காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கற்றறிந்த சான்றோர்களின் பங்கு இதில் அதிகம். அதனினும் அதிகம் இரந்துண்டு வாழும் துறவிகளுக்கு. ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். வரும் ஜீன் திங்கள் 6ஆம் திகதி பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது ஜெயந்தி தினம்.

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரது திருவடி பணிந்து எனது மாறுபடும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அதற்கு முன்.

கடந்த மூன்று வருஷங்களாக தமிழ் ஹிந்து தளம் மற்றும் விஜயவாணி தளம் இரண்டிலும் பதிவேறும் வ்யாசங்களை வாசித்து வருகிறேன். பல நேரெதிர்ப் பார்வைகளைக் கொடுக்கும் வ்யாசங்கள் பதிவேறும் தளங்கள் இவை எனினும் இரண்டும் ஹிந்துத்வப் பார்வைகள் சார்ந்த தளம் என்பது என் புரிதல்.

பரம பூஜனீய டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வல்கர், பூஜ்ய சாவர்க்கர் மற்றும் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நானாஜி தேஷ்முக் போன்ற பற்பல பெரியோர்களால் ஹிந்துத்வம் என்ற ஆல வ்ருக்ஷம் போஷிக்கப்பட்டு வளர்ந்துள்ளது. பன்முகம் என்ற முக்யமான கருதுகோளும் ஹிந்துக்களின் அன்றாட வாழ்வில் பரிணமிக்கும் பன்முகத்தன்மையுமே காலக்கணக்கிடவியலா ஹிந்து சமயத்தின் ஆணிவேர் என்றால் மிகையாகாது. வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற பற்பல தத்துவ ரீதியில் வேறுபடும் சமயங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் தத்துவங்களை தர்க்கிக்கும் முறைகளும் தர்க்கத்தின் கருதுபொருள்களும் ஒருகுடைக்கீழ் வருவதால் இவையனைத்தும் ஹைந்தவம் என்ற ஆலவ்ருக்ஷத்தின் பல கிளைகள் என்றால் மிகையாகா.

தமிழ்ஹிந்துதளம் பெரும்பாலும் ஹிந்துத்வப்பார்வையின் ஒரு பரிமாணத்தைத் தெரிவிக்கும் படியாக வ்யாசங்களையும் உத்தரங்களையும் தாங்கி வந்தாலும் மாற்றுப்பார்வைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறது. பூசல்களும் வசவுகளுமே பதிவுகள் என்ற ரீதியில் உலாவரும் தனிநபர் ப்ளாக்குகள் மற்றும் இணையதளங்கள் போலல்லாது வ்யாசங்களும் உத்தரங்களும் கண்யமிக்கவையாகவும் கருத்தாழம் உள்ளனவையாகவும் இயன்றவரை மட்டுறுத்தலுக்கு உட்பட்டே தமிழ் ஹிந்துவில் வெளியாகின்றன. லக்ஷ்மண் ரேகா (இலக்குவன் கோடு) மீறப்படும் போது ஆசிரியர் குழு தலையிட்டு வரைமுறைகள் மீறப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.

இப்போது காஞ்சிமாமுனிவர் பற்றி தளத்தில் பதிவான கருத்துக்களையும் எனது மாற்றுக்கருத்துக்களையும் பார்ப்போம்.

ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள், சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012) என்ற வ்யாசத்தில் April 27, 2012 அன்று பதிவு செய்த உத்தரத்தில் பதியப்பட்டது :-

தலைமுறைகள் கஷ்டப்பட்டு அரும் பெரும் நூல்களைக்கொண்டு உருவாக்கிய ஒரு நூலகத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து ஆபாச மஞ்சள் புத்தகங்களை வைத்துக் கொண்டு இந்த நூலகமே இந்த மஞ்சள் புத்தகங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் என சொல்லி அப்படி சொல்வதையே மகா பெரிய லைப்ரரியன் குரல் என பைண்ட் போட்டு பாகங்கள்பாகங்களாக விற்று அப்படி ஆபாச புத்தகங்களை விற்கிற நபரை நடராஜர் முதல் மகாவிஷ்ணு வரை எல்லா வித தெய்வங்களாகவும் காட்டி ஏன் அதற்கும் மேலாக காட்டி நூலகத்தை ஆக்கிரமித்து கொண்டால்…என்னால் முடிந்த வரை என்னுடைய நூல்களை எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது நல்ல லைப்ரரி இப்படி பட்ட ஆபாச குரல்கள் வரமுடியாத லைப்ரரி ஒன்றை தேடி பிடித்து போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும். ஏனென்றால் நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது அவர்களல்லவா?

ஸ்ரீமான் களிமிகு கணபதி அவர்கள் 29ம் திகதி ஏப்ரல் அன்றைய பதிவில் பூஜைக்குறியவரான ஸ்ரீ மஹாஸ்வாமி அவர்களது ஜாதி-வர்ணம் பற்றிய கருத்துக்கள் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது என்றும் அவை காலனியப்பார்வை என்றும் “அநீ எதிர்த்தது அவரது இந்த காலனியப் பார்வையைத்தான் என்றால் அது சரியே” என பதிவு செய்துள்ளார்.

ஆனால் ஸ்ரீ அ.நீ அவர்களது மேற்கண்ட பதிவில் இடித்துக் காட்டுவது என்பது இப்படி குறிப்பிட்ட கருத்து அல்லாது மிகப்பல கீழ்க்கண்ட விஷயங்கள் என்றே தோன்றுகிறது.

  1. ஸ்ரீ அ.நீ எதிர்ப்பது 7 தொகுதிகளாக அமரர் ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட “தெய்வத்தின் குரல்” என்ற ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் அவர்களது கருத்துக்கள் அடங்கிய நூற்தொகுப்பு என்பது என் புரிதல். தவறென்றால் நான் திருத்திக்கொள்கிறேன்.
  2. ஸ்ரீ அ.நீ அவர்கள் எதிர்க்க விழைவது சில கருத்துக்கள் என்று ஸ்ரீ களிமிகு கணபதி தெரிவித்து இருந்தாலும் முழு தொகுப்பையுமே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் எனவே மறைமுகமாக ஸ்ரீ அ.நி பதிவு செய்துள்ளார் என்பது என் புரிதல்.
  3. பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமியை நடராஜர் எனவும் மஹாவிஷ்ணு என காட்டப்படுவதை இவர் ஏற்கவில்லை. ஹிந்து சமயம் என்ற நூலகத்தில் இவர் ஏற்கும் பல நூற்கள் இருப்பினும் தெய்வத்தின் குரல் என்பது கிட்டத்தட்ட ஹிந்து மதம் என்ற ஒட்டு மொத்த நூலகத்தின் குரல் அல்லது லைப்ரேரியன் குரல் அதாவது பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியின் குரல் என உருவகப்படுத்தப்பட்டு அதனை ஏற்கவியலாது என கூறுகிறார்.
  4. “நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது” என்ற படிக்கு பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது கருத்துக்கள் ஏதோ ஹிந்து மதம் சம்பந்தமான விஷயங்களில் அதிகாரபூர்வமான கடைசீச் சொல் என்ற படிக்கு ஒரு கருத்து உலா வருவதாகவும் மேற்கண்ட கருத்தில் தொனிக்கிறது.

ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் மறைவுக்கான இரங்கல் வ்யாசத்தில் தெய்வத்தின் குரல் சம்பந்தமாக முதலில் ப்ரசுரிக்கப்பட்ட கருத்தில் கூட கிட்டத்தட்ட இதே கருத்தையொத்த கருத்துக்கு நான் மாறுபட்டு என் உத்தரத்தில் அதை தெரிவு செய்திருந்தேன். ஆசிரியர் குழுவினர் என் உத்தரத்தின் அப்பகுதியை நீக்கிவிட்டு வ்யாசத்தில் உள்ள கருத்துக்களை திருத்தம் செய்திருந்தனர்.

பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து “தெய்வத்தின் குரல்” தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். இதைப்புரிந்து கொள்ள இயலும். அக்கருத்தை காய்த்தல் உவத்தலில்லாது கறாராக பதிவு செய்திருந்தால் எனது இவ்யாசத்திற்கு அவசியமிருந்திருக்காது.

நான் “தெய்வத்தின் குரல்” என்ற நூலின் முழு ஏழு பாகங்களும் வாசித்ததில்லை. பின்னிட்டும் நான் வாசித்த படிக்கும் முழு தொகுப்பையுமே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என்ற முத்திரை குத்தும் படியான கருத்தை ஏற்க இயலாது. இங்கு கருத்துக்கள் பகிரும் பல ஹிந்து நண்பர்களுக்கும் என்னுடன் இவ்விஷயத்தில் உடன்படுவார்கள் என எண்ணுகிறேன்.

ஹிந்து மதம் சார்ந்த வேதங்கள், உபநிஷதங்கள், சிற்பம், நாட்டியம், ஆயுர்வேதம், தமிழ் மொழி, ஸம்ஸ்க்ருத மொழி, அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் போன்ற தத்துவங்கள் பற்றிய தகவல்கள் வினாயகர், சக்தி, சிவன், விஷ்ணு, ஐயப்பன், அனுமன் போன்ற தெய்வங்கள் பற்றிய தகவல்கள் ஆதிசங்கரர் கால ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், பிறப்பிலிருந்து இறப்பு வரை ஹிந்துக்களது வாழ்வில் செய்யப்பெறும் ஸம்ஸ்காரங்கள், பிடி அரிசித்திட்டம், கோவிலில் உழவாரப்பணி, குளம் போன்ற நீர் நிலைகளை வெட்டுதல், அவற்றை பாதுகாத்தல் அவற்றில் ஆடுமாடுகளும் நீர் அருந்த வழி செய்தல், அனாதை ப்ரேதங்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தல், போன்றும் மற்றும் எண்ணிறந்த தகவல்கள் அடங்கிய ஒரு கருத்துக்களஞ்சியமாகத்தான் நான் அத்தொகுப்புகளைப்பார்க்கிறேன்.

சமூஹச் சேவகர் என்ற ரீதியிலோ ஹிந்து சமயத்தின் அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்றாதவர் என்ற ரீதியிலோ அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர் எனினும் அத்வைதத்திலேயே வேறு குருமார்களை பின் பற்றுபவர் என்ற ரீதியிலோ பல விஷயங்களில் அத்தொகுப்புகளில் சொல்லப்பட்ட பல கருத்துக்கள் பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம். ஆனாலும் மிகப்பலருக்கும் மிகப்பல கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கும் (வேற்று மதத்தவர் உட்பட) என்பது என் புரிதல். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என உருவகப்படுத்துவது முற்றிலும் ஏற்கவியலாது.

ஜைமினியின் பூர்வமீமாம்ச சூத்திரங்கள் அதற்கு பட்டரின் வார்த்திகங்கள் அவற்றில் பௌத்தக் கருத்தாக்கங்களுக்கு எதிர்ப்புகள், கௌடபாதரின் பௌத்தவாதங்களை மறுதலிக்கும் மாண்டூக்ய காரிகை மற்றும் ஆதிசங்கரரின் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்கள் அவற்றுடன் சில விஷயங்களில் ஒத்தும் பல விஷயங்களில் மாறுபட்டும் உடையவர் ராமானுஜர் மற்றும் மத்வாசார்யர் எழுதிய பாஷ்யங்கள் முதல் ஸ்ரீல பக்திவேதாந்த ப்ரபுபாதர் எழுதிய “பகவத் கீதை உண்மையுருவில்” வரை ஹிந்து மதத்தில் வேறு பாடு இல்லாது காலங்காலமாக ஸ்திரமாக இருந்து வருவது பதியப்படும் கருத்துக்களும் அதற்கு மாற்றாக பதியப்படும் கருத்துக்களும். ஆதி சங்கரரை மறைமுக பௌத்தர் என்றும் மாயாவாதி என்றும் மற்றும் தரக்குறைவாக விமர்சிக்கும் (மணிமஞ்சரி போன்று) மற்றைய தர்சன நூல்களும் உண்டு. மேற்கண்ட விமர்சனங்களைப்பார்க்குங்கால் மணிமஞ்சரி பற்றி நினைவில் வந்தது.

ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரை நடராஜர் மற்றும் மஹாவிஷ்ணு என்று போற்றுவதையும் “தெய்வத்தின் குரல்” என்று புத்தகத் தொகுப்பிற்கு இடப்பட்டிருக்கும் பெயரை எதிர்ப்பதற்கும் மாற்றுக் கருத்துக்கள் :-

த்வே ரூபே வாஸுதேவஸ்ய சரம் சாசரமேவ ச|
சரம் சன்யாஸினம் ரூபமசரம் ப்ரதிமாதிகம் ||

அர்ச்சாவதாரமாக அசையாது உருவத்துடன் ஒரு ரூபமும் பரிவ்ராஜகராய் அலைந்து திரியும் படியாய் இருக்கும் சன்யாஸி என மற்றொரு ரூபமும் பகவன் வாஸுதேவனுக்கு. ஆக மேற்கண்ட ச்லோகத்தின்படி யதிகளை நாராயண ஸ்வரூபமாகக் கருத வேண்டும் என ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சொல்லப்படும் உன்மத்தரான ஜடபரதரிலிருந்து பாஷ்யங்களில் சொல்லப்படும் ஆத்ம ஞானியான தர்மவ்யாதர் என்ற கசாப்புக்கடைக்காரரிலிருந்து ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு, போன்ற சன்யாசிகளிலிருந்து ரமணர், ராமக்ருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், ஸ்வாமி சித்பவானந்தர், ஸ்வாமி அபேதானந்தர், மாதா அம்ருதானந்தமயி என்று இன்றைய காலக்ரமம் வரை இங்கு நான் குறிப்பிட்ட குறிப்பிடாத அனைத்து ஆன்ம ஞானிகளும் துறவிகளும் மேற்கண்ட வ்யாச வாக்கின் படி நாரயண ஸ்வரூபமாகத் தான் கருதப்படுகின்றனர். அவ்வாறு கருது என மேற்கண்ட வ்யாச வாணி சொல்கிறது. அதையொட்டி யதிகள் தெய்வத்திற்கொப்ப தொழப்படுவது மரபு சார்ந்த விஷயமே. இதில் விந்தையேதுமில்லை. மரபை ஏற்காதவர்கள் அல்லது மரபை மீற விழைபவர்கள் இதை ஏற்காதிருக்கலாம். மரபை ஏற்பவர்களை இவ்விஷயமாய் இடித்துரைப்பது தேவையற்றது.

உடனேயே “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்ற வாக்யப்படி உலகமே விஷ்ணு மயம் தானே யதி மட்டும் என்ன தனியாக நாராயண ஸ்வரூபம் என ப்ரதிவாதத்தில் இறங்க வேண்டாம். யதிகளை நாரயண ஸ்வரூபமாகக் கருது என்பது ஆன்றோர் வாக்கு சாஸ்த்ர வாக்கின் படி எதிர் கருத்தில் காணப்படும் அவஹேளனம் மாற்றுக்கருத்தால் மறுக்கப்படுகிறது.

நெறி பிறழ்ந்து செயல் படும் துறவிகள் உளரே எனில் பகவத் ச்ருஷ்டியில் நெறி பிறழாத ச்ருஷ்டியே இல்லை எனலாம். மானுடர்களால் துதிக்கப்பெறும் தேவர் தலைவனான இந்திரனே கூட நெறி பிறழ்ந்ததுண்டு என்பது புராணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாம்பின கால் பாம்பறியும் என்ற ரீதியில் ஆன்மீகம் வேண்டுவோருக்கு ஆன்மீகத்தில் உயர்நிலைக்கு உயர்த்தும் துறவியரும் குருமார்களும் மாறாக மந்திரத்தால் மாங்காய் வேண்டுவோருக்குத் துறவி அல்லது குரு என்ற பெயரில் கண்கட்டு வித்தைக்காரரோ மந்திரவாதியோ கிடைப்பார் என்பதும் அவரவர் எண்ணப்பாங்குகள் படி. யத் பாவம் தத் பவதி – எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே ஆவாய்.

“தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஸ்ரீமான் ஜடாயு அவர்களுக்கும் செரிமானமாகாததைக் கவனித்துள்ளேன். ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை என்ற வ்யாசத்தின் December 21, 2010 ம் திகதிய தனது உத்தரத்தில் ஸ்ரீமான் ஜடாயு கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

”தெய்வத்தின் குரல்” என்று அதீத வழிபாட்டுணர்வுடன் பெயரிடப் பட்டிருக்கும் உபன்யாசத் தொகுப்பு நூலை இங்கு மறுமொழிகளில் பலர் சுட்டிக் காட்டுகிறார்கள் (என்னிடம் கேட்டால், “காஞ்சி பரமசாரியார் உபன்யாசங்கள் தொகுப்பு” என்ற பெயரே பொருத்தமானது என்பேன், Complete Works of Swami Vivekananda என்பது போல). இந்தப் பெயரே மிரட்டும் தொனியில் இருக்கிறது!”

என்னிடம் கேட்டால் “Complete Works of Swami Vivekananda” என்பதற்குக் கூட “தெய்வத்தின் குரல்” என்று குறிப்பிடுவதில் தவறேதுமில்லை என்றே சொல்வேன். ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க துறவிகளில் ஒருவரான நாராயண ஸ்வரூபமான ஸ்வாமி விவேகானந்தரின் நூற்தொகுப்பை “தெய்வத்தின் குரல்” என குறிப்பிடுவது சாஸ்த்ர சம்மதமானது தான் என்பது மேற்கண்ட வ்யாசவாணியின் படி தவறில்லை என சித்தமாகிறது. சரி,அது எப்படி ஒரே பெயரில் பல நூற்கள் என வினா எழலாம். பாகவதம் என்ற படிக்கு ஸ்ரீமத் பாகவதமும் உண்டு தேவி பாகவதமும் உண்டு. ஸஹஸ்ரநாமம் என்ற படிக்கு விஷ்ணு, லலிதா, சிவ, சுப்ரமண்ய என பல ஸஹஸ்ரநாமங்களுண்டு. கோவில் என்றால் வைஷ்ணவர்கட்கு ஸ்ரீரங்கம் சைவர்கட்கு சிதம்பரம். ஆக ப்ரச்சினையேதும் இல்லை.

மேலும் “தெய்வத்தின் குரல்” என்ற புஸ்தகத் தொகுப்பு அமரர் ஸ்ரீ ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டது. பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் ஸ்ரீமான் ரா.கணபதி அவர்களின் குரு என அறிகிறேன்.

ஒரு குழந்தையிடம் குரு பற்றிய ஸம்ஸ்க்ருத ச்லோகம் ஒன்று சொல்லு என்றால் ஆஸேது ஹிமாசலம் உள்ள எந்த ஒரு குழந்தையும் பட்டென்று உதிர்க்கும் ச்லோகம்

“குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:”

குரு என்ற ஸ்தானத்தில் இருப்பவரை மும்மூர்த்தி ஸ்வரூபமாகக் கருது என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன. விஸ்வாமித்ரர் ராமபிரான், சாந்தீபனி கண்ணன், சங்கரர் பத்மபாதர், ராமானுஜர் கூரத்தாழ்வார், மத்வர் ஆனந்ததீர்த்தர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு ஆறு கோஸ்வாமிகள், ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் என நீண்ட குரு சிஷ்ய பரம்பரை வழக்கில் பாரத வர்ஷம் முழுதும் குருவானவர் வழிபாட்டுணர்வுடனேயே சிஷ்யனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். “அதீத” என்ற அடைமொழி அவ்வழிபாட்டுணர்வை “அதீதமாய்” பார்ப்பவரின் பார்வையில் தான். ஆதிசங்கரர் வாவென்றழைக்க எதிரில் நதியுள்ளது என்று கூட பார்க்காமல் நதிநீரில் நடந்து வந்த பத்மபாதருக்கு தனது செயல் வழிபாட்டுணர்வா அது “அதீதமானதா” என்றெல்லாம் யோசித்து பின் அவ்வாறு அச்செயல் செய்யப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

மர்க்கட மார்ஜால ந்யாயம் குரு சிஷ்ய உறவுக்கு சொல்லப்படுகிறது. மர்க்கடம் என்றால் குரங்கு மார்ஜாலம் என்றால் பூனை. மலைக்கும் மடுவுக்கும் மேட்டிலும் பள்ளத்திலும் குரங்கு தாவினாலும் குரங்குக் குட்டி தன் தாயை விடாது இறுக்கப்பற்றிக்கொள்ளும். செல்லுமிடந்தோறும் தன் குட்டிப்பூனையைத் தாய்ப்பூனை கவ்விச்செல்லும். சிஷ்யனானவன் தன் குருவை மர்க்கட சிசுவின் பாவத்தில் பற்ற வேணும் என்றும் குருவானவர் மார்ஜால மாதா பாவத்தில் தன் சிஷ்யனை அரவணைக்க வேணும் என்றும் இதன் தாத்பர்யம்.

குருவிடத்து சிஷ்யனுக்கு வழிபாட்டுணர்வு மற்றும் அதை வகை தொகைப்படுத்தல் அதை ஏற்காதது அல்லது புறந்தள்ள விழைவது அவரவர் விருப்பம். வழிபாட்டுணர்வை இழித்துரைப்பதோ அதை எடை போட்டு “சாதாரணம்” அல்லது “அதீதம்” என வகைத்தொகைப்படுத்துவதோ மரபின் பாற்பட்டதன்று. தேவையற்றதும்.

“தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஒரு யதியின் கருத்துக்கள் என்ற ரீதியில் வைக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய குரு என்ற ரீதியில் வைக்கப்பட்டிருந்தாலும் சரியானது தான் என்பது மேற் சொன்ன காரணங்களால் சித்தமாகிறது.

தெய்வத்தின் குரல் என்ற சொல்லாடல் ஏன் மிரட்டும் தொனியில் உள்ளது என புரியவில்லை!!!!!! ஹிந்து தெய்வங்களெதுவும் என்னை நீ வணங்காவிடில் மீளா நரகம் புகுவாய் என பூச்சாண்டியெல்லாம் காட்டுவதில்லையே.

மிகப்பரந்த ஹிந்து சமயத்தின் மிகப்பல பரிமாணங்களில் ஒரு பரிமாணமாகவே தான் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி முன் வைக்கப்படுகிறார். ஒட்டு மொத்த ஹிந்து சமயத்தின் அதிகாரமான குரலாக அவரோ அல்லது வேறு யாருமோ அவரை முன் வைக்கவில்லை என்பது என் புரிதல். சைவர்களுக்கோ வைஷ்ணவர்களுக்கோ அவர் வாதங்களை ஏற்கவேண்டுமென்பதில்லை. அவரவர் வழிப்படி வழிபாடுகள் செய் என்று தான் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிளும் சொல்கிறார் என்றே என் புரிதல். சைவர்கள் வைஷ்ணவர்கள் போன்று அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்ற விழைவோர் அனைவரும் கூட அவர் சொல் தான் கடைசீ சொல் என்று சொல்வதில்லையே. அவரை குருவாக ஏற்பவருக்கு அவர் சொல் கடைசீ சொல்லாக இருக்கலாம். அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர்களில் கூட மற்ற குருமார்களை ஏற்பவர்களுக்கு பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியின் சொல் கடைசீ சொல் என இல்லையே. இல்லாத ஒன்று ஏன் இருப்பதாகக் காண்பிக்கப் படுகிறது தெரியவில்லை.

மஹாத்மா காந்தி காஞ்சி மாமுனிவரைக் காண பாலக்காடு சென்றாரா. அல்லது காஞ்சி மாமுனிவர் காந்தியடிகளைக்கண்டு பழமைவாதம் பேண மன்றாடினாரா என்றெல்லாம் இணைய தளங்களில் விவாதம் செய்யப்பட்டுள்ளது. விவாதத்தினூடே உதிர்க்கப்பட்ட விஷயங்களில் காந்தியடிகள் காஞ்சிமாமுனிவரை அப்படி ஒன்றும் மதித்தவரில்லை என்பதும் ஒன்று. இருவரிடையே நிகழ்ந்த சம்பாஷணம் யாது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனில் எழுதுபவரிடம் எழுதுகோலும் தட்டிவிட்டால் பறந்தோடும் மனக்குதிரை விரும்பும் மார்க்கத்தில் சென்று கற்பனையை எழுத்தில் வடிக்கும் திறமையும் வழிபட வாசகர்களும் இருப்பார்களானால் எழுதப்படுவது சரித்திரம் என சாதிக்க வேண்டிய அவசியமிருக்காது. எழுதப்பட்டது சரித்திரம் என்று வழிபடும் வாசகர்கள் நிர்த்தாரணம் செய்வர்.

“மஹாமனா மாளவியோ மஹாத்மா காந்திரேவச” என முந்தைய ப்ராதஸ்மரணம் அதவா பாரத பக்தி ஸ்தோத்ரத்திலும் “தாதாபாயீ கோப பந்து: திலகோ காந்திராத்ருதா:” என இப்போதைய “ஏகாத்மதா ஸ்தோத்ரத்தில் ஸ்வயம் சேவகர்களால் ஸ்மரிக்கப்படும் காந்தியடிகள் காஞ்சிமாமுனிவரை ஏற்றுக்கொண்டாரா இல்லையா மதித்தாரா மதிக்கவில்லையா என்பதெல்லாம் அனுமானத்தின் பாற்பட்ட கருத்துக்களே. நெருப்பு சுடும் என்பது போல மறுக்க முடியாது நிர்த்தாரணம் செய்யப்பட்ட உண்மைகளன்று.

காந்தியடிகளை உள்ளபடி அவரின் நற்கருத்துக்களுக்காக ஏற்றுக்கொண்டாலும் தேசத்தை நாசம் செய்த செய்கின்ற காங்கிரஸ்காரர்கள் போன்று அவருடைய நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஸ்வயம் சேவகர்கள் ஏற்பதில்லை என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம்.

மேலும் ஹிந்து சமயத்திற்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் காந்தியடிகளால் நன்மையேற்பட்டதா தீமைகள் விளைந்துள்ளதா என்பதில் ஹிந்து எழுச்சிக்குப் பாடுபடுபவர்களில் வெகு நிச்சயமாக இரு கருத்துக்கள் உண்டு. இந்த தளத்திலும் மற்றைய ஹிந்துத்வ தளங்களிலும் ஹிந்துக்களால் மதிக்கப்படும் இளைய மற்றும் முதிய பல எழுத்தாளர்கள் காந்தியடிகளையும் காந்திய கருத்துக்களையும் அவரின் சில அல்லது ஒட்டுமொத்த நிலைப்பட்டுகளையும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர் என்பது சுடுகின்ற உண்மை.

ஆனால் ஹிந்து மதத்திலும் ஹிந்து சமய எழுச்சியிலும் அல்லும் பகலும் பாடுபடும் ஸ்வயம் சேவகர்கள் மாற்றுக் கருத்துக்களன்றி ஏற்கும் மாமனிதர் குருஜி என அன்புடன் அழைக்கப்படும் சங்கத்தின் இரண்டாவது சர் சங்க சாலக் (அகிலபாரத தலைவர்) என்ற பொறுப்பில் இருந்த பரம பூஜனீய ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் அவர்கள்.

யார் காஞ்சி மாமுனிவரை மதிக்கிறார்களோ இல்லையோ, கருத்து வேறுபாடின்றி ஹிந்து இயக்கத்தினரால் மிக உயர்வாக மதிக்கப்படும் குருஜி அவர்கள் பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவரை மிகவும் மதித்தவர். காந்தியடிகள் காஞ்சிமாமுனிவர் சந்திப்பின் அடிப்படையில் அடித்துவிடப்படும் கருத்துக்கள் போன்று புனைவா இது என வினா எழலாம். இது என் கற்பனா சக்தியால் புனையப்படும் கருத்தன்று. ஆதார பூர்வமானது.

டாக்டர்ஜி என அன்புடன் அழைக்கப்படும் சங்கத்தின் முதலாவது சர் சங்க சாலக் பொறுப்பில் இருந்த பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களது நினைவில் நாக்பூர் நகரத்தில் “ஸ்ம்ருதி மந்திரம்” என்ற நினைவாலயம் பரம் பூஜனீய குருஜி அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பாரத நாடு முழுதிலிருந்தும் ப.பூ.டாக்டர்ஜீ அவர்களின் பிறந்தநாள் அன்று நிச்சயிக்கப்பட்ட அந்நினைவாலய திறப்புவிழாவில் ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் காலையிலும் மாலையிலும் வேதமந்த்ரங்கள் ஓதப்பட்டும் மற்றும் சதுர்வேத பாராயணத்திற்கும் பரம் பூஜனீய குருஜி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஆசீர்வதித்தருளுமாறு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை பரம் பூஜனீய குருஜி அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் வேண்டுகிறார். அந்த ஸ்ரீமுகத்தின் நகல் இத்துடன் இணைப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டது இக்கடிதம். முதல் பக்கத்தில் ஸம்ஸ்க்ருத பாஷையிலும் இரண்டாவது பக்கத்தில் ஹிந்தி பாஷையிலும் எழுதியுள்ளார். மேற்கண்ட கடிதத்தின் நகலை இன்றும் ப.பூ.குருஜி அவர்களுக்கான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

[gview file=”https://tamilhindu.com/wp-content/uploads/Shankaracharya_Kanchi.pdf”]

இயன்றவரை தமிழ் லிபியில் கீழே அக்கடிதத்தை ட்ரான்ஸ்லிடரேட் செய்துள்ளேன்.

“சைத்ரே ஸுதி ப்ரதிபதி பரமபூஜனீய டா.ஹேட்கேவார் மஹாபாகானாம் ஜன்மதிவஸே யதாநிஸ்சிதம் ததீய ஸ்ம்ருதிமந்திர ஸமுத்காடயத. அஸ்ய மஹோத்ஸவக்ருதே பாரத வர்ஷஸ்ய ஸமஸ்த ப்ரதேசத: ப்ரதிநிதிபூதா: ஸஹஸ்ரச: ஸ்வயம்சேவகதுரீ நாகபுரே சங்க கேந்த்ரஸ்தானே ஸ உத்ஸாஹம் ——-. ஸ்ம்ருதி மந்திர உத்காடன தினே ப்ராத: ஸாயஞ்ச வேதமந்த்ரோச்சார பூர்வகம் ஸமுசிதோ—- நிஹிதா. ஸாயங்காலே ஸார்வஜனீய மஹோத்ஸவ அவஸரே சதுர்வேத படனானந்தரம் பூஜ்ய சரணானாம் மங்களாசீர்வசன பத்ரம் மயா ஸர்வேப்ய: ச்ராவயித்வா ஏதாந்நிமித்தம் ஸ்ரீமத்பி: ப்ரோஷிதானாம் பூதி-குங்கும- மந்த்ராக்ஷதானாம் ஸமர்ச்சனேனைவ ஸ்ம்ருதிமந்திரஸ்ய உத்காடனம் ஸஞ்ஜானாம் இதி ப்ரோத்கோஷிதம். ஏவம் விதேன விதினா ஸ்ம்ருதி மந்திர உத்காடன மஹோத்ஸவ: ஸமபாத்யத.

அஸ்ய மஹோத்ஸவஸ்ய ——–ஆசாஸே.

——அஸ்மாகம் ஸர்வேஷாம் பகவத்க்ருபா——-.

ஸ்ரீமஜ்ஜகத்குரு க்ருபாபிலாஷீ சரணரஜ:
மா. ஸ. கோல்வல்கர்

(கோள்வால்கரோபாத ஸதாசிவ ஸுத: மாதவ:)

ப.பூ குருஜி அவர்கள் கடிதத்தை முடிக்கையில் ஸ்ரீ ஜகத்குரு அவர்களின் க்ருபைக்கு விழையும் அவரது அடிப்பொடி என தன்னை விளித்து கடிதத்தை நிறைவு செய்கிறார்.

பூஜைக்கு உரிய காஞ்சிமாமுனிவர் ஹிந்து தர்மத்திற்கு ஊறு விளைத்ததாக தமிழ் ஹிந்து தளத்தில் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உபன்யாசங்களின் தொகுப்பான நூல் ஆபாச மஞ்சள் புத்தகம் என இத்தளத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்து இயக்கங்களை பரிச்ரமப்பட்டு கட்டமைத்த ஹிந்து இயக்கங்களின் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருந்த ப.பூ. குருஜி பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவரை குறிக்கையில் அவர்களின் க்ருபைக்கு விழையும் அவரது அடிப்பொடி என விளிக்கிறார். இவை நான் தெளிவு படுத்தும் விஷயங்கள். “ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்” – அப்ரியமான உண்மைகளை பேசாதே என்ற மூத்தோர் சொல்லை பின்பற்றி மேற்சொன்ன கருத்துச்சாரங்களிலிருந்து நாம் மேலும் என்ன புரிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இதை வாசிப்பவரிடம் விட்டு விடுகிறேன்.

ப.பூ.குருஜி அவர்கள் பூஜ்ய ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் அவர்களின் நேரடி சீடரான அகண்டானந்தரின் சிஷ்யர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

ஸ்ரீமான் செந்தில் அவர்கள் “வேதம் புனிதமடைந்தது” என்ற வ்யாசத்தின் உத்தரங்களில் ஸ்வாமி விவேகானந்தர், ஸ்வாமி சித்பவானந்தர், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் போன்ற பெரியோர்களை சுடுசொற்களால் குறிப்பிட்ட போது தலையிட்ட ஆசிரியர் குழு ஹிந்து இயக்கங்களின் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருக்கும் ப.பூ. குருஜி அவர்களால் வணங்கப்பெற்ற காஞ்சிமாமுனிவர் ஹிந்து தர்மத்திற்கு ஊறு விளைவித்தவர் என்றும் அவர் கருத்துக்கள் அடங்கிய “தெய்வத்தின் குரல்” என்ற ஒட்டுமொத்த நூற்தொகுப்பு “ஆபாச மஞ்சள் பத்திரிக்கை” என இகழப்பட்ட பின்னர் மௌனம் சாதித்ததும் துரத்ருஷ்ட வசமானதே.

கருத்து வேறுபாடுகளை விவாதம் செய்வது ஆரோக்யமானது. அவசியமானதும் கூட. சமூஹத்தின் முன்னோடிகளை அவர் தம் கருத்துக்களை தரம் தாழ்ந்து முத்திரை குத்துவதை தவிர்க்கலாமே. தமிழ் ஹிந்து தளத்திற்கும் வசவு தளங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என புரிதல். வசவுப்பதிவுகள் அவற்றை நிறைவு செய்யும் தன்மையவை.

பூஜ்ய ஸ்ரீ காஞ்சிமாமுனிவரை போற்றி அவர் தம் திருத்தாள்களில் அடியேன் சமர்ப்பிப்பது :-

சமதர்சன சந்துஷ்டாய நமோ நம:
வேத தர்ம சாஸ்த்ர பரிபாலனாய நமோ நம:
பாத்ராபாத்ரபேதவினா காருண்யாம்ருத கடாக்ஷ வர்ஷிணாய நமோ நம:

ஸௌலப்ய ஸௌசீல்யாதி ஆத்மகுண பரிபூர்ண விக்ரஹ சந்த்ரசேகரேந்த்ர யதிவர்ய: இத்யனுஸ்ம்ருத்ய வந்திதோஹம் வாரம் வாரம்.

பி.கு :-

  1. பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் அடியேனுடைய குருஸ்தானத்திய யதிவரர் அன்று. அடியேன் மிகவும் போற்றும் யதிவரர்களில் ஒருவர்.
  2. என்னுடைய இயல்பான மொழிநடையில் வ்யாசம் எழுதப்பட்ட பின்பும் இயன்றவரை தமிழ்ப்பதங்களால் மொழிநடை சீர்திருத்தப்பட்டுள்ளது. தமிழாங்கில விரும்பிகள் எப்போதும் போல் மணிப்ரவாள மொழிநடையின் மீது ப்ரத்யேகமாக சகதி வீச விரும்பலாம். அது அவர்களது விருப்பம். சொல்லப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நிறை குறைகளை பகிர விழையும் வாசகர்களுக்காக இவ்யாசம் சமர்ப்பிக்கப்படுகிறது.
  3. காவிரித்தண்ணீருக்காக கர்நாடகாவும் முல்லைப்பெரியாறுத் தண்ணீருக்காக கேரளமும் அவர்களிடையே சிக்கித்தவிக்கும் தமிழகமும் பார்க்கும் போது காஞ்சிமாமுனிவர் தாமிரபரணி நதி பற்றிய உபன்யாசம் இருபது முப்பதாண்டுகளுக்கு முன் கல்கி தீபாவளி மலரில் ப்ரசுரமானது நினைவுக்கு வருகிறது. மலயாளத்து மன்னன் ஒருவனது ப்ரம்மஹத்தி தோஷம் விலக கர்நாடக தேசத்து ப்ரம்மசாரி ஒருவன் தமிழகத்தில் தாமிரபரணி நதியைக் கொணர்ந்தது பற்றியதான உபன்யாசம்/ கதை. அவர் சொன்ன கதைப்படி இப்ரதேசங்களில் இருந்த ஒற்றுமை அபிமானம் எங்கே இன்று மாற்று ப்ரதேசத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுப்பதற்கு இடையூறுகள் செய்யும் மனப்பான்மை எங்கே என்பது துலங்கும். அந்த கதையை / உபன்யாசத்தை தமிழ் ஹிந்து தளம் வெளியிடுமாயின் துறவறத்துக்கு அடையாளமாக விளங்கிய ஹிந்து தர்மத்தின் பெருமை மிக்க துறவியாம் காஞ்சி மாமுனிவரை மனது நிறைவுடன் நினைவு கூர்வதாக அமையும்”வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே”என ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாடுவது பொழுதுபோகாது பாடும் பாடல் அல்ல வாஸ்தவத்தில் இத்தேசத்தில் உணர்வு பூர்வ ஒற்றுமை இருந்தது என துலங்கும். இன்று அவ்வொற்றுமை அரசியல்வாதிகளால் சிதைவு பட்டு வருகிறது ஆனால் அது நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற அவா நம்மில் உறுதியாக உள்ளது. அதற்கு உழைப்போம்.

168 Replies to “காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை”

  1. மதிப்பிற்குரிய கிருஷ்ண குமார் அவர்களுக்கு,

    நான் கூறியவை ஒரு குறிப்பிட்ட சூழலில் சாதிய கருத்துகளுக்கு தெய்வீக முலாம் பூசும் போக்கை கண்டித்து சொல்லப்பட்டவை. அவற்றை ஒட்டுமொத்த தெய்வத்தின் குரல் நூல்களுக்கு நீட்டுவிக்க வேண்டியதில்லை. அத்தகைய ஒரு பார்வை மயக்கம் என் வார்த்தைகளால் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.

    கும்பகோணம் மடத்தின் அதிபதி திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் எளிய வாழ்க்கை நிச்சயம் ஒவ்வொரு சாது சந்நியாசியும் பின்பற்ற தக்க வாழ்க்கை. அவ்விதத்தில் அது மகோன்னதமானது வணங்கத்தக்கது. ஏன் ஒவ்வொரு சாது ஒவ்வொரு நல்ல சமுதாய தலைவரும் அவரை போல எளிய transparent வாழ்க்கை வாழ்ந்தால் இந்த நாடு எங்கோ சென்றிருக்கும். ஆனால் அவருடைய சாதி குறித்த கருத்துகள் பெண்கள் குறித்த கருத்துகள் விதவைகள் குறித்த கருத்துகள் ஆலய பிரவேசத்தில் அவர் கொண்டிருந்த நிலைபாடு ஆகியவை இந்து சமுதாயத்துக்கு மிக மோசமான தீமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எனவே அவை வெளிப்படையாக கண்டித்து புறந்தள்ள தக்கவை.

    எனவே அவருக்கு ஒரு தெய்வீக அருள் ஒளி வட்டத்தை வழங்கி அவரை குறித்து அபத்தமான அசட்டுத்தனமான அற்புத கதைகளை உருவாக்கும் ஒரு போக்கு இன்றைக்கு காணப்படுகிறது. அதற்கு பின்னால் ஒரு சாதிய மேட்டிமை போக்கு உள்ளது, அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பரம பூஜனீய ஸ்ரீ குருஜி அவர்களுக்கு ஒரு மிஷன் இருந்தது. ஒரு செயல்திட்டம் இருந்தது. நம் பாரம்பரிய ஆச்சாரியர்களை அனைவரையும் இணைத்து அவர்கள் வாயாலேயே தீண்டாமையும் சாதியமும் சாஸ்திர சம்மதம் உடையவை இல்லை என சொல்ல வைக்க வேண்டும். அதற்காக அவர் அனைத்து பாரம்பரிய ஆச்சாரியர்களிடமும் தாழ்ந்து அவர்கள் பாதம் பணிந்து செயல்பட்டிருக்கிறார். அவரது பணிவு சமுதாய ஒற்றுமைக்காக. பரமபூஜனீய ஸ்ரீ குருஜி அவர்களின் பணிவும் விநயமும் திரு சந்திரசேகர சரஸ்வதியின் மாட்சிமையை தங்களுக்கு காட்டுகிறது. ஆனால் பாமர ஸ்வயம் சேவகனான எனக்கு பரம பூஜனீய ஸ்ரீ குருஜி அவர்களின் ஆன்மிக பேருணர்வையும் சமுதாயத்தின் நலனுக்காக தன்னை எவ்வளவு கீழே கொண்டு சென்றிருக்கிறார் இந்த பெரும் ஆன்மிக மெய்யுணர்வாளர் என்பதையே காட்டுகிறது. இத்தருணத்தில் பரம பூஜனீய குருஜி அவர்களின் பாதங்களுக்கு என் வணக்கங்கள். இதற்கு மேல் இவ்விசயத்தில் கூற எனக்கு எதுவும் இல்லை.

    பணிவன்புடன்
    அநீ

  2. அன்புள்ள கிருஷ்ணகுமார்,

    உங்கள் கட்டுரை அனைவர் மனதையும் தொட வல்லது. உங்கள் கருத்தினை நான் முழுவதும் வழிமொழிகிறேன். தெய்வத்தின் குரலை ஏழு பாகங்களையும் படித்த நபர் என்ற முறையில் , அவருடைய அனைத்து கருத்துக்களையும் , ஒட்டு மொத்தமாக நான் ஏற்கவோ அல்லது ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவோ செய்ய முடியாது. ஆனால் அதனை மஞ்சள் புத்தகம் என்று சொல்வது, யார் மீதோ உள்ள கோபத்தில் எங்கேயோ முட்டிக்கொள்ளுவது போன்றதே. அதுவும் அரவிந்தன் நீலகண்டன் போன்ற தெளிவான கண்ணோட்டங்கள் கொண்டவரே இவ்வாறு எழுதியது, அதனை படித்தோர் மத்தியில் அதிர்ச்சியையும் , வருத்தத்தையும் உண்டாக்கியது.

    ஜவகர்லால் நேரு தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டை சீரழித்தவர் என்பது உண்மை. அதற்காக அவரை தேசத்துரோகி என்று சொல்லக்கூடாது. இந்த நாட்டை நேசித்தவரே அவரும். இந்த தேசத்தை அழிக்கவேண்டும் என்ற தீய எண்ணத்துடன் அவர் தவறான பொருளாதார கொள்கைகளை பின்பற்றவில்லை. பொருளாதாரம் பற்றி சரியான புரிதல் இன்றியே அவர் தவறுகளை செய்தார். தவறு மட்டுமே செய்து இந்த நாட்டை அழிக்கவேண்டும் என்று அவர் செயல் படவில்லை. அவராவது அரசியல் வாதி, விட்டு விடலாம்.

    எளிமையின் சின்னமும், சத்திய வாக்காளருமான அருள்மிகு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் , கருத்துக்களை தொகுத்தவர் ரா. கணபதி. தெய்வத்தின் குரல் என்ற தலைப்பு ரா . கணபதி அவர்களால் இடப்பட்டதே ஆகும். அதற்கு பரமாச்சாரியார் பொறுப்பாக முடியாது. நிற்க, அந்த நூலை முழுவதும் படிக்காத சில பொறாமையாளர்கள், அரைகுறையாக படித்து, இதுபோல தங்கள் குழு தலைவர்களால் பேச முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியினாலும் , அவதூறு பரப்ப முயலுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.

    இந்து மதம் என்பது பல மார்க்கங்களின் ஒருங்கிணைப்பு. ஆனால், அருள்மிகு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களோ, சிவவிஷ்ணு ஐக்கியம் என்ற கருத்துடையவர். அவருடைய கருத்தை தீவிர சைவர்களாலும், தீவிர அசைவர்களாலும் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானம் , ஒரே சக்தி தான் பல ரூபங்களிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறது என்ற உண்மையை நிரூபித்துள்ளது/ கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞானிகளின் இதே கருத்தை தான் ,சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது பிரசங்கங்களில் தெரிவித்துள்ளார். சக்திவழிபாடு உடைய எனக்கு அவர் அகிலாண்டேஸ்வரியின் அவதாரம். என் உடன் பிறந்த சகோதரர்களுக்கு அவர் புவனேஸ்வரியின் அவதாரம். என் சகோதரிக்கு அவர் மகாதிரிபுர சுந்தரியின் அவதாரம். ஒரே சக்திக்கே நாங்கள் இவ்வாறு வெவ்வேறு பெயர்கள் கொடுத்துள்ளோம். எல்லோரும் இதனை புரிந்துகொள்வார்களா என்று எங்களுக்கு தெரியாது. கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, எங்கள் குலதெய்வமான வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு முத்துக்குமரன் அருளும், அவனுக்கு வேல் கொடுத்த அன்னை பராசக்தி பார்வதியின் அருளும் மேலும், மேலும் கை கொடுக்க , பிரார்த்திக்கிறேன்.

  3. ” நம் பாரம்பரிய ஆச்சாரியர்களை அனைவரையும் இணைத்து அவர்கள் வாயாலேயே தீண்டாமையும் சாதியமும் சாஸ்திர சம்மதம் உடையவை இல்லை என சொல்ல வைக்க வேண்டும்.”

    அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் ,

    நமது தரிசனங்களில் பஞ்ச பூதங்களும், மனிதனால் வணங்கத்தக்கவை என்றே சொல்லப்பட்டுள்ளது. எல்லாமே உயிருள்ளவை தான். உயிரற்றவை என்று ஒன்றும் இல்லை. மனிதனை மற்ற உயிரினங்களை விட மேலான பிறவி என்று சொல்லிக்கொள்வது , ஒரு பட்சபாதமே தவிர உண்மை அல்ல. இறைவன் அல்லது இயற்கையின் படைப்பில் அனைத்தும் சமம் என்பதையே நம் சாஸ்திரங்கள் தெளிவாக விளக்குகின்றன. மனிதனும், மற்ற ஜீவ ராசிகளும், சமமே. மனித இனம் மற்றவற்றை விட உயர்வு என்று சொல்லிக்கொள்வது , மனித இனத்தின் ஒரு ஈகோ தான்.

    மேலும் , வேதங்களும், உபநிஷத்துமே நமக்கு அதாரிட்டி. தீண்டாமையையும், சாதீயமும் போதிக்கும் எந்தநூலும் நமக்கு அதாரிட்டி அல்ல. எனவே, இந்துமதம் தீண்டாமைக்கு அடிப்படை என்று துர்ப்போதனை செய்த ஆபிரகாமிய பொய்யர்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நான் நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன். தெய்வத்தின் குரலை ஒரு மஞ்சள் புத்தகத்துடன் ஒப்பிட்டு தாங்கள் எழுதியது எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. மாறு படும் இடங்களை சுட்டிக்காட்டுவது உங்கள் உரிமை. தவறு எங்கு இருந்தாலும் அதனை திருத்திக்கொள்வோம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒன்றை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று தவறாக முடிவெடுத்தால், நம் நாட்டில் அரசியல் அமைப்பிலிருந்து, ஜனநாயகம் வரை எல்லாமே குப்பைதொட்டிக்கு தான் போகும். எங்கெங்கு தவறு காண்கிறோமோ, அவற்றை மட்டும் சீரமைப்போம் என்பதே சரியாக இருக்கும். நன்றி.

  4. //தெய்வத்தின் குரலை ஒரு மஞ்சள் புத்தகத்துடன் ஒப்பிட்டு தாங்கள் எழுதியது எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.//

    //நான் கூறியவை ஒரு குறிப்பிட்ட சூழலில் சாதிய கருத்துகளுக்கு தெய்வீக முலாம் பூசும் போக்கை கண்டித்து சொல்லப்பட்டவை. அவற்றை ஒட்டுமொத்த தெய்வத்தின் குரல் நூல்களுக்கு நீட்டுவிக்க வேண்டியதில்லை. அத்தகைய ஒரு பார்வை மயக்கம் என் வார்த்தைகளால் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.//

    I think I have made my views clear.

  5. // “தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஸ்ரீமான் ஜடாயு அவர்களுக்கும் செரிமானமாகாததைக் கவனித்துள்ளேன்.//

    அன்புள்ள கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    ரா.கணபதி ஏன் அப்படி பெயரிட்டார் என்பதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும். நீங்களே இங்கு குறிப்பிட்டுள்ளது போல. அவரை நான் குற்றம் சாட்டவில்லை. இவ்விஷயமாக எனது கருத்து என்ன என்பதை மட்டுமே பதிவு செய்துள்ளேன், அவ்வளவே.

    // என்னிடம் கேட்டால் “Complete Works of Swami Vivekananda” என்பதற்குக் கூட “தெய்வத்தின் குரல்” என்று குறிப்பிடுவதில் தவறேதுமில்லை என்றே சொல்வேன். ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க துறவிகளில் ஒருவரான நாராயண ஸ்வரூபமான ஸ்வாமி விவேகானந்தரின் நூற்தொகுப்பை “தெய்வத்தின் குரல்” என குறிப்பிடுவது சாஸ்த்ர சம்மதமானது தான் //

    கேள்வி சாஸ்திரம் குறித்தது அல்ல. அந்த நூலைத் தொகுத்தவர்கள் எந்தவிதமான கண்ணோட்டத்துடனும் பிரக்ஞையுடனும் அதைத் தொகுத்துள்ளார்கள் என்பதே. விவேகானந்தரின் கருத்துக்களிலேயே கூட வெகுசில கருத்துக்கள் என்னாலோ அல்லது சுவாமிஜியை பெரிதும் மதிக்கும் மற்றொருவராலோ முழுதாக ஏற்றுக் கொள்ளப் படாமல் இருக்கலாம் அல்லவா? Complete works என்ற பெயர் அதை மரியாதையுடன் விமர்சனம் செய்வதற்கான ஒரு வெளியை, ஒரு திறப்பை அளிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் திருவுருவம் எங்கள் வீட்டுப் பூஜை அறையில் உள்ளது. ஆயினும் அவரது மொழிகள் ஒரு மாமனிதரின் குரலாக இருப்பதையே நான் விரும்புவேன், “தெய்வத்தின் குரலாக” அல்ல.

    ஆனால் ரா.கணபதிக்கும் உங்களுக்கு அப்படி அல்ல என்று தோன்றுகிறது. “கயிலாயத்திலே சிவபெருமான் உமையவளிடம் சொல்கிறார்: நான் அவதரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது…” – ரா.கணபதி அவர் எழுதிய விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூலையே இப்படித் தான் ஆரம்பிக்கிறார் (அறிவுச்சுடரே அருட்புனலே). இது ஒரு பூரண வழிபாட்டு மனநிலை. ஆனால், விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள சுவாமிஜி பற்றிய எந்த நூலிலும் இது போன்ற ஒரு சித்தரிப்பை நீங்கள் பார்க்க முடியாது. குமரியிலுள்ள விவேகானந்தர் நினைவகத்தில் கூட பூஜை, புனஸ்காரம் எதுவும் கிடையாது என்பதைக் கவனித்திருப்பீர்கள். சுவாமிஜியின் வெண்கலச் சிலை மட்டுமே உள்ளது – சுற்றிலும் கொந்தளிக்கும் அலைகளின் ஓங்காரத்தையும் அதன் உள்ளுறையும் மகத்தான அமைதியையும் உள்வாங்கி.

    உங்களது மற்றும் கணபதி அவர்களது மனநிலை தவறு என்று நான் சொல்ல வரவில்லை. எனது மனநிலை அல்ல அது என்ற கருத்தை மட்டுமே பதிவு செய்கிறேன்.

  6. ஒரு தலைமுறையில் வாழ்ந்தவர்களின் சூழ்நிலை அடுத்த தலைமுறைகளில் வாழ்ந்தவர்களுக்கு புரிவது என்பது சிரமம். ஒவ்வொருவரும் பிறருக்கு தீர்ப்பு வழங்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பிறர் தனக்கு தீர்ப்பு வழங்குவதை விரும்பவில்லை. சிறிதுகாலம் இந்துமதத்தின் அனைத்து கோயில்களிலும் பெண்கள் மட்டுமே பூஜை மற்றும் சடங்குகளை செய்ய வேண்டும் என்று ஒரு ஏற்பாடு செய்யவேண்டும். ஆண்கள் சிறிது ஒதுங்கி இருப்பது தவறில்லை. உமை ஒரு பாகனான கபாலீசுவரருக்கும், ஸ்ரீதேவி பூதேவி சமேதரான திருப்பதி வேங்கடாச்சலபதிக்கும், பெண்கள் பூஜை செய்தால் தான் , இந்து மதத்தை பிடித்த ஆணாதிக்கம் என்ற பேய் ஒழியும். பெண்கள் பூஜை செய்தால் , இந்த கோயில்களின் புனிதம் கெட்டுவிடும் என்று யாராவது கருதினால் ,காஞ்சீபுரத்தில் ஒரு கோயில் ஆண் அர்ச்சகர் வீடியோ பார்த்திருப்பீர்களே, அவரை போன்றவர்களால் கெடாத புனிதம் பெண்கள் பூஜை செய்வதால் கெட்டுவிடுமா ? நம் இந்து மதத்தில் கன்னிப்பெண்களை அமரவைத்து தேவியாக பாவித்து, ஆவாகனம் செய்தும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். பெண்கள் பெரியகோயில்களில் பூஜை, அபிஷேகம் செய்ய ஏதாவது தடை இருக்கிறது என்றால் , இந்த கோயில்களை பெண்களே கைப்பற்ற நேரிடும். திருக்கோயில்கள் ஆண் பெண் என்ற வேறுபாடும், சாதிவேறுபாடும் இன்றி இந்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.

    நமது இந்து திருக்கோயில்களில் இவ்வளவு காலம் ஆணாதிக்க மோசடிக்காரர்களில் , சிலரால் வந்த பழிபாவம் நீங்கவும் இது உதவும். பெண்கள் பூஜை செய்யக்கூடாது என்றால், எதிர்காலத்தில் இந்த திருக்கோயில்களில் ஆண்களும் பூஜை செய்ய முடியாது. பெண்கள் பூஜை செய்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று எந்த தறுதலையாவது சொன்னால் , தக்க பாடம் புகட்டுவோம். மரத்தடி மாரியம்மன் கோயிலிலும், கிராமங்களில் உள்ள வேப்பமரத்தடி விநாயகப்பெருமான் கோயிலிலும் மட்டும் பெண்கள் பூஜை செய்தால் போதாது. அனைத்து கோயில்களிலும், பெரிய கோயில்கள் என்று சொல்லப்படும் சிதம்பரம் நடராஜப்பெருமான் கோயில், மதுரை மீனாட்சி திருக்கோயில், சென்னை திருமயிலை கபாலீசுவரர் திருக்கோயில், திருஅல்லிக்கேணி பார்த்த சாரதி திருக்கோயில், திருப்பதி மலையப்பசுவாமி ( வெங்கடாசலபதி) திருக்கோயிலிலும் பெண்கள் பூஜை செய்யும் நாளே இந்து மதத்தின் பொன்னாள் ஆகும்.

  7. “த்ருணாதபி ஸமீசீனம்” (புல்லைவிடவும் தாழ்ந்த பணிவு) என்ற முதுமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்த மகத்தான மனிதர் ஸ்ரீ குருஜி. ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஒரு ஸ்வயம்சேவகரின் குடிசைக்குள் குருஜி நுழைய, மகா தரித்திரரான அந்த ஸ்வயம்சேவகர் தலைகால் புரியாமல் வீட்டிலிருந்த மிக மிக அழுக்கான துணியில் வடிகட்டித் தந்த டீயையும் முகமலர்ச்சியுடன் வாங்கிக் குடித்தவர் அவர் (சுற்றீயிருந்தவர்கள் வயிறு குமட்ட ஆரம்பித்து விட்டதாம், எங்கு நமக்கும் டீ வந்துவிடுமோ என்று !).

    இந்து மதத்தின் பாரம்பரிய ஆசாரியார்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சாதியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான பிரகடனத்தை வெளிப்படுத்த முடியும் என ஸ்ரீகுருஜி உறுதியாக நம்பினார். 1965 உடுப்பி மாநாட்டில் பல பாரம்பரிய மடாதிபதிகளையும் அழைத்தார். இவர்களில் பலர் தங்களது காம, குரோத மோகங்களைத் துறக்காதவர்களே. என்னைவிட அந்த மடாதிபதியின் சீட் சில இஞ்ச்கள் பெரிதாக இருக்கீறதே, எப்படி ஆகும் என்று மடாதிபதிகள் கலாட்டா செய்த சம்பவங்களும் கூட நடந்தேறின. சில மடாதிபதிகள் குருஜியின் தியாகத்திற்கும், ஞானத்திற்கும் தகுதிக்கும் முன் தூசு போன்றவர்கள். ஆயினும் ஸ்ரீகுருஜி இந்துமதத்தின் பாரம்பரிய பிரதிநிதிகள் என்பதால் அவர்கள் அனைவரையும் அடிபணிந்து வணங்கினார். அது அந்த பீடத்திற்காகவும், மரபுக்காகவும், சாஸ்திர ஞானத்துக்காகவும் செய்யப் பட்ட மரியாதை. இதன் பொருள் அவர்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீகுருஜி ஏற்றுக் கொன்டார் என்பதல்ல. அப்போது குருஜியுடன் உடனிருந்த அணூக்கத் தொண்டர் சூரிஜி (சூரிய நாராயண ராவ்) அந்த அனுபவங்களை எல்லாம் கூட தனது நூலில் பதிவு செய்துள்ளார் (Sri Guruji reminiscences, K Suryanarayana Rao, vijyabharatahm pathippagam)

    நீங்கள் இங்கு தந்துள்ள ஸ்ரீகுருஜியின் கடிதத்தையும் இந்த வகையிலேயே பார்க்க வேண்டும். காஞ்சி மகா சுவாமிகளின் சாஸ்திர ஞானம், தியாகம், சன்னியாச ஒழுக்கம் ஆகியவற்றை அவர் மிக உயர்வாக மதித்தார், ஆனால் சாதியம் தொடர்பான கருத்துக்களைக் கட்டாயம் ஏற்கவில்லை.

  8. ///தெய்வத்தின் குரல்” என்று அதீத வழிபாட்டுணர்வுடன் பெயரிடப் பட்டிருக்கும் உபன்யாசத் தொகுப்பு நூலை இங்கு மறுமொழிகளில் பலர் சுட்டிக் காட்டுகிறார்கள் (என்னிடம் கேட்டால், “காஞ்சி பரமசாரியார் உபன்யாசங்கள் தொகுப்பு” என்ற பெயரே பொருத்தமானது என்பேன், Complete Works of Swami Vivekananda என்பது போல).///

    ஒருவர் அதீதமாக பிரியம் கொண்டிருக்கும் நபரை தெய்வம் என்றே அழைக்கவும் ஏன் வழிபடவும் ஹிந்து தர்மத்தில் முழு சுதந்திரம் உள்ளது. மனிதனை நீ எப்படி தெய்வமாக்கலாம் என்கிற கேவலமான தட்டையான கேள்விகளுக்கு அப்பாற்பட்டது தான் ஹிந்து தர்மம். ஹிந்துக்கள் பெரும்பாலும் இன்று தெய்வமென வணங்கும் பல கடவுளர்கள் கடவுளர்களாவதற்கு முன் மனிதர்களாக இருந்தவர்கள் தான் என்பது ஹிந்து தர்மத்தின் பாரம்பரிய வரலாறு! அப்படி ஒருவர் மிகவும் மதிக்கும் , வணங்கும் ஒருவரை தெய்வமாக நினைத்து வழிபட்டால் அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்ய வேண்டும் என்பது ஹிந்து தர்மத்தில் கட்டாயமும் இல்லை. ஹிந்து தர்மத்தின் பன்முகத் தன்மையின் சிறப்பே அது தான். அதனால் ஸ்ரீ பரமாச்சாரியாரை குரு என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவரை தெய்வம் என்று விளித்தாலோ அவரது உபன்யாசப் புத்தகத்திற்கு தெய்வத்தின் குரல் என்று அவர்பால் கொண்ட பக்தியால் அன்பால் பெயர் வைத்தாலோ அது தவறும் இல்லை! ஹிந்து தர்மத்திற்கென்று அதிகாரப்பூவ புத்தகங்கள் என்று எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் போது தெய்வத்தின் குரலை ஹிந்துக்களின் அதிகாரப்பூர்வமான புத்தகமாக தாமாகவே கற்பிதம் செய்து கொண்டு அதனைத் தூற்றத் துடிப்பவர்கள் ஹிந்து தர்மத்தின் பன்மைத்தன்மையை உணராமல் பேசும் அறியாமை கொண்டவர்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி ஸ்ரீ பரமாச்சாரியாரின் வியாசத்தை தெய்வத்தின்குரல் என்று கூறுவதில் தவறேதும் இல்லை!

  9. //கும்பகோணம் மடத்தின் அதிபதி திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் எளிய வாழ்க்கை நிச்சயம் ஒவ்வொரு சாது சந்நியாசியும் பின்பற்ற தக்க வாழ்க்கை. அவ்விதத்தில் அது மகோன்னதமானது வணங்கத்தக்கது. ஏன் ஒவ்வொரு சாது ஒவ்வொரு நல்ல சமுதாய தலைவரும் அவரை போல எளிய transparent வாழ்க்கை வாழ்ந்தால் இந்த நாடு எங்கோ சென்றிருக்கும். ஆனால் அவருடைய சாதி குறித்த கருத்துகள் பெண்கள் குறித்த கருத்துகள் விதவைகள் குறித்த கருத்துகள் ஆலய பிரவேசத்தில் அவர் கொண்டிருந்த நிலைபாடு ஆகியவை இந்து சமுதாயத்துக்கு மிக மோசமான தீமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எனவே அவை வெளிப்படையாக கண்டித்து புறந்தள்ள தக்கவை. //

    இத்தகைய சமரசமில்லாத விமர்சன அணுகுமுறைகள் மட்டுமே இந்து சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும். கண்மூடித்தனமான ஜால்ராக்கள் அல்ல.

    வாழ்த்துகள்

  10. அத்விகா

    //
    மேலும் , வேதங்களும், உபநிஷத்துமே நமக்கு அதாரிட்டி. தீண்டாமையையும், சாதீயமும் போதிக்கும் எந்தநூலும் நமக்கு அதாரிட்டி அல்ல. எனவே, இந்துமதம் தீண்டாமைக்கு அடிப்படை என்று துர்ப்போதனை செய்த ஆபிரகாமிய பொய்யர்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நான் நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன். தெய்வத்தின் குரலை ஒரு மஞ்சள் புத்தகத்துடன் ஒப்பிட்டு தாங்கள் எழுதியது எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
    //

    விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா அப்படின்னு ஒருத்தர் சொன்னா என்ன அர்த்தம் – பார்ரா நாம் எவ்வளவோ சொல்லியும் அவனுக்கு புரியலன்னு அர்த்தம். இதை இப்படி புரிஞ்சிகிரத விட்டுட்டு ஐயோ ஐயோ மரியாதா புர்ஷன் ராமனா சீதைக்கு சித்தப்பானு சொல்றதுன்னு பொலம்பின பிரச்சனையை சொன்னவர் பக்கலில் அல்ல

    அப்புறம்

    //
    சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களோ, சிவவிஷ்ணு ஐக்கியம் என்ற கருத்துடையவர். அவருடைய கருத்தை தீவிர சைவர்களாலும், தீவிர அசைவர்களாலும் ஏற்க முடியாமல் இருக்கலாம்.
    //

    ஒரு நிமிஷம் என்னடா வெஜிடேரியன் நான்-வெஜிடேரியன் விஷயத்துக்குள்ள புகுந்துட்டீங்கலோன்னு நெனச்சுட்டேன்.

    // ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானம் , ஒரே சக்தி தான் பல ரூபங்களிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறது என்ற உண்மையை நிரூபித்துள்ளது/ கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞானிகளின் இதே கருத்தை தான் ,சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது பிரசங்கங்களில் தெரிவித்துள்ளார்.
    //

    இதை முதலில் அவரா சொன்னார், இதெல்லாம் உபநிஷத்தில் இல்லையோ? இதை தான் பூஜை மனோபாவமேன்று சொல்கிறார்களா?

  11. அன்புள்ள sarang-

    தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உபநிஷதத்திலேயே உள்ளது என்பது உண்மை தான். அவர்தான் முதன் முதலில் சொன்னார் என்று நான் சொல்லவில்லை. இருந்தும் ” அவரும் சொன்னார்” என்று திருத்திக்கொள்கிறேன். அப்போது தங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று கருதுகிறேன். மீண்டும் நன்றியுடன்.

  12. திரு. கிருஷ்ணகுமார், வார்த்தைகளால் கீறுவது, உணர்ச்சிகளைச் சீண்டுவது, அனாவசியமான கேலிகள் போன்ற கீழ்த்தரமான உத்திகளைப் பின்பற்றாமல் தகுந்த நேரத்தில் பொறுப்புடனும், மிக்க கண்ணியத்துடனும், எதிர்த்தரப்பிற்கு முழுமையான கௌரவம் கொடுத்து எழுதப்பட்ட எதிர்வினை. வாழ்த்துக்கள்! -இதை வெளியிட்ட தமிழ்ஹிந்துவிற்கும்.

    எழுத்துப்பிழை இல்லாத உங்கள் மணிப்ரவாளத்தைக் கிண்டல் செய்பவர்களை நீங்கள் பொருட்படுத்தாதது நியாயம் தான். தமிங்கிலீஷ்காரர்களுக்கு உங்கள் நடை வெறுப்பூட்டுவது இயல்பே. ஆனால் இன்றைய நிலையில் தமிங்கிலீஷ் புரிகிற அளவிற்கு மனிப்ரவாளம் புரியாதவாறு நம் சொந்த நாட்டின் மொழியிலிருந்தே விலகிப்போய்விட்ட துர்பாக்கியவான்களே அதிகம். எனவே உங்கள் எழுத்துநடை தவறில்லையென்றாலும் அது சென்று சேரவேண்டியவர்களுக்குப் புரியாமலேயே போய்விடுவதற்கு வாய்ப்பு மிக அதிகம் என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    திரு அநீ தன் நிலையை தெளிவுபடுத்தியதை வரவேற்கிறேன். ஆனால், முதலில் எழுதும் போதே மிகத்துல்லியமாக எதை விமர்சிக்கிறேன், எதை அல்ல என்பதைச் சொல்லியிருந்தால் பின்னால் இப்படி மறுப்பதற்கும், தெளிவுபடுத்துவதற்கும் அவசியம் இருந்திருக்காது.

    திரு ஜடாயு, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்கள் மதிப்பிற்குரிய தலைவர்களை ‘மானனீய’, ‘பரம பூஜனீய’, ‘பூஜ்ய ஸ்ரீ’ என்றெல்லாம் கௌரவப்படுத்தி தங்கள் மரியாதையை வெளிப்படுத்துவதில்லையா? அதே போல் அவரவர் தங்களின் குருநாதர்களையோ, தலைவர்களையோ தங்களுக்கு உகந்த வகையில் தெய்வமாகவோ, பூஜிக்கத்தகுந்தவராகவோ விளிப்பது முற்றிலும் அவர்கள் சுதந்திரம். அங்கு நம் கருத்துக்களுக்கு இடமே இல்லை. அவை வெறும் நமக்கேயான சொந்தக் கருத்துக்கள் மட்டும் தான். மகாத்மா காந்தியை காந்தி என்பதும், பரமாச்சாரியாரை சந்திரசேகர சரஸ்வதி என்பதும் சரியுமில்லை, தவறுமில்லை. அவரவர் சொந்த கொள்கைகளைப் பொருத்தது.

  13. அன்பு சகோதரர்கள் க்ருஷ்ணகுமார், அரவிந்தன், ஜடாயு,

    வணக்கம்.

    ‘நம்மிடையிலான தர்க்கம் நமது ஞானத்தை விசாலமாக்கட்டும்’ என்பது தான் நமது பாரம்பரியம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனைப் போக்கு இருந்தே தீரும். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கூட கருத்து மாறுபடுகிறது. தந்தை சொற்கேட்டு வனம் செல்லும் தனையனுக்காக, ராமனின் நிழலான லட்சுமணன் தசரதனை ஏசுவது குறித்து கம்பராமாயணத்தில் காண்கிறோம். இது மனித இயல்பு. ஆனால், தர்க்கம் ஒரு எல்லையை மீற அனுமதிக்கக் கூடாது.

    தர்க்கத்தால் எந்த ஒருவரது கருத்தையும் மாற்றிவிட முடியாது. ஆனால், அதன் விளைவாக இரு தரப்பிலும் வெண்ணெய் எனத் திரளும் புதிய கருத்துருவாக்கங்கள் கண்டிப்பாக நமது ஞானத்தை உயர்த்தும். அந்த அடிப்படையில் க்ருஷ்ணகுமாரின் பவ்யமான இக்கட்டுரையால் மிகவும் மனம் நெகிழ்கிறேன். உண்மையில் இதே கருத்துக்களைத் தான் நானும் கொண்டிருந்தேன். ஆனால், க்ருஷ்ணகுமாரைப் புண்படுத்திய அந்த சர்ச்சையில் கருத்து ஏதும் சொல்லக் கூடாது என்று நான் தீர்மானமாக இருந்தேன்.

    ஒரு விஷயம் அறிவுபூர்வமாக இன்றி உணர்ச்சிப்பூர்வமாக எங்கு விவாதிக்கப்படுகிறதோ, அங்கு ஞானம் வளர வாய்ப்பில்லை. எனவே தான் நான் மௌன சாட்சியாக இருந்தேன். அதற்கு சங்கர மடத்தில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பும் காரணமாக இருக்கலாம். ஆயினும் சங்கர மடத்தை விமர்சிப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இது குறித்து தமிழ் ஹிந்து நண்பர்களிடம் நேரில் எனது கருத்துக்களை நான் பதிவு செய்திருக்கிறேன். குருஜியைக் கொண்டு க்ருஷ்ணகுமார் அளித்துள்ள விளக்கமே, அதற்கு காரணமாக இருந்தது.

    நமது நாடு பன்முகக் கலாசாரத்தில் ஒருங்கிணைந்த நாடு. அதுவே நம் வலிமை. இங்குள்ள மக்களை 800 ஆண்டு கால அன்னியர் ஆட்சியால் குலைத்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் நமது குலம், கோத்திரம், ஜாதி போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் தான். அவற்றை நாம் எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே சமயம், ஒருசிலர் ஜாதி அடையாளத்தால் குறுகுவதும், பலர் அதில் பெருமிதம் கொள்வதும் என்ற நிலை கண்டிப்பாக சமூக ஒற்றுமைக்கு உதவாது. எனவே தான், சங்கத்தில் ஜாதி வேற்றுமை பாராட்டப்படுவதில்லை. அங்கு காக்கி நிக்கர் அனைவரையும் ஒரே நிகர் ஆக்குகிறது.
    அதே சமயம், நாடு முழுவதும் பல சம்பிரதாயங்கள், சமயக் குழுக்கள் நீரோட்டமாகத் தொடர்ந்து வந்துள்ளன. அவை ஒவ்வொன்றின் தோற்றத்துக்கும் செயல்பாடுகளுக்கும் காரணம் இருக்கும். அவற்றின் தற்போதைய காலப் பொருத்தப்பாடின்மைக்காக அவற்றை விமர்சிக்க வேண்டியதில்லை என்பதே சங்க அறிமுகம் உள்ளவர்களின் கருத்தாக இருக்கும். ஏனெனில், யாரையும் புண்படுத்தாமல் அனைவரையும் இணைக்க வேண்டிய கடமையில் உள்ளவர்களுக்கு வேறு வழியில்லை. அதனால் தான், சில நேரங்களில் சங்கம் அமைதி காக்கிறது. (உதாரணம்: மதுரை ஆதீனம் விவகாரம்). இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்.

    காஞ்சி பரமாச்சாரியார் கருத்துக்களைத் தொகுத்து ‘தெய்வத்தின் குரல்’ என்று பிரசுரித்ததில் மேட்டிமைப் போக்கு இருப்பதாக விமர்சனம் வந்திருக்கிறது. ஜடாயுவின் விளக்கம் புரிகிறது. அதற்காக, அந்த நூலை முற்றிலும் நிராகரிக்க முடியாது. அது ஒரு வகையில் கருத்துக் கருவூலம். அதை முழுமையாகப் படித்தவர்கள் (நான் முழுமையாகப் படிக்கவில்லை) குறைவே. ஆயினும் அது ஒரு களஞ்சியம் போல நமக்காகக் காத்திருக்கிறது.

    அடுத்து, நம்மிடையே சமீபகாலமாக ஒரு ‘முற்போக்குச் சிந்தனை’ புதிதாகக் குடியேறி இருப்பதாகத் தெரிகிறது. நம்மால் நசுக்கப்பட்டவர்களுக்காகப் பேசும்போது, நசுக்கி வருபவர்களை விட்டுவிட்டு, அதற்குக் காரணமாக பிராமணர்களைத் தூஷிக்கும் திராவிட கும்பல்களைப் போல நம்மில் சிலரும் பேச ஆரம்பித்திருக்கிறோம். சமுதாய ஒருங்கிணைப்புக்காக ஒரு தரப்பை மட்டம் செய்து பேச வேண்டிய அவசியமில்லை.

    சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறிய கருத்துக்களில் சில பிற்போக்கானவையாக இருப்பது போலவே, அம்பேத்கர் கருத்துக்களிலும் கூட பல இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளன. ஆனால், அதை யாரும் சுட்டுவதில்லை. அப்படி சுட்டினாலும், அதை ‘பீமாராவ்’ சொன்னதாக யாரும் கூறியதில்லை. ஆனால், பரமாச்சாரியாரின் சில கருத்துக்கள் உடன்பாடில்லாதவை என்றவுடன் அதை ‘ச.சே.ச’ வின் கருத்துக்கள் என்று எழுதும் அளவுக்கு நம்மிடையே கண்ணியம் குறைந்துவிட்டது. பிறகு நம்மால் எப்படி ஹிந்து அறிவொளி இயக்கத்தை நடுநிலையுடன் நடத்த முடியும்?

    யாரையும் கடவுளாகப் போற்றவும் வேண்டாம்; கடையனாகத் தூற்றவும் வேண்டாம். எல்லா பிரிவு மக்களிடமும் உள்ள நேர்மறையான, ஆக்கப்பூவமான அம்சங்களை மட்டும் கவனத்தில் கொள்வோமே? க்ருஷ்ணகுமாரின் இக்கட்டுரை எதிர்நோக்குவது இந்த நிலையையே என்று கருதுகிறேன்.

    நன்றி.

    -சேக்கிழான்

  14. வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.

  15. சேக்கிழான்

    பாபா சாகேப் குறித்து நீங்கள் கூறுவதால் இந்த எதிர்வினை கூற வேண்டிவந்தது. எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. பாபா சாகேப் குறித்து அருண் சோரி எழுதிய நூலை சங்கம் ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டது. அதற்கு மறுப்பு கட்டுரைகள் விஜயபாரதத்தில் வெளிவந்தன. திரு சந்திர சேகர சரஸ்வதியின் சாதிய கருத்துகள் குறித்து அப்படி எந்த சிந்தனையாளரிடமிருந்தும் நூல்கள் வரவில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே அதை தொட்டுக் காட்டியுள்ளார். நிற்க. பாபா சாகேப் அம்பேத்கரின் எதிர்மறை விமர்சனங்கள் வெற்றிடத்தில் உருவானவை அல்ல. சனாதன தர்மத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட சாதிய கொடுமைகளுக்கும் நியாயப்படுத்தவே இயலாத அநீதிகளுக்கும் எதிரான எதிர்வினைகள். இதை குறித்து -தலித் தலைவர்கள் ஆட்சேபகரம் என நாம் கருதும் மொழியை பயன்படுத்துவதில் உள்ள நியாயத்தை குறித்து- தெள்ளத் தெளிவாகவே மூன்றாவது சர்சங்க சாலக் பரம பூஜனீய பாளா சாகேப் தேவரஸ்ஜி அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று ஜகத்குரு என சொல்லப்படுவர் கூறுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என பிரச்சாரம் செய்ய வைதீக பிரச்சாரகர்களை அவர் ஆசி கூறி அனுப்புவதும், 2009 இலும் கூட தலித் பெண்களுக்கு ஆசிரமத்தில் நீர் வழங்கியது சாஸ்திர சம்மதமா என ரமண மகரிஷியின் செயல்பாட்டை இந்த ஜகத்குருவின் பக்தர்கள் கேள்வி கேட்பதும் நிக்ழத்தான் செய்கின்றன. சங்கத்தின் பார்வை தெளிவாகத்தான் உள்ளது. சமுதாய சமரசம் என்கிற கோட்பாட்டில் திருந்த வேண்டியது சந்நிதானங்களும் ஜகத்குருக்களும்தான். திருந்துவார்கள் என நம்புவோம்.

    பணிவன்புடன்
    அநீ

  16. வைணவ அனுஷ்டனங்களை பின்பற்றும் குடியை சேர்ந்தவர்கள் நங்கள்! ஸ்ரீ மஹா பெரியவரின் கருத்துக்கள் பலவற்றுள் நாங்கள் வேறு படுவதில்லை! அந்த புத்தக தொகுப்பையும், “தெய்வத்தின் குரல்” என்ற பெயரையும் ஏற்பது எங்களுக்கு எந்த தவறாகவும் தெரியவில்லை! சங்கர, மத்வ, ஸ்ரீ ராமானுச மதங்களில் நாங்கள் எந்த பேதத்தையும் காணவில்லை! அடிக்கடி நாங்கள் சொல்ல விழைவது, எவ்வாறு புவியியல், அறிவியல், பூகோளம், பொறியியல் எவை அனைத்தும் தங்களுக்குள் அடித்து கொள்ள முடியாதோ, அவ்வாறே வைணவம், ஸ்மார்த்தம், சைவம் முதலிய பிரிவுகள் தங்களுக்குள் அடித்து கொள்ள முடியாது! ஏன் என்றால் முன்னது ஜட பொருட் சக்தியை விளக்குவது, பின்னது ஆத்மிக சக்தியை விளக்குவது, ஆகவே எப்பொழுதும் பாடங்கள் தங்களை பகைத்து கொள்ள முடியாது! இறை நிலையையும், வைதிகத்தையும் எதிர்க்கும் நாஸ்திகத்தையும் சனாதன தர்மத்தின் பிரிவாகவே நாம் கண்டு வருகிறோம் ( பார்க்க ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் ஸ்ரீ ஜாபாலி ஸ்ரீ ராம சம்வாதம்). நிற்க!

    நம்முடைய தர்மத்தில் வினா எழுப்புவதற்கு எந்த தடையும் கிடையாது! ஆயினும் வினா எழுப்புவதற்கு ஒரு தகுதி வேண்டும்! ஸ்ரீ மஹா பெரியவரை நோக்கி விரல் நீட்டும் தகுதி உடையவர்களை நாம் இருக்கிறோமா என்று பார்க்கும் கடையேன் என்னும் ஸ்வபாவம் (நைச்சியம்) பிரதான மானது! இந்த நைச்சியமே நமது தர்மத்தின் உயர்ந்த ஆணி வேர்! சனாதன தர்மத்திற்கு கூட ‘ஆப்ரஹாமிய’ சாயம் பூசும் போதே இத்தகைய விட்டேத்தி தன மான விமர்சனங்களும், கருத்துகளும் தோன்றும்! ( பிரேசெதசர்கள் ஸ்ரீ கண்ணனை காண பல லக்ஷம் வருடங்கள் தவம் செய்தனர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுவதை ஏற்கின்றீர்களா? ஏற்கின்றோம் என்றால், இறைவனையும் இறை நிலையையும் புரிந்து கொள்ள எத்தகைய ஆழ்ந்த காத்திருத்தல் வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்) நிற்க!

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! திரு அ நீ மற்றும் திருமிகு அத்விகா போன்றோர்கள் ‘ஆப்ரஹாமிய-கம்முனிச’ பார்வையிலேயே நமது தர்மத்தையும் பார்கிறார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து! அதற்கு ஆதாரம்
    //” இந்து மதத்தை பிடித்த ஆணாதிக்கம் என்ற பேய் ஒழியும். பெண்கள் பூஜை செய்தால் , இந்த கோயில்களின் புனிதம் கெட்டுவிடும் என்று யாராவது கருதினால் ,காஞ்சீபுரத்தில் ஒரு கோயில் ஆண் அர்ச்சகர் வீடியோ பார்த்திருப்பீர்களே, அவரை போன்றவர்களால் கெடாத புனிதம் பெண்கள் பூஜை செய்வதால் கெட்டுவிடுமா ? நம் இந்து மதத்தில் கன்னிப்பெண்களை அமரவைத்து தேவியாக பாவித்து, ஆவாகனம் செய்தும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். பெண்கள் பெரியகோயில்களில் பூஜை, அபிஷேகம் செய்ய ஏதாவது தடை இருக்கிறது என்றால் , இந்த கோயில்களை பெண்களே கைப்பற்ற நேரிடும். திருக்கோயில்கள் ஆண் பெண் என்ற வேறுபாடும், சாதிவேறுபாடும் இன்றி இந்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை//”

    இதே கோணத்தில் பார்த்தால் ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் முதலான இதிகாசங்கள் ஆணாய் இருக்கிறார் என்று சொல்லப்படுவதாகவே இறைவனை முன்னிருத்துகின்றன! இவர்களுக்காக வேண்டுமானால் தாயார் பரமாக இந்த இதிகாசங்களை மாற்றி எழுத வேண்டும்! ஸ்ரீ வால்மீகி மகரிஷியே தாயாரின் பெருமையை சொல்வதாகவே ஸ்ரீ ராமாயணத்தை கூறுகிறார்! வைணவ அந்தண குலத்தில் பிறந்தவன் என்பதற்காக ‘அர்ச்சகர்’ என்னும் பிரிவை சேராத என்னால் எந்த கோயிலிலும் இறை வடிவங்களை தொட முடியாது! இது நமது பாரம்பரியத்தை அடிப்படையாய் கொண்டது! தாயாரின் வடிவமாய் திகழும் பெண்களுக்கு பூஜைகளும், திருகோயில் ஆராதனங்களும், அவசியம் கிடையாது என்பது சம்ப்ரதாயம்! காட்டில் போய் தவம் செய்த அத்ரி மகரிஷிக்கு கிடைக்காத பேறு பதிவ்ருதயான அனுசுயைக்கு கிடைத்தது! கொலையுண்ட கோவலனுக்கு கிடைக்காத பேறு கற்பிர்கரசியான கண்ணகிக்கு கிடைத்தது! ஸ்ரீ இராமாயணத்தில் எந்த இடத்திலும் எம்பெருமானின் ஸ்வரூபத்தை காணும் பேறு வேறு எவருக்கும் வைக்கவில்லை மண்டோதரியை தவிர! மண்டோதரி கொலை களத்தில் அண்ணலை கண்ட மாத்திரம் பேசும் முதல் வார்த்தை ” ஒ! பரமாத்மா..” அன்னையான மண்டோதரிக்கு மாத்திரம் இறைவன் சங்க,சக்ர,கதா, பத்ம பாணியாய் காட்சி கொடுத்தான்! இன்னும் எவ்வளவோ எழுதலாம்! நிற்க!

    இன்றைய மாற்று மத சகோதரர்களை விட, நமது அப்பாவி ஹிந்து தர்ம சகோதரர்களை விட, இந்து activist என்று சொல்லிக்கொள்ளும் பேர்களுக்கே, நமது தர்மத்தை பற்றிய சரியான புரிதல் எள்முனை அளவும் கிடையாது என்பது நிதர்சனம்!

  17. //சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறிய கருத்துக்களில் சில பிற்போக்கானவையாக இருப்பது போலவே, அம்பேத்கர் கருத்துக்களிலும் கூட பல இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளன. ஆனால், அதை யாரும் சுட்டுவதில்லை. அப்படி சுட்டினாலும், அதை ‘பீமாராவ்’ சொன்னதாக யாரும் கூறியதில்லை. ஆனால், பரமாச்சாரியாரின் சில கருத்துக்கள் உடன்பாடில்லாதவை என்றவுடன் அதை ‘ச.சே.ச’ வின் கருத்துக்கள் என்று எழுதும் அளவுக்கு நம்மிடையே கண்ணியம் குறைந்துவிட்டது. பிறகு நம்மால் எப்படி ஹிந்து அறிவொளி இயக்கத்தை நடுநிலையுடன் நடத்த முடியும்?//

    திரு. அரவிந்தன் நீலகண்டன், மேலே அவரின் பின்னூட்டத்தில் “திரு.” சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்று குறிப்பிட்டிருக்கிறார். மரியாதையாக “பாபா சாகேப்” அம்பேத்கர் என்றும் ஒப்பமிடும்போது “பணிவன்புடன்” என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

  18. “ஒருவர் அதீதமாக பிரியம் கொண்டிருக்கும் நபரை தெய்வம் என்றே அழைக்கவும் ஏன் வழிபடவும் ஹிந்து தர்மத்தில் முழு சுதந்திரம் உள்ளது. மனிதனை நீ எப்படி தெய்வமாக்கலாம் என்கிற கேவலமான தட்டையான கேள்விகளுக்கு அப்பாற்பட்டது தான் ஹிந்து தர்மம். ……. மற்றபடி ஸ்ரீ பரமாச்சாரியாரின் வியாசத்தை தெய்வத்தின்குரல் என்று கூறுவதில் தவறேதும் இல்லை!”

    “திரு ஜடாயு, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்கள் மதிப்பிற்குரிய தலைவர்களை ‘மானனீய’, ‘பரம பூஜனீய’, ‘பூஜ்ய ஸ்ரீ’ என்றெல்லாம் கௌரவப்படுத்தி தங்கள் மரியாதையை வெளிப்படுத்துவதில்லையா? ………. மகாத்மா காந்தியை காந்தி என்பதும், பரமாச்சாரியாரை சந்திரசேகர சரஸ்வதி என்பதும் சரியுமில்லை, தவறுமில்லை. அவரவர் சொந்த கொள்கைகளைப் பொருத்தது.”

    ராம் மற்றும் பிரகாஷ் சங்கரன், ஜடாயு, ‘தெய்வம்’ என்ற விளியை கேள்விக்குட்படுத்தவில்லை. பின்வரும் அவரது வரிகள் இதை தெளிவாக்கும் என்று நம்புகிறேன்.

    “உங்களது மற்றும் கணபதி அவர்களது மனநிலை தவறு என்று நான் சொல்ல வரவில்லை. எனது மனநிலை அல்ல அது என்ற கருத்தை மட்டுமே பதிவு செய்கிறேன்.”

  19. காலத்தின் நிகழ்வுகளை அந்தந்தக் காலக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் . ஆனால் நமது அறிவுஜீவிகள் சமகாலப் பார்வையில் பார்க்க எண்ணும்போது குழம்பிப் போய் அவற்றை வாசிப்பவர்களையும் குழப்பி விடுகிறார்கள் என்பதுதான் இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம். இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு பெரிய செய்தி. தலித் மாணவர்களுக்கு பள்ளியில் இடம் கொடுப்பதை எதிர்க்கும் “ஜாதி இந்துக்கள்” என்று விவரித்துள்ளது. ஜாதி இந்துக்கள் என்றால் பிராமணர்களா, முதலியாரா, வன்னியரா என்று சொல்லவில்லை அதனை எந்த திராவிட இயக்கமும் கண்டித்து போராட முன் வரவில்லை . ஆனால் திராவிடக்கழக கும்பல் பார்பன ஆதிக்கத்தை பற்றி பேசும். அதே போல்தான் திரு அரவிந்தன் நீலகண்டனின் பார்வையும் அமைந்துவிட்டது என்பது வருந்ததக்கது.
    எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் என்பதனை சரியாகப் புரிந்து கொண்டால் வீண் விவாதங்களுக்கு வேலை இல்லை.

  20. அன்புள்ள மித்திரன் அவர்களுக்கு,

    இப்போதைய உலகில் இல்லாமல் எந்தக்காலத்திலோ வாழ்கிறீர்கள். நமது சம்பிரதாயங்கள் எல்லாம் மனிதரால் உருவாக்கப்பட்டவை தான். காலத்தின் தேவைக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டியவையே. ரயில்வே ஸ்டேஷன் , கடற்கரை என்று பல பொது இடங்களிலும் ஆபிரகாமிய மத மாற்ற பிரச்சாரகர்கள் , தங்கள் மத நூலை இலவசமாக கொடுத்து என்ன பிரச்சாரம் செய்கிறார்கள் தெரியுமா?

    ஒன்று:-

    உங்கள் மதத்தில் உங்களுக்கு வேதம் கற்றுத்தரப்படவில்லை .ஏனெனில் அது உண்மையான வேதம் அல்ல. உண்மையான வேதம் என்றால் கடவுளால் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். உயர் சாதியினரில் ஒரு பிரிவினர் மட்டும் படிப்பது எல்லோருக்குமான வேதம் அல்ல. நாங்கள் மனிதஇனம் முழுவதுக்கும் பொதுவான வேதத்தை உங்களுக்கு இலவசமாக தருகிறோம். படித்து எங்கள் புனிதமான மதத்தில் சேர்ந்து சொர்க்கம் செல்லுங்கள்.

    இரண்டு:-

    உங்கள் இறைவழிபாட்டு தலங்களில் , கர்ப்பக்கிரகம் வரை சென்று நீங்கள் கடவுள் விக்கிரகத்தை தொட்டு , அபிஷேகம் செய்யவோ, மலர்களை அணிவிக்கவோ உங்களுக்கு அனுமதி கிடையாது.ஏனெனில் அது உங்கள் மதம் அல்ல. மேல் சாதியினரில் ஒரு பிரிவினரின் மதம் மட்டுமே. எனவே, எங்கள் மதத்துக்கு வந்தால், உங்களுக்கு வேதம் இலவசம். எங்கள் வழிபாட்டு தலங்களில் நீங்கள் பாதிரி ஆகலாம். உங்கள் மதத்தில் இது முடியாது.

    மதமாற்ற வியாபாரிகள் செய்யும் பிரச்சாரங்களையும், அதனால் பாதிக்கப்பட்ட உண்மையான இந்து குடும்பங்களையும் பற்றி எனக்கு நன்கு தெரியும். மத மாற்றிகளுக்கு நாம் நல்ல பதிலடி கொடுக்காவிட்டால், தாழ்த்தப்பட்டவர்களை முழுவதும் மதம் மாற்றி, இந்து கோயில்களில் வழிபடவும் மக்கள் இல்லை என்ற சூழ்நிலையை உண்டாக்கி விடுவார்கள். பல தென் மாவட்டங்களில் இது நடந்து வருகிறது. கோயில்களில் வழிபாட்டுக்கு பக்தர்கள் வராத சூழ்நிலையில், ஆண்கள் மட்டும் உட்கார்ந்து யாருக்கு பூஜை செய்யப்போகிறீர்கள் ? ஒரு சினிமா வசனம் நினைவுக்கு வருகிறது. ஆளில்லாத கடையில் யாருக்குடா இத்தனை வேகமாக டீ ஆத்துறே? அதே கேள்வி நமது திருக்கோயில்களை பற்றியும் கேட்கும் காலம் வராமல் தடுக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் கவலைப்படுகிறோம்.

    மதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் , அந்த கவலைகள் காரணமாக தான் , சீர்திருத்தங்கள் தேவை என்பதையும் , அதனை மத தலைமைகளும் , ஆதீன கர்த்தர்களும் செய்ய தவறினால் , எங்கள் இந்து சமுதாயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து எழுதிவருகிறார். இனியும் சாதி வித்தியாசமும், ஆண் – பெண் வித்தியாசமும் பார்த்தால், இந்து மதம் மட்டுமல்ல அது எந்த மதமானாலும் உலகில் இருக்கமுடியாது. மாறித்தான் தீரவேண்டும்.

    மித்திரன் அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம், சமீபத்தில் ஒரு சிவன் கோயிலில் திருவிழாவுக்கு சாமி கும்பிட நான் குடும்பத்துடன் போயிருந்த போது , பாட்டியும், இரண்டு பேத்தியுமாக ஒரு குடும்பத்தில் மொத்தம் மூணு பேர் வந்திருந்தார்கள். சாமி விக்ரகங்கள் வாகனத்தில் வீதி வலம் வரும்போது , பேத்திகள் இருவரும் பாட்டியிடம் கேட்டார்கள் – ஏன் பாட்டி, சாமிக்கு பெரிய வாகனமும் , அம்மனுக்கு சின்ன வாகனமும் வைக்கிறார்கள்? அம்மன் என்றால் மட்டமா என்று கேட்டது பேத்தி. நான் அதிர்ச்சி அடைந்தேன். பாட்டி பதில் சொல்லும் முன்பே நான் குறுக்கிட்டு , அம்மா குழந்தை, நீ நினைப்பது போல இல்லை. அந்த காலத்தில் வாகனங்கள் செய்யும் போது, இடவசதி, திரவிய வசதி போன்ற பல கட்டுப்பாடுகளால் , ஒரே மாதிரி வாகனங்கள் செய்ய முடியவில்லை. மற்றபடி நீ நினைப்பது போல, ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நீ பெரிய பெண் ஆனதும் நிறைய பணம் சம்பாதித்து , அம்பாளுக்கு பெரிய வாகனம் வாங்கிக்கொடு. கோயிலில் அதை பயன்படுத்தி திருவிழா நடத்துவார்கள் என்று சொன்னேன்.

    நம் தலைமுறை போல இல்லாமல், இந்த தலைமுறை மாற்றி சிந்திக்கிறது, எனவே தக்க சீர்திருத்தங்கள் செய்யத்தவறினால் , எந்த மதமாயினும் மக்களால் தூக்கி எறியப்படும். பெரியவர் மித்ரனுக்கு புரியாமல் இருக்கலாம். மற்ற நண்பர்களாவது புரிந்து கொண்டால் நல்லது.

    என் மைத்துனர் மகள்கள் இருவரும் அவர்களின் அம்மாவழிப்பாட்டியிடம் கேட்கிறார்கள் தாத்தா மட்டும் தினசரி சாமி பூஜை செய்கிறார். நீ ஏன் ஒரு நாள் கூட பூஜை செய்யவில்லை ? பாட்டி சொன்னார்கள்- உங்கள் தாத்தாவுக்கு உடம்பு முடியாத நாட்களில் மட்டும் நான் தான் பூஜை செய்கிறேன் என்று.

    உடனடியாக , அனைத்து இந்து திருக்கோயில்களிலும் சாமி அம்மன் இரண்டுக்குமே ஒரே அளவில் வாகனங்களை செய்ய வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் இதுவும் கூட ஒரு தவறான விமரிசனம் செய்ய வாய்ப்பளித்துவிடும். நான் பார்த்த 500- க்கு மேற்பட்ட திருக்கோயில்களில் எல்லாவற்றிலும் சுவாமியைவிட அம்மனின் வாகனம் சிறியதாகவே செய்துள்ளனர். எனக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.

    மித்திரன் சாமி விக்கிரகத்தை தொடுவதால் ஒரு புண்ணியமும் இல்லை. ஆனால் நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் கோயில்களில் பல காலம் அனுமதிக்கப்படாமல் இருந்த சாதியினர் , சாமி விக்கிரகத்தை தொடுவதால், நம் மதத்தில் பல பிரச்சினைகள் தீரும். மத மாற்ற வியாபாரிகளின் பொய் பிரச்சாரம் எடுபடாமல் போகும். இறைவழிபாடு குறித்த சடங்குகளில் எல்லா சாதியினருக்கும் ஆண்/ பெண் என்றஎ பேதம் இன்றி, உரிய பங்கு அளிக்கப்படாமல் இனியும் கால தாமதம் செய்தால், கால தாமதம் செய்பவர்கள் நம் நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே இனியாவது திருந்துங்கள். மத தலைவர்கள் , ஆதீன தலைவர்கள் திருந்தினால், மற்றவர்களிடையேயும் மிக நல்ல மாற்றம் ஏற்படும்.

    மித்திரன் அவர்களுக்கு, கம்யூனிசத்தை பற்றியும் தெரியவில்லை. ஆபிரகாமிய மதங்களை பற்றியும் தெரியவில்லை. கம்யூனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள். ஆனால் ஆபிரகாமிய மதங்கள் தங்கள் கடவுள் நம்பிக்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு பிற மதத்தினரின் நம்பிக்கைகளை அழிக்க திட்டமிட்டு செயல் படுத்துபவர்கள். எப்போதும் all inclusive – ஆக இருப்பது இந்து மதம் மட்டுமே.

  21. சேக்கிழான் அவர்களே…..

    //நமது நாடு பன்முகக் கலாசாரத்தில் ஒருங்கிணைந்த நாடு. அதுவே நம் வலிமை. இங்குள்ள மக்களை 800 ஆண்டு கால அன்னியர் ஆட்சியால் குலைத்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் நமது குலம், கோத்திரம், ஜாதி போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் தான். அவற்றை நாம் எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை.//

    இதையேதான் சார் சாதி ஒழிப்பு திருமணங்கள் பற்றிய கட்டுரையில் நானும் சொன்னேன்…..என்னப்போட்டு காச்சி எடுத்துட்டாங்களே…..

  22. மித்ரன் அவர்களே….

    // இன்றைய மாற்று மத சகோதரர்களை விட, நமது அப்பாவி ஹிந்து தர்ம சகோதரர்களை விட, இந்து activist என்று சொல்லிக்கொள்ளும் பேர்களுக்கே, நமது தர்மத்தை பற்றிய சரியான புரிதல் எள்முனை அளவும் கிடையாது என்பது நிதர்சனம்!//

    இந்த வருத்தம் எனக்கும் உண்டு……

  23. அத்விகா அவர்களே…..

    ஆபிரகாமிய பிரச்சாரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டீர்கள் போலும்…….

    என் சொந்த ஊர் பதினெட்டு ஊர்களை உள்ளடக்கிய [தாய்]
    கிராமம்…..எங்கள் மொத்த கிராமத்துக்கும் [பதினெட்டு ஊர்களுக்கும் ] சேர்த்து ஒரு ஒரு அய்யர் குடும்பம் மட்டும்தான்….அதுவும் பக்கத்து ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் பூஜை செய்பவர்…..[ அய்யர்…அய்யங்கார் வித்தியாசமெல்லாம் எங்களுக்கு தெரியாது] எல்லா வீட்டு கல்யாணம் ,வீடு புண்யாசனை , கருமாதி எல்லாத்துக்கும் அவர்தான் ……எங்கள் ஊரில் மட்டும் [ மொத்த கிராமத்துக்கும் அல்ல ] ஐந்து அம்மன் கோயில்கள்…..பனிரெண்டு விநாயகர்கள் உண்டு[ குலக்கோயில்கள் தனி ]…..ஒரு கோயிலில் கூட அய்யர் பூஜை செய்வது கிடையாது….. எல்லா கோயில்களிலும் பண்டாரங்கள் தான் பூஜை செய்கின்றனர்…….. அது தவிர குலதெய்வ கோயில்களில் அந்தந்த சாதியினர்தான் பூசாரிகள்….. ஒவ்வொரு சாதியிலும் பூசாரி குடும்பம் என்று உண்டு….

    ஆக பிராமணர்கள் மட்டும்தான் பூஜை செய்கிறார்கள் என்பது ஹிந்து விரோத சக்திகளின் பிரச்சாரம்…..உண்மை நிலை அதுவல்ல…..

    அந்நிய மதங்களிடம் ஆயிரம் அழுக்குகள் உண்டு….அவர்கள் அதை மறைத்துக்கொண்டு நம்மிடம் உள்ள குறைகளை பூதாகரமாக்கி பிரச்சாரம் செய்கிறார்கள்…..அவர்களை பார்த்து உன்னுடைய யோக்கியதை என்ன என்று கேட்டால் போதும் ……ஓடிவிடுவார்கள்…..அதை விடுத்து நாம் அவர்களைப்போல் மாற வேண்டியதில்லை….

    மற்றபடி உங்கள் ”புரட்சிகரமான ” ஆலோசனைகள் எல்லாம் ஆரிய சமாஜம் , பிரம்ம சமாஜம் போன்றவை முயற்சி செய்தவை தான்…..இன்று அவர்களை காணவில்லை….நம்முடைய மதம் நிற்கிறது..

  24. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசய ஸ்ரீ அரவிந்தன், ஸ்ரீ ஜடாயு மற்றும் அன்புக்குரிய ஸ்கோதரர்களுக்கு வணக்கங்கள். ஒரு சனாதனி வைதீக ஹிந்து வாக ஸ்ரீ மஹாசயரியன் ஆதங்கம் தெய்வத்தின் குரல் நூலை ஆபாச நூலாகக்கூறுவது நியாயமா? என்றக்கருத்து நியாயமானது தான்.
    குரு சாக்ஷாத் இறைவனின் மறுவடிவம் என்பது ஹிந்து சமயத்தின் ஆதார நம்பிக்கை.
    திரு மூலர் பெருமானும் குருவே சிவமெனக்கூறினன் நந்தி எனக்கூறுவது இங்கே குறிப்பிடத்தக்கது. குருவின் வழி ஆன்ம விடுதலை என்பது நமது பாரம்பரியத்தின் அடி நாதம். ஆக ஸ்ரீ காஞ்சி மடத்தினை குருபீடமாகக்கொண்டவர்களுக்கு அவர் தெய்வமே. அவரை ஸ்ரீ நடராஜராகவோ ஸ்ரீ நாராயணராகவோ பார்ப்பது அத்தகைய அடியார்களைப்பொருத்தது. அதில் தவறேதுவும் இல்லை.
    சன்யாசிகளை பெரியவர்களை மரியாதையாக அழைப்பதையும் ஹிந்துப்பாரம்பரியத்தின் அடிப்படை விழுமியமாகவே கருதவேண்டும். ஆகவே ஸ்ரீ பரமாச்சாரியாரை(அவரது சாதி வர்ணம் வேத அத்தியயனம், ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு ஆகியவை த்தொடர்பானக் கருத்துக்கள் எள்ளவு ம் ஏற்புடையன அல்ல என்ற போதிலும்) வெறுமனே ஸ்ரீ அரவிந்தன் அவர்கள் “கும்பகோணம் மடத்தின் அதிபதி திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி” என்று குறிப்பிடப்படுவது சரியன்று. குறைந்தபட்சம் சுவாமிகள் என்ற அடைமொழி தேவை. அண்ணல் காந்தி அடிகளை ஸ்ரீ ஜடாயு அவர்கள் வெறுமனே காந்தி என்று குறிப்படுவதும் சரியன்று. இவையெல்லாம் பாரம்பரிய பிறழ்வு. மேற்கத்திய மோகம் என்றே கருதுகிறேன்.
    இங்கே அடியேனின் வாழ்வில் பள்ளியிலே நடந்த ஒரு சிறு நிகழ்வு. பன்னிரண்டாம் வகுப்பில் படித்தக்காலத்தில் ஷாகாவுக்கு தொடர்ந்து செல்வது வழக்கம். அந்தக்காலத்தில் ஸ்வாமி விவேகானந்தர் அமைப்பினர் நடத்தியப்பேச்சுப்போட்டியில் முதல் இடம்பெற்றேன். அந்தபரிசளிப்பு விளாவிற்கு கோவை ஸ்ரீ ராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீ தன்மையானந்தா சாமி வந்திருந்தார். அவரிடம் பரிசுபெற்ற அடியேன் வெறுமனே வணக்கம் சொன்னேன். அருகில் இருந்த ஸ்ரீ விஸ்வனாதன் ஜி(அப்போது நீலகிரி கோவை பிரச்சாரக்காக இருந்ததாக நினைவு) சுவாமிஜியின் காலில் விழுந்து வணங்கு அது தான் நமது பாரம்பரியம் என்றார். உடனே அதை செய்தேன். அவர் இன்று எங்கு இருக்கிறார் என்பது எனக்கு த்தெரியாது ஆனால் இன்றும் அந்த நினைவைப்போற்றுகிறேன்.
    ஆனால் ஹிந்து சமயத்தில் சாதி, வர்ணம், பாலினம்(ஆண்-பெண்) ஆகிய ஏற்றத்தாழ்வுகளை யார் எந்தப்பீடத்திலுந்து வலியுறுத்தி சொன்னாலும் அந்தக்கருத்தை ஏற்கவேதேவை இல்லை.

  25. ஸ்ரீ அத்விகா அவர்களி வழிபாட்டில் ஆண்பெண் சமத்துவம் நூற்றுக்கு நூறு ஏற்புடையது. அனைவரும் கருவறைவரை சென்று ஆண்டவனை தொட்டு நீராட்டி மலர் தூவி வழிபடுவது இன்றைக்கு மிக அவசியம். காசியில் உள்ள ஸ்ரீ விஸ்வனாதரும் ஸ்ரீ சைல மல்லினாதரும் மதுரை ஸ்ரீ சோமசுந்தரரும் வெவ்வேறு அல்ல எனும் போது அங்குள்ள வழிபாட்டுமுறையை மதுரையிலும் ப்பின்பற்றலாமே.

  26. அத்விகா

    பெண்ணுரிமை கொடியை உயர்தியாகிவிட்டதா? கோவிலில் தாயார் வாஹனம் சின்னதா இருக்கு, சந்நிதி சின்னதா இருப்பதெல்லாம் பெண்ணுரிமை விஷயமா? கோவிலில் ஒரு பரமாத்மா மற்றவரெல்லாம் ஜீவாத்மா,. தாயார் ஜீவாத்மா அதனால சின்ன வாஹனம், சின்ன சந்நிதி. ஆண் ஆழ்வார்களுக்கு இல்லாத சந்நிதி, பல்லக்கெல்லாம் ஆண்டாளுக்கு இருக்கே ?

    இந்த காலத்தில் சிலர் மாத்தி (இஷ்டம் போல) யோசிப்பதால் கோவிலை மாத்தி . கட்டனுமா.

    இப்படி ஆம்பளை மட்டும் ஏன் பூஜை செய்ய வேண்டும், பொம்பளை செஞ்சா ஏன்னா என்றெல்லாம் கேள்வி கேட்கும் உங்களுக்கு குடம்ப அமைப்பு என்றால் என்ன என்று சரியாக தெறிந்திருக்க வாய்ப்பில்லை. சாரதா அம்மாவை பற்றி ராமக்ருஷ்ண மடத்தில் போட்டிருக்கும் ஒரு புத்தகம் வாங்கிப் படியுங்கள்.
    சரி நான் கேட்கிறேன், கோவிலில் பொய் பூஜை செய்தால் தான் பெண் மேன்மை பெற முடியுமா. அப்பொழுதான் அவளது பங்களிப்பு பூர்தியாகுமா ?

  27. மரியாதைக்குரிய காஞ்சிப் பெரியவரின் சாதி வேற்றுமைக் கருத்துகள் அத்வைத மார்க்கத்துக்கு உகந்ததா..?!!

  28. I dunno why there is so much controversy about a title, that too a book which has been read by very few. Paramacharya was no doubt a great person but he had his flaws.

    What is important now is not about him. As Advika has very rightly put it, it ius hinduism which is at peril. Right in front of kapaleeswarar temple in chennai aorund noon, some persons were distributing pamplets denigrating hindu Gods & Goddesses. Some people complained to the police & they were taken away.

    Hindu religious leaders should reach out to the people. They are doing it but it not enough. There is still a widespread feeling that hinduism means brahminism.

    This must be set right.

  29. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்கட்கும் எனது நன்றிகள்.

    அன்பார்ந்த ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் சேக்கிழான் மஹோதயர்களுக்கு,

    மனதில் இருந்த வேறுபடும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற படிக்கு இந்த வ்யாசம் சமர்ப்பிக்கப் பட்டது.

    “தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை” என்ற வாசகங்கள் ஒவ்வொரு வ்யாசத்தின் கீழும் தள நிர்வாகிகளால் பதிவு செய்யப்படுகிறது.

    சங்கத்தில் சர்ச்சா (விவாதம்) மற்றும் பைடக் (கலந்தாலோசனை) போன்ற நிகழ்வுகளில் கருத்துப்பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன. பேசப்படும் கருதுபொருளிலிருந்து விலகாமை மற்றும் மேலே குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி கறாரான கருத்துப்பரிமாற்றங்கள் செய்வதற்கு சங்கப்பயிற்சி முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கருத்துப் பரிமாறும் நபரையோ கருத்தின் தன்மையையோ விமர்சிக்காமல் கருத்துப்பரிவர்த்தனம் சாத்யம் என்பது என் புரிதல். என் உத்தரங்களில் பலமுறை நான் இந்நிலைப்பாட்டிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால் இது என் அளவுகோல்.நாம் பகிரும் கருத்துக்களில் ஆழம் இருக்குமானால் நாம் மறுக்க விழையும் கருத்துக்களையும் நம் நிலைப்பாடுகளையும் அது தானாக தெரிவு செய்யும். இந்த அளவுகோலில் இருந்து அதிகம் விலகாமல் நடைபெறும் விவாதங்கள் அதன் உத்தேச பயனான கருத்துத் தெளிவை நமக்கு நல்கும் என்பது எனது அபிப்ராயம்.

    “பராஹா” மென்பொருளில் பழக்கமான எனக்கு இப்போது “அழகி” மென்பொருளில் தட்டச்சுவது ஸ்ரமமாக இருக்கிறது. எனவே ஊடே ஆங்க்லபாஷை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்.

    ———–

    \\\\\ஆனால் பாமர ஸ்வயம் சேவகனான எனக்கு\\\\\

    Shriman. Aravindan Nilakantan, thats sort of roll reversal. Actually, Its the other way round. With all due respects to your scholarship, its rather me who as an ordinary svayamsevak trying to grasp things through my limited sphere and the views of yours are articulation of a Hindu intellectual with wider understanding. I am fully conscious of this fact. My understanding, as a choice, would be from my windows of What I understood from sangh and my vaidika samskaram and I am not apolegetical about my understanding. I do understand that your endeavours somewhere down the line secure sort of universal acceptability for the Hindutva views. My pranams to you in this endeavour.

    My views articulated herein are echoed eslewhere the url of which are given below :-

    https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=2030

    https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=2032

    I am at a far off place and is not knowledgeable about whats happenning in thamizhnadu. In whatever way my views could be labelled, mutatis mutandis I extend the same here sir. Being a svayamsevak, it is not my dream but my firm expectatation that our house is cohesive in spite of differences of views among ourselves.

    Sir, I felt sort of some of the views expressed by you in that thread are in a bit of rage. The reference to bakthi as “போதை மருந்து” coupled with tackling the issue of caste through “vedopanishad wisdom”. I get a perception that bakthi is poorly portrayed there and is different from how I perceive it from “Srimad Bhagavatham” and “Narada Bakthi Suthram”. When I started writing, i wrote about this also but I separated the issue on bakthi since mixing up the same may dilute the message of this write up. I may present that write up to the forum – the difference in perception having been recorded here may please be taken as point of reference and not as difference.

    ———

    \\\\\\\Complete works என்ற பெயர் அதை மரியாதையுடன் விமர்சனம் செய்வதற்கான ஒரு வெளியை, \\\\\

    Shriman.Jatayu, yes, how I understood the issue and how you presented it are from different perspectives.

    விதிவிலக்குகள் சொல்பம் என்றாலும் கருத்துக்கள் குருவினுடையது என்றாலும் ஏன் தெய்வத்தினுடையது என்றாலும் தன் கருத்தில் ஆக்ரஹம் இருப்பின் அதை மறுப்பது சாத்யமே என்பதும் நமது ஹிந்து ஞானமரபின் வழியில் சொல்லப்பட்டிருக்கிறதே.

    குருர் ந ஸ ஸ்யாத் ஸ்வஜனோ ந ஸ ஸ்யாத்
    பிதா ந ஸ ஸ்யாத ஜனனீ ந ஸா ஸ்யாத
    தைவம் ந தத் ஸ்யாத ந பதிஸ்ச ஸ ஸ்யாத்
    ந மோசயேத் ய: ஸமுபேத ம்ருத்யும் (ஸ்ரீமத் பாகவதம் – 5-5-18)

    பிறப்பிறப்புச்சூழலில் இருந்து விடுபட சரியான வழி காண்பிக்காத குரு, ஸ்வஜனங்கள், பிதா, மாதா ஏன் தைவம் கூட அந்த ஸ்தானத்தில் இருக்கவியலாது.

    சுக்ராசார்யரின் புத்ரர்களும் குரு ஸ்தானத்தில் இருந்த சண்டாமர்க்கர்களின் போதனையை ப்ரஹ்லாதன் ஏற்கவில்லை என்பது குருவின் போதனைகளை மறுத்ததற்கு ஒரு சான்று.

    பகவத் ராமானுஜர் யாதவப்ரகாசரின் கோட்பாடுகளை மறுதலித்தது தன் புரிதல்களில் தெளிவும் ஆக்ரஹமும் இருக்குமெனில் குருவின் போதனைகளை மறுதலிக்க இயலும் என்பதற்கு இன்னொரு சான்று. Though not substantially, on some aspects, as you may be aware that the views of sureswara was different from that of acharya shankara.

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இறையனாரிடமே மல்லுக்கு நின்றவர் நக்கீரர்.

    “Bunch of thoughts” போன்ற புஸ்தகங்கள் வாயிலாக ப.பூ.குருஜியை தெரிந்து கொள்வதற்கு முன் குருஜி பற்றிய பரிசயம் அளித்தவர்கள் பூஜ்ய (மானனீய) சிவராம்ஜி போன்ற அப்போதைய ப்ரசாரகர்கள் தான். எனக்குத் தெரிவிக்கப்பட்ட படி குருஜி அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களும் ஆழ்ந்த விசாரத்தின் பாற்பட்டவை. காஞ்சிமாமுனிவர் பற்றிய அவரது கருத்தும் அவ்வாறே எனவே என் புரிதல்.

    \\\அவர்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீகுருஜி ஏற்றுக் கொன்டார் என்பதல்ல\\\

    ஒருவரை ஒருவர் மதிப்பதற்கு எல்லா கருத்துக்களிலும் கருத்தொற்றுமை இருந்தாக வேண்டியது அவசியமில்லை என்பதை ப.பூ. குருஜி அவர்கள் நமக்கு காண்பித்ததாகவே நான் இதை புரிந்து கொள்கிறேன். “க்ருபாபிலாஷி” மற்றும் “சரணரஜ:” என்பவை வெறும் முகஸ்துதிக்காக ப.பூ.குருஜி அவர்களால் சொல்லப்பட்டன என்றும் நான் நினைக்கவில்லை. ஒரு யதிஸ்ரேஷ்டரின் அப்பழுக்கில்லாத்தூய துறவொழுக்கத்தினை ஹ்ருதயத்திலிருத்தி ஹ்ருதயபூர்வமாக குருஜி எடுத்தாண்ட சொற்கள் என நான் புரிந்து கொள்கிறேன்.

    ————-

    ஸ்ரீமான் சேக்கிழான், தாங்கள் தெரிவித்த மிகப்பல கருத்துக்களில் எனக்கு கருத்தொற்றுமை உண்டு. யாரையும் தூற்றலில்லோம் என்பது முற்றிலும் நான் ஏற்பதே. தெய்வமாய் தொழத்தக்க மாந்தர் என மரபு காட்டும் அருளாளர்களை அவ்வாறு தொழுவதை நான் மரபு சார்ந்து ஏற்கிறேன்.

    ஸ்ரீமதி அத்விகா தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.

    அன்பார்ந்த ஸ்ரீ ராம், தங்கள் ப்ளாக்கில் தங்கள் வ்யாசங்கள் பல படித்து மகிழ்ந்துள்ளேன். மிக நேர்த்தியாக தெளிவான சொற்களால் கருத்துக்களை தெரிவிப்பவை தங்கள் வ்யாசங்கள். இந்த உத்தரத்தின் ஆரம்பத்தில் நான் சொல்லியுள்ள விஷயங்களையும் நீங்கள் கருத்தில் கொண்டால் தங்கள் கருத்துக்கள் இன்னம் பொலிவு பெறும் என்பது எனது அபிப்ராயம்.

    அன்பார்ந்த ஸ்ரீ ப்ரகாஷ் சங்கரன், நான் எழுத்தாளன் அல்லன். எனது இயல்பான மொழிநடை மணிப்ரவாளம். ஸம்ஸ்க்ருத ப்ரயோகம் எவ்வளவு இருந்தால் வாசிப்பவர் எளிதாக கருத்தை உள்வாங்க இயலும் என்ற தங்கள் கருத்தை க்ரஹித்துள்ளேன். தனியாக எழுதும் வ்யாசங்களில் இது சாத்யமே. பின்னும் அவ்வப்போது பதிவு செய்யும் உத்தரங்களிலும் இதை உள்வாங்க முயற்சிக்கிறேன்.

    சங்க வழக்கப்படி சர்சங்க சாலக் பொறுப்பில் இருந்த பெரியோர்களை பரம் பூஜனீய என்று விளித்துள்ளேன். காஞ்சிமாமுனிவரை ப.பூ.குருஜி அவர்கள் ஜகத்குரு என்று விளித்துள்ளார். நானும் அவ்வாறு விளித்திருந்தால் முறையாக இருந்திருக்கும். தவறுதலுக்கு என் க்ஷமா யாசனம். காஞ்சி பரமாசார்யரின் ஜயந்தி தினம் ஜீன் 4ம் திகதி என அறிந்தேன் தகவல் பிழைக்கு என் க்ஷமா யாசனம்.

  30. தாயே திருமிகு அத்விகா, தங்களின் கருத்துக்கள் அனைத்தும் சரியே! ஆயின், அதன் புரிதல் தவறாக இருக்கிறது என்று சுட்டிக்காட்ட விழைகிறேன்!

    தங்களின் கேள்விகளுக்கு எங்களின் பதில்கள்:

    1 யார் கூறியது பிற வர்ணங்களுக்கு வேதம் கிடையாது என்று? சதுர் வர்ணத்தாரும் வேதங்கள் ஓதுவது கடமை! தாங்கள் பறங்கியர் வந்து இறங்கிய காலத்தை மட்டும் பார்க்க கூடாது! பூணூலும், வேதங்களும், கீதை, ப்ரபந்தம், ப்ரம்மசூத்ரம் முதலான பல நூல்களும் உலகத்திற்கு பொதுவானது! அனைவருக்கும் உரிமை உள்ளது! ஓதல் ஓதுவித்தல் என்பது இரண்டு, ஓதல் அனைவர்க்குமான கடமை, ஓதுவித்தல் அந்தணரின் கடமை! அந்தணர் என்போர் பிறப்பாலா? குணத்தாலா? என்றால், தன்மையாலேயே அந்தணர் அறிய படுகிறார்! இன்று பிறப்புக்கும் குணத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லாத அந்தணர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக என்றுமே இவ்வாறு இருந்தாது என்று கருதுதல் பிழை! அந்த காலத்தில் பிறப்பும் ஒழுக்கமும் ஒன்றாகவே இருந்தது! நீங்கள் கேட்கலாம், நீ சொல்கிறாய் அனைவர்க்குமானது வேதம் என்று, அனால் இது நடைமுறையில் உள்ளதா என்று! ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த பல துறவிகள் தாங்கள் குறிப்பிடும் சமூகத்தை சேர்ந்தவர்களே, ஸ்ரீ ஆர்யா சமாஜ் முதலிய பல அமைப்புகளிலும் உபநிஷதங்களுக்கு பாடம் எடுப்போர் பிற சமூகங்களை சேர்ந்தவர்களே! பழங்கால வழக்கங்களின் படியும் ஸ்ரீ மாரநேர் நம்பி, ஸ்ரீ விளஞ்சோலை பிள்ளை முதலிய மகாநீயர்கள் திருவாய்மொழி முதலான பல க்ராந்தங்களுக்கு உபநிஷந்தங்கள் மூலமாக காலக்ஷேபம் சாதித்தவர்களே! இவர்கள் அனைவரும் நீங்கள் கவலை படும் சமூஹத்தை சேர்ந்தவர்களே! இந்த மக்களை விட்டு விட்டு தர்ம பிரச்சாரம் என்பது இயலாத ஒன்று! இன்றும் திருபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்கச்சி, திருகுடந்தை முதலான பல தளங்களில் இவர்களுக்கு மரியாதை செய்த பிறகே எம்பெருமானும், பெருமாட்டியும், எம்பெருமானரும் பல உத்சவங்களை காண்கின்றனர்! நிற்க!
    நம்மை போன்றவர்களின் கடமை இந்த மக்களுக்கான சனாதன தர்மத்தின் பங்களிப்பை புரிய வைப்பதே! எத்தனையோ வெள்ளைகாரர்கள் வேதங்களை படித்து விட்டு இன்று ஆச்சர்ய ஸ்தானம் அலங்கரிக்கும் போது, இந்த மண்ணின் மைந்தர்களை யார் படிக்க வேண்டாம் என்று சொல்வது? ஆர்வமும் ஆசையும் இருக்கும் யாரிடமும் தன்னை திரு கண்ணன் கொண்டு சேர்ப்பான்! ( சிவாய சுப்ரமணிய சுவாமி, பல இஸ்க்கான் ஆச்சார்யர்கள் அனைவரும் வெளி தேசங்களை சேர்ந்தவர்களே) நிற்க!

  31. இன்னும், அந்த காலத்தில் யாரும் சொல்லி குடுக்க வில்லை, மறுத்தார்கள் என்று கூறுபவர்களின் வாதமே பொய்! ( அவசியமிருப்பின் எவ்வாறு என்று விளக்குகிறேன்) இந்த காலத்திலோ, தர்மம் படிக்க வேண்டும் என்பவர்களுக்கு ஊடகங்கள், புத்தகங்கள் வாயிலாக எத்தனையோ வழிகள் இருக்கின்றன! உண்மையில் அவ்வாறு கற்க விழைபவர்கள் இவ்வாறு விலை போவதில்லை! இவ்வாறு அரசியல் கூட்டதிற்கு ஆள் பிடிப்பது போல செயல் படும் மத மாற்று வியாபாரிகளின் செயல்கள் கடும் கண்டனத்திற்கு உட்படுத்தபட வேண்டியவையே!

    2 ஒரு உலேமாவையோ, ஒரு வெள்ளை பாவாடையையோ பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பது நமக்கு அவசியம் இல்லாதது! இறை வடிவங்களை தொடும் மக்களே பெரியோர் என்றால், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகரிஷிகள், மகநீயர்கள் பலர் ‘அர்ச்சகர்’ ‘குருக்கள்’ போன்ற பிரிவினராகவே இருத்தல் வேண்டும்! அனால் ஆச்சர்யம் தரக்கூடிய விஷயம் என்ன என்றால், இவர்களில் ஒருவர் கூட இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் கிடையாது! நமது தர்மத்தின் இலக்கு ‘ஞான’ தேடலே, இதற்கு திருகோவில்களின் அவசியம் சிறிதளவே! இன்று கோயில்கள் சர்ச்சுகளை போன்று இயங்குவதால் தங்களுக்கு இந்த வேற்றுமை பிடி பட வில்லை! உயர்ந்த தாந்தரிக வழிபாடு முறைகளில் பல தங்களுக்கு அருவருப்பானதாய் கூட தோன்றலாம்! பல இடங்களில் நமது இறை வடிவங்களின் அமைப்பும் கூட ‘ஆப்ரஹாமிய’ நோய் தாக்கியவர்களுக்கு ஆட்சேபகரமாய் கூட தோன்றலாம்! ஆயினும் பண்பாடு என்பது இதுவே! ஸ்ரீ மகாபெரியவர் போன்ற வழிபட கூடிய தெய்வ மயிந்தர்கள் தங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை சொல்லும் அதே வேலையில் தர்மம் என்னவோ அதை சொல்லவும் கடமை பட்டிருக்கிறார்கள்! அப்படி கருவறையில் சென்று தான் வழிபடுவேன் என்று கூறும் மக்களுக்காகவே வட நாடு திருத்தலங்கள் அனைத்தும் திறந்தே இருக்கின்றன! காசி ஸ்ரீ விஸ்வநாதரை யார் வேண்டுமானாலும் தொட்டு பூஜை செய்ய அதிகாரம் உண்டு! அனால் ஸ்ரீ ராமனதரை அப்படி செய்ய முடியாது! இதற்க்கு காரணம் முன்னது வேத ஆகமம் பின்னது சிவாகமம். இது ஆகம பேதங்களே அல்லது மக்களுக்கான பேதங்கள் இல்லை! ஸ்ரீ பஞ்சரத்ரம் ஸ்ரீ வைகானசம் முதலிய ஆகம வழிபாடுகளிலும் வம்ச வழியினரான அர்ச்சகரை தவிர வேறு யாரும் இறைவனை தொட முடியாது! திருவரங்க அர்ச்சகர், திருகுடந்தை பெருமாளை தொட முடியாது! திருகுடந்தை அர்ச்சகர் திருமலை அப்பனின் கருவறைக்குள்ளே செல்ல முடியாது! அன்னை மீனாட்சியின் அர்ச்சகர் அன்னை காமாட்சிக்கு பூஜை செய்ய முடியாது! இத்தனைக்கும் தேவிக்கு ஒரே ஆகமமே! இந்த விளக்கங்களை எடுத்து சொல்லி விளங்க வைப்பது நம்மை போன்றவர்களின் கடமை அல்லவா? நிற்க!

  32. //. நமது சம்பிரதாயங்கள் எல்லாம் மனிதரால் உருவாக்கப்பட்டவை தான். காலத்தின் தேவைக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டியவையே//
    தங்களின் இந்த கருத்தை படித்த உடனேயே நான் தங்களுக்கு மறுமொழி எழுத கூடாது என்று கருதினேன்! அனால் மக்களின் மீது உள்ள அன்பாலே தாங்களும் கேள்வி கேட்கிறீர்கள் என்ற காரணத்திற்காகவே எழுதுகிறேன்! ஏன் என்றால், இறைவனே இறங்கி வந்து கொடுத்தான் என்று தான் நம் தங்க தமிழ் மொழியை போற்றுகிறோம்! மொழியே இறைவன் கொடுத்தது என்னும் போது, தர்மங்கள் மனிதர்களால் செய்யப்பட்டது என்பது அபத்தம்! Constantine க்கும் களிபாகளுக்கும் வேண்டுமானால் தங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்! நமக்கு கிடையாது!
    மத மாற்று வியாபாரிகளை பற்றி கவலை படும் தாங்கள், ஒன்றை ஏன் மறந்து விட்டீர்கள்? 700 வருடகால துருக்க ஆட்சி, 100 வருட கால யவன ஆட்சி எண்ணில் அடங்கா அடக்குமுறைகள் கொலைகள் கற்பழிப்புகள், கல்வி அதிகாரம் முதலியவற்றால் நம்மை அடிமைபடுத்த எத்தனிப்புகள், தங்களின் மதத்தை எப்படியாவது இங்கு புகுத்த வேண்டும் என்று கோடி கோடியாய் கொட்டி இறைத்து தங்களை இந்த மண்ணின் மைந்தர்களாய் காட்ட செய்த விஷமங்கள் ஆரிய-திராவிட மாயைகள், பாரதத்தை துண்டாடிய நரித்தனம் இன்றும் நமக்கு தலைவலியாய் இருக்கும் படி நமது பாகத்தையே மாற்றிய வக்கிர புத்தி, இதனை செய்தும் இங்கு அவர்களால் செய்ய முடிந்தது எது? இன்றாவது பணம் மட்டுமே அவர்களிடம் ஆனால் அன்றோ ஆட்சியே அவர்களிடம் தான் இருந்தது! ஆனால் என்ன செய்ய முடிந்தது? கோவில்களை இடித்தனர், ஓலைசுவடிகளை கொளுத்தினர், சான்றோர்களை கொன்று புதைத்தனர் ஆனால் எகிப்திலும் ரோமிலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முடிந்த ஒன்று இங்கு ஏன் முடியவில்லை? காரணம் நம்மிடம் மட்டும் தான் இறைவன் இருக்கிறான்! அன்று இருந்த மக்கள் சரியான புரிதலுடன் ஆத்மிக பலத்துடன் இருந்தனர்! நம்மை போல நம்முடைய வேரின் அர்த்தமே புரியாமல் இல்லை! இந்த ஆப்ரஹாமிய மதங்களுக்கு இருப்பது ஆகோர பசி, தர்மத்தை தின்று ஏப்பம் விட வேண்டும் என்று துடிகின்றனர். ஏதோ சிறிதளவு தர்மம் வாழ்ந்த உலகின் பிற பகுதிகளை முழிங்கிவிட்டு இங்கு வந்திரிக்கின்றனர், ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியவில்லை இறைவன் எங்கிருக்கிறான் என்று! ( ஒரு எழுபது வயதுள்ள கிழவரான பெரியவர் ஸ்ரீல பிரபுபாதா அவர்களை கொண்டு உலகையே திரும்பி பார்க்க வைக்க எம்பெருமானால் முடியும் என்றால், அவனால் வேறு என்ன செய்ய இயலாது?)

    இந்து activist என்பவர்களின் சேவை நமக்கு கண்டிப்பாக தேவை, ஆனால் இந்து activist களும் எல்லாமே நம் தலையில் தான் விடிகிறது என்ற எண்ணம் இல்லாது இருக்க வேண்டும்!

    3 இறை வடிவங்களில் ஆண் பெண் என்பதன் தத்துவார்த்தம் Dependent – Indepedent என்னும் கொள்கையை அடிபடயாய் வைத்தது! இங்கு சிவ பெருமானையும் தேவியையும் ஆண்-பெண் பாவத்தில் பார்பது அபத்தம்! நாச்சியார் திருக்கோலம் பூணும் பெருமாளை ஆண் என்பீர்களா? பெண் என்பீர்களா? எவனோ சொன்னானாம், வைணவ ஆலயங்களில் தாயாரை பெண் என்பதற்காக ‘படி தாண்டா பத்தினி’ என்று கோயிலுக்குள் அடைத்து வெய்திருக்கிரார்கள் என்று! தாயாரை பெண் என்றால், பெருமானுடன் வீதி உலா வரும் அவனை பிரியாத உபய-நாச்சிமார்கள் என்னும் ஸ்ரீதேவியும் பூதேவியும் யார்? ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாளுக்கு முன்னால் தங்க வாகனங்களில் உலா வரும் ஸ்ரீ ஆண்டாள் யார்? நாச்சியார் கோயிலில் முதல் மரியாதை ஏற்று வரும் ஸ்ரீ வஞ்சுல வல்லி யார்? சின்ன வாகனத்தில் உலா வரும் அம்பாளே கண்ட தோழியே, அந்த பெரிய வாகனத்தில் சிவ பெருமானுடன் என்றும் பிரியாது அமர்ந்திருக்கும் உமை அன்னையான ‘பிரியாவிடை தேவியை’ கவனிக்காது விட்டது ஏன்? மீண்டும் சொல்கிறேன் // இன்றைய மாற்று மத சகோதரர்களை விட, நமது அப்பாவி ஹிந்து தர்ம சகோதரர்களை விட, இந்து activist என்று சொல்லிக்கொள்ளும் பேர்களுக்கே, நமது தர்மத்தை பற்றிய சரியான புரிதல் எள்முனை அளவும் கிடையாது என்பது நிதர்சனம்!//

    அன்புடன், மித்திரன்

  33. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பெயர் பெரும்பாலும் பிழையாக ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி என்றே குறிப்பிடப்படுகிறது) குறித்தான விமர்சனங்கள் குறிப்பாக இரண்டு சமூகக்கருத்துக்களை அடிப்படையாக வைத்து எழுப்பப்படுகிறது. ஒன்று அவரது வர்ணாசிரமக் கருத்துக்கள், இரண்டு பெண்கள் குறித்தான கருத்துக்கள். அவரது சமூகக்கொள்கைகள் மனிதாபிமானமுள்ளதா, சமதர்மமானதா, எல்லோருக்கும் உவப்பானதா என்பதைக் குறித்துப் பேசுவதற்கு முன், முதலில் ஒரு விஷயத்தை நாம் மிகக்கறாராக வரையறுத்துக் கொள்ளுதல் முக்கியம். அது, அந்தக் கருத்துக்களைப் பற்றிப் பொதுவாக இன்று நாம் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிற வரையறைகள், விளக்கங்களைத் தான் காஞ்சி சுவாமிகளும் கொண்டிருந்தாரா? அதன் அடிப்படையிலேயே தான் அவரது சமூகக் கருத்துக்களை முன்வைத்தாரா? என்பது தான்.

    முதலில், வர்ணம் என்பது பிறப்படிப்படையில் மனிதர்களைத் தரம் பிரிக்கும் ஒரு ஆரியக் கோட்பாடு என்பது காலனிய, மிஷனரிகளின் முழுப்புரட்டு. இந்துதர்மத்தை அதன் பழக்கவழக்கங்களைப் பற்றிய அவர்களின் அரைகுறைப் புரிதல் அல்லது திட்டமிட்டு இந்து சமூகத்தைப் பிளக்கும் நோக்கில் திரிக்கப்பட்ட விளக்கங்கள் அவை. ‘வர்ணா’சிரமம் என்பது நிறத்தின் அடிப்படையிலானது என்று கூட சொன்ன ‘மேதைகள்’ உண்டு.

    அரசன்/பிரபுக்கள், மதபோதகன்/பூசாரி, வியாபாரி/பணக்காரன், தொழிலாளி/குடியானவன் (Peasants) என்று தொழில் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வாகப் பார்ப்பது அன்றைய மேற்கத்திய வழக்கமே அன்றி இந்துமதத்தில் அல்ல. நான்கு வருணத்தவரும் சமுகத்தின் அங்கம், ஒருவரை விட ஒருவர் எந்த விதத்திலும் ஏற்றத்தாழ்வுடையவர் அல்ல, தொழில்கள் வெவ்வேறானவையே அன்றி தாழ்ந்தது, உயர்ந்தது என்று எதுவும் இல்லை. எல்லாமும், எல்லாரும் சமம் என்பதே சனாதன தர்மம்.

    *வர்ணம் என்பது செயல்களையும், குணத்தையும் அடிப்படையாக வைத்து மக்களின் இயல்பை நான்காக வகைப்படுத்தும் முறை, அது பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வைத் திணிப்பது அல்ல* என்பது இந்துத்துவர்களின் பாலபாடம். சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு, சுவாமி சித்பவானந்தர் உட்பட ஏராளமான ஞானகுருக்கள் இதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியபடியே வந்துள்ளனர். நாம் மரபான நமது மத விளக்கங்களை அறியாமல், காலனிய- மிஷனரிகளின் அவர்கள் நோக்கிலான வஞ்சகமான விளக்கத்தை மட்டும் அறிந்து கொண்டு, “வர்ணம் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகிறது. இந்த மோசமான கொள்கையை ஆதரிப்பதால் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி இந்துசமூகத்துக்கு அநீதி இழைத்துவிட்டார். பிற்போக்குத்தனமாக இருந்த அவர் ஞானி அல்ல” என்றெல்லாம் உடனடி முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது நமது புரிதல் பிழையே தவிர, பரவலாக விமர்சிக்கப்படுவது போல காஞ்சி சுவாமிகளின் பிழை அல்ல. பெரும்பாலனவர்கள் அவர் என்னதான் சொல்லியுள்ளார் என்பதைத் தேடிப் படிக்காமல் உடனடியாக எதிர்மறை விமர்சனங்களை ஏற்று முழங்குபவர்களாகவே இருப்பது துரதிர்ஷ்டம்.

    காஞ்சி சுவாமிகள் பிறப்பால் குணமும் தொழிலும் என்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களுள் எந்தத் தொழிலிலும், அதைக் கடைபிடிப்பவர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்றே தீர்மாணமாகச் சொன்னார். நாம் தவறாகப் புரிந்துகொண்டிருப்பது போல காஞ்சி சுவாமிகள் ஒருபோதும் பிறப்பினடிப்படையில் பிராமணர்களோ அல்லது வேறு எந்த வருணத்தரோ உயர்ந்தவர் என்றும், தாழ்ந்தவர் என்றும் சொன்னதே கிடையாது. மாறாக பிறப்பினடிப்படையில் மேட்டிமை பேசும் பிராமணர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறார். பல சந்தர்ப்பங்களிலும் அவர் ஆற்றிய உரைகளைத் தொகுத்து திரு.ரா.கணபதி வெளியிட்ட ‘தெய்வத்தின் குரல்’ நூலில் இது மிகத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதலிருந்து கீழே சில மேற்கோள்களைக் காட்டியிருக்கிறேன். (https://www.kamakoti.org/tamil/part1index.htm) இதைப் படிப்பவர்களுக்கு மிகத் தெளிவாகவே புரியும் ஜாதி/வர்ணம் என்பது பற்றியும், பிறப்பு அல்லது தொழில் மேட்டிமை பேசுபவர்கள் பற்றியும் காஞ்சி சுவாமிகள் என்ன கருத்து கொண்டிருந்தாரென்று.

    “1. ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாயிருப்பதற்கு யார் காரணம்?ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?
    என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?.
    அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்ராயம் உண்டாக்கியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைத்து போனதற்கு பிராம்மணன்தான் பொருப்பாளி.

    2. சாஸ்திரங்கள் இவனுக்குப் (பிராமணனுக்கு) பணத்தாசையே கூடாது, இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. நியமங்களில் அவர்களைவிடத் (மற்ற சாதி) துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூர அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே தெரியும்.

    3. தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம் என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ஒவ்வொருவனும் ஒன்றைச் செய்கிறார்கள். நான் இதைச் செய்கிறேன் என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.

    4. ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்துகொடுத்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஒடி வந்துவிட்டான். மேல் நாட்டு நாகரீகத்தில் புதிதாக வந்த ஸயன்ஸினால் பெருகி விட்ட போக்கிய வாழ்வில் இவனுக்கு ருசி வந்துவிட்டது. ஆத்மாபிவிருத்திக்கு எந்த அளவு அவசியமோ அநுகூலமோ, அந்த அளவிற்கு மட்டுமே சரீர போஷணம் செய்து கொண்டால் போதும் என்ற உயர்ந்த லட்சியம் போய்விட்டது. சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான் என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

    5. நான் இதற்கு மேலே ஒருபடி போகிறேன். இங்கிலீஷ்காரர்களுடன் புது ஸயன்ஸுகள், இயந்திர யுகம் எல்லாம் வந்ததால், நம்மவர்களில் மற்ற ஜாதிக்காரர்களுக்குத் தானாகப் பழைய தர்மங்களில் பிடிப்புப் போய் விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இங்கிலீஷ்காரர்கள் கிளப்பிவிட்ட ஆரிய திராவிட பேத உணர்ச்சியால் மற்ற சமூகத்தார் பிராமணர்களை ரக்ஷிக்கக்கூடாது என்ற முடிவுகட்டியதாகவே வைத்துக் கொள்வோம். (இதெல்லாம் யதார்த்தம் – fact இல்லை. ஒரு பேச்சுக்காகத்தான் assume பண்ணிக் கொள்ளச்சொல்கிறேன்.) வீட்டைவிட்டு ஒடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராமணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால்கூட அவர்களை, செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும் என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விடாமலிருந்திருக்க வேண்டும்.

    6. பிராம்மணன் சமூகநலனுக்காக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு, நல்லவனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக ( guide ) இருந்தால்தான் இத்தனை மதிப்புடன் வாழ வைத்திருக்கிறார்கள். அந்தப் பிரயோஜனம் இவனால் இல்லை என்றவுடன் பார்ப்பானே, வெளியேறு என்கிறார்கள். ஒரு நோக்கம் இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறத்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி பர்பஸ் இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராம்மண ஜாதி வேண்டியதை இல்லைதான்.

    7. பயன் ( purpose ) இல்லாமல் எதுவும் இருக்காது. இருக்கவும் கூடாது. இப்போது வேதம் இல்லாத பிராம்மணன் சுங்கம் இல்லாத டோல்கேட்டாகி விட்டான் என்றால், அப்புறம் இவனைத் தூக்கி எறியக்கூடாது என்று எப்படி நியாயம் கேட்கமுடியும். இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தன் மரியாதை எதிர்பார்த்தானானால், இவனைத் தூஷிக்கத்தான் வேண்டும்.

    8. மற்றவர்களை அதட்டிக் கொண்டு, தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிராம்மண்யம். சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. விளக்கை அனைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகிவிடாதீர்கள் என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

    9. பியூன் என்றால் ஒரு டவாலி, யூனிஃபாரம் இருக்கிறதோ இல்லையோ அப்படித்தான் இவனுக்கும் சிகை (குடுமி) , பஞ்சகச்சம் இவைகளை அடையாளமாகச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் நான் உசத்தி என்று காட்டுகிற (superiority -க்கு) அடையாளம் ( symbol ) இல்லை. நான் சமஸ்த ஜனசமூகத்துக்கும் சேவகன், வேதத்தின் சேவகன் என்று தெரிவிக்கவே அவை இருக்கின்றன.

    10. ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன்.”

    காஞ்சி சுவாமிகள் வேதங்கள் சாமானிய மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல (அபௌருஷேயம்), அதன் ஒலிக்குறிப்புகளுக்கு நன்மைபயக்கும் திறன் உள்ளது என்ற நம்பிக்கை உள்ளவர் (படிக்க: https://www.kamakoti.org/tamil/part1kural38.htm). எனவே வேதங்களைப் பாதுகாப்பதற்காகவே ஒரு பிரிவு மக்கள் இதன்பொருட்டு பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் தாங்கள் அழியநேர்ந்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து அந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுதும் அதற்காக வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதின் உள்ளூற கூட பெருமைப்படுதல் தவறு என்றார். அது கடமை, அதைச் செய்யவேண்டும் – அவ்வளவுதான்.

    //இப்போதிருக்கிற சமூக அமைப்பு முழுதும் மாறுகிறதோ, மாறவில்லையோ – அதை மாற்ற முடியுமோ, முடியாதோ – வேத ரக்ஷணத்தையே ஜீவனமாக வைத்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் படியாக நாம் பண்ண வேண்டும். பிராம்மண ஜாதி என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. தனியாக இப்படி ஒரு ஜாதி சுயநலத்துக்காக இருந்து ஒன்றும் ஆகவேண்டாம். லோக க்ஷேமத்துக்காகத்தான் வேத சப்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வேத சப்தங்கள் இருந்தால்தான் லோகம் முழுக்க க்ஷேமமாக இருக்கும் என்று நான் சொல்லுகிறேன். (தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று, பகுப்பு:பொதுவான தர்மங்கள் https://www.kamakoti.org/tamil/part1kural37.htm)//

    வேத, வேதாந்தங்கள் என்னும் ஹிந்துமதத்தின் முக்கியமான ஒரு ஞானக்கருவூலத்தின் மீது மதிப்போ பற்றோ இல்லாத ஒருவர் வேண்டுமானால் வேதப்பாதுகாப்பு என்ற அடிப்படையில் காஞ்சி சுவாமிகள் இப்படி வாதிடுவதை அடியோடு மறுக்கலாம். ஆனால் அப்படி ஒதுக்கும் ஒருவருக்கு இந்துமதத்தின் மீதும், அதைச் சமூக ‘ஏற்றத்தாழ்வுகளில்’ இருந்து ‘மீட்க’வும் அக்கறை இருப்பதாக நம்புவது கஷ்டம்.

    வேதம் ஓதுதல் என்பது கடமையாகவும், ஓதுவித்தல்மற்றும் சடங்குகளைச் செய்வித்தல் என்பது தொழிலாகவும் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டது என்பதை அவர் வலியுறுத்துவதால் தொழில் போட்டியும் அதனால் பொறாமையும் ஏற்பட்டு சமூகஒற்றுமை குலையும் என்ற காரணத்தினால் பிறர் வேதத்தை தொழிலாக ஏற்பதையும் நிராகரிக்கிறார். அப்படியே பிராமணர்கள் மேற்கத்தியக் கல்வி பயின்று பொருளாதாரத்திற்காக பிற வேலைகள் செய்வது, தொழில் செய்து பணம் சேர்ப்பது ஆகியவற்றையும் கூடத்தான் நிராகரித்தார். ஆனால் வேதஞானம் என்பது யாருக்கும் மறுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

    //பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை. இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா. பறக்குலத்திலிருந்து, குயவரிலிருந்து இப்படியே சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும். ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் இப்படி பிராம்மணர்களும் ஸ்தோத்திரம் செய்கிற மாதிரி மற்ற வர்கத்தார் உயர்வாக மட்டுமில்லை. சிவாஜி போன்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து வேத தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ராஜாதி ராஜர்கள் நாலாம் வர்ணத்திலிருந்தே தோன்றியிருக்கிறார்கள். எனவே அமுக்கி வைப்பது. சுரண்டுவது (exploitation) என்பதெல்லாம் புதிதாகக் கட்டிவிட்ட கதைதான். (தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று: https://www.kamakoti.org/tamil/part1kural38.htm )//

    தாழ்த்தப்பட்ட சாதியில் தோன்றிய ஸ்ரீநாராயனகுரு வேத, வேதாந்தக் கருத்துக்களில் உயர்ந்தஞானம் பெற்றிருந்ததை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் தனது கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார் (https://www.jeyamohan.in/?p=27410).

    கடைசியாக முற்றிலுமாக மாறிவிட்ட நவீன சமூகச்சூழலில் இனிமேல் எதையும் மாற்றமுடியாது என்றால் அப்போதும் அவர் பிறசாதியினர் பரம்பரையாக ஒரே தொழிலைச் செய்யவேண்டியதில்லை என்றும், ஆனால் உலக நன்மைக்காக பிராமணர்கள் தொடர்ந்து வேதம் ஓதும் தொழிலைச் செய்யவேண்டும் என்றார்.

    வர்ணம் அல்லது சாதி என்றவுடன் நமக்கு ரத்தம் கொப்பளிக்கத் தொடங்கி விடுவதன் காரணம், அது மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வினை உண்டாக்கி ஒரு பிரிவினருக்கு மன்னிக்க முடியாத அநீதி இழக்கிறது என்பதால் தானே? அதனால் தானே வர்ணத்தை ஆதரிக்கும் ஒருவரை சமூகவிரோதி என்று காட்டமாக விமர்சிக்கிறோம்? மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், இப்படிப்பட்ட சாதிவேறுபாடு என்பது இன்றைய திரிந்த நிலை. கொஞ்சம் கூட தொழிலாலும், பிறப்பாலும் ஏற்றத்தாழ்வு இல்லாத, சகோதரர்களாக ஒருவரை ஒருவர் அணைத்துத் தாங்கி நிற்கும் ஒரு உயர்ந்த லட்சியச் சமூகத்தை கனவுகண்டவரை எப்படி சாதீய கொடுமைகளை ஆதரித்ததாக மனசாட்சியில்லாமல் நம்மால் குற்றம் சொல்ல முடிகிறது?

    // வாஸ்தவத்தில் அத்தனை தொழிலும் சமூக க்ஷேமத்திற்காக உண்டானவைதான். ஒன்று உயர்வு, இன்னொன்று தாழ்வு என்றில்லை. எந்தத் தொழிலைச் செய்தாலும் ஆசை வாய்ப்படாமல் அதைச் சுத்தமாக ( perfect ) ப் பண்ணி ஈசுவரார்பணம் செய்தால் அதைவிடச் சித்த சுத்திக்கு வேறு மருந்தில்லை. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன் சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்ராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த முறையையே தொலைக்கக் கூடாது. (தெய்வத்தின் குரல், பாகம்- ஒன்று, https://www.kamakoti.org/tamil/part1kural34.htm )//

    காந்தியின் ஆரம்பகால வர்ணாசிரமக் கொள்கையைப் பற்றின கருத்துக்களையும், பிறகு அவர் வர்ணாசிரமத்தின் திரிந்து போன நிலையைக் கண்டு இனி அதனால் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்ததையும், இவற்றில் தன் நிலைப்பாட்டையும், நம்பிக்கையையும் இப்படிக் கூறுகின்றார்.

    //ஆனாலும் அவர் (காந்தி) செய்த பல காரியங்கள் ஆசார அநுஷ்டானங்களில் உள்ள வித்தியாசங்களைப் புறக்கணிப்பதாகவே இருந்தனவே. கலப்பு மணத்தைக்கூட அவர் ஆதரித்தாரே என்றால் அதற்குக் காரணம் வர்ண தர்மம் ரொம்ப நல்லதுதான் என்றாலும் தற்போது அது சீர் குலைந்து போயாகிவிட்டது. இனிமேல் அதை மறுபடி புத்துயிர் கொடுத்துப் பழையபடி எழுப்ப முடியாது. சாரம் போனபின் சக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி, வர்ண தர்மப் படியான தொழில் பங்கீட்டு சிதறிப் போய்விட்ட இன்றைக்கு, வெளி வித்தியாசங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொள்வது மகா தப்பு என்று அவர் நினைத்துவிட்டார். நான் அப்படி நினைக்கவில்லை. நம்முடைய மதத்துக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கும் ஒரு ஏற்பாடு சொஸ்தப்படுத்த முடியாதபடி பாழாகிவிட்டது என்று விட்டுவிடுவதானால் மடமும் வேண்டியதில்லை. மடாதிபதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணி வேரான தர்மம் போகவிட்டு, மதாசாரியன் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஸ்தாபத்தை நடத்துவது சமூகத்தைப் பிடுங்கித்தின்கிற காரியம்தான். வாஸ்தவமாகவே பழைய ஏற்பாடு போயே போய்விட்டது என்றால் மடம் வேண்டியதில்லை. கலைந்துவிட வேண்டியதுதான். ஆனால் இன்னமும் அப்படி ஆகிவிடவில்லை என்றே நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது இன்னும் கொஞ்சம் நாளில் அது அடியோடு அழிந்துபோகிறதைத் தவிர வேறு வழி இல்லை என்று நான் நினைத்துவிடவில்லை. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு செய்ய வேண்டிய முழு முச்சோடு செய்தால் அதை புது தெம்போடு எழுந்திருக்கப் பண்ணலாம் என்றே நம்புகிறேன். (தெய்வத்தின் குரல் , பாகம்-ஒன்று https://www.kamakoti.org/tamil/part1kural42.htm)//

    மகாத்மா காந்தி மைய அதிகார குவிப்பற்ற, சாதிமத துவேஷமில்லாத சகோதரத்துவமும், தன்னிறைவும், கிராம சுயாட்சியும், கொண்ட ஒரு தேசத்தை தன் உயர்ந்த லட்சியமாக கொண்டிருந்தார். அவர் காலத்திலேயே முற்றிலுமாக மாறிவிட்ட -சுயநலமும், பணத்தாசையும், அதிகாரப்போட்டியும் கொண்ட நவீன உலகத்தின் முன் கொஞ்சமும் தளராமல் தன் கொள்கைகளைப் பிடிவாதமாகப் போதித்துவந்தார். அவரது கனவு நனவாகவே இல்லை. அதில் குறைபாடுகளும், மாற்றுக் கருத்துகளும், விமர்சனங்களும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு லட்சியவாதப் பிடிவாதமே காஞ்சி சுவாமிகளுடையதும்.

    // வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதற்கு குரு பீடம், ஆசாரிய ஸ்தானம் எதுவும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முடியாததாகத் தோன்றினாலும்கூட, அப்படிப்பட்ட நல்ல லக்ஷியங்களுக்குத்தான் அவை தங்கள் பூரண சக்தியையும் செலவழித்துப் பாடுபட வேண்டும். சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம் என்று சொன்னவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். நடக்க முடியாது என்று நினைத்த எத்தனையோ இந்த உலகத்தில் நடந்துதான் இருக்கிறது. இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடக்காததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம். நான் செய்யக்கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான். சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்ரு விதித்திருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான். தெய்வத்தின்குரல், பாகம்-ஒன்று; https://www.kamakoti.org/tamil/part1kural36.htm)

    அது போலவே காஞ்சி சுவாமிகளின் சமூகக் கருத்துக்களிலும் இனி சாத்தியமில்லாத, கடைப்பிடிக்க முடியாத, பொருந்தாத அம்சங்களும் இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் மிகமிகக் கவனமாக உணர்ந்துகொள்ள வேண்டும், காஞ்சி சுவாமிகள் கூறிய எந்தக் கருத்திலும் நவீன மனம் ஏற்காத உயர்வு தாழ்வோ, ஆதிக்க மனோபாவமோ, ஒருசொல்கூட, ஒரிடத்தில் கூட இல்லை. அதை திரும்பத் திரும்ப வலியுறுத்தவே அவரது வாக்குகளில் இருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளேன். ஆக்கமோ அழிவோ, உலகம் முன்னோக்கி உருண்டபடியே தான் இருக்கும். காலத்தை இனிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முடியாது. நாம் கைவிட்டு விட்டு நகரும் ஒவ்வொரு விழுமியமும் இனி வெறும் சொல் மட்டும் தான். எனவே அவரது கருத்தை விமர்சனம் செய்பவர்கள் நடுநிலையான புரிதலுடன் அவரது கருத்துக்களில் நடைமுறைத்தன்மை இல்லாத அம்சங்களையும் கூட அவரது ஏற்றத்தாழ்வு பாராட்டாத எண்ணத்தை மனதில் கொண்டு, குறைந்தபட்ச மரியாதை மற்றும் நியாயத்துடனும் வார்த்தைகளையும், கருத்துக்களையும் சொல்லவேண்டும். நாயைப் பிடித்து அதற்கு கெட்ட பெயர் சூட்டி தூக்கில் போடுவது போல செய்வது அறமல்ல.

    அவர் ஹிந்துக்கள் அனைவருக்குமான பொதுவான குரு தான். ஆனால் அவரை பிராமணர்களுக்கு மட்டுமான ‘விசேஷ’ குருவாக நினைப்பதைப் பற்றியும் அவரே விமர்சித்துள்ளார். எப்படியோ, வரதட்சினை வாங்கி திருமணம் செய்பவர்கள் தன் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடப்பதாக பத்திரிக்கையில் போடக்கூடாது என்றார், பிராமணன் பணத்தாசையில் வேதநெறியில் வழுவக்கூடாது என்றார், பிறப்பாலும், தொழிலாலும் சனாதன தர்மத்தில் உயர்வு தாழு என்றுமே இருந்ததில்லை, ஆகவே எல்லா சாதியினரும் தொழிலில் வேறுபட்டாலும் மனதால் சமத்துவத்துடன் வாழவேண்டும் என்றார், பிராமணன் ஆழ்மனத்தில் கூட சிறிதும் மேட்டிமை இல்லாமல் சமூகத்தின் சேவைக்கு விதிக்கப்பட்டவனாக எளிமையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார், உயிர்போகும் என்றாலும் அந்த சேவையில் இருந்தும், வேதம் ஓதுதலில் இருந்தும் பின்வாங்கக்கூடாது என்றார், அப்படி இல்லாத பட்சத்தில் வெறும் பொய்ப்பெருமைக்காக பிராமண சாதியே தேவை இல்லை என்றார். அவரைத் தெய்வமாகவும், குருவாகவும் காட்டிக்கொண்டவர்களில் மிகபெரும்பாண்மையினர் அவர் சொன்னவற்றில் எதையுமே கடைப்பிடிக்கவில்லை. எல்லா சாதியினரும் தங்கள் சாதி அபிமானத்தையும், தங்களுக்கும் கீழே இன்னொரு சாதியை அடக்குவதிலுமே முனைப்புடன் இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் வேதனையான முரன் என்னவென்றால் காஞ்சி மகான் எந்த பொய்ப்பெருமைகளை எதிர்த்தாரோ அதையே அவர் பரப்பியதாக தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டு தக்குதல் விமர்சனம் எனப்படும் முள்முடி அணிவிக்கபடுகிறார்.

    கொஞ்சம் நடுநிலைமையோடு நிதானமாக அவர் சொன்னவற்றைப் படித்துவிட்டு பிறகு விமர்சிக்க விரும்புபவர்களுக்கு,
    https://www.kamakoti.org/tamil/part1index.htm இது தெய்வத்தின் குரலின் முதல் பாகம். இங்கு ‘வைதிக மதம்’, ‘பொதுவான தருமங்கள்’ என்றுள்ள பகுதிகளை மட்டுமாவது (அதிகபட்சம் இரண்டு மணிநேரம் ஆகலாம்) வாசித்துவிட்டு, அதிலும் தொடர்ந்து அடுத்த பாகத்திலும் சமூகம், வர்ணம் பற்றிய அவரது கருத்துக்களையும் படித்துவிட்டு எங்காவது ஓரிடத்திலாவது அவர் பிறப்படிப்படையிலோ, தொழிலாலோ எந்த சாதியையாவது உயர்த்தியோ தாழ்த்தியோ பேசியிருக்கிறாரா என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம் – மனமிருந்தால்!

  34. திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா? கும்பகோணம் மடாதிபதி. 200 ஆண்டுகள் மடம் ஏன் கும்பகோணத்தில் இருந்தது என்று தெரியாமல் நீங்கள் மற்ற விஷயங்களைப் பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்கிறீர்கள். திரு அரவிந்தன் நீலகண்டன். திரு ஜடாயு. ஏதேதோ ஆராய்ச்சி எல்லாம் செய்கிறீர்கள். ஒரு முறை வந்து காஞ்சி மடத்தின் கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களையும் வந்து பாருங்கள்.

    காஞ்சி முனிவரின் கருத்துக்களை விமர்சனம் செய்வது உங்கள் உரிமை. ஆனால் நடுவில் குறும்புத்தனமாக கும்பகோணம் மடம் என்று சொல்வது வம்பு வளர்க்கதானே.?

    காந்திதான் பெரியவரைப் பார்த்தார் என்று நான் ஏற்கனவே ஆதாரம் கொடுத்து உள்ளேன்.

  35. அன்புள்ள பிரகாஷ் சங்கரன்,

    தங்கள் வியாசம் முழுவதும் படித்தேன். மிக நீண்டிருந்தாலும், நல்ல தெளிவான விளக்கம். ஆனால் வேதம் என்பது, ஒரு வசதியும் இல்லாத காலத்திலும் காதால் கேட்டு , மனப்பாடம் செய்த விஷயம். ஆனால் இன்றோ, you tube- லே இல்லாத விஷயமே இல்லை. இருக்கும் வேத ஷாகைகளை ஒலி- ஒளி காட்சியாகவோ, அல்லது ஆடியோ மட்டுமோ சேர்க்கப்பட்டாலோ, அனைவரும் கேட்டு, படித்து , மனனம் செய்துவிடலாம். வேதத்தை ஒரு ஜாதிக்காரன் மட்டுமே படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் என்றுமே இருந்ததில்லை. இந்த நூற்றாண்டில் அது முற்றிலும் விலகி விட்டது.

    அருள்மிகு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் உரைத்தொகுப்பான தெய்வத்தின் குரலில் குற்றம் சொல்லும் நண்பர்கள், பாகம் எண், பக்கம் எண் , ஆகிய விவரக்குறிப்புடன் ஏதேனும் குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்தால் , படித்து விவாதித்து நாம் அனைவருமே ஒரு தெளிவு பெறலாம். யாரையும் பூஜா மனப்பான்மையுடன் உயர்த்திச்சொல்ல வேண்டும் என்ற எண்ணமோ, யாரையும் வேண்டுமென்றே இழிவு படுத்தி மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணமோ நம்மில் யாருக்கும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். தவறான புரிதல்கள் இருக்கலாம். ஆனால் தவறான புரிதல்கள் , கலந்துரையாடல் மற்றும் விவாதங்களின் மூலமும், கருத்துப்பரிமாற்றத்தின் மூலமும் நிச்சயம் விலகிவிடும்.

    எனவே, அன்பர்களை வேண்டுவது என்னவெனில், அருள்மிகு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் உரைத்தொகுப்பான தெய்வத்தின் குரலில் குற்றம் காணும்/சொல்லும் நண்பர்கள், பாகம் எண், பக்கம் எண் , ஆகிய விவரக்குறிப்புடன் ஏதேனும் குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்தால் , விவாதிக்க வசதியாக இருக்கும்.

    ” ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று ஜகத்குரு என சொல்லப்படுவர் கூறுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என பிரச்சாரம் செய்ய வைதீக பிரச்சாரகர்களை அவர் ஆசி கூறி அனுப்புவதும், 2009 இலும் கூட தலித் பெண்களுக்கு ஆசிரமத்தில் நீர் வழங்கியது சாஸ்திர சம்மதமா என ரமண மகரிஷியின் செயல்பாட்டை இந்த ஜகத்குருவின் பக்தர்கள் கேள்வி கேட்பதும் நிக்ழத்தான் செய்கின்றன.” நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் மேற்கூறிய கூற்றுக்கு அவர் ஏதாவது ஆதாரம் கொடுத்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

    பெரியவர் மித்திரன் அவர்களுக்கு,

    என் கேள்விகளுக்கு மிக்க சிரமம் எடுத்துக்கொண்டு மிக நீண்ட விளக்கமான பதில்களை தந்துள்ளமைக்கு என் நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய கடிதத்தில் தங்களை ஏதாவது வருத்தப்படுத்தியிருந்தால், அதற்காக நானும் வருந்துகிறேன். என்னால் இப்போது டைப் அடித்து பதில் அனுப்ப முடியவில்லை.சில தினங்களில் முயற்சிக்கிறேன்.

  36. மனிதனை தெய்வத்திற்கு ஒப்பிடுவது ஒரு பாமர வழிபாட்டு உணர்வு.கற்றறிந்த சான்றோர்களும் இதை பின்பற்றுவது சரியல்ல.இதையே அரவிந்தன் நீலகண்டன் அவருடைய பாணியில் சொல்லியிருக்கிறார்.காஞ்சி சங்கராச்சாரியார் என்பது ஒரு பதவி.அப்பதவியில் அமர்பவர் தெய்வத்திற்கு நிகரானவர் என்பது ஏற்க்கதக்கது அல்ல.தனி மனித துதியின் உச்சமே அவனை தெய்வத்திற்கு ஒப்பிடுவது தான்.இதில் அதிகம் பாதிக்கபடுவது நமது சனாதன தர்மமே.வேத இலக்கியங்களில் மகா முனிவர்கள்கூட தெய்வமாக குறிப்பிடப்படவில்லை.

  37. திரு.பிரகாஷ் சங்கரன் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் ( தெய்வம் என்றால் அது தெய்வம் வெரும் சிலை என்றால் அது சிலைதான் என்ற பாடல் வரியை சற்று நினைத்தேன் கண் கலங்கியது)
    சேம் சைடு கோல்போடுவதில் கின்னஸ் ரிகார்டில் இடம் பெற வேணடியவர்கள் நிச்சயம் பிராமிணர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் சைவத்தை தூண்டிலில் மாட்டுவதில் எதிர் தரப்பிற்கு சரித்திர ரீதியாக ஆர்வம் அதிகம் என்பது இன்றுவரை நிறுபண உண்மை ? இதைவிட பிராமணர்களிலே மெக்காலே வியாதி படைத்தவர்கள் உற்றார் உடன் பிறப்பு கட்டிய துணை இவர்கள் மதம் மாறி தான் ஹிந்து மதத்திலேயே இருப்பதினால் ஏற்படும் மனநிலை தாக்கத்தால் இந்த சேம் சைடு கோல் போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் இவை எல்லாம் இந்த இனம் சமூகத்தோடு ஒட்டி வாழவேண்டும் என்ற ஆர்வகோளாரால் தூண்டப்பட்டாலும் அதனால் சமூகத்திற்கு ஏற்ப்பட்ட நன்மைகளைவிட இந்த இனத்திற்கு மேன்மேலும் கெட்ட பெயரையே ஏற்படுத்தியிருக்கிறது. விவேகானந்தர் எல்லோரையும் பிராமிணனாக மாற்றவேண்டும் என்றார்.?????

    நல்ல எழுத்தாளர்களே தரம் தாழ்ந்து எழுதுவதில் நாத்திகர்களை விஞ்சுகிறார்களே என்பதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது. வாழ்க வளமுடன் !!!!!

    (Edited and published)

  38. // ஆனால் நடுவில் குறும்புத்தனமாக கும்பகோணம் மடம் என்று சொல்வது வம்பு வளர்க்கதானே.?//

    இல்லை. நான் முதன் முதலாக திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களை குறித்து படித்தது கோகுலம் பத்திரிகையில் ராஜாஜி அவர்கள் எழுதிய ‘தேக பயிற்சி வாத்தியார்’ என்கிற கட்டுரை-கதை போன்ற ஒரு சமாச்சாரத்தில் அதில் ராஜாஜி அவர்கள் அவரை காஞ்சி சங்கராச்சாரியார் என்று சொல்லவில்லை கும்பகோணம் மடம் சங்கராச்சாரியார் என்றுதான் சொல்லியிருந்தார் அது அப்படியே பதிந்து விட்டது காரணமாக இருக்கலாம். காஞ்சியோ குடந்தையோ ஒடுக்கப்பட்ட சமுதாயம் கோவிலுக்குள் வருவதை அவர் ஆதரித்து ஒரு அறிக்கை கொடுத்திருந்தால் (அவர் அப்படி எல்லாம் அறிக்கை கொடுக்க என்ன அரசியல்வாதியா என சொல்லி விடாதீர்கள் பெண்களுக்கு ஜீவன் முக்தி கிடையாது எனவே ரமணரின் தாயார் சமாதியில் வேதம் ஓத கூடாது என ஓதியவர்களுக்கு கண்டன கடிதமெல்லாம் திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி மடம் மூலமாக அனுப்பியிருக்கிறார்.) நாம் இப்படியெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்திருக்க மாட்டோம்.

    //ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என பிரச்சாரம் செய்ய வைதீக பிரச்சாரகர்களை அவர் ஆசி கூறி அனுப்புவதும்,//

    இது அல்லயன்ஸ் வெளியிட்ட மகா ஸ்வாமிகளின் திவ்ய சரிதத்திலேயே உள்ளது பார்த்து கொள்ளலாம்.

    //2009 இலும் கூட தலித் பெண்களுக்கு ஆசிரமத்தில் நீர் வழங்கியது சாஸ்திர சம்மதமா என ரமண மகரிஷியின் செயல்பாட்டை இந்த ஜகத்குருவின் பக்தர்கள் கேள்வி கேட்பதும் நிக்ழத்தான் செய்கின்றன// என்பதற்கான ஆதாரம்: கீழே உள்ளவை எடுக்கப்பட்ட நூல் மறைந்த ரா.கணபதி அவர்கள் எழுதி ஸ்ரீரமணாச்ரமம் 2009 இல் இரண்டு பாகங்களாக வெளியிட்ட ‘ஸ்ரீ ரமண மணம்’ என்கிற நூலில் இருந்து.

    ஆக்ஷேபணை: தங்களுடைய ரமணமணம் என்ற தொடரில் ‘புல்லுக்காரிகள் கண்ட பசுமை’ என்ற பகுதியை நான் அண்மையில் படிக்க நேர்ந்தது. …காஞ்சி முனிவர் பக்தன் என்ற முறையில் சாஸ்திரங்களை மதிப்பவனாதலால் அதில் என் ஆக்ஷேபணையைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘அவர் செய்பவையெல்லாம் தாமாகவே சாஸ்திர ஸம்மதமாகத்தான் அமைந்தன’ என்று மேற்படி கட்டுரையில் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள். பிறகு சொல்லியிருப்பதெல்லாமோ சாஸ்திர விரோதமாயிருக்கிறது. அவருடைய ஆச்ரமத்தில் பூண்டுக் குழம்பு தயாரித்து பக்தர்களுக்கு போட்டதாகவும் அதை வெங்காய மணமாக மாற்றினார் என்றும் போட்டிருக்கிறீர்கள். இது சாஸ்திர ஸம்மதமா? புல்லுக்காரிகளையும் ஆச்ரமத்துக்குள் விட்டதாக எழுதியிருக்கிறீர்கள் இதுவா சாஸ்திர ஸமமதம்?ரமணர் பெரிய மகான்தான். ஆனால் காஞ்சி முனிவரின் ஆதரவு பெற்ற அமரபாரதி பத்திரிகையில் எழுதுவதால் அவரை சாஸ்திரத்தை பின்பற்றியவராக நீங்கள் வர்ணித்திருப்பது தவறே கண்டுபிடிக்கமுடியாத தங்கள் எழுத்தில் களங்கம் உண்டாக்கிவிட்டது என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். (பக்.33)

  39. 2009- என்பது மகா சுவாமிகள் மறைந்து பதினாறு ஆண்டுகள் பின்பு நடந்த ஒரு நிகழ்ச்சி. அதற்கு அவரை பொறுப்பாக்குவது எந்த விதத்தில் நியாயம்? யாரோ ஒரு கூறுகெட்ட மனிதர் எழுதியதற்கு அவர் போருப்பாக்கப்படுவது சரியல்ல.

    அல்லயன்ஸ் வெளியிட்ட மகா ஸ்வாமிகளின் திவ்ய சரிதத்தினை நான் வாங்கி படித்துவிட்டு, அதன் பிறகு பதில் எழுதுகிறேன்.

    பெண்களுக்கு ஜீவன் முக்தி கிடைக்காது என்று சொல்வதும், பெண்களை ஆண்களுக்கு சமமாக ஆன்மீக விஷயங்களில் நடத்தகூடாது என்று சொல்வதும், ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடே. இந்த அழுக்கு மனப்பான்மை ஆபிரகாமிய மதங்களிடமிருந்து , இந்துக்களிடமும் பரவுவதை தடுக்கவேண்டும். சாஸ்திரம் என்பது மனிதன் உருவாக்கியது. நமது அரசியல் அமைப்பு போல. தேவையானபோது திருத்தப்படவேண்டியது கட்டாயமே. இல்லையெனில் சாஸ்திரம் புத்தக வடிவில் இருக்கும் யாரும் பின்பற்ற மாட்டார்கள்.

    பெண்களுக்கு முக்தி இல்லை என்றால், யாருக்குமே முக்தி கிடையாது. மதம் , கடவுள் நம்பிக்கை என்ற பெயரால், பெண்களை படிக்கக்கூடாது என்று சொல்லி, பெண்கள் பள்ளியில் குடிநீரில் விஷம் கலந்தும், பெண்கள் பள்ளிக்குள் விஷவாயுவை செலுத்தியும் செய்து வரும் ஆபிரகாமிய காட்டுமிராண்டி போக்குகள் , நம் மதத்தில் பரவ நாம் அனுமதிக்க கூடாது.

    பெண்கள் கோயில் மசூதி சர்ச் ஆகிய வழிபாட்டு தலங்களில், ஆணுக்கு சமமாக உரிமை பெறமுடியாது என்றால், எதிர்காலத்தில் இந்த வழிபாட்டு தலங்கள் உலகில் எங்குமே இருக்காது. உலகின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் சரிபாதி. அவர்களை மட்டம் தட்டி எந்த மதமும் இருக்க அனுமதிக்க மாட்டோம்.

  40. அன்புள்ள அரவிந்தன்,

    ஒரு சிறு உதாரணம். மகாத்மா காந்தியைக் கொன்றவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று நீண்ட நாட்களாக பிரசாரம் நடக்கிறது. இதை மறுத்து விளக்கம் அளித்தே சங்க ஆதரவாளர்களுக்கு காலம் வீணாகிறது. நாதுராம் கோட்சேவே இது பற்றி நீதிமன்றத்தில் தெளிவான விளக்கம் அளித்தும் கூட, சங்க எதிரிகள் தொடர்ந்து இந்த பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். அதுபோலத் தான் இருக்கிறது, நீங்கள் கூறும் ‘கும்பகோணம் மடம்’ விவகாரம்.

    யதாரத்தத்திலும் நிதர்சனத்திலும் இருந்தே நாம் வாதங்களை முன்வைக்க வேண்டும். ‘பரமாச்சாரியார்’ என்று அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் காஞ்சி சங்கர மடம் புகழ் பெற்றது. அதை நிராகரிக்கும் விதமாக உள்ளது உங்கள் தர்க்கம் (குடந்தை விஷயம் உண்மையா என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை என்பதே என் நிலை).

    பரமாச்சாரியாரின் கருத்துகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை; பிற்போக்குத் தனமானவை என்பது உண்மையே. அவர் சார்ந்திருந்த வைதிக ஸ்தாபனத்தின் சார்பாகவே அவர் பேசினார். அதே சமயம், தான் யாரைச் சார்ந்திருந்தாரோ அந்த பிராமணர்களை கடுமையாக விமர்சிக்கவும் அறிவுரை கூறவும் அவர் தயங்கியதில்லை (நண்பர் பிரகாஷ் சங்கரனின் பின்னூட்டம் மிகப் பொருத்தம்). எனவே நாம் அவர் கூறிய கருத்துக்களில் நமக்கு ஏற்கத் தக்கதாக உள்ள காலப் பொருத்தப்பாடுள்ளவற்றை மட்டும் ஏற்பதும், குறைகள் இருப்பின் நிராகரிப்பதும் விவேகம். ஆனால், அதற்காக, பரமாச்சாரியாரை முற்றிலும் நிராகரிப்பதும் அவதூறு செய்வதும் கண்டிப்பாக விவேகமும் அல்ல; நியாயமும் அல்ல.

    காஞ்சி மடம் பற்றி யார் யாரெல்லாமோ அவதூறு பரப்பி இருக்கிறார்கள். அதனால் மடத்துக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஆனால், ஹிந்து ஒற்றுமைப் பணிக்கென சங்கல்பம் எடுத்துள்ள தங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, அந்த அவதூறுப் பிரசாரத்தையே தொடர்ந்து செய்வது நல்லதாகத் தெரியவில்லை.

    நாம் அனைவரும் வசதியான இடத்தில் இருந்துகொண்டு தீண்டாமையை எதிர்க்கிறோம். உண்மையில் தீண்டாமைக் கொடுமையின்
    விஷக் கொடுக்குகளை நம்மில் பெரும்பாலோர் அறிந்ததில்லை. நான் கிராமத்திலிருந்து வந்தவன் என்பதால், அதன் கொடுமைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். எனது ஹரிஜன நண்பர்கள் பட்ட கஷ்டத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்குக் காரணம் என்ன என்று தீவிரமாக சிந்தித்திருக்கிறேன். நான் இருந்த கிராமத்தில் பிராமணர் ஒருவர் கூட கிடையாது. ஆனால், ஆதிக்கச் சாதியினர் (இது ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடும்) தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தீண்டாமையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை நான் புரிந்து கொண்டேன். 1990 ல் ராமஜோதி யாத்திரை சமயத்தில் பெருமாள் கோவிலுக்குள் ஹரிஜன சகோதரர்களை அழைத்துச் சென்றுவிட முயன்ற எங்கள் திட்டத்துக்கு கோவில் அர்ச்சகர் மட்டுமல்ல, உடன் வந்த ஹரிஜன நண்பர்களே சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்குக் காரணம் சமூகக் கட்டுப்பாடுகளும் அடக்குமுறை குறித்த அச்சமுமே. இதை நீக்கத் தான் நாம் போராடுகிறோம். ஆனால், தீண்டாமையை பிராமண சதியாகப் புரிந்துகொண்ட எளிய அரசியல் வழிமுறையால், நமது போராட்டம் நீர்த்துப் போகிறது. அரசியல்வாதிகளின் அதே தவறை நாமும் செய்யலாமா?

    பரமாச்சாரியார் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பலாம். அவர் ஒரு முந்தைய காலகட்டத்தின் பிரதிநிதி. இவ்விஷயத்தில் எனக்கும் ஏமாற்றம் உண்டு. ஆனால், அவருக்குப் பின்வந்த ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள், இவ்விஷயத்தில் பல முன்னுதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். பரமாச்சாரியார் தனது கருத்துக்கள் பலவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறார். வரதட்சிணை திருமணம் குறித்த அவரது கருத்து மிக கடுமையானது. அவரவர் தனது தர்மத்தை கடைபிடித்தாலே குழப்பம் தீரும் என்பதே அவரது நிலைப்பாடு. அடுத்த பீடாதிபதியான ஜெயேந்திரருடன் அவர் மாறுபட்டது உண்டு. ஆனால், சமூக நல்லிணக்கத்துக்கான புதிய பாதையை சங்கர மடம் 25 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. அதனை அவர் மௌன சாட்சியாக ஆசீர்வதித்தார்.

    -சேக்கிழான்

  41. //மனிதனை தெய்வத்திற்கு ஒப்பிடுவது ஒரு பாமர வழிபாட்டு உணர்வு//

    Is the following verses came from that பாமர வழிபாட்டு உணர்வு?

    Sthapakaya ca dharmasya sarva-dharma-svarupine; avatara-varishtaya
    Ramakrishnaya te namah.

    He who has come to establish True Religion, being the embodiment of all religions, an Incarnation Supreme to that Sri Ramakrishna I bow down.

  42. சோமசுந்தரம் அவர்களே…….

    //மனிதனை தெய்வத்திற்கு ஒப்பிடுவது ஒரு பாமர வழிபாட்டு உணர்வு.கற்றறிந்த சான்றோர்களும் இதை பின்பற்றுவது சரியல்ல.//

    இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்….. எங்களது குல தெய்வங்கள் பெரும்பாலும் எங்கள் முன்னோர்கள்தான்….எனில் அவர்களை வழிபடும் நாங்கள் அனைவரும் பாமரர்களா? எங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ”சுத்திகரிக்கப்பட்ட ” ஹிந்து மதத்தை நீங்களும் உங்களை போன்ற இதர ”கற்றறிந்தவர்களும் ” உருவாக்கப்போகிறீர்களா?

    தயவு செய்து இதுபோன்ற மேட்டிமை மனப்பான்மையை விட்டொழியுங்கள்….நமக்கு வெளியில் இருந்து வரும் இடர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது…..

  43. இப்போதுதான் பழைய கோகுலம் இதழை எடுத்து மீண்டும் ஒருமுறை பார்த்தேன் “கும்பகோணம் சென்று சங்கராச்சாரியாரை பார்த்தார்” என்று இரண்டு இடங்களில் ராஜாஜி குறிப்பிடுகிறாரே தவிர கும்பகோணம் மடம் சங்கராச்சாரியார் என சொல்லவில்லை. “தகப்பனுக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. கும்பகோணம் சென்று சங்கராச்சாரியாரைக் கேட்டான். “ … “பிறகு பாலகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் இருவரும் கும்பகோணம் சென்று ஆச்சாரியார் முன் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்” (ராஜாஜி மறைவை முன்னிட்டு 21-1-1973 இதழில் வெளியிட்டது.) அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார் என்று சொல்லவும் இடமிருக்கிறது. ஆனால் உடல்நிலை சரியாவதற்கு முன்பும் உடல்நிலை சரியானதும் குழந்தையை அழைத்துக் கொண்டும் கும்பகோணத்துக்கே வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது அதைவிட அந்த காலகட்டத்தில் -இது தொடக்கத்தில் ராஜாஜி எழுதியது என ஆசிரியர் குறிப்பு சொல்கிறது- கும்பகோணம் மடத்தில்தான் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் வழக்கமாக இருந்திருக்கிறார் என தோன்றுகிறது.

    இது என் மனதில் பதிந்ததால் அவரை கும்பகோணம் மடத்தின் அதிபதி என குறிப்பிட்டேன். இல்லை காஞ்சி மடம்தான் அவரது ஒரிஜினல் மடம் என ஆதாரபூர்வமாக அவரது பக்தர்கள் அல்லது அறிஞர்கள் நிறுவினால் அந்த ஒரு வார்த்தையை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே.

  44. ஸ்ரீ மித்திரன் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் அனுமதி வேண்டும் என்ற ஸ்ரீ அத்விகா அடியேன் போன்றோர் கருத்துக்கு மறுப்பாக கூறுவது .
    “காசி ஸ்ரீ விஸ்வநாதரை யார் வேண்டுமானாலும் தொட்டு பூஜை செய்ய அதிகாரம் உண்டு! அனால் ஸ்ரீ ராமனதரை அப்படி செய்ய முடியாது! இதற்க்கு காரணம் முன்னது வேத ஆகமம் பின்னது சிவாகமம். இது ஆகம பேதங்களே அல்லது மக்களுக்கான பேதங்கள் இல்லை! ஸ்ரீ பஞ்சரத்ரம் ஸ்ரீ வைகானசம் முதலிய ஆகம வழிபாடுகளிலும் வம்ச வழியினரான அர்ச்சகரை தவிர வேறு யாரும் இறைவனை தொட முடியாது! ”
    ஐயா மித்திரரே உங்களுக்கு சில கேள்விகள்
    ஸ்ரீ விஸ்வனாதர் ஆலயத்தில் பயன் படும் வேதாகமத்தின் பெயர் சொல்லுங்கள்.
    காமிகம் முதல் வாதுளம் வரையான சிவாகமங்களில் எங்கே ஆலயத்தில் பாமரன் சிவலிங்க மூர்த்தியை த்தொடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. சொல்லுங்கள்.

    சரியாக சொல்லப்போனால் சரியை க்ரியை, யோகம், ஞானம் பாதங்களைக்கொண்ட காமிகம் முதல் வாதூளம் வரையான சிவாகமங்கள் வேத சம்மதமானவை. க்ரியா
    பாதத்தில் வேத மந்திரங்களை அவைப்பயன்படுத்துகின்றன. இறுதிப்பாதமான ஞானத்தில் அவற்றின் சித்தாந்தம் வேதாந்தமான உபனிடதங்களை ஒத்துள்ளன.
    அன்னை காமாட்சி வழிபட்ட சிவலிங்கமூர்த்தம் ஸ்ரீ ஏகாம்பர நாதர் அதனை இன்றுள்ள சாமானியப் பெண் வழிபடுவதில் தடை யென்ன.
    வடனாட்டில் என்ன தென்னாட்டில் திருப்பருப்பதம் என்று ஸ்ரீ நாவுக்கரசர் பெருமானால் பாடப்பட்ட ஸ்ரீ சைலத்தில் எல்லோரும் வழிபட முடியும் போது ஸ்ரீ ராமேஸ்வரத்தில் அவரை எல்லோரும் தொடமுடியாது என்பது வேத நீதியும் அல்ல ஆகமனங்களின் வழியுமல்லை. ஒரு சில பழமைவாதிகளின் சுயனலமிகளின் சதி.
    மும்புரம் எரித்த எம் விரிசடை க்கடவுள் திருவருளால் இன்னிலை மாறும்.

  45. ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசருக்கு உங்கள் கீழ்கண்ட க்கூற்றில் ஒரு பெரும் அபத்தம் உள்ளது.
    “வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற பற்பல தத்துவ ரீதியில் வேறுபடும் சமயங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் தத்துவங்களை தர்க்கிக்கும் முறைகளும் தர்க்கத்தின் கருதுபொருள்களும் ஒருகுடைக்கீழ் வருவதால் இவையனைத்தும் ஹைந்தவம் என்ற ஆலவ்ருக்ஷத்தின் பல கிளைகள் என்றால் மிகையாகா”.
    சைவம் முதலான ஷண்மதங்களும் வைதீகமானவை ஏன் எனில் அவை அனைத்தும் சப்த(ஆப்தவாக்கியம் அதாவது வேதம்) பிரமாணத்தினை அடிப்படையாகக்கொண்டவை. அதிலும் சைவத்தினைப்பொருத்தவரையில் அதன் திருச்சின்னங்களான சிவலிங்கம்,விபூதி, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம், மற்றும் வழிபாடான சிவபூஜை, பில்வார்ச்சனை, சிரோவிரதமான சாம்பவதீக்சை ஆகியனவும் வேதத்திலேயே சிரேஷ்டமாக கூறப்பட்டுள்ளன. மஹோபாத்யாயர் ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரி தெளிவாக ஸ்ரவ்த்தமேவ சைவச்சின்னானி என்ற நூலில் இதனை த்தெளிவாக கூறியுள்ளார். அதனை எந்த ஒரு ஸ்மார்த வைணவ அறிஞரும் இன்றுவரை மறுக்க முடியவில்லை. ஆகவே சைவம் என்றாலே அது வைதீகசைவம் தான். மற்றபடி ஜைனம் மற்றும் பவுத்தம் ஆகியவை அவைதீக தரிசனங்கள். சீக்கிய மதம் இன்றைக்கு வேறாகக்கருதப்பட்டாலும் அது ஒருவகை வேதாந்த தரிசனமே. சத் ஸ்ரீ அகால் என்ற இறை திருநாமம் நிச்சய்ம் சத்சிதானந்தப்பரப்ரம்மமே.

  46. ஸ்ரீ அரவிந்தன்
    “இது என் மனதில் பதிந்ததால் அவரை கும்பகோணம் மடத்தின் அதிபதி என குறிப்பிட்டேன். இல்லை காஞ்சி மடம்தான் அவரது ஒரிஜினல் மடம் என ஆதாரபூர்வமாக அவரது பக்தர்கள் அல்லது அறிஞர்கள் நிறுவினால் அந்த ஒரு வார்த்தையை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே”.
    மிக நன்று. இதுபற்றி அடியேன் நேரடியாக அறியேன் என்றாலும் ஒரே ஆதீனத்திற்கு அல்லது பீடத்திற்கு பல்வேறு மடங்கள் உள்ளன. ஸ்ரீ காமகோடி பீடத்திற்கு கும்பகோணத்திலும் மடம் இருக்கலாம் அங்கு ஸ்ரீ பெரிவர் தங்கி இருந்திருக்கலாம்.

  47. நம் தலைமுறையினருக்கு மகா பெரியவர் காஞ்சிபுரம் மடாதிபதியே. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் , பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் , மக்கள் தண்ணீர் இருக்கும் இடங்களை நாடிச்செல்வது போல, மடங்களை நடத்த தேவையான திரவியசகாயம் நாடி, பிற பொருத்தமான இடங்களை நாடிப்போவது இயல்பே. எனவே, கும்பகோண, காஞ்சி என்று இடம் எது என்பது நமக்கு தேவை இல்லாத விஷயம். கருத்துக்களும், கொள்கையுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதே போலவே, அவர் ஜூன் பத்தாம் தேதி பிறந்தாரா, இருபத்து மூணாம் தேதி பிறந்தாரா என்பதெல்லாம் வெட்டி வேலைகளே. சரித்திரம் என்பது ஆளும் அரசர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட புகழ் மாலைகளே. அதில் அரசர்கள் செய்த பல தவறுகளும், கொடுமைகளும் உட்பட பல உண்மைகள் மறைக்கப்படுவது வழக்கம். தமிழ் நாட்டில் கழகங்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றபின்னர், சரித்திரப்புத்தகங்கள் ஆட்சியில் உள்ளோருக்கு ஏற்றவாறு , பாடங்களை மாற்றுவது வழக்கம். எனவே, சரித்திரம் வேண்டாம். நம் நாட்டில் கூட , வெள்ளையன் தன் வசதிக்காக எவ்வளவோ பொய்களை சரித்திரம் என்று மாற்றி திணித்தான்.

  48. அன்புள்ள சேக்கிழான்,

    தங்கள் தர்க்கம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. சங்கம் மகாத்மாவை கொல்லவில்லை என நீதி மன்றத்தில் நிரூபித்தது. ஆனால் இதற்கும் மடம் ஒரிஜினலாக காஞ்சியில் உள்ளதா அல்லது கும்பகோணமா என்பதற்கும் என்ன தொடர்பு? ஆனால் காஞ்சியோ குடந்தையோ அதற்கும் இந்த திரிக்கும் தொடர்பில்லை என்பதையும் நான் ஏன் கும்பகோணம் என்று சொன்னேன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்துவிட்டேன்.

    //பரமாச்சாரியாரின் கருத்துகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை; பிற்போக்குத் தனமானவை என்பது உண்மையே. அவர் சார்ந்திருந்த வைதிக ஸ்தாபனத்தின் சார்பாகவே அவர் பேசினார். அதே சமயம், தான் யாரைச் சார்ந்திருந்தாரோ அந்த பிராமணர்களை கடுமையாக விமர்சிக்கவும் அறிவுரை கூறவும் அவர் தயங்கியதில்லை //

    அவர் பிராம்மணர்களை ஆதரித்தாரா அல்லது எதிர்த்தாரா என்பதல்ல இங்கே பிரச்சனை. சாதியத்தை ஆதரித்தார் என்பதுதான். அது பல நூற்றாண்டு வைதிக கருத்து என்பதையும் நான் ஏற்கவில்லை. ஆதி சங்கரர் மனீஷா பஞ்சகம் மூலம் நிராகரித்த ஒரு கருத்து. திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் காலத்துக்கு சற்று முன்பு விவேகானந்த சுவாமிகள் முழுமையாகவும் கடுமையாகவும் நிராகரித்த கருத்து, அவரது சமகாலத்தவரான அத்வைத ஞானி ஸ்ரீ நாராயணகுரு கண்டித்த ஒரு கருத்து – அதைதான் ஹிந்து தர்மத்தின் அடிப்படையாக திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி முன்வைத்தார்.

    //அவரவர் தனது தர்மத்தை கடைபிடித்தாலே குழப்பம் தீரும் என்பதே அவரது நிலைப்பாடு.//

    இந்த தர்மம் பிறப்படிப்படையிலானது என்பதுதான் பிரச்சனையே.

    // சமூக நல்லிணக்கத்துக்கான புதிய பாதையை சங்கர மடம் 25 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது.//

    ஜெயேந்திரர் பதிலளிக்கிறார் அல்லது ஜெயேந்திரர் பதில்கள் (தலைப்பு மறந்துவிட்டது) வானதி பதிப்பகம். இந்நூலில் (நினைவிலிருந்து சொல்கிறேன்) சாதிய மறுப்பு திருமணம் சாஸ்திர விரோதமானது என திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் திரு ஜெயேந்திர சரஸ்வதி.

    அன்புள்ள திரு பிரகாஷ் சங்கரன், //கொஞ்சம் கூட தொழிலாலும், பிறப்பாலும் ஏற்றத்தாழ்வு இல்லாத, சகோதரர்களாக ஒருவரை ஒருவர் அணைத்துத் தாங்கி நிற்கும் ஒரு உயர்ந்த லட்சியச் சமூகத்தை கனவுகண்டவரை எப்படி சாதீய கொடுமைகளை ஆதரித்ததாக மனசாட்சியில்லாமல் நம்மால் குற்றம் சொல்ல முடிகிறது?//

    எனில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைவதில் என்ன பிரச்சனை அவருக்கு? நாமெல்லாம் சகோதரர்கள் ஆனால் நீ என் தெருவில் வரக்கூடாது வந்தால் தெரு தீட்டாகிவிடும் நான் உன் தெருவில் வர மாட்டேன் வந்தால் நான் தீட்டாகிவிடுவேன். ஆனால் நான் என்னை உயர்வாக நினைக்கவில்லை உன்னை தாழ்வாகவும் நினைக்கவில்லை. இது எந்த விதத்தில் தங்களுக்கு சரியாக படுகிறது. இப்படி ஒரு அமைப்பை ஆதரித்தவரை உங்களால் எப்படி ”கொஞ்சம் கூட தொழிலாலும், பிறப்பாலும் ஏற்றத்தாழ்வு இல்லாத, சகோதரர்களாக ஒருவரை ஒருவர் அணைத்துத் தாங்கி நிற்கும் ஒரு உயர்ந்த லட்சியச் சமூகத்தை கனவுகண்டவராக” சொல்லமுடிகிறது?

    எதுவானாலும்,

    1. திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி வணக்கத்துக்குரிய பெரியவர். அவரது எளிமை அவரது ஆழ்ந்த அறிவு ஆகியவையும் வணக்குத்துக்குரியவை.
    2. ஆனால் அவரது சாதியம் அதை மையம் கொண்டு விளங்கிய அவரது தர்ம கோட்பாடுகள் முழுக்க முழுக்க எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி புறந்தள்ள வேண்டியவை.
    3. இன்று அவர் ’ஆன்மிக’ ஊடகங்களில் காட்டப்படும் விதம் (உதாரணமாக ‘மகா பெரியவா’ போன்ற தொடர்களின் மூலம் புனையப்படும் அசட்டுத்தனமான அற்புத கதைகள், அவரை முக்காலமும் முற்றும் உணர்ந்த ஞானியாக கட்டமைப்பது இத்யாதி) கடுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். காரணம். அவை அவரது சாதிய கருத்துகளுக்கும் பெண்விடுதலைக்கு எதிரான நிலைபாடுகளுக்கும் புத்துயிர் அளித்துவிடும்.
    4. பாரதத்தின் எண்ணற்ற சமய அமைப்புகள் ஒன்றின் நிர்வாக பொறுப்பேற்று வாழ்ந்த ஒரு துறவியே அவர். அவரது அறிவும் எளிமையும் போற்றுதற்குரியன. அவரது சாதியம், பெண்ணடிமை கோட்பாடுகள் வெறுத்தொதுக்கி புறந்தள்ளுவதற்கு உரியன.

    இல்லை அவர் தலித்துகளின் ஆலய நுழைவை ஆதரித்தார், தீண்டாமையை கடுமையாக எதிர்த்தார், பெண்கள் கல்வியை ஆதரித்தார் என்றெல்லாம் எவராவது நிரூபித்து நான் சொல்வதெல்லாம் தவறு என நிரூபித்தால் அதில் மிகவும் அகம் மகிழ்வது நானாகவே இருக்கும். அவர் மீது நான் கொண்டிருப்பது தவறான புரிதலுணர்வு என்று தெரிந்தால் என் தோல்வியில் மிக மிக்க மகிழ்ச்சியுடன் நான் பகிரங்க மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.
    என் முடிவையும் மீறி வேண்டிய அளவு இத்திரியில் பேசிவிட்டேன். இனி பேச எதுவும் இல்லை.

    பணிவன்புடன்
    அநீ

  49. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,

    தாங்கள் தெரிவித்துள்ள பூஜ்யஸ்ரீ மகா சுவாமிகள் வரலாறு ( பாகம் ஒன்று – பக்கம் 235-238, & 242-245) – (அல்லயன்சு பதிப்பகம் , மயிலை) முழுவதும் படித்துவிட்டேன். இந்த நூல் ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள் , ஸ்ரீ குப்புசாமி ஐயர் , மற்றும் பி.என்.பரசுராமன் ஆகிய மூன்று பேர்களால் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள படி, அரிஜனங்கள் கோயில் நுழைவு இயக்கத்துக்கு மகா சுவாமிகள் எதிரான கருத்து கொண்டிருந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. தொகுத்த சிகாமணிகளின் விருப்பமாக கூட இருக்கலாம். அல்லயன்சு பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்பதனாலேயே அதில் உள்ளதெல்லாம் சரியாக இருக்கும் என்பது உங்கள் நம்பிக்கை. அதுபோல, எந்த பதிப்பகத்தையும் நான் நம்பவில்லை.

    அரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்துக்கு ஆதரவாக மகா சுவாமிகள் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் அரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்துக்கு எதிர்ப்பாகவும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்து தர்மத்தை காக்கவேண்டிய பெரியவர்கள் சிலர் முக்கிய காலக்கட்டங்களில் மௌனியாக இருந்ததற்கு, நான் இந்து சமயத்தில் பிறந்தவர் என்ற உரிமையில் வேதனைப்படுகிறேன்.
    நடந்ததை மறந்து, நம் காலத்தில் பல சீர்திருத்தங்களை செய்து, ஆபிரகாமிய படையெடுப்பை முறியடிப்போம்.

    எனக்கு தெரிந்த ஒரு சிவன் கோயிலில் , திருவிழாக்காலங்களில் சைவ பிராமணர்களில் ( விபூதி பூசும் ஸ்மார்த்தர்கள் ) ஒரு குறிப்பிட்ட உள்பிரிவினர் மட்டுமே ( sub-caste) இறைவன் விக்கிரகத்தை ( உத்சவர் ) அபிஷேகம் செய்தும், அலங்காரம் செய்தும், வாகனங்களில் ஏற்றியும், இறக்கியும் வைப்பது வழக்கம். சைவ பிராம்மனர்களிலேயே கூட, இதர உள்பிரிவுகளை, சுவாமி விக்கிரகத்தை தொட்டு, தூக்கி எடுக்க , அனுமதி கிடையாது. இன்று நிலைமை என்ன தெரியுமா ? ஊரில் பூஜை செய்யவே, பிராமணர்கள் இரண்டு குடும்பம் தான் உள்ளது. சுவாமி சிலையை தூக்கி வாகனத்தில் ஏற்ற எட்டு முதல் பத்து ஆள் இருந்தால் தான் முடியும். எனவே, அனைத்து சாதி இந்துக்களும் சேர்ந்து தான், சுவாமியை வாகனத்தில் ஏற்றிவைக்கவும், பின்னர் வீதி உலா முடிந்து அலங்காரம் கலைக்கப்பட்டு , சுவாமி விக்கிரகத்தை எல்லா சாதியினரும் சேர்ந்து தான் இறக்கி வைக்க வேண்டியுள்ளது.

    எனவே, பெரியவர் மித்திரன் போன்றோருக்கு, நான் வேண்டுவதெல்லாம் , ஆகமம், மரபு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக தூக்கி வீசுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவற்றில் ஆண்-பெண் வித்தியாசம், சாதிவித்தியாசம் உள்ள பகுதிகளை மாற்றியமைப்போம். இல்லையெனில், மாறுதலுக்கு இடங்கொடுக்காத பலவும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விடும். ஆனால், நம் இந்துமதம் அப்படி காணாமல் போகாதபடி , நிச்சயம் தேவைப்படும் மாறுதல்கள் வந்தே தீரும்.

  50. எனக்கு காஞ்சி மடத்தை பற்றியோ, காஞ்சி பெரியவரை பற்றியோ எதுவும் தெரியாது.

    என்னை பொறுத்தவரை, ஒரு ஜாதியின் தலைவர் என்பவர், அந்த ஒட்டுமொத்த ஜாதிக்கும் பொருப்பானவராவார். அந்த ஜாதியினரை நல்வழியில் நடத்தி செல்வதும், ஏனைய சாதியினரோடு இணக்கமாக வாழ்வதும், அன்றைய காலத்திற்கேற்ப உலகியல் வாழ்விற்கு வழி காட்டுவதும் அந்த தலைவரின் கடமையாகும்.

    ஆனால், தான் பிறந்த ஜாதியை மட்டும் உயர்த்தி பிடிக்கும் தலைவர், ஒரு ஜாதி தலைவர் மட்டுமே. ஒட்டுமொத்த சமுதாயத்திற்காக எவர் ஒருவர் சிந்திக்கிறாரோ, செயல்படுகிறாரோ அவர் மட்டுமே சமுதாய தலைவர் ஆவார்.

    என் அறிவுக்கு எட்டிய வகையில், அப்படிப்பட்ட சமுதாய தலைவராக எனக்கு தெரிவது சுவாமி விவேகனந்தர். சமீபத்தில் ப.பூ.குருஜி. இவர்கள்தான் தேசத்தின் எதிர்காலத்தை உணர்ந்து, ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் பணிபுரிந்தவர்கள்.

    ஒரு தனி நபர் யாரை வேண்டுமானாலும் கடவுளாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் கடவுள் என்று புதிதாக யாரையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

  51. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் பெருமானிலும் இங்கே மஹா பெரியவர் மேல் காட்டப்படுவது போல குற்றச்சாட்டுக்கள் நிறைய இருக்கின்றன..

    யாழ். உயர் சைவவேளாள மரபைச் சேர்ந்த இவர் தமது நூல்களில் ஜாதீயத்தை பகிரங்களமாக ஆதரித்து.. வற்புறுத்தி எழுதி வந்திருக்கிறார்… இதையே பேசியும்.. வாழ்வில் கடைப்பிடித்தும் வந்திருக்கிறார்..

    இதை இங்குள்ள பல்வேறு அறிஞர்களும்.. அறிவர்.. என்றாலும், இவற்றைப் பற்றி இன்று எவரும் பேசுவதுமில்லை.. இவற்றுக்காக நாவலரைத் தூற்றுவதுமில்லை..
    எல்லோரும் எல்லாவற்றிலும் பூரணத்துவமானவர்களாக இருக்க இயலாதல்லவா..?

    ஆனால், நாவலர் செய்த பணிகளையே இன்று ஏற்றுப் போற்றுகின்றனர்..

    உ.வே.சாமிநாதையருக்கும் முன் திருமுறைகளும், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் போன்றவையும் இன்னும் பல தமிழ் நூல்களும் சிறிதும் சொற்குற்றமின்றி அச்சுவாகனம் ஏறுவதற்கு நாவலர் செய்த பெரும் பணி ஒன்றுக்காகவே நாம் அனைவரும் அப்பெருமகனாருக்கு நாளும் வணக்கம் செலுத்த வேண்டியவர்களாயிருக்கின்றோம்..

    இதுவே, காஞ்சி மாமுனிவர் பற்றிய என் கருத்தும்..

    இன்றைக்கு மதுரையில் நடக்கிற திருவிளையாடல்களைப் பார்த்தால் காஞ்சி மஹா பெரியவருக்கு ஆயிரம் கோயில் கட்டி பெருவிழாச் செய்தாலும் தகும்.. தகும்.. என்றே சிறியேன்.. உணர்வு பூர்வமாக.. ஒரு இந்து இளைஞனாகக் கருதுகின்றேன்.. மாற்றுக் கருத்துடையார் மன்னித்தருள்க..

  52. அன்புள்ள திரு.அநீ,

    1. என் நீண்ட மறுமொழியில் நான் ஒரு அடிப்படையான விஷயத்தையே இயன்ற வரை தெளிவாக்க முயன்றேன். காஞ்சி பரமாச்சாரியரின் சாதி ஆதரவு என்பது எந்தவிதத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லாத தத்தமது தொழிலை சமூகப்பங்களிப்பு என்ற வகையில் மட்டும் செய்யும்- அந்தக்காரனத்திற்காகவே (தொழில்) வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற மனப்பாங்குள்ள, வேதம்செழிக்கும் சமூகத்திற்கான லட்சியக்கனவு. ஆம், அது லட்சியக் ‘கனவு’ தான்! சமூக விழுமியங்கள் தலைகீழாக மாறிவிட்ட இன்றைய சமுதாய அமைப்பில் அது ஒருக்காலும் இனி சாத்தியமில்லை.

    ஆனால் அவரின் அந்தக் கனவின் உள்ளுறையாக இந்து சமூகத்தில் யாரையும் அடக்கித் தாழ்த்தி வைக்கவேண்டும் என்ற -சமூகத்தில் பலகாலமாக இருக்கும் சாதிக்கொடுமைகள் போன்ற – எந்தத் தீங்கும் அணுவளவும் உத்தேசிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். அதன்பொருட்டுத் தான் நாம் இன்றளவும் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கும் விஷயங்களில் அவரின் நேரடி வார்த்தைகளில் இருந்தே பல மேற்கோள்கள் காட்டியிருக்கிறேன். ஆக அவர் ஆதரித்த சாதி என்ற கோட்பாடு வேறு, அதற்கும் சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் சாதிக்கொடுமைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் அடிக்குறிப்பிட்டு சொல்லிக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு புரிதலுக்கு மனம் வரவில்லை என்றால் அதற்கு மேல் கருத்துபரிமாற்றம் எதுவும் நடக்கச் சாத்தியமில்லை.

    அது ஒருவகையில் முதியவர்களின் ஒருவித முரட்டுப் பிடிவாதம், நம்பிக்கை. மகாத்மா காந்தி அவரின் சில கொள்கைகளில் எந்தச் சமரசத்திற்கும் இடம் கொடாமல் கடைசிவரை பிடிவாதமாக இருக்கவில்லையா? காந்தி வெளிப்படையாக ஒரு இந்துவாக வாழ்ந்தவர். இந்துக்களும், முஸ்லீமகளும் அவரைப் பொருத்தவரை சகோதர இந்தியர்கள் தான். திரும்பத் திரும்ப மதக்கலவரங்களில் பல லட்சக்கணக்கான இந்துக்களும் முஸ்லீமகளும் கொல்லப்பட்டபோதும், முஸ்லீம் லீக் நாட்டைப் பிளந்து பிரிந்து செல்லும் போதும், எல்லோரும் ஒன்றுபட்ட இந்தியா என்ற ‘கனவை’, நம்பிக்கையை சுத்தமாக இழந்த பின்பும், பிடிவாதமாக உண்ணாவிரதம் இருந்து உயிரை விடுவேன் என்று போய் உட்கார்ந்தாரே ஏன்? எந்த லட்சியக் கனவுக்காக?அப்படி ஒரு நம்பிக்கை தான் காஞ்சிப் பெரியவருடையதும். சாதிஅமைப்பில் காந்தி நம்பிக்கையை இழந்து விட்டிருந்தார் , ஆனால் காஞ்சிப் பெரியவர் ஏற்றத்தாழ்வுகளுடன் திரிந்து போன அதைச் சீர்படுத்தி விடலாம், முன்னோர்கள் செய்ததில் ஒரு நன்மை இருக்கும் -என்ற நம்பிக்கையை கடைசிவரை இழக்காததால் தான்.

    நாம் காஞ்சிப் பெரியவரின் கனவை அதன் இன்றைய சாத்தியமில்லாத நிலையைக் காரணம் காட்டி தாராளமாகத் தவிர்க்கலாமே அன்றி, அதற்காக அவரின் நோக்கத்தில் தீமையின் அம்சம் இருந்ததாகச் சொல்வது நமது குறையான அறிவு என்றே நான் கருதுகிறேன்.

    2. காந்தி உட்பட மிகப்பெரிய தரிசனம் கொண்ட மக்கள் தலைவர்கள், ஞானிகளின் வாழ்க்கைப் போக்கில் அவர்களின் அகப்பரிணாம வளர்ச்சி என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தி. ஆலய நுழைவுப்போராட்டம் நடந்த காலத்தில் மகாத்மா காந்தி-காஞ்சிப் பெரியவர் சந்திப்பு நடந்த போது அவரின் வயது 31 மட்டுமே. மடத்தில் வழிகாட்ட குருநாதர் இல்லாமல் வெறும் 13 வயதில் தீனமாக இருந்த ஒரு மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு 18 வருடம் ஆகியிருந்தது. பின்னர் 100 வருடங்கள் நிறைந்து வாழ்ந்த நெடிய தவவாழ்வில் பலவருடங்கள் செயலூக்கத்துடனும் இருந்து போதும், பகிரங்கமாக சாதி அமைப்பை ஆதரித்திருக்கிறார், பெண்கள் வேலைக்கு போவதை ஆதரிக்கவில்லை, வரதட்சினையை எதிர்த்திருக்கிறார், வேதத்தை கற்று, சமூகத்திற்கான ஊழியனாக வாழாமல் வறட்டு சாதிப் பெருமை பேசிய பிராமணர்களைக் கண்டித்துள்ளார்… இன்னும் பல சமூக வழக்கங்களையும் பற்றி பொதுவில் பகிரங்கமாக தனது கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஏன் ஒருமுறை கூட ‘ தலித்கள் ஆலயத்திற்குள் நுழைவதை நான் விரும்பவில்லை’ என்று சொல்லவில்லை. சட்டப்படி குற்றம் என்று பயந்தா? அப்படியானால் ஜாதியைப் பற்றியும் பகிரங்கமாகப் பேசமுடியாதே? அரசியலில் பிரதமர் முதல் அனைவருக்கும் அவர் மீது மதிப்பு இருந்ததே, எனவே அவர் கருத்து சொன்னால் என்ன நடவடிக்கை எடுத்துவிட முடியும்?

    காரணம் அந்த விஷயத்தில் அவர் மனம் அடைந்திருந்த மாற்றம் தான். தமிழ்நாடு, இந்தியா எங்கும் உள்ள மடத்தின் கிளைகளிலும், அதனுடன் இனைந்த தனியார் கோயில்களிலும் தலித்களை அனுமதிக்காமல் இருந்தாரா? அப்படி எங்காவது தலித்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டதாக செய்தி உள்ளதா? அவர் சமாதி அடையும் வரையும், அடைந்த பின்னரும் எல்லா சாதியினரும், ஏன் அஹிந்துக்களும் கூட அவரை மடத்திற்குள் சென்று எந்தத் தடையும் இன்றிச் சந்தித்த எத்தனை புகைப்படச் சான்றுகள் வேண்டும்? அவர் யாத்திரை செய்த எல்லா ஊர்களிலும் எல்லா சாதியினரையும் அவர் சந்தித்திருக்கிறார். ஒருவர் ‘இவை எதுவுமே இல்லை’ என்பாரானால் அவர் காஞ்சி மடத்திற்கு பெரியவர் வாழ்ந்த காலத்திலும் அப்புறமும் ஒருமுறை கூடச் சென்று பார்த்ததே இல்லை என்று பொருள்.

    3. //(உதாரணமாக ‘மகா பெரியவா’ போன்ற தொடர்களின் மூலம் புனையப்படும் அசட்டுத்தனமான அற்புத கதைகள், அவரை முக்காலமும் முற்றும் உணர்ந்த ஞானியாக கட்டமைப்பது இத்யாதி)//கடுமையாக நிராகரிக்கப்பட வேண்டும்.

    அநீ அது நம்பிக்கைவாதிகளின் வட்டம். அதற்குள் ஒரு நம்பிக்கை அற்ற சித்தாந்தி/வேதாந்திக்கு என்ன வேலை? வழிப்பாட்டுணர்வை, நம்பிக்கைகளை எதிர்த்து ஒருபலனும் இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுக்கு அது தேவை இல்லை. பக்தர்களுக்கு அது வேண்டும். அவ்வளவு தான். இதைப் போன்ற அற்புதக் கதைகள் புணையப்படாத, தெய்வமாக வழிபடப்படாத ஒரு இந்திய சன்யாசி, மகானைக் காட்டுங்களேன்.

    இப்படி ஆரம்பித்தால் எல்லா நாயன்மார்கள், ஆழ்வார்கள், மீராபாய், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், ராகவேந்திரர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர், சீரடி சாயி பாபா, சத்ய சாய்பாபா, நாராயனகுரு, ஐயா வைகுண்டர், மாதா அம்ருதானதமயி வரை எல்லோருடைய வழிபாட்டாளர்களையும் நீங்கள் உட்கார்ந்து ‘கடுமையாக நிராகரித்து’ விமர்சிக்க வேண்டியிருக்கும்.

    காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கைக் கதை அற்புதங்களால் நிரப்பி அவர் பக்தர்கள் களிப்படைந்தால், அவரது சாதிய கருத்துகளுக்கும் பெண்விடுதலைக்கு எதிரான நிலைபாடுகளுக்கும் புத்துயிர் அளித்துவிடும் என்பது வெறும் உங்கள் மனப்பதிவு மட்டுமே. அதற்கு எந்த விமர்சன மதிப்பும் இல்லை. காரணம் எந்த சாதியிலும் அவரை தெய்வத்திற்குச் சமமாக மதிக்கும் முக்கால் வாசிப்பேர் அவர் வலியுறுத்திய எதையும் கடைபிடிப்பதில்லை. அவர்கள் குழந்தைகள் வேற்றுசாதியில் காதலித்து திருமணம் செய்வதும், ஆண்கள், பெண்கள் படித்து அமெரிக்கா, ஐரோப்பா என்று வேலைக்கு போவதும், நல்ல வரதட்சினை வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்வதும், பட்டு உடுத்திக்கொள்வதும் என்று எந்தக் குறையுமில்லாமல் நன்றாக காலத்தோடு ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். (தயவுசெய்து இதில் எதையும் சரி, தவறென்று நான் சொல்வதாக பொருளாக்க வேண்டாம்).

    4. பெண்கள் பற்றி அவர் சொன்னது எல்லாமும் அவரது லட்சியக்கனவான – தன் குலத்தொழிலை எந்த கர்வமும், தாழ்வும் இன்றிச் செய்யும் ஆண், அவனுக்கு உதவியாக, அவன் பாகமாக இருக்கும் பெண்- பலனை ஈச்வரார்ப்பணம் செய்துவிட்டு அத்வைத சிந்தனையுடன் முக்திக்கு ஆத்மசாதனை செய்யும் சமூகத்திற்குள் வாழும் பெண்களுக்கு மட்டுமே. அந்த சமூகத்திற்கு அதில் தீங்கேதும் இல்லை. ஆனால் இன்றைய யதார்த்தத்தில் அந்தச் லட்சியசமூகமே சாத்தியமில்லாத போது அந்தக் கருத்துக்களும் அந்த எல்லைக்குள் நின்றுவிடும். தாய்தெய்வத்தை உபாசிக்கும் ஒரு மடத்தின் துறவி, பெண்களைப் பற்றித் தாழ்வாக சிந்தித்திருக்கக் கூட மாட்டார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட -நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

    லட்சியக் கனவு என்ற வார்த்தை கிண்டல் செய்யத் தூண்டும். பரவாயில்லை. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதருக்குள் ஏற்றத்தாழ்வில்லாத ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நம்பியவரின் நினைப்பை நான் லட்சியக்கனவென்றே சொல்வேன். அடிப்படையில் அவர் எந்த சமூகத்தையும் குறைத்தும், பெருமைப்படுத்தியும் எதையும் சொல்லாததால், காலத்திற்கு சரிப்பட்டுவராத லட்சியக்கனவு கண்டவர் என்று வேண்டுமானால் அவரது சமூகக் கருத்துக்களை மறுத்து முன் நகரலாமே தவிர, அதில் சமூகவிரோத சிந்தனை இருந்ததாக சொல்லவே முடியாது.

    இன்றைய சாதிப்பிரிவினையின் திரிந்துபோன -அடக்குமுறையும், அதிகாரமும், மனிதாபிமானமற்ற ஆதிக்க வெறியும், அநீதியுமான சூழலைக் கண்டு கொதிப்புறும் ஒவ்வொருவரின் எண்ணத்துடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். நாம் நவீன மேற்கத்திய விழுமியங்கள் கொண்ட, பணத்தையும், அதிகாரத்தையும், சுயநலத்தையும், தனிமனித முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்ட ஒரு புதிய சமூக வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஒரு நூற்றண்டுக்குள் அதன் போதாமைகளையும், விபரீத விளைவுகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இந்த வாழ்க்கைமுறையின் சரி தவறுகளுக்கு அப்பால் இது தான் காலத்தின் விதி, இனி எதையும் மாற்ற முடியாது என்று சமாதானப் பட்டுக்கொண்டு நகர்கிறோம். நமது முன்னோர்களின் உயர்ந்த விழுமியங்கள் அனைத்தையும் கொச்சையாக்கிக், திரித்து, கெடுத்துக், கைவிடாமல் அதையும் சுமந்து கொண்டு நவீன யுகத்தில் போராடும் சராசரி இந்தியர்கள் தான் பெரும்பாண்மையினர்.

    ஆனால் இந்துத்துவர் என்ற முறையில் நீங்கள் இந்த நாட்டில், இந்து சமூகத்தில் செய்யும் தொழிலால் வேறுபட்டாலும், பிறப்பால் ஏற்றத்தாழ்வு பாராட்டாத, ஞானமும், மேன்மையுமே வாழ்வின் இலக்காக ஒரு லட்சியசமூகம் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அப்படி ஒரு சமூகத்தை- பலிக்காத கனவை கண்ட -ஒரு குருநாதர் நம்முன் புரிந்துகொள்ளப் படமுடியாமல் அந்நியப்பட்டு நிற்பது வேதனை.

    தயவுசெய்து தனிப்பட்ட முறையில் யாரும் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி.

  53. அன்புள்ள பிரகாஷ் சங்கரன்,

    மிக நீண்ட அற்புதமான விளக்கம். நன்றிகள் பல. மகா பெரியவர் கோயிலுக்குள் அரிஜனங்கள் செல்வதை எதிர்க்கும் கோஷ்டிக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனக்கு தெரிந்து, ஒரு சட்டசபை தொகுதியில் இடைதேர்தல் வந்தபோது, இரண்டு பிரதான வேட்பாளர்களும் அவரை சந்தித்து , வேறு வேறு நாட்களில் , பிரசாதம் வாங்கி சென்றனர். அவர் என்ன செய்வது? அவர் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர். எந்த கட்சிக்காரரும் என்னிடம் வராதே என்று சொல்ல முடியுமா? ஆனால்,அரிஜன ஆலய பிரவேசத்தை ஆதரித்து, மற்றும் பெண்களை கோயில் பூஜைகள் மற்றும் இறை வழிபாட்டு சடங்குகளில் முழுஅளவில் ஈடுபடுத்துவது குறித்து ஒரு ஆதரவான open statement – அவர் வாய்வழியாக வந்திருந்தால், நமது மதத்துக்கு நல்லது. இந்த விஷயங்களில் ஒன்றும் சொல்லாமல் அவர் மௌனம் காத்தது, எனக்கு சரியாகப்படவில்லை.

    ஆனால், அவர் சுவாமிநாதன் என்ற பூர்வாசிரமபெயர் இருந்தபோதும், அன்னை பார்வதியின் அவதாரம் என்பதை பலமுறை உணர்ந்துள்ளேன். நான் அவரை எடைபோடும் அளவுக்கு தகுதி உள்ள நபர் அல்ல என்ற போதும் , என் எண்ணங்களை பகிர்வதில் தயக்கம்/ பயம் எதுவும் எனக்கு இல்லை. 1983- ஆம் ஆண்டு அவர் மகாராஷ்டிரா டூர் முடிந்து , காஞ்சிபுரம் திரும்பியபோது , ஒரே ஒரு முறை தான் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அதுவரை எனக்கு இருந்த முதுகுவலி , அவரை தரிசித்த பிறகு , இன்றுவரை 29- வருடமாக , விலகி நிற்கிறது. இது என் அனுபவம்.

    ஆனால், தெய்வத்தின் குரலில் இருந்து யாரும் ஆட்சேபனைக்குரிய பகுதிகள் என்று இதுவரை குறிப்பிடாததால், எதுவும் ஆட்சேபனைக்குரிய பகுதிகள் அவற்றில் இல்லை என்று கருதுகிறேன். மீண்டும் அவற்றை நான் படித்தால், இன்னும் ஒரு ஆறுமாதம் காலம் தேவைப்படும். ஏதேனும் சுட்டிக்காட்டினால் , அந்த விஷயத்தை மட்டும் ஆராயலாம்.

  54. அரவிந் நீலகண்டனின் “உடையும் இந்தியா” நூல் வெளிவந்த போது மிக மகிழ்ச்சி அடைந்தேன், இன்று அவர் காஞ்சி மகானைப் பற்றி எந்த அதாரமும் இல்லாமல் தொடர்ந்து அவதுரு செய்து வருவதை பார்த்து வெட்கி வேதனை அடைந்தேன். பத்தியம் இல்லாத மருந்தும் வினையம் இல்லாத கல்வியும் எந்த
    பயனும் தராது. தெய்வத்தின் குரல் மொத்தத்தையும் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், காஞ்சி பெரியவா போல் கண்ட தெய்வம் யாரும் இல்லை.
    காஞ்சி பெரியவா கூறியதை ஒருவர் பின்பற்றுவது அல்லது விடுவது அவரவர் தனிப்பட்ட விஷயம், ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் சொன்னதில் இது தவறு என்று கூறுபவர்கள் அவரைவிட மிகப் பெரிய ஞானியாக தவவலிமை பெற்றவறாக, முக்காலமும் உணர்ந்தவராக அல்லவா இருக்க வேண்டும், நாம் அப்படி இருக்கிறோமா என்று என்னிபார்க்க வேண்டும். அவர் எப்போதும் சத்தியத்தைதான் பேசினார் அனைவரையும் சத்தியத்தையே பேசுங்கள் என்றார், இன்றை காலத்துக்கு சத்தியம் உதவாது என்பவர்கள் அவரை பிற்போக்குவாதி என்றால் என்ன அர்த்தம்? யார் பிற்போக்கு வாதி என்று காலம் சொல்லும்.

    பிற மதங்களைப் போலவே இந்து மதத்தை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பதிலாக நாமே அந்த மதத்திற்கு மாறிவிடலாமே? அட்டையில் இந்து மதத்தை வைத்துவிட்டு உள்ளே வேறு மதத்தை கருத்தை வைப்பது என்ன நியாம்? ஜாதி ஜாதி என்று இப்படி குதிக்கும் ஆ.நீ. போன்றவர்கள் அரசாங்கமே ஜாதி அடிப்படையில் மக்களைப் பிரித்து சட்டம் இயற்றும் போது ஏற்றுக் கொள்வது எப்படியோ?

    நான் அவரைப்பற்றி சொல்வதை விட அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் காஞ்சி பெரியவா பற்றி கூறியதை இங்கு தருகிறேன்.

    “கொடிய நாத்திகன் கூட நாக்கிலே பல்லைப் போட்டு, அவர்கள் மீது ஒரு குற்றத்தைச் சுமத்த முடியாது.”

    யோகம்

    இப்படிப்பட்ட யோகம் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.

    அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய்க் கொண்டிருக்கிறார்.

    இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க் கொண்டிருக்கிறார்.

    கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.
    தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய்விட்டால், வயது தொன்றாது; பசி தோன்றாது.

    பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது. முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள்.

    அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.

    ஒரு ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். ‘இது என்ன பார்வை? ஆற்றில் வெறும் தண்ணீர்தான் ஒடுகிறது’ என்று எண்ணினான் மற்றொருவன்.

    ஆனால், ஆற்றைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றிற்று? ‘ஆறு என்ற ஒன்று ஆண்டவனால் படைக்கப்படவில்லை, வெறும் நீரை மட்டுமே இறைவன் படைத்தான். அது ஆறாக உருக்கொண்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக் கொண்டது. மனிதருக்கில்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறதே’ என்று வியந்தானாம்.

    சிருஷ்டியை வியப்போடு, நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

    படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துனணபுரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி, விரவி நிற்கிறது.

    அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை. நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முமரி வரை தன் ‘காலடி’யைப் பதித்தார்.

    அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை. ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது. மகா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை; நாளாக நாளாக பாறைதான் அளவில் சுருங்குகிறது.

    கங்கை நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப் பட்சி பனித்துளியைத்தான் நாடுகிறது. சில வண்டுகள், மலரில் மட்டுமே அமர்கின்றன. சில பறவைகள், பசுமையான மரங்களில் மட்டுமே அமர்கின்றன.

    மகா யோகியின் வைராக்கியம் மணம் மிக்கது; பசுமையானது. இரவும் பகலும் உலகில் மாறி மாறி வருகின்றன. லெளகீகவாதிக்கு இரண்டும் வேறு வேறாகக் காட்சியளிக்கின்றன. ஆன்மிகவாதிக்கோ இரண்டும் ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன. உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.

    அந்தத் தெய்வத்தின் பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் தூதுவர்கள் அவர்கள். அதனால்தான் மற்ற மனிதர்களின் தலையை விட, அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன.

    லோகாயத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது.
    மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.

    அந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கே போய்க் காஞ்சிப் பெரியவர் ஒரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டையாகி விட்டது’ என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தோஷப்பட்டார்களாம்.

    அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் வழங்கும் பேரொளி.

    அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்துமதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராசாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

    அந்த ஞானப் பழத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும்.

    செஞ்சிக் கோட்டைக்குப் போகிறவனெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.

    ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

    சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக்கூட்டம் திரளுகிறது. இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.

    தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது, அவரைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.

    ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது.

    மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம்.

    யோகிகளில் ஒரு சாதாரண் யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால், இந்த மகா யோகியைப் பிராமணரல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

    அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லி இருக்கிறார். ஏசுவின் தத்துவங்களைவிட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.

    அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒருநாளும் இருந்ததில்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டிக் கொண்டதில்லை.

    பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.

    அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அந்தக் காலடிஸ் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

    சேவையில் நிம்மதி

    ‘பிறருக்குச் சேவை செய்வதே, பிறவி எடுத்தன் பயன்’ என்பார்கள். நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டுவிட்ட ஞானிகளும், தலைவர்களும், இந்தப் பரத கண்டத்தில் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள். சுயநலமும் இங்கேதான் அதிகம், பொது நலமும் இங்கே தான் அதிகம்.

    ஆதி சங்கரர், ராமானுஜர், மகாவீரர், புத்தர் ஆகிய சமய ஞானிகள்; காந்திஜி போன்ற தேசத் தலைவர்கள்; இவர்களெல்லாம் சேவைக்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

    அந்த வரிசையில், நம் கண் முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுகத்தின் கண்கண்ட தெயவம் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்; பிஞ்சுப் பருவத்திலேயே தன்னை ஒழுக்கச் செவைக்கு ஒப்படைத்துக் கொண்டவர்.

    கொடிய நாத்திகன் கூட நாக்கிலே பல்லைப் போட்டு, அவர்கள் மீது ஒரு குற்றத்தைச் சுமத்த முடியாது.

    ஒரே நாளில் கோடி ரூபாய் வேண்டுமென்றாலும், ‘செக்’கிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, அதை அவரையே நிரப்பிக்கொள்ளச் சொல்லக் கூடியவர்கள் இந்த நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

    ஆனால், மறந்தும் கூட அவர் செல்வத்தை நினனத்து அறியாதவர். எந்தக் காரியத்துக்கும் பிறரை அண்டி அறியாதவர்.

    தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்தை ஒருவகைக் ‘கறை’யும் இல்லாமல் காப்பாற்றியவர். இந்து சமயதுக்கும் மனித குலத்துக்கும் அவர் ஆற்றியுள்ள சேவைகள் கண்க்கிலடங்காதவை.

    அண்மையில் தேனம்பாக்கம் குடிசையில், ஒன்பதரை மணிக்கு நான் அவரைச் சந்தித்தேன்.
    இந்த நாட்டின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்திக்குக் கிடைக்காத ஒர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    இந்திரா காந்தி ஒரு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தும் கூட அவரோடு ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

    ஆனால், நான் வந்திருப்பதாக ஜன்னல் வழியாகச் செய்தி சொல்லப்பட்டதும், தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்கள் அரிக்கேன் விளக்கை
    ஏற்றிக் கொண்டு எழுந்து வந்து விட்டார்கள்.

    என்னை ஆனழத்துச் சென்றவர்கள், காஞ்சிபுரம் சங்கரபக்த ஜனசபாவைச் சேர்ந்த திரு. வைத்தியும், வைத்தாவும் ஆவார்கள்.

    ஸ்ரீ பெரியவர்கள், தான் தங்கியிருக்கும் குடிலின் நிலைப்படியிலேயே ஒரு பாயைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்.

    என்னோடு நாற்பத்தைந்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    குலசேகர ஆழ்வாரைப் பற்றியும், கொங்கு நாட்டைப் பற்றியும், மலையாள மொழியைப் பற்றியும் விவாதித்தார்கள். “எனக்கு ஆரோக்கியம் வேண்டும்” என்று யாசித்தேன். “நல்ல சேவை செய்யிறே நல்லா இருப்பே!” என்று ஆசீர்வதித்தார்கள். “வர்றவா! எல்லாம் உன்னைப் பத்தித்தான் சொல்றா!” என்றார்கள்.
    அந்த முக்கால் மணி நேரத்தில், ஆண்டவனுடனேயே பேசிக் கொண்டிருப்பதாக எனக்குக் தோன்றியது.

    சேவை, சேவை; சேவையைத் தவிரத் தனது தேவை என்றே ஒன்றை அறியாத ஒரு மகாத்மாவின் முன்னால் நான் கைகட்டி மெய்மறந்து நின்றேன்.

    இரவு வெகு நேரம் ஆகியும் கூட எனக்காக அவர்கக் எழுந்து வந்ததும், என்னிடம் மனம் விட்டுப் பேசியதுமே எனக்குக் கிடைத்த புது ஆரோக்கியமாகத் தோன்றியது.

    அவர்களுடைய நிம்மதி நமக்கெல்லாம் இருந்தால் போதாதா? நீண்ட காலத் தன்னலத் துறப்பும், சேவையுமே அவருக்கு நிம்மதியைத் தந்து, சமயத்து மக்களுக்கும் நிம்மதியைத் தந்திருக்கின்றன.

    அவரைப் போல நாம் ஆக முடியாது, விஞ்ஞானத்தின் நாகரிக வசதிகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணெண்ணெய் விளக்கும், தன் கை விசிறியுமாய் அவர் வாழ்கிறார்.

    சீடர்களைக் கூப்பிட்டுக் கை கால் பிடிக்கஸ் சொல்லும் பழக்கம் கூட அவருக்குக் கிடையாது. காம, குரோத, லோப, மத, மாச்சரியங்கள் அனைத்தையும் துறந்தவர்.

    சில பிராமண நண்பர்கள் அரசியலில் தேர்தலுக்கு நிற்பார்கள். ஸ்ரீ பெரியவர்களிடம் உள்ள ஈடுபாட்டின் காரணமாக அவரிடம் சென்று ஒரு ஸ்ரீ முகம் கேட்பார்கள். யாரையும் அவர் ஆதரிக்க மறுத்து விடுவார்.

    அரசியலில் சிக்கலில் மாட்டிக் கொள்ளாத ஒரே பீடம், காஞ்சி காமகோடி பீடம்தான். அவர் லெளகீதத்தில் ஈடுபட்டவர் அல்ல என்றாலும், லெளகீகவாதிகள் எப்படி வாழ்வது என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    விலங்கு இருந்தால் தானே கால் வலிக்கும்; பணம் இருந்தால் தான தூக்கம் கெடும். அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, பொதுச் சேவை.

    முடிந்தால் பத்துப் பேருக்கு உதவு; இல்லையென்றால் தெருவிலே போகும் போது, கண்ணாடித் துண்டு கிடந்தால் அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போ.

    சாலையில் காரில் அடிபட்டு ஒரு நாய் கிடந்தால் அதை எடுத்து அடக்கம் செய். அநாதைப் பிணத்துக்குத் தோள் கொடுத்துச் சுடுகாட்டுக்குத் தூக்கி கொண்டு போ.

    ஆபத்தில் சிக்கிச் கொண்ட யோக்கியனுக்குக் கைகொடு. சேவை செய்யும் போது பலனை எதிர்பார்க்காதே. உயர்ந்த இடம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சேவை செய்யாதே.

    தண்ணீரில் வாழுகின்ற மீன் அதை விட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது. வாழ முடியாது.

    நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதன் பேர்தான் கவளம்.

    ‘இது நமது கடமை’ என்று ஒரு சேவையைச் செய். ஊருக்குச் செய்ய முடியாவிட்டாலும் உன் குடும்பத்துக்குச் செய். அதன் பெயரும் சுய தர்மம்தான்.

    பொதுச் சேவை என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு அதனால் பயன் இருந்தாலொழிய, எந்தத் தலைவனனயும் நம்பி இறங்காதே.

    வில்லங்கங்கள் இல்லாத சேவையில் ஒரு நிம்மதி இருக்கிறது. மிக முக்கியமான சேவை, தாய்க்கு மகன் செய்யும் சேவையாகும்.

  55. about Kumbakonam issue, from vikki

    //Other, historical accounts state that the mutt was established more recently (probably in the 18th century) in Kumbakonam, as a branch of the Sringeri Matha, and that it later declared itself independent.[4][5] The heads of a matha in Kumbhakonam acquired control of the Kamakshi temple in Kanchipuram and moved their establishment to that city, between the years 1842 and 1863. This marks the origin of the Kanchi mutt.[6]//

    https://en.wikipedia.org/wiki/Kanchi_matha

  56. another info from

    https://controversialhistory.blogspot.in/2009/06/myths-of-kanchi-kamakoti-peetam.html

    // Kumbakonam mutt is branch of Kanchi mutt
    According to the Kanchi chronicles, the math in Kanchipuram had to be shifted in the 18th century AD, in the face of opposition from local kings and hence the shift to Kumbhakonam. (One does not know of any Hindu-hating king near Kanchipuram from the 18th century.)

    “Historians, however, hold that the Kumbhakonam math is a branch of the Sringeri math established in 1821 AD by the famous Maratha monarch of Tanjore, Pratap Singh Tuljaji. It is the date of the oldest inscription found in the Kumbhakonam math building. The Inscription is in Kannada. The math refers itself as sarada math. The diety of Sringeri mutt. If the mutt has anything to do with kanchi, it should have been diety kamakshi , the goddess of kanchi not sarada. Kumbakonam Mutt Independence Kumbhakonam math proclaimed independence from Sringeri and established itself as the ” Kamakoti peetham.”. In addition to denying the historical truth of its origin as a branch of the Sringeri math, the story propagated was that it was originally established by Adi Sankaracharya himself at Kanchipuram, with control over the recognized four maths. Worse, a wholly fictitious story that Adi Sankaracharya ascended a sarvagna-pitha at Kanchi and attained samadhi at Kanchi is propagated as “tradition.” The real problem though was that in the course of this campaign, someone with more enthusiasm than scholarship, “fixed” the date of Adi Sankaracharya as 477 B.C. and wrote up a continuous list of gurus of the math from 477 B.C. to the present! This guru parampara is filled with names of sannyasis taken at random, with no thought to chronology.

    Kanchi Mutt origin
    In 1839 AD, the head of the Kumbhakonam math applied for permission to the English Collector to perform the kumbhabhishekam of the Kamakshi temple in Kanchipuram. In 1842 AD, he was appointed sole trustee of the Kamakshi temple by the English East India Company Government. This is well documented because the original priests of the Kamakshi temple, who were thereby deprived of their rights, complained to whomever they could possibly complain to. Numerous petitions, counter petitions, letters, and other suchdocuments are available from this period.

    Thus the Kanchi math as an institution dates from 1842 AD. The headquarters continued to be at Kumbhakonam but the sannyasi head would periodically visit Kanchipuram to assert his rights over the Kamakshi temple.This math originally had a limited following in the Tanjore and Kanchipuram areas, but soon embarked on a massive propaganda campaign that ensured it prominence. The Kumbhakonam math shifted to Kanchipuram in accordance with its new story.
    Suresvara was appointed as the successor to Shankara at Kanchi mutt. The Kanchi chronicles explain that before his demise, Shankaracharya established a fifth math at Kanchi which he intended to be a controlling centre of all the other maths. Sri Sureswaracharya, Sankara’s prime disciple was placed in charge of it. Interestingly, the Sringeri math also claims Sureswaracharya as their first pontiff. If Sankaracharya did not establish the Kanchi math at all, where was the need to appoint a successor there?!! It is the Kanchi math that “claims” Sureswara. The Sringeri math does not “claim” so. In fact, a very old structure that is reputed to be Sureswara’s samadhi is still preserved outside the Sarada temple at Sringeri.//

    READERS PLEASE UNDERSTAND THAT I DONT CLAIM THESE ARE FACTS. BUT I STRONGLY INSIST PROPER COUNTERS SHOULD BE GIVEN.

    இந்தக் கும்பகோணம் பிரச்சனையை எழுப்புவதே தவறு என்ற ரீதியில் செய்யப்படும் பின்னூட்டங்கள் உண்மையை மூடி மறைக்கச் செய்யும் முயற்சியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

  57. அத்விகா அவர்கள் கவனத்துக்கு:

    Within five days of Gandhiji’s fast, an eight point resolution accepting the demands of the Harijans was passed on 24-9-1932 at Pune. Gandhiji ended his fast after this resolution was passed. He requested the countrymen to open the temples to Harijans as per the resolution. However, the followers of Sanatana dharma argued that entry to temples was not part of the resolution and it was against the ancient vedic and agama Shastras. Also, many Harijans at the time announced that there was no extra benefit to them by obtaining entry to temples. But, to fulfill Gandhiji’s wishes, intense propaganda was undertaken across the country to allow entry into temples for Harijans. This became a huge issue at Guruvayur situated in Kerala where untouchability was practiced fiercely and it was also the holy pilgrim center for Sri Krishna Paramatma. With our Swamigal’s complete blessings, a group of Sanatanis left for Kerala on 10-12-1932. The group included legal experts such as T.R.Ramachandra Iyer, Thirpugazhmani T.M.Krishnaswamy Iyer, Sivaramakrishnan, Rajagopala Iyer, S.Subramania Iyer as well as legislators such as M.K.Acharya and V.Somadeva Sharma. They were accorded welcome by Palghat municipal Chairman S.K.Ramaswamy Iyer. There was a public meeting at Palghat on December 10 th and one in Guruvayur on December 11 th . The Guruvayur meeting was led by Kodakkal Raja. Palghat Dr.Sankara Iyer and Thekadi Govinda Menon also made speeches at the meetings. Many resolutions were passed against the Harijans’ entry into temples. The opposition to entry into temples for Harijans was gathering momentum in Kerala where even women participated in the demonstrations.

    In order to obtain a peaceful resolution to this issue, Congress leaders such as Babu Rajendra Prasad, Chakravarty Rajagopalachariar, K.Bhashyam, Varadachari and others came to meet Swamigal at Mylapore as advised by Gandhiji. They were not able to obtain the results they expected from the discussions. However, they announced that they benefited spiritually from having darshan of Swamigal. (Sri Sambamoorthi Shastrigal, Sri Kuppuswamy Iyer, “Sollin Selvan” P.N.Parasuraman, Pujya Sri Mahaswamy Divya Charitram (English), pages 84-5,

    சரி பார்க்க வேண்டுகிறேன்.

  58. அத்விகா நீங்கள் மீண்டும் மீண்டும் திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி தலித்துகளின் ஆலய பிரவேசத்தை எதிர்க்கவில்லை அல்லது எதிர்த்தமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்கிறீர்கள் இது தவறு.

    Within five days of Gandhiji’s fast, an eight point resolution accepting the demands of the Harijans was passed on 24-9-1932 at Pune. Gandhiji ended his fast after this resolution was passed. He requested the countrymen to open the temples to Harijans as per the resolution. However, the followers of Sanatana dharma argued that entry to temples was not part of the resolution and it was against the ancient vedic and agama Shastras. Also, many Harijans at the time announced that there was no extra benefit to them by obtaining entry to temples. But, to fulfill Gandhiji’s wishes, intense propaganda was undertaken across the country to allow entry into temples for Harijans. This became a huge issue at Guruvayur situated in Kerala where untouchability was practiced fiercely and it was also the holy pilgrim center for Sri Krishna Paramatma. With our Swamigal’s complete blessings, a group of Sanatanis left for Kerala on 10-12-1932. The group included legal experts such as T.R.Ramachandra Iyer, Thirpugazhmani T.M.Krishnaswamy Iyer, Sivaramakrishnan, Rajagopala Iyer, S.Subramania Iyer as well as legislators such as M.K.Acharya and V.Somadeva Sharma. They were accorded welcome by Palghat municipal Chairman S.K.Ramaswamy Iyer. There was a public meeting at Palghat on December 10 th and one in Guruvayur on December 11 th . The Guruvayur meeting was led by Kodakkal Raja. Palghat Dr.Sankara Iyer and Thekadi Govinda Menon also made speeches at the meetings. Many resolutions were passed against the Harijans’ entry into temples. The opposition to entry into temples for Harijans was gathering momentum in Kerala where even women participated in the demonstrations. In order to obtain a peaceful resolution to this issue, Congress leaders such as Babu Rajendra Prasad, Chakravarty Rajagopalachariar, K.Bhashyam, Varadachari and others came to meet Swamigal at Mylapore as advised by Gandhiji. They were not able to obtain the results they expected from the discussions. However, they announced that they benefited spiritually from having darshan of Swamigal. (Sri Sambamoorthi Shastrigal, Sri Kuppuswamy Iyer, “Sollin Selvan” P.N.Parasuraman, Pujya Sri Mahaswamy Divya Charitram (English), pages 84-5, இந்த நூல் pdf ஆக இணையமெங்கும் கிடைக்கிறது)

    1. இந்த நூலில் உள்ள ஒரு முக்கிய பார்வை தலித் தலைவர்களே ஆலயபிரவேசத்தை வற்புறுத்தவில்லை என்பது. உண்மை என்னவென்றால் இரண்டு மேல்சாதி காரர்கள் ஆலயங்களுள் தலித்துகள் நுழையலாமா கூடாதா என பேசி கொள்கிறார்கள். இதை பார்க்கும் எந்த மானமுள்ள தலித் தலைவரும் ‘உங்க ஆலய பிரவேச ஆணியே புடுங்காண்டாம்… உங்க சனாதன இந்து மதமும் எங்களுக்கு வேண்டாம்” என்றுதான் சொல்வார். அதைதான் பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் செய்தார். ஆனால் பெருந்தலைவர் எம்.சி,ராஜா அவர்கள் ஆலய பிரவேசத்துக்கான மசோதா ஒன்றை கொண்டு வரத்தான் செய்தார் அது ஆதிக்கசாதி வெறி பிடித்த இந்துக்களால் தந்திரமாக முறியடிக்கப்பட்டது.

    2. இந்த பகுதியில் இரண்டு விசயங்கள் தெளிவாகின்றன. இடைத்தேர்தலில் வந்து ஆசி கேட்கும் இரண்டு எதிரெதிர் வேட்பாளர்களுக்கு ஆசிர்வாதம் செய்து வைக்கிற திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் அத்வைத மனோபாவம் ஆலய பிரவேசத்தில் அப்படி வெளிப்பட்டதாக இல்லை. தன்னிடம் தலித் ஆலய பிரவேசத்தை எதிர்க்கும் வைதிக அணியை ’முழு ஆசிர்வாதம்’ செய்து அனுப்புகிற திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி தலித்துகளின் ஆலய பிரவேசத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க கெஞ்சுகிற காங்கிரஸ் அணியிடம் அதை நிர்தாட்சண்யமாக மறுத்தே அனுப்புகிறார். இருந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் அவரது தரிசனத்தால் ஆன்மிக அனுபவம் பெற்றிருக்கிறார்கள்… சமூகநீதிக்கு இடமில்லாத ஆன்மிகம். இந்த ஆன்மிகத்தைதான் பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் மறுதலித்து அதற்கு பதிலாக மானுட கருணையையும் சமூகநீதியையும் உள்ளடக்கிய ஒரு ஆன்மிக தரிசனத்தை நம் மக்களுக்கு அளித்தார்கள்.

  59. “With our Swamigal’s complete blessings, a group of Sanatanis left for Kerala on 10-12-1932. ”
    Shri AN, please provide evidence, primary sources only, for the above statement that He gave His blessings for this mission.
    Mr Seenu, thank you, God bless you. Mr Kannadasan’s view on Kanchi Deivam brings tears to one’s eyes.
    My request to all the enlightened souls here. Please do not accumulate more “Pava Karma” by speaking ill of this great saint. i am sorry,no one here has the qualification to judge Him.

  60. // அவர் எப்போதும் சத்தியத்தைதான் பேசினார் அனைவரையும் சத்தியத்தையே பேசுங்கள் என்றார், இன்றை காலத்துக்கு சத்தியம் உதவாது என்பவர்கள் அவரை பிற்போக்குவாதி என்றால் என்ன அர்த்தம்? யார் பிற்போக்கு வாதி என்று காலம் சொல்லும்.

    பிற மதங்களைப் போலவே இந்து மதத்தை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பதிலாக நாமே அந்த மதத்திற்கு மாறிவிடலாமே?//
    எது சத்தியம்? உடலோடு அழியக் கூடியசாதி ஏற்ற்த் தாழ்வுகளும் வருண் தர்மங்களுமா? திரு அரவிந்தன் நீலகண்டனும் திரு ஜடாயும் தாங்கள் எந்த இடத்தில் உங்கள் தெய்வத்திலிருந்து வேறுபடுகிறார்கள் என்று தெளிவாகவும் உறுதியாகவு ம் கூறிய பின்னர் ((ஜூன்14, சேக்கிழான் அவர்களுக்கு மறுமொழியில்), அதைப் பற்றிய விளக்கமோ மறுப்போ கூறாமல் character assasination. செய்வதுm. அவர்கள் ஆபிராமிய மதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் நாத்திகத்துக்கும் துணைபோவதாகth தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம். சங்கராச்சாரியரைத் தெய்வமாகவும் அவர் கூறுவதைத்தான் வேதவாக்குகளாகவும் கொள்ள வேண்டும் அப்படி ஏற்றுக் கொள்பவதான் ஹிந்துக்கள் என்று சொல்ல நீங்கள் யார்? இந்து தர்மத்தின் ஏகபோக காவலர் , தலைவர் அவர் ஒருவரே தாம் என்று ஒருகூட்டத்தினர் ஊதிக் காட்டுகின்றனர் அத்தெய்வத்தின் குரல் அந்நிய மதத்தினருக்கும் நாத்திகருக்கும் உரம் அளிக்கின்றது. அநீ அவர்களும் ஜடாயு அவர்களும் அவற்றை மறுத்து இந்து சமூகத்துக்கு வலிவூட்டும் உண்மைகளைக் கூறினால் அந்நிய மதங்களுக்குப் போய் விடுங்கள் என்று கூறுவது சரியில்லை. சங்கராச்சாரியார் வேண்டுமானல் பெரிய வேதசாகரமாகவும் வித்தைக்கடலாகவும் இருக்கலாம். ஆனால் எண்ணற்ற தமிழ் மக்களுக்கு காவிரி போலவும் தாமிரபர்ணி போலவும் இனிய நீரூற்றுக்கள் போலவும் இறையருளால் அவ்வப்போது ஆங்காங்கு தோன்றுகின்ற சுவாமி சித்பவானந்தா, அவருடைய சமகாலத்தவராகவும் நண்பராகவும் எங்களைக் கொத்தடிமைகொண்ட பழ்நி சாதுசுவாமிகளும் , நாரயணகுருவும், அவருடைய சீடர்களும், வெள்ளிமலை இராமகிருஷ்ணமடத்து சுவாமிகளும் வைகுண்டர் ஐயா , வடலூர் இராமலிங்க வள்ளலார் போன்றவrகளுமே வைதிக மதத்தைக் காத்து வந்துள்ளனர். வேதத்தின் மீது தமிழருக்கு உள்ள உரிமையை சந்த மறையும் தமிழும் தேர் தன்னேர் இல்லாத பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் போல நிலைநாட்டினர் யார்? இத்தகைய இனிய நீரூற்றுக்களும் சிற்றாறுகளும், அருவிகளும் ஓடைகளுமே இந்து தர்மத்தை இந்ந்நாட்டில் உயிர்ப்பித்துக் கொண்டுள்ளன. இவர்களைப் போன்று விள்மபரம் வேண்டாத் துறவிகளே இந்து தர்மத்தை சமுதாயத்துக்கு எடுத்துச் சென்று காப்பாற்றி வருபவர்கள். கண்கண்ட, பேசும் தெய்வங்கள்.

  61. Contravarcy in history blog spot is a half baked blog spot which knows nothing about Kanchipuram. He says that there is no Hindu bashing king in kanchipuram those days. Have any one seen what is the next building of the mutt and know when it was built and by whom?

    will post more today evening

  62. அன்புள்ள அத்விகா,
    நன்றி. காஞ்சி பரமாச்சாரியாரை விமர்சிப்பதை எதிர்த்து பக்தர்களின் எளிய மனக் குமுறல்களாக மட்டும் எதிர்வினைகள் இல்லாமல், முடிந்த வரை அவரின் வார்த்தைகளில் இருந்தே மேற்கோள்களுடனும், தர்க்க பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தே என் நீண்ட விளக்கங்களை எழுதினேன். அது சிலரையேனும் சென்றடைந்திருக்கும் என நம்புகிறேன்.
    ———x——-
    இத்தகைய விவாதங்களில் ஒரு முக்கிய புள்ளி உண்டு. இவை கோர்ட்களில் நடக்கும் வாதங்கள் போன்றதல்ல. அங்கே சாட்சியம் மட்டுமே முக்கியம், தேவையான சாட்சிகளைத் ‘தயாரித்து’ விட்டால் யாரையும் குற்றவாளியாக்கி விடலாம், அல்லது சாட்சிகளே இல்லை என்றால் குற்றம் -குற்றமே இல்லை தான். நாம் இங்கே செய்துகொண்டிருப்பது போன்ற விவாதத்தில் அகவயமான புரிந்துணர்வும் வேண்டும், யாரும் தீர்ப்பு கொடுத்து முடித்து வைக்க முடியாது. அவரவர்களின் அகமே அறியும்.

    கருத்துக் குழப்பங்களுக்குத் தான் ஒரு உரையாடல், விவாதம் அவசியம் – தெளிவு பெற. ஆனால் வெறும் தகவல் பிழைகளை கொஞ்சம் முயன்றால் நாமே தேடிப்படித்து உண்மை என்னவென்று புரிந்துகொண்டு விடலாம். இணையத்திலேயே ‘தெய்வத்தின் குரல்’ படிக்கக் கிடைக்கிறது, முன்முடிவுகளற்ற திறந்த மனத்துடன் கொஞ்சம் நேரம் செலவழித்தால் போதும்.

    நாட்டின் தென்கோடியில் இருக்கும் ஒரு பாரம்பரிய மடம் (காஞ்சிமடம் தான் 😉 ) பொதுவாக இந்தியாவின் அதிகம் கவனிக்கப்படாத, கிறிஸ்தவ மதநிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்த வடக்கு கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சல் பிரதேஷ், சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மிஸோரம் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஹிந்து ஆலயங்கள், சமூகக் கூடங்கள் ஆகியவற்றை சில இடங்களில் ஏற்கனவே ஆரம்பித்தும், பல இடங்களில் வேலைகள், புதிய திட்டங்கள், பேச்சுவர்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. வெறுமே விமர்சனங்கள் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதை விட, இந்த முயற்சிகளையும், சேவைகளையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். https://www.kamakoti.org/kamakoti/details/NorthEastfocus.html

    ஒரு சுவாரஸியமான தகவலும் கூட; ஆலயநுழைவுப் போராட்ட வெற்றியின் 70வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை கேரளாவில் போன 2011 நவம்பரில் துவக்கிவைத்து ஆசியளித்தது அதே காஞ்சி மடத்தின் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான் 😉 பிரச்சனைகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மடம் வளர்கிறது. நாமும் மனத்தை விசாலமாக்க முயல்வோம்.
    —x–
    விமர்சனங்களை மற்றும் எதிர்கொண்டால் போதும், விமர்சிப்பவர்களையும் சேர்த்thu எதிர்கொள்ள வேண்டாம். கர்மா, பாவம் அது இதுவென மிரட்ட வேண்டாம். வாதங்களில் வலுவும்,நேர்மையும் இருந்தால் யாரையும், எதையும் எதிர்கொள்ளலாம்.

    இங்கே என் வாதங்களை முடித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

  63. //பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர்// //திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி // திரு. அநீ அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு எனினும் அவரது மனநிலை என்ன என்பதை இந்த மேற்கோள்கள் காட்டுகின்றன. மேற்கொண்டு எழுதும் எந்தக் கருத்தும் அவரிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.. ஒரு பின்னூட்டத்தில் யாரோ சொன்னது போல நாம் நமது வேர்களை விட்டுவிட்டு எதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம்..

  64. More on the copper plates of Kanchi mutt
    . There are 10 copper plates in Sri mutt of various rulers. The earliest copper plate was given by Vijaya Ganda Gopala deva. All the plates were edited by the great scholar T.A. Gopinatha Rao. Addition was made by Dr.K.V.Ramesh. Sri. A.Kuppuswami again edited the plates with the additions. All the plates were published under the tile Copper plate inscriptions of Sri Sankaracharya Mutt.
    https://www.kamakoti.org/kamakoti/articles/krishnadevaraya/Krishnadevaraya%20gift%20to%20kanchi%20math.html
    On the 23rd April, 1529 (nearby 480 years ago) the great Vijayanagara emperor Krishnadwaraya gifted a village named Udayampakkam to Sadasiva Sarasvati disciple of Chandrasekhara Sarasvati. Describing the Sadasiva Saravati, guru, Krishnadevaraya says, he was a Paramahamsa Parivrajakachraya mumukshu, steeped in Ashtangayoga (Patanjali yoga system), with his body meared with vibhuti (Bhasmoddbulita gatra) wearing Rudraksha malas (Rudrakshavali dharin) who conquered the sufferings from cold and heat (Sitoshnadi dvandva-dukhkha-atita) an incarnation of compassion, (Daya Sila) and a highly accomplished knowledgeable sage and recluse (Jnaana-Vairaagya sali) and immeasurable spiritual radiance (Amita tejasvi). Continuing his praise of this Acharya, Krishnadevaraya says the guru is a “Mahatma -and the very incarnation of Siva.

  65. https://tamilhindu.com/2009/11/hindu_authority/

    இதில் தெளிவாக காஞ்சி காமகோடி பீடம் என்று எழுதியுள்ள (58வது பீடதிபதியின் பெயரோடு) அநீக்கு மகாஸ்வாமிகள் அந்த மடத்தின் பீடாதிபதி என்று தெரியாதது ஆச்சர்யமே..

  66. //பிரகாஷ் சங்கரன் on June 13, 2012 at 5:59 pm
    “1. ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாயிருப்பதற்கு யார் காரணம்?ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?
    என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?.
    அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்ராயம் உண்டாக்கியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைத்து போனதற்கு பிராம்மணன்தான் பொருப்பாளி.///

    திரு ப்ரகாஷ் சங்கரன் அவர்களே,

    ப்ராமணர்கள் பற்றிய உங்களது காட்டமான விமர்சனங்களிலிருந்து உங்களது ஆதங்கம் அல்லது சமூக அக்கரையை புரிந்து கொள்ள முடிகிறது.

    ப்ராமணர்கள் தங்களது நிஷ்டைகளை விட்டு விட்டார்கள். அனுஷ்டானங்கள் படி வாழ்வதில்லை, சுயநலன் காரணமாக பணம் சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்கள் அதனால் தான் துவேஷிக்கப்படுகிறார்கள் என்றும், வர்ணாசிரம துவேஷமே ப்ராமணர்கள் இப்படி நடந்து கொண்டு விட்டதால் தான் வருகிறது என்றும் பொறிந்து தள்ளி இருக்கிறீர்கள்.

    ஒரு விஷயத்தை கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும். ப்ராமணர்கள் என்கிற இனக்குழு survival of the fittest என்கிற பதத்திற்கினங்க மாறும் சமூகத்தில் தப்பிப் பிழைத்து வாழ முற்படுகிறார்கள் என்பதைத் தவிற இந்த சமூகத்திற்கு எந்த துரோகமோ பெருங்குற்றமோ இழைத்து விடவில்லை என்பதே அடியேனின் கருத்து. ஆனால் ப்ராமணர்கள் பற்றிய தங்களின் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே அவர்கள் எப்படி தப்பிபிழைத்து வாழலாம்? என்கிற கேள்வியைத் தாங்கியே இருக்கிறது. அது அப்பட்டமாக தங்கள் வரிகளில் தெரிகிறது.

    /// ஒரு பேச்சுக்காகத்தான் assume பண்ணிக் கொள்ளச்சொல்கிறேன்.) வீட்டைவிட்டு ஒடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராமணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால்கூட அவர்களை, செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும் என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விடாமலிருந்திருக்க வேண்டும்.////

    விசாலமான பரிணாமப் பார்வையோ அல்லது சமூகக் கண்ணோட்டமோ இல்லாத தட்டையான வரிகள் இவை.

    ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். மதம் என்பது ஒரு அற்புதமான மூளைச்சலவைக் கேந்திரம். மனிதன் என்பவன் மதம், கலாச்சாரம், சம்பிரதாயம் என்கிற பல்வேறு விதமான கட்டுப்பாட்டு வழிமுறைகளால் மூளைச்சலவை செய்யப்படுகிறான். அந்த மூளைச் சலவையின் பொருட்டே அவன் சில வழிமுறைகளின் படி தொடர்ந்து வாழ முயற்சிக்கிறான். அவன் தொடர்ந்து உயிர்வாழும் சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வன் தனது மன மயக்கத்தில் இருந்து வெளிப்படும் போது மீண்டும் survival of the fittest ஐ நோக்கிச் செல்லும் சமூக விலங்குகளாகவே ஆகிறான். ப்ராமணர்களின் இன்றைய நிலையும் அத்தகையதே!

    ஒருவன் ப்ராமணனாக இருப்பதும், ஒருவன் வைசியனாக இருப்பதும், ஒருவன் க்ஷத்ரியனாக இருப்பதும், ஒருவன் சூத்திரனாக இருப்பது, அத்தகைய classification க்குள்ளே ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டும் , சார்ந்தும் வாழ்ந்து வந்த காலங்களெல்லாம் பல்வேறு விதமான வர்ண ஆச்சாரம் என்கிற மூளைச் சலவைக் கட்டுப்பாட்டால் தான் அமைதியாக நிகழ்ந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்தக் கட்டுப்பாடுகளும், கலாச்சாரங்களும், அத்தகைய ஒரு சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகும் போது அனைத்து வர்ண மக்களுமே அந்த மூளைச்சலவையிலிருந்து வெளியேறி விடுகிறார்கள். எல்லோருமே நாட்டைக் காக்கும் க்ஷத்ரியனாக வாழ்ந்து விடுவதில்லை. எல்லோருமே சூத்திரனாக இருந்துவிட விரும்புவதுமில்லை. எல்லோருக்கும் தெளியும் மயக்கம் ப்ராமணனுக்கும் தெளிகிறது. அவன் சமூகத்தில் தப்பிப் பிழைத்து தானும் வாழ முற்படுகிறான். எல்லா வர்ணக்காரர்களுமே இன்று பொருளீட்டும் வைசியனாக மாறிவிட்ட போது ப்ராமணனும் அப்படி வாழத்துடிக்கிறான். காரணம் யாருக்கும் இன்று மதம் என்கிற மூளைச்சலவை பயன் படவில்லை. மீண்டும் அப்படி ஒரு சலவையை செய்ய முடியவில்லை. (அத்தகைய மூளைச்சலவையை பாதிரிகள் அற்புதமாகச் செய்கிறார்கள்).

    அத்தகைய சூழலில் ப்ராமணர்கள் மீது மட்டுமே மிகப்பெரிய குற்றத்தைச் சுமத்திவிடப் பார்க்கிறீர்கள்.

    ஒரு விஷயத்தை நான் ஒத்துக் கொள்கிறேன். /// இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தன் மரியாதை எதிர்பார்த்தானானால், இவனைத் தூஷிக்கத்தான் வேண்டும்./// ப்ராமணன் ‘ப்ராமணனாக’ இருப்பதாலேயே ஒரு சமூக மரியாதை கிடைக்குமென எதிர்பார்ப்பது ஞாயமற்றது என்கிற உங்கள் வாதம் சரியானதே!

    ஆனால் அதே நேரத்தில் ப்ராமணன் என்கிற இனக்குழு survival of the fittest ஆக வாழ நினைப்பதற்காகவே அவர்களை தூஷிக்க வேண்டும் என்பதும் சரியல்ல. அதுவும் தூஷிக்கத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நினைப்பதும் ஞாயமற்றது.

    இன்றைய ப்ராணர்கள் மற்ற அனைத்து மக்களையும் போலவே நிறை குறை நன்மை தீமைகளை கொண்டிருப்பவர்களே.

    அப்படியே தூஷிக்கலாம் என்று இருந்தாலும் கூட எந்த அளவிற்கு அவன் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப் பட வேண்டுமோ அந்தளவிற்கு கூட இல்லாமல் 50 – 100% அதிகப்படியாகவே தூஷிக்கப்படுகிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த ப்ராமணனின் பெயரைச் சொல்லியே வர்ணாசிரம தர்மங்களும் அளவுக்கு மிக அதிகமாகவே தூஷனை செய்யப்படுகிறது. அவற்றில் எந்த வித ஞாயமும் இல்லை என்பது தெளிவு.

    அதனால் சமூகத்தில் தப்பிப்பிழைத்து தாமும் வாழவேண்டும் என்கிற ஞாயமான நியதிக்குட்பட்டு சராசரி மனிதர்களாக வாழும் ஒரே காரணத்திற்காக ப்ராமணர்களின் மீது மொத்த குற்றத்தையும் சுமத்தி தூற்றாதீர்கள். அந்த விஷயத்தி மறுபரிசீலனை செய்ய நிறைய சமூகக் காரணிகள் இருப்பதை சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  67. பி.ஏ. கிருஷ்ணன் “அக்ரஹாரத்தில் பெரியார்” புத்தகத்தில் தரும் தகவல்: ராஜாஜி முதலவராக 1937-இல் இருந்தபோது ஆலயப் பிரவேச மசோதா கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. (இன்னொருவர் ஈ.வெ.ரா)

  68. திரு. C.N.Muthukumaraswamy

    //எது சத்தியம்? உடலோடு அழியக் கூடியசாதி ஏற்ற்த் தாழ்வுகளும் வருண் தர்மங்களுமா?//
    உடலோடு அழியக் கூடிய ஜாதியை வைத்து பின் ஏன் இடவோதிக்கிடு செய்கிறாய்??
    அதை ஏன் நீங்கள் எதிர்ப்பதில்லை? சத்தம் இல்லாமல் அதனால் பயன் அடைவொம் என்பதனால் தானே?
    அன்மையில் இடவோதிக்கிட்டில் “creamy layer” என்ற திருத்தம் கொண்டுவற முயற்ச்சித்த போது அதை கிருமி layer என்று சொல்லி எதிர்த்தவர்கள் தான் முற்போக்கு வாதிகளா?? தன் ஜாதியில் ஏழையாக இருப்பவனுக்கு சென்று சேறவேண்டிய இடவோதிக்கிட்டை தட்டிப்பறிக்கும் அந்த ஜாதியை சேர்ந்த வசதிபடைத்தவனை கண்டிக்காமல் அதோடு தாங்களும் அந்த தவறை செய்துகொண்டு, வெளியில் ஜாதிமுறைகளை ஒழிக்கவேண்டும் என்று கூச்சல் இடுவதுதான் இன்றைய ஸ்டைல்.
    இதுவரை எத்தனை முன்னேறியவர்கள் (பிற்பட்ட மற்றும் தலித் ஜாதியில்) இனி எங்களுக்கு இடவோதிக்கிடு வேண்டாம் எங்கள் ஜாதியில் அதை இன்னும் அடையாதவர்கள் அதை பெறட்டும் அதுவரை நாங்கள் பொதுபிரிவில்தான் வருவோம் என்று கூறியிருக்கிறார்கள்??

    பிராமிணர்கள் பலர் மகா பெரியவாயிடம் சென்று தங்களுக்கு கல்வி வேலைவாய்பில் இடம் மருக்கபடுவதாக சொன்னபோது, அவர் மகிழ்ச்சி யோடு சொன்னார் அது நல்லதுதான், நீங்கள் எல்லாம் இப்போதுதாவது வேதம் கற்று எழிமையாக வாழ்ந்து சமுதாயத்திற்கு பயன்படுங்கள் என்று சொன்னார். எல்லொரும் எல்லாவற்றிர்க்கும் போனால் இப்படி போட்டி, பொறாமை, இடவொதிக்கிடு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வரும் என்று உணர்ந்ததால் அவர் அவரும் தங்களுக்கான ஏற்ப்பட்ட தொழிலை செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றார். அவர் என்றும் இன்று உள்ள ஜாதி துவேசத்தை ஆதறித்தவர் அல்ல.

    //சங்கராச்சாரியரைத் தெய்வமாகவும் அவர் கூறுவதைத்தான் வேதவாக்குகளாகவும் கொள்ள வேண்டும் அப்படி ஏற்றுக் கொள்பவதான் ஹிந்துக்கள் என்று சொல்ல நீங்கள் யார்?// நான் எங்கே அப்படி சொன்னேன்? பெரியவா சொன்ன கருத்தை தவறு அதை புறம்தள்ளவேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்???

    //சுவாமி சித்பவானந்தா, அவருடைய சமகாலத்தவராகவும் நண்பராகவும் எங்களைக் கொத்தடிமைகொண்ட பழ்நி சாதுசுவாமிகளும் , நாரயணகுருவும், அவருடைய சீடர்களும், வெள்ளிமலை இராமகிருஷ்ணமடத்து சுவாமிகளும் வைகுண்டர் ஐயா , வடலூர் இராமலிங்க வள்ளலார் போன்றவrகளுமே வைதிக மதத்தைக் காத்து வந்துள்ளனர். // நீங்கள் இங்கு குறிபிட்டுள்ள சுவாமிகளிம் இன்னும் பலரும் உண்மையில் வணங்கி போற்றதக்கவர்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு எந்தமகான் பிடித்திருக்கிறதோ அவரை பின்பற்றுங்கள் ஆனால் பிறரை தவறாக பேசாதிர்கள், அதை நீங்கள் பின்பற்றும் குருவும் ஏற்றுகொள்ள மாட்டார். நீங்கள் பின்பற்றும் குருவையும் இப்படி சிலர் தவறாக புரிந்து கொண்டு திட்டக்கூடும் அதை நீங்கள் ஏற்ப்பிர்களா? உண்மையான ஒவ்வொரு குருவும் ஒரு காரணத்துக்கா அவதரிக்கிறார்கள் அவர்களை பிழை காண்பது நமது அறியாமையினால். நாம் ஒவ்வொருவரும் இப்படி உள் சண்டை போடுவதனால் தான் அன்னிய மதத்தினர் அதை நன்கு பயன்படுத்துகிறார்கள். நம் மத்தில் சாஸ்தரத்தில் நீக்க படவேண்டியது ஒன்றும் இல்லை, நீக்க படவேண்டியது நம் மனத்தில் உள்ள அழுக்கு மற்றும் உயர்வு தாழ்வு பாரட்டும் என்னம்தான் அதற்க்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

    நன்றி
    சீனு.

  69. காஞ்சி சாமி பற்றி முன்னரும் இப்போதும் எழுதி களைத்துவிட்டீர்கள். அவரின் சாதியக் கருத்துகளை மறுப்பதென்பது இயல்பானதே.
    சாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் தம் சாதியர் எவ்வெவ்வாறு பதிவு செய்து கொள்ள வேண்டும் என பலரும் அறிவுருத்துப்பட்டனர்.
    இந்து இயக்கங்கள் சாதியில்லை என பதிவுருக்க வேண்டுகோள் விடுத்தனவா?

  70. //“த்ருணாதபி ஸமீசீனம்” (புல்லைவிடவும் தாழ்ந்த பணிவு) என்ற முதுமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்த மகத்தான மனிதர் ஸ்ரீ குருஜி. //

    நீங்கள் கோட் செய்வது சிக்ஷாஷ்டகம் என்னும் ஸ்லோகத்தில் வருவது…

    த்ருணாதபி ஸுநீசேன தரோரபி சஹிஷ்ணுனா
    அமானினா மானதேன கீர்தநீய சதாஹரி:

    புல்லை விடவும் தாழ்ந்ததாக (ஸுநீசேன) வும், வெட்டும் போதும் நிழல்தரும் மரம போல பொறுமையுடனும் போலி கவுரவத்தை விட்டு அனைவருக்கும் மரியாத செலுத்துவதாகவும் இருக்கும் மன நிலையில் ஹரி நாமத்தை கீர்த்தனம் செய்ய வேண்டும்.

  71. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,

    நான் மகாஸ்வாமிகள் மீது பெருமதிப்பு வைத்துள்ளேன். அதற்காக , அரிஜனங்கள் ஆலயப்பிரவேசம், பெண்களின் மத உரிமைகள் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த கருத்துடன் நான் நூற்றுக்கு நூறு மாறுபடுகிறேன். ரமண ஆஸ்ரமம் வெளியிட்டுள்ள ஸ்ரீ ரமண மணம் என்ற நூலில் யாரோ ஒரு நண்பர் ” புல்லுக்காரிகள் கண்ட பசுமை” என்ற தலைப்பில் உள்ள செய்திக்கு கண்டனம் தெரிவித்தது தவறு. அந்த தவறுக்கு மகா சுவாமிகளை பொறுப்பாக்க முடியாது. ஒரு புத்தகத்தை படிப்பவர்கள், தங்கள் சுய மதிப்பீடு செய்து , அன்னம் பாலையும் , தண்ணீரையும் பிரித்து, பயன் படுத்துவது போல செயல் படவேண்டும். நமக்கு எல்லைகள் கிடையாது. ஆபிரகாமிய மதத்தொருக்கு தான் ஒரே புத்தகம், அதில் என்ன உளறியிருந்தாலும், அதனை தாண்டி வர முடியாதபடி ஒரு வேலியை அவர்கள் போட்டுக்கொண்டு அவஸ்தை பட்டு , திணறுகிறார்கள். நமக்கோ, உபநிஷத்தில், குருநாதர்கள் சீடனிடம் பேசும்போது, எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன், நீயே இதைவிட இன்னும் சிறந்ததாக வேறு புதிய வழி இருந்தாலும் ஆராய்ந்து கண்டு பிடி என்று தான் சொல்லியுள்ளது. எனவே, ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கு தகுந்தபடி வடிகட்டிக்கொள்ளவேண்டும். புதிய வழிகளுக்கும், ஏற்கனவே இருப்பவற்றை தேவையான படி மாற்றிக்கொள்வதற்கும் , நம் மதத்தில் பூரண சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அது என்னுடைய தவறே தவிர, எனக்கு பாடம் சொன்ன குருநாதரின் தவறு அல்ல. தெய்வத்தின் குரல் ஏழு பாகங்களையும் நான் பல வருடங்களுக்கு முன்னரே நான் படித்து முடித்துவிட்டேன். அது ஒரு அற்புதமான தொகுப்பு. ஆனால், கோயில்களில் ஆண்கள் மட்டுமே பூஜை செய்தல், சாதி வித்தியாசத்தினால் மத சடங்குகளில் வேறுபாடு காட்டி, கோயிலுக்குள் நுழைய உரிமை மறுப்பது , ஆகியவை கற்காலத்தை சேர்ந்த மூடர்களின் கொள்கைகள். அவற்றுக்கு, நம்முடைய சனாதன இந்து தர்மத்தில் இடங்கிடையாது. முக்கியமாக, மனு தர்மம் என்று எழுதப்பட்ட நூல், வேதம் அல்ல.அது ஒரு பிற்கால நூல் தான். அந்த மனு தர்மத்தில் உள்ள, நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, தவறான கருத்துக்களை திருத்துவோம்.

  72. Karthikeyan G on June 15, 2012 at 6:45 pm

    //https://tamilhindu.com/2009/11/hindu_authority/

    இதில் தெளிவாக காஞ்சி காமகோடி பீடம் என்று எழுதியுள்ள (58வது பீடதிபதியின் பெயரோடு) அநீக்கு மகாஸ்வாமிகள் அந்த மடத்தின் பீடாதிபதி என்று தெரியாதது ஆச்சர்யமே..//

    கார்த்திகேயன், அவர் அக்கட்டுரையில் எழுதியதை கீழே கொடுத்திருக்கிறேன்.

    //காஞ்சி காமகோடி பீடத்தின் 58-ஆவது ஆச்சாரியராகக் கருதப்படும் ஆத்மபோதர் அவரது வடநாட்டு யாத்திரையின் போது //

    கருதப்படுகிற என்று குறிப்பிட்டு சர்வ நிச்சயமாக ஐயப்பாட்டுடன் எழுதியிருக்கும் ஒன்றை நீங்கள் எப்படி தெளிவாக குறிப்பிட்டதாகக் கூறுகிறீர்களோ!

  73. “அவர் ஆதரித்த சாதி என்ற கோட்பாடு வேறு, அதற்கும் சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் சாதிக்கொடுமைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் அடிக்குறிப்பிட்டு சொல்லிக்கொள்கிறேன்”.
    இதையெல்லாம் இன்று சொல்வதில் அர்த்தமில்லை ப்ரகாஷ்; இதையெல்லாம் விளக்கிப் புரியவைக்கும் நிலையில் யாரும் இல்லை; எல்லோரும் நவீன சீர்திருத்த சன்னதத்தில், ஆவேசத்தில் இருக்கிறோம்; இன்றய சீர்திருத்தம் என்பது ‘ஒற்றைய இரட்டையா” விளையாட்டுதான்; ஒன்று இல்லாவிட்டால் இரண்டு, இரண்டு இல்லாவிட்டால் ஒன்று அவ்வளவுதான்; உண்மையைத்தேடும் சிந்தனை சார்ந்த அணுகுமுறைக்கெல்லாம் இடமில்லை.

    வெளிப்படையாக, சட்டபூர்வமாக்கி சாதியை வைத்து இன்று செய்யப்படும் காரியங்களுக்கெல்ல நம்மால் சக்கரவட்டமாக் சீர்திருத்த மனிதாபிமான நியாங்களை அடுக்கிக்கொண்டே போகமுடியும்; நாமெல்லாம் நவீன சீர்திருத்தவாதிகள்; அவரோ கட்டுப்பெட்டி சனாதனி; அவருக்கு லட்சியமெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்வதே இன்ற உலகில் அபசாரம்.

  74. டாக்டர் பத்ரிநாத் அவர்கள் சங்கராச்சாரியாருக்கு மிகவும் கவனத்துடன் கண் அறுவை சிகிச்சை செய்து பார்த்து கொண்டார் என்று படித்த ஞாபகம்.முதலில் செய்த சிகிச்சைக்கு பிறகு பெண் செவிலியர்கள் கூடாது என்று மடத்து ஆட்களை வைத்தே பார்த்து கொண்டதால் ஒரு கண்ணின் பார்வை போய் விட்டது என்று.
    அவர் வாழ்க்கையை தெளிவாக எடுத்துக்காட்டும் நிகழ்வு இது
    கண் போனாலும் பரவாயில்லை,பெண் செவிலியர் கூடாது என்று
    சிறையில் இருக்கும் போதும் பிராமணர் சமையல் செய்த உணவு தான் உட்கொள்ள வேண்டும் என்று புரட்சி சங்கராச்சாரியாரே கூறும் போது பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்பதை விளக்கவும் வேண்டுமோ.
    இதில் இவை தவறில்லை அவர் சாதிகளை கடந்தவர்,கடவுள் என்று சிலர் வாதிடுவது தான் ஆச்சரியம்

  75. அன்புள்ள நண்பர்களுக்கு,

    விவாதத்துக்கு மருந்துண்டு. விதண்டாவாதத்துக்கு மருந்தில்லை. இது எத்துனை உண்மை என்பது இங்குள்ள பின்னூடங்களில் சிலவற்றைக் காண்கையில் புரிகிறது. விவாதம் மூலமாக யாருடைய கருத்தையும் மாற்ற முடியாது. எனினும் அறிவு விருத்திக்காக தர்க்கம் தேவையாகிறது. அதே சமயம் தனிப்பட்ட ‘ஈகோ’ உள்ளவர்களுடன் விவாதம் செய்வது பொருளற்றது.

    ஒரு முன்முடிவுடன் எதையும் அணுகக் கூடாது என்பதை மட்டும் நபர்களுக்கு சொல்லிவிட்டு, இந்த விவாதத்தில் இருந்து விடைபெறுகிறேன். நன்றி.

    -சேக்கிழான்

  76. கடல் தாண்டுவதை பற்றி அவர் என்ன கூறியிருக்கிறார்.காந்தியை மாட்டு தொழுவத்தில் பார்த்தற்கும் கடல் தாண்டி சென்றவர் என்பதால் தான்,சாதியால் அல்ல என்று காஞ்சி மடத்து அன்பர் ஒருவர் எழுதிருக்கிறார்.கடல் தாண்டி செல்வதை பற்றிய அவர் கருத்தை அவர் மீது பற்றோடிருக்கும் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்
    ரத்த தானம்,கண் தானம்,கிட்னி தானம் பற்றி அவர் கருத்தென்ன.பிராமணர் சமையல் செய்த உணவு தான் உட்கொள்ள வேண்டும் என்றால் அதே சாதி ரத்தம்,கிட்னி,கண் தானே ஏற்று கொள்ள வேண்டும்.அப்படி கேட்பதை சரி என்று யாராவது சொல்வார்களா.
    பெண் கொடுத்த கிட்னியை வைத்து கொண்டு நாடாண்டவர்களும் இங்கு உண்டு.அப்படி பெண்ணின் ரத்தம்,கண் ஏற்றப்பட்டால் அவர்கள் மறுபடியும் தெய்வத்திற்கு பூசிக்கும் வேலை செய்ய முடியுமா
    காந்தி சாதி இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று விட்டு விட்டார்.ஆனால் பெரியவர் அப்படி விடாமல் லட்சியத்தோடு அவற்றை நிலைநிறுத்த முடியும் என்று போராடினார் என்று சப்பைக்கட்டு கட்டுகிறவர்கள் விஞ்ஞான வளர்ச்சியால் சாதிகளை கடந்து உடலிலேயே கலப்புகள் ஆனந்தமாக சேர்வதை பற்றி தெய்வத்தின் குரலில் என்ன கூறியுள்ளார்
    அண்ணன் தம்பிக்கு வேறு வேறு ரத்த வகை இருக்கலாம்.எங்கோ வெளி மாநிலத்தில்/நாட்டில் இருப்பவரின் எலும்பு மஜ்ஜை,சிறுநீரகம் ஒருவருக்கு பொருந்தும் காலத்தில் சாதியை வைத்து மக்களை பிரிப்பதை சரி என்று எண்ணியவரை கடவுள் என்று புகழ்வது சரியா.ரத்த வகை பற்றி அறியாமையால் உறவினர்களின் ரத்தம் ஏற்றப்பட்டு பலர் மரித்த வழக்கத்தை சரி என்று யாராவது வாதிட முடியுமா [Edited]
    பெண் என்றால் இதை தான் செய்ய வேண்டும் ,இப்படி அடங்கி தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய வாழ்க்கையை லட்சிய வாழ்க்கை என்று சொல்ல எப்படி மனம் வருகிறதோ

  77. அன்புள்ள பிரகாஷ் சந்திரன் & கண்ணன்ஜி,

    நான் உங்கள் வீட்டுக்கு வரலாமா என கேட்கிறேன். “எங்கள் வீட்டு விதிகளின் படி அழுக்கானவர்களை நாங்கள் உள்ளே விடுவதில்லை” என பதில் சொல்கிறீர்கள் என்றால் என்ன பொருள்? அதற்கு பிறகு நான் ஏன் உங்கள் வீட்டில் அடி எடுத்து வைக்க போகிறேன். இப்போது ’ஆச்சாரிய மஹா ஸ்வாமிகளின் திவ்ய சரிதத்தில்’

    A: “What is the necessity for the removal of untouchability?”
    G: “Among the people of Bharatadesa, besides Hindus, there are Muslims, Christians, and also some other religionists. Hence it seems to me that untouchability needs to be removed, what does your Holiness think about entry of the untouchables into temples”?
    A: “Temples are sacred places. They are intended for those who believe that God is enshrined in the Sanctum sanctorum of the temple. The Agamas extol the sacred nature of the temples. Those who do not have faith in the Agama Shastras and those who do not accept the principles enunciated by the Agamas in connection with the purity and sanctity of the temple are decidedly unfit for entering our temples”.

    காந்திஜியின் எந்த கேள்விக்கு திருசந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பதில் சொல்கிறார் என்பதை பாருங்கள். “பக்தியும் சுத்தமும் உள்ள எவரென்றாலும் கோவிலுக்கு வரலாம்” என்று சொல்லவில்லை. மாறாக யாரெல்லாம் ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில் கோவிலின் புனிதம் குறித்து ஏற்கவில்லையோ அவர்களெல்லாம் கோவிலுக்குள் நிச்சயமாக கட்டாயமாக வரமுடியாது” இது எதற்கான பதில்? தலித்துகள் ஆலய பிரவேசம் செய்வதை குறித்து பெரியவர் என்ன நினைக்கிறார் என மகாத்மா காந்தி கேட்டதற்கான பதில்.

    கண்ணன்ஜி மேலே சொல்லப்படுகிற உங்கள் ஆச்சாரிய ஸ்வாமிகளின் வார்த்தைகள் இன்றைக்கு தலித்துகளை கோவிலுக்குள் விடமாட்டோம் என்று சொல்லுகிற ஆதிக்கசாதிகளின் வார்த்தைகளிலிருந்து எவ்விதத்தில் மாறுபடுகின்றன என்பதை விளக்குங்கள். இதன் தொடர்ச்சியாகவே தீண்டாமை தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட குருவாயூருக்கு சென்று அங்கே தலித்துகளின் ஆலய பிரவேசத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ய சென்ற வைதிக அணிக்கு திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அளித்த ஆசிகளையும், அதே நேரத்தில் பூனா ஒப்பந்தத்தை தொடர்ந்து திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியிடம் தலித்துகளின் ஆலய பிரவேசத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பெற விரும்பி வந்த காங்கிரஸ் பிரதிநிதிகள் (பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி உள்ளிட்டோர்) தோல்வியடைந்து திரும்பியதையும் பார்க்க வேண்டி உள்ளது.

    காந்திஜியின் உயிரை காப்பாற்ற தன் சமுதாய மக்களின் முக்கிய உரிமையாக தாம் கருதிய உரிமைகளை விட்டு கொடுத்த பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் மாண்புடன் அதே காந்திஜி தலித்துகளுக்கு அளித்த வாக்குறுதியில் உள்ள ஆலய பிரவேசத்துக்கு ஆதரவாக ஒரு குரல் எழுப்பிடக் கூட மறுத்த திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனநிலையை ஒப்பிட வேண்டி உள்ளது. போதிசத்வரின் மகா கருணை குறுகிய சாதிய நெஞ்சங்களை மூழ்கடித்து இந்த தேசத்தின் ஆன்மாவை மீட்க எழுந்த தருணம் அது. இந்த தேசத்தின் எல்லா ஆச்சாரியர்களும் மடாதிபதிகளும் ஜெகத்குருக்களும், பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அவர்களின் தீக்க்ஷா பூமி மண்ணை தங்கள் தினசரி பூஜையில் வைத்து வணங்கினால் ஒருவேளை அவர்கள் மனதிலும் பாரதத்தின் பாரம்பரிய போதி மகா கருணை மலரலாம்.

  78. என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி பதிலளித்த அநீ மற்றும் நடராஜன் அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும். இங்கு கேள்வி அவர் ஆச்சர்யரை குறிப்பிட்டதல்ல. காஞ்சி மடம் என்று ஒன்று இருப்பது அநீ அவர்களுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரிகிறது. இருப்பினும் கும்பகோணம் மடம் என்று குறிப்பிடுவது ஏன்? மேலும் இது இணையத்தில் சரி பார்க்க முடியாத செய்தி ஒன்றும் இல்லை. மடத்தின் பெயரை மாற்றிக் குறிப்பிடுவதாலும், ‘திரு’ என்று விளிப்பதாலும் காஞ்சி மாமுனியின் பெருமையில் எள்ளளவும் குறையப்போவதில்லை. திராவிட இயக்கத்தவரைப் போல ஹிந்து சமூகத்தின் ஒரு பெரிய ஞானியைத் தூற்றுவது எந்த அளவுக்கு சனாதன தர்மத்தின் அடிநாதத்தோடு ஒத்தது.

  79. //பிறகு பெண் செவிலியர்கள் கூடாது என்று மடத்து ஆட்களை வைத்தே பார்த்து கொண்டதால் ஒரு கண்ணின் பார்வை போய் விட்டது என்று.
    அவர் வாழ்க்கையை தெளிவாக எடுத்துக்காட்டும் நிகழ்வு இது
    கண் போனாலும் பரவாயில்லை,பெண் செவிலியர் கூடாது என்று//

    அன்புள்ள பூவண்ணன்,

    திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி, பெண் செவிலியர் கூடாது என்பதால் இதை செய்தாரா அல்லது ஒரு துறவிக்கு பெண் செவிலியர் சேவை செய்வது என்னதான் இன்றியமையாததாக இருந்தாலும் தேவையற்ற பேச்சுகளுக்கான ஊசி முனை இடமும் கொடுக்க கூடாது என்பதற்காக செய்தாரா? இதனை தெளிவாக்க வேண்டும். இரண்டுமே கூட காரணங்களாக இருந்திருக்கலாம். என்றாலும் பெண் செவிலியர் கூடாது என்பதால் என்றால் முதல் அறுவை சிகிச்சையின் போதே அவர் அதை மறுத்திருப்பார். எனவே பிறகு மடத்துக்கு கடுமையான ஒழுக்கவிதிகள் தேவை என அவருக்கு அவரே இட்டு கொண்ட ஒரு கட்டுப்பாடு காரணமாக இருந்திருக்க கூடும். என்றால் இந்த அளவு கடுமையுடன் இல்லையென்றாலும் ஓரளவாவது நம் சமூக சமய தலைவர்கள் இவரது வாழ்க்கையிலிருந்து அவரது எளிமை, வெளிப்படையான வாழ்க்கை, தமக்குதாமே விதித்து கொண்ட கடுமையான ஒழுக்கவிதிகள் ஆகியவற்றை கடைப்பிடிப்பார்களென்றால் அது நம் தேசத்துக்கு நிச்சயம் நன்மை பயக்கும்.

    பெண் கல்வி, தலித் விடுதலை ஆகியவற்றில் அவரது கருத்துகள் நிச்சயமாக ஒதுக்கி புறந்தள்ளப்பட வேண்டியவை. அதே நேரத்தில் அவரது எளிமை கட்டாயமாக போற்றப்பட வேண்டியது. எதுவானாலும் அவரும் நம் பண்பாட்டின் ஒரு அங்கம். தவிர்க்க இயலாத மரியாதைக்குரிய பகுதி. ஆனால் அவர் மீதான இந்த அடிப்படை மரியாதை , தெய்வ பக்தியாக மாற்றப்பட்டு அது சாதியத்தின் trojan horse ஆக மாறும் போது அதை சுட்ட வேண்டியது நம் கடமை. இது என்னதான் தவறாக அவரது பக்தர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது. அவரது சமூக கருத்துகளின் ஒவ்வாமையை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரின் மகா கருணையை முன்வைத்து நம் சகோதரர்களை குறுகிய சாதிய கண்ணோட்டத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டியுள்ளது. நண்பர்களை எதிரிகளாக்கும், மனது துன்பமளிக்கும் முள் நிறைந்த பாதையே இது. என்றாலும் இந்த சமுதாயம் ‘பரம வைபவ’ நிலையை அடைய, சாதியம் அழிந்தே ஆகவேண்டும். வேரும் வேரடி மண்ணுமற. அதற்காக இந்த மனவருத்தமும் துயரமும் தரும் வேலையை யாரவது ஒருவர் செய்தே ஆக வேண்டும். கர்மண்யேவாதிகாரஸ்தே.

    பணிவன்புடன்
    அநீ

  80. // ‘திரு’ என்று விளிப்பதாலும் காஞ்சி மாமுனியின் பெருமையில் எள்ளளவும் குறையப்போவதில்லை.//

    இதே நான் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என எழுதியிருந்தால் எவருமே ஆட்சேபித்திருக்க மாட்டீர்கள். நன்றாக பாருங்கள் நான் திரு போட்டு ஒரு புள்ளி வைத்து எழுதவில்லை. ஸ்ரீ என்பதன் தமிழாக திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்றுதான் எழுதியுள்ளேன். ஆனால் அது ஏனோ இழிவாக தெரிகிறது. தமிழ் மீதான இழிவு மனப்பான்மை அல்லது தாழ்மையுணர்வு? நான் அவரது பூர்வாசிரம பெயரை குறிப்பிடவில்லை. மாறாக அவரது மடம் சார்ந்த பட்டத்தையே மரியாதையுடன் கூறியிருக்கிறேன் இது எப்படி அவரை ’திராவிட இயக்கத்தவரை போல் தூற்றுவது’ ஆகிறது என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

  81. // “Temples are sacred places. They are intended for those who believe that God is enshrined in the Sanctum sanctorum of the temple. The Agamas extol the sacred nature of the temples. Those who do not have faith in the Agama Shastras and those who do not accept the principles enunciated by the Agamas in connection with the purity and sanctity of the temple are decidedly unfit for entering our temples”.//
    நண்பர்கள் யாராவது தெய்வத்தின் குரலிலிருந்து, ஆச்சாரியரின் மேற்கண்ட அவரின் கூற்றுக்கு அவர் அளித்துள்ள விளக்கங்களை எடுத்துக் காட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன். திருக்கோவிலுக்கு வழிபட செல்வோர் எல்லாம் வழிபடச் செல்வதினாலேயே திருக்கோவிலின் தூயமையையும் கருவறையின் புனிதத்தையும் நம்புவோர் என ஏற்றுக் கொள்வதில் தடையென்ன? அவர்களுடைய தகுதியை யார் கணிப்பது? எப்படிக் கணிப்பது? ஆச்சாரியர் இவை பற்றி ஏதேனும் கூறியுள்ளாரா?

  82. /திராவிட இயக்கத்தவரைப் போல ஹிந்து சமூகத்தின் ஒரு பெரிய ஞானியைத் தூற்றுவது எந்த அளவுக்கு சனாதன தர்மத்தின் அடிநாதத்தோடு ஒத்தது.//
    அரவிந்தன் நீலகண்டன் எங்கும் பரமாச்சாரியரை நிந்திக்கவில்லை. அவருடைய கட்டுரையையும் அவருடைய மறுமொழிகளையும் நடு நிலையில் வாசிப்ப்போர் அவர் ஆச்சாரியரின் அழுக்கற்ற துறவொழுக்கத்தையும் கல்விஞானத்தையும் பாராட்டியே வந்துள்ளமை தெரியும். ஆச்சாரியருடைய சாதிபற்றிய கொள்கைகள் இந்துமதத்தைப் பல்வீனப்படுத்துகின்றன என்று அநீயும் இந்துக்களில் பலரும் கருதுகின்றனர். அதையே அநீ சுட்டிக் காட்டுகின்றார். ஆச்சாரியரை ஏசுவது எத்தனை தவறோ அத்துணைப் பிழையானது இந்து செய்ல்வீரராகிய அநீ அவர்களையும் அவரொத்த செயல்வீரர்களையும் பழிப்பது. அவர்கள் நாத்திகத்தையும் அந்நியமதங்களையும் எதிர்கொள்ளும் கள்ப்பணி வீரர்கள். காஞ்சி ஆச்சாரியர் ஒருவரே இந்துமத்தைன் பரமாச்சாரியர் போலவும் அவருடைய மொழிகளே தெய்வத்தின் குரலாகிய மறைமொழியெனவும் அம்மொழியே இந்துமதத்தின் கோட்பாடுக் கொண்டுள்து என்று அதீதமாகச் சிலரால் விளம்பரப்படுத்தப்படுகின்றது. அத்தெய்வத்தின் குரல் களப்பணியாளர்களின் செயலாற்றலுக்குப் பின்னடைவு ஏற்படுத்துகின்றது. திராவிடக் கட்சியினர் போல் அநீ ஏசுகிறார் என்க் கூறுவது தவறு. .அத்தெய்வத்தின் குரலை வேதமாகக் கொண்டு அவரை வழிபடுவோர் சிலராவது முன் மாதிரி இந்துக்களாக வாழ்ந்து காட்டலாமே..

  83. //காந்திஜியின் உயிரை காப்பாற்ற தன் சமுதாய மக்களின் முக்கிய உரிமையாக தாம் கருதிய உரிமைகளை விட்டு கொடுத்த பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் மாண்புடன் அதே காந்திஜி தலித்துகளுக்கு அளித்த வாக்குறுதியில் உள்ள ஆலய பிரவேசத்துக்கு ஆதரவாக ஒரு குரல் எழுப்பிடக் கூட மறுத்த திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனநிலையை ஒப்பிட வேண்டி உள்ளது. // Quoting from India’s struggle for Independence by Bipan Chandra. Page 291, Para 3. ” In the end they succeeded in hammering out an agreement, known as the Poona Pact, according to which the idea of separate electorates for the Depressed Classes was abandoned but the seats reserved for them in the provincial legislatures were increased from seventy-one in the Award (Ramsay McDonald’s communal award) to 147 and in the Central Legislature to eighteen per cent of the total. ”
    Dear Aravindhan, if you mentioning about Poona Pact the history says he got more than the British had offered as an outcome of this pact. What are you mentioning here as sacrifice?
    இந்த விவாதத்தில் பங்கேற்கும் மற்ற அன்பர்கள் தலைப்பிலிருந்து விலகுவதற்காக தயை கூர்ந்து மன்னிக்கவும்..

  84. திரு.ராம், கொஞ்சம் கவனமாகப் படித்துவிட்டு மறுமொழி எழுதுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், பிராமணர்களைப் பற்றி நான் சொல்வதாக நினைத்து நீங்கள் கொடுத்திருக்கும் நீண்ட விளக்கங்கள்…… அந்த பத்து கருத்துக்களும் காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொன்னவை. அவற்றுக்கு மேலேயே ‘தெய்வத்தின் குரலில்’ இருந்து எடுத்துப் போட்டதாக சுட்டியும் கொடுத்திருக்கிறேனே.. :)))))))))))))))))))))))))))))))))))

    அடுத்ததாக அண்ணல் அநீ, யாரோ பிரகாஷ் ‘சந்திரனை’ நோக்கி கேட்டுள்ள விளக்கங்களுக்கு பிரகாஷ் ‘சந்திரனே’ வந்து பதில் சொல்லிக்கொள்வார் :)))))
    -இப்படிக்கு, அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் பிரகாஷ் சங்கரன் ;))

  85. //திராவிடக் கட்சியினர் போல் அநீ ஏசுகிறார் என்க் கூறுவது தவறு. .அத்தெய்வத்தின் குரலை வேதமாகக் கொண்டு அவரை வழிபடுவோர் சிலராவது முன் மாதிரி இந்துக்களாக வாழ்ந்து காட்டலாமே..// ஐயா, இதற்கான சான்றை அவர் எழுத்திலிருந்து முன்வைத்த பின்பும் நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்.. நிச்சயமாக, பலர் அவ்வாறே வாழ்ந்து வருகின்றனர். நமக்கு தெரியவில்லை அவ்வளவுதான்.

  86. அன்புள்ள கார்த்திகேயன்

    பூனா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ‘தனி வாக்காளர் தொகுதி’ என்பதை ‘பொது தொகுதியாக’ மாற்றியதாகும். எண்ணிக்கை அல்ல பிரச்சனை. உதாரணமாக இன்றைக்கும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஆதிக்கசாதிகள் தாம் இஷ்டப்பட்டவரை நிறுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் அல்லது கைப்பாவையாக நடத்தும் நிலை உள்ளது எனில் அப்போது பொது தொகுதியில் ஒடுக்கப்பட்டோருக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதால் என்ன பிரயோசனம் இருந்திருக்க கூடும்? ஆனால் ராம்சே மெக்டோனால்டு அளித்த தனி தொகுதி (அதாவது உண்மையில் அது ஒடுக்கப் பட்டோருக்கு இரட்டை வாக்குரிமையை அளித்திருக்கும்) ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் அது நிச்சயம் சமூக நீதியை அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான சமூக வலிமையை அளித்திருக்கும். ஆனால் மகாத்மா காந்தி இதை மதரீதியில் சிறுபான்மையினருக்கு எதிர்க்காமல் (அதுவே முஸ்லீம் லீக் போன்ற அமைப்புகளை ஆதிக்க நாசித்தன்மைகொண்டவையாக மாற்றின) ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் எதிர்த்தார். இதில் பாபா சாகேப் அம்பேத்கர் விட்டு கொடுத்தார். காரணம் மகாத்மா காந்தியின் உயிர். இந்த ஒப்பந்தத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான தனி தொகுதிகள் பொது வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதிகள் என்பதுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவும் கொடுமைகள் (ஆலய பிரவேச தடை உட்பட) நீக்கப்படும் என காந்திஜி உறுதியளித்தார். இதில் ஆதிக்கசாதி இந்துக்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் பாபா சாகேப் சம்மதித்தார். ஆனால் இங்கே இதுவல்ல முக்கியம். தமது நிலைபாட்டிலிருந்து மகாத்மா காந்தியின் உயிர் என்கிற ஒரே காரணத்துக்காக பூஜ்ய போதிசத்வ பாபாசாகேப் அம்பேத்கர் இறங்கி வந்தார். இரங்கி வந்தார். ஆனால் இந்து சமுதாயத்தின் நன்மை என்பதற்காக கூட தலித்துகள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்கலாம் என்பதை ஏற்று ஒரு குரல் தரக் கூட மறுத்துவிட்டார் திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி. இந்த வேறுபாட்டை விளக்குங்கள்.

    பணிவன்புடன்
    அநீ

  87. அன்புள்ள “ அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் பிரகாஷ் சங்கரன்”,

    ஏதோ ஒரு ஃப்ளோவ்ல சங்கரன் சந்திரன் ஆனா இப்படியா வாங்கு வாங்குன்னு வாங்குவீங்க…
    அந்த கேள்வியெல்லாம் உங்களுக்குத்தான் ஐயா உங்களுக்குத்தான்.

    🙂

  88. //பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரின்//
    /நன்றாக பாருங்கள் நான் திரு போட்டு ஒரு புள்ளி வைத்து எழுதவில்லை. ஸ்ரீ என்பதன் தமிழாக திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்றுதான் எழுதியுள்ளேன். ஆனால் அது ஏனோ இழிவாக தெரிகிறது. தமிழ் மீதான இழிவு மனப்பான்மை அல்லது தாழ்மையுணர்வு? //

    மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய அநீ,

    இதையே நீங்கள் அம்பேத்கருக்கும் செய்திருந்தால் உங்கள் வார்த்தையில் உள்ள நியாயம் எல்லாருக்கும் புரிந்திருக்கும்.. அந்த வேறுபாடு ஏன் வந்ததோ அதனால்தான் இந்த விவாதமே? உங்களுக்கு எப்படி பூஜ்ய போதிசத்வ அம்பேத்கரோ, அப்படியே நம்புவோருக்கு மஹா பெரியவாளின் குரல் தெய்வத்தின் குரலே..

    இன்று உங்களின் பிறந்தநாள்.. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் தந்தருள எமது பிரார்த்தனைகள்..

    //பூனா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ‘தனி வாக்காளர் தொகுதி’ என்பதை ‘பொது தொகுதியாக’ மாற்றியதாகும். எண்ணிக்கை அல்ல பிரச்சனை. உதாரணமாக இன்றைக்கும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஆதிக்கசாதிகள் தாம் இஷ்டப்பட்டவரை நிறுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் அல்லது கைப்பாவையாக நடத்தும் நிலை உள்ளது எனில் அப்போது பொது தொகுதியில் ஒடுக்கப்பட்டோருக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதால் என்ன பிரயோசனம் இருந்திருக்க கூடும்? ஆனால் ராம்சே மெக்டோனால்டு அளித்த தனி தொகுதி (அதாவது உண்மையில் அது ஒடுக்கப் பட்டோருக்கு இரட்டை வாக்குரிமையை அளித்திருக்கும்) ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் அது நிச்சயம் சமூக நீதியை அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான சமூக வலிமையை அளித்திருக்கும். ஆனால் மகாத்மா காந்தி இதை மதரீதியில் சிறுபான்மையினருக்கு எதிர்க்காமல் (அதுவே முஸ்லீம் லீக் போன்ற அமைப்புகளை ஆதிக்க நாசித்தன்மைகொண்டவையாக மாற்றின) ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் எதிர்த்தார். // இதை எதிர்த்த காரணத்தை மகாத்மா தெளிவாக முன்வைத்து விட்டார். இன்னும் இதை மார்க்சியப் பார்வையில் நீங்கள் பார்ப்பதும் எழுதுவதும் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

  89. அன்புள்ள அநீ,

    என் இரண்டாவது மறுமொழியில், ஆலயநுழைவுப் போராட்டம் நடந்த போது காஞ்சி ஆச்சாரியரின் வயது, பின்னர் அவ்விஷயத்தில் காலப்போக்கில் அவரிடம் ஏற்பட்ட அகப்பரிணாம வளர்ச்சி போன்றவற்றைக் குறித்தும், காந்தியடிகளுடன் ஒப்பிட்டும் விளக்கமாகவே எழுதியுள்ளேன். ஒருவேளை நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம். ஒரு நண்பர் எழுப்பிய, பெண் சிவிலியர்களை அனுமதிக்காததைப் பற்றிய தவறான புரிதலுக்கு எப்படி இன்னொரு கோணத்தை நீங்கள் முன்வைத்தீர்களோ அப்படியே மற்ற விஷயத்திலும் ஒரு உணர்வுப் பூர்வமான சரியான புரிதலையே நான் உத்தேசிக்கிறேன். அவர் எல்லா சாதிக்காரர்களையும் சந்தித்தார், மடம் மற்றும் அதனைச் சார்ந்த வழிப்பாட்டுத் தலங்களில் எல்லோரும் செல்லலாம் எனபது வெளிப்படையான உண்மை. அரசியல்வாதிகள் போல ஒவ்வொன்றுக்கும் அறிக்கை விடவேண்டும் என அவசியமில்லை. காஞ்சிப் பெரியவரின் நிலைப்பாடுகளுக்கு ஒளிவுமறைவில்லாத சான்று அவரது வாழ்வே.

    சாதிக்கொடுமைக்கும் இன்ன பிற அவலங்களுக்கும் 100 காரணிகள் உண்டு. அதில் காஞ்சிப் பெரியவரின் கோட்பாடுகளும் ஒன்று என்ற *தவறான* புரிதலைப் பற்றியே காலமெல்லாம் வாதிட்டு, பிற 99 காரணிகளையும், அதற்குப் பின் இருக்கும் உண்மையிலேயே அதிகாரமுள்ள ஆட்களையும் வசதியாக ஒளிந்துகொண்டு சுகிக்க அனுமதிக்காமல் உண்மையான காரணங்களைப் பற்றி நாம் விவாதிக்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் தலித்களின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்கு திடமான எதிர்தரப்பு. ஆனால் அத்தகைய வெளிப்படையான விவாதத்தில் ஆபத்து அதிகம் 😉

  90. //திரு.ராம், கொஞ்சம் கவனமாகப் படித்துவிட்டு மறுமொழி எழுதுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், பிராமணர்களைப் பற்றி நான் சொல்வதாக நினைத்து நீங்கள் கொடுத்திருக்கும் நீண்ட விளக்கங்கள்…… அந்த பத்து கருத்துக்களும் காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொன்னவை. அவற்றுக்கு மேலேயே ‘தெய்வத்தின் குரலில்’ இருந்து எடுத்துப் போட்டதாக சுட்டியும் கொடுத்திருக்கிறேனே.. 🙂 ))))))))))))))))))))))))))))))))))//

    ராம் என்பவரின் சுயஜாதி அபிமானம் காஞ்சி பெரியவரையும் தாக்கு தாக்கு என்று தாக்கியிருக்கிறது. இவ்வாறு காஞ்சி பெரியவரின் கருத்துக்கள் ஒரு தீவிர பிராமண அபிமானியால் தாக்கப்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒருவேளை இவை காஞ்சிப் பெரியவரால் சொல்லப்பட்டவை என்று தெரிந்திருந்தால் அவர் இதையெல்லாம் மனத்துக்குள்ளேயே வைத்துக் கொன்டிருந்தாலும் வைத்துக் கொன்டிருப்பார். எத்தனை பேர் அவ்வாறு வைத்துக் கொன்டிருக்கின்றார்களோ! பெரியவரை நோக்கி ராம் சொல்லும் சொற்களைப் பாருங்கள்,

    //விசாலமான பரிணாமப் பார்வையோ அல்லது சமூகக் கண்ணோட்டமோ இல்லாத தட்டையான வரிகள் இவை. //

    ஜாதியை முன்னெடுத்துச் செய்யும் எதுவும் இப்படித்தான் இருக்கும்.

  91. அரவிந்தன் நீலகண்டன் அவர்களே,

    தாங்கள் விதவையை மணந்து கொண்டீர்களா?அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பண்ணி வைத்திருக்கிறீர்களா?எந்த ஜாதியில் திருமண சம்பந்தம் வைத்திருக்கிறீர்கள்? இந்த காலத்தில் இந்த புண்ணாக்கு எதிர்ப்பெல்லாம் ஒரு fashion.பல முறை சுவாமிகள் பிராமணர்கள் தங்கள் குலத்தொழிலை விட்டதால்தான் உலகம் கேட்டுவிட்டது என்று கூறியிருக்கிறார்.இதற்கு ஒரு திருக்குறளையும் மேற்கோள் காட்டியுள்ளார்.பாவம் -நீலகண்டன் திருவள்ளுவரையும் எதிர்க்க வேண்டியதுதான்.பிராமணனுக்கு விதிக்கப்பட்டது தரித்திரம் என்றும் கூறியிருக்கிறார்.
    இந்த வலைத்தளம்கிறது எப்போதுமே சுவாமிகளை விமர்சித்தே எழுதுகிறது.
    முன்பு ஆதி சங்கரர் காலம் பற்றிய கட்டுரையில் கூட இதே போக்குதான்.காஞ்சி மடத்தில் உள்ள ஆதாரங்களை ஏற்க மாட்டார்களாம்;ஆனால் வெளி நாட்டான் சொல்வதை ஏற்று அவர்கள் தரும் ஆதாரங்களுடன் மடம் தரும் ஆதாரங்கள் ஒத்துப் போகவில்லை என்றார்கள்.நல்ல அடிமைப் புத்தி.நானும் அப்போது காஞ்சி சுவாமிகள் சொன்ன ஆதாரங்களை தெய்வத்தின் குரலில் உள்ளதாக சுட்டிக்காட்டினேன்.ஆனால் அதைப்பற்றி ஏதும் ஆராயாமல் அந்தக் கட்டுரையை முடித்துவிட்டார்கள்.என்ன செய்வது?நமக்கு எதிரிகள் உள்ளேதான் இருக்கிறார்கள்.வெளியிலில்லை.

  92. அன்புள்ள கார்த்திகேயன்

    தங்கள் அன்புக்கு வணக்கங்களும் நன்றியும்

    பணிவன்புடன்
    அநீ

    தம்பி ராம்குமார், ஸேம் ஸைட் கோல் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் ஸேம் ஸைட் சிக்ஸர் அடிக்கமுடியுமென நிரூபித்து காட்டிய இளவலே வாழ்க நீர் பல்லாண்டு. :))))))

  93. It was a very informative discussion. However as an ordinary reader i am having the following doubts:

    1). first of all what was the need for bringing in kanchi seer into a thread discussing “jaathi-maruppu thirumananagal”. Just because Ram (whom i presume is a brahmin) said something against those intercaste marriages?? So A.Ne started blasting shankaracharya.. thats a curious logic. In Some other thread, a nadar or thevar might oppose such marriages.Will A.Ne counter it by blasting their leaders?? Is this the best way to argue??

    2). Also Expecting Kanchi Shankaracharya to have the same kind of vision for india as Dr.Ambedkar looks like a rheotorical stance. Dr.Ambedkar was a highly qualified academician and an active politician. He would have a much refined world-view than a saint who was solely trained for upkeeping certain traditions of an established order ( i am not in anyway suggesting Shanakaracharya is not knowledgable.But simply saying Dr.Ambedkar had a much wider domain of expertise and is better equipped to create a common ideal for india). This comparison doesnt make sense to me as an ordinary reader.

    At the same time, A.Ne’s analysis of Shankaracharya seems incisive and quiet spot-on. I dont know why his bhaktas have to be offended (except for the remarks like “Yellow Journal” which was made in the original thread). We cannot say anybody is un-questionable or give anyone immunity from criticism. By doing so we will make ourself much like the followers of some 6th century person, whose words and deeds must be accepted without any question.

    (No Offence Meant to anyone)

  94. ////பிரகாஷ் சங்கரன் on June 16, 2012 at 2:03 pm
    திரு.ராம், கொஞ்சம் கவனமாகப் படித்துவிட்டு மறுமொழி எழுதுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்///

    ப்ரகாஷ் சங்கரன், ஒத்துக் கொள்கிறேன்.

    கவனமாகப் படிக்கவில்லை. மீண்டும் படித்துப் பார்த்தபோது தங்களது மேற்கோள் புர்ந்தது.
    நீண்ட விளக்கங்களை ஒரே நேரத்தில் படித்துக்கொண்டே இருந்ததால் புரிதலில் உண்டான
    குழப்பம். தெய்வத்தின் குரலை ஒழுங்காக படிக்காததால் வந்த குறை இந்த தவறான புரிதல்!
    வருந்துகிறேன்!

    அதே நேரத்தில் ப்ராமணர்கள் மீதோ, ஹிந்து தர்மம் மற்றும்
    வர்னாசிரமங்களின் மீதோ உண்டாக்கப்பட்ட துவேஷங்களுக்குப் பின்னே அரசியல்
    மற்றும் ஹிந்து துவேஷ அஜெண்டா இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதே நேரம் சர்வைவல் ப்ரச்சனை ப்ராமணனுக்கும் இருக்கிறது. அதை அவன் கையாள்வது
    எப்படி என்கிற வழிகாட்டுதல் இல்லாமல் வசைவது சரியாகுமா என்கிற என் மனக்கேள்வியை
    அப்படியே கேட்டிருக்கிறேன். என் கேள்விகள் அப்படியே இருக்கின்றன!

    நிற்க!

    //நடராஜன் on June 16, 2012 at 4:28 pm

    ராம் என்பவரின் சுயஜாதி அபிமானம் காஞ்சி பெரியவரையும் தாக்கு தாக்கு என்று
    தாக்கியிருக்கிறது. இவ்வாறு காஞ்சி பெரியவரின் கருத்துக்கள் ஒரு தீவிர பிராமண
    அபிமானியால் தாக்கப்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.////

    திரு நடராஜன் அவர்களே!

    தங்கள் கருத்துக்கள் என்னைப் பாதிக்காது! என் மனதில் பட்டதை அப்படியே கேட்டிருக்கிறேன்.
    தங்கள் வரிகளின் தொனி பிராமணர்கள் அல்லது பிராமண அபிமானிகள் எல்லோருமே தீவிர
    சங்கரமட பக்தர்கள் அல்லது ஏதேனும் மடங்களோடு தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள் அதனால்
    அவைகளைப் பற்றி விமர்சிக்கவே மாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டவையாக இருக்கிறது.
    அது தவறானது. ஒரு மரியாதை உண்டு என்பதைத் தவிற
    மடங்களின் வழிகாட்டுதல்கள் படிதான் ஒரு சமூகம் வாழ்கிறது என்கிற மாயத் தோற்றம்
    முதலில் களையப்பட வேண்டும். தீவிர பிராமண அபிமானிகள் மடங்களை கேள்விகளே இல்லாமல்
    ஆதரித்து விடுவார்களென்றால் இறந்து போன ‘சங்கரராமன்’ கூட தீவிர பிராமண அபிமானி
    தானே!

    /////பெரியவரால் சொல்லப்பட்டவை என்று தெரிந்திருந்தால் அவர் இதையெல்லாம் மனத்துக்குள்ளேயே
    வைத்துக் கொன்டிருந்தாலும் வைத்துக் கொன்டிருப்பார். எத்தனை பேர் அவ்வாறு வைத்துக்
    கொன்டிருக்கின்றார்களோ! ///

    பெரியவரை நோக்கி ராம் சொல்லும் சொற்களைப் பாருங்கள்,

    //விசாலமான பரிணாமப் பார்வையோ அல்லது சமூகக் கண்ணோட்டமோ இல்லாத தட்டையான
    வரிகள் இவை. //

    எதார்த்தமாக சக மனிதரிடம் விவாதிக்கும் தொனியில் சொல்லப்பட்ட கருத்துக்களை
    பெரியவர் மீது நீங்கள் திருப்பிவிட்டு அதில் சந்தோஷப்படுவதைப் பார்த்தால் உங்கள்
    மனதின் என்ன ஓட்டம் புரிகிறது. அதில் இருக்கும் எக்காளம் தெரிகிறது.

    கீழ்கண்ட பத்திரிக்கை செய்தியைப் பாருங்கள், உங்கள் எக்காளத்திற்குப் பின்னால்
    அந்தச் செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹிந்து துவேஷ மனோநிலை இருந்தால்
    கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்:

    Ramnathi, Ponda (Goa) : Hindu unity that is going to result from the All India Hindu
    Convention is going to be an achievement to be proud of. To be able to do that Hindu
    organisations should put in spirited efforts. The Indian media, under the pretext of Secularism,
    repeatedly attacked the religious customs, traditions, Temples etc. which are the conservators
    of the Indian culture. The media has become eager to destroy the Hindu line of thinking from
    India. These views were expressed by Mr. B.R. Haran on the last day of the All India Hindu
    Convention. He was speaking on the topic of ‘Hindus and the Media’ !

    During the speech, he gave some examples to prove the point as followed :

    1. Repeatedly defaming Shankaracharya, Dharmacharyas, Chiefs of sects, Saints, Mahants along with Sabarimala, Amarnath Temple, Kanchi Kamkoti Peeth, Jagannath Puri etc.
    2. Organising debate sessions during festivals-celebrations such as Deepavali, Durgapuja, Janmashtami, Kumbhamela, Ganesh immersion, Ayyappa Makar Jyoti etc.
    3. Purposefully avoid topics such as ‘Abolishing Article 370 of the Constitution’, ‘Hanging Mahammad Afzal’, ‘Bringing Common Civil Code’, ‘Passing a law to ban religious conversions’ etc.
    4. Glorifying the western culture

    மேலும் படிக்க: https://www.hindujagruti.org/news/14274.html

  95. ////பிரகாஷ் சங்கரன் on June 16, 2012 at 2:03 pm
    திரு.ராம், கொஞ்சம் கவனமாகப் படித்துவிட்டு மறுமொழி எழுதுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்///

    ப்ரகாஷ் சங்கரன், ஒத்துக் கொள்கிறேன்.

    கவனமாகப் படிக்கவில்லை. மீண்டும் படித்துப் பார்த்தபோது தங்களது மேற்கோள் புர்ந்தது. நீண்ட விளக்கங்களை ஒரே நேரத்தில் படித்துக்கொண்டே இருந்ததால் புரிதலில் உண்டான குழப்பம். தெய்வத்தின் குரலை ஒழுங்காக படிக்காததால் வந்த குறை இந்த தவறான புரிதல்! வருந்துகிறேன்!

    அதே நேரத்தில் ப்ராமணர்கள் மீதோ, ஹிந்து தர்மம் மற்றும் வர்னாசிரமங்களின் மீதோ உண்டாக்கப்பட்ட துவேஷங்களுக்குப் பின்னே அரசியல் மற்றும் ஹிந்து துவேஷ அஜெண்டா இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதே நேரம் சர்வைவல் ப்ரச்சனை ப்ராமணனுக்கும் இருக்கிறது. அதை அவன் கையாள்வது எப்படி என்கிற வழிகாட்டுதல் இல்லாமல் வசைவது சரியாகுமா என்கிற என் மனக்கேள்வியை அப்படியே கேட்டிருக்கிறேன். என் கேள்விகள் அப்படியே இருக்கின்றன!

    நிற்க!

    //நடராஜன் on June 16, 2012 at 4:28 pm

    ராம் என்பவரின் சுயஜாதி அபிமானம் காஞ்சி பெரியவரையும் தாக்கு தாக்கு என்று
    தாக்கியிருக்கிறது. இவ்வாறு காஞ்சி பெரியவரின் கருத்துக்கள் ஒரு தீவிர பிராமண
    அபிமானியால் தாக்கப்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.////

    திரு நடராஜன் அவர்களே!

    தங்கள் கருத்துக்கள் என்னைப் பாதிக்காது! என் மனதில் பட்டதை அப்படியே கேட்டிருக்கிறேன். தங்கள் வரிகளின் தொனி பிராமணர்கள் அல்லது பிராமண அபிமானிகள் எல்லோருமே தீவிர சங்கரமட பக்தர்கள் அல்லது ஏதேனும் மடங்களோடு தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள் அதனால்
    அவைகளைப் பற்றி விமர்சிக்கவே மாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டவையாக இருக்கிறது. அது தவறானது. ஒரு மரியாதை உண்டு என்பதைத் தவிற
    மடங்களின் வழிகாட்டுதல்கள் படிதான் ஒரு சமூகம் வாழ்கிறது என்கிற மாயத் தோற்றம் முதலில் களையப்பட வேண்டும். தீவிர பிராமண அபிமானிகள் மடங்களை கேள்விகளே இல்லாமல் ஆதரித்து விடுவார்களென்றால் இறந்து போன ‘சங்கரராமன்’ கூட தீவிர பிராமண அபிமானி தானே!

    /////பெரியவரால் சொல்லப்பட்டவை என்று தெரிந்திருந்தால் அவர் இதையெல்லாம் மனத்துக்குள்ளேயே வைத்துக் கொன்டிருந்தாலும் வைத்துக் கொன்டிருப்பார். எத்தனை பேர் அவ்வாறு வைத்துக் கொன்டிருக்கின்றார்களோ! ///

    பெரியவரை நோக்கி ராம் சொல்லும் சொற்களைப் பாருங்கள்,

    //விசாலமான பரிணாமப் பார்வையோ அல்லது சமூகக் கண்ணோட்டமோ இல்லாத தட்டையான வரிகள் இவை. //

    எதார்த்தமாக சக மனிதரிடம் விவாதிப்பதாக அதே தொனியில் சொல்லப்பட்ட கருத்துக்களை பெரியவர் மீது நீங்கள் திருப்பிவிட்டு அதில் சந்தோஷப்படுவதைப் பார்த்தால் உங்கள் மனதின் என்ன ஓட்டம் புரிகிறது. அதில் இருக்கும் எக்காளம் தெரிகிறது. கீழ்கண்ட பத்திரிக்கை செய்தியைப் பாருங்கள், உங்கள் எக்காளத்திற்குப் பின்னால் அந்தச் செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹிந்து துவேஷ மனோநிலை இருந்தால் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்:

    Ramnathi, Ponda (Goa) : Hindu unity that is going to result from the All India Hindu
    Convention is going to be an achievement to be proud of. To be able to do that Hindu
    organisations should put in spirited efforts. The Indian media, under the pretext of Secularism,
    repeatedly attacked the religious customs, traditions, Temples etc. which are the conservators
    of the Indian culture. The media has become eager to destroy the Hindu line of thinking from
    India. These views were expressed by Mr. B.R. Haran on the last day of the All India Hindu
    Convention. He was speaking on the topic of ‘Hindus and the Media’ !

    During the speech, he gave some examples to prove the point as followed :

    1. Repeatedly defaming Shankaracharya, Dharmacharyas, Chiefs of sects, Saints, Mahants along with Sabarimala, Amarnath Temple, Kanchi Kamkoti Peeth, Jagannath Puri etc.
    2. Organising debate sessions during festivals-celebrations such as Deepavali, Durgapuja, Janmashtami, Kumbhamela, Ganesh immersion, Ayyappa Makar Jyoti etc.
    3. Purposefully avoid topics such as ‘Abolishing Article 370 of the Constitution’, ‘Hanging Mahammad Afzal’, ‘Bringing Common Civil Code’, ‘Passing a law to ban religious conversions’ etc.
    4. Glorifying the western culture

    மேலும் படிக்க: https://www.hindujagruti.org/news/14274.html

  96. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் அவர்களே,
    ஜாதி என்பது தொழில் சார்ந்த ஒன்றே. வியாசர்,கிருஷ்ணர் முதல் எல்லோரும் ஜாதி முறையை ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.காஞ்சி சுவாமிகள் பிறப்பில் அனைவரும் ஒன்றே என வேதம் திரும்ப திரும்பச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.பரம்பரையாக ஒன்றைச் செய்து வரும் பொது அதில் அவர்களுக்கு விசேஷ திறமை உண்டாகிறது.தவறு செய்பவர்களை ஜாதியை விட்டு விலக்கி வைப்பது என்பது அந்தக்காலங்களில் வழக்கம்.இதிலிருந்தே யாரும் தங்கள் ஜாதியை குறைவாக எண்ணவில்லை என்பது தெரிகிறது.வெள்ளைக்காரர்கள் காலத்தில் கிறிஸ்தவ குசும்புகளில் ஒன்றுதான் ஆரிய திராவிட பிரிவினை. அப்புறம் பெரியார் போன்ற ஆங்கிலேய அடி வருடிகள் ஜாதிப்பற்றை வெறியாக்கினார்கள். இருநூறு வருடங்களுக்கு முன்பு இந்த வெறியோ வன்முறையோ இருந்ததாகத் தெரியவில்லை.நான் ஒரு பிராமணன்.ஆனால் வேதம் பயிலவில்லை. பிராமணன் வேதம் படிக்க வேண்டும் என்று சுவாமிகள் சொல்கிறார்கள்.என்னால் செய்ய முடுயாவிட்டலும் அவர் சொல்வதை தவறென்று சொல்வதில்லை.அவர் போதிப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு வெற்றிகரமான வழியை.
    உங்கள் வாழ்கையில் ஏதோ கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.அதற்காக வருந்துகிறேன்.அதனால் உங்களுக்கு ஏற்க முடியாத ஒன்றை அவர் போதிப்பதால் அவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.அவர் தன்னைத் தான் உணர்ந்த ஞானி.நீங்கள் அவரை ஒரு ஒழுக்கம் நிறைந்த எளிமையான சந்நியாசி மட்டுமே என காண்பிக்க முற்படுவது உங்கள் அறியாமையை அல்லது வெறுப்பையே காண்பிக்கிறது.எந்த விளம்பரமும் இல்லாமல் அவர் செய்துள்ள பல மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட செயல்களை பல பெரிய மனிதர்களே தங்கள் சொந்த அனுபவங்களால் சொல்லிருக்கிறார்கள்.உங்கள்ளுக்கு அதில் நம்பிக்கை இல்லையெனில் யாருக்கும் ஒரு நட்டமும் இல்லை
    மேலும் ஒரு செய்தி.கி.பி.1111 ல் மடத்துக்கு ஒரு அரசனால் தரப்பட்ட தாமிர சாசனம் மடத்தில் இருப்பதைச் சொல்லிருக்கிறார்கள்.எனவே மடத்தி பழமையைப் பற்றி உங்கள் சந்தேகம் ஏதும் வேண்டாம்.இன்னும் பல செய்திகளை என்னால் கூற முடியும்.நேரமில்லை..

  97. //பரம்பரையாக ஒன்றைச் செய்து வரும் பொது அதில் அவர்களுக்கு விசேஷ திறமை உண்டாகிறது.//

    இதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா? இது திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தா? தங்கள் கருத்தா?

  98. புதுகோட்டை ஸ்ரீ மதி சுலோசனா எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட ”மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்” எனும் நூலை தனது பக்தி சிரத்தையால் ஒருவர் மொழி பெயர்த்து 2006 இல் ‘ஹிந்துதர்மாஃபோரம்ஸ்.காம்’ எனும் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதிலிருந்து:

    //Pages 193-196 (concluding part)
    13. AbrahmakIta jananI

    –a nAmAvaLi (row of names) in this phrase in Lalitha SahasranAmam. The nAmA next to this is varNASramaviDHAyinI. Combining these two names, PeriyavaaL answered a difficult question.

    When PeriyavaaL was giving darshan after the puja was over and he returned after his bhikSA, a bhaktA (devotee) asked: “Since Lalitha SahasranAnam mentions that AmbaaL is the mother of all this world we all become sahoDharAs (brothers and sisters). If this is so, why to move with some people without physically coming in touch with them or touching them? How is this untouchability appropriate?”

    PeriyavaaL: For this question (why is there such distinction) the answer is in the very next nAmAvaLi. “AmbaaL who is the Mother of everyone has also established the niyama (regulation) of varNASrama (four divisions). She is also the varNASramaviDHAyinI!//

    அப்போது வர்ணாசிரம தர்மம் என்பது தீண்டாமையையும் உள்ளடக்கியதா?
    திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் எந்தெந்த கருத்துகள் அகப்பரிமாண வளர்ச்சி அடைந்தன? எவ்வெவ்வாறு மாறியுள்ளன? இதையெல்லாம் அவரது பக்தர்களாவது தெரிந்து கொள்வது அவசியமல்லவா? இல்லாவிட்டால் 2006 இல் கூட இப்படி பட்ட கருத்துகளை அவரது பெயரால் பரப்புவது சரியா? இனி அவர் தெய்வம் அவரை விமர்சிக்க ஒருவருக்கும் தகுதி கிடையாது. அவர் சொல்வதன் தாத்பரியம் உனக்கு விளங்காது என்றெல்லாம் சொல்லி அவரது இத்தகைய கருத்துகளை நாம் ஆதரித்தால், நாளைக்கு இவர்களுக்கு அனுகூலமான ஒரு கட்சி வரும் போது ‘இன்ன சாதியார் மட்டும் வாழும் குடியிருப்புகள்’ ‘இன்ன ஜாதி பசங்கள் மட்டும் படிக்கும் பள்ளிகூடங்கள்’ போன்றவை மீண்டும் நகர்புறங்களில் கூட சமூக யதார்த்தங்கள் ஆகிவிடாதா?

    ஆலந்தூர் மள்ளன் போல லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களுக்கு அபாரமான அறிவியல் விளக்க கதை-கட்டுரைகள் எழுதுகிறவர்கள் இதற்கும் ஏதாவது விளக்கம் (ஜல்லி) வைத்திருக்கிறார்களா?

  99. //திராவிடக் கட்சியினர் போல் அநீ ஏசுகிறார் என்க் கூறுவது தவறு. // ஐயா திரு முத்துக்குமாரசுவாமி அவர்கள் கவனத்திற்கு. //ஆலந்தூர் மள்ளன் போல லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களுக்கு அபாரமான அறிவியல் விளக்க கதை-கட்டுரைகள் எழுதுகிறவர்கள் இதற்கும் ஏதாவது விளக்கம் (ஜல்லி) வைத்திருக்கிறார்களா?// இதற்கு பிறகும் உங்களுக்கு விளக்கம் தேவையா? ஒருவரின் நம்பிக்கையை தாழ்த்தி பேச ஒருவருக்கும் உரிமை இல்லை.
    //ஆச்சாரியரை ஏசுவது எத்தனை தவறோ அத்துணைப் பிழையானது இந்து செய்ல்வீரராகிய அநீ அவர்களையும் அவரொத்த செயல்வீரர்களையும் பழிப்பது. அவர்கள் நாத்திகத்தையும் அந்நியமதங்களையும் எதிர்கொள்ளும் கள்ப்பணி வீரர்கள். காஞ்சி ஆச்சாரியர் ஒருவரே இந்துமத்தைன் பரமாச்சாரியர் போலவும் அவருடைய மொழிகளே தெய்வத்தின் குரலாகிய மறைமொழியெனவும் அம்மொழியே இந்துமதத்தின் கோட்பாடுக் கொண்டுள்து என்று அதீதமாகச் சிலரால் விளம்பரப்படுத்தப்படுகின்றது. அத்தெய்வத்தின் குரல் களப்பணியாளர்களின் செயலாற்றலுக்குப் பின்னடைவு ஏற்படுத்துகின்றது// இது வெளியிடப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் எனது கருத்தை முன்வைத்தல் அவசியம் என்றே கருதுகிறேன். பல நூறு ஆண்டுகளாய் சனாதன தர்மத்தின் மீது தாக்குதல்கள் நடந்தே வந்திருக்கின்றது. அவற்றை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்தது இந்த களப்பணியாளர்கள் இல்லை. தர்மத்தின் ஆழமும் வீச்சும் எதிர்ப்புக்களை இல்லாமல் செய்தது.

  100. // திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் எந்தெந்த கருத்துகள் அகப்பரிமாண வளர்ச்சி அடைந்தன? எவ்வெவ்வாறு மாறியுள்ளன? இதையெல்லாம் அவரது பக்தர்களாவது தெரிந்து கொள்வது அவசியமல்லவா?//

    காந்தியை மாட்டுத் தொழுவத்தில் சந்தித்தவர் பிற்காலத்தில் பால் பிரண்டன், கண்ணதாசன், சிவாஜி கணேசன், வானதி திருநாவுக்கரசு மாதிரி பல அபிராமணர்களை நேரடியாக சந்திக்கத் தயங்கவில்லை. என் சிறு வயதில் ஒரு நாடார் குடும்பம் நாங்களெல்லாம் மடத்துக்கு வரலாமா என்று தயங்கித் தயங்கி வெளியே நின்றது. மடத்திலிருந்து எங்கள் குடும்பம் வெளியே வந்துகொண்டிருந்தது. என் அப்பா அவர்களை தைரியமாக வாங்கள் என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனார். அவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமாக நடத்தப்படவில்லை. (அல்லது வித்தியாசம் அந்த வயதில் எனக்குத் தெரியவில்லை). என் அப்பா பெரிய புள்ளியோ, சந்திரசேகரருக்கு நன்றாகத் தெரிந்தவரோ இல்லை. சாதாரண “பக்தர்”தான்.

  101. பூஜ்ய அரவிந்தன் நீலகண்டன் அவர்களே,

    //இதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா? இது திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தா? தங்கள் கருத்தா?//

    அறிவியல் ஆதாரம் என்றால் என்ன? இரண்டு கிருஸ்தவ வெள்ளைக்காரன் ஆராச்சி செய்ததாக சொல்லி ஒரு பேப்பரை சமர்பித்தால் (afro dalit project மாதிரி)
    அதை ஆதாரமாக ஏற்றுகொண்டு ஆடுவிர்கள். நல்ல அடிமை புத்தி. நமது மகான் சொன்னால் அது பொய் – வாழ்க உமது தர்மம்.

    சிலைகள் கோவில்கள் பரம்பரையாக செய்தபோது சிறப்பாக வந்ததா? அல்லது இன்று கட்டும் கோவில்கள் சிறப்பாக வருகிறதா?

    நெசவு தொழில் பரம்பரையாக செய்தபோது சிறப்பான துணி நெய்தார்கலா (தீ பெட்டிக்குள் புடவை மடித்து வைக்கும் அளவுக்கு மெல்லியதாக நெய்தார்கள்)? அல்லது இன்று சிறப்பாக வருகிறதா?

    தங்க நகை செய்யும் தொழில் பரம்பரையாக செய்தபோது சிறப்பான தரமான நகைவந்தா? அல்லது இன்று வரும் கலபட நகை சிறப்பாக உள்ளதா??

    வைசியன் பரம்பரையாக வியாபாரம் செய்தபோது வணிகத்தில் நேர்மையும் தரமும் தர்மமும் இருந்தா? இல்லை இன்று அனைவரும் வைசியன் ஆனாபின் வாணிபம் சிறப்பாக உள்ளதா?

    சத்திரியன் பரம்பரையாக நாட்டை ஆண்டபோது நேர்மையும் நியாமும் இருந்தா? இல்லை எல்லாரும் இன் நாட்டு மன்னர்கள் என்று சொல்லும் இன்று நாட்டில் நேர்மையும், நியாமும், தர்மமும் சிறப்பாக உள்ளதா?

    குருகுல கல்வி இருந்த போது நேர்மையான மாணவர்கள் வந்தார்களா? இன்று கல்வியே வியாபாரம்மாகி இருப்பது சிறப்பாக் உள்ளதா?

    இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ள உங்களுக்கு முடியாமல் போனது எப்படி??

    இந்தியா உடைவது அன்னிய சக்தியினால் மட்டும் அல்ல ……..

  102. அன்புள்ள விஜே,

    //Dr.Ambedkar was a highly qualified academician and an active politician. He would have a much refined world-view than a saint who was solely trained for upkeeping certain traditions of an established order ( i am not in anyway suggesting Shanakaracharya is not knowledgable.But simply saying Dr.Ambedkar had a much wider domain of expertise and is better equipped to create a common ideal for india).// நீங்கள் முற்றிலும் தவறு, மகா பெரியவாவின் உலகவிசய ஞானம் யாருக்கும் குறைந்தது அல்ல. அதோடு மட்டும் அல்லாமல் அவர் முக்காலமும் உணர்ந்தவர். Soviet Union உடைந்துவிடும் என்பதை பத்து ஆண்டுகளுக்கு முன்னமே சொன்னவர் அவர்.

    டாக்டர் சுப்பிரமணிய ஸ்வாமி சொல்லியதை பாருங்கள் – Parmacharya Sri Chandrashekhar Saraswati – God in human form
    https://www.janataparty.org/articles-tam08.html

  103. பூமியில் பிறக்கும் மணிதர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கடவுள் படைக்கவில்லை ஒருவர் ஏழைவீட்டிலும் ஒருவர் பணக்காரர் வீட்டிலும் பிறக்கிறான். பலர் தேக குறையில்லாமலும் பலர் தேக குறைபாடுகளுடனும் பிறக்கிறார்கள். எனவே நம்மை படைத்த கடவுள் பாகுபாடுடன் நடந்துகொள்கிறான். குறைபாடுகள் கொண்டவனை தெய்வம் என்று எப்படி கூறலாம்? என்று கேட்பது எப்படி மடத்தனமோ………………………. ?

    இன்றும் எல்லா கோவில்களிலும் அன்னிய தேசத்தவரை அன்னிய மதத்தவரை ஒரு எல்லைக்கு மேல் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று போர்டு போட்டு இருப்பதை ஏன் தடை செய்யக்கூடாது ? அதை ஏன் யாரும் எதிர்ப்பதில்லை ?

    ஒரு காலத்தில் ஜனங்களுக்கு கடவுளிடம் பயமும் பக்தியும் நிறைந்திருந்தது அதனால் அது கல்லோ கட்டையோ மட்டையோ அதற்கு சக்தியிருந்தது. ஆனால் இன்று ……….. ? எல்லோரும் (பெண்கள் உட்பட) அர்சகர் ஆகலாம் – எல்லா மொழியிலும் அர்சனை செய்யலாம் – எல்லா ஜனங்களுமே கடவுளை கர்பகிரஹம் வரையில் சென்று கட்டி தழுவலாம் – உடல் சுத்தம் உள்ள சுத்தம் என்பதை எல்லாம் குப்பையில் போடலாம் – இப்படி கேள்விகளை மற்ற மாநிலத்தவர்கள் எழுப்பாதது ஏன் ?

    இவை எல்லாம் சாதித்துவிட்டால் நாட்டில் ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் தீண்டாதவன் என்ற வித்தியாசமே இருக்காதா ?

    பார்பார புத்தி பரபுத்தி என்பதுமட்டும் தான் ஏன் புழக்கதில் உள்ளது ? மற்ற புத்திகள் எங்கே போய் ஒளிந்து கொண்டன ? இந்த புத்திகள் ஒளிந்து கொண்ட புத்திகளுக்கு நிரந்தர அடிமைகளா ?

    தலித்துகளும் பிராமிணர்களும் என்ற புத்தகத்தில் கே.சி.லஷ்மிநாராயணன் 100 மேற்ப்பட்ட பிராமிணர்கள் காந்தி சொல்லுக்கு கீழ்படிந்து எவ்வாறெல்லாம் தீண்டாமை ஒழிப்பிற்காகவும் அவர்கள் ஆலயபிரவேசம் கல்வி முன்னேற்றம் இவற்றிற்காக வெத்து மேடைபேச்சுகளையும் விவாதங்களையும் செய்யாமல் தங்கள் சொத்து சுகங்களை அடமானம் வைத்து பாடுபட்டார்கள் என்பதை விளக்கியுள்ளார். அவர்கள் யாரும் மடத்தலைவர்களை இப்படி கேள்விக்கு உள்ளாக்கினரா ?

    மேலே சொன்னவைகள் எல்லாம் என் முடிவான கருத்துகள் அல்ல என் மனதில் தோன்றிய சில சந்தேகங்கள் – வாசகர்கள் …………………

  104. /////பெரியவரால் சொல்லப்பட்டவை என்று தெரிந்திருந்தால் அவர் இதையெல்லாம் மனத்துக்குள்ளேயே வைத்துக் கொன்டிருந்தாலும் வைத்துக் கொன்டிருப்பார். எத்தனை பேர் அவ்வாறு வைத்துக் கொன்டிருக்கின்றார்களோ! ///

    பெரியவரால் சொல்லப்பட்ட கருத்தாயினும் மாற்றுக்கருத்தை எடுத்துரைத்து வாதம் புரிவது சநாதன தர்மத்தின் அடிப்படையே. ஜாபாலியை ரிஷியாக ஏற்றுக் கொண்டவர்கள் தானே நாம்? தலைமைக்கு எதிர்க்கருத்துத் தெரிவிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்ற கம்யூனிச-ஆபிரகாமிய மனப்பான்மையை விட்டுவிட்டு சநாதனத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு பேசுவது நலம்.

    காஞ்சிப்பெரியவர் சாதிகுறித்துச் சொன்ன கருத்துக்கள் எங்கே எப்போது சொல்லப்பட்டவை என்று பார்க்க வேண்டும். அவர் வளர்ந்த காலகட்டத்தில் சாதி முறைமைகள் எத்தனை வீரியத்தில் இருந்தன. காலப்போக்கில் அவர் எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டார் என்று அறிந்து கொள்ளாது அவரை விமர்சிப்பது தேவையற்றது.

    ஆனாலும், பரமாச்சார்யர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக என்றும் தம்மைக் கருதிக் கொண்டதில்லை. எம் எஸ் அம்மையார் ஐநா சபையில் பாடிய மைத்ரீம் பஜத என்ற பாடல் பரமாச்சார்யர் எழுதியது. அதை Benediction of the Saint of Kanchi” என்று போட்டு பத்திரிக்கைகளில் அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

    இது நடந்த சில நாட்களில் மடத்துக்கு ஒரு கடிதம் வந்தது. உலக அளவில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஒரு இசைக் கலைஞரைக் கொண்டு பெரியவா இது போன்ற பப்ளிஸிட்டியைத் தேடிக்கொள்ள முயல்கிறார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

    “இதுலே ஆத்திரப்படறத்துக்கோ கோபப்படறத்துக்கோ ஒன்னுமில்லே ஐ.நா. சபைக்காரன் இப்படியொரு மெஸேஜ் வேணும்னு கேட்டானா இல்லையே, நானாதானே அட்சதையைப் போட்டுக்கொண்டு தேசம், லோகம் பூராவுக்கும் நான் உபதேசம் பண்றவனாக்கும் என்று நினைச்சுப் பாட்டுப் போட்டுத் தந்தேன். அதனாலே இது ஒரு ஸெல்ஃப் பப்ளிசிட்டிக்கு நானா பண்ணிய காரியம்னு ஒருத்தர் நினைக்கிறார்னா அதுல தப்பில்லையே அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கார்னு புரிஞ்சிண்டு இனிமே ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

    நிற்க.

    சுயஜாதி அபிமானம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ப்ராமணர்களுக்கு மட்டும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோட்டுப் பிசினாறியார் விதைத்த இந்த எண்ணம் மாறுவது மாறாதது குறித்துக் கவலையில்லை. பல குழுக்கள் இணைந்த ஒரு பெருங்குழுவில் ஒரு குழுமட்டும் குழுமனப்பான்மையின்றி செயல்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிலருடைய சித்தாந்தங்களுக்குப் பொருந்தலாம். நானறிந்த வரை அது அழுகுணி ஆட்டம்.

    காஞ்சி பரமாச்சார்யார் கருத்துக்கள் குறித்த விமர்சனங்கள் செய்யப்படும் போது அவரை மரியாதைக் குறைவாகப் பேசுவதாக அறியப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதை விடுத்து (வழக்கம் போல) ப்ராமணர்களைத் திட்டுவதில் சுகம் காணக் கிளம்பியிருப்பது ஆச்சரியமளிப்பதாக இல்லை.

    தெய்வத்தின் குரலில் இருந்து கொடுக்கப்பட்ட சுட்டிகள், தரவுகள் ப்ராமணர்களை அவர்கள் விட்டுவிட்ட சில விஷயங்களுக்காக குருநாதர் கடிந்து கொள்வது. அதற்கு ஏன் விட்டோம் என்று எதிர்வினைகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையைத் தகப்பனார் திட்டியதை மற்ற பிள்ளைகள் தெருவில் வந்து பலர் முன் “நீ அப்பாகிட்ட இப்படியெல்லாம் திட்டு வாங்கினியே… நீ முட்டாள்னு அப்பா சொன்னாரே.. அப்போ நீ முட்டாள் தான்” என்று பேசும் சிறுபிள்ளைத்தனமே இங்கே தெரிகிறது. போகட்டும். சிறுபிள்ளைகள் தானே!

    ஆனால் இந்த விவாதத்தில் பேசப்படும் ஒரு விஷயத்தை குருஜியோ சங்கத்தின் வேறு எந்தப் பெரியவர்காளுமோ ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். மாற்றுக் கருத்துடையவர்கள் என்பதற்காக சநாதன தர்மத்தின் துறவிகளைக் கூட உரிய மரியாதையின்றிப் பேசுவதும், அது அவருக்கு மரியாதைக் குறைவாகாது என்று சப்பைக்கட்டி வாதிடுவதுமே அது. பேசுபவர்களின் முதிர்ச்சி அவர்கள் பேச்சில் தெரியும் என்பது தவிர வேறு விமர்சனங்கள் வைக்க விரும்பவில்லை.

    கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.

  105. ஒரு துறவியை தெய்வம் என்றால் தப்பு. ஆனால் கருணாநிதி, கனிமொழி போன்ற மாக்களை தெய்வம் என்று போஸ்டர் ஒட்டுவீஎர்கள். கூச்சம் இல்லாத கலி காலம் இது.

  106. மேலும் ஒரு செய்தி.கி.பி.1111 ல் மடத்துக்கு ஒரு அரசனால் தரப்பட்ட தாமிர சாசனம் மடத்தில் இருப்பதைச் சொல்லிருக்கிறார்கள்.எனவே மடத்தி பழமையைப் பற்றி உங்கள் சந்தேகம் ஏதும் வேண்டாம்.இன்னும் பல செய்திகளை என்னால் கூற முடியும்.நேரமில்லை..
    ஆம் – காஞ்சியை ஆண்ட தெலுங்கு சோழனான விஜய கண்ட கோபாலன் செப்பேடு. அது முதல் சதாசிவராயர் வரை பத்து செப்பேடுகள் உள்ளன.
    அம்பிகாபுரம் கல்வெட்டு ஒரு முக்கிய கல்வெட்டு. ஆர்காட்டுப் போரில் ராபர்ட் கிளைவே காஞ்சி வரதர் கோவிலில் படை நிறுத்தினான். அப்போது வரதரே வேளே கிளம்பிச் சென்றார். காஞ்சி மடம் பங்காரு காமாக்ஷியோடு உடையார்பாளையம், தஞ்சை பின் கும்பகோணம் என்று சென்றது. வெள்ளையர் ஆட்சியில் நிலங்கள் வெள்ளையர் வசம் சென்றன. தாமஸ் மன்றோ என்ற நேர்மையாளர்தான் பின் மெதுவாக திருப்பதி, மந்த்ராலயம் என்று ஒவ்வொரு கோவிலாக மெதுவாக கம்பனி பிடியிலிருந்து விடுவித்தான். மடம் அரசன் ஆதரவு வேண்டி கும்பகோணம் சென்றது. இக் கால கட்டத்தில் ஸ்ரின்கேறி மடமும் கஷ்டப்பட்டது. ஸ்ரிங்கேரிக்கு கொடுமை செய்தவன் ஒரு ஹிந்து அரசன். அந்த மடமும் பத்து வருஷம் நாசிக் சென்றது. திப்பு சுல்தான் உதவி செய்ய முயன்றான். பின் ஸ்ரின்கேறி மைசூர் அரசன் வசம் வந்ததும் ஆச்சார்யர் திரும்ப ஸ்ரின்கேறி வந்தார். காஞ்சி மேடம் வேறு வசதிகள் இல்லாததால் கும்பகோணத்தில் இரண்டு நூற்றாண்டுகள் இருந்தது.

  107. நான் பிராமணன் இல்லை. வீரம் கொண்ட சான்றோர் சாதி என் சாதி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். இருந்தாலும், பிராமணர்களை மட்டும் திட்டும் இந்த அரசியல் விளையாட்டை எதிர்க்கும் நேர்மை என்னிடம் உண்டு.

    // உண்மை என்னவென்றால் இரண்டு மேல்சாதி காரர்கள் ஆலயங்களுள் தலித்துகள் நுழையலாமா கூடாதா என பேசி கொள்கிறார்கள். இதை பார்க்கும் எந்த மானமுள்ள தலித் தலைவரும் ‘உங்க ஆலய பிரவேச ஆணியே புடுங்காண்டாம்… உங்க சனாதன இந்து மதமும் எங்களுக்கு வேண்டாம்” என்றுதான் சொல்வார். அதைதான் பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் செய்தார். //

    அப்புறம் எதற்காக அம்பேத்கார் அவர் ஊரில் இருந்த சிவன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்ய போராட்டம் நடத்தினார் ? ஆணியே பிடுங்க வேண்டாம் என்று இருந்திருக்க வேண்டியதுதானே.

    காந்திக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக வேலை செய்தவர் மிஸ்டர் பீமாராவ். காந்தியின் போராட்ட முறையைக் கேவலப்படுத்த ஒரே ஒரு முறை போராட்ட நாடகம் நடத்தினார் மிஸ்டர் பீமாராவ்.

    //அவருடைய சமகாலத்தவராகவும் நண்பராகவும் எங்களைக் கொத்தடிமைகொண்ட பழ்நி சாதுசுவாமிகளும் , நாரயணகுருவும், அவருடைய சீடர்களும், வெள்ளிமலை இராமகிருஷ்ணமடத்து சுவாமிகளும் வைகுண்டர் ஐயா , வடலூர் இராமலிங்க வள்ளலார் போன்றவrகளுமே வைதிக மதத்தைக் காத்து வந்துள்ளனர். //

    அதெல்லாம் சரிதான் சார். ஆனால், நித்தியானந்தர் போன்ற ஆட்களை சாதி அடிப்படையில்தானே உங்கள் சைவ சித்தாந்த மடங்கள் ஆதரிக்கின்றன. உங்கள் சைவ சித்தாந்த புத்தகங்களில் இருக்கும் சாதி மேட்டிமையைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் பேசுவீர்களா ?

    காஞ்சி சாமியார் பேசியதை கண்டிக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். சைவ சித்தாந்த மடங்கள் பற்றிய விமர்சனங்களை உங்கள் இந்துத்துவ அமைப்புக்கள் அனுமதிக்குமா?

    //பூனா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ‘தனி வாக்காளர் தொகுதி’ என்பதை ‘பொது தொகுதியாக’ மாற்றியதாகும். எண்ணிக்கை அல்ல பிரச்சனை. உதாரணமாக இன்றைக்கும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஆதிக்கசாதிகள் தாம் இஷ்டப்பட்டவரை நிறுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் அல்லது கைப்பாவையாக நடத்தும் நிலை உள்ளது எனில்//

    தனித் தொகுதி என்று வைத்தால் ஹரிஜனங்களுக்கு அரசியல் பலம் கிடைக்காது அவர்கள் வெறும் கைப்பாவையாக வைக்கப்படுவார்கள் என்று காந்தி அன்றே சொன்னார். அவர் சொன்னதுதான் இப்போது நடக்கிறது.

    ஆனால், வெள்ளைக்காரர்களின் அடிவருடியான மிஸ்டர். பீமாராவ் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆதரவாக வேலை செய்தார். அதன் விளைவாக, தனித்தொகுதி என்ற ஏமாற்று வேலை நடைமுறைக்கு வந்து, தலித்துகள் நிலைமை இந்தத் தொகுதிகளில் மோசமாகவே இருக்கிறது.

    தலித்துகளின் மிகப் பெரிய எதிரி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் இல்லை. தலித்துகளின் மிகப் பெரிய துரோகி அம்பேத்கார். ஆனால், இதைச் சொல்லும் தைரியம் நேர்மை இந்துத்துவ உயர்சாதியினருக்குக் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாதிகளுக்குக் கிடையாது. பாஜக போன்ற ஏமாற்றுக் கட்சிக்காரர்களுக்குக் கிடையாது.

    காஞ்சிப் பெரியவர் பேச்சுக்களை வைத்துக் கொண்டு அவரை விமர்சனம் செய்வது போல அந்தக் காலத்தில் சைவ சித்தாந்தத் தம்பிரான்கள் எழுதிய புத்தகங்களில் இருக்கும் சாதிய வெறியைப் பற்றி இணையக் கலைவாணர் அரவிந்தன் நீலகண்டன் எழுதுவாரா?

    பிராமணர்களைத் திட்டினால் சமூக நீதி காத்தவன் என்ற பெயர் கிடைக்கும். ஆனால், சைவ சித்தாந்த சாதி வெறி பற்றி எழுதினால் அவரை பாஜகாவில் இருந்தே வெளியேற்றி விடுவார்கள்.

    காஞ்சி மடத்தைத் தீவிரமாகத் தாக்கித் தனது சாதிக்காரர்களின் மடங்களில் நடக்கும் விஷயங்களைப் பற்றி எதுவும் பேசாமல் அவர் விளையாடும் இந்த அரசியல் விளையாட்டு மிகவும் ரசிக்க வைக்கிறது. கர்ம வீரர் காமராசரையே கேவலமாகப் பேசுகிறவர்கள் மற்றவர்களைப் பற்றி இன்னும் மோசமாகப் பேசுவார்கள்.

  108. அன்புள்ள வேதம்கோபால்,

    இங்கு கேள்வி பிராம்மணர்களை குறித்ததே அல்ல. வேறெந்த ஆதிக்க சாதியைக் காட்டிலும் சுயசாதியின் தவறுகளை விமர்சனம் செய்வதிலும், சாதிய எதிர்ப்பிலும். தலித்துகளின் உரிமை போராட்டத்தில் அவர்களோடு தோளோடு தோள் நின்றவர்களும் பிராம்மணர்களே என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் அத்தகையவர்களுக்கு திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆசியோ கருத்தியலின் ஆதரவோ கிடைக்கவில்லை. அவர்களெல்லாரும் சுவாமி விவேகானந்தர், தேசிய கவி பாரதி, மகாத்மா காந்தி ஆகியோரால் உத்வேகப்படுத்தப்பட்டவர்கள்.

    திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களை குறித்த என் கருத்துகளை இவ்விதமாக தொகுத்தளிக்கிறேன்:

    1. தெய்வத்தின் குரல் குறித்து நான் கூறியது சாதியத்தை தெய்வத்தின் குரலாக கூறும் ஆபாசம் என கூறியது முழுக்க பிறிதொரு சூழலில். நான் சர்வ நிச்சயமாக ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டு அப்பெயரில் வெளியிடப்பட்ட திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் உரைகள் குறித்து கூறவில்லை. ஆனால் அத்தகைய ஒரு பொருள் மயக்கம் ஏற்படும் விதமாக நான் கூறியது நிச்சயமாக தவறுதான். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.

    2. திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் எளிமை அப்பழுக்கற்ற வாழ்க்கை அனைவருக்கும் வெளிப்படையான வாழ்க்கை ஆகியவை துறவிகள் மட்டுமல்லாது இந்த நாட்டின் ஒவ்வொரு சமுதாய தலைவருக்கும் கடைபிடிக்க வேண்டிய முன்னுதாரணம். அதற்காக அவர் நிச்சயமாக போற்றப்பட வேண்டியவர்தான்.

    3. சாதியம் மற்றும் சமுதாயம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் நிலைபாடுகள் ஆகியவை முழுக்க முழுக்க ஒதுக்கி நிராகரிக்கப்பட வேண்டியவை. தலித்துகள் ஆலயபிரவேச விசயத்தில் அவர் எடுத்த நிலைபாடு மிகவும் தவறானது. அவ்விதம் அவர் செய்த தவறின் பலனை இன்றைக்கும் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் அனுபவிக்கிறது. அவர் அகப்பரிணாமம் அடைந்து கொண்டிருந்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனில் சமுதாய கருத்துகளை பொறுத்தவரை அவர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்ல மாறாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தவர். எனவே அவரது சமுதாய கருத்துகளை நாம் நிராகரிப்பதே நல்லது. பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் மகாத்மா காந்தியின் உயிருக்காக தம் கோரிக்கையை விட்டுக்கொடுத்த தயை ததாகத கருணை, அதே காந்திஜி தலித்துகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஒரு ஆதரவு குரல் கொடுக்கக் கூட திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதிக்கு தோன்றவில்லை என்பதோடு ஒப்பிட்டு பார்க்கையில், போதிசத்வ கருணை நமக்கு என்றென்றும் தேவை. அதுவே நம் குறைபாடு. ததாகத கருணையே நம் தர்மத்தினை பூர்த்தியாக்கும் என்பது தெளிவாகிறது. இதற்கு தடையாக திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியை முக்காலமும் உணர்ந்த கடவுள் என கூறுவோர் அசட்டுத்தனமான கதைகளை புனைந்தும் (அவரே இவற்றை மறுத்து கண்டித்திருப்பார். அவருக்கு இத்தகைய புனைகதைகள் தேவையில்லை) அறிவியல் ஆதாரமற்ற சாதிய கோட்பாடுகளை (பாரம்பரியமாக செய்யும் தொழில் எளிதாக அந்த வம்சாவழியினருக்கு வரும்…) தூக்கி பிடித்தும் சமுதாயத்துக்கு ஊறு விளைவிக்கிறார்கள்.

    என் கருத்துகளை தெளிவாக்கிவிட்டேன் என நினைக்கிறேன். இதில் பிராம்மண வெறுப்போ அல்லது எந்த தனிமனித ஆளுமையிடமும் எவ்வித கசப்பும் எனக்கு இல்லை.

    பணிவன்புடன்
    அநீ

  109. காஞ்சி முனிவரிடம் பிராமணர்களுக்கு இருக்கும் எந்த விமர்சனமும் அற்ற கண்மூடித்தனமான ஆதரவு எனக்கு வருத்தமளிக்கிறது,[Edited] இன்றுவரை இந்து கலாசார பொக்கிசங்கள் நீடித்திருப்பதற்கு பிராமணர்களே காரணம், இதற்காக மற்ற ஜாதி இந்துக்கள் என்றும் பிராமணர்களுக்கு கடமைபட்டவர்கள் ,இன்றைய காலகட்டத்தில் தனியொரு சமூகமாக இந்து மதத்தினை காக்கும் அவசியம் இல்லை, இந்து மதத்தின் தரிசனங்கள் இன்று பொதுவெளியில் உள்ளது. இன்றிருக்கும் வேகத்தில் சென்றால் கூட விரைவான கால கட்டத்திலேயே இந்து மதத்திலிருந்து சாதி வேறுபாடுகள் தானாக உதிர்ந்துவிடும்.தங்களை சேர்ந்தவர் என்பதாலேயே ஒருவரை உயர்வாக முன்னிருத்தப்படும் போக்கு இந்து மதத்தின் அறிவு தளத்தில் செல்லுபடியாகும் என்று எனக்கு தோன்றவில்லை. முடிவாக ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,நாராயண குரு வரிசையில் காஞ்சி முனியை வைக்க முடியும் என்று தோன்ற வில்லை பிற உயர் சாதி வகுப்பினரும் சாதிவேறு பாகுபாட்டினை கொண்டவர்கள் என்று பிராமணர்கள் வாதிடுவது அபத்தம்,ஒரு ஆசிரியர் தவறு செய்வதற்கும் மற்றவர்கள் தவறு செய்வதற்கும் வித்யாசம் உண்டு. இதுவரை இந்து சமூகத்தில் பிராமணர்களை மற்றவர்கள் தங்கள் முன்னுதாரங்களாகவே கொண்டுள்ளனர், இன்று கூட பிராமணர்கள் முனைந்தால் வேறு எவர்களை விடவும் இந்து சமூகத்தில் மிக எளிதில் சாதிவேறுபாட்டினை களைந்து விட முடியும் விமர்சனங்களை பரிசீலிப்பதை விடுத்து வெறுப்பு என ஒதுக்கினால் ஒன்றும் செய்ய இயலாது

  110. அனைவரும் பல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள். பல மனிதர்கள் தாங்கள் இறைவனாக நம்பும் ஒருவரின் கருத்துக்களை தெய்வத்தின் குரல் எனக் குறிப்பிடுவதில் தவறு என்ன இருக்கிறது?.
    வாழ்க பாரதம்.
    நன்றி.

  111. காஞ்சிப் பெரியவர் பேச்சுக்களை வைத்துக் கொண்டு அவரை விமர்சனம் செய்வது போல அந்தக் காலத்தில் சைவ சித்தாந்தத் தம்பிரான்கள் எழுதிய புத்தகங்களில் இருக்கும் சாதிய வெறியைப் பற்றி இணையக் கலைவாணர் அரவிந்தன் நீலகண்டன் எழுதுவாரா?
    do i need to say anything more than this?

  112. அ. நீ. சொல்வது தெளிவாக இருக்கிறது. அவருக்கு மகா பெரியவரிடம் எது பிடித்திருக்கிறது, எது பிடிக்கவில்லை என்பதிலும், தான் முன்பு சொன்னது வேறொரு சூழலில் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். நாம் காலத்தால் கட்டுண்டவர்கள் ஆதலால் எல்லோரிடமும் பழகும் வாய்ப்பு அற்றவர்கள். பலரை அவர்கள் சொல்வதையும், செய்வதையும் வைத்துக்கொண்டு நம் மனக்கண்ணாடி மூலம் பார்க்கும்போது அவர்களை நாம் அவர்களாகப் பார்க்க இயலாது. அப்படிப் பார்த்து அதை உள்வாங்கும்போது இருமைகளை இருமைகளாக இருக்கவிடாது, அவற்றிற்குக் கருமை வண்ணம் பூசி எருமைகளாகக் காட்டுவது தவிர்க்க முடியாது போய்விடுகிறது. மேலும் ஆன்மாவின் வீச்சை நம் சிற்றறிவால், கடலின் ஆழத்தைக் காண முயலும் உப்புப் பொம்மை போல், அளக்கவும் முயல்கிறோம். ஆனாலும் பன்மைகளைவிட இருமைகள் காண்பவன் எவ்வளவோ மேல் என்றும், அவன் ஒருமையைக் கூடிய சீக்கிரம் காண்பான் என விடுவதும் மேலோரின் பண்புகள். அனைவரும் கண்ணியம் காக்க வேண்டுகிறேன்.

  113. அம்பேத்கர் ஒரு அரசியல்வாதி. அவருக்கு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்து கூற வேண்டிய தேவை உண்டு. மஹா ஸ்வாமிகள் ஆன்மீகக் குரு. உங்களுடைய அரசியல் சித்து விளையாட்டு விஷயங்களில் அவர் கருத்துக் கூற வேண்டிய தேவை இல்லை. ஆலய நுழைவுக்காக பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் ஸ்வாமிகள் அதில் தலையிடவில்லை.
    //பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் மகாத்மா காந்தியின் உயிருக்காக தம் கோரிக்கையை விட்டுக்கொடுத்த தயை ததாகத கருணை, // அடேயப்பா!! இதையும் இந்த ஆய்வில் சார்புகள் இல்லாமல் எழுதியுள்ளனர். இந்தத் திரியில் யாரோ பகிர்ந்தது.. அவருக்கு நன்றி.. மனமிருப்பவர்கள் படித்துப் பயன் பெறுக..

    https://www.jstor.org/discover/10.2307/313135?uid=3738256&uid=2&uid=4&sid=21100858258831

  114. திரு.அ.நீ அவர்களின் மறுமொழிக்கு நன்றி. காந்தி அம்பேத்கர் பரமாசாரியார் எல்லோருமே என்னை பொருத்துவரை நான் மதித்து போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் சில குறைகள் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை அவர்களை பற்றி கருத்து கூறும் யோக்யதை எனக்கு நிச்சயம் கிடையாது. இருந்தாலும் இன்று என் மனநிலை இது தான். இவர்களின் குறைபாட்டினால் பாரதிய சமூகத்திற்கு சில கெடுதல்கள் என்று வரிசைபடுத்தினால் அதில் முதலில் இருப்பவர் காந்தி பின்பு அம்பேத்கர் கடைசியாக பரமாசாரியார் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். (நான் 100 சதவிகிதம் அடித்து சொல்வேன் அவரால் ஒரு தீமையான காலத்திற்கு பொருந்தாத இம்பாக்ட்டும் சமூகத்தில் ஏற்படவில்லை. அவரை குருவாக மதிக்கும் பல பிராமிணர்களே அவர் சொல்வதை ஏற்கவில்லை என்பதுதான் எதார்தம் அதே சமயம் அதற்காக அவரை தூற்றவும் இல்லை என்பதும் உண்மை. எனவே உங்களது குற்றசாட்டு என்னை பொருத்தவரை தேவையற்றது.

  115. மதிப்பிற்குரிய வேதம்கோபால்

    இத்தகைய தரவரிசைப்பாடு தேவையற்றது. இருப்பினும் செய்யப்பட்டுவிட்டமையால் சில விளக்கங்கள். சுவாமி சிரத்தானந்தர் கொலை செய்யப்பட்ட பிறகு இந்து முஸ்லீம் ஒற்றுமையில் மகாத்மா காந்தி சந்தேகம் கொண்டிருந்தார். அப்போது இன்று நாம் போலி-மதச்சார்பின்மைவாதம் என கருதுகின்ற சில வாதங்களை முன்வைத்து காந்திஜியை இந்து-முஸ்லீம் ஒற்றுமை எனும் கோட்பாட்டில் உறுதிப்படுத்தியவர் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஆவார். ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய அரசியல் செயல்பாடுகளை குறித்தும் அதன் பின்னால் இருந்த இஸ்லாமிய மேலாதிக்க இறையியல் குறித்தும் தெளிவான அறிதலை முன்வைத்தார். அவருடைய ‘Thoughts on Pakistan’ இதை தெளிவாக விளக்கும். பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர் பிரிவினையை ஆதரித்தார். இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்க மாட்டார்கள். எனவே அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை வைத்து கொண்டு இந்துக்கள் என்றென்றும் அரசியல் சுதந்திரம் அடைய முடியாது என அவர் கூறினார். பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டு விளங்கியது. இந்து சமுதாயத்தால் மனிதர்களாக கூட மதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக விளங்கிய பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரின் கடும் முயற்சியால் உருவான மகர் ரெஜிமெண்ட் வீரர்கள்தான் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த லட்சக்கணக்கான இந்துக்களின் உயிர்களை காப்பாற்றினார்கள். காஷ்மீரை பாகிஸ்தானிய ரெயிடர்களிடமிருந்து காப்பாற்றுவதிலும் மகர் போர்வீரர்க்ளின் பங்கு மகத்தானது. பூஜ்ய போதிசத்வர் காஷ்மீருக்கு தனியதிகாரம் அளிக்கும் சட்ட மாற்றத்தை தாம் எழுத மறுத்துவிட்டார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. கிழக்கு பாகிஸ்தானிய இந்துக்களின் நிலையை தாம் மந்திரி சபையிலிருந்து ராஜினாமா செய்ய ஒரு முக்கிய காரணமாக அவர் குறிப்பிட்டு அந்த இந்துக்களின் நிலையை அடிக்கோடிட்டு காட்டினார். இன்னும் எத்தனையோ சொல்லலாம். இத்தனைக்கும் ஆதிக்க சமுதாய இந்துக்களின் நலன் குறித்து அவர் கவலைப்பட்டிருக்கவே தேவை இல்லை. ஆதிக்க சாதியை சார்ந்த ஈவேராமசாமி போன்றவர்களின் ஒட்டுமொத்த இந்து வெறுப்புடன் பூஜ்ய போதிசத்வரின் கருணையை ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு புரியும். எனவே இத்தகைய தரவரிசைப்பாடு தவறானதும் பொருத்தமற்றதும் ஆகும். சங்கத்தின் மூலம் நான் கற்ற இந்துத்துவமே எனக்கு பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது. பரம பூஜனீய டாக்டர்ஜி, சுதந்திர வீர விநாயகதமோதர சாவர்க்கர், பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர் ஆகிய மூவரின் கனவும் என்றைக்கும் ஒன்றே: சாதியமற்ற வலிமையான இந்து சமுதாயம். இந்து சங்கதான். அதை சனாதனத்தின் பெயராலோ போலி சமய சார்பின்மை பெயராலோ எதிர்க்கும் எவரும் என் மதிப்பிற்குரியவரல்லர்.

    பணிவன்புடன்
    அநீ

  116. //காஞ்சிப் பெரியவர் பேச்சுக்களை வைத்துக் கொண்டு அவரை விமர்சனம் செய்வது போல அந்தக் காலத்தில் சைவ சித்தாந்தத் தம்பிரான்கள் எழுதிய புத்தகங்களில் இருக்கும் சாதிய வெறியை//
    உங்களிடேய உள்ள சண்டையில்/விவாதத்தில் ஏன் சைவத்தை பற்றி இழுக்கின்றிகள்?
    சைவமும் தமிழும் எங்களை போன்றவர்களுக்கு இரண்டு கண்கள்.
    சைவசித்தந்ததை பற்றி கூறுமுன் அதை முறையாக முழுவதுமாக படித்து விட்டு கூறுங்கள். சைவ சமயத்தில் சாதிய வேறுபாடு இல்லை. அப்படி யாராவது கூறினால் அவர்கள் உண்மையான சைவர்கள் இல்லை.

    சிவ சிவ

  117. //அவருடைய சமகாலத்தவராகவும் நண்பராகவும் எங்களைக் கொத்தடிமைகொண்ட பழ்நி சாதுசுவாமிகளும் , நாரயணகுருவும், அவருடைய சீடர்களும், வெள்ளிமலை இராமகிருஷ்ணமடத்து சுவாமிகளும் வைகுண்டர் ஐயா , வடலூர் இராமலிங்க வள்ளலார் போன்றவrகளுமே வைதிக மதத்தைக் காத்து வந்துள்ளனர். //

    அதெல்லாம் சரிதான் சார். ஆனால், நித்தியானந்தர் போன்ற ஆட்களை சாதி அடிப்படையில்தானே உங்கள் சைவ சித்தாந்த மடங்கள் ஆதரிக்கின்றன. உங்கள் சைவ சித்தாந்த புத்தகங்களில் // தம்பி, நான் குறிப்பிட்டவர்களில் யாரும் ம்டாதிபதிகளோ, சைவ ஆதீனங்களோ, ஒர் சாதியச் சேர்ந்தவர்களுக்குச் சேர்ந்த மடத்தின் அதிபதிகளோ அல்லர். அனைத்து சாதி மக்களுடனும் கலந்து பழகியவர்கள். இவர்களால் யார் உயர்நிலை பெற்றார்களோ அவர்கள் இவர்களைத் தாங்கள் இவர்களால் அடைந்த நன்மைக்கு நன்றியாக இவர்களைத் தெய்வமாகப் போற்றினார்கள். ஆனால் உலகமெல்லாம் இவர்களைத் தெய்வமாகப் பேச வேண்டும் என்று இவர்களில் யாருடைய கருத்தையும் அகிலபாரதத்துக்கும் பிரதிநிதிப் படுத்திக் கூறுவதில்லை. மேலும், சைவசித்தாந்தத்திற்கு திருமுறைகளும் சைவ சாத்திரங்களுமே பிரமாண்ம். அவற்றில் எங்கும் சாதி மேட்டிமையை உயர்த்திக் கூறுவதில்லை. ” இழிகுலமாம் சாதி உயிர்க்கு உளது எனச் சாற்ருமோ மாமறைகள்” எனப் , பண்டார சாத்திரம் சாதி வேதத்தில் பேசப்படவில்லை எனப் போதிக்கின்றது. மேலும், ” திருந்து பெருஞ் சாதிச் செயல் அரன்நற் சைவத் திருந்தவத்தவர்கள் ஓதித்திலையால்” என்றும், ‘தேசிகர்க்க்குப் புத்திரராய்ச் சேர்ந்தாரை வன்னம் எனப் பேசின் நரகமுறும் பெற்றியன்றோ ” என எச்சரிக்கின்றது. இச்சாத்திரத்ஹைச் செய்தவர் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர். “தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா” என்பது சைவ சாத்திரம். சாதி ஒருகாலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது என்ற எண்ணம் எனக்கும் உண்டு. அந்தச் சாதிக் கட்டுப்பாடு இல்லாமல் போயிருந்தால் இந்து சமூகம் சிதறுண்டு அந்நிய மதங்களில் கலந்து போயிருக்கவும் கூடும். ஆனால், இன்றைய இந்து சமுதாயம் , மீண்டும் ஆச்சாரியர் கூறும் நிலைக்குச் செல்ல முடியாது. இங்குக் கூறப்பட்ட கருத்துக்கள் பிராமண சமூகத்திற்கு எதிரானவை அல்ல. மறுமொழிகளில் ஒரு அன்பர் தெரிவித்தபடி, பாரதப் பண்பாட்டை நிலைநிறுத்த, ஆன்மீக, க்லாச்சார சமூக ஒழுக்கங்களை நிலைநிறுத்த பிராமண சமூகத்தியே நோக்கியுள்ளது. அச்சமூகம் காலத்துக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டு ஆன்மீகம் இசை முதலிய தொன்மரபுப் பண்பாட்டுக் கூற்களையும் பேணி வருவது வெளிப்படை. தீபக் குமார் நீங்கள் எப்படி ‘சான்றோர்’ என்ற மரபில் பெருமை கொள்கிறீர்களோ அப்படியே நானும் நான் தோன்றிய சாதியில் பெருமை கொள்பவன். நான் சாதிச் சைவன் அல்லன். ஆனால் சைவநெறியில் வாழும் பெற்றோருக்குப் பிறந்ததனாலும் சைவநூல்களில் ஓரளவு பயின்றுள்ளதாலும் சைவநெறியில் வாழ்கின்றேன். இந்த வாழ்க்கை முறையைக் என் முன்னையோருக்குக் கற்பித்தது மடாதிபதிகளோ ஆதீனங்களோ அல்ல. எளிய துறவிகள்.(பிராமணர் அல்லதவர்களுக்குச் சந்நியாசம் கூடாது என்றும் சிலர் கூறுவர்) என் வாழ்க்கை முறையினால் நான் பிறந்துள்ள சாதியிற் காட்டிலும் பிராமணர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றேன். நான் பெற்றிருப்பதாகக் கருதப்படும் பண்புகள் என்னைச் சுற்றியுள்ள பிராமணக் குடும்பங்களில் செலாவணியாகின்றனவே ஒழிய , பிறந்த சாதியில் அவை செல்லாக் காசுகளே. ஆனாலும், என் பிராமண நண்பர்கள், ஆச்சாரியரின் சாதி வரம்புகளையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கடைப்பிடித்திருப்பார்களேயானால் இந்த செள்ஜன்யம் எனக்கு இருக்குமா என்ற ஐயம் எனக்கு இன்றும் உண்டு.நான் என்சாதி எல்லையை மீறிக் கை நீட்டினேன் அந்த சாதியும் அதன் வரையறையைத் தாண்டிக் கையை நீட்டி என் நட்பை ஏற்றுக் கொண்டது.. இந்த எல்லை மீறுவது சாத்திரப்படி (ஸ்மிருதிகள் அப்படிக் கூறுகின்றன என்பர்) குற்றம், பிறப்பொழுக்கம் எல்லை கடப்பது குற்றம் என்றால் கீழ் உள்ளவர்கள் உயர்வது எப்படி?

  118. தலித் சமுதாயத்தினருக்கு சிவ தீக்கை அளிக்க உமாபதி சிவத்துக்கு சிவபெருமான் தம் கையால் கட்டளையாக எழுதி கொடுத்தார் என சைவ சித்தாந்த ஐதீகம் கூறும். அவ்வாறு சிவபெருமானே எழுதிய பாடல்:

    அடியாற் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
    குடியாற் கெழுதியகைச் சீட்டுப்-படியின்மிசைப்
    பெற்றான் சாம்பனுக்குப் பேதமறத் தீக்கை செய்து
    முக்தி கொடுக்க முறை.

  119. // நான் என்சாதி எல்லையை மீறிக் கை நீட்டினேன் அந்த சாதியும் அதன் வரையறையைத் தாண்டிக் கையை நீட்டி என் நட்பை ஏற்றுக் கொண்டது. //

    பெருமதிப்பிற்குரிய முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களுக்கு, உங்களது விவரணம் நெகிழ்ச்சியூட்டுகிறது. இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    இத்தகைய நட்புணர்வு, நேசம், சாதியம் கடந்து இணைவதற்கான வெளி – இது தான் இந்து மதத்தை உய்விக்கும். இனி வரும் இந்துமதம் இந்த நன்னெறிகளின் மீது தான் கட்டமைக்கப் பட வேண்டுமே அன்றி, காலாவதியான சாதிய சட்டகங்களாலும் அதைத் தூக்கிப் பிடிக்கும் அமைப்புகளாலும் அல்ல.

    கும்பகர்ணன் இறக்கும் தறுவாயில் விபீஷணை ராமனிடம் அடைக்கலம் தந்து சொல்லும் கம்பராமாயணப் பாடல் என் நினைவில் எழுகிறது.

    நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
    சாதியால் வந்த சிறுநெறி அறியான் என்தம்பி;
    ஆதியாய்! உனையடைந்தான்; அரசர் உருக் கொண்டமைந்த
    வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்.

    இங்கு கம்பன் கூறும் “நெடுந்தரும நெறி”யே உண்மையான சனாதன தர்மம். அதை மறுதலிக்கும் ஸ்மிருதிகளும் சாதியவாதமும் “சாதியால் வந்த சிறுநெறிகள்”.

    ஸ்மிருதிகள் வரையறுத்த சத்திரிய குலதர்மம் என்பதையும் தாண்டி தூய வேத ஞானத்தின், மானுட அறத்தின் வடிவமாக இராமன் விளங்குகிறான் என்பதைக் குறிக்கவே “அரசர் உருக் கொண்டமைந்த வேதியா” என்று கம்பன் இந்த இடத்தில் ஒரு அபாரமான அடைமொழியை வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறேன்.

    கம்பன் வழி பேசும் தெய்வத்தின் குரல்.

  120. அன்புள்ள ஜடாயு,

    நீங்கள் கூறியது 200 சதவிகிதம் உண்மை.
    பெரும் நெகிழ்ச்சியும் பலமும் தந்தது மதிப்பிற்குரிய ஐயா முத்துக்குமாரசுவாமி அவர்களின் கருத்துகள்.

    அவருக்கு என் பணிவான வணக்கங்கள்
    அன்புடன்
    அநீ

  121. ஜாதி பற்றி இத்தனை திடமாக, ஏறக்குறைய தனி ஆளாக நின்று வாதிடுகிறார் அ.நீ. எத்தனை சிறப்பு இருந்தாலும் ஜாதியைப் பற்றிய கண்ணோட்டத்தால் ஓரிரு மாற்று குறைத்தே மதிப்பிடுவேன் என்ற நிலை பாராட்டப்பட வேண்டியது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  122. திரு.அரவிந்தன் நீலகண்டன்,
    தாங்கள் விதவையை மணந்து கொண்டீர்களா?அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பண்ணி வைத்திருக்கிறீர்களா?எந்த ஜாதியில் திருமண சம்பந்தம் வைத்திருக்கிறீர்கள்?
    இதற்கு இதுவரையில் பதில் இல்லை.
    திருவள்ளுவரும்,”
    மறப்பினும் ஒத்துகொளல் ஆகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”
    அதனால் அவரையும் எதிர்க்கிறீர்களா ?என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

    எனினும் தாங்கள் உங்களுக்கு சரிஎன்றுபடும் கருத்துக்களையே நேர்மையாகக் கூறுவதாகத் தோன்றுவதால் உங்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து எழுதுகிறேன்.தி.க.போன்றவர்கள் இப்படிக் கேட்டால் பதில் எழுதி என் நேரத்தை வீணடிக்க மாட்டேன்.
    நீங்கள் களப் பணியில் இருக்கலாம்;ஆனால் சுவாமிகளும் அப்படி வாழ்ந்தவரே.

    அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.நீங்களோ அல்லது நானோ சுயநலமில்லாமல் இங்கே விவாதிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்;இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?
    பரசுராமர் ,கர்ணன் கதையைக் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.கர்ணனிடம் ,பரசுராமர் பிராமணனால் வண்டு குடைவதைத் தாங்க முடியாது;ஒரு ஷத்திரியானால் தாங்க முடியும் என்கிறார்.இதையே சான்றாகக் கொள்ளலாம்.
    துக்ளக்கில் குருமூர்த்தி கூட ஜாதி அமைப்பு எப்படி பொருளாதார மேம்பாடடைய உதவிஉள்ளது என ஆதாரங்களுடன் எழுதிஉள்ளார்.

    நன்றி.

  123. //சாதியால் வந்த சிறுநெறி // அரக்கர் குலப் பண்பு. (இங்கு குலம் என்பது பிறப்பின்பால் வந்த சாதியைக் குறித்தல்ல, அரக்கர்களின் பண்பு நெறிகளைக் குறித்தாம்)

  124. சைவச்சான்றோர்களுக்கு ஒரு திலகமாக உற்ற முனைவர் அவர்களது உயர்வையும்.. நற்பெரும் சிந்தையையும்.. அன்பின் தெளிவையும்.. கண்டு வியந்து வணங்குகின்றேன்..
    இந்த மகிழ்ச்சியை மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் குறிப்பிட்ட ‘நீதியால் வந்த..’ என்ற கம்பனின் பாடலினை தொடர்ந்த சில பாடங்களையும் பதிவிட்டு வெளிப்படுத்துகின்றேன்..

    ‘புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
    மைக் கடங் கார் மத யானை வாள்வேந்தன் வழி வந்தீர்!
    இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து, உம்முடைய
    கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர் என் கடைக்கூட்டால்

    நீதியால் வந்தது ஓர் நெடுந் தரும நெறி அல்லால்
    சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி
    ஆதியாய்! உனை அடைந்தான், அரசர் உருக் கொண்டு அமைந்த
    வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்

    வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன், “வேரோடும்
    கல்லுமா முயல்கின்றான், இவன்” என்னும் கறுவுடையான்
    ஒல்லுமாறு இயலுமேல், உடன் பிறப்பின் பயன் ஓரான்,
    கொல்லுமால், அவன் இவனைக் குறிக்கோடி கோடாதாய்!

    தம்பி என நினைந்து, இரங்கித் தவிராதான், அத் தகவு இல்லான்,
    நம்பி! இவன் தனைக் காணின் கொல்லும், இறை நல்கான்,
    உம்பியைத் தான், உன்னைத் தான், அனுமனைத் தான் ஒரு பொழுதும்,
    எம்பி பிரியானாக அருளுதி, யான் வேண்டினேன்

    இதனைத் தவிர, தயவு தாட்சண்யமின்றி, சாதீயத்திற்கு எதிராக போர் முரசு அறைந்து வரும் உயர்வாளர் அ.நீ அவர்கள் உமாபதி சிவம் அவர்களை காட்டியிருக்கிறார்கள்.

    நமது புறச்சந்தான பரம்பரையின் கடைக்குட்டி.. தீக்ஷிதர் மரபில் வந்தவர்.. ஆயினும், சாதி ஒழுக்கத்தை.. விட்டு விட்டு சித்தராய்த் திகழ்ந்த மறைஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவர் பின் சென்று வழிபட்டு வாழ்ந்தவர்.. ஆதலில் கொற்றவன் குடியார் என்றழைக்கப்பெறுபவர்..

    தீக்ஷிதர்களால் பூஜா உரிமையிலிருந்து விலக்கப்பெற்றவர்.. என்றாலும் ஆடவல்லானுக்கு அவர் பூசனையே உவப்பை.. தந்திருக்கிறது.. அவர் வராத போது திருக்கொடி ஏற மறுத்தது.. அவர் வந்து கொடிக்கவி பாடிய பின் தான் கொடி ஏறிற்று..
    இப்படி ஜாதிக்கு எதிராக கடவுளே நின்ற வரலாறு… வாழ்வியல் நம்முடையதல்லவா..?
    ஆடவல்ல பெருமான் தில்லைப் பெருங்கூத்தன் திருவருளால் அ.நீ அவர்களின் போர் வெற்றி பெற வாழ்த்தி வணங்குகின்றோம்..

  125. அன்புள்ள ஆர்வி,
    //ஜாதி பற்றி இத்தனை திடமாக, ஏறக்குறைய தனி ஆளாக நின்று வாதிடுகிறார் அ.நீ. //

    இங்கே எல்லாருமே ஜாதி பற்றி பேசுகிறார்கள். அநீ மட்டும் ‘ஏறக்குறைய தனி ஆளாக நின்று’ வாதிடவில்லை. ஏனென்றால் அவர் வாதிடுவதற்கு இங்கே அவருக்கு ஜாதி விஷயத்தில் எதிர்தரப்பே இல்லை. காரணம் ஜாதியையோ, தீண்டாமை போன்ற மூடக்கொடுமைகளையோ பற்றி யாருமே ஆதரித்து எதுவுமே பேசவில்லை. அனைவரும் இந்த விஷயத்தில் ஒரே கோணம் தான். இதை அநீ யும் ஒத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.

    //எத்தனை சிறப்பு இருந்தாலும் ஜாதியைப் பற்றிய கண்ணோட்டத்தால் ஓரிரு மாற்று குறைத்தே மதிப்பிடுவேன் என்ற நிலை பாராட்டப்பட வேண்டியது.// – இதை ஒப்புக்கொள்கிறேன் -மடங்கள், ஆதீனங்கள் ஜாதியை அதரிப்பதால் ஓரிரு மாற்று அநீ குறைத்தே மதிப்பிடுகிறார் என்று குறிப்பிடுவதாக எண்ணி.

    விஷயம் காஞ்சிப் பெரியவர் சாதி ஆதரவு பற்றியது. அநீ அதை முழுக்க தவறென்கிறார். அதற்காக பெரியவரை விமர்சிக்க்கிறார். இதை ஏற்காதவர்கள் (நான் உட்பட) பெரியவர் ஆதரித்த சாதி என்பது நாம் இன்று புரிந்துகொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு முதலான கொடுமைகளை உத்தேசித்துச் சொல்லபட்டதல்ல. அடிப்படையில் சிறிதளவும் தீய நோக்கங்கள் இல்லாத ஒரு லட்சியச்சமூகம் குறித்தானது. நாம் நீண்டு விலகிவந்து விட்ட நவீன சமூகத்தில், அவரது “ஏற்றத்தாழ்வு பாராட்டாத சாதி” என்பது காலத்திற்கு ஒருபோதும் ஒத்துவராது. அவர் நல்ல நினைப்பிலேயே உத்தேசித்திருந்தாலும் கூட தற்காலத்தில் தீயவிளைவுகளையே ஏற்படுத்தும். ஆகையால் காலத்திற்கு பொருந்தாதது என்ற வகையில் அவரது சாதிக்கருத்துக்களைப் புறக்கணிக்க வேண்டுமே அன்றி அதற்காக அவரது தீமையற்ற எண்ணத்துக்கு களங்கம் கற்பித்து அவரை சிறுமைப்படுத்தக் கூடாது என்று அவரது சாதி பற்றிய கருத்துக்களை நேரடியாக மேற்கோள் காட்டி வாதிடுகிறோம். ஆக இதிலும் அவருக்கும் பிறருக்கும் பெரிய வித்யாசமில்லை. அனைவரும் ஒரே கருத்தையே கொண்டிருக்கிறோம். அநீ அவர் புரிதல் படி காஞ்சிப் பெரியவரைக் குற்றம் சாட்டி கடுமையாக எதிர்கொள்கிறார். அதில் மட்டுமே விலகல்.

  126. திரு முத்துகுமார் அவர்களுக்கு,

    // திரு.அரவிந்தன் நீலகண்டன்,
    தாங்கள் விதவையை மணந்து கொண்டீர்களா?அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பண்ணி வைத்திருக்கிறீர்களா?எந்த ஜாதியில் திருமண சம்பந்தம் வைத்திருக்கிறீர்கள்? //

    இது அநாகரீகமான கேள்வி; தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தனிப்பட்ட சொல்லாடல்களை தவிர்த்து விவாதத்தை தொடர்வ்தே சரி.

  127. //எனவே அவருக்கு ஒரு தெய்வீக அருள் ஒளி வட்டத்தை வழங்கி அவரை குறித்து அபத்தமான அசட்டுத்தனமான அற்புத கதைகளை உருவாக்கும் ஒரு போக்கு இன்றைக்கு காணப்படுகிறது.//
    இப்படிச் செய்து ப்ரமாச்சார்யர் ஒரு அவதரம் என்று நிறுவுவதன் மூலம் ஒரு சிலர் தம் தலையைக்குப் பின்னே ஒரு ஒளி வட்டம் அமைத்துக் கொள்ள முயல்கின்றனர் என்று எனக்கு ஒரு திரிபற்ற ஐயம்.

    ஒருபெரியவர் இருந்தால் அவரைச் சுற்றிச் சில அல்லக்கைகள் இருக்கும். அவர் காலத்திலும்/காலத்துக்குப் பின்னும் அவை தன்னிஷ்டத்துக்கு ஆடிவிட்டு அவர் பெயர் சொல்லி மஞ்சள் குளிக்கும். இத்தகைய செயல்கள் அந்தப் பெரியவரின் மரியாதைக்கு பங்கமாகும் என்கிற அடிப்படை அறிவில்லாத ஜந்துக்களே இப்படிச் செய்கின்றன.

    இத்தகையதோர் ஒளிவட்டம் நிஜமாகவே அவர் மீது மரியாதை வைத்திருப்போரை அவரது பக்தர்களாக்கத் தலைப்படுகிறது. ஒரு வேளை கூடச் சந்தியாவந்தனம் செய்யாத ப்ராமணர்கள்(?) “மஹா பெரியவா தான் எனக்கு எல்லாம், அவர் சொன்னபடி தான் நான் வாழ்கிறேன்” என்று சொல்கையில் பரமாச்சார்யார் தம் மிஷனில் தோற்றுவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    நம் நாட்டில் காந்தியைக் கேள்வி கேட்டாலே ‘கொலைகாரப்பாவி’ என்னுமொரு கூட்டம். காஞ்சி பரமாச்சார்யரைக் கேள்வி கேட்டால் அவ்வளவுதான்.

    ஆனாலும் அவரைக் கேள்வி கேட்கிறேன் என்று கிளம்பி அவருக்குரிய மரியாதையை மறுப்பது தேவையற்றது. அவரை விமர்சிப்பதும் கூட உரிய மரியாதையோடு செய்யலாம். அதுவே கருத்து மோதல். இப்படிப் பேர்பேராகப் பொருதிப் பார்ப்பது விஷயத்தை விடுத்து வீண் வாதத்தையே வளர்க்கும். வளர்த்துக் கொண்டிருக்கிறது…

  128. அன்புள்ள ஆர்வி,

    நான் ’ஏறக்குறைய தனியாக’ இல்லை. பாருங்கள். மதிப்பிற்குரிய முனைவர் முத்துக்குமாரசாமி, அன்பு நண்பர்கள் ஜடாயு, மயூரகிரி சர்மா, நடராஜன், நீங்கள் இன்னும் நம்முடன் ஆழமாக எவ்வித கசப்பும் இல்லாமல் உரையாடி வரும் பிரகாஷ் சங்கரன் அனைவரும் சாதியத்தை எதிர்க்கிறோம். சாதியமற்ற ஒரு அற்புதமான ஆன்மநேய பண்பாடாக உலகின் குருவாக பாரதம் மேன்மை பெற நாம் அனைவரும் உழைக்கிறோம்.

    பணிவன்புடன்
    அநீ

  129. திரு பிரகாஷ் சங்கரன்

    ஆதாரத்துடன் [ அதாவது தெய்வத்தின் குரலில் அப்படி எழுதயுள்ளது -இப்படி எழுதி உள்ளது என்று வெறுமனே பொத்தாம்பொதுவாக சொல்லாமல் தேவையான பகுதிகளை படிக்க கொடுத்து ] விளக்கிய மறுமொழிகளுக்கு மிக்க நன்றி.மிகவும் சிந்திக்க வைத்ததுங்கள் நிதானமான மறுமொழிகள்.

    நண்பர்களே

    நான் படித்த வரை தெய்வத்தின் குரல் தொகுப்பிலிருந்து.
    என் சிறிய பாமர அறிவிற்கு காஞ்சி பெரியவர் எடுத்து சொன்ன கதைகள் புரிந்தன. அத்வைதம் தியரி கூட புரியவில்லை என்பது வேறு விஷயம்.

    சோமாசி மாற நாயனார் [ பிறப்பால் பிராமணர்-பக்தியால் கண்ணப்பனின் தம்பி] ] பற்றி சொல்லும் இடத்தை பாருங்கள். எப்படி கள் பானையுடன் வந்த ஈஸ்வரனை அவர் அடையாளம் கண்டார் என்பதும் பின் தீண்டாமை காரனமாய் நாயனாரையும் ஒத்துக்கி வைத்த பிராமணர்கள் அதற்கு தண்டனையாக தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் என்பதையும் சொல்கிறார்.

    நரசிம்ஹா மந்திர உபதேசம் பெற்ற பத்மபாதருக்கு தரிசனம் கொடுக்காமல் ஒரு மனதோடு தேடிய வேடனுக்கு தரிசனம் கொடுத்த பெருமாள் பற்றியும் சொல்கிறார். அப்பெருமாள் அசரீரியாக பேசி என் குரலைக் கேட்கும் பேறு அந்த வேடன் சகவாசத்தில் தான் உனக்கு கிடைத்தது என்கிறார் மந்திர உபதேச பெற்ற பிராமன பத்மபாதரிடம்!

    திரு பிரகாஷ் சங்கரன் சொல்வதோடு உடன்படுகிறேன். காஞ்சி முனிவர் ஏற்ற தாழ்வுகளை சொல்லவில்லை. அவர் சொன்னதாக ஒரு எண்ணத்தை உருவாக்கி , அவர் சாதீய வாதி என்று எவர் சொன்னாலும் உண்மை என்ன என்பதை அவரவர் அறிவால் ஆராய்ந்து தெரிந்து/தெளிந்து கொள்ளலாம்.

    எவர் பின்னும் ஒளிவட்டம் வைத்து -அவர் சந்யாசியோ, சிந்தனையாளரோ, எழுத்தாளரோ , அவர் சொன்னதே வேத வாக்கு என்று என்றைக்குமே ஹிந்து சமூகம் இருந்ததில்லை.
    இனி அப்படி ஆகபோவதுமில்லை.
    உண்மையில் கண் முன்னே உள்ள பிரச்சினைகளை பாப்போம்.
    . . ,

  130. நிறைய மறுமொழிகள்

    எனக்க புரிந்தது,. பெரியவர் சாதியத்தை சரி என்கிறார். ஆசாரம் பார்த்தே காலம் கழிகிறது. அவரை சுற்றி பிராமணர்களே. செயல் எல்லாம் சன்யாச தர்ம அனுஷ்டானங்களை கடைபிடிப்பதிலும் வேதா பாடசாலை ஆரம்பிப்பதிலும் செலவாகிறது. எப்படி முக்காலம் உணர்ந்த ஞானி ஒருவர் சம கால பிரச்சனைகளை தீர்க்க நினைக்கவில்லை. இவர் பெரியவர் தான் அனால் அவரை தெய்வமாக பார்க்க இயலாது – இப்படி அரவிந்தன் சொல்வதாக படுகிறது.

    ஹிந்துத்தவத்திளிருந்து எடுத்துக் கொண்டவர்கள் அதற்கு கொடுத்தவர்கள் என்று பார்த்தல். விவேகானந்தர், ராமகிருஷ்ணர், நாராயண குரு போன்றோர் அதிலிருந்து எடுத்துக் கொண்டதை விட அதற்க்கு அதிகம் கொடுத்தார்கள். பெரியவர் சாஸ்திரம் என்ன சொன்னதோ அதை எடுத்துக் கொண்டு அதன் படி நடந்தார் எல்லோரையும் நடக்கசொன்னார். புதிய பரிமாணங்களை சேர்த்தாரா என்றால் இல்லை என்று தான் தோன்றுகிறது. பெரிவர் நிச்சமாக கடவுளை அறிந்திருந்தார் ஆனால் அதற்க்கு மேல் முயற்சித்தார ஆனாரா என்றால்?

    சாரதா மடத்தில் மகாராஜ் இருக்கிறார் மாஜிக்கள் இருக்கிறார்கள். அவர்களை தொட்டு வணங்கினால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. வணங்குபவர்கள் ஒருவித பரவச அனுபவத்தை பெறுகிறார்கள் என்கிறார்கள். ஆசாரவாத சந்யாசிகளை தொட்டால் மட்டும் அவர்களுக்கு என்ன ஆகிவிடுகிறது,. தெய்வத்தை தொட்டால் தெய்வம் குறைந்துவிடுமா. அப்படி தொடப்டாது என்று சொன்னால் அப்படி தெய்வம் என்று சொல்கிறோம். முக்காலம் உணர்ந்த ஞானி என்கிறோம். எனக்கு தெரிந்து ஒரு வைஷ்ணவ சன்யாசி மீது பக்தர் ஒருவர் தெரியாமல் பட்டுவிட சாந்த மோர்ர்தியாக இருக்க வேண்டிய அவர் உக்ர மூர்த்தியாகி சிஷ்யரை வசை பாடி நோகடித்திருக்கிறார். இதை ராமக்ரிஷ்ணரோ விவேகானந்தரோ செய்வார்களா?

    தனது தர்மத்தையும் பிறருக்காக த்யாகம் செய்பவனே தெய்வமாகிறான். போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணனை அவனை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் பார் என்றார் கிருஷ்ண பக்தரான பீஷ்மர். பக்தன் வாக்கு மெய்பட வேண்டும் என்று தனது வாக்கை தூக்கி எறிந்த கண்ணன் போன்றோரே தெய்வம்.

    அன்னை சாரதா ஒரு முறை கண்ட கனவு. ராமகிருஷ்ணர் வாழ்வு முடிந்த பிறகு அவர் கங்கையில் அப்படியே கரைகிறார், விவேகானந்தர் அந்த கங்கை நீரை அள்ளி எடுத்து உலகெங்கும் தெளிக்கிறார். இதை கொஞ்சம் விரிவாக்கி அரவிந்தன் கனவில் அதே கங்கை நீரில் ஒருவர் நின்று கொண்டு அர்க்கியம் விடுகிறார், ஆசமனம் செய்கிறார் அப்புறம் போய் விடுகிறார்.

    வேத பாட சாலை திறந்து வைத்தால் போறாது. வேதத்தை காப்பத்தனும்னு சொன்ன போறாது. முதலில் அந்த வேதத்தை படிக்க மனுஷனை தயார் படுத்த வேண்டும், அந்த மனுஷனை காப்பாத்த வேண்டும் அவனுள் எழுச்சியை உருவாக்க வேண்டும். யார் முதல் வகை யார் இரண்டாம் வகை என்று எல்லோருக்கும் தெரிந்ததே.

    பெரிவாள் நிச்சயம் மகா பெரியவர் தான், ஒரு சிறிய கூட்டத்திற்கு. குருஜியும் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் எல்லைகள் இல்லாதவர்கள் என்று அரவிந்தன் சொல்வதாக எனக்கு படுகிறது 🙂

    ஒரு விஷயம் ஜெநேடிக்சில் தேர்ந்த அரவிந்தன் எப்படி வம்சாவழி வரும் இயல்பான திறமையை மறுக்கிறார் என்று புரியவில்லை. இது அறிவியல் மூலமாகவும், emperical [super freakonomics by steven levitt] ஆகவும் நிருவோப்பட்டதே. ஆக கலப்பு திருமணம் செய்தால் நிச்சயம் மக்கள் மேம்படுவது உறுதி. பல சாமான்ய முகங்களை ஒன்று செர்ஹ்டால் அழகான முகம் கிடைக்கிறதாம்.

  131. கடந்த நாலைந்து நாட்களாக என் கணினி சரியில்லாமலிருந்தது. ப்ரதேசாந்தரத்தில் இருக்கும் எனக்கு குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்பு கிட்டியமையால் இந்தத் திரியை பார்க்க சமயமும் வாய்ப்புமில்லாமல் இருந்தது. ஒரு இருபது முப்பது உத்தரங்களையே நாம் முன்னம் வாசித்திருந்தேன். இப்போது மிக அதிகமான உத்தரங்கள் பதிவாகியுள்ளது.

    மற்றைய திரிகளைப்போல் இங்கும் திரியின் விவாதாஸ்பத கருத்துக்களிலிருந்து விலகி திரியில் சம்பந்தமில்லாத விஷயங்களை விவாதித்ததைப் பார்க்க நேர்ந்தது. ஒரு வித்யாசம் எதிர்க்கருத்தாளர்களையும் மற்றும் கருத்துக்களையும் மோசமாக நாமகரணம் செய்யும் வைபவங்கள் சற்று குறைச்சல். அது மனதிற்கு மிக்க நிறைவே.

    அன்பார்ந்த அ.நீ மஹாசய,

    முதலில் விவாதப் பொருள் சம்பந்தமாக தாங்கள் தெரிவு செய்த மாறுபாடான ஆனால் வாஸ்தவத்திற்கு அணுக்கமான கருத்துகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    12-06-2012 அன்றைய பதிவு :-

    \\நான் கூறியவை ஒரு குறிப்பிட்ட சூழலில் சாதிய கருத்துகளுக்கு தெய்வீக முலாம் பூசும் போக்கை கண்டித்து சொல்லப்பட்டவை. அவற்றை ஒட்டுமொத்த தெய்வத்தின் குரல் நூல்களுக்கு நீட்டுவிக்க வேண்டியதில்லை. அத்தகைய ஒரு பார்வை மயக்கம் என் வார்த்தைகளால் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.\\

    17-06-2012 அன்றைய பதிவு :-

    \\நான் சர்வ நிச்சயமாக ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டு அப்பெயரில் வெளியிடப்பட்ட திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் உரைகள் குறித்து கூறவில்லை. ஆனால் அத்தகைய ஒரு பொருள் மயக்கம் ஏற்படும் விதமாக நான் கூறியது நிச்சயமாக தவறுதான். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.\\

    முதல் பதிவில் தோஷமாகப்பட்டது வாசிப்பவர்களின் பார்வையில் என்று தொனிக்கிறது. இதை நான் சுட்டிக்காட்ட நினைத்தேன். ஆனால் தங்களது மேற்கண்ட பதிவு இதை சமன் செய்துள்ளது. சரியான நிலைப்பாடு.

    திரியுடன் சம்பந்தமுள்ள இரு வேறான கருதுகோள்களை கீழே கொடுத்து என் புரிதல்களையும் பதிவு செய்ய விழைகிறேன்.

    தங்கள் கருத்து :-

    \\\\அம்பேத்கரின் மகா கருணையை முன்வைத்து நம் சகோதரர்களை குறுகிய சாதிய கண்ணோட்டத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டியுள்ளது. நண்பர்களை எதிரிகளாக்கும், மனது துன்பமளிக்கும் முள் நிறைந்த பாதையே இது. என்றாலும் இந்த சமுதாயம் ‘பரம வைபவ’ நிலையை அடைய, சாதியம் அழிந்தே ஆகவேண்டும். வேரும் வேரடி மண்ணுமற.\\\\

    பாஹேஸ்ரீ ராகத்திலான ஒரு சங்கப்பாடல் நினைவிற்கு வருகிறது

    இன்மலர்ச் சோலையில் இது வரை திரிந்தோம் இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்

    ஸ்ரீ சேக்கிழான் மஹாசயரின் கருத்து :-

    \\\\நமது நாடு பன்முகக் கலாசாரத்தில் ஒருங்கிணைந்த நாடு. அதுவே நம் வலிமை. இங்குள்ள மக்களை 800 ஆண்டு கால அன்னியர் ஆட்சியால் குலைத்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் நமது குலம், கோத்திரம், ஜாதி போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் தான். அவற்றை நாம் எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே சமயம், ஒருசிலர் ஜாதி அடையாளத்தால் குறுகுவதும், பலர் அதில் பெருமிதம் கொள்வதும் என்ற நிலை கண்டிப்பாக சமூக ஒற்றுமைக்கு உதவாது. எனவே தான், சங்கத்தில் ஜாதி வேற்றுமை பாராட்டப்படுவதில்லை. அங்கு காக்கி நிக்கர் அனைவரையும் ஒரே நிகர் ஆக்குகிறது.\\\\

    ஹிந்துத்வ சிந்தனா தாரை எதிர்க்கும் விஷயம் ஜாதிகளில் ஏற்றத்தாழ்வுகளே அல்லாது ஜாதிகளையே வேரும் வேரடி மண்ணுமாக அழித்தொழிப்பது இல்லை என்பது என் புரிதல். மற்றைய வ்யாசங்களின் உத்தரங்களில் இக்கருத்தை நான் நமது தளத்தில் முன்னம் பதிவு செய்துள்ளேன்.

    விஷயங்களைப் புரிந்து கொள்ள எனக்கு இரண்டு சாளரங்கள். வைதிக மரபு, சங்க மரபு.

    சாதுர் வர்ண்யம் மயா ச்ருஷ்ட்யம் என்று தான் பகவத் வாணியே அன்றி சதுர் லக்ஷ ஜாதிபி: மயா ச்ருஷ்டயம் என்றில்லை. வர்ணாச்ரம வ்யவஸ்தை பகவத் ச்ருஷ்டி. அனேக லக்ஷ ஜாதிகள் மனுஷ்ய ச்ருஷ்டி. அழியக்கூடிய மனுஷ்யர்களால் ச்ருஷ்டிக்கப்பட்ட யாதொன்றும் அழியத்தக்கதே என்பதற்கு ந்யாய சாஸ்த்ர விசாரமெல்லாம் செய்து நிர்த்தாரணம் செய்ய அவசியமில்லை தான். பாகவதாதி புராணங்களில் கலியில் வர்ண வ்யவஸ்தை எப்படி நஷ்டமாகும் என்பதை வ்யாசவாணியும் விளக்குகிறது. ஹிந்துவா முஸல்மானா என்று அடியார் அறியாதிருப்பினும் இரு சமூஹங்களையும் அரவணைத்து அவரவர்களை அவரவர் வழிப்படி வழிநடாத்திய ஷீர்டி சாயி சமாரத்தின் சத் சரித்ரத்திலும் வர்ண வ்யவஸ்தை சம்பந்தமான குறிப்புகள் உண்டு.

    ஜாதி என்ற அடையாளத்தை வைத்து ஒரு சிலர் குறுகுவதும் வேறு சிலர் பெருமிதம் கொள்வதும் நிர்தாக்ஷண்யமாக களையப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் ஜாதி வ்யவஸ்தை என்பது நம் முன்னோர்களால் எதோ சமூஹத்தை நாசம் செய்ய வேண்டி முனைந்து ச்ருஷ்டி செய்யப்பட்டதொரு அமைப்பு என்பது ஜீரணிக்க முடியாத ஒரு கருதுகோள். ஜாதி வ்யவஸ்தை என்ற ஒரு கருதுகோளுக்காக ஹிந்துக்கள் தலை குனிய வேணும் என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. ஸ்ரீமான்கள் சேக்கிழான் மற்றும் ப்ரகாஷ் சங்கரன் மஹாசயர்கள் இதைத் தான் தங்கள் கருத்துக்கள் வாயிலாக பதிவு செய்துள்ளார்கள் என புரிந்து கொள்கிறேன்.

    எங்கேயும் சுத்தி ரங்கனைச் சேவி என்று ஒரு வசனமுண்டு. எனது புரிதல்கள் கட்டமைக்கப்பட்டது பரம பூஜனீய குருஜி அவர்கள் இது சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்களின் வாயிலாகத் தான். ப.பூ.குருஜி அவர்கள் ஜாதியின் பெயரால் சமூஹத்தில் ஏற்றத்தாழ்வுகளை எந்தளவு கண்டிக்கிறாரோ அதே அளவு ஜாதி வ்யவஸ்தையை குற்றக்கூண்டிலேற்றும் மனப்பான்மையையும் நிந்திக்கிறார். “Bunch of Thoughts” புஸ்தகத்தில் இவ்விஷயம் சம்பந்தமாக அவர்களது நிலைப்பாடுகள் யாது என்பதை தொகுத்து சுருக்கமாக கீழே தந்துள்ளேன். கருப்பொருள் சம்பந்தமான ஒரு முக்யமான கோணத்தை ப.பூ.குருஜி அவர்களது கருத்துக்கள் தெளிவு செய்யும் என்பதால் இதை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    Castes, there were in those ancient times too, continuing for thousands of years of our glorious national life. There is nowhere any instance of its having hampered the progress or disrupted the unity of society. It, in fact, served as a great bond of social cohesion.
    Even during the past one thousand years when our nation fell before foreign onslaughts, there is no instance on record to show that caste distinctions were at the root of our national disunity that helped the invaders to conquer us.
    If the caste system had really been the root cause of our weakness, then our people should have succumbed to foreign invasion far more easily than those people who had no castes. But what does history say? After the death of Mohammed Pygamber, his followers poured out form Arabstan in waves after waves with their swords dripping with blood and overran vast portions of the globe, trampling under their feet all the various empires that lay in their path–Iran, Egypt, Rome, Europe and all others right up to China. The people of those mighty empires were swept away before the fury of the Muslim onslaught-many never to appear again on the world stage.
    The same tides of fanatic fury dashed also against the shores of Hindustan. But the picture that we see here is different altogether. All these centuries of fierce struggle for survival carried on upto final victory, be it remembered, the castes did exist.
    We know as a matter of history that our northwestern and northeastern areas, where the influence of Buddhism had disrupted the caste system, fell an easy prey to the onslaughts of Muslims. Gandhar, now called Kandahar, became completely Muslimised. Conversion took a heavy toll in East Bengal also. But the areas of Delhi and Uttar Pradesh, which were considered to be very orthodox and rigid in caste restrictions, remained predominantly Hindu even after remaining as the citadels of Muslim power and fanaticism for a number of centuries. We know that even as late as Shivaji’s time, the so-called ‘low-caste’ also played an epic role in the resurrection of swaraj.
    Thus history bears eloquent witness to both sides of the picture. On the one hand, the so-called ‘caste-ridden’ Hindu Society has remained undying and unconquerable and still has the vitality to produce a Ramakrishana, a Vivekanada, a Tilak and a Gandhi after facing for over two thousand years the depredations of Greeks, Shakas, Hunas, Muslims and even Europeans, by one shock of which, on the other hand, the so-called casteless societies crumbled to dust never to rise again.
    Today, of course, the caste system has degenerated beyond all recognition. Added to the perversity aggravated over the centuries, a new factor has been introduced into our body-politic which has further intensified the rigidity and perversity of castes by those very persons who are most vociferous in their denunciation of the system. During elections, their consideration for selection of candidates as also their appeal to the voters is mainly ‘caste’. At the root of the rising tempo of caste hatred and rivalry lies this appeal to gross selfishness and love of power in the name of caste. Even the state machinery is being prostituted for further widening these dissensions. Separatist consciousness breeding jealousy and conflict is being fostered in sections of our people by naming them Harijans, Scheduled Castes, Scheduled Tribes and so on and by parading the gift of special concessions to them in a bid to make them all their slaves with the lure of money.
    In their hearts of hearts, very few of those anti-caste zealots experience the sense of unity that can transcend the present-day perversities. Anti-caste tirade has verily become a mask for them to strengthen their own positions among their caste fellowmen. To what extent this venom has enterd our body-politic can be surmised from an incident which occurred some years ago. There is a ‘Victory Pillar’ near Pune, raised by the English in 1818 to commemorate their victory over the Peshwas. An eminent leader of the Harijans once addressed his caste-brethren under that Pillar. He declared that the pillar was a symbol of their victory over the Brahmins as it was they who had fought under the British and defeated the Peshwas, the Brahmins. How heart-rending it is to hear an eminent leader thus describing the hated sign of slavery as an emblem of victory, and the despicable action of fighting as slaves of a foreigner against our own kith and kin as an achievement of glory! How utterly his eyes must have been blinded by hatred, not able even to discern the simple fact of who were the victors and who the defeated! What a perversity?

    தலித் சஹோதரர்களின் எமினெண்ட் லீடர் என பரம பூஜனீய குருஜி குறிப்பிடுவது யார் என தெரியவில்லை. அந்த எமினெண்ட் லீடரின் கருத்துக்கள் சரியானது அன்று என்பது சுநிஸ்சயம்.

    முள் நேராக நின்று துல்யமாக நிறுக்கும் துலாக்கோல் போன்று அறவே பக்ஷபாதமின்றி கருத்து தெரிவிக்கும் பரம பூஜனீய குருஜி அவர்களது கருத்துக்கள் தான் சமூஹத்தையும் பரஸ்பரம் விருத்தமான தத்வார்த்தங்கள் கொண்ட தர்சனங்களை உள்ளடக்கிய ஹிந்து தர்மத்தையும் அறிவதற்கு எனக்கு அளவுகோல்.
    அன்பார்ந்த அ.நீ மஹாசய், தங்களது ஜாதீயம் சம்பந்தமான கருதுகோள் எனது அளவுகோலில் இருந்து வித்யாசப்படுகிறது.

  132. ஆகம விதியின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? கோயில் ஒன்றும் சுற்றுலா தளம் அல்லவே, யார் வேண்டுமானாலும் வந்து போவதற்கு. அமெரிக்காவில் கூடத்தான் குடியுரிமை பெரும் பொழுது கம்முனிச சிந்தனையில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்க்கிறார்கள். அப்படி இருந்தால் குடியுரிமை ரத்து செய்ய படுகிறது. ஆக இதில் என்ன தவறு இருக்கிறது.

  133. I am reposting my comment removing strong words about Ambedkar. Hope the editor of the site will publish it.

    //அப்போது இன்று நாம் போலி-மதச்சார்பின்மைவாதம் என கருதுகின்ற சில வாதங்களை முன்வைத்து காந்திஜியை இந்து-முஸ்லீம் ஒற்றுமை எனும் கோட்பாட்டில் உறுதிப்படுத்தியவர் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஆவார்.//

    காஞ்சி சாமியார் மேல் இணைய கலைவாணர் அரவிந்தனுக்கு உள்ள வெறுப்பு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. காஞ்சி சாமியாரின் அறிவுரைப்படிதான் காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமையை முன்வைத்தார் என்றும், அதனால்தான் இந்துக்களை முஸ்லீம்கள் கொல்லும் நிலை ஏற்பட்டது என்றும் பொய்யான தகவல்களைத் தருகிறார். அதாவது இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு அய்யர்கள்தான் காரணம் என்று பழியைத் தூக்கி அவர்கள் மேல் போடுகிறார். இணையக் கலைவாணரைப் போல இல்லாமல் ஓரளவு நியாயமான இந்துத்துவவாதியான ஜெயமோகன் காஞ்சி சாமியார் சொல்படி காந்தி செயல்படவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இணையக் கலைவாணரான அரவிந்தன் இந்துக்கள் கொல்லப்படக் காரணம் காஞ்சிப் பெரியவர் என்று பொய் சொல்லுகிறார். பிராமணர்களின்மேல் கொடூரமான வெறுப்புடன் எழுதுவது பொய் சொல்வது போன்றவற்றை செய்துவரும் இந்துத்துவ சாதிவெறியர்கள் சுனாமி நிலநடுக்கம் போன்றவற்றுக்கும் காஞ்சி சாமியாரும், பிராமணர்களும்தான் காரணம் என்று சொல்லப்போகும் நன்னாளை எதிர்பார்க்கிறேன்.

    ///இந்து சமுதாயத்தால் மனிதர்களாக கூட மதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக விளங்கிய பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரின் கடும் முயற்சியால் உருவான மகர் ரெஜிமெண்ட் வீரர்கள்தான் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த லட்சக்கணக்கான இந்துக்களின் உயிர்களை காப்பாற்றினார்கள். காஷ்மீரை பாகிஸ்தானிய ரெயிடர்களிடமிருந்து காப்பாற்றுவதிலும் மகர் போர்வீரர்க்ளின் பங்கு மகத்தானது. //

    பொய் சொல்வது என்று முடிவு செய்த பின்னால் ஏன் இணையக் கலைவாணர் பாதி உண்மைகளைச் சொல்லுகிறார் என்பது தெரியவில்லை. சுத்தத் தமிழனான என் சித்தப்பா மகர் ரெஜிமண்டில் வேலை செய்பவர். அவர் மகர் சாதி கிடையாது. வீரம் மிகுந்த சான்றோர் சாதியைச் சேர்ந்த அவர் பல தகவல்களை எங்களுக்குச் சொல்லி இருப்பதால் இந்துத்துவர்களின் பொய்கள் எங்களிடம் எடுபடாது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் வடகிழக்குப் பகுதியில் எல்லைப் பாதுகாவலில் ஈடுபட்டவர்கள். பல சாதிகளையும், இனங்களையும் சேர்ந்த அவர்கள் பின்னர் மகர் ரெஜிமெண்டில் ஒரு பேட்டாலியனாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அதேபோல, கஷ்மீர் சண்டையின்போது அதை மீட்கச் சென்ற மகர் பேட்டாலியன்களில் இருந்தவர்கள் மகர் ரெஜிமண்டைச் சேர்ந்த பல சாதி வீரர்கள். சீக்கியரின் தலைமையில் அந்தப் பேட்டாலியன்கள் அனுப்பப்பட்டன. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து என்னவோ மகர் சாதிக்க்காரர்கள்தான் அதுவும் அம்பேத்கார்தான் கஷ்மீரை மீட்டுத் தந்தார் என்று பொய் சொல்லக்கூடாது. அரவிந்தன் நீலகண்டனின் வயிற்றெரிச்சலைக் கிளப்ப மேலும் ஒரு தகவலைச் சொல்லுகிறேன். மகர் ரெஜிமண்டில் இருந்து வீர்சக்ரா உட்பட பல மதிப்பிற்குரிய பதக்கங்களை வாங்கியவர்களில் பலர் பிராமணர்கள். இணையக் கலைவாணரான அரவிந்தன் நீலகண்டன் வெறுக்கும் தமிழ்ப் பிராமணர்களில் ஒருவரான பரமேச்வரனும் மகர் ரெஜிமண்டைச் சேர்ந்தவரே.

    மகர் ரெஜிமண்டை பீமாராவ்தான் உருவாக்கினார் என்கிறார் இணையக் கலைவாணர். மிஸ்டர். பீமாராவ் நிசமாகவே சாதியை ஒழிக்க விரும்பி இருந்தால், ஏன் தன் சாதிக்கு மட்டும் ஒரு ரெஜிமண்ட் வேண்டும் என்று கேட்டார்? சாதி அடிப்படையில் இல்லாத அல்லது எல்லா தலித்துகளுக்குமான ரெஜிமண்ட் வேண்டும் என்று ஏன் அவர் கேட்கவில்லை? மிஸ்டர். அம்பேத்கர் தன் சாதிக்குத் தலைவராகத்தான் நடந்துகொண்டார். அவர் சாதிக்காரர்கள் மற்ற தலித்துகளை எப்போதும் கீழ்த்தரமாகவே நடத்திவருகிறார்கள் என்பது மகாராச்ட்ராவில் வாழ்பவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவரை மற்ற சாதிக்காரர்கள் யாரும் அந்தக் காலத்தில் ஒரு தேசத் தலைவராக மதிக்கவில்லை. சாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அம்பேத்காரும் அவர் குடும்பத்தாரும் அவர் சாதிக்காரர்களும் இன்றுவரை தங்களை விடத் தாழ்ந்த தலித்துகளோடு திருமணம் செய்துகொள்வதில்லை. அவர் ஒரு மகர் சாதித் தலைவராகத்தான் பார்க்கப்பட்டார்.

    இந்து மதவெறியர்கள் பொய் சொல்லுவார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறார் நம்ம இணையக் கலைவாணர்.

  134. கருணை வடிவான அம்பேத்காரும் அவர் குடும்பத்தினரும் அவர் சாதிக்காரர்களும் தங்களை விடத் தாழ்ந்த தலித் குடும்பங்களோடு கலப்புத் திருமணம் செய்யவில்லை. சாதியற்ற ரேஜிமண்டை உருவாக்காமல் அம்பேத்கார் அவருடைய சாதிக்காரர்களுக்கு மட்டும் ரேஜிமாந்து உருவாக்கினார். தன சாதிக்காரர்களுக்கு மட்டுமே வேலை பார்த்த அம்பேத்காரின் கருணையே கருணை.

  135. //திரு முத்துகுமார் அவர்களுக்கு,

    // திரு.அரவிந்தன் நீலகண்டன்,
    தாங்கள் விதவையை மணந்து கொண்டீர்களா?அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பண்ணி வைத்திருக்கிறீர்களா?எந்த ஜாதியில் திருமண சம்பந்தம் வைத்திருக்கிறீர்கள்? //

    இது அநாகரீகமான கேள்வி; தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தனிப்பட்ட சொல்லாடல்களை தவிர்த்து விவாதத்தை தொடர்வ்தே சரி.

    //
    There is nothing wrong in asking this. People need to know whether you are following what you are preaching. It’s clear he is not. There are many people who oppose caste system in the public and strictly follow that at home. If Periyar would have married dalith women when he got married second time at age of 76 it would have added more value to his preaching. Whereas Va.Ra (Ramaswamy Iyengar) got married to a dalith women in those days, he did not go around and simply preach.

  136. //ஒரு விஷயம் ஜெநேடிக்சில் தேர்ந்த அரவிந்தன் எப்படி வம்சாவழி வரும் இயல்பான திறமையை மறுக்கிறார் என்று புரியவில்லை. இது அறிவியல் மூலமாகவும், emperical [super freakonomics by steven levitt] ஆகவும் நிருவோப்பட்டதே. ஆக கலப்பு திருமணம் செய்தால் நிச்சயம் மக்கள் மேம்படுவது உறுதி. பல சாமான்ய முகங்களை ஒன்று செர்ஹ்டால் அழகான முகம் கிடைக்கிறதாம்.//

    சாரங்,

    நீங்கள் என்ன சொல்ல வருகுரீர்கள் என்று புரியவில்லையே. கொஞ்சம் என்னை போல் பாமரர்களுக்கு புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும்.

    குறிப்பு – உங்கள் எழுத்தில் நிறைய தமிழ் வார்த்திகள் சரியாக பதிவாகவில்லை. உங்கள் மென்பொருளில் எதோ கோளறு என்று நினைக்கிறேன்.

  137. பரம பூஜனீய குருஜி அவர்களின் வர்ணாசிரமம் குறித்த கருத்துகள் தெளிவானவை. அது காலவதியான ஒரு அமைப்பு. அது உடைத்து தள்ளப்பட்டு புதிய ஒரு அமைப்பு தேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழ வேண்டும்:

    As the older dried branches fall off a growing tree, to give place to the new ones, the society would shed Varna Vyavastha the existing social structure at one time and give place a new necessary one. This is a natural process of the development of the society. … I have told you once that for the sake of construction of a new house, old house requires to be destroyed.Similarly purturbed social system must be put to an end here and now and should be destroyed root and branch. Going further we should proceed to establish a pure and harmonious society on the basis of pure Nationalism (பரமபூஜனீய ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், Sri Guruji ka Samajik Darshan, 2006, பக்.24-26)

  138. ஸ்ரீ வ்யாஸ்
    “ஆகம விதியின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?”
    இந்த அபத்தம் புரியவில்லையா. ஆகமவிதியில் நம்பிக்கை இல்லை என்று எந்த தாழ்த்தப்பட்டவரும் எப்போதும் சொல்லவே இல்லை. அப்படி இருந்தால் காட்டுங்களேன். சிவாகமங்கள் சிவதீக்கைபெற அனைவருக்கும் அளிக்கின்றனவே. ஸ்ரீ ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திருவடி சம்பந்தம் செய்துவைத்தாரே. அப்படியிருக்க ஆலயவழிபாட்டில் அவர்களுக்கு தடை யேன். பெரியவர் எந்த ஆகமங்களைக்குறிப்பிடுகிறார். யாரைக்கூறுகிறார் தெரியவில்லையே.

  139. சாதீய மறுப்பை எந்த சாமியார் அல்லது தலைவர் ஏற்றார் அல்லது மறுத்தார் என்பதில் எவ்வளவு வழக்கு இங்கே. ஆனால் அதன் பிடி இறுகிக்கொண்டே போகிறதே. இவ்விவாதம் எதை நோக்கி….

  140. //As the older dried branches fall off a growing tree, to give place to the new ones, the society would shed Varna Vyavastha the existing social structure at one time and give place a new necessary one. This is a natural process of the development of the society. … I have told you once that for the sake of construction of a new house, old house requires to be destroyed.Similarly purturbed social system must be put to an end here and now and should be destroyed root and branch. Going further we should proceed to establish a pure and harmonious society on the basis of pure Nationalism (பரமபூஜனீய ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், Sri Guruji ka Samajik Darshan, 2006, பக்.24-26)//

    என்னை பொறுத்த மட்டில் வர்ணாஸ்ரமத்தை நவீன படுத்துவதே உகர்ந்தது. அதில் இருக்கும் சில காலத்துக்கு ஒவ்வாத ிஷயங்களை களைத்து விட்டு புதுப்பிக்க வேண்டும். Nationalism with a touch of Hinduism as mentioned by Guruji is unlikely to be achieved until we eliminate political aspects of christianity and islam. Both these religions are political entities and will not sleep until eradicating Hinduism. Bringing both these religions into the Hindu cultural boundary is not likely to happen anytime in the near furture. உடையும் இந்தியா எழுதிய அரவிந்தனுக்கு இது நன்றாகவே புரியும் என்று நினைக்கிறேன்.

  141. Seenu,

    //There is nothing wrong in asking this. People need to know whether you are following what you are preaching. It’s clear he is not. There are many people who oppose caste system in the public and strictly follow that at home. If Periyar would have married dalith women when he got married second time at age of 76 it would have added more value to his preaching. Whereas Va.Ra (Ramaswamy Iyengar) got married to a dalith women in those days, he did not go around and simply preach.//

    அதற்காக விதவை திருமணத்தை ஆதரிக்கும் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆன பின்னும் ஒரு விதவையை மறுபடியும் மணக்கவா முடியும்? நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தாது.

  142. சுவாமி சிரத்தானந்தர் கொலையைத் தொடர்ந்து காந்திஜி இந்து முஸ்லீம் ஒற்றுமை சாத்தியமற்றது என நினைத்து சஞ்சலப்பட்டு கொண்டிருந்தார். //அப்போது இன்று நாம் போலி-மதச்சார்பின்மைவாதம் என கருதுகின்ற சில வாதங்களை முன்வைத்து காந்திஜியை இந்து-முஸ்லீம் ஒற்றுமை எனும் கோட்பாட்டில் உறுதிப்படுத்தியவர் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஆவார்.//

    இதற்கு பொருள் பாகிஸ்தான் பிரிவினை கலவரங்களில் இந்துக்கள் இறந்ததற்கு காரணம் தமிழ்நாட்டு ஐயர்களே என நான் சொல்வதாக ஒருவர் எடுத்து கொண்டால் அதை புன்சிரிப்புடன் புறந்தள்ளுவது மட்டுமே சரியாக இருக்கும். இருப்பினும் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் என்பதையும் தமிழ்ஹிந்து வாசகர்கள் அறிய தந்துவிடுவது நல்லது.

    G: “Yes. In the present condition of our land how can we attain unity amidst Hindus and Muslims”.
    A: “In case a Hindu kills you or mein the future, can we hate the entire Hindu community on that count?” ( திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறு ஆங்கில நூல், பக். 64)

    பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கரின் முயற்சியால் உருவான மகர் ரெஜிமெண்ட்தான் இந்து அகதிகளை பாகிஸ்தானிலிருந்து காப்பாற்றி வருவதிலும் காஷ்மிர் போரிலும் முக்கிய பங்கு வகித்தது என நான் குறிப்பிட்டிருந்தேனே தவிர ’மகர்கள்’ என எங்கும் குறிப்பிடவில்லை. இருந்தாலும் சில தரவுகள். 1941 இல் பூஜ்ய போதிசத்வரின் முயற்சியால் இந்த ராணுவ பிரிவு உருவாக்கப்பட்டது. பூஜ்ய போதிசத்வரின் இம்முயற்சியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர் ஸ்வதந்திர வீர விநாயக தமோதர சாவர்க்கர் ஆவார். (தனஞ்ஜெய் கீர், Dr. Ambedkar: Life and Mission, 338) பூஜ்ய போதிசத்வ அம்பேத்கரின் ‘Scheduled Caste Federation’ 1943 இல் முயற்சிகள் எடுத்து ராணுவத்தில் ஆபீசர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் (எந்த சாதியானாலும்) வருவதற்கு சட்ட ரீதியாக இருந்த தடைகளை நீக்கியது. ஆண்டுகளுக்கு பின்னரே மகர் பெட்டாலியன்கள் போன்ற பெட்டாலியன்களில் அவற்றின் தொடக்க சமூகக்குழு மக்கள் மட்டுமல்லாது பிற பிரிவினரும் இணைந்து அவை ஒட்டுமொத்த இந்தியர்களை கொண்டதாக மாறியது. ஆனால் இந்த பெயரே ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு ஒரு எழுச்சியை அளித்தது. அன்றைய காலகட்டத்தில் காந்திஜி இந்தியர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர வேண்டாமென்று கூறியிருந்தார். இதனால் இந்திய ராணுவத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதீதமாக எழும் அபாயம் இருந்தது. ஸ்வதந்திர வீர சாவர்க்கர் பூஜ்ய போதிசத்வ அம்பேத்கர் ஆகியோரது அழைப்பால் தேச பக்தி கொண்ட இந்திய இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் இணைந்தனர். இதனால் இஸ்லாமிய ஆதிக்கம் கொண்ட ராணுவத்தால் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்படக் கூடிய ஆபத்து இல்லாமல் ஆனது. அகதிகளை காப்பாற்றவும் காஷ்மீர் போரிலும் மகர் ரெஜிமெண்டை நிலை நிறுத்த பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் காஷ்மிருக்கான தனி உரிமைகளை அளிக்கும் க்ஷரத்துகளை வடிவமைக்கவும் அவர் மறுத்துவிட்டார். காஷ்மிர் போரில் மகர் ரெஜிமெண்ட் முதல் பட்டாலியன் நாயக் கிருஷ்ண சோனவானே எதிரிகளில் 700 பேரை அழித்து பலிதானமானார். அவரே முதல் மகாவீர சக்கரம் வழங்கப் பட்ட முதல் மகர் வீரராவார். (ராமசந்திர க்ஷீரசாகரா, Dalit Movement in India and Its Leaders, 1857-1956, பக்.140)

    பூஜ்ய போதிசத்வ பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் மகர் சாதியினருக்கு மட்டும்தான் தலைவராக இருந்தாரா? அக்காலத்திலிருந்தே அவரது எதிரிகள் இந்த பழி மூலம் அவர் மீது அவதூறு பரப்பி வருகின்றார்கள். பாம்பே கார்ப்பரேஷன் தேர்தலில் தனது மகர் சாதி வேட்பாளரான நிகால்ஜேக்கு பதிலாக மற்றொரு ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பாலு எனும் கிரிகெட் வீரரை (இவர் இந்து மகா சபை காரரும் கூட) அவர் ஆதரித்தார். மற்றொரு ஒடுக்கப்பட்ட சாதியும் பொதுவாக மகர்களுடன் மோதல் உடையவர்களுமான மாங்க் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சிறுவனை தனது மைந்தனாகவே வளர்த்தார். (தனஞ்ஜெய் கீர், பக்.86)

    இறுதியாக இங்கு நாம் விவாதிப்பது திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் கருத்துகளில் சாதியம் காணப்படுகிறதா எனில் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதுதானே ஒழிய ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் சாதியத்துக்கு காரணமா என்பதல்ல. நான் எந்த இடத்திலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் சாதியத்துக்கு காரணம் என எழுதியதுமில்லை. தேவையற்ற போலி முத்திரை குத்தல்களின் மூலமும் எதிராளியின் மீது பொய்யான அவதூறு சேறடிப்பதன் மூலமும் தான் தங்கள் வணக்கத்துக்குரிய குருவின் புனிதத்துவத்தை காப்பாற்ற முடியும் என சிலர் (அனைவரும் அல்ல) நினைப்பது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

  143. ஆகா மொத்தத்தில் அரவிந்தன் நீலகண்டன் என் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை.அவர் கழகத் தலைவர்கள் போல் ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர் என்று தெரிகிறது.
    நான்தான் வீணே என் நேரத்தை வீணடித்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது.

  144. //காஞ்சி சாமியார் மேல் இணைய கலைவாணர் அரவிந்தனுக்கு உள்ள வெறுப்பு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.//

    மானுடத்தை நேசிக்கின்ற எவருக்கும் காஞ்சி துறவியின் சாதிபற்றிய கண்ணோட்டத்தின் மேல் ஏற்படுகின்ற வெறுப்பு வெட்டவெளிச்சமாகத்தான் தெரியும். அதில் என்ன தவறு? இருட்டில் இருக்கின்ற உங்களுக்கு வெளிச்சம் பட்டால் கூசத்தான் செய்யும்.

    //பொய் சொல்வது என்று முடிவு செய்த பின்னால் ஏன் இணையக் கலைவாணர் பாதி உண்மைகளைச் சொல்லுகிறார் என்பது தெரியவில்லை. சுத்தத் தமிழனான என் சித்தப்பா மகர் ரெஜிமண்டில் வேலை செய்பவர். அவர் மகர் சாதி கிடையாது. வீரம் மிகுந்த சான்றோர் சாதியைச் சேர்ந்த அவர் பல தகவல்களை எங்களுக்குச் சொல்லி இருப்பதால் இந்துத்துவர்களின் பொய்கள் எங்களிடம் எடுபடாது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் வடகிழக்குப் பகுதியில் எல்லைப் பாதுகாவலில் ஈடுபட்டவர்கள். பல சாதிகளையும், இனங்களையும் சேர்ந்த அவர்கள் பின்னர் மகர் ரெஜிமெண்டில் ஒரு பேட்டாலியனாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அதேபோல, கஷ்மீர் சண்டையின்போது அதை மீட்கச் சென்ற மகர் பேட்டாலியன்களில் இருந்தவர்கள் மகர் ரெஜிமண்டைச் சேர்ந்த பல சாதி வீரர்கள். சீக்கியரின் தலைமையில் அந்தப் பேட்டாலியன்கள் அனுப்பப்பட்டன. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து என்னவோ மகர் சாதிக்க்காரர்கள்தான் அதுவும் அம்பேத்கார்தான் கஷ்மீரை மீட்டுத் தந்தார் என்று பொய் சொல்லக்கூடாது. அரவிந்தன் நீலகண்டனின் வயிற்றெரிச்சலைக் கிளப்ப மேலும் ஒரு தகவலைச் சொல்லுகிறேன். மகர் ரெஜிமண்டில் இருந்து வீர்சக்ரா உட்பட பல மதிப்பிற்குரிய பதக்கங்களை வாங்கியவர்களில் பலர் பிராமணர்கள். இணையக் கலைவாணரான அரவிந்தன் நீலகண்டன் வெறுக்கும் தமிழ்ப் பிராமணர்களில் ஒருவரான பரமேச்வரனும் மகர் ரெஜிமண்டைச் சேர்ந்தவரே.//

    //எல்லா சாதியையும் சேர்ந்தவர்கள் மகர் ரெஜிமெண்டில் இருந்தார்கள்தான். ஆனால் எதற்கு மகர் ரெஜிமெண்ட் என்று பெயர் வைக்க வேண்டும்? என்று தெளிவுபடுத்தினால் நல்லது

    மகர் ரெஜிமண்டை பீமாராவ்தான் உருவாக்கினார் என்கிறார் இணையக் கலைவாணர். மிஸ்டர். பீமாராவ் நிசமாகவே சாதியை ஒழிக்க விரும்பி இருந்தால், ஏன் தன் சாதிக்கு மட்டும் ஒரு ரெஜிமண்ட் வேண்டும் என்று கேட்டார்? சாதி அடிப்படையில் இல்லாத அல்லது எல்லா தலித்துகளுக்குமான ரெஜிமண்ட் வேண்டும் என்று ஏன் அவர் கேட்கவில்லை?//

    பிரிட்டிஷாருக்கு போரில் உதவியர்கள் மகர்கள். பின் வேலை முடிந்தவுடன் மகர்களை ராணுவத்திலிருந்து வெளியேற்றினர் பிரிட்டிஷார். ஒரு காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களான மகர்களை முற்றிலுமாக வெளியேற்றப்பட்டனர். அதன்காரணமாக அம்பேத்கர் மகர்களை மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படித்தால் இதை தெரிந்துகொள்ளலாம். அவர் என்றைக்குமே சுயசாதி அபிமானியாக இருந்த்து கிடையாது. அவர் தன்சாதிக்கு மட்டும் போராடுகிறார் என்று அவர் இருக்கும்போதே விமர்சனம் வந்தபோது அதை மறுத்து பல்வேறு தரவுகளுடன் அதை எதிர்கொண்டார். காணாமல் போனது அவர் மீதான விமர்சனம் மட்டுமே. பல்வேறு கூட்டங்களில், மாநாடுகளில் தங்களுக்கு கீழாக இருக்கிற சாதிகளை மேம்படுத்தவும், ஒன்றிணைக்கவும் குரல்கொடுத்தார்.

    // அவரை மற்ற சாதிக்காரர்கள் யாரும் அந்தக் காலத்தில் ஒரு தேசத் தலைவராக மதிக்கவில்லை. //

    ஒரு உதாரணம்
    1932ல் வட்டமேசை மாநாடு நடந்துகொண்டிருந்தபோது காந்தி நான் தான் தாழ்த்தப்பட்டவர்களின் ரட்சகன் என்று சொன்னபோது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு தந்திகள் பறந்தன.
    என்னவென்று தெரியுமா?
    காந்தி எங்கள் தலைவர் அல்ல, அம்பேத்கரே எங்கள் தலைவர். மற்ற சாதிக்காரர்கள் மதிக்காமல் இருந்தால் இந்த தந்தி பறந்திருக்குமா? தேசப்பிதாவை பின்னுக்குத் தள்ளியிருப்பார்களா?

    அம்பேத்கர் 1935ல் மதம் மாறப்போகிறேன் என்று அறைகூவல் விட்டவுடன் நாட்டில் பல்வேறு தலைவர்கள் பதறினார்களே ஏன்? தேசத்தின் முக்கியமான, வலிமையான நபர் என்ற காரணத்தினால்தானே!

    //இந்து மதவெறியர்கள் பொய் சொல்லுவார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறார் நம்ம இணையக் கலைவாணர்.//
    நாங்கள் இந்து மதவெறியர்களாக இருந்துவிட்டு போகிறோம். ஆனால் தயவுசெய்து நீங்கள் சாதிய வெறியில் இருந்து கீழிறங்கி வாருங்கள்.

    ம.வெங்கடேசன்

  145. Vidharth,

    //அதற்காக விதவை திருமணத்தை ஆதரிக்கும் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆன பின்னும் ஒரு விதவையை மறுபடியும் மணக்கவா முடியும்?// I don’t mean to say that. Atleast, he should have married to a dalith or shedule tribe to prove his point. Don’t tell he got all these casteless society idea only after marriage.

  146. ////அப்போது இன்று நாம் போலி-மதச்சார்பின்மைவாதம் என கருதுகின்ற சில வாதங்களை முன்வைத்து காந்திஜியை இந்து-முஸ்லீம் ஒற்றுமை எனும் கோட்பாட்டில் உறுதிப்படுத்தியவர் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஆவார்.//

    //

    //“In case a Hindu kills you or mein the future, can we hate the entire Hindu community on that count?” // What is wrong with this answer? I don’t see any போலி-மதச்சார்பின்மைவாதம் in this. What do you expect from true sanyasi? Do you think he should have told காந்தி to kill all Muslim or kick them out of India? Also, he has foreseen that காந்தி will be killed by Hindu. Then, why did Gandhi ask India to give so much money to Pakistan after independence?

    // இறுதியாக இங்கு நாம் விவாதிப்பது திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் கருத்துகளில் சாதியம் காணப்படுகிறதா எனில் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதுதானே ஒழிய// If this is true then why are talking about this // இன்று நாம் போலி-மதச்சார்பின்மைவாதம் என கருதுகின்ற சில வாதங்களை முன்வைத்து காந்திஜியை இந்து-முஸ்லீம் ஒற்றுமை எனும் கோட்பாட்டில் உறுதிப்படுத்தியவர் திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஆவார்//

    You are trying hard to show Maha Periyava in poor light and that is your agenda. Good Luck.

  147. என்று நமது சமயம் சார்ந்த எல்லாவற்றிலும் எல்லோரும் சமம் என்று வருகிறதோ அன்று தான் இந்து சமயம் முன்னேறும்.இதற்காக அன்று சுவாமி விவேகானந்தர் போராடினார்.எனக்கு இங்கு நடக்கும் சொல்லாடல்களை பார்க்க வியப்பாக இருக்கிறது .ஒரு விமர்சனத்தையே தாங்க முடியவில்லையே ?. இன்று திருக்கோயில்கள் இருக்கும் நிலை தான் என்ன ? அதனை கண்டிக்க யாருக்காவது துணிவு உண்டா?

  148. You are trying hard to show Maha Periyava in poor light and that is your agenda. Good Luck.

    இதுதான் அரவிந்தன் அவர்களுக்கு நெத்தியடி.

  149. ஸ்ரீ வெற்றிவேல்
    ஸ்ரீசீனு அவர்களின் பதில் ஒன்றும் ஸ்ரீ அரவிந்தன் அவர்களுக்கு எந்த நெத்தியடியையும் கொடுத்துவிடவில்லை. ஸ்ரீ அரவிந்தன் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் வர்ணாசிரமத்தை நிலைனிறுத்தும் போக்கினை க்கண்டிக்கிறார். ஸ்ரீ சுவாமிகள் வர்ண அமைப்பை முழுமையாக ஆதரித்தார். இன்னும் சொல்லப்போனால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயனுழைவை எதிர்தோரை ஆதரித்தார். இவையே போதும் அவர் இருட்டிலே வாழ்ந்தார் என்பதற்கு. அவரை புவர் லைட்டில் காட்டவே வேண்டியதில்லை. வெளிச்சம் போட்டாயிற்று. பார்த்தாலே தெரிகிறது.
    ஸ்ரீ சீனு ஸ்ரீ வெற்றிவேல் ஸ்ரீ சுவாமிகளின் பக்தர்களாயிற்றே அவர் சொன்னபடி உங்கள் தொழிலை அமைத்துக்கொள்ள முடியுமா. சாத்தியமா. சொல்லுங்கள்.

  150. ஸ்ரீ முத்துக்குமார்
    “பரம்பரையாக ஒன்றைச் செய்து வரும் பொது அதில் அவர்களுக்கு விசேஷ திறமை உண்டாகிறது”.
    உங்களால் உங்கள் தாத்தா முப்பாட்டன் செய்தவேலையையே செய்யமுடிகிறதா.
    பிராமணர்கள் பிக்ஷை வாங்கிப்பிழைக்கவேண்டும். அப்படி எத்துணை பிராமணர்கள் வாழமுடியும். இன்றைக்கு. அப்படியில்லாதபோதில் செருப்பு தைப்பவனின் பெயரன் செருப்பு தைக்கவேண்டும் என்பதும் அத்தகைய முறைமையை(சிஸ்டம்) நியாப்படுத்துவதும். அத்தகையவர்களுக்கு சால்ஜாப்பு சொல்வதும் ஏற்புடையது அன்று.

  151. ஸ்ரீ சாரங்
    “பெரிவாள் நிச்சயம் மகா பெரியவர் தான், ஒரு சிறிய கூட்டத்திற்கு. குருஜியும் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் எல்லைகள் இல்லாதவர்கள் என்று அரவிந்தன் சொல்வதாக எனக்கு படுகிறது”.
    மிகசரி ஸ்ரீ சராங்கரே மெய்யாகிலும் இது ஸ்ரீ சாரங்கத்திலிருந்து எய்யப்பட்ட பாணம் தான்.

  152. ஸ்ரீ அ நீ
    சத்ஸ்ரீ அகால் என்பது சத்யம் சுந்தரம் நிரந்தரம் என்கிறீர்களே. சத்யம் சிவம் சுந்தரம் என்பதல்லவா வழக்கு. சத்யம் என்பது நிரந்தரம் தானே. அகால் காலம் கடந்தது, காலத்தினை வென்றதும் சிவமன்றோ. பொற்கோயில் ஸ்ரீ ஹர்மந்தர் சாஹிப் எனப்படுவதும் இதனால் தானோ. ஹர என்பதும் சிவமல்லவோ.

  153. This would not do any good for Hindusiam and for this web-site. These kind of comments still going split us more 🙂 that is what it hurts me. Especially Great Grants like Arvindhan and Jadayu position they hold. In the future they should careful. May be O.K for people like me to comment, but real writers has to embrace the whole Hindu community and comment.

    Guru Chandrasekar has to follow His gurus and vedic vibrations and Their way of life. Inspite of so much He did He is hallmark for a Yogi. Just because one particular community changed because of British and Money, expecting Him to change. He always asked the Brahmin community to more and enforced there are one more responsible. The reason what you eat generation and generation will also make to that level bring others just giving hand for lower matured people that is does not come from where you born, how you eat and keep your inner health. This website find ways to unite US not split us, When you comment history you have look at that time and the environment.

  154. காஞ்சி மாமுனிவர் ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உபந்நியாசத்தில் இந்த விஷயத்தை இன்று படிக்க கிடைத்தது,

    எனவே இதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவு சுத்தராக இருக்க வேண்டும்..

    //கோபம் கொள்ளத் தகுதி ஏது ?

    நமக்கு அநேக சந்தர்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் தப்புக் காரியம் செய்தால், அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

    ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா?. ஒருவனை பாபி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாபத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனஸால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாபங்களைப் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாபமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஒர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாபத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாபம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளை

    திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது. நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாபங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான். அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத் ஸங்கத்தைவிட்டு ஸத் ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மாபிவிருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன. ஆனால் பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதே நாம் செய்ய வேண்டியது. ஈசுவராநுக்கிரகத்தில் நம்மில் யாறுக்காவது அநுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கடைத்தேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.

    நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதனி பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்து கொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

    ஒருத்தன் பாபம் செய்ய அவனுக்காக மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாபங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது, அம்பிகே. இந்தப் பாபத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் c கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா என்று பிரார்த்திக்க வேண்டும்.

    இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவற்றுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாபத்துடன் அவ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புத் கண்டுபிடித்து கோபிக்க நியையம் ஏது?.

    நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?. என்றால் இப்படித் தப்போ பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது?. எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

    மநுஷ்யரைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். போரும்பாலும் நம்முடைய கோபத்தை

    எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமாக தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.//

  155. //ஆக பிராமணர்கள் மட்டும்தான் பூஜை செய்கிறார்கள் என்பது ஹிந்து விரோத சக்திகளின் பிரச்சாரம்…..உண்மை நிலை அதுவல்ல…..//
    அனைத்து ஆலயங்களிலும் அந்த நிலை வருவது எப்போது ?

  156. \\எனவே இதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவு சுத்தராக இருக்க வேண்டும்..

    //கோபம் கொள்ளத் தகுதி ஏது ? \\

    அன்பார்ந்த ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்.

    பழைய வ்யாசத்தைப் பார்க்க விழைந்ததில் காஞ்சி மஹாஸ்வாமிகளின் அமுத மொத்த மேற்கண்ட ப்ரவசனம் வாசிக்க நேர்ந்தது. உள்வாங்கி மனதிலசைபோட வேண்டிய முக்யமான விஷயம். ஆன்மீகத்தில் உள்ளவர் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஆத்ம குணம்.

    மனதில் அசை போடுகையில் த்ருஷ்டாந்தங்கள் நினைவில் வந்தன.

    உயர்ந்த கருத்துக்களுக்கு விரிவுரை போன்று த்ருஷ்டாந்தம் கொடுக்கையில் ஹனுமன் மனதிலுறையும் ராமபிரான் போன்று கருத்து மனதில் தங்கும்.

    மிக உயர்வான ஆத்ம குணம் பற்றி வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகளை ஸ்மரித்து என் மனதில் தோன்றும் த்ருஷ்டாந்தங்களை தனியொரு வ்யாசமாக பகிர முனைகிறேன்.

  157. காஞ்சிப் பெரியவர் குறித்த கருத்துகள் வேறுபடலாம்.
    அவர் ஹிந்து மத்ததுக்குச் செய்த பணிகளைக் குறைத்து
    மதிப்பிட முடியாது. இன்று பெருவாரியானவர் கைலாஸ
    யாத்ரை மேற்கொள்கின்றனர் என்றால் அதற்கு அடி கோலியவர்
    காஞ்சிப் பெரியவர். தேவி பட்டண ’நவ பாஷாண’ தலத்தை வெளிக்கொணர்ந்து
    முன்யோசனையுடன் அதை முஸ்லிம் பிடிக்குள் போகாமல் மீட்டவர் அப்பெரியவர். அயோத்தி ஆலயம் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்ட உடன் சத்ர – சாமரங்களை ஸ்ரீ ராஜா ராமனுக்கு ஸமர்ப்பித்தவர் பெரியவர். அழிந்த நிலையில் இருந்த வேத சாகைகள் சிலவற்றை மீட்டவர்.

    அவர் அமைத்தளித்த பிடி அரிசித் திட்டம், அநாத ப்ரேத ஸம்ஸ்காரம் போன்ற திட்டங்கள் இன்னும் வலுப்பெற வேண்டும்

    தேவ்

  158. நன்றி ஸ்ரீ தேவ் ஜி

    காஞ்சிப் பெரியவர் சமயத்துக்கு ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது.

    குரு என்ற ஸ்தானத்தில் தமது சிஷ்யர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்துக்கு அவர் வழிகாட்டி………. அதை உணர்ந்த அவரது சிஷ்யர்கள் சாஸ்த்ரங்கள் சொன்ன படிக்கு அவரை த்ரிமூர்த்தி ஸ்வரூபமாகவே கண்டதில் வியப்பில்லை.

    வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபா என்ற அமைப்பின் மூலம் கிட்டத்தட்ட விலுப்தமாகிப் போயிருந்த பல சாஸ்த்ர க்ரந்தங்களை மீள்பதிப்பு செய்தது அவருடைய வழிகாட்டலாலேயே.

  159. நடமாடும் தெய்வம் மஹாபெரியவாளைப் பற்றியும், அவர் கூறிய விஷயங்கள் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமலும் தனக்கு தோன்றியதும், தான் நினைப்பதும் மட்டுமே சரி என்ற ரீதியில் செய்துள்ள பதிவு(?) இது. ஒரு பீடாதிபதிக்கு உண்டான மரியாதையை கொடுக்கத் தவறியிருக்கும் நீங்கள் உங்களை பெரிய ஆராய்ச்சியாளர் என்ற ரீதியில் நினைத்துள்ளீர்கள் போலும்.

    அரைவேக்காட்டுத்தனமான பதிவு இது.

  160. திரு கிருஷ்ண குமார் அவர்களுக்கு,

    கிருஷ்ணகுமாரே எழுதி கொண்டது, வணக்கம்…. ஒருவர் பெரியவருடன் இருந்து அவரின் குரலை தெய்வத்திந் குரலாக வெளியட்டதை நீங்கள் மஞ்சள் புத்தகம் என்பது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை…இது வெறும் சினிமா பட விமர்சனம் போலவே உள்ளது.ஏனெனில் உங்களின் புரியதலும் அவ்வளவாகவே உள்ளது… அவர் சொல்லியதை அனுஷ்டித்து பார்த்தால் உங்களுக்கு எதாவது புரிய வாய்ப்பு உள்ளது…. ( அதுவும் சந்தேகமே)…

    மேலும் விவேகானந்தர் புத்தகம் கூட விவேகானந்தர் பெயரில் வந்ததை சுட்டி காட்டினீர்கள்.. மேலும் ராமகிருஷ்ண பரமஹம்சர் சீடர் அகண்டானந்தரையும் சுட்டி காட்டினீர்கள்..மகிழ்ச்சி….

    ஒன்று தெரியுமா?.. ராமகிருஷ்ணர்ன் 16 சீடர்கள் வரலாறு புத்தகம் எந்த பெயரில் அச்சிடப்பட்டுள்ளது என்று?……

    அதன் தலைப்பு ” கடவுளுடன் வாழ்ந்தவர்கள் ”

    அவர்கள் ராமகிருஷ்ண்பரமஹம்சரை கடவுளாக கண்டார்கள்…. ஏனெனில் குருவே கடவுள் என்று சாஸ்திரம் கூறியதை தங்கள் மறுக்க முடியாது…. அந்த குருவாகிய தெய்வத்தின் குரலை அதே பெயரிட்டு பிரசுரித்தனர்.

    மேலும்,இது போன்ற வெற்று ஆராய்ச்சியல் மூளை குப்பையாகதான் மாறும்… இதை எழுத செலவழிக்கும் நேரத்தில் நீங்கள் ஒரு ராம / சிவ நாம ஜபத்தையோ…. முடியாதவர்களுக்கு உதவியோ செய்திருந்தல் மனமாவது சுத்தமாயிறுக்கும்….

    குறை சொல்வது எளிது….அனுஷ்டிப்பது சிரமம்….

    முடிந்தால் ஒரு 12 ஏகாதசி நிர்ஜல உபவாசம் இருந்து பாருங்கள்…ஏதாவ்து உபயோகமாக நடக்கும்

  161. ஸ்ரீ க்ருஷ்ணா அவர்களுக்கு

    \\ கிருஷ்ணகுமாரே எழுதி கொண்டது, வணக்கம்…. ஒருவர் பெரியவருடன் இருந்து அவரின் குரலை தெய்வத்திந் குரலாக வெளியட்டதை நீங்கள் மஞ்சள் புத்தகம் என்பது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை…\\

    க்ஷமிக்கவும். தெய்வத்தின் குரல் எனும் தொகுப்பினை மாற்றுக்கருத்தாளர்கள் மஞ்சள் புத்தகம் என்று தொனிக்கும் படி எழுதப்பட்ட கருத்துக்களை மறுதலிக்கும் வண்ணமாக இந்த வ்யாசம் எழுதப்பட்டது. ஏன் அத்தொகுப்பை மஞ்சள் புத்தகம் என்று சொல்லுவது தவறு என்பதற்கு தர்க்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    தங்கள் அபிப்ராயம் வ்யாசத்தை வாசிக்காது பகிர்ந்ததாகத் தோன்றுகிறது. ஒருமுறை வ்யாசத்தை முழுமையாக வாசிக்க விழையவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *