எப்போதெல்லாம், தனக்கும் திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக உருகுவது கருணாநிதிக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்போது கடைசியாக அவர் மீண்டும் எடுத்துள்ள ஆயுதம் தான் ‘டெசோ’.
இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது 2009 ல் ராஜபக்ஷே அரசு கடுமையான ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, கண் மூடி அமைதி காத்த மகானுபாவரான கருணாநிதி, இப்போது ‘தமிழ் ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்; அவர்களது போராட்டத்தை முன்னெடுப்போம்; தமிழ் ஈழம் மலரச் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, 1985 ல் உருவாக்கப்பட்ட டெசோ அமைப்பை மீண்டும் துவங்கி இருக்கிறார். கேப்பையில் நெய் வடிகிறது என்று அவர் சொன்ன போதெல்லாம் உருகிய தொண்டர்கள் கூட, இப்போது நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்.
இப்போது டெசோ ஆரம்பிக்க என்ன தேவை வந்தது? அதற்கு முன், ‘டெசோ’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
1984 – 85 காலகட்டத்தில் பிரதமராக இந்திராவும் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் இருந்தனர். அப்போது இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடிய எல்டிடிஈ, டெலோ போன்ற குழுக்களுக்கு தமிழகத்தில் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. 1984 ல் இந்திராவின் மறைவை அடுத்து ராஜீவ் பிரதமரான போது இந்தியாவின் இலங்கை அணுகுமுறை மாற்றம் கண்டது. அப்போது தமிழகத்தில் ஈழப் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அந்தக் காலகட்டத்தில் திமுக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. அதிமுகவின் அசுர சக்தி முன்பு பெட்டிப்பாம்பாகக் கிடந்த திமுகவுக்கு, இந்த விவகாரம் லட்டாகக் கிடைத்தது. அப்போது தான் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organaisataion – TESO) அமைப்பை கருணாநிதி தோற்றுவித்தார். திமுக, திக (வீரமணி), தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் (பழ நெடுமாறன்), தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் (அய்யண்ணன் அம்பலம்) ஆகிய அமைப்புகள் அதன் உறுப்பினர்களாக இருந்தன. 1985, மே 13 ல் டெசோ துவங்கப்பட்டது. இதன் கொள்கைகளாக ஐந்து முக்கிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன (காண்க: பெட்டிச் செய்தி: 1)
மாநிலம் முழுவதும் டெசோ பேரணிகளை நடத்திய கருணா நிதி, அதில் இந்த ஐந்து நோக்கங்களையும் உறுதிமொழியாக ஏற்கச் செய்வது வழக்கமாக இருந்தது. அதன் உச்சகட்டமாக, மதுரையில் 1985 , மே 4 -ல் பிரமாண்டமான மாண்டு நடத்தப்பட்டது.
அதில் அகில இந்தியத் தலைவர்கள் பலர் பங்கேற்று, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தெலுங்கு தேசத் தலைவர் என்.டி.ராமராவ், பாஜக தலைவர் வாஜ்பாய், அசாம் கணபரிஷத் தலைவர் தினேஷ் கோஸ்வாமி, லோக்தளத் தலைவர் எச்.எல்.பகுகுணா, காங்கிரஸ் -எஸ் தலைவர் உன்னிகிருஷ்ணன், இந்துஸ்தான் முன்னணி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ, சி.பி.எம் தலைவர்கள் பலர் இதில் பங்கேற்றனர். இது இலங்கைவாழ் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு பெரும் உந்துதலாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.
இந்த மாநாட்டில், இலங்கையிலிருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ( எல்டிடிஈ ), டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புரோடெக் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். அப்போதே ஈழத்தில் எல்டிடிஈ அமைப்பின் கரம் தான் ஓங்கி இருந்தது. அப்போது சகோதர அமைப்புகளைக் களை எடுக்கும் பணியை அவர்கள் துவங்கி இருக்கவில்லை.
ஆயினும், அமெரிக்காவில் இருந்து அவசரமாகத் திரும்பிய எம்.ஜி.ஆர், ராஜீவுடன் பேசி போராளிகள் மீதான தடையை நீர்த்துப் போகச் செய்தார். தவிர அவரே இலங்கைப் போராளிகளுக்கு தார்மிக உதவியும் செய்தார். எனவே, கருணாநிதியின் டெசோ திட்டம் செல்லுபடியாகவில்லை. இதை வைத்து தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக மக்களைத் திரட்ட முயன்ற கருணாநிதி தோல்வியே கண்டார். எனினும், அவரது இருப்பை நிலைநாட்டிக்கொள்ள டெசோ ஒரு வாய்ப்பளித்தது எனலாம்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நேரிட்ட குழப்பங்களால் 1989ல் மீண்டும் முதல்வரான கருணாநிதி, ஈழப் போராளிகளிடையிலான சண்டையால் வெறுத்துப் போனார்; அப்போது ‘டெசோ’வும் கலைக்கப்பட்டது. மத்தியில் ஆட்சியில் இருந்த ராஜீவைப் பகைத்துக் கொள்ளக் கூடாதல்லவா? பிறகு டெசோ அமைப்பையே அவர் மறந்தும் போனார்
அதன்பிறகு தமிழக அரசியல் வானில் எவ்வளவோ மாற்றங்கள். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன; மத்திய ஆட்சியிலும் இரு கட்சிகளும் பங்கேற்றன. அப்போதெல்லாம், இலங்கைத் தமிழர் நலன் குறித்து திமுக தலைவருக்கு கிஞ்சித்தும் நினைவு வரவில்லை. உச்சகட்டமாக, 2009 ல் விடுதலைப்புலிகள் சுற்றிவளைக்கப்பட்டு முல்லைத்தீவிலும் ஆனையிறவிலும் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அதுகண்டு தமிழகமே கொந்தளித்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெற்ற பல்லாயிரம் கோடி லஞ்சத்துக்கு நன்றிக் கடனாக (அச்சம்?) அமைதி காத்தது திமுக. அப்போது திமுகவின் ஆதரவுடன் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மன்னுமோகன் ஆட்சி நிலைத்திருந்தது. கருணாநிதி நினைத்திருந்தால் ஒரே மிரட்டலில் (அமைச்சர் பதவிக்கு மட்டும் தான் மிரட்ட வேண்டுமா?) இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்துமாறு இந்திய அரசை நிர்பந்தித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம், மூன்று மணி நேர உண்ணாவிரதமும், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியதும் மட்டுமே.
‘டெசோ’வின் (1985) நோக்கங்கள்:
1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு.
2. இலங்கைத் தமிழருக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது.
3. போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது.
4. தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருப்பது.
5. இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய, மாநில அரசுகளின் அடக்கு முறைகளை இன்முகத்துடன் எதிர்கொள்வது.
தாய் மண்ணில் ஆட்சி செய்த தமிழினத் தலைவர் உதவுவார் என்று கடைசி வரை எதிர்பார்த்து ஏமாந்து லட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஈழத்தில் செத்தார்கள். இங்கோ, கூட்டணியை உறுதிப்படுத்தி, ‘இந்தியாவின் மருமகளுக்கு’ பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. இலங்கைத் தமிழருக்காக தன்னை தீயிட்டு மாய்த்துக் கொண்ட முத்துக்குமாரின் மரணத்தை கேலி பேசிய கருணாநிதி, விடுதலைப் புலிகளை ஆதரித்த சீமானை கைது செய்த கருணாநிதிக்கு, இப்போது திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது.
ஏனெனில் இப்போது, முன்னெப்போதும் காணாத படுதோல்வியில் வீழ்ந்து, மக்கள் நம்பிக்கையையும் தொண்டர்களின் ஆதரவையும் இழந்து தவிக்கும் கருணாநிதிக்கு எப்படியாவது மீள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக புதிய மொந்தையில் அதே ‘டெசோ’ என்ற பழைய கள்ளை ஊற்றிக் கொடுக்கிறார். ஆனால், இம்முறை அவருக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 30 ல் சென்னையில் கருணாநிதி தலைமையில் கூடிய வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீர பாண்டியன் ஆகியோர், மீண்டும் டெசோ துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். மாறியுள்ள உலகச் சூழலில் தமிழ் ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று முழங்கி இருக்கிறார்கள் இவர்கள். இதைப் பார்த்து, முள்வேலி முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் (26.04.2012) கருணாநிதி, ”தனித் தமிழ் ஈழம் காணாமல் இந்த உலகை விட்டுப் போக மாட்டேன்” என்று சபதம் செய்திருக்கிறார்.
இதற்கு இலங்கை அதிபரின் தம்பி கோத்தபயா பதிலடி கொடுத்திருக்கிறார். தனி ஈழம் வேண்டுமானால் தமிழ்நாட்டில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறி இருப்பது மமதையாகத் தான் தெரிகிறது. என்ன செய்வது, கருணாநிதி போன்ற புல்லுருவிகளைக் காணும் எவருக்கும் நம் நாட்டைப் பற்றிய கீழ்த்தரமான எண்ணம் தானே ஏற்படும்?
துணிவு இருக்கிறதா?
“தமிழ் ஈழம் அமைக்க ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று டெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதை முதலில், தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐ.மு.கூட்டணித்தலைவி சோனியாவிடம் துணிவுடன் கூறுவாரா கருணாநிதி? பத்திரிகைகள் தன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காக நடத்தும் நாடகமாக டெசோ-வை அவர் தொடர்ந்து பயன்படுத்தினால், தீராத அவச்சொல்லுக்கு அவர் ஆளாக வேண்டிவரும்.
ஒருவேளை மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து கழன்றுகொள்ள கருணாநிதி நடத்தும் ஓரங்க நாடகமாக இது இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். அத்தனை ‘பகுத்தறிவு’ அற்றவரல்ல கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனது குடுமி சிக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விரோதித்துக்கொள்ள அவருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி படும் பாட்டைப் பார்த்த பின்னரும் அவரது ‘பகுத்தறிவு’ வேலை செய்யாதா?
இலங்கைப் போரின்போது, ”போர் என்றால் அப்பாவிகள் சாவது சகஜாமனது தான் ” என்று அதிமுக தலைவி ஜெயலலிதா கூறியதை மறக்க முடியாது. அதே போல, ”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்ற கருணாநிதியின் புகழ் பெற்ற வாக்கியத்தையும் யாரும் மறக்க மாட்டார்கள். அவரது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தால் நிறுத்தப்பட்ட (?) இலங்கைப் போர் மீண்டும் துவங்கியபோது அவர் கூறிய விளக்கம் இது.
இப்போது ”ராஜபக்ஷே நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்; அவரை நம்ப முடியாது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார், கருணாநிதி. இவர் மட்டும் என்னவாம்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைக் கேட்டால் கருணாநிதியின் ‘ஆபத் தர்மம்’ குறித்து மூன்று மணிநேரம் பேசுவார். அதைக் கேட்க உங்களுக்கு பொறுமை இருக்கிறதா? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
மேலே உள்ள கட்டுரையில் , கருணாநிதி மீண்டும் 1989- லே முதல்வர் ஆனபோது என்று இருக்க வேண்டும். ஆனால் 1987- என்று தவறுதலாக உள்ளது.
அதனைப்போலவே, 2009- லே ராஜபக்ஷே இலங்கை தமிழர்களை கொன்று குவித்தார் என்பதே சரி. தவறுதலாக 1999- என்று உள்ளது. வாசகர்கள் திருத்தி படித்து கொள்ள வேண்டுகிறேன்.
கருணாநிதியின் இந்த அவல நாடகம் இனி எடுபடாது. அவர் கட்சி தொண்டர்களே , வழித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். ஒழுங்காக , ஒன்று ஸ்டாலினிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு இவர் விலக வேண்டும் அல்லது கட்சி உடைந்து விஜயகாந்த், வைகோ என்று பிற குழுக்களை நாடி ஓடிவிடுவார்கள். குதிரைகள் ஓடியபிறகு லாயத்தை பூட்டி என்ன பயன் ?
அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷவுக்கு, ஆயுத உதவி உட்பட, பல உதவிகளை செய்தது சோனியா தான். அந்த சோனியாவுக்கு சொம்பு தூக்கிய கருணாவுக்கு வரும் பார்லிமெண்டு தேர்தலிலும் மக்கள் வைப்பார்கள் ஆப்பு. சொம்பு கருணாநிதியின் அத்தியாயம் முடிந்தது. ஏனெனில் அது ஒரு துரோக அத்தியாயம்.
(1) “இலங்கைப் போரின்போது, ”போர் என்றால் அப்பாவிகள் சாவது சகஜாமனது தான் ” என்று அதிமுக தலைவி ஜெயலலிதா கூறியதை மறக்க முடியாது.”
ஜெயலலிதா கூறியது மிகவும் சரி. பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் எந்த போரையும் எந்த
நாடும் புரிய முடியாது. நம் அனைவர்க்கும் தெரிந்த எளிமையான உண்மைதான்.
(2)”இதற்கு இலங்கை அதிபரின் தம்பி கோத்தபயா பதிலடி கொடுத்திருக்கிறார். தனி ஈழம் வேண்டுமானால் தமிழ்நாட்டில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறி இருப்பது மமதையாகத் தான் தெரிகிறது. ”
இது மமதை அல்ல. இலங்கை மீதான தேசபக்தி. தீவிரவாத குழுவை பூண்டோடு ஒழுத்துக் கட்டிய பின்
ஒன்றுக்கும் உதவாத டம்மி-பீஸ்களின் சத்தத்தைக் கண்டு அஞ்சாதது மட்டுமல்ல, உதாசீன படுத்துவது.
அவர் பேசியது கண்டிப்பாக சரிதான்.
what has TESO done after he re-activated the TESO. without action talking is complete waste.
வருடங்களை குறிப்பிடும் போது – நிறைய பிழைகள் உள்ளன. திருத்துங்கள். கட்டுரை கேலிக்குரியதாக மாறிவிடும். (உ.ம்) 1999 என்பது 2009 ஆக இருக்க வேண்டும். 1987 என்பது 1989 ஆக இருக்க வேண்டும்.
It is a known fact that mu.ka is a traitor of tamils.
But JJ also has consistenetly opposed the LTTE. She even sent vaiko to prison for speaking in favour of LTTE. Only during the 2009 lok sabha elections, she did an U turn by supporting a separate tamil nation.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நேரிட்ட குழப்பங்களால் 1987 ல் மீண்டும் முதல்வரான கருணாநிதி, ஈழப் போராளிகளிடையிலான சண்டையால் வெறுத்துப் போனார்
Mu.Ka came back to power in 1989 & not in 1987.
Balaji,
இதற்கு இலங்கை அதிபரின் தம்பி கோத்தபயா பதிலடி கொடுத்திருக்கிறார். தனி ஈழம் வேண்டுமானால் தமிழ்நாட்டில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறி இருப்பது மமதையாகத் தான் தெரிகிறது. ”
இது மமதை அல்ல.
Whichever way you look at it, it is sheer arraogance. Rajapakshe & his ilk have butchered helpless tamilians & are still torturing them in camps. They should be brought to book.
இந்து அன்பர்களே
எனது கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன். 1958 இல் இனக்கலவரத்தில் பாணந்துறையில் சிவாச்சாரியார் தலையில் தாக்கப்பட்டு கொதிக்கும் தாரில் போட்டு படுகொலை செய்யபட்டார்.தமிழர் வாழும் வட கிழக்கு மாகாணங்களில் இன்று சிங்களக்குடியேற்றம் நடைபெறுகிறது.எங்கெங்கு அரச மரம் காணப்படுகிறதோ அங்கு புத்தர் வந்து விடுகிறார்.எமது சிவபூமி புத்த பூமியாகி கொண்டிருக்கிறது.இதற்க்கு அரசுக்கு கொடி பிடிக்கும் தமிழர் வேறு. யுத்த குற்றவாளிகள் உலக உலா வருகிறார்கள். ஈழதமிழர்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி கிறிஸ்தவ போதகர்கள் செய்யும் மதமாற்றம் ஒருபக்கம். இப்படியாக ஒரு சமூகம் மெதுவாக அழிக்கப்பட்டு கொண்டு வருகிறது யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை போலும்.யுத்தத்தில் சிக்குப்பட்டு அப்பாவிகள் சாவது வேறு. இனப்படுகொலை என்பது வேறு.பங்கரில் உள்ளவர்களை புல்டோசர்களால் மூடி அழிப்பது வேறு.1958 1960 1977 1981 1983 —–தொடர்ந்து இனக்கலவரங்களில் தமிழர்கள் சாரி சாரியாக கொல்லப்பட்டு வருவது வேறு.இதனைப்புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் தமிழர்கள் டெசோ போன்ற நாஸ்திக வாதிகளின் பின்னால் தமிழ் மக்கள் திரள்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். அத்துடன் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்து தமிழீழம் அமைய பாடு பட வேண்டும்.அப்போது தான் இந்திய நலன் காக்கப்படும்.அத்துடன் இந்து தேசம் உருவாகவும் வழி பிறக்கும். இதற்க்கு பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை எதிர்த்து குற்றம் புரிந்த இலங்கை அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே சிறந்த வழி.தமிழர்களுக்கு ஒரே வேண்டுகோள். டெசோ வை நிராகரிக்கவேண்டும். ஈழத்தை நாம் மீண்டும் சிவபூமியாக்க பாடு படுவோம். இதுவே ஈழத்தில் மறைந்த எமது அப்பாவி ஆன்மாக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடனாகும். நன்றி.
// உச்சகட்டமாக, 1999 ல் விடுதலைப்புலிகள் சுற்றிவளைக்கப்பட்டு முல்லைத்தீவிலும் ஆனையிறவிலும் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். //
என்னுடைய பின்னூட்டங்களை மட்டுறுத்தினாலும் ஒரு புண்ணாக்கும் இல்லை எனக்கு. ஆனால் வருடம் 2009 என்று மட்டுமாவது ஆசிரியர்குழு மாற்றட்டும்..
கட்டுரையின் உட்கருத்தில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் சில செய்திகள் வெறுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக “தமிழீழம் வேண்டுமானால் தமிழ் நாட்டில் அமைத்துக் கொள்ளட்டும்” என்ற இலங்கை தலைவரின் கருத்து நியாயமானது. எந்த நாட்டிலும் இதுபோன்ற பிரிவினை வாதத்தை அந்த நாட்டின் குடிமகன் இல்லாத வேற்று நாட்டினர் சொல்லும்போது இந்த பதிலை நாமும் கூட சொல்லத்தான் செய்வோம். ஆனால் தன் பதவி ஆட்டம் கண்டபோதெல்லாம் பூதம் கிளப்ப கருணாநிதி சில விஷயங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். அவற்றில் இதுவும் ஒன்று. தமிழ் உணர்வு, தமிழ் ரத்தம், இந்தி எதிர்ப்பு, பார்ப்பன சதி போன்ற பல விஷயங்கள் இவர் கைவசம் இருக்கின்றன. அரசியலில் உள்ளவர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம். அதில் ஒரு சாரார் உயர்ந்த கல்வித் தகுதியும், உலக வரலாற்று அறிவும், உள் நாட்டு அரசியல் விஷயங்களில் தெளிவான சிந்தனையும் உடையவர்கள். அவர்கள் எப்போதும் நிதானமும், நேர்மையும் உடையவர்களாக இருப்பார்கள். மற்றொரு சாரார், மக்களின், குறிப்பாக கல்வி அறிவு குறைந்த, உணர்வு பூர்வமான அடிமட்டத் தொண்டர்களின் கை நாடியைப் பிடித்துப் பார்த்து, எதைச் சொன்னால், எதைச் செய்தால் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பலாம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு அரசியல் நடத்துவார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் திரு கருணாநிதி. ஆகையால் இவர் சொல்வதையெல்லாம் அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொள்ளவோ, ஏற்றுக் கொள்வதோ தேவை இல்லை. இப்போதெல்லாம் மக்கள் தெளிவான சிந்தனையும், எது தவறு, எது சரி என்பதையெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால் இப்போது ஜாலங்களும், ஏமாற்று வித்தைகளும் மக்களின் மனங்களை திசை திருப்பிவிட முடியாது. மக்கள் தெளிவாக இருப்பது போல் மூத்த தலைவர்களும் தெளிவாக இருப்பதே நாட்டுக்கு நல்லது.
தகவல் பிழைகளை சுட்டிக் காட்டிய நண்பர்கள் அத்விகா, சஞ்சய், மணி உள்ளிட்ட நண்பர்களுக்கு,
நன்றி.
நினைவில் இருந்து கட்டுரை எழுதுகையில் அதை சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்பது இப்போது புரிந்திருக்கிறது. இலங்கை உள்நாட்டுப்போர் நடந்த ஆண்டு எனக்கு 2009 என்பது நன்கு தெரிந்திருந்தும் எழுதும்போது பிழையாகிவிட்டது. இதனை திருத்திட்ட தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
1985 ல் டெசோ ஆரம்பிப்பதில் பெரும்பங்கு வகித்த பழ.நெடுமாறன் இப்போது கருணாநிதியின் கபட நாடகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
-சேக்கிழான்
@ R Balaji
// (2)”இதற்கு இலங்கை அதிபரின் தம்பி கோத்தபயா பதிலடி கொடுத்திருக்கிறார். தனி ஈழம் வேண்டுமானால் தமிழ்நாட்டில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறி இருப்பது மமதையாகத் தான் தெரிகிறது. ”
இது மமதை அல்ல. இலங்கை மீதான தேசபக்தி. தீவிரவாத குழுவை பூண்டோடு ஒழுத்துக் கட்டிய பின்
ஒன்றுக்கும் உதவாத டம்மி-பீஸ்களின் சத்தத்தைக் கண்டு அஞ்சாதது மட்டுமல்ல, உதாசீன படுத்துவது.
அவர் பேசியது கண்டிப்பாக சரிதான். //
உங்கள் தேசபக்தன் கொத்தபய ராஜபக்சே தீவிரவாதக் குழுவை மட்டும்தான் பூண்டோடு அழித்தானா..? கூடவே 30,000 அப்பாவி ஈழத்தமிழர்களையும் ஒரே நாளில் குரூரமாக கொன்றழிக்க ஆணையிட்டு நடத்திக் காட்டிய போர்க் குற்றவாளி.. இந்த நபரை ஏராளமான சிங்களர்களே வெறுக்கும் போது, தப்பித் தவறி தமிழ் நாட்டில் பிறந்த உமக்கு அவன் கதாநாயகன்.. வாழ்வுரிமைக்காக போராடிச் செத்த லட்சக் கணக்கான ஈழத்தமிழர்களும், போராளிகளும் தீவிரவாதிகள்..!
புலி விரோதப் போர்வையில் உம்மைப் போன்றவர்கள் ஆயிரமாயிரம் ஈழத்தமிழர்களின் மரணத்தை ரசிக்கும் குரூரத்தை பார்க்கும்போது நல்ல வார்த்தைகளே எழுத வருவதில்லை..
திரு. கணேச சர்மா அவர்களே,
// இந்து அன்பர்களே
எனது கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன். 1958 இல் இனக்கலவரத்தில் பாணந்துறையில் சிவாச்சாரியார் தலையில் தாக்கப்பட்டு கொதிக்கும் தாரில் போட்டு படுகொலை செய்யபட்டார்.தமிழர் வாழும் வட கிழக்கு மாகாணங்களில் இன்று சிங்களக்குடியேற்றம் நடைபெறுகிறது.எங்கெங்கு அரச மரம் காணப்படுகிறதோ அங்கு புத்தர் வந்து விடுகிறார்.எமது சிவபூமி புத்த பூமியாகி கொண்டிருக்கிறது.இதற்க்கு அரசுக்கு கொடி பிடிக்கும் தமிழர் வேறு. யுத்த குற்றவாளிகள் உலக உலா வருகிறார்கள். //
அழிந்து வரும் ஈழத் தமிழ் இந்துக்களைவிட, புத்த சிங்கள யுத்தக் குற்றவாளிகளை தேசபக்தர்களாக புகழ்ந்து வரும் பின்னூட்டங்களைப் பார்க்கவில்லையா..?! ஈழத்து இந்துக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைமை இன்னும் தங்களுக்கு புரியவில்லையா..?! உங்களை அந்த திருக்கோகர்ணேஸ்வரரும், கந்தனும்தான் காப்பாற்றவேண்டும்..
சேக்கிழான் அவர்களே,
இந்த வீரமணி, சுப.வீ போன்றோர் புலிகளின் தலைவர் பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தறுத்தவர்கள்.. உலகத் தமிழ் மக்கள் இவர்களை நன்கறிவார்கள்..
தங்கள் அருமையான கட்டுரை சுருக்கமாக இருப்பது போல் தோன்றுகிறதே.. மட்டுறுத்தப்பட்டிருக்கிறதோ..?
தனிஈழம் என்ற கோட்பாட்டுக்கு ஹிந்துஸ்தானத்தில் குரல் எழுந்தால் அதை காஷ்மீரத்திற்கும் நீட்டிப்பு செய்வார்களே. அதற்கு நம்மிடம் என்ன பதில். ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் எழுதியதை வாசிக்குங்கால் ஈழத்தில் தமிழர்களுக்கு தனிஈழம் தவிர்த்து வேறு விமோசனம் கிடையாதோ என்ற சம்சயமும் எழுகிறது. ஈழப்பிரிவினை என்பது காஷ்மீரப் பிரிவினை கோஷங்களுக்கு வலு சேர்க்கும் என்ற படிக்கு ஸ்ரீ பாலாஜி அவர்களின் கருத்தை ஏற்கிறேன். ஸ்ரீ கணேச சர்மா அவர்களின் அவர்களின் SOS அழைப்பிற்கு நம்மிடம் என்ன பதில். குறைந்த பக்ஷம் இன்னொரு OPERATION POOMAALAI?
ஈழத்தில் 1950 களில் இருந்து தமிழர்கள் இரண்டாம்/ மூன்றாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுவதையும் அதனால்தான் சுதந்திரப் போராட்டமே துவங்கியது என்பதையும் மறந்து அல்லது மறைத்து போராளிகளை தீவிரவாதிகள் என்று இலங்கை சிங்கள அரசுதான் பரப்புரை செய்கிறது என்றால் அதற்கு மயங்கிய சிலர் இங்கும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
தமிழ்க் கலாச்சாரமும், ஹிந்துக் கலாச்சாரமும் தொடர்ந்து இலங்கையில் தாக்கப் படுகிறது, அளிக்கப் படுகிறது.
பல்லாயிரம் தமிழர்கள் சிங்கள அரசால் வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அவர்களை எல்லாம் தேசபக்தர்கள் என்று கூறுவோரை என்னவென்று சொல்வது? மனிதாபிமானம் இருப்பவர்கள் ஆனால் இப்படிக் கூற மாட்டார்கள். ராஜபக்சே வகையறா போர்க்குற்றவாளிகள். நிச்சயம் ஒருநாள் சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டும், வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அன்புள்ள குமரன்,
//கட்டுரை சுருக்கமாக இருப்பது போல் தோன்றுகிறதே.. மட்டுறுத்தப்பட்டிருக்கிறதோ..?//
நான் எழுதியதே இவ்வளவு தான்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
இந்து நண்பர்களே
ஹிந்துஸ்தானம் ஹிந்து தமிழ் ஈழத்தை அங்கீஹரிப்பதால் காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கு வலு சேர்க்கலாம் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் பங்களாதேஷ் பிரிந்த போது மேற்கு வங்காளம் பிரியவில்லை. காஷ்மீர் விசேட மாநிலமாக இந்தியாவில் உள்ளது. அம்மக்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ்கிறார்கள். அதே நேரம் பதினோராம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் இஸ்லாமிய மதம் பரவியதாக சொல்கிறார்கள்.இந்தக்கருத்தில் தவறு இருந்தால் தயவு செய்து நண்பர்கள் மன்னிக்கவும். எனவே அம்மாநிலம் ஹிந்துஸ்தானத்திற்கு உரித்தானது. ஆனால் இலங்கை நிலவரம் அப்படியல்ல. சிங்களவர் இலங்கையில் வருவதற்கு முன்னரேயே இயக்கர் ,நாகர் என்ற தமிழ் பேசும் இந்துக்கள் வாழ்ந்தனர்.என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் சிங்களவரின் மகாவம்சம் என்ற புராணம் கூட இலங்கையை எல்லாளன் என்ற இந்து தமிழ் மன்னன் 44 வருடங்கள் ஒரு குடைக்கீழ் ஆண்டான் என்றும் பௌத்தத்தையும் இந்துவையும் சமமாக மதித்தான் என்று கூறப்பட்டு இருக்கிறது. பின்னர் தேவநம்பியதீசன் காலத்தில் தான் பௌத்தம் வேரூன்றதொடங்கியது. இது சரித்திர வரலாறு. ஆனால் இன்று இலங்கையில் தமிழருக்கு எந்தவிதமான சலுகையும் உரிமையும் இல்லைi என்பதே உண்மை.அத்துடன் தமிழரின் உரிமைக்காக எத்தனையோ வட்டமேசை மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்டன. எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. இன்று இலங்கையில் யுத்தம் முடிந்து சமாதானம் வந்தது போன்ற தோற்றம் தான் ஏற்பட்டுள்ளது.இன்றும் பௌத்த இனவாதிகளின் தனி பௌத்த சிங்கள இன கோஷங்களே இன்றும் வலுப்பெற்று வருகின்றன. எனவே சிறுபான்மையாகிகொண்டு வரும் எமது இந்து சமூகத்தை பாதுகாக்க இலங்கை பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக பலத்த கண்டனம் எழுப்புவதே எம்மைப்போன்ற தமிழ் இந்துக்களின் தலையாய கடமை. நன்றி.
தனித்தமிழீழம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் எதற்கு காஷ்மீர் பிரச்சினையை நமது நாட்டுப்பற்றாள நண்பர்கள் கையிலெடுக்கிறார்கள் என்று புரியவில்லை.
பிரிவினை கேட்பதைத்தவிர இரண்டுமே சம்பந்தமற்றவை என்பது புரியவில்லையா ?
தமிழீழ இயக்கங்கள் வன்முறைப்பாதையை தேர்வு செய்வதற்கு முன்னர் காந்திய வழியில் ஈழத்தந்தை என்று போற்றப்படும் செல்வா என்ற திரு.செல்வநாயகம் போன்றோர் போராடியபோது அவர்களை அரசே கட்டவிழ்த்துவிட்ட வன்முறை மூலமே ஒழித்துக்கட்டியது சிங்கள அரசு.
ஆங்கில அரசிலிருந்து சுதந்தரம் அடைந்தது முதல் தமிழின அழிப்பை சட்டபூர்வமாக்கி வன்முறையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை மற்றும் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இவையெல்லாமே தமிழ் இயக்கங்கள் ஆயுதமேந்துவதற்கு முன்னான நிகழ்வுகள்.
இப்படிப்பட்ட ஏதேனும் ஒரே ஒரு வன்முறை வெறியாட்டமேனும் இந்திய அரசால் காஷ்மீரில அரங்கேற்றப்பட்டதாக உங்களால் கூற முடியுமா ? ஆனால் நாம் காஷ்மீருக்கென சிறப்பு சட்டங்களல்லவா கொடுத்திருக்கிறோம். அங்கிருந்து விரட்டப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் இன்றுவரை அங்கே முழுமையாக குடியமர்த்தப்படவில்லையே.
ஆனாலும் காஷ்மீரில் இந்திய ராணுவம் என்னவோ அனுதினமும் வன்முறை தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதாக அல்லவா நம்மூர் “அறிவு ஜீவிகள்” பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் ?
அதுபோன்ற நிலை இலங்கையில் சிங்களர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? மாறாக தமிழர் பகுதிகளிலிருந்தவர்கள் கொடூரமாக இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டு அங்கே சிங்களர்களல்லவா குடியமர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் ?
ஆரம்பத்திலேயே தமிழர்கள் சம உரிமையுடன் நடத்தப்பட்டிருந்தால் தமிழ் இயக்கங்கள் ஆயுதமேந்தவேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காதே !
அது என்ன திடீர் என்று கணேச சர்மா அவர்கள் ஹிந்து தமிழ் ஈழம் என்கிறார்? எதுவுமே புரியவில்லை.
பாதிரியார்கள் ஆத்திரமடைய மாட்டார்களா?
முஸ்லீம்களின் பள்ளிவாசலை பௌத்தர்கள் தாக்கி முஸ்லீம்களின் மதச்சுதந்திரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் எதிராக பௌத்தர்கள் மிக பெரிய கொடுமை செய்துவிட்டார்கள் என்று, முஸ்லீம்களின் தாவா பணிக்காக நீங்களே போராடும் போது அவர்களுக்கு இந்த ஹிந்து ஈழம் ஏற்க கூடியதாக இருக்குமா?
ஹிந்துஸ்தானத்திடம் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கும் படி வேண்டுவது ஹிந்துஸ்தானத்தின் படைகளை புறமுதுகிட விரட்டி அடித்தாக புகழப்படும் தலைவர் பிரபாகரனின் கொள்கைக்கு விரோதமில்லையா?
திரு பாலாஜி, க்ருஷ்ணகுமார் கோபாலன் சிறந்த புரிதல்கள்.
தி மு க அடிமட்ட தொண்டர்கள் எப்படி மு க வை சகித்து கொள்கிறார்களோ . என்றோ இவரை கட்சியில் இருந்து
தூக்கி இருக்க வேண்டாம். எம்ஜியார் காலத்திலே நடந்திருக்க வேண்டியது.
அப்துல் கலாம் ஒரு மிக உயர்ந்த மனிதர். அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் நானும் வாழ்கிறேன் என்ற எண்ணமே எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி ஏன் இப்படி உளறுகிறார் என்று தெரியவில்லை. அவருக்கு நேரம் சரியில்லை. இவரை மனநல மருத்துவரிடம் காண்பித்து, கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சேர்க்கவேண்டும். வீட்டில் இருந்தால் இப்படித்தான் உளறுவார்.
//பொன்.முத்துக்குமார் on June 14, 2012 at 9:41 pm
ஆனாலும் காஷ்மீரில் இந்திய ராணுவம் என்னவோ அனுதினமும் வன்முறை தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதாக அல்லவா நம்மூர் “அறிவு ஜீவிகள்” பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் ?
அதுபோன்ற நிலை இலங்கையில் சிங்களர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? மாறாக தமிழர் பகுதிகளிலிருந்தவர்கள் கொடூரமாக இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டு அங்கே சிங்களர்களல்லவா குடியமர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் ? //
திரு பொன்.முத்துக்குமார் அவர்களே,
தாங்கள் சொன்னபடி தமிழர் பகுதிகளிலிருந்தவர்கள் கொடூரமாக இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டு அங்கே சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுக்கொண்டிருந்தால் இலங்கை தமிழர்களாகிய நாம் இலங்கை ஹிந்துக்கள் தற்போது எங்கே குடியிருக்கிறோம் என்பதையும் தாங்கள் தயவு செய்து நீங்கள் தெரியபடுத்த வேண்டும்.பிரசாரத்திற்காக எதையும் சொல்லிவிட கூடாது.
காஷ்மீரில் உள்ள எனது ஹிந்து சகோதரர்களுக்காக சிறிலங்கா ஹிந்துவாகிய நான் வருந்துகிறேன். எனது நாட்டில் எனது பெரும்மதிப்புக்குரிய ஹிந்து மதத்திற்க்கு கவலைபட வேண்டிய எந்த வித வேவையும் இல்லை.என் உயிரினும் மேலான ஹிந்து மதம் ஒரு பாதுகாப்பான பக்கம் இருக்கிறது.
முல்லைத்தீவு முழுவதும் ராணுவமும் சிங்களர்கலும் குடி அமர்த்தப்படுகிறார்கள் . தமிழ் மக்கள் துரத்தப்பட்டு முகாமிலும் வேறு இடங்களிலும் வாழ்கிறார்கள். வடமராச்சி முழுவதும் வசவிலன் போன்ற இடங்கள் எல்லைகள் இல்லாமல் வீடுகள் உடைக்கப்பட்டு நிலங்கள் மழுவதும் ராணுவத்திற்கு சொந்தமாகிவிட்டது .கோவில் நிலங்கள் முழுவதும் ராணுவத்திற்கு சொந்தமாகிறது. வெளிநாடுகளில் குடியேறியவர்களின் நிலங்கள் அரசாங்கத்திற்கு சொந்தம் என்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப டிருக்கிறது.
அன்புள்ள “சிறீலங்கா இந்து”,
நான் சொல்ல வந்தது இன அழிப்பு குறித்து. மதம் குறித்து அல்ல. தனித்தமிழ் ஈழக்கோரிக்கையும் தனி காஷ்மீர் தேச கோரிக்கையும் ஒப்பீட்டளவில் ஒன்றென மேற்பார்வைக்கு தோன்றினாலும் இரண்டு பிரச்சினைகளில் ஆழமும் பரிமாணமும் வேறு என்பதற்காக சொன்னது அது.
இந்து மதம் பாதுகாப்பாக உள்ளதா அல்லவா என்பது இங்கே விவாதப்பொருள் இல்லை, எனவே இவ்விவாதத்தில் மதத்தை நுழைக்க எந்த முகாந்தரமும் இல்லை.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்துமாறு இந்திய (ஹிந்துஸ்தான்) பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.அது பற்றி இலங்கையில் உள்ள இஸ்லாமிய பத்திரிக்கை முஸ்லிம் மதத்தை சேர்ந்த தமிழர்களை தமிழர்கள் என்று அழைப்பது துரதிஷஂடம் என்கிறது.அவசியம் விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் தமிழ் என்று பிரிவினை பேசும் தமிழ் ஹிந்துக்களே.
https://www.jaffnamuslim.com/2012/07/blog-post_4019.html
டெசோ மாநாட்டில் பங்கேற்ற ஒரே சிங்கள தலைவரான நவசமாஜ கட்சியின் விக்ரமபாகு கருணரத்னே பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளார். இலங்கை தமிழின அழிப்புக்கு சோனியா காங்கிரசு தலைமையிலான இந்திய அரசும், அதற்கு சோம்பு தூக்கும் கூஜா திமுகவுமே காரணம் என்பதனை அழகாக குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டியில் ( 23.8.2012- தேதிய இதழ் பக்கம் 38-39) தெளிவாக்கி உள்ளார். டெசோவின் முகமூடி கிழிந்தது. காங்கிரசு கூட்டணியை கை கழுவாதவரை , திமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை. தமிழக காங்கிரசுக்கு வரும் தேர்தலில் ஒரு தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது.
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் , அவர் சாவதற்கு பத்து நாட்கள் முன்னர் மைசூரில் நடைபெற்ற , லலிதமஹால் பொதுக் கூட்டத்துக்கு வரும் வழியில் அவர் காரில் ஒரு வயதான பெண்மணி போய் விழுந்ததாகவும் , அதனால் சடன் பிரேக் போட்டு , பின்னே வந்த கார்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று மோத நேரிட்டதாகவும், இந்நாள் கர்நாடகத்தின் இந்நாள் காங்கிரஸ் முதல்வர் பதவியில் இருக்கும் திருவாளர் சித்தராமையா அவர்கள் உளறி இருக்கிறார்.( 21-5-2013- மைசூரில் நடந்த இராஜீவ் நினைவு மற்றும் அஞ்சலி கூட்டம்) இராஜீவை கொல்ல நடந்த சதியின் ஒரு அம்சமே அந்த கிழவி ராஜீவ் காரில் போய்விழுந்தது என்றும் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.
1. இருபத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் கர்நாடகத்தின் இன்றைய இந்திரா காங்கிரஸ் முதல்வர் , இவ்வளவு வருடம் இதனை மூடி மறைத்த குற்றத்தை செய்துள்ளார். இந்த தகவலை மல்லிகை கட்டிடத்தில் விசாரணை செய்த சி பி ஐ விசாரணை சிறப்பு குழுவிடம் அவர் ஏனுங்க தெரிவிக்க வில்லை. அந்த பாட்டி இந்த இருபத்து இரண்டு வருடத்தில் பர லோகம் போயிருந்தால், உண்மையான சதி திட்டத்தை யார் தீய்யியது என்று எப்படி கண்டு பிடிப்பது ? அந்த பாட்டி உயிரோடு கிடைக்காவிட்டால் , சித்தராமையாவை தூக்கில் போட வேண்டும்.
2. இராஜீவ் கொலையாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டு , அந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் , தாங்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும், சி பி ஐ அந்த வழக்கை சரியாக விசாரிக்க வில்லை என்றும் கூறுகிறார்கள். இராஜீவ் காரில் வந்து விழுந்த அந்த பாட்டியை சி பி ஐ விசாரித்தால் தான் உண்மை சதி திட்டம் யார் தீட்டினார்கள் என்பது தெரிய வரும். முன்னாள் இந்திரா காங்கிரசில் இருந்த வேலுச்சாமி என்பவர் , ஏற்கனவே பல மீடியாவிலும் அளித்துவரும் பேட்டிகளில், இராஜீவ் கொலை வழக்கில் சி பி ஐ தனக்கு கிடைத்த பல தகவல்களை அலட்சியப்படுத்தி விட்டதாக , ரகோத்தமன் உட்பட பலரும் குற்றம் சாட்டி உள்ளனர். சந்திரா சாமியிடம் சி பி ஐ சரியாக விசாரிக்க வில்லை என்று எல்லோருமே குற்றம் சாட்டுகிறார்கள்.
3. இப்போது, சித்தராமையா சொல்லியிருக்கும் தகவல் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை, இவ்வளவு காலம் இந்த தகவலை மூடி மறைத்த இவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும். இராஜீவ் கொலையில் பல இந்திரா காங்கிரஸ் வி ஐ பிக்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற சந்தேகம் தான் மேலும் மேலும் வலுக்கிறது.
4.இந்த விசாரணை முடிந்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை, , ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றக்கூடாது. அந்த கிழவியை சி பி ஐ விசாரிக்க கூடாது என்று சோனியா தரப்பில் சி பி ஐக்கு ஏதாவது பிரசர் கொடுக்கப்பட்டதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
5. உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு விட்டு, ஏமாந்த சோணகிரிகளை கைது செய்து , தண்டனை வாங்கி கொடுத்த சி பி ஐக்கு இது ஒரு பெருத்த அவமானம்.. காரில் விழுந்த பாட்டியின் போட்டோ அல்லது வீடியோவாவது இருக்குதா ? இருபத்திரண்டு வருஷம் ஆயிடுச்சே ? அந்த பாட்டியின் பின்னே உள்ள உலக மகா சதி திட்டத்தை எப்படியப்பா கண்டு பிடிக்க போறீங்க ? உடனடியாக அந்த பாட்டியையோ அல்லது அந்த பாட்டியின் ஆவியையோ பிடிக்க 200 சிறப்பு படைகளை அமைத்து , உலகின் 199- நாடுகளிலும் உடனே தேடுங்கள். மேலும் 5000 கோடி ரூபாய் செலவு செய்யுங்க சாமி.
6. வாழ்க வையகம், வாழ்க நமது பாரத திருநாடும், வாழ்க நம் இந்திரா காங்கிரஸ் அரசியல்வியாதிகள்.
எல்லாமே முடிந்துவிட்டது. இனி இந்தியாவில் எல்லாமே செம்மொழி தான். ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்தியா மொழிகள் செம்மொழி பட்டம் பெற்றுவிட்டன. இப்போது எஞ்சிய மலையாளத்துக்கும் இன்று 23-5-2013-செம்மொழி பட்டம் கொடுத்துவிட்டார்கள். இனிமேல் புதியதாக உருவாக இருக்கும் மொழி ஏதாவது வந்தால் தான், அதற்கு செம்மொழி பட்டம் கொடுப்பது பாக்கி. தமிழுக்கு செம்மொழி பட்டம் வாங்கி ஏதோ பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்துக்கொண்ட கலைஞருக்கு வெட்கமாக இருக்காதா ? இந்தியாவில் மட்டும் 625 மொழிகள் உள்ளன. வரும் 2014- பார்லிமெண்டு தேர்தலுக்குள் இவை அனைத்துக்கும் செம்மொழி பட்டம் கொடுக்காவிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது. கோவிந்தா தான். திமுக நிச்சயம் கோவிந்தா கோவிந்தா தான்.
நண்பர் திரு கதிரவன் தமிழ் “செம்மொழி” ஆனதால் என்ன பயன் என்று கேட்கிறார்.
1. தமிழ் நாட்டில் தேனாறு பாலாறு ஓடுகிறது. பசி பட்டினி ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் அகராதியிலிருந்து நீக்கப்பட்டன.
2,இலங்கை தமிழர்களை காப்பாற்ற கருணாநிதி கும்பல் அமைத்திருக்கும் அமைப்பிற்கு பெயர் என்ன தெரியுமா? ” டெசோ” இதுதான் செம்மொழி!
3. தமிழ் செம்மொழி ஆனா பிறகு கனிமொழி செம்மொழியில்தானே பாராளுமன்றத்தில் பேசினார்,
4. இப்போது சென்னைல்யில் “இஸ்துகினு” “கீது” “கஸ்மாலம்” போன்ற வார்த்தைகளை பயன்பெடுதுவதே இல்லை. எல்லாம் செம்மொழியில்தான்.
5. தனது மகன் தளபதி பெயரை “தாலின்” என்று மாற்றி விட்டார். காரணம் “ஸ்” என்பது வடமொழி ஆச்சே!
6. அதைபோல் அழகிரி என்ற பெயரை அழகுமலை என்று மாற்றிவிட்டார் ஏனென்றால் கிரி என்பது வடமொழி ஆச்சே.! (கிரிவலம் = மலைவலம்)
7. அவரது பேரன்கள் தங்கள் பட கம்பெனி பெயர்களான Red Giant Movies
என்ற பெயரை செம்மொழிக்கு மாற்றிவிட்டார்கள்.
8. தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் அனைவரும் இப்போது பணியில் இருக்கிறார்கள். ஆங்கில மீடியத்தில் படித்தவர்கள்தான் இப்போது வேலை இன்றி தெருவில் சுற்றி கொண்டு திரிகிறார்கள். பாவம் அவர்கள்.
9. சன் முதலான டிவி களில் ஆங்கில வார்த்தைகளை மருந்த்க்கு கூட பயன்படுத்துவதில்லை. எல்லாம் சுத்தமான தூய தமிழ்தான்.
10.முரசொலி கூட இப்போது “முஸ்லிம்” என்ற வார்த்தையினை பயன்படுத்துவதில்லை. ஏன் கூட்டணி முறிந்துவிட்டதா என்ற சந்தேகம் வேண்டாம். அதில் “ஸ்” என்ற விரோதி மொழி வார்த்தை வருவதால் “முச்லிம்” (muchlim )என்று தான் பயன்படுத்துகிறார்கள்.
பத்து பயன்கள் போதுமா? (குறிப்பு:: இவையெல்லாம் உண்மை என்று நம்பி விடாதிர்கள். ஏன் வயிற்றெரிச்சலில் இப்படி எழுதி இருக்கிறேன்,)
A .viswanathan
டூ ஜி புகழ் ஆ இராசாவும், உடன் சரித்திரம் படைத்த அன்பு பேரன் தயாநிதி மாறன் 2011- ஆம் ஆண்டில் வேறு வழி இல்லாமல் பதவி விலகியபோது, திமுகவுக்கு என்று உள்ள இரண்டு கேபினெட் அமைச்சர் பதவிகளை திமுகவினருக்கு வாங்கி கொடுக்காமல், தன்னுடைய குடும்பத்தினருக்கு பதவி இல்லை என்றால், திமுகவில் வேறு எவருக்கும் அந்த மந்திரி பதவிகளை தரமுடியாது என்று சாதித்த கலைஞரின் குடும்ப கட்சியில் , மானமுள்ள, சோற்றிலே உப்பிட்டு உண்ணும் எந்த திமுககாரனும் நீடிக்க மாட்டான். இப்போதும் மகளை எப்படியாவது ராஜ்ய சபாவுக்கு அனுப்பி எம் பி ஆக்க துடிக்கும் திமுக அழிவு பாதையில் மீண்டும் மீண்டும் அடிஎடுத்து வைக்கிறது. திமுகவின் அழிவு நிச்சயம். அது கலைஞரின் கண்ணுக்கு முன்னேயே நடக்கும். காவேரி, கச்சத்தீவு , இலங்கை தமிழர் பிரச்சினை, என்று தொடர்ந்து தமிழர் நலனுக்கு எதிராகவே செயல்படும் கலைஞர் இனியாவது திருந்துவாரா ?
இத்தனை நாட்களாக தமிழர்களின் தன்னிகரற்ற தலைவன், தமிழ் தாயின் தவப்புதல்வன் என்று மட்டும் சொல்ல்கொண்டிருந்த திமுகவினர் அவரை இப்போது “தமிழே” என்று கூறி தமிழ் தாயின் தவப்புதல்வனை ஒரேயடியாக “தமிழ்” என்றே ஆக்கிவிட்டார்கள். அந்த காலத்தில் இந்தியாதான் இந்திரா இந்திரா தான் இந்தியா என்று சொன்னது போல இப்போது தமிழ்தான் கருணாநிதி கருணாநிதிதான் தமிழ் என்று ஆகிவிட்டதுபோலும்!. தமிழுக்காக உயிர் கொடுத்து உழைத்த உத்தமர்கள் எங்கே தமிழை ஒரு வியாபார பொருளாக பயன்படுத்தி தன வாழ்வை நன்கு வளபடுத்திகொண்ட சுயநல வியாபாரி எங்கே.
Doctor Francis bhukan (1762 1829) என்பவர்தான் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேலம் ஜில்லாவில் கன்னடம் பாரசிகம் முதலியவை ஆட்சிமொழிகளாக இருந்தன, ஊத்தங்கரை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஓசூர் தாலுக்ககளில் மராத்தி ஆட்சிமொழியாக இருந்தது. (ஆதாரம்: Salem Dt . Gazetteer by Richards Vol I page 93) 1956 யில் தான் தமிழ் ஆட்சிமொழி சட்டம் முழுமையாக நிறைவேறியது.
பொது நிகழ்சிகளில் கடவுள் வாழ்த்து பாடிகொண்டிருந்த காலத்தில் தமிழ் தாய் வாழ்த்து தான் பாடவேண்டும் என்று ஒரு கட்டாய நடைமுறையினை கொண்டுவந்தவர் கருணா. அந்த தமிழ் தாய வாழ்த்தில் “தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே” என்று ஒரு வரி வருகிறது. இதில் திலகம் என்பது தமிழ் வார்த்தை அல்ல. “பொட்டு” என்பதுதான் தமிழ் வார்த்தை .தமிழ் தாயை வாழ்த்த வேறு ஒரு மொழிசொல்லா?
பேருந்துகளிலும் மசூதிகளிலும் வீதிகளிலும் தொடர்வண்டிகளிலும் தெருக்களிலும் என்று அங்கு இங்கு எனாதபடி எங்கும் “அஸ்லாம் அலைக்கும்” “இன்ஷா அல்லா” “பகுத் சுக்ரியா” “நை பாய்” ” அச்சா அச்சா” என்று
உருது மொழி தவிர வேறு மொழி பேசாத முஸ்லிம்கள் தமிழர்களாம். ஆனால் தமிழ் மொழியில் மட்டுமே மற்றவர்களுடன் உரையாடும் தமிழ் நாட்டில் வாழும் பிராமணர்கள் மட்டும் தமிழர்கள் இல்லையாம்!
தமிழ் தமிழ் என்று பேசி ஊரை ஏமாற்றி வரும் திமுகவினர் காதலும் வீரமும் தமிழர்களின் பரம்பரை சொத்து என்றும் வீரத்திற்கு அடையாளமாக காளையை அடக்குதலை பெருமையாக கூறுவார்கள். வாயில்லா ஜீவனை இம்சைபடுத்துவது வீரமாம்! இவர்கள் வீரத்தை காட்ட ஒரு சிங்கத்தை அடக்கி தான் ஒரு ஆண் சிங்கம் என்று காட்ட வேண்டியதுதானே!
பஞ்சாயத்து, பதில், பைசா, கைது ஆகிய 4 வார்த்தைகள் உருது வார்த்தைகள் ஆகும். சபதம், தினசரி ஆகியவை சமஸ்கிருதம் ஆகும். காகிதம் என்பது மராத்தி வார்த்தை ஆகும். இந்த வார்த்தைகளை கருணாநிதி எப்போதுமே பயன்படுதியதில்லையா? ” காகித ஓடம் கடல் அலைமேலே போவது போலே”
என்று கருணா பாடல் எழுதியதை யாராலும் “மறக்க முடியுமா”? தமிழன் ஒரு ஏமாளி (அதனால்தானே இலங்கையில் அடி வாங்கி சாகிறான்) அந்த ஏமாளிகள் இருக்கும்வரை ஆந்திராவிலுள்ள கோதாவரி என்ற ஊரின் வம்சாவளியான கருணாநிதி என்ற ஏமாற்றும் பேர்வழி (CON MAN ) இருந்துகொண்டுதான் இருப்பார்கள். தமிழனாக பார்த்து திருந்தினால் உண்டு இல்லை என்றால் ஏமாளிக்கு திண்டாட்டம் ஏயப்பவனுக்கு கொண்டாட்டம்.