புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!

fa1e8bac90

நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்தான் இந்த நாட்டு மக்களுக்குத் தேவையான சட்ட மசோதாக்களை முன்மொழிந்து, விவாதித்து, அவற்றைச் சட்டமாக்குகிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் எல்லாம் மகா புனிதர்களாகவோ, சட்ட வல்லுனர்களாகவோ இருக்க வேண்டுமென்றோ அல்லது அவர்களது பொதுவாழ்க்கையில் எந்தத் தவறும் அல்லது குற்றமும் செய்யாதவர்களாகவோ இருக்க வேண்டுமென்றோ விதிமுறைகள் இல்லை; அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது, இவர்கள் புனிதர்கள் இல்லை, ஆகவே இவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்க முடியாது என்று எவரும் பிரச்சினை செய்வதுமில்லை.

phoolan-deviஒரு காலத்தில் மக்களை அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாக இருந்த பூலான் தேவி, இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களை ஆளும் முறைதான் என்பதால், மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் சட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.

அரசாங்கம் வெளியிடும் விவரங்களிலிருந்து குற்றப் பின்னணியுடைய பலரும் நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அப்படி அவர்கள் தேர்தலுக்குப் போட்டியிடுகின்றபோதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பின்போகூட எவரும் இவர்களது குற்றப் பின்னணியைக் கேள்விக் குறியாக்கி, மக்களுக்கு இவர்கள் எப்படி சட்டங்களை உருவாக்கலாம் என்று கேள்வி கேட்பதில்லை.

ஓர் அரசாங்க அலுவலகத்தில் வேலைக்குப் போவதென்றால்கூட அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு, விசாரித்து, அந்தச் சாதாரண வேலைக்கு அவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் வேலை கொடுக்கிறார்கள். ஒருவர் வேலையில் இருந்து கொண்டே ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபடுவாரானால், அவரை முதலில் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, குற்றப்பத்திரிகை கொடுத்து, அவரிடமிருந்து விளக்கம் பெற்று, அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லையானால் அவருக்குத் தண்டனையோ, அல்லது பதவிநீக்கமோ செய்ய சட்டங்கள் வழிவகுக்கின்றன.

ஆனால் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் இருப்போர், எந்தவிதக் குற்றங்களைச் செய்தாலும் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. இந்த பாரபட்சம் ஏன்? மேலும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவோர் குற்றம்புரிந்து கைது செய்யப்பட்டு விட்டால் நீதிபதியின் முன்பு கொண்டுபோய் நிறுத்தி பதினைந்து நாள்கள் காவலில் வைத்து விசாரித்து, பின் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை அளிக்கும் முறையை, ‘நீதி பரிபாலனம்’ என்று புகழ்கிறோம். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்யும் குற்றங்கள் அல்லது பொதுமக்களுக்குப் இடையூறு செய்யும் விதத்தில் போராட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றைச் செய்யும் போது அவர்களைப் பிடித்துக் கொண்டு போனாலும், வழக்கு எதுவுமின்றி அன்றே விடுதலை செய்யப்பட்டு விடுகிறார்களே, இந்த நாட்டில் ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இருவேறு மாதிரியான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறதா?

ஆண்டியாக இருந்தவர்கள்கூட மக்கள் பிரதிநிதிகளானபின் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் மகா கோடீஸ்வரர்களாக ஆகிவிடுகிறார்களே, இவர்களுக்கு இத்தனை செல்வம் எப்படி வந்தது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க நமது நாட்டுச் சட்டங்கள் இடம் கொடுக்கவில்லையா? அல்லது சட்டத்தை நிலைநிறுத்துவோர் இது குறித்துக் கவலைப் படவில்லையா? தினந்தோறும் நாம் பத்திரிகைகளில் காணும் செய்தி, அரசாங்கப் பதவிகளில் இருப்போர் மக்களுக்கு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகக் கையூட்டு பெறுகிறார்கள் என்றும், அப்படி கையூட்டு கொடுத்துக் காரியங்களைச் செய்து கொள்ள விரும்பாதவர்கள், லஞ்ச ஒழிப்புப் காவல் துறையிடம் முறையிட்டு, அவர்கள் இவர்களுக்கு வலைவிரித்துப் பிடித்து, தண்டனை கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோமல்லவா? ஆனால் இதே சட்ட வழிமுறைகள் மக்கள் பிரதிநிதிகளிடம் பின்பற்றப் படுகிறதா என்று பார்த்தால் இல்லையே!

இந்தச் சூழ்நிலையில், இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க “லோக்பால்” மசோதா கொண்டுவர வேண்டும், அதில் பொதுமக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘அன்னா ஹசாரே’ என்பவர் உண்ணாவிரதம் இருக்க, மக்கள் ஆதரவு ஓஹோவென்று கிடைக்க, இன்று ஊடகங்களில் செய்திகளில் முன்னிலை வகிப்பது இந்தப் பிரச்சினைதான். அதில் என்ன பிரச்சினை? அவைகளைப் பற்றி சிந்திக்குமுன்பாக இந்த விவகாரத்தின் கதாநாயகனான அன்னா ஹசாரே குறித்தும், அவரது நோக்கங்கள் குறித்தும் சற்று ஆழமாகச் சிந்திப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

anna-hasareஅன்னா ஹசாரே ஒரு சமூக சேவகர்; அரசியல்வாதி அல்ல. அவர் காந்தியத் தத்துவங்களில் ஆர்வம் கொண்டவர். பல சமூக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடியவர். எல்லாம் சரி, இவருக்கு இந்த நாட்டில் நிலவும் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் சரி. அப்படியானால், போஃபார்ஸ் ஊழல் இந்த நாட்டையே புரட்டிப் போட்டபோது இவர் என்ன செய்து கொண்டிருந்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடிகள் மோசடி நடந்தது என்ற செய்தி வெளியானபோது இவர் பொங்கி எழாதது ஏன்? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மும்பையில் கார்கில் போர்வீரர்களுக்கு என்று கட்டப்பட்ட பலமாடிக் கட்டட விநியோகத்தில் நடந்த ஊழல் இவைகள் நாற்றமெடுத்த போது இவர் செய்தவை என்ன?

“லோக்பால் சட்டம்” கொண்டுவரக்கூடிய இடத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களும், பிரதம மந்திரியும் இத்தனை நாள் வாய்மூடி மெளனிகளாக இருந்துவிட்டு, இன்று ஊழலுக்கு எதிரான இந்தச் சட்டத்தை இந்த நாடாளுமன்ற கூட்டத்திலேயே கொண்டு வருவோம் என்கிறார்களே, பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த சட்ட வரிவடிவம் எத்தனை கூட்டங்களாக தள்ளிக் கொண்டே போகிறார்கள், சிந்தித்தார்களா? இவைகளெல்லாம் இப்படி இருக்க, ‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை’ என்கிற கதையாக ‘லோக்பால்’ மசோதா இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று உரக்கக் குரல் கொடுக்கிறார்களே, இவர்கள் இத்தனை நாள் செய்தது என்ன?

அன்னா ஹசாரேயுடன் இருக்கும் ஓய்வு பெற்ற கிரன் பேடி போன்றவர்கள் நமக்குச் சற்று நம்பிக்கைத் தருகிறார்கள். ‘லோக்பால்’ மசோதா வரைவு வடிவம் தயாரிக்க அரசாங்கத் தரப்பில் சிலரும், பொதுமக்கள் பிரதிநிதிகள் சிலரும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். உடனே, பொதுமக்கள் தரப்பு உறுப்பினர்கள் குறித்து எத்தனை விமர்சனங்கள்? இவற்றைச் செய்பவர்கள் யார்? மத்தியப் பிரதேச மக்களால் தேர்தலில் தூக்கி வீசப்பட்ட திக்விஜய சிங், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று வாதிட்டு மக்களை முட்டாளாக்கத் துடித்த கபில் சிபல், அடுத்தவன் எல்லோரும் அயோக்கியன் நான் மட்டும் யோக்கியன் என்பது போல எப்போதும் பேசிவரும் மனீஷ் திவாரி இவர்கள் தான். அது சரி, உலகத்தில் வேறு யாருக்கும் இல்லாத அக்கறை, இவர்களுக்கு மட்டும் ஏன் என்கிற சந்தேகம் நமக்கு வருவது நியாயம்தானே?

அரசாங்கத் தரப்பில் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ள நபர்கள் அனைவரும் மகாத்மாக்கள் என்று நம்மையெல்லாம் நம்பச் சொல்லுகிறார்களா இந்த காங்கிரஸ் தலைவர்கள்?

zerotolerence

ஆமாம்! ஊழலை ஒழிக்க நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதனை என்றோ செய்திருக்கலாமே. இன்று தனிமனிதன் ஒருவன் பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டி, போராட்டத்தைப் பெருமளவில் வளர்த்து, இந்த நாட்டு படித்த இளைஞர்களைத் தன் வசம் இழுத்துக் கொண்டுவிட்ட காரணத்தால், தாங்கள் என்னவோ ஊழலுக்கு எதிரானவர்கள் போலவும், உடனடியாக அந்தச் சட்டத்தை இயற்றி இந்த நாட்டில் ஊழலை ஒழித்துக் கட்டிவிடப் போவது போலவும் பாவ்லா செய்வது விந்தையானது.

இந்த காங்கிரஸ் மேதாவிகள், சாந்தி பூஷன் மீதும், கர்நாடக நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மீதும் இல்லாத பொல்லாத சந்தேகங்களை எழுப்பித் தங்களது மேதாவிலாசத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதன் பின்னணியை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். குற்றப் பின்னணிகள் உள்ள பல உறுப்பினர்களால் உருவாக்கப்படும் சட்டங்களை இவர்கள் அறியாதவர்களா? அப்படி அறிந்திருந்தால், சட்டங்கள் இயற்றுவதில் பங்கு வகிக்கும் உறுப்பினர்களுக்குக் குற்றப் பின்னணி உண்டு, ஆகையால் அவர்கள் சட்டம் இயற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என்று இவர்கள் என்றாவது கூறியிருக்கிறார்களா? அல்லது அதுதான் போகட்டும், இவர்களது காங்கிரஸ் கட்சி, தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வின் போதாவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்களா? பின் இப்போது மட்டும், சாந்தி பூஷன் மீதும், சந்தோஷ் ஹெக்டே மீதும் பாய்வதன் நோக்கம் என்ன என்பதை இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

politicians

அது போகட்டும், இவர்களில் எவராவது எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை, எந்தக் குற்றமும் புரிந்ததில்லை என்று மனசாட்சிக்குப் பயந்து உண்மையைச் சொல்லுவார்களா? பைபிளில் ஒரு கதை உண்டு. விபசாரம் செய்த ஒரு பெண்ணை ஊரார் கல்லால் அடித்துக் கொலை செய்ய முயல்வார்கள். ஏசு அவர்களிடம், உங்களில் தவறு செய்யாதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் இவளை முதலில் அடிக்கட்டும் என்றாராம். அடுத்த விநாடி அங்கு அத்தனை பேரும் அம்பேல்; ஈ காக்காய் கூட இல்லை என்று ஒரு கதை. அதுதான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது.

10 Replies to “புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!”

 1. தற்போதைய இந்தியாவின் மத்திய அரசு ஊழலில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. இவர்களாவது லோக்பால் கொண்டு வருவதாவது.
  ஸ்விஸ் போன்ற நாடுகளின் வங்கிகளில் உள்ள ஒருவருக்குமே உபயோகப் படாமல் உள்ள இந்தியாவின் பணத்தை திரும்ப கொண்டு வருவதில் ஒழுங்கான அக்கறையுடன் செயல்படவில்லை.
  நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அந்நிய நாடுகளின் கம்பெனிகளுக்கு வரிகளில் சலுகை.
  இங்கே இருக்கும் விவசாயிக்கோ வெறும் கண்ணீர், மற்றும் பட்டினி.
  இவர்கள் திட்டங்களால் விவசாயத்திற்கு வேலை செய்ய கிராமங்களில் சரியான ஆள்கள் கூட கிடைப்பதில்லை.
  தானியக் கிட்டங்கிகளில் உணவுப் பொருள்களை வீணடித்து விட்டு இதைப் பற்றி நீதி மன்றம் கேள்வி கேட்க கூடாது என்று சொல்கிறார்கள்.
  பெட்ரோல் போன்ற எரிபொருள்களுக்கு மாற்று எரிபொருள்களை கண்டுபித்து உபயோகிக்க தயக்கம்.
  கிராமங்களுக்கு உபயோகப் படுத்தும் படியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து சமையலுக்கு உபயோகிக்கும் வாயு தயாரிக்கும் கலங்கள் உள்ளன, இதைப் போன்று உள்ளவைகளை நாட்டிற்காக அரசாங்கம் உபயோகித்தால் நாடு வளம் பெறும். நன்றி

 2. அண்ணா ஹசாரே எதனால் சோனியாவை எதிர்க்கவில்லை, எதனால் அழகிரியை எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் அவர் எதற்காக முயல்கிறார் என்பது தெரியாத போது எழுபவை.

  இப்போதைய தேவை ஊழலை ஒழிக்க தேவையான ஒரு உறுதியான நடைமுறை சாத்தியமுள்ள வழி.

  அதற்குத்தான் அண்ணா ஹஜாரே முயல்கிறார். இதே தளத்தில் வந்த ஈரோடு சரவணனின் கட்டுரை அண்ணா ஹஜாரேவைப் பாராட்டும் வகையிலும், அவர் கொண்டு வரத் துடிக்கும் ஜன்லோக் பால் அமைப்பின் சாத்தியங்களைப் பற்றியும் சொல்கிறது.

  அதற்கு மாறானதாக இந்தக் கட்டுரை இருக்கிறது. வெவ்வேறு தரப்புக் கருத்துக்களையும் தரும் இந்தத் தளம் செயலாலும் இந்துத்துவமாக இருக்கின்றது என்பதற்கு இந்த மாறுபடும் இரண்டு கட்டுரைகளே சாக்ஷி.

  அண்ணா ஹஜாரேவுக்குப் பின்னால் ஆர் எஸ் எஸ் இருக்கிறது என்று கபில் சிபல் சொன்னார். அதில் பெருமளவும் உண்மை இருப்பதாக நம்பகமான இடங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

  எப்படியோ, நல்லது நடந்தால் சரி.

  33 % இட ஒதுக்கீடு போல இதுவும் ஆகும் வாய்ப்பு இருந்தாலும், ஆசைப்படலாம்தானே.

 3. ஒரு மனிதனின் செயல்கள்தான் அவனது நோக்கத்தைச் சரியாகக் காட்ட முடியும். அன்னா ஹசாரே நேர்மையானவராக, காந்தியக் கொள்கைகளில் பற்றுடையவராக, ஊழல்கள் ஒழிய வேன்டுமென்பதில் அக்கறை கொண்டவராக இருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர் இப்போது காட்டிய வேகத்தையும், ஊக்கத்தையும் காட்டவில்லை என்பதுதான் கேள்வியேயொழிய அவரைப் பாராட்டுவதோ, இகழ்வதோ நோக்கமல்ல. அவருக்கு மகாராஷ்டிரத்தில் சரத் பவார் மீது பல வருத்தங்கள் உண்டு. அவரை நேரடியாக எதிர்க்காமல் இப்படி ஊழலைக் கையில் எடுத்துக் கொண்டு ‘லோக்பால்’ மசோதாவுக்காக முயற்சி எடுக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவரேகூட இந்த நாட்டு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக இத்தனை வேகத்தோடும், முழுமனதோடும், ஈடுபாட்டோடும் வந்து தன்னோடு சேருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒன்று நன்றாகப் புரிகிறது. இளைய தலைமுறை ஊழலை ஜீரணிக்க விரும்பவில்லை. அதை முழு மூச்சோடு எதிர்த்து வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய விரும்புகிறார்கள். ஊழல் பெருச்சாளிகள் மட்டும் நூறு வயது ஆனாலும், புத்தி தடுமாறும் நிலையிலும், தவழ்ந்து வந்தாவது ஊழல் செய்யவும், பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கவும் விரும்புகிறார்கள். இந்த தளத்தின் செயல்பாட்டில் ஊழலை எதிர்க்கும் நோக்கம் உறுதியாகத் தென்படுகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் அன்னா ஹசாரே செய்வதை, செயல்படுவதை, அவரது நோக்கத்தை அப்படியே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. ஊழலில் ‘இந்துத்துவமும்’ ‘மதச்சார்பின்மையும்’ எங்கே வந்தது என்பது புரியவில்லை. தேசபக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும், நாட்டைப் பற்றி சிந்திக்கலாம். இதில் யாருக்கும் எந்த தடுமாற்றமும் இல்லை. களிமிகு கண்பதி கட்டுரையின் நோக்கத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமாய்ப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

 4. இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் சிதம்பரம் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சோனியா ,சிதப்பரம், மொய்லீ, திக் விஜய், அகமது படேல், மனு சிங்கவி, மனிஷ்திவாரி, விரப்பமௌலி. அம்பிகாசோனி ஜயந்தி நடராஜன் மேலும் பல உயர் அதிகாரிகள் (IB, NIA, CBI, Cyber Cell, DRI, IT & a few media magnet) இதில் சோனியா மிகவும் ஆவேசத்துடன் இவ்வாறு கூறியதாக சொல்கிறார்கள். ( ” She is reported to have told PC – Don’t I know the slavish, creeping and crawling beggarly Indians ? If you kick them mercilessly they will prostrate on their knees. If you say Namaste to them they will kick you with redoubled vigor”). இதை சிறிதுகூட சொரணை இல்லாமல் எப்படி சகித்து கேட்டுகொண்டிருந்தார்கள் அந்த எட்டப்பர்கள் என்று ஆச்சிரியமாக இருக்கிறது.தனியார் வலைதளம் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு நமது தேசிய ஒற்றுமை மத நல்லிணக்கணம் தீவிரவாத அணுகுமுறை என்று ஒரு பெரிய பட்டியல் இட்டு அம்மாதிரியான வலைதலங்களை தடை செய்ய போகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் நாட்டின் உயர்பதவியில் இருப்பவர்களை பற்றியும் சோனியா அவர்கள் குடும்பம் பற்றியும் தவறான தகவல்கள் தந்தால் அந்த வலை தளங்களையும் முடக்கவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்கள். இது ஒரு அறிவிக்கபடாத எமர்ஜென்சி போல் நடைபெற போகிறது. இது குறிப்பாக இந்துக்களால் நடத்தபடும் வலைதளங்களை குறிவைத்தே போலி குற்றசாட்டுகள் கூறி அவர்களின் குரலை ஒடுக்கும் சதிதான்

 5. Mr.vedamgopal -how do you get this information as you mentioned its a ரகசிய கூட்டம்
  then who give his information to you,do you have any evidence for this.

  [Edited and published]

 6. //அது போகட்டும், இவர்களில் எவராவது எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை, எந்தக் குற்றமும் புரிந்ததில்லை என்று மனசாட்சிக்குப் பயந்து உண்மையைச் சொல்லுவார்களா? பைபிளில் ஒரு கதை உண்டு. விபசாரம் செய்த ஒரு பெண்ணை ஊரார் கல்லால் அடித்துக் கொலை செய்ய முயல்வார்கள். ஏசு அவர்களிடம், உங்களில் தவறு செய்யாதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் இவளை முதலில் அடிக்கட்டும் என்றாராம். அடுத்த விநாடி அங்கு அத்தனை பேரும் அம்பேல்; ஈ காக்காய் கூட இல்லை என்று ஒரு கதை. அதுதான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது.//

  உதாரணம் சொல்வதற்கு உங்களுக்கு இந்தக் கதைதானா கிடைத்தது? இந்தக் கதை விபச்சாரத்துக்கு அப்பட்டமான ஆதரவு தரவில்லையா! மற்ற குற்றங்களைப் போலத்தான் அதுவும் என்ற நிலைப்பாடு கிருத்துவத்துக்கே முரன்பாடானது அல்லவா! அந்தப் பெண்மணிமேல் கொண்ட பரிவினால் மன்னிக்க வேண்டிய நற்பண்பைப் போதிக்க வேண்டி மற்ற நிலைப்படுத்தப்பட்ட நற்பண்புகளை காற்றில் விட்டு விடலாமா?

 7. வேதம்கோபால் அவர்களின் தகவல் எப்படி வெளிவந்தது, நடந்தது ரகசிய கூட்டம் என்ற கேள்வி சரியில்லை. பொதுக் கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை ரகசியமானது. அதனை தலைவர் ஜோஷி வெளியிடவில்லை. பின்னர் அந்த கமிட்டியில் இருந்த வேறு யார் வெளியிட்டார்கள்? திருச்செந்தூர் கோயில் வெள்ளி வேல் காணவில்லை, எம்.ஜி.ஆர்.ஆட்சியில். அப்போது அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். உண்மையை வெளியிடக்கோரி இப்போதைய முதல்வர் அப்போது நடைப்பயணம் வந்தார். விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் முடிவு வெளியாகுமுன்பாக சட்டசபையில் மு.க.வெளியிட்டார். எப்படி கசிந்தது? இதுவரை எத்தனையோ ரகசிய ஆவணங்கள் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன. விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் எதிர்பார்ப்பது சரியில்லை. அது சரி! வேதம்கோபால் சொன்ன விஷயம் சரியாக இருக்கும் என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள், நீங்கள் என்ன விசாரணை கமிஷனா நடத்துகிறீர்கள்? சம்பந்தப்பட்டவர்கள் தேவையானால் என்ன, எது என்று விசாரணை நடத்திக் கொள்ளட்டும்.

 8. எங்காவது ஒரு இடத்தில்
  யாராவது ஒருத்தர்
  ஆரம்பிக்க வேண்டிய விஷயம்தான் இது.
  அண்ணா ஒரு தீப்பொறி.
  அதனை ஊதி ஊதிப் பெரிதாக்க வேண்டும்.
  அதன் அடிப்படை நோக்கத்தை
  கேள்விக்குள்ளாக்குவது தீப்பொறியை அணைப்பதற்கு
  சமம். ஊழல்.லஞ்சம் என்பதில்
  சம்பந்தப் பட்டவர்கள் அரசியல் வாதிகள்
  மட்டும்தானா?
  நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில்
  இதற்கு பொறுப்பானவர்கள் தானே?

 9. April 29th 2011 – Article referred from (Vivekajoti) Title

  UNDECLARED EMERGENCY IN INDIA – SONIA GAGGING OF THE PRESS AND INTERNET IN INDIA By V.Sundaram (Request to read the full article for more information)

  It is reliably understood that Firangi Memsahib Sonia Gandhi dictatorially directed her ever willing supplicant Union Home Minister P.Chidambaram to do all that he can to put down freedom of speech in India. She is reported to have told him: “Don’t I know the slavish, creeping and crawling beggarly Indians? If you kick them mercilessly they will prostrate on their knees! If you say ‘Namaste’ to them they will kick you with redoubled vigour.” The Union Home Minister is reported to have instructed the Union Telecom Ministry to monitor all Internet Articles and emails and to take such steps as necessary to restrict or ban them as the case may be.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *