சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3

கடந்த பதிவுகளில், கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றத்தால் எவ்வாறு அங்குள்ள மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பற்றியும் (பாகம் 1), சூடானின் பெட்ரோலைக் கொள்ளை அடிக்க Bush-ன் தலைமையிலான அரசின் மூன்று அடுக்குத் திட்டத்தைக் குறித்தும் (பாகம் 2) பார்த்தோம். இனி அமெரிக்காவின் இரண்டாம் திட்டம், எண்ணை வளங்கள் உள்ள பகுதிகளை எவ்வாறு மத மாற்றம் செய்து கிறித்துவ மிஷினரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது என்பதைப் பற்றியும், சீனாவின் ஆக்கிரமிப்பைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

breaking-sudan

1980க்கு பிறகு சூடான் அரசு அமெரிக்காவின் சதியால் ஜிஹாதிகளின் கையில் சென்றடைந்தது. ஜிஹாதிகள் தலைமையிலான கூட்டணி,  ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அரேபியாவின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நாடு முழுவதும் அமுல் படுத்தியது. இதற்கு ஆளும் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்குப் பகுதியில் இருந்த தன்னாட்சி சுதந்திரம் முழுமையாக நீக்கப்பட்டு,  சூடானின் பாரம்பரிய வழிபாட்டு முறை மறுக்கப்பட்டு, அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. ஆடைகளும் சூடானின் பாரம்பரிய முறைப்படி இல்லாமல் அரேபிய முறைப்படியே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இதன் காரணமாக சூடானின் ஜிஹாதி அரசிற்கு எதிராக அன்யா-ந்யா(Anya-Nya) II என்ற பழங்குடியினரின் படை மீண்டும் சூடான் அரசை எதிர்த்துப் போராடத் துவங்கியது. ஆனால் இந்த முறை இவர்களால் முழுபலத்துடன் மோத முடியவில்லை. காரணம் இந்த பழங்குடிப் படையில் இருந்த மிகப் பெரிய இரண்டு இனக் குழுக்களான நுயெர்[Nuer] மற்றும் டிங்கா[Dinka] இன மக்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையே காரணம். இந்த ஒற்றுமையின்மைக்கு முழுமுதற் காரணம் கிறித்துவ மத மாற்றம்.

sudan-ethnic1நிஹோலிக் என்ற உலகின் எல்லா உயிரிலும் நிறைந்து இருப்பதாக கருதப்படும் தெய்வத்தை டிங்கா இன மக்கள் வணங்குகின்றனர். நிஹோலிக் தெய்வம் மனிதருக்குள் வந்து அருள் வாக்கு தருவதாக டிங்கா இன மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி கிறித்துவ மிஷினரிகள் போலிச் சாமியார்களை உருவாக்கி எளிதாக மதம் மாற்றியதோடு மட்டும் இல்லாமல், போலி இனவாதக் கோட்பாட்டை உருவாக்கிப் (பார்க்க: பாகம் – 2) பிற இனத்தவர்களுடன் தொடர்பையும் துண்டித்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே மிக வேகமாக மத மாற்றம் நடந்தது. இவ்வாறு மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது. இந்த இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களுக்குப் பல துறைகளில் (திறமை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி) சர்வதேச அங்கீகாரமும் கிறித்துவ மிஷினரிகள் மூலமாகக் கிடைத்தது. விளைவு, பெரும்பான்மையான மக்கள் மதம் மாறிவிட்டனர். டிங்கா இன மக்கள் கிறித்துவ மிஷினரிகளின் முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் ஆப்பிரிக்காவின் மிக சக்திவாய்ந்த போராளிப் பழங்குடியான நுயெர் இன மக்களைக் கிறித்துவ மிஷினரிகளால் எளிதாக மதம் மாற்ற முடியவில்லை. காரணம் இவர்கள் தங்கள் மாடு மேய்க்கும் தொழிலையும் முன்னோர்களையும் தெய்வமாக நினைப்பவர்கள். அரேபிய முஸ்லீம்கள் மற்றும் இங்கிலாந்துக் கிறித்துவர்கள் என்று எத்தனையோ படையெடுப்பிலும் தங்களின்  உயிரைக் கொடுத்து ஒட்டு மொத்தச் சூடானிய பழங்குடியினத்தைக் காத்த உத்தமர்கள் இந்த நுயெர் பழங்குடியினர். குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டது மிக வேதனையான விஷயம். இதனைக் குறித்து  பிறகு விரிவாகக்  காணலாம்.

மதம் மாறிய டிங்கா பழங்குடியினர் அன்யா-ந்யா படையில் இருந்து வெளியேறத் தொடங்கினர். நுயெர் இன மக்கள் மட்டுமே தவிர அன்ய-ந்யா பழங்குடிப் படையில் லொடுகோ(Lotuko) , மாடி(Madi) , பாரி(Bari) , அசோலி(Acholi), ஸண்டி(Zande) போன்ற பிற இனக்குழுக்களும் இருந்தனர். ஆனால் இவர்களும் நீண்ட நாள் அன்யா-ந்யா படையில் இருக்கவில்லை. இதற்குக் காரணம், தெற்குச் சூடானின் கல்வி, தொழில் துறை, விவசாயம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவை கிறித்துவர்களாக மதம் மாறியவர்கள் கையில் அதாவது அமேரிக்க சர்ச்சுகளின் கையில் சென்று இருந்தது. இவை அனைத்திற்கும் H W Bush கொட்டிய கோடிக்கணக்கான பணம் உதவிகரமாக விளங்கியது.

nuer1

1983 ஆம் ஆண்டு அதாவது H W Bush அமெரிக்க துணை ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின், கிறித்துவ மிஷினரிகளின் உதவியுடன் SPLA ( Sudan People Liberation Army) என்ற கிறித்துவத் தீவிரவாதப் படையை டிங்கா பழங்குடியினரை வைத்து உருவாக்கினர். இந்த ஆப்ரகாமியத் தீவிரவாதப் படையை மேற்கத்தியக் கிறித்துவ ஊடகங்கள் விடுதலை போராளிகளாகச் சித்தரித்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. அமெரிக்காவின் நோக்கம் தெற்கு சூடானை பிரிப்பது மட்டுமல்ல, அதைக் கிறித்துவ நாடாக மாற்றி ஒட்டு மொத்தப் பெட்ரோலையும் கொள்ளை அடிப்பதேயாகும்.spla-symbol

ஆனால் அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு மிகப் பெரியப்  பின்னடைவாக இருந்தது அன்யா-ந்யா படை. அன்யா-ந்யா படை தனி நாட்டை விட இழந்த அரசியல் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தையே அதிகமாக வலியுறுத்தியது. ஆனால் அமெரிக்காவோ SPLA உதவியுடன் கார்தூம் (Khartoum) என்றழைக்கப்படும் வர்த்தக மற்றும் இராணுவ முக்கியத்துவம் மிக்க மத்திய சூடான் தலைநகர் வரை கைப்பற்றி, சூடானின்  ஒட்டு மொத்த பெட்ரோலையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று விரும்பியது.

அன்யா-ந்யா படை தொடர்ந்தால் தனது நோக்கம் ஈடேறாது என்பதால், அன்யா-ந்யா படைத் தலைவர்களைக் கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. SPLA தீவிரவாதப் படைக்கு அதிகப்படியான உபயோகப்படுத்தப்பட்ட பழைய இராணுவத் தளவாடங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கியது. கடைசியில் ஆப்ரகாமிய தீவிரவாதப்படை மண்ணின் மைந்தர்களான அன்யா-ந்யா பழங்குடிப் படையைச் சீரழித்து, ஒட்டு மொத்த சூடானின் பிரதி நிதியாக SPLA வை மாற்றியது. அன்யா-ந்யாவின் பல தலைவர்கள் மதம் மாற்றப்பட்டு SPLA வில் இணைக்கப்பட்டனர். ஆயினும் வீரம் மிக்க நுயெர் இனப் பழங்குடிகள் தொடர்ந்து ஆப்ரகாமியப் படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டு இருந்தனர். (சுருக்கமாக சொன்னால் கிட்டத்தட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் கிறித்துவ மிஷினரிகள் எப்படி உள்ளே புகுந்து ஹிந்துத் தமிழ் அமைப்புத் தலைவர்களைக் கொன்றனரோ அது போலவே, SPLA யிலும் செய்தனர்.)

sudan-splaஅமெரிக்கா இரண்டாம் திட்டமான கிறித்துவ மத மாற்றம் மற்றும் தெற்கு சூடானின் பிரதிநிதியாக கிறித்துவர்களை கொண்டுவருவது ஆகிய இலக்குகளை நிறைவேற்றியது.

வடக்கு மற்றும் தெற்குப் பகுதிப் பிரச்னைகளைத் தவிர, வேறு ஒரு பிரச்னையும் இருந்தது. முஸ்லீம் அமைப்புகள் போடும் ஒட்டுக்காகவும், காசுக்காகவும் வாலை ஆட்டும் கம்யூனிஸ்டுகள், எப்பொழுதும் முஸ்லீகளின் ஒற்றுமை குறித்து பெருமையாகச் சொல்வார்கள். ஆனால் இது ஒரு வடிகட்டிய பொய் என்பதும்,  இஸ்லாம் என்பது அரேபியா என்ற ஒரு நாட்டின் ஏகாதிபத்தியத்திய ஆக்ரமிப்பின் ஒரு வடிவம் என்பதும்  சூடானில் நிருபணம் ஆனது. நிமெரியின் ஆட்சி முடிந்து, ஜிஹாதிகள் ஆட்சியைக்  கைப்பற்றிய பின், சூடானின் ஆளும் அரேபிய இனத்தைச் சேர்ந்த (அரேபிய மொழி பேசுவோர்) மக்கள், அரேபிய இனத்தைச் சேராத, முஸ்லீம்களாக மதம் மாறிய சூடானின பாரம்பரிய மக்களைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் வாழும் பகுதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டு அரேபிய இஸ்லாமியர்களால் பல ஆயிரக்கணக்கான கருப்பு நிறப் பழங்குடி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அரேபியப் படை கண்களில் பட்ட ஆப்பிரிக்க கிராமங்களை எல்லாம் நாசம் செய்தது. இதனை பற்றிய முழுவிவரத்தை கீழே உள்ள படத்தில் தெளிவாக அறியலாம்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/5/54/Villages_destroyed_in_the_Darfur_Sudan_2AUG2004.jpg

இறுதியில், அரேபிய இஸ்லாமியர்கள், மதம் மாறிய இஸ்லாமியப் பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவப் பழங்குடியினர் மற்றும் மதம் மாறாத பழங்குடியினர் இடையே கடுமையான மோதல்கள் நடந்து கொண்டு இருந்தன. விளைவு எங்கும் பஞ்சம் தலை விரித்து ஆடியது. உணவுப் பற்றாக்குறைக்  காரணமாக மட்டும் கணக்கிலடங்கா மக்கள் உயிர் இழந்தனர்.

(குறிப்பு: இது போன்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளைக்  கிறித்துவ மிஷினரிகளின் உதவியுடன் மேற்கத்திய நாடுகளின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மரபியல் மாற்று உணவுப்( GM FOOD) பொருட்களைப் பரிசோதிக்கவும்  மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களது பரிசோதனைக் கூடங்களாகவும்  மாற்றி ஏற்கனவே கொடுமைப் படுத்தப்படும் மக்களை மேலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதற்காக பல கோடி டாலர்களை MNC நிறுவனங்கள் தங்களது பல்வேறு உலகளாவிய கிளைகளின் மூலம் நன்கொடை என்ற பெயரில் கிறித்துவ மிஷினரிகளுக்கு வழங்குகின்றன. இவ்வாறு பெறப்பட்ட பணம் தான் மத மாற்ற வியாபாரத்திற்குப் பயன்படுகின்றன.)

அமெரிக்கா சூடானின் ஆட்சியை இஸ்லாமிய மதவாதிகளின் தலைமையிலான கூட்டணியின் கீழ் கொண்டு வந்ததன் பின்பு, ஆளும் சூடான் அரசாங்கத்துடனான தனது அனைத்து இராணுவ  மற்றும் பொருளாதார உறவுகளை, மனித உரிமை மீறல் என்று காரணம் காட்டி நிறுத்திக் கொண்டது. இதனால் ஆளும் சூடான் அரசாங்கம் இராணுவத் தளவாடங்கள் இல்லாமல் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் SPLA படையிடம் தோற்கும் அளவுக்குச் சென்றது.

china

இந்த நிலையில் சீனா ஆளும் அரேபிய சூடான் அரசாங்கத்திற்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்கிறேன் என்று கூறிச் சூடான் உள்ளே நுழைந்தது. சீனாவின் இராணுவத் தளவாட உதவியுடன் ஆளும் இஸ்லாமிய அரசு கிறித்துவத் தீவிரவாதப் படையான SPLA வைத் தாக்கியது. கிறித்துவ மற்றும் இஸ்லாமியப் படையினர் இடையில் நடந்த சண்டையில் பல லட்சக் கணக்கான பூர்குடி வழிபாட்டை கொண்ட சூடான் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். சீனா ஆளும் இஸ்லாமிய அரசின் உதவியுடன் பலவேறு எண்ணைக் கிணறுகளை அமைத்து, சூடானின் எண்ணை வளத்தை உபயோகிக்க ஆரம்பித்தது. வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருந்த சீனாவின் பெட்ரோலியத் தேவையை சூடான் பூர்த்தி செய்தது. சீனாவின் உதவியால், 1999 ல் வெறும் 60000 பீப்பாய் பெட்ரோல்களை மட்டுமேdarfur_map12 உற்பத்தி செய்து கொண்டிருந்த  சூடான், 2004 ல் 400000 பீப்பாய் பெட்ரோல் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றது. சீனா தனது தொழிற்சாலைகளைத் தெற்கு மற்றும் வடக்கு சூடானின் எல்லைகளில் அதாவது இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைத்தது. இது தவிர சீனா டார்ஃபுர்(Darfur)  பகுதியில் அரேபியர் அல்லாத பழங்குடி இனத்தவர்க்கு இராணுவ உதவிகளை வழங்கி அவர்கள் வாழும் பகுதிகளில் எண்ணை நிறுவனங்களை அமைத்தது.

கிறித்துவ நாடான  அமெரிக்கா தனது பினாமி நாடுகளின் உதவியுடன் கிறுத்துவர்களாக மத மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் எண்ணை நிறுவனங்களை அமைத்தது. இருப்பினும் அமெரிக்கத்  தூண்டுதலின் பேரில் SPLA படை சீனாவின் எண்ணைக் கிணறுகளைத்  தாக்கிக்  கொண்டே இருந்தது. இந்தத் தாக்குதல்களில்  அங்கு வாழும் மதம் மாறாத பழங்குடி மக்கள் பல ஆயிரக்கணக்கான பேர் பலியாகினர்.

சீனாவும் தனது தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக அன்யா-ந்யா படைகளுக்கும் இராணுவ  உதவிகளைச் செய்தது. ஒரு கட்டத்தில் நுயெர், அன்யா-ந்யா மக்கள் சூடான் இராணுவத்துடன் இணைந்து கிறித்துவத்  தீவிரவாதப்  படைகளை எதிர்த்துப்  போராடின. இதன் விளைவால் கிறித்துவத்  தீவிரவாதப்படையான SPLA பின் வாங்க ஆரம்பித்தது. இனியும் சீனாவை சீண்டினால் தெற்கு பகுதியில் உள்ள எண்ணைக்  கிணறுகளுக்கும் பிரச்னை வரும் என்ற காரணத்தால், அமெரிக்கா 2005 ஆம் ஆண்டு  ஆளும் இஸ்லாமிய சூடான் அரசுக்கும் SPLA வுக்கும் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திப்  போர் நிறுத்தம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் பூர்வகுடி நுயெர் இன மற்றும் பிற பழங்குடி இன மக்கள் பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கிறித்துவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து மண்ணின் மைந்தர்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றினர். தெற்கு சூடானின் முழு அதிகாரமும் மதம் மாறிய கிறித்துவ டிங்கா பழங்குடியினர் மற்றும் அவர்களின் மிஷினரிகளின் கையில் வந்தது.

இதனால் நுயெர் இனப்படை மட்டும் தொடர்ந்து தனது உரிமைக்காகப்  போராடி கொண்டு இருந்தது. அமைதி உடன்படிக்கை காரணமாக, சீனாவும் நமக்கு ஏன் வம்பு என்று பழங்குடிப் படையினருக்கு வழங்கிய இராணுவ உதவிகளை நிறுத்தி கொண்டுவிட்டது. ஐக்கிய நாடுகளின் சபையில் தனது உரிமைக்காகப்   போராடினர். இதற்கு பின்பு தான் ஒரு கொடுரமான செயல் நடந்தது. இப்படியே விட்டால் நுயெர் மற்றும் பிற பழங்குடி மக்களால் தனது கிறித்துவ ஆட்சிக்கு பிரச்சனை வரும் என்ற காரணத்தினால், நுயெர் இனத்தை சேர்ந்த பழங்குடியினரை அழிக்க முடிவு செய்தனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு என்ன கொடூரம் எற்பட்டதோ அதை விடப்  பல மடங்கு கொடுமை நுயெர் இனப்  பழங்குடிகளுக்கு கிறித்துவத்  தீவிரவாதிகளால் ஏற்பட்டது. ஒரு இனமே ஆப்ரகாமியக்  கோரப் பிடியில் அழிந்தது. குறைந்த பட்சம் இந்தியாவாவது கண்டித்து இருக்க வேண்டும். எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடானியப்(நூபியப்) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக்  கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.

final1இந்த இன அழிப்பைப்  பற்றி எந்த ஒரு மனித உரிமை பேசும் அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும், மேற்கத்திய கிறித்துவ ஊடங்களும் வாயைத் திறக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை படிக்கும் நீங்களே எளிதாக யூகிக்கலாம். அல் ஜசீரா என்ற இஸ்லாமிய தொலைக்காட்சி மட்டும் இதை பற்றிய செய்தியை வழங்கியது.

2005 ஆம் ஆண்டே, அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட உடனேயே, தனி நாடு தொடர்பான தேர்தலை உலக நாடுகள் அதாவது கிறித்துவ நாடுகள் நடத்தவில்லை. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியினர் மதம் மாறாமல் தான் இருந்தனர். அமைதி உடன்படிக்கைக்கு பின்பு ஏற்பட்டக்  கிறித்துவ மிஷினரிகளின் வழிகாட்டுதலின் படி உருவான மதம் மாறிய கிறித்துவ டிங்கா பழங்குடியின SPLA ஆட்சியின் உதவியுடன் அனைத்துப்  பழங்குடி மக்களும் ஒடுக்கப்பட்டுக்  கிறித்துவர்களாக மதம் மாற்றப்பட்டனர். முழுமையாக தனது அதிகாரத்தை கிறித்துவர்கள் கொண்டு வந்த பின்பு, கடந்த 9 JAN 2011 தனி நாட்டுக்கான ஆதரவைத்  தெரிவிக்கும் கண் துடைப்புத்  தேர்தல் ஐநா மேற்பார்வையில் நடந்தது. 98.83% சதவிகித மக்கள் தனி நாடு கேட்டு வாக்களித்தனர். இதன் விளைவாக கடந்த 9 JULY 2011 ஆம் ஆண்டு தெற்கு சூடான் தனி நாடாக உருவானது.

வடக்கே இஸ்லாமிய ஷரியாவின் ஆட்சியும், தெற்கில் கிறித்துவ மிஷினரிகளின் ஆட்சியும் நடைபெற, மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி வழிபாட்டைக்  கொண்ட பழங்குடி மக்கள் அகதிகளாகவும், அவர்கள் வழிபாட்டு முறைகளும் தெய்வமும் மேற்கத்திய கிறித்துவ நாடுகளின் வரலாற்று கல்லூரிகளுக்குத்  தொல் பொருளாகவும் மாறினர்.

~0~0~0~

9 Replies to “சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3”

  1. கோமதி செட்டி அவர்களே,

    சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் தமிழ் இந்துக்களுக்குக் கிடைத்த சொத்து. வாழ்க நீங்களும் உங்களுடைய கொற்றமும்.

    ஆப்பிரிக்காவில் செய்த அதே பொய்யான இனவாதங்களையும், கிறுத்துவம் எனும் நோய் பரப்பலையும்தான் இந்தியாவில் செய்து வருகின்றனர். இவற்றை அனுமதித்தால் என்ன ஆகும் என்பதைத் தமிழர்கள் இனியாவது தெரிந்துகொள்ள வேண்டும்.

    இந்தத் தொடரை நீங்கள் புத்தகமாக வெளியிட வேண்டும் என விண்ணப்பிக்கிறேன்.

    .

  2. மிக அருமையாக , எளிமையாக சுடான் வரலாற்றை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். தமிழ் இந்து தளத்தில் இதைப் படிக்காவிட்டால் எனக்கு இந்த விவரங்கள் நிச்சயமாகத் தெரிந்திருக்காது. கிறிஸ்தவ, இஸ்லாமிய டிராகுலாக்கள் புர்வகுடிமக்களை இறுதியில் அழித்தே விட்டன என்பதை உணரும்போது அந்த மக்களின் மீது அனுதாபமும் நமக்கும் இந்த நிலை எப்போது ஏற்படுமோ என்ற பயமும் உண்டாகிறது. இந்துக்கள் இனிமேலும் சாதியையும், கட்சிகளையும் கட்டிக்கொண்டு மாரடிக்கக்கூடாது. இந்து உணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

  3. திரு .கோமதி செட்டி அவர்களுக்கு என் நன்றியும் பாராட்டுக்களும்…ஆபிரகாமிய டிராகுலாக்கள் நம்மையும் கடித்துக் குதறும் முன் இனியாவது விழித்துக்கொண்டு எஞ்சியுள்ள பாரதத்தையாவது காப்போம்…..

  4. இந்த பதிவை பிரசுரித்த தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவிற்க்கு எனது மனமார்ந்த நன்றி

    இந்த பதிவை எழுதியதற்கு எனக்கு NHM writter மென் பொருள் மிகவும் உறுதுணையாக இருந்தது. இந்த மென் பொருளை இலவசமாக வழங்கிய கிழக்கு பதிப்பகத்திற்கும், இதனை எனக்கு அறிமுகம் செய்த ஹரன் பிரசன்னா அவர்களுக்கும் மிக்க நன்றி.

    https://software.nhm.in/

    என்னுடைய பதிவை படித்து கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து தமிழ் ஹிந்து வாசகர்களுக்கும் மிக்க நன்றி

  5. மேற்கத்திய நடுயகளின்- குறிப்பாக அமெரிக்காவின் கைப்பவையே கிறித்தவம்
    கிறித்தவம் தோன்றிய பொது அவ்வாறு இல்லாமல் இருந்திருக்கலாம்- ஆனால் மெல்ல மெல்ல அது மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப் படுத்தி அவர்களின் செல்வங்களைக் கொள்ளை அடிக்கும் வேலைக்கு ‘ ஒற்றையடிப்பாதை ‘ போடும் வேலைக்கு உபயோகப் படுத்தப்பட்டது.

    பத்தொன்பாதவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் நுழைந்த பாதிரிகள் அவர்களை ஒரு பக்கம் மதம் மாற்றியதோடு மறு பக்கம் ஆப்பிரிக்க மக்களையே வியாபாரப் பொருளாக ஆக்கி அவர்களை அடிமைச் சந்தைக்கு அனுப்பி வைக்கத் துணை போயினர்.

    படிப்படியாக முன்னேறி இன்று வெள்ளைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் சுரண்டல் மற்றும் கொள்ளைக்கு துணை போகும் வேலையை சர்ச் செய்து கொண்டிருக்கிறது
    ( பாபா ராம்தேவ் அவர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலுக்கு அவர் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் மருந்துகளுக்கு எதிராக பேசுவதும் ஒரு காரணம்)
    மேலும் மத மாற்றம் செய்து ஒரு நாட்டில் ஒரு பகுதி மக்களை மாற்றி பின்பு அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதலை உருவாக்கி, பின் குழப்பம், கலகம், உள்நாட்டுப் போர், கடைசியில் அவர்களின் குறிக்கோளான நாட்டை துண்டாடு வது என்று படிப் படியாகத் தங்கள் வேலையைச் செய்வர்

    இந்தியாவில் ஹிந்து தர்மம் மிக வலிமையுடன் விளங்கி மக்களின் வாழ்வோடு ஒன்று கலந்திருப்பதால் இங்கு அவர் க்ளைப் பிரிப்பது கடினம் என்று உணர்ந்து அதனால் மக்களுக்கு ,குறிப்பாக இளைஞர்களுக்கு ஹிந்து தர்மத்தின் மீதும்
    அதற்காகப் பாடுபடும் பெரியோர்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் இவைகளின் மீது விலை போன ஊடகங்கள்,அயோக்கிய அரசியல் வாதிகள் , இவர்களை வைத்து அவப் பெயரை உண்டாக்குகின்றனர்
    இதை ஹிந்துக்கள புரிந்து கொள்ள வேண்டும்
    இரா.ஸ்ரீதரன்

  6. கட்டுரை ஆசிரியருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள், மிக அவசியமான அற்புதமான படைப்பை படித்த மகிழ்ச்சியில் உங்களின் இதை போன்ற ஆய்வுகளை மேலும் இந்த சமுதாயம் பெற இறைவனையும் உங்களையும் வேண்டுகிறேன்.
    உலக சமுதாயம் உங்களுக்கு நன்றிகள் கூற கடமைப்படிருகிறது.

    நன்றிகளுடன்,
    க. வ. கார்த்திகேயன்.

  7. கார்த்திகேயன்,

    தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுடைய வாழ்த்து எனக்கு மிகவும் ஊக்கம் தருகிறது. விரைவில் உங்கள் விருப்ப படியும், நமது பாரத தேசத்திற்கும உதவக்கூடிய வகையில் தொடர்ந்து இறைவன் அருளால் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

  8. Excellent article. Hats off to the author.

    I thought this nexus between left and organized religion exist only in india. seems like it is far more deeper than ordinary persons cud imagine. 🙁

    so on one hand we have these ndtv, cnn-ibn and The Hindu (most notorious) ,which makes us hate our own organisations like sangh parivar and on the other hand we are loosing ppl in love ஜிஹாத் and thru conversions. . seems like the situation is grave.

    we need these kind of articles in mainstream magazines and newspapers for wider reach.. but surely outlook and hindu won’t be publishing it.

    would be very nice if ஹிந்து முன்னணி or ஹிந்து மக்கள் கட்சி cud bring out a daily newspaper to counter these leftist media.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *