2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என தமிழக வாக்காளர்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது. 2006-ஆம் ஆண்டு முதல், தமிழகத்தை ஆண்ட திமுகவினால் தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் நிகழவில்லை. ஆகவே இந்த ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்பதற்குரிய சரியான காரணங்களை பல்வேறு கோணங்களில் மீடியாக்கள் ஆய்வு செய்கின்றன. ஆகவே நாமும் சில கோணங்களில்– அதாவது சுயநலத்திற்குப் பதிலாக தேசிய நலனை முன்னிட்டு ஆய்வு நடத்துவோம். .
ஐந்து முக்கியமான காரணங்களுக்காக மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என படித்த, நடுத்தர வர்க்கத்தினர் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
1. தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு
2. வேரூன்றி உள்ள குடும்ப அரசியல்
3. எல்லா மட்டங்களிலும் தங்குதடையின்றி நடைபெறும் ஊழல்
4. ஏறிவரும் விலைவாசியைக் குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொறுப்பற்ற தன்மை
5. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் போக்கு– குறிப்பாக தொடர் மின்வெட்டின் காரணமாக– மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டதுஎன இந்த அரசின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாம்.
சட்டம் ஒழுங்கு
2006-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு நல்ல ஆட்சியை நல்குவார்கள் என திமுகவிற்கு வாக்களித்தால், தமிழகம் கண்ட பலன்– சட்டம் ஒழுங்கு மிகவும் தரம் கெட்ட நிலைக்குச் சென்றது, முன்னாள் ஆட்சியாளர்கள் மீது சட்டமன்றத்திலும் வெளியிலும் திமுகவினர் சுமத்திய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் இவர்களது ஐந்தாண்டு ஆட்சியில் தங்கு தடையின்றி அதிகரித்தது.
தலைநகர் சென்னை கொலை நகராக மாறியது திமுக ஆட்சியின் சாதனையாகும். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அகஸ்டீன் சென்னை பெரியமேடு பகுதியில் ஒரு தங்கும் விடுதிக்கு அருகில் இருக்கும்போது பட்டப்பகலில் கொடூரமான முறையில் அவரைக் கொலை செய்தார்கள். இந்தச் சம்பவத்தைப் போலவே பா.ம.க-வைச் சேர்ந்தவர் வக்கீல் சம்பத் அண்ணா நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து மகனை பள்ளிக்குக் அழைத்துச் செல்லும்போது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஆற அமர வக்கீல் சம்பத்தை ஆயுதங்களால் குதறிப் போட்டுள்ளார்கள். 2009-ஆம் ஆண்டு மாதவரத்தில் வீரமணி என்பவரை படுகொலை செய்தவர்களை கொலை செய்ய அவரது மனைவி திட்டமிட்ட சதி தெரிந்தும் உள்ளுர் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கொலை செய்வதற்கு ஒரு கோஷ்டியும், செய்த கொலைக்கு நீதிமன்றத்தில் சரண்டர் ஆக இன்னெரு கோஷ்டியும் இருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஓரிரண்டு என்கவுண்ட்டர்கள் நடந்தாலே பயத்தில் கொஞ்ச காலத்துக்கு ரவடிகள் பதுங்கிவிடுவார்கள் என்பது பழைய கதை, திண்டுக்கல் பாண்டி என்கவுண்டர் நடத்தப்பட்ட சில நாட்களிலேயே வக்கீல் சம்பத், அகஸ்டீன் இருவரும் கொல்லப்பட்டதும் ரவடிகள் பயமில்லாமல் தலைநகரில் உலா வருகிறார்கள் என்பதும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும். 24.2.2010-ஆம் தேதி சென்னையிலிருந்து அருப்புக் கோட்டைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் 0.9 எம்.எம். ரகத் துப்பாக்கிகள் இரண்டும்– மேலும் கறுப்பு மற்றும் பிரௌன் நிறம் கொண்ட அந்த நவீன கைத்துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை– எதற்காக பார்சலில் அனுப்பட்டன என்பது இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது. இது பற்றி முழுமையாக விசாரித்த போது கடந்த மூன்று மாதங்களில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட லாட்டரிகள் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. ஆகவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாகக் காட்சியளிக்கிறது.
சென்னையில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் அவரவருக்கு வேண்டப்பட்ட கீழ்மட்ட, மேல்மட்ட போலீஸ் அதிகாரிகளைத்தான் தங்கள் பகுதிக்கு நியமித்துக் கொள்கிறார்கள். ஆளும் கட்சியினரின் ஆசியுடன் கிரிமினல் கூட்டுடன் குற்றச் செயல்கள் நடந்தால் அந்தப் பகுதி காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
கடந்த ஐந்தாண்டு காலமாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் திமுக ஆட்சி திகழ்ந்தது. 17.11.2007-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. குலைச் செல்வன் தனது கொராடச்சேரி வீட்டில் காலை நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத சமயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே தினத்தில் செங்கற்பட்டு நகராட்சியின் துணைத் தலைவரும், அஇஅதிமுகவின் பிரமுகருமான குரங்கு குமார் பட்டப்பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 29.10.2007-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வழியாக முதுகுளத்தூர் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கார் முற்றுகையிடப்பட்டு, அடையாளம் தெரியாத சிலர் வேல் கம்பால் அவரைக் குத்தி படுகாயமடையச் செய்தார்கள். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக 30.10.2007-ஆம் தேதி முதுகுளத்தூரில் நடந்த கவலரத்தில் வின்சென்ட் தாமஸ் என்கிற ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்காக தற்போது திமுக அணியில் கூட்டு சேர்ந்திருக்கும் பா.ம.க தலைவர் டாக்டர் ச.ராமதாஸ் சொன்னது: “காவல் துறையினருக்கும் கிரிமினல்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும் வரை இது நீடிக்கும்; தமிழகம் அமைதிப் பூங்கா என்று வசனம் பேசி வந்தோம், இனி அவ்வாறு பேச முடியாது”.
பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மத்திய அரசின் உளவுத் துறையே தெரிவிக்கிறது. ஆகவே சீர் கெட்ட தமிழகத்திற்கு விமோசனம் கிடைக்க வேண்டுமானால் வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது
8.5.2007-ஆம் தேதி தினகரனில் “மக்கள் மனசு” எனும் தலைப்பில் வந்த கருத்துக் கணிப்பின் காரணமாக மதுரையில் அழகரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல்களில் அலுவலகத்தில் பணியில் இருந்த மூன்று பேர்கள் உயிரோடு கொழுத்தப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தின் காரணமாக எவரும் தண்டிக்கப்படவில்லை என்பது இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவலட்சணமாகும். சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் ரிமோட் குண்டுகள் மூலம் கொல்லப்பட்டார். தென்காசியில் இந்து முன்னணியின் பொறுப்பாளர்கள் நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கோவையில் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்த சம்பவமும் திமுக ஆட்சியின் அவலங்களாகும்.
ஒருபுறம் பணத்திற்காகக் கொலை கொள்ளை நடந்தாலும், மறுபுறம் ஆயுதக் கடத்தல், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பிய சம்பவங்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை வளைத்த கொடுமைகளும் திமுக ஆட்சியில் நடைபெற்றன. கோவையில் மனித நீதிப் பாசறையை சேர்ந்தவர்கள் ஐந்து பேர் மீண்டும் 1998 பிப்ரவரியில் நடத்திய தாக்குதல் போல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததும், கைதைச் செய்த உதவி போலீஸ் கமிஷனர் உடனடியாக பதவி மாற்றம் செய்ததும் திமுக ஆட்சியில். 15.4.2007-இல் நாமக்கல் அருகே தனியார் தோட்டத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 250 கிலோ வெடிப்பொருள்கள் புதையல் கண்டுபிடிக்கப்பட்டன. 20.2.2007-இல் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருள் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தொடர் சப்ளை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள், கைது நடவடிக்கை மட்டும் செய்தித் தாள்களில் வந்தது, ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது எவருக்கும் தெரியாது. 2007-ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு அலுமினியக் கட்டிகள் கடத்தியது. இரண்டரை டன் எடை கொண்ட பால்ட்ரஸ் குண்டுகள் கடத்தியது, போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கை கேலிக்குரியதாக்கியது.
2006-இல் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய அராஜகம் நீதிமன்றம் வரை சென்று சந்தி சிரித்தது. 13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த நீதிமன்றம் உத்திரவிட்டது. சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் காவல் துறையினர் கண் எதிரிலேயே ஒரு மாணவனைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினருக்கும் வக்கீல்களுக்கும் நடந்த யுத்தம், 18.2.2009-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும் போது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சிதானா அல்லது இதுதான் நல்லாட்சியா என்கிற கேள்வி எழுகிறது.
திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள் அனைத்தும் கடந்த ஐந்தாண்டுகளாக திமுக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும். 15.6.2009-ஆம் தேதி மதுரை ரிங் ரோடு பாலத்தின் அருகே கூஜா வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதும் அது மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலின் மீது நடத்த இருந்த தாக்குதல் என எண்ணியது காவல்துறை. ஆனால் இந்த குண்டுகள் திருநெல்வேலியில் தயாரிக்கப்பட்டவை என்பதும் இந்தச் செயல்களைச் செய்தவர்கள் உள்ளுர் ரவுடிகள் என்பதும் தெரிந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை துணை மேயர் திமுகவைச் சேர்ந்தவர் கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் போலீஸ்காரர், இன்னொருவர் ஏட்டின் மகன் என்பதிலிருந்து காவல் துறையினருக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு நன்கு தெரிகின்றது. கடந்த சில ஆண்டகளாக திண்டுக்கல், பழனி, தூத்துக்குடி, தருமபுரி, பெரம்பலூர், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிப்பது, பைப் குண்டுகள், டிபன் பாக்ஸ் குண்டுகள் என ஆபத்தான ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியதால் வெளி உலகிற்கு கள்ள ஆயுதங்கள் தயாரிப்பது தெரியவந்தது. 54 சதவீத வெடிபொருள்கள் மாநிலத்திலேயே தயாராகின்றன. இந்தத் தயாரிப்பும் அனுமதியின்றி நடக்கின்றது, இதன் காரணங்களுள் உள்ளுர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயேமும் முக்கியமாகும். திமுக ஆட்சிக்கு வந்தபின் மீடியாக்களில் அதிக அளவில் வரும் செய்திகள் சொத்துத் தகராறு, திருமணத்தை மீறிய உறவு, தொழில் போட்டி, அதிகப் பணஆசை போன்றவையே முக்கியமானவையாகும். இப்படியாக திமுக தமிழ்நாட்டைக் கொலைக் களமாக்கியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் வாக்களிக்கும் முன் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமாகும்.
2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை புழலில் உள்ள சிறைச் சாலையில் கைதிகளிடையே இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் ஆயுள் கைதி வெல்டிங் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது கூட இன்று வரை தெரியவில்லை, இந்தச் சம்பவத்தைப் போலவே 12 ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னே இருந்த சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். குறிப்பாக அவர் மட்டும் ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான காரணத்தை இன்று வரை தமிழக அரசு மர்மமாகவே வைத்திருக்கிறது. இதுதான் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சனமாகும்.
தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை ஏணிகளின் படிகட்டுகளைப் போல் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2006-இல் உயரத் தொடங்கிய குற்றங்களின் பெருக்கம் 2010-ஆம் ஆண்டு இறுதிவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கொலை செயல்பாடுகளில் 38 சதவீதமும், வழிப்பறி மற்றும் செயின் பறிப்பில் 127 சதவீமும், இதே அளவு இரு சக்கர வாகண திருட்டும், வீடு புகுந்து திருடுவது 120 சதவீமும் அதிகரித்துள்ளது, கொடூரமான முறையில் கொலை, நூதனத் திருட்டு என குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 70 சதவீதம் பேர் முதன்முறை குற்றவாளிகள் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அரசாங்கத்தின் தவறான கொள்கையின் காரணமாகவும் இலவசம் என்கிற பெயரில் ஆளும் கட்சியினர் கொள்ளையடிக்கும் செயலின் காரணமாக தானும் வசதியாக வாழவேண்டும் என்று கருதுகிற இளைஞர்கள் பணத்திற்காகவும், நகைக்காகவும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கருணாநிதி ஆட்சியில் ஒன்றியச் செயலாளர்கள் கூட கைது நடவடிக்கைளில் தலையிடுவார்கள். குற்றவாளிகளைக் கைது செய்து ரிமாண்ட் செய்யும் விஷயத்தில் காவல் துறையினர் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். கொலைக் குற்றவாளியை அரசாங்கத்தின் வாகனத்தின் மூலம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் அமைச்சரை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பது வெட்க கேடான விஷயமாகும். இது காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வரின் செயல்பாடுகளின் லட்சணமாகும்.
(தொடரும்…)
”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்” ?
திரு.சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா மார்சு 9 ஆம் தேதி சென்னை மைலாபூரில் நடை பெற்றது. இதை இணைந்து நடத்தியவர்கள் மக்கள் சக்தி இயக்கம், 5வது தூண் இயக்கமும். நிகழ்சியில் திரு.நல்ல கண்ணு,திருவெங்கடேஷ், திரு தமிழ் அருவி மணியன் போன்ற தேசிய சிந்தனையுள்ள பலர் உரையாற்றினார்கள்.
இந்த புத்தகத்தை ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டும். புத்தகம் கிடைக்கும் இடம் – மாணிக்கசுந்தரம் வெளியீட்டகம், 522, 2வது மேற்குத் தெரு காமராஜர் , திருவாமியூர் சென்னை-600 041 (9444127351, 9176975502) விலை ரூபாய்.20/- மட்டுமே. குறைந்தது ஒவ்வொருவரும் ஐந்து புத்தகமாவது வாங்கி நன்பர்களுக்கு கொடுக்க வேண்டும்.
திரு.சாவித்திரி கண்ணன் 40 தலைப்புகளை சுருக்கமாகவும், ஆணித்தரமான ஆதாரங்களுடனும் ,புள்ளிவிபரங்களுடனும் ” அலிபாபவும் நாற்பது திருடர்களும்” போல் எவ்வாறு இந்த கருணா அண்டு கம்பெனி சொத்து சேர்த்துள்ளது என்று இதில் சொல்லியுள்ளார். மேலும் அவர் இந்த தலைப்பு ஒவ்வொன்றும் சுமார் 1000 பக்கங்களுக்குமேல் எழுதப்பட வேண்டிய ஒரு மிக பெரிய பகல் கொள்ளை என்கிறாரார். இங்கே தலைப்புகள் மட்டும் தந்துள்ளேன்.
1. குடும்ப அரசியலும் கொள்ளைப்பகிர்வுகளும்
2. சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு
3. மலைக்க வைக்கும் மணல் கொள்ளை
4. செம்மொழி பெயரால் சீரழிக்கப்பட்ட தமிழ்
5. பயனற்ற நிர்வாகமும் பலிகாத ராஜதந்திரமும்
6. ஜனநாயகத்தை மறுக்கும் சர்வாதிகார செயல்கள்
7. விண்ணைமுட்டும் விலைவாசி
8. மலைகளை விழுங்கும் கிரானைட் கொள்ளை
9. விரக்தியின் விளிம்பில் விவசாயிகள்
10. நிர்மூலமாகி போன நீராதாரங்கள்
11. நிலை தடுமாறும் நெசவு தொழில்
12. சொத்துக்குவிப்பில் சூரர்களான தமிழக அமைச்சர்கள்
13. நடுத்தெருவில் நிற்க வைக்கும் இலவச வீட்டு திட்டம்
14. வரலாறு கானாத மின்வெட்டு – இருளில் தத்தளிக்கும் தமிழகம்
15. டாஸ்மாக்கால் யாருக்கு லாபம்.
16. அழிக்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனம்
17. இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம்
18. இலவசங்களை பெறுவதால் இளிச்சவாயர்களல்ல
19. குடும்ப ஆதிக்கத்தால் கொள்ளை போகும் தமிழ் சினிமா
20. பணத்திற்கு ஓட்டு ! மக்கள் உரிமைக்கு வேட்டு !
21. பிளாஸ்டிக் தடை மசோதாவா ? பிளாக்மெயில் மசோதாவா?
22. ஒரு ரூபாய் அரிசி ஒரு ஏமாற்று நாடகம்
23. கதிகலங்கி நிற்கும் கல்விதுறை
24. சமாதியாக்கப்பட்ட சமச்சீர் கல்வி
25. கலைஞர் காப்பீட்டு திட்டமும் கபளீகரமான கோடிகளும்
26. தகவல் அறியும் ஆணையா ? ரகசியம் காக்கும் ஆணையமா?
27. மறுக்கபடும் மருத்துவம் மரணிக்கும் உயிர்கள்
28. கடலில் கரைந்த 2400 கோடி – செயலிழந்த சேது சமுத்திர திட்டம்
29. தலித்விரோத அரசு
30. பிராமன எதிர்ப்பு என்ற பித்தலாட்டமும் – பகுத்தறிவுவாதி என்ற பகல் வேஷமும்
31. அழிந்து கொண்டிருக்கும் நூலகத்துறை
32. ஏப்பம்விடப்பட்ட எல்காட்டின் 700 கோடி
33. சீரழியும் சிறு குறுந்தொழில்கள்
34. மீளமுடியா துயரில் மீனவர்கள்
35. பெண்களை கடனாளியாக்கிய சுயஉதவி குழுக்கள்
36. பழிவாங்கப்பட்ட நேர்மையான அதிகாரிகள்
37. நிரப்பப்படாத லட்சக்கணக்கான பணியிடங்கள்
38. தமிழக வீட்டுவசதி வாரிய தகிடுதத்தங்கள்
39. தில்லு முல்லு டிரான்ஸ்போர்ட்
40. விஞ்ஞான ரீதியான ஊழல்
Please read the address as Kamaraj Nagar
என்ன சொல்ல வருகிறீர்கள்?.. ஜெயல்லிதாவின் தோழி குடும்ப அரசியலை வரவேற்போம்.. டாஸ்மார்க்கை அரசாங்கமே ஏற்று நடத்திய அரிய செயலை
வரவேற்போம்.. மணல் அரசன் ஸ்ரீவைகுண்டராஜனை வளர்த்து விட்ட நல்ல
காரியத்தை வரவேற்போம்.. சந்திரலேகா முகத்தில் ஆசிட் ஊற்றிய சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு வாக்களிப்போம்.. மிரட்டி உரிமையாளர்களை விரட்டிவிட்டு வீடுகளையும் நிலங்களயும் அள்ளிக்குவித்த மன்னார்குடி கும்பலுக்கு மலா பாதை அமைப்போம்.. சந்தனகடத்தல் வீரப்பனைக் கொன்ற வெற்றியை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடிக நடிகைகளை ஆட வைத்து
கொண்டாடியதை வரவேற்போம்.. தயாரிப்பாளர்களை மிரட்டி ஜெயா டி.விக்கு
படங்கள் வாங்கியதை மறந்துவிடுவோம். பத்து வருடங்கள் ஆட்சியிலிருந்தும்
கச்சத் தீவை மீட்காத.. இலங்கைத் தமிழர் பிரச்னையில் மவுனமாக இருந்ததை
பாராட்டுவோம். போரென்றால் இறப்பு இருக்கத்தான் செய்யும் என்று பேசிய த்ததுவத்தை மற்ப்போம். 38 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வெறும் அறிக்கையோடு நிறுத்திக் கொண்டதை எண்ணிஅகம் மகிழ்வோம்.. டான்சி.. ப்ளசன்ட் ஸ்டே விஷயஙக்ளை மறந்து விடுவோம் என்கிறீர்களா? ஆட்சி மாற்றம் என்பது ராஜாவிடமிருந்து (ஊழல்)
ராணியிடம் தூக்கிக் கொடுப்பது அல்ல. அதைப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கு ராணி ???ஆதரவு இருப்பதாக தெரியவில்லையே,
ராஜ எதிர்ப்பு மட்டுமே தக்க காரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
பாவம் அந்த போலிஸ் காராரை பட்டபகலில் வெட்டி கொன்றதும் உயிருக்கு போராடிய அந்த கடமையில் இருந்த போலிசை ஒரு மாண்புமிகு???? மந்திரி வேடிக்கை பார்த்ததும் அவர் உதவியாளர் தண்ணீர் கொடுத்த காட்சியும் இங்கே விளக்கப்படவில்லை.
மன்னராட்சி இனி இங்கு நடக்ககூடாது. அதற்காக ராணி ஆட்சியை ஆதரிக்கவில்லை.மாற்று தேடுவோம்.
/////தேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா? – 1/////////
இந்த கேள்வியே தேவையா?
மாற்றம் நிச்சயம் தேவை.
தேசியவாதிகள் அனைவரும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்திவிட்டு, வெற்றி பெறுகின்றதோ இல்லையோ பா.ஜ.க.விற்கு வாக்களித்திட வேண்டும். இருக்கின்ற கட்சிகளில் ஓரளவிற்கு நல்லவர்கள் இருக்கின்ற கட்சி. ஊழல் செய்கின்றவர்கள் தற்போதைக்கு குறைவாக இருக்கின்ற கட்சி பா.ஜ.க. மட்டும்தான்.
வித்யா நிதி
ஆட்சி மாற்றம் தேவையில்லை.
மக்கள் மீண்டும் திமுகவுக்கே ஓட்டுப்போட வேண்டும்.
பாஜக இதில் வெற்றி பெறும் என்றால், ஓட்டுப்போடுவதில் அர்த்தமுண்டு. மீண்டும் அதிமுகவோ திமுகவோ ஆட்சி ஏறுவதற்கு எதற்கு அலட்டிகொள்ளவேண்டும்?
கலைஞர் குடும்பம் இல்லையேல், மன்னார்குடி குடும்பம் என்று தமிழகத்தை பட்டா போட்டு விற்பதற்கு எதற்கு அலட்டிகொள்ளவேண்டும்?
முடிந்தால் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள்.
முடியவில்லையா .. அலட்டிக்கொள்ளாமலாவது இருங்கள்.
பிரதாப்
தேர்தல் கூட்டணி இரு அணிகளிலும் பெரிய அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. சென்ற தேர்தலில் உள்ள கட்சிகளின் ஒட்டு சதவீதத்தை அடிப்படையாக வைத்து , ஒவ்வொரு கட்சியும் தனக்கு இவ்வளவு சீட்டு வேண்டும் என்று அடம்பிடித்து போராடி வருகின்றன.
சில அடிப்படை உண்மைகளை அரசியல்வாதிகள் மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் ஒட்டு என்பது அவர்களுக்கு விழுந்த ஆதரவு ஒட்டு அல்ல. பிற கட்சிகளை பிடிக்காததால் , அவற்றை நிராகரிப்பதற்காக , இந்த கட்சிகளுக்கு ஒட்டு போடுகிறார்கள்.
கலைஞரின் குடும்ப சர்வாதிகாரம் பிடிக்காதவன் ஜெயலலிதாவுக்கும் , ஜெயாவின் பின்னுள்ள சசிகலாகுடும்பத்தினரின் ஆதிக்கம் பிடிக்காதவன் வேறு கட்சிகளுக்கும் ஒட்டு போடுகிறான். விஜயகாந்த் வாங்கிய சுமார் எட்டு முதல் பத்து சதவீத ஓட்டுக்களில் திமுக , மற்றும் அ திமுக ஆகிய இரு கட்சிகளையும் பிடிக்காமல் , இவருக்கு ஒட்டு போட்டவர்களே அதிகம்.
இன்றைய செய்தித்தாள்களில் ஜெயாவின் விருப்பத்திற்கு எதிராக , சசிகலா குடும்பத்தினர் 160 பெயர்கள் அடங்கிய அ திமுக வேட்பாளர் பெயர்பட்டியலை வெளியிட்டு விட்டதாகவும் , இதில் ஜெயாவுக்கு உடன்பாடு இல்லை என்றும் செய்தி வந்துள்ளது.
இது உண்மையாயின், ஜெயா உடனடியாக இதில் தலையிட்டு பொது மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் தகுந்த விளக்கம் தர வேண்டும். இல்லையென்றால் , தமிழகத்தில் தேவையற்ற அவப்பெயரை சம்பாதித்துக்கொள்ள நேரிடும். அவருடைய கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் நல்ல ஆதரவு பெருகிவரும் வேளையில் அவர் புத்திசாலித்தனமாக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
மாறன் சகோதரர்கள் தங்களது பத்திரிகை, மற்றும் தொலைகாட்சி பலத்தை வைத்து , திமுகவுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தையும் , பரபரப்பு செய்திகளையும் பரப்புவார்கள். அ திமுக அணியை தோற்கடிக்க அவர்கள் எல்லா வித்தைகளையும் செய்வார்கள். கூட்டணியை ஜெயா ஒழுங்காக இறுதி செய்ய வில்லை என்றால் , அவருக்கு இது எதிர்காலத்திலும் சிரமத்தை தரும்.
அட போங்க சார்… !!! ஏன்னா தான் கூப்பாடு போட்டாலும் ஒன்னு ஐயா, இல்ல அம்மா இவங்க காலுல விழுவதான் லெட்டர் பாடு கட்சிகள் கூட தயார இருக்கு. எங்க ஆபீசுல வேல பாக்குற கடை நிலை ஊழியர்கள் சிலர் தி.மு.க வுக்கு ஆதரவாளர்கள். ஆனால் திருடர்கள்,பகற் கொள்ளையர்கள் என்று தெரிந்தும் இவர்களை மனதாரவும், 2 or 3 மூன்று தலைமுறைகளாக இந்த திருடர் கூட்டத்தை ஆதரிப்பதால் தாங்களும் கட்சி பதவி அல்லது பெருமை ஏதேனும் கிட்டுமோ என்ற எதிர்பார்ப்பால் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்களுக்கு ஸ்பெக்ட்ரம்,தினகரன் அலுவலர்கள் எரிப்பு, போலீஸ் வக்கீல் மோதல்,மணர்கொள்ளை எல்லாவற்றையும் நன்றாக அலசுகிறார்கள். இவ்வளவும் செய்வது காங்கிரசும்,திருடர் முன்னேற்ற கழகமும் தான் என்று நன்றாகவே தெரிகிறது … ஆயினும்…. விவேக் காமெடி போல தமிழ்நாட்டுல உன்ன யாரும் அசச்சுக்க முடியாது … அப்டிங்குறது போல தான் இரண்டு கட்சஈளும் அடிமட்ட தொண்டர்களும், சில கிராமத்து மக்களும் மூடத்தனமாக நம்பி உட்கார்ந்து இருக்கின்றனர். படிச்சவனும் ஒரு சில பேரு இப்படிதான் ஒரு சில ஆதாயத்துக்காக விடாபிடியாக ஒட்டிக்கொண்டு உள்ளனர். இவர்களை நம்பியே பெருந்தலைகள் காலம் ஒட்டுகின்றன. சாதிக் செத்தாலும்,ரமேஷ் செத்தாலும் எங்கோ நடக்குது நமக்கு என்ன? … மேலும் மறதி என்னும் பெரிய வர பிரசாதம் உள்ளதே. பணக்கார மக்கள், பெரிய தொழில் அதிபர்கள் பலர் ஒன்னு கட்சி வித்யாசம் பாக்காம பணத்த கொடுத்துட்டு வீட்டுல ஏசி ரூம்ல ஹோம் theatreil படம் பார்த்து ஜாலியாக பொழுதை கழிப்பார்கள் ஒட்டு போடவேண்டிய நேரத்தில். நடுத்தர நியாயமான ஜனம் மிக குறைவே. இவர்களால் அவ்வளவு பயன் இல்லையே.???
“” இன்றைய செய்தித்தாள்களில் ஜெயாவின் விருப்பத்திற்கு எதிராக , சசிகலா குடும்பத்தினர் 160 பெயர்கள் அடங்கிய அ திமுக வேட்பாளர் பெயர்பட்டியலை வெளியிட்டு விட்டதாகவும் , இதில் ஜெயாவுக்கு உடன்பாடு இல்லை என்றும் செய்தி வந்துள்ளது.””
கட்சியின் முடிவுகள் கட்சியின் தலைமைக்கு தெரியாமல் / தலைமையை மீறும் விதமாக எடுக்கபடமுடியும், அதுவும் வெண்ணை திரண்டு வரும் பொது பானையை உடைக்கும் விதமாக என்றால், இவர்கள் ஆட்சி கூட்டணி இல்லாமல் தனி பெரும் மெஜாரிட்டி உடன் வெற்றி பெற்றால் உண்மையில் யார் ஆட்சி செய்வர் என்பதை யோசனை பண்ணி பாருங்கள்.
ஆளும் கட்சியை எதிர்த்து. தற்போதைய நிலைமையில், வேறு ஒரு கூட்டணி ஆட்சிக்குதான் வோட்டு போட முடியும் அல்லது மூன்றாவது அணிக்கு வோட்டு போடலாம்.
Definitely we need change of governance. But again not definitely AIADMK. We should throw these two parties. They have an understanding amongst themselves. The top leaders of both the parties are in touch with each other and play drama with the lives of the people. Alternative is to select a newer party might be if DMDK stands then vote for them otherwise vote for BJP. But by voting for BJP, DMK again should not come to power. Probabably, BJP could have formed an alliance with other parties other than DMK and AIADMK. The bulldozer work done by Jaya is known now for her alliance partners. The alliance partners could have committed a wrong by not joining their rank and file with BJP and instead of forming another front, they have become slaves of AIADMK.
ஜெயலலிதாவின் கடந்த கால வரலாறு சாவித்திரி கண்ணனுக்குத் தெரியாததில்லை. அவரது கண்ணை எதோ மறைக்கிறது.
https://forums.sulekha.com/forums/coffeehouse/jayalalitha-s-atrocities.htm
தி.முக. அ.தி.மு.க இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
தமிழகத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட மூன்றாவது அணி வந்தால்தான் விடிவுகாலம்.
பிரதாப்
நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியல் வாதிகள் தான் நம் நாட்டுக்கு உடனடி தேவை. மதம், ஜாதி, மொழி , இனம் இவற்றின் அடிப்படையில் மக்களை பிரித்து, அவர்களுக்குள் சண்டை மற்றும் குழப்பத்தை உருவாக்கும் அரசியல் வாதிகள் நமக்கு வேண்டாம்.
நம் நாட்டுக்கு மின்சார உற்பத்தி அதிகரிப்பு, எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு, மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் சீரான சப்ளை , நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம், ( கணிதம், வணிகம்- அதாவது காமர்ஸ், மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில்.)
வேலைநிறுத்தம், ஸ்டிரைக்கு, கதவடைப்பு, போன்ற விஷயங்களை நாம் ஒரு இருபது வருடம் ஒதுக்கிவைத்தால், உலகிலேயே முதல் நாடு மற்றும் வல்லரசு ஆவோம். இது உறுதி.
// ஆளும் கட்சியை எதிர்த்து. தற்போதைய நிலைமையில், வேறு ஒரு கூட்டணி ஆட்சிக்குதான் வோட்டு போட முடியும் அல்லது மூன்றாவது அணிக்கு வோட்டு போடலாம்//
மூன்றாம் அணி என்பது பாஜக தான். சினிமா நடிகர்களும் ஜாதீய கட்சிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் நாண்காம் அணி
நந்தவனத்தில் ஒர் ஆண்டி அவன் நாலாயிரமாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி தன தந்தி தன தந்தி தானா !!!!!!!! என்று அருமையாக கட்டுரையின் ஆரம்பத்திலேயே கார்ட்டூன் தமிழனது இன்றய பரிதாப நிலையை படம்படித்து காட்டுகிறது. இப்படி உடைந்து தொலைந்துவிட்ட தமிழர்களின் அடையாளங்களை மறுபடியும் ஒட்டவைக்க பல நூற்றாண்டுகள் தேவை. அந்த அளவிற்கு தமிழ் நாட்டை திராவிட கட்சிகள் குழப்பியுள்ளது. இளம் தலைமுறையை தேச பக்தி தெய்வ பக்தி இல்லாமலும் தாய் மொழி தாய் மத பற்று இல்லாதவர்களாகவும் அன்னியருக்கு அன்னிய மதத்திற்கும் சேவகம் செய்து அடிமையாய் வாழ்வது எப்படி என்றுதான் பாடம் புகட்டியுள்ளார்கள்.
இந்த நிலையில் யாருக்கு வாக்களிப்பது ஏன் எதற்காக வாக்களிப்பது என்ற பெரும் குழப்பம். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என விவாதிப்பதில் முடிவே கிடையாது. நாம் முடிவு செய்ய வேண்டியது கொள்ளைகாரனா அல்லது கொள்ளைகாரியா (கொள்ளை அடித்தது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் என்பதை நினைவில கொள்ள வேண்டும்) எனவே கொள்ளைகாரனுக்கு ஓட்டு நிச்சயம் கூடாது. விருப்பமுள்ளவர்கள் கொள்காரியின் தோழைமை கட்சிகோ (சிகப்பு சட்டையை தவிர்து) மற்றவர்களுக்கு வாக்களியுங்கள். சுதேச சிந்தனை உள்ளவர்கள் காவி சட்டைக்கு வாக்களியுங்கள்.
any one who wants a corruption -free, develoment oriented,patriotic, really secular government should vote for the BJP
Both the Kazhagams are corrupt, arrogant,inefficient,anti-people,use money power and muscle power against opponents.
The degree may vary. BUt it does not matter.We have to destroy both the asura and the asuri.
44 years is too long a period for tolerating rogues and thugs in the name of democracy.
R.Sridharan
கருணாநிதி (குடும்பம்) மீதுள்ள வெறுப்பினால் மன்னார்குடி குடும்பம் ஆட்சிக்கு வரலாம் என்பது எந்த விதத்தில் சரி என்று புரியவில்லை……
அதிமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்கள் அவ்ளோ சீக்ரம் மறந்து போகாது…..
அழகிரி விஷயத்தை ஊதி பெருசாக்கற கூட்டம் தான் அதிகமா இருக்கு….
யாரு அராஜகம் பண்றான்னு உத்து பார்த்தா தெரியும்….. மதுரையில இட ஆக்கிரமுப்பும் ரவுடித்தனமும் ஆதிமுக ஆட்சியில தான் அதிகம். நடுத்தரமக்கள் நிம்மதியா இருக்கறது திமுக ஆட்சியில தான். ஆனா அது தமிழ்நாட்டுக்கு நல்லதான்னு பார்த்தா, அ(ந்த)திமுக வுக்கு திமுக எவ்ளவோ பராவைல்லைன்னு தோணுது…..
என்னை பொறுத்த வரை திமுக, இன்னொன்னு அ(ந்த)திமுக –
காரமரஜ்ர் சொன்ன மாதிரி ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
சிலர் சொல்ற மாதிரி பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பாஜகவுக்கு வோட்டுபோட்டாலாவது பிரயோஜனம் உண்டு.
@ வேதம்கோபால்,
திரு. சாவித்திரி கண்ணன் ஒவ்வொரு முறையும் அந்தந்த காலத்திற்கு ஏற்றால் போல் நன்கு விற்பனையாகும் புத்தகங்களை வெலிடுகிறார் உஷார்!!!.
ஒரு சில வருடம் முன்பு சுவாமி ஜெயேந்திரர் பற்றி அவதுறாக எழுதி வெலிட்டதை யாரும் மறக்க வேண்டாம்
அய்யோ ! அய்யோ ! எப்படி நான் இந்தியாவை காபாத்துவேன் !
ஏன் இந்தியா பிரச்சனையிலேயே இருக்கு ?
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 110 கோடி
இதுல 9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
இருவருமே வேலை செய்வதில்லை
1 கோடி பேர் ஐ.டி ஆளுங்க–அவங்க என்னிக்கு இந்தியாவுக்கு உழைசாங்க
25 கோடி பேர் பள்ளியில் படிப்பவர்கள்
1 கோடி பேர் 5 வயசுக்கும் கீழானவர்கள்
15 கோடி பேர் வேலை தேடுவோர்
1.2 கோடி பேர் சீக்கு புடிச்சு ஆஸ்பிட்டலில் இருக்கிறார்கள்
ஒரு புள்ளி விபரத்தின் படி 7999998 பேர் ஜெயிலில்
மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போது பார்தாலும் மெயில் அனுப்பறது-படிக்கிறதுல பிஸி
அய்யோ! நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?
சுதேசி மார்ச் 16-31
There are lot of comment about Jayalalitha’s Govt. I do agree with them, but between 2001 — 2006 was good Unlike Karunanidhi’s — There is no alternate to Karuna at this time other than Jayalalitha – Recently I got an eMail through circulation — the main reason seems to me “Alcohol”
Part of the eMail I got earlier:
“GUJARAT” Government is 2nd best in the world….
Announced by international council.
10 years ago they had 50,000 crores loan in World Bank.( One crore is 10,000,000 and Rupee conversion is at approx 70 Rupees to a £1.)
BUT
Today they have deposited 1 Lakh crore in World Bank.
In Gujarat,
“NO WINE SHOP” (No alcohol allowed)
“NO POWER CUT”
“100% LADIES STUDYING”
“WHOLE INDIA EXPORT 15% FROM GUJARAT”
“30% OF INDIAN SHARE MARKET INVESTS BY GUJARAT”
“TATA, HUNDAI, FORD, RELIANCE, HONDA, BMW, NOKIA all in GUJARAT & ETC…
The persons who are discussing here are I hope well educated, well informed and hence we discuss about all parties , the pros and cons of electing a particular party. What is the use ?
We the learned are minority compared to the total electorate.
All the parties concentrate on the illiterates, who are facinated towards the freebies and does not mind who ever comes for power. Hence, the parties are also not bothered about the “educated” and does not need our patronage also. Whether we agree or not this is the truth.
All should have a conviction as the voters of Bihar exhibited some times back. Otherwise no use.
There is no point in discussing about this also.
Learned please excuse
G SRIDHARAN
Sridharan,
First we have to ask the question : How many educated & upper middle class & high class voters actually vote?
They criticise all the parties & talk at length on corruption but are nowhere to be seen on voting day.
Also, we talk of all candidates being dishonest. “Traffic” ramaswamy (I am sure many of you have heard of him) contested the parliamentary elections from south madras in 2009.
For those who do not know about him,
If today, fish carts are no longer on the roads, it is solely due to him. if today, many footpaths have been cleared, it is due to his efforts. He has even been attacked & his eye has been blinded. He has been deserted by his family since they feared for their lives.
He has spent his own money & still continues his efforts, no matter the inconvenience.
When he was campaigning in triplicane, he was attacked by BJP party supporters who were campaigning nearby. They claimed he was disturbing their campaign.
Do U know how many votes he polled? Just 175 votes. His was the least.
We are to blame – we vote for scoundrels & so the end result will only be S******t.
என்ன ஆச்சரியம்…………………….5 ஆண்டுகளுக்குப் பின்னும் அப்படியே பொருந்து கின்றது…………….என்ன ஒரு வித்தியாசம் என்றால்……………..இதில் திமுக வுக்கும் ஆதிமுகவுக்கும் வேறுபாடில்லை என்பதே……………..பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்கின்றார்கள்………………..நடந்தால் நல்லதுதான்…………….பாரத்மாதாகி…………ஜே
அதைவிட ஆச்சர்யம்!அமெரிக்க அதிபர் தேர்தல் ரகசியங்களைஎல்லாம் தமிழ் வாசகனுக்கு தட்டாமல் வழங்கி அறிவு புகட்டும் ”தமிழ் ஹிந்து”தளம் ,தமிழக தேர்தல் உக்கிரத்திலும் ,இந்த பங்குனி வெயில் காச்சலிலும்,மக்களின் மீது கடந்த ஐந்து வருட தலை மறைவு வாழ்க்கைக்கு பின்,ஜெயலலிதாவின் மையல் பேச்சுகளுக்கும்,எந்த விமர்சன கட்டுரையும் வெளியிடாமல் ,அன்று கருணாநதிக்கு காட்டிய கடுமையை மறந்து ,அம்மா அரசுக்கு எந்த மரியாதைக்குறைவும் வராமல் காக்கும் மர்மமென்ன?