இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9

முந்தைய பகுதிகள் :

13.7.2011-ம்  தேதி மாலை 6.45 மணியளவில் மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும்  மேற்பட்டவர்கள் பலியானார்கள், நூற்றுக்கும்  அதிகமானவர்கள் காயமடைந்தார்கள்.  இந்த சம்பவத்தின் சூத்திரதாரி என அரசும் பொது அமைப்பும் எந்த பயங்கரவாத அமைப்புகளையும் சுட்டிக் காட்டவில்லை.  ஆனால் பல்வேறு தரப்பினரின் கருத்துப்படியும்,  ஜீலை மாதம் 14ந் தேதி முதல் ஐந்து தினங்கள் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட பலரின் கருத்துப்படியும்  சிமியின் கைங்கர்யம் இதில் உண்டு என்பது ஏகோபித்த கருத்தாகும்.

25.6.2011-ம்  தேதி கேரள காவல் துறையினர் கொச்சி விமான நிலையத்தில் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் சிமி இயக்கத்தின் தலைவனான சைனுதீன் சைனாலுபுதீன்  என்பவனைக் கைது செய்தார்கள்;    ஹைதராபாத் வழியாக துபாய்க்கு செல்லும் போது கொச்சி விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டான்.  இவன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவனுக்கும் உலக அளவில் உள்ள ஜிகாதிகளுக்கும் நல்ல உறவு நீடிப்பதாகவும் உளவுத் துறையினர் தெரிவித்தார்கள்.  இவனது கைதுக்கு பின் தான் காவல் துறையினருக்கும், உளவு துறையினருக்கும் தடை செய்யப்பட் சிமி இயக்கத்தினர் மீன்டும் தங்களை இணைத்து கொள்ள முயலுகிறார்கள் என்கிற உண்மை தெரியவந்தது.

சைனுதீன் சைனாலுபுதீன்  கைதுக்குப்  பின் சிமி இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்தன.  ஏற்கனவே மத்திய பிரதேசக் காவல் துறையினரால் 13.6.2011-ம்  தேதி காந்த்வா பகுதியில் உள்ள 10க்கும்  மேற்பட்ட சிமி இயக்கதினர் கைது செய்யப்பட்டார்கள்.  அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், துப்பாக்கிகள், பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் அடங்கிய சி.டி.கள் கைப்பற்றப்பட்டன.   இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவற்குத் திட்டங்கள் தீட்டிய திட்ட நகல்களும் கிடைத்தன.   குஜராத் மாநிலம்  அகமதாபாத் நகரில் வெடி குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த  தனிஷ் ரியாஸ் என்பவனை  21.6.2011-ம் தேதி குஜராத் அதிரடி படைப் பிரிவினர் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்தார்கள்.  2008ம் ஆண்டு ஜீலை மாதம் 26-ம் தேதி அகமதாபாத்தில்  நடத்திய பயங்கரவாதச் செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர்.  இந்தச் சம்பவம் நடந்தவுடன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த  அப்துஸ் சுபான் (அ) தகீர், அப்துல் ரசிக் மற்றும் முஜிப் ஷேக் இம்மூன்று பேரும் தனிஷ் ரியாஸ் வீட்டில் மறைமுகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். சில ஆண்டுகளுக்குப்  பின் இவர்கள் பிடிப்பட்டார்கள்.  இவர்களைப்  போலவே அகமதாபாத் குண்டு வெடிப்பின் குற்றவாளிகள் எட்டு பேரை மத்திய பிரதேச அதிரடிப் படையினர் கைது செய்தார்கள்.  இவர்கள் 5.6.2011-ம் தேதி ஜபல்பூரிலிருந்து போபாலுக்கு ரயிலில் போகும் போது கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்யப்பட்ட அனைவரும் சிமி இயக்கத்தினர் என்பதும், தடையை மீறி தங்களின் செயல்பாடுகளைச் செய்வதற்கு மீன்டும் ஒன்று சேர பயணித்த போது கைது செய்யப்பட்டார்கள்.  ஆகவே சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் அவர்களின் செயல்பாடுகள் வேறு பெயர்களில் நடைபெறுகிறது.

கேரள மாநிலம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு புகலிடம்

பாரத தேசத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களும், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களும் அதிகம் நிறைந்த இடம் ஜம்மு- காஷ்மீர் மாநிலமாகும். அதற்கு அடுத்த மாநிலம் கேரள மாநிலமாகும்.  நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே கேரளத்தில் கட்டாய மத மாற்றம் நிகழ்ந்தது.  கேரளத்தில் நடந்த மாப்ளா கலவரம் இதற்கு முன் உதாரணமாகும்.  திப்பு சுல்தான் ஆட்சியில் ஹிந்துக்களைக் கட்டயமாக இஸ்லாத்திற்கு மத மாற்றிய சம்பவம் நிகழ்ந்தது. 1980லிருந்து கேரளத்தில் தலை தூக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தைப்  பற்றிய விவாதம் நடைபெற்றது.  விவாதம் நடைபெற்றதோடு சரி இதன் விளைவாக பயங்கரவாதத்தை தடுப்பதற்கு உரிய முறையான நடவடிக்கையும் எடுக்க அப்போதைய அரசு முன் வரவில்லை. இதன் காரணமாக உலக அளவில் பேசப்படுகின்ற பயங்கரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியுடன் கேரளத்தில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள்.

ஜிகாத்தும் மத மாற்றமும் அதிக அளவில் நிகழ்ந்த மாநிலம் கேரளவாகும்.  இந்த செயலுக்காகக் குற்றம் செய்தவர்களின் எண்ணிக்கையைத் துவக்கிய மாநிலம் கேரளாவாகும். காஷ்மீரில் பயங்கரவாதிகளில் பலர் கேரளத்தைச் சார்ந்தவர்கள்; கோவை குண்டு வெடிப்பின் சூத்திரதாரி கேரளத்தைச் சார்ந்த அப்துல் நாசர் மதானி.  காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள சிலீப்பர் செல்லில் ஒன்று கேரளத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள் அல்லது கேரளத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.  ஒரிஸ்ஸாவில் கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி கேரளத்தைச் சார்ந்தவர்.  கர்நாடகத்தில் அதிக அளவில் மத மாற்ற நிகழ்ச்சியை நடத்துகின்ற கன்னியாஸ்திரிகள் அனைவரும் கேரளத்தைச் சார்ந்தவர்கள்.  கேரளத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இவர்களுக்கு மாற்றாக  ஆட்சிக்கு வரும் இடதுசாரி கட்சிகளும் பயங்கரவாதத்திற்கு ஆதரவான காரியங்களை மட்டுமே செய்கிறார்கள்.

லக அளவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு, நிதி, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது, ஜிகாத்திற்கு ஆட்கள் சேர்க்கும் போது அவர்களை மூளைச்  சலவை செய்வதற்காகத் தேவையான சித்தாந்தங்களைத் தயாரிப்பது போன்ற காரியங்களை செய்கின்ற நாடு பாகிஸ்தானும், சவுதி அரோபியாவும்.  சவுதி அரோபியவின் மத விவகாரங்களை கவனிக்கும் அமைச்சகம் ஆண்டுதோறும் கோடிக் கணக்கான நிதியைக் கேரளத்தில் உள்ள பல்வேறு பகுதியில் நிறுவப்பட்டுள்ள மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும் அனுப்பிக் கொண்டு வருகிறது. இவ்வாறு நிதி அனுப்ப வேண்டிய அவசியம் அந்நிய நாடான சவுதிக்கு ஏன் ஏற்பட்டது?  இந்தியாவில் ஹிந்து கலாச்சாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு இஸ்லாமிய-அடிப்படைவாதம் ஏற்பட வேண்டும் என்பதும், அதிலும் குறிப்பாக கேரளத்தில் மாற்றப்பட வேண்டும் என்பதும் இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

கேரளத்தில் வறுமைக்கு கீழ் உள்ள இஸ்லாமியர்களிடம் நிதியை காட்டி அவர்களை ஜிகாத்திற்கு கொண்டு வருவதற்காகவே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் சில பிரிவுகள் பணியாற்றுகின்றன.

கேரளத்தில் ஏற்படுகின்ற அரசியல் கூட்டணி கூட  இஸ்லாமியப் பயங்கரவாதச் செயலுக்கு முக்கிய காரணமாகும். அரபு நாடுகளிலிருந்து கேரளத்திற்கு வரும் பெட்ரோ மணி என்கிற நிதி சட்டபூர்வமாகவும், ஹவாலா மூலமாகவும் கோடிக் கணக்கில் வருகிறது. இவ்வாறு வருகின்ற நிதியைக் கொண்டு ஊழல் அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்ள பயங்கரவாதச் செயலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அரபு நாடுகளிலிருந்து வருகின்ற நிதி பயன்படுத்தப் படுகிறது.  இரண்டாவதாக வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால், சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாமல் தங்களுக்குக் கிடைப்பதற்காகவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கேரளத்தில் உருவாகும் இஸ்லாமியப் பயங்கரவாதச் செயல்களைக்  கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கேரளத்தில் இஸ்லாமியப்  பயங்கரவாதம் எத்தகையது என்பது பற்றி பலருக்குத் தெரியாமல் இருந்தது. பங்களாதேஷ் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி தடியண்டாவிடே நசீர் (Thadiyantavide Nazeer) என்பவன் கேரளத்தைச் சார்ந்தவன் எனத் தெரிந்த பின் தான் பயங்கரவாதச் செயலாக்கம் அதிக அளவில் கேரளத்தில் உள்ளது என்பது பலருக்கும் தெரியவந்தது.  இவன் அப்துல் நாசர் மதானியின் வலதுகரம் போன்றவன்.  இவனை விசாரிப்பதில் கூட அரசியல் தலையீடு அதிக அளவில் இருந்தது. கைது செய்யப்பட்டவுடன் கர்நாடக காவல் துறையினர் இவனிடம் முழு விசாரனை நடத்தினார்கள்.  பின்னர் கேரளத்தில் இவனை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரி ஏற்கனவே இடதுசாரி கட்சியின் அபிமானியும், பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான டோமின் தச்சன்கேரி (Tomin J Thachankery)  என்பவர்.  இவர் இடது சாரிக் கட்சியின் தொலைக்காட்சியான கைரளியின் தொழில் நுட்ப ஆலோசகர்.  90 லட்ச ரூபாய் முறைகேட்டில் சம்பந்தப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர். இவர் வெளிநாடு சென்று திரும்பிய போது பல்வேறு பொருட்களைக் கடத்தியவர் என்பதும் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, அதற்காக விசாரணையில் உள்ளவர்.  இவருக்கு மிகப் பெரிய பொறுப்புகளைக்  கொடுக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டும், பயங்கரவாதியான நசீரை விசாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டதே, பயங்கரவாதிக்கு ஆதரவான அறிக்கை பெற வேண்டும் என்பதற்காகும்.

ந்தச் சம்பவத்தைப் போலவே 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்புவாரா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  இதை விசாரணை செய்த மத்தியப் புலானாய்வு அமைப்பினர், தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ள செய்திகள் மிகவும் அபாயகரமானதாகும்.  காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்களை நடத்துவதற்காகக்  கேரளத்தில் உள்ள இஸ்லாமியர்களை நியமிக்கும் பொறுப்பு வகிப்பது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியைச் சார்ந்த அப்துல் ரகுமான் என்பவன்.  இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவின் கமான்டர் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.

ந்தச் சம்பவத்தில் கேரளக் காவல் துறையினர் எடுத்த முயற்சியின் காரணமாக 20 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  இந்தத் திட்டத்தை உருவாக்கிய இடம் பாகிஸ்தான் , பங்களாதேஷ், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உருவானது.  குற்றப்பத்திரிக்கையில் 24 பேர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதில், 19 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள், இன்னும் பிடிபடாமல் உள்ள ரகுமான், 2007ம் ஆண்டு இறுதியில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்ட டி.நஸிர், இவன் கேரளத்தில் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவன், மேலும் 2008 பெங்களுரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் தொடர்புடையவன் என்பது விசாரணையில் தெரியவந்தது.  நீண்ட விசாரணையில் கேரளத்தில் உள்ள தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் முயற்சியில் பலர் பயிற்சி பெறுவதற்கு அனுப்பபட்டது தெரியவந்தது.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்களை நடத்த ஆட்கள் தேர்வு செய்த முக்கிய மாநிலம் கேரளா என்பதும், 2006ல்  நூரிஷா தரீகத் (Noorisha Tareeqat) என்பவர் நடத்திய மத வகுப்பில் பயங்கரவாதச் செயலுக்குத் தகுதியானவர்களை சிமி இயக்கத்தினர் தேர்வு செய்தார்கள். இவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் பயிற்சி பெறும் இடம் அனைத்தும் பங்களாதேஷில் ஏற்பாடு செய்யப்பட்டது.  ஹவாலா மூலம் இவர்களுக்குத் தேவையான நிதியை ஏற்பாடு செய்த நாடும் பங்களாதேஷ் என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு பயிற்சிக்கு அனுப்பட்டவர்களில் 10.9.2008ந் தேதி பயிற்சியிலிருந்து ஃபைஸ், ரஹீம், ஃபயீஸ், யாசீன், அப்துல் ஜப்பார்  ஆகிய ஐந்து பேர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த கண்ணனூரிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ஜாமியா நூரியா  என்ற பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வர்கள் பயிற்சி பெறுவதற்கு உதவும் பயங்கரவாதிகளின் நெட் ஒர்க் எப்படிப்பட்டது என்றால், பயங்கரவாதிகளின் செயல் திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் ஒரு அரசாங்கம் நடத்துவது போல் உள்ளது.  மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் தங்கி மீன்டும் டெல்லி வழியாக காஷ்மீரில் உள்ள உமைர்  என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். காஷ்மீரிலிருந்து குப்புவாரா மாவட்டத்தில் உள்ள பர்வீன் என்ற பெண்மணியிடம் ஒப்படைக்கப்பட்டு பங்களாதேஷில் உள்ள பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.  ஆகவே இவர்களின் நெட் ஒர்க்கில் பெண் தீவிரவாதி உட்பட பலர் உள்ளனர்.  இவர்கள் அனைவருக்கும் கேரளத்தில் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்த இயக்கம் சிமி என்பது பலருக்கும் தெரியாத செய்தியாகும்.

டோமின் தச்சன்கேரி  இடதுசாரிகளுக்கு ஆதரவானவர் மட்டுமல்லாமல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவானவர் என்பதும், பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பாகவும் இவர் செயல்பட்டார் என்பது இவரின் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டாகும்.  இவர் மதானியின் துணைவி சுபியாவை கைது செய்வதில் காலதாமதம் செய்தவர். இந்த கால தாமதத்தின் காரணமாக மதானி மாநில அரசை எச்சரிக்கை செய்வதற்கு ஏதுவாக இவர் செயல்பட்டார்.

டந்த பல ஆண்டுகாலமாக கேரளத்தில் நேஷனல் டிபன்ஸ் போர்ஃஸ் என்கிற அமைப்பிற்கும் இஸ்லாமிய ஜிகாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இதன் காரணமாக ஜிகாதிகளின் நோக்கம் நிறைவேற நேஷனல் டிபன்ஸ் போர்ஃஸ் வலது கரமாக விளங்கியது.  இவர்களின் முதன்மையான நோக்கம், கேரளத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைந்த இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே பகுதியில் தங்குவது அதாவது குட்டி பாகிஸ்தானை உருவாக்குவது, இவ்வாறு மாற்றப்பட்ட பகுதிகளில் நேஷனல் டிபன்ஸ் போர்ஃஸ் மலபார் பகுதிகளில் செய்கின்ற செயல்பாடுகளை போல் இங்கும் செயல்படுத்துவது.  இஸ்லாத்தின் மாட்சிமையை கொன்டு வர எல்லா வழிகளிலும் முயலுவது என்பதும் முக்கியமான நோக்கமாகும்.  இதன் காரணமாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் இவர்கள் ஒருங்கிணைந்து இஸ்லாமியர்களைக் காப்பது.  இக்கொள்கைகளின் காரணமாகவே கேரளத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன.

கேரளத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்குத் தேவையான நிதியும், ஆலோசனைகளும் வெளி மாநிலத்திலிருந்தும், சில அரபு நாடுகளிலிருந்தும் கிடைக்கின்றன.  உள்ளுர் இஸ்லாமியர்களின் துணையோடு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளத்திற்கு அருகில் உள்ள மூவாற்றுபுழாவில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் கை வெட்டப்பட்டது.  இந்த செயலுக்காக 25 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள், கைது செய்யப்பட்ட அனைவரும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள்.  இந்த சம்பவத்ததை போலவே 2006ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கும், 2005ம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி  என்னுமிடத்தில் தமிழக அரசின் விரைவுப்  போக்குவரத்துக் கழகப் பேருந்தைத்  தீயிட்ட சம்பவத்தின் குற்றவாளியான மதானியும் அவரது மனைவியயும் கைது செய்ததும்,  பனைக்குளத்தில் 2006ல் சிமி இயக்கத்தினர் நடத்திய ரகசியக் கூட்டம் பற்றிக் கைது செய்யப்பட்ட 18 பேர்கள் மீது நடத்திய விசாரணையும், 2007ம் ஆண்டு இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமோன் என்னுமிடத்தில் சிமி இயக்கத்தினருக்கு ஆயுதப் பயிற்சியும், (இஸ்லாமியச்) சித்தாந்தப் பயிற்சியும் அளித்தமைக்காக 35 பேர்கள் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட  விசாரணையும் உட்பட அனைத்து வழக்கு விசாரணைகளையும் நடத்தியவர்கள் மத்தியப்  புலனாய்வு அமைப்பினர்.  இவர்கள் நடத்திய விசாரணையின் முடிவில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் மையப் புள்ளியாக கேரளமாநிலம் உள்ளதாகத் தெரிவித்தார்கள்.

தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆட்கள் தயார் செய்வதற்காகவும், அவர்களின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவ்வாறு வருபவர்களுக்குப் பயங்கரவாதத் தாக்குதல் பயிற்சி அளிக்கவும், பயிற்சி பெற்றவர்களை பாதுகாப்பாக இந்தியாவில் பணிக்கு அமர்த்த வேண்டிய அனைத்து பணிகளையும் கவனிப்பதற்காகவே பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.யில் ஒரு பிரிவு வேலை செய்கிறது.  இந்த பிரிவின் உளவாளிகள் கேரளத்தில் இருப்பதாக உளவுப் பிரிவினர் தெரிவித்தார்கள்.  இந்த ஜிகாத்திற்கு ஆட்கள் சேர்பபதற்காகவே கேரளத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இஸ்லாமியர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளைச் செய்பவர்கள் உள்ளுர்வாசிகள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.  இவ்வாறு ஜிகாத்திற்குச் சேர்க்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு நிதி உதவியாக சவுதி அரேபியாவில் உள்ள பெரும் செல்வந்தர்கள் உதவி புரிகிறார்கள்.  இவ்வாறு கொடுக்கப்படும் நிதியும் சட்ட விரோதமாகவே இந்தியாவிற்கு வருகிறது.  இந்த நிதியை பெறுவதற்காகவே கேரளத்தில் பல்வேறு பெயர்களில் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கை நிறுவனங்கள் ஆகியவை மிகப் பெரிய அளவில் துவங்கப்பட்டள்ளன.

யங்கரவாதச் செயல்பாடுகளை செய்வதற்காகவே அரபு நாடுகளிலிருந்து வரும் நிதி

கேரளத்தில் தொண்டு நிறுவனங்கள் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.  பயங்கரவாத அமைப்புகள் தங்களது தீவிரவாதச் செயல்பாடுகளை மறைப்பதற்கு ஒரு போலிக் கவசம் தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் நிதியின் ஒரு சிறு பகுதி தொண்டிற்கும் செலவிடப்படுகிறது.  இவர்களால் துவக்கப்பட்ட பத்திரிக்கை தேஜஸ்.  இதில்,  தடை செய்யப்பட்ட அனைத்துப் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவான கட்டுரைகளும் அதிக அளவில் இடம் பெறுகின்றன.  அப்துல் நாசர் மதானியை மதச்சார்பற்ற அரசியல்வாதியாகக் குறிப்பிட்டு இந்த பத்திரிக்கையில் பல கட்டுரைகள் வந்துள்ளன.  மத்திய அரசு மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூட தேஜஸின்  செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.  2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ந் தேதி மத்திய அரசு மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில்,  தேஜஸ்  பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எவ்வாறு நிதி வருகிறது என்பது குறித்து  தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.  இந்த கடிதத்திற்குக் கேரள அரசு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எழுதிய கடிதத்தில் இந்த நிறுவனங்களுக்கு உள்ளுர் மற்றும் வெளிநாட்டில் உள்ள வசதி படைத்த இஸ்லாமியத் தொழிலதிபரிடமிருந்து நிதி வருவதாகவும் இந்தப் பரிவர்த்தனையை செய்வது கோழிக்கோட்டில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சி என்றும்  குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் கைது செய்யப்பட்டக் கள்ள நோட்டு கும்பல் சம்பந்தமான விசாரணையில் அதிக அளவில் கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் அவர்களில் 75 சதவீதத்தினர் கேரளத்தை சார்ந்தவர்கள் என்பதும் மிகவும் முக்கிய விஷயமாகும். எனவே கேரளத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதச் செயலுக்கு ஆதரவாக உள்ள சூழ்நிலை மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகும்.

வ் ஜிகாத்

யங்கரவாதச் செயல்பாட்டிற்குப் பெண்களைப்  பயன்படுத்தத்  திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின்படி கேரளத்தில் உள்ள அழகான இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்துப் பின் அவர்களை மத மாற்றம் செய்து ஜிகாத்திற்கு பயன்படுத்துவது, இந்தச் செயல்பாடு இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகும்.  பாதிக்கப்பட்ட இந்துக்கள் மாநில அரசிடம் புகார் கொடுத்த போது கண்டு கொள்ளாத கேரள அரசு, கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டவுடன் உடனடியாக விசாரணைக்கு உத்திரவிட்டார்கள்.  பல்வேறு இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பில் உள்ளவர்கள் கல்லூரியில் பயிலும் இந்து மாணவியரைத் தாஜா செய்வதற்காகவே தங்களது இனத்தைச் சார்ந்த மாணவர்களைக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்.  இதில் பணிக்கு செல்லும் இந்துப் பெண்களையும் ஆசை வார்த்தை பேசி மத மாற்றத்திற்கு வழி வகுக்கிறார்கள்.

ந்த விவகாரம் வெளி வருவதற்கு நடந்த சம்பவம் முக்கியக் காரணமாகும்.  பத்தனந்திட்டாவைச் சார்ந்த இரண்டு பெண்கள் கேரள உயர்நீதி மன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறியதால் லவ் ஜிகாத் வெளிச்சத்திற்கு வந்தது. உயர்நீதி மன்றத்தின் உத்திரவுப்படி கேரளமாநிலக் காவல் துறையினர் நடத்திய விசாரனையின் முடிவில் 18 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த அறிக்கையில் கேரளத்தில் ஜிகாத் எனும் பயங்கரவாதச் செயல்பாடுகளுடன் லவ் ஜிகாத் , கேம்பஸ் ப்ராண்ட், நேஷனல் டெமாகரடிக் ப்ராண்ட், பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் சம்பந்தப்பட்டுள்ளன.  மேலும் இந்த அமைப்புகளுடன் முஸ்லீம் யூத் ஃபோரம், தி ஷஹீன் ஃபோர்ஸ் என்கிற இரு அமைப்புகளும் இவர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த கேரள அரசு ஒரு சிறப்புப் புலானாய்வு அமைப்பை ஏற்படுத்தி அறிக்கை பெறப்பட்டது.  சிறப்புப் புலனாய்வு அமைப்பினர் கொடுத்த அறிக்கையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன.  லவ் ஜிகாத் மூலம் கடத்தப்பட்ட இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களின் எண்ணிக்கை 4000க்கு மேல் இருக்கும் என காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவருகிறது.  இந்தச் செயல்பாடு முதன் முதலில் கேரளத்தில் துவங்கினாலும் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது.  இதற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முழு ஆதரவை அளித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட சுஃபியா மதானி, டி.நாசிர், உமர் ஃபரூக்கி, ஹலிம், மஜீத் பறம்பில், தாஜுதீன், சபீர்,  போன்ற ஜிகாதிகள் தெரிவித்த கருத்துக்கள் இன்னும் கவலை அளிக்கக் கூடியதாகும். இஸ்லாமியப் பயங்கரவாதம் அதிகரிப்பது கேரளத்தில் என்றும், இஸ்லாமிய நாடுகள் அனைத்துவிதமான நிதி உதவி அளிப்பது லவ் ஜிகாத்திற்கு என்றும் தெரிவித்தார்கள்.

வேகமாகப் பரவும் தாலிபானிசம்

1956ல் உருவாக்கப்பட்டக்  கேரள மாநிலத்தில் 61.5 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 55 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால் இதற்கு மாறாக சிறுபான்மை மதத்தைச் சார்ந்தக் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் உயர்ந்து விட்டார்கள்.  சிறுபான்மை இனமான இஸ்லாமியர்களின் பெருக்கம் கேரளத்தில் பயங்கரவாத அமைப்புக்கள் வலு பெறுவதற்கும், கேரளத்தைத் தாலிபானாக மாற்றுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்துகிறது.

1968ல் கேரளத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் ஆட்சி கவிழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந் நிலையில் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இடதுசாரிக் கட்சிகள் முஸ்லீம் லீக்கின் உதவியை நாடின.  1946ல் மாப்ளஸ்தான் எனும் கோரிக்கை வலுப் பெற்ற போது அதை அடக்கி விட்ட சம்பவத்தை நினைத்து, இஸ்லாமியர்களுக்கு என தனி மாவட்டக் கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த கோரிக்கைக்குச் செவி சாய்த்து மலப்புறம் என்கிற புதிய மாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்துத் தங்களது ஆட்சியைத்  தக்க வைத்துக் கொண்டார்கள்.  இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட மாவட்டமான மலப்புறம் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின்  புகலிடமாகவும், இந்தியாவில் ஒரு குட்டிப்  பாகிஸ்தானாகவுமே உருவாக்கப்பட்டது.

(தொடரும்..)

2 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9”

  1. காதல் என்ற பெயரில் மதம் மாற்றபடும் நம்மவர்கள் இக்கட்டுரையை படித்த பின்னாவது மனம் திரும்புவார்களா ???????? ஆசை வார்த்தை காட்டும் அந்நிய மதத்தவர்கள் காதல் என வரும் போது தம் மதத்தின் பக்கமே நிற்கின்றனர் …..இவர்களா உங்களின் உண்மையான காதலன் (அ) காதலி ?????இந்து இளைன்ஞர் யுவதிகள் இதையும் கொஞ்சம் சிந்தியுங்கள் …பெற்ற தாய் தந்தை வளர்த்த மதம் அனைத்தும் பிற மத கள்வன்/கள்ளியால் களவாட பட இனியும் அனுமதியாதீர் …
    அன்பு சகோதரன் ,
    கொழும்பு தமிழன்

  2. நமது பாரதநாட்டின் ஹிந்து பெரும்பான்மை தன்மையை குலைப்பதற்காக பல்வேறு சதி திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. நமது அரசியல் தலைவர்களின் தவறான நடவடிக்கைகள் மூலம் நமது ஹிந்து சமுதாயம், தேச துரோகிகளின் பலமுனை தாக்குதல்களுக்கு இலக்காகி பயங்கரமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்நிய நாடுகளை சார்ந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சிகள் நடைபெற்ற போதும் நமது பெண்கள் சந்தித்த இன்னல்களும் அவமானங்களும் கணக்கிடமுடியாதது. இன்றும் கூட நமது நாட்டின் பல பகுதிகளில் இரவில் திருமணங்கள் நடைபெறுவதும் நாம் சந்தித்த பிரச்சினைகளின் தாக்கத்தினை உணர்த்திடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *