இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

muslim-woman-along-with-her-son-dressed-in-the-attire-of-hindu-lord-krishna

ரியாதைக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,

வணக்கம். 

சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள்.

அன்போடும் பாசத்தோடும் நம் உறவு பெரும்பாலும் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்து மதம் குறித்த கேள்விகள் உங்களுக்கு ஏற்படுகின்றன. முக்கியமாக, படைப்பும், படைப்பவளும் ஒன்றா வேறா என்பது போன்ற கேள்விகள்.

அவற்றுக்குப் பதில்கள் தர வேண்டிய கடமை, இந்துக்களுக்கு இருக்கிறது. எனவேதான், என் புரிதலின் அடிப்படையில் அமைந்த இந்தக் கடிதம்…

இந்துத் தொல்மரபுகளான அத்வைத, சைவ சித்தாந்த, விஸிஷ்டாத்வைத மரபுகளின்படி படைப்பவள், படைப்பாகவும் இருக்கிறாள். எனவே, படைப்பே படைப்பவளாகவும் இருக்கிறது.

த்வைத மரபின்படி படைப்பவளும், படைப்பும்  வேறுபட்டவை.

இஸ்லாமில் பெரும்பான்மைப் பிரிவினர் த்வைதத் தன்மை கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே. அதே சமயம் சூஃபிக்கள் போன்ற இந்திய இஸ்லாமிய மரபுகளிலும் ஒரு சில பண்டை செமித்திய மரபுகளிலும் அத்வைதத் தன்மை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த அத்வைதத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமியர்கள், படைப்பவளே படைப்பாகவும் இருக்கிறாள் என்ற கருத்தோடு இயைந்து போவார்கள். ஏற்காதவர்கள், இந்துக்களே ஆனாலும் மாறுபடுவார்கள்.

muslims-felicitate-modi

ஏற்காத இந்து அறிஞர், த்வைத மார்க்கத்தினை நம்புபவராக இருக்கலாம். உரையாடும்போது அதை அவரே வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். அப்போது ஓர் இந்துவானவர், ஏன் இந்து மதப் புத்தகங்களில் இருந்து வேறுபடுகிறார் என்ற பின்னணி புரியும். அவரவர் வழி அவரவருக்கு. மாறுபடுவதால், ஜிஸியா வரி போடவேண்டியதில்லை. நரகத்திற்குப் போவார் எனத் தனிப்பட்ட அளவில் நம்ப வேண்டியதில்லை. இந்த மாறுபாட்டின் அடிப்படையில் சமூக அளவில் உயர்வு தாழ்வு போதிக்கப்பட வேண்டியதில்லை என்பது  மானுட உறவாடல்களின் மீது இந்து மதம் ஏற்படுத்திய முக்கியத் தாக்கங்களில் ஒன்று.

இந்து மத ஆன்மிக இலக்கியங்களில், குறிப்பிடும்படியான த்வைதத் தன்மை நிறைந்த விஷயங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இவற்றைச் சுட்டுகிறார்கள்.

சுட்டிக் காட்டும் அதே புத்தகத்தில் அத்வைதத் தன்மை நிறைந்த விஷயங்களும் இருக்கின்றன. அதே போல விஸிஷ்டாத்வைதமும் அதில் உண்டு. பேதா-அபேதவாதமும் உண்டு. புஷ்டிமார்க்கமும் உண்டு. இப்படி இருப்பதுதான் இந்து மதம்.

ஒரு தெருவின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறிய செக்குமாட்டு எண்ணெய்க் கடையில் போய், பேனா வாங்க முடியாது. ஆனால், சந்தைக்குப் போனால் எண்ணையும் வாங்கலாம், பேனாவும் வாங்கலாம். இதுவரைக் கண்டறியாத புதிய பொருள்களையும் அறியலாம். இந்து மதம் தத்துவங்களின், நம்பிக்கைகளின், இலக்கியங்களின், சடங்குகளின் சந்தை. அங்கே எல்லாவகை மத விளக்கங்களும் கிடைக்கும்.

மற்றொரு சிறப்பும் இருக்கிறது. இந்தச் சந்தையில் ஒருவர் தனக்குப் பிடித்தமானதை வாங்கலாம். எதுவும் பிடிக்கவில்லை என்று வாங்காமலும் இருக்கலாம். சந்தைக்கே வராமலும் இருக்கலாம்.

ஒரு கடையை அந்தச் சந்தையில் திறந்து, இங்கே விற்பதற்கு எதுவும் இல்லை, வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றும்கூட அறிவிப்புப் பலகை தொங்கவிடலாம்.

janmashtamiஇந்தப் பன்மைத் தன்மையே இந்து மதமாக அறியப்படுகிறது. பன்மைத் தன்மைதான் இந்து மதம்.

இந்தச் சந்தையில் கிடைக்கும் பொருள்கள் குறித்த, அனுபவங்கள் குறித்த அறிதல்கள் ஒன்றோடு ஒன்று கலந்துரையாடும்போது சுவையான தகவல்கள், புதிய திறப்புகள் உருவாகின்றன. உண்மையைத் தேடும் வேட்கை உடையவர் புதிய திறப்புகளில் நுழைந்து சுவனத்தை அனுபவிக்கிறார்கள். சுவனப்பிரியனான ஓர் இஸ்லாமியரிடம் அந்த மேன்மையான குணம் இருக்கக் கூடும்.

நான் இதுவரை சொன்னவை ஓர் இஸ்லாமியர், இந்து மத இலக்கியங்கள் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கான நேரடிப் பதில்கள் இல்லை. ஆனால், பதில்கள் சொல்லப்படுவதற்கு முன்னர் சொல்லப்பட வேண்டியவை.

 

 ப்போது இந்து மத இலக்கியங்கள் குறித்து, இஸ்லாமியர் எழுப்பும் கேள்விகள் குறித்த பதில்கள்.

இந்து மத இலக்கியங்கள் இடுகுறிகள் (symbolism) நிறைந்தவை. (கம்பராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள்கூட. கம்ப சூத்திரம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.) அங்கே இறை என்பதுகூட ஓர் அடையாளம் மட்டும்தான்.

அந்த இறை குறித்த விவரிப்புகள், வழிகாட்டுதல்கள் மட்டுமே. வழிகாட்டுதலைப் பயன்படுத்தி இறையை அறிந்தபின், சொல்லுக்கு அப்பாற்பட்டதாக அந்த அறிதல் அமைந்துவிடுகிறது.

ஆகவே, இந்து மதத்தில் வேதங்கள் கூட மட்டமானவையே. இறை அனுபவமே உயர்ந்தது. இறை அனுபவம் கொண்ட ஒருவரின் அணுக்கத்தில் வேதங்கள் வேண்டியதில்லை என இந்து மத ஆன்மிக இலக்கியங்களே, வேதங்களே சொல்லி விடுகின்றன.

islam_muslim_hindu_unityநிலவைச் சுட்டும் விரல்களே வேதங்கள். சுட்டுபவரின் வர்ணனை விரல் பற்றியதே. அவர் நோக்கம் நிலவு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது. அவர் நடத்தை அவரது அனுபவத்தை மற்றவரும் அடைந்தால் ஆனந்தம் கொள்வது.

“நான் எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டவனாக இருக்கிறேன், மற்றவற்றை விலக்கி விட்டு என்னையே அறி” என பகவத் கீதையில் அல்லா சொல்லுவதுகூட புரிதலின் ஆரம்பத்தில் இருக்கும் மனிதனின் கவனத்தைத் தன் சுட்டுவிரல் நோக்கித் திருப்பும் விஷயமே.

அந்த இடுகுறிகள் பற்றிய புரிதலை நூல் தேர்ச்சி மட்டுமல்லாது, அவற்றுக்கேயான ஆன்மிகப் பயிற்சிகளோடு, அனுபவங்களோடு சேர்த்து அறிவதே ஒரு சரியான புரிதல் தரும்; ரிலேட்டிவிட்டி தியரம் போல; காதல் போல.

இரண்டாவதாக, இந்து மத இலக்கியங்களில் இறை குறித்துச் சொல்லப்படும், ”அவன் ஒருவனே” என்பதை இஸ்லாமியர் உள்ளிட்ட ஆபிரகாமியர் பலர், படைப்பில் இருந்து முற்றிலும் விலகிய “ஒருவன்” என்று புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால், அது “ஒருவன்” அல்ல. “ஒருமை”. அதாவது, One அல்ல; Oneness.

மேலும், இந்து மதப் புரிதலின்படி ஊழிக் காலத்துக்கு (இறுதி நாளுக்குப்) பின்னர் எஞ்சி இருப்பது இறை மட்டுமே. அந்த இறைக்குள் படைப்பும் உயிரினங்களும் ஒடுங்கிவிடுகின்றன. இந்து மதத்தில் உள்ள த்வைத மரபு உள்ளிட்ட அனைத்து மரபுகளும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றன.

ஆனால், ஆபிரகாமிய மதங்களின் புரிதல் முற்றிலும் வேறுபட்டது. ஊழிக்குப் பின்னரும், படைப்புகள் படைத்தவனிடம் இருந்து வேறுபட்டே இருக்கின்றன.

எனவே, ஒரு த்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்துவின் படைப்பு குறித்த கேள்விக்கு, அத்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்து தரும் பதில் வேறு. அந்தப் பதில் த்வைத அணுகல் உள்ள ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளருக்கு அளிக்கப்படும் பதிலாகாது.

அதாவது, ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை  அவரது தளத்துக்குள் இருந்து உரையாடி, சனாதன தர்மம் குறித்த புரிதல்களை ஏற்படுத்திவிட முடியாது. முற்றிலும் வேறுபட்ட வேறு ஒரு தளமான, சனாதன தர்மத்துக்குள் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை அழைத்துச் சென்றுதான் புரிதலை ஏற்படுத்த முடியும்.

rss-and-indian-muslims

அதே சமயம் ஒரு சனாதன தர்மவாதி, ஆபிரகாமியத் தளத்திற்குள் நுழைந்து புரிதல்களைப் பெற முடியும். அவரைப் போல ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளரும், தன் தளத்தில் இருந்து விரிந்து சனாதன தர்மத் தளத்துக்குள் நுழைந்துதான் புரிதல்களைப் பெற முடியும்.

இப்போதைய நடைமுறை உறவாடல்களில், ஒரு விஷயம் எல்லாவற்றையும் விட முக்கியமாக நம்மைப் பாதிக்கிறது. தன் மதம் சரி என்று நிறுவ வேண்டும் எனும் அதீதமான ஆசையில் மற்ற மத நூல்களில் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லி ஆதரவு தேடும் போக்குத்தான் அது.

இந்தப் போக்கு எல்லா மதங்களிலும் இருக்கிறது. எல்லா மதங்களிலும் எல்லாவித மனிதர்களும் இருக்கிறார்கள்; முக்கியமாக அகங்காரம் மிகுந்தவர்கள்.

இவர்களே மதங்களின் தலைமைப் பதவியை விழைந்து பெறுகிறார்கள்.

இவர்கள் சொல்லும் மத விளக்கங்களில் வெளிப்படுவது இவர்களது அகங்காரங்களின் ஆபாச அனர்த்தங்களே.

hindu_islamic_jihad_poverty_peaceஇதைப் போன்ற அனர்த்தங்கள்தான் இஸ்லாமியர்களையும் அடைகின்றன. ரிக் வேதத்தில் இருப்பதாகவும் இதிகாச புராணங்களில் இருப்பதாகவும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவற்றை அவர்கள் மேற்கோள் இடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் எடுத்துக் காட்டும் வரிகள் ரிக் வேதத்தில் இருப்பவை அல்ல. அவர்கள் வாசித்த புத்தகமே அந்த வரிகளை முதலில் உருவாக்கி இருக்கக் கூடும். அவர்கள் வாசித்த அந்த வரிகளின் கீழுள்ள “ருக் வேதம் (8:1:1) (10)” என்பது “ருக்கு பஷீரின் வேதம் (8:1:1) (10)” என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம்.

இங்ஙனம் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லுவது, இருப்பவற்றைத் தவறாகத் திரிப்பது, தேர்ந்தெடுத்த வரிகளை மட்டும் எடுத்தாள்வது போன்றவை மதத்தன்மைக்கு எதிரானவை. ஆனால், மதத் தலைமைப் பீடாதிபதிகளுக்குப் பிரியமானவை.

இத்தகைய போக்கிற்கு எதிராகவே இந்து மதமானது ஓர் “அமைப்பு சாரா” மதமாக இருக்கிறது.

ஒரு மதம்,  “தன்னுடைய” மதமாக இருப்பதால் அந்த மதத்திற்கு ஆதரவு தேடும் போக்கு, தனிமனித அகங்காரத்தின் வெளிப்பாடே. அல்லா எனும் இறுதி உண்மையின்முன் அகங்காரம் அற்று இருந்தால்தான் அல்லா நம்மை ஏற்றுக்கொள்வான்.

இந்தியப் பார்வையில், தன் கருத்தை மற்றொரு மனிதனும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விழைபவரே காஃபிர் ஆகிறார். அல்லா ஏற்றுக்கொள்ளும்படி தன்னை மாற்றிக்கொள்பவரே அல்லாவுக்குப் பிரியமானவர் ஆகிறார்.

முதல்வகை நபர் அடுத்தவரைத் திருத்த விழைகிறார்; இவர் அரசியல்வாதி. இரண்டாம் வகை நபர், தன்னைத் திருத்திக் கொள்ள விழைகிறார். இவர்தான் ஆன்மிகவாதி.

அகங்காரம் நிறைந்த ஒரு மௌல்வியைவிட, அகங்காரம் அற்ற சுவனப்பிரியர்களையே அல்லா சுவனத்தில் ஏற்றுக்கொள்வார் என்பது மதத்தன்மை மிகுந்த இஸ்லாமியரான உங்களுக்குத் தெரிந்ததுதான்.

அல்லா ஹோ அக்பர் !!    ஸத்யமேவ ஜயதே !!

இப்படிக்கு,
ஒரு சனாதன தர்மவாதி.

91 Replies to “இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?”

 1. முதல்வகை நபர் அடுத்தவரைத் திருத்த விழைகிறார்; இவர் அரசியல்வாதி. இரண்டாம் வகை நபர், தன்னைத் திருத்திக் கொள்ள விழைகிறார். இவர்தான் ஆன்மிகவாதி.

  அடுத்தவருக்கு விளக்கம் கொடுப்பது இருக்கட்டும். வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இந்துக்களுக்கே ஸநாதன தர்மம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது வேதனையான விஷயம். மற்றவர்கள் ஸநாதன தர்மத்தைப்பற்றி குறை கூறும் போது அது உண்மையாக இருக்குமோ என வாய் மூடி நிற்கிறார்கள். உண்மையைச்சொன்னால் சாமான்ய இவர்கள் தங்கள் வாழ்நாளில் பகவத் கீதையையோ திருமந்திரம், திருவாசகம், தேவாரம் போன்றவைகளை கண்ணால் கூட கண்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம் குலசாமி. வருடத்திற்கு ஒரு தடவை ஒரு விழா.

  🙁

 2. @களிமிகு கணபதி அய்யா . நல்ல முயற்சி!! ஆனால் நீங்கள் கூறியது மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறீர்களா? ,

  //இந்தப் போக்கு எல்லா மதங்களிலும் இருக்கிறது. எல்லா மதங்களிலும் எல்லாவித மனிதர்களும் இருக்கிறார்கள்; //
  இந்த போக்கு எல்லா ஆபிரகாமிய மதத்தில் இருக்கிறது என்று இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் நம்முடைய் மதம் தான் சிறந்தது என்று நிருபிக்கவேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

  தமிழன்.

 3. களிமிகு கணபதி ஐயா,
  என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.
  அற்புத முயற்சி.
  தமிழ் இந்து தளம், மற்ற மதத்தவரை குறைசொல்லும் தளமாக மாறுகிறதோ என்று எண்ணும் வேளையில், உங்கள் கட்டுரை அருமருந்தாக இருக்கிறது.
  நன்றி,
  சிங்கமுத்து

 4. களிமிகு கணபதி,

  \\நிலவைச் சுட்டும் விரல்களே வேதங்கள். சுட்டுபவரின் வர்ணனை விரல் பற்றியதே. அவர் நோக்கம் நிலவு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது. அவர் நடத்தை அவரது அனுபவத்தை மற்றவரும் அடைந்தால் ஆனந்தம் கொள்வது.\\

  உங்களுடைய இந்த வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. தேவையில்லாத அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில். இது போன்ற அருமையான கட்டுரை வழங்கியதற்கு மிக்க நன்றி. இதை படிக்கும் மதம் மாறிய முஸ்லீம்கள் கண்டிப்பாக சிந்தனை செய்வார்கள் என்று நம்பிகிறேன்.

  @ வினோத்,

  தங்களுடைய கருத்து ஏற்க்கக் கூடியவையே. ஆனால் ஒரு விசயம். நான் பள்ளியில் படிக்கும் பொழுது எனக்கு பெரிய ஆன்மிக விசயமும் எல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் என் மாரியம்மனும், சிவ பெருமானும், பெருமாளும் தான். உண்மையில் அப்பொழுது எனக்கு இருந்த மகிழ்ச்சி, ஒரு சில ஆன்மிக மற்றும் ஹிந்து மத பிரச்சனைகளை பற்றி தெரிந்த பின்பு இல்லை.
  தாய் பாசம் சொல்லி வருவதில்லை. அது போலவே இறைவன் மீதான பற்றுதலும் தானாக வரக் கூடியவை.

  குலத்தெய்வ வழிபாடு போதும், வாழ்வின் அனைத்து விசயங்களையும் தருவதற்கு.

  ஆப்ரகாபிய மதங்கள் தான் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அனைத்தையும் மண்டையில் போட்டு திணிப்பார்கள். நாமும் அவ்வாறு செய்ய முடியாது.

  இருப்பினும் குறைந்த பட்ச ஆன்மிக அறிவை அனைவருக்கும் வழங்குவது நமது கடமை.

 5. திரு கணபதி அவர்களுக்கு,

  உங்கள் முயற்சி அருமையானது. அதற்கு நன்றிகள். ஆனால் அதே சமயம் சனாதன தர்மவாதிகளே கூட தங்கள் மதத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை. முதலில் நமக்கும் வேதம் உட்பட்ட நூல்களை படிக்கும், அறிந்து கொள்ளும் ஆர்வம் வரவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு சிலர் மீது இருக்கும் கோவத்தினால் நாம் பல நூல்களை வாசித்தலை விலக்கிவிடுகிறோம் அல்லது அவற்றை ஒரு பெரிய பொருட்டாக கொள்வதில்லை. உதரணத்திற்கு, வேதம் என்பதை அதன் வழிகாடியுரை போல அமைந்திருக்கும் நிருக்தம் என்கின்ற நூல்களை வைத்து தான் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்லபட்டிறுகிறது. அவாரில்லாத பொழுது அவை தவறான பொருளை கொடுக்க கூடும். உதாரணமாக கௌதமர் மனைவி அகலிகையை இந்திரன் கெடுத்துவிட்டான் என ஒரு நிகழ்வு. ஆனால் நிருக்த்ததுடன் இணைந்து படிக்கும் பொழுது அது கூறும் பொருள் வேறு. கௌதமன் என்றழைக்கப்படும் நிலவானது தன மனைவியான அகலிகை எனும் இருளுடன் இருக்கும் பொழுது இந்திரன் எனும் சூரியன் அதனை பாழ் செய்துவிட்டான் என்ற கவித்துவ வர்ணனையேயாம்.

  கம்பன் தன ராமாயனக்காவியத்தை துவங்கும் பொழுது, ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூனை பாற்கடலுக்கு பயணம் செய்து அங்கு அமிர்ததினை உண்டதை உவமையாகிச் சொல்கிறார். இங்கே ஓசை பெற்று என்பது velocity of sound. ஒரு இஸ்லாமிய நண்பர் என்னிடம் சொன்னது: உங்கள் கடவுளர்கள் கையில் ஆயுதம் ஏந்தி பயத்தை தோற்றுவித்து அழைக்கின்றன . ஆனால் நாங்கள் அன்பால் எல்லாம் ஒரு இறைவன் என்கிறோம் என்று. நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரை இந்த நிலை மாறாது.

 6. முஸ்லீம்களுக்கு த்வைதம், அத்வைதம், விஸிஷ்டாத்வைதம் , சைவ சித்தாந்தம், வேதாந்தம் எதுவும் புரியாது. அவர்களுக்கு புரிந்தது ஏக இறைவன் அல்லா. அவரின் இறுதித்தூதர் முகமது அவர்களது ரோல் மாடல். அவர் செய்தது எல்லாம் அற்புதங்கள். அவரை விட உலகில் உயர்ந்தவர் எவரும் இல்லை. அவர் சொன்னது எல்லாம் வேதம். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் காபிர்கள் இணை வைப்போர். அவர்களைக் கொன்றால் பாவம் இல்லை. சொர்க்கம் கிடைக்கும். இந்துக்கள் வணங்குவது கல்லை. சாத்தானை. உலகில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். ஷரியா சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மற்றபடி வெளியே அவர்கள் பேசுவது எல்லாம் நடிப்பு. மிதவாதம் பேசுபவர்களாக இருந்தால் அவர்கள் முகமது நபியை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

 7. இந்த கட்டுரை என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அதற்கெதிரான பின்னூட்டங்கள் . நாம் மட்டும் மதக்காழ்ப்பில் குறைந்தவர்களா என்ன என நிரூபிக்க பாடுபடுகிறார்கள் ,

  இன்னும் கொஞ்சம் எளிமையாக , முடிந்தால் ஒரு தொடராக எழுதலாமே ?(தத்துவ விளக்கங்களோடு )

 8. இஸ்லாமியர்கள் இந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்வதற்கு முன்னால் உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

  கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்துக் கொன்ற நீங்கள்தான் இப்படி எல்லாம் இனிக்க இனிக்கப் பேசி அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்ற வேலை செய்கிறீர்கள்.

  என்றாவது இந்துத்துவ வெறியரான நீங்கள், தூயமார்க்கமான இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?

  முதலில் குர்ஆனை படியுங்கள்.

  சாதி வித்தியாசம் இன்றி இஸ்லாத்தில் எல்லாரும் மசூதியில் ஒன்றாகத் தொழுவதைப் பாருங்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கோயிலுக்குள் போகவேண்டும் என்று சொல்லும் இந்து மதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

  விவேகானந்தர் உள்ளிட்ட இந்து மதத் தலைவர்கள் இஸ்லாத்தில் உள்ள இத்தகைய நல்ல குணங்களைப் பாராட்டி இருப்பதைப் படியுங்கள். இஸ்லாம் மட்டும்தான் சரியான வழி என்று அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

  இந்து மதம் என்ற பெயரில் அத்வைதம், த்வைதம், விசிட்வைதைம், ஸெக்ஸ்வைதம் என்றெல்லாம் ஆளாளுக்குக் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பதால்தான் ஒழுக்கமற்ற, வெறிபிடித்த ஆட்களினால் இந்து மதம் சீரழிகிறது.

  அல்லாஹ்(ஜல்) ஒருவனே உண்மையான இறைவன். முஹம்மத் நபி (ஸல்) அவர்களே இறுதியான தூதர்.

  விவேகானந்தர், சங்கராச்சாரி, நித்தியானந்த பரமஹம்சன், ராமானுசன், ப்ரேமானாந்தா, அம்பேத்கர், நாராயணகுரு போன்றவர்கள் எல்லாம் இறைவனின் மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள். இருந்தாலும் அவர்கள் இறைவனின் தூதுவர்கள்தான்.

  அவர்களது தவறான புரிதல்களை எல்லாம் சரி செய்து, முற்றிலும் இறுதியான மார்க்கத்தை அல்லாவின் இறுதித் தூதுவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தந்திருக்கிறார். அவர்களின் போதனைகளே இறுதி உண்மை என்று புரிந்து தவறான மார்க்கத்தில் இருந்து விலகுங்கள்.

  இல்லாவிட்டால் நரேந்திர மோடி போல ரத்த வெறி பிடித்த ஒரு விலங்காக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

  7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

  இந்துக்கள் அறியாமையால் தொழுகின்ற பொய்த் தெய்வங்களை ஒரு நல்ல இஸ்லாமியர் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அதே சமயம் அவர் இந்துக்கள் திருந்துவதற்காகவும், நன்மையடைவதற்காகவும் உழைக்கிறார். அதற்கு மாறாக நடந்துகொள்பவர்கள் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள். தவறான வழி காட்டப்பட்டவர்கள். இறைமறுப்பாளர்களைச் சரியான மார்க்கத்திற்கு மாற்றவேண்டியதில்லை என நம்புகிற இஸ்லாமியர் தனது கடமையில் இருந்து தவறியவரே ஆகிறார். பித்அத்தியை மார்க்கத்தில் அவர் புகுத்துகிறார். அவர் ஒரு இஸ்லாமியப் பெயர் தாங்கி மட்டுமே.

  திலீப் என்பவரின் தந்தை பொய்யான தெய்வங்களை வணங்கியதால் அவரது குடும்பத்தை தீய சக்திகள் கெடுத்தன. ஆனால், உண்மையான மார்க்கத்திற்கு அவர் மாறிய பின்னர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கு ஆஸ்கார் அவார்டே கிடைத்தது. இதில் இருந்தாவது உண்மையான வழி எது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

  எனக்குப் பிடித்த ஒரு கட்டுரையின் இறுதி வார்த்தைகளை, அவர்களைப் போன்ற பெயர்தாங்கி முஸ்லீம்களுக்கு இங்கு சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

  “இஸ்லாமிய நெறியை மீறிக்கொண்டே இஸ்லாமிய நெறிக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரைப் பெயர்தாங்கி முஸ்லிம்களே! இம்மையில் நீங்கள் ஏதேனும் காரணம் கூறி அதை மறைத்து விடலாம். அல்லது விதண்ட வாதம் செய்து மழுப்பி விடலாம். நாளை-மறுமை நாள்! அல்லாஹ்(ஜல்)வின் முன்னிலை! எந்த சாக்கு போக்குகள் சொல்லியும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை நம்மில் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து இஸ்லாம் காட்டிய கொள்கை, கோட்பாடுகள், நெறிகள், நடைமுறைகளை அறிந்து ஒழுகி உண்மை முஸ்லிம்களாய் மாற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். அல்லாஹ்(ஜல்) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணரவும் உணர்த்தவும் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை முறியடிக்கவும், முஸ்லிம்கள் அனைவரும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்கவும் அருள்பாலிப்பானாக. ஆமின்.”

 9. திரு களிமிகு கணபதி!

  சிறந்த கட்டுரை. ஒரு மனிதனுக்கு உண்மையான இறை தேடல் இருந்தால் எவ்வாறு அவரது எண்ணங்கள் இருக்கும் என்பதற்கு உங்களின் பதிவு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

  ‘இறைவனை வணங்குங்கள்: தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்’
  -குர்ஆன் 16:36

  ‘மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் தூதர்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம் அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமைதான் இதற்கு காரணம்.’
  -குர்ஆன் 2:213

  மற்றபடி சனாதன தர்மம் ஆபிரஹாமிய மதங்களின் ஒரு பிரிவாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் இறைத்தூதர் மோசே இறைத்தூதர் நோவா போன்றவர்களை பின்பற்றிய மக்களின் பழக்க வழக்கங்களை ஒட்டியே இந்து மத அனுஷ்டானங்கள் அமைந்துளளதை நாம் பார்க்கிறோம். வேதக் கருத்துகளும் குர்ஆன் பைபிளின் கருத்துக்களும் ஏறத்தாழ ஒத்து வருவதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்து மதத்தின் பழைய வேதங்கள் அழிக்கப்படாமல் காக்கப்பட்டிருந்தால் மேலும் பல விபரங்கள் தெரிய வாய்ப்புண்டு. இவை எல்லாம் என் அனுமானங்களே!

  //அகங்காரம் நிறைந்த ஒரு மௌல்வியைவிட, அகங்காரம் அற்ற சுவனப்பிரியர்களையே அல்லா சுவனத்தில் ஏற்றுக்கொள்வார் என்பது மதத்தன்மை மிகுந்த இஸ்லாமியரான உங்களுக்குத் தெரிந்ததுதான்.//

  உங்கள் கருத்தே எனது கருத்தும்.

  இஸ்லாத்தில் புரோகிதத்துக்கே இடமில்லை. பலமுறை சவுதி பள்ளிகளில் நானே தலைவராக நின்று தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னை பின் பற்றி சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், இந்திய நாட்டவர் பலர் தொழுதிருக்கின்றனர். சொல்லப்போனால் நான் மத்ரஸா சென்று மொளலவி பட்டம் வாங்கியவன் அல்ல. தாடி கூட கிடையாது.
  —————————————————————————————————-
  ‘ஒன்றே குலம: ஒருவனே தேவன்’

  ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’

 10. “Allah ho Akbar:”
  That is the last thing I want to see in Tamil Hindu.
  The mistake we Hindus make is equating Brahma with Allah. Brahma is not synonymous with Allah. The Islamist’s Moon God is vengeful, egoistic and has no qualms about roasting souls in eternal hell for non belief in Him and his prophet. He encourages genocide of the non believers and rewards the butchers of the Kaffirs with 72 virgins in heaven. Hindus were/are still in the receiving end of this perverted dogma. Genocide of Hindus in tens of millions in the name of Allah and His prophet still had not woken up docile Hindus.
  Adharma need to be fought in WHAT EVER WAY possible. Pure and simple. It is really noble of the author and other pacifists to preach peace and harmony, etc. We have been doing it for 1000 years. It had not made an iota of difference to Islamists.( the latest Mumbai bombing being a recent example.)
  I am not sure whether an ordinary Muslim is interested/cares in knowing our religion.
  Please have a look at this article on ” History of crime against India”.
  https://vivekajyoti.blogspot.com/2011/07/history-of-crimes-against-india.html

 11. அன்புள்ள சுவனப்ரியன்

  எதை செய்யாதே என்று கணபதி அவர்கள் சொன்னாரோ அதை அப்படியே செய்துவிட்டீர்கள். முதலில் ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதை பற்றி பேசாமல் இருங்கள்

  //
  மற்றபடி சனாதன தர்மம் ஆபிரஹாமிய மதங்களின் ஒரு பிரிவாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் இறைத்தூதர் மோசே இறைத்தூதர் நோவா போன்றவர்களை பின்பற்றிய மக்களின் பழக்க வழக்கங்களை ஒட்டியே இந்து மத அனுஷ்டானங்கள் அமைந்துளளதை நாம் பார்க்கிறோம். வேதக் கருத்துகளும் குர்ஆன் பைபிளின் கருத்துக்களும் ஏறத்தாழ ஒத்து வருவதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்து மதத்தின் பழைய வேதங்கள் அழிக்கப்படாமல் காக்கப்பட்டிருந்தால் மேலும் பல விபரங்கள் தெரிய வாய்ப்புண்டு. இவை எல்லாம் என் அனுமானங்களே!
  //

  கொஞ்சமாவது லாகிக் இருக்கிறதா – ஹிந்து மதம் தோன்றி சுமார் பத்தாயிரம் வருடங்கள் ஆகிவிட்டது (நமக்கு கணக்கு தெரிந்து) யார் யாரிடமிருந்து காபி அடித்தார் என்று கூடவா உங்களுக்கு தெரிய வில்லை. இஸ்லாம் (கிறிஸ்தவர்கள், ஜூக்கள்) பின்பற்றும் பழக்க வழக்கங்கள் அவெஸ்டா மடத்தை (bce 2500) சார்ந்தது. அவெஸ்டா என்பது ஹிந்து மதத்திலிருந்து ஒரு இரண்டு சதவிகிதத்தை உருவிக் கொண்டு உருவானது. நடு நிலையான சான்றுகள் வேண்டுமானால் தருகிறேன்.

  ஹிந்து கோவிலுக்கு போறான், நாங்க மசூதிக்கு போறோம். ரெண்டு பேரும் கை கால கழுவிட்டு போறோம் – என்ன ஒற்றுமை பாத்தியா ? இதேல்லாம ஒற்றுமையா., வேதங்களுக்கும் குரானுக்கும் சம்பந்தமே இல்லை – குர்ஆனில் நல்ல விஷயாமான கொஞ்சம் பகுதி நீதி போதனைகள் உள்ளன. இந்த கொஞ்சம் பகுதிக்கு சமமான இந்திய நூல்கள் வைராக்ய சதகம், நீதி சதகம், பஞ்சதந்திர கதைகள் போன்றவை அவ்வளவே. குர்ஆனில் மிகுதியாக ஸ்ம்ரிதி விஷயங்களே மிகுதி (அதற்காக ஹிந்து ச்ம்ரிதிகளும், குர்ஆனும் ஒன்று என்று கூறவில்லை) .

  வேதத்தில் உள்ளதற்கும் உங்களது கருத்துகளுக்கும் ஒட்டவே ஒட்டாது., உங்களுக்கு யாரோ சொன்ன கதையை திருப்பி சொல்ல வேண்டாம்.

  சந்தடி சாக்கில் ஆபிராமிய மதத்தின் ஒரு பகுதி தான் சனாதன தர்மம் என்கிறீர்கள். இப்படி இருப்பதற்கு பதில் நான் இன்றே நாத்தீகனாக ஆகிவிடுவேன் – அதுவே எனது ஆன்மாவுக்கு நல்லது

  //அகங்காரம் நிறைந்த ஒரு மௌல்வியைவிட, அகங்காரம் அற்ற சுவனப்பிரியர்களையே அல்லா சுவனத்தில் ஏற்றுக்கொள்வார் என்பது மதத்தன்மை மிகுந்த இஸ்லாமியரான உங்களுக்குத் தெரிந்ததுதான்.//

  உங்கள் கருத்தே எனது கருத்தும்.

  இஸ்லாத்தில் புரோகிதத்துக்கே இடமில்லை. பலமுறை சவுதி பள்ளிகளில் நானே தலைவராக நின்று தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னை பின் பற்றி சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், இந்திய நாட்டவர் பலர் தொழுதிருக்கின்றனர். சொல்லப்போனால் நான் மத்ரஸா சென்று மொளலவி பட்டம் வாங்கியவன் அல்ல. தாடி கூட கிடையாது.
  —————————————————————————————————-
  //

  சனாதன தர்மத்தில் ப்ரோகிதம் இருந்தால் தான் தொழலாம் என்று யார் சொன்னார். வீட்டில் சாமி விக்ராஹங்களை வைத்து வழிபடுகிறோம் – ப்ரோகிதர் இருக்கிறாரா?. வட நாட்டில் ப்ரோகிதர் இல்லாமலேயே தொழும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன.

  ப்ரோஹிதரின் பங்கு ஒரு mediator என்று ஏன் தவறாக நினைகிறீர்கள். இப்படி தான் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.,
  ஹிந்து ஆகமங்களை புரிந்து கொள்ளுங்கள். கோவிலும், மசூதியும் ஒன்றல்ல. கோவில்களின் நிர்மாணத்தின் பின்னாலும், அதை நடத்தி செல்வதன் பின்னாலும் நிறைய சூக்ஷ்ம விஷயங்கள் உள்ளன. இதை நடத்தி செல்லவே ப்ரோஹிதர் இருக்கிறார்.,

  தினமும் காலையில் டிவியில் பகவத் கீதா பாகவதம் பிரசங்கம் நடக்கிறது – இதை பல நாட்டில் பல தருப்பு மக்கள் கேட்கிறார்கள் (கிறிஸ்தவர்கள் உட்பட) இதற்கும் தாடி, குடுமி, பட்டம் இதெல்லாம் அவசியம் இல்லை.
  ஹிந்துத்வத்தை பற்றி கற்று தர ஹிந்துவாக இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. – யார் நல்லது சொன்னாலும் ஹிந்து கேட்பான்.

  தயவு செய்து இஷ்டம் போல இதுவும் அதும் ஒண்ணுன்னு எழுத வேண்டாம்

  ஏன் ரெண்டும் ஒன்றில்லை என்று உங்களுக்கு சந்தேஹம் இருந்தால் கேளுங்கள் எழுதுகிறேன்

 12. @suvanappiriyan
  //வேதக் கருத்துகளும் குர்ஆன் பைபிளின் கருத்துக்களும் ஏறத்தாழ ஒத்து வருவதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். //
  எந்த வேதக்கருத்து குரானுடன் ஒத்து வருகிறது .. கீழே உள்ள மிக மேன்மையான குரான் வசனத்து ஒப்பான ஒரு வசனம் ரிக்,ய்ஜுர்,சாம்,அதர்வன வேதத்தில் இருந்து காட்டுங்கள் பார்க்கலாம்.

  5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

  5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

  8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

  8:39. (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

  8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

  8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

  9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

 13. சலீல் முஹம்மத்

  உங்களா பாத்தா எனக்கு பரிதாபமா இருக்கு

  தூய மடமான இஸ்லாம் சொல்லும் கருத்துகளை கொஞ்சம் அடுக்கவா. ஒரு 5% தான் நீதி போதனைகள் உள்ளன.

  60 % காட்டு மிராண்டி க்டர்கள்

  35 % இயற்கைக்கு ஒத்து வராத பேத்தல்கள்

  உதாரணமாக – எல்லவல்ல அல்ல குர்ஆனில் அல்ல சொல்கிறார்

  “I swear by the afterglow of sunset ” – அவரே எல்லாம் வல்லவர் – அப்புறம் ஏன் பொன் மாலை வானின் மீது உறுதி கோனுகிறார்.

  அல்லாவே குர் ஆணை எழுதிகிறார் – முதல் வரியிலேய சுய புராணம் பாடுகிறாரா – ” In the name of Allah, the Beneficent, the Merciful. ”

  எதற்கு in the name of allah என்று எழுதுகிறார்

  குடுட்டு தனமாக ஒரு புத்தகத்தை நம்பும் ஒரு கூட்டம்.

  பிராமணர்கள் நுழையாத கோவில்களும் ஏராளம் உண்டு இங்கே –

  முஸ்லிமாக இல்லை என்றால் என்னை சட்டி தான் என்று மிரட்டும் மதமெல்லாம் அன்பு மதமா. அப்போ இஸ்லாம் தோன்றுவதற்கு முன் பிறந்தவேறேல்லாம் எங்கே? உலகம் தோன்றி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா உங்களுக்கு. அவ்வளவோ ஜீவா ராசிகளும் இப்போ நரகத்திலா? ஏன் இப்படி ஒரு கொடூரமான ஆசாமியா அல்லாஹ் இருக்கிறார்.

  இவ்வளவு லேட்ட ஏன் உங்கள் தூதரை அல்லா அனுப்பினார் – அதுக்கு முன்னாடி எல்லோரும் என்னை சட்டியில் வாடுவதை அகமகிழ்ந்து இருந்தாரா ? காட்டான் தனமா இல்ல

  ஒரு நொடியேனும் யோசியுங்கள் – குர் ஆண் வாக்கியங்கள் சிலவற்றை இங்கே வைத்தல் கொமட்டும்.

  இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகளை பாப்போம்

  “The sun … runneth unto an appointed term.”- 13:2 – சூரியன் பூமியை சுத்துது
  he sun “floats” in an orbit around the earth. 21:33
  “He … spread out the earth.” – 13:3 பூமி தட்டை
  All things We have created by pairs – அப்போ பாக்டீரியா எல்லாம் ?

  And hath made the moon a light” – ஐயோ ஐயோ நிலா சூரியனின் வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது என்று அல்லாவுக்கு தெரியாம போச்சே

  அல்லாவின் ஒழுக்க அறிவுரைகள்

  Plow them (women) whenever you like 2:223
  Lewd women are to be confined to their houses until death. 4:15

  If any of your women get lewd, cut off their inheritance. 4:19

  And if ye wish to exchange one wife for another and ye have given unto one of them a sum of money (however great), take nothing from it. Would ye take it by the way of calumny and open wrong ? 4:20

  11:78 And his people came unto him, running towards him – and before then they used to commit abominations – He said: O my people! Here are my daughters! They are purer for you. Beware of Allah, and degrade me not in

  When Allah or Muhammad decide that a man and a woman should marry, they must marry. 33:36
  Allah says it is lawful for Muhammad to marry any women he wants. 33:50-51
  Allah will reward believing men with “fair ones” (beautiful women) in heaven. 55:71-72

  Men and women are enemies! 7:24

  Muhammad’s wives need to be careful. If they criticize their husband, Allah will replace them with better ones. 66:5

  Allah made virgins to be lovers and friends to those on his right hand. 56:36-37

  அல்லாவின் வெறியாட்டம்

  Don’t bother warning the disbelievers. Allah has made it impossible for them to believe so that he can torture them forever after they die. 2:6-7

  There will come a day when Allah will refuse all prayers and help no one. 2:48

  They have incurred anger upon anger. For disbelievers is a shameful doom.” 90

  Allah will leave the disbelievers alone for a while, but then he will compel them to the doom of Fire. 2:126

  Kill disbelievers wherever you find them. If they attack you, then kill them. Such is the reward of disbelievers. (But if they desist in their unbelief, then don’t kill them.) 2:191-2

  But if there are any wrong-doers around after you’ve killed off all the disbelievers, persecutors and aggressors, then you’ll have to kill them too. 2:193b

  Disbelievers worship false gods. The will burn forever in the Fire. 2:257

  Those who disbelieve shall be overcome and gathered unto Hell. 3:12

  Non-muslims will be punished by Allah for their nonbelief. 3:௧௯

  All non-Muslims will be rejected by Allah after they die. 3:85

  என்ன கருமத்துக்கு non-muslim மாக மனிதனை படைக்கிறார் – பேசாம எல்லாரையும் அரபு நட்டு காரனா படிச்சு தொலைக்க வேண்டியது தானே

  We shall cast terror into the hearts of those who disbelieve. Their habitation is the Fire 3:151

  Disbelievers will go to Hell. 3:196

  “We shall cast him into Fire, and that is ever easy for Allah.” 4:30

  எப்பா எப்பேர்பட்ட travel guide பா இவரு

  Allah will guide disbelievers down the road to hell. 4:167-169

  அல்லா கருணையே வடிவானவர்
  Many generations have been destroyed by Allah. 6:6

  ஜலதோஷத்திற்கு இஸ்லாம் முன்பே கண்டெடுத்த மருந்து

  Those who disbelieve will be forced to drink boiling water, and will face a painful doom. 6:70

  அப்படியோவ் வேணும்னே இப்படியா செய்யறது – ரொம்ப தப்பு சார் தப்பு
  Allah chooses to lead some astray, and he lays ignominy on those who disbelieve. 6:125

  கருணை உள்ளம் கொண்ட அல்லா சொல்கிறார்
  Let the idolaters kill their children. It is Allah’s will. 6:137

  எப்படிங்காணும் இன்னும் உயிர்கள் உள்ளன
  Allah drowned everyone on earth because they disbelieved. 7:64

  கொஞ்ச வர்ஷம் முன்னாடி பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீரில் நிலா நடுக்கம் வந்து ஏராளமான இஸ்லாமியர்கள் இறந்தனரே அத செஞ்சது ஏசுவா இருக்குமோ
  Allah killed the disbelievers with an earthquake. 7:78

  ரொம்ப பயமுருத்துராரே – அப்போ உலகத்துல முக்கா வாசி பேரு கழுதிள்ளமலா இருக்காங்க
  Allah will throw fear into the hearts of the disbelievers, and smite their necks and fingers. 8:12

  எழுத எழுத கை வலிக்குது – இன்னும் வேணும்னா எழுதறேன் கோவப் படாம படிக்கணும்

 14. சலீல் முஹம்மத் ,

  நீங்கள் எழுதியிருக்கும் உரை நடை பார்க்கும் பொழுதே தெரிகிறது. உங்கள் கழுத்தில் சிலுவை தொங்கி கொண்டு இருக்கிறது என்று… எனினும் நல்ல ஒரு முயற்சி, அடுத்த முறை நீங்கள் சர்ச்க்கு போகும் பொழுது நன்றாக பயிற்சி எடுத்து பிறகு எழுதுங்கள் 🙂

 15. // த்வைத மரபின்படி படைப்பவளும், படைப்பும் வேறுபட்டவை.

  இஸ்லாமில் பெரும்பான்மைப் பிரிவினர் த்வைதத் தன்மை கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே. //

  இந்த வாசகங்கள் குழப்புவதாக உள்ளன.

  ஆபிரகாமிய மதங்களில் இறை- சாத்தான், நன்மை-தீமை, வெள்ளை-கருப்பு, படைப்பவன் – படைப்பு என்று இருமை (duality) உள்ளது. இது வெளிப்படுத்தப் பட்ட தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் அமைந்த, நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே அமைந்த, crass ஆன இருமைக் கோட்பாடு. இதில் தத்துவ தரிசனம் என்று எதுவும் இல்லை.

  ஆனால் த்வைதம் கூறும் “இருமை” தத்துவ ரீதியாக, மற்ற எல்லா வேதாந்த பிரிவுகளையும் போலவே, மிக நுட்பமானது. த்வைத வாதத்தை உருவாக்கியவர்கள் நியாய – வைசேஷிக தரிசன மரபின் ஒரு கிளையிலியிருந்து பிரிந்தவர்கள். எனவே அதி கூர்மையான தர்க்க வாதங்களை த்வைத சித்தாந்த நூல்களில் காண முடியும்.

  த்வைதம் பிரபஞ்சமும் சத்தியம், பிரம்மும் சத்தியம் என்று தான் கூறுகிறதே அன்றி, வேறு வகையான இருமையை போதிக்கவில்லை. த்வைதம் உட்பட அனைத்து வேதாந்த தத்துவங்களும் கூறும் கடவுள் பிரபஞ்சத்தின் ஊடாக நிற்கும் இறையே (cosmic God) ஆவார். ஆனால் ஆபிரமாமிய மதங்கள் கூறும் இறை பிரபஞ்சத்தினின்றும் வேறாக (extra cosmic) பரமண்ட்லத்தின் ஏழு அடுக்குகளுகு அப்பால் இருப்பவர். இந்த வித்தியாசத்தை மறந்து விடக் கூடாது.

  மற்றபடி, களிமிகு கணபதியின் நலமிகு முயற்சி பாராட்டுக்குரியது. தத்துவச் சிக்கல் தவறாகப் புரிந்து கொள்ளப் படக்கூடாது என்ற நோக்கிலேயே மேற்கூறியவற்றை எழுதினேன்.

 16. தேவையில்லாத கட்டுரை. நாம் யாருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. அப்படி பதில் சொல்லி அதில் திருப்தி அடையும் பிற மதத்தினர் இனிமேல் நம் கடவுளை சாத்தான் என்று கூறப்போவதில்லையா அல்லது மத துவேஷத்தில் ஈடுபடாமல் தான் இருந்து விடப்போகிறார்களா?

  பிற மதத்தினரை துவேஷிப்பதை இறைவனின் கட்டளையாகவே செய்யும் இவர்களுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

  @சலீல் முஹம்மத்
  //கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்துக் கொன்ற நீங்கள்தான் இப்படி எல்லாம் இனிக்க இனிக்கப் பேசி அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்ற வேலை செய்கிறீர்கள்.///

  இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்பதை இந்தப் பதிவை
  படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

  https://hayyram.blogspot.com/2011/07/blog-post_14.html

 17. சலீல் முகமது வின் கருத்துரையைப் படிப்பவர்கள் முஸ்லீம்களின் மனநிலையை புரிந்து கொண்டிருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை சுவாமி விவேகானந்தர், ரமணர், சங்கரர், போன்ற மகான்களை விட முகமது நபி தான் உயர்ந்தவர்.

  பெண்களைக் கல்லால் எறிந்து கொல்பவர்கள் யார்? முஸ்லீம்களிலேயே பிற இனத்தவர்களின் மசுதியில் குண்டு வைப்பவர்கள் யார்? ரத்த வெறி பிடித்து குண்டு வைத்துக்கொண்டு அலைபவர்கள் யார்? இஸ்லாம் தூய மார்க்கம் என்று ஏமாற்றாதீர்கள். அது தீயமார்க்கம். முழுக்க முழுக்க பிற மதங்களின் மேல் வெறுப்பைக் கக்கி அவர்களை அழிக்க முயலும் தீவிரவாத இயக்கம்.

  எந்த முஸ்லீம் நாட்டிலாவது வேற்று மதத்தவர்கள் நிம்மதியாக வாழ விடுகிறதா இஸ்லாம்?. எந்த முஸ்லீம் பெண்ணாவது வேற்று மதத்தவரை மணந்து கொள்ள அனுமதிக்குமா? திருடினால் கையை வெட்டு என்று உத்தரவு போடுகிறாரே முகமது நபி. அவரே குரைஷிகளின் வியாபாரக்கூட்டத்தை கொள்ளை அடிக்கிறாரே. அவர் செய்தால் சரியா? 50 வயதில் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்கிறாரே. அது சரியா. அல்லா அவருக்கு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறாராம், முகமது செய்கிற எல்லா மோசமான செய்கைகளையும் அல்லா ஏற்றுக்கொள்கிறார். ஒரு முஸ்லீம் பெண்ணின் அப்பன், புருஷன், அண்ணன் என்று அனைவரையும் கொன்று விட்டு அவள் அபலையாக இருக்கிறாள். அவளை மணந்து கொண்டு வாழ்வு கொடுக்கிறேன் என்று எவராவது சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? அதையே முகமது செய்தால் ஏதோ புனிதமான காரியம் செய்தது போல் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களைத் திருத்தவே முடியாது.

 18. எனக்கென்னவோ அத்வைத முகமூடியை போட்டுக் கொண்டு பூர்வமீமாம்சை ஆட்டம் ஆடும் மட நிறுவனங்களே (pun intended) ஹிந்து சமுதாயத்துக்குள் தாலிபானியத்தன்மையுடன் இருப்பதாக தோன்றுகிறது.

 19. மலர்மன்னன் அவர்களே, இங்கு சலீல் முஹம்மத் எழுதியுள்ளதை பார்த்தீர்களல்லவா? இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் நம் மதத்தைப் பற்றி எப்படி புரிந்து கொள்வார்கள்? கழுதைகளுக்கு எப்படி கர்ப்பூர வாசனை தெரியும்.? உங்கள் பொன்னான நேரத்தை மூளை மழுங்கடிக்கப்பட்ட முட்டாள்களுக்காக செலவிட வேண்டாம்….

 20. கட்டுரை ஆசிரியர் ஹிந்து சமயக் கோட்பாடுகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அதன் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க முற்பட்டுதல் நல்லது. ஜடாயு மிகவும் மென்மையாகச் சுட்டிக் காட்டியிருப்பதைப் பாரட்டுகிறேன். முதலில் இந்தப் புரிய வைக்கிற போக்கே சரியாக இல்லை.
  வாசகர்கள் பலர் கருத்துக் கேட்டிருப்பதால் ஒரு தனிக் கட்டுரை எழுதி அனுப்பியிருக்கிறேன். வெளியாவ்தும் இல்லாமல் போவதும் ஆசிரியர் குழுவின் கையில்!
  -மலர்மன்னன்

 21. @ மதிப்பிற்குரிய சுவனப்பிரியன் ஜி,

  இஸ்லாம் குறித்த இந்துத்துவக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். “மலரும் பிரபஞ்சம்” எனும் அருமையான கட்டுரைக்கு நீங்கள் அளித்திருந்த மறுமொழிகள்தான் இந்தக் கட்டுரைக்குக் காரணம்.

  சனாதன தர்மமானது ஆபிரஹாமிய மதங்களின் ஒரு பிரிவு என நீங்கள் கருதுவது உங்கள் உரிமை. மட்டுமல்ல, ஒருவர் தனக்கான நம்பிக்கையை வேறு யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை எனும் இந்துத்துவ சுதந்திர நிலைக்கும் ஏற்புடையது.

  இஸ்லாம் மார்க்கம் அமைதியோடு இணக்கமாக வாழ்க்கை வாழச் சொல்லும் மார்க்கம் என நீங்கள் எழுதிவருவதைப் படித்திருக்கிறேன்.

  ஆனால், ஒருவர் வேறு ஒரு நம்பிக்கை கொண்டவர் என்ற காரணத்திற்காக அவர் தண்டிக்கப் படவேண்டியவர் என்று இஸ்லாம் சொல்கிறது என சலீல் முஹம்மத், தமிழன், சாரங், மற்றும் ராஜா என்ற சகோதரர்கள் சொல்கிறார்கள்.

  இவர்களில் சலீல் முஹம்மத் எனும் இஸ்லாமியரே அல்லாவைத் தவிர மற்ற தெய்வங்களைத் தொழுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று இங்கே சொல்வதுதான் அதிக அதிர்ச்சி அளிக்கிறது.

  நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளுக்கு மாறாக இருக்கிறது அவருடைய கருத்து. உங்கள் விளக்கங்களின் அடிப்படையில் அவர் சொல்வது தவறு எனத் தோன்றுகிறது. அமைதி மார்க்கமான இஸ்லாம் அப்படி எல்லாம் சொல்லாது, வன்முறையையும் பிரிவினையையும் போதிக்காது என்றே நான் நம்புகிறேன்.

  சலீல் முஹம்மத் போன்ற இஸ்லாமியர்களின் தவறான புரிதல்களை, ஒரு நல்ல, மார்க்கம் பற்றிய தெளிந்த அறிவு உடைய இஸ்லாமியரான நீங்கள்தான் திருத்த வேண்டும்.

  இஸ்லாம் பற்றிய அவரது கருத்து தவறு என நீங்கள் திருத்தினால், இஸ்லாம் பற்றி அவதூறு சொல்பவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வார்கள்.

  நன்றிகள்.

  @ மதிப்பிற்குரிய ஜடாயு ஜி,

  நன்றிகள்.

  கட்டுரையை அரைகுறையாகப் படிப்பவர்களுக்கு எழக்கூடிய குழப்பத்தைச் சரியாகவே கண்டுபிடித்துச் சொல்லி உள்ளீர்கள். அவர்களது குழப்பம் உங்களது விளக்கத்தால் தீரும்.

  கட்டுரையை முழுமையாகப் படிப்பவர்கள் அதில் உள்ள “…எனவே, ஒரு த்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்துவின் படைப்பு குறித்த கேள்விக்கு, அத்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்து தரும் பதில் வேறு. அந்தப் பதில் த்வைத அணுகல் உள்ள ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளருக்கு அளிக்கப்படும் பதிலாகாது….” எனும் வரிகளையும் படித்து இருப்பார்கள்.

  இந்துக்களின் ”த்வைத நம்பிக்கை” என்பது இஸ்லாமியரின் “த்வைத அணுகல்” என்பதில் இருந்து வேறுபட்ட பதம்.

  @ மதிப்பிற்குரிய ஆலந்தூர் மள்ளன் ஜி,

  கடவுள்கள் மனிதர்களுக்கு அடிபணிந்தவர்கள் எனும் பூர்வமீமாம்சை இங்கு பொருத்தமாயிராது.

  எனவே, அத்வைத முகமூடியோடு, பூர்வமீமாம்சையும் முகமூடியாகத்தான் இருக்கிறது.

  அவதாரங்கள் மனித உருவிலும், நற்செயல்களின் ஒட்டுமொத்த விளைவாகவும் தொடர்ந்து பிறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆலந்தூர் மள்ளனாகவும். பெரிய கோடு கிழித்த பீர்பாலாகவும்.

  @ பதிலளித்த மற்ற அன்பர்கள்.

  வந்தனங்கள். உங்களின் கருத்துக்களில் இருந்து கற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றிகள்.

 22. @தமிழன்!

  நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் அனைத்து வசனங்களின் முதல் வசனத்தையும் பிறபாடு வருகிற அதன் தொடர்ச்சியான வசனங்களையும் பார்வையிட்டாலே யாருக்காக இந்த வசனங்கள் சொல்லப்பட்டது என்பது தெளிவாகும்.

  ஏக இறைவனை வணங்குங்கள், வட்டி வாங்காதீர்கள், மதுவை தூரமாக்குங்கள், பெண் குழந்தைகளை கொல்லாதீர்கள் என்று போதனை செய்த ஒரே காரணத்துக்காக சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டார்கள். மக்காவிலிருந்து மதினாவுக்கு விரட்டப்படுகிறார்கள். மதினாவில் இஸ்லாம் வளர்ந்த போது அங்கும் படை திரட்டிக் கொண்டு முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் வருபவர்களை நோக்கி சொல்லப்பட்ட வசனங்களே இவை. எந்த தலைவரும் எந்த குழுவும் நியாயமாக செய்யக்கூடிய ஒரு செயலே மேற்கண்ட குர்ஆன் வசனங்கள்.

  உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

  (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.’ (அல் குர்ஆன் 9:6)
  குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் – போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?

  //9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் -…..//

  அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் – ‘எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ – அவர்களை கொல்லுங்கள்’ என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் – தனியே ‘எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ – அவர்களை கொல்லுங்கள்’ என்று சொன்னதாக சொன்னால் – நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் – வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

  அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, குர்ஆனின் மேற்படி வசனம்.

  இன வேற்றுமை பாராட்டக் கூடாது என்பதற்கு கீழ் வரும் நபி மொழிகளையும் பாருங்கள்.

  முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்!
  ஒருவன் ஒரு கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் அவனுக்கு துணை புரிந்து – வலுவூட்டினால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான். (மிஷ்காத்)

  முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்!
  இன மாச்சரியத்தின்பால் அழைத்தவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன், இன மாச்சரியத்தின் அடிப்படையில் போரிட்டவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன், இனமாச்சரியம் கொண்ட நிலையில் மரணமடைந்தவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (அபூதாவூத்)

  முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்!
  எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான். (அபூதாவூத்)

  //எந்த வேதக்கருத்து குரானுடன் ஒத்து வருகிறது .. கீழே உள்ள மிக மேன்மையான குரான் வசனத்து ஒப்பான ஒரு வசனம் ரிக்,ய்ஜுர்,சாம்,அதர்வன வேதத்தில் இருந்து காட்டுங்கள் பார்க்கலாம்.//

  பகவத் கீதையை ஏன் விட்டு விட்டீர்கள்? இந்துக்களோடு இன்றளவும் அதிக தொடர்பில் இருப்பது வேதங்களை விட கீதையே. இங்கு அர்ஜூனனைப் பார்த்து கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்கிறார்?

  ‘அர்ஜூனா! நீ ஒரு ஷத்ரியன்: நீ ஒரு படை வீரன்: சண்டையிடுவது உனது கடமை: சண்டையிட வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஷத்ரியர்கள் பாக்கியசாலிகள்:’ – கீதை அத்தியாயம் 2 வசனம் 31 லிருந்து 33 வரை.

  இதுபோல் பல ஆதாரங்களை இந்து மதத்திலிருந்தும் என்னால் தர முடியும். போர்க்களத்தில் இதுபொன்ற வசனங்கள் பயன்படுத்தப்படுவது இயல்பான ஒன்றே!

 23. This is the simple truth. If Prophet Mohammed had started his peaceful religion called Islam today, it would have been branded as a terrorist sect. He will be on the wanted list like Osama Bin Laden.Where else or which other holy book you will find so much hatred and violence against fellow human beings ?

 24. களி மிகு கணபதி,

  உங்களின் நோக்கத்துக்கு வாழ்த்துக்கள்.

  ஆனால் நீங்கள் சொல்ல வருவதை கேட்க தயாராக இருக்கிறார்களா? நீங்கள் என்ன சொனாலும் அவர்கள் சொல்லுவது எங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.

  இந்து மதமோ, பிற மதங்களோ, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன், கேட்க அவசியமில்லை, நீ இந்த மார்க்கத்தைப் பின்பற்று, இல்லா விட்டால் மத வரி கட்டு… முடியாவிட்டால் அடிமையாகி விடு என்கிற கோட்பாட்டில் சிக்கி இருப்பவர்களின் முன் நீங்கள் புன்னாகவராளி பாடினால் பலன் என்ன?

  எனவே இந்து மதத்தை புரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும். முதலில் அவர்கள் பிற மதத்தினருடன் சமரசமாக, இணக்கமாக வாழ தயாராக இருக்கிறார்களா, பிற மதங்களை வெறுப்புணர்ச்சி இல்லாமல் நோக்கும் மனநிலை அவர்களுக்கு இருக்கிதாம் அதை உருவாக்க என்ன வழி என்று சிந்தியுங்கள்.முதலில் அவர்களை சிந்திக்கும் பாதைக்கு கொண்டு வர முயலுங்கள். சிந்திக்கும் ஒருவன், அக்பரைப் போல மாறுவான்.

  இந்த உலகில் எல்லா மதங்களும் இருக்கும், ஒரே மதம் மட்டுமே இருக்கும் எனக் கனவு காண வேண்டாம் என்பதை தெளிவு படுத்துங்கள்.

  அப்படிப் பட்ட சூழ்நிலையில் மற்ற மதங்களைப் புரிந்து கொண்டு வாழும் பாதை தேவையா, அல்லது வாளை உருவி இரத்த ஆறு ஓட விடும் பாதை தான் இப்போதும் தேவையா என்பதை சிந்திக்க சொல்லுங்கள்.

  முதலில் அவர்கள் கேட்கும் மனநிலைக்கு வரட்டும். பிறகு சொல்லுங்கள்!

 25. @சலீல் முஹம்மத்

  பிற மதங்கள் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுகிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது.

  //சாதி வித்தியாசம் இன்றி இஸ்லாத்தில் எல்லாரும் மசூதியில் ஒன்றாகத் தொழுவதைப் பாருங்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கோயிலுக்குள் போகவேண்டும் என்று சொல்லும் இந்து மதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.//

  இந்தியாவில் திருப்பதி கோவிலோ, சபரி மலையோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோ யாரும் என்ன சாதி என்று கேட்கப் படுவதும் இல்லை, பக்கத்தில் சாமி கும்பிடுபவர் என்ன சாதி என்று நினைப்பதுவும் இல்லை. அவனவன் ஆயிரம் கோரிக்கை, கவலையோடு பக்கத்தில் இருப்பவருடன் இடத்துப் பிடித்துக் கொண்டு சாமி கும்பிடுகிறார்.

  //இந்துக்கள் அறியாமையால் தொழுகின்ற பொய்த் தெய்வங்களை ஒரு நல்ல இஸ்லாமியர் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.//

  சரி நீங்கள் தொழும் தெய்வம் உண்மை என்பதற்க்கு என்ன ஆதாரம்(verifaible proof) இருக்கிறது உங்களிடம்? எல்லாம் வல்ல உண்மை தெய்வத்தை வைத்து ஆகஸ்டு மாதம் முதல் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 28ம் தேதி வரை வரிசையாக எல்லா நாட்களிலும் வானத்தில் முழு நிலவாக, பௌர்ணமியாக ஒளி விட செய்யா முடியுமா உங்களால்? செய்யுங்கள். அதற்க்கப்புறம் மற்றவரைப் பார்த்து உங்கள் தெய்வம் பொய் தெய்வம் என்று சொல்லுங்கள்.

  அப்படி உண்மை தெய்வத்துக்கான ஆதாரம் (verifiable proof)எதுவம் இல்லை என்றால், அடாவடி செய்யாமல் அவரவர் நம்பும் தெய்வத்தை அமைதியாக வணங்குவதுதான் நல்லது.

  உன் தெய்வம் பொய் தெய்வம், என் தெய்வம் உண்மை தெய்வம் என்றால், அதையே எல்லோரும் சொல்கிறார்கள் . அப்படியானால் எந்த தெய்வம் உண்மை தெய்வம், எந்த தெய்வத்தையும் யாரும் பார்க்கவில்லை. அப்படியானால் தீர்மானிப்பது எப்படி, வாளை உருவு எவன் உயிரோடு இருக்கிறானோ அவன் தெய்வம் உண்மை தெய்வம் என்ற கட்டு மிராண்டி போட்டா போட்டியில் இறங்கிதானே உலகில் கோடிக் கணக்கான பேரைக் கொன்று குவித்தீர்கள். மனசாட்சியே இல்லையா? சற்று சிந்தித்தப் பார்க்க வேண்டாமா?

  மத வெறி அதிகமாக இருந்தால் ஒரு பிளைட் பிடித்து பாலஸ்தீனுக்கு ஓடி விடு. உங்களுக்கு சரியான பாடம் கற்றுக் குடுக்கக் கூடியவன் இஸ்ரேலியனே. இந்த உலகிலே மத சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியை புகுத்தும் கோட்பாட்டை முதலில் சொன்னவர்கள் அவர்களே.
  அவர்களிடம் இருந்துதான் நீங்களும் கற்றுக் கொண்டீர்கள்.

  அமைதிப் பூங்காவான் இந்தியா நல்லிணக்க நாடு. இங்கே வந்து உன் மத வெறியை புகுத்த முடியாது.

 26. //உங்கள் பொன்னான நேரத்தை மூளை மழுங்கடிக்கப்பட்ட முட்டாள்களுக்காக செலவிட வேண்டாம்….ஸ்ரீ சரவணக் குமார்//

  அன்புள்ள ஸ்ரீ சரவணக் குமார்,
  என் மீது கொண்டுள்ள அன்பிற்கு மிக்க நன்றி. உங்களைப் போல முகம் தெரியாத, நேரில் என்னை அறியாத, அன்பர்கள் பலரும் என்மீது காட்டும் அக்கறைதான் என்னை எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டுகிறது. கவலை வேண்டாம், இது சம்பந்தமான எனது கட்டுரை உங்களது எண்ணப் போக்கின்படியே இருக்கும். அவசியமான கட்டுரையாகவே அது இருக்கும்.
  மேலும், உங்களைப் போன்ற சிலர் என்னை நேரில் அறியாதவர்களா யிருந்தும் மிகுந்த உரிமையுடன் எனது கருத்தை எழுதுமாறு வலியுறுத்தியதாலேயே அதை எழுதியிருக்கிறேன்.
  -மலர்மன்னன்

  .

 27. சுவனப்ரியன்

  நீங்கள் பகவத் கீதையை இழுத்துலீர்கள் – அதை பற்றி இன்று அப்புறம் எழுதுகிறேன்

  உங்களுக்கு வசதியான வசனங்களை பொருக்கி வசதியான சால்ஜாப்பு தருகிறீர்களே

  இவைகளுக்கும் பதில் உண்டோ?

  Disbelievers worship false gods. The will burn forever in the Fire. 2:257

  Those who disbelieve shall be overcome and gathered unto Hell. 3:12

  Non-muslims will be punished by Allah for their nonbelief.

  All non-Muslims will be rejected by Allah after they die. 3:85

  We shall cast terror into the hearts of those who disbelieve. Their habitation is the Fire 3:151

  Disbelievers will go to Hell. 3:196

  “We shall cast him into Fire, and that is ever easy for Allah.” 4:30

  Allah will guide disbelievers down the road to hell. 4:167-169

  Many generations have been destroyed by Allah. 6:6

  Those who disbelieve will be forced to drink boiling water, and will face a painful doom. 6:70

  Allah chooses to lead some astray, and he lays ignominy on those who disbelieve. 6:125

  Let the idolaters kill their children. It is Allah’s will. 6:137

  Allah drowned everyone on earth because they disbelieved. 7:64

  Allah killed the disbelievers with an earthquake. 7:78

  இவைகள் எல்லாம் இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை பற்றி இல்லை – முஸ்லிம்கள் அல்லாதவரை பற்றியது.

  இதெல்லாம் கட்டாயமாக ஒரு கடவுளின் வாக்காக இருக்க முடியாது அல்லவா?

  you are talking without understanding how islam rose to power – how islam spread up to iran, afgan, indoneasia and malaysia and made them muslim countries. Why it was had limited success in india despite the agressions?

  I can certainly prove with the use of poweful logic that what quran contains is absolute aggression and not like how intend to interpret it.

  to be continued….

 28. @ மதிப்பிற்குரிய மலர்மன்னன் ஜி,

  //…கட்டுரை ஆசிரியர் ஹிந்து சமயக் கோட்பாடுகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அதன் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க முற்பட்டுதல் நல்லது…//

  கட்டுரையை நீங்கள் முழுமையாகப் படிப்பீர்கள் என நம்புகிறேன். ஜடாயுவுக்குச் சொன்ன பதிலே உங்களுக்குச் சொன்ன பதிலுமாகிறது.

  கட்டுரையை முழுமையாகப் படிப்பவர்கள் அதில் உள்ள “…எனவே, ஒரு த்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்துவின் படைப்பு குறித்த கேள்விக்கு, அத்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்து தரும் பதில் வேறு. அந்தப் பதில் த்வைத அணுகல் உள்ள ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளருக்கு அளிக்கப்படும் பதிலாகாது….” எனும் வரிகளையும் படித்து இருப்பார்கள்.

  இந்துக்களின் ”த்வைத நம்பிக்கை” என்பது இஸ்லாமியரின் “த்வைத அணுகல்” என்பதில் இருந்து வேறுபட்ட பதம்.

  அத்துடன் “ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை அவரது தளத்துக்குள் இருந்து உரையாடி, சனாதன தர்மம் குறித்த புரிதல்களை ஏற்படுத்திவிட முடியாது. முற்றிலும் வேறுபட்ட வேறு ஒரு தளமான, சனாதன தர்மத்துக்குள் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை அழைத்துச் சென்றுதான் புரிதலை ஏற்படுத்த முடியும்.“ என்பதையும் படித்து இருப்பார்கள்.

  ஜடாயு தவறாகச் சுட்டுவதுபோல த்வைத தத்துவம் வெறும் “இரு எதிர்மையக்” கோட்பாடு என்று கட்டுரையில் எங்கும் சொல்லப்படவில்லை. அதாவது, அவர் சொல்லுவது போல ”இறை- சாத்தான், நன்மை-தீமை, வெள்ளை-கருப்பு, படைப்பவன் – படைப்பு” என்று இரண்டான பிரிவு “த்வைதம்” அல்ல.

  இந்தக் கட்டுரையே ப்ரபஞ்சமும், ப்ரம்மமும் என்ற இரண்டும் ஒன்றா வேறா என்ற கேள்வி குறித்து எழுந்த உரையாடல்களின் விளைவு. இரண்டும் வேறு எனும் த்வைத “அணுகல்” இஸ்லாத்தில் இருக்கிறது என்றே கட்டுரை சொல்கிறது. அன்றி, இஸ்லாமில் இருப்பது இந்தியாவில் உள்ள நுணுக்கமடைந்த த்வைத தத்துவமே என்று கட்டுரை சொல்லவில்லை. கட்டுரை சொல்லாததை நாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

  அதே சமயம், என் கண்களுக்கு இஸ்லாமியத்தின் படைப்பும், படைப்பவனும் வேறு என இரண்டாகப் பார்க்கும் நிலை, இந்திய தத்துவமான த்வைதத்தினோடு ஒரு குறுகிய அளவில் ஒத்துப் போகிறது என்றே படுகிறது.

  மேலும், ஜடாயு சொல்வது போல இந்திய தத்துவமான த்வைதம், பிரம்மமும் சத்யம், பிரபஞ்சமும் சத்யம் என்று மட்டும் சொல்லவில்லை. அவற்றுக்கு இடையேயான வேறுபாடும் சத்யம் என்றே கூறுகின்றது. மேலும், இவற்றில் ப்ரம்மமே அடிப்படையான மேலான சத்யம் எனச் சொல்லுகிறது. இதைப் போன்ற ஒரு நிலையையே இஸ்லாமும் எடுக்கிறது. அதுவும் படைப்பு பொய் என்று சொல்வதில்லை.

  ஆனால், இங்கனம் நான் சொல்வது இஸ்லாம் த்வைதத் தத்துவச் செழிப்பு உடையது என்ற பொருளைத் தந்துவிடாது. இந்திய தத்துவமான த்வைதம் படைப்பு, படைப்பவன் என்ற இரு பிரிவினைகளாக மட்டும் இல்லை. ப்ரம்மம், படைப்பு, உயிரினங்கள் என்ற மூன்றும் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டு இருக்கின்றன என்பதோடு, ஒரு படைப்பு மற்றொரு படைப்பில் இருந்தும், ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தில் இருந்தும், இவை அனைத்தும் ப்ரம்மத்திடம் இருந்தும் வேறுபட்டு இருக்கின்றன என்றெல்லாம் ஆழமாகப் போகிறது. அத்துடன், ப்ரம்மமான விஷ்ணு படைப்பிலும், உயிரினங்களிலும் ஊடாக இருக்கிறான் என்றும் அது சொல்லுகிறது. இது இஸ்லாத்தில் இல்லை.

  மேலும், இஸ்லாம் வெறும் “crass ஆன இருமைக் கோட்பாடு. இதில் தத்துவ தரிசனம் என்று எதுவும் இல்லை” என்பதும் முற்றிலும் சரியான பார்வை அல்ல. கிறுத்துவ இறையியலைப் போலவே, இஸ்லாமிய இறையியலும் அரிஸ்டாட்டலிய மற்றும் நியோப்ளாட்டோனிய தத்துவங்களின் திரிப்புக்களால் பாதிக்கப்பட்ட ஒன்றுதான். இஸ்லாமிய வரலாற்றின் முதல் பாகமான 12ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் இஸ்லாமானது க்ரேக்க-ரோமன், இரானிய, மற்றும் இந்திய பேகன் மரபுகளால் செழுமையடைந்தது.

  அதே சமயம், ஸூஃபியிசம் போன்ற இஸ்லாமியப் பிரிவுகள் இஸ்லாத்திற்கு முன்பு இருந்த ஈரானிய பேகன் மற்றும் க்னாஸ்டிக்ஸ் கிறுத்துவ மரபுகளால் உருவானது. இந்தியாவுடன் வணிகத்தின் மூலம் அது அடைந்த தொடர்புகளால் புதிய தரிசனங்களை அடைந்து “அனல் ஹக்” என்று சொல்லும் அளவு அத்வைதத் தன்மை அடைந்தது.

  இந்த பாதிப்புகளால்தான் இந்தியாவில் உள்ள இஸ்லாமானது, வஹாபிய இஸ்லாத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை உருவாக்குகிறது. இந்தியப் பாரம்பரியத்தில் வந்த இஸ்லாமியர்களுக்குக் காசி விசுவநாதர் கோவிலில், அந்த விசுவநாதனே காட்சியும் தருகிறான். இந்துஸ்தானி இசையின் மூலம் இந்துத் தெய்வங்களைப் புகழ்ந்து பாடுவது அந்த முஸ்லீம்களுக்குச் சரியான ஒன்றாகவே, அல்லாவுக்குச் செய்யும் சேவையாகவே படுகிறது. பன்மைத் தன்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களும் இஸ்லாமியர்களே. இவர்கள் பின்பற்றுவதும் இஸ்லாமே.

  இவர்கள் குறைந்துவருகிறார்கள் என்பதும், அடுத்த தலைமுறை இஸ்லாமியர்கள் வஹாபியர்களாக மாறுகிறார்கள் என்பதும் உண்மையே. அதற்குக் காரணம், பன்மைத் தன்மை மிகுந்த இஸ்லாமியர்களைப் பாராட்டும் சக்தி இல்லாத இந்துக்களே. தங்களையே காத்துக் கொள்ளும் திறன் இல்லாத, மெக்காலே புத்திரர்களாகிப் போய்விட்ட பிரிட்டிஷ் இந்தியர்களுக்கு இதெல்லாம் இனியும் தோன்றாது என்பதும் தெளிவு.

  ஆனால், இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் பாகமான 13ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் இருந்து இவை எல்லாம் அரசியல் இஸ்லாத்தினால் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு ஒரு கரடுமுரடான இறையியல் மட்டுமே முன்வைக்கப்பட்டது. அதுதான் இப்போதும் அரசியல் வீச்சு நிறைந்ததாக இருக்கிறது.

  இதையெல்லாம் கட்டுரை சொல்லவில்லைதான். ஏனெனில், இதில் எதுவும் கட்டுரையின் நோக்கத்தோடு சம்பந்தமற்றது.

  கட்டுரையின் நோக்கம், இந்து மதத்தினை இஸ்லாமியர் அணுகும்போது தெரிந்து கொள்ள வேண்டிய மேலோட்டமான புரிதல் என்ன என்பது குறித்தே. இந்து தத்துவமான த்வைதத்தின் விளக்கம் அன்று.

  மேலும், இந்து மதம் பற்றித் தெரிந்துகொள்ளும்போது ஆபிரகாமிய மதங்கள் பற்றி மிக மோசமான ஒரு விளக்கத்தை மட்டுமே தரவேண்டும் என்பது எனக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில், இஸ்லாத்திற்கும், கிறுத்துவத்துக்கும் முன்பு இருந்த பேகனீய மரபுகள் இந்து மரபுகளே என எனக்கு ஒரு கருத்து இருக்கிறது.

  மோஸஸின் வழி மட்டுமே செமித்தியப் பகுதிகளில் இல்லை. பாகனீய மரபுகளும் இருந்தன. மோஸஸின் வழியில் இருந்து மட்டுமே தான் இஸ்லாமும், மற்ற மதங்களும் வந்தன எனச் சொல்வதும் சரியல்ல. முகம்மதுவே இந்த பாகனீய மரபின் வழி வந்தவர்தான் என்றும், அவரது குடும்பம் கோவில் பூஜாரிகளாக இருந்தது என்பதால் முகம்மது ஒரு பிராமணரே என்றும் என்னிடம் சொல்லி ஒரு இஸ்லாமியர் புளங்காங்கிதம் அடைந்தார்.

  எனவே, நாம் மற்ற மதங்களைப் பற்றி எப்போதும் மட்டமான ஒரு பிம்பத்தை மட்டுமே உருவாக்க வேண்டும் என்பதில் எனக்கு சம்மதம் இல்லை. ஏனெனில், என் புரிதல்கள் அதுவாக இல்லை.

  அதனால் வாய்மையே வெல்லும் எனப் போதிக்கும், சுயதர்மத்தைப் போதிக்கும் இந்துத்துவத்திற்கு எதிரான ஒன்றாகவே அத்தகைய தார்பூச்சு எனக்குப் படும்.

  இருப்பினும், த்வைத மார்க்கத்தின் நுணுக்கமான தத்துவ தரிசனம் பற்றிய ஒரு கட்டுரையை, அதையும் இஸ்லாத்தையும் போட்டு ஏன் குழப்பிக்கொள்ளக்கூடாது என்ற தெளிவை, த்வைதம் என்பது இஸ்லாத்தில் இல்லவே இல்லை என்ற முடிவை அளிக்கும் ஒரு கட்டுரையை என் இந்தக் கட்டுரை பெறுமானால், முதலீட்டுக்குக் கிட்டிய பெரும் லாபம். குட்டி போட்ட வட்டிகளோடு என் கட்டுரை திரும்புகிறது என்றால் என்னைப் போன்ற சாதரணர்களுக்கு மகிழ்வே.

  அத்துடன், தத்துவ தரிசனங்களை என் சுயபுரிதலுக்காக மட்டுமே படிக்கும் எனக்குப் புதிய விளக்கங்கள் கண்டிப்பாகக் கிட்டும்.

  நன்றிகள்.

  @ மதிப்பிற்குரிய சுவனப்பிரியன் ஜி,

  இஸ்லாம் வன்முறையைப் போதிக்கிறது எனச் சொல்லும் சலீல் முஹம்மதின் கருத்தை நீங்கள் திருத்த வேண்டும் எனக் கடைசி முறையாக விண்ணப்பிக்கிறேன்.

  .

 29. @ சுவப்ப்ரியன்,

  \\‘அர்ஜூனா! நீ ஒரு ஷத்ரியன்: நீ ஒரு படை வீரன்: சண்டையிடுவது உனது கடமை: சண்டையிட வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஷத்ரியர்கள் பாக்கியசாலிகள்:’ – கீதை அத்தியாயம் 2 வசனம் 31 லிருந்து 33 வரை. \\

  ஆம் அதே கண்ணன் தான் போர் களம் செல்லும் முன்பு பேச்சு வார்த்தை நடத்தி தோல்வி அடைந்த பின்பு வேறு வழியே இன்றி போர் நடத்த முயற்சி செய்யப்பட்டது. அதுவும் தவிர மகாபாரத போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எதிரான போர். மகாபாரத போர் மதத்தின் அடிப்படையிலோ அல்லது சாதியின் அடிப்படையிலோ நடந்தது அல்ல.

  எந்த ஒரு ஹிந்து அமைப்பும் கிருஷ்ணர் சொன்ன இந்த விசயங்களை வைத்து பிற மதத்திற்கு எதிராக போர் தொடு. கொலை செய் , நாட்டை பிடி , மதம் மாற்று என்று சொல்லவில்லை.

  அதுவும் நீங்கள் சொல்லும் பகவத் கீதை வரிகள் 5 % ஹிந்துக்களுக்கு தெரியுமா என்பதே ஆச்சர்யம். ஏன் எனில் ஹிந்து அல்லது பாரத பண்பாடு என்பது வெறும் வழிபாட்டையோ அல்லது ஒரே ஒரு கோட்பாட்டையோ அடிப்படையாக வைத்து உருவானது அல்ல. அது ஒரு நீர் போன்றது. தண்ணீர் ஒன்று தான் ஆனால் இருக்கும் இடத்தை பொருத்து நதி என்றும் கடல் என்றும் சொல்கீறார்கள். அதல்லால், தயவு செய்து ஒரு கோட்பாட்டை வழியுருத்தும் அரேபிய மதத்தோடு பாரத மதத்தை தொடர்பு படுத்தாதீர்கள்.

  உங்கள் பரம்பரையில் யாரோ ஒருவர் எதோ ஒரு காரணத்திற்காக பரம்பரை வ்ழிபாட்டை விடுத்து மதம் மாறினார்கள் என்ற காரணத்திற்காக, அரேபிய மதத்தை உங்கள் முப்பாட்டனார் மதத்தோடு (பாரத பண்பாடு) ஒப்பிடாதீர்கள்.

  இந்தியாவில் ஏற்படும் 75 % பிரச்சனை வெளி நாடுகளின் மூலமாக தான் நடக்கிறது என்பது எனது கருத்து. இந்த வெளி நாட்டு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது முஸ்லீம்களின் கடமை.

  நேபாளத்திலோ, மலேரியாவிலோ அல்லது இலங்கையிலோ ஹிந்துக்களுக்கு பிரச்சனை ஏற்பட்ட பொழுது அதை காரணமாக வைத்து எந்த ஒரு ஹிந்துவும் மதத்தின் பெயரால் பிரச்சனை செய்யவில்லை. இது ஒன்றே போதும் ஹிந்துக்கள் மதத்தின் பெயரால் ஒரு நாளும் நாட்டை அழிக்கும் செயலில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு,

  எனக்கு குரான் தெரியாது. அதனால் என்னாலும் அதை பற்றி நான் விமர்சனம் செய்வது கிடையாது. உண்மையில் முகமது அவ்வாறு சொல்லி இருந்தால் அது பாராட்டக் கூடிய விசயம்.

  பிற நாட்டு முஸ்லீகளை பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. ஆனால் இந்தியாவில் மிதவாத முஸ்லீம் தலைவர்கள் (அரசியல் உட்பட) மிகமிக குறைவு. அப்படி பட்ட தலைவர்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது போன்ற தலைவர்கள் முஸ்லீம்கள் முன்னிறுத்த படுவதில்லை. உதாரணம் காஷ்மீரில் ஆளும் கட்சியும் சரி எதிர் கட்சியும் சரி ஹிந்துக்களை கொடுமைபடுத்துதல் மற்றும் கேவலப்படுத்துதல் என்பதில் மட்டும் ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள்.

 30. @ சகோ. சுவனப்பிரியன் ,

  //‘அர்ஜூனா! நீ ஒரு ஷத்ரியன்: நீ ஒரு படை வீரன்: சண்டையிடுவது உனது கடமை: சண்டையிட வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஷத்ரியர்கள் பாக்கியசாலிகள்:’ – கீதை அத்தியாயம் 2 வசனம் 31 லிருந்து 33 வரை. //

  போர் செய்யும் போது தைரியத்துடன் தான் போர் செய்ய வேண்டும், ஆனால் போர் எதற்க்காக செய்யப்படுகிறது என்பதுதான் மிக முக்கியம்.

  தன்னுடைய மார்க்கத்தை ஏற்காதவர்கள் மீது போர் செய்யச் சொல்லவில்லை கிரிஷ்ணன். மகாபாரதப் போர் ஒரு மதப் போரோ, இன அழிப்புப் போரோ, ஆக்கிரமிப்புப் போரோ அல்ல. அது அநியாய அக்கிரமத்தை எதிர்த்து நடத்தப் பட்ட தர்மப் போர்

  துரியோதனன் தன்னுடைய கசின் சகோதர்கள் புகழுடன் வாழ்வது கண்டு அவர்கள் மீது வெறுப்புணர்ச்சியும்,பொறாமையும் கொண்டு அவர்களை கஷ்டப் படுத்த விரும்பினான். சூது செய்து அவர்கள் செல்வங்களையும், ஆட்சியையும் கவர்ந்தான். அவர்களின் மனைவியை அவையிலே ஆடையை உரிந்து அவமானப் படுத்தினான். 13 வருடம் பாண்டவர்களும், திரவுபதியும் காட்டிலே வனவாசம் பூண்டனர்.

  அதற்குப் பிறகு கிருஷ்ணர் சமாதானத்துக்கு எப்படி முயலுகிறார் என்று பாருங்கள். கிருஷ்ணர் துரியோதனனிடம் வந்து பாண்டவர்களை வாழ விடும்படி கேட்டார்.

  அவர்களுடைய இராச்சியத்தை தரும்படிக் கோரினார். துரியோதனன் மறுத்தான்.

  ஐந்து பேருக்கும், ஐந்து மாநிலங்களை தரும்படிக் கேட்டார். துரியோதனன் மறுத்தான்.

  ஐந்து கிராம்ங்களியாவது தரும்படிக் கேட்டார். துரியோதனன் மறுத்தான்.

  ஐந்து பேருக்கும் ஆளுக்கு ஒரு வீடு வீதம் ஐந்தே ஐந்து வீடுகளையாவது தருமபடிக் கேட்கிறார். ஊசி முனை அளவு இடம் கூட தர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான் துரியதணன். பாண்டவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்க விரும்பினான் துரியோதனன். அவர்கள் வாழ்வதையே அவன் பொறுக்கவில்லை.

  எனவே தர்மப் போர் எனபது வேறு.தன் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் மீது நடத்தப் படும் கொலை வெறித் தாக்குதல் என்பது வேறு.

  நீங்கள் இப்படி பிற மார்க்கத்தினர் மீது நடத்தப் படும் அடக்கு முறை தாக்குதல்களை நியாப் படுத்துவதற்கு பதிலாக இவை மனிதத்துக்கு எதிரானவை என்பதை தெளிவு படுத்தி உங்கள் மார்க்கத்தவரிடம் பிரச்சாரம் செய்யலாம்.

  நீங்கள் ஐந்து முறை தொழுவதை, உலகில் யாராவது தடுக்கிராகளா, வெறுக்கிறார்களா , இல்லையே!

  அதே போல நீங்களும் பிற மார்க்கத்தினரின் வழிபாட்டை வெறுக்காமல் அமைதியாக வாழ்வதுதானே அடிப்படை நாகரீகம்? இதை நீங்கள் உங்கள் மார்க்கத்தவரிடம் சொல்லலாம் அல்லவா?

  //முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்// //நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன், நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.//
  -என்பதை எல்லாம் நியாயப் படுத்த நினைத்தால் முடியுமா? ஒட்டகத்தின் வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டுஇருக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.

 31. நண்பர் களிமிகு கணபதி அவர்களே

  உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி. நீங்கள் எழுதி இருப்பது இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ளும் படியே இருக்கும் என நான் நம்புகிறேன். நமது த்வைதத்தை பற்றி அச்சு அசலாக நீங்கள் எழுதி இருந்தால் அவர்களுக்கு புரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன் – நீங்கள் சொல்ல வந்த முக்கிய கோட்பாடு இது என்று நினைக்கிறேன் “எது என்றே தெரியாத பிரம்மத்தை தனது புரிதலுக்குள் கொண்டு வர ஒரு இந்து பல வழிகளில் புகுந்து வெற்றியும் காண்கிறான், இப்படி ஒரு சுதந்திரமே இல்லாமல் fixed ஆக அதுவும் தவறாக, பயத்துடன் இறைவனை அணுகுவது பயனை அளிக்காது. இந்த நிலையில் இருந்து கொண்டு இந்துக்கள் சுதந்திராமாக செயல் படுவதை இஸ்லாமிஸ்டுகள் ஈர்ஷையுடன் பார்க்காமல் புரிந்து கொள்ள முயன்றால் சுதந்திரம் என்ன என்பது புரியும், அந்த சுதந்திரம் இருந்தால் அறிவு வளர்ச்சி பெருகும், அறிவு வளர்ந்தால் உண்மையில் இறைவனை கண்டு கொள்ள வாய்ப்பு உள்ளது”

  சில முரண்பாடுகளை சுட்டிக் காட்ட முயல்கிறேன்

  //
  இந்தக் கட்டுரையே ப்ரபஞ்சமும், ப்ரம்மமும் என்ற இரண்டும் ஒன்றா வேறா என்ற கேள்வி குறித்து எழுந்த உரையாடல்களின் விளைவு. இரண்டும் வேறு எனும் த்வைத “அணுகல்” இஸ்லாத்தில் இருக்கிறது என்றே கட்டுரை சொல்கிறது. அன்றி, இஸ்லாமில் இருப்பது இந்தியாவில் உள்ள நுணுக்கமடைந்த த்வைத தத்துவமே என்று கட்டுரை சொல்லவில்லை. கட்டுரை சொல்லாததை நாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.
  //

  இஸ்லாத்தில் பிரம்மம் இல்லை, இறைவன் தான் இருக்கிறார் – அவர்கள் சொல்வது நிர்குண சகுன பிரம்மத்தை பற்றி இல்லை. அவர்கள் அல்லாவுக்கு உருவம் இல்லை என்று சொல்வது அவெஸ்டா மதத்திலிருந்து காப்பி அடித்து தான். அல்லா எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர் அவர பாக்கவே முடியாது அவர் இந்த உலகத்துக்கு வந்தா உலகமே பொசுங்கி போய்டும் என்பது போல எண்ணங்கள் உள்ளதால் தான்.

  இதை பற்றி ஓர் கட்டுக்கதையும் புனித குர்ஆனில் உண்டு.

  எது வளர்வதோ அதுவே பிரம்மம்,.எது பெரியதோ அதுவே பிரம்மம். இதை ஹிந்து மத வாயிலாகவே விளக்க இயலும். அல்லா பெரியவர் அனால் பிரபஞ்சத்தை விட மேலானவர் என்றால் அவர் பிரபஞ்சத்தை விட பெரியவரா – அவ்வளவு பெரிய உருவமா? இப்படி பட்ட உருவத்துடன் அவர் எப்படி ஏழு மேகங்களுக்கு மேல் அமர்கிறார் என்பது போன்ற சிக்கலான பிரச்சனைகள் எழும்.

  அல்லாவை இறைவன் (எங்கோ ஒரு இடத்தில் இறைபவர்) என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், கடவுள் என்று கூட சொல்ல இயலாது

  இஸ்லாத்தில் பிரபஞ்சம் என்பது கூட கிடையாது – அவர்கள் பேசுவதெல்லாம் ஒரு சில உலகங்களை பற்றியே
  //
  அதே சமயம், என் கண்களுக்கு இஸ்லாமியத்தின் படைப்பும், படைப்பவனும் வேறு என இரண்டாகப் பார்க்கும் நிலை, இந்திய தத்துவமான த்வைதத்தினோடு ஒரு குறுகிய அளவில் ஒத்துப் போகிறது என்றே படுகிறது.

  //

  இது இல்லை. த்வைதம் என்பது படைத்தவனை பற்றியும் படைப்பை பற்றியும் உள்ள விவாதம் அல்ல – ஜீவாத்ம பரமாத்ம சம்பந்தத்தை பற்றி. பிரம்மம் யாரையும் படைப்பதில்லை என்பதே த்வைதிகளின் கோட்பாடும்

  நமது தர்சனங்களுக்குள் உள்ள வித்யாசங்கள் இந்த ஜீவாத்ம பரமாத்ம சம்பந்தத்தை பற்றி மட்டும் தான்.

  இஸ்லாம் பேசுவது இறைவன் மற்றும் அவரால் உருவாக்கப் பட்ட உயிர்கள் உடல்களை பற்றியது.

  //
  மேலும், ஜடாயு சொல்வது போல இந்திய தத்துவமான த்வைதம், பிரம்மமும் சத்யம், பிரபஞ்சமும் சத்யம் என்று மட்டும் சொல்லவில்லை. அவற்றுக்கு இடையேயான வேறுபாடும் சத்யம் என்றே கூறுகின்றது. மேலும், இவற்றில் ப்ரம்மமே அடிப்படையான மேலான சத்யம் எனச் சொல்லுகிறது. இதைப் போன்ற ஒரு நிலையையே இஸ்லாமும் எடுக்கிறது. அதுவும் படைப்பு பொய் என்று சொல்வதில்லை.
  //
  :த்வைதம் சொல்வது பிரபஞ்சம் பிரம்மம் இடையேயான வேறுபாடும் சத்யம் என்பதில்லை, இடையே உள்ள சம்பந்தம் சத்யம் என்கிறது.

  அத்வைதமும் பிரபஞ்சம் அசத்யம் (அசத்யம் என்பதை நன்கு கவனிக்கவும்) என்று கூறவில்லை அது மாறும் தன்மை உடையது என்று தான் கூறுகிறது. சமஸ்க்ரிதத்தில் சத்யம் என்றால் மாறுபாடுகள் இல்லாத தன்மை உடையது மற்றும் அனுஷ்டிக்க கூடியது என்று அர்த்தம். அனுஷ்டிக்க முடியாத சத்யத்திற்கு ருதம் என்று பெயர்.

  அத்வைதமும் படைப்பு பொய் என்று சொல்வதில்லை. நாம் காணும் நிலை மாறுபடும் தன்மை உள்ளது, மாறுபடும் எதுவும் உண்மையாக இருக்க முடியாது அதனால் பிரக்ரிதி மித்யா என்கிறது

  த்வைதமும் மித்யாவை எதிர்க்க வில்லை – பிரக்ரிதி நிலை மித்யா நிலை தான் என்கிறது

  இஸ்லாத்தில் படைப்பு என்பது – அல்லா ஒரு எலும்பூகூட கட்டி அதன் வாயில மூச்சு காத்து ஊதுவதே ஆகும்.

  நமது தர்மத்தில் படைப்பு என்பது பிரம்மத்தின் விரிதலையே குறிக்கும்

  பிரம்மம் -ஹிரண்யகர்பன் – விராட் – பிரக்ரிதி என்பது போன்ற விரிவையே குறிக்கிறது,.

  நமது வேதாந்த தர்சனங்கள் எதிலும் பிரம்மம் உயிர்களை படைப்பதில்லை – ஆன்மா அனாதி என்று தானே சொல்கிறோம்

 32. கட்டுரை ஆசிரியர் திரு.களிமிகு கணபதி என்னை மன்னிக்கட்டும். இத்தளத்தில் நீங்கள் எழுதிய பல மறுமொழிகளை நான் ரசித்துள்ளேன்! ஆனால், ஏன் இப்படிப்பட்ட ஒரு தேவையில்லாத கட்டுரை? எதற்காக? அவர்கள்தான் அப்படி இணையதளத்திலும் தெருக்களில் போஸ்டர்களிலும் ‘Invitation towards Islam’, ‘மக்களை அழைக்கிறது அன்பு மறை குரான்’ என்றெல்லாம் எழுதிப்போடுவார்கள். இந்த கிறித்தவர்களைப்போல, முஸ்லீம்களைப்போல நமக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? கண்ணனின் கீதோபதேசம் கத்தி எடுப்பவனுக்குப் புரியுமா? ரவுடித்தனம் செய்பவர்கள் ராமனைப் புரிந்துகொள்வார்களா?

  சலீல் முகமது போன்ற பயங்கரவாதிகளெல்லாம் மறுமொழி எழுதும் அளவுக்கு இந்த தளம் தரம் கெட்டுவிட்டதா?? இவர்களெல்லாம் சில போலி சாமியார்கள் செய்த காமத்தனத்தை எழுதுகிறார்கள். இவர்களின் ‘நபிகள் நாயகம் சல்லல்லாஹு’ ஈடுபட்ட காம விளையாடல்களை எல்லாம் சொன்னால், ஊர் உலகம் நாரிவிடும்! அறுவது வயதாகி இருக்கும்போது எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமக்கொடூரனை இறைவனின் தூதுவன் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் நம்மை இகழ்கிறார்கள். மலத்தின் மீது அமர்ந்துகொண்டு, “உன்னிடம் துர்நாற்றம் வீசுகிறது” என்கிறார்கள்! இந்துத்துவம் பேசுபவர்களை இரத்த வெறியர்கள் என்றால், இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல, மிருகங்கள்.

  தவறு நம்முடையதுதான்! யாரோ வாவர் ஐயப்பனின் தோழன் என்பதால், யாரோ சுல்தான் தன் சகோதரியை சம்பத்குமாரனுக்கு மணமுடித்து துலுக்க நாச்சியார் ஆக்கினான் என்பதால், யாரோ ஒரு அரசன் மத்வாசாரியாரை வணங்கினான் என்பதால், யாரோ ஒரு சித்திக் மசூத் கான் இராகவேந்திரருக்கு மான்சாலை கிராமத்தை வழங்கினான் என்பதால், யாரோ ஓரிரு முஸ்லீம்கள் ஷீரடி சாய்பாபா பக்தர்களாக இருந்தார்கள் என்பதனால், “ஐயோ, இவர்கள் எத்தனை நல்லவர்கள். நாம்தான் தவறாக புரிந்துகொண்டோம்” என்று நாம் பிதற்றுவதால்தான் நமக்கு இந்த நிலமை. கட்டிக்கொடுத்தது எந்நேரமும் எளிதில் எரிந்து சாம்பலாகக்கூடிய அரக்கு மாளிகை என்று தெரிந்தும் “நமது சகோதரன் எவ்வளவு நல்லவன்” என்று துரியோதனனை புகழ்ந்த யுதிஷ்டிரன் போலத்தான் நாமும்!

  முடிவாக, கிறித்தவர்களும் முஸ்லீம்களும் நல்லவர்களாகவே இருந்தாலும், ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமானால் நல்லவர்களாக இருக்கலாம், அவர்கள் பின்பற்றும் மார்க்கமல்ல…

  அவர்களை மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை! விலைபோகாத சரக்கைத்தான் கூவிக்கூவி விற்கவேண்டும், நல்ல பொருட்களை மக்களே தேடிவந்து வாங்குவார்கள், மேற்கத்தியர்கள் கிருஷ்ண பக்தி கழகத்திருக்கு வருவதுபோல!

  ஜெய் ஹிந்த், ஜெய் ஸ்ரீ ராம்!!

 33. Rama அவர்களே,

  நன்றி. நீங்கள் சுட்டிய தளத்துக்கு சென்று பார்த்தேன். அக்பரும் ஆரம்ப காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி மூர்க்கமாக நடந்து இருக்கிறார். அதை மறுக்கவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை நீங்கள் சொல்லிய தளத்திலேயே எழுதியுள்ளனர்.

  //In the later part of his rule Akbar founded a new religion Din-e-Ilahi in which he vaguely tried to combine practices of Islam and Hinduism. //

  //He observed Muslim, Hindu and Parsee festivals. //

  இப்படி வெவேறு மதப் பண்டிகைகளை அனுஷ்டிக்க வேண்டும் என்றால் அவரிடம் மத சகிப்புத் தன்மை மட்டும் அல்லாது, பிற மதங்களை புரிந்து கொள்ளும் , அனுசரிக்கும் தன்மையும் இருந்தது , இது எவ்வளவு பெரிய விடயம் , அதுவும் அவர் எந்த பின்னணியில் இருந்து வந்தவர் என்று யோசித்து பாருங்கள்.

  ஒரு அலாவுதீன் கில்ஜியாகவோ, அவரங்கசீபாகவோ வாழ்ந்திருக்க அக்பரால் முடிந்திருக்குமே, ஆனால் வெறுப்புணர்ச்சி இல்லாமல் பிற மதங்களைப் பற்றி அறிந்துகொண்டு இருக்கிறார்.

  அவர் ஒரு அபூரவமான மனிதர். உலக நல்லிணக்க வரலாற்றில் அவருக்கு முக்கிய இடம் உண்டு. அக்பர் மீது குற்றம் சொல்லலாம். ஆனால் அவரின் மத சகிப்புத் தன்மையில், மத நல்லிணக்கத்தில் குறை சொல்ல முடியாது.

  ஒருவரைக் குற்றம் சொல்லுவது எளிது, அவரை நல்லவராக மாற்றுவதுதான் கடினம். இந்து மதத்தின் சிறப்பு என்னவென்றால், அது மனிதர்களின் மனதோடு, அறிவோடு , இதயத்தோடு உறவு கொண்டு அவர்களை நன்மைப் பாதைக்கு கொண்டு வரும் தன்மை உடையது. உருவிய வாளையோ, ஏமாற்று உத்திகளையோ, பணம் காசையோ வைத்து இந்து மதம் செயல்படவில்லை.

  அக்பரைப் போல இன்னும் பல முஸ்லீம்களும் சிந்தனைப் பாதைக்கு வந்து, எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களைப் புரிந்து கொண்டு, பிற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சி இல்லாமல் வாழ்ந்தால் உங்களுக்கு அதில் ஒப்பில்லையா?

 34. அன்புக்குரிய நண்பர்களே,

  நீங்கள் எல்லோரும் பல்வேறு விடயங்களைக் கற்று விவாதிக்கிறீர்கள். இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் எந்த ஒரு கோட்பாட்டையும் முன் வைத்து , அதற்க்கு முக்கியத்துவம் குடுத்து விவாதிக்கலாம்.புதியதாக ஒரு கோட்பாட்டைக் கூட இந்து மதத்தின் சார்பாக முன் வைக்கலாம், அது உண்மையாக இருக்குமா என்று மற்றவர்கள் ஆராய்ந்து பார்ப்பார்கள். இந்து மதம் சுதந்திரமான மதம். த்வைதக் கோட்பாடும் இங்கே உண்டு, அத்வைதக் கோட்பாடும் இங்கே உண்டு. இதில் உததமம், அதமம் என்று எதுவும் இல்லை நண்பர்களே. சுவாமி விவேகானந்தரே இதை தெளிவாக சொல்லி சாதாரண மனிதனுக்கு த்வைத நிலையில் நோக்குவதே எளிதான ஒன்று, இவ்வாறு த்வைதம் மிக உபயோகமாக உள்ளது என்று சொல்லி உள்ளார்.

  ஆனால் விவாதத்தின் போது ஒரு கோட்பாட்டின் உண்மையான கருத்தை மறைத்து, வேறு வழிக்கு இழுப்பது இந்து மத முறை அல்ல நண்பர்களே.

  பிரம்மத்தை தவிர மற்ற எல்லாமே அசத்தியம் என்றால் பிரம்மத்தை தவிர வேறு எதுவுமே உண்மையில் இல்லை என்றுதான் அத்தம். சிருஷ்டி என்பதே ஒரு திருஷ்டிதான் என்பது அத்வைதத்தின் கோட்பாடு ஆகும்.

  பகுத்தறிவு அடிப்படையிலே ஆரய்ந்தால் கூட
  நமது தாயார், தகப்பனார், பாட்டன், பாட்டி ஆகியோர் இப்போது எங்கே. நீங்களே சிறுவனாக கிரிக்கெட் விளையாடிய காலத்தை எண்ணுங்கள். கள்ளங் கபடமற்ற அந்த சிறுவன் எங்கே. நீங்கள் கையிலே தூக்கி, அதோ பார் மாடு, அதோ பார் நாய் என்று வேடிக்கை காட்டி சிரித்து விளையாடிய குழ்நதை இன்று படித்து முடித்து அமேரிக்காவில் பணி செய்கிறாள். நீங்கள் தூக்கி வைத்து விளையாட்டுக் காட்டி மகிழ்ந்த சிறுமி எங்கே?

  சிறுமி மாறி பெண்ணாகி விட்டால் என்றால் அப்போது நூறு வருடத்துக்கு பின அந்தப் பெண் எங்கே? பெண்ணாக இருந்தது என்னவாயிற்று.

  பெண்ணாக இருந்தது முன்பு என்னவாக இருந்தது, பிறகு எப்படி பெண்ணாக மாறியது, பிறகு மீண்டும் எப்படி பெண் தன்மை இல்லாமல் போனது, ஆத்மா மாற்றம் இல்லாமல் இருக்கிறது என்றால், பெண்ணாக இருந்தது என்பது உண்மையில் இல்லை என்றுதானே ஆகிறது.

  நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் குடும்பத்தை எனது தந்தை சினிமா பார்க்க அழைத்து செல்வார். என் தம்பி செகண்ட் ஷோ தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான். செகண்ட் ஷோ படம் முடிந்தவுடன் தியேட்டரை விட்டு வர மாட்டான். கூட்டம் எல்லாம் கலைந்து கடைசி நபர் தியேட்டரை விட்டு செல்லும் வரை தியேட்டரிலேயே நிற்பான். ஏன் என்று பார்த்தல் தியேட்டரில் செகன்ட் ஷோ நடித்து விட்டு நடிகர்கள் வீட்டுக்கு செல்வார்கள். அப்போது அவர்களை நேரிலே பார்க்க முடியும் என்று அவன் நினைத்து இருக்கிறான். திரைக்குப் பின்னால் இருந்து நடிகர்கள் நடிப்பதைத் தான் நாம் பார்க்கிறோம் என்று அவன் கருதி இருக்கிறான். உண்மையில் திரைக்குப் பின் யாரும் இல்லை என்பதை அவன் விரைவிலேயே புரிதல் செய்து கொண்டான். இதைதான் உலகம் ஒரு நாடக மேடை என்று அறிஞர் சொல்கின்றனர்.

  காண்பது அத்தனையும் வெறும் தோற்றமே, உண்மையில் அவை இல்லை, என்பதே ஆதி சங்கரரின் அச்சு அசலான அத்வைதம் என்பதை அனைவரும் அறிவர்.

  கனவில் வருவது உண்மையாகுமா, அது கனவு என்பது விழிப்பு நிலையை அடையும் போது தானே தெரிய வரும் என்கிற ஆதி சங்கரரின் கோட்பாடு, உலக தத்துவ சிந்தனையாளர்களை வியப்பும் அதிர்ச்சியும் அடைய வைக்கிறது.

  ஆனால் நண்பரகளே, நீங்கள் அனைவரும் மிகவும், மதித்து போற்றி வணங்கும் “கடவுளு”க்கு இந்தக் கோட்பாடுதான் கை கொடுக்கும். இல்லையேல் காலம் காலமாக மக்கள் அனைவரும் அல்லர் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், துன்பங்கள் உண்மையே, அனைத்துக்கும் உங்களின் கடவுள்தான் கரணம், அவர் தான் பழிகாரர் என்கிறபடியாகவே ஆகும்.

 35. களிமிகு கணபதி அவர்களே,

  கடவுள் கோட்பாட்டில் மதங்களுக்கு இடையிலே இணக்கம் வருவது மிகக் கடினம் !

  ஏனெனில் யாருமே பார்க்காத கடவுளுக்கு அவரவர் இஷ்டப்படி வியாக்கியானம் கொடுக்கலாம்.

  “திரவநிலையில் உள்ள தண்ணீரின் வெப்ப நிலை ஒருபோதும் நுறு டிகிரி செல்சியசுக்கு மேல் போக முடியாது” என்று ஒருவர் சொன்னால், அது சரியா என்று சரி பார்த்துக் கொள்ள முடியும். தண்ணீரை அடுப்பில் ஏற்றிக் காய்ச்சினால் தெரிந்து விடும்.

  தண்ணீர் இருக்கிறது ஆராய்கிறோம், கடவுள எங்கே போய் ஆராய்வது ?

  எனவே இந்த கடவுள் கோட்பாட்டு சமரச முயற்சிகள் இன்னும் பிணக்கை அதிகப் படுத்தி விடக் கூடும். என் கடவுளுக்கு இணை வைத்து விட்டார்களே என்று ஆவேசப் பட ஆரம்பித்து விடுவார்கள். எனவே இந்தக் கடவுள் கோட்பாட்டை விட கலந்து பழகுவது உபயோகம் தரும்.

  ஈத் திருநாள் அன்று இந்துக்கள் முஸ்லீம்களுக்கு வாழ்த்து சொல்லி பரிசு வழங்கலாம். தீபாவளி அன்று இஸ்லாமிய சமூக சிறுவருக்கு பட்டாசு மத்தாப்பு இனிப்பு வழங்கலாம். இவை வெறுப்புணர்ச்சியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்தும்.

 36. “அல்லாஹோ அக்பர்” என்றால் அல்லா மிகப் பெரியவர் என்று அர்த்தம்.
  இங்கு மொகலாய அரசன் அக்பர் பற்றிய பேச்சு எதற்கு வந்தது?
  ஹிந்து சமயம் பற்றிய புரிதல் அவருக்கு இருந்ததா என்ன? எத்தனையோ கொடுமைகள் செய்தும் ஆசைகள் காட்டியும் பெரும்பாலான ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே நீடித்தமையால் சாமானிய ஹிந்து ஜனங்களின் அந்த மன உறுதியைக் கண்டு அவர்களை சுமுகமாக ஆள்வதெனில் அவர்களின் மத விஷயத்தில் சிறிது தாராளமாக நடந்துகொள்வதே புத்திசாலித்தனம் என்ற ராஜ தந்திரம் அக்பருக்கு இருந்தது, அவ்வளவுதான். மற்றபடி ஹிந்து சமய தத்துவங்களில் அக்பருக்குப் புரிதல் இருந்ததாகக் கூற இயலாது. அக்பரின் தீன் இலாஹி பற்றி விவாதித்தால் விவரங்கள் தெரிய வரலாம்
  அதிலும் ஹிந்து சமயத் தத்துவங்களின் தாக்கம் எதுவும் இல்லை. பிற நம்பிக்கைகள் மீதான சகிப்புத்தன்மை என்ற ஒரு அம்சம் மட்டுமே அதில் உண்டு. மற்றபடி அதுவும் செய், செய்யாதே என்பனவற்றின் தொகுப்புதான். எல்லாம் எந்தப் பிள்ளை இருக்கிறதிலேயே நல்ல பிள்ளை என்று கேட்டால் அதோ கூரைக்குக் கொள்ளி வைக்கிறதே அந்தப் பிள்ளை என்று சொல்கிற கதை மாதிரிதான்.
  -மலர்மன்னன்

 37. //மத வெறி அதிகமாக இருந்தால் ஒரு பிளைட் பிடித்து பாலஸ்தீனுக்கு ஓடி விடு. உங்களுக்கு சரியான பாடம் கற்றுக் குடுக்கக் கூடியவன் இஸ்ரேலியனே-திருச்சிக்காரன்//
  உங்கள் ஆவேசத்திற்குத் தலை வணங்குகிறேன்.
  -மலர்மன்னன்

 38. அனைவரும் எல்லா மதங்களையும் புரிந்து கொண்டால் நல்லது.

  ஆனால் அது நடைமுறை சாத்தியமில்லை.

  எனவே, நமக்கு தெரியாத விஷயங்களை பற்றி நாம் சான்றிதழ் கொடுக்ககூடாது.

  ஆபிரகாமிய மதங்களை பொருத்தமட்டில், என்ன பிரச்சினை என்றால் , தன் வழி நல்லது என்று சொல்வதுடன் நிறுத்தி கொள்ளாமல், தன் வழி மட்டுமே உயர்ந்தது என்று சொல்லி , பிற வழிகளையும், பிற மதங்களையும் , மட்டமாகவும், இழிவாகவும் பேசும் மதநூல்களை அவர்கள் பின்பற்றி வருவதால் , உருவம் மூலம் இறைவழிபாடு செய்வோரை இகழ்ந்து, கொலை செய்து , அழித்துள்ளனர்.

  மேலும் தங்களை தவிர, பிற ஆபிரகாமிய மத மக்களையும் அழித்துள்ளனர்.

  நாத்திகர்களையும் அழித்துள்ளனர்.

  எனவே, கடவுள் நம்பிக்கை உடையோரும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தங்கள் நம்பிக்கையை தங்களிடமே வைத்துக்கொண்டு, பிறர் மீது திணிப்பதை கைவிடவேண்டும். முக்கியமாக , மதத்தின் பெயரால் பெண்களை கொடுமைப்படுத்தி, இழிவு செய்வதை நிறுத்தவேண்டும்.

  பெண்கள் காரோட்டக்கூடாது ,

  பெண்கள் ஆணைப்போல ஒரே சமயத்தில் ,ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் வாழக்கூடாது.

  ஆனால் ஆண் மட்டும் ஒரே சமயத்தில் பல மனைவியருடன் வாழலாம் என்று , ஆணாதிக்க அயோக்கிய தனங்களை நியாயப்படுத்தக்கூடாது.

  கடவுளால் ஒரு பிரச்சினையும் இல்லை. மனிதர்களே பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.

  காரோட்டும் பெண்களை சிறையில் தள்ளிய கொடுங்கோலர்கள் , கொடிய நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

  பெண்கள் பள்ளிகளை இடித்து, பெண்கள் படிக்க கூடாது என்று சொல்லும், ஆபிரகாமிய , தாலிபானிய காட்டுமிராண்டிகள் , கொடிய நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

  பிறருடைய நம்பிக்கைகளை கேவலமாக பேசும், எழுதும் எவனாயினும் நிச்சய நரகமே.

  இவர்கள் திருந்தவேண்டும்.

 39. //மத வெறி அதிகமாக இருந்தால் ஒரு பிளைட் பிடித்து பாலஸ்தீனுக்கு ஓடி விடு. உங்களுக்கு சரியான பாடம் கற்றுக் குடுக்கக் கூடியவன் இஸ்ரேலியனே-திருச்சிக்காரன்//

  உங்கள் ஆவேசத்திற்குத் தலை வணங்குகிறேன்.
  -மலர்மன்னன்

 40. திரு களிமிகு கணபதி!
  //சலீல் முஹம்மத் போன்ற இஸ்லாமியர்களின் தவறான புரிதல்களை, ஒரு நல்ல, மார்க்கம் பற்றிய தெளிந்த அறிவு உடைய இஸ்லாமியரான நீங்கள்தான் திருத்த வேண்டும்.//

  திரு திருச்சிக்காரன்!
  //மத வெறி அதிகமாக இருந்தால் ஒரு பிளைட் பிடித்து பாலஸ்தீனுக்கு ஓடி விடு. உங்களுக்கு சரியான பாடம் கற்றுக் குடுக்கக் கூடியவன் இஸ்ரேலியனே.//
  //அமைதிப் பூங்காவான் இந்தியா நல்லிணக்க நாடு. இங்கே வந்து உன் மத வெறியை புகுத்த முடியாது.//

  திரு கோமதி செட்டி!
  // சலீல் முஹம்மத் , நீங்கள் எழுதியிருக்கும் உரை நடை பார்க்கும் பொழுதே தெரிகிறது. உங்கள் கழுத்தில் சிலுவை தொங்கி கொண்டு இருக்கிறது என்று… எனினும் நல்ல ஒரு முயற்சி, அடுத்த முறை நீங்கள் சர்ச்க்கு போகும் பொழுது நன்றாக பயிற்சி எடுத்து பிறகு எழுதுங்கள்//

  எனவே சலீல் முஹம்மத் என்ற போலிப் பெயரில் எழுதி கலகம் உண்டாக்க நினைத்தவருக்கு திரு கோமதி செட்டி அவர்களே சரியான பதில் கொடுத்துள்ளார்கள். குர்ஆனையும் முகமது நபியையும் உளப் பூர்வமாக பின்பற்றக் கூடிய எந்த முஸ்லிமும் பிறமதத்தவரை வன்மத்தோடு பார்க்க மாட்டான். மற்ற நம்பிக்கைகளை கேலி செய்ய மாட்டான். இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஒரு ஆண் பெண்ணிலிருந்துதான் மனித குலம் பல்கிப் பெருகியிருக்கிறது. அந்த நம்பிக்கையின் படி களிமிகு கணபதியும், அரவிந்தன் நீலகண்டனும், திருச்சிக்காரனும், மலர்மன்னனும், தமிழனும் எனது ஒன்று விட்ட சகோதரனே! அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! இவ்வாறு இருக்கும் போது நான் எவ்வாறு மற்ற மதத்தவரை வெறுப்பேன்?

  மத நம்பிக்கைகளுக்குள் ஒற்றுமை வந்து விடக் கூடாது என்று திட்டம் போட்டு செயல்படுபவர்களில் சலீல் முஹம்மத் என்ற பெயரில் எழுதுபரும் ஒருவர். திருச்சிக்காரன் சொல்வது போல் தமிழக மண்ணில் மதத்தின் பெயரால் கலவரம் உண்டு பண்ண நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது.
  ———————————————————————
  திரு சாரங்!

  இஸ்லாமிய மார்க்கத்தின் மேல் இத்தனை வன்மம் ஏன்? மேலும் குர்ஆன் வசனங்களாக நீங்கள் வைக்கும் பல தகவல்கள் பிழையானவை. அவற்றை பட்டியலிடுகிறேன்.

  //“The sun … runneth unto an appointed term.”- 13:2 – சூரியன் பூமியை சுத்துது//
  ‘நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.’-குர்ஆன் 13:2

  //he sun “floats” in an orbit around the earth. 21:33//
  ‘அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’ – குர்ஆன் 21:33

  //“He … spread out the earth.” – 13:3 பூமி தட்டை
  All things We have created by pairs – அப்போ பாக்டீரியா எல்லாம் ?//
  ‘அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான்’- குர்ஆன் 13:3

  //Lewd women are to be confined to their houses until death. 4:15//
  ‘உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் இறைவன் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்.’- குர்ஆன் 4:15

  //If any of your women get lewd, cut off their inheritance. 4:19//
  ‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் வெளிப்படையான வெட்கக் கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் இறைவன் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.’ -குர்ஆன் 4:19

  மேலே உள்ளது நீங்கள் குர்ஆனுக்கு கொடுத்த விளக்கம். அதன் கீழே வரும் விளக்கம் குர்ஆனின் உண்மையான விளக்கம்.

  குர்ஆன் இவ்வளவு தெளிவாக வசனங்களை குறிப்பிடடிருக்க நெஞ்சறிந்து இவ்வாறு அவதூறாக ஏன் எழுத வேண்டும் சாரங்! இதனால் எதை சாதிக்க போகிறீர்கள். நேரம் கிடைத்தால் மற்ற பொய்களுக்கும் பதில் தருகிறேன் சாரங்குக்கு!

 41. நண்பர் சுவன பிரியன் அவர்களே

  எனக்கு இஸ்லாத்தின் மீது எந்த வன்மமும் இல்லை – உண்மையை உண்மை என சொல்வதி வன்மம் இருக்குமா என்ன.

  உங்களது முழு பதிலையும் (எழுதினால்) படித்து விட்டு அப்புறம் பதில் எழுதுகிறேன்.

  இத்னருக்கு முன் சலீல் முஹம்மதிற்கு ஒரு மறு மொழி எழுதினேன் – அதில் புனித குர்ஆனில் வரும் பல புனிதமான விஷயங்களை பற்றி எழுதி இருந்தேன். அந்த புனிதத்வத்தை தாங்க முடியாமலோ என்னவோ, பெண்களும் படிக்கிறார்களே என்று எண்ணியோ என்னவோ ஆசிரியர் குழுவினர் அதை பிரசுரிக்கவில்லை. அந்த பதிலில் இருந்து மிக மென்மையான வசனங்களை மட்டுமே எடுத்து உங்களுக்கு பதில் எழுதி இருந்தேன்.

  நீங்கள் கொடுத்த பதில் – யாரோ தமிழாக்கம் செய்யும் பொது அட்ஜஸ்ட் செய்துள்ளனர்

  //
  //he sun “floats” in an orbit around the earth. 21:33//
  ‘அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’ – குர்ஆன் 21:33

  //

  உண்மையான மொழி பெயர்ப்பு
  //
  21:33 And He it is Who created the night and the day, and the sun and the moon. They float, each in an orbit.
  //

  இது தெளிவாக சூரியனும் சந்திரனும் பூமியை சுற்றி வருகின்றன என்று கூறுகிறது.

  இதனுடன் சேர்த்து படியுங்கள்

  27:61 Is not He Who made the earth a fixed abode, and placed rivers in the folds thereof, and placed firm hills therein, and hath set a barrier between the two seas ? Is there any God beside Allah ? Nay, but most of them know not!

  36:40 It is not for the sun to overtake the moon, nor doth the night outstrip the day. They float each in an orbit.

  நீங்கள் வசதியாக தமிழில் மொழிபெயர்த்து கொண்டது

  //
  //“He … spread out the earth.” – 13:3 பூமி தட்டை
  All things We have created by pairs – அப்போ பாக்டீரியா எல்லாம் ?//
  ‘அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான்’- குர்ஆன் 13:3
  //

  spread out என்பதற்கு தமிழில் விரித்தான் என்று உள்ளது – விரித்தான் என்பதற்கு நிர்மாணித்தன் என்று பொருள் சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் அறிஞர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை பாருங்கள் “he created the earth/ he established” என்பது போல இல்லாமல் spread out என்பது போல சரியாக மொழிபெயர்த்துள்ளனர் – பல மொழி பெயர்ப்புகளிலும் இது தான் உள்ளது.

  13:3 And He it is Who spread out the earth and placed therein firm hills and flowing streams, and of all fruits He placed therein two spouses (male and female). He covereth the night with the day. Lo! herein verily are portents for people who take thought.

  இதையும் சேர்த்து பாருங்கள்
  51:49 And all things We have created by pairs, that haply ye may reflect.

 42. திரு. சுவனப்பிரியன் அவர்களே,

  மத நல்லிணக்கத்தை தொடர்ந்து கடைப் பிடித்து அக் கருத்தை உலகுக்கு எடுத்து சொல்லி வரும் நாடு இந்தியா. இந்து மத வேதங்கள், கீதை, சம்ஸ்கிரித இலக்கியங்கள் , தமிழ் இலக்கியங்கள் உட்பட எதிலும் பிற மதங்களுக்கு, இனங்களுக்கு, மொழிகளுக்கு எதிரான எந்த ஒரு வெறுப்புக் கருத்தும் கிடையாது.

  ஆதிகால சித்தர், முனிவர் முதல் கிருஷ்ணர், அக்பர், விவேகானந்தர், காந்தி உள்ளிட்டோர் , மேலும் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலான இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த இந்தியன் ஒவ்வொருவரும் மத நல்லிணக்க கோட்பாட்டை வளர்த்துள்ளனர்.

  இஸ்லாத்தை நாங்கள் வெறுக்கவில்லை. ஆக்க பூர்வமாக அணுகுகிறோம், மது அருந்தக் கூடாது, சூதாடக் கூடாது, வட்டி வாங்கக் கூடாது போன்ற பல நல்ல கருத்துக்கள் இஸ்லாத்தில் உள்ளன. மத நல்லிணக்க அடிப்படையில் தொழுகையில் கலந்து கொள்ளவும், ரமதான் நோன்பில் பங்கெடுக்கவும் தயார். ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணையும் சகோதரியாகவும், இஸ்லாமியரை சகொதரராக்கவுமே கருதுகிறோம். இன்னும் எந்த வகையிலே இஸ்லாத்தோடு இணக்கமாக இருக்க முடியும் என்று சொல்லுங்கள், அதையும் கடைப் பிடிப்போம்.

  இதை நாம் சொல்லுகிர நேரத்தில், இஸ்லாமிய சகோதரர்கள் பிற மதங்களை எப்படி அணுகுகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள், “சிலை வணக்கம் செய்யாதே, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இஸ்லாம் மட்டுமே உண்மையான மதம்” என்று வகையிலே பிற மதத்தவருக்கு அறிவுரை சொல்லித் தான் எழுதுவதைக் காண்கிறோமே அல்லாது,

  “இஸ்லாமிய சகோதரர்களே, பிற மதங்களை நாம் வெறுக்க வேண்டாம், அவற்றுடன் நாம் அமைதியாக இணக்கமாக வாழ முடியும்” என்கிற வகையில் இஸ்லாமியரை நல்லிணக்கப் பாதைக்கு அழைக்கும் வகையில் எழுதுவதை நான் இதுவரை பார்க்கவில்லை.

  இந்துக்கள் சிலை வணக்கம் செய்தால் இஸ்லாமியருக்கு ஏன் அவ்வளவு வெறுப்பும் ஆவேசமும் வர வேண்டும்? கிறிஸ்தவர் இயேசுவை தொழுதால் உங்களுக்கு என்ன பிரச்சினை. இஸ்லாமியர் வெறும் சுவரையோ, வெளியையோ நோக்கி தொழுவதை யாரும் வெறுக்கவோ, இகழவோ இல்லையே!

  எனவே உங்களைப் போன்றவர்கள் ஒரு ப்ளாக் (Blog) ஆரம்பித்து அதிலே இஸ்லாமியர் உள்ளிட்ட அனைவரையும் நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வரும் படியான கருத்துக்களை எழுதினால், அது இஸ்லாமிய சமூகத்துக்கு நீங்கள் செய்த சிறப்பான உதவியாக இருக்கும், உலகத்துக்கு நீங்கள் செய்த மிகப் பேருதவியாக அமையும்.

  இஸ்லாத்தை பற்றி நாங்கள் அறிந்து இருக்கிறோம். இஸ்லாத்தில் ஐந்து வேளை தொழுகை உள்ளிட்ட ஆன்மீக முறைகள் உள்ளன. எனவே இஸ்லாமியர்கள் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவருடனும் இணக்கமாக வாழ முடியும், அந்த வகையில் நீங்கள் எழுதுவது முயல்வது மிக சிறப்பானது என்பதை நட்பு அடிப்படையில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

  போர் முனைப்பு கருத்துக்கள் எல்லாம் இஸ்லாத்துக்கு இனி தேவை இல்லை, உலகம் அமைதிப் பாதையை, நாகரீகப் பாதையை நோக்கி செல்கிறது என்பதை நீங்கள் எழுதுவது வருங்கால இஸ்லாமிய சமூகத்துக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்

 43. //…ஆனால், ஏன் இப்படிப்பட்ட ஒரு தேவையில்லாத கட்டுரை? எதற்காக? அவர்கள்தான் அப்படி இணையதளத்திலும் தெருக்களில் போஸ்டர்களிலும் ‘Invitation towards Islam’, ‘மக்களை அழைக்கிறது அன்பு மறை குரான்’ என்றெல்லாம் எழுதிப்போடுவார்கள்….//

  பாலாஜி அவர்களே,

  உங்களது நியாயமான கவலையைப் புரிந்துகொள்கிறேன்.

  நிறுவனத்தன்மை உள்ள மத அமைப்புக்கள், பிறரிடம் எந்த விஷயங்களைச் சொல்லக்கூடாது, தங்களை எப்படிக் காட்டிக் கொள்ள வேண்டும் எனக் கவனமாக இருப்பவை. ஏனெனில், அவை பிறர்-நாம் எனப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, அந்தப் பிரிவின் மூலம் வளத்தையும் வாழ்வையும் பாதுகாப்பையும் தேடுபவை அவை.

  பிரிவுபடுத்தும் எல்லைகளைப் பாதுகாப்பதே அவற்றின் நோக்கமும், செயல்முறையும், கொள்கைகளும், சொல்லுமாகிறது. அவர்களைப் பொறுத்தவரை, பிரிவினையைப் பாதுகாக்கும் எதுவும் சரியே. சரியான எதுவும் உண்மையே.

  பிறர்-நாம் என்ற பிரிவினைகள் அற்ற சனாதன தர்மம் அப்படி இருக்க முடியாது. மேலும், நாம் செயல்முறையில் எதை நடத்துகிறோமோ, அதைச் சொல்வதில் தவறு இல்லை. சொல்லவேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், உண்மையே மானுட எல்லைகளைத் தகர்க்கிறது. மானுட எல்லைகளைத் தகர்க்கும் தவறும் உண்மையே.

  பிரிவினைகள் அற்ற நமது உலகின் பாதுகாப்பும் வளமும் பிரிவினை உள்ளவர்களால் அழிக்கப்படும்போது, நாம் நம் உலகின் பாதுகாப்பிற்காக அவர்களது எல்லைகளின் முன் நின்று போரிடுகிறோம்.

  ஆனால், அந்த எல்லைகள் அவர்களது எல்லைகளே. நம்முடையவை அல்ல.

  .

 44. சுவனப்பிரியன் ஜி,

  நாம் செய்வதாகச் சொல்வதும், செய்வதும் ஒன்றாக இருக்குமானால் நமக்கிடையே நன்னம்பிக்கை இயல்பாக எழும்.

  நம் மதங்களின் நல்ல கூறுகள் நம்மை ஒன்றிணைக்கட்டும். அதுவே இந்துத்துவம்.

  பதிலளித்தமைக்கு நன்றிகள்.

  .
  .

 45. அரங்கசாமி ஜி,

  நீங்கள் தரும் ஆலோசனையும், வழிகாட்டலும் உதவிகரமானவை. அவசியமானவை.

  நன்றிகள்.

  .

 46. கோமதி செட்டி
  21 July 2011 at 1:18 pm

  சலீல் முஹம்மத் ,
  நீங்கள் எழுதியிருக்கும் உரை நடை பார்க்கும் பொழுதே தெரிகிறது. உங்கள் கழுத்தில் சிலுவை தொங்கி கொண்டு இருக்கிறது என்று… எனினும் நல்ல ஒரு முயற்சி, அடுத்த முறை நீங்கள் சர்ச்க்கு போகும் பொழுது நன்றாக பயிற்சி எடுத்து பிறகு எழுதுங்கள் 🙂

  🙂

 47. //…பிரிவினைகள் அற்ற நமது உலகின் பாதுகாப்பும் வளமும் பிரிவினை உள்ளவர்களால் அழிக்கப்படும்போது, நாம் நம் உலகின் பாதுகாப்பிற்காக அவர்களது எல்லைகளின் முன் நின்று போரிடுகிறோம்.

  ஆனால், அந்த எல்லைகள் அவர்களது எல்லைகளே. நம்முடையவை அல்ல….//

  தத்துவப் பித்து இருக்கலாம். ஆனால், தத்துப்பித்து என்று பேசக்கூடாது.

  இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி, கட்டுரைக்கு விளக்கங்கள் எழுதி….

  இதற்குப் பதில் “வாருங்கள். வந்து எங்களை ஆப்படியுங்கள்” என்று ட்வீட் செய்திருக்கலாம்.

  எத்தனை கஜினி முகம்மது வந்தாலும் திருந்தமாட்டீங்க.

  .

 48. அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் பண்ணி பார்திருக்கிறார் நல்ல முயற்சி. ஒட்டுமா என்பது சந்தேகமே ?

 49. அன்புக்குரிய சுவனப்பிரியன்,

  நாம் அனைவரும் சகோதரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆதாம்-ஏவாள் கதையால் அல்ல. பரிணாம இயக்கத்தால். தங்கள் வருகையும் கருத்துகளும் இங்கு நீங்கள் விவாதிப்பதும் ஆனந்தம் அளிக்கின்றன. நல்ல உரையாடல்கள் வளரட்டும்.திறந்த மனதுடன் உரையாடுவோம் விவாதிப்போம்.

  நன்றி.
  அன்புடன்
  அநீ

 50. அன்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன்!

  //நாம் அனைவரும் சகோதரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆதாம்-ஏவாள் கதையால் அல்ல. பரிணாம இயக்கத்தால். தங்கள் வருகையும் கருத்துகளும் இங்கு நீங்கள் விவாதிப்பதும் ஆனந்தம் அளிக்கின்றன. நல்ல உரையாடல்கள் வளரட்டும்.திறந்த மனதுடன் உரையாடுவோம் விவாதிப்போம்.//

  பரிணாமவியல் என்பது அறிவியல் நிரூபணத்துக்கு உள்ளே வராத ஒன்று. எப்படி ஐன்ஸ்டீனின் தியரியை ஐயம் இல்லாமல் ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டு கொண்டோமோ அது போன்ற ஒன்றல்ல டார்வினின் பரிணாம தத்துவம். இன்றுவரை பரிணாமவியலைப் பற்றி அறிவியலாளர்களால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியவில்லை. அப்படி இருக்க அதனை நாம் எவ்வாறு ஒத்துக் கொள்ள முடியும்? ஒருக்கால் டார்வினின் தத்துவம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அனைத்து உயிரினங்களின் முதல் மூல உயிரை உருவாக்கியது யார்? என்ற கேள்வியும் வருகிறது.

  ஆதிகாலம் தொட்டு இறை வேதங்கள் உலகம் முழுவதும் உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டே வந்துள்ளது. எனவேதான் அனைத்து வேதங்களின் மூலக் கருத்துகளும் ஏறத்தாழ ஒத்தே வருகிறது. இறப்புக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று மனிதன் முழுவதுமாக நம்ப ஆரம்பித்து விட்டால் அந்த இறைவனிடம் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயத்தில் மனிதர்கள் தவறுகள் செய்வதில் இருந்து விலகிக் கொள்கிறார்கள்.

  தங்களின் மார்க்கங்களை தவறாக விளங்கிக் கொண்டு வன்முறையின் பக்கம் சென்ற சொற்ப நபர்களைப் பற்றி இங்கு நான் பேசவில்லை.

  எனவே நிரூபணம் ஆகாத டார்வினின் தத்துவத்தை விட நமது வேதங்கள் சொல்லும் உண்மையான கருத்துகளின் பால் நாம் நமது சிந்தையை செலுத்தினால் மனித குலம் மீட்சியுறும்: மேன்மையுறும்:

 51. நண்பர் சுவனப்ரியன் அவர்களே

  //
  பரிணாமவியல் என்பது அறிவியல் நிரூபணத்துக்கு உள்ளே வராத ஒன்று.
  //
  //
  ஆதிகாலம் தொட்டு இறை வேதங்கள் உலகம் முழுவதும் உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டே வந்துள்ளது. எனவேதான் அனைத்து வேதங்களின் மூலக் கருத்துகளும் ஏறத்தாழ ஒத்தே வருகிறது
  //

  இந்திய வேத அவேத (புத்த, ஜைன) தர்சனங்கள் அனைத்தும் பரினாமவியலையே முன் வைக்கின்றன. இங்கே உயிர்களை இறைவன் படைப்பதில்லை.

  தப்பு செய்தால் இறந்த பின் கடவுளிடம் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்பதற்காக நல்லவனாக வாழ்வாது அதமாமான ஒரு வழி இல்லையா?

  தப்பு செய்து விட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணமும் இங்கிருந்து தான் உருவாகும்.

 52. //இறப்புக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று மனிதன் முழுவதுமாக நம்ப ஆரம்பித்து விட்டால் அந்த இறைவனிடம் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயத்தில் மனிதர்கள் தவறுகள் செய்வதில் இருந்து விலகிக் கொள்கிறார்கள்.//

  //தப்பு செய்தால் இறந்த பின் கடவுளிடம் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்பதற்காக நல்லவனாக வாழ்வாது அதமாமான ஒரு வழி இல்லையா?//

  இது ஒரு நல்ல கருத்து. திரு. சாரங்கை பாராட்டுகிறேன்.

  தண்டனை கிடைக்கும் என்று பயந்துதான் ஒருவன் நல்லபடியாக வாழ வேண்டுமா?

  இன்னொரு மனிதனுக்கு ஹிம்சை தரக் கூடாது, அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று அன்பின் அடிப்படையில் நாகரீகத்தின் அடிப்படையில் மனிதர் நல்லவராக வாழ முடியும் என்பது மனதுக்கு தோன்றவில்லையா?

  காட்டுமிராண்டி பழக்க வழக்கங்களில் தோய்ந்து இருந்த மக்களை ஒழுங்கு படுத்த உருவாக்கிய பயமுறுத்தல் கோட்பாடுகள் நாகரீக சமுதாயத்திற்கு பொருந்துமா?

 53. //நமது வேதங்கள் சொல்லும் உண்மையான கருத்துகளின் பால் நாம் நமது சிந்தையை செலுத்தினால் மனித குலம் மீட்சியுறும்: மேன்மையுறும்//

  மனித குலம் மீட்சியுற மேன்மையுற , அதை அதன் பாட்டுக்கு விட்டால் போதும், மனிதர்கள் சிந்தனை அடிப்படையில் தாங்களாகவே மேன்மையுறுவார்கள்.

  இது கடவுளின் கட்டளை இதை அப்படியே ஒத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் நீ நிராகரிப்பவன், உன் மேல் தாக்குதல் நடத்துவேன், போரில் உயிருடன் சிக்கியவர்களை அடிமையாக வைத்துக் கொள்வேன், உன்னை அடி பணிய வைத்து உன்னிடம் கட்டாய மத வரி வாங்குவேன் என்ற கோட்பாடுகள் தான் மனிதர் மேன்மையுறும் வழியா ?

 54. வேதமோ, கீதமோ எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஒத்துக் கொள்ள இயலாது. அதை ஆராய்ந்து அதில் உண்மை இருக்கிறதா, நன்மை இருக்கிறதா என்று சரி பார்த்து தான் பின்பற்ற இயலும். இதை அப்படியே பின்பற்று என்வது தான் தெய்வீகமா?

  கீழே காணும் கோட்பாடு இதை ஆராய்ந்து, இதில் நன்மை இருந்தால் மட்டும் இதை எடுத்துக் கொள்வோம்.

  //அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக, பகைமை இல்லாதவனாக)

  சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

  நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

  ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

  க்ஷமீ (பிறர் தனக்கு செய்யும் தவறுகளை பொறுத்துக் கொள்பவனாய்)

  ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

  யோகி (யோக நெறியில் நிற்பவன்)

  யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

  த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

  மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

  யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

  ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

 55. சரி டார்வின் கோட்பாடு நிரூபணம் ஆகவில்லை என்று வைத்துக் கொள்வோம். கடவுள் தான் உலகைப் படைத்தான் என்கிற கோட்பாட்டிற்கு நிரூபணம் இருக்கிறதா?

  முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கு verifiable proof இருக்கிறதா?

 56. திருச்சிக்காரன் என்ற பெயரில் இருப்பவரே,
  தேவையிலாமல் டார்வின் கோட்பாட்டுக்கு ஏன் கடவுளின் இருப்பையே கேள்வியாக்குகிரீர்?
  சரி உங்களுக்காக, நீங்கள் கடவுளை பார்க்க ஒரு வழி சொல்கிறேன். ஆனால், இந்த வழிமுறையை நான் முயற்சி செய்து பார்க்கவில்லை, நீங்கள்தான் ஆன்மீக ஆராய்ச்சியாளர் ஆயிற்றே, அதனால் இதை நீங்கள் செய்து பார்க்கலாம்.
  முதலில் செத்துபோகவும், அப்புறம் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று தெரிய வாய்ப்புள்ளது, பிறகு மறுபிறவியில் வந்து எங்களுக்கு சொல்லுங்கள்.
  என்ன ஓகே வா?
  சிங்கமுத்து

 57. //இந்திய வேத அவேத (புத்த, ஜைன) தர்சனங்கள் அனைத்தும் பரினாமவியலையே முன் வைக்கின்றன. இங்கே உயிர்களை இறைவன் படைப்பதில்லை. //
  திரு.சாரங்,
  அப்போ பிரம்ம தேவனை பற்றிய கதைகள் வெறுமனே கதைகள்தானா? உண்மை இல்லையா?

  //தப்பு செய்தால் இறந்த பின் கடவுளிடம் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்பதற்காக நல்லவனாக வாழ்வாது அதமாமான ஒரு வழி இல்லையா?//
  அருமையாக கூறினீர், தண்டைனைக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பவன், உண்மையில் நல்லவனாக இருப்பதில்லை, நல்லவனாக நடிக்கிறான்.

  நன்றி,
  சிங்கமுத்து

 58. //அல்லா ஹோ அக்பர் !! //
  இதை இப்போதான் சார் பார்த்தேன். கணபதி ஐயா, நல்லிணக்கம் என்ற பெயரில், இப்படி வழிமாறி போகவேண்டாம் ஐயா.

 59. //அப்போ பிரம்ம தேவனை பற்றிய கதைகள் வெறுமனே கதைகள்தானா? உண்மை இல்லையா?//

  படைப்பு என்பது பிரம்ம தேவன் கையை அசைத்தவுடன் நிகழும் செயற்பாடாக கற்பனை செய்வது தான் பிரச்சனை.

  படைப்பு என்பது ஆதி அந்தம் இல்லாத இந்தக் காலப் பெரு வெளியில் உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை தோன்றுதல் (உருவாகுதல்) அல்லது நிலைமாற்றம் பெறுவது ஆகும். இந்த படைப்பு நிகழ்வதற்கு அடிப்படையான சக்தி பிரம்ம சக்தி ஆகும். எனவே தான் படைப்புக்கு காரணமான பிரம்ம சக்தியை பிரம்ம தேவன் என்று குறிப்பிடுகிறோம்.

  இந்த படைப்பு என்னும் செயன்முறை உயிரினங்களிடையே காலத்துடன் மாறுபடும் வாழ்வாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய அம்சங்களுடனும் சில மாறுபாடுகளுடனும் நிகழ்வதே பரிணாமம் எனலாம்.

 60. சிங்கமுத்து அவர்களே,

  என்னவோ நீங்கள் எனக்கு கடவுளை காட்டி விட்ட மாதிரியும், நான் பார்த்தும் கடவுளுக்கு verifiable proof எங்கே என்று கேட்பது போலவும் ஆவேசப் படுகிறீர்கள்!

  //முதலில் செத்துபோகவும், அப்புறம் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று தெரிய வாய்ப்புள்ளது,//

  அதாவது செத்தவுடன் கடவுள் எல்லோருக்கும் காட்சி கொடுப்பாரா? இது எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் செத்துப் போய் கடவுளைப் பார்த்து விட்டு இப்போது திரும்பி உயிருடன் வந்து இங்கே சாட்சி கொடுக்கிறீர்களா? //இந்த வழிமுறையை நான் முயற்சி செய்து பார்க்கவில்லை,//என்று எழுதி விட்டீர்கள், அப்ப இதுவும் சும்மா சொல்றதை சொல்லிப் பார்ப்போம் (சாகறவன் சாகட்டும்), என்பதுதான்.

  நான் ஆன்மீக ஆரராய்ச்சியாளன் தான் . ஆனால் எந்தக் கடவுளையும் பார்க்கவில்லை. உண்மையைத்தானே சொல்ல முடியும்.

  கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னால் அதற்க்கு ஆதாரத்தைக் குடுக்க வேண்டியது நீங்கள் தானே ஐயா. உங்களால் கடவுளுக்கு verifiable proof குடுக்க முடியவில்லை என்றால் அதற்காக நான் சாக முடியுமா?

 61. //என்னவோ நீங்கள் எனக்கு கடவுளை காட்டி விட்ட மாதிரியும், நான் பார்த்தும் கடவுளுக்கு verifiable proof எங்கே என்று கேட்பது போலவும் ஆவேசப் படுகிறீர்கள்!//

  கண்ணை நல்லா திறந்து வெளியை பாரும். கடவுளை அறியலாம்.
  இல்லை, கண்ணை நல்லா மூடி, உள்ளே பாரும், கடவுள் தெரிவார்.

  இப்படி, இந்த இரண்டு வகையிலும் பார்க்க முடியலைனா. என் பழைய பின்னூட்டத்தில் சொன்னேனே, அதுதான் ஒரே வழி.

  போதுமா?

 62. //கண்ணை நல்லா திறந்து வெளியை பாரும். கடவுளை அறியலாம்.
  இல்லை, கண்ணை நல்லா மூடி, உள்ளே பாரும், கடவுள் தெரிவார். //

  தெரியவில்லை. இன்னும் பல பேர் கிட்ட கேட்டுப் பார்த்து விட்டேன். அவங்களுக்கும் தெரியவில்லையாம். கடவுள் என்ற எல்லாம் வல்ல ஒருவரை யாருமே பார்க்கலையாம்.

  //இப்படி, இந்த இரண்டு வகையிலும் பார்க்க முடியலைனா. என் பழைய பின்னூட்டத்தில் சொன்னேனே, அதுதான் ஒரே வழி.//

  உங்களால் கடவுளுக்கு verifiable proof குடுக்க முடியவில்லை என்றால் அதற்காக நான் சாக முடியுமா? (நானும் அதே பதிலை ரிபீட்டு)

 63. //கண்ணை நல்லா திறந்து வெளியை பாரும். கடவுளை அறியலாம்.
  இல்லை, கண்ணை நல்லா மூடி, உள்ளே பாரும், கடவுள் தெரிவார்.

  இப்படி, இந்த இரண்டு வகையிலும் பார்க்க முடியலைனா//

  அப்ப எதை எழுதும்போதே தெரிஞ்சிருக்கு, “கடவுள்” தெரியமாட்டார் என்று!

 64. அன்புள்ள களிகணபதி,

  இந்துக்களுக்கு எல்லாமே இறைவனின் திருப்பெயர்களே. தாங்கள்
  ” பகவத்கீதையில் அல்லா சொல்லியிருப்பதுபோல” என்று எழுதியுள்ளீர்கள். இதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்போம்.

  ஆனால், இதே போல, ” திருக்குர்ரானில் கிருஷ்ணர் சொல்லியிருப்பதுபோல ” என்று எழுதினால், அதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா ?

  அப்படி ஏற்றுக்கொண்டால் தான் , இந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் கருத்து பரிமாற்றத்தில் ஒரு அர்த்தம் இருக்கும்.

 65. //தெரியவில்லை. இன்னும் பல பேர் கிட்ட கேட்டுப் பார்த்து விட்டேன். அவங்களுக்கும் தெரியவில்லையாம். கடவுள் என்ற எல்லாம் வல்ல ஒருவரை யாருமே பார்க்கலையாம். //
  பாலுக்கும் (இந்துதுவத்துக்கும்) காவல், பூனைக்கும் (மாற்றுமதங்களுக்கும்) தோழனாய் இரட்டை வேஷம் போடுபவருக்கு கடவுள் தெரியமாட்டார்.
  மேலும், கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத இந்த விவாதம் இங்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

 66. //
  ஆனால், இதே போல, ” திருக்குர்ரானில் கிருஷ்ணர் சொல்லியிருப்பதுபோல ” என்று எழுதினால், அதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா ?

  //

  ஐயோ வேண்டவே வேண்டாம். கிருஷ்ணரின் வாயிலிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள் ஒரு நாளும் வர வேண்டாம்

 67. திரு. சிங்கமுத்து அவர்களே,

  இங்கே என்னை சாகச் சொல்லி வம்புக்கு இழுத்தது நீங்கள் தான். நம் இருவருக்குமே முக்கிய அலுவல்கள் உள்ளன.

  தனி மனித தாக்குதல் தேவை இல்லாதது. ஆனால் ஒருவருடைய பாயின்ட்டை ப்ரூவ் பண்ண முடியவில்லை என்றால் தனி மனித தாக்குதலில் இறங்குகின்றனர்.

  கடவுளுக்கு verifiable proof எங்கே என்று கேட்பது இது இந்த விவாதத்துக்கு சம்பந்தம் உடையது.

  கடவுள் என்கிற ஒருவரின் பேராலே தான் இவ்வளவு தூரம் மத வெறியை தூண்டி விடுகின்றனர்.

  கடவுள் இருக்கிறார் என்று “நம்பி”னால் ஒருவன் வந்து, “கடவுளை நம்பிட்ட இல்லை, வெரி குட் நான் சொல்லுற கடவுள் தான் ஒரே மெய்யான தேவன், நீ பாவி என்பதயும் ஒத்துக் கொள் , இதோ இரட்சிப்பு இப்படித்தான் என்பதயும் நம்பு மற்றவர் வணங்கும் தேவர்கள் எல்லாம் போய்த் தேவன், மற்ற மதங்களை திட்டு” ,என்பான்.

  இன்னொருவன் வந்து “இவர்தான் கடைசி தூதர் , நான் சொல்லுறதை கேளு, கடவுளின் சார்பாக, நிராகரிப்போரை எதிர்த்துப் போராடு” என்பான். எப்படியே எல்லோரும் என் தலையில் மாவு, மசாலா எல்லாம் அரைப்பான்.

  என்னுடைய கடவுள் கோட்பாட்டையும் கொஞ்சம் கேளுங்க அண்ணே, என்றால் , நான் சொல்றதுதான் உன் வேதத்திலையும் இருக்கு என்பார்கள்.

  இவர்களின் கோர போராட்டத்தில் கலந்து கொள்ள நான் தயார் இல்லை.

  மத வெறிக் கும்பல்களை விரட்ட சரியான வழி, அவர்களின் வெறித் தனத்துக்கு அத்தாரிட்டியான கடவுளுக்கு எந்த விதமான verifiable proofம் இல்லை என்பதே. இல்லாத ஒருவரின் சார்பாக என்னிடம் மத வெறியை திணிக்காதே என நான் சொல்வேன்.

  இந்து மதம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும், மனிதன் ஆன்மீகத்தில் முன்னேற்ற ம் அடைந்து விடுதலை பெற்று சுதந்திரமானவனாக ஆக உதவுகிறது ஆன்மீகம்.

  அப்படிப்பட்ட நிலையை அடைய முடியுமா என கியாரன்டி குடுக்க முடியாது, முயற்சி செய்வோம், அந்த நிலையை அடையும் போது கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, நாமே தான் கடவுளாக இருக்கிறோமா, அல்லது சூன்யமா என்பதை எல்லாம் நேரிலே பார்த்துக் கொள்ளலாம்.

  பார்க்காத கடவுளுக்கு சாட்சி கொடுத்தால் தான் ஒருவன் இந்து என்று இந்து மதத்தில் இல்லை. கடவுள் இருக்கிறாரா , நேருக்கு நேர் பார்க்க முடியுமா என்று கேட்டவர் இந்து மத வரலாற்றின் மிக முக்கிய ஞானி ஆனார்.

  இந்து மதம் உண்மையிலேயே பகுத்தறிவு அடிப்படையிலான மதம். உண்மையை தேடி, உண்மையை அடைய சொல்லும் மதம் இந்து மதம். நான் சொல்வதை அப்படியே நம்பு என்று கத்தியைக் காட்டி மிரட்டும் மதம் அல்ல இந்து மதம்.அதே நேரம் இந்து மத்தில் நம்பிக்கை அடிப்படியில் பலர் வணங்குகின்றனர். அது நம்பிக்கையே. அமைதியாக அவர்கள் வணங்கிக் கொள்ளுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

  நம் இருவருக்குமே முக்கிய அலுவல்கள் உள்ளன. தயவு செய்து இந்து மத்தைப் பற்றி முழமையாக தெரிந்து கொண்டு பேசவும், மற்றபடி என்னை திட்டுவதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் சந்தோசமாக திட்டிக் கொள்ளுங்கள்.

  கடவுள் என்று தனியாக ஒருவர் இருக்கிறாரா என்று உண்மையிலேயே எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதை சொல்வதில் தவறில்லை.

  அறிவியலில் ஒன்றி நிரூபிக்க ஆயிரம் பாடுபட வேண்டியிருக்கிறது. கடவுள் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் சும்மா நம்ப வேண்டுமா? உண்மையிலே கடவுள் என்று யாரும் இல்லாமலும் இருக்கலாம்.

  நான் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகுபவன் தான். எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன, அவற்றை முன்னிலைப் படுத்தி, வெறுப்புக் கருத்துக்களை வெறிக் கருத்துக்களை ஏற கட்டுவோம் என்பதே எனது கருத்து. நீங்கள் என்னை பூனை, நாய் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். எனக்கு கவலை இல்லை.

  எல்லா மதங்களுமே உண்மையானவை என்றே சுவாமி விவேகனந்தர் சிக்காகோவில் சொன்னது. இதுதான் எனது கருத்தும். உங்களைப் பின்பற்றுவதை விட அவரைப் பின்பற்றுவது எனக்கு முக்கியமானது.

 68. //….ஆனால், இதே போல, ” திருக்குர்ரானில் கிருஷ்ணர் சொல்லியிருப்பதுபோல ” என்று எழுதினால், அதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா ?..//

  முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் தரவேண்டும்.

  .

 69. இங்க நான் பார்ப்பது அனைத்தும் பார்பீனிய பாசிச சிந்தனை. ரொம்பத் தெளிவா உங்கள எல்லாம் மூளை சலவை செய்து வைத்திரிக்கிரார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.நீன்கள் என்ன முயன்றாலும் இஸ்லாம் வளர்வதை தடுக்க முடியாது. நீங்க சொல்ற மாதிரி இஸ்லாம் அச்சுறுத்தலான மார்க்கம் என்று சொன்னால் இன்னைக்கு கூட்டம் கூட்டமாக அமெரிக்காவிலும் இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லிமாக மாறுவது ஏன்?.. அங்கெல்லாம் யார் வாளோடு பொய் இஸ்லாத்த திணித்தார்கள்.உங்களை போன்ற வீணர்களுக்கு இது என்று புரியும்.நீங்கள் அழிந்து போகும் வரை இது புரியாது.

 70. One more example of Hindu stupidity, and that too from a very learned person, please visit this site:- https://www.maransdog.com/

  I was very happy seeing this site, but the following ‘advertisement’ is shocking:-

  Oh Nabikhale .., !!! Neer Avarkalidam Kooruveeraaga.., !! Soothaattam(Gambling) , Mathu(Alcohol) patri ummidam ketkiraarkal

  avvirandilum.., manitha samuthaayathai pirikkum(divide) kodaliyaaga (AXE) Pagaimai(Enemity), veruppu(Hatred) undaakki Saataan(KALI) amaithiyai
  kulaikkiraan. kuraintha alavil mathu irunthaalum athuvum vilakka padukirathu. ( That means 4.7% little Alcohol – BEER IS ALSO Prohibited.)

  HOLY QURAAN – VOICE OF GOD – (Reference : 2.21 , 5.43) – OR – ( SRIMAD BHAGAVATHAM FOR THE ENTIRE KALI YUGAA ! )

  நம்பாளுங்க திருந்தவே மாட்டாங்களா? ஏன் இந்த தேவையில்லாத பிட்டு? குரானும் பாகவதமும் ஒன்னாம்.. இதை நமது இந்து முட்டாள்கள் ஒப்புக்கொள்ளலாம், எத்தனை முகமதியர்கள் ஒப்புக்கொள்வார்கள்? “அது சைத்தானின் புத்தகம்” என்பார்கள்.

  எவ்வளவு செருப்படி பட்டாலும் இவங்க திருந்த மாட்டாங்க போலருக்கே!

  பகவானே நீ இருக்கியா? இவங்களுக்கு கொஞ்சம் புத்தி குடுக்கமாட்டியா??

 71. sha
  அவர்களே இந்திய வரலாறு தெரியுமா உங்களுக்கு . வால் முனையில் பரப்ப பட்டது தான் இஸ்லாம் இந்தியாவை பொறுத்தவரை . ஹிந்து என்பதாலேயே வரி விதித்தனர் உங்கள் சமுகத்தை சார்ந்த மண்னர்கள். ஹிந்து கொவில்களை இடித்தவர்கள் நீங்கதான் . ஹிந்து அப்பாவிகளை மிரட்டி வால் முனையில் மதம் மாற்றியவர்கள் முஸ்லிம்கள் . இன்னும் சொல்லபோனால் இந்திய கோவில்களை கொள்ளை அடிக்க வந்தவர்களால் பரப்ப பட்ட மதம் தான் இஸ்லாம் .

 72. எந்த ஒரு பார்பீனிய பாசிச சிந்தனை மூலம் நீன்கள் என்ன முயன்றாலும் இஸ்லாம் வளர்வதை தடுக்க முடியாது. இஸ்லாம் கடவுளின் மார்க்கம்….!

  இஸ்லாம் அச்சுறுத்தலான மார்க்கம் என்று சொன்னால் இன்னைக்கு கூட்டம் கூட்டமாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லிமாக மாறுவது ஏன்?..

  அங்கெல்லாம் யார் வாளோடு பொய் இஸ்லாத்த திணித்தார்கள்…?

  Karthik உங்களுக்கு இந்திய வரலாறு தெரியுமா?

  இந்திய இஸ்லாமிய மன்னர்கள் கோயில்களுக்கு மானியம் கொடுத்தனர் மேலும் வரி விலக்கு தந்தனர்….

 73. காயல் நண்பன் என்றபெயரில் எழுதியுள்ள நண்பருக்கு,

  சுய சிந்தனை உள்ள எவனும் உங்கள் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டான்.

  பெண்கள் காரோட்டக்கூடாது ,

  இரண்டு பெண்கள் சேர்ந்து சாட்சி சொன்னால் தான் ஒரு ஆணின் சாட்சிக்கு சமம்,

  மற்றும் பெண்கள் பர்தா அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வர முடியும்,

  பெண்கள் படிக்கக்கூடாது என்று உன்னுடைய தாலிபான் வகையறாக்கள் எத்தனை பெண்கள் பள்ளிகளை இஸ்லாமிய நாடுகளில் இடித்தார்கள் தெரியுமா ?

  மகான் புத்தரின் சிலைகளை ஆப்கானிஸ்தானில் இடித்த அயோக்கியர்கள் யார் என்று உலகு முழுவதும் தெரியும்.

  இவ்வளவு காட்டுமிராண்டி தனமான கருத்துக்களை வைத்துக்கொண்டு, வாயை திறக்க

  உனக்கு ஏது யோக்கியதை? விரைவில் அல்லாவே இஸ்லாமை அழிப்பார்.இது சத்தியம்.

 74. காயல் நண்பன் அவர்கள்
  ஏதோ உலக நாடுகளில் மக்கள் இஸ்லாத்தின் பெருமையை அறிந்து கூட்டம் கூட்டமாக மதம் மாறுவது போல் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இஸ்லாம் பரவுவது இனப்பெருக்கத்தின் காரணமாகவே என்று ஒரு இணைய தளத்தில் படித்தேன். ஐரோப்பாவில் பிற இன மக்களின் பிறப்பு (Fertility rate) 1.2 என்ற அளவில் இருப்பதாகவும் முஸ்லீம்களின் Fertility rate 8.4 ஆக இருப்பதாகவும் அதனால்தான் இஸ்லாம் பெருகி வருவதாக தெரிவிக்கிறது.

  முஸ்லீம் மன்னர்கள் இடித்த கோவில்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் கோவிலுக்கு மானியம் (பிராயசித்தமாக) வழங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  கிறிஸ்தவர்கள் தான் பித்தலாட்டங்கள் செய்து மதம் மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர் என்று நினைத்தேன். இப்போது முஸ்லீம்களும் பொய் புரட்டுகளில் இறங்கிவிட்டனர் எனத் தெரிகிறது.

 75. சலீல் முஹம்மது அவர்களே “விவேகானந்தர், சங்கராச்சாரி, நித்தியானந்த பரமஹம்சன், ராமானுசன், ப்ரேமானாந்தா, அம்பேத்கர், நாராயணகுரு போன்றவர்கள் எல்லாம் இறைவனின் மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள். இருந்தாலும் அவர்கள் இறைவனின் தூதுவர்கள்தான்.” உங்கள் பார்வையில் ரஹீம், ரஸ்கான், கபீர்தாஸ் போன்றோரை எப்படிப்பட்டவர்கள் என்று தரம்பிரிக்காமல் விட்டுவிட்டால் எப்படி? உங்கள் இறைதூதர் முஹம்மது எப்படிப்பட்டவர் என்று உண்மையான வரலாற்றை நீங்கள் அறிய முயற்சி செய்ததுண்டா? உங்கள் மதத்தின் ஆதாரமான விஷயங்களைப்பற்றி ஆழமாக ஆராய்ந்ததுண்டா? வாய்ப்பு கிடைத்தால் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிய அலி சினா, அன்வர் ஷேக் போன்றோரது புத்தகங்களை படித்து தெளிவடைய முயற்சி செய்யலாம்! குறிப்பாக அலி சினாவின் ‘முஹம்மதுவைப்பற்றி அறிவோம்’ என்ற புத்தகத்தை தமிழிலேயே நீங்கள் படிக்கலாம். ஒரு கூடுதல் தகவல் : அலி சினாவின் புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் மோனா மாலிக் முஸ்தபா என்கிற தமிழ் பெண்மணி!

 76. காயல் நண்பன் அவர்களே, தங்கள் மறுமொழியை படித்தால் நகைப்புத்தான் வருகிறது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலெல்லாம் வன்முறை இல்லாமல் நிம்மதியாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? எந்த பாவமும் அறியாத அப்பாவிகளை கொலைசெய்யும் அளவிற்கு விரோதத்தையும் வளர்க்க முயற்சி செய்யும் இஸ்லாம் ஒரு அன்பு மார்க்கம்! கோவில்களுக்கு திப்பு சுல்தான் மற்றும் அக்பர் போன்ற அரசர்கள் நிதி கொடுத்தது அவர்களை சுற்றி இருந்த ஹிந்து மந்திரிகள் மற்றும் ஹிந்து சமுதாய துரோகிகளை திருப்தி படுத்துவதற்காகவே என்பதை நீங்கள் அறியாதது வியப்பில்லை. பாரத நாட்டின் சரித்திரத்தை உருப்படியாக படித்து விட்டு சரித்திரத்தில் உள்ள பாசிச, பார்ப்பனீய போன்ற வார்த்தைகளின் முழுமையான தாக்கத்தை புரிந்துகொண்ட பின்பு மறுமொழியிட முயலலாமே. ஆன்மீகத்தை வியாபாரமாக நோக்கும் அபிரகாமிய மதங்களால், ஹிந்து ஆன்மீக சிந்தனைகள் கேலிக்குரியதாகுவது வியப்பில்லை. கடைசியாக ஒருவிஷயம்: இஸ்லாமிலிருந்து ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் வெளியேறுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

 77. நண்பர்களுக்கு என்னுடைய அறிவுரை ! தமிழன், சாரங் மற்றும் கோமதி செட்டி ஆகியோர் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவை என்றே நான் எண்ணுகின்றேன்.
  நீங்கள் எல்லோரும் இந்து சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்தினால்தான், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். மற்றபடி, ஒரு நடுநிலையோடு சிந்தித்து பார்க்க உங்கள் மனம் மறுக்கின்றது. நான் நடுநிலையோடு சிந்தித்ததால், இதை எழுதுகின்றேன். நான் சொல்லப்போவதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி, இதுதான் வரலாற்று உண்மை.

  குரான் என்பது ஒரே நேரத்தில் நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்டதல்ல. சிறிது, சிறிதாக அவ்வப்பொழுது நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப, இறைவனிடமிருந்து அருளப்பட்டது. அவற்றில் சில அந்த நேரத்திற்கு மட்டும் உரியவையாக இருக்கும் : ஒரு சில காலாகாலத்திற்கும் உரியவையாக இருக்கும்.

  அவ்வகையில் பார்த்தால், நீங்கள் குறிப்பிட்டுள்ள ,சண்டை போடுமாறு இறைவன் போட்ட கட்டளைகள் , போர்க்காலத்தில் இறக்கப்பட்டதாகும். போர் நேரத்தில், அருளப்பட்ட வசனங்களை வைத்துக் கொண்டு , நீங்கள் காலாகாலத்திற்கும் பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.

  தங்களுக்கு எதிராக படை திரட்டி, இஸ்லாமை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருபவர்களுக்கு எதிராக இறைவன் இட்ட கட்டளைதான் அது. அவர்கள் தாங்களாகப் போய் ஒரு போரைக்கூட நிகழ்த்தவில்லை. தம்மை தற்காத்துக்கொள்ள செய்யப்பட்ட போர்தான் அவையெல்லாம்.

  நீங்களே ஒரு கூட்டத்திற்குத் தலைவராக இருக்கும் நேரத்தில் , ஒரு கூட்டம் உங்களைத் தாக்க வருகின்றது என்றால், ” வெட்டுனா, வெட்டிட்டுப் போகட்டும் ” என்று இருந்து விடுவீர்களா ? அல்லது உங்கள் மக்களை காக்க வேண்டி சண்டையிடுவீர்களா ? என்பதை ஒரு கேள்வியாக முன்வைத்து , அதற்கான பதிலை தங்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகின்றேன்.

  நீங்கள் வரலாற்றை புரட்டினால்தான் அது தெரியும். அதைவிட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு எதிராக எந்தக் கருத்தை இன்று , இணையதளத்தில் பதியலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தால் இப்போது மட்டுமல்ல,எப்போதும் இது போன்ற பைசா பிரயோஜனமில்லாத கருத்தைத்தான் உங்களால் முன்வைக்க முடியும்.

  கடைசியாக, கோமதி செட்டி என்பவருக்கு ஒரு வேண்டுகோள். அந்த ” செட்டி ” என்னும் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?!?!? என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். அது ஒன்றும் சாதிப்பெயர் இல்லையே ?!?!?

 78. இறைவனின் அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்

  இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகளை பாப்போம்- சரியாக குர்ஆணை படியுங்கள்

  இது சில உதாரணம், நாம் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து விவாதிபோம் இறைவன் நாடினால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கும்.

  “The sun … runneth unto an appointed term.”- 13:2 – சூரியன் பூமியை சுத்துது

  13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.

  he sun “floats” in an orbit around the earth. 21:௩௩

  21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.

  “He … spread out the earth.” – 13:3 பூமி தட்டை

  13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

  All things We have created by pairs – அப்போ பாக்டீரியா எல்லாம் ?

  31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.

  31:11. “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

  36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

  43:12. அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்

  51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

  And hath made the moon a light” – ஐயோ ஐயோ நிலா சூரியனின் வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது என்று அல்லாவுக்கு தெரியாம போச்சே

  71:16. “இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.

 79. இறைவனின் அருளும் சாந்தியும் உங்களுக்கு உண்டாகட்டும்..

  நண்பர்களுக்கு…..
  எந்த ஒரு விஷயத்தையும் நாம் யாருக்கு கூறினாலும்…யாரிடமிருந்து கேட்டாலும், ..நம்முடைய பெற்றோர்களே கூறினாலும் அதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்..சிந்திக்க கூடிய ஆற்றலை நம்மை படைத்த இறைவன் நமக்கு தந்திருக்கிறான்…
  நம்மிடம் இருக்கும் அனேக வரலாறுகள் திரித்து கூறப்பட்டுள்ளது…சிந்திதால் அது எளிதாக புரியும்…வாளால் பரப்ப பட்ட மார்க்கம் இஸ்லாம் என்று வரலாறை திரித்து இருக்கிறார்கள்….மொகல் மன்னர்கள் நம்நாட்டை 300 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள்…வாளால் பரப்பி இருந்தால்…மொத்த இந்தியாவும் மாறி இருக்க வேன்டும்..ஆனால் அப்படி செய்யவில்லை..ஏனெனில் அவ்வாறு செய்வதற்க்கு அனுமதியில்லை இஸ்லாத்தில்…இறைவன் தரவுமில்லை… மேலும் அவர்கள்…நம் செல்வத்தை..கொள்ளையடித்து செல்லவுமில்லை …இந்தியாவிலே ஆட்சி புரிந்தார்கள்…இங்கே மாண்டார்கள்…ஆங்கிலேயர்களை போலலாமல்….

  கீழ் வரும் சில குரான் வசன்ங்களை பாருஙகள்…

  நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதை
  படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே இழப்பை அடைந்தவர்கள்.
  சூரா அல் – பகரா 02 : 121
  இது மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு
  வழிகாட்டியுமாகும். தளர்ந்து விடாதீர்கள், கவலை படாதீர்கள் நம்பிக்கை
  கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
  சூரா ஆலு – இம்ரான் 03 : 138 , 139

  அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’ (அல்குர்ஆன் 04:82)

  5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

  எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

  ‘அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.’ (அல்குர்ஆன் 17:41)
  ‘இக்குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லா முன் மாதிரியையும் வழங்கியுள்ளோம். மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.’ (அல்குர்ஆன் 17:89)
  மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.’ (அல்குர்ஆன் 18:54

  ‘இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ‘நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை’என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன் 30:58)

  ‘(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 34:28)

  மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல.’ (அல்குர்ஆன் 39:41)

  மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.
  உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

  இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகளை பாப்போம்…இது சில உதாரணம்தான்

  […]

  [Edited and published]

 80. mohal emperors ruled India for 300 years. If they forced converted people, then all people would be muslims. This is your argument.

  Do you ever read history of Sivaji the Great history. Do you ever read the history of Guru Gobind Singh. If you read their history, then you cannot say this.

  Here, HIndu religion exists because of their sacrifaces against Islamic atrocities.
  Kur-on is just take many matters from Jews holy text books and many from chirstain beliefs. yah-ALLAH in this word, yah is name of God of Jews. That’s all. We have sufficent holy text books like Gita and upnanishads . Donot try to teach us.

 81. if need comes, I will ready to write seperate column about origin of bible and kur-on.Then, it will create awareness among non-abrahmic religion followers.

 82. \\மொகல் மன்னர்கள் நம்நாட்டை 300 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள்…வாளால் பரப்பி இருந்தால்…மொத்த இந்தியாவும் மாறி இருக்க வேன்டும்\\

  தயவு செய்து வரலாற்றை மீதும் படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். ஒரு நாளும் முகலாயர்கள் நிம்மதியாக இந்த பூமியில் ஆட்சி செய்ய முடியவில்லை. அடுத்து காலம் முழுவதும் அவர்கள் ஹிந்து மன்னர்களிடம் போராட வேண்டியிருந்தது. தங்கள் சிவாஜி மற்றும் ராயர் கதைகளை படித்தால் இது புரியும்.

  இது போன்று எழுதி தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளே வேண்டாம் என்று கூறி கொள்கிறேன்.

  \\ மேலும் அவர்கள்…நம் செல்வத்தை..கொள்ளையடித்து செல்லவுமில்லை …இந்தியாவிலே ஆட்சி புரிந்தார்கள்…இங்கே மாண்டார்கள்…ஆங்கிலேயர்களை போலலாமல்…. \\

  தாங்கள் கஜினி கதையை படித்தது இல்லையா? இஸ்லாம் பரவியது பிறர் மதம் மாறியதால் என்று சொல்வதை விட இந்த காலத்திலும் ஆறு ஏழு குழந்தைகளை பெற்று கொள்வது தான் காரணம்.

 83. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

  பதில்:
  இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

  1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்

  இஸ்லாம் என்ற வார்த்தை “ஸலாம்” என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. “ஸலாம்” என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

  2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

  உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

  3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( னுந டுயஉல ழு’டுநயசல) யின் கருத்து.

  இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ’லியரி ( னுந டுயஉல ழு’டுநயசல) எழுதிய “இஸ்லாம் கடந்து வந்த பாதை” (ஐளடயஅ யுவ வுhந ஊசழளள சுழயன) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் – மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது – வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.”

  4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

  ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

  5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (ஊழிவiஉ ஊhசளைவயைளெ).

  கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (ஊழிவiஉ ஊhசளைவயைளெ). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

  6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.

  இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் – முஸ்லிம் அல்லாதோர்களை – தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே – இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

  7. இந்தோனேஷியாவும் – மலேசியாவும்.

  இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் – மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் – மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

  8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்

  அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

  9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

  எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் – இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

  (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் – 256வது வசனம்)

  10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:

  அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் – உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.
  “(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.”

  11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.

  கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான “அல்மனாக்” பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை “தி ப்ளெய்ன் டிரத்” என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

  12. அமெரிக்காவிலும் – ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:

  இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

  13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்

  “ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.” என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

 84. அன்பு நண்பர்களுக்கு….கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்…..

  நாம் அனைவருக்கும் தெரிந்த விசயம்…. தன்னிலும் தான் சார்ந்தவைகளிலும் தவறுகள் இருப்பின் ,,,மற்றவைகளை…பார்த்து நீ தவறு…உன்னில் தவறு… என்று கூறிக்கொன்டே இருப்பான் இருப்பார்கள்…. நீங்கள் ஏண் மற்ற மதங்களையும்..அது சார்ந்ததையும்…சாடுகிறீர்கள்… உங்களுடையதைப் பற்றி மட்டும்… உயர்வாக… எவ்வளவு உயர்வாக வேண்டுமானாலும்..நம்மை படைத்த கடவுளுக்கு பயந்து…பேசுங்கள்…எழுதுங்கள்…அதுவே உங்களது தரத்தை உயர்த்தும்…. மற்ற சமுதாயத்தவர்கள்…. 95% தங்களுடையதை உயர்த்திதான் பேசுகிறர்கள்…. நீஙள்..அதற்க்கு எதிர்பதமாய் இருக்கிறீர்கள்… சிந்தித்து செயல்படுஙள்….

  அடுத்தவர்களை தூற்றுவதை விட தன்னிடமுள்ள நல்லவைகளை மக்களுக்கு எத்தி வையுங்கள்….

 85. //அல்லா ஹோ அக்பர் !! //
  இதை இப்போதான் சார் பார்த்தேன். கணபதி ஐயா, நல்லிணக்கம் என்ற பெயரில், இப்படி வழிமாறி போகவேண்டாம் ஐயா.

  — //அல்லா ஹோ அக்பர் !! // என்றால் எதோ புரியாத சொல் இல்லை அல்லது அரபு மொழி கடவள் அல்ல. இடன் பொருள் இறைவன் மிகப்பெரியவன் என்று அர்த்தம். இதனால் மதம் மாறிவிடமாட்டார்கள் அல்லது வழிதவரிவிடமட்டர்கள்.

 86. உயர்திரு களிமிகு கணபதி அவர்களுக்கு,

  கிட்டடத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு இந்த அருமையான கட்டுரையைப் படிக்கிறேன். என்ன எளிமையான விளக்கம். இந்துக்களும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. தாங்கள் மீண்டும் எழுதவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
  வணக்கம்.
  தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமச்சிவாய!

 87. மதம், மார்க்கம் என்ற அங்கீகாரத்திற்காகவும் அடையாளத்திற்காகவும் நாம் முரண்பட்டுக்கொள்கிறோம். இருப்பை ஞாயப்படுத்திக்கொண்டு இலக்கை மறந்து விடுகிறோம்.. எத்தனை மார்க்கம் இருந்தாலும் “ஞான மார்க்கம்” ஒன்றே கடவுளை அடையும் சிறந்த வழியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *