சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2

முந்தைய பதிவில் நூபியா என்றழைக்கப்பட்ட தற்கால சூடானை எவ்வாறு கலிஃபேட் எனப்படும் இரத்தக்காட்டேரிகள் அடிமைப்படுத்தி ஆக்கிரமித்துக் கத்தி முனையில் மதமாற்றங்களை நிகழ்த்தின என்பதையும் கிறித்துவம் மெல்ல தலையை நுழைத்ததையும் கண்டோம்.

உங்களை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க ஏசு கிறிஸ்து வந்து விட்டார் என்று ஊர் முழுவதும் கிறித்துவ மிஷனரிகள் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ஆனால் அந்தப் பிரச்சினைகளை உருவாக்குவதே அந்த வெள்ளை நிற ஏகாதிபத்திய ஏசு கிறித்துவ மிஷனரிகள் தான் என்பது தெரியாமல் நம் மக்கள் அவர்களிடம் ஏமாறுவது மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயமாகும்.

ஏகாதிபத்தியக் கிறித்துவ வெள்ளையர் கூட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எப்படியாவது உலகின் பரப்பளவில் 10வது இடத்திலுள்ள , ஒரு நாளைக்கு 4 இலட்சம் பாரல் (Barrel) பெட்ரோல் உற்பத்தி செய்யும் சூடானை இரண்டாக உடைத்து, எண்ணை வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த தெற்குப் பகுதியைப் பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தி,  அவர்களின் வளங்களை உறிஞ்சுவது. இதை எப்படிச் செய்தார்கள் என்பதை இப்பதிவில் காணலாம்.

(குறிப்பு : சூடானின் 80% பெட்ரோல் உற்பத்தி தெற்கு சூடானில் உள்ளது )

broken-sudan

சூடானின் பிரிவு

ஒரு பைத்தியத்தை மீண்டும் பைத்தியம் ஆக்க முடியுமா? அது போல எப்படியும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த (ஏற்கனவே மதம் மாறிய) அரேபிய இரத்தக்காட்டேரிகளை மீண்டும் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதனால் தெற்குப் பகுதி மக்களை மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு, 1924-ம் ஆண்டில் சூடானில் ஒரு விஷ விதை விதைக்கப்பட்டது. வடக்கில் இருப்பவர்கள் 10 டிகிரி பூமத்திய ரேகைக்குக் கீழேயும், தெற்கில் இருப்பவர்கள் 8 டிகிரி பூமத்திய ரேகைக்கு மேலேயும் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் சூடான் இரண்டாகப் பிரியக் காரணமாக அமைந்தது. (1947-ல் இந்தியா , பாகிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் பிரிவுக்கு, 1905-லேயே நிர்வாக ரீதியாக ஹிந்து மற்றும் முஸ்லீம்களை மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு வங்கம் என்று பிரித்தது காரணமாக அமைந்தது போல.)

ஒரு நாட்டை அடிமைப்படுத்த அல்லது மதம் மாற்றம் செய்வதற்கு வேண்டிய மிக முக்கியமான விஷயம், அந்த நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவது தான். இதற்கு என்றே எல்லா இடங்களிலும் தரகர்களை வைத்துள்ளனர். இந்தியர்களை ஏமாற்ற எப்படி காங்கிரஸ் என்ற சிந்தனையால் மேற்கத்தியக் குடிமக்களுக்கு அடிமையானவர்களை வைத்து ஒரு போலி அதிகாரப் பகிர்வைக் கிறித்துவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியர்களுக்கு வழங்கி ஏமாற்றினார்களோ, அது போலவே சூடானை ஏமாற்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். ஆனால் அது எடுபடவில்லை.

1956-ம் ஆண்டு சுதந்திர சூடான், புவியியல் மற்றும் பண்பாட்டிற்கு ஒவ்வாத எல்லைகளுடன் உதயமானது.27

இஸ்மாயில் அல்-அசாரி (Ismail Al-Azhari) என்பவனின் தலைமையில் சூடானின் முதல் அரசாங்கம் அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் கூட தெற்குப் பகுதிப் பாரம்பரிய வழிபாட்டு முறையினைக் கடைப்பிடித்து வந்த மக்கள், வடக்குப் பகுதியினரால் நடத்தப்பட்ட அரேபிய இஸ்லாமிய மதத் திணிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டையில் மிஷ-நரிகள் குளிர் காய்ந்தன. இதன் மூலம் அவர்களால் மத மாற்றத்தை யாருடைய எதிர்ப்பும் இன்றிச் செய்ய முடிந்தது.

வரலாற்றுத் திரிப்புக்களும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும்

மத  மாற்றத்திற்கு இவர்கள் தெற்குப் பகுதியில் பணம் மற்றும் அரசியலை மட்டும் பயன் படுத்தாமல் வரலாற்றுத் திரிப்புக்களையும் செவ்வனே செய்து வந்தார்கள். கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நொபாடிய மற்றும் மக்கூரிய இனத்தைச் சேர்ந்த பாரம்பரிய வழிபாட்டைப் பின்பற்றிய மன்னர் வம்சங்களை கி.பி. 18-ம் நூற்றாண்டில் மதம் மாற்றினர் (திருவள்ளுவர் கதை போல). இத்திரிப்புக்களுக்கு ஒத்து ஊதுவது போல பல போலி வரலாற்று ஆசிரியர்களை வைத்து புத்தகங்கள் பலவற்றை எழுதுவித்து , கிறித்துவம் தான் சூடானின் பாரம்பரியப் பண்பாடு போலவும், இஸ்லாமியர்கள் அதை அழித்து விட்டது போலவும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டனர்.

முதன் முதலில் இந்தப் போலிக் கட்டுரையைப் படிக்கும் பொழுது நானும் ஆச்சரியம் அடைந்தேன். பிறகுதான் தெரிந்தது, அந்தக் கட்டுரை ஒரு கிறித்துவ மிஷனரி எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது என்று. இதை விட மிக முக்கியமான ஒரு விஷயம் உண்டு. சூடானின் பழங்குடியின மக்கள் அனைவரும் மொழி மற்றும் பழக்க வழக்கங்களால் வேறுபட்டவர்களே அன்றி, மரபியல் ரீதியாக அனைவரும் ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்களே. ஆனால் மிஷ-நரிகள் வழக்கம் போல இவர்களிடம் மொழி ரீதியான இனவாதத்தைப் பரப்பத் தொடங்கின. இதற்கு முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்த இனம் நிலோடிக்(Nilotic).

36நிலோடிக் இனக்குழுக்கள் ஒட்டு மொத்த சூடானிய(நூபிய) மக்கள் தொகையில் ஐந்தில் மூன்று பங்கு இருக்கின்றனர். நிலோடிக் இன மக்களுக்கும் பிற பழங்குடிக் குழுக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் , காலம் காலமாக பிற பழங்குடியினர் (டின்கா[Dinka]  மற்றும் நியூர்[Nuer]) நிலோடிக் இன மக்களை அழிக்க முயன்று வருவதாகவும் கூறி, நிலோடிக் இன மக்களை பிற இனத்தவர்களுக்கு எதிரிகளாக மாற்றினர். கிறித்துவ ஏகாதிபத்திய வெள்ளை  நிற வெறியர்களின் இந்தப் பொய் மூட்டை சமீபத்தில் பொய் என்று நிரூபணம் ஆனது.

கிட்டத்தட்ட நமது நாட்டில் என்ன மாதிரியான புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, சாதிச் சண்டைகளை ஏற்படுத்தி, மதம் மாற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, அதையேதான் சூடானிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நடக்கும் வரலாற்றுத் திரிப்புக்களுக்கும், மத மாற்றத்திற்கும் ஆளும் இஸ்லாமிய சூடான் அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கான முக்கியக் காரணம் வடக்கில் இருந்த அனைத்துப் பழங்குடியினரும் முழுமையாக மதம் மாற்றப்பட்டிருந்தனர். ஆபிரகாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் எந்தக் காலத்திலும் ஒற்றுமையாகவோ ஒழுக்கமாகவோ இருக்க மாட்டார்கள். இதற்குச் சூடானும் விதிவிலக்கு அல்ல. சுதந்திரம் பெற்ற ஆண்டே அதாவது 1958-ம் ஆண்டு , இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இப்படி மக்களாட்சியும், இராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்து கொண்டே இருந்தது. இதனிடையில் தெற்குப் பகுதிப் பழங்குடியினர் வடக்குப் பகுதி ஜிஹாதிகளிடம் இருந்து பொருளாதார மற்றும் மதத் திணிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுயாட்சி வேண்டும் என்று போராடினார்கள்.

ஹசன் அலி துபாரி என்பவனால் 1963-ம் ஆண்டுக்குப் பிறகு ஜிஹாதித் தீவிரவாதம் சூடானில் தலைவிரித்து ஆடியது.  ஷரியா எனப்படும் காட்டுமிராண்டிச் சட்ட திட்டத்தை தெற்குச் சூடான் பகுதியிலும் அமுல் படுத்தி, அரேபிய அடிமைகளாக தெற்குப் பகுதி மக்களை மாற்ற எல்லா முயற்சிகளையும் செய்து வந்தான். இவனது காட்டுமிராண்டிச் செயல்கள் 1966-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை நீடித்தது.

communist-party-of-sudan

சூடானில் கம்யூனிசம்

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழ வாய்ப்பு உண்டு. வடக்கில் ஆளும் அரசாங்கமும், தெற்கில் கிறித்துவ மிஷனரிகளும் இவ்வளவு அநியாயங்களைச் செய்து வருகையில், எதிர்க் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன என்று? சூடானின் எதிர்க் கட்சி எது தெரியுமா? யாரையும் நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்ற கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் தான் அப்பொழுது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது.

உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம்; என்னடா ஜிஹாதிப் பகுதியில் கம்யூனிசமா என்று. இந்தக் கம்யூனிஸ்டு பார்ட்டியின் பெயர் “சூடானிஸ்டு கம்யூனிஸ்டு பார்ட்டி(Communist Party of Sudan)”. இவர்கள் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாய் கிழியக் குரல் கொடுப்பார்களே, இவர்கள் ஏன் ஒடுக்கப்படும் தெற்குப் பகுதி மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி தோன்றுகிறதல்லவா?  ஒரு விஷயத்தை நாம் அனைவரும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு புத்தகத்தின் அட்டையையும், பெந்தெகொஸ்தே புத்தகத்தின் அட்டையையும் கிழித்து விட்டால் இரண்டும் ஒன்று தான்.  இவர்களுக்கு அதிகாரமே குறி. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கிறித்துவம் எங்கெல்லாம் புக முடியாதோ அங்கெல்லாம் மிஷ-நரிகள் ஆட்கொல்லிக் கிருமியான கம்யூனிஸத்தை நுழைத்து அந்நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்.  கலாச்சார அழிப்பு நடந்தபின் மத மாற்றம் வெகு சுலபம் அல்லவா? சுருங்கச் சொன்னால் 90 சதவிகித நாட்டில் கம்யூனிஸ்டுகள் கிறித்துவ மிஷ-நரிகளுக்கு முகமூடியாகத்தான் பணியாற்றுகின்றனர்.

beware-of-communismகாஷ்மீரில் ஹிந்துக்கள் ஜிஹாதிகளால் படுகொலை செய்யப்படும்பொழுது எப்படி  இந்தியக் கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லையோ, அது போலவே , தெற்கு சூடான் பகுதி மக்களை இந்த ஜிஹாதிப் படைகள் சூறையாடிக் கொண்டிருக்கும்போது சூடானியக் கம்யூனிஸ்டுகள் பிணத்தைப் போல அமைதியாக இருந்தனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் தெற்குப் பகுதிப் பழங்குடியினருக்காகப் போராடினால், வடக்கில் ஓட்டு கிடைக்காதல்லவா? ஆதலால் சூடானின் எதிர்க் கட்சிக் கம்யூனிஸ்டுகளால் எந்தப் பயனும் தெற்குப் பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை.

யாரையும் நம்பிப் பயன் இல்லை என்பதனை உணர்ந்த தென்பகுதிப் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த தெற்கு இராணுவப் பிரிவு மற்றும் பழங்குடி இனப் போராளிகள் நேரடியாகக் களம்

இறங்கினர்.ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்த்து சீறி எழுந்தது  அன்யா-ந்யா(Anya-Nya) (SLA – South Sudan Liberation Army) என்ற பாரம்பரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியினரின் படை. இவர்களின் கொரில்லாத் தாகுதல்களைத் தாங்க முடியாமல் சூடானின் ஆளும் ஜிஹாதி அரசாங்கம் திணறிக் கொண்டு இருந்தது.

61

இந்த நிலையற்ற அரசியல் நிலையில் மே மாதம் 1969-ம் ஆண்டு காஃபர் முஹம்மது அன்-நிமெரி(Gaafar Muhammad an-Nimeiry) என்ற சூடானிய இராணுவ அதிகாரி, ஆட்சியைக் கைப்பற்றி  சூடானின் சர்வாதிகாரியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரஃபுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவருடைய ஒரு சில மாத ஆட்சியில் சூடான் சற்று நிம்மதியாக இருந்தது.

இவருடைய பொருளாதாரச் சீர்திருத்தம் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இவர் பல ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக உடன்பாடுGaafar Nimeiry ஏற்படுத்திக் கொண்டார். இந்தத் திடீர் பொருளாதார மாற்ற நிகழ்வை சற்றும் எதிர்பாராத இங்கிலாந்து இவரை ஆட்சியில் இருந்து நீக்க கம்யூனிஸ்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள், கம்யூனிஸ்டுத் தலைவர் சாதிக் அல்-மஹ்டியின் உதவியுடன் இவரைக் கொல்ல முடிவு செய்தன. ஆனால் இவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.  சர்வாதிகாரியான காஃபர் நிமெரி, இந்த தேசத் துரோகிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக முடிவு கட்ட நினைத்தார். 1970-ம் ஆண்டு நிமெரியின் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் மேற்கத்தியக் கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும், அரேபியக் கைக்கூலிகளான் ஜிஹாதிகளும் கொல்லப்பட்டனர்.

காஃபர் நிமெரியின் ஆட்சியில் கூடத் தெற்கில் பழங்குடியினர் மீதான ஜிஹாதித் தாக்குதல்கள் மற்றும் மதத் திணிப்புக்கள் நிற்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் கிறித்துவ மிஷனரிகளின் உள்ளடி வேலைகள். கிறித்துவ மிஷனரிகள் ஜிஹாதி மற்றும் பழங்குடியினர் என்று இரு பகுதிகளிலும் ஊடுருவி இருந்ததால் தெற்கில் சண்டை நிற்கவில்லை. பல இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.  தெற்குப் பகுதியின் பாரம்பரிய விவசாயம் முற்றிலுமாக நிலை குலைந்தது. வறுமையின் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான பழங்குடியினர் உணவு இன்றி உயிர் இழந்தனர். வேறு வழியின்றிப் பல ஆயிரக்கணக்கணக்கான மக்கள் மிஷனரிகளின் வலையில் அகப்பட்டு கிறித்துவர்களாக மதம் மாறினர். இந்த நிகழ்விற்காகத் தான் மிஷனரிகள் ஜிஹாதி மற்றும் பழங்குடியினர் போராட்டத்தை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர்.

1970-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் காஃபர் நிமெரி மிகப்பெரிய வெற்றி பெற்றார். தெற்கில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்ட, பழங்குடியின மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். South Sudan Liberation Army என்றழைக்கப்பட்ட அன்யா-ந்யா பழங்குடியினர் கூட்டமைப்புக்கும் காஃபர் தலைமையிலான சூடான் அரசுக்கும்  அடிஸ்-அபாபா(Addis-Ababa) ஒப்பந்தம் ஏற்பட்டுச் சூடானுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. ஒரு வழியாக உள் நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தது.

8-92

1978ம் ஆண்டு மிகப்பெரிய எண்ணை வயல் மத்திய சூடானில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு சோதனையில், பற்பல எண்ணை வயல்கள் மத்திய மற்றும் தென் சூடான் பகுதி முழுவதும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மேற்கத்தியக் கிறித்துவ நாடுகளின் பார்வை சூடானின் பக்கம் திரும்பியது.

காஃபர் நிமெரியின் ஸ்திரமான ஆட்சியால் மேற்கத்திய நாடுகளால் சூடானின் எண்ணை வளங்களைக் கொள்ளை அடிக்க முடியவில்லை. ஆனால் நிலமை இதே போன்று நீடிக்கவில்லை. 1981-ம் ஆண்டு சூடானுக்குச் சனி பிடித்தது. 1982-ம் ஆண்டு பெட்ரோலிய வியாபாரியாகவும் முன்னாள் உளவுப்பிரிவுத் தலைவருமாகவும் இருந்த George H W Bush அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்.

புஷ்ஷின் விஷப்பார்வை சூடானின் எண்ணை வயல்கள் மீது படிந்தன. அமெரிக்கா சூடானின் எண்ணை வயல்களைக் கொள்ளை அடிக்க கிறித்துவ மிஷனரிகளுடன் இணைந்து ஒரு மூன்று கட்டச் செயல் திட்டத்தை உருவாக்கியது.

 1. நிமெரியை ஆட்சியில் இருந்து நீக்கி, சூடானின் ஆட்சியை ஜிஹாதிக் கொள்ளையர்கள் கையில் கொடுப்பது, பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது.
 2. தெற்குப் பகுதியில் கலவரத்தை உருவாக்கி மிகப்பெரிய அளவில் எண்ணை வளங்கள் உள்ள பகுதிகளின் மக்களை மதமாற்றம் செய்வித்து, அப்பகுதிகளைக் கிறித்துவ மிஷனரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.112
 3. பிறகு கிறித்துவ மிஷனரிகளையும் சூடானின் நிலையற்ற ஆட்சி நிலமையையும் பயன்படுத்தி சூடானை இரண்டாக உடைத்து எண்ணை வளங்களைக் கொள்ளை அடிப்பது.

முதல் கட்டமாக ஒரு புறம் அமெரிக்கப் பணத்தை வாரி இறைத்து ஜிஹாதிகளின் மூலம் பல மத வன்முறைகளை நிகழ்த்தி மறுபுறம் மனித உரிமை மீறல் நடத்துவதாக காஃபர் நிமெரியின் இராணுவ ஆட்சியின் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியது. இதனால் சர்வதேச அளவில் காஃபர் நிமெரியின் ஆட்சியின் நற்பெயர் கெட்டுப் போனது. பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையையும் ஆட்டும் கலையில் அமெரிக்கா கை தேர்ந்து இருந்தது.  அமெரிக்காவின் இந்தச் சதுரங்க விளையாட்டில் காஃபர் நிமெரியின் தலைமையிலான சூடான் அரசாங்கம் ஜிஹாதிகளின் கோரப்பசிக்கு இரையானது.

1983-ம் ஆண்டு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேறு வழியின்றி காஃபர் நிமெரி ஜிஹாதிக் கூட்டமைப்புக்கு அடிபணிந்தார். இந்த ஆபிரகாமிய மத வெறியர்களின் ஆணைக்கு இணங்க 1983-ம் ஆண்டு தெற்கு சூடானுக்குக் கொடுக்கப்பட்ட மத சுதந்திரம் நீக்கப்பட்டு ‘ஷரியா’ என்ற அரேபியக் காட்டுமிராண்டிச் சட்டம் சூடான் முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. 1984-ம் ஆண்டு சர்வதேச வற்புறுத்தலின் காரணமாக அவசரநிலைப் பிரகடனத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதன் விளைவாக சூடானை அரேபியத் தீவிரவாதம் என்ற போர் மேகம் நிரந்தரமாகச் சூழ்ந்தது. ஆனாலும் காஃபர் நிமெரி மனம் தளரவில்லை. மீண்டும் ஜிஹாதிகளைக் களை எடுக்க முடிவு செய்தார். அனைத்துப் ப்ரச்னைகளுக்கும் காரணமாக இருந்த மஹ்மூத் முஹம்மது டாஹா(Mahmoud Mohammed Taha) (as like Osama) என்ற ஜிஹாதித் தீவிரவாதியைத் தூக்கிலிட்டுக் கொன்றார்.

10நிமெரியின்  இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  மேற்கத்தியக் கிறித்துவ நாடுகள் இவரை சூடானில் இருந்து வெளியேற்றத் திட்டம் தீட்டியது. 1985-ம் ஆண்டு பொருளாதார மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்ற சமயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க உளவுப் பிரிவின் ஒத்துழைப்புடன்  அப்டெல் ரஹ்மான் சுவார் அல்-டஹாப்(Abdel Rahman Suwar al-Dahab) என்ற இராணுவ அதிகாரி சூடானின் ஆட்சியைக் கைப்பற்றினார். காஃபர் நிமெரி நாடு திரும்பத் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக இராணுவ ஆட்சி மீண்டும் நீக்கப்பட்டுத் தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில் அமெரிக்கக் கைக்கூலியும் ஜிஹாதித் தீவிரவாதிகளின் ஆதரவும் பெற்ற உம்மா கட்சியின் தலைவரான சாதிக் அல்-மஹ்டி (Sadiq al-Mahdi) (as like Sonia Gandhi) என்பவனின் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட கட்சிகளின் கூட்டனி ஆட்சிக்குக் கீழ் அரசாங்கம் வந்தது. கூட்டணி ஆட்சி என்றாலே கொள்ளை அடிப்பது தானே. விளைவு ஊழல் தலை விரித்தாடியது. நிர்வாகம் முற்றிலுமாகச் சீர் குலைந்தது. 1986-ம் ஆண்டின் முடிவில் சூடானியப் பணத்தின் மதிப்பு 80 சதவிகிதம் விழுந்தது.  George H W Bush-இன் திட்டத்தின் முதல் கட்டமான அரசியல் நிலையற்ற தன்மையையும், பொருளாதாரச் சீர்குலைவையும் ஏற்படுத்துவது நடந்தேறியது.christians-in-action-12

George H W Bush-இன் தலைமையில் CIA மற்றும் கிறித்துவ மிஷனரிக் கூட்டமைப்பு இரண்டாம் கட்டத்தை எவ்வாறு நிறைவேற்றியது என்பது குறித்தும் , அதன் மூன்றாம் கட்டமான சூடானின் எண்ணை வளங்களை அபகரிக்கும் திட்டத்தில் சீனா எவ்வாறு மண்ணைப் போட்டது என்பது குறித்தும் , இந்தியாவில் எதனால் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது குறித்தும் அடுத்த பதிவில் காணலாம்.

குறிப்பு :  9 ஜுலை 2011-ம் தேதி தெற்கு சூடான் தனி நாடாகப் பிரகடனப்படுத்தப் பட்டது.

14 Replies to “சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2”

 1. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு புத்தகத்தின் அட்டையையும், பெந்தெகொஸ்தே புத்தகத்தின் அட்டையையும் கிழித்து விட்டால் இரண்டும் ஒன்று தான். இவர்களுக்கு அதிகாரமே குறி. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

  மிகவும் சரியான அற்புதமான கருத்து. இவர்களை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது தான் நாட்டிற்கு பாதுகாப்பு. இவர்களுடன் இஸ்லாம். இந்த மூன்று தீய சக்திகளும் இல்லாத இடத்தில் அமைதி , ஆனந்தம் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

 2. நல்ல கட்டுரை, இது நீங்கள் இந்த தேசத்துக்காக செய்யும் தொண்டு. நீங்கள் வாழ்க , நீங்கள் வேண்டியது அனைத்தும் பெற்று நலமாய் வாழ , எல்லாம் வல்ல ஈஸ்வரனை வேண்டுகிறேன். இந்த தளத்தில் பின்னூட்டம் இடும் அனைத்து ஹிந்துகளீடமும் கேட்கிறேன், இந்த ”கோமதி செட்டி” என்ன வேலை வெட்டியில்லாமல் இந்த பதிவை போட்டிருக்கிறார்களா? யாராவது இந்த முயற்சிக்கு ஒரு பாராட்டு , ஊக்கம் குடுத்திருக்கிறீர்களா? , முதல் பதிவில் 8 பின்னூட்டம். இந்த பதிவில் நண்பர் ராஜா மட்டும் பின்னூட்டம் இட்டுள்ளார். ஆனால் தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் ! – அதில் 118 பின்னூட்டம்.. அப்புறம் ஏன் துலுக்கனும் , கிறிஸ்துவனும் நம்பளை ஆளமாட்டார்கள்???? இதிலே நாஸ்திகர்கள் வேரெ…

 3. Highly informative article. Everybody should understand the depth of the article and spred this to others also.

 4. கிறுத்துவம் தனக்குப் பலம் தேவைப்படும் இடங்களில் எல்லாம் “லிபரேஷன் தியாலஜி” என்ற பெயரில் கம்யூனிஸத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் விஷயம் பற்றி, முதல் முதலில் தமிழில் சொல்லும் கட்டுரை இதுவே. இந்த உண்மையை வேறு யாரும் இதுவரை சொன்னதில்லை என எண்ணுகிறேன்.

  [ஆங்கில ஊடகங்களில் அருந்ததி ராய், தமிழகத்தில் திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்கள் லிபரேஷன் தியாலஜியின் கூலி ஆட்களே.]

  ஆழமான அலசல்கள் நிறைந்த கட்டுரைத் தொடர். அதனால், அதிகம் சிந்திப்பவர்களைக் கவரும். அவர்கள் கமெண்டுகள் போடாவிட்டாலும், அவர்களை இந்த ட்ராகுலா தொடர் “கடிக்கும்”.

  கோமதி செட்டியின் கட்டுரையால் கடிக்கப்பட்டவர்கள் வேம்பயர் ஆவார்கள் என்பது நிச்சயம். வேம்பயர்கள் வெளியே தெரிய மாட்டார்கள். ஆனால், அவர்கள் கடித்தால்….!!

 5. கோமதி செட்டியின் அருமையான கட்டுரை. சரியான கருத்துகள்.

 6. \\வேம்பயர்கள் வெளியே தெரிய மாட்டார்கள். ஆனால், அவர்கள் கடித்தால்….!!\\

  கடிப்பதற்கு பல் இருந்தால் தானே, ஒரு பல் கூட விடாமல் சீக்கிரம் உடைத்திவிடுவோம். கவலை வேண்டாம் 🙂

 7. Congrats to the author.
  Christianity is the most dangerous dogma invented by man to destroy humanity.
  It is more dangerous than Islam since islam engages in open confrontation whereas christianity clothes its barbarity in high sounding phrases like Human rights,equality,democracy etc while secretly working against those very principles

  Eminent historian J.C.Kumarappa has rightly observed that the Church is the fourth arm of the western military after the army,navy and the airforce

  Sonia aka antonia Maino is the agent and the mole of the church to weaken and balkanise Bharat
  Every patriot particularly every Hindu has to become aware of this fact and work towards exposing her and her family and to bury the congress fathom deep to save our Motherland.

  R.Sridharan

 8. சூடான் நாடு காலனிய சக்திகளால் சூறையாடி அழிக்கப் படுவது பற்றி பருந்துப் பார்வையில் ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள் கோமதி செட்டி.. வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய எழுதுங்கள்.

  நாம் உன்னிப்பாக கவனித்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு நாடு நைஜீரியா. இந்தியா போலவே பல இன,மத,கலாசாரங்கள் இணைந்து வாழ சாத்தியம் கொண்டிருந்த நாடு இப்போது அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கிறது. அங்கும் அழிவு சக்திகளாக இருப்பவை இரண்டு ஆக்கிரமிப்பு ஆபிரகாமிய மதங்கள் தாம்.. நைஜீரியா குறித்து முன்பு ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரை – http://www.jeyamohan.in/?p=6836 ஒரு கூர்மையான பார்வையை அளிக்கிறது.

 9. அபாரம பிரமாதம் அருமை
  தொடரட்டும் உங்கள் எழ்த்து பணி

  அன்புடன்
  கிருஷ்ணா
  திருவல்லிக்கேணி

 10. மன்னிக்கவும் திரு தமிழன் அவர்களே….திரு.கோமதி. செட்டியின் முயற்சி பாராட்டுக்கு உரியது . நன்றி……வாழ்த்துக்கள்…….

 11. Very informative sir. But , in general, these facts are never published in mainstream newspapers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *