அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

சென்ற பதிவில் வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம். இந்த அணுசக்தி இல்லாததால் சீனாவிடம் நாம் இழந்த விசயங்களை பற்றியும் கண்டோம். எல்லோரும் அணு உலையை பற்றியும் அணு குண்டுகளை பற்றி தான் பக்கம் பக்கமாக எழுதி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாவற்றையும் விட சாதாரண பொது மக்களுக்கு தெரியாத மற்றொறு விசயம் உண்டு. அமெரிக்கா தயாரித்து கொண்டு இருக்கும் சக்தி மிக்க மனித அணுகுண்டுகளை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இது சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகளை பற்றி பதிவின் முடிவில் விரிவாக எழுதவுள்ளேன்.

மேலே உள்ள படம் தான் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சக்தி வரைபடம். இதன் படி வெறும் 3% வீதம் மின்சாரம் தான் அணுமின் நிலையத்தில் இருந்து வருகிறது. நமக்கு அனல் மின் மற்றும் நீர் மின்சக்தியில் இருந்து தான் அதிக மின்சாரம் கிடைக்கிறது. நிலைமை இப்படி இருக்க சிலர் தனது சுய நலத்திற்காக கேடு விளைக்கும் அணு உலையில் மக்கள் வரிபணத்தை கொட்டுகிறார்கள் அது வெடித்தால் பல ஆயிரகணக்கான மக்கள் உயிர் இழப்பார்கள். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று பெரிய பந்தல் போட்டு வெள்ளை பாவாடைகளும் சிகப்பு சட்டைகளும் பேசி கொண்டு இருக்கின்றன. இதை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒரு விசயம் உள்ளது. அது தான் குறைந்து வரும் நீர் சக்தி மற்றும் எரிசக்தி.



படங்களை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும்

மேலே உலகில் இருக்கும் நிலக்கரி உற்பத்தியின் அளவை பற்றிய வரைபடம் உள்ளது. இதன் படி 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது. ஒட்டு மொத்த ஆசியாவிற்கே இந்த நிலை என்றால் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிலை? நமது நாட்டின் மொத்த மின்சகதியில் 50% வீதம் மின்சக்தியை தரும் நிலக்கரி 2020 க்கு பிறகு மிக பெரிய அளவில் குறைய தொடங்கும். அதாவது தற்பொழுது 96743.38 MW மின்சாரம் தரும் அனல்மின் உற்பத்தி தோராயமாக வருடம் ஒன்றிற்கு 2000MW குறைய போகிறது. இதை அணுமின் சக்தி இல்லாமல் வேறு எந்த சக்தி ஈடு செய்யும் என்பது பரலோகத்தில் மட்டும் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.

இது தவிர நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி எந்த அளவுக்கு குறைந்து கொண்டு இருக்கிறது என்ற விவரம் நான் சொல்ல தேவையில்லை. இருப்பினும் உலக வங்கியின் ஆய்வு படத்தை மேலே கொடுத்து உள்ளேன். 2020 க்கு பிறகு குடி நீரின் அளவு மிக வேகமாக குறைய போகிறது. கடல் நீரை குடி நீராக்கி பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கும் அதிக அளவு மின்சாரம் தேவை. நமது மரபுசார் மின்சாரம் 2020க்கு பிறகு கேள்வி குறியாக போகும் நிலையில் அணுசக்தியை தவிர வேறு எந்த மாற்று சக்தி இதை செய்ய போகிறது. டாக்டர் பட்டத்தை வாங்கிய கம்யூனிஸ விஞ்ஞானிகளிடம் 1 பில்லியன் மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்ய ஏதேனும் தீர்வு உள்ளதா?

இதை எல்லாம் விட நமக்கு முன்பு இன்னொரு பிரச்சனையும் உண்டு. அது தான் நமது மக்கள் தொகை பெருக்கம், இதை எல்லாம் கட்டுபடுத்த முயற்சி செய்தால் சிறுபான்மை அடக்கு முறை என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை குறைப்பு ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சட்டங்கள் எப்படி சிறுபானமைக்கு எதிரானது என்பது செக்யூலர்வாதிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். கேரளா, உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்க பகுதிகளில் அதிக அளவு மனித உற்பத்தி ஏன் நடந்து கொண்டு இருக்கிறது என்பது எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே!!! மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் அதிகம் உள்ள மாநிலங்களான கேரளா மற்றும் மேற்கு வங்கம் அதிபுத்திசாலி கம்யூனிஸ்டுகளால் தான் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர் கட்சியாகவோ இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அணு உலையை அனுமதிக்க மாட்டேன். மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்றால் என்ன செய்வது?

எதற்கு எடுத்தாலும் மரபுசாரா எரிசக்தியை உபயோகபடுத்தலாமே என்று சொல்லும் சில அரை வெக்காடுகளை வேறு நம் நாட்டில் உள்ளனர். மரபு சாரா எரிசக்தியில் முக்கிய இடம் வகிக்கும் காற்று மற்றும் சூரிய மின்சக்தி. இவை இரண்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாத மற்றும் தொடர்ந்து கிடைக்க கூடிய விசயம் அல்ல.

Photovoltaic solar plant
Solar thermal power plant

53MW மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த photovoltaic solar தொழிற்சாலை ஜெர்மனியில் அண்மையில் கட்டப்பட்டது. இதற்கு செய்யப்பட்ட செலவு 220 million $. இதன் அடிப்படையில் கூடங்குள மின் உற்பத்தி திறனான 2000MW மின்சாரம் உற்பத்தி செய்யும் solar தொழிற்சாலை அமைக்க நமக்கு தேவை > 8500 million $. கூடங்குளத்திற்கு ஆன செலவோ < 3000 million $. இது நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

சரி இது வேண்டாம் solar thermal energy போகலாம் என்றால் அதற்கும் அணு உலையை விட 2 மடங்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் தவிர அந்த அளவுக்கு வெப்பம் தர கூடிய மற்றும் நில அமைப்பு தார் பாலைவனத்தில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இது போன்ற அதிகபடியான சூரிய மின்சக்தி சேகரிப்பால் ஏற்படும் வெப்பத்தினால் அதன் சுற்றுபுற பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் நிரந்தரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டும். அமெரிக்கா போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளுக்கே இது போன்ற தொழில் நுட்பம் சாதாராண விசயம் இல்லை. 2000MW மின்சாரத்தை அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில் தற்போதைய நிலையில் சூரிய ஒளியில் உற்பத்தி செய்வது என்பது நடக்க கூடிய காரியமா? அதற்கு தேவையான தொழில் நுட்பத்தை அணு உலை ஆபத்து என்று சொல்லும் கம்யூனிஸ விஞ்ஞானி பத்மநாபன் போன்றவர்கள் தருவார்களா?

எப்பொழுதும் கிடைக்கும் சூரிய சக்திக்கே இந்த பாடு என்றால் காற்றாலைகளை பற்றியும் அது தரும் மின்சக்தி பற்றியும் நான் சொல்ல தேவையில்லை. ஆனால் நமது அரசாங்கம் இதை எல்லாம் விட்டு விடவில்லை. மரபு சார் மின்சக்தி மட்டுமே நமக்கு போதாது. அதனால் மரபுசாரா எரிசக்தியையும் நமது அரசாங்கம் ஊக்கபடுத்தி கொண்டு தான் இருக்கிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் நாம் உலகின் ஏழாவது இடத்தில் உள்ளோம். இதில் மேலும் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் கூடங்குளத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் உள்ள மாநிலங்கள் கடைகோடியில் உள்ளன. குஜராத முதல்வர் நரேந்திர மோதி மாநிலம் அதில் முதல் இடத்தில் உள்ளது.

இது தவிர நீர் மின்சக்தி திட்டத்தை பற்றி இங்கு நான் சொல்லியே ஆக வேண்டும். கம்யூனிஸ கை கூலியும் புனித ஆவிகளுக்கு பிடித்தவரும் 24x 7 ஆங்கில ஊடக ரௌடிகளின் கதாநாயகியுமான மேதா பட்கர் அப்பாவி கிராம மக்களை ஏமாற்றி பிரச்சனை செய்து பல ஆயிரம் ஏக்கர் நில பாசன மற்றும் 3000 MW மின் உற்பத்தி தரும் மின் உற்பத்திக்கு எவ்வாறு முட்டுகட்டையாக இருந்து அப்பாவி கிராம வாசிகளை ஏமாற்றி இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உருவாக்கினார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா என்ன? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மாவோயிஸ்டுகளா மாற்றி சீனாவிடம் இவர்கள் கல்லா கட்டினார்கள் என்பது வேறு விசயம். இந்த பக்கம் அணுமின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த வெளி நாட்டு கை கூலிகள் அந்த பக்கம் சென்று நீர்மின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கேட்டால் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்வது, இதை படம் பிடிக்க Times Now, CNN-IBN மற்றும் NDTV போன்ற வெளி நாட்டு தொலைக்காட்சிகள் வேறு.

இந்த மேதாபட்கர்க்கு உலக அளவில் கொடுக்கப்பட்ட சில விருதுகளே இவர் யார் என்று காட்டு கொடுத்துவிடும், Amnesty International (இங்கிலாந்து உளவு துறையின் பினாமி அமைப்பு) கொடுத்த விருது – Human Rights Defender’s Award Vigil India Movement. (Ecumenical Christian Centre Center) கொடுத்த விருது – M.A. Thomas National Human Rights Award இது தவிர வெளி நாட்டு NGO க்கள் இவருக்கு பல வித விதமான விருதுகளை வழங்கியுள்ளது.

கூடங்குளம் நாட்டின் கடை கோடியில் மிக பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணு உலை நாட்டின் கடை கோடியில் அதாவது இந்திய பெருங்கடலில் நமது பாதுகாப்பையும் ஆளுமையையும் அதிகரிக்க கூடியது. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை (அதாங்க அனல் மின்சக்தி, நீர் மின்சக்தி, பெட்ரோல்) தீர்க்க மிகவும் அவசியம். அது மட்டும் இன்றி இந்த கூட்ங்குளம் அணு உலை மூலமாக தான் நாம் வருங்காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரித்து நமது நாட்டையும் வீட்டையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.

நமது கம்யூனிஸ மற்றும் கிறித்துவ அறிவு ஜீவிகள் இந்தியாவின் மின்சக்தி வரைபடத்தை காட்டி அணு உலையால் நமக்கு வெறும் 3 சதவிகிதம் மின்சக்தி வருவதாகவும் அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின்சக்தியால் தான் மீதம் உள்ள 80% வருவதாக கூறுகிறார்கள். என்னுடைய கேள்வி இருக்கின்ற மின்சக்தி போதவில்லை என்பதால் தானே இந்த அணு உலை. ஆனால் இந்த அனல் மின்சக்திக்கு ஆதாரமான நிலக்கரி போன்ற எரிபொருட்கள் எதிர் காலத்தில் குறைவாக தான் கிடைக்கும் என்பது இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியாதா? ஒரு அணுமின் நிலையம் கட்ட 10 வருடங்களுக்கு மேல் தேவைபடும் பொழுது இப்பொழுது இருந்தே நாம் தயார் படுத்தி கொண்டால் தானே எதிர் கால பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

சில அறிவு ஜீவிகள் சூரிய மற்றும் நீர் மின் சக்தியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதை வைத்து எத்தனை நாள் காலம் தள்ள முடியும். சூரிய மின்சக்தியை வைத்து ஒரு ஐந்து தொழிற்சாலைகளை கூட நடத்த முடியாது. தற்பொழுது நீர்மின் சக்தியை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கூட்டம் ஆக்கபூர்வமான நர்மதா நதி நீர்மின் சக்தி திட்டங்களுக்கு பிரச்சனை செய்வது ஏன்?

சில முட்டாள்கள் ஜெர்மனியை பற்றியும், அமெரிக்கா இனி அணு உலைகள் கட்ட போவது இல்லை என்று சொல்கிறார்கள். ஜெர்மனியின் மக்கள் தொகை என்ன? நமது மக்கள் தொகை என்ன? அவர்களுக்கு தேவையான எரிசக்தியும் நமக்கு தேவையான் எரிசக்தியையும் ஒப்பிடுவது யானையையும் பூனையையும் ஒப்பிடுவதற்கு சமம். இது தவிர அவர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக அணு உலைகளை ஏற்கனவே அமைத்து கொண்டுள்ளனர். இனி எதற்கு அவர்களுக்கு புதிய அணு உலை.

கடைசியாக சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள் என்று சொல்லும் அதே கூட்டம் கேரளாவில் நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று சொல்பவர்களை முட்டாள்கள் என்று சொல்கிறார்கள்.

உலகில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகள்
உலகில் அணு உலைகள் உள்ள பகுதிகளின் வரைபடம்

மேலே உள்ள படங்களே போதும் இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் மதவாத கூட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள. கூடங்குளத்தில் உள்ள கிறித்துவர்களை பாதுகாக்க தான் கத்தோலிக்க அமைப்புகள் போராடுவதாக சிலர் சொல்கிறார்கள். ஒரு இந்திய மாநிலத்தின் அளவே இருக்கும் பல ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் இந்தியாவிற்கு இணையாக அணு உலைகளை வைத்து உள்ளனவே? அவற்றை எல்லாம் மூட வேண்டும் என்றும் அங்குள்ள கத்தோலிக்க மக்களை காப்பாற்ற வேண்டும் என்று போப் ஏன் போராடவில்லை. ஒரு வேலை ஆப்பிரிக்காவில் பசிக்கு போராடும் மதம் மாறிய கிறித்துவர்களுக்கு உதவி செய்யாமல் இந்தியாவில் இருக்கும் மக்களை மதம் மாற்ற பணத்தை கொட்டுவதை போல் மதம் மாறிய கத்தோலிக்க ஐரோப்பிய கிறித்துவர்கள் செத்தால் நமக்கு என்ன மதம் மாறி கொண்டு இருக்கும் இந்தியர்கள் தான் முக்கியம் என்று கத்தோலிக்க வாடிகன் நினைக்கிறதோ என்னமோ?

அணு ஆயுத சக்தி இல்லாததால் நாம் 1962ல் சீனாவிடம் இழந்தது மிக அதிகம். மீண்டும் அது போன்ற சூழ்நிலையை தவிர்க்கவும், எதிர்காலத்தில் நிலக்கரி போன்ற வளங்கள் குறைபாட்டால் நமக்கு ஏற்படக் கூடிய மிகப் பெரிய மின்சார பற்றாகுறையை தவிர்க்கவும் அணு உலைகள் மிக அவசியம். அதை விட அவசியம் நமது நாட்டில் மர்மமான முறையில் தற்கொலை என்ற பெயரில் இறந்து கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகள்.

உலகிலேயே மிகப் பெரிய யுரேனிய கனிமவளம் ஆந்திராவில் (49000 டன்) உள்ளது என்பதை மத்திய அரசு வெளியிட்டது. இந்த யூரேனியம் மற்றும் ராம சேதுவினால் நமக்கு கிடைக்கும் கடற்கரை கனிம வளத்தின் மூலம் நமது எதிர் கால மின்சக்தி தேவை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பும் நமக்கு கிடைத்து உள்ளது

வெளி நாட்டு தீய சக்திகளுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே உதயகுமார் மற்றும் கிறித்துவ மிஷினரிகள் செயல்படுகின்றன. இந்தியாவை முடமாக்க முயலும் இவர்களின் முயற்சியை முறியடிக்க சாதி மதம் மொழி என்று வேறுபாடு பாராமல் நாம் ஒன்றினைந்து போராட வேண்டும். அணு உலை மின்சாரம் மட்டும் அல்ல. அணு ஆயுதமும் நமக்கு மிக அவசியம். இது அடுத்தவரை தாக்க அல்ல. நம்மை பாதுகாக்க….

“பாம்பு தன்னிடம் விஷம் இல்லாவிட்டாலும் அது விஷம் உள்ளதாக காட்டி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அதை கொன்று விடுவார்கள்” – சாணக்கியர்

தகவல்கள்:

9 Replies to “அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2”

  1. இன்று ஹோமி பாபாவின் நினைவு தினம். இந்த தினத்தில் இந்தியாவின் பாதுகாப்பு, அணுசக்தி குறித்து வந்துள்ள இக்கட்டுரை தொடர் மிகவும் பொருத்தம். தகவல் தரவுகளுடன் அருமையாக எழுதப் பட்டுள்ளது – எழுதியவருக்கு பாராட்டுக்கள்.

  2. அணு உலையால் கிடைக்கும் மின்சாரத்திற்குப் பதில் போராடுபவர்கலெல்லாம் குடும்பத்தோடு மின்சாரத்தைப் புறக்கணித்து மின்சாரத்தை மிச்சம் செய்து கொடுத்தால் இந்த அணு உலையை மூடலாம்.

    -பாதுகாப்பை பலப்படுத்த வேண்டி போராடினால் கூட நியாயம் இருக்கலாம், ஆனால் மூடச் சொல்லிப் போராடுவதால் போராட்டைத்தை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

  3. christian bishop of gawathi assam sprearheaded through missionaries in mehalaya west kohli hills where uraniaum mines was opened in 1995 to extract uranium. But christians paid coolies and bishops and pasters of this north eastern state prevented functioning of this uraniuam mines in west kohli hills in mehalaya till today not even a single kg could be extracted due to the direct intervention of bishop in assam who can not be arrested as he holds ‘vatigan’ passport and citizen of vatigan and sonias minorities protection laws protect them since everything against indians growth takes places under the blessings of congress head. people must be aware of the evil design of christian missionaries and wipe out these parasites and termites in the initial stage itself as they are anti nationals.

  4. அணு ஆக்கபூரவமான முன்னேற்றத்திற்கா பயன்படுத்துதலும் அழிவிற்கான ஆயுதங்கள் செய்ய பயன் படுத்துவதும் இரண்டுமே தவறு. இதை வலியுறுத்தி ராஜாஜி தன் தள்ளாவயதில் அமெரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு உபயோகத்தை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். அது இன்று காற்றோடு நீர்த்துபோன கதை. இவ்வளவு செலவு செய்த இந்த உலயை செயல் இழக்கசெய்தாலும் பெரும் விபத்த நேரிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோமா ? எனவே இவ்வளவு தூரம் செலவு செய்தபின் இப்பொழுது தடுப்பது முற்றிலும் தவறான அணுகுமுறையே. அபாயம் என்பது இந்த அணுஉலைக்கு மாத்திரம் அல்ல இந்தியாவில் உள்ள எல்லா அணுஉலையிலும் விபத்து நேரிட்டால் அருகில் உள்ள மக்கள் பாதிக்கபோவது திண்ணம். இதில் கிருஸ்துவர்களும் கிருஸ்துவ பாதரிகளும் தனி அக்கரை எடுத்து போராடுவது அன்னிய கைகூலி அரசியல் என்பது அப்பட்டமான உண்மை.
    தமிழகத்தில் இயற்கைசீற்றங்கள் என்பது காலங்காலமாக சிறுதளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தி வந்தது சமீப சில வருடங்களாக அதுவும் அப்பாவி மினவ மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து மதம்மாற்றிய பின் இந்த இயற்கை சீற்றத்தின் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. காரணம் இயற்கையை வணங்கும் இந்த ஏழை மக்களை தொன்றுதொட்டு கொண்டாடிய எல்லை அம்மன் கடல் அம்மன் போன்றவற்றிற்கு விழாகள் எடுத்து பலிதானம் செய்து இயற்கை சீற்றத்தை குறைக்க வேண்டி வழிபாடு நடத்திவந்தனர். நடு கடலுக்கு சென்று படையல் செய்யும் வழக்கமும் உண்டு. இதனால் இவர்கள் வழிபாடு பல இயற்கை சீற்றங்க்ளை குறைத்ததோடு மற்ற பொதுஜனங்களுக்கும் காப்பாற்றப்பட்டார்கள். எனவே இந்த மதம் பிடித்த கிருஸ்துவத்திற்கு ஏழைமக்கள் மாறாமல் இருப்பதுதான் அவர்களுக்கும் அவர்களது சக சகோதரர்களான ஹிந்துக்களுக்கும் நல்லது.
    கூடங்குளத்தில் முற்றுகைசெய்யும் மினவ கிருஸ்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கிருஸ்துவர் எல்லோரும் சற்று நேரம் சிந்தித்து உங்கள் முன்னோர்கள் மதமான ஹிந்து மதத்திற்கு மாறுங்கள். உங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. இன்று கிடைக்கும் பணம் பதவி பட்டம் எல்லாம் தற்காலிகமானது. கிருஸ்துவம் என்பது ஒரு மிருக பண்ணை. இந்த பண்ணயில் வளரும் மிருகங்களுக்கு இடத்தை விட்டு நகராமல் வேளா வேளை சத்தான உணவு படைத்து கொழுக்க செய்வார்கள். இது ஏதொ ஒரு சில மாதங்களோ வருடங்களோதான். நன்கு கொழுத்தபின் அவைகளை காசாபூகடைக்குதான் அனுப்புவார்கள். அப்படிபட்ட கிருஸ்துவம் இந்தியர்களுக்கு தேவையா ?

  5. வேணுகோபால் அவர்களுக்கு,

    \\ இவ்வளவு செலவு செய்த இந்த உலயை செயல் இழக்கசெய்தாலும் பெரும் விபத்த நேரிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோமா ?\\

    இது போன்ற ஒன்றை இப்பொழுது தான் கேட்கிறேன். இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

    மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிப்பதை நானும் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் அணுசக்தி தேவையான ஒன்று…

    அப்படி அணுசக்தி கூடாது என்றால் அதற்கு மாற்று விசயங்களான

    (அ) குடும்ப கட்டுபாடு

    (ஆ) பொது சிவில் சட்டம்

    (இ) பங்களாதேஷ்யில் இருந்து வந்த மற்றும் வரும் மக்களை மீண்டும் திருப்பி அனுப்புவது

    (ஈ) நதிகளை அரசுடைமை ஆக்குவது

    (உ) அன்னிய பொருட்களுக்கு தடை விதிப்பது மற்றும் இயற்கை விவசாயத்தை மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்

    இதற்கும் அணு உலை நிறுத்ததிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம்… கொஞ்சம் ஆழ சிந்தித்தால் இதற்கான பதில் கிடைக்கும்….

  6. கோமதி செட்டி,
    நீங்கள் இந்திய அணு ஆயுத பாதுகாப்பையும் அணு சக்தி பயன்பாட்டையும் தேவைக்கு அதிகாமாக ஒன்றுபடுத்தி குழப்புகிறீர்கள். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் என்னால் விவாதிக்க இயலாது.
    ஆனால் கிருத்தவர்கள் எதிர்க்கிறார்கள் என்பற்காகவே மற்றவர் ஆதரிக்க வேண்டும் என்பதுபோல் இவ்விஷயத்தை அணுகுவது அபத்தம். அணு உலையும் அதன் ஆபத்துகளும் நம் தேவையும் தெரிவும் இவ்விவாதத்தின் எல்லைகளாக இல்லை. இது பற்றி முன்னரும் எழுதிய நினைவு.

    மேம்போக்காக சில
    உலகெங்கும் வேதிப் பொருட்கள் உற்பத்தி செய்தாலும் போபாலிலேயே மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்த துயரம் அதை விடப் பெரிது. வேதிப் பொருட்கள் உற்பத்தியில் பாதுகாப்பிற்கென உள்ள அமைப்பு CCPS அதன் முகப்பில் நாம் தான்.
    https://www.aiche.org/CCPS/About/History.aspx
    பா ஜ க ஆட்சிக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவரின் துயர் துடைக்கப் படவில்லை. (2012 ஒலிம்பிக் வரை இதன் தாக்கம் நீளுகிறது).
    இந்தியப் பிரச்சினை தனியானது.
    ஏதும் விபத்து நேர்ந்தால் ஜப்பான் போன்று கட்டுப்பாடான மக்களும் வெளிப்படையான அரசும் நம்மிடையே உள்ளனவா?
    பெரும்பாலும் மின்தேவையை மட்டுமே வாதமாக வைக்கிறீர்கள். பிரேசில் போன்றவை வேறு முயற்சிகளில் உள்ளன.
    நீங்கள் கல்பாக்கம் சென்றுள்ளீர்களா?

  7. அணு சக்தியை அளவோடு பயன்படுத்தினால் ஆபத்து இல்லை
    நாம் இப்போது அளவில்லாமல் இயற்க்கையை அழித்து வரும் நேரத்தில்,
    அப்துல் கலாம் சொல்வது போல் , தோரியம் பயன் படுத்தி மின்னுற்பத்தி செய்வதில் தவறு இல்லை
    இதை அரசியல் ஆக்காமல் சிந்தித்து செயல் படுத்துவது நல்லது…

  8. \\ பிரேசில் போன்றவை வேறு முயற்சிகளில் உள்ளன. \\

    பிரேசில் என்ன மாதிரியான முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது என்று கீழே உள்ள லிங்கில் தெரிந்து கொள்ளுங்கள் 🙂

    https://www.world-nuclear.org/info/inf95.html

    \\கிருத்தவர்கள் எதிர்க்கிறார்கள் என்பற்காகவே மற்றவர் ஆதரிக்க வேண்டும் என்பதுபோல் இவ்விஷயத்தை அணுகுவது அபத்த\\

    ஹிந்துக்கள் எதிர்த்தாலும் எனது பதில் இதுவாகவே இருக்கும்.

    மேற்கத்திய கை கூலிகளாக முன்னாள் ஹிந்துகள் மாற்றப்பட்டு இருப்பது காலத்தின் விபரீதம் 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *