எழுமின் விழிமின் – 5

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு:  ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்:  ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.


<< முந்தைய பகுதி 

தொடர்ச்சி..

உனது ஸ்வதர்மத்தைச் செய் – இதுவே உண்மைகளில் பேருண்மையாகும்:

வீரர்கள்தான் உலகில் இன்பம் அனுபவிக்கிறார்கள். உனது வீரத்தைக் காட்டு. சாம, தான , பேதம், தண்டம் என்ற நால்வகை உபாயங்களையும் சந்தர்ப்பங்களுக்குத் தக்க உபயோகப்படுத்தி, உனது எதிரியை வென்று உலகில் இன்பம் அனுபவி. அப்பொழுதுதான் நீ தார்மிகன் ஆவாய்.  அப்படியில்லாமல் யாராவது ஒருவன் தன் மனத்தில் தோன்றியபடி உன்னை உதைத்து மிதித்தால், நீ அந்த அவமானத்தைச் சகிப்பாயானால் அவமானகரமான வாழ்க்கையே வாழ நேரும். இவ்வுலகில் உனது வாழ்க்கை சரியான நரக வாழ்க்கை ஆவதுடன் மறு உலக வாழ்வும் அவ்வாறே ஆகும். சாஸ்திரங்கள் இதைத்தான் கூறுகின்றன. “ உனது ஸ்வதர்மத்தைச் செய்துவா; இதுதான் உண்மை.  உண்மைக்கெல்லாம் உண்மை.”  எனது மதத்தைச் சார்ந்தவர்களே!  உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை இதுதான். ஆனால் ஒன்று:  எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். எவரையும் துன்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது. உங்களால் முடிந்தவரையில் பிறருக்கு நன்மை செய்யப்பாருங்கள். ஆனால் இல்லறத்தானாக இருப்பவன் பிறர் செய்யும் தீமைகளுக்குத் தலை வணங்குவானாயின், அது பாவமாகும். அவன் அப்பொழுது அந்த இடத்திலேயே பதிலுக்குப் பதில் திருப்பித் தர வேண்டும். இல்லறத்தான் பெரு முயற்சி செய்து,  உற்சாகத்துடன் பணம் ஈட்டவேண்டும். அதைக் கொண்டு தனது குடும்பத்துக்கும் பிறருக்கு ஆதரவு தந்து, வசதிகளைச் செய்வதுடன் முடிந்த வரை நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். உன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றால் மனிதன் என்று உன்னை எப்படி அழைத்துக் கொள்கிறாய் ? நீ சரியான கிருஹஸ்தன் ஆகமாட்டாயே?  உனக்கு மோட்சம் கிடைப்பது பற்றி என்ன சொல்வது?

இரண்டு விதமான சுபாவங்களுக்கு வெவ்வேறு பாதை:

இப்பொழுது பின்பற்ற வேண்டிய நல்ல பாதை எது?  மோட்சத்தை (விடுதலையை) விழைகிற மனிதனுக்கு உகந்த பாதை ஒன்று: தர்மத்தை விரும்புகிறவனுக்கு உகந்த பாதை மற்றொன்று; இந்தப் பேருண்மையைத்தான் கீதாசாரியனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் விளக்க முயன்றார்.  இந்தப் பேருண்மையின் மீது தான் வர்ணாசிரம அமைப்பு, ஹிந்து சமாஜத்தின் ஸ்வதர்ம தத்துவம் முதலியனவெல்லாம் நிறுவப்பட்டுள்ளன.

அத்வேஷ்டா ஸர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: சமதுஃக்கஸுக்‌ஷமீ. ( பகவத் கீதை – அ. 12 சு. 13 )

“எதிரியற்றவன், எல்லோரிடமும் நட்பும் தயையும் வாய்ந்தவன்; ‘நான், எனது’ என்ற உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும்  சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”

இதுவும் இதுபோன்ற மற்ற அடைமொழிகளும் மோட்சத்தைக் குறிக்கோளாகக் கொண்டவனுக்கே பொருந்துவன.

க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த்த² நைதத் த்வய்யுபபத்³யதே
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப (பகவத் கீதை – அ.2 சு.3)

“ஆண்மையின்மைக்கு இடம் கொடாதே.  பிருதாவின் குமாரனே! அது உனக்குப் பொருந்தாது. மனத்திலுள்ள இந்த இழிந்த பலவீனத்தை உதறிவிட்டு எழுந்து நில். எதிரிகளைப் பொசுக்குவோனே!”

தஸ்மாத்  த்வமுத்திஷ்ட² யசோ லப⁴ஸ்வ
ஜித்வா சத்ரூன் பு⁴ங்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம்
மயைவைதே நிஹதா:  பூர்வமேவ
நிமித்தமாத்ரம் ப⁴வ ஸவ்ய ஸாசின்! (பகவத் கீதை – அ. 11 சு. 33 )

“ ஆகவே நீ எழுக ! புகழ் பெறுவாயாக ! உனது எதிரிகளை வென்று  வளமான அரசாட்சியை அனுபவிப்பாயாக! உண்மையில் என்னால் இவர்கள் முன்னரே கொல்லப்பட்டுவிட்டனர். ஸவ்யஸாசியே (அர்ஜுனா), நீ ஒரு கருவியாக மட்டும் இருப்பாயாக!

இந்த உபதேசங்கள் தர்மத்தை முக்கிய இலக்காகக் கொண்ட இல்லறத்தானுக்குப் பொருந்துவன.

சாத்விக அமைதிக்கும் தாமசகுணத்தின் மந்த நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு:

வெளியிலிருந்து பார்த்தால் நீ இருப்பது சத்வ குண நிலையிலா அல்லது தாமச குண நிலையிலா என்று நமக்கு எப்படிப் புரியும்? எல்லா இன்ப துன்பங்களுக்கும் அப்பாற்பட்டு, எல்லாவிதச் செயல்களையும் வேலைகளையும் கடந்து சாத்விகமான அமைதி நிலையில் நாம் இருக்கிறோமா, அல்லது உயிரற்று, ஜடப் பொருள்போல் நம்மிடம் வேலை செய்யச் சக்தி இல்லாததால் வேலை எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு அமைதியாக, படிப்படியாக உளுத்துப் போய், உள்ளுக்குள்ளே இழிகுணம் சூழ்ந்து, மட்டரகமான தாமச நிலையில் இருக்கிறோமா?  இந்தக் கேள்வியை நான் உண்மையாகவே கேட்கிறேன். பதில் தரவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறேன். உனது சொந்த மனத்திடமே கேள். உண்மை எதுவென உனக்குத் தெரியும்.

சாத்விக அமைதி-மகத்தான சக்திகளின் உறைவிடம்:

ஆனால், பதிலுக்காகக் காத்திருப்பதற்கு என்ன அவசியம்?  மரத்தை அதன் பழத்திலிருந்து அறியலாம். சத்வ நிலையில் ஒரு மனிதன் இருக்கும்பொழுது நிச்சயமாகவே செயல் புரியாமல் அமைதியாக இருப்பான்! அந்தச் செயலின்மை மகத்தான சக்திகளை ஒரு முனைப்படுத்திக் குவித்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். அந்த அமைதி அபார சக்தியின் பிறப்பிடம் ஆகும். மிக உயர்ந்த  சாத்விக நிலையிலுள்ள அந்த மனிதன் நம்மைப் போல் கைகளாலும் கால்களாலும் இனிமேல் வேலை செய்ய வேண்டியதில்லை. மனத்தால் நினைத்தாலே எல்லா வேலைகளும் உடனே மிகச் செம்மையாக நிறைவேறிவிடும். சத்வ குணம் மேலாதிக்கம் செலுத்தும் அந்த மனிதன்தான் அனைவராலும் வணங்கப்படுகிற பிராம்மணன் (இங்கு, பிரம்மத்தை அறிந்தவன் எனபது பொருள்). வீட்டுக்கு வீடு போய்த் தன்னை வணங்கும்படி மற்றவர்களை அவன் கெஞ்சிக் கேட்க வேண்டுமா? சர்வசக்தி வாய்ந்த உலக அன்னையானவள் தனது சொந்தத் திருக்கரத்தால் பொன்னெழுத்துக்களில் அவனது நெற்றியில், “இந்த மகானை, என் புதல்வனை, அனைவரும் வழிபடுக” என்று எழுதுகிறாள். உலகம் அதனைப் படிக்கிறது, கவனிக்கிறது.  பணிவுடன் அவன் முன் தன் தலையைத் தாழ்த்தி வணங்குகிறது.

உண்மையில் அந்த மனிதன்,

அத்³வேஷ்டா  ஸர்வபூ⁴தானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார:  ஸமது:கஸுக க்ஷமீ   (பகவத் கீதை – அ.12.சு.13)

“எதிரி அற்றவன்; எல்லாரிடமும் நட்பும், தயையும் வாய்ந்தவன். ‘நான், எனது’ என்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”

தாமச குணம் வாய்ந்த மந்த நிலை – மரணத்தின்  சின்னம்:

கோழைகள், பேடித் தன்மை வாய்ந்தவர்கள். மூக்கால் முணுமுணுத்து வார்த்தைகளைக் கடிந்து பேசுகிறவர்கள். ஒருவார காலமாகப் பட்டினி கிடப்பவனைப் போல மெல்லிய இழைந்த குரல் உடையவர்கள், இழிந்த கிழிந்த ஈரமான துணிபோலத் தெம்பற்றவர்கள், எதையும் கண்டிக்காமல், யார் உதைத்தாலும் கோபமடையாதவர்கள். இது மட்டரகமான தாமசகுணம் வாய்ந்தவர்களின் சின்னம். சத்வ குணத்தின் அறிகுறியல்ல; சாவின் சின்னமாகும். முழுவதும் இழிகுணமும், நாற்றமும் நிறைந்தவர்கள். அர்ஜுனன் இத்தகையவர்களின் கோஷ்டியில் விழ இருந்தான். அதற்காகவே தான் பகவான் விஷயங்களை இவ்வளவு விரிவாக விளக்குகிறார். இதுதான் உண்மையல்லவா? பகவானின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட முதற் சொல்லைக் கவனியுங்கள். “க்லைப்யம் மாஸ்ம கம:  பார்த்த நைதத் த்வய்  யுபபத்யதே” (ஆண்மையற்ற குணத்துக்கு இடங்கொடாதே, பார்த்தனே! அது உனக்கு அழகல்ல ), அதன் பின்னர்  ‘தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யசோ லபஸ்வ’  ( ஆகவே, நீ எழுந்து நில், புகழ் பெறு!) என்றார்.

கடந்த ஆயிரமாயிரமாண்டுகளாக நாட்டு மக்கள் ஆகாயம் முழுவதையும் பகவானின் பெயரால் நிரப்பி வருகிறார்கள்.  பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுள் ஒரு போதும்  அதற்குச் செவி சாய்க்கவில்லை.  மூடனின் ஓலத்தை  மனிதனே ஒரு போதும்  கேட்பதில்லையே, கடவுளா கேட்பாரென நினைக்கிறீர்கள் ? இப்பொழுது கடைத்தேற ஒரே வழிதான் உண்டு. அது, கீதையில் பகவான் கூறியுள்ள சொற்களைக் கவனித்துக் கேட்டு நடப்பது – க்லைப்யம் மா ஸ்ம கம:  பார்த்த ( பார்த்தனே! ஆண்மையற்ற தன்மைக்கு இடங்கொடாதே). தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ (ஆகவே நீ எழுந்து நில். புகழ் பெறு).

விதியின் பெரிய வேடிக்கை:(*)

இதிலிருக்கிற வேடிக்கையைக் கவனியுங்கள். ஐரோப்பியர்களின் தெய்வமான ஏசுகிறிஸ்து போதித்தார். “எதிரியே உனக்கு இருக்கக் கூடாது. உன்னைச் சபிக்கிறவர்களை நீ ஆசீர்வதி. உன் வலது கன்னத்தில் அறைந்தால், நீ இடது கன்னத்தையும் காட்டு;  உனது வேலைகளனைத்தையும் நிறுத்திவிட்டு மறு உலகுக்குச் செல்ல ஆயத்தமாகு; உலக முடிவு மிக நெருக்கத்தில்  உள்ளது” என்றார்.  ஆனால், கீதையில் நமது பகவான்,  “எப்பொழுதும் மிகுந்த உற்சாகத்துடன்  வேலை செய்; உனது எதிரிகளை அழித்து உலகத்தை அனுபவி” என்றார். ஆனால் கடைசி முடிவில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உட்பொருளாக எதைக் குறிப்பிட்டார்களோ அதற்கு  நேர் எதிரிடையான முடிவு ஏற்பட்டது. ஏசு கிறிஸ்துவின் சொற்களை ஐரோப்பியர் ஒரு போதும் கருத்துடன் கவனித்து ஏற்கவில்லை. எப்பொழுதும் சுறுசுறுப்பான பழக்க வழக்கங்களுடன் அபாரமான ராஜஸ குணங்கள் வாய்ந்து , துணிகரமாக,  இளமைத் துடிப்புடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சுகபோகங்களையும், வசதிகளையும் திரட்டிச் சேர்த்து, மனம் அலுக்கும்வரை அவற்றை அனுபவிக்கிறார்கள்.

நாமோ மூலையில் உட்கார்ந்து கொண்டு, இரவு பகலாகச் சாவைப் பற்றி நினைந்து, “நளிநீ த³லக³த ஜலமதிதரலம் தத்வஜ்ஜீவனம் அதிசயசபலம்” (தாமரை இலைமீதுள்ள தண்ணீர் நடுங்குகிறது, நிலையில்லாதிருக்கிறது; அதுபோல் மனிதனின் ஆயுள் அற்பமானது. அநித்தியமானது) என்று   பாடுகிறோம். அதன் விளைவாக நம் ரத்தம் உறைந்துபோய், நமது உடலின் மாமிசம் மரண தேவனான யமனின் பயத்தால் அஞ்சிக் கெஞ்சுகிறது. அந்தோ! யமன் கூட நமது சொல்லையே சரியென நம்பி விட்டான் போலும்! பிளேக் நோயும் மற்றும் பல நோய்களும் நமது நாட்டினுள் நுழைந்து விட்டன.

கீதை உபதேசத்தைப் பின்பற்றுவோர் யார்? ஐரோப்பியர்கள்! ஏசு கிறிஸ்துவின் விருப்பப்படி நடப்பவர்கள் யார்? ஸ்ரீகிருஷ்ணனின் சந்ததிகள்! இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

[ (*) – சுவாமிஜியின் மேற்கண்ட அவதானிப்புகள், பாரதம் காலனிய அடிமைத் தனத்தில் வீழ்ந்திருந்த போது, 1880 – 1902 காலகட்டத்தில் சொல்லப் பட்டவை என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.]

புத்தர் உபதேசங்கள்:

புத்த சமயம், வேத சமயங்கள் ஆகியவற்றின் குறிக்கோள்கள் ஒன்றேதான். ஆனால் புத்த சமயத்தவர்கள் கடைப்பிடித்த வழி முறைதான் சரியில்லை. பௌத்தர்களின் வழிமுறை சரியாக இருந்திருக்குமானால் ஏன் மீண்டும் ஈடேற முடியாதபடி அழிந்து குலைந்து போகிறோம் நாம்? காலவெள்ளம் இயற்கையாக இதனை விளைவித்து விட்டது என்று கூறினால் போதாது. காரண-காரியச் சட்டங்களை மீறிக் காலத்தால் செயல்பட முடியுமா?

ஐரோப்பா கிறிஸ்துவைக் கைகழுவி விட்டதால் உயிர் பிழைத்தது:

வேத சமயங்கள் தான் வழிமுறைகளைப் பற்றிக் கவனித்து, மனிதன் எய்த வேண்டிய நான்கு நிலைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுக்கான சட்ட திட்டங்களை வகுத்து வைத்துள்ளன. புத்தர் நம்மை அழித்தார். அது போல கிறிஸ்து கிரீஸையும் , ரோம் நாட்டையும் அழித்தார். பின்னர் காலப் போக்கில் அதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியர்கள்  பிராடெஸ்டெண்டுகளாக மாறினார்கள். போப்பின் அதிகார பீடத்தினர் விளக்கம் தந்தபடி இருந்த கிறிஸ்துவின் உபதேசங்களை உதறி எறிந்தனர்; நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பாரத தேசத்தில் குமாரிலபட்டர் ‘ கர்மம் மட்டுமே பாதை’ என்ற கர்ம மார்க்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான வேத சமயத்தை உறுதியாக நிலை நாட்டினார்கள். இவ்வாறாக நமது தேசம் இழந்த தனது வாழ்க்கையை மீண்டும் எய்துவதற்கான பாதைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாரத நாட்டில் முப்பது கோடி ஆத்மாக்களை விழிப்படையச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முப்பது கோடி மக்களை எழுப்புகிற பணியை ஒரே நாளில் செய்து விட முடியுமா?

(தொடரும்)

அடுத்த பகுதி >> 

16 Replies to “எழுமின் விழிமின் – 5”

  1. we are spoiled mainly because of Gandhi. He taught us that non-violence is main concept of Hinduisam. But non violence is concept of buddhists and Jains.

    He is either naive or cheating people. Gandhi thought that muslims would accept his leadership. But, he was deceived by muslims but cost was thousands lives of Hindus.

  2. அன்புள்ள மணி,

    புத்த மதம், ஜைன மதம் ஆகியவை இந்து மதத்தின் வழித்தோன்றல்களே ஆகும். ” தன்னைக் கொல்ல வந்த பசுவாயினும் கொல்லத்தயங்காதே” என்று தான் நமது முன்னோர்கள் தர்ம சாஸ்திரத்தில் கூறியுள்ளனர்.

    மகாத்மா காந்தியும் பெண்கள், தங்களை போக்கிரிகளிடம் இருந்தும், கயவர்களிடம் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள , கூர்மையான சிறு ஆயுதங்களை வைத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி உள்ளார். ஆனால் இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு கேட்டதை , காந்தி முதலில் ஆதரிக்கவில்லை. ஆனால் , குல்லுக பட்டன் என்று கழகங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இராசாசி தான், பாகிஸ்தான் பிரிவினைக்கு, ஜின்னா என்ற மதவெறியனுடன் கூட்டு சேர்ந்து , வழிவகுத்தார். இராசாசி போன்றோர் பிரிவினைக்கு வழிவகுத்த பின்னர், காந்தி வேறு வழி இல்லாது தான் பிரிவினைக்கு ஒத்துக்கொண்டார்.

    புத்தர் ஒரு குழப்ப வாதி. தன்னுடைய இளம்வயது மனைவியையும், கைக்குழந்தையான மகனையும் விட்டுவிட்டு , தலைமறைவான இழிபிறவி. இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்து, நாலந்தா போன்ற உயர் பல்கலைக்கழகங்களை சிதைத்த போது, அங்கிருந்த தலைமை புத்தபிக்கு உட்பட பல லட்சக்கணக்கான மக்கள் , இஸ்லாமிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எதிர் தாக்குதல் நடத்தி , தற்காத்துக்கொள்ளக்கூட, புத்த பிக்குகளால் முடியாமல் போய்விட்டது.

    அஹிம்சை உயர்நெறியே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், தற்காப்பு என்பது அகிம்சையின் ஒரு அம்சமே ஆகும். இதனை புரிந்து கொள்ளாமல் , அகிம்சைக்கு தவறான விளக்கம் கொடுத்த கவுதம புத்தரை போன்ற பேடிகளால் , இந்தியாவின் அற்புத கலாசாரம் , அந்நியர்களால் அடிமைப்படுத்தப்பட்டது.

    ஆனால் இன்றோ , புத்தரின் வழிவந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் பல நாடுகள் பிற உயிர்க்கொலையையும், அணுஆயுதங்களையும், தூக்கிக்கொண்டு அலைகின்றன. எனவே ,காந்தியால் கெடவில்லை. புத்தனால் நாடு அழிந்தது. குல்லுக பட்டன் இராசாசியால் , தமிழகம் திமுக போன்ற தேசவிரோத இயக்கங்களின் பிடியில் வீழ்ந்து, தடுமாறுகிறது.

    We can proudly say, that Buddha was the root cause of all evils in the country. We can also proudly say that Tamilnadu was destroyed by Kullukapattan Raajaaji.

  3. //புத்தர் ஒரு குழப்ப வாதி. தன்னுடைய இளம்வயது மனைவியையும், கைக்குழந்தையான மகனையும் விட்டுவிட்டு , தலைமறைவான இழிபிறவி.//

    பௌத்தம் என்பதும் இந்து மதமே, புத்தர் விஷ்ணுவின் அவதாரமே என்பது அடிப்படை அறிவு. அடிப்படை அறிவே இல்லாமல் சொல்லப்பட்ட உளறல். மோசமான வெறுப்பு.

    நாக்கில் நரம்பில்லாமல் போகலாம். விரலிலுமா இல்லாமல் போய்விட்டது ?

    ,

  4. களிமிகு கணபதி.

    //
    பௌத்தம் என்பதும் இந்து மதமே, புத்தர் விஷ்ணுவின் அவதாரமே என்பது அடிப்படை அறிவு. அடிப்படை அறிவே இல்லாமல் சொல்லப்பட்ட உளறல். மோசமான வெறுப்பு.
    //

    விஷ்ணுவின் அவதாரம் என்றெல்லாம் சும்மானாச்சிக்கு சொல்லிகிலாம். புத்தர் என்னவெல்லாம் சொல்லிருக்கார் என்று நாம் படிப்பதில்லை அதான் பிரச்சனை.
    அவர் ஹிந்து மத்தத்தை பார்த்து சிரித்திருக்கிறார். கங்கையில் குளித்தால் புண்ணியமா அப்போ மீன்கள் தான் மிகவும் புண்ணியம் செய்தவை என்று சொல்லிருக்கிறார். அவர் வாழ்ந்த சமயத்தில் அவரது ராஜாங்கத்தில் விஷயம் சரி இல்லை என்ற உடனே டபக்குன்னு எல்லோரையும் காவி ஏந்த வைத்து விட்டார். புத்தருக்கு பின் பலர் தெரியாமல் துறவிகளாகி விட்டு பட்ட கஷ்டம் ஏராளம். ஹிந்டுத்த்வத்தில் துறவிகள் சிலரே இருப்பார். புத்தரின் கொள்கை என்ன. அனாத்மத்த்வம், எல்லாமே டுபாகூர் நமக்கு விடிவு என்பது எல்லாத்தையும் விடுவதிலேயே. எலாரும் ஆகுங்கட சாமியாரா, அடிங்கட மொட்டாய என்ற ரேஞ்சில் போனது புத்த மதம்.

    புத்தருக்கு பின் பல மத தலைவர்கள் வெறும் அர்த்த வாதத்திலேயே காலத்தை கடத்தினர். மத்ததெல்லாம் தப்பு தப்பு என்று சொல்லி சொல்லி வாழ்கை. பல ராஜாக்களை புத்த மதத்தினுள் புகுத்தினர்,. அவர்களும் புத்தரின் கொள்கையை படித்து அவர்களுது தர்மத்தை மறந்தனர் அர்ஜுனனை போல. பல க்ஷத்ரியர்கள் வலுவிழந்ததர்க்கு புத்தரின் குறுகிய கண்ணோட்ட போதனைகள் ஒரு முக்கிய காரணம்.

    இன்னைக்கு திபெத்தை பாருங்கள். தீக்குளித்து தீக்குளித்து சாகிறார்கள்,. சீனாகாரனுக்கு வேலை மிச்சம்.

  5. //இன்னைக்கு திபெத்தை பாருங்கள். தீக்குளித்து தீக்குளித்து சாகிறார்கள்,. சீனாகாரனுக்கு வேலை மிச்சம்.// 🙂

  6. Dear Ganapathi,

    I agreed with you Tamil nadu fallen because of a traitor like Rajaji. But, you justified Gandhi.It is wrong.
    Gandhi preached non-violence like Buddha and believed non-violence is the best method to solve hindus problems. That’s why he inflicted non-violence among hindus. But , muslims does not hear Gandhi words. While in Inidan partition, thousand hindus killed by fanatic muslims in pakistan , hear all hindus are raised with anger. But, Gandhi try to cool down hindus but even not apprached muslims. All advises given only to hindus.

  7. களிமிகு கணபதி அவர்களே….

    உங்களுக்கு புத்தரை பிடித்திருக்கலாம் ….அதற்காக அவரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்…..சாரங் அவர்கள் சொன்னதுபோல் புத்தரது போதனைகள் குறுகிய எண்ணம் படைத்தவை…..பவுத்தத்தால் நமது தேசம் அடைந்த நஷ்டம் ஏராளம்..ஹிந்து துறவிகள் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தபோது பவுத்த துறவிகள் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டனர்…..மாவீரர்களான சத்திரியர்களை அஹிம்சை என்ற பெயரால் குழப்பி, அவர்களை கோழைகளாகவே மாற்றிவிட்டனர்….பலன்? எதிரிகளை எதிர்க்க வலுவின்றி பல நூற்றாண்டுகள் அந்நியரிடம் அடிமைப்பட நேர்ந்தது…….

  8. அன்புள்ள களிமிகு கணபதி,

    என் கடிதம் தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் , அதற்காக தங்களிடமும் , இந்த குழுவிடமும் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறேன்.

    சற்று மென்மையாக எழும்போதே இரண்டு மிக கடுமையான வார்த்தைகள் வந்துவிட்டன.

    புத்தரை பொருத்தமட்டில் , அஹிம்சை என்றபெயரில் , தற்காப்பு கூட இல்லாமல், நம் நாட்டில் எதிரிகள் காலூன்ற வழிவகுத்த பெரியவர் ஆவார்.

    நாடு முழுவதையும் சாமியார் மடமாக்க முயன்ற அவரது செயல் மன்னிக்க முடியாதது.

    மேலும், மனைவி மக்களை சிறுவயதில் கை விட்டுவிட்டு , தலைமறைவான அந்த செயலை தங்களை போன்றோர் தூக்கி வைத்து கொண்டாடுவது உங்கள் தலை எழுத்து.

  9. Dear uthishita Ganapthi,

    you are correct. Before Independence, because of Buddhism, India had fallen to her enemies. After Independence, Hinduism insulted by secularists , Christians and Islmaists because of Gandhi.

  10. இல்லறத்தார் பிறருக்கும் தம் குடும்பத்துக்கும் நன்மைகள் செய்யவே செல்வம் தேட வேண்டும். தீமைகளை வேடிக்கை பார்க்கக் கூடாது; எதிர்த்து நிற்க வேண்டும். இல்லறத்தாருக்கு இதுவே ‘ஸ்வதர்மம்’.

    சுய தர்மத்தை நிறைவேற்றாத எவர் வாழ்க்கையும் வீணே. இதற்கு எவர் உபதேசம் தடையாக இருக்கிறதோ அந்த உபதேசம் இந்த நாட்டுக்கல்ல எந்த நாட்டுக்கும் தேவையற்றது. அதனால் எந்த நாட்டுக்கும் நன்மை விளையாது.

    ஆனால் புத்தர் இதற்கு (பகவத் கீதை மற்றும் ஸ்வாமி விவேகனந்தரின் அறிவுரைகள்) மாறாக உபதேசித்துள்ளாரா என்பது தெளிவாக எனக்குத் தெரியவில்லை.

    நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது போல புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பல நாடுகள் அவர் சொன்னதாக நாம் அறிந்துள்ள உபதேசங்களுக்கு நேர் மாறாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றன.

  11. நண்பர்களே,

    புத்தர் பற்றியும் பௌத்தம் பற்றியும் பல தவறான “நம்பிக்கைகள்” நம்மிடம் இருக்கின்றன.

    இதில் ஒரு சில சைவர்களால் உருவானவை. எஞ்சியுள்ள அனைத்தும் காலனியவாதிகளால் “பரப்பப்பட்ட” பொய்யுரைகள்.

    பௌத்தம் இந்து மதங்களில் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களில் புத்தரும் ஒருவர். இவை நமது சாஸ்திரங்களிலேயே இருக்கும் தரவு கொண்ட விஷயங்கள்.

    மட்டுமல்ல. பௌத்த மத சாஸ்திரங்களும் இந்து தர்ம அடிப்படையை ஏற்றுக்கொண்டே செயல்படுகின்றன.

    உதாரணமாக, ராமனின் இஷ்வாகு வம்ஸ வழி வந்தவர்தான் சித்தார்த்த புத்தர் என்று ‘அவர்களது’ சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

    இந்து மதம் இன்றி பௌத்தம் இல்லை. பௌத்தம் இன்றி இந்து மதமும் இல்லை. ஏனென்றால் இரண்டும் ஒன்றுதான்.

    தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள இந்துக் கோவில்களில் புத்தரும் கருவறைகளில் வணங்கப்படும் தெய்வம்.

    இந்த அடிப்படையான உண்மைகள் நமக்குத் தெரியாததால், “இழிபிறவி” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகிறோம்.

    பௌத்தத்தின் தவறுகளில் நமக்குப் பொறுப்பு உள்ளது. நம்முடைய சிறப்புகளில் பௌத்தத்தின் பங்கு வழிபாட்டுக்கு உரியது.

    ஆனால், நாம் பொறுப்பேற்கத் தயாங்குகிறோம். உதாரணமாக, நம்முடைய மரபை அறியும் பொறுப்பும் நம்மிடம் இல்லை. அதனால், புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்கிற அடிப்படையான விஷயம்கூட நமக்குப் புதிய செய்தியாகத் தெரிகிறது. அந்தச் செய்தி புதிதாக இருப்பதால் அதைச் சந்தேகிக்கிறோம்.

    கேள்விகளால் உருவானது, பாதுகாக்கப்படுவதுதான் இந்து மதம்.
    இந்து மதப் பெரியோர்கள் அனைவருமே நமது சடங்குகளை நம்பிக்கைகளைக் கேள்வி கேட்டவர்கள்தான். கேட்பவர்கள்தான்.

    கங்கையில் குளித்தால் முக்தி கிடைக்குமா என்று கேள்வி கேட்டவரை, ஆபிரகாமிய மதத்தவர் போல மதப்பிரஷ்டம் செய்தால் “நட்ட கலைச் சுற்றி வந்து முணுமுணுக்கும் மடையர்கள்” என்று சொன்ன சித்தர்கள் உட்பட, ராமகிருஷ்ணா -விவேகானந்த, ரமண, அரவிந்தர் ஊடாக வாழையடி வாழையாக வரும் இந்து மதப் பெரியோர்கள் அனைவரையும் மதப் பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான்.

    பௌத்த காலம் வரை சன்னியாசிகள் காடுகளில் காற்றை உண்டு உயிரை விடுபவர்கள். விஷ்ணுவின் அம்சமான பௌத்தர்தான் அவர்களைச் சமூக சேவை செய்ய குடும்பஸ்தர்களுக்கு வழிகாட்டப் பணித்தார்.

    இந்த உலகின் கடைசி அணுவும் முக்தி அடையும்வரை எனக்கு முக்தி வேண்டாம் என்ற சங்கல்பம் மகாயான பௌத்தர்களின் துறவேற்பு வேண்டுதல்களில் ஒன்று.

    “முக்தியையே” துறந்து சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட நம் மதத்தை நாம் தூஷிக்கிறோம்.

    நமது அறிவின்மையால் புத்தரை, பௌத்த மதத்தைப் பற்றி ஆதாரமற்ற வெறுப்புக்களை உமிழ்கிறோம்.

    பௌத்த சமண மதங்களின் அஹிம்ஸையால்தான் வெறிமதத்தாரை எதிர்த்து அழிக்கவில்லை என்று சொல்கிறீர்கள்.

    சரி. அது உண்மையாக இருக்கட்டும்.

    அது உண்மை என்று வைத்துக்கொண்டு இந்தக் கேள்வி கேட்கிறேன்.

    இப்போது பௌத்த மதம் இந்தியாவில் இல்லை என்றே சொல்லிவிடலாம். உங்கள் மாநிலத்தில், மாவட்டத்தில், ஊரில் வெறிமதத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பௌத்த சித்தாந்தங்களால் சிறிதும் பாதிக்கப்படாத நீங்கள் என்ன கிழித்து விட்டீர்கள் ?

    .

  12. அதே போல, காந்தி பற்றிய அவதூறுகளுக்கும் என் முந்தைய பதில் பொருந்தும்.

    .

  13. I agree with many regarding Buddhism. It has its own plus, but the state we are in today is because of Buddhism. Swami Vivekananda has told this..that we lost all our flamboyance because of Buddhism. In his Karma yoga, he clearly says that, one can practice ahimsa, only when he is strong enough to defend himself and people around him. If a strong man comes to attack me, i should be strong enough to defend, attack and defeat him. I have that power, and even then if i dont harm him, thats ahimsa. If i dont have that power, and if I run away from him, saying that attacking is ahimsa, then its not ahimsa, its called cowerdice.

    This is vivekananda’s stand. He says, because of budha, we have become cowards and not ahimsa vadi’s.

  14. @
    //Satish on March 21, 2012 at 2:26 pm //

    இது விவேகானந்தரின் stand மட்டுமல்ல. இந்து சமயத்தின் stand-ஏ இது தான். அநேகமாக காந்திஜி சொன்னதும் இந்த stand ஆகத்தான் இருக்க வேண்டும்; இல்லாமலும் போகலாம்.

    மொத்தத்தில் அஹிம்சை என்பது பலவீனத்தின் வெளிப்பாடல்ல; பலத்தின் அமைதி.

    //…If I run away from him, saying that attacking is ahimsa, then its not ahimsa, its called cowardice// என்பதில் முதலில் உள்ள ahimsa என்பது himsa என்று பதிவாகியிருக்க வேண்டும்.

    என்ன அழகான சொல்..!

    cowardice என்பதில் உள்ள cow சாதுவான பிராணி. தெரிந்துதான் இந்தப் பெயரை ஆங்கிலேயர் வைத்தனரோ என்னவோ..!

  15. தன்னுடைய இளம்வயது மனைவியையும், கைக்குழந்தையான மகனையும் விட்டுவிட்டு , தலைமறைவான நண்பரை என்ன சொல்லுவது? – இது புத்தரின் ஒரு முகம்.

    Light of Asia by Edwin Arnold- இது புத்தரின் வேறொரு முகம்.

    சாமியார் மடங்கள் இருப்பது தவறல்ல. ஆனால் நாடு முழுவதுமே சாமியார் மடமாகிவிட்டால் , எதிரிகள் நம் நாட்டை தாக்கி அழித்து, கைப்பற்றுவதுடன் சாமியார்களையும் கொன்றுவிடுவார்கள். இதுதான் புத்தரால் நடந்தது. அவரை உயர்பிறவி என்று சொல்வோரை என்ன சொல்வது?

    புத்தரின் எட்டு வழிகளை நாம் எல்லோருமே ஏற்கிறோம். ஆனால் சைவர்களால் புத்தரை பற்றி தவறான நம்பிக்கைகள் பரவியதாக சொல்வது ஒரு கருத்துப்பிழை ஆகும். புத்தரிடமே அழிவின் விதைகள் ஏராளம் இருந்தன. அது ஒரு தற்கொலைப்படை தான். வீணாக சைவத்தை பற்றி அவதூறு சொல்ல வேண்டாம்.

    பெண்களை மடத்தில் சேர்க்கக்கூடாது என்று சொன்ன உயர்பிறவி புத்தர் , சிறிது காலம் கழித்து சில பெண்களை மடத்தில் சேர்த்தது உண்மை. இதையும் மூடி மறைக்க தயாரா? இது என்ன கொள்கைத்தெளிவு?

    பெண்கள் மடத்தில் சேர்ந்து மத அறிவு பெற்றால் , ஒரு மதம் அழிந்துவிடுமா? பெண்களை ஒதுக்கிவைத்துவிட்டு , ஆண்கள் மட்டும் உண்மை அறிவை பெறமுடியாது என்பதே உண்மை. பெண்களை ஒதுக்கி வைக்கும் எதுவும் , காலப்போக்கில் அழிந்து போகும். அது எந்த மதமானாலும் சரி.

    புத்தர் ஒரு மிக கடுமையான குழப்பவாதி. அவர் உருவாக்கிய குழப்பத்தை பின்பற்றி பலரும் மேலும் குழம்பயுள்ளனர். அந்த நண்பர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பேராயிரம் பரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *