கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகில் புதிய சர்ச் கட்ட கிறிஸ்தவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளனர். இதனால் இந்து இயக்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.
“மண்டைக்காடு” – இது தமிழகம் முழுவதும் அறிந்த பிரபலமான இடம். ”பெண்களின் சபரிமலை” என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பகவதி அம்மன் ஆலயம் அமைந்திருக்கும் இடம். 41 நாட்கள் விரதமிருந்து மாசிமாதம் இருமுடி சுமந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து பகவதி அம்மனை தரிசித்துச் செல்வார்கள். 1982ம் ஆண்டு இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனின் தீர்த்தமான கடலில் கால் நனைக்கச் சென்றபோது கடற்கரையிலிருந்த கிறிஸ்தவர்கள் பக்தர்களிடம் சில்மிஷம் செய்தனர். இதைத் தட்டிக்கேட்ட பக்தர்களும் தாக்கப்பட்டனர்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் வலையில் சுற்றி கடலில் வீசப்பட்டும், காதறுக்கப்பட்டும் 13 இந்துக்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப் பட்டனர். அப்போது முதல்வரக இருந்த திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கலவரபூமியாக மாறிய மண்டைக்காட்டிற்கு நேரில் வந்து பார்வையிட்டதுடன் கலவரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார்.
ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் அருகில் மற்றொரு மத வழிபாட்டுத்தலம் இருப்பது மதக்கலவரம் ஏற்பட வழிவகுப்பதால், இரண்டுக்குமிடையில் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என வேணுகோபால் கமிஷன் அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் பலமுறை மீறி, இந்துக் கோவில்களுக்கு மிக அருகிலேயே உயரமான சர்ச்சுகளை கட்டியெழுப்பியுள்ளனர். இதற்கு சில அரசு அதிகாரிகளும், வாக்குவங்கியைக் கருத்தில்கொண்டு சில அரசியல் கட்சிகளும், அக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இப்படி அரசின் சட்டத்தையும் மீறி குமரி முழுதும் முளைத்திருக்கின்றன சர்ச்சுகள். தற்போது, எதற்காக வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டதோ, எந்த மதக்கலவரத்தால் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைத் திரும்பிப் பார்த்ததோ, அந்த மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலின் அருகிலேயே புதிதாக சர்ச் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. டிசம்பர் 13-2010 என்ற தேதியிட்டு மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் இருந்து 250 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் சுனாமி காலனியில் புதிய சர்ச்சுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மண்டைக்காடு பேரூராட்சி அலுவலகம் முன்பு அதே 13ம் தேதி பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சர்ச்சுக்காக நடப்பட்ட அடிக்கல்லை அப்புறப்படுத்த ஊர்வலமாக புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 150 பேரை நெல்லை சரக டி.ஜி.பி சண்முகராஜேஸ்வரன் மற்றும் குமரி மாவட்ட எஸ்.பி. பவானீஸ்வரி தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் கைது செய்தனர். பின்பு மாலையில் விடுவித்து விட்டனர்.
டிசம்பர் 20ம் தேதிக்குள் மண்டைக்காட்டில் புதிய சர்ச்சுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கல்லை அப்புறப் படுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர். மண்டைக்காட்டில் மீண்டும் 1982ம் ஆண்டு நடந்ததைப் போன்று அச்சம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
போராடி இப்படி பட்ட காரியங்களை சாதித்து கொள்ளும் அளவுக்கு மட்டமான அரசியல் நிலவரமும், நம் நிலைமையும் ஆகிவிட்டது மிகுந்த வருத்தமான விஷயமே !!!
நாம் இதை பற்றி ஒரு மின்னஞ்சலை, (அ) கடிதம் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு அனுப்பலாமா??
இது எல்லாவற்றிற்கும் வெளிநாட்டிலிருந்து வரும் பணம் தான் முக்கிய காரணம். வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை செலவிடும் முறை மற்றும் கணக்குகளை அரசு சரியான முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலே போதுமானது.
அதிமுக ஆட்சியில் தான் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது என்று ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். கர்த்தர் ஆசைப்பட்டால் கழக ஆட்சி அமையும் என்று அம்மையார் பேசிய விளைவு இந்த அடிக்கல் நாட்டு விழா. ஓட்டு பொறுக்கி கழக ஆட்சியிருக்கும் வரை ஒன்றும் புடுங்க முடியாது.
https://maattru.blogspot.com/2010/12/blog-post_28.html
சமீபத்தில் அறிமுகங்கள் மூலம் மெயிலில் வந்த பதிவு இது. மதம் மாறினாலும் சாதியை விடாத கிறிஸ்தவர்களை என்னென்பது? இந்து அடையாளங்களை விடவும் முடியாமல், முழுதாக கிறிஸ்தவத்தை ஏற்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள்.
மண்டைக்காடு சம்பவத்தின்போது குமரி மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று நிலைமையை நேரில் கண்டறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆச்சாரியலுவும் கிறிஸ்தவர், மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி அலெக்சாந்தரும் கிறிஸ்தவர், ஹிந்துக்களுக்கு விரோதமான போக்கே மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது என்று எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தவன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.
ஹிந்துக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்புக் குரல் எழுப்பினாலன்றி எவ்விதப் பயனும் இல்லை. கருணாநிதி, ஜயலலிதா இருவருக்கும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் தேவை. எனவே அவர்கள் இருவருமே இந்த விஷயத்ததில் ஹிந்துக்களுக்குச் சாதகமாக இருக்க மாட்டார்கள் ( ஜெய லலிதா, தான் இயற்றிய மத மாற்றத் தடைச் சட்டத்தைத் தானே கைகழுவிவிட்டதாகச் சிறிதும் லஜ்ஜையின்றி அது ஒரு சாதனை என்பதுபோல் பேசுகிறார். மத மாற்றத் தடைச் ச்ட்டம் கொண்டு வந்தவர் என்று ஜெயலலிதாவைக் கருணாநிதி சீண்டுகிறார்!).
குமரி மாவட்ட ஹிந்துக்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து, ஹிந்து ஆதரவு கட்சி/ வேட்பாளருக்கே வாக்கு என முடிவு செய்து, வரப் போகும் தேர்தலில் வேட்பாளரிடம் ஹிந்து நலனுக்கு விரோதமாக நடக்க மாட்டேன் எனக் கையொப்பமும் பெற வேண்டும். வேணுகோபால் குழு புதிதாக ஆலயங்கள் கட்டப்படுவது தொடர்பாகத் தெரிவித்த பரிந்துரையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என நீதி மன்றங்களிலும் வீதிகளிலுமாக இருமுனைப் போராட்டங்கள நடத்த வேண்டும். பிற மாவட்ட ஹிந்துக்களும் பங்கேற்க வேண்டிய விஷ்யம் இது. இன்று நாடு முழுவதும் புதிது புதிதாக எங்கு பார்த்தாலும் சர்ச்சுகளும் மசூதிகளும் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. நாம் இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியுள்ளது.ஏனெனில் இவ்விரு மதங்களுமே மத மாற்ற முயற்சிகளில் மிக மும்முரமாக இயங்கி வருகின்றன.
-மலர்மன்னன்
Pai arasu cheithal pinaum thinnum chaattirangal today Tamil Nadu is like that, Kanyakumari hindus are confident to fight this. The christians built church to convert hindus to christians but jesus converts christians to dead bodies (Tsunami 2004). Kanyakumari hindus know who affected more in Tsunami. BJP and Hindu Munnani only support Hindus no other political parties can support Hindus. I called every Hindus can cooperate with BJP and Hindu Munnani to strengthen their activities.
அன்று, மண்டைக்காடு கலவரத்தை அடுத்து ஹிந்துக்கள் நடத்திய ஊர்வலம் போலீஸ் துப்பாக்கிச் சூடால் களேபரமானது. அப்போது குமார் என்ற ஹிந்து இயக்க செயல்வீரர் கொல்லப்பட்டார். அதன் பிறகே அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் நிலையைப் புரிந்துகொண்டு கீழிறங்கி வந்தார். அதை மறந்துவிட்டு, இப்போது ஜெயலலிதா, ”சர்ச் கட்ட யாரையும் கேட்க வேண்டியதில்லை” என்று ஓட்டுக்காக கிறிஸ்தவர்களை கொம்பு சீவி விட்டுச் சென்றிருக்கிறார் (அருமனை கிறிஸ்துமஸ் விழா).
இரு கழகங்களும் கிறிஸ்தவ ஓட்டுகளுக்காக தரம் குறைந்து செயல்படும் நிலையில், குமரி மாவட்ட இந்துக்கள் தங்கள் ஓட்டுக்கள் அனைத்தையும் பா,ஜ.க.வுக்கு மட்டுமே அளித்தால் தான், இத்தகைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
//அன்று, மண்டைக்காடு கலவரத்தை அடுத்து ஹிந்துக்கள் நடத்திய ஊர்வலம் போலீஸ் துப்பாக்கிச் சூடால் களேபரமானது. அப்போது குமார் என்ற ஹிந்து இயக்க செயல்வீரர் கொல்லப்பட்டார். அதன் பிறகே அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் நிலையைப் புரிந்துகொண்டு கீழிறங்கி வந்தார். – ஸ்ரீ சேக்கிழான்//
அன்புள்ள ஸ்ரீ சேக்கிழான்,
மண்டைக்காடு சமபவத்திற்குப் பின் ஓராண்டு கழிந்து அதன் நினைவாக ஹிந்து முன்னணி முன்னின்று பேரணி நடத்த ஏற்பாடு செய்தபோது ஸ்ரீ தாணுலிங்க நாடார், ராம கோபாலன் முதலானோர் கைது செய்யப்பட்டனர். நானும் உடனிருந்தேன். நடைபெறுவதை அறிய வேண்டுமாதலால் நான் ஒரு பத்திரிகைகாரன் என்று சொல்லிக் கைதாவதிலிருந்து விடுபட்டேன். வழிகாட்டத் தலைவர்கள் இல்லாத நிலையில், தலைவர்கள் காவலர்களால் அழைத்துச் செல்லப்படுமுன் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அனைவரையும் வேண்டிக்கொண்ட பிற்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த பெருங் கூட்டம் பேரணியாக முன்னேறிச் சென்றது. அமைதியாகவே பேரணி சென்றபோதிலும் காவலர்கள் அனாவசியமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஸ்ரீ குமார் என்கிற இளைஞர் உயிரிழக்க நேரிட்டது. இது பற்றி நான் யாரைத் திருப்தி செய்ய இந்த அனாவசியத் துப்பாக்கிச் சூடு என்ற தலைப்பில் ஹிந்துமித்திரனில் தலையங்கம் எழுதி எம்.ஜி.ஆரை. கண்டித்தேன். காஞ்சி காமகோடி பீட மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி அவர்களும் கண்டித்ததோடு எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஹிந்து கலைகள் விளக்கக் கூட்டத்தில் எம் ஜி ஆரை நேருக்கு நேர் கண்டிக்கவும் செய்தார். நான் எனது தலையங்கத்தில் முந்தைய ஆண்டு வன்முறையில் இறங்கிய கிறிஸ்தவ மீனவர்களைக் கட்டுபடுத்த வேண்டி துப்ப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12/13 பேர் இறக்க நேரிட்டதால் இந்த ஆண்டு அமைதியாகப் பேரணி சென்ற ஹிந்துக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு இளைஞனை அனாவசியமாகக் கொன்று கிறிஸ்தவ அமைப்புகளைத் திருப்தி செய்திருக்கிறீர்களா என்று எழுதியிருந்தேன். குமரி மாவட்டத்தில் யாரிடமாவது 1983/ 84 ஹிந்துமித்திரன் தொகுப்பு இருந்தால் அதைக் காணலாம். பேரணியினுள் நானும் இருந்தேன். பேரணியில் கலந்துகொள்ள வெளியிலிருந்து யாரும் வரக் கூடாது என்பதற்காக நாகர்கோயில் ஊருக்கு வெளியே வெகு தொலைவில் பஸ்கள் நிறுத்தப் பட்டன. நான் பத்திரிகைக்காரன் என்ற சலுகையில் ஆனால் நடந்தே ஊருக்குள் செல்ல வேண்டியதாயிற்று. அன்று குமரி மாவட்டத்திற்குக் குழந்தை குட்டிகளுடன் வந்த மக்கள் மிகவும் திண்டாடிப்போயினர். பேரணியில் என்முன்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆனால் என் மீது குண்டு படவில்லை. எம்.ஜி.ஆர். எங்கே எனது தலையங்கத்தைப் படிக்காமல் தவறவிட்டுவிடுவாரோ என்று அதனை நேரில் கொடுத்தேன். நான் படித்துவிட்டேன், தவறுதலாக நடந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் ( எனக்கும் எம் ஜிஆருக்கும் இருந்த உறவு குறித்து கருணாநிதி ஒருமுறை தனது முரசொலியில் மலர்மன்னன் கதை என்றே தலைப்பிட்டு அரைப்பக்கத்துக்குக் கட்டுரை எழுதியுள்ளார்! எம் ஜி ஆர் எனது எஜமான் என்றும் நான் அவரது மெய்க்காப்பாளர்களில் மிகவும் நெருக்கமானவன் என்றும் அதில் அவர் வர்ணித்திருந்தபோதிலும் நான் மிகவும் நல்லவன் என்று நற்சான்றும் வழங்கியிருந்தார். எம் ஜி ஆருக்கே அறிவுரை கூறும் அளவுக்குத் துணிவுள்ளவன் என்றும் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்! கருணாநிதியின் கட்டுரையை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். எவருக்காவது படிக்க ஆர்வம் இருந்தால் அனுப்பி வைக்கிறேன்!). ஆகவே ஹிந்துக்களளின் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடந்தபிறகுதான் எம் ஜி ஆர். கீழிறங்கி வந்தார் என்ற தகவல் பிழையானது.
-மலர்மன்னன் .
மணடைக்காடு கலவரத்தின்போது சில தினங்களுக்குள்ளாகவே மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து கிறிஸ்தவரான ஆச்சார்யலுவை மாற்றி அந்த இடத்தில் ஸ்ரீ ப்ராணேஷ் என்பவரை எம்.ஜி. ஆர். நியமித்தார். அலெக்சாந்தர் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் அளித்த அறிக்கையைத் தூக்கி எறிந்தார். நான் அளித்திருந்த அறிக்கையைக் காட்டி இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்றும் கேட்டார். இதன் விளைவாக எனக்கு நேர்ந்த இடையூறுகளை இங்கு விவரிக்க விரும்பவில்லை. கலவரம் நடந்த சில நாட்களுக்குள் எம் ஜி ஆர். கீழிறங்கி வந்துவிட்டார்; ஆனால் அவரும் ஒரு அரசியல்வாதி என்பதால் மறு ஆண்டு ஹிந்துக்களின் அமைதியான பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தச்செய்து கிறிஸ்தவர்களை சமாதானப் படுத்தினார் என்பதே நான் சொல்ல வந்த செய்தி. அது திசை மாறிப் போய் விட்டது.
-மலர்மன்னன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்து மக்கள் கட்சியின் வலிமை எவ்வளவு என்று தெரியவில்லை. ஹிந்து மஹாசபை ஓரளவு வலிமையாக இருப்பதாகத் தெரிகிறது. இவை இரண்டும் ஹிந்துக்களின் நலனிலேயே கவனமாக இருப்பவை. வருகிற ச்ட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்களேயானால் ஹிந்துக்கள் ஒற்றுமையாக அவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பது என் எண்ணம். பா.ஜ.க. இக்கட்சிகளுடன் சேர்ந்து அங்கு தொகுதிகளைப் பங்கிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.
-மலர்மன்னன்
இந்த நிலைமைக்கு காரணம் என்று சொல்ல போனால்
– நாமே தான் பா ஜ க வில் வழக்கரின்ஞர்கள் அணி என்று ஒன்று உள்ளது அது இதுவரை பிரயோசனமான ஒரு வழக்கை நடத்தியுள்ளதா .நமது மக்களுக்கு சட்டரீதியாக போராடுவதற்கு அமைப்புக்கள் ஏதாவது உண்டா.உதாரணாமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு என்றால் அதற்க்கு உதவி செய்ய சர்ச் உள்ளது .இங்கு நாம் நமது கோவணத்தை அடகு வைத்தால் தான் உண்டு.
-இது போல் ஒரு வழகிர்க்காக போராடி இப்பொழுது அவதி படும் நிலையில் உள்ளார் முன்னால் கன்னியாகுமரி மாவட்ட ஹிந்டுமுன்னணி தலைவர்
-மண்டைக்காடு கலவரத்தின் பொது உயிர் நீர்த்த தியாகி குமார் பற்றி எழுதப்பட்டு இருந்தது .யாருக்காவது தியாகி குமார் அவர்களது நினைவிடம் எங்கு உள்ளது என்று தெரியுமா.அவரது குடும்பம் இப்பொழுது என்ன நிலைமையில் உள்ளது என தெரியுமா .ஒரு அதிர்ச்சி செய்தி அந்த குடும்பம் விரைவில் கிறிஸ்தவ மதத்திற்கு செல்லும்.நாங்கள் அவர் குடும்பத்தை சென்று சந்தித்தபொழுது அவர்கள் குடும்ப நிலைமை எங்களை கவலைப்பட வைத்தது.அந்த தாய் அவர்கள் குடும்பத்திற்கு ய்ர்தாவது உதவி கோரினார்கள்.
-எங்கே போனது ஹிந்து முன்னணி அவர் உயிர் தியாகம் செய்த நாளில் ஒரு மாலை வாங்கி போடா கூட வக்கில்லையா அல்லது போடா மனம் இல்லையா.
-இதே நிலை தான் ஹிந்து முன்னணி அலுவலகத்தில் குண்டுவெடிப்பில் உயிர் தியாகம் செய்த அமரர் பாலனும் நிலைமையும் .இதற்க்கு விதி விளக்கு ஹிந்து மக்கள் கட்சி மட்டுமே அவர்கள் அமைப்பில் யாரவது சிறை செல்ல நேரிட்டால் அந்த அமைப்பு அவர்களது குடும்பத்திற்கு உதவுகிறது.
-சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி கைதோடு என்ற ஊரில் சென்ற வாரம் ஞாயிறு அன்று அம்மன்கோவில் பின்புறம் சர்ச் கட்ட அவர்கள் ஒரு சி எஸ் ஐ நீதிபதியிடம் வெள்ளி அன்று உத்தரவு வாங்கி சர்ச் கட்ட திட்டம் தீட்டினார்கள்.இது தெரிய வந்து ஞாயிறு அன்று மக்கள் கூடி பா ஜ க மாவட்ட தலைவர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்த கலெக்டர் வருவார் என கூறி கடைசிவரையில் கலெக்டர் வரவில்லை.போலீஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது இந்த சமயம் அங்கு சர்ச்சில் எல்லா கிறிஸ்தவ எம் எல் ஏ மற்றும் எம் பி ஹெலனும் ஆஜர்.கடைசியில் நடந்தது என்ன மறுநாள் காலையில் போலீஸ் தலைமயில் சர்ச் கட்டப்பட்டது.
-இது பற்றி நான் கூற விரும்புவது என்னவென்றால் இது சம்பந்தமான வழக்கு இருந்துவந்தது ஆனால் அதை பின்பட்ட்ற யாரும் இல்லை.பா ஜ க வந்ததால் ஹிந்து முன்னணி வரவில்லை வேறு என்தாஹ் ஹிந்து அமைப்பும் அங்கு இல்லை.நமக்குள்ளே ஒட்ற்றுமை இல்லை என்றால் நாம் எங்கு முனீர முடியும்.
-குமரி மாவட்டத்தின் ஹிந்து அமைப்புகள் ஹிந்து முன்னணி ,சிவா சேனா,ஹிந்து மஹா சபை ,ஹிந்து மக்கள் கட்சி ,வேறு எஸ் பி குட்டி ஒரு கட்சி வைத்துள்ளார் .நமது நோக்கம் ஒன்று தான் பின் எதற்கு இதனை அமைப்புகள் .இவர்களுக்குஉள்ளேயே ஒற்றுமை இல்லை.
-மண்டைக்காடு கலவரத்தின் பின்பு ஹிந்து மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக ஹிந்து அமைப்புகள் எந்த முயற்சியும் இருந்தது இல்லை .இந்த நல்ல சந்தர்பத்தை தவற விட்டார்கள் .
-எனக்கு இப்பொழுது தோன்றுவது என்ன வென்றால் நமது மதத்தின் நிலைமை அதோ கதி தான் .கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமேரி மாவட்டமாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.முடிந்த அளவு நம்முடன் இருப்பவர்களுக்கு உதவுவோம் மற்றபடி இறவன் என்று ஒருவன் உள்ளான் என்றால் அது அவன் கடமை நமது மதத்தை காப்பாற்ற .மனித சக்திக்கு எதிராக நாம் போராடலாம் அதற்க்கு அரசாங்கமும் துணை நின்றால் நாம் என்ன செய்ய முடியும்.எதனை உயிர் தாகம் தான் நாம் தர முடியும். jaihind 9898745144
ஹிந்துகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதே உண்மை … ஹிந்து advocates என்ன செய்கிறார்கள் ?
கண்காணிக்கப்பட வேண்டிய விஷயம்தான். விழிப்போடு செயல்பட வேண்டும்.
இது எனக்கு ஒருவகையில் அமெரிக்காவின் தேர்தலில் வலதுசாரி கிறிஸ்தவர்கள் கையாளும் முறையை நினைவு படுத்துகிறது. , அவர்கள் அனைவருக்கும் பொதுவான சட்ட திட்டங்களைப் பின்பற்றித்தான் வழிபட்டுத் தளங்களைக் கட்டிக்கொள்ள இயலும். ஆனாலும், அவர்கள் ஒட்டு வங்கியின் மூலம் தங்களது குறிக்கோள்களைச் சட்டமாகக் கொண்டுவர முயல்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து சதவிகிதம்தான். ஆனால், அவர்கள் தங்களின் கருத்துகளை வெளிக்கொணர டிவி, இணையதளங்கள், ஈமெயில்கள், கடிதங்கள் இவற்றைக் கையாளுகிறார்கள். அவர்கள் தவறாமல் ஓட்டுப் போடுகிறார்கள். தங்கள் கருத்தை உரக்கச் சொல்ல அவர்கள் என்றும் தயங்குவதில்லை. அதே முறையைத்தான் இந்தியச் சிருபான்மையரும் கையாளுகிறார்கள். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியிடம் (Democratic Party) வலதுசாரி கிறிஸ்தவர்களின் பாட்சா பலிக்காததால் குடியரசுக் கட்சியில் (Republican Party) ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களின் குறைவான விகிதத்திலுள்ள, ஆனால் நிச்சயம் கிடைக்கக்க் கூடிய ஓட்டுக்களுக்காக, அவர்களை குடியரசுக் கட்சி தன்பால் ஈர்த்துக் கொள்ளுகிறது. ஆனால், ஒருபோதும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதம் மாற்றக் குறி வைப்பதில்லை. அவர்களின் சில குறிக்கோள்களும், இந்துக்களின் குறிக்கோள்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. அவர்களால் இந்துக்களுக்கு ஒருவிதமான தொல்லையும் இல்லை. நான் குறிப்பிட்டு இருப்பது சிறிய அளவில் உள்ள ஒட்டு வங்கியை வைத்து, தங்கள் குறிக்கோள்களை எப்படி நிறைவேற்ற முயலுகிறார்கள் என்பதுதான். இந்தியாவைப் பொருத்தமட்டில் Democratic Partyயின் நிலையில் பா.ஜ.க. இருந்து வருவதைக் காண்கிறேன். பா.ஜ.க. தேர்தலில் வெல்லக்கூடாது என்பதற்காக அதற்கு “இந்து வலதுசாரிக் கட்சி” என்ற முத்திரையைக் குத்தி, மற்ற நடுநிலை இந்துக்களின் ஓட்டைப் பிரிக்க முயல்கிறார்கள். நடுநிலை இந்துக்களின் மனப்பாங்கு ‘எதிர்மாறான கருத்துகள்” உடையதாக இருப்பதால், இந்தச் சூழ்ச்சியை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது போகிறது. இதற்கு அவர்கள், இந்து சமய ஞானிகளின் கருத்தைத் தவறாகப் பொருள் படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும். இந்தப் புரிதலை மாற்ற ‘தமிழ் இந்து’ போன்ற இணையங்களும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் நடுநிலை இந்துக்களை அணுகி, அவர்களை வெளிச்சத்திற்குக் கொணர வேண்டும். இல்லாவிடில், அவர்களும் இந்து சமயத்தை விட்டு நீங்கி, ஆபிரகாமிய சமயங்களில் கலந்து மறைந்துபோய் விடுவார்கள். திரு எம்.ஏ. கான் எழுதிய வண்ணம் இந்தியாவும் விழுந்து படும். மற்ற இடங்களில் குறைந்துவரும் ஆபிரகாமிய மதங்கள் இந்து சமயத்தின் ஒரே மண்ணான பாரதத்தையே மாற்றி அமைத்து விடும்.
மீண்டும் ஒரு கருத்து.
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது, ஒரு ஆண்டு வறட்சியினால், தமிழ்நாடு திணறியது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு, நிலைமை கைமீறியது. கர்நாடகாவில் இருந்த காங்கிரஸ் அரசு ஒட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்தது. தமிழகத்திற்கு நீர் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பையும் நிறைவேற்ற மறுத்தது. அச்சமயத்தில் மட்டும் பா.ஜ.க. அரசு, உச்ச நீதி மன்றத்தின் ஆணையை நிறைவேற்ற மறுத்த கர்நாடக சட்ட மன்றத்தை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொணர்ந்து, தமிழகத்திற்கு நீர் அளித்திருந்தால், இப்பொழுது தமிழ்நாட்டில் பா.ஜ.க. நன்றாக வேர் ஊன்றி இருக்கும். “வலது சாரி இந்துக் கட்சியான பா.ஜ.க., திராவிடர்களுக்கு உதவி செய்யாது” என்ற பழிச் சொல் கலந்த பிரச்சாரத்திலிருந்து தப்பி இருக்கலாம். பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். 39 இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க.வின் உதவியுடன் சோனியா காந்தியின் அரசு ஆட்சியைக் கைப்பற்றி இருக்கவே இருக்காது.
ஆற்றாமையில் எழுதும் குறிப்பு இது. பா.ஜ.க. இலங்கைத் தமிழர்களுக்கு பக்க பலமாக நிற்க முன்வந்தால், தமிழகத்தில் மீண்டும் வேருன்றி, இந்துக்களுக்கு இழக்கப்படும் அநியாயங்களைச் சட்டத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தலாம்.