இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
 
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..
9.1 தவறுதலும், திருந்துதலும்:
மந்த்ரா வந்து அவள் மனத்தை மாற்றுவதற்கு முன், இராமன் முடிசூட்டலைப் பற்றிக் கேட்டதும் கைகேயி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள் என்று பார்த்தோம். மந்த்ரா அப்புறம் அதன் விளைவுகளைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு, கௌசல்யை மூத்த ராணி ஆகி தான் கீழ்நிலையில் வைக்கப்படுவோமோ என்ற அச்சமும் கைகேயிக்கு வரவே அவள் இரண்டு வரங்களையும் உபயோகப்படுத்தி பரதனின் முடிசூட்டலுக்கும், ராமனின் வனவாசத்திற்கும் வழி வகுத்தாள். அதைச் செய்தபோது, பரதன் பின்பற்றும் நீதிக்குட்பட்ட நேர்மையான முறைகளைப் பற்றி யோசிக்க அவள் மறந்து விட்டாள். தன் தாய் செய்திருந்த குழப்பங்களைப் பற்றி அறிந்தபோது பரதனுக்கு அது ஒரு பேரிடியாக இருந்தது. ஆதலால் அயோத்தி பெருமக்கள், தசரதன் காலமானதால் அவனை அரசனாக முடிசூட்ட வேண்டியபோது, அரசு வாரிசான மூத்த மகனாகிய ராமன் வேறு காட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதால், பரதன் அவர்கள் வேண்டுகோளை ஆணித்தரமாக மறுத்துவிட்டான். அவர்களிடம் நம் சேனையை அழைத்துக்கொண்டு காட்டிற்குச் சென்று, ராமனை வருந்தி அழைத்து அயோத்தியின் அரசனாக்குவேன் என்று சூளுரைத்தான். அதைக் கேட்ட அனைவரும் மனமகிழ்ந்து இராமரிடம் அப்படியாகவே வேண்டிக்கொள்ள, தாங்களும் அவனுடன் காட்டுக்கு வருவதாகச் சொன்னார்கள். இதை விவரிக்கும் வால்மீகி, அப்படி காட்டுக்குப் போகும் மக்களின் பெயர் வரிசையில் கைகேயின் பெயரை முதலாவதாகச் சொல்கிறார்.
கைகேயீ ச ஸு1மித்ரா ச கௌசல்யா ச யச2ஸ்வினீ|
ராமானயனஸம்ஹ்ருஷ்டா யயுர்யானேன பா4ஸ்வதா||2.83.6||
கைகேயீ ச कैकेयी च  Kaikeyi as well as, கைகேயி மற்றும்
ஸுமித்ரா ச सुमित्रा च  Sumitra also, சுமித்ரா கூட
கௌசல்யா சKausalya also, கௌசல்யாவும்
யச2ஸ்வினீ  illustrious, பெருமை வாய்ந்த
ராமானயனஸம்ஹ்ருஷ்2டாஹ்  delighted at the thought of bringing Rama back, ராமனைக் காட்டிலிருந்து திரும்பி வரவழைக்கும் யோசனையைக் கேட்டு மிகவும் மனமகிழ்ந்து
பா4ஸ்வதா  by a resplendent, கண்ணைப் பறிக்கும் அழகுடைய
யானேன  by the chariot, தேரில்
யுயுஹு went. புறப்பட்டுச் செல்கின்றனர்.

கைகேயி, சுமித்ரா, மற்றும் பெருமை வாய்ந்த கௌசல்யை மூவரும் ராமனை காட்டிலிருந்து திரும்பி வரவழைக்கும் யோசனையைக் கேட்டு மிகவும் மனமகிழ்ந்து கண்ணைப் பறிக்கும் அழகுடைய ஒரு தேரில் புறப்பட்டுச் செல்கின்றனர். இராமாயணக் கதாபாத்திரங்கள் அனைவரிலுமே கைகேயிதான் மிகவும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளாள். ஆனாலும் பரதன் வந்து அவளது தவறான செய்கைகளின் விளைவுகளை விவரித்து அவளை நன்கு உணரும்படி செய்ததும், அவளது மனமாற்றம் வெகு வேகமாக நிகழ்கிறது. எவருக்குமே தவறு இழைக்க வாய்ப்பு இருக்கிறது; ஆனால் கைகேயியைப் போல் தன் தவறை உணர்ந்து அதற்கு மாற்றம் தேடும் மனம் என்பதும் சிலரிடம்தான் உள்ளது.

9.2 பாவத்தினால் விளையும் பதவி:

சொன்னபடியே பரதனும் அயோத்திப் படைகளுடனும், அவ்வூர் மக்களுடனும் இராமரைப் பார்க்க காட்டினுள் சென்றான். சித்திரக்கூட குன்றுப் பகுதியில் அவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்பதை பரத்வாஜர் மூலம் அறிகிறான். அவ்வளவு மக்கள் அங்கு சென்றதினால் அந்தப் பகுதியின் அமைதியே கலைந்தது. அதனால் இராமர், லக்ஷ்மணனை ஒரு உயர்ந்த மரத்தில் ஏறி அதன் காரணத்தை அறியச் சொல்கிறார். அப்படிப் பார்த்தபோது அயோத்தியின் படையே அங்கு திரண்டு வந்துகொண்டிருப்பதைத் தெரிந்து கொள்கிறான். பரதன்தான் படை திரட்டி வந்து, காட்டில் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொன்றுவிட்டு, அயோத்தியில் தனது ஆட்சியை நிலைநிறுத்தும் சதியில் இறங்கிவிட்டானோ என்ற சந்தேகம் லக்ஷ்மணனுக்கு வருகிறது. அதனால் கீழே அவர்கள் மூட்டி வைத்திருக்கும் நெருப்பினால் வரும் புகையை வைத்துக்கொண்டு, வருபவர்கள் தங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்து, இராமரைப் பார்த்து புகையை மறைப்பதற்காக தீயை உடனே அணைக்கச் சொல்கிறான். மேலும் அவன் தானே பரதனைக் கொன்று, இராமருக்கு உரித்தான ஆட்சியைப் பிடித்துக் கொடுப்பதாகவும் சொல்கிறான். ஆனால் இராமருக்கோ அனைவரும் வருவது வேறு ஏதோ காரணத்திற்கு என்று மனதில் படுகிறது. அவருக்கு பரதனின் நேர்மையில் சிறிதுகூட சந்தேகமே இல்லை. அதுவும் சகோதரனைக் கொல்வது என்பதும் இராமருக்கு உடன்பாடு அல்ல. ஆதனால் அவர் லக்ஷ்மணனிடம் சகோதரனைக் கொல்லும் பாவச் செயலினால் அடையப்பெறும் அரசுரிமையை தான் விஷம் கலந்த உணவைத் தவிர்ப்பதுபோல் மறுப்பதாகவும் சொன்னார்.

யத்3த்4ரவ்யம் பா3ந்த4வானாம் வா மித்1ராணாம் வாக்ஷயே ப4வேத்|

நாஹம் தத்ப்1ரதி1க்3ருஹ்ணீயாம் ப4க்ஷான்விஷக்ருதானிவ||2.97.4||

யத் த்4ரவ்யம் whichever wealth, எந்த செல்வத்தையும்

பா3ந்த4வானாம் வா relations’ or, உறவினர்களையோ

மித்ராணாம் வா or friends’, நண்பர்களையோ

க்ஷ்யே ப4வேத் is in decline, மோசமான நிலையில்

தத் that one, அது

அஹம் I,

விஷக்ருதான் prepared with poison, நஞ்சு கலந்த

ப4க்ஷான் like eatables, உணவைப்போல

ந ப்ரதிக்3ருஹ்ணீயாம் I shall not accept, ஒத்துக்கொள்ள மாட்டேன்.

அவர்களது மோசமான நிலையில் உறவினர்களையோ, நண்பர்களையோ கொன்று, அதனால் அடையப்பெறும் செல்வத்தை நான் நஞ்சு கலந்த உணவைப்போல் தொடமாட்டேன். காரணம் வேறாக இருந்தாலும், இதேபோல பகவத் கீதையிலும் (2: 5) அருச்சுனனும் என் ஆசிரியர், மற்றும் பெரியோர்களின் ரத்தத்தின் பெருக்கால் வரும் ராஜ்யத்தை விரும்பமாட்டேன் என்று கிருஷ்ணரிடம் சொல்கிறான்.

9.3 இருப்பதை விட்டு பறப்பதைப் பார்ப்பதா?

ஆனால் பரதனோ இராமரை அயோத்திக்குத் திரும்பி வந்து ஆட்சியில் அமரச் சொல்கிறான். அவனுடன் வந்த அமைச்சர்களும், பொது மக்களும் அதேபோல இராமனிடம் முறையிடுகின்றனர். தசரதரின் அமைச்சர்களில் ஒருவரான ஜாபாலி, இராமர் அயோத்திக்குத் திரும்பி வரவேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கி நீண்ட வாதம் ஒன்றை எடுத்துவைத்தார். அரசராயிருந்த தசரதரோ இறந்து போய்விட்டார்; அதனால் அவர் தந்த வாக்கு, அதைக் காக்க வேண்டும் என்பதெல்லாம் கடந்துபோன விஷயம் போலாயிற்று. அயோத்திக்கு இப்போது அரசர் வேண்டும் என்பதே முக்கியம். ஆதலால் நடந்ததை விட்டுவிட்டு, இனி நடக்கவேண்டியதை மட்டும் பார்த்தால் போதும் என்பதே அவரது வாதம். அதன்படி உண்மை, கெளரவம் என்ற கொள்கைப் பிடிப்புகளை விட, தயாராக உள்ள அரசுரிமை வாய்ப்பை விடாதிருப்பதே நல்லது என்று அவர் இராமருக்குச் சொல்கிறார்.

ஸ நாஸ்தி பரமித்யேவ குரு பு3த்தி4ம் மஹாமதே|

ப்ரத்யக்ஷம் யத்ததா3திஷ்ட பரோக்ஷம் ப்ருஷ்டதஹ குரு||2.108.17||

மஹாமதே O high-minded one, உயர்ந்த குணங்கள் கொண்டவரே!

ஸஹ such of you, உன்னைப் போல

பரம் the next world, பர லோகம்

நாஸ்தி is not there, இல்லாதது

இத்யேவ like that, அதைப்போல

புத்திம் thinking, யோசித்து कुरु do, செய்

யத் whatever, எதுவானது

ப்ரத்யஷம் is evident, தெளிவாக இருப்பது

தத் that one, அதை

ஆதிஷ்ட you practice, பற்றிக் கொள்

பரோஷம் what is not evident, தெளிவாக இல்லாதது

ப்ருஷ்டதஹ குரு turn your back, விட்டுவிடு. உயர்ந்த குணங்கள் கொண்டவரே!

இன்னுமொரு உலகம் இருக்கிறதே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காமல், இல்லாததைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் இவ்வுலகில் எவ்விதம் வாழ வேண்டுமோ அதன்படி வாழவேண்டும். ஜாபாலி சொன்ன இந்த மாதிரியான வாதங்கள் எல்லாம் பொதுவாக எல்லோரும் சொல்வதே. அவர் சொல்வதுபோல தொலைநோக்குச் சிந்தனை செய்யாது குறுகிய காலத்துப் பயனை அடைவது என்பது நல்ல ஒழுக்கம் கொண்ட குணவானின் செயல் அல்ல. நீதி நேர்மை வழிகளை ஒரேயடியாக ஒதுக்கும் ஜாபாலியின் வாதம் இராமருக்குச் சற்றே கோபத்தை வரவழைத்தது. அதனால் அவர் ஜாபாலியின் வேண்டுகோளை தயக்கம் ஏதுமின்றி நிராகரித்தார்.

9.4 உண்மை ஒன்றே என்றும் உள்ளது:

ஜாபாலியின் தவறான வாதம் இராமரைச் சற்றே கொதித்து எழும்படி செய்துவிட்டது. அதை மறுத்து இராமர் வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுக்கும் பகுதியை மீண்டும் மீண்டும் படிப்பது அறிவாளிகள் யாவருக்கும் பயன் தரும். தசரதருக்கும், கைகேயிக்கும் தான் பதினான்கு வருடங்கள் வன வாசம் செய்வதாக வாக்குக் கொடுத்தாயிற்று. அதை அவர்கள் கேட்டதால் இல்லாமல், என்னால் தன்னிச்சையாகத்தான் கொடுக்கப்பட்டது. அப்படி மனப்பூர்வமாகக் கொடுத்து தந்தையின் வாக்கையும் காப்பாற்றி, அவரது கௌரவத்தையும் நிலைநாட்டியதில் தனக்கு மிக்க சந்தோஷமே. இப்போது ஜாபாலி சொல்கிறபடி செய்து, அயோத்திக்குத் திரும்பிச் சென்று, அரசாட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், அது தனது வார்த்தைகளைத் தானே மதிக்காமல் உண்மைக்குப் புறம்பாக நடந்துகொள்வதாக ஆகும் என்று விவரமாக இராமர் தன் நிலையைத் தெளிவு படுத்தினார்.

ஸத்யமேவேஷ்வரோ லோகே ஸத்யம் பத்3மாஸ்ரிதா ஸதா|

ஸத்யமூலானி ஸர்வாணி ஸத்யான்னாஸ்தி பரம் பதம் ||2.109.13||

லோகே in this world,இவ்வுலகில்

ஸத்யமேவ truth only, உண்மை ஒன்றே

ஈஷ்வரஹ is the god(supporter of the world ), இறைவன்

பத்மா goddess of wealth, செல்வத்தின் இருப்பிடம்

ஸதா always, எப்போதும்

ஸத்யம் in truth, உண்மையிலேயே

ஆஸ்ரிதா seeks refuge, நிலைத்து நிற்கிறது

ஸர்வாணி all beings, சகல சீவராசிகளும்

ஸத்யமூலானி truth as basis, உண்மையே ஆதாரமாக

ஸத்யாத் more than truth, உண்மைக்கு மேலாக

பரம் supreme, மிக்க

பதம் higher state, உயர்ந்த நிலை

நாஸ்தி there is nothing, எதுவும் இல்லை.

உண்மை ஒன்றே உலகை உய்விக்கும் சக்தி. (ஊக்கத்துடன் உழைப்பவனுக்குச்) செல்வம் சேர்கிறது என்றால், அந்த ஊக்கத்தைக் கொடுப்பது உண்மையாய் செய்யப்படும் கடமையே. ஆக எல்லாவிதச் செயல்களுக்கும் உண்மையாய் இருப்பதே ஆதாரமாக இருக்கிறது. உண்மைக்குப் புறம்பான உயரிய சக்தி எதுவும் இல்லை. உடன் தேவைக்கு என்பதால் பலர் நியாயமான, நேர்வழியை விட்டுவிட்டு குறுக்கு வழிகளைக் கையாள்கின்றனர். இதற்கு ஆங்கிலத்தில் “expediency” என்று சொல்வார்கள். ராஜாங்க ரீதியில் சில சமயம் இதற்கு அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரை, நேர்வழியில் சென்றால் அதன் பலன்கள் எப்படி இருக்கும் என்று தீர்மானமாகச் சொல்லமுடியாததால், இப்படிச் செய்வதை அவர்கள் நியாயப்படுத்துவார்கள். அதுதான் ஊழலுக்கும் அஸ்திவாரம் போடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இராமரோ நியாயமான, நிரந்தரமாய் எப்போதும் உள்ள உண்மை நிலை ஒன்றையே ஆதாரமாய்க் கொண்ட வழிகளில் உறுதியாய் நிற்பவர். அவரைப் பொறுத்தவரை உண்மை ஒன்றே இறைவனாகும்; ஏனென்றால் இறைவன் ஒன்றே உண்மையுமாகும். அந்த தர்மத்தின் வழி என்பதே உள்ளத்தில் உள்ள உண்மையின் வெளிப்பாடு ஆகும். அதைச் செய்வதே ஒருவனது கடமையும் ஆகும். எவனொருவன் உண்மை வழி நடக்கவில்லையோ அவன் தனது கடமையையும் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். ஆக உண்மையாய் இருந்து தன் கடமையைச் செய்வதே வாழும் வழிகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த வழி. அது ஒன்றே வாழ்வில் ஒருவனை உய்வித்து இறை எனும் தத்துவத்தையும் உணரவைக்கும்.

9.5 செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கமுடியுமா?

தசரதர் உட்பட பல அயோத்தி அரசர்களுக்கு மதம், நீதி சம்பந்தமான விஷயங்களில் வசிஷ்ட முனிவர் ஆலோசகராக இருந்தார். அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர், இராமர் அயோத்தி திரும்புவதற்கான காரணங்களை எடுத்துக் கூறினார். இப்போது தான் திரும்பினால், தசரதர் கைகேயிக்குக் கொடுத்த வாக்கை மீறியது போலாகும் என்றும், அது தந்தை தனக்கு வாழ்நாள் முழுதும் அன்போடு செய்த கடமையை நன்றி மறப்பது போலாகும் என்றும், தாய் தந்தைக்கு பிள்ளைகள் என்றும் கடமைப் பட்டவர்கள் என்றும் இராமர் வசிஷ்டரிடம் சொன்னார்.

யன்மாதாபிதரௌ வ்ருத்தம் தனயே குருதஸ்ஸதா3|

ந ஸுப்ரதிகரம் தத்து மாத்ரா பித்ரா ச யத்க்ருதம்||2.111.9||

மாதா பிதரௌ parents, பெற்றோர்கள்

தனயே in relation to son, பிள்ளைகளுக்காக

ஸதா4  always, எப்போதும்

யத் what, என்ன

வ்ருத்தம் course of action, பணிகளில்

குருதஹ perform, உருவாக்கும்

மாத்ரா by mother, தாயால்

பித்ரா ச and by father, தந்தையால்

யத் what, என்ன

க்ருதம் was done, செய்யப்பட்டது

தத்து all that, அதையெல்லாம்

ந ஸுப்ரதிகரம் cannot easily be repaid, தீர்க்கவே முடியாது.

பிள்ளைகளை உருவாக்கி வளர்க்கும் பணிகளில் பெற்றோர்கள் காட்டும் பாசத்தினாலும், அக்கறையினாலும் அவர்களுக்குப் படும் கடனை பிள்ளைகள் தீர்க்கவே முடியாது. நற்குணங்களில் தலையாய ஒன்று நன்றி மறவாது இருப்பது. அதாவது தனக்கு ஒருவரிடமிருந்து கிடைத்ததற்குக் குறையாமல் அவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். குழந்தையாய் இருக்கும்போது, தனக்குத்தானே ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அப்போது தன் பெற்றோர்கள் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், குழந்தைக்கு என்று எல்லாவிதமான சேவையையும் அன்புடன் செய்கின்றனர். ஆதலால் வளர்ந்தபின் தன் பெற்றோர்களுக்கு அவன் மிக்க நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். இராமரை பொறுத்தவரை அப்போதும் கூட ஒருவன் தன் பெற்றோர்களுக்கு உரிய கடனை முழுவதும் செலுத்த முடியாது.

9.6 வருத்தியவரையும் வருத்தாதே

இராமரும் பரதனும் மேலும் பேசிக்கொண்டவைகளைக் கேட்ட அமைச்சர்களும், அறிஞர்களும், கடைசியில் பரதனையே அயோத்திக்குத் திரும்பி ஆட்சியில் அமரச் சொன்னார்கள். இராமர் பதினான்கு வருடங்கள் சென்றபின் கட்டாயம் அயோத்தி திரும்பி வந்து பொறுப்பு ஏற்பார் என்பது நிச்சயமானால், அதுவரை இராமரது பிரதிநிதியாக மட்டுமே தான் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவதாகச் சொன்னான். மேலும் தான் அயோத்தியில் இருந்தாலும், காட்டில் இராமர் இருப்பது போலவே தானும் வன வாழ்க்கை வாழப் போவதாகவும், ஒருவேளை இராமர் வன வாசம் முடிந்து திரும்பி வரவில்லை என்றால் மேலும் ஒருநாள்கூட காத்திருக்காது தீக்குளித்து விடுவதாகவும் எச்சரிக்கை செய்தான். வன வாசம் முடிந்ததும் தான் நிச்சயம் திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக இராமர் வாக்குறுதி கொடுத்தார். பரதன் நன்கு ஆள்வான் என்பதில் சந்தேகம் இல்லாத இராமருக்கு, அவன் கைகேயிடம் எப்படி நடந்துகொள்வானோ என்ற பயம் இருந்தது. அதனால் அவர் பரதன் புறப்படுவதற்கு முன், என்னதான் சங்கடங்களை கைகேயி விளைவித்திருந்தாலும், அவளிடம் மென்மையாக நடந்துகொள்ளுமாறு அவனுக்கு அறிவுறுத்துகிறார்.

மாதரம் ரக்ஷ கைகேயீ |

மா ரோஷம் குரு தாம் ப்ரதி || 2.112.27 ||

மாதரம் mother, தாய்

கைகேயீம் Kaikeyi, கைகேயியை

ரக்ஷ protect, காப்பாற்று

தாம் ப்ரதி about her, அவளிடம்

ரோஷம் anger, கோபம்

மா குரு do not show, காட்டாதே.

(பரதனே) தாய் கைகேயியை நன்றாகக் கவனித்துக்கொள். அவளிடம் கோபம் கொள்ளாதே. நமக்குத் தீமை விளைவித்தவரை மன்னிப்பது என்பது எளிதல்ல. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருப்பிக் கொடுப்பது என்பதுதான் நாம் சாதாரணமாகக் காண்பது. மனிதர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்துகொண்ட இராமர் கைகேயியைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பரதனிடம் சொல்கிறார்.

(தொடரும்)

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9”

  1. கடந்த ஒரு வாரமாக இந்த வலைத்தளத்தை பார்வையிட எனக்கு இயலவில்லை. இப்போது தான் படித்தேன். மகிழ்ந்தேன். அற்புதமான தொகுப்புக்கு நன்றி. உங்கள் பணி மேலும் தொடரட்டும். எங்கும் இனிமை பெருகட்டும். சிறந்த தொடரை வழங்கும் தமிழ் இந்துவுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *