7.9.2011-ஆம் தேதி டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தின் 5-வது நுழைவு வாயிலில் வெடித்த குண்டுவெடிப்பின் காரணமாக 15-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தார்கள். ஏதோ டெல்லியில் நடந்த முதல் சம்பவம் இந்த நிகழ்வு கிடையாது. இந்த நாட்டை 60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. 1980-லிருந்து இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பல்வேறு காலகட்டங்களில் நாட்டிலே நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் மீது காங்கிரஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுக்கின்ற காரியத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக இஸ்லாமிய தீவிரவாதிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் அரசை மிரட்டும் தொனியில் தங்களது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆகவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை தீவிரவாதத்தை அழிக்க இயலாது எனக் கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி முதல், மேல்மட்டத்தில் உள்ள அனைத்துப் பொறுப்பாளர்களும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக கருத்துகளைக் கூறுவது, இரண்டாவது கடுமையான சட்டம் இயற்றாதது, மூன்றாவது பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக இருக்கும் இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது, இதற்கும் மேலாக சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் ஏற்படும் தயக்கம். எனவே காங்கிரஸ் கட்சி துணிவாக எந்த நடவடிக்கையும் எடுக்காது எனத் தெரிகிறது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் போதேல்லாம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் சம்பிரதாயமான வார்த்தைகளை மட்டும் வார்த்தைகளின் வரிசைகூற மாற்றாமல் அறிக்கையாகக் கொடுத்துவிட்டு தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்வார்கள்.
பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள்
பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்குக் கூட இந்த அரசு முறையான திட்டங்களை வகுக்கவில்லை, கடுமையான நடவடிக்கைள் எதுவும் எடுக்கவில்லை. 2001-இல் பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டபின் பயங்கரவாதச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்த இயக்கம் என உளவுத் துறையினரால் தெரிவிக்கப்பட்ட சிமி இயக்கம் தடை செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் வக்காலத்து வாங்கின. உச்சகட்டமாக, உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவரான சல்மான் குர்ஷித், சிமி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிமி இயக்கத்திற்கு ஆதரவாக வாதாடினார் என்பதைப் பார்க்கும் போது மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயங்கரவாதத்தை அழிக்க முயலுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
2002-ஆம் ஆண்டு பொடா சட்டம் நிறைவேற கூட்டப்பட்ட சிறப்புப் பாராளுமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், எதிர் கட்சியின் தலைவருமான திருமதி சோனியா காந்தி, “தீவிரவாதத் தடுப்பு எனும் பெயரில் ஒரு அமைப்பை தடைசெய்வதால் மட்டும் பயங்கரவாத செயலை அடக்க இயலாது. ஆகவே சில அமைப்புகளுக்கு தடைவிதிப்பு ஏற்க இயலாது” எனத் தெரிவித்தார். ஜூன் மாதம் 2002-இல் சிமி இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தார். (the anti-terrorism measure had been selectively used to ban an organization that had nothing to do with terrorism in J&K. Further she opposed the banning of Islamic terrorist organization SIMI in June 2002.) இதன் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தடையை நீடிக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டு தடையை நீடிக்க காங்கிரஸ் அரசு முயலவில்லை, பின்னர் எதிர்ப்பு வரும் எனத் தெரிந்தவுடன் தடையை நீடிக்கச் செய்ய முயன்றது.
6.10.2010-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். 28.9.2001-ஆம் தேதி அம்பிகா சோனி விடுத்துள்ள அறிக்கையில் சிமி மீது விதிக்கப்பட்ட தடை ஏற்புடையதல்ல என்றார். இவரைப் போலவே 2001-இல் உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஸ்ரீபிரகாஷ் ஜெய்வால், “விஷ்வ இந்து பரிஷத்தை விட சிமி மிகவும் மோசமான இயக்கம் கிடையாது; ஆகவே விஷ்வ இந்து பரிஷத்தையும், பஜ்ரங்தள்ளையும் தடை செய்யாமல் சிமியை மட்டும் தடை செய்தது விசித்திரமானது,” எனக் கூறினார். 23.4.2004-ஆம் தேதி வெளிவந்த செய்தியில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் சிமி மீது விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர். ஆனால் திக்விஜய் சிங் வெளியிட்ட கருத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பயங்கரவாத அமைப்பே கிடையாது என்பதாகப் பேசினார். ஆகவே ஆளும் காங்கிரஸ் கட்சி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டதின் காரணமாக இவர்களின் செயல்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
ஆட்சியாளர்களின் அலட்சியம்
பயங்கரவாதத் தாக்கதல்கள் நடந்தவுடன் பிரதமர், உள்துறை அமைச்சரின் அறிக்கைகள் வெளிவரும், இந்த அறிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்பதைப் பார்த்தால் தெரிந்துவிடும். 7.12.2010-ஆம் தேதி வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பின் போது, “பயங்கரவாதத்துடன் போராடும் மன உறுதியைக் குலைக்கும் முயற்சி இது. பயங்கரவாதிகள் வெற்றி பெறமாட்டார்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபாங்கள்” என பிரதமர் தெரிவித்தார். இதே கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக 7.9.2011-ஆம் தேதி டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பின் போது, “பயங்கரவாதத் தன்மை கொண்ட கோழைத்தனமான காரியம்; பயங்கரவாதத்தின் நெருக்கடிக்கு நாங்கள் எப்போதும் அடிபணியமாட்டோம். இறந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள்” என்றார். ஆனால் வார்த்தைகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு நடவடிக்கையை எடுக்க எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.
பயங்கரவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்விதமாக இருந்த பொடா சட்டத்தை 2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரத்து செய்தது. பொடா சட்டத்திற்கு மாற்றாக கடுமையான ஒரு சட்டத்தை இதுவரை கொண்டுவரவில்லை. இந்திய அரசுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உளவுத் துறை தகவல்கள் கொடுத்தாலும் ஆட்சியாளர்கள் அதை செயல்படுத்த முனைவதிலலை. 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகமதாபாத் குண்டுவெடிப்பின் போது உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உதிர்த்த முத்துகள்- “நமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதை இந்தச் சமயத்தில் நான் வெளியிடுவதோ எந்த ஒரு அமைப்பின் மீதும் பழியைச் சுமத்துவதோ முறையல்ல. அப்படிச் செய்தால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.” இதிலிருந்து இந்த அரசுக்கு பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க சிறிதளவு சிந்தனையும் கிடையாது என்பது உறுதியாகிறது.
பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. 2003-இல் குஜராத் அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய, குஜராத் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டத்திற்கும், 2006-இல் ராஜஸ்தான் அரசு அனுப்பிய சட்டத்திற்கும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உத்திரப் பிரதேசம் கொண்டுவந்த சட்டத்திற்கும், 2001-இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆந்திர பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கும், இவர்களை போலவே மத்திய பிரதேசம் கொண்டு வந்த சட்டத்திற்கும் இன்று வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல தரவில்லை இந்த கால தாமதமும் ஆளும் மத்திய அரசுக்கு பயங்கரவாத செயல்களை தடுக்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.
புதுவிதமான வகையில் இந்தியன் முஜாஹுதீன் அமைப்பு தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே பல்வேறு ஊடகங்களுக்கு இ-மெயில் மூலமாக தாக்குதல் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார்கள். 2007 நவம்பர் மாதம் முதல் 13.9.2008-ஆம் தேதி வரை ஐந்து இ-மெயில்கள் அனுப்பட்டுள்ளன. 23.11.2007-ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் மூன்று முக்கிய நகரங்களை தாக்கப் போவதாக அனுப்பட்டது முதல் இ-மெயிலாகும். இரண்டவதாக 26.7.2008-ஆம் தேதி ஜெய்பூரில் நடத்திய குண்டுவெடிப்பின் போதும், மூன்றாவதாக 26.7.2008-ஆம் தேதி அகமதாபாத்தில் நடத்திய குண்டுவெடிப்பின் போதும், நான்காவதாக குஜராத் காவல் துறை அலுவகத்தின் மீது ஆகஸ்ட் மாதம் 2008-லும் அனுப்பப்பட்டது. இறுதியாக ஐந்தாவது இ-மெயில் டெல்லியில் 13.9.2008-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பிற்கு சில நிமிடங்களுக்கு முன் அனுப்பட்டது. இவ்வாறு ஐந்து முறை இ-மெயில் அனுப்பியபின் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய இந்தியன் முஜாஹுதீன் என்கிற அமைப்பு– இந்தியாவில் உருவாகிய அமைப்பு, இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் மறு பிறவி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆனால் இந்த அரசு இவ்வாறு இ-மெயில் அனுப்பியவர்களைக் கண்டுபிடிப்பதிலும் காலதாமதம்; கண்டுபிடித்தாலும் அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவும் காலதாமதம் செய்வதால், இந்த அரசு உண்மையிலேயே பயங்கரவாதத்தை அழிக்க முடியுமா என்பதே மிகவும் முக்கியமான கேள்வியாகும்.
6.10.2008ந் தேதி மும்பை காவல் துறையினர் 20 பேர்களை கைது செய்தார்கள். இவர்கள் 26.7.2008-ஆம் தேதி அகமதாபாத் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அடுத்த நாள் அதாவது 13.9.2008-ஆம் தேதி சூரத்தில் தொடர் குண்டுவெடிப்பிற்கு வழிவகுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் என்ஜினியர்கள். இ-மெயில் அனுப்புவதில் திறமைசாலிகள் என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இ-மெயில் அனுப்பியதில் முக்கிய பங்கு கொண்டவர்கள் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனான முகமது மன்சூர் அஸ்கர் பீர்பாய் என்பவன் பூனாவில் குடியிருப்பவன்; யாஹூவில் ஆண்டுக்கு ரூ.19 லட்சம் சம்பளத்தில் பணியில் இருப்பவன். ஆகவே பயங்கரவாத இயக்கங்கள் நன்கு திட்டமிட்ட ரீதியில் செயல்படுகிறார்கள் என்பத நன்கு தெரிந்தும், காங்கிரஸ் தலைமையிலான அரசு தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அலட்சியத்தின் காரணமாகவே 7.9.2011-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் வளாகத்தில் வெடித்த குண்டுவெடிப்பின் போதும் இ-மெயில் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியது. நடந்த சம்பவத்திற்கு குற்றவாளியாக யாரைக் கூறுவது என்பது கூட தெரியாமல் இந்த அரசு விழிக்கிறது.
திட்டமிட்ட ரீதியில் இஸ்லாமிய மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை திசை திருப்பும் வகையில் 2008-லிருந்து “காவி பயங்கரவாதம்” எனும் ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அரசும் மற்ற ஊடகங்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தேவேந்திர குப்தா, சந்திரசேகர், லோகேஷ் சர்மா ஆகியோருக்கு எதிராக எந்த வழக்கையும் புலனாய்வுத் துறையோ அல்லது ஏ.டி.எஸ் அமைப்போ தாக்கல் செய்யவில்லை, தொடர்ந்து 9 ஆதராங்கள் கிடைத்துள்ளதாக பல மாதங்களுக்கு முன் ஊடகங்கள்முன் தெரிவித்தார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். கிடைத்த ஆவணங்கள் உண்மையானதாக இருந்திருந்தால் இன்னும் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. 5.5.2010-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இவர்கள் பயங்கரவாதிகள் என்பதற்கு ஆதராம் இதுவரை தாக்கல் செய்யவில்லை எனத் தள்ளுபடி செய்தது என்பதை கூறுவதற்கு கூட இந்த ஊடகங்கள் முன்வரவில்லை. ஆகவே இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பதற்காகவே “காவி பயங்கரவாதம்” என்கிற குற்றச்சாட்டைப் பரப்பி வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் ஜனதா கட்சியின் தலைவர் திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள் டி.என்.ஏ.(D.N.A) என்கிற இணணயத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். How to wipe out Islamic terrorism? எனும் தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், இந்தக் கட்டுரை சம்பந்தமாக பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை இந்த கட்டுரையால் சிதைந்துவிடும் எனக் கூச்சல் போடும் மதசார்பற்றவாதிகள், ஒன்றை மறந்து விட்டு கொட்டமடிக்கிறார்கள். 1977-இல் துவக்கப்பட்ட சிமி அமைப்பின் நோக்கம் என்ன என்பதை தயவுசெய்து சிமியின் இணையத்தளத்திலும் “துப்பாகி மொழி” என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகத்திற்காக முகில் நண்பர்களுடன் எழுதிய புத்தகத்தில் சிமியைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையைப் படித்துவிட்டும் வழக்குத் தொடுத்திருக்கலாம்.
சிமியின் நோக்கம் அப்பட்டமாகவே வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. அதன் சாரம்சம்- இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஒவ்வொரு இந்தியனையும் கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லிமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்பது சிமி இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். சிமி இயக்கத்தில் இருப்பவர்கள் இந்துத்துவத்திற்கும் மேற்கத்திய நம்பிக்கை மற்றும் சிந்தனைக்கும் எதிரானவர்கள் (SIMI is widely belived to be against Hinduism, western beliefs and ideals, as well as othe ‘anti-islamic cultures‘ has declared Jihad against India, the aim of which is to establish Dar-ul-Islam (Land of Islam) by either forcefully converting everyone to Islam or by violence. As the organization does not believe in a nation-state, it does not believe in the Indian Constitution or the secular order. SIMI also regards idol worship as a sin and considers it to be a holy duty to terminate idol worship.)
ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் எவ்வாறு கருத்துத் தெரிவித்தாலும் அது மதச்சார்பின்மைக்கு ஆதரவானது என்றும் தப்பித்தவறி சங்க பரிவாரங்கள் ஏதாவது கூறினால் அதற்கு கலவரத்தை ஏற்படுத்தும் என இட்டுக்கட்டுவதும் இந்த அரசின் செயல்பாடாக இருக்கையில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை அழிக்க முன்வருமா என்பது பலத்த சந்தேகமாகும்.
இந்தியாவில் பயங்கரவாத செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ என்பது உலகறிந்த உண்மையாகும். பாரத தேசத்தில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு அதிக அளவில் பயிற்சி கொடுப்பதும் பயிற்சி பெற்றவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக நிதி கொடுப்பதும் நவீன ஆயுதங்கள் கொடுப்பதும் இவர்களின் பணி என்பது நன்கு தெரிந்தும், கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய அரசு பாகிஸ்தானுடன் இது பற்றி தனது கண்டனத்தையாவது தெரிவித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் 50 பேர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக பட்டியல் வெளியிட்ட உள்துறை அமைச்சகம், அதிலும் பல குளறுபடிகளைச் செய்து இந்த நாட்டின் மானத்தை கப்பல் ஏற்றியது. பலர் இந்தியாவிலிருந்தும் அவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்து இந்த நாட்டின் உளவு அமைப்பையே கேலிக் கூத்தாக்கியது.
இந்த அரசுக்கு பயங்கரவாதத்தை அழிக்க எண்ணமில்லை என்பது மேலும் சில நிகழ்வுகள், செயல்பாடுகளின் அடிப்படையில் எழுகிறது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரத பிரதமர் அமெரிக்கா சென்ற போது அவருடன் சென்ற அரசின் பாதுகாப்பு ஆலோசகர் தீவிரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளப் பற்றி அமைரிக்க அதிகாரிகளுடன் பேசினார். அதில் பல நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை; அந்த நடவடிக்கை நம் நாட்டிற்கு சரிப்பட்டு வராது என அலட்சியமாக கூறினார். இந்த கருத்தே அரசின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆகவே இம்மாதிரியான சம்பவங்களால் இந்த அரசுக்கு பயங்கரவாதத்தை அழிப்பதில் அக்கறை இருக்கிறதா என்பது மிகவும் முக்கியமான கேள்வியாக எழுகிறது. நடந்த தாக்குதல்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள்
- 29.10.2005-ஆம் தேதி தில்லியில் நடத்திய குண்டுவெடிப்பில் 62 பேர் கொல்லப்பட்டும் இன்று வரை வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, குற்றவாளிக்ள கைது செய்யப்பட்டதாக எவ்வித தகவலும் கிடையாது.
- 7.3.2006ந் தேதி வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பின் சதி தீட்டியவன் கைது செய்யப்பட்டான். ஆனால் அவன் மீது நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு தொடுக்கவில்லை.
- 11.7.2006ந் தேதி மும்பையில் நடந்த 209-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்த குண்டுவெடிப்பிற்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
- 8.9.2006-இல் நடந்த மலேகாவ்ன் குண்டுவெடிப்பும், இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் அந்தரத்தில் உள்ளதால் கொல்லப்பட்ட 40 பேர் குடும்பங்களும் இன்று வரை குண்டு வைத்தவர்கள் யார் என்பது தெரியாமல் காலத்தைக் கடத்துகிறார்கள்.
- இந்த வழக்குகள் போலவே அகமதாபாத் குண்டுவெடிப்பு, பெங்களூரு குண்டுவெடிப்பு, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் குண்டுவெடிப்புகளும் கைது நடவடிக்கை எதுவும் இல்லாம் நீதிமன்றத்திலேயே வழக்குகள் உள்ளன.
- மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தபின் 13.2.2010-ஆம் தேதி புனேவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், ஒருவர் கைது செய்யப்பட்டாலும், மேல்நடவடிக்கை எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
- 4.4.2010-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை கைது இல்லை, கேள்வி கேட்டால் உள்துறை அமைச்சர், அது மாநில விவகாரம் எனக் கைகழுவி விடுவார்.
- 9.10.2010-ஆம் தேதியும், 25.5.2011-ஆம் தேதியும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் யார் எனத் தெரியாமல் திண்டாடும் அரசு, பயங்கரவாதத்தை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவே தயக்கம் காட்டுவது திட்டவட்டமாகத் தெரிகிறது.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மையினரின் வாக்குக்காக, பயங்கரவாதத்திற்கு மறைமுக ஆதரவு கொடுப்பதால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆபத்து இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
லோக்கல் திராவிட இயக்கங்களிலிருந்து புது டில்லியில் இருந்து கொண்டு நாட்டாமை செய்யும் நயவஞ்சக கூட்டம் வரைக்கும் ஏராளமான ஹிந்து விரோதிகளைக் காண்கிறோம் ….பாரத அன்னையின் ஆடைகளை ஒவொன்றாக உருவி எறியும் உளுத்தர்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் நமது இளைய பாரதம் திரை நட்சத்திரங்களுக்கு கட்டவுட் வைப்பதிலும் ,சாட்டர்டே நைட் பார்டிகளிலும் ,சாரமற்ற சாடிங்குகளிலும் பொழுதைக் கழிப்பதைக் கண்டால் மனம் வேதனை கொள்கிறது .விரைவினில் விடியல் தோன்ற அந்த எங்கும் நிறை இறைவன் அருவானாக ! நமக்கு தேவேந்திரன் கூட வேண்டாம் ,ஒரு நரேந்திரன் வந்தால் போதும் !
Even though these things happen it is unfortunate that india just dont’t care about worldwide hindus but they actively contribute to hindu genocide.