவங்களுக்கு வருத்தப் பட்டவர்கள் உண்டு.

  பாபர் மசூதி என்பது மசூதியே அல்ல என்றும் அங்கே யாரும் தொழுவதே கிடையாது, பாபரின் காலத்தின் போது கோவில்களை இடித்து சூறையாடுவதும் அதன் மீது மீண்டும் கோவில்களை எழுப்பாதிருக்கவேண்டி ஏதாவது நினைவுசின்னமோ மசூதியோ எழுப்புவதும் அவர்களின் வாடிக்கை, இழந்ததை இந்துக்கள் மீட்க போராடுகிறார்கள் அதற்காக ஒரு இந்திய முஸ்லிம் இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லை என்று எனது ஆசிரியர் கூட வருந்தி உள்ளார். அவரும் ஒரு இஸ்லாமியரே. அவர் இப்போது உயிருடன் இல்லை.

  அப்படி இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது, எங்கே நம்மையும் காபிர் என்று ஒதுக்கி விடுவார்களோ என்று. அதற்க்கு எல்லாம் துணிந்து மதம் என்ற ஒன்றை விட மனிதம் மேம்பட்டது என்று எண்ணுவோரால் மட்டுமே இது சாத்தியம்.

 6. நல்ல கட்டுரை.. நல்ல முடிவு.

  தங்கமணியின் கருத்துதான் உண்மையாகும் என்று நினைக்கிறேன். முஸ்லிம்களில் பெரும்பாலோர் நல்லவர்களே. நிறைய முஸ்லிம்கள் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களே. ஆனால் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதுமே. நாம் விஷத்தை விலக்கி பாலை பருக முடியாது.

 7. என்னை பொருதவரியில் இந்துக்கல்லுகும் இஸ்லாமியர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

  இருவரையும் தீவிரவாதிகள் என்று brand செய்ய மீடியா முனைகிறது, கிறிஸ்துவத்தை பரப்ப. இன்றைய சூழ்நிலையில் தங்கல்லை தற்காத்துக்கொள்ள இரு சமயத்தவரும் முனைந்து கொண்டு இருக்கிறார்கள்.

  இருவரும் சேர்ந்து தங்களை அழிக்க நினைபவர்கlukku எதிராக போராட வேண்டும்.

  இஸ்லாம் அத்வைதம் தான் என்பது என் கருத்து

 8. பாலாஜி

  அருமையான தொடர். படிக்க வேண்டியவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் நிலமை முற்றிலும் நம்பிக்கையற்றதாக இருக்கிறது. இவை போன்ற நல்ல விஷயங்களை படிக்கக் கூடாது என்று கட்டளைகள் அவர்களுக்கு இருக்கின்றன. ஆகவே படிக்க விரும்ப மாட்டார்கள் திருந்தவும் மாட்டார்கள். இஸ்லாம் என்பது ஒரு வழிப்பாதை அதில் திரும்புவதற்கு இடமே இல்லை. இருந்தாலும் நம்பிக்கையோடு சொல்கிறீர்கள். நாம் சொல்ல வேண்டியது இதுதான் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் நம்பிக்கையை அல்லா நிறைவேற்ற விரும்பலாம் ஆனால் முகமது அதை அனுமதிக்க மாட்டார் சிக்கல் அங்குதான் உள்ளது. அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வழியேயில்லை. ஆனால் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழி இருக்கிறது. அதைத்தான் அமெரிக்காவும் இந்தியாவும் பிற உலக நாடுகளும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாமும் அவர்களுடன் சேர்ந்து அழிய வேண்டிய நிலை வந்து விடும் அல்லது ஏற்கனவே வந்து விட்டது. தண்ணீரில் மூழ்குபவன் தன்னுடன் காப்பாற்ற வந்தவனையும் சேர்த்தே முழுக்குவான். அதில் இருந்து தப்பும் வழிகளை யோசிக்க வேண்டும். இன்று அமெரிக்கா ஓரளவுக்கு அந்த பாதுகாப்பு வழிமுறைகளை சிந்தித்தும் அனுசரித்தும் வருகிறது. முக்கியமாக பயங்கரவாதிகளிடம் மென்மையாக குறைந்த பட்சம் அவர்கள் நாட்டுக்குள்ளாவது நடந்து கொள்வதில்லை. அப்சல் குருவையும், மதானியையும் இந்திய அரசு நடத்துவது போல அமெரிக்க அரசு நடத்துவது இல்லை, இருந்தாலும் இன்னும் மென்மையான போக்கையே கடைப் பிடிக்கிறது அந்த நிலை மாறும் காலம் வரும். ஆனால் இந்தியாவில் அந்த எண்ணம் கூட இல்லை. ஆகவே மிதவாத முஸ்லீம்கள் மூலமாக ஜிஹாதிகள் மாறுவார்கள் என்று காத்திருக்காமல் நாம் நம்மை வலுவாக காபந்து செய்து கொள்ள வேண்டி வரும் இல்லாவிட்டால் அவர்களுடன் சேர்ந்து நாமும் அழிய வேண்டியே வரும். நம்பிக்கை இருக்க வேண்டியதுதான் கூடவே விழிப்புடனும் இருக்க வேண்டும் அல்லவா? ஆண்டவனிடம் நம்பிக்கை வைத்தாலும் கூட நம் வீட்டுக் கதவை நாம் தானே பூட்டிக் கொள்ள வேண்டும்?

  மிக அருமையான நிதானமான கட்டுரை. பாராட்டுக்கள்

  அன்புடன்
  விஸ்வாமித்ரா

 9. மறுமொழியில் சிலர் மிதவாத முஸ்லீம்களே இல்லை என்று எழுதினார்கள்.
  அவர்களுக்கு நான் கூற விரும்புவது. கண்டிப்பாக உலகில் மிதவாத
  முஸ்லீம்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
  தனிப்பட்டவர்களை விட்டு 2 நாட்டின் உதாரணங்களையே தருகிறேன்.
  (1)ஈரான் – இன்றிருக்கும் ஈரானை வைத்து 1970க்கு முன்னதான ஈரானை
  யோசிக்காதீர்கள். ஷா என்னும் ராஜா இருக்கும் வரையில் நவீன சமூக
  நடைமுறைகள்தான் அனுசரிக்கப்பட்டன. பெண்கள் பர்தா போடுவதை
  அவசியம் இல்லை என்றே நிலையிருந்தது. வேண்டுபவர்கள் போட்டிருக்கலாம். அது வேறு விஷயம். சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சமய கோட்பாடுகளை புறம் தள்ளி அறிவியலுக்கே
  முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் 1970களுக்கு பிறகு அந்நாடு கீழ்
  நோக்கி பயணிக்கிறது.
  (2)துருக்கி – 1924ல் Caliphate முறை செல்லாதாக்கப்பட்டது. அரசியல்
  சட்டம் ஜனநாயகத்துக்கு ஆதரவானதாக, அடிப்படை உரிமைகள்
  மிகவும் உறுதியாக (கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளை போன்றே)
  எழுதப்பட்டது. இன்றுவரை அதே அரசியல் சட்டம்தான் அனுசரிக்கப்
  படுகிறது. இன்றைய நிலையில் சில தீவிரவாத குழுக்கள் முன்னெடுப்புகளை
  செய்தாலும் அரசியல் சட்டத்தை மாற்ற முடியாத நிலையே தொடர்கிறது.
  ஆட்சியில் இருக்கும் ஆளும்கட்சி அடிப்படைவாத நிலைகளை எடுத்தால்
  அதை பெரிய அளவில் எதிர்கட்சியும், பொது மக்களும் எதிர்க்கிறார்கள்.
  இஸ்ரேலை முதன்முதலில் அங்கீகரித்த இஸ்லாமிய நாடும் இதுவே.
  இன்று நிலைமை கொஞ்சம் மோசமானதாக இருக்கிறது. ஆனால்
  அடிப்படைவாதத்திற்கு எதிராக உறுதியான அரசியல் சட்டம் இருக்கிறது.
  மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக அந்நாடு முயற்சிப்பதால்
  அடிப்படைவாதம் வேரூன்ற வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே
  கூறலாம்.

  மேலும் ஒரு உதாரணம். கேரளாவிலும், காஷ்மீரிலும் 1980கள் வரை
  பெரும்பாலான பெண்கள் பர்தா அணிந்ததே இல்லை.ஆனால் இன்று
  நிலைமை தலைகீழ். இது வற்புறுத்தலால் நிகழ்வது. அவர்களுக்கு தேவை
  ஒரு நவீனத்துவத்தை ஏற்று கொள்ளும் தலைவர். மிதவாதிகள் கண்டிப்பாக உலகில் இருக்கிறார்கள். அவர்கள் வெளியே வருவார்கள் என்று நம்புவோம்.

 10. The author’s intentions are good but he is, I am sorry to say, dreaming. I totally share his sentiments though dreaming about such scenarios like peaceful co existence are just that. Dreams.Ideally, this sort of article should have been written by a muslim begging peace and tolerance from their fellow muslims, in an Islamic web site.
  Let us all get real. There is nothing called “moderate Islam “or moderate Muslim. There is only one Islam which is essentialy fundamental.The basic tenets of Islam are barbaric and any muslim who questions these basics will be issued with fatwas and death threats. Many so called ” moderate muslims” ( similar to Mr Balaji’s friends) will regret only in private about Islam and it’s related violence but WILL DARE NOT VOICE THEIR OPINION IN PUBLIC. Absolutely doing nothing other than mourning on the shortcomings of Islam in private among friends is actually amounts to condoning such acts.
  Let Mr Balaji challenge his” moderate muslim friends” to openly declare in public, preferably in their mosque, that Hindus are not Kaffirs and Muslims should respect the Hindu religion. and co exist peacefully as brothers without restoring to conversions and violence.
  I will be interested to know how many of them will take up this challenge but I am not holding my breath on this.
  My dream? What about drawing these ” moderates” at least, back into their mother religion, the religion of their forefathers, our Hinduisim? Imagine what India will be like if it’s population along with Pakistan and Bangladesh are totally Hindus! Heaven on earth!
  Let us forget about USA, it is another fundamental christian nation. Today Obama declared himself a true christian and wants to follow J Christ. Imagine the uproar in india if, say our president declares herself a Hindu and wants to folow only Hinduisim!
  Let the Abrahamic cults fight it out, I say

 11. Pingback: Indli.com
 12. Islam too has got some good teachings. Mainly unity, religious affection, not consuming alcohol, opposing vulgarity, following the basic edicts of commercial trading, not taking interest, not missing the daily prayer wherever they go, particularly in Tamilnadu most of the Muslim do not know either Urdu or Hindi and they speak only good respectful Tamil with good accent better than the Dravidians & so many.
  Particularly in India almost 80 to 90% of the Muslims are converted from Hinduism and still they have some tinge of Hindu blood running in their vein and not ready to turn hostile to Indian unity. But the politicians are provoking them every now and then. The entire fundamentalist take advantage of the situation and react and the moderates are always a silent witness to these acts. The moderates mind set needs to be changed and they have to prove their trustworthiness. They have to say openly that National unity is their first priority and than only religion
  After the world wars all most all the nations got liberated and started to live peacefully. It is because of Russia and America intervention in all most all the Muslim countries to establish their superiority forced the Muslim to go back to the medieval practices and it was taken a serious shape due to oil wealth explored by the big brothers. If this interference were not taken place definitely the Muslim would have became a matured group compatible with other religious group.

 13. ‘உடோபியா’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்
  அதாவது நடந்தால் மிகவும் நல்லது ஆனால் நடப்பது கனவே என்பது .

  அதைப்போல் தானோ இது என்று தோன்றுகிறது
  ஆனால் நாம் ஊதும் சங்கை ஊதுவதில் தவறில்லை
  ஒன்று மட்டும் நிச்சயம். நம் வரலாற்றைப் பார்த்த பின் இனிமேலும் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது .
  நாம் நம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்

  சும்மா ஒருவர் அல்லது பலர் சொல்வதை மட்டும் நாம் நம்பி அலட்சியமாக இருக்க முடியாது

  மற்றவர்களுக்குத் தங்களால் அச்சுறுத்தல் இல்லை என்பதை முஸ்லிம்கள் தங்களது செயல் மூலம் நிரூபிக்க வேண்டும்.

  நல்ல முஸ்லீம்களைப் பார்த்து நாம் ஏமாந்து போக முடியாது
  இஸ்லாம் ஆரம்பித்தது முதல் ‘நல்ல முஸ்லீம்கள்’ தீவிரவாதிகளிடம் ஒன்று தோற்றுப் போயிருக்கிறார்கள் ,அல்லது நமக்கு எதற்கு என்று ஒதுங்கி இருக்கிறார்கள் அல்லது நமக்கு என்ன நஷ்டம் என்றுஇருந்திருக்கிறார்கள்.

  ஹிந்துக்கள் தங்கள் சந்ததி அபாயம் இல்லாமல் வாழ வேண்டுமென்றால் அவர்கள் தான் அதற்குப் போராட வேண்டுமே ஒழிய
  முஸ்லிம்களை எதிர்பார்க்க கூடாது. இந்த பலவீனமான மனப் போக்கை ஹிந்துக்கள் விட்டுவிட வேண்டும். பலமற்றவனை அவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள். அதுவும் நாடுகளை மற்றும் சமுதாயக் கூட்டத்தை பொறுத்தவரை இது மிக உண்மை.

  முக்கியமாக இன்று ஹிந்து சமயத்தை தவிர மற்ற எல்லா மதங்கள் என்று சொல்லப் படுபவைகளும் ஒரு நாடு மற்ற நாட்டை அடிமையாக்க உபயோகிக்கும் ஆயுதமாக மாறி விட்டன.ஆகவே நாம் மனிதர்களுடன் ,மதங்களுடன் போராடவில்லை.இவைகளுக்குப் பின் இருக்கும் பணம் மற்றும் ராணுவ பலத்துடன் போராடுகிறோம், நாடுகளுடன்போராடுகிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

  உதாரணமாக் சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சர்வாதிகாரம் உள்ளது. அங்கு சுல்தான்கள் எண்ணை விற்ற பணத்தால் சுக போகத்தில் கொழிக்கிறார்கள்.மக்களை மதத்தை காட்டி நசுக்கி வைத்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமான பணம் உள்ளதால் அவர்கள் பொழுது போக இந்தியா போன்ற நாடுகுடன் விளையாடுகிறார்கள். பணத்தை வீசி அடித்து இங்கு அரசியல்வாதிகள்,பத்திரிகைகள், டீவீக்கள் இவைகளை விலைக்கு வாங்கி ஹிந்துக்களுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்

  பயங்கரவாத பூதம் இந்தியா போன்ற நாடுகளின் மீது ஏவப்படாவிட்டால் அது இஸ்லாமிய சர்வாதிகரிகளின் மீது பாயும்
  எனவே இந்த ஷேக்குகளும் சுல்தான்களும், முல்லாக்களும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிகிறார்கள்.

  தாங்கள் செய்யும் அக்கிரமங்களை மறைக்கலாம்.பாரதம் போன்ற காபீர் நாடுகளை அழிக்கலாம் .
  இதை நாம் நினைவில் கொண்டு செயல் பட வேண்டும்

 14. most of the things you have said are correct and have to be welcomed.
  however i have no idea why you keep on supporting israel. its not a good nation. they are as much rogues as you think of any arrogant nation in the world. they are nothing short of conspirers and back stabbers.
  if somebody takes your home and gives portion of it to you and your relatives and also gives you employment and say ‘how generous we are you see we have given you so much which your other relatives havent given’ would you accept that?
  before you jump to conclusion i just want to say i have read my history well and i am not saying something just bcos its against muslims.
  the same countries that you say are against islamic fundamentalism and have taken a tough stand, have also condemned and warned israel about its attack against civilians.

 15. //அதற்குப் பதிலாக தங்கள் மத புத்தகங்களின் பிரச்சினைக்குரிய பகுதிகள் 1300 வருடங்களுக்கு முன்னதான அரேபிய மன நிலையுடைய மனிதர்களுக்காக எழுதப்பட்டது. அவற்றின் கடுமையான விளக்கங்களை காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வது தவறாகாது//

  பாலாஜி அவர்களே –

  இது நடக்கும் என்றார் நம்புகிறீர்கள – இது நடந்தால் இஸ்லாத்தே இல்லாமல் போய்விடும்

  குர்ஆனில்

  70 % – Violence and abuse against women
  10 % – good things
  20 % self contradictions, incorrect science etc

  குண்டு குரான் புஸ்தகம் ஒரு பாகெட் சைஸ் புஸ்தகம் ஆகிவிடும் – அப்புறம் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் கதை தான்

 16. //இஸ்லாம் அத்வைதம் தான் என்பது என் கருத்து
  .//

  சுத்தம் – இஸ்லாம் கடவுளையும் மனிதனையும் பிரித்தே பார்க்கிறது – இஸ்லாம் ஒரு கூட்டத்தின் guide book அவ்வளவே அதற்க்கு ஆன்மிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

 17. //பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக நீர்த்து போகாத மதமாக ஏதேனும் உள்ளதா//.
  ஏன் இல்லை? சனதான தர்மம் என்று ஒன்று இருக்கிறது அதில் இருந்து சில மக்கள் வெளியேறி போய் விட்டாலும்.சனதான தர்மம் என்ற மதம் பல்லாயிரம் வருடங்கள் தாண்டி நீர்த்து போகாமல் தான் உள்ளது என்று நம்புகிறேன் . அதற்கு ஏற்பட்ட பல்முனை தாக்குதல்களையும் தாண்டி நிற்கிறது.
  இன்னும் பல்லாயிரம் ஆண்டு உலகுள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும்.
  இதற்கு என் சார்பில் ஒரு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் வாழ வாழ்த்துக்கள்.
  அது இருக்கும் வரைதான் (குறைந்த பட்சம் பெரும்பான்மை ஆக இருக்கும் வரைதான்) இந்திய தேசத்திலே மன்னிக்கவும் பாரத தேசத்திலே இந்த அளவாவது அமைதி இருக்கும்.

  //மாற்றம் என்கிற வார்த்தையை தவிர உலகில் மாறாதது ஏதும் இல்லை//
  உலகாதய விசயங்களுக்கு மிகவும் பொருத்தமான கருத்துதான். எது மாறினாலும் அடிப்படையும் தர்மமும் மாறமுடியாது.

  உடலும் இடமும் மாறினாலும் ஆன்மா அதுவே, மாற்றம் தூலத்தில் மட்டும் நிச்சயம்.

  வாயு நீரானாலும் நீர் வாயு ஆனாலும் அடிப்படை மூலக்கூறு அதுவாகவே இருக்கும் மாறது.

  சனாதன தர்மம் இந்துமதம் என்ற பெயர் மாற்றபட்டலும் அடிப்படை தர்மம் அப்படியே மாறாமல் தான் இருக்கிறது. நாளை வேறு பெயருக்கு மாற்ற பட்டாலும் இந்த தர்மம் மாறாமல் இருக்கும்.

 18. நண்பர்களே!

  இசுலாமியர்கள் ஒரு சமுதாயத்துள் பூனை போல் நுழைந்து கொள்கிறார்கள். படிக்க, ம்ருத்துவ சிகிச்சை பெற என்று காரணம் காட்டி வருவார்கள். முதலில் எல்லாரும் ஒருதாய் மக்கள், மாமன் மச்சான் என்று நல்லபடி பழகுவர். முஸ்லிம்கள் அந்த வட்டாரத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் வரை இந்த பாசப் பொழிவுகள் இருக்கும். அவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால் வெள்ளிக்கிழமை சத்தம் அதிகமான ஒலிபெருக்கி வைத்து தொழுவது, பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்று ஆரம்பித்து, காரணம் கேட்டால் சாமி கும்பிடணும்லப்பூ என்று சிரித்துப் பேசுவர். சற்றே அதிக எண்ணிக்கை வந்ததும் ரம்சான் மாதம் பகலில் சாப்பிடாதே என்பதில் துவக்கி இந்துக்களை இம்சிப்பது புனிதக் கடமை என்பது போல நடப்பர்.

  தென் மாவட்டங்களில் சில ஊர்களில் இவர்கள் மிக அதிகம். அங்கே இளையாங்குடியில் கல்லூரி நண்பனைப் பார்க்கப் போய் பகலில் பச்சைத்தண்ணீர் கூடக் கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஒரு கடை கூடத் திறக்கவில்லை. அது ரம்சான் மாதம். எங்க ஊர்ல அப்படித்தான் மாப்பிளே என்றான் நண்பன். தாகத்துக்கு தண்ணீர் தருவது அல்லாவுக்குச் செய்யும் துரோகம் என்று அவன் தந்தை சொல்லிவிட்டார். விரதம் இருக்கிறவங்க கிட்ட வந்து சாப்பிடக் கேட்பது தப்புப்பா! என்று உபதேசம் வேறு செய்தார். அவன் தாயார் ‘இரக்கப்பட்டு’ ஊருக்கு வெளிய ஒரு தம்பள கடை இருக்கு அங்க இருந்தா வாங்கிக்குடிங்க என்றார். (தம்பளை என்பது இந்துக்களை இழித்துச் சொல்ல அவர்கள் வைத்துள்ள பட்டைப்பெயர்) நண்பன் எங்களிடம் அம்மா அப்படித்தாண்டா மனசுல எதயும் வெச்சுக்க்காதீங்கடா என்று மன்னிப்புக் கேட்டான். இந்தக் கும்பலின் குரானுக்கும் புனிதமான அத்வைதத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

  அமெரிக்காவில் மசூதி கட்ட இடம் வாங்கிய மௌல்வி முதலில் ஜெனிவா ஒப்பந்தம், மனித உரிமை என்று பேசியவர் தற்போது இஸ்லாமிய உலகம் பகை கொள்ளும் பரவாயில்லையா என்று அமெரிக்காவை மிரட்டுகிறார்.

  இந்த கும்பலை (அ)தட்டி வைத்தால் நம் தலை தப்பும். இல்லையென்றால் எல்லாத் தலைகளிலும் குல்லா மாட்டிவிடுவார்கள்.

 19. //ArunPrabu
  29 September 2010 at 5:08 pm //

  நண்பர் அருண் பிரபு கூறும் அனைத்தும் வரிக்கு வரி உண்மை

 20. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மெடிக்கல் ரெப்ரசண்டேடிவ் கேரளாவில் தான் பட்ட பாட்டை எழுதியிருந்தார்
  அதை படித்தபோது இஸ்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுக்கிறது என்று புரிந்து கொண்டேன்
  அருண் பிரபு அவர்கள்கூறியது போன்றே அவரது அனுபவம் இருந்தது

  அவர் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த மலப்புரம் பகுதியில் ரம்ஜான் நேரத்தில் மாட்டிக் கொண்டார்.
  நாளெல்லாம் அலைந்து திரியும் போது ஒரு டீ கடை கூட இருக்காதாம்
  சரி , தண்ணீராவது குடிக்கலாம் என்றால் அதுவும் கிடைக்காதாம் .கிடைத்தாலும் மற்றவர் பர்ர்க்க குடித்தால் கலவரமே வருமாம்
  இதில் கொடுமை என்னவென்றால் ஹிந்துக்களின் டீ கடைகள் கூட திறந்து இருக்கக் கூடாதாம் .
  இதெல்லாம் நமக்கு அபாய அறிவிப்பு.
  வோட்டுக்காக அலையும் அரசியல் வாதிகளை ஹிந்துக்கள் நம்பினால் நாளை அவர்கள் பிள்ளை குட்டிகள் கடும் பிரச்னையை சந்திக்க நேரிடும்.

 21. // ஒரு தம்பள கடை இருக்கு அங்க இருந்தா வாங்கிக்குடிங்க என்றார். (தம்பளை என்பது இந்துக்களை இழித்துச் சொல்ல அவர்கள் வைத்துள்ள பட்டைப்பெயர்)//
  தம்பளை என்பது தமிழவர்கள் என்பதன் மரூஉ. அதாவது முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்பதுதான் பொருள்.

 22. A nice dream, but will never be realised.

  Even the so called educated muslims are adamant about their religion.

  As a hindu, I can only pray that they do not indulge in killings.

 23. There’s nothing called as Moderate Muslims. It’s an oxymoron. Those who are true Muslims, read Quran, Hadith, Wahabism basics and become Physical or mental jihadis.

  The very very few moderates in Muslims will not be called as Muslims by the Muslims themselves. Ex. APJ Abdul kalam.

  All Muslims are naturally good people, but Islam is an evil/totalitarian cult which spoils the minds of Muslims.

 24. It is said that ‘the proof of the pudding is in eating’
  so let us not judge what the muslims say but by what they actually do or not do.
  let us not judge the islamic society by a few individual ‘good’ muslims based on our stray experiences or encounters or friendships but what potential for mischief it has once it becomes a majority.
  Otherwise we will be fooling ourselves.

 25. பிரதாப்

  உலகம் முழுவதையும் ஒரே உணவு, உடை, மொழி, கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கையின்மை என்று மாற்றவேண்டுமென்று யார் விரும்பி செயல்பட்டாலும் அது நிறைவேறாது.பல விதமான வித்தியாசங்களுடனே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது. எனவே பிற உணவு வகைகள், பிற விதமான உடைகள், பிற மொழிகள், பிற நம்பிக்கைகள் ஆகியவற்றை குறைகூறி அழிக்க நினைப்போர் சமுதாய விரோதிகள் ஆவர். இவர்களது நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக துணை போகும் எவருமே மனித இனத்துக்கு விரோதிகள் ஆவார்கள். இத்தகையோர் தாங்களே அழிந்துபோவார்கள். அவர்களை யாரும் அழிக்க தேவையில்லை. அழிவுக்கு தேவையான வித்துக்கள் அவர்களிடமே உள்ளன.

 26. பாகிஸ்தானின் பெஷாவர் மாவட்டத்தில் ஐ நா உணவு வழங்கும் மையத்தில் இந்தவாரம் ஒரு பாகிஸ்தானிய பெண் மனித வெடிகுண்டு வெடித்ததில் தற்கொலை செய்துகொண்ட பெண் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடம் என்று இன்றைய தினமணியில் (26-12-2010 ஞாயிறு ) செய்தி வந்துள்ளது. இதுவரை ஷியா சன்னி மோதல்களில் பல கோடிக்கணக்கானோரை கொன்று விட்டார்கள். இப்போதோ ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஐ நா மையமே தாக்கப்பட்டு , உணவுக்காக கூடியிருந்த சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  இது போன்ற வன்முறைகளை நீங்கள் சொல்கிற மிதவாத முஸ்லிம்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டால் , தீவிரவாத வஹாபிகள் அந்த மிதவாத முஸ்லிம்களையும் கொன்று விடுவார்கள். தீவிரவாத இஸ்லாமியர்களின் தாக்குதல்களிலிருந்து மிதவாத முஸ்லிம்களால் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாது. மேலும் அவர்களின் கடவுள் நேரில் வந்து அவர்களை காப்பாற்றப்போவதில்லை. ஏனெனில் அவரோ சொர்க்கத்தில் மட்டுமே உள்ளவர். இங்கு வந்து இந்த மிதவாத முஸ்லிம்களை காப்பாற்ற போவதில்லை. எனவே இதிலிருந்து தெரிவது என்னவெனில், இஸ்லாத்தில் மிதவாதம் என்பது செத்துவிட்ட ஒன்று மற்றும் செயல்பட முடியாத ஒன்று ஆகும்.

  உண்மையான வீரன் என்பவன் ஆயுதம் தாங்கியோரை ஆயுதம் கொண்டு தாக்கி போரிடுவான். ஒரு வேளை வயிற்று உணவுக்காக அன்ன தானம் பெற கூடியுள்ள அப்பாவி பொது மக்கள் மீது தற்கொலை படையை ஏவிவிடும் வஹாபிய இஸ்லாமிய தீவிரவாதிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல, பேடிகள் ஆவார்கள். எல்லாம் வல்லவனான இறைவன் இவர்களுக்கு என்ன கூலி கொடுக்க விருக்கிறான் என்பதனை யார் அறிவார்கள் ?. எனவே மித வாத முஸ்லிம்கள் செயல்படுவார்கள் என்று யாரும் கனவு காணவேண்டாம். மித வாத முஸ்லிம்கள் செயல் பட தடையாக இருப்பது , அவர்களது மதநூலில் உள்ள வன்முறை மற்றும் அச்சுறுத்தல் உபதேசங்களே ஆகும்.

 27. மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 ‘முந்தைய பதிவுகள்’ லிங்குகள் தவறானவை. சரி செய்யவும்.

 28. செவிடன் கிட்ட கூட சொல்லலாம். ஆனால் காதில்லாதவர்களிடம்…?

 29. இசுலாம் என்பது அரேபிய நாகரீகத்தின் 1400 வருடத்திற்கு முந்தைய பதிப்பு. அரேபிய கலாச்சாரத்தின் பரிணாமம் முடிந்து போகவில்லை. ஆனால் முகம்மது என்ற அரேபியனின் தவறான போதனையால் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அரேபிய கலாச்சாரம் நிறுவனமாகி விட்டது.அது மட்டும் அல்ல கடவுளால் அங்கிகரிக்கப்பட்ட வாழ்க்கை முறை அரேபிய கலாச்சாரம் என்ற படு முட்டாள்தனமான அசிங்கமான கருத்தை முகம்மது பரப்பி விட்டு உலகிற்கு பெரும் கேட்டை உருவாக்கியிருக்கின்றாா்.

  அதனால்தான் அரேபிய கலாச்சார வாழ்வைத்தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள முஸ்லீம்கள் மறுக்கின்றாா்கள். அரேபிய பெயர்,அரேபிய மொழி தெய்வமொழி,அரேபிய கலை இலக்கியங்களில் பற்று, அரேபிய தலைவா்கள் படைத்தளபதிகள் கவிஞா்கள் பெயரைமட்டும் வைத்துக் கொள்ளல் அரேபிய கட்டடக்கலை, அரேபிய … அரேபிய …. என்று பட்டியல் போகின்றதைக் காணலாம்.

  Islam is nothing euphemism for Arabian Imperialism.அரேபிய கலாச்சாரத்திற்கும் வெளியேயும் அனைத்து சிறப்புகளும் உண்டு என்பதை இந்த அரேபிய மதவாதிகளால் தாங்கவும்ஏற்கவும் இயலாது.எனவே இவர்களின் மனதில் எப்போதும் பிற கலாச்சார மக்கள் மீது அளவு கடந்த வெறுப்பு. முகம்மதுவையும் குரானையும் மறந்தால்தான் உலகம் உருப்படும். வேறு எந்த வழியும் எடுபடாது.

 30. ஆா் எஸ்எஸ் மயப்படுத்தப்பட்ட இந்து சமூகமே இந்த பிரச்சனைக்கு சாியான தீா்வாக அமையும். வலிமையான ஒருங்கிணைக்கப்பட்ட இந்து சமூகம்தான் இந்த பிரச்சனைக்கு தீா்வாக அமையும்.இந்துக்கள் வலிமை குறைந்த இடங்கள் காந்தாரம் ஆப்கானிஸ்தான் பஞ்சாப் பாக்கிஸ்தான் ஆகிவிட்டது. மேற்கு பஞ்சாப் பங்களாதேஷ் ஆகிவிட்டது. முஸ்லீம் பெரும்பான்மை காஷ்மீா் இந்து சிறுபான்மையினரை அழித்து விட்டது. உயிரோடு இருக்கும் இந்து இந்தியாவின் பிறபகுதிகளில் உள்நாட்டு அகதியாக வாழ்கின்றான். இந்துக்கள் வாழ்ந்து இன்று மதமாற்றத்தால் இழந்த சதுர கிலோ மீட்டா் பரப்பு என்ன ? இந்துக்களிடம் சீக்கியதன்மை பொங்க வேண்டும்.அதுதான் தீா்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *