நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்

அமைதி – சமூக ஒற்றுமை – வளர்ச்சி ஆகிய உயர் நோக்கங்களை முன்வைத்து தேசியத் தலைவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது 61-வது பிறந்தநாள் அன்று 3-நாள் அடையாள உண்ணாவிரதத்தினையும் Sadbhavana Mission என்ற நல்லெண்ண இயக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

“குஜராத் மாநிலம் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் இருந்து மீண்டு, இன்று அனைத்து  துறைகளிலும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. குஜராத் அனைத்து மாநிலங்களிலும் மாதிரியாக பேசப்பட்டு வருகிறது…  பிற மாநிலத்தவருக்கும் குஜராத் வேலைவாய்ப்பை அளித்து வருவதில் பெருமை கொள்கிறோம். இந்த குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியால் குஜராத் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது”  என்று இன்று காலையில் விரதத்தைத்  துவக்கிப் பேசுகையில் மோடி குறிப்பிட்டார்.

“சாதியமும், இனவாதமும் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யாது என்பதற்கு இந்தியாவின் வரலாறு  சாட்சியமாக நின்று  கொண்டிருக்கிறது.  எனது  உறுதியான நிலைப்பாடும் அதுவே…  கடந்த 10 ஆண்டுகளில் எனது உண்மையான தவறுகளைச் சுட்டிக் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். ..

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஒளிவீசும் உதாரணமாக  நம் நாடு திகழ்கின்றது.  உங்களது ஆசிகளுடன்,  இந்த நல்லெண்ண இயக்கம்  நமது சமூக ஒற்றுமை இழையை இன்னும் பலப்படுத்தும்  என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ஹிந்து  இத்தருணத்தில் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், அவரது இயக்கத்திற்குத் தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

வாசகர்களும் தங்களது கருத்துக்களை மறுமொழிகளில் பதிவு செய்யுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

24 Replies to “நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்”

 1. Pingback: Indli.com
 2. தினமலர் செய்தியில் கண்டது:

  // தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோரை தனது பிரதிநிதிகளாக கலந்துகெள்ளுமாறு முதல்வர் ஜெ., பணித்துள்ளார். //

  அருமை! ஜெயலலிதா தீர்க்க தரிசனத்துடன் சிந்திப்பவர், நாட்டு ந்லனைக் கருத்தில் கொண்டு செயல்படுபவர் என்று தனது செயல்கள் மூலம் அழுத்தமாக சொல்கிறார்..

  மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் இயக்கம் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்!

 3. The Sangha Pracharak latter lovingly referred as Hindu Hruday Samrat, Mananeeya Sh.Narendra Modi ji is the continuation of selfless vasordhara started from Param Pujneeya Doctorji. Sh.Modi is the first BJP CM who has proved that on the basis of performance, one can be reelected. Best wishes for becoming PM of Hindusthan and to establish Akhand Hindusthan.

 4. நமது நாட்டின் அரசியல் வாதிகளை நினைத்தாலே நம் தேசத்தின் எதிர்கால நம்பிக்கையே தகர்ந்து போகும் இவ்வேளையில் திரு மோடிஜி அவர்கள் மட்டுமே நமது தேசத்தை உலகின் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வார் என்ற நம்பிக்கை என்னைப் போல் தேசபக்தி உள்ள சாமானியனையும் மகிழ்விக்கிறது .B J P தலைவர்கள் அனைவரும் தம் சொந்த விருப்பு வெறுப்புக்களை கடந்து திரு மோடிஜி அவர்களை முன்னிறுத்த வேண்டும்.
  ஈஸ்வரன்.க,பழனி.

 5. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் மதக்கலவரம் நடைபெற்ற போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

  கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் நினைத்து மனம் வெதும்பிய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.

  அந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

  நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் இந்த கடிதம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி:மாலைமலர்

 6. கிறுத்துவ, இஸ்லாமிய, இந்து மதங்களும், வேறுபடும் சமூக அமைப்புக்களும், சாதாரண மக்களும் இந்தியத்தன்மை கொண்டு பன்மையில் ஒருமை காண்பதற்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

  நல்லெண்ணம் கொள்ள மோடி விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று ஆபிரகாமிய நோயால் பாதிக்கப்பட்ட மெக்காலே இந்துக்களாவது நலமடைய முன்வரவேண்டும்.

  இந்த அழைப்பின் முக்கியத்துவம் அறிந்து வெளியிட்ட தளத்தினைப் பாராட்டுகிறேன். ஒரு வரலாறு செதுக்கப்படுவதைக் கூர்மையாக அவதானிக்கிறீர்கள்.

  .

 7. இது இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  நரேந்திர மோடி யின் நோக்கம் வெற்றி நிச்சயம் பெறும். மற்றும் அவருக்கு பிறந்த நாள் நலவாழ்துக்கள் .

  வாழ்க பாரதம்
  பிரத்யூஷ்

 8. மோடி போல ஒரு முதல்மந்திரி தமிழகத்திற்கு வாய்க்க நாம் இறைவனை பிரார்த்திப்போம் – பாஸ்கரன்

 9. எளிமையான அதேசமயம் வலிமையான தலைவரை நமது தேசம் தற்போது பெற்றுள்ளது.இனி என்றும் பாரதத்திற்கு வெற்றி நிச்சயமே ….வாழ்த்துவோம்

 10. மோடி இந்தியப் பிரதமராக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

 11. தன்னலம் சிறிதுமற்ற நரேந்திர மோடி போன்ற நல்லோர் இந்திய திரு நாட்டின் தலைமை பதவியை பெற்று , நாடு சிறக்க எல்லாம் வல்லான் அருள் புரியட்டும்.

 12. எல்லோரும் சிறிது அளவாவது நாட்டிற்காக செயல் பட்டால் நிறைய நல்லவர்களை நாட்டிற்காக தயார் செய்ய முடியும்.
  வாழ்க பாரதம்.
  இந்த தருணத்தில் தமிழ் ஹிந்து ஏன் ஒரு தொலைக்காட்சி சானலை ஆரம்பித்து இன்னும் பல பேரை சென்று அடையக் கூடாது. முயன்று வெற்றிபெறுங்கள்.
  வாழ்க பாரதம்.

 13. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் இந்துத்வாவினரால் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

  குஜராத் கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  அந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

  Thanks to Inneram.com

  https://www.inneram.com/2011091718961/the-letter-against-modi-from-vajbhai

 14. வளைகுடா நண்பரே,

  தங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது. தாங்கள் எந்த மண்ணின் மீது மரியாதை வைத்து உள்ளீர்கள் என்று. உங்கள் பாட்டன் முப்பாட்டன் கட்டி காத்த மண் மீது மரியாதை போய் வளம் அற்ற ஒன்றீர்க்கும் உதவாத பாலை வன மண் மீது தங்களுக்கு வைத்துள்ள பற்று உங்கள் பாட்டின் மண்ணையும் பாலைவன மண்ணாக்கும் என்று தாங்கள் அறியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. வளம் அற்ற மண்ணைவிட்டு வளமான ஆயிரம் நதிகளால் செழித்து வளர்ந்த உங்கள் பாட்டன் முப்பாட்டனின் ம்ண்ணை வணங்குங்கள்….

  3000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். கூடவே 500 மேற்பட்ட ஹிந்துக்களும் தான் இறந்தார்கள். இப்படி உங்களையும் ஏமாற்றி அடுத்தவரையும் ஏமாற்றி என்ன சாதிக்க போகிறீர்கள்.

  மோடி மட்டும் இல்லாவிட்டால். பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் எப்படி அழிந்தார்களோ அதே போல முஸ்லீம்களும் அழிந்து போயிருப்பார்கள்…..

 15. கோமதி செட்டி ஐய்யா : தங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது. தாங்கள் எந்த ஜாதி என்று.

  உங்களுக்கு தமிழ் மக்கள் மீது ஜாதி மதம் பாரா இந்த மண்ணின் மைந்தர்கள் மீதும் எவ்வளவு நெருக்கம் உள்ளது நன்றாக தெரிகிறது.

  சும்மா பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் அழிந்தார்கள் என கதை கட்டி விட வேண்டாம். சம்பந்தம் இல்லாமல் இந்த மறுமொழி பக்கத்தை திசை திருப்ப வேண்டாம்.

  நன்றி.

 16. வளைகுடா நண்பரே….

  கழகங்களிடம் நல்ல பயிற்சி எடுத்திருப்பீர்கள் போலும்……பதில் சொல்ல முடியாத கேள்வியை யாராவது கேட்டுவிட்டால் அவரை சாதியை குறிப்பிட்டு தாக்குவது கழகங்களின் டெக்னிக்……….

  // சும்மா பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் அழிந்தார்கள் என கதை கட்டி விட வேண்டாம்.//

  கதையெல்லாம் கிடையாது……சுதந்திரத்தின் போது மேற்படி இரு நாடுகளிலும் [ அப்போது ஒரே நாடு ] இருந்த ஹிந்துக்களின் ஜனத்தொகை எவ்வளவு? இப்போது எவ்வளவு?

  அவ்வளவுதூரம் ஏன் ? தற்போது இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு உள்ள சுதந்திரம் மேற்படி இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மை ஹிந்துக்களுக்கு உள்ளதா?

  அதையும் விடுங்கள்……வளைகுடா நாடுகளில் மாற்று மதத்தினருக்கு என்ன உரிமை வழங்கப்படுகிறது ?

 17. pakistan ,bangladesh enna inga irukka melvisharam (tamilnadu) , Marad( Kerala) ,kashmirlaye Hindhukkala Muslimkal vazha vidala

 18. வளைகுடா நண்பரே ! உங்களைப் போல இந்த உண்ணா விரதத்தை கேலிக்குரியதாக்க முயலும் யாரோ ஒருவர்தான் அப்படி ஒரு கடிதத்தை தகவல் அறியும் உரிமையில் கேட்டு அதை வெளிப் படுத்தியுள்ளார் . அந்தக் கடிதத்தில் திரு மோடி அவர்களை வாஜ்பாய் குற்றம் சொல்லவில்லை அப்படி பிறர் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் கூடவரக்கூடாது என்பதைச் சொல்லியுள்ளார் .மற்றவர்கள் கூறுவது போல திரு மோடிஜி இருந்தால் குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அவரை விரும்புவார்களா? அங்கு உள்ள முஸ்லிம்கள் மோடி அவர்கள்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.இதையே இந்திய முஸ்லிம்களும் தெரிந்து கொண்டால் இந்தியர் அனைவருமே மதம் பார்க்காமல் ஆதரவு கொடுப்பார்கள்.அப்படி நடந்துவிட்டால் போலி மதச்சார்ப்பின்மைவாதிகளுக்கு கரிபூசியது போல ஆகிவிடுமே ஆகவேதான் ஏதாவது ஒன்றை சொல்லி பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள் .இதை குஜராத் மக்கள் புரிந்து கொண்டது போல் நாட்டின் இதர மக்களும் புரிந்து கோண்டால் நமது நாட்டின் எதிர்காலமே மாறிவிடும்.
  ஈஸ்வரன்,பழனி.

 19. நரேந்திர மோடிஜி பிரதமராக வரவேண்டும் அப்பதான் நாடு உருப்படும். சுதந்திரம் அடைந்ததற்கு பின் கடந்த 65 ஆண்டுகளாக பல ஆட்சிகளை பார்த்திருக்கிறோம். இப்படி ஒரு உதாரண புருஷனை இப்பதான் பார்க்கிறோம். இந்த நல்லவர் கைல இந்த நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்திய இன்னும் எதனை வருடம் காத்திருக்க வேண்டுமோ சிறந்த நிர்வாகத்திற்கு. அந்த நரேந்திரனின் (சுவாமி விவேகனந்தர்) மறு அவதரமேதான். BECAUSE நம்ம நாட்டிற்கு பிரச்சினை வரும் பொது எல்லாம் எதாவது ஒரு அவதாரம்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும். பாரத் மதகி ஜெய்

 20. பால் ராஜ்,

  உங்கள மாதிரி நல்லவங்க இருக்கறதால தான் நாட்டுல மழையே பெய்யுது. என்ன ஒரு பிரச்சனை உங்கள மாதிரி ஆளுங்க சட்டிஸ்கர் மற்றும் ஒரிசா மாதிரி இடத்துல நிறைய பேரு இருக்கறாங்களா? மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டு வெள்ளம் வந்து நூத்து கணக்குல இறந்து போயிடுராங்க 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *