நவம்பர் 27, ஞாயிறு (27-11-2011) அன்று சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலை, விவேக்ஸ் அருகில் இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறும் சமயவகுப்பு மாணவர் 4-ம் ஆண்டு விழாவில் கலந்து சமயவகுப்பு பற்றிய ஓர் அறிமுகத்தைப் பெறுவோம்!
ஹிந்து தர்ம வித்யாபீடம் – வெள்ளிமலை நடத்தும் சமயவகுப்புகளுக்கு நமது குழந்தைகளை அனுப்புவதோடு நாமும் கலந்துகொண்டு, பொறுப்பேற்று நடத்திடுவோம். நமது நாட்டைப்பற்றியும் நமது சமயத்தைப் பற்றியும் புரிந்து கொள்வோம்!
அனைவரும் இதில் கலந்துகொண்டு ஹிந்து தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள மற்றும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்க அன்புடன் அழைக்கிறோம்.
ஹிந்து தர்ம வித்யாபீடம்-வெள்ளிமலையின் சென்னை மாநகர பிரிவானது சென்னையில் நடத்தும் சமயவகுப்புகளுக்கு நாம் நமது பங்களிப்பை வழங்குதல் ஒன்றே, நமது குழந்தைகள் நமது பண்பாட்டையும் நாகரீகத்தையும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். முதலில் அவர்கள் என்னதான் நடத்துகிறார்கள் என்பதை இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்வோம்.
அனைவரும் பங்குபெற்று நமது குழந்தைகளுக்கு சமுதாயத்தை பற்றிய நல்ல சிந்தனை கிடைக்க வழி வகுப்போம் .ஜெய் ஹிந்த்