[பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மாதம் மாறியது ஏன்?” தொடரின் 13ம் பாகம்

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.  வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் செயலாக இருந்ததை இப்பாகத்தில் பார்ப்போம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12

குறைகளைக் களையாத மதமாற்றம்

ஒரு மோசமான ஐரோப்பியன் அடாத செயல்களில் ஈடுபட்டான் என்றால் கடவுள் பற்றும் சமயப் பற்றுமுள்ள ஐரோப்பியனோ மாட்டிறைச்சி உண்டும் மது அருந்தியும் பிராமணிய, முகமதியக் கோட்பாடுகளைப் புண்படுத்தி ஸ்தல உணர்வுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். இவ்வாறு கிறிஸ்தவ மதம் பரங்கியர்மதம் என்ற அவப்பெயர் பெற்றது. ஐரோப்பியர்களும் அவமரியாதையாக பரங்கியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இத்தகைய பரிசுத்தமின்மையிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும் கிறித்தவ சமயப்பரப்பு அமைப்புகள் காப்பாற்றப்பட வேண்டும்; இது நியாயமானதும் மிக அவசியமானதும் பாராட்டிற்குரியதுமாகும்.

easterlywhitemansburdenஆனால் மதமாற்றம் செய்யும் உற்சாகத்தில் இந்த அளவுக்கு ரோமன் கத்தோலிக்க பிரசாரகர்கள் சென்றதும், ஒருவர் ஞானஸ்தானம் பெற ஒப்புக் கொண்டு ஏசுநாதரை ரட்சகர் என்று ஏற்றுத் தன்னைக் கிறித்தவன் என்று அழைத்துக் கொள்ள தயாரென்றால், மதம்மாறிய அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார், எப்படி வாழ்கிறார் என்பதைப் பற்றி கவலைப்படாமலிருந்ததும் மிகவும் வெட்கக்கேடானதாகும்.

மதுரை சமயப்பரப்புக் குழுவுக்குப்பின் வந்த லுத்ரன் சமயப்பரப்புக் குழுவினர் இந்த முக்கிய பிரச்சினைபற்றி என்ன கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர்?

சாதியை எதிர்க்காத சமயவெறியர்கள்

இந்தியாவில் மிகச்சிறந்த மதபோதகராக விளங்கியவரும் தம்முள் சச்சரவிட்டுக் கொண்டிருந்த அரசர்களிடையே தமது சீலத்தின் காரணமாக சமாதானம் செய்து வைத்தவராகவும் திகழ்ந்த சுவார்ட்ஸ் மதுரைக் குழுவின் கருத்தை ஆதரித்தவரல்ல. ஆனால் சாதியும் கிறித்தவ சமயமும் ஒன்றுக் கொன்று ஒத்துப்போக முடியாதவை என்பதை அவர் நம்பினாரா?

ஒரு உண்மையான கிறித்தவன் சாதியில் நம்பிக்கை வைக்க முடியாது, அதைத் தனது வாழ்க்கைத் திட்டமாகக் கைக்கொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தாரா?

இந்தப் பிரச்சினை பற்றி அவரது கருத்து எதுவாக இருந்தாலும், அதற்கு ஆதரவாக ஒரு பிரசாரத்தை அவர் நிச்சயம் செய்யவில்லை.

ப்ரோட்டஸ்டண்ட் பிரிவோடு சண்டை போடும் கத்தோலிக்கப் பிரிவு

புராட்டெஸ்டண்ட் சமயப்பிரச்சார அமைப்புகளின் நிலை என்ன? இந்தக் கேள்வி பற்றி அவர்கள் கண்ணோட்டம் யாது? அவர்கள் விரும்பினால் இதற்கு ஒரு சமாதானம் கூறலாம். அதாவது தாங்கள் இங்கு வந்தது பின்னால்தான் என்பதே சமாதானம். வரலாற்றின்படி பார்த்தால், களத்தில் இறங்கியதிலிருந்து 1813 வரை அவர்கள் தடுக்கப்பட்டிருந்தார்கள் என்ற அவர்களின் கூற்றில் உண்மை உண்டு. இந்தியாவில் தங்களின் பிரதேசங்களில் சமயப் பரப்பு அமைப்புகளின் பணிபற்றி கிழக்கிந்திய கம்பெனி எடுத்த நிலைதான் இதற்கு முற்றிலும் காரணமாகும்.

இந்தியாவிற்கு வந்த ஐரோப்பிய அரசுகள் முதலில் இந்தியர்களைக் கிறித்தவ மத நம்பிக்கைக்கு மாற்ற வேண்டுமென்ற தீவிரமான கண்ணோட்டம் கொண்டிருந்தன.

போர்ச்சுக்கீசியர்களைப் பற்றிக் கூற வேண்டுமாயின், கிறித்தவ சமயத்தைத் தீவிரமாக பரப்ப வேண்டும் என்பதிலும் மூடப்பழக்க வழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர். கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் சதி என்னும் கொடிய வழக்கத்தை 1510 ல் போர்ச்சுகீஸிய இந்தியாவில் அல்புகர்க் ஒழித்துக் கட்டினார். வில்லியம் பென்டிக் இந்நடவடிக்கை எடுப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே அல்புகர்க் இதனைச் செய்தார். கட்டாய மதமாற்றத்திற்குப் போர்ச்சுகல் அரசர் மூன்றாவது ஜானின் உதவியைப் பிரான்ஸிஸ் சேவியர் நாடினார். அவ்வாறே இந்த உதவி அளிக்கப்பட்டது.

புராட்டஸ்டெண்ட் போக்குடைய டச்சு அரசும் கிழக்கிந்திய தீவுகளில் சமயமாற்றப் பணியில் இத்தகைய உற்சாகத்தை வெளிப்படுத்தியது. இத்திசைவழியில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கோவில் கட்டத் தடை விதித்தனர்

டச்சுக்காரர்கள் 1643 ல் இலங்கையைக் கைப்பற்றியதிலிருந்து கிறித்தவ மதப்பிரச்சாரத்திற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோட்பாடு அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கோவில்கள், பிர மதயாத்திரை ஸ்தலங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சர்க்கார், உத்தியோகங்கள் கிறித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. மதப்பள்ளிகளுக்கு வராமல் இருப்பது அரசாங்கக் குற்றமாக கருதப்பட்டது.

1685 ஆம் ஆண்டுக்குள் 3,20,000 சிங்களவர் இந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்தவர்களாயினர். கம்பெனியின் கப்பலின் கேப்டன் 1614 ல் ஒரு இந்திய இளைஞனை லண்டனுக்கு அழைத்து வந்தார். அவர் மூலமாக அவரது நாட்டில் பலரை மதமாற்றம் செய்வதற்கு அவரை ஒரு கருவியாக உபயோகிக்க கம்பெனி அவரைப் படிக்க வைத்தது. பாப்லாரில் அவருக்கு ஞானஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.

லண்டனின் மேயரும் கம்பெனி இயக்குநர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதலாம் ஜேம்ஸ் மன்னர் அவருக்குப் பீட்டர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்; அவருக்கு ஞானஸ்நானம் செய்துவைத்த பாதிரியார் அவரை இந்தியாவில் கனிந்த `முதல் கனி’ என்று அங்கு கூடியிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆங்கிலேயக் கம்பனியும் ஆண்டவரின் கம்பனியும்

1617ல் சூரத்தில் ஒரு முகமதியரின் மதமாற்றம் நிகழ்ந்தது. இவ்வாறாக இரு இடங்களிலும் சமயமாற்றங்களோடு கம்பெனியின் பணி துவங்கியது. `ஏசுநாதரின் போதனைகளைப் பரப்ப முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று கம்பெனி முடிவுசெய்துள்ளதால், ஒரு மதகுரு வேண்டுமென்று கேம்ப்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு இயக்குநர்கள் மனு செய்தனர். கம்பெனியின் சுதேசிகளுக்கு நன்கு பயிற்சியளிக்க உதவுவதற்காக மதக்குருமார்களும், ஏஜெண்டுகளும் அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்; அவர்கள் புரொடெஸ்டெண்ட் மதத்தினராகவும் கம்பெனியின் சிப்பந்தியாகவோ, அல்லது ஏஜெண்டாகவோ இருக்க வேண்டும் என்ற விதியையும் தனது உரிமைப்பத்திரத்தில் சேர்த்துக் கொள்ள கம்பெனி சம்மதித்தது.

church_state_terrorismதிடீரென்று, 1698 க்குப்பின் கம்பெனியின் கண்ணோட்டத்தில் படிப்படியாக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. மதமாற்றப் பணியில் போர்ச்சுக்கல் டச்சு அரசுகள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போது கிழக்கிந்தியக் கம்பெனி வேகத்தைக் குறைத்துக் கொண்டது. அதே வருடத்தில் இந்த பிரச்சினை பற்றி இரு மாதிரியான சிந்தனைகள் கம்பெனிக்கு இருந்தன எனத் தெரிகிறது. தனது மதக்குருக்களைப் பயனளிக்கும் பிரசாரக் கருவிகளாக ஆக்குவதற்கு அவர்களும் இந்தியமொழிகளில் பயிற்சியளிக்க வேண்டியது தனது கடமையென்று ஒப்புக் கொண்ட அதேசமயம், கம்பெனிக்காக பின்வருமாறு பிரார்த்தனை செய்வதற்கும் கம்பெனி அனுமதி அளித்தது; அந்த பிரார்த்தனையின் வாசகம் வருமாறு:

“நாம் வாழ்ந்துவரும் இந்தியநாட்டினர் மத்தியில் நமது ரட்சகரின் போதனையை அணிகலனாகக் கொண்டு நாம் ஆற்றிவரும் நல்ல பணிகளைக் கருத்தில்கொண்டு, அவர்கள் நம்பக்கம் ஈர்க்கப்படுவார்களாக’’ இந்தப் பிரார்த்தனை 1750 வரை செய்யப்பட்டு வந்தது.

இந்தப் பிரார்த்தனையின் வாசகங்களைக் கூர்மையாகப் பரிசீலித்துப் பார்க்கும்போது தீவிரமாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்த கருத்தை முற்றிலுமாக கைவிடுவதை ஒப்புக் கொண்டதாக இல்லையா? கம்பெனியின் இந்த கண்ணோட்டம் வாதப்பிரதிவாதத்திற்கு உட்பட்டது. மதமாற்றம் வேண்டும் என்று கூறும் நண்பர்கள், கம்பெனி இந்தக் கண்ணோட்டத்தைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆக்கிரமிப்பை உறுதிசெய்யவே மதமாற்றம்

1773 வது ஆண்டின் ஒழுங்குபடுத்தும் சட்டமும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய சட்டமும் `வியாபாரி என்ற பெயரில் அரசு மாறுவேடம் பூண்டு செயல்படுவதை’ முடிவுக்கு கொண்டு வந்தன; இந்தியப் பிரதேசங்களில் சர்க்காரை நடத்தி செல்வதற்கு பார்லிமெண்டின் உரிமை பெற்ற ஏஜெண்டாக கம்பெனியை ஆக்கின.

சட்டத்தின்படி கம்பெனியின் உரிமைப் பத்திரம் 20 ஆண்டுகளுக்கு மட்டும் இருக்கும்; அதன்பின் புதுப்பிக்கப்பட வேண்டுடம். 1793 ஆம் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது; ஏனெனில், கம்பெனியின் உரிமைப்பத்திரம் அந்த ஆண்டில்தான் புதுப்பிக்கப்பட வேண்டும்.

கிறித்தவ அறிவைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர்களுடைய பணி சுலபமாகி விட்டது போல் தோன்றியது. இந்த விஷயத்திற்குப் பொறுப்பாக இருந்த வில்பெர்போர்ஸ், பாராளுமன்றத்தில் முக்கிய நபர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டார். அதிமேற்றிராணியார் மூரின் ஆசிகளையும் பெற்றுவிட்டார். கிழக்கு இந்தியக் கம்பெனியின் உரிமைப் பத்திரம் பற்றிய விஷயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் ஆதரவையும் பெற்றது மேலும் அதிக முக்கியத்துவமானதாகும்.

இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்நடவடிக்கையாக, உரிமைப் பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் காமன்ஸ் சபை நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் வடிவத்தில் தயாரிக்கப்பட்டன. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது:

“இந்தியாவில் பிரிட்டில் டொமினியன்களில் வாழும் பிரஜைகளின் நலனையும் மகிழ்ச்சியையும் உயர்த்துவதற்காக எல்லாவித நியாயமான, நிதானமான நடவடிக்கைகளை எடுப்பது பிரிட்டிஷ் சட்டமன்றம் விசேடப் பொறுப்புணர்ச்சியுடன் செய்ய வேண்டிய கடமை என்பதாலும், இந்த நோக்கங்களுக்காக அறிவுத்துறையிலும் மற்றும் மதம் போன்றவற்றிலும் பொதுவாக முன்னேற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்பதாலும், பின்வருமாறு சட்டமியற்றுகிறது:

மேற்சொன்ன நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பள்ளி ஆசிரியர்களாகவோ, மத போதகர்களாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ பணியாற்றுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் எண்ணிக்கையில் பொருத்தமான, தகுதியுள்ள நபர்களை நியமித்து அனுப்பிவைக்க இயக்குர்கள் குழுவிற்கு இதன்மூலம் அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நபரும் நியமிக்கப்படும் முன் அல்லது அனுப்பப்படும் முன் இப்போதைக்குக் காண்டர்பரி தலைமை மதகுரு அல்லது லண்டன் பிஷப்பிடமிருந்து அல்லது கிறித்தவ ஞானத்தைப் பரப்புவதற்காக லண்டனிலும் ஸ்காட்லாந்திலுமுள்ள கழகங்களிடமிருந்து திருப்திகரமான நற்சாட்சிப் பத்திரங்கள் அல்லது நன்னடத்தை சான்றிதழ்கள் பெற்று இயக்குநர் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிறித்தவ ஞானத்தைப் பரப்புவதற்குப் போதுமான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்பதை இந்த நற்சாட்சிப் பத்திரங்கள் எடுத்துக் கூறுபவையாக இருக்கும்.

மேலும் பின்வருமாற சட்டமியற்றுகிறது:

church-stateஇந்தியாவின் சம்பந்தப்பட்ட ராஜராணி சர்க்கார்களுக்குத் தேவைப்படும் கட்டளைகள் இடும் அதிகாரம் இயக்குநர் குழுவுக்கு வழங்கப்படுகிறது; அவ்வாறு அனுப்பப்படுபவர்கள் பணியாற்ற வேண்டிய இடம் பற்றியும் அவர்கள் தங்களைக் கண்ணியமான முறையில் பேணிக்கொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது பற்றியம் ஆவன செய்யும்படி அந்த சர்க்கார்களுக்குக் கட்டளைகள் அனுப்ப வேண்டும். மேலே சொன்ன நோக்கங்களை அடைவதற்கு உசிதமான நடவடிக்கைகள் பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கும்படியும் ராஜதானி சர்க்கார்களுக்குக் கட்டளையிட வேண்டும்.

பிரதானமாக துண்டாஸின் ஆதரவினால் காமன்ஸ் சபை தீர்மானத்தை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டது. வில்பெர்போர்ஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரது கிழக்கு இந்திய விவகாரத்திற்குப் போல் ஆண்டவனின் அருள் எப்பொழுதும் இவ்வளவு தெள்ளத் தெளிவாக இருந்ததில்லை என்று அவர் தமது சஞ்சிகையில் எழுதினார்.

ஆண்டவனின் வியாபாரிகளை எதிர்த்த ஆதிக்க வியாபாரிகள்

ஆனால் அவரது இந்த நம்பிக்கை அவசரப்பட்டது என்பது விரைவிலேயே புலனாயிற்று. ஏனெனில், இந்த மசோதா மூன்றாம் தடவை படிக்கப்பட்டபோது, துண்டாஸ் அனுமதியோடு அந்த ஷரத்து நீக்கப்பட்டது. தமது நண்பர் கிஸ்போர்னுக்கு, வில்பெர்போர்ஸ் பின்வருமாறு எழுதினார்:

“எனது ஷரத்து தூக்கி எறியப்பட்டுவிட்டது… துண்டாஸ் இரட்டை வேடம் போட்டு விட்டார்.’’

நிலைமை இவ்விதம் எதிர்பாராதவிதமாக மாறியதற்கு கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் தூண்டுதலே காரணம். கிழக்கு இந்திய வியாபாரம் கம்பெனியின் ஏகபோகத்தில் இருந்து வந்தது; கம்பெனி இயக்குநர்களின் அனுமதி பெறாமல் இந்தியாவில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கீழ் உள்ள பிரதேசத்தில் எந்த ஆங்கிலேயனும் நுழைய முடியாது; அந்தப் பிரதேசங்களில் இவ்வாறு அனுமதி இல்லாமல் நுழைபவர் வெளியேற்றப்படுவர். புதிய ஷரத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள கம்பெனிக்கு அதிக காலம் ஆகவில்லை. இந்த ஷரத்தின்படி மத பிரசாரகர்களுக்கும் அவர்களது பிரசாரத்திற்கும் கதவு திறந்துவிட வேண்டியிருக்கும் என்பதைக் கம்பெனி அறிந்திருந்தது. இவ்விதம் சுதந்திரமாகச் செயல்பட மதப்பிரசாரகர்களை அனுமதிக்க வேண்டுமா என்பதே அப்போதைய முக்கிய கேள்வியாக இருந்தது. இயல்பாகவே, இந்த விஷயம் கடுமையான வாதப் பிரதிவாதத்திற்கான பிரச்சினையாயிற்று.

இதுபற்றி விவரம் தெரிந்து கொள்ள அக்கறைகொண்டவர்கள் அன்றைய எடின்பொரா ரெவ்யூ என்ற சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துப் பயனடையலாம்.

சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில் மூன்று தரப்பினர் சம்பந்தப்பட்டு இருந்தனர்.

முதலாவதாக கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள்; அவர்களின் பிரதான அக்கறை லாபத்தை எதிர்நோக்குவதும் தங்களின் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதுமே ஆகும். சர்ச்சையில் இரண்டாவது தரப்பினர் ஆங்கில மத்திய தர வர்க்கத்தினர்; கிழக்கு இந்திய வியாபாரத்தினால் அவர்கள் வாழ்ந்து வருபவர்கள். இந்தப் பிரதேசங்களில் பிரகாசமான தங்களது எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்புகளை அவர்களின் பிள்ளைகள் கண்டார்கள். மூன்றாவது தரப்பினர் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட கிறித்தவ மதப்பிரச்சாரக் கழகம்; அது அந்த ஆண்டில்தான் அமைக்கப்பட்டது.

முதல் இரண்டு தரப்பினரின் நலன்களும் ஒத்திருந்தன. ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்க அவர்கள் விரும்பினர். எனவே சமாதானமும் சச்சரவின்மையும் அவர்கள் விருப்பமாக இருந்தன. மூன்றாவது தரப்பினர் சமாதானம் பற்றி அக்கறை கொள்ளவில்லை; இந்தியரின் மூட நம்பிக்கைகளை அகற்றி அதற்குப் பதில் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதில் ஆர்வம் காட்டினர். முதலாவது தரப்பினர் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை ஏற்படுத்தி, மூன்றாவது தரப்புக்கு எதிராக எல்லா சக்திகளுக்கும் ஆதரவு தந்தனர். எனவே அவர்கள் வெற்றி பெற்றனர். கிறித்தவ மரப்பிரசார அமைப்பு தோற்றது. வெற்றி பெற்ற தரப்பினர் சர்ச்சையில் முன்வைத்த வாதங்கள் மிக முக்கியமானவை; சர்ச்சையின் விவரங்களைத் தெளிவுபடுத்துபவை அவையே.

காசு லாபத்தைக் காப்பாற்றச் சொல்லும் கர்த்தர்

கிறித்தவ போதனையைப் பரப்ப உடனே பிரசாரம் துவங்க வேண்டும், பல வகைகளிலும் நேரிடக் கூடிய இடர்களைத் தவிர்ப்பதற்காக நமது புனிதமான சமயப் பிரசாரத்தைச் சிறிது சிறிதாக, படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறாகும் என்ற வாதத்திற்கு ஸ்மித் அளித்த பதில் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அவர் கூறியது வருமாறு:

“ஏசுநாதருக்குப் பின் எத்தனை நூற்றாண்டுகளுக்கு மனித சமுதாயத்தின் பெரும் பகுதி புனித உண்மைகளை எந்த மனித முயற்சியாலும் பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லாமல் வாழ்ந்து இறந்துபோவதை ஆண்டவரின் கிருபை அனுமதித்தது என்பதை நாம் பரிசீலித்தால், உலகம் முழுவதும் விரைவாகவும் வேகமாகவும் மதமாற்றம் செய்ய வேண்டும் என்பது சர்வ வல்லமையுள்ள ரட்சகரின் திட்டமல்ல என்பது பற்றி நாம் திருப்தியடைய வேண்டும். நம்முடைய நாட்டுக் கடமைகளைக் கைவிடாமல் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உலகாயத சந்தோஷத்தின் பல்வேறு பரிமாணங்களையும் மத மாற்றம் செய்யும் பொருட்டு ஆபத்துக்குள்ளாக்காமல் இருந்தால் அது கர்த்தரின் கண்களுக்கத் தவறாகப்படாது.’’

“இங்குமங்கும் அலைந்து திரிகிற குருமார்கள் சுதேசிகளைக் கலகம் செய்வதற்குத் தூண்டும முறையில் மத போதனை செய்வதை இயக்குநர்கள் அனுமதித்தால் தங்களுடைய பங்குதாரர்களுக்கோ பிரிட்டிஷ் நாட்டிற்கோ தங்கள் கடமையைச் செய்தவர்களாக மாட்டார்கள்….. அரசியல் மாற்றத்திற்குத் தீவிர உணர்ச்சியைத் தூண்டும் நிலை ஏற்படாத வகையில் உகந்த நேரத்தில் சுதேசிகளுக்கு அவர்களுடையதைவிடச் சிறந்த மதத்தைப் போதிக்க வேண்டும். நமது குடும்பங்களுக்கும் நம் நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை ஆண்டவனே நம் முன் வைத்துள்ளார். எங்கோ தொலை தூரத்திலுள்ள அன்னியர்களுக்கு அதிக நன்மைகள் புரிவதற்கு அதிக வாய்ப்பேதும் இல்லாதிருக்கும்போது அதன் பொருட்டு நமது கடமைகளைத் துறப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது.’’

சூழலுக்கேற்ப நிறம் மாறும் கிறுத்துவம்

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இவை போன்ற வாதங்கள்தான் மேலோங்கி இருந்தன. இதன் காரணமாக 1793ல் இந்த ஷரத்து நிராகரிக்கப்பட்டது. கிறிஸ்துவின் போதனை சௌகரியத்துக்கான ஒரு மதம் அல்ல; பதிலாக சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மதமாகும் என்பதைக் காமன்ஸ் சபை உறுப்பினர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களை வில்பர்போர்ஸ் சாடினார்.

ஆனால் ஏற்கனவே எடுத்துக் காட்டியபடி,“பதினெட்டாம் நூற்றாண்டில் மதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சௌகர்யத்தின் பொருட்டு அரசும் சமுதாயமும் ஏற்றுக்கொண்ட மதம் சொந்த நாட்டில் எதார்த்தத்துடனும் விவேகத்துடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கருதினர். வெளிநாடுகளில் அதை முரட்டுத்தனமான முறையில் பரப்ப வேண்டிய தேவை இல்லை. பொதுவான சூழ்நிலை, ஏற்கனவே கூறியபடி அகஸ்டனின் ரோமாபுரி போல இருந்தது. அவையவைக்குரிய இடத்தில் இருக்கும்போது எல்லா மதங்களும் சமத்துவமானவையே என்பது அந்த ராஜதந்திரியின் கருத்து.’’

மதபோதகர்களுக்கு வழி திறந்துவிடும் முயற்சி இவ்வாறு தோல்வியடைந்தது. 1813 வரை மதபோதகருக்கு வழி அடைக்கப்பட்டே இருந்தது. அதுமட்டுமல்ல, தங்களுடைய அனுமதி பெறாமல் இந்தியாவில் இங்குமங்கும் நுழைந்த மத போதகர்களின் நடவடிக்கைகளையும் கம்பெனி சர்க்கார் உஷாராகக் கண்காணித்து வந்தது.

christianity_the_dark_force_jedai_starwars

1793ல் அனுமதி பெறாமல் டாக்டர் கேரே வந்தார். இசைவுச் சான்றிதழ் இல்லாததால் கல்கத்தாவில் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை. எனவே கல்கத்தாவிலிருந்து 14 மைல் தொலைவில் உள்ள செராம்பூருக்குச் சென்றார் அவர். செராம்பூர் ஒரு டென்மார்க் குடியேற்றம். டச்சுக்காரர்கள் மதப்போதகர்களுக்கோ மத அமைப்பின் பிரசாரத்திற்கோ எத்தகைய தடையும் விதிக்கவில்லை. மாறாக செராம்பூர் கவர்னர் அவர்களுக்குத் தீவிரமாக உதவினார். கேரேயும் அவரது பிரசாரக்குழுவும் கம்பெனி சர்க்காரின் சந்தேகப் பார்வையில் எப்பொழுதும் இருந்துவந்தனர். 1798ல் செராம்பூர் சமயப் பிரச்சாரக்குழு நான்கு மத போதகர்களைப் பிரசாரப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தது.

அவர்கள் 1800ல் வந்து சேர்ந்தனர். கவர்னர் ஜெனரலுக்கும் இவர்களுக்குமிடையே எந்த சம்பந்தமும் இல்லை. உரிமம் பெறாமல் உற்சாகத்துடன் செயல்படும் இவர்கள் வெளிப்படையாக அங்கு தங்கி இருப்பது கம்பெனியின் கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவின் கண்களை உறுத்தியது. இவர்கள் எந்த நேரமும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் பிரதேசத்தில் சட்ட விரோதமாக பிரவேசிக்கலாமாதலால் மேன்மை தங்கிய தாங்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று செராம்பூர் கவர்னகக்க வெல்லெஸ்லி பிரபு எழுதினார்.

அந்த மாதிரி எதுவும் தாம் செய்ய இயலாது என்று டேனிஷ் கவர்னர் பதிலளித்தார். இதேபோன்று 1806 ல் கேப்டன் வைக் இரு மதபோதகர்களைக் `கிரிட்டேரியன்’ என்ற கப்பலில் கல்கத்தாவிற்கு அழைத்து வந்தார். சர் ஜார்ஜ் பார்லோ அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்த இருவரும் கரை இறங்குவதைத் தடுக்க அசாதாரண நடவடிக்கையை அவர் எடுத்தார். இந்த இரு போதகர்களையும் திருப்பி அழைத்துக் கொள்ளாவிடில், அவரது தஸ்தாவேஜுகள் அங்கீகரிக்கப்பட மாட்டா என்று கேப்டனுக்கு உத்தரவிட்டார். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் செராம்பூர்க்குச் சென்று டென்மார்க் அரசின் பாதுகாப்பில் இருந்தனர். மதபோதகர்கள் பற்றிய இந்தக் கண்ணோட்டம் மிகவும் நியாயமற்றது மட்டுமல்ல; அது விரோதமான கண்ணோட்டமும் ஆகும்.

மல்லுக் கட்டிய பின்னரே மதிப்பு கிடைத்ததா ?

1806 ல் இந்தியச் சிப்பாய்களிடையே வேலூரில் நடந்த சிப்பாய்க் கலகம் மதப்பிரசாரத்தின் விளைவு என்று தவறாகக் கணிக்கப்பட்டது. பீதியடைந்த நிலையில் இருந்த சர் ஜார்ஜ் பர்லோ உடனே செராம்பூர் மத போதகர்களின் நடமாட்டங்கள் மீது கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை விதித்தார்:

christian_conversion_jesus_aggression_intrusion1. மதபோதகர்கள் செராம்பூரிலேயே இருக்க வேண்டும்.

2. கடைத்தெருவில் பகிரங்கமாக போதனை செய்யக்கூடாது.

3. மதம் மாறிய சுதேசிகள் செராம்பூரிலிருந்து அதன் பிரதிநிதிகளாக அனுப்பப்படவில்லையெனில் அவர்கள் பிரச்சாரம் செய்யலாம்.

இஸ்லாம் பற்றிய ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டதற்காக 1807 ல் வங்க சர்க்கார் செராம்பூர் மத அமைப்பை மிகக் கடுமையாக சாடியது. அந்தப் பிரசுரத்தில் கவனக்குறைவாக முகமது நபிகளைப் பற்றி ஆட்சேபகரமாகக் குறிப்பிட்டிருந்தது. மத போதகர்கள்பால் கம்பெனி கொண்டிருந்த பகைமை போக்கை இது மேலும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

டாக்டர் கேரே மன்னிப்புக் கோரியும் வங்க சர்க்கார் திருப்தியடையவில்லை. அவரது அச்சகத்தைச் செராம்பூரிலிருந்து கல்கத்தாவுக்கு மாற்ற வேண்டுமென்று வங்க சர்க்கார் வலியுறுத்தியது. அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்த சர்க்காரால் முடியும் என்பதாலேயே இவ்வாறு கூறப்பட்டது. இந்த செய்தி அந்த மதக்குழுவுக்கு கவலையை அளித்தது; இந்த முயற்சி அதன் பணிகளை நிச்சயம் சீர்குலைக்கும். வழக்கம்போல், டென்மார்க் குடியிருப்பின் கவர்னர் அவர்களது உதவிக்கு வந்தார். வங்காள சர்க்கார் அச்சகத்தை நிர்ப்பந்தமாக கல்கத்தாவிற்கு எடுத்துச் சென்றால் தாம் அவர்களுக்காக போராடப் போவதாக பீதியடைந்த செராம்பூர் மதபோதகர்களுக்குத் தைரியம் கூறினார். பின்னால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் கம்பெனியின் சர்க்கார் மதபோதகர்களின் நண்பனாக இருக்கவில்லை என்பதை இது எவ்வகையிலும் மூடிமறைத்து விடவில்லை. தங்கள் நிலையை நியாயப்படுத்த அவர்கள் இவ்வாறு வாதிக்கலாம். ஆனால் 1813 ஆம் ஆண்டிற்குப் பின் சமய பரப்புக் குழுக்கள் செயல்படுவதை அனுமதித்தபோது இவர்கள் மேற்கொண்ட கண்ணோட்டம் யாது? மதம் மாறியவர்களின் சிந்தனையிலிருந்தும் வாழ்விலிருந்தும் சாதி கட்டாயம் போக வேண்டும் என்ற கொள்கையை மேற்கொண்டனரா? ஒரு புரோடெஸ்டெண்ட் போதகர் இது பற்றி தெரிவித்த கருத்து இதற்கு ஒரு சாதகமான பதிலை அளிக்கக் கூடியதாக இல்லை.

சாதி இருந்தால்தான் மதம் மாற்ற முடியும்

மத போதகர்கள் சாதியை அனுமதிக்காதது: “டாக்டர் கெய்னே 1814 ல் பின்வருமாறு எழுதினார்:

“பல சந்தர்ப்பங்களில் மதபோதகர்கள் தங்களது விரைவான அல்லது முடிவான வெற்றிக்கு மிகவும் தீங்கு விளைவிற்கும் தவறைச் செய்துள்ளனர். இந்த இந்துவைச் கிறித்தவ சமயத்திற்கு மாற்றுவதற்கு, அவர் அவசியம் தம் சாதியை இழக்கும் படியான கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்தியாவில் இது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. இது மதமாற்றத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தடங்கலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்துக்களின் அரசியல் பிரிவு அவர்களது மதக்கோட்பாடுகளின் அங்கமாக இல்லை; மிகவும் விஷயம் அறிந்தவர்கள் கூட இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இந்துக்களுக்குக் கிறித்தவ சமயத்தை அளிக்கும்போது அவர்களின் சாதியை வைத்துக் கொள்ள அனுமதியுங்கள்; அப்பொழுது தயக்கமின்றி கணிசமான எண்ணிக்கையில் கிறித்தவ சமயத்தைத் தழுவுவர்.’’

தனிப்பட்ட ஒருவரின் கருத்தை வைத்து மட்டும் இந்தப் பிரச்சினையில் புராட்டஸ்டெண்ட் சமயப் பரப்பு அமைப்புகளின் கண்ணோட்டம் பற்றி ஒரு முடிவுக்கு வர நான் விரும்பவில்லை.

முன்பு, அவர்களின் பணி ஆரம்பித்த காலத்தில், இந்தப் பிரச்சினை பற்றி எந்த நிலை எடுக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துக் கூறும்படி புரொடெஸ்டெண்ட் அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரம் உள்ளது. அப்பொழுதுதான் அவற்றின் தேர்ந்து தெளிந்த முடிவாகக் கொள்ள முடியும். கல்கத்தா பிஷப்பாக ரெவரன்ட் ஹீபர் நியமிக்கப்பட்ட சமயத்தில்தான் இந்தப் பிரச்சினை ஆழமாக விவாதிக்கப்பட்டது.

அவர் தமது பணியில் 1823ல் சேர்ந்தார். திருச்சபை பொறுப்பில் அவர் இருந்தபொழுது இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் அவர் விரிவான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களிடையே சாதியைச் சகித்துக் கொள்ளலாம் என்ற பிரச்சினை பற்றி புரொடெஸ்டெண்ட் மதபோதகர்களிடையே தீவிரமான கருத்து மோதல் இருந்ததைத் தெரிந்து கொண்டார். இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்க்க அவர் விரும்பினார். அவர் இந்தப் பணியை எவ்வாறு செய்ய முயன்றார் என்பதை ரத்தினச் சுருக்கமாக திரு.காயி குறிப்பிட்டிருக்கிறார். அது வருமாறு:

“மதப் போதகர்களிடையே சச்சரவு இருந்தது. அதைப் போக்க ஹீபர் தீவிர அக்கறை காட்டினார். வங்காளத்திலிருந்து புறப்படும் முன்பே இந்த பிரச்சினை அவர் முன் கொண்டுவரப்பட்டது. தமக்கு கிடைக்கக்கூடிய எல்லாத் தகவல்களையும் சேகரித்து பிரச்சினையைப் புரிந்து கொள்ள முயன்றார். முன்னால் செயல்பட்ட புரோட்டெஸ்டெண்ட் மதபோதகர்கள் கடைப்பிடித்த நடைமுறை பற்றி மட்டுமல்லாமல் சாதி என்ற அமைப்பின் உண்மைத்தன்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார். பிஷப் கல்லூரியில் கிறித்தவ சமயத்திற்கு மாறிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் கிறிஸ்டியன் டேவிட், அவர் சுவார்ட்ஸ் என்பவரின் மாணவர்; உண்மையிலேயே மிகத் திறமையானவர். தெய்வ பக்தியில் போலவே புத்திக் கூர்மையிலும் சிறந்து விளங்கியவர். தம்முடைய சந்தேகங்களுக்கு விரைவாக விடை கிடைப்பதற்கு அணுகவேண்டியவர்களுள் அவரும் ஒருவர் என்று ஹீபர் கருதினார். எனவே ஒரு கேள்விப் பட்டியலைத் தயாரித்து அந்த சுதேசி கிறித்தவரிடம் அளித்தார்; அவரிடமிருந்து பதில்களைப் பட்டியலாகப் பெற்றார்; அந்தப் பதில்கள் அருமையான ஆங்கிலத்தில் இருந்ததோடு, சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாத அளவுக்குத் துல்லியமாகவும் ஆழமாகவும் இருந்தன.

சாதி என்பது இந்து “சமூக” அமைப்புத்தான், இந்து “மதத்தின்” அமைப்பல்ல

“முதலாவதாக, சாதியின் தன்மை குறித்து : தென்னிந்தியாவின் சுதேசிகள் சாதி என்பதை இவ்வுலக வாழ்வு சம்பந்தப்பட்ட ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்கின்றனர்; மற்றபடி எந்த மத எண்ணங்களோடும் அவர்கள் அதைச் சம்பந்தப்படுத்துவதில்லை’’ என கிறிஸ்டியன் டேவிட் குறிப்பிட்டார். “உயர் சாதியிலிருந்து மதம் மாறிய சுதேசிகள் கீழ் சாதியிலிருந்து மதம் மாறியவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை; அது எந்த மதம் மத ரீதியான அல்லது மூட நம்பிக்கையில் ஏற்பட்டதல்ல, மாறாக சமூக காரணங்களால் தோன்றியவையே; உயர் சாதிக்கும் கீழ் சாதிக்கும் இடையே உள்ள சில வேறுபாடுகள் எத்தகைய உயர்வான குறிக்கோள் அடிப்படையிலும் அமைந்தவையல்ல; இந்த பாகுபாடுகள் லௌகீகக் செல்வங்களை அடைவதால் மட்டுமே தங்கமுலாம் பூசிவிட முடியாதவை என்றும் டேவிடட் கூறினார். கீழ்ச்சாதியைக் சேர்ந்தவர்கள் வழக்கமாகவே சகிக்க முடியாத முறையில் பேசுகின்றனர். அடிக்கடி முரட்டுத்தனமான அல்லது உயர்சாதியினரின் உணர்வுகளை அவமதிக்கும் ரீதியில் கண்ணியமற்ற முறையில் பேசுகின்றனர் என்பதையும் அவர் குறிப்பாக எடுத்துக்காட்டினார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் ஒழுக்கக் குறைவாகவும் சுயமரியாதைக் குறைவாகவும் இருக்கின்றனர். கல்வி அவர்களை உயர்த்தும் என்றார்; ஒரு பறையர் கல்விமானாக மாறினால் அவரை பண்டிதர் என்று அழைக்கின்றனர்; மாதா கோவிலும் அவரை மதிக்கும்; அப்பொழுது மதம் மாறிய அவரது சகோதரர்கள் அவரோடு பழகுவர்; ஆனால் உலகம் தூற்றும் என்றோ அல்லது பெருமையின் காரணமாகவோ ஒரே தட்டில் அவருடன் உணவு அருந்த மாட்டார்கள்.

ஒற்றை டம்ளர்தான், ஆனால் எச்சில் டம்ளர்

சீகன்பல்க் காலத்திலிருந்தே மாதா கோவிலில் இரண்டு தனித்தனி பிரிவுகளின் அமர்ந்து பழகிவிட்டார்கள்; கர்த்தரின் மேஜையில் தனித்தனியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வர்; ஒரே கோப்பையில் பானத்தை அருந்துவர். ஆனால் உயர்சாதியிலிருந்து மாறியவர்கள் முதலில் அருந்துவர். இவை லௌகீக விஷயங்கள் சம்பந்தமான வேறுபாடுகள் மட்டுமே என்பதற்குச் சான்றாக கிறிஸ்டியன் டேவிட் ஒன்றைக் குறிப்பிட்டார்: அதாவது தெற்கத்திய கிறித்தவ கூட்டத்தினரில், உயர்சாதியைச் சார்ந்தவரும் கீழ்ச்சாதியினரும் மரணத்திற்குப் பின் பொதுவான ஒரு இடுகாட்டில் புதைக்கப்படுகின்றனர்; சவ அடக்கம் சம்பந்தமான சடங்குகளில், `புற சமயங்களை அனுஷ்டிக்கும் தேசங்களுக்கு மாறாக, மரணம் எல்லா வேறுபாடுகளையும் சமப்படுத்தி விடுகிறது என்ற உணர்வில்’ ஒன்றாகக் கலந்து கொள்கின்றனர்.’’

christian_conversion_jesus_buddhism“கிறித்தவ சமயத்திற்குத் தடங்கலாக ஆகிவிடக்கூடிய கடுமையான விதிகளைக் கடைபிடிப்பதற்குப் பதிலாக இலேசான ஆட்சேபத்தின் மூலமும் நயந்து எடுத்துச் சொல்லி இணங்க வைப்பதன் மூலமும் அனுபவமிக்க மத போதகர்கள் தீங்கைக் குறைக்க முயன்றனர். சுவார்ட்ஸ் கீழ் சமய பரப்புக் குழுக்கள் இயங்கியபோது, தீங்கு கணிசமான அளவு குறைக்கப்பட்டது என்றார் டேவிட்.

ஆனால், கிறித்தவ சமயப் பரப்புக் கழகத்தைச் சேர்ந்த திரு.ரீனியஸ் – அவர் உண்மையான மனசாட்சிப்படி உணர்வுபூர்வமான, விசுவாசமுள்ள கிறித்தவர் – கிறித்தவர் மத ஆசிரியர்களின் கடமைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். தென்னிந்தியாவின் இளைய மதபோதகர்களைத் தன் கருத்துகளுக்கு ஆதரவாளர்களைத் திரட்டினார்; எனவே, சாதியை முற்றிலுமாக மறுப்பது – அது சமூக சம்பந்தமாக இருந்தபோதிலும் – கிறித்தவ சமயத்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு அத்தியாவசிய நிபந்தனை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

அதுமட்டுமன்றி முந்தைய மதபோதகர்களுக்கு எதிராகவும் பேசினர். பிரசாரம் செய்தனர். கிறித்தவ சமயத்தின் பரிசுத்தத்தை மாசுறச் செய்யும் விஷயங்களை அனுமதித்ததற்காக அவர்கள் `ஏசுநாதரின் போதனையைக் கறைப்படுத்தியவர்கள்’ என்று கண்டனர் செய்தனர்.

இந்திய சாதி அமைப்பும் ஐரோப்பிய சாதி அமைப்பும்

இவற்றையெல்லாம் பற்றி மிகவும் வருத்தத்தோடு கிறிஸ்டியன் டேவிட் தெரிவித்தார். அவரது கருத்து அவருடைய பழைய குருவான கிறிஸ்டியன் சுவார்ட்ஸின் கோட்பாடுகளுடனும் நடைமுறையுடனும் இயல்பாகவே இசைந்து போகக் கூடியதாக இருந்தது. பிஷப்பின் இலேசான தலையீடும் அன்பான ஆலோசனையும் மிகுந்த சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் கடைப்பிடிக்கும்படி இளம் பிரசாரகர்களின் இதயங்களை ஒழுங்குபடுத்தியிருக்கும் என அவர் கருதினார்.

“அதிக அக்கறையுடனும் அதிக நேர்மையுடனும் இந்தப் பிரச்சினையை ஹீபர் தம் மனதில் அலசிப் பார்த்தார். அந்த மனிதரின் பண்பு பற்றி நாம் தெரிந்து கொண்டவை அனைத்தின்படி, முந்தைய மதபோதகர்கள் கையாண்ட சமரச நடைமுறைகளுக்குச் சாதகமான நிலையை அவர் எடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலும் தகவல்களை சேகரிக்கவும் ஸ்தலத்தில் விவேகமான முழுமையான முடிவு எடுப்பதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் வரையில் தமது இறுதி முடிவை ஒத்திவைத்தார். எனவே தென் ராஜதானிக்கு அவர் விஜயம் செய்தபோது, முக்கியமான மதபோதகர்களுக்கு மேலும் தகவல் கேட்டு கடிதங்கள் எழுதினார்; கிறித்தவ ஞான கழகத்தைச் சார்ந்த ஒரு கமிட்டியை இந்த விஷயம் பற்றி மேலும் ஆய்வுகள் நடத்த நியமித்தார். அருட்திரு டி.சிரிவோகலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து – வழக்கமான கேள்விப் பட்டியலைவிடச் சற்று அதிகம் இருந்தாலும்- அவரது கருத்துகளின் போக்கைக் கண்டுபிடிக்க முடியும். மிகவும் ஆழமாக பரிசீலித்தபின், கடற்கரை பிரதேசங்களில் மதம் மாற்றம் செய்யப்பட்ட கிறித்தவர்களிடையே நிலவிய சாதி அமைப்பின் பிரதான அம்சங்கள் உண்மையில் கிறித்தவ நாடுகளில் நிலவும் சமுதாய விலக்கி வைக்கும் தன்மையிலிருந்து சொற்பமே வேறுபட்டு உள்ளன.

இந்தியாவுக்கு இறக்குமதியான ஐரோப்பிய சாதி அமைப்பு

ஐரோப்பாவில் சாதி என்பது போன்றது இல்லையா? அமெரிக்காவில் சாதி என்பது போன்றது இல்லையா? ஆங்கில மாதாகோவில்களில் உயர்ந்த நிலையிலுள்ளவர்களும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் தனியாக உட்காருவதில்லையா? நன்கு உடையணிந்த நமது உயர்சாதியினர் வழிபாட்டு மேடைக்கு முதலில் செல்வதில்லையா? உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துகிறார்களா? இவர்களின் குழந்தைகள் எல்லோரும் ஒரே பள்ளிகளுக்குச் செல்கின்றனரா? நம்மிடையே பறையர்கள் இல்லையா? பிற நாகரிக நாடுகளில் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் ஒரு வகையான சாதி உணர்வு நிலவவில்லையா? ஸ்பானிய கிடால்கோ நைந்து போன அழுக்கான உடையில் தனது சாதியை வெளிப்படுத்துவதில்லையா? மிகச் செல்வச் செழிப்பான முலாட்டோ மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள வெள்ளையரோடு கூட்டாளியாக, தோழனாகப் பழக முடியுமா?

ஒன்றில் அது ரத்தம் என்று சொல்லப்படலாம்; வேறொன்றும் மற்ற ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிப்படை அம்சங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து சொற்பமே வேறுபடும்.

கடவுள் முன்னிலையில் எல்லா மனிதர்களும் சமம் என்ற கிறித்தவக் கோட்பாடு புத்திசாலித்தனமானது; பாராட்டுதலுக்குரியது. ஆனால் மனிதர்களின் பார்வையில் எல்லோரும் சமம் அல்ல என்பதும் அதே அளவு உண்மையாகும். அவர்கள் சமமாக இருக்க வேண்டும் என்று ஒரு வேளை கடவுள் நினைக்கவில்லையோ என்னவோ! சமூக வேறுபாடுகள் எல்லா இடத்திலும் நிலவுகின்றன. தெற்கு கடலோரப் பகுதிகளில் மதமாற்றம் செய்யப்பட்டவர்களிடையே இருக்கும் வேறுபாடுகள் சமூகப் பாகுபாடுகளே என்றால், மனிதர்களில் வேறு எந்தப் பகுதியினரிடமும் இல்லாத இந்த சமத்துவம் என்ற நியதியை அமுலாக்க முயலுவதன் மூலம் நமது முயற்சிகளின் வெற்றிக்கு ஏன் ஆபத்தை உண்டாக்க வேண்டும் என்று பிஷப் வாதித்தார்.

“பிஷப் ஹீபரின் விவேகமான சிந்தனை இது. முதலிலிருந்தே அவர் சொல்லி வந்ததுபோல் இந்தியாவில் கிறித்தவ சமய லட்சியத்திற்குத் தாம் ஏதாவது சேவை செய்ய முடியுமானால் நடுவராக இருந்து கொண்டு சமரச வழியில், அதிதீவிரம் காட்டுபவர்களை நிதானப்படுத்தி பிரதான மதப் போதகராக அதிகம் நல்லது செய்ய முடியும் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால் இப்போது பழைய சீசாக்களில் புதிய ஒயினை அதிகம் ஊற்ற வேண்டாம் எனத் தீர்மானம் செய்துள்ளவர்களின் பக்கம் தமது பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்துவது தனக்கு வகுக்கப்பட்ட கடமை என்று அவர் நம்பினார்.’’

பள்ளிகளில் பறையர்களைச் சேர்க்காத பரிசுத்த வேதாகமத்தினர்

1841ல் இந்தியாவிற்கு வந்த மற்றொரு புராட்டெஸ்டெண்ட் மதபோதகரான அருட்திரு ராபர்ட் நோபிள் இந்தக் கருத்தை மேலும் அதிக வலுவாக வெளியிட்டார். இங்கிலாந்து கிறித்தவ சமயப் பரப்பு அமைப்பின் பணிகளுக்குப் பொறுப்பாளராக அவர் மசூலிப்பட்டணத்தில் இருந்தார். பறையர்கள், தோல் பதனிடும் தொழிலாளர், தெருச் சுத்தம் செய்யும் தோட்டிகள் ஆகியவர்களை அவர் பள்ளியில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதியைக் கடைப்பிடித்தார். கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்களிடையே சாதியைக் கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக தம் நிலை சரியென்று வாதிட்டர். தமது நிலையைப் பின்வருமாறு நியாயப்படுத்தினார்:

“இங்கிலாந்தில் மிகவும் தெய்வ நம்பிக்கையுள்ள கிறித்தவப் பெற்றோர்கள் தங்கள் புதல்வர்களை – புதல்விகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை – தங்களுடைய பணியாளுடனோ, அவர்கள் சமையல்காரர்களோடோ, பணிப்பெண்களோடோ கல்வி கற்பதை அனுமதிக்க மாட்டார்கள். மற்ற காரணங்களைவிட எங்கள் கிராமத்தின் பையன்களோடு திருட்டுத்தனமாக விளையாட சென்ற காரணத்திற்காகவே அடிக்கடி என் தந்தை என்னை அதிகமாகத் தண்டித்திருக்கிறார். மிகவும் நன்றாக முறைப்படுத்தப்பட்ட கிறித்தவக் குடும்பத்தில் வேலையாட்களுடன் பேசுவதையோ, சமையல் அறைக்குச் செல்வதையோ அனுமதித்ததை நான் பார்த்ததில்லை. சமையல்காரரோடோ குதிரைலாயப் பணியாளரின் குழந்தைகளோடோ பழகுவதை என் தகப்பனார் அனுமதித்ததில்லை. எனவே, ஏசுநாதரின் போதனையைக் கற்றுக் கொடுப்பதற்குமுன், பிராமணர்கள் பறையர்களோடும் தோட்டிகளோடும் அதே வகுப்பில் உட்கார வேண்டுமென்று கோருவது சரியென்று நான் நினைக்க முடியாது. அவ்வாறு கோருவது நியாயமற்றதும் கிறித்தவ தன்மையற்றதுமாகும்.’’

ஹீபர் காலத்திற்குப் பின், விவேகமும் மதப்பற்றும் கொண்ட பல கிறித்தவர்கள் அவர் மேற்கொண்ட நிலை தவறு என்று கருதியது உண்மையே. பிஷப் வில்சனும் பிந்திய காலத்தில் தனது முடிவைத் திட்டவட்டமாக மாற்றியதோடு, இந்து சமயத்தின் பிரிக்க முடியாத அம்சம் சாதி என்ற அடிப்படையில் சாதி பாகுபாடுகளை அனுமதிப்பதற்கு எதிராக தனது நிலையை அறிவித்தார். ஆனால் உண்மை என்னவெனில், அதிகாரபூர்வமானது மட்டுமின்றி புராடெஸ்டெண்ட் சமயப் பரப்பு அமைப்புகள் இந்தியாவில் இந்திய கிறித்தவ மதத்தில் சாதியின் இடம் பற்றி மேற்கொண்ட பொதுவான நிலையும் அதுதான்.

இவ்வாறாக, இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவுவதற்காக, அந்த மதம் சுலபமாக்கப்பட வேண்டுமென்று எல்லா சமயப் பரப்பு அமைப்புகளும் ஒத்துக் கொண்டன. இந்த விஷயத்தில், கத்தோலிக்கர்கள், லுத்ரன் பிரிவினர் அல்லது புராடெஸ்டெண்ட் பிரிவினர் ஆகியவரிடையே வேறுபாடு இருந்தது என்று தோன்றுகிறது. அந்த வித்தியாசம் அளவை பொறுத்த ஒன்றே.

கிறித்தவ மதத்திற்கு மாற்றப்பட்டவர்களிடையேயும் சாதியும், மற்றவையும் நிலைத்திருக்கின்றன என்றால் அது இந்தக் கொள்கையின் விளைவே, அதாவது கிறித்தவ சமயத்தை எளிதாக்கும் கொள்கையின் விளைவே. இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது என்றாவது ஒரு நாள் யாராவது அவர்களிடம், கிறித்தவ மதம் சாதியை நீக்கவில்லையெனில் அந்த மதம் எவ்வாறு நல்லதாக இருக்க முடியும் என்று கேட்பார்கள் என்று மதபோதகர்கள் ஒரு பொழுதும் நினைத்ததில்லை.

ஒழுங்கீனத்தை ஆதரித்த கிறுத்துவம்

கேள்வியின் இரண்டாவது பகுதியை எடுத்துக் கொள்வோம். மதம் மாறியவர்களைத் துன்பங்களிலிருந்தும் இழிவிலிருந்தும் கிறித்தவ சமயத்தால் காப்பாற்ற முடிந்ததா? தீண்டப்படாதவராக பிறந்த ஒவ்வொருவரின் துரதிர்ஷ்டமே இந்த துன்பங்களும் இழிவும். கிறித்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டபின் ஒரு தீண்டப்படாதவன் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியுமா? அவனது குழந்தைகள் பொதுப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனவா? அவன் நுழைய முடியாத உணவு விடுதிகளுக்கோ அல்லது மதுக்கடைகளுக்கோ அவன் போக முடியுமா? நாவிதன் அவனுக்குச் சவரம் செய்வானா? ஒரு சலவையாளன் அவனது உடைகளைத் துவைத்துக் கொடுப்பானா? ஒரு பஸ்ஸில் அவன் பிரயாணம் செய்ய முடியுமா? மனச்சான்றின் உறுத்தலின்றி அவன் ஒரு பொது அலுவலகத்தில் நுழைய அனுமதிக்கப்படுவானா? ஓர் இந்து அவனிடமிருந்து தண்ணீர் வாங்கி அருந்துவானா? கிராமத்தில் தீண்டப்படுபவர் வாழும் குடியிருப்புகளில் குடியிருக்க அனுமதிக்கப்படுவானா? அவனுடன் அமர்ந்து அவர்கள் உணவு அருந்துவார்களா?

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் `இல்லை’ `முடியாது’ என்ற பதிலே கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின், மதமாற்றம் தீண்டப்படாதவரின் சமூக அந்தஸ்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இந்துக்களில் பெரும்பான்மையானவர்களைப் பொறுத்தவரை, கிறித்தவனாக மாறிய பின்பும் தீண்டப்படாதவன் தீண்டப்படாதவனாகவே இருக்கிறான்.

என்ன காரணம் ?

கேள்வி என்னவெனில், மதம் மாறிய தீண்டப்படாதவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதில் கிறித்தவ சமயம் ஏன் வெற்றி பெறவில்லை? இந்தத் தோல்விக்கான காரணங்கள் யாவை? இந்தப் பிரச்சினை பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் நான் கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்வாரா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. என்ன மரியாதை கிடைத்தாலும் நான் அவற்றை எடுத்துக் கூறப்போகிறேன். நான் கூறப்போவதைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு, உணர்ந்து கொள்ளும் பொருட்டு மதம் மாறியவர்களின் அந்தஸ்தில் மாற்றம் ஏற்படுத்துவது இரண்டு முறையான மாற்றத்தின் விளைவாகவே சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டி என் வாதத்தைத் துவங்குகிறேன்.

இந்துக்களின் கண்ணோட்டத்தில் ஒரு மாற்றம் அவசியம் வேண்டும். இரண்டாவதாக மதம் மாறியவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் அவசியம் இருக்க வேண்டும். அந்தஸ்து இரட்டைத் தன்மை கொண்டது. இரண்டு நபர்களுக்கிடையே உள்ள விஷயம் அது. தங்கள் பழைய நிலையிலிருந்து இருவரும் நகர்ந்தாலொழிய மாற்றம் இருக்க முடியாது. கிறித்தவ மத முன்னேற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் இரு பக்கத்தினரும் நகருவதற்கு என்ன செய்திருக்கிறார்கள்? இந்தக் கேள்வியைப் பரிசீலித்தால், மதம் மாற்றம் செய்யப்பட்ட தீண்டப்படாதவர்களின் அந்தஸ்தை உயர்ந்த ஏன் கிறித்தவ மதம் தவறிவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

இந்தக் கேள்வியைப் பகுதி பகுதியாகப் பரிசீலிப்போம். இந்துக்கள் அவர்களின் நிலையிலிருந்து மாற கிறித்தவ மதம் என்ன செய்துள்ளது? அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இது விஷயத்தில் ஏதேனும் ஒரு கருத்து ஓர் அற்புதத்தை நிகழ்த்தலாம் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும். ஒரு கருத்து, அதாகவே பணியைச் செய்யும் என்ற நம்பிக்கை பற்றி மறைந்த ஆர்க்கிலி கோமகன் தெளிவாகக் கூறியிருக்கிறார். அவர் கூறினார்:

“இம்மாதிரி சக்தி வாய்ந்ததொரு சீர்திருத்த முறை எதுவும் இல்லை. ஒரு பொய்யான அல்லது இழிவான அல்லது விஷமத்தனமாக குரூரமான அமைப்போடு ஒரு ஒவ்வாத கருத்தை முன் வைத்தால், அப்பொழுது எவ்வித சர்ச்சையோ போராட்டமோ இல்லாமல், அந்த நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் ஒரு கருத்து அலையை ஏற்படுத்தும். இவ்வாறாகத் தான், எந்த ஒரு நேரடித் தாக்குதலும் இல்லாமல் அஞ்ஞானிகள் உலகத்தின் மிகவும் பலமான, மிகவும் வியாபகமான அடிமைத்தனத்தை கிறித்தவ சமயம் ஒழித்தது.’’

slavery_christianityஒரு கருத்தின் முக்கியத்துவம் எதுவாக இருந்தாலும் ஆர்க்கிலி கோமகனின் முடிவைச் சரியென்று வரலாறு நிரூபிக்கவில்லை என்பது நிச்சயம். ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்தது கிறித்தவ மதத்தின் செல்வாக்கினாலா என்பது வாதத்திற்குரிய ஒன்றாகும். கிறித்தவ சமயம் ஓர் அமைப்பாக பல நூற்றாண்டுக்காலம் நிலை நிறுத்தப்பட்டிருந்த போதிலும் ஐரோப்பாவில் அடிமைத்தனம் தொடர்ந்து இருந்தது என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அமெரிக்காவில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர கிறித்தவ மதம் போதுமானதாக இருக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. கிறித்தவ மதத்தால் மறுக்கப்பட்ட நீக்ரோவின் விடுதலையைப் பெற்றுத்தர ஒரு உள்நாட்டு யுத்தம் அவசியமாயிற்று.

கிறித்தவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், ஒரு கருத்தை விதைத்துவிட்டால் அது அதிசயத்தை நிகழ்த்தும் என்று நம்பியிருந்தது, கிறித்தவ மதத்தில் சேர்ந்த போதிலும், தீண்டப்படாதவன் ஏன் தீண்டப்படாதவனாகவே இருந்தான் என்பதற்கு ஒரு காரணம்.

கேள்வியின் மற்ற பாகத்தை எடுத்துக் கொள்கிறேன். தீண்டப்படாதவர்கள் முன்னேற கிறித்தவ சமயம் ஆக்கபூர்வமான உற்சாகப்படுத்தியதா? அது அவ்வாறு செய்யவில்லை என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

நான் பார்க்க முடிவது, தீண்டப்படாதவர்களுக்கு `நடைமுறை’ சீர்திருத்தம் பற்றி குறைவாகவும் கிறித்தவ சமூக கண்ணோட்டங்களைப் பற்றி அதிகமாகவும் கவனம் செலுத்தியது கிறித்தவ போதனை. தீண்டப்படாதவர்களை மதம் மாற்றம் செய்ய விரும்பும் கிறித்தவர்கள், கிறித்தவ சமயத்தை “ஆன்மீக’’ விஷயம் மட்டுமே என்று வலியுறுத்துகிறார்கள். மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்ற கடமை கிறித்தவர்களுக்கு உள்ளது என்று போதிப்பது மிகவும் மதிப்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதோடு நிறுத்திக் கொண்டு, சமூகப் பார்வையில் பிரதிபலிக்கும் ஆன்மீக வாழ்க்கை லௌகீக வாழ்க்கையோடு தொடர்புடையதல்ல என்றும் அது பற்றிக் கிறித்தவர்கள் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றும் வாதிப்பது ஒரு வெற்று சித்தாந்தத்தைப் போதிப்பதேயாகும் என்பது எனது கணிப்பு.

christianity_negros_slaveryதவறு செய்யும் ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று தினம் வேண்டிக் கொள்வது, அதைத் தொடர்ந்து தவறான செயல் செய்பவனை நல்லவன் ஆக்க நடவடிக்கை எடுடக்கவில்லை என்றால், என்ன பலனை அளிக்கும்? மதம் மாறியபின்பும் அவர்களைத் தொடரும் அநியாயத்தை அகற்ற செயல்படுவது தங்கள் கடமை என்று கிறித்தவ மத போகதர்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை. தீண்டப்படாதவர்களின் சமூக விமோசனம் பற்றி கிறித்தவ மத அமைப்புகள் செயல்படாமல் இருந்தது நிச்சயமாக துயரமானது.

அதைவிட அதிகம் துன்பம் தருவது, கிறித்தவ சமயத்திற்கு மாறிய தீண்டப்படாதோரின் செயலற்ற தன்மைதான். அது மிக மிக துயரம் அளிப்பது. மதம் மாறுவதற்குமுன், இந்துக்களால் தீண்டப்படாதவன் எவ்வாறு அவதிக்குள்ளானானோ அதேபோல் மதம் மாறியபின்பும் தொடர்ந்து அவதிப்படுகிறான். கொடுமைகளிலிருந்து விமோசனம் பெற கிறித்தவ மதத்திற்கு மாறாத தீண்டப்படாதவர்கள் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்களின் சமுதாயக் கொடுமைகளைப் போக்க தீண்டப்படாத கிறித்தவர்கள் மாநாடுகளில் கூடுவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. அவர்களுக்குக் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் போராட்டத்தில் அவர்களுக்குத் தலைமை தாங்கி நடத்த படித்தவர்கள் பலர் உள்ளனர் என்பது நன்கு அறிந்த ஒன்றே. அப்படியாயின் அவர்களின் குறைகளைப் போக்குவதற்கு ஒரு இயக்கம் இல்லாதது ஏன்?

கிறித்தவத் தீண்டப்படாதவர்கள் ஏன் ஒரு இயக்கத்தை கட்டி வளர்க்கத் தவறி விட்டார்கள் என்பதற்கு மூன்று காரணங்களை நான் காண்கிறேன்.

முதலாவதாக, தங்கள் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம், படித்த கிறித்தவர்கள் மத்தியில் முற்றிலுமாக இல்லாதிருப்பதாகும். இதற்குக் காரணம் என்ன? கிறித்தவ சமூகத்தில் உள்ள படித்த வகுப்பினர்களுக்கும் சாமான்ய மக்களுக்குமிடையே உறவுகள் எதுவும் இல்லை என்பதே எனது கணிப்பு.

சில இடங்களில் உயர்சாதி, கீழ்ச் சாதி என்று இது பிரிந்திருக்கிறது. கிறித்தவ சமூகம் பல்வேறு பிரிவினரைக் கொண்ட சமூகம். படித்த வர்க்கம் பெரும்பாலும் தீண்டப்படுபவர்களிடமிருந்து அல்லது மேல் சாதியிடமிருந்து வந்துள்ளது. கீழ்ச் சாதி அல்லது தீண்டப்படாதவர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து படித்த வர்க்கம் பிரிந்து இருப்பதால், படித்த வர்க்கத்திற்கு மற்றவர்களின் தேவைகள், துன்பம், அபிலாஷை, விருப்பங்கள், வாழ்க்கை லட்சியம் ஆகியவை பற்றிய பொறுப்பு எதுவும் இல்லை; அவர்களின் நலன் பற்றி அக்கறை காட்டுவதில்லை. எனவே தீண்டப்படாத கிறித்தவர்களுக்கு வழி நடத்தும் தலைமை இல்லை; இதனால் அவர்கள் தங்கள் குறைகளைப் போக்கத் திரண்டு எழவில்லை.

இரண்டாவது காரணம்: தீண்டப்படாத கிறித்தவர்களிடையே இயக்கம் எதுவும் இல்லையெனில், மதம் மாறியவர்களின் மனோபாவத்தில் உள்ள சில குறைபாடுகளாகும். தனது விலங்குகளை அறுத்து எறிய வேண்டும் என்ற உணர்வே முற்றிலுமாக இல்லாதது தீண்டப்படாத கிறித்தவர்கள் மனோபாவத்தை எடுத்துக் காட்டுகிறது. தீண்டப்படாத கிறித்தவர் களிடையே இத்தகைய ஆர்வம் இல்லாததன் காரணம் என்ன? இதற்கு இரு காரணங்கள் உள்ளன எனக் கருதுகிறேன். கிறித்தவர்களாக மாறிய தாழ்த்தப்பட்டவர்களின் முந்திய நிலையில் இதற்கான ஒரு காரணத்தைக் காணலாம். ஒரு தீண்டப்படாதவன் சில நலன்களுக்காக அல்லது பைபிளின் போதனைகள் அவனுக்கு பிடிப்பதால், கிறித்தவ சமயத்தில் சேர்கிறான். இந்துமத போதனைகள் பற்றி தீர்மானமான அதிருப்தி அல்லது விருப்பமின்மை காரணமாக ஒரு தீண்டப்படாதவன் கிறித்தவனாக ஆவது அபூர்வம்; இதன் விளைவு என்னவெனில் கிறித்தவ சமயம், அவனுடைய பழைய மத நம்பிக்கையின் பின் இணைப்பாக மட்டுமே ஆகிறது. அவன் இரண்டையும் போற்றுகிறான்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற முறையில் அவற்றைக் கடைப்பிடிக்கிறான்.

தீண்டப்படாத கிறித்தவர்களிடையே எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமலிருப்பதற்கு இரண்டாவது காரணம் கிறித்தவ மாதா கோவில்கள் அளிக்கும் போதனைகளே. ஒரு மனிதன் வீழ்ச்சிக்கு அவனது முந்தைய பாபம்தான் காரணம் என்றும், ஒருவன் கிறித்தவனாக மாறுகிறான் என்றால், கிறித்தவ சமயத்தில் பாபங்களுக்கு மன்னிப்பளிக்கும் வாக்குறுதி இருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் கிறித்தவ மதம் போதிக்கிறது. இந்த சித்தாந்தத்திற்கு இறை நம்பிக்கை மற்றும் விவிலிய நூல் போதனை ஆகியவை அடிப்படை காரணமாக இருந்தபோதிலும், சமுதாயக் கண்கொண்டு பார்த்தால் இந்த சித்தாந்தம் நாசத்தை விளைவிக்க வல்லது என்பது தெளிவு.

தவறான போதனைகள் தரும் கிறுத்துவம்

christian_conversion_aggressionமனிதனது வீழ்ச்சிக்குக் காரணம் சாதகமற்ற சூழ்நிலையே, சுற்றச் சார்பே அன்றி மனிதனின் பாபங்கள் அல்ல என்ற சமூக இயல் நிலைக்குக் கிறித்தவ மத போதனை நேரடிச் சவாலாக உள்ளது. சமுதாய இயல் கண்ணோட்டம்தான் சரியான கண்ணோட்டம் என்பதும், கிறித்தவக் கோட்பாடு மனிதனுக்குத் தவறாக வழிகாட்டுகிறது என்பதும் மறுக்க முடியாது. அது அவனைத் தவறான பாதையில் கொண்டு விடுகிறது. தீண்டப்படாத கிறித்தவர்களுக்கு உண்மையில் நடந்தது இதுதான். தவறான சமூக, மத சுற்றுச்சார்புதான் அவனது வீழ்ச்சிக்குக் காரணம் என்று போதிப்பதற்குப் பதிலாக அவனது வீழ்ச்சிக்குக் காரணம் அவனது பாபம் என்று போதிக்கப்படுகிறது.

இதன் விளைவு என்னவெனில், மதம் மாறிய தீண்டப்படாதவன் சுற்றுச் சார்பை வெற்றி கொள்ள வேண்டுமென்று ஊக்கம் பெறுவதற்குப் பதிலாக போராடுவதில் எந்தப் பலனும் இல்லை என்ற நம்பிக்கையில் திருப்தியடைகிறான்; தனது வீழ்ச்சிக்குத் தான் செய்த பாபமல்ல. தன்னுடைய தொலைதூர மூதாதையரான ஆதாமும் ஏவாளும் செய்த பாபம்தான் காரணம் என்று கருதுகிறான். அவன் இந்துவாக இருக்கும்போது தனது வீழ்ச்சிக்குக் காரணம் தனது கருமம் என்று நினைக்கிறான். அவன் கிறித்தவனாக மாறியபின், தனது வீழ்ச்சிக்குத் தனது மூதாதையரின் பாபம் காரணம் என்று கற்றுக் கொள்கிறான். எப்படிப் பார்த்தாலும் தப்பிக்க அவனுக்கு மார்க்கம் எதுவுமில்லை. ஒருவன் மதம் மாறுவது ஒரு புதிய வாழ்க்கைக்கான தோற்றத்தையும், பழைய வாழ்க்கையைக் கண்டித்து ஒதுக்குவதையும் தானே குறிக்க வேண்டும் என்று ஒருவர் வினவலாம்.

இந்தியாவில் இந்தியக் கிறித்தவ சமூகம் ஒரு பொருட்டாக மதிக்கப்படுகிறதா? நாட்டின் விவகாரங்களைத் தீர்ப்பதில் இந்த சமூகத்திற்கு என்ன முக்கியத்துவம், என்ன செல்வாக்கு உள்ளது? உண்மையில் நாட்டிலும் சமுதாயத்திலும் அது செல்வாக்கும் முக்கியத்துவமும் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலேயே மிக அதிகம் கல்வி கற்ற, ஞானம் பெற்ற சமூகம் இந்த சமூகம்தான் என்பதில் சந்தேகமில்லை.

கிறித்தவர்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் இந்தியாவில் வேறு சமூகங்களில் இருப்பதைவிட ஒப்புநோக்கின் அதிகம். அது மட்டுமல்ல, பல்கலைக்கழக பட்டதாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் இவர்களின் எண்ணிக்கையும் பிற சமூகத்தினரைவிட அதிகம். ஆண்கள் மட்டும் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை; பெண்களும் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு கல்வியறிவு பெற்றிருந்த போதிலும் கிறித்தவ சமூகம் இந்திய விவகாரங்களைப் பொறுத்தவரை மிகக் குறைந்த அளவே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுபற்றி கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், எவ்வளவு ஆழமாக, பாரபட்சமற்ற முறையில் முடியுமோ அவ்வளவு ஆய்வு செய்த பின்பே நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் கூறுவதை மறுப்பவர்கள் எனது முடிவு தவறு என்றோ அல்லது தவறான விவரங்களைக் கொடுத்துள்ளேன் என்றோ கூறலாம். எனது கருத்தையும் கவலையையும் பகிர்ந்து கொள்ளும் சில இந்திய கிறித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. “யங் இந்தியா’’விலிருந்து இரு கடிதங்கள் எடுத்து கீழே தருகிறேன்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத கிறுத்துவர்கள்

ஒரு இந்தியக் கிறித்தவர் திரு.காந்திக்கு எழுதிய கடிதம் 1921 ஆகஸ்டு 25ம் தேதியிட்ட `யங் இந்தியா’வில் பிரசுரமாகியுள்ளது. அதில் அவர் கூறுவதாவது:

“இந்தியக் கிறித்தவர்களை இந்திய மக்களாகத் தாங்கள் கருதுவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர் ஆகியோர் `யங் இந்தியா’வில் குறிப்பிடப்படுவதைக் கண்டிக்கிறேன்; ஆனால் கிறித்தவர்கள் விடப்பட்டிருக்கின்றனர்.

christianity_terrorism_crusadesஇந்தியக் கிறித்தவர்களாகிய நாங்களும் இந்திய மக்கள் என்றும், இந்தியாவின் சொந்த விவகாரங்களில் அக்கறை கொண்டிருப்பவர்கள் என்றும் தாங்கள் நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.’’

இந்தக் கடிதத்திற்குத் திரு.காந்தியின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகிறார்:

“இந்தக் கடிதம் எழுதிய நண்பருக்கும் மற்ற இந்திய கிறித்தவர்களுக்கும் உறுதியளிக்க விரும்புவது என்னவெனில், ஒத்துழையாமை இயக்கம் மத, இன வேறுபாடுகளை மதிப்பதில்லை. தன் அணியில் சேரும்படி அது எல்லோரையும் அழைக்கிறது. அவ்வாறே நேர்த்தும் கொள்கிறது. திலகரின் சுயராஜ்ய நிதிக்குப் பல இந்திய கிறித்தவர்கள் நிதி அளித்திருக்கிறார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் சில பிரபல இந்தியக் கிறித்தவர்கள் முன்னணியில் உள்ளார்கள். முஸ்லீம்கள், இந்துக்கள் பற்றித் தொடர்ந்து எழுதப்படுவதற்குக் காரணம், அவர்கள் இதுவரை ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதி வந்தனர். இந்த சஞ்சிகையில் வேறு எந்த இனத்தைப் பற்றியும் குறிப்பாகச் சொல்லியிருந்தால் அதற்கு எப்பொழுதும் ஒரு காரணம் இருந்திருக்கிறது.’’

திலகர் சுயராஜ்ய நிதிக்குப் பல இந்திய கிறித்தவர்கள் நிதி அளித்திருக்கிறார்கள் என்பதும், ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னணியில் பல பிரபல கிறித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, கடிதம் எழுதியவர் எழுப்பிய பிரதான கேள்விக்குத் திரு.காந்தி அளித்த பதில் சரியானதல்ல, அது தவறான கருத்தை அளிக்காவிட்டாலும் இந்துக்களைத் தங்களின் எதிரிகளாகக் கருதுவதால் முஸ்லீம்கள் குறிப்பிடப்படுகிறார்கள் என்றால், சீக்கியர்கள் ஏன் குறிப்பிடப்படுகிறார்கள்? அவர்கள் இந்துக்களைத் தங்கள் எதிரிகளாக கருதவில்லை என்பது உண்மை. பின் அவர்கள் ஏன் குறிப்பிடப்படுகிறார்கள்?

சீக்கியர்கள் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல; அவர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுவதோடு, அவர்களின் தீவிர ஒத்துழைப்பு இல்லாமல் சுயராஜ்யத்திற்கான போராட்டத்தை நடத்திச் செல்ல முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் சீக்கியர்களின் ஒத்துழைப்பு நிபந்தனையின்றி அளிக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களின் ஒத்துழைப்புக்குப் பிரதியாகச் சீக்கியர்கள் இரு நிபந்தனைகளை முன் வைத்தனர் என்பது நன்கு அறிந்ததே.

ஒரு நிபந்தனை, தேசியக் கொடியை வடிவமைக்கும்போது சீக்கியரின் நிறம் – அது கறுப்பு என்று கூறினர் – அதில் இடம்பெற வேண்டும் என்பது. சட்டசபைகளில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதைக் காங்கிரஸ் உத்தரவாதம் செய்ய வேண்டுமென்றும் இரண்டாவது நிபந்தனை. சீக்கியர்கள் குறிப்பிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், திருப்தி படுத்தப்பட்டார்கள்.

ஆனால் கிறித்தவர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. இந்தியக் கிறித்தவர்களைக் குறிப்பிடாததற்கு இரண்டு விளக்கங்கள்தான் இருக்க முடியும்.

ஒன்று, சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் அவர்கள் காங்கிரஸுடன் இல்லை அல்லது குறிப்பிடக்கூடிய அளவு அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இல்லை. சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் அவர்கள் காங்கிரஸுடன் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. `இந்தியன் சோஷியல் ரிஃபார்மர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கு ஒரு இந்தியக் கிறித்தவர் எழுதிய கடிதம் `யங் இந்தியா’வில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. கீழே கொடுத்துள்ள அந்தக் கடிதம் சுயராஜ்யம் பற்றி இந்தியக் கிறித்தவர்களின் நிலையை வெளிப்படுத்துகிறது:

“இந்தியாவில் கி.பி. இரண்டாவது நூற்றாண்டிலேயே கிறித்தவக் குடியிருப்புகள் இருந்தன என்பதற்குத் திட்டவட்டமான ஆதாரம் எங்களிடம் உள்ளது. உண்மை அதுவாக இருக்கும்பொழுது, இஸ்லாம் மதத்தின் தோற்றத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் தாங்கள் வசித்ததாக இந்திய கிறித்தவர்கள் உரிமை கொண்டாட முடியும். அப்படியிருக்கும்போது இந்திய மண்ணில் பிறந்த வளர்ந்த, சுத்தமான இந்திய மூதாதையரைக் கொண்ட இந்தியக் கிறித்தவன் இந்த நாட்டின் புராதன வரலாற்றை அதன் கலாசாரத்தைப் போற்ற ஏன் கற்றுக் கொள்ளவில்லை?

தங்களது மத நம்பிக்கையிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருந்தாலும் அதன் மக்களைத் தனது ரத்தத்தின் ரத்தமாக, தசையின் தசையாகப் பார்க்க அவன் ஏன் கற்றுக் கொள்ளவில்லை? அவனைப்போல் இல்லாமல், சக இந்து அல்லது முகமதிய பிரஜைகள் தாய்நாட்டின் கலாசார, சமூக, அரசியல் வளர்ச்சியில் அதன் ஒவ்வொரு கட்டத்தையும் எக்காரணத்தால் உற்சாகத்துடன் வரவேற்று அதில் தங்கள் பங்கை ஆற்றினர்? வந்தே மாதரம் இந்துக்கள், முகமதியர்கள் ஆகியவர்களின் உணர்ச்சிப் பிரவாகமாக மட்டுமே ஏன் இருந்தது? ஏன் இதுவரை இந்தியக் கிறித்தவனால் அது எதற்காகப் புறக்கணிக்கப்பட்டது? தங்கள் அபிலாஷைகள்பால் இந்திய கிறித்தவனின் உணர்வு அரைகுறை மனதானது என – எதிரானதில்லை என்றாலும் – ஏன் இந்துக்களும் முகமதியர்களும் கருதுகிறார்கள்? இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் தேசிய உணர்வானது இந்திய கிறித்தவன் தான் ஒதுக்கப்பட்டு விட்டதாக, தனக்கு உதவிகரமாக இல்லாததாக, எதிர்காலத்தில் தனது பாதுகாப்பு எற்றி சந்தேகப்படத்தக்கதாக ஆகியுள்ளது ஏன்?’’

 christian_jesus_patriotism

திரு.ஜார்ஜ் ஜோசப், கே.டி.பால், டாக்டர் எஸ்.கே.தத்தா ஆகியோர் விஷயம் எப்படியாயினும், சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் கிறித்தவ சமூகம் தீவிரமாகக் கலந்து கொள்வதற்கு மாறாக, அதைப் பற்றி உண்மையிலேயே பயந்து கொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை. இந்தியக் கிறித்தவர்களிடையே நிலவும் கண்ணோட்டத்தை இக்கடிதம் உண்மையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆகவே முகமதியர், சீக்கியரோடு ஏன் இந்தியக் கிறித்தவர் குறிப்பிடப்படவில்லை என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பிடாமல் விடப்பட்டது சுயராஜ்யத்தின் நண்பர்கள் என்பதல்ல. அவ்வாறு விடப்படுவதற்கு அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததுதான் காரணம் என்ற ஒரே முடிவுக்குத்தான் ஒருவர் வர முடியும்.

இவ்வளவு நன்றாக அறிவாற்றல் பெற்ற ஒரு சமூகம், நாட்டின் விவகாரத்தில் எந்த முக்கியத்துவமும் செல்வாக்கும் இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயமாகும்.

இத்தகைய நிலைக்குக் காரணங்கள் எதுவாக இருக்க முடியும்? மிகவும் தெளிவான காரணம், அதன் எண்ணிக்கை சிறிதாக இருப்பதுதான். முஸ்லீம்களைப் போலவோ அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் போலவோ பொதுவாழ்வில் ஒரு சக்தியாக கிறித்தவ சமூகம் உணரப்படாததற்குக் காரணம், அதன் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதுதான். அவர்கள் முக்கியத்துவமில்லாமல் போனதற்கு இதுவே முழுவதும் காரணம் என்று ஆகிவிடாது. இந்த நிலைக்கு வேறு சில அம்சங்களும் இருக்க வேண்டும். இங்கு இரு அம்சங்களைக் காண்கிறேன்.

மதப் போதகரின் மகுடிக்கு ஏற்ப ஆடும் கிறுத்துவர்கள்

அதில் ஒன்று: இந்தியக் கிறித்தவர்கள் தேங்கிய நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் மதப் போதகர்களின் மடிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கல்விக்கு, அவர்களின் மருத்துவ தேவைக்கு, மத சம்பந்தமான விஷயங்களுக்கு, அவர்களின் மிகச் சொற்பமான தேவைகளுக்கு அவர்கள் சர்க்காரை எதிர்பார்ப்பதில்லை.

அவர்கள் மத அமைப்புகளையே நம்பியுள்ளனர். சர்க்காரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருந்தால், வெகுஜனங்களிடையே கிளர்ச்சி நடத்த, அவர்களுக்கு எடுத்துக் கூற, பயனளிக்கும் அரசியல் நடவடிக்கைக்கு அவர்களை ஒன்றுதிரட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அம்மாதிரி ஒரு ஸ்தாபனம் இல்லாவிடில் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பற்றி எந்த சர்க்காரும் கவலைப்படாது. நீரோட்டத்தில் அவர்கள் இல்லை; அதில் இல்லாததால், பொது வாழ்க்கை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை; எனவே பொதுவாழ்வில் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்த இடமும் இல்லை.

ஒற்றுமையை உருவாக்காத கிறுத்துவம்

இரண்டாவது காரணம்: இந்தியக் கிறித்தவ சமூகம் சிதறிக் கிடக்கிறது – ஐக்கியமில்லாத சமூகம் என்பதைவிட இது மிகவும் சரியான வார்த்தை. அவர்களிடம் பொதுவாக இருப்பது ஆன்மீக சக்திதான். அதைவிட்டு விட்டால் அவர்களிடம் பொதுவாக இருப்பதெல்லாம் அவர்களைத் தனித்தனியாக வைப்பதற்கு உதவுபவையே; மற்றவர்களைப் போலவே கிறித்தவர்களும் இனத்தால், மொழியால், சாதியால் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். மொழி, இனம், சாதி ஆகியவை வெறும் வேறுபாடுகளே என்று விளக்கிக் கூறி அவர்களை ஒற்றுமைப்படுத்த அவர்களின் மதம் போதுமான அளவு சக்தி வாய்ந்ததாக இருக்கவில்லை. மாறாக, அவர்களை ஒன்றுபடுத்தக்கூடிய மதம் பல்வேறு பிரிவுகளினால் ஏற்படும் வித்தியாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. விளைவு என்னவெனில், ஒரு பொதுவான லட்சியம், பொதுவான சிந்தனை ஏற்பட பொதுவான முயற்சி செய்ய முடியாத அளவு இந்தியக் கிறித்தவர்கள் மிகவும் சிதறுண்டு கிடக்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியக் கிறித்தவருக்கு ஒரு தமிழ் இந்து, பஞ்சாபிலுள்ள இந்தியக் கிறித்தவரைவிட மிகவும் நெருக்கமாக இருக்கிறான். அதேபோல் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இந்திய கிறித்தவனுக்கு, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இந்தியக் கிறித்தவரைவிட, ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த இந்து நெருக்கமாக இருக்கிறான். சுருங்கக் கூறவேண்டுமெனில், இந்தியக் கிறித்தவர் என்ற சொற்றொடர் புள்ளிவிவரத்திற்கான சொற்றொடரே. இந்தச் சொற்றொடரில் சமூக உணர்வே இல்லை. ஒரு சமுதாயம் உள்ளது என்பதை நிரூபிக்கத் தேவையான உணர்வினால் இந்தியக் கிறித்தவர்கள் இணைக்கப்பட்டிருக்கவில்லை.’’ என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

இந்த கட்டுரையில் இறுதியில், அவர் மதம் மாறிய கிறித்துவர்களில் தாழ்த்தப்பட்டவர்களே அதிகம் என்பதால் இது நண்பனின் விமர்சனம்தான் என்பதை குறிப்பிடுகிறார். ஆனால், எப்போதுமே அவர் தாழ்த்தப்பட்டவர்களை கிறித்துவ மதத்திற்கு மாற ஊக்கப்படுத்தியதில்லை. அதற்கு ஆதரவும் கொடுத்ததில்லை.

கிறுத்துவமயமான கோவாவைக் காப்பாற்றுதல்

கோவா கிறித்துவர்களின் பெரும்பான்மையான மாநிலம் என்பது அம்பேத்கருக்குத் தெரியும். எப்படியாவது கோவாவை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வைத்தார்.

பம்பாயில் கொலாபாவிலுள்ள ஜெயராஜ் ஹவுஸில் 1955 ஆகஸ்ட் 21ல் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் ‘‘கோவா இந்தியாவின் பகுதியாக வேண்டுமென்றும் போர்த்துகீசியர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் சம்மேளனத்தின் செயற்குழு கருதுகிறது. இந்த நோக்கம் நிறைவேற மூன்று வழிகள் உள்ளன.

1) விலைக்கு வாங்குதல்

2) குத்தகைக்கு எடுத்தல் அல்லது

3) யுத்தம்

இந்த மூன்று வழிகளில் ஒன்றை அரசு ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்றால் நம்மிடம் வேறு எந்த ஆயுதம் உள்ளது என்பதை மக்களுக்குக் கூறுவது அரசின் கடமையாகும்.’’

என்ற தீர்மானம் அம்பேத்கரின் அனுமதியோடு இயற்றப்பட்டது என்பதை பார்க்கும்போது அம்பேத்கரின் தேசபக்தி பளிச்சிடுகிறது.

அம்பேத்கரின் உள்ளம் மதமாற்றத்தை நோக்கி இழுக்கப்பட்டிருந்த சமயத்தில் சீக்கியம் அவர் உள்ளத்தில் துளிர்விட்டது. அதை இறுதியில் ஒதுக்கி வைக்கும் நிலை உருவானது என்று சொல்லலாம். ஆனால் கிறித்துவத்தை அந்த அளவில் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளத்தில் எப்போதுமே நினைத்துக்கூட பார்க்கவில்லை.

மூன்றாவதாக அம்பேத்கரின் முன் இப்போது இஸ்லாம் நின்றது. அதை அடுத்து காண்போம்.

(தொடரும்…)

24 Replies to “[பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்”

  1. //1841ல் இந்தியாவிற்கு வந்த மற்றொரு புராட்டெஸ்டெண்ட் மதபோதகரான அருட்திரு ராபர்ட் நோபிள் இந்தக் கருத்தை மேலும் அதிக வலுவாக வெளியிட்டார்//

    Roberto De Nobili was a RC missionery deputed by Vatican to S.India. Each missionery was assinged a definitive unique role to play in conversions. For e.g Beski to convert only middle caste and lower caste Hindus. Robert to convert Brahmins. Sometimes, the missionery chose his own field with the approval of Rome or London, as the case might be.

    Conversion of Brahmins – esp. S.I brahmins, was considered important because these brahmins cd b prime catch as they r the movers and shakers in Hindu religion. By weaning them away from Hindu religion, the religion cd n weakened to a large extent. The orthodox religioius vartety s followed by them, which s the major hindrance to Christianity.

    So, Robert came with the mission to target the Brahmins and the upper castes, in that order. He understood what cd attract these brahmins. An orthodox religious way, which will inter alia elimiante the parayars and pallars and other panchamars from the places of worship. Brahmins wd welcome it.

    He dressed like a very very orthodox Tamil brahmins, ate like them, slept like them on floor, walked barefoot, sported tuft on head (kudumi) wore panchakatcham and mastered sanskirt, Telugu and Tamil, Vedas and other Hindu scriptures, practised yoga and other penaces, and used all with the masses, in paticular, with Brahmins. He was nicknamed ‘Vellaippraamanar’ white brahmin. He spoke brahmincal dialect. Avaal ivaal.

    No wonder, he prevented dalits from the centres of learning he ran. As he knew well, it wd please his potential converts namely, the Brahmins.

    Unlike the allegation in the article, there had been no major clashes between the missionaries of rival sects in TN. For e.g both Beski and Francis Xavier completely swept all the coastal villages starting from Tuticorin and covering the whole coastal stretch of three districts Tuticorin, Tirunelveli and KK, and even beyond upto Quilon, to catholicism. Today, the fisherfolk of all these 3 districts, r devote catholics. However, Robert Caldwell who was a Protestant missionery (Prebeteiyerian, He s from Scotland) sent by London Gospel Society to the so called Truvancore mission – which had jurisdiction in all Southern Kerala and the said 3 districts, settled down at Idyangudi, a tiny hamlet of Nellai dist.,hardly a 20 minutes journey by road from Uvari the catholic coastal village of Nellai district. He did not try to convert any fisher man to Protestant christianity. He concentrated only on Nadars who lived interior although close to the coast and were not converted by either Xavier or Beski. Caldwell’s success was tremendous in that the Nadars gave up Hinduism and crossed over to Chrisitianity and form a formidable political and social force in Tamilnadu today with the nomenclature “CSI Nadars.”

    No reconversion s possible with the fisherfolk today. Each and every fisherman of these districts, excluding the dalits lliving there, is an RC. About CSI Nadars less said, the better. They r well organised political group.

    Dalits of these coastal villages – not all – still remain Hindus but their Hinduism is a village variety. They have their own temples and follow their own rituals. No brahmin priest anywhere found in these coastal villages. To sight a brahmin priest, u have to travel to Tiruchenur, 25 km away.

    Hindu Nadars continue – an equally formidable political and social force, who follow an amalgamated Hinduism. They employ the brahmin priests sometimes. They r now holding leadership in this dist of Hindu organisations, ex. Pon Radhakrishnan, the late Thanu linga naadar.

    Now, all these catholics, Protestants, CSI, Hindus – r moving towards Pentocostalism, including the fisherfolk, so alluring and attractive the new variety is. Many accusations can be heaped against this variety, and indeed being done so, yet, the fact remains that, in a few decades from now, all the 3 distcits will come completely fall under this religion – a mixure of ancient paganism of Africa and protestant Christianity evolved originally in Chicago by negro slaves in 1900s and, ironic to say, when Swami Vivekananda was delivering his address there.

  2. மதமாற்றம் செய்யவரும் மேலை நாட்டவருமே மூளைச்சலவைக்கு ஆட்பட்டோர் தான் என்ற கருத்து எனக்குண்டு. சமீபகாலமாக அதிக அளவில் நெருங்கி நான் பழகிய வரையில் மதம் என்பதைப் பெரிய விஷயமாகக் கொள்ளாதவர்களாகவே பலர் அங்கே இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு இந்தியக் கிறிஸ்தவர் தமக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவள் ஹிந்து, தாம் கிறிஸ்தவர். அவள் மதம் மாற மறுக்கிறாள் என்று சொன்னதற்கு “ஸோ வாட்? நீ ஹிந்துவாக மாறிவிடு. ப்ராப்ளம் ஸால்வ்ட்!” என்று சொன்னார் ஒரு கிரேக்க நாட்டுக் கிறிஸ்தவப் பெண். Religion is not a big deal, as long as you don’t hurt people என்றார் அவர்.

    கபாலீஸ்வரர் கோவிலில் ப்ராஹாரத்தில் அமர்ந்திருந்தால் மனம் சற்று அமைதியாக இருக்கிறது. என்னை ஏன் சந்நிதிக்கு உள்ளே விட மறுக்கிறார்கள்? என்று புலம்பிய ஒரு அமெரிக்கரையும் நான் அறிவேன். அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் பழகிய அவர், அலுவல் விஷயங்களில் நான் சற்றே பதறினாலும், “அருண்! பதறாதே. Take a deep breath. Think of the good buddy Shiva. He will get you out of problems.” என்று சொல்வார். ஆக மதமாற்றச் சிந்தனைகள் தெய்வீக உணர்வெல்லாம் கொண்டு தெய்வத் தொண்டாக வருவதில்லை. பணம், வசதி, சலுகை, இன்னும் வெளியே சொன்னால் கௌரவமாக இல்லாத சில பல விஷயங்களுக்காகவே நடக்கிறது இந்த மாற்றக் கூத்து.

  3. நம் சமூகத்தில் ஆண்தான். எனவே அவன் வேறுமத அல்லது குலப்பெண்ணைத் மணம்செய்யும் போது அவள்தான் மாறிக்கொள்ளவேண்டுமென அவன் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமே எதிர்பார்க்கிறது.

    இங்கு சொல்லப்பட்ட பெண் இந்து, அவன் கிருத்துவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    அவள் கிறுத்தவள் அவன் இந்து என்று இருந்தால், அவள்தான் இந்துவாக மாறவேண்டும்.

    ஒருவேளை அவள் முடியாதென்றால், இவனைவிட்டு வேறொருவனைத்தான் மணக்கவேண்டும். மணக்குமுன், இவள் அவன் தன் ஜாதியா, தன் மதமா என்று பார்த்துக்கொண்டால் மணம் இனிதே நடக்கும்.

    //தெய்வீக உணர்வெல்லாம் கொண்டு தெய்வத் தொண்டாக //

    இதை எம்மதத்திலும் இருந்து கொண்டு உணரலாம். தொண்டாற்றலாம்.

    பக்தனைப்பொறுத்ததே தெய்வமும் மதமும்.

    கடைந்தெடுத்த கயவர்கள் எம்மதத்திலும் உண்டு.

  4. சிவபெருமான் சுடுகாட்டில் இருந்தமையால் அவரை பறையர் என கூறகேட்டிருக்கிறேன்.

    சிவபெருமான் கிறிஸ்துவத்தில் வேண்டாம் என்பதால் தான் பறையர்களை ஒதுக்குகிறார்களோ?

  5. சிவபெருமான் சுடுகாட்டில் இருந்தமையால் அவரை பறையர் என கூறகேட்டிருக்கிறேன்.

    சிவபெருமான் கிறிஸ்துவத்தில் வேண்டாம் என்பதால் தான் பறையர்களை ஒதுக்குகிறார்களோ? ”

    Muttal,

    தவறுதலான புரிதல்.

    சிவபெருமான் சுடுகாட்டில் இருக்கும்போது. அவர் பெயர் சுடலை. அவரின் பிள்ளை சுடலை மாடன். மற்றும் பிற காட்டுத்தேவதைகள் ஆங்கு சிவனுக்கு உதவி புரிவோர். சுடலைத் தனியாகத்தான் இருப்பார். கழுத்தில் மண்டையோடுகளாலான மாலை. பார்வதியோடு இருக்கவே மாட்டார்.Ladies are not allowed to enter crematorium in Hindu religion. His picture is rarely found. But in North India, have seen such picture of Sivan as the protector of evil spirits.

    சுடுகாட்டிலிருந்து எழும் கெட்ட ஆவிகளின் கொட்டங்களையடிக்கி ஊர் மக்களைக்காதுபாப்பது சிவன் என்ற சுடலை, மற்றும் அவரின் உதவியாளர்களின் கடமை.

    காளி போன்ற உக்கிரத் தெய்வம் இருந்தாலும் காளி இந்த வேலையைச் செய்யாது. As I already said, Ladies are not supposed to get associated with sudukaadu. அவள் ஊருக்கு உலவும் கெட்டவர்களையும், அம்மை, வைசூரிகளிலிருந்து குழந்தைகளைக்காக்கும். கிராம மக்களின் கணிப்பின் காளி பார்வதியின் மாற்றுருவம். மொத்த தமிழர்க்ளின் கணக்குப்படி மாரியம்மன், போன்று எல்லா அம்மன்களும் பார்வதியின் வடிவங்கள். But these ammans have the power to stand alone; and even found with her husband. it is she who should be worshipped by the devotees. Excellent example is குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் 25 kms fromr Tiruchendur) who is with Sivaperumaal, her husband in the karpagraham. Very interesting to record here that the said temple was built by paraiyars. The temple became popular; and the TN has taken it over. But the paraytars have not abandoned their claim. In arangkaavalar kuzhu, one seat is reserved for them always.

    பறையர்கள் வணங்கும் காளியின் பெயர் உச்சினிமாகாளி. இதுவே வங்காளக்காளியுமாகும். காளியும் மண்டையோட்டையணிந்த மாலையுடன் இருப்பினும் அது சுடுகாட்டைக்குறிக்காது. எனவேதான் சுடலை என்ற சிவபெருமான் சுடுகாட்டு வேலை.

    இந்த சுடலைச்சாமியை பறையர் மட்டுமில்லாது, எல்லாக் கடைனிலை தலித்துக்களும் கும்பிடுவர். இக்கட்டுரையாசிரியரின் ஃபிக்சேசன் பறையர் என்பதால் மட்டும் என்பதால், சிவன் – சுடலை – பறையர் என்ற ஈக்வேசன் வருகிறது ஈக்வேசன் பிழை.

    பறையர் மட்டுமல்ல, பள்ளர், சக்கிலியர் என்போர் சுடலையைக்கும்பிடுவர். குரவர்கள் மாட்டார். They r associated with Maha Vishnu since time immemorial perhaps because they are originally forest tribes. Remember Tolkaappiyar here.

    Thirumiazhiyisai aazhwaar came from these Kuravas of Kanchi..His father’s name was – try and guess ! – exactly the same as the name of the leader of the Parayar’s political party விடுதலைச்சிறுத்தைகள்: திருமாவளவன்.

    Someone from this .com administration shd tell him that he shares his name with the Azhwaar’s father, if u get an opportunity to interact with him ever.

    Strictly the name shd have been of a kurava, later adopted by parayars also.

    இன்னொன்றையும் சொல்லவேண்டும். சுடலையை வணங்குவோர் சுடுகாட்டுக்கருகில் வசிக்கும் தலித்துகள் only.. இன்று சுடுகாட்டுக்கருகில் வசிப்போர் மிகக்குறைவு. வெட்டியானகள் மட்டுமே. அவர்கள் தொழலாம். அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. அப்படிப்பட்டக் குறைவானவர்கள் கிருத்துவத்துக்கு ஏன் வேண்டும்?

    தெரிந்தவர்கள் இன்னும் எழுதலாம்.

  6. // குரவர்கள் மாட்டார். They r associated with Maha Vishnu since time immemorial perhaps because they are originally forest tribes. Remember Tolkaappiyar here. //

    இது தவறு. முல்லைக்குத் தெய்வம் திருமால், குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன், மருதத்துக்குத் தெய்வம் இந்திரன், நெய்தலுக்கு வருணன் என்று தொல்காப்பியர் பிரித்துக் கூறியது அந்தந்த தெய்வங்களின் செயல்களையும் தொழில்களையும் குறிப்பதன்றி, அந்நிலத்து மக்களின் வழிபாட்டைப் பற்றிக் குறிப்பதன்று. “நெய்தல் நில மக்கள் வருணனை மாத்திரம் வணங்கினார்கள்” முதலானவை தவறாகும்.

    திருமாலுக்கு முல்லை நிலம் – கிருஷ்ணாவதாரத்தில் பிருந்தாவனத்தில் இருந்து அங்கு பல அற்புதச் செயல்களை நிகழ்த்தியது

    நெய்தலுக்கு வருணன் – வேதத்திலேயே வருணன் கடல் தெய்வமாகக் கூறப்பட்டதால் நெய்தலுக்குத் தலைவன்

    மருதத்துக்கு இந்திரன் – வயல்களில் விளைச்சல் நன்றாக இருப்பதற்கு மழை தேவை. அந்த மழையைக் கட்டுப்படுத்தும் தெய்வம் வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரன். ஆகையால் மருதத்துக்குத் தலைவன்.

    திருமாலை எடுத்துக்கொண்டோமானால் சங்க காலத்திலேயே மற்ற நிலத்து மக்களும் ஆலயங்களில் திருமால் வழிபாடு செய்த குறிப்புகள் உள்ளன –

    குறிஞ்சி நிலம் – வேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருவிதாங்கோடு
    மருதம் – திருவெக்கா, திருவரங்கம்

    அதோடு நெய்தல் நிலமாகிய திருச்செந்தூரில் முருகன் கோயில் பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்திலேயே உண்டு.

    மருத நிலத்தில் இந்திரன் கோயிலோ, நெய்தல் நிலத்தில் வருணன் கோயிலோ இப்படிச் சிறப்பாக இருந்ததாகச் சங்க இலக்கியத்தில் ஒரு சான்றும் இல்லை.

  7. கடவுளே,

    மனிதனுக்கு சாதி கற்பித்தது பத்தாது என்று கடவுளுக்குமா? என்ன கொடுமை இது?

  8. ///மருத நிலத்தில் இந்திரன் கோயிலோ, நெய்தல் நிலத்தில் வருணன் கோயிலோ இப்படிச் சிறப்பாக இருந்ததாகச் சங்க இலக்கியத்தில் ஒரு சான்றும் இல்லை.///

    இந்திரன் கோயிலோ வருணன் கோயிலோ வேறு எந்த நிலத்தில் இருந்தது? இருக்கிறது?

  9. ///வெட்டியானகள் மட்டுமே. அவர்கள் தொழலாம். அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. அப்படிப்பட்டக் குறைவானவர்கள் கிருத்துவத்துக்கு ஏன் வேண்டும்?///

    கிறிஸ்தவ மிஷ நரிகளின் பயிற்சியை சும்மா சொல்லக்கூடாது. வெகு சிறப்பு.

    https://www.joshuaproject.net/south-asia-states.php?rog3=IN

    வெட்டியான்கள் தமிழ்நாட்டில் 3700 பேர்தான். இதற்காக ஏன் கஷ்டப்படவேண்டும், கடைசியில் அதாவது மற்றவர்களை கவனித்துவிட்டு கடைசியில் கவனித்துக் கொள்ளலாம்.

    24 லட்சம் பறையர்களில் நான்கில் ஒரு பங்கு அதாவது ஆறு லட்சம் மாற்றியாகிவிட்டது.

    முப்பது லட்சம் பள்ளர்களில் பதினைந்து சதவிகிதம் அதாவது நான்கரை லட்சம் மாற்றியாகிவிட்டது.

    24 லட்சம் நாடார்களில் நாற்பது சதவிகிதம் அதாவது பத்து லட்சம் மாற்றியாகிவிட்டது.

    39000 பரதர்களில் என்பது சதவிகிதம் அதாவது 32000 மாற்றியாகிவிட்டது. இவர்கள் தூத்துக்குடிப் பக்கம் போர்ச்சுகீசியர் காலத்தில் மாற்றப் பட்டவர்கள். மீனவ சமூகத்தினர். பலர் பெர்னாண்டோ என்ற இறுதிப் பெயர் உடையவர்கள். மண்டைக்காடு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள்.

  10. ஜோ.அமலன் ரேயன் பெர்னாண்டோ அவர்களே…..

    உங்களுக்கு இருப்பது வெறும் ஆர்வக்கோளாறா, அல்லது அரை குறையாய் தெரிந்ததை வைத்து மற்றவர்களை குழப்பும் உத்தேசமா ?

    சுடலை மாடன் வழிபாடு தலித்துகளால் மட்டும் செய்யப்படுவதில்லை. நெல்லை மாவட்டத்தில் பல பிரிவுகளை சார்ந்த நாடார்களுக்கும் சுடலைமாடன் தான் குல தெய்வம்.மேற்படி பிரிவில் என்னுடைய நண்பர்கள் சிலர் உண்டு.மேலும் சுடலை மாடன் என்பதால் அவரது கோயில் சுடலையில் [ இடுகாட்டில் ] மட்டும் தான் இருக்கும் என்பதும் தவறான புரிதல். ஊருக்குள்ளும் சுடலை மாடனுக்கு கோயில்கள் உண்டு.

    திருவண்ணாமலையில் , ஈசான்ய லிங்கம் எட்டு சுடுகாடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கும்பகோணம் அருகே அய்யாவாடியில் அமைந்துள்ள பிரத்யங்கரா தேவி திருக்கோயில் பனிரெண்டு இடுகாடுக்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.மேலே கூறிய இரண்டு கோயில்களிலும் அனைத்து ஜாதியினரும் சென்று வழிபடுகின்றனர். எங்கள் ஊரில் குறவர் சமுதாயத்தினரின் குல தெய்வமான மதுரைவீரன் கோயில் அமைந்துள்ளது. அங்கு கவுண்டர், நாடார் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று வழிபடுகின்றனர்.

    எங்கள் கொங்கு மண்டலத்தில் ,கொங்கு வேளாள கவுண்டர்களில் சில பிரிவினருக்கு அண்ணன்மார் குல தெய்வம். அண்ணன்மார் எனப்படும் பொன்னர்,சங்கர் இருவரும் கவுண்டர்கள். ஆனால் எங்கள் பகுதியில் நாடார்களில் சில பிரிவினருக்கும் , தலித்துகளில் [ அருந்ததியர் } சில பிரிவினருக்கும் அண்ணன்மார் தான் குல தெய்வம். வழிபாட்டு முறைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்.

    சிவனின் மயானத்தாண்டவம், [ ருத்ர பூமியில் வசிப்பதால் ருத்ரன் ],மனித வாழ்வின் நிலையின்மையை குறிப்பதாகும். மண்டை ஓடுகளை மாலையாக அணிந்த காபாலிகம் என்ற வீர சைவர்களும் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவே. விபூதி பூசுவது கூட மனிதன் இறுதியில் பிடி சாம்பல் தான் என்பதை நினைவூட்டவே.

    ” ஞாயிறாகி, நமனுமாகி, வருணனாகி, சோமனாகி,
    தீயரா நிருதி வாயு திப்பிய சாந்தனாகி,
    ‘ பேயறாக் காட்டிலாடும்’ பிஞ்சகன் – எந்தை எம்மான்
    தீயராக்கையர் போலும் திருபயிற்றாரூரானே ….”

    இந்தப் பாடலில் குறிப்பிடப்படுபவர் திருவாரூர் தியாகராஜ சுவாமி என்பதை நினைவில் கொள்ளவும்…….

  11. சுடலை மாடன் ஐ பிராமணர்களும் பூஜிக்கிறார்கள்.

    உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வள்ளியூரில் சுடலை மாடன் கோவில் கொடையை எடுத்து நடத்தி சாமியாடுவதும் பிராமணர்களே.

    சுடலை மாடனை எல்லா ஜாதியினரும் வணங்குகிறார்கள்.

  12. Jo iam from thirunelveli sudalai madan is my kula deivam and iam a bharmian. Don’t bluf more

  13. 1. சாதியை எதிர்க்காத சமயவெறியர்கள்
    2. ஆக்கிரமிப்பை உறுதிசெய்யவே மதமாற்றம்
    3. காசு லாபத்தைக் காப்பாற்றச் சொல்லும் கர்த்தர்
    4. சூழலுக்கேற்ப நிறம் மாறும் கிறுத்துவம்
    5. சாதி இருந்தால்தான் மதம் மாற்ற முடியும்
    6. ஒற்றை டம்ளர்தான், ஆனால் எச்சில் டம்ளர்
    7. இந்திய சாதி அமைப்பும் ஐரோப்பிய சாதி அமைப்பும்
    8. இந்தியாவுக்கு இறக்குமதியான ஐரோப்பிய சாதி அமைப்பு
    9. பள்ளிகளில் பறையர்களைச் சேர்க்காத பரிசுத்த வேதாகமத்தினர்
    10. ஒழுங்கீனத்தை ஆதரித்த கிறுத்துவம்
    11. தவறான போதனைகள் தரும் கிறுத்துவம்
    12. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத கிறுத்துவர்கள்
    13. மதப் போதகரின் மகுடிக்கு ஏற்ப ஆடும் கிறுத்துவர்கள்
    14. ஒற்றுமையை உருவாக்காத கிறுத்துவம்

    கட்டுரை ஆசிரியர் கொடுத்துள்ள உப தலைப்புகளை பார்த்தால் அம்பேத்கர் கிருஸ்துவத்தை கடுமையாக தாக்கியுள்ளது போல் ஒரு எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது. ஆனால் விவரங்களை படிக்கையில் அவர் மேலோட்டமாக சில குறைகளை சுட்டிகாட்டி சில பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார் என்பது புனலாகும். 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கிருஸ்துவம் இந்தியாவில் முன்னேறிவந்த செய்தியை கூறுகையில் கோவாவில் நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் பற்றியும் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்த குற்ற பரம்பரை சட்டத்தை பற்றியும் தீண்டதாகாதோர் (Untouchables ) என்ற அடையாளபடுத்தி சட்டம் இயற்றியது பற்றியும் கூறாமல் விட்டது ஏன் ? (சுமார் 6 கோடி மக்களை இந்த சட்டத்தின் கீழ்கொண்டு வந்தார்கள் – அப்பொழுது இந்திய ஜனதொகை 26 கோடிதான் – 30 சதவிகித மக்களை இந்த சட்டத்தில் அடைத்து கொடுமை செய்தார்கள்). அவர் வெள்ளையருடன் அனுசரணையாகவே இருந்தார் என்பதும் சுதந்திர போராட்டத்தில் பங்குகொள்ளாமல் இருந்தார் என்பதும் ஏற்புடையது அல்ல. மேலும் வாசகர்கள் கட்டுரை ஆசிரியரை பலமுறை ஆதார புத்தகங்கள் விவரம் தருமாறு கேட்டும் விவரம் வெளியிடாதது ஏன்?

  14. இந்து மதத்தையும் இந்து சழூகத்தையும் ஆதிமுதல் அந்தம்வரை ஆங்கில மொழிபெயர்பு புத்தங்களை படித்து விளாவரியாக தாக்கி இமாலய குற்றங்கள் என்று அடுக்கி பல புத்தகங்களை வெளியிட்டார். ஆனால் கிருஸ்துவ வருகைக்கு பின்தான் இந்த ஜாதி பிரிவினை தீயூட்டி வளர்கப்பட்டது என்பது தெரிந்தும் அதை பற்றி எந்த புத்தகமும் அவர் வெளியிடவில்லை. திராவிட கட்சிகளும் தேசபற்றில்லாத ஸெக்யூலர்களும் நாம் வெள்ளையர்களுக்கு அடிமைபட்டு இருந்தாலும் பரவாயில்லை ஆனால் பிறந்த நாட்டின் தலைகைக்கு அடிமைபட்டு இருந்தால் தான் கேவலம் என்ற எண்ணத்தில் இன்றுவரை வரை இருந்துவருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதன் தாக்கம் அம்பேத்கரிடமும் சற்று இருந்ததைதான் காந்தி சாடினார்.
    நானும் பலமுறை நூலகத்திலிருந்து அம்பேத்கர் அவர்களின் மலிவுவிலை தடித்த புத்தகங்களை (Ambethkar Speeches & writings – More than 10 volumes – published as low priced edition by Maharastra Govt ) வாங்கிவந்து மேலோட்டமாக படித்திருக்கிறேன். ஏனோ அதை ஆழ்ந்து திரும்ப படிப்பதில் ஆர்வம் ஏற்படவில்லை. அப்படியே படித்தாலும் என்னை என்ன தெரிந்து கொண்டிர்கள் என்று கேட்டால் நிச்சயம் நான் ”சீதைக்கு ராமன் சித்தப்பன்” என்றுதான் கூறுவேன். அது என்னுடைய எண்ணஓட்ட குறை (Mind set ). இந்த குறை இல்லாதவர்கள் யாருமேகிடையாது அதில் அம்பேத்கரும் ஒருவர்.
    மேலும் ஒன்று எனக்கு இன்றுவரை விளங்கவில்லை – அது என்ன அம்பேத்கர் மட்டும்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்படுத்தியதில் முழூ பங்கு வகித்தார் என்பதுபோல் ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த குழூவில் ஏழூ பேர்கள் இருந்தார்கள். அவர்கள் யார் யார் என்பது பலருக்கு தெரியாது. மேலும் நமது அரசியல் அமைப்பு சட்டம் பிரிடிஷ் அரசியல் சட்டத்தின் 90 சதவிகித கார்பன் காப்பிதான் என்று இன்றுவரை பலர் கூறிவருகிறார்கள். அப்படி இருக்கையில் அதில் பெரும் பங்களிப்பிற்கு இடம் எங்கே இருந்தது.

  15. ம.வெங்கடேசன், கட்டுரையாசிரியர்
    வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
    இந்த தொடரின் ஆதார புத்தகங்கள்
    1. மஹாராஷ்டிரா அரசால் வெளியிடப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு’ 1 முதல் 38 பாகங்கள் வரை. (இதில் சட்டங்கள் இயற்றுவது தொடர்பான தொகுப்புகளிலிருந்து எந்த மேற்கோளும் எடுக்கப்படவில்லை)
    2. தனஞ்செயகீர் எழுதிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தமிழில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வெளியீடு
    3. வசந்த் மூன் எழுதிய ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ நேஷனல் புக் டிராஸ்ட் வெளியீடு.
    இந்த மூன்று புத்தகங்களிலிருந்தும் தான் அம்பேத்கரின் மேற்கோள்களை எடுத்துள்ளேன். அம்பேத்கரின் நூல் தொகுப்பில் ஒரு சிலவற்றில் அதிகமான மேற்கோள்களை எடுத்துள்ளதால் அதை மறுபடி மறுபடியும் அதே தொகுதியை குறிப்பிட வேண்டாம், கடைசி பாகத்தில் இவற்றை வெளியிடலாம் என்று எண்ணி இருந்தேன். அதனால் குறிப்பிடவில்லை.

  16. I enjoyed the pictures more than the articles. Especially, the fourth picture. LOL.

  17. Pingback: Indli.com
  18. ம.வெங்கடேசன்
    அரசியல் நிர்ணய சபையில் 5-11-49 அன்று டி.டி.கிருஷ்ணமாச்சாரி அரசியல் அமைப்புச் சட்டம் தயாரிப்பதில் அம்பேத்கரின் ஒத்துழைப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அரசியல் சட்டம் தயாரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுவர் குழுவில் ஒருவர் ராஜிநமா செய்தார். ஒருவர் காலமாகிவிட்டார். ஒருவர் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டார். ஒருவர் சமஸ்தான அரசுப் பணிகளில் மூழ்கியிருந்தார். ஒன்றிரண்டு பேர் டில்லியிலிருந்து தொலைவில் வசித்துவந்தனர். அவர்களும் உடல் நலக்குறைவால் குழுக்கூட்டத்திற்கு வரமுடியவில்லை. ஆகவே அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முழுப்பொருப்பையும் அம்பேத்கர் ஒருவரே ஏற்றுச் சமாளிக்க நேர்ந்த்து’ என்று பாராட்டினார். இதிலிருந்து அம்பேத்கர் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார் என்பதை ஊகிக்க முடியும்.
    அரசியல் நிர்ணய சபை, இந்த அரசியல் அமைப்புச் சட்டத் தொகுப்பை நாட்டின் சார்பாக 20-11-49 அன்று ஏற்றுக் கொண்டது. தனது முடிவுரையில் அரசியல் நிர்ணய சபையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அம்பேத்கரின் பணியைச் சிறப்பாக எடுத்துக்கூறிப் புகழ்ந்தார். ‘தனது உடல் நலம் சீர்குலைந்து வருவதைப் பொருட்படுத்தாமல் அம்பேத்கர் தனது செயல் திறமையால், வரைவுக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் தான் வகித்த பொறுப்பிற்குக் கௌரவத்தையும் பெற்றுத்தந்தார்’ என்று பாராட்டினார்.
    ஆகவே அரசியல் சட்டம் முழுக்க முழுக்க அம்பேத்கரின் உழைப்பே.

    அம்பேத்கர் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு எப்போதும் குறுக்கே நின்றதில்லை. வட்டமேசை மாநாட்டில் கூட இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று தான் வாதாடினார். காந்தி ‘இந்தியாவின் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறார் அம்பேத்கர்’ என்று எப்போது சாடினார்? என்பதை விளக்கினால் நல்லது.

    அம்பேத்கரின் நூல்களை மேலோட்டமாக படித்தால் எப்படி புரியும்? ஒன்றைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்தால் அதை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். அதனால் எந்த புத்தகத்தையும் மேலோட்டமாக படிக்காதீர்கள்.

  19. //மேலே கூறிய இரண்டு கோயில்களிலும் அனைத்து ஜாதியினரும் சென்று வழிபடுகின்றனர். எங்கள் ஊரில் குறவர் சமுதாயத்தினரின் குல தெய்வமான மதுரைவீரன் கோயில் அமைந்துள்ளது. அங்கு கவுண்டர், நாடார் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று வழிபடுகின்றனர்.

    எங்கள் கொங்கு மண்டலத்தில் ,கொங்கு வேளாள கவுண்டர்களில் சில பிரிவினருக்கு அண்ணன்மார் குல தெய்வம். அண்ணன்மார் எனப்படும் பொன்னர்,சங்கர் இருவரும் கவுண்டர்கள். ஆனால் எங்கள் பகுதியில் நாடார்களில் சில பிரிவினருக்கும் , தலித்துகளில் [ அருந்ததியர் } சில பிரிவினருக்கும் அண்ணன்மார் தான் குல தெய்வம். வழிபாட்டு முறைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். //

    It is not who are the devotees!! It is important whether all the devotees have equal rights!! see the info from HRC:

    அனைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

    இந்தப் பள்ளிகளைத் தொடங்கியவுடனேயே, மதுரைக் கோயிலைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களும் அவர்களுடைய சங்கமும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர்.

    பார்ப்பன சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைணவ பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூசை செளிணியும் அருகதை கிடையாது; பூசை முறைகளையும் மந்திரங்களையும் கற்றுத் தேறியிருந்தாலும், பார்ப்பனர்களைத் தவிர மற்ற சாதியினர்க்கு அர்ச்சகராகும் அருகதை கிடையாது;

    அவர்கள் தொட்டால் சாமி சிலை மட்டுமின்றி, கோயிலே தீட்டாகி விடும்; அந்தச் சிலையிலிருந்து கடவுளும் வெளியேறிவிடுவார்; இதன் காரணமாக கோயிலுக்கு வருகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த இலட்சக் கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையையும் பெற்றுவிட்டனர்.

    இதன் காரணமாக, மேற்கூறிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து, சான்றிதழும் வாங்கிய 206 மாணவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்யவில்லை. மதுரை அர்ச்சகர்கள் பெற்றிருக்கின்ற தடையாணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.

    நீதிமன்றத் தடை காரணமாக எல்லா அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

    இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம்

    ஆனால் கோயில் அர்ச்சகராக முடியாதாம். அந்த வேலைகளுக்கெல்லாம் தேவைப்படுகின்ற அறிவையும் திறமையையும் காட்டிலும் அதிகமான அறிவும் திறமையும் அர்ச்சகர் வேலைக்கு தேவை போலும்!

    அப்படியே பார்த்தாலும் இந்த 206 மாணவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அன்றாடம் காலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையில் இவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிசேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் முதலானவற்றை செய்யவும் முறையாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

    ஒழுக்கமானவர்கள்தானா என்று சோதித்து, அதன் பின்னர்தான் சைவ, வைணவப் பெரியோர்கள் இவர்களுக்கு தீட்சையும் வழங்கியிருக்கிறார்கள்.

    எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் பிறப்பால் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்ல என்பதற்காக அர்ச்சகராக முடியாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

    காஞ்சிபுரம் தேவநாதனையும், சங்கராச்சாரியையும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

    தில்லைவாழ் அந்தணர்கள் என்று புகழப்படும் சிதம்பரம் தீட்சிதர்களோ, அம்மன் தாலியையே அறுத்து விற்றவர்கள்;

    ஆடல்வல்லானுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொய் கையெழுத்து போட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். பிறப்பால் உயர்ந்த உத்தமர்களின் யோக்கியதைக்கு இவை சில சான்றுகள் மட்டும்தான்.

    ஒவ்வொரு கோயிலிலும் என்ன நடக்கிறது என்பது அன்றாடம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களாகிய உங்களுக்குத் தெரியும்.

    போலீசிடம் பிடிபடும்வரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டுதான் தேவநாதன்களும் தீட்சிதர்களும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்திருக்கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப்போகாத கடவுள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தொட்டால் ஓடிப்போய் விடுவார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

    ஆனால் பக்தர்களாகிய நீங்களெல்லாம் அப்படி நம்புவதாகச் சொல்லித்தான் மதுரைக் கோயில் அர்ச்சகர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.

    பார்ப்பனர் அல்லாத சாதியில் பிறந்தவர்கள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் அய்யனாருக்கும், மாரியம்மனுக்கும், அங்காள பரமேசுவரிக்கும் பூசை செளிணியவில்லையா? அந்தச் சிலைகளிலெல்லாம் கடவுள் இல்லையா? மாரியம்மனைத் தொடலாம், மீனாட்சியம்மனைத் தொட்டால் மட்டும் தீட்டா?

    பிறப்பால் புனிதமானர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும், திருப்பாணாழ்வாரையும், நந்தனாரையும் விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்களா? அல்லது வள்ளலாரையும் ஐயா வைகுந்தரையும் நாராயணகுருவையும் விடப் புனிதமானவர்களா?

    படிப்பறிவில்லாத ஒரு பாமரன் கூடக் கேட்கக் கூடிய கேள்விகள் இவை.

    ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்காமலேயே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியிருக்கிறதே, அது ஏன்?

    ஏனென்றால், பார்ப்பனரல்லாதவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பக்தர்களாகிய நீங்கள் நம்புவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லி தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள் மதுரை அச்சர்கர்கள்.

    இந்த 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகி, சாமி சிலையைத் தொட்டுப் பூசை செய்வதால் கோயிலைவிட்டே கடவுள் ஓடிவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பக்தர்களாகிய நீங்களெல்லாம் பிறப்பால் கீழானவர்கள் என்று நீங்களே நம்புகிறீர்களா? இல்லை என்றால் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உரத்துக் குரல் எழுப்பவேண்டும்.

    இது 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை அல்ல. நம் அனைவருடைய மானப்பிரச்சனை. இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அர்ச்சகர்களாகவில்லை என்றால், பிறப்பால் கீழானவர்கள், தீட்டானவர்கள் என்ற இழிவை நாம் எப்படி போக்கிக் கொள்ள முடியும்? எனவே இது மாணவர்களின் பிரச்சினை அல்ல, நம்முடைய மானப்பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

    இது ஒரு தீண்டாமைக் குற்றம். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது, சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என அன்றைக்குச் சொன்னது மனுநீதி. இன்றோ, அப்படியே படித்து விட்டாலும் அர்ச்சகராகக் கூடாது என்கிறது நீதிமன்றம்.

    ஆகமம், சாத்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்த அநீதிக்குப் பெயர்தான் தீண்டாமை. தொட்டால் தீட்டு என்ற இந்தத் தீண்டாமையை சமூகத்தில் அமல்படுத்தினால் இன்று அது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

    ஆனால் கோயிலுக்குள் அமல்படுத்தினால் அதன் பெயர் சாத்திரம், சம்பிரதாயம்.

    இதற்கு எதிராகத்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை.

    எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் குரல் எழுப்பவேண்டும் என்று கோருகிறோம்.

    ஆலயத் தீண்டாமை எனும் இந்த அநீதிக்கு எதிராக போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

  20. //…அம்பேத்கர் கிருஸ்துவத்தை கடுமையாக தாக்கியுள்ளது போல் ஒரு எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது. ஆனால் விவரங்களை படிக்கையில் அவர் மேலோட்டமாக சில குறைகளை சுட்டிகாட்டி சில பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார் என்பது புனலாகும். ..//

    திரு. வேதம்கோபால் ஜி,

    அம்பேத்கரின் பாராட்டுக்கள்தான் மேலோட்டமாக இருக்கின்றன. கவனித்துப் பார்த்தால் அவை பாராட்டுக்கள் இல்லை என்பதும், வாழைப்பழ ஊசி என்பதும் தெரியும். (மிஷநரிகளை மடிக்குச்சியால் ஒதுக்கி வைத்ததற்குத்தான் ஆங்கில அரசுக்குப் பாராட்டு தெரிவிக்கிறார் அம்பேத்கர்.)

    யூரோப்பியர்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மிஷனரியை அனுப்பினர் என்ற உண்மையை இந்த அத்தியாயத்தில் வெளிக் கொண்டு வருகிறார் அம்பேத்கர். அந்த மிஷனரிகளே இப்போதைய சாதி அமைப்பை உருவாக்கினர் என்ற முடிவிற்குத் தேவையான தகவல்களைத் தந்திருக்கிறார் . இதை விட வேறு என்ன வேண்டும் என்கிறீர்கள்?

    அவர் அடுக்கி வைக்கும் ஆதாரங்கள், தகவல்களைப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் இந்த அளவு தகவல்களைத் திரட்டி ஆதாரங்களை அடுக்குவது என்பது எவ்வளவு கடுமையான காரியம் என்பது தெரிகிறது. அவர் மனுஷனா, இல்லை தெய்வமா, இல்லை ஜெயமோகன் மாதிரி ஒரு யக்‌ஷனா என்பது தெரியவில்லை.

    இந்த அளவு ஆழமான ஆராய்ச்சியை ஒரு தனிமனிதர் செய்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அம்பேத்கருக்கு ஸரஸ்வதி கடாட்சம் பூர்ணமாக இருந்திருக்கிறது. அவரை நமஸ்கரித்தாலே அவளின் அனுக்ரஹம் நமக்குக் கிட்டி விடும்.

    அவர் தரும் தகவல்களில் இருந்து நாம் புரிதல்களை அடைந்துவிடலாமே.

    மேலும், தலித்துகளுக்கு எந்த உதவியையும் செய்ய இந்திய சமூகத்தினைச் சேர்ந்த எந்த அமைப்பும் முன்வராத போது, ஆங்கிலேயரையும் பகைத்துக் கொண்டால் அது தற்கொலையைவிட மோசமான முட்டாள்தனமான மரணத்தைத்தான் தரும்.

    வாழ்வதற்கும் வளர்வதற்கும்தான் போராட்டம். சாவதற்கும், சுருங்குவதற்கும் அல்ல. அதனால்தான் அம்பேத்கர் அவர் நோக்கம் சாராத விஷயங்களில் தனது சக்தியைச் செலவழிக்கவில்லை. செலவழித்திருந்தால் இந்த அளவு சாதனைகளை அவரால் செய்திருக்கவும் முடியாது.

    மேலும், இன்றைய சூழலில் இருந்து நாம் அன்றைய மனிதர்களை எடை போடுவதும் சரியல்ல. அவர்கள் தோள்மீது ஏறி நிற்பதால்தான் நம்மால் முடிந்த காலத்தின் தொலைதூரத்தைக் காண முடிகிறது. அம்பேத்கரை மறுப்பது, நமக்குத் தோள் கொடுக்கும் அறிவுத் தூண்களை ஒதுக்குவதற்குச் சமம். கூரை இடிந்துவிடும்.

    வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்ட ஒருவன் எதைப் பற்றியாவது கரையேறத்தான் துடிப்பான். அது மரத்தில் தொங்கும் பாம்பாக இருந்தாலும் சரி.

    கரையேறுவதுதான் முதல் வேலை. கரையேறியபின் பாம்புக் கடிக்கு வைத்தியம் செய்துகொள்ளலாம். இந்த நிலையை அம்பேத்கர் எடுதிருக்கலாம்.

    சாதீய வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இந்து தர்மத்தைக் காக்க அம்பேத்கர் நடத்திய உயிர்ப்போராட்டத்தைத்தான் இந்தத் தொடர் அருமையாக விளக்குகிறது.

    வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அம்பேத்கர் “எங்களுக்கு நீச்சல் தெரியாது. எங்களைக் காப்பாற்றுங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று குரல் கொடுக்கிறார்.

    கரையில் இருக்கும் நாம் பதில் தருகிறோம்: “எங்களுக்கும் நீச்சல் தெரியாது. ஆனால், உங்களைப் போல நாங்கள் எல்லாம் கத்துகிறோமா ?”

    .

  21. //அம்பேத்கர் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு எப்போதும் குறுக்கே நின்றதில்லை. வட்டமேசை மாநாட்டில் கூட இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று தான் வாதாடினார்.//

    //காந்தி ‘இந்தியாவின் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறார் அம்பேத்கர்’ என்று எப்போது சாடினார்? என்பதை விளக்கினால் நல்லது.//

    Venkatesan,

    Is it not true that in his “Worshipping false gods” book,the RSS ideologue Arun Shourie questioned the patriotism of Ambedkar?
    what is your comment on this?
    Are you agreeeing with Arun shourie who questioned patriotism of Ambedkar? If you are not agreeing, what is your rebuttal/rejoinder to Arun Shourie?

    Why did fringe outfits like shiv sainiks, sangh parviar want a ban on Ambedkar’s “Riddles of Hinduism”?

    1. while both Hedgewar and Golwalkar upheld Manu and thus rationalised the caste system inherent to the Hindu religion, Ambedkar even burnt copies of Manusmruti through a campaign. On December 25, 1927 Ambedkar observed a “Manu Smruti Dahan Din”, and publicly burnt Manusmruti. The struggle was known as the “Maha-Sangharsha” of Mahad Satyagraha, and it is an important milestone in dalit struggle against Brahmanism and Brahminical Hinduism.

    2.Ambedkar wtote:

    “Caste is a state of mind.It is a disease of mind.The teachings of the Hindu religion are the root cause of this disease”

    “Inequality is the soul of Hinduism,”

    “What is required is to get rid of the doctrine of ‘Chatuvarna’. That is the root cause of all inequality and is also the parent of the case system and untouchability, which are merely other forms of inequality”

    “There cannot be a more degrading system of social organisation than the Chaturvarna. It is the system which deadens, paralyses and cripples the people from helpful activity.”

    “Caste System is not merely a division of labour. It is also a division of labourers. It is an hierarchy in which the divisions of labourers are graded one above the other.”

    “We practice casteism and we observe untouchability because we are enjoined to do so by the Hindu religion.A bitter thing cannot be made sweet. The taste of anything can be changed. But poison cannot be changed into nectar.”

    “people should not only discard the shastras, but they should deny their authority as Buddha and Nanak did”

    “I tell you, religion is for man and not man for religion. The (Hindu) religion that does not recognise you as a human being, or give you water to drink, or allow you to enter temples is not worthy to be called a religion. The (Hindu) religion that forbids you to receive education and comes in the way of your material advancement is not worthy of the appellation ‘religion’. The (Hindu) religion that does not teach its followers to show humanity in dealing with its co-religionists is nothing but a display of a force. The (Hindu) religion that teaches its followers to suffer the touch of animals but not the touch of human beings is not a religion but a mockery.The (Hindu) religion that compels the ignorant to be ignorant and the poor to be poor is not a religion but a visitation!”

    “Untouchablility is not a transitory or temporary feature; it is eternal, it is lasting.
    It is eternal because the religion which assigns you the lowest status in society is itself divine and eternal according to the belief of the so-called high caste Hindus.
    Frankly it can be said that the struggle between the Hindus and the Untouchables is a never-ending conflict. No change warranted by change of time and circumstances is possible.”

    “Caste in the hands of the orthodox hindus has been a powerful weapon for persecuting the reforms and for killing all reform.”

    “Hinduism is a veritable chamber of horrors. The sanctity and infallibility of the Vedas, Smritis and Shastras, the iron law of caste, the heartless law of karma and the senseless law of status by birth are to the untouchables veritable instruments of torture which Hinduism has forged against untouchables.”

    the evils of Hinduism
    1) It has deprived moral life of freedom;
    2) It has only emphasized conformity to commands;
    3) The laws are unjust because they are not the same for one class as of another. Besides, the code is treated as final..

    “what is called religion by Hindus is nothing but a multitude of commands and prohibitions.”

    “Your(untouchable’s) humiliations are a matter of pride with others(caste hindus). You are made to suffer wants, privations and humiliations not because it was pre-ordained by the sins committed in your previous birth, but because of the overpowering tyranny and treachery of those (caste hindus). who are above you. You have no lands because others(caste hindus) have usurped them; you have no posts because others (caste hindus) have monopolised them. Do not believe in fate; believe in your strength”

    What is your comment on the above?? may be point by point would be good.

  22. Venkatesan,

    //”ஆனால், எப்போதுமே அவர் தாழ்த்தப்பட்டவர்களை கிறித்துவ மதத்திற்கு மாற ஊக்கப்படுத்தியதில்லை. அதற்கு ஆதரவும் கொடுத்ததில்லை”.//

    Religion can not give solutions to social problems. According to Ambedkar, hinduism is the root cause of all social problems and inequality. In fact, he did not even consider Hinduism as a religion but a multitude of commands and prohibitions.

    He was 1000% more anti-hindu than anti-christian and anti-muslim. Moreover, he might have not encouraged untouchables to convert to other religions such as christianism, islam… BUT
    AT the same time, he characterized the oppressive caste system as “the tyranny of Hinduism”.

    After spending a lifetime in a crusade against the oppressive Hinduism, Ambedkar finally renounced Hinduism, and converted to Buddhism and exhorted his followers to do the same.

    Ambedkar gave many choices for untouchables to choose as religion but he was very much AGAINST continuing as HINDU… COMING OUT OF HINDUISM FIRST is HIS GOAL..

    So caste-hindus cannot take umbrage under Ambedkar and wear his mask to attack other religions!!!

    Instead of attacking other religions, let caste hindus (touchables!!) introspect why he went away from Hinduism… the reasons which forced him to go for conversion are still there, strong and ruling the society…

    Therefore any self-respecting untouchable WOULD NOT CONTINUE as HINDU… believing in some other religion is individual’s choice…

    A caste-hindu should not shed crocodile tears for untouchables because according to ambedkar
    “the Hindu religion which assigns you(untouchables) the lowest status in society is itself divine and eternal according to the belief of the so-called high caste Hindus”
    “the struggle between the Hindus and the Untouchables is a never-ending conflict. No change warranted by change of time and circumstances is possible.”

  23. //அந்த மிஷனரிகளே இப்போதைய சாதி அமைப்பை உருவாக்கினர் என்ற முடிவிற்குத் தேவையான தகவல்களைத் தந்திருக்கிறார் . இதை விட வேறு என்ன வேண்டும் என்கிறீர்கள்?//

    களிமிகு கணபதி,

    but Ambedkar squarely blames Hinduism for creating, enforcing the caste and chthurvarna structure …read the following words of Ambedkar

    “Caste is a state of mind.It is a disease of mind.The teachings of the Hindu religion are the root cause of this disease”

    “Inequality is the soul of Hinduism,”

    “What is required is to get rid of the doctrine of ‘Chatuvarna’. That is the root cause of all inequality and is also the parent of the case system and untouchability, which are merely other forms of inequality”

    “There cannot be a more degrading system of social organisation than the Chaturvarna. It is the system which deadens, paralyses and cripples the people from helpful activity.”

    “Caste System is not merely a division of labour. It is also a division of labourers. It is an hierarchy in which the divisions of labourers are graded one above the other.”

    “We practice casteism and we observe untouchability because we are enjoined to do so by the Hindu religion.A bitter thing cannot be made sweet. The taste of anything can be changed. But poison cannot be changed into nectar.”

    “people should not only discard the shastras, but they should deny their authority as Buddha and Nanak did”

    “I tell you, religion is for man and not man for religion. The (Hindu) religion that does not recognise you as a human being, or give you water to drink, or allow you to enter temples is not worthy to be called a religion. The (Hindu) religion that forbids you to receive education and comes in the way of your material advancement is not worthy of the appellation ‘religion’. The (Hindu) religion that does not teach its followers to show humanity in dealing with its co-religionists is nothing but a display of a force. The (Hindu) religion that teaches its followers to suffer the touch of animals but not the touch of human beings is not a religion but a mockery.The (Hindu) religion that compels the ignorant to be ignorant and the poor to be poor is not a religion but a visitation!”

    “Untouchablility is not a transitory or temporary feature; it is eternal, it is lasting.
    It is eternal because the religion which assigns you the lowest status in society is itself divine and eternal according to the belief of the so-called high caste Hindus.
    Frankly it can be said that the struggle between the Hindus and the Untouchables is a never-ending conflict. No change warranted by change of time and circumstances is possible.”

    “Caste in the hands of the orthodox hindus has been a powerful weapon for persecuting the reforms and for killing all reform.”

    “Hinduism is a veritable chamber of horrors. The sanctity and infallibility of the Vedas, Smritis and Shastras, the iron law of caste, the heartless law of karma and the senseless law of status by birth are to the untouchables veritable instruments of torture which Hinduism has forged against untouchables.”

  24. kans அவர்களே….

    //கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.//

    ஹிந்து அறநிலை [ அற்ற ] துறை மட்டும் ரொம்ப யோக்கியமா ?இவர்களால் விழுங்கப்பட்ட கோயில் சொத்துக்கள் பற்றிய விபரம் தெரியுமா ?

    இதே தளத்தில் சில நாட்களுக்கு முன் என்னால் பதிவு செய்யப்பட என்னுடைய கருத்து பின்வருமாறு…..

    // தமிழக கோயில்களின் உண்மையான வருமானம் என்ன என்ற கணக்கு முதலில் அரசிடம் இருக்கிறதா? ஒரே உதாரணமாக எங்கள் திருப்பூரில் உள்ள நல்லூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயிலை எடுத்துக்கொள்வோம். இந்தக்கோயிலுக்கு சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலம் உண்டு. அனைத்து நிலங்களும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளன.அவற்றின் இன்றைய மதிப்பு பல கோடிகள் பெறும். இப்பகுதியை சார்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அனைவருக்கும் கோயில் நிலம் எது என்று தெரியும்.அனைத்துக்கும் முறையான ஆவணங்கள் உள்ளன. அரசுக்கு இது தெரியாதா? இன்று வரை மேற்படி சொத்தை கையகப்படுத்தவோ ,குறைந்த பட்சம் கோயில் நிலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வாங்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோயில் மடப்பள்ளியில் வேலை செய்து வந்தவர் சம்பளம் கட்டுபடியாகவில்லை [ மாதம் ரூ தொள்ளாயிரம் ] என்று வேலையை விட்டு நின்று பல மாதங்கள் ஆகின்றன . இன்றுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.கோயில் பிரகாரத்தில் உள்ள சிலைகளுக்கு நீர் கொண்டு வர உதவியாளர் [ மடப்பள்ளி ஆள் ] இல்லாததால் பக்தர்கள் செலவில் எல்லா இடத்திலும் pipe கள் பொருத்தப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. இந்து அறநிலை [அற்ற ] துறையிடம் கேட்டால், கோயிலுக்கு வருமானமில்லை , ஆகவே எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் வருகிறது. இதுதான் அரசு நிர்வாகம் செய்யும் லட்சணமா? இப்படி வரவேண்டிய பணத்தை வசூலிக்காமல் விட்டுவிட்டு தரிசனம் செய்பவனிடம் பிச்சை எடுத்தால் என்ன அர்த்தம்? மேலும் கோடிக்கணக்கில் வருமானம் வரும் கோயில்களின் நிதி எப்படி செலவளிக்கப்படுகிறது?

    இதும் நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் தானே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *