தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்

தயாநிதி மாறன்

பொது வாழ்க்கையில் தன்னை சுத்த சுய பிரம்மமாக காட்டிக் கொண்டு வந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், சில தினங்களாகப் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

ஊடகங்கள் தயாநிதி மாறன் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் மிகப் பெரிய ஊழல் புரிந்துள்ளார் எனச் செய்தி வெளியிட்டன.  இப்படிச் செய்தி வெளியாகும்போது, மற்ற அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துத் தான் அப்பழுக்கற்றவன் என்று தொடர்ந்து கூறி வருவார்கள்.  ஆனால், தயாநிதி மாறன் செய்தி வெளியிட்ட பத்திரிகையின் மீது வழக்கு தொடுத்து அவர்களின் வாயை அடைத்து விடுவதில் குறியாக செயல்படுபவர். அந்தச் சிந்தனைக்கு ஏற்ப தற்போது வெளி வந்த செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க அவர் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார்.

நான் யாரையும் மிரட்டவில்லை எனத் தொடர் பல்லவி பாடும் தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு இலாகாவைப் பெற்ற கதையும், சன் டிவியின் வளர்ச்சியில் மிரட்டல் படலம் எவ்வாறு நடைபெற்றது என்பதும், சேனலில் அவரது ஆதிக்கம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைப் பற்றியதும் தான் இந்தக் கட்டுரை.

1989ம் ஆண்டு, 13 வருட வனவாசத்திற்குப் பின் அரியணையில் திமுக ஏறிய அந்தக்கால கட்டத்தில்  மாறன் சகோதரர்கள் ‘ பூமாலை’ என்ற வீடியோ இதழை விற்பனைக்குக் கொண்டுவந்தார்கள்.  வீடியோ கடைகள் மற்றும் நூலகங்கள் மூலமாக விற்பனையைத் தொடங்க முயன்ற நேரத்தில் இந்த வீடியோ இதழை வாங்குவோர் எவரும் இல்லை.  

ஆனால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் தனது தாத்தாவின் கையில் இருந்ததால் வாங்க மறுத்த கடைகளும், விற்பனை செய்ய மறுத்த கடைகளும் வில்லங்கத்தில் மாட்ட நேரிடும் என்கிற பயத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது தேவையில்லாமல் ரெய்டு நடத்துவதும், ஆபாச கேசட்டுகள் கடையில் இருந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.  இம்மாதிரி வழக்குகள் பலர் மீது போடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அனைவரும் விற்பனையாகாத பூமாலை வீடியோ கேசட்கள் வாங்க முற்பட்டார்கள்.  இப்படி மாறன் பிரதர்ஸ் துவக்கத்திலேயே அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமாகத்தான் தங்களது சமூகப் பணியைத் துவங்கினார்கள்.

உதவி புரிய வந்தவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம்

1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜீ தொலைக்காட்சி இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாகக் களத்திலிருந்தது.   பத்திரிக்கையாளரான சசிகுமார் மேனன் முரசொலி மாறனுக்குத் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தைச் செய்தார்.  

தினசரி அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை ஜீ தொலைக்காட்சிக்குத் தயாரித்துத் தருவதற்கு மாறன் சகோதரர்களை அணுகினார்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சசிகுமார் மேனனுக்கு தெரியாமல், அவரை முந்திக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசி வாய்ப்புகளை மாறன் சகோதரர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.  

1967 முதல் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும், வி.பி.சிங் ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவும் இருந்தவர் முரசொலி மாறன்.  தோழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித் தந்து அவர்களின் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.  

ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றைப் பரிசாக மேக்கனம் டாட்டியா என்ற தொழில் அதிபருக்கு உலகின் பெரும் செல்வந்தரான புருனே சுல்தான் கொடுத்தார்.  அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாத டாட்டியா முரசொலி மாறனுக்குக் கொடுத்தார். இவ்வாறு கிடைத்த சேட்டிலைட் ஒளிபரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் தொலைக் காட்சியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் தான் தவறு செய்யவில்லை எனச் சில சான்றுகளைக் காட்டி வாதாடுவதில் தயாநிதி மாறன் கில்லாடிதான்.  நியாயமாக எழும் சந்தேகங்களுக்குக் கூட இது வரை தயாநிதி மாறனோ அல்லது திமுகவின் தலைவர் கலைஞரோ  முறையான விளக்கங்கள் கொடுத்ததில்லை.  

மிரட்டலே செயல்முறையாகி….

 maran-kalaignar1996ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது.  அந்தக் காலக் கட்டத்தில் தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த நடராஜன் கருணாநிதிக்கு மிகவும் வேண்டியவர்.  ஆகவே, அரசுத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கி, மாறன் மகன்களுக்கு மதியூகியாக நடராஜன் செயல்பட்டார்.

2000த்திலும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது சுமங்கலி கேபிள் விஷன் என்ற நெட்வொர்க் தயாநிதி மாறனால் தொடங்கப்பட்டது.  அதுவரை சென்னையில் கேபிள் நெட்வொர்க் தொழில் நடத்தி வந்த ஹாத்வே என்ற வட இந்திய நிறுவனத்தைத் தனது அரசியல் அதிகார பலத்தால் ஓட வழி வகுத்தார்கள்.  சென்னை மாநகர மேயர் திருவாளர் ஸ்டாலின் மூலமாகக் கேபிள் ஆபரேட்டர்களுக்குப் பல வழிகளில் மாநகராட்சி தொல்லைகளைக் கொடுத்தே இந்தச் சாதனையைச் செய்தனர். அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல இடங்களில் கேபிள் ஒயர்கள் அறுத்தெரியப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

மாநகராட்சி நிர்வாகமோ கண்டும் காணாமல் வாளாவிருந்தது.  ஆகவே அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமாக சுமங்கலி கேபிள்  விஷன் வளர்ந்தது.  தமிழகத்தின் பிரதான நகரங்களில் கூட சுமங்கலி கேபிள் விஷனை எதிர்க்க எவரும் துணியவில்லை.  இதனால் தமிழன் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உட்பட பல தமிழ் சேனல்கள் தரக் குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டடு ஓரம் கட்டப்பட்டன.

இந்தியா டுடே குழுமத்திலிருந்து வெளிவரும் ‘ஆஜ்தக்’ சேனலை தமிழ் நாட்டிற்குள் ஒளிபரப்பக் கலாநிதி மாறன், அதாவது தயாநிதி மாறனின் சகோதரர், மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுவதில் குறியாக இருந்தார்.  ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்த சம்பவத்தை வட புலத்தில் தொடர்ச்சியாக ஆஜ்தக் சேனல் ஒளிபரப்பியதின் காரணமாக தமிழகத்தில் ஆஜ்தக் சேனலுக்கு ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கைமாறாக, நிர்வாகத் திறமையில் ஜெயலலிதா கடைசி இடத்தில் இருப்பதாகக் கருத்து கணிப்பு வெளியிட வேண்டும் என ஆஜ்தக் சேனலை நிர்ப்பந்தித்தார்கள்.  

தயாநிதி மாறனுக்கு மிரட்டல் என்பது சர்வசாதாரணமாகும்.

தாத்தா எவ்வழியோ மாறன் தனயரும் அவ்வழியே

தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பெற்றதே ஒரு தனி விதம். 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன், யார் யாருக்கு அமைச்சர் பதவி, எத்தனை அமைச்சர்  பதவிகள் என்பவை போன்ற முடிவுகளைச் செய்ய சோனியாவின் தூதரான ஆந்திராவைச் சார்ந்த ஜெனார்தன் ரெட்டியை கருணாநிதியைச் சந்தித்தார்.  சந்திப்பின் போதே தயாநிதி மாறனுக்கு கேபினட் பதவியும், குறிப்பாகத் தொலை தொடர்பு இலாகாவும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.  இந்த ஒப்பந்தத்திற்குப் பங்கம் வந்துவிடுமோ என அச்சம் ஏற்பட்ட போது, திமுகவின் தலைவர் ஒப்பந்தப்படி இலாகா ஒதுக்கப்பட வேண்டும் இல்லையெனில் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தினார். நிர்பந்தம் காரணமாக தயாநிதி  மாறன் அமைச்சர் பதவியை பெற்றார்.

2004ல் தயாநிதி மாறன் அமைச்சராகப் பதவி ஏற்ற போது இரண்டு பணிகளைச் செய்து கொண்டு இருந்தார்.  ஒரு புறம் தொலைத் தொடர்பு அமைச்சராகவும், மறு புறம் சன் டிவியின் புரமோட்டராகவும் செயல்பட்டார்.  அமைச்சர் பதவி ஏற்ற போது சன் டிவியில் முதன்மை நிர்வாக இயக்குநராகச் செயல்பட்டவர் அவர். ஆகவே சன் டிவியின் புரமோட்டராகவே செயல்பட்டார் என்பதற்குச் சில சம்பவங்களை சுட்டிக் காட்ட வேண்டும்.  

ஜெயா டி.வியினர் 24 மணி நேரச் செய்திச் சேனலைத் துவக்க அனுமதி கேட்டார்கள்.  இரண்டு ஆண்டுகள் வரை அதாவது தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த வரை அனுமதி வழங்க வில்லை. இதற்கு மாறாக கேரளத்திலிருந்து விண்ணப்பித்த சில தினங்களிலே கைரளி தொலைக் காட்சிக்கு ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டது.  ஜெயா டிவியினர் உச்ச நீதிமன்றத்தை அணுகி உரிமம் பெற்ற கதையும் உண்டு.  தயாநிதி மாறனின் மிரட்டலுக்கு டாடா நிறுவனமும் தப்பவில்லை. பிரதமரின் தலையீட்டிற்குப் பின்னர்தான் டாடா நிறுவனத்திற்கு உரிமம் கிடைத்தது.

maran_azhagiri_stalin

ஏர்செல்லும் ஏமாற்றுவோர் சொல்லும்

மாறன் பத்திரிகையாளரிடம் பேசியபோது, ‘ டிஷ் நெட் வயர்லெஸூக்கு (ஏர்செல்) உரிமம் அளிக்கிற விஷயத்தில் என் நினைவுக்கு எட்டிய வரை, நான் 2004 மே மாதம் 27ல் தொலைத் தொடர்பு அமைச்சராவதற்கு முன்பே, அந்த நிறுவனத்தின் நிதித் திறன், சொத்து அளவு, கடன்-பங்கு விகிதம் ஆகியவை குறித்து தொலைத் தொடர்புத் துறைக்குக் கேள்விகள் இருந்தன.  அவர்களது விண்ணப்பம் விசாரணையில்தான் இருந்தது.’ என்றார்.

ஆனால், உண்மையில் 2004ம் வருடம் மார்ச்சு மாதம் 5ந் தேதி ஏர்செல் ஏழு உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தது.  ஏப்ரல் 21ந் தேதி உரிமங்களைப் பெற்றும் விட்டது. இந்த உண்மையை மறைத்து செய்தியாளர்களிடம் தவறான தகவலையே மாறன் தெரிவித்தார்.

தொலைத் தொடர்பு துறையின் வழிக்காட்டிக் குறிப்பின் படி, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதிக்கத் தேவையான பணிகளை முடிக்க வேண்டும் என்கிற நியதிகள் உள்ளன. அதற்கு மாறாக 608 முதல் 965 நாட்கள் வரை காலதாமதம் செய்தார் அமைச்சர் தயாநிதி மாறன்.  இந்தக் காலதாமதத்தை குறிப்பிட்டு மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட பட்டேல் கமிட்டி கால தாமதத்தை நியாயப்படுத்த இயலாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

2004ம் ஆண்டு மார்சு மாதம்  டிஷ்நெட்டிற்கு பிகார், ஹிமாச்சல பிரதேத்திற்கு உரிமம் வழங்கி, 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரத்திற்கு உரிமம் வழங்கியது தொலைத் தொடர்புத் துறை.  இது மாறனின் காலதாமதப்படுத்தும் தந்திரமாகும்.  இந்தத் தவறை தயாநிதி மாறன் பல நிறுவனங்களுக்குச் செய்திருக்கிறார். பல நேரங்களில் தயாநிதி மாறன் வழிகாட்டு குறிப்பிலிருந்து விலகி தனியாக ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உரிமம் வழங்கியுள்ளார் என்றும் நீதிபதி பாட்டீல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியைச் சுட்டிக்காட்டி நான் யாரையும் மிரட்டவில்லை எனக் கூறும் தயாநிதி மாறன், 1.6.2005ந் தேதி தயாநிதி மாறனுக்கு சிவசங்கரன் எழுதிய கடிதத்தில் தங்களது அமைச்சகத்தில் உள்ள சிலர் எனது விண்ணப்பத்தின் பேரில் உரிமம் வழங்க காலதாமதம் செய்கிறார்கள் என குற்றச்சாட்டு அனுப்பியதற்கு இதுவரை பதில் எழுதவில்லை.  சில நியாயமான கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக வேறு தகவல்களைக் கூறுவதிலேயே தயாநிதி மாறன் ஈடுபடுகிறார் என்பது பலரது குற்றச்சாட்டாகும்.

விளக்கம் இல்லாத சம்பவங்கள்

30.12.2005ந் தேதி ஏர்செல் மாக்ஸிஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின் அவசரகதியில் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்கியது ஏன்?

2.1.2006ந் தேதி டிஷ்நெட் நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி விளக்கமாக தெரிவிக்குமாறு எழுதிய கடிதத்திற்கு 17 நாட்களுக்குள் பதில் அனுப்பப் படுகிறது.

12.1.2006ந் தேதி ஏர்செல் நிறுவனம் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு உரிமம் தேவை என விண்ணப்பித்து ஒரு மாதத்திற்குள் உரிமம் வழங்கப்பட்டது.

ஆகவே, மேற்குறிப்பிட்ட சம்பவங்களிலும் தயாநிதி மாறனனின் நேரடி ஈடுபாடு இல்லாமல் எவ்வித நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஆகவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறனின் பங்கு உண்டு. இன்னும் ஆழமாகத் தோண்டினால் பல வில்லங்கங்களும் வெளிச்சத்திற்கு வரும் என்பதை வரும் காலங்களில் காணலாம்.

~~~~~~

7 Replies to “தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்”

 1. Why there was no articles about JJ’s corruption?
  I am doubting that this web site is changing it’s route from creating awareness for Hindus to supporter of JJ.

  Really, this is amazing to see one sided articles. Instead of this, it’s better for this web site to concentrate on Religious activities. Else, I would have a strong feeling that this web site is a community based one.

 2. சில வலை தளங்களில் , மாறன் குடும்பத்தை சேர்ந்த சிலர் சிங்கப்பூர் சென்று , ஸ்டெர்லிங்க் சிவசங்கரனை சந்தித்து அவரிடம் பேரம் பேசுவதாக செய்தி வந்துள்ளது. எனவே, பொறுத்திருந்து பார்க்கலாம்.

  இந்த டூ ஜி ஊழல் , நாடு முழுவதற்குமான பணத்தை திமுக அமைச்சர்கள் சுருட்டி விட்டார்கள் என்பது வெள்ளிடைமலை. திமுக என்ற தேசவிரோத இயக்கம் கலைஞரால் ஒழித்து கட்டப்பட்டு விட்டது.

  இந்திரா காங்கிரஸ் ஒரு சமூக விரோத கட்சி. இரண்டும் நல்ல கூட்டணி தான். பக்கா திருடனும், முக்கா திருடனும் கூட்டணி கண்டால் என்ன ஆகும்.? இலங்கையில் நம் இரத்த உறவுகளை கருவறுத்த கருணா மற்றும் சோனியா தலைமையிலான அரசியல் இயக்கங்கள் இனி எக்காலத்தும் வளராது. இந்த தீய சக்திகளை தவிர்த்து, இனி புதிய அரசியல் இயக்கங்கள் உருவாக நல்ல வாய்ப்பு உள்ளது.

 3. சன் தொலைக் காட்சி மற்றும் தினகரன் பத்திரிக்கைக்கும் என பிஎசெனெல் போன் மூலம் 700 கோடி ரூபாய் அளவிற்கு தகவல் பரிமாற்றம் திருத்தனமாய் செய்யப்பட்டது என்பதை தினமணியில் ஆடிட்டர் குருமூர்த்தி அழகாக காட்டியுள்ளார்.

  சன் பிக்சர்ஸ் மாறன்களின் மஹா வெற்றிகள் லீலைகள் – https://devapriyaji.activeboard.com/t43156954/topic-43156954/
  https://devapriyaji.activeboard.com/t35211542/topic-35211542/
  முன்பே சன் டிவிக்கு துணை நிறுவனங்கள் பலவற்றை தயாநிதி மாறனும் அவர் மனைவியும் உரிமையாளர்களாக ஆண்டுக்கு 50-100 கோடி லாபம் பெருவதாக ஆடிட்டர் குருமூர்த்தி சில ஆண்டுகள் முன்பே எழுதியிருந்தார்.

  சன் டிவியை மற்றும் மாறன் குடும்ப சொத்துக்கள் தேச உடமை ஆக வேண்டும்.

 4. MAran even if he escape from 2g scam, he can not escape from having run a secret telephone exchange in his house with 330 lines without the knowledge of DOT BSNL in which he siphoned BSNL revenue of RS 440 Crores money.How come a seperate line was drawn for 6 kms from the mambalam BSNL exchange to his house in Boat club road. Who maned this secret exchange?
  it is supposed to be under the control of BSNL STAFF. Also how come this exchange was connected to SUN TV NETWORK. so this is the criminal act and maran can not escape from this fraud on government revenue.

 5. இன்று வெளி வந்துள்ள, ஒரு தமிழ் வாரமிருமுறை இதழில் , முன்னாள் தகவல் தொலை தொடர்பு துறையின் மத்திய கேபினெட் அமைச்சர் செய்த தில்லு முல்லுகளை பிரதமர் கண்டுபிடித்து விட்டதாகவும், எனவே சி பி ஐ குற்றச்சாட்டில் மூன்றாவது பாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் போது, அவருக்கும் சீட்டு கிழிக்கப்பட்டு விடும் என்றும் செய்தி வந்துள்ளது.
  திகாரிலா அல்லது புழலிலா என்பதில் ஒரு குழப்பம் உள்ளதாகவும் சிலர் கருதுகிறார்கள். சிவசங்கரன் கொடுத்துள்ள புகார்களின்படி திகாரிலும், சென்னை பி எஸ் என் எல் விவகாரத்திற்காக சென்னை அருகே புழல் சிறைச்சாலைக்கும் போக நேரிடலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்தால் தேவலை. ஆனால் அமையாது . ஏனெனில் இவர்கள் இப்பொழுதே என்ன பேசுகிறார்கள் தெரியுமா?

  தப்பு செய்தவன், ஊழல் செய்தவன், லஞ்சம் வாங்கியவன் எல்லாருமா கம்பி எண்ணுகிறார்கள் ? ஏதோ எங்களுக்கு கிரக நிலைகள் சரியில்லை. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு , அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். கெட்ட சனி எங்களுக்கு விரைவில் விலகிவிடும், மீண்டும் ஆட்சியை பிடித்து இதைவிட அதிக ஊழல் செய்து சாதனை படைப்போம் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

  கடவுள் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பதாக தெரியவில்லை.

  18.6.2011 5.23 P.M.

 6. அந்நாளில் ராஜாஜி செய்த கீழ்த்தரமான திமுக வை ஆதரிக்கும் செயலை, பின்னாளில் வாஜபேயி திமு க வை அமைச்சரவையில் ஆட்சி பீடத்திற்காக
  சேர்துக்கொன்டதன் விளைவைத்தான், வினையை தான், இன்றும் நாடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.

 7. கலாநிதி மாறன் குடும்பத்துடன் தனிவிமானத்தில் பின்லாந்து சென்றுள்ளதாகவும், விமானத்தில் ஏராளமான லக்கேஜ் ஏற்றப்பட்டுள்ளதாகவும் , இந்த வெளிநாட்டு பயணத்தை தடுக்க சி பி ஐ ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

  மத்திய அரசில் பதவியிலுள்ள காங்கிரசு கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், சி பி ஐ சுதந்திரமாக செயல்படவில்லை என்பது , கனிமொழி ஜாமீனில் சி பி ஐ வழக்கறிஞரின் வழுக்கல் வாதமே வெளிப்படுத்திவிட்டது. இத்தாலி பெண்மணி மத்திய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டால் தான் இனி இந்த நாட்டில் நியாயம் நிலைநாட்டப்படும்.

  துலாக்கோல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *