சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை

dayananda_swamiji1

ஆனைகட்டி ஆஸ்ரமம்.
26 – 5 – 2010.

நீதியற்றதும் பிறப்படிப்படையிலானதுமான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. நமது தேசத்தின் பல பிராந்திய மொழிகளில் உள்ள வேதங்களல்லாத திருமுறைகளும் அனைத்து மானுடத்தின் ஒற்றுமையைப் போற்றிப்புகழும் வசனங்களைக் கொண்டுள்ளன. மத நம்பிக்கை, பால், இன்று சாதி என கருதப்படும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் நியாயமும் நீதியுமற்ற பாரபட்சங்களை அவை மறுக்கின்றன. ஹிந்து பாரம்பரிய வணக்கமான கை கூப்பி கூறப்படும் ‘நமஸ்தே’ எனும் வணக்கம் சக மனிதரில் உறையும் ஈஸ்வரத்தன்மையை வணங்குவதே ஆகும். பிறப்படிப்படையிலான பாகுபாடு காட்டுதலும் தனி நபர்களையும் குடும்பங்களையும் கொடூரமாக நடத்துவதும் சமூக ஏற்புடையதாக ஹிந்து சமுதாயத்தில் ஏற்பட்டது பழமையான ஹிந்து (சுருதி) பிரமாணங்களுக்கும் தத்துவங்களுக்கும் எதிரானதாகும் தமது பழமையான தர்மத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்றெடுத்த பல மக்கள் இதன் விளைவாக ஆண்டாண்டு காலமாக துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இன்றைக்கு நமது அரசியல் நிர்ணயச் சட்டமும் பல நூற்றாண்டுகளாக ஞான ஒளி பெற்ற சமூக-ஆன்மிக அறிஞர்களும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நிலைபாடுகள் எடுத்தும் போராடியும் வருகிறார்கள். என்ற போதிலும் இத்துன்பங்கள் நிலவுகின்றன. இத்துன்பங்களை போக்க அவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இத்துன்பங்களை உருவாக்கும் சூழலுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது முக்கியமானதாகும்.

கிராமக் குடியுறவுகளாக உருவான உறவுகள் ஒருவித பாதுகாப்புத் தன்மையை அளிப்பதாக அமைந்தன. இவ்வித உறவுகளாகத் தொடங்கிய விஷயங்கள் பல நூற்றாண்டுகளாக இவ்வித சமூகப் பாரபட்சங்களாக ஆழமாக நம் கிராமப்புறங்களில் வேரூன்றிவிட்டன. இதனை ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா நன்றாக உணர்ந்திருக்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களை முழுமையாக அகற்றுவது நேரமெடுக்கும் ஒரு விஷயமாகும் என்பதையும் ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. எனவே தீவிரமான முன்முனைப்பு கொண்ட தொடர்ச்சியான களப்பணியின் மூலமே பிறப்படிப்படையிலான நியாயமற்ற பாரபட்சங்கள் அகற்றப்பட முடியும் என ஆச்சாரிய சபா கருதுகிறது.

இந்த சமுதாய அடிப்படையிலான பிரச்சினைகளை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் குறையாகச் சொல்லி தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆபிரகாமிய மதமாற்றப் பிரசாரகர்கள் ஈடுபடுவதையும் ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. இதில் மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன. நம் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் நிலவும் கல்வியின்மை, அடிப்படை கட்டமைப்புகளின்மை, வருமானமின்மை ஆகியவை (அரசியல் சுயநலமிகளால்) சுரண்டப்பட்டு வருகிறது.

ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. ஆச்சார்ய சபாவின் உறுப்பினர்கள் உட்பட இந்த தேசத்தின் ஹிந்து சமயத் தலைமையானது பிறப்படிப்படையிலான இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னணி முக்கிய செயல்பாடுகளை எடுக்க வேண்டுமென ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா கருதுகிறது. இதை அவர்கள் தங்கள் வரையறைக்குட்பட்ட மடங்களிலும் பீடங்களிலும் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் செய்ய வேண்டும். தங்கள் பிரவசனங்களில் செய்ய வேண்டும். மேலும் அறிவொளி கொண்ட ஹிந்து சமுதாய ஆர்வலர்கள் ஹிந்து சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட எளிய மக்களை சமூக-பொருளாதார வலிமை அளிக்கவும் கல்வி அளிக்கவும் மேலும் பல அமைப்புகளை ஏற்படுத்தி உழைக்க வேண்டும்.

– சுவாமி தயானந்த சரஸ்வதி
ஒருங்கிணைப்பாளர், ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா

(இந்த அறிக்கையின் மூல ஆங்கில வடிவம் இங்கே.)

13 Replies to “சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை”

 1. Pingback: Indli.com
 2. மிகச் சிறந்த முயற்சி.

  ஆச்சார்யா சபாவின் இந்த வழிகாட்டுதலின் படி ஒரு நல்ல ஆரம்பமாக எல்லா திருமடங்களும் பிறப்பின் அடிப்படியில் தனிப்பந்தி உள்ளிட்ட சாதீய வழக்குகள் ஏதேனும் இருப்பின் அவற்றைக் களைந்து முன்மாதிரியாக நடப்பதுதான் முதல் படியாக அமையும்.

 3. நல்ல முயற்சி.

  சுவாமி தயானந்தரின் தலைமையிலான ஹிந்து தர்ம ஆச்சார்யா, சபா நெல்லிக்காய் மூட்டைகளாக சிதறிக்கிடக்கும் ஹிந்து துறவிகளை ஒருங்கிணைப்பதில் பெருவெற்றி பெற வேண்டும்.

  தர்மத்தைக் காக்கும் முயற்சிகளை தர்மமே காக்கும். இது திண்ணம்.

 4. ஜாதி புத்தியைக் காட்டுவதாக குறைகூறப்ப்படும்போது, விரும்பத்தகாத ஒன்று நடைபெறும்போது, ஜாதிதான், நல்லவனையும் அல்லாதவனையும் காட்டிக்கொடுக்கின்றது. உதாரணமாகக் கருணாநிதி, தலித் என்பதனால், குறைகூறுகிறீர்கள் என்று அங்கலாய்க்கும் போது, ஜாதிதான், காண்பித்துக் கொடுப்பதாக உள்ளது. எனவே மனிதன் உள்ளவரை, பிரிவுகள் வெளிப்பட்டுத்தான் ஆகும். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பிரிவுகள், ஜாதி என்ற பெயரிலோ, பிரதமந்திரி, சாதாரணக் குடிமகன் என்றவாறு இருந்துதான் தீரும். எல்லோரும் ஒரே மாதிரி ஆகிவிடமுடியாது.

 5. Varna system is a universal phenomenon and existed throughout the world. Swami Vivekananda also confirms this in his writings about the world historic events. Only in India we have given a specific name for the Varnas & framed certain set of rules. (Spiritual advisors or Gurus, warrior class or ruling class, business class and working class) But this system is vanished everywhere including in India to-day. Now every body belongs to working class only.

  Like Varna system cast system is also existing everywhere throughout the world. But except in India other countries restricted this within that group and kept this classification away from society and Government. Cast classification are self made by a group of people based on the place where they lived, work they do, religious customs and tradition they followed, mannerisms they practice within their family groups, annual prayer to their hereditary deity etc., They meet during the religious functions and family functions and exchange their well being. Identification of suitable boys and girls within their group for marriages. The group village chief will give rulings for any dispute. For severe crime the person is debarred from the community. It is a greatest shame in those days and they loose respect in society. It is self sufficient and self controlled system as long as it is separated from society and Government. Hindu society has got a common worship place and burial ground. Where as in the cast less Abrahamic cult they have separate worship places and burial grounds for different groups.

  Varna system collapsed in India during Muslim invasion and there were only a few cast groups till the arrival of British rulers. Due to divide and rule policy of British this cast system given entry into the society and Government. A well planned and planted discriminative attitude sowed by them grown up to-day beyond controllable limit due wrong reservation policies and the full benefactor is politicians even to-day.

  Whatever cast discrimination or atrocities committed on dalit in India is very negligible and much harmless. Only the politicians and media are exaggerating for publicity and political gain. When compared to the atrocities committed by the Abrahamic cult throughout the world in the name of religion, racism, slavery, witch haunt, jihad, inquisitions, colonization etc., shows voluminous historic record killing crores and crores of people, destroying their customs and culture. Their venomous mind set to exploit the world is not changed till to-day. Both are applying different types of strategies every where through back door and creating unrest for mankind. Hence cast discrimination in India is a negligible factor to be ignored. This will vanish once the reservation quota system is removed. Introduction of creamy layer system definitely helps to eradicate the so called cast discrimination if at all any thing is existing. Politicians are finding difficulties to get political gains through cast divisions. Hence started appeasing minorities

  In fact the biggest unfortunate crime in India is minoritisms. Every politician is exploiting in the disguise of minortism and cheating the majority in-turn looting the countries wealth, creating unrest everywhere. This is worst than the cast discrimination and the minority identification to be abolished immediately.

 6. // இந்த சமுதாய அடிப்படையிலான பிரச்சினைகளை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் குறையாகச் சொல்லி தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆபிரகாமிய மதமாற்றப் பிரசாரகர்கள் ஈடுபடுவதையும் ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது //

  உணர்ந்திருக்கிறது என்ற வார்தைக்கு பதில் தீவிரமாக கண்டிக்கிறது. மதமாற்ற தடை சட்டம் பாரதத்தில் அமுல்படுத்தவேண்டும் என்று குரல் கொடுக்கவேண்டும்.

 7. இதைபற்றி (Vijayavaani.com/article by Smt.Radharajan ) கட்டுரையிலிருந்து சில வரிகள் அதற்க்கு மறுமொழி இட்ட திரு.அரவிந் நீலகண்டன் மற்றும் திரு.செந்தில் அவர்களது விளக்கங்கள் தமிழ் இந்து வாசகர்களின் பார்வைக்கு. மனமாற்றம் ஒற்றுமை என்பது ஏழ்மை நிலையில் உள்ள இந்துகளுக்கும் உயர்ந்த மாடாதிபதிகள் வரை உள்ள இந்துகளுக்கு அவசிய தேவை. நம்மில் ஒற்றுமையில்லை என்றால் தாழ்வுதான் உண்டாகும்.

  Radha Rajan

  If HAF (Hindu American Foundation) had wanted to prove “caste discrimination” it should have sent its members, not to live among the Dalits but to live with Brahmins, Goundars, Mudaliars, Pillais, Reddys, Naidus, Lingayats, Vokkaligas, Saiva Vellalars, Rajputs, Thakurs and Kayasthas.

  They are submitting my religion, my country and my society to external audit; to entities who have neither the locus standi nor the moral authority to demand such an audit in the first place.

  With the new US Congress having majority Republicans, many of whom are Christian conservative tea party candidates, caste will be raised again by Christian missionary groups who claim to represent Dalits but only represent missionaries”.

  This is a problem which PIOs, (Persons of Indian Origin) if they choose to continue to want to live in the US as American citizens, must deal with as being internal to their country. Hindu PIOs having to deal with Christian loonies in the US is not India’s problem, much less the problem of Hindus on Hindus bhumi

  why Gujaratis who have been residing in the US for several years and even decades have still not given up their caste consciousness and why do they still perform the marriages of their children only within their caste
  As for the HAF, if it really wants to serve dharma and Hinduism, it should sit down across the table with all those entities it has cited in its mail and ask them to give up religious conversion, jihad, interfering in the domestic affairs of foreign countries like Iraq and Afghanistan considering it is their monotheism which has destroyed entire civilizations, religions, peoples, nations and countries.
  When the HAF receives the assurance that Christians will give up religious conversion, that Islam will give up jihad, and that western nations will give up meddling in the internal affairs of other countries, HAF can ask Hindus to give up caste. So until such time, as devout and proud Hindus, HAF must persevere with attaining this objective and place the report in cold storage.

 8. Sri. Aravindan Neelakandan
  Is there any social reform that our traditional Peetathipathis have supported when it was being fought by our community at large? For example ban on child marriage? That needed an Arya Samaj. Temple entry by depressed sections of the society and that needed Sri Narayana Guru. Right of Nadar women to wear upper garment and that needed an Ayya Vaikundar. Women liberation through education and that needed galvanizing of the Tamils by Subramania Bharathi who in turn was inspired by Vivekananda Nivedita. Can any one in this enlightened forum tell me which social reform like Sharada Act or temple entry for all supported by our traditional Acharyas?
  I think the report is superficial in some places. It is not entirely without errors. But the statement by Swami Dayananda Saraswthi is bold and dynamic and excellent in itself. When Swamiji says ” HDAS considers that the Hindu religious leadership in the country, including the venerated members of the Acharya Sabha, must play a strong proactive role in condemning and discouraging such birth-based rigidities.” all we can say is Swamiji is carrying forward the wonderful legacy of Sri Narayana Guru and Swami Vivekananda. Thousand Pranams at the feet of Swamiji. This is the need of the hour.

 9. Sri. Senthil

  [1] In UK and US, almost people from all caste lives. Is there any incident of caste discrimination or caste violence existing? Everyone just lives with their caste people, peacefully. HAF should have used this point to defend Hinduism but failed. I think, UK Hindu Council had made a study in this respect, and they reported that there is no problem with different caste in UK.

  [2] How can one destroy Caste system? Caste is composed of Gothrams or subsects. Each Gothram is based on paternal lineage. Which means, all men and women within Gothram are brothers and sisters, as they share a common paternal lineage. From this we understand that caste is made up of NOT just people, but family relations. So, how can one destroy castes? Can it be destroyed by inter caste marriage? NO, because as per Hindu traditions (NOT Manu dharma), the children acquire the caste of their father. So even if a Brahmin lady marries a Parayar, she will acquire that caste and so her children. So caste will retain its structure anyway. This proves one more thing, that caste is NOT a racial one, but a lineage. I belong to Gounder community, and many people who were drivers did not get a bride. So they married people from Kerala and they still were Gounders, and come to our temple, which we could not deny.

  [3] Birth Based Myth: My above point again implies that there is nothing to be ashamed of caste being birth based, caste is based on relations, and relations are created by birth. Just like we cannot change our father and mother, we cannot change our brothers, sisters, or uncles, these are birth based. So we need not be apologetic about being birth based. What they call as birth based discrimination is actually profession based issue.

  [4] Discrimination Myth: The word discrimination is used casually to denigrate everything.. my question: When can a discrimination occur? In my research, discrimination can occur only in centralized systems.. NOT in decentralized and distributed societies.. Before Britishers, all castes are self-organizing entities, taking care of itself.. Depending on prevailing conditions, castes took possible roles in the society.. some got a higher role, and some got lower roles.. but at the personal level, all caste people had the freedom to have a family, have festival, have their own temple, and live as a community.. So, its the profession, that was the differentiating factor.. When Britishers centralized the polity, created a corporate totalitarian government, then came the issue of power play, because all castes were made to depend on the government and those who are able to grab bureaucratic jobs, can control everything.. So who is actually responsible for the discrimination? Is it Hinduism, or Is it the colonial centralized totalitarian government, which we are still following?

  [5] Who froze Caste? Before Britishers, there was central enumeration of castes or official classification.. it was just mutual identities of caste.. So if one caste people from Tamilnadu went to some far off places, he was actually free to chose a new identity, or a new life, because there is no community certificate at that time, which people can ask for.. To quote a real life example, please ask any of kongu nasuvan (kongu barber) community.. as per the vocal history, a vettuva nasuvan was attending a gounder chief for shaving, and when his king called him, he left in the middle of shaving and went. The gounder chief felt insulted and decided his community should have their own nasuvan.. so he deputed his son to complete the shaving and to take up the profession.. but his son was denied bride by other gounders, bcoz he took a different profession.. at that time, a kongu chettiyar family came forward to give a bride, and hence formed a separate community called kongu nasuvan. This also proves that caste is NOT racial, and that one caste person can create a new caste.. But can this happen in today’s society controlled by society?

  Suppose if a gounder deputes his son to be barber, will the government accept him as belonging to barber community? So who is responsible for rigidness of caste? Is it Hinduism, or the colonial government? And who is responsible for birth based caste system? Is it Hinduism or the colonial government? Suppose a particular caste moves away from Kanyakumari to say for e.g. Bihar… Still the centralized government identifies them based on their own community.. so even if that community wants to change their identity, the government doesn’t allow.. his community certificate follows him wherever he goes.. So who actually is responsible for such situation?

 10. \\\\\\\\\\When the HAF receives the assurance that Christians will give up religious conversion, that Islam will give up jihad, and that western nations will give up meddling in the internal affairs of other countries, HAF can ask Hindus to give up caste. So until such time, as devout and proud Hindus, HAF must persevere with attaining this objective and place the report in cold storage.\\\\\\\\\
  Any cleansing of practices like discrimination or deprivation among HIndus shall be on the basis of self enquiry to be sustainable. If HIndus start reacting to well intended or ill intended nose poking of Abrahamic religions, it would be detrimental to Hindus. That includes discrimination on the basis of caste.

  Whenever, the word conversion is uttered, one always tend to add a prefix christian to that. Alas! times are changing. do not know whether in south HIndustan, people would have watched “Peace Urdu Tv”. In Kashmir pranth, this channel is ususally aired in all packs and I viewed many programmes of Dr.Zakir Naik. Mr.Zakir Naik who is an Islamic scholar claims himself as multi religious student. he, apart from holy qoran, quotes Holy bible and Hindu scriptures by chapter by verse in his discourses. He gives open call for embracing Islam coined as dawat-e-haq (unlike couched christian conversion calls). He chooses soft Hindu saints ( Many among them do not wish to identify themselves as even Hindus) and air multi religious scholar discourses. A sample may be seen in this url https://www.youtube.com/watch?v=7M0cWy3ariU; https://www.youtube.com/watch?v=ZtPLgL0XyrY
  one may pin prick Smt.RR for venting ire on angrezi speaking swamis. kindly go through above URLs and find for yourself whether ire of Smt.RR is justified.

 11. தமிழ் ஹிந்து தளத்திற்கு,

  உங்கள் நிருபர் மூலம் எனது கருத்தை ஹிந்து தர்ம ஆச்சாரியா சபவிலோ அல்லது சுவாமி தயானந்த சரஸ்வதியிடமோ தெரியப்படுத்துங்கள். நமது ஹிந்து சமூகம் எவ்வளவு நல்ல காரியம் வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் இவர்கள் செய்யும் செயலை வெளிச்சம் போட்டு காட்ட ஏதாவது ஒரு ஊடகம் வேண்டும். அது டிவி சேனலாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

  குறிப்பாக அந்த டிவி சேனல் ஜனரஞ்சஹனமான ஒரு பொழுது போக்கு சாதனம் போல் இருக்க வேண்டும். ஏனென்றால் ரொம்பவும் ஆன்மிக விஷயத்தை காட்டினாலும் அந்த சேனலை ஐம்பதாவது சேனலுக்கு மாற்றி விடுவார்கள். நாம் நல்லது செய்கிறோம் என்பதை விட முக்கியம் நாம் செய்யும் நல்லது அனைத்தும் அனைவருக்கும் தெரிய வேண்டும்.

 12. இந்து மத காப்பாற்றுபவர்கள் ஏன் இந்த கொடுமைகளை எதிர்த்து களம்மிறங்கி போராடவில்லை … மனுதர்மத்தில் இந்த கொடுமைகளெல்லாம் செய்ய சொல்லி இருக்கிறதே .. அப்படியானால் அது இந்து மதத்திற்கு எதிரானதா ? விளங்கவில்லை அய்யா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *