முடி திருத்தும் இடம், டீக்கடை போன்ற இடங்களில் பெரும்பாலும் வாங்கி வைக்கப் படுகிற தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிக்கைகளைப் பார்த்தால் ஒரே அடியாகக் கள்ளக் காதல் கொலை செய்திகளே மிகுந்து இருக்கும். கள்ளக் காதலால் மனைவியைக் கொன்ற கணவன், கணவனைக் கொன்ற மனைவி, பெற்ற பிள்ளைகளையே கொன்ற தாய் என்று கோர சம்பவங்கள் தினம் நடந்து அது செய்தி ஆகி இருக்கும். இதைப் படிக்கவேன்றே ஒரு கூட்டம் இருக்கிறதோ என்று தோன்றும். இல்லாது போனால் ஒரு தினசரி இந்த செய்திகளையே மட்டும் நம்பி நடத்த முடியுமா…
கள்ளக் காதலில் ஈடுபடுபவர்கள் வித விதமாகக் காரணங்கள் சொல்லுவார்கள்: காதலித்து விட்டு பெற்றோரின் கெடுபிடியில் கலியாணம் செய்துகொண்டு பின் கள்ளக் காதலில் ஈடுபடுவது, கூட்டுக் குடும்ப அடக்குமுறையை மீறி கள்ளக் காதல், குடும்பப் பொறுப்புகளால் திருமணம் செய்ய முடியாத நிலையில் வேறு திருமணம் ஆன பெண்களுடன் காதல் என்றெல்லாம்.இது மாதிரி எந்த காரணமும் இல்லாமல் வெறும் காமத்தினால் கள்ளக் காதலில் ஈடுபடுபவர்களும் உண்டு.
இதெல்லாம் இயற்கை தான் – உயிரியல் ரீதியாக மனிதனும் ஒரு விலங்கினம் தான் – பல்வேறு நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதையே இயற்கை தூண்டுகிறது என்று விளக்கம் சொல்லி முறை தவறிய காதலை ஆதரிக்கிற பேர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் எயிட்சை ஏன் இயற்கை அனுப்பவேண்டும்? யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்கிற நிலையில் எயிட்ஸ் நோய் வந்து அவ்வாறு வாழ்பவர்களை ஏன் சாகடிக்க வேண்டும்? இயற்கை இத்தகைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மகா பாரதக் கதையே ஐவருடன் ஒரு பெண் வாழும் வாழ்வை, சமூகம் புரிந்து கொண்டு, அதனுடன் இயல்புக்கு வந்து அந்த நிகழ்வை சீரணிக்க எடுத்த முயற்சிதான் என்று தோன்றுகிறது. பாரதத்தில் ஒரு இடத்திலும் திரௌபதியின் திருமணம் நியாயப்படுத்தப்பட வில்லை. கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. ஆராயப் படுகிறது. ஐவருக்கு மனைவியாக இருந்ததால் தானோ, அவள் பலர் முன்னிலையில் துகிலுரியப் பட்டு ஒரு கணவனும் காப்பாற்ற முன் வராமல், அவமானப் பட நேர்ந்தது! திரௌபதியின் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது. இப்படி ஒரு திருமணம் நடந்த பின் பேரழிவே ஏற்பட்டது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
சில நூறு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று. திருவண்ணாமலையில் ஒருவர் இருந்தார். இளம் வயதில் அவருடைய தந்தை இறந்து விட்டார். அவருடைய அக்காள்தான் அவரை வளர்த்து வந்தது. வாலிப வயதை அடைந்த அவருக்கு காமம் அதிகம். பல பெண்களுடன் தொடர்பு. தினம் அவருக்கு ஒரு பெண் வேண்டும். அக்காலத்தில் தேவதாசிகள் என்று அழைக்கப் பட்ட விபசாரத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வீட்டிலேயே கிடந்தார்.
ஒருநாள் அவர் கையில் காசு இல்லை. தேவதாசிகள் வீட்டிலோ “காசு இல்லாமல் கடவுளே வந்தாலும் கதவைச் சாத்தடி” என்று இவர் வரும் போது கதவை மூடி விட்டார்கள். காமம் தலைக்கேற கோபமும் ஆத்திரமுமாக வீட்டுக்கு வந்து தன் அக்காளுடன் பணம் கேட்டு சண்டையிட அந்த பெண் கடைசியில் “தம்பி, உனக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. வேண்டுமானால் என்னை யாரிடமாவது விற்று அந்த பணத்தில் சுகத்தை அனுபவித்துக் கொள்” என்று சொல்லி விட்டாள்.
அப்போதுதான் இவருக்கு தன் சுயநலம் உரைத்தது. தன் காம உணர்வு தன் குடும்பத்தை எவ்வளவு கீழ் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது என்று மனதார உணர்ந்தார். தன் நிலை கேவலமானதை உணர்ந்து கோவில் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றார். அதன் பிறகு முருகப் பெருமான் அவரைக் காப்பாற்றினார் என்று கதை போகும். அவர் வேறு யாரும் அல்ல. மனம் உருகவைக்கும் வகையில் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் தான். ஒரு கணவனும் மனைவியும் மனம் ஒருமித்து இணைந்து வாழ்வதே நலம். குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன நமது சுகமே பெரிது என்று இருப்பது சுயநலம். சுயநலம் தன்னையும் அழித்து தன் சுற்றத்தாரையும் அழித்து விடும்.
இன்றைய சமூகத்தில் தனியொருவரின் சுகங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் சுயநலத்தையே வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கூட்டுக் குடும்பத்தில் பெற்ற தாய் தந்தையர் மட்டும் அல்லாது சின்னாத்தா, பெரியாத்தா, சித்தப்பா என்று இவர்களே முதல் சுற்றில் ஒரு சமூகமாக இருப்பார்கள். ஒரு குடும்பத்தில் தூரத்து சொந்தத்தில் வயதானவர்களையும் தம் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றுவார்கள். இன்றோ பெற்ற தாய் தந்தையரையே ஒதுக்கி விடும் நிலை, அதற்கு சமூகத்தின் ஒப்புதல் என்று போய்க கொண்டிருக்கிறது.
சுயநலம் முற்றிய இன்றைய நிலையில் முறை தவறிய உறவுகளோடு மட்டும் அல்லாமல், கொலைகளும் பெருகுவதே கவலை அளிக்கிற விஷயம். எதோ, எங்கோ ஒரு ஊரில் கிராமத்தில் நடப்பது. கொலையில் ஈடுபடுகிற நபருக்கு படிப்பறிவு இருந்திருக்காது; உலகம் தெரியாதவராக உணர்ச்சி வேகத்தில் செய்திருக்கக் கூடும் என்றெல்லாம் ஒரு புறம் சமாதானம் சொன்னாலும், படித்தவர்களும் இது போன்ற கள்ளக்காதலிலும் பின்னர் கொலையிலும் ஈடு படுகிறார்கள்.
இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. அண்மையில் கள்ளக் காதலில் ஈடுபட்டு கொலை புரிவது அதிகரித்துள்ளது என்று தமிழக ஐஜி சிவனாண்டி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். கடந்த எட்டு மாதங்களில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் மட்டும் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் கள்ளக் காதல் மற்றும் பாலியல் தொடர்பான கொலைகளே அதிகம் என்று அவர் கூறுகிறார்.
சென்ற ஆண்டு நடந்த சம்பவம் இது. பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கள்ளக் காதலில் ஒரு பெண்ணுடன் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அலுவலக நேரத்தில், அந்த காதலிக்காக தன் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்று போட்டு விட்டு நல்ல பிள்ளையாக அலுவலகத்துக்கு திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டார்.
பின்னர் போலிஸ் விசாரணையில் அலுவலகத்தில் நுழையும் வாசலில் உள்ள காமிராவில் அந்த நபர் வெளியே சென்று விட்டு வந்தது பதிவாகி இருந்தது. மேலும் விசாரித்ததில் கொலையை ஒப்புக் கொண்டார். படித்தவர்தான். பெரிய நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறார். நினைத்திருந்தால் விவாகரத்து வாங்கி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் கொலையில் இறங்கி விட்டார். கொலை செய்யும் போது அவருக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகி இருந்தன என்பதே அதிர்ச்சிக்குரிய செய்தி. மனிதன் சமூக மிருகம் (Social animal) என்ற பரிணாம வளர்ச்சியிலிருந்து கீழிறங்கி வெறும் மிருகமாக (animal) ஆகிக்கொண்டு இருக்கிறானோ என்று தோன்றுகிறது.
கள்ளக் காதல்கள் அதிகரிக்க இருபத்திநான்கு மணிநேரமும் நம்மை ஆக்கிரமித்து ஆபாசம் நிரம்பி வழியும் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது. திரைப்படங்களில் முற்றிலும் நடிகையின் இடையைச் சுற்றியே கதை இழைவதாக கொண்டு போகிறார்கள். ஆங்கிலத் திரைப்படங்களில் போர்னோ, டிராமா, த்ரில்லர், ஹாரர் என்று பல வகைகள் தனித்தனியாக இருப்பது போல நம் திரைப்படங்களில் இல்லை. மசாலா, செண்டிமெண்ட், காமெடி எல்லாமே கலந்துதான் இருக்கிறது.
இது போதாதென்று, தொலைக் காட்சிகளில் அதே மசாலா காட்சிகளைத் தொகுத்து போட்டுவிடுகிறார்கள். காமத்தை தூண்டுகிற நிகழ்ச்சிகள் எல்லா நேரத்திலும் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன. குமுதம், ஆனந்த விகடன் முதலான பத்திரிக்கைகளும் தொலைக் காட்சிகளுடன் போட்டி போடவேண்டிய நிர்பந்தத்தில் வித விதமான கவர்ச்சி ஸ்பெஷல் இதழ்களை வெளியிட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
பல குடும்பங்களின் தொகுப்புதான் சமூகம் என்று ஆகிறது. திருமணம் என்பது நிறுவன அமைப்பு (Marriage is an institution) என்று சொல்வார்கள். சமூக நன்மைக்காக ஏற்பட்ட அமைப்பே திருமணம் என்பது. இந்த அமைப்பு குலைவதை சமூகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அதனால் தான் ஒரு குடும்பம் சீரழியும் போது சமூகத்திடமிருந்து பதில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கின்றன. மூன்று பெண்கள் இருக்கிற ஒரு வீட்டில் மூத்தவள் பலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அலைந்தால், அவளுடைய சகோதரிகளையும், அவர்களுக்கு வாய்க்கும் குடும்ப வாழ்வையும் பாதிக்கிறது.
இது எதோ பெண்களுக்கு மட்டும் என்று இல்லை. ஆண்களும் பல பெண்களுடன் தொடர்பு வைக்கும் போது, இறுதியில் அவர்கள் வாழ்க்கையும் வெறுமையைத்தான் அடைகிறது. ஆணாக இருந்தால் போதையில் மூழ்கி வெறுமையை மறக்க முயற்சிக்கிறான். இக்காலத்தில் பெண்களும் போதைப் பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை மிக மோசமாகி விடுகிறது.
ஒரு திரைப்படம் மோசமாக இருக்கிறது பார்க்காதே என்று சொன்னால் சிலர் கேட்க மாட்டார். அது எப்படி மோசமாக இருக்கிறது என்று பார்க்கிறேன் என்று பார்த்து விட்டு வந்து ஆமாம் மோசமாகத்தான் இருக்கிறது என்று ஒப்புக் கொள்வார். திரைப்படம் என்றால் இரண்டு மணி நேரத்துடன் முடிந்து போகிற விஷயம். வாழ்க்கை அப்படி அல்ல. பலருடன் தொடர்பு வைப்பது, போதை போன்ற பழக்கங்கள் ருசி பார்த்து விட்டு, விட்டு விடக் கூடியது அல்ல. போதைக்கு அடிமை என்று சொல்வார்களே அதாவது அந்த பழக்கம் ஏற்பட்டால் மனிதன் அடிமைதான். தன் இஷ்டப்படி திரைப்படக் கொட்டகையை விட்டு வெளியே வருவது போல வர இயலாது. இன்றைய காலத்தில் தனி மனித சுதந்திரம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனைப் பயன் படுத்திக் கொண்டு கள்ளக் காதல், போதை என்று ஆராய்ச்சி செய்ய, நம்முடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளக் கூடாது.
“விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். விந்து என்பதை உயிர்ச்சக்தி என்றே கொள்ளுகிறார்கள். அந்த உயிர்ச்சக்தியை தகாத முறையில் பலருடன் உறவில் ஈடுபட்டு வீணடிப்பது நொந்து கெடவே நேரிடும். நமது உபநிஷதங்கள், புராணங்கள் காமத்தை பாவமாக கருதவில்லை. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் விரும்பி இணைந்து, நான் என்பது அழிந்து நாம் என்று ஆகும் போது அங்கே தெய்வீகம் ஏற்படுகிறது. தவறான உறவு முறைகள் இந்த தெய்வீகத்துக்கு இட்டு செல்லாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இளம் வயதினருக்கு காதலுக்கும் காமத்துக்கும் பேதம் தெரியாமல் இருக்கிறது. பருவ கால உணர்வுகளால் ஏற்படும் இனக்கவர்ச்சியைக் காதல் என்று பொருள் கொண்டுவிடுகிறார்கள். வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்து கொண்டு பால் வேற்றுமை, பருவ உணர்வுகள், மனப்பக்குவம் இவைகள் எல்லாம் நன்கு புரிந்த்கொண்டவர்களால்தான் காதல் என்பது ஓர் புனிதமான பந்தம் என்பது புரியும். திரைப்படங்களுக்கு தணிக்கை முறை உண்டு. ஆனால் இந்திய குடியரசு நமக்கு அளித்திருக்கும் உரிமைகளில் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்து சொல்லும் உரிமை இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு வெளிவரும் சின்னத்திரை தொடர், மெகா தொடர், கேவலமான சதை உணர்வுகளைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைகள் (இப்போது ஒன்றிரண்டு தவிர மற்ற எல்லா பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பத்திரிக்கை என்று புகழ்பெற்ற ஸ்தாபனங்களின் பத்திரிகைகளும் வியாபாரத்துக்காக மஞ்சளானது வருத்தமளிக்கிறது) இவைகளில் வரும் நிகழ்சிகள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியவை. இவற்றை எப்படி ஒரு தணிக்கையும் இல்லாமல் வெளியிடுகிறார்கள். டெண்ட் கொட்டைகளில் பிட் படம் போடுவார்களாம். அதைப்போல பிட்களை முழு நேர சீரியல் என்ற பெயரிலும், கதை கட்டுரை திரைச்செய்தி என்றும் இவர்கள் வெளியிடுவது இளைஞர்களை காம வலையில் விழ வைக்கும் கேடுகெட்ட முயற்சியாகும். கொலை வெறி, அதிலும் இளம் பெண்கள் சர்வசாதாரணமாக காய்கறி நறுக்குவது போல கொலைத் திட்டம் தீட்டுவார்களாம். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
“மகா பாரதக் கதையே ஐவருடன் ஒரு பெண் வாழும் வாழ்வை, சமூகம் புரிந்து கொண்டு, அதனுடன் இயல்புக்கு வந்து அந்த நிகழ்வை சீரணிக்க எடுத்த முயற்சிதான் என்று தோன்றுகிறது. பாரதத்தில் ஒரு இடத்திலும் திரௌபதியின் திருமணம் நியாயப்படுத்தப்பட வில்லை. கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. ஆராயப் படுகிறது. ஐவருக்கு மனைவியாக இருந்ததால் தானோ, அவள் பலர் முன்னிலையில் துகிலுரியப் பட்டு ஒரு கணவனும் காப்பாற்ற முன் வராமல், அவமானப் பட நேர்ந்தது! திரௌபதியின் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது. இப்படி ஒரு திருமணம் நடந்த பின் பேரழிவே ஏற்பட்டது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டியது.”
மகாபாரதத்தை சரியாக படித்து விட்டு பேசவும். திரௌபதிக்கு ஏன் ஐந்து கணவர்கள் என்பதை தெளிவாக நாரதர் விளக்குகிறார். அவள் செய்தது சரியில்லை என்றால் அவளை யாரவது பதிவ்ரதையாக கொண்டாடுவார்களா? ஏதோ அரைகுறையாக படித்துவிட்டு உளறாதீர்! உங்களை போல் சிலரால்தான் என்னவோ பெரியார் போல் சிலர் உண்டாவதாக தெரிகிறது.
//அவளை யாரவது பதிவ்ரதையாக கொண்டாடுவார்களா?
யார் கொண்டாடினார்கள்? எங்கே திரௌபதி பதிவிரதை என்று பாரதத்தில் வருகிறது?
இதை நினைக்கும் போது, குந்தியின் கதை கூட நினைவுக்கு வருகிறது. எனக்கு இதில் நிறைய கேள்விகள் உண்டு.
@ Kumudan
/./ அவள் செய்தது சரியில்லை என்றால் அவளை யாரவது பதிவ்ரதையாக கொண்டாடுவார்களா?
யார் கொண்டாடினார்கள்? திரௌபதி பதிவிரதை என்று பாரதத்தில் எங்கே சொல்லி இருக்கிறது?
இதை நினைக்கும் போது, குந்தியின் கதை நினைவுக்கு வருகிறது. எனக்கு இதில் நிறைய கேள்விகள் உண்டு.
“மகா பாரதக் கதையே ஐவருடன் ஒரு பெண் வாழும் வாழ்வை, சமூகம் புரிந்து கொண்டு, அதனுடன் இயல்புக்கு வந்து அந்த நிகழ்வை சீரணிக்க எடுத்த முயற்சிதான் என்று தோன்றுகிறது. பாரதத்தில் ஒரு இடத்திலும் திரௌபதியின் திருமணம் நியாயப்படுத்தப்பட வில்லை. கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. ஆராயப் படுகிறது. ஐவருக்கு மனைவியாக இருந்ததால் தானோ, அவள் பலர் முன்னிலையில் துகிலுரியப் பட்டு ஒரு கணவனும் காப்பாற்ற முன் வராமல், அவமானப் பட நேர்ந்தது! திரௌபதியின் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது. இப்படி ஒரு திருமணம் நடந்த பின் பேரழிவே ஏற்பட்டது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டியது.”
சிந்திக்கூட முடியவில்லை, எவ்வாரு சாத்தியப்படும் திருமனம் என்பது இருவர் மன அமைதி பெறுவத்ற்கு தான் ஐந்து பேர் எப்படி மன மகிழ்சியுடன் வாழ முடியும், அதே போல தசரதனுக்கு 1000 மனைவிகள் இதெல்லாம் நடு நிலையுடன் சிந்தித்துப்பார்த்தால் பொய்யாகத்தான் தோன்றுகின்றன. ஐயப்பன் (ஐயத்தில் பிறந்தவனர் ஆணுக்கும், ஆணுக்கும் பிற்ந்தவராம்), சிவன் தேவலோகத்தில் உள்ள எல்லா பெண்களையும் கற்பழித்தாராம் அதனால் அவருடைய லிங்கம் (ஆணுருப்பு) பூமியில் அருந்து விழுந்ததாம், பிள்ளையார் – பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவராம் – நாம் நடு நிலையுடன் சிந்தித்துப்பார்த்தால் நம் மதத்தில் மாற்றப்பட வேண்டியது நிறையவே இருக்கின்றது. தயவு செய்து பிரசுரிக்கவும்.
Keerthi அவர்களே!
//அவளை யாரவது பதிவ்ரதையாக கொண்டாடுவார்களா?
யார் கொண்டாடினார்கள்? எங்கே திரௌபதி பதிவிரதை என்று பாரதத்தில் வருகிறது?
பாரதத்தில் திரௌபதி பதிவிரதை என்று கூறப்பட்டுள்ளதா என்பது
தெரியவில்லை. ஆனால் இந்து பெண்கள் ஒவ்வொரு முறை எண்ணெய்
தேய்த்து குளிக்கும்போதும் ஒரு ஸ்லோகத்தை கூறும் பழக்கம் உள்ளது.
(இன்று கூறுகிறார்களா என்பது எனக்கு தெரியாது).
Ahalya Draupadi Sita Tara Mandodari tatha
Panchakanyaah smarennityam mahaapataka naashanam.
இந்த ஸ்லோகத்தில் ஐந்து பெயர்கள் கூறப்பட்டுள்ளன. ஐந்து பெண்களின்
கற்பும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.அதனாலேயே அவர்களின்
பெயர்கள் ஸ்லோகத்தில் வருகின்றன என்று படித்திருக்கிறேன்.
சாதாரணமாக பாரதத்தில் தர்மத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினம்
என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். நம்மைப்போன்ற சாதாரணவர்களுக்கு
கண்டிப்பாக கடினம்தான். விவரம் அறிந்தவர்களிடம் கேட்டு
கொள்ளுங்கள்.
Keerthi,
Request you to read mahabharata. Draupadi is definitely celebrated as Pathivratha.
////சிவன் தேவலோகத்தில் உள்ள எல்லா பெண்களையும் கற்பழித்தாராம் அதனால் அவருடைய லிங்கம் (ஆணுருப்பு) பூமியில் அருந்து விழுந்ததாம்///////
எங்கே இது குறிப்பிட பட்டுள்ளது? எந்த புராணம் விளக்கமாக தெரிவிக்கவும். லிங்கத்திற்கு தவறான அர்த்தம் கூறுபவர்களை …………………………….
//////ஐயப்பன் (ஐயத்தில் பிறந்தவனர் ஆணுக்கும், ஆணுக்கும் பிற்ந்தவராம்), //////
விஷ்ணுவின் சக்தியும் சிவனின் சக்தியும் ஒருங்கே வழிபட படுவதற்காக சொல்லப்பட்ட தத்துவம், கதைப்படி கூட பெண்ணாக அவதாரம் எடுத்த பெருமாளும் ஆணாக இருந்த சிவனும் கூடி பெற்றதகதான் கூறுகிறார்கள். ஒரு பிறப்பில் ஆணாக இருப்பவன் மறு பிறப்பில் பெண்ணாக பிறக்க கூடும் என்பது இங்கே நம்பிக்கை.
ஆன்மா அழியாது மாறது, அனால் உடல் அழியும் மாறும். விச்னுவால் ஒரு பெண்ணாக பிறக்கமுடியும்.
//பிள்ளையார் – பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவராம்//
கலி மண்ணை பிசைந்து ஆதமையும் ஏவாளையும் படைக்க ஒரு கடவுளால் மன்னிக்கவும் சிறு தெய்வத்தால் முடியும் என்றால் (உலக ஆரம்ப மனிதனே மன்னால் சாத்தியம் என்றால்)
உடலில் உள்ள அழுக்கில் இருந்து ஒரு மனிதனை அல்லது தேவனை அல்லது இன்னொரு கடவுளை படைக்க பார்வதிக்கும் நிச்சயம் முடியும்.
///நாம் நடு நிலையுடன் சிந்தித்துப்பார்த்தால் நம் மதத்தில் மாற்றப்பட வேண்டியது நிறையவே இருக்கின்றது.//////
உண்மை, நம் மதத்தை பற்றிய பொய் பரப்புரை செய்யும் நிறைய புல்லுருவிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல்
தண்டிக்கவேண்டும்.
/// தசரதனுக்கு 1000 மனைவிகள்//////
பாலைவனத்தில் வாழும் சேக்குகளுக்கு எத்தனை மனைவிகள்? அரசியல் வாதிகளுக்கு கணக்கில் வராத மனைவிகள் எத்தனை?
சமீபத்தில் ஒரு மெயில் உலவி கொண்டுள்ளது ,அதன் தலைப்பே அது ஆச்சு 5000 என்று தமிழில்தான் இருக்கிறது. உள்ளே படித்தால் 26 வயதுக்குள் 5000 பேருடன் படுக்கையை பகிர்ந்து விட்டாளாம் அந்த புண்ணியவதி. இது எல்லாம் என்ன வகை?
வெளிநாட்டு பெண்களும், ஆண்களும் தினம் ஒரு படுக்கை துணையுடன் இருப்பதை சாதாரண நிகழ்வாக கூறுகிறார்கள்.
அது இல்லாமல் அவர்கள் இருப்பதில்லை, ஒரு நாளைக்கு ஒரு துணை என்றால் (2 , 3 உள்ள புண்ணியவான்,புன்னியவதிகளும் உண்டு) ஒரு வருடத்திற்கு குறைந்தது 365 பேர்.தசரதன் ஆயுள் என்ன அவன் வசதி என்ன அவன் மூன்று வருடத்தில் 1000 பேரை கடந்திருக்கலாம்.
இப்படி எல்லாம் இருக்கும் போது ஒரு சக்கரவர்த்தி 1000 மனைவிகளை அந்தபுரத்தில் வைத்திருக்க முடியாதா? அது சரியா தவறா என்பது வேற பிரச்னை. அந்த ஒழுக்கம் குறைவான ஒருவனின் மகனாக பிறந்த உத்தமன் ராமன் என்பது தான் சிறப்பு.
தமிழ் ஹிந்துவில் இதைப் பற்றிய விவாதமெல்லாம் தேவைதானா?
இது ஒரு சமுதாய பிரச்னைதான் என்றாலும் இதை விட முக்கியமான பிரச்னைகள் பல உள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் வாதங்கள்,பிரதிவாதங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று இப்போதே தெரிந்து விட்டது
இந்தத் தளத்துக்கு இருக்கும் மரியாதையை ஏன் கெடுக்க வேண்டும்?
சிவ துரோகியே இல்லாத கதையை புனைந்து கூறாதே,எப்பொழுதும் ஆணுறுப்பின் நினைப்பிலேயே உழலும் மூடர்க்கு அது ஆணுருப்பாகத்தன் தெரியும். அவனே யாதுமாகி நிற்பவன்,அவன் படைத்தவன் அல்ல, அவனே படைப்பாகி நிற்பவன்,அவனின்றி இங்கே எந்த சவமும் ( போவ்திக பொருளும்) இல்லை, சிவமும் (உயிருள்ள பொருளும்) இல்லை. அருஉருவாக வணங்கபடுவதே லிங்க மூர்த்தம்.
நான் கடவுள்,அகம் பிரம்மாஸ்மி என்று ஒவ்வொருவரும் உணர்ந்து விட்டால் இது போன்ற அல்ப பிறவிகளின் கோட்டம் அடங்கிவிடும்.
சிவ துரோகிகளை பைரவ உருவில் வந்து விரைவில் துஷ்ட்ட நிக்ரகம் செய்வாய் சிவனே.
திரு தங்கதுரை படித்தது “தீ பரவட்டும்” என்று அண்ணாதுரை எழுதிய “புராணம்” போல் இருக்கிறது. வெறுமே “நமது இந்து மதத்தில்”என்று எழுதி தமது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார் என்பது தெளிவு. லிங்க சொரூபம் என்பது மேலை நாட்டினர் விளக்கி எழுதியது போல அல்ல. உருவில்லாத இறை மூர்த்தமே லிங்க சொரூபமாகப பரிணமிக்கிறது. நமது மதம் குறித்த நூல்களின் முறையான படிப்பு இல்லாதவர்கள் எல்லாம் கணடபடி தரம்கெட்டு எழுதுகிறார்கள். அகத்தின் உள்ளே இருப்பதுதானே வெளியே வரும். உள்ளே முழுவதும் கழிவானால் வெளியே வருவதும் அதுவேதான்.
I don’t know why no moderation is happening here. Without that, this thread would definitely degenerate into a stinking gutter.
one of the swamiji who came in Vijay TV was telling there is a Spiritual Reason behind 1000 wifes of Dasaratha.. also lot of hidden meaning are carried our religion only thro stories… anyway those school of learning are difficult to find….
//கடந்த எட்டு மாதங்களில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் மட்டும் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் கள்ளக் காதல் மற்றும் பாலியல் தொடர்பான கொலைகளே அதிகம் என்று அவர் கூறுகிறார்.//
படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
//சென்ற ஆண்டு நடந்த சம்பவம் இது. பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கள்ளக் காதலில் ஒரு பெண்ணுடன் ஈடுபட்டு வந்தார்.//
இந்த ஆள் மனைவியைக் கொல்லும் பொது அவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆகி இருந்தன. இவன் IBM கம்பெனியில் வேலை பார்த்தான். மனைவி பெயர் கூட லக்ஷ்மி என்று ஞாபகம். இந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. அது சமயம் தான் எனக்கும் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. இதைப்பற்றி வீட்டில் பேசியது நினைவுக்கு வருகிறது.
இக்கட்டுரை முக்கியமான ஒன்று.
எந்த ராமாயணத்தில் தசரதனுக்கு 1000 மனைவிகள் என்று சொன்னது? வால்மீகி ராமாயணப்படி அவருக்கு 350 மனைவிகள்தான். அயோத்யா காண்டம், சர்கம் 34 , ஸ்லோகம் 14
எங்க தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். இதில் என்ன தப்பு இருக்குதுன்னு எனக்கு தெரியல. அவர் ரண்டு பேரையும் நல்ல தான் வச்சுருந்தாரு. பல தார மணம் அப்படிங்கறது நம்ம கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான். அப்ப அவங்க இருந்த சூழ்நிலை என்னன்னு நமக்கு தெரியாது. பிரிட்டிஷ் காலத்துல அத ஒழிச்சாங்க. நம்ம பொறுத்தவரை காமம் ஒன்னும் தப்பு கிடையாது. பிரிட்டிஷ் காரனுக்கு அது பொறுக்கல, நாம காதலையும், காமத்தையும் பார்த்த விதம் வேற, பிரிட்டிஷ் பாத்த விதம் வேற. எதையும் முறைப்படி செய்யணும். ஒருவனக்கு ஒருத்தி அப்படிங்கறதே பிரிடிஷ்காரன் திட்டம் போட்டு பரப்புன ஒரு சதி. அப்பதான் நாம, முருகன், கிருஷ்ணன், சிவன் போன்றவர்களை தப்பா நினைப்போம். பால்ய விவாகம், பலதார மணம் எல்லாமே அழிஞ்ச நமது கலாச்சாரத்தின் வாழ்வியல் நெறி, எல்லாமே திரித்து இப்ப பரப்ப படுகிறது,
திரு தங்க துரை போன்றோர்கள் சிந்தித்து பேச வேண்டும். வைதிக புராணங்களில் இது போன்ற சில விஷயங்கள் சில எட்டப்ப மத துவேசிகளால் புகுத்தப்பட்டவை. இதை கொண்டு சிவபெருமானை பற்றி செய்தி வெளியிடுவது அறிவுக்கு பொருந்துவதா?
லிங்க தத்வம் என்பது எவ்வளவு உயர்ந்தது? அதன் பெருமை என்ன? நீங்கள் சொல்லும் கதையின் படி என்றால் இமயம் முதல் குமரி வரை எத்தனை சிவாலயங்கள்? இதனை நாம் முன்னோர்கள் கட்டி இருப்பாரோ? நம் முன்னோர் அனைவரும் பண்பு அற்றவரோ? காமாந்தகரோ? நம் முன்னோரை இகழ்வது நம்மை நாமே இகழ்வது அன்றோ?
சிவ பெருமானை ஊர்த்வ ரேதஸ் என வேதம் புகல்கிறது. இன்னும் சாத்திரமும் “உலகெலாம் ஈன்றும் பவன் பிரம்மசாரி பான்மொழி கன்னி என்றே” புகழ்கின்றது. இதை எல்லாம் உணராமல் இவ்வாறு பேசுவது அழகன்று!
சில நாளைக்கு முன்ன துரதிருஷ்டவசமாக ஒரு பிற்பகல் தொடரை பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு இளம் பெண் பைக்கில் வரும் இளைஞனை நிறுத்தி அவளுக்கு வேலை வாங்கி தந்ததற்கு நன்றி கூறுவதோடு நிற்காமல் அதற்கு நன்றிக் கடனாக தன்னையே எடுத்துக் கொள் என்கிறாள்! அவன் அவளை திட்டுகிறான். நான் எழுந்து வந்து விட்டேன். Sex என்பது அவ்வளவு சாதரணமான விஷயமாகி விட்டதா?
//…சிவன் தேவலோகத்தில் உள்ள எல்லா பெண்களையும் கற்பழித்தாராம் அதனால் அவருடைய லிங்கம் (ஆணுருப்பு) பூமியில் அருந்து விழுந்ததாம், …//
திரு. தங்கத்துரை அய்யா,
பட்டினிகிடந்து, பசியை வென்றுவிட்டதாகப் பொய் சொல்லுவதை ஒரு மதம் புனிதமாகக் கருதுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு மதம் சொன்னால், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பட்டினி கிடப்பார்கள். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா? சாத்தியம் இல்லை. எனவே, பெரும்பாலும் திருட்டுத்தனமாக, முறையற்ற வகைகளில் சாப்பிட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட திருட்டுக் குணத்தில் வாழும் ஒரு பட்டினி கிடப்பவனின் பார்வைக்கு பார்ப்பதெல்லாம் உணவாகத்தான் தெரியும். அது ஒரு மனப்பிறழ்வு.
அதைப்போல, இயற்கையின் தேவையை பூர்த்தி செய்யாத மனிதருக்குக் காமாந்தக மனப்பிறழ்வு ஏற்படுவது இயல்பே. எனவே, அருவமான பிரம்மத்தின் உருவ வடிவமான லிங்கத்தைப் பார்க்கும் காமாந்தகருக்கு சம்பந்தமேயில்லாத ஒன்று நினைவுக்கு வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். அவர்களது பைத்தியம் பிடித்த மனத்திற்கு அந்தப் புரிதல்தான் நிஜமாகவும் தெரியும்.
அதனால்தான், லிங்கத்தை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்ற கோணத்தை உலகிற்குத் தந்தார்கள் கிறுத்துவ பாதிரிகளும், கன்னியாஸ்த்ரீகளும். பாலைவனத்தில் சிக்கிக் கொண்டவனுக்குக் கானல் நீர் தெரிவது போல, அவர்களுக்கு இப்படித்தான் தெரியும் போல.
வெறுமே பசியால் வாடும் பாதிரிகளையோ, கன்னியாஸ்த்ரீகளையோ குறைசொல்லுவதில் அர்த்தம் இல்லை. பாவம் அவர்கள். கானல்நீர்தான் நிஜம் என்று அவர்கள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்களது சூழ்நிலையை வைத்து நாம் அவர்கள் சொல்லுவதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதை விடுத்து, அவர்களது சூழலும், சூழலின் விளைவான சொல்லும் புரியாமல், கானல் நீரை நம்பி, கையில் இருக்கும் இந்து தர்மம் எனும் அமிர்தத்தைப் பாலைவன மணலில் கீழே கொட்டலாமா?
புத்தி இல்லாதவர்கள்தான் கையில் உள்ள அமிர்தத்தைக் கீழே கொட்டிவிட்டுக் கானல் நீர் இருக்கிறது என்று நம்புவார்கள். அதை வழிப்போக்கர்கள் எல்லாருக்கும் சொல்லுவார்கள். நீங்களும் அந்தத் திருப்பணியைத்தான் செய்கிறீர்கள். கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?
பாதிரிமார்கள் சொல்லும் இந்த விளக்கத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொண்டீர்களா அல்லது அப்படியே ஏற்றுக் கொண்டீர்களா?
லிங்கம் என்ற ஒரு படிமத்தை (Symbolஐ) எப்படி அர்த்தம் செய்துகொள்வது? அந்த வார்த்தையை எந்தெந்த இந்துப் புத்தகங்கள் எந்தப் பொருளில் எந்த இடத்தில் பயன்படுத்தியுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள முயல்வதுதான் ஆராய்தலின் முதல்படி. இந்துத் தத்துவங்களும், ஆகமங்களும் அந்தப் படிமங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகின்றன என்பதையும் அறியவேண்டும். அவற்றை அதன்படிதான் புரிந்துகொள்ள வேண்டும்.
அதைவிடுத்து, சம்பந்தமே இல்லாத அர்த்தத்தைச் சொல்லலாமா? ஆங்கில வார்த்தைக்கு ஆங்கில டிக்ஷனரி தரும் பொருளைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, டிக்ஷனரி தரும் பொருள் தப்பு, நான் சொல்லுவதுதான் சரி என்பது என் முட்டாள்தனத்தை நீயும் ஏற்றுக்கொள் என்று சண்டைபோடுகிற ரௌடித்தனம். இந்த ரௌடித்தனம் கிறுத்துவக் கைக்கூலிகளான தீராவிடக் கழகத்தினரின் வியாதி. அந்த வியாதியை நீங்கள் பரப்புகிறீர்கள்.
எந்த வேத புத்தகங்களாவது, புராணங்களாவது இப்படிப்பட்ட பொருளை லிங்கத்திற்குத் தந்திருக்கின்றதா?
இல்லை.
அப்புறம் ஏன் இப்படி ஒரு விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஏனென்றால், கிறுத்துவ மிஷநரிகள் இப்படி ஒரு விளக்கத்தைத் தருகிறார்கள். அந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
இப்படி இந்து மதத் தத்துவங்களுக்கு விளக்கம் சொல்லும் கிறுத்துவ மதங்களில் கத்தோலிக்கம் என்று ஒரு பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைதோறும் சர்ச்சிற்குப் போய், ஏசுவின் ரத்தத்தையும் மாமிசத்தையும் புசிப்பதாக நம்புகிறார்கள். அப்படி ஏசுவின் ரத்தத்தைக் குடித்து, அவரது மாமிசத்தைச் சாப்பிடுவதால் அவர்களது ஆத்துமா தூய்மையடைவதாக அவர்கள் நம்புகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
ஒரு இந்து இந்தப் பழக்கத்தை ஒரு படிமமாகவே அணுகுவான். கிறுத்துவின் ரத்தமும், சதையும் குறிப்பிடுபவை உன்னதமான விஷயங்கள் என அவன் விளக்குவான். ஆனால், கிறுத்துவ மத இறையியலின் விளக்கம் என்ன தெரியுமா?
கிறுத்துவின் ரத்தம் என்பது அவரது விந்தைக் குறிக்கிறது. அந்த ரத்தத்தைத் தாங்கி இருக்கும் கோப்பை கர்ப்பப்பையைக் குறிக்கிறது. இதை இறையியல் பயின்றவர்கள் அறிவார்கள். ஆனால், கிறுத்துவைப் பற்றிப் பேசும்போது சாதாரண மக்களிடம் நேரடியாக வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். சாத்தானைப் பற்றிப் பேசும்போது சொல்லுவார்கள்.
சாத்தானின் வழிபாடு என்பது கிறுத்துவ வழிபாட்டின் மற்றொரு வடிவம். எனவே, சாத்தானை வழிபடுபவர்கள் கிறுத்துவ ஆண்டவனுக்குச் செய்யும் அதே வழிபாட்டைச் செய்வதாகக் குறை சொல்லுவார்கள். அப்போது சாத்தானின் ரத்தத்தையும், மாமிசத்தையும் சாத்தான் வழிபாட்டளர்கள் உண்பார்கள் என்று சொல்லிவிட்டு, அது வெறும் ரத்தமும் மாமிசமும் இல்லை. “சாத்தானின் ரத்தம் என்பது அவரது விந்தைக் குறிக்கிறது. அந்த ரத்தத்தைத் தாங்கி இருக்கும் கோப்பை கர்ப்பப்பையைக் குறிக்கிறது” என்று சொல்லுவார்கள். சாத்தான் வழிபாட்டாளர்களும், கிறுத்துவ வழிபாட்டாளர்களும் சொல்லுவது ஒரே மாதிரியான லத்தீன் மந்திரம்தான். ஒரே மாதிரியான சடங்குகள்தான். சடங்குக் குறியீடுகள் குறிப்பவை ஒரே விஷயங்களைத்தான். வழிபடப்படும் தெய்வம் மட்டுமே வேறு வேறு.
ஆனால், இந்த உண்மையைச் சொல்ல தீராவிடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம் வராது. தீராவிடம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அஜீரணம். குடல்கெட்டுப் போய் பேதியாகிவிட்டது. அந்த பேதியை ஏன் ஊர் முழுவதும் நீங்கள் தெளிக்கிறீர்கள்?
கிறுத்துவப் பாதிரிகளுக்குப் பட்டினி கிடந்து பட்டினி கிடந்து அல்சர். திருட்டுத்தனமாய் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் குற்ற உணர்வு.
குற்ற உணர்வு மிக்க அவர்களுக்குக் காமம் குற்ற உணவு.
அந்தக் குற்ற உணவில் எஞ்சி இருக்கும் எலும்புத் துண்டுகளுக்காக நீங்கள் ஏன் வாலாட்டுகிறீர்கள்?
காமத்தைப் பாவம் என்று நம்பும் ஆபிரகாமியர்களுக்கு உணவைக் கண்டு நாக்கில் எச்சில் ஊறும். ஆனால், சந்தோஷமாகச் சாப்பிட முடியாத துயர நிலை அவர்களுக்கு.
பட்டினி கிடப்பவனுக்குப் பார்ப்பதெல்லாம் உணவாகத் தெரிவதுபோல, அவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் காமாந்தகார அறிகுறிகளாகவே இருக்கும். அவர்களைப் போல வியாதி முற்றித் தமிழர்களும் திரிய வேண்டாம்.
போய் சாப்பிடுங்கள். திருட்டுத் தனமாக இல்லை. தைரியமாக, வெளிப்படையாக, சுயமரியாதையுடன், சமூக அங்கீகாரத்துடன் போய் சாப்பிடுங்கள்.
நல்ல சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டால் புத்தி தெளியும். திராவிட அவலஜீவிகளின் நடுவே வெளிப்படையாகச் சாப்பிட வெட்கமாக இருந்தால், போய் யாருக்கும் தெரியாமல் சுயமாகச் சமைத்துச் சாப்பிடுங்கள் ! 😉
ஒருத்தன் மனநோய் மருத்துவரிடம் போனானாம். “எனக்கு எதைப்பார்த்தாலும் செக்ஸ் குறியீடாவே தெரியுது”ன்னானாம். டாக்டர் ஒரு போர்டில் வித விதமாக கோடுகள் போட்டு ஒவ்வொன்னும் எப்படி தெரியுதுன்னு கேக்க எல்லாத்தையுமே செக்ஸ் குறியீடாகவே அவன் சொன்னானாம். டாக்டர் சாக்பீஸை விட்டெறிந்து என்ன மனசுய்யா உனக்கு… குப்பை மாதிரி வச்சிருக்கே-னு சொல்ல அவன் சொன்னானாம் “நீங்க மட்டும் என்னவாம், ஒரு கோடு வரையப் போனாக் கூட ஆண்குறி வரையுரீர்” என்றானாம். அது போல் தான் தங்கதுரை சொல்வது.
@ களிமிகுகணபதி: பின்னி பெடலெடுத்துட்டீங்க…
//
கிறுத்துவ பாதிரிகளும், கன்னியாஸ்த்ரீகளும். பாலைவனத்தில் சிக்கிக் கொண்டவனுக்குக் கானல் நீர் தெரிவது போல, அவர்களுக்கு இப்படித்தான் தெரியும் போல.
//
மேலே சொன்ன கதை இவர்களுக்குச் சொல்வதுதான். காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தான்.
எனக்கென்னாவோ இந்த தங்கதுறை நமக்கு ரொம்ப நாளாவே தெரிந்த ஒரு அல்ப (ஆங்கில பதம் பார்த்துக்கொள்ளவும் ) நண்பரோ என்று சந்தேகம் வருகிறது.இவருடைய கருத்துக்கள் எழுத்துக்கள் அந்த நண்பரை நினைவுட்டுகின்றன. வேறு பெயர் கொண்டு வந்து இங்கே வலாட்டுகிராரோ என்று தோனுகிறது.
ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்! இந்த கட்டுரையிலும் வாந்தி எடுத்திருக்கிறது இந்த பசுத்தோல் போர்த்திய புலி இல்லை இல்லை ஓநாய்.
அனால் நிச்சயம் இங்கே தாக்கு பிடிக்கமுடியாமல் அடிவாங்கி ஓடிய ஒருவர்தான் இப்போது பேரை மாற்றிக்கொண்டு வந்துள்ள … (edited)
“கள்ள………… ” என்றிருக்கும் கட்டுரை, “மது” என்ற பெயரில் உள்ளது வினோதமான வேதனைதான். எனவேதான், கோவில் கோபுரத்தில், எவ்வளவோ கருத்துக்கள் இருக்கும் போது, நிர்வாண சிலையை மட்டும் பார்த்த கருணாநிதி போல, மகாபாரதத்தில், த்ரவ்-பதிக்கு 5 கணவர்கள் என்பதை, இக்கட்டுரையில் கொண்டு வந்திருக்கிறார். மகாபாரதத்தில், த்ரவ்-பதி-கணவர்களின் அந்தரங்கத்தை அலசாமல், அப்படிப்பட்ட நிலை ஒன்றிலும், காலம் கவனியாது நுழைந்த அர்ஜுனனை, பிராயச்சித்தமாக, தீர்த்த யாத்திரை போகச் செய்த மாண்புதான் இருந்தது. ஆனால், மகாபாரதம் தொடர் காண்பிக்கிறேன் என்று கூறி, கொச்சைப்படுத்தும் விதத்திற்கும், வியாச மகரிஷியின் மகாபாரதத்திற்கும் தொடர்பு கிடையாது. வெறும் வாய் தங்கதுரைகளுக்கு , மெல்லக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
மிகவும் அவசியமான கட்டுரை, அதுவும் இக்காலத்தில் தேவையான ஒன்று, மனிதர்களை கெடுப்பதில் நீங்கள் சொல்லிவுள்ள அனைத்தும் பங்கு வகிக்கின்றன.
சகோதரன்
முஹம்மது
மேலும், ஆங்கிலத் திரைப்படங்கள் தான் , கொச்சைத்தனத்தின் முன்னோடிகள். வகைப்படுத்தப்பட்ட ஆங்கிலப்படங்களிலும், கொச்சையான காட்சிகள் உண்டு. அவ்வளவு அறிவால் சூழப்பட்ட, மேல்நாடுகளில் கூட, கொச்சைத்தனம் தான் அடிப்படை என்று பார்க்கும் போழ்து, சிக்மன்ட் ப்ராய்ட் என்ற உளவியல் அறிஞர் கூறியது போல், உலகம் இனக்க்கவர்ச்சியின் பால் உழல்கின்றது. அந்த நிலையை, பணம் மற்றும் அதிகாரம் சேர்க்கும் கருவியாகப் பயன்படுத்துவோர் தான், சினிமா மற்றும் பத்திரிகை உலகத்தார். இதற்கு விதி விலக்கைத் தேடுவது, வீண் வேலை. மழலைச் செல்வங்கள் மிகுதியாய் இல்லாத குடும்பம் , உடம்பால் வளர்ந்தவர்களால் மட்டுமே மிகுதியாய் இருந்து, சூது வாதுகளால், நிறைந்ததாக ஆகிவிடும். அப்படிப்பட்ட நிலைமைதான், இந்த தகாத உறவுகளுக்குக் காரணம். எனினும், காலப்போக்கு, கட்டுப்படுத்த முடியாததாய் உள்ளது. சொந்த முயற்ச்சியால் ஆன, தனிமனிதக் கட்டுப்பாடு மட்டுமே இதற்கு வழி.
தந்தை சொல் தட்டாத தனயனாய், இராமபிரான், இராமாயணத்தில் இருக்கத், தாய் சொல் தட்டாத த்னயர்களாய், பஞ்ச பாண்டவர்கள் இருந்தமைக்குத்தான், த்ரவ்-பதி, 5 பேருக்கு மனைவியான விதம். ஆனால் ம்ஹாபாரதத்தில், அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைவிட, எதற்காக வாழ்ந்தார்கள் என்பதுதான் இதிஹாசமே. எவ்வாறு வாழ்கிறார்கள் என்று எழுதி, காட்டிக் கொச்சைப்படுத்துவதுதான் நாகரீகத்தின் வேலை. ஒவ்வொரு தகாத நடப்பின் பின்னும், ஆணும்/ஆண்\களும் உண்டு, பெண்/பெண்களும் உண்டு. பல்வேறு விதமாய் மேனியைப் பெண் (புகைப்) படக்கருவிகளின் முன்னின்று வெளிப்படுத்த, , பெரும்பாலும், ஆண்கள் கருவிகளை இயக்கி, இருபாலாரின் வக்ரங்களை வெளிப்படுத்தத் , தெரு நாய்களாய், சாலயோர மாடுகளாய், கட்டடங்களில் வசிப்பவர்கள் தானே அமமனிதர்கள்.
காமம் என்பது வாழ்வின் அடையப்பட வேண்டியவற்றுள் ஒன்றாக வேதம் கூறுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு.
சமீபத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. இன விருத்திக்கு என்று ஏற்பட்டதால் காமத்தின் மீதுள்ள பற்று அதீதமாகவே இருக்கும் என்று. இந்தக் காமம் அளவோடு இருக்கும் வரை மனிதனுக்கு மிகவும் தேவையே. மீறும் பட்சத்தில் தான் தொல்லை.
தெரு நாய்களைக் கூட கவனியுங்கள். ‘சீசன்’ வரும் போது, ஒரு பெட்டையின் பின்னே அவை ஓடும். பின் அடங்கி விடும். நுகர்ந்து பார்த்தே ஒரு பெண் நாய் கர்ப்பமாக இருக்கிறதா என்று கண்டு பிடித்து விடும். கர்ப்பம் என்றால் அதை விட்டு விடும். அங்கே ஒரு பால் புணர்ச்சி இல்லை. கள்ளக் காதல் இல்லை.
ஒரே திருமணம், அளவான உறவு போன்றவை மனிதன் பண்பட்டு உணர்ந்தவை. நம் பாரத நாட்டின் கலாச்சாரத்துக்கே அடித்தளம் போன்றவை. காமம் இரண்டாம் படியானதில் தான் இன்னும் நம் மக்கள் காதல் திருமணங்களில் ஈடுபாடு கொள்ளாமல் பெற்றோர் கூறுபவர்களையே மணக்கின்றனர்.
இந்த சன் மற்றும் குடும்ப டிவி களுக்கு ஏன் இந்த புனிதமான விஷயத்தில் பகை ? அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் போனால் அவர்களோடு வைத்துக் கொள்ளட்டும்.