காலந்தோறும் நரசிங்கம்

திருமாலின் திரு அவதாரங்களில் தனிச் சிறப்புடன் போற்றி வணங்கப் பெறும் அவதாரம் நரசிங்க அவதாரம் ஆகும். தொன்மைக் காலம் முதலே பாரத நாட்டின் பல பகுதிகளில் நரசிங்க வழிபாடு மேலோங்கியிருந்ததற்கான பற்பல வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்து தெய்வத் திருவுருவங்களின் பான்மையும் பெருமையும் தொன்மங்களிலும், சமய நூல்களிலும், இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும், சிற்பம் சித்திரம் ஓவியம் நடனம் முதலான நுண்கலைகளிலும் பல்வேறு வகையாக வெளிப்பட்டு நிற்கின்றன. நரசிம்ம அவதாரமும் அப்படியே. இந்த அனைத்துத் துறைகளின் இணைப்பையும் ஒத்திசைவையும் கொண்ட பார்வையே தெய்வத் திருவுருங்கள் குறித்த முழுமையான சித்திரத்தை நமக்கு அளிக்கும்.

இக்கட்டுரையில் நரசிங்க சிற்பங்கள் காலந்தோறும் அடைந்து வந்துள்ள மாற்றங்களை ஒரு கருடப் பார்வையாகப் பார்க்கலாம்.

படம் 1 – மதுராவில் கிடைத்த புராதன நரசிங்கர்

சிந்து-சரஸ்வதி நாகரிகத்தீன் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒற்றைக் கொம்பு மிருகமும், முகத்தில் கொம்புகள் கொண்டு விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் பசுபதி வடிவமும், யானை முக வடிவங்களும் எல்லாம் உண்டு. மனித-மிருக-தெய்வீக இணைப்புச் சின்னங்கள் நமது பண்பாட்டில் மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்துள்ளன என்பதற்கு இவை சான்றுகளாகும். சிந்துவெளி அகழ்வுகளில் இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவற்றில் வெளிப்படையான சிங்கமுக இலச்சினையோ அல்லது நரசிங்க வடிவமோ இல்லை. ஆயினும் பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இத்தெய்வ வடிவம் மிகத் தொன்மையான ஒன்று என்பதில் ஐயமில்லை.

பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறைஎயிற்று அனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்
திருவல்லிக்கேணி கண்டேனே

என்றும்

அங்கண்ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் அவுணன்
பொங்க, ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன்..

என்றெல்லாமும் ஆழ்வார்கள் பாடிப் பரவும் நரசிம்மாவதாரக் கதை, ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும் பல்வேறு புராணங்களிலும் மீண்டும் மீண்டும் எடுத்தியம்பப் பெற்றுள்ளது. பதினெட்டு உப புராணங்களில் நரசிம்ம புராணம் என்றே தனிப்பெரும் புராணமும் உண்டு.

மதுரா பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள சிவப்புக் கற்களாலான இந்த சிற்பமே (படம்-1) நமக்குக் கிடைத்துள்ள ஆகத் தொன்மையான நரசிங்க வடிவம் என்று கூறலாம். இந்தச் சிற்பம் அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா அருங்காட்சியகத்தில் உள்ளது. இரு கரங்களுடன் ஒரு சிறிய மனித உருவத்தை மடியில் கிடத்தி கைகளால் கிழிப்பது போன்ற தோற்றம் கொண்ட இந்த நரசிங்க வடிவத்தில் ஆடை மடிப்புகள் காந்தாரக் கலையின் அம்சங்களுடன் உள்ளது கவனிக்கத் தக்கது. பிற்கால நரசிம்ம சிற்பங்களில் உள்ளது போல பல கரங்களும், சங்கு சக்கரம் முதலான ஆயுதங்களும், மணிமகுடமும் எதுவுமின்றி மிக எளிமையான,இயல்பான தோற்றத்தில் உள்ளது. இந்த சிற்பத்தின் காலம் பொ.பி. 2 அல்லது 3ம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

படம் 2 – எல்லோரா குகை சிற்பம்

இதற்கடுத்து குப்தர் காலத்திய சிற்பங்களில் இரணியனுடன் போரிடும் நரசிம்ம மூர்த்தங்கள் வட இந்தியாவில் விதிஷா போன்ற இடங்களில் நமக்குக் கிடைக்கின்றன. எல்லோரா குகைக் கோவிலில் குகை எண் 15ல் உள்ள நரசிம்மர் இரணியன் போர்க்காட்சி சிற்பம் (படம் – 2) பாதி சிதைந்த நிலையில் இன்று காணக் கிடைக்கிறது. கையில் குறுவாளுடன் இரணியன், அவன் மகுடத்தைத் தட்டியும் தோளைப் பற்றியும் தாக்கும் நரசிங்கர், பக்கவாட்டுத் தோற்றத்தில் நரசிங்க முகம் என்று அபாரமான கலை நேர்த்தியுடன் இந்த சிற்பம் வடிக்கப் பட்டிருக்கிறது. முற்றிப் போய் அடர்த்தியான மயிர்களுடன் இல்லாமல் ஒரு சிங்கக் குட்டி போல முகம் இருக்கிறது. நரசிம்மர் கரங்களில் சங்கு சக்கரம் இல்லை, வாள் மட்டுமே உள்ளது.

தென்னகத்தில் பல்லவர் காலத்திய (பொ.பி 7-9ம் நூற்றாண்டுகள்) நரசிம்ம சிற்பங்கள் பல காணக் கிடைக்கின்றன. சிங்கம் பல்லவர்களின் ராஜமுத்திரை என்பதும் நரசிம்ம வர்மன் என்று புகழ்பெற்ற பல்லவ மன்னன் இருந்ததும் நரசிம்ம வழிபாடு பல்லவர் ஆட்சியில் பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. பல்லவர்கள் ஆந்திரத்தின் கிருஷ்ணா நதிப் பகுதியிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வந்தவர்கள் ஆதலால் அங்கு பிரசித்தி பெற்றிருந்த நரசிம்ம வழிபாட்டை அவர்கள் கைக் கொண்டிருந்து தமிழகத்திலும் தொடர்ந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே திருமால் வழிபாடு செழித்திருந்தததை சங்க இலக்கியங்களின் வழி அறிகிறோம். பரிபாடல் இரணியனின் மார்பு கீண்ட திறத்தைப் போற்றிப் பாடுவதனால், நரசிம்ம அவதார தொன்மம் தமிழகத்தில் பண்டைக் காலம் முதலே நன்கறியப் பட்டிருந்தது என்பதும் புலனாகும்.

படம் 3 – காஞ்சி கைலாசநாதர் கோயில்

காஞ்சி கைலாச நாதர் கோயில் சுற்றில் ஒரு அற்புதமான நரசிம்மர் இரணியன் போர்ச்சிற்பம் உள்ளது (படம் -3). இரணியனும் நரசிம்மரும் துவந்த யுத்தம் செய்கிறார்கள். யுத்தத்தில் மோதும் அவர்களது கால்கள் மற்றும் கைகளின் இயக்கமும், யுத்த வேகத்தில் நரசிம்மரின் மாலைகளும், மார்பணிகளும் அசைவதும் அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. சிங்கங்களும் யாளிகளும் தாங்கும் தூண்கள் கொண்ட கோஷ்டத்தில் இந்தச் சிற்பம் அமைந்திருப்பது வீர ரசம் பொங்கும் இந்தக் காட்சிக்கு இன்னும் மெருகூட்டுகிறது. சிவாலயங்களில் சுற்றுகளிலும் தூண்களிலும் விஷ்ணு மூர்த்தங்கள், குறிப்பாக நரசிம்மர் உருவங்கள் தொடக்கத்திலேயே இடம்பெறத் தொடங்கியிருந்தன என்பதற்கு இச்சிற்பம் சான்று பகர்கிறது. இதன் தொடர்ச்சியாகவே பின்னாளில் விஜ்யநகர, நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும் சைவ வைணவ ஒற்றுமையை வளர்க்கும் முகமாக, இருமதக் கோயில்களிலும் சிவ-விஷ்ணு சிற்பங்களை வடிப்பதை ஒரு மரபாகவே கடைப் பிடிக்கத் தொடங்கினர்.

போர்ச் சிற்பங்களிலேயே இடம் பெற்று வந்த நரசிம்மர் இந்தக் காலகட்டத்தில் சௌமியமான தெய்வமாகவும் எழுந்தருளத் தொடங்குகிறார். தென்னாற்காடு அருகில் முன்னூரில் உள்ள “இருந்த கோல நரசிம்மர்”, செங்கல்பட்டு அருகில் பணிமங்கலத்தில் உள்ள நரசிம்மர் ஆகிய திருவுருவங்கள் சுகாசனத்தில் அமர்ந்து வலது கையில் அபயஹஸ்தம் காட்டி இடது கையைத் தொடைமீது வைத்து அருள்பாலிக்கும் நிலையில் உள்ளன.

படம் 4 – இருந்த கோல நரசிம்மர்

பாண்டி நாட்டில் ஆனைமலையிலும், திருப்பரங்குன்றத்திலும் அமர்ந்து அருள்பாலிக்கும் நரசிம்ம வடிவங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவையே. புதுக்கோட்டை மாவட்டத்தில் மலையடிப்பட்டியில் உள்ள குகைக் கோயிலின் (8-ம் நூற்றாண்டு) நரசிம்மர் திருவுருவம் நம் நெஞ்சை அள்ளுவது. சாஸ்தா, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் வலது காலை மடித்து அதன் மீது வலது கரத்தை வைத்து அமர்ந்திருப்பது போன்ற லலிதாசனக் கோலத்தில் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக நரசிம்மர் இங்கு காட்சியளிக்கிறார் (படம்-4).

கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் 10 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களில் நரசிம்ம வழிபாடு மகோன்னத நிலையில் இருந்தது. ஹொய்சள, காகதீய பாணி கோயில்களிலும், பின்னர் விஜயநகர பாணி கோயில்களிலும் ஏராளமான நரசிம்ம சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. தென்னகத்தில் நரசிம்மருக்கென்று அமைந்த பழமையான தனிக் கோயில்களும் இவ்விரு மாநிலங்களிலேயே மிக அதிகமாக உள்ளன.

கர்நாடகத்திலுள்ள பேலூர்,ஹளேபீடு கோயில் சுற்றுகளில் உள்ள உக்ர நரசிம்ம சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவற்றில் நரசிம்ம மூர்த்தத்தின் சிற்ப இலக்கணம் முழுமையாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காணலாம். இதன் உச்சமாக அமைந்துள்ள ஒரு சிற்பத்தில் (படம்-5a) இரணியனை மடியில் இருத்தி குடலைக் கிழித்து மாலையாக அணியும் தோற்றத்தில் நரசிம்மரைக் காண்கிறோம்.

படம் 5a – பேலூர் / ஹளேபீடு நரசிம்மர்

கண்கள் கோபத்தில் கனன்று வெளித்தள்ளி, சிங்க வாய் முழுதும் திறந்த நிலையில் உள்ளது. பன்னிரண்டு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, உலக்கை, மணி, வாள் போன்ற ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். அவரது கோபம் கண்டு கூப்பிய கரங்களுடன் கருடன் கீழே நிற்கிறான். திருமகள் அச்சத்துடன் பார்க்கிறாள். கீழே பிரகலாதன் நிற்பது சிறிய அளவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

படம் 5b – பேலூர்/ஹளேபீடு உக்ர நரசிம்மர்

இதே கோயிலில் உள்ள இன்னொரு சிற்பத்தில் நரசிம்மர் இரணியனைக் கிழிக்கத் தொடங்குவதற்கு முன் பக்கத்தில் நிற்கும் அரக்கனின் முகத்தைக் பிய்த்தெடுக்க, அவனது கபாலம் வெளித்தெரிவது போன்ற காட்சி உள்ளது (படம்-5b) இன்னும் சில சிற்பங்களில் அரக்கன் உடலில் கூரான நகங்கள் பதிந்து உள்செல்லும் தருணம் நுட்பமாகக் காட்டப் பெற்றுள்ளது. இக்கோயில்களில் ஒரு சில லட்சுமி நரசிம்மர் சிற்பங்களும் உள்ளன என்றாலும் நரசிம்மரின் வீரத்தையும் இரணியனின் வதையையும் கொண்டாடுவதே மையக் கருத்தாக்கமாக உள்ளது. ஹொய்சள ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் இஸ்லாமிய படையெடுப்பினால் அந்த ராஜவமிசம் அழிந்தது. மக்களிடையே அன்னியர் தாக்குதலை எதிர்கொள்ளும் துணிவும், வீர உணர்வும் பெருக வேண்டும் என்பதைக் கருத்திக் கொண்டு இச்சிற்பங்கள் இவ்வாறு வடிக்கப் பட்டிருக்கலாம்.

பின்னர் பாமினி சுல்தான்களையும் தென்னகத்தில் அங்கங்கு ஆட்சி செலுத்தி வந்த இஸ்லாமிய குறுநில அரசுகளையும் விஜயநகர மன்னர்கள் வெற்றி கொண்டு தங்கள் பேரரசை நிறுவினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் நரசிம்மர் உக்கிரம் தணிந்து யோக நிலையில் வீற்றிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கக் கூடும். ஹம்பியில் உள்ள பிரம்மாண்டமான யோக நரசிம்மர் (படம் – 6) இக்காலகட்டத்திய கலைப்பாணியின் உச்சம் எனலாம். யோக பட்டம் முழந்தாளை அலங்கரிக்க, கால்களைக் குத்திட்டு ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்து, யோக நிலையில் இருக்கிறார் நரசிம்மர்.

படம் 6 – ஹம்பி யோக நரசிம்மர்

நான்கு கரங்களுடன், இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி நிற்க, மற்ற இரு கரங்கள் முட்டிமீது நிலைத்திருக்கும் தோற்றம். சிங்கக் கண்கள் துருத்தி நிற்கின்றன, ஆனால் அவற்றில் கோபம் இல்லை. முகம் வீரமும், சாந்தமும், கம்பீரமும் கலந்த அழகுடன் செதுக்கப் பட்டுள்ளது. நரசிம்மருக்கு மேல் ஏழுதலை நாகம் குடைபிடித்து நிற்கிறது. திறந்த வெளியில் வியாபித்திருக்கும் இந்த 20 அடி சிற்பம் ஹம்பியின் மாட்சிக்கும், வீழ்ச்சிக்கும் வரலாற்று சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

தலைக்கோட்டைப் போரில் ஹம்பியின் கலைச் சின்னங்கள் அனைத்தும் சிதைக்கப் பட்டன. அதற்கு இந்தச் சிற்பமும் தப்பவில்லை. அதனால், இப்போது கரங்கள் உடைந்த நிலையிலேயே காண முடிகிறது. நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் திருவுருவம் பெயர்க்கப் பட்டு அது முழுதாக சிதைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர் கருதுகிறார்கள். இக்கருத்து ஆதாரபூர்வமானதே. ஏனெனில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த யோக லக்ஷ்மி நரசிம்மர் சிற்பம் ஒன்று (12ம் நூற்றாண்டு) அமெரிக்காவின் Toledo அருங்காட்சியகத்தில் உள்ளது. ஹம்பி நரசிம்மரின் சிதைவுபடாத முழு உருவம் எப்படி இருந்திருக்கும் என்பதை இந்தச் சிற்பம் (படம் -7) நமக்கு விளக்குகிறது.

படம் 7 – ஒரிஸ்ஸா பாணி யோக நரசிம்மர்

ஆந்திராவில் மூன்று மிக முக்கியமான நரசிம்ம தலங்கள் உள்ளன – சிம்ஹாசலம், அகோபிலம், மங்களகிரி. இந்த மூன்று தலங்களின் ஐதிகங்களும் ஸ்தல புராண வரலாறுகளும் தனித்துவம் கொண்டவை. சிம்மாசலத்தில் வராகமும், நரசிம்மமும் கலந்து வராக நரசிம்ம உருவில் வழிபடுகிறார்கள். மங்களகிரியில் சிங்கவாய் முழுதாகத் திறந்த நிலையில் அதி உக்கிர ரூபத்தில் நரசிம்மர் வீற்றிருக்கிறார். இயற்கை எழில் திகழும் அகோபிலம் வனப் பகுதியில் அருள்பாலிக்கும் நரசிம்மரின் ஒன்பது வடிவங்கள் நவ நரசிம்மர் என்று அழைக்கப் படுகின்றன. வைணவ ஆகமங்களில் குறிப்பிடப் படும் எல்லா வகையான நரசிம்ம மூர்த்தங்களும் அகோபிலத்தில் உள்ளன என்று கருதலாம். ஸ்தாணு நரசிம்மர், கேவல நரசிம்மர் என்று ஒரு வகைப் பாடு உண்டு. உக்ர, குரோத, வீர, விலம்ப, கோப, யோக, அகோர, சுதர்சன, லட்சுமி நரசிம்மர் என்று இன்னொரு வகைப் பாடு. அகோபிலத்தில் மாலோல நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், பாவன நரசிம்மர், குஹா நரசிம்மர் (குகையிலிருந்து வெளிப்படுபவர்) என்ற பெயர்களிலும் மூர்த்தங்கள் உண்டு. அகோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். கரிய கட்டுறுதி கொண்ட உடலமைப்பும் கூர்மையான நாசியும் முகவெட்டும் கொண்டவர்கள் இவர்கள். கானகவாசிகளின் இந்தக் கட்டழகில் கடவுளே மயங்கி விட்டார் போலும்! செஞ்சுக்களின் குடியில் பிறந்த ஒரு பெண் மீது காதல் கொண்டு நரசிம்மரே இங்கு வந்து அவளை மணம் புரிந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அவள் செஞ்சு லட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். செஞ்சு லட்சுமியை ஆதுரத்துடன் பார்க்கும் சிருங்கார நரசிம்மர் சிற்பம் (படம் – 8) அகோபிலத்தின் தனிச்சிறப்பு. திருமங்கையழ்வார் ‘சிங்கவேள் குன்றம்’ என்று தீந்தமிழில் இத்தலத்தைச் சிறப்பித்த்துப் பாடியிருக்கிறார்.

படம் 8 – சிருங்கார நரசிம்மர்

தமிழகத்தில் வைணவர்கள் அழகிய சிங்கர் என்ற செல்லப் பெயரால் நரசிம்மரை அழைக்கிறார்கள். திருவரங்க கோயிலின் உள்ளே கம்பர் மண்டபத்திற்கு எதிரில் மேட்டழகிய சிங்கர் சன்னிதி உள்ளது. கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய போது அதில் இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மாவதார கட்டத்தின் பாடல்கள் வரும் தருணம் இவர் சன்னிதிலியிருந்து சிம்ம கர்ஜனை புரிந்து அதை அங்கீகரித்ததாக வழக்கு உண்டு. நாமக்கல் மலையில் நரசிம்மருக்கென்று தனிக் கோயில் உள்ளது. தமிழகக் கோயில்களின் மண்டபங்களிலும் தூண்களிலும் ஏராளமான நரசிம்மர் திருவுருவங்களைக் காணலாம் (படம் 9 – வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தூணில் உள்ள லட்சுமி நரசிம்மர்).

படம் 9 – வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

கல்லில் மட்டுமல்லாது, உலோகத்திலும் நரசிம்ம திருமேனிகள் உருவாக்கப் பட்டன. அழகிய சோழர் கால யோக நரசிம்மர் சிலை ஒன்று அமெரிக்காவின் புரூக்ளின் மியூசியத்தில் உள்ளது (படம் – 10).

படம் 10 – அமெரிக்காவின் புரூக்ளின் மியூசியத்தில்…

யோக நரசிம்மர் வழக்கமாக கால்களை விறைப்பாக மடக்கி நேராக நிமிர்ந்திருப்பார். ஆனால் இந்த சிலையில் பக்கவாட்டில் சற்றே சாய்ந்த நிலையில், கால்கள் மிகத் தாழ்ந்து ஒரு ஆனந்தமான, சௌகரியமான யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். கல்லில் இருந்து உருகி உலோகத்துக்குள் வரும்பொழுது இயல்பாகவே ஒரு வித குழைவு ஏற்பட்டு விடுகிறது போலும்!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு பிரதேசத்திலும் விதவிதமான நரசிம்மங்கள் நமக்குக் கிடைக்கும். பாகிஸ்தானில் உள்ள மூல்தான் (மூலஸ்தானம்) நகரம் தான் ஹிரண்யகசிபுவின் தலைநகராக இருந்தது என்றும் அங்கு தாண் தூணைப் பிளந்து ந்ரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது என்றும் ஒரு பழமையான ஐதிகம் உள்ளது. இந்த நகரில் இருந்த ஆலயங்களின் சுவடுகள் பல நூற்றாண்டுகள் முன்பே இஸ்லாமியப் படையெடுப்பில் அழிந்து விட்டன. குஜராத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள சிவ விஷ்ணு ஆலயங்களிலும், ஏன் சமண ஆலயங்களிலும் கூட வெண்பளிங்குக் கல்லில் மிளிரும் நரசிம்மர் சிற்பங்களைப் பரவலாகக் காணலாம். வங்கத்திலும் ஒரிசாவிலும் பழமையான நரசிம்மர் சிற்பங்கள் பல உண்டு. பூரி ஜகன்னாதர் கோயில் வளாகத்தில் உள்ள சக்ர நரசிம்மர் ஆலயம் கலையழகு கொண்டது. சாளக்கிராமங்களின் பிறப்பிடமான நேபாளத்தில் பல இடங்களில் பழமையான நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. தாந்திரீக அம்சங்கள் கொண்ட நரசிம்மர் சிற்பங்களும் அவற்றில் காணக் கிடைக்கின்றன.

வரலாற்றின் வழியாக நரசிம்மர் உருவங்கள் கொண்ட மாற்றங்களையும், பரிமாணங்களையும் ஒரு சிறு தீற்றலாக இக்கட்டுரையில் பார்த்தோம். பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது.

ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது என்பதையும் இதன் வழியாக நாம் புரிந்து கொள்ள முடியும். இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.

ஹம்பி நரசிங்கத்தின் முகத்தில் தவழும் விரிநகை அதைத் தான் காலந்தோறும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

[இக்கட்டுரை ரீச் பவுண்டேஷன் அமைப்பு நடத்தும் “யாளி” மாத இதழில் (மே, ஜூன் 2012) வெளிவந்தது. யாளி இதழ் ஆசிரியர் குழுவை editor.reach@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.]

171 Replies to “காலந்தோறும் நரசிங்கம்”

  1. I enjoyed reading this article. Mukkur Sri Lakshmi Narashimarcharya made Narasimha worship even more popular. Thanks Jataayu Sir!!

  2. தஞ்சாவூர் வெண்ணாற்றின் கரையில் மூன்று பெருமாள் கோவில்கள் உள்ளன.
    இம்மூன்றும் சேர்ந்து ஒரு திவ்யதேசம். நீலமேகப்பெருமாக்,மணிகுன்றப்பெருமாள்,நரசிங்கப்பெருமாள் ஆகிய மூன்றும்
    ஆகும். இம்மூன்றில் நரசிங்கப்பெருமாள் உருவத்திலும்,அருளிலும் மிகப் பெரியவர்.

    ஜடாயுவின் கட்டுரை நல்ல தகவல்களுடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்கள்.!

  3. அருமையான தொகுப்பு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உருவத்தைக் கூறும் முதல் நாமம் நரசிங்கனையே சார்ந்தது (“நாரசிம்ம வபு:”). அதற்கு முன்பு உள்ள நாமங்கள் எல்லாம் ஜகத் காரணத்துவம் முதலான பரம்பொருளின் இலக்கணங்களையே கூறும்.

  4. துரதிர்ஷ்டவசமாக இந்த கட்டுரை ஆசிரியர் என் நண்பராக இருந்து தொலைத்துவிட்டார் எனவே நான் சொல்வது நட்பு சார்ந்த பாராட்டாக கருதப்பட்டுவிடலாம். ஆனால் இந்த கட்டுரை ஆனந்த குமாரசாமி ஸ்டெல்லாக்ராம்ரிஸ்ச், சிவ ராமமூர்த்தி ஆகிய எந்த உலகப் புகழ் பெற்ற பாரதிய மரபு சார்ந்த இந்தியவியலாளர்களின் ஆராய்ச்சி கட்டுரையுடனும் ஒப்பிட்டு படித்து மகிழ தக்கது. உண்மை இது நிச்சயம் புகழ்ச்சியில்லை. இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு. இதை உலகறிய செய்ய வேண்டும்.

  5. ஏகாதசியன்று நரசிம்மப் பெருமானைப்பற்றியதொரு வ்யாசம் பதிவானது மிக மகிழ்ச்சி.

    சிற்ப மற்றும் சரித்ர ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வ்யாசம் தான். ஆனாலும் எனக்கு இந்த வ்யாசத்தின் வாயிலாக நரசிம்மப்பெருமானை அறியும் வ்யாஜத்தில் பாரதம் முழுதும் ப்ரதக்ஷிணம் செய்ததுவும் பெரும் பாக்யம் தான்(அகண்ட பாரதம் – மூலஸ்தானம் வரை அழைத்துச் சென்றுள்ளீர்களே). ஆராய்ச்சியன்றி என் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு க்ஷமிக்கவும்.

    நாங்கள் தொழும் இன்னொரு நரசிம்மரை நினைவு கொள்கிறேன். நாமக்கல்லில் அமைந்திருக்கும் குடைவரைக் கோவிலில் அருள்புரியும் அழகு பொலியும் நரசிம்மப்பெருமானும் நாமகிரித்தாயாரும் அவர்களை வணங்கு முகமாக எதிரே கோவில் கொண்டுள்ள ஆஞ்சநேயரும் அதேபோன்று மலையின் மற்றொரு புறத்தில் பத்மாலயக் குளத்தின் அருகே குடைவரைக் கோவிலில் அருள்பொலியும் ரங்கநாதப் பெருமானும் நினைவில் நீங்காது உள்ளனர்.

  6. நாமக்கல் குகை குடைவரை சிற்பமாக உள்ள நரசிம்மர் பேலூர் ஹள பீடு சிற்பங்களுக்கு இணையானது . சற்று மேலான நேர்த்தியும் கொண்டது. இன்றும் ஆராதனையில் உள்ளது. இது பாஸ் ரெலீப் முறையில் செதுக்கப் பட்டது.

    குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ எம் ஆர் அவர்கள் நரசிம்ம உபாசனையை தமிழகத்தில் தீவிரப் படுத்தியுள்ளார். அவரால் சில லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள் பொலிவு கண்டுள்ளன. பூவரசன் குப்பம் இதில் ஒன்று.

    வேங்கடசுப்ரமணியன்

  7. சமீபத்தில் ஜெயமோகனும் தனது அருகர் பாதைப் பயணங்களில், ராஜஸ்தானில் சூரியன் கோவிலில் ஒரு நரசிம்மர் சிற்பத்தை வரிநித்திருந்தார். ஒன்று தாந்திரீகமாக மோகினியைப் புணர்ந்த நிலை சிற்பம். இன்னொன்று , நிஜ மல்யுத்தம் போன்று இரணியனை பிடித்து முறுக்கி வீழ்த்தும் சிற்பம்.

  8. சமீபத்தில்தான் அஹோபிலம் சென்று வந்திருந்தேன். நரசிம்ஹர் மீண்டும் மீண்டும் அவரது அருள் மழை பொழிவதாக எனக்கு ஒரு உணர்வு.
    ஷோளிங்குர் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பது எனக்கு குறைதான்.

    இதில் மங்களகிரி மிக அருமையான கோவில். பூரியில் நரசிம்ஹர் கோவில் தரிசனம் கிடைத்ததும் கூட மிக அருமையான மறக்க முடியாத நிகழ்வு.

  9. ஆந்திரா தாங்க நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிற ஊர்.வெறும் மூணு வரியில முடித்து விட்டீர்கள்
    சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள்.வருடத்தில் ஒரு நாள் தான் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்

    மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள்.மூலவரின் பெயரும் பானக லக்ஷ்மி நரசிம்ம சுவாமி

    யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்ஹர் கோவில்கள் பல உண்டு
    ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு
    வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்

    யாதகிரி நரசிம்மசுவாமி நல்கோண்ட மாவட்டத்தில் இருக்கும் யாதகிரிகுட்டா என்னும் ஊரில் உள்ள கோவிலில் மூலவர் வைத்திய நரசிம்மா என்றும்,பஞ்ச நரசிம்மர் என்றும் அழைக்கபடுகிறார்
    பல பெருமாள் கோவில்கள் நரசிம்மா பெருமாள் தொடர்புடையவை தான்
    தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் புண்ணியத்தால் கோவில்கள் தப்பித்து பெரிய மாற்றங்கள் என்ற அழிவு இல்லாமல் இருக்கின்றன
    ஆந்திரத்தில் அனைத்தும் சுண்ணாம்பு பூசப்பட்டு டைல்கள் பாதிக்கப்பட்டு பிர்லா மந்திர் ஆகி வருகின்றன

  10. நல்ல கட்டுரை.இந்த நரசிம்ம புராணம் இப்போது எங்காவது கிடைக்கிறதா?என்று அறிய விரும்புகிறேன்

  11. //துரதிர்ஷ்டவசமாக இந்த கட்டுரை ஆசிரியர் என் நண்பராக இருந்து தொலைத்துவிட்டார் எனவே நான் சொல்வது நட்பு சார்ந்த பாராட்டாக கருதப்பட்டுவிடலாம். ஆனால் இந்த கட்டுரை ஆனந்த குமாரசாமி ஸ்டெல்லாக்ராம்ரிஸ்ச், சிவ ராமமூர்த்தி ஆகிய எந்த உலகப் புகழ் பெற்ற பாரதிய மரபு சார்ந்த இந்தியவியலாளர்களின் ஆராய்ச்சி கட்டுரையுடனும் ஒப்பிட்டு படித்து மகிழ தக்கது. உண்மை இது நிச்சயம் புகழ்ச்சியில்லை. இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு. இதை உலகறிய செய்ய வேண்டும்.//

    இங்கே மரியாதைக்குரிய அரவிந்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுப் போற்றுகின்றோம்.. நரசிம்ஹப் பெருமாள் குறித்த இந்தக் கட்டுரை அற்புதமாக இருக்கிறது..

    கூடா இரணியனைக் கூறுகிரால் மார்விடந்த ஓடா அடலரியைப் பற்றிய இக்கட்டுரை சிறப்பாய் அமைந்ததில் ஒன்றும் வியப்பதற்கில்லை.. ஜடாயு அவர்களின் பன்முகத் திறமைகளில் இதுவும் ஒன்றென்றே கருத வேண்டியிருக்கிறது..

    வைணவர்களின் முக்கிய வழிபடு கடவுளாகிய சிம்மப்பெருமாள் பற்றிய ஆய்வு போல, சைவர்களின் முக்கிய வழிபடு தெய்வமான விநாயகர் பற்றியும் “காலம் தோறும் விநாயகர் வழிபாடு” என்று மரியாதைக்குரிய ஜடாயு அவர்களே ஒரு கட்டுரை எழுதினால் இரண்டு சேர்ந்து ‘இரட்டை மணி மாலை’ போல ‘தேனும் பாலும் கலந்தது’ போல தித்திக்கும். நன்றிகள்..

  12. திருமாலின் திருவடிவங்களில் ஒன்றாக விளங்கும் நரசிம்ம வடிவத்தின் வளர்ச்சியை ஸ்ரீ ஜடாயு வர்ணித்த விதம் மிக அலாதியாக உள்ளது.
    ஸ்ரீ ஜடாயு
    “பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது”. என்பதும்
    “இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.” என்பதும் ஸ்ரீ ஜடாயு அவர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கோட்பாடக அமந்துள்ளது.
    பாராட்டுக்கள் வாழ்துக்கள் பணி தொடரட்டும்

  13. அன்பார்ந்த ஸ்ரீமான் பூவண்ணன்,

    பல தளங்களில் தாங்கள் பதியும் கருத்துக்களை வாசித்து தாங்கள் ஔபசாரிகமான இடதுசாரி என்றும் ஹிந்து மத எதிர்ப்பு உணர்வு உடையவர் ஜாதிக் காழ்ப்புணர்வு உள்ளவர் என்றும் என் மனதில் உள்வாங்கியிருந்தேன். தாங்கள் சமீபத்தில் இத்தளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் (சுவையான மற்றும் தேவையான தகவல்கள் உள்ள மேற்கண்ட கருத்து உள்பட) அது போன்றதொரு எனது மதிப்பீடு மாற்றத்திற்குறியது என உணர்த்துகிறது.

    Although it is difficult, I understand that one should avoid stereotyping. would like to read your some times acceptable and sometimes contrary views.

    \\\தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் புண்ணியத்தால் கோவில்கள் தப்பித்து பெரிய மாற்றங்கள் என்ற அழிவு இல்லாமல் இருக்கின்றன\\\

    இக்கருத்துடன் மாறுபடுகிறேன். புனருத்தாரணம் என்ற பேரில் மண்வீச்சடித்து சரித்ரம் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுகளைத் தகர்த்தழிப்பது டைல் போடுகிறேன் பேர்வழி என்று முழு கல்மண்டபத்தையே பெயர்த்தெடுத்து கண்மூடித்தனமாக தமிழகத்து கலைச்செல்வங்களை அழித்தொழிப்பது இவையெல்லாம் த்ராவிட இயக்கத்தின் பாப காரியங்கள். இதே தளத்தில் அன்பர் கோமதி செட்டி இது சம்பந்தமாக ஓரிரு வ்யாசங்கள் சமர்ப்பித்துள்ளார். பார்க்கவும்.

    அதே சமயம் ப்ருந்தாவனத்தில் ப்ரிஜ் ஃபவுண்டேஷன் இயக்கத்தினர் ஆங்குள்ள குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள், வனங்கள் மற்றும் வ்ரஜ கவிகள் போற்றும் கண்ணனின் லீலை நடந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை வணிக வளாகங்கள் IIT மாணவர்கள் மற்றும் பொறியியல் வித்பன்னர்கள் உதவி கொண்டு புனருத்தாரணம் செய்வதையும் பார்க்கவும். முழு க்ராமத்தையே பாரம்பரியம் போற்றும் ஒரு இயக்கமாக மாற்றி வருகிறார்கள். ப்ரபல பத்திரிக்கையாளர் ஸ்ரீமான்.வினீத் நாராயண் அவர்கள் மற்றும் அவருக்கு உபகாரம் செய்யும் பல அன்பர்களால் இப்பெரும் காரியம் சாத்யமாகிறது.

  14. கருத்துக் கூறும், பாராட்டும் அன்பர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கட்டுரையின் நோக்கம் ஒரு கோட்டுச் சித்திரத்தை அளிப்பது என்பதே, அதனால் நாமக்கல் மற்றும் இன்னும் சில நரசிம்ம தலங்கள் பற்றி விரிவாக எழுதவில்லை. அந்தக் குறையை மறூமொழிகள் மூலம் இட்டு நிரப்பும் வாசகர்களுக்கு மிக்க நன்றி.

  15. நரசிம்ஹப் பெருமாள் குறித்த இந்தக் கட்டுரை அற்புதமாக இருக்கிறது.. ஜடாயு மற்றும் Reach கு நன்றி நன்றி
    தெள்ளிய சிங்கமே போற்றி
    கிருஷ்ணா

  16. நல்ல விவரங்கள் பல தந்துள்ள அருமையான கட்டுரை. திரு. ஜடாயுக்கு நன்றி. மற்ற வாசகர்கள் தெரிவித்துள்ளது போல கட்டுரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுமானாலும், அல்லது தொடரப்படுமானாலும் மற்ற நரசிம்மர்களை சேர்க்கப்படும் நேரத்தில், சென்னை வேளச்சேரி எனப்படும் வேதஸ்ரேணியில் உள்ள யோக நரசிம்ஹரைப்பற்றி மறவாது எழுத வேண்டுகிறேன். அதுவும் பல்லவ காலத்தில்தான் நிறுவப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

  17. அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள் ஜடாயு சார். தாத்தாவின் செல்லரித்து போன ஓலை சுவடிகளின் (கூத்து) தப்பி பிழைத்தது “இரணிய வதம்” மட்டும் தான். உத்திரமேரூர் சுந்தர வரதராஜர் கோவில் தூணிலும், முதல் மாடி பிரகாரத்திலும் கூட நரசிம்மரை காணலாம்.
    https://www.dharsanam.com/2008/01/uthiramerur-sri-sundara-varadhar.html

  18. There is a cave temple in Narasingam near Madurai where Narasimhar is the main deity carved in the Yanaimalai.
    Yoga Narasimhar is in the Alagarkovil also near Madurai

  19. நரசிம்ம அவதாரத்தின் போது அங்கிருந்தவர்கள் எந்த வியப்பை அடைந்திருப்பார்களோ அதே வியப்போடு…

    அன்று பெண்ணை சிறைபிடித்தான் சென்ற திசை சொன்னான்
    இன்று தூணை பிளந்தான் நின்ற கதை சொன்னான்

    ஜடாயுவிற்கு பாராட்டுகள் அல்ல. நன்றி. தமிழ் ஹிந்து இணையத்திற்கும்.

  20. மன்னிக்கவும், இதை இப்பொழுது தான் கவனித்தேன்:

    //ஆயினும் பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இத்தெய்வ வடிவம்//

    இதற்கு என்ன விளக்கம்? கூற முடியுமா? ‘பழங்குடி வழிபாடு’ என்றால் என்ன? பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்காத தெய்வ வடிவம் எது என்று அடையாளம் காட்ட முடியுமா?

  21. அன்புள்ள கந்தர்வன்,

    // பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்காத தெய்வ வடிவம் எது என்று அடையாளம் காட்ட முடியுமா? //

    முடியாது :)) எல்லா இந்து தெய்வ வடிவங்களிலும், அவை இன்று வணங்கப் படும் வடிவிலும், பழங்குடி வழிபாட்டுக் கூறுகள் உள்ளன. நரசிம்ம வடிவம் மட்டுமே அப்படிப் பட்டது என்று கட்டுரை சொல்கிறதா என்ன? ”இத்தெய்வ வடிவத்திலும் உள்ளது” என்று தானே கூறுகிறது?

  22. அன்புள்ள ஜடாயு,

    // முடியாது 🙂 ) எல்லா இந்து தெய்வ வடிவங்களிலும், அவை இன்று வணங்கப் படும் வடிவிலும், பழங்குடி வழிபாட்டுக் கூறுகள் உள்ளன. நரசிம்ம வடிவம் மட்டுமே அப்படிப் பட்டது என்று கட்டுரை சொல்கிறதா என்ன? ”இத்தெய்வ வடிவத்திலும் உள்ளது” என்று தானே கூறுகிறது? //

    அப்படியானால் ‘பழங்குடி வழிபாட்டுக் கூறுகள்’ என்பவற்றுக்கு இலக்கணம் என்ன? அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

  23. அன்புக்குரிய திருமாலடியார் கந்தர்வன் பழங்குடி வழிபாட்டுக் கூறுகளுக்கு இலக்கணம் வழங்கும்படி அன்பு ஸ்ரீ ஜடாயு அவர்களை கேட்டுள்ளார். இடையே நுழைவதற்கு இருவரும் அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.
    பழங்குடி என்ற சமுக அமைப்பின் கூறுகள் என்ன என்பதைப் பற்றி மானுடவியல் அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. அது போலவே பழங்குடி சமயக்கூறுகளும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. காரணம் பழங்குடி சமயங்களுக்குள்ளும் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதே.
    இந்து சமயமும் பழங்குடி சமயமும் ஒன்றா வேறா என்ற விவாதமும் இந்திய சமூக மானுடவியலாளர்களிடையே உண்டு. வேரியர் எல்வின் எம் எஸ் குரே போன்ற மானுடவியல் அறிஞர்கள் பழங்குடி சமயத்தின் தொடர்ச்சியே ஹிந்து சமயம் என்று கருதுகிறார்கள். கிறித்தவ மிசனரி ஆதரவிலான அறிஞர்களே பழங்குடி சமயம் வேறு ஹிந்து சமயம் வேறு என்று கூறுகிறார்கள்.
    என்றாலும் ஒருசில சமயக்கூறுகளை பழன்குடியினது என்று சொல்லலாம். அவையாவன.
    ௧. நட்டகல்லை தெய்வமென்று வழிபடுதல்.
    ௨. உருவச்சிலை வைத்தது வழிபடுதல்.
    ௩. முன்னோர்களை வழிபடுதல்
    ௪. படையல், உணவு, மலர், நீர், இவையெல்லாம் தெய்வத்துக்கு அர்ப்பித்தல்
    ௫. உயிர்பலியிடல்
    ௬. மரம், விலங்கு, நீர்நிலை, மலை, காற்று ஆகியவற்றை புனிதம் என்று போற்றுதல்
    இவை ஒருசிலவே
    அன்புடன்
    விபூதிபூஷன்

  24. // ஒருசில சமயக்கூறுகளை பழன்குடியினது என்று சொல்லலாம். அவையாவன.
    ௧. நட்டகல்லை தெய்வமென்று வழிபடுதல்.
    ௨. உருவச்சிலை வைத்தது வழிபடுதல்.
    ௩. முன்னோர்களை வழிபடுதல்
    ௪. படையல், உணவு, மலர், நீர், இவையெல்லாம் தெய்வத்துக்கு அர்ப்பித்தல்
    ௫. உயிர்பலியிடல்
    ௬. மரம், விலங்கு, நீர்நிலை, மலை, காற்று ஆகியவற்றை புனிதம் என்று போற்றுதல் //

    இந்த இலக்கணத்திற்கு ஏதாவது உபயோகம் உள்ளதா என்று கொஞ்சம் யோசிக்க வேண்டும். ‘பழங்குடி’ என்ற சொல்லாட்சியே ஒரு அருவருக்கும் கண்ணோட்டத்துடன்
    ஆக்கப்பட்டது என்றே கருத வேண்டியிருக்கிறது.

    ஆபிரகாமியத்துடன் ஒத்துப் போகாதது எல்லாம் ‘பழங்குடி’ (aboriginal) வழக்கம் என்று கூறுவார் போலும் — அதாவது இயற்கைச் சக்திகளையும் காட்டு மிருகங்களையும் பார்த்து பயப்படுவதால் ஏற்படும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்டது என்று பொருள் கொள்ள வேண்டும் போலும்.

    // நட்டகல்லை தெய்வமென்று வழிபடுதல். //

    இது எவ்வளவு கொச்சைத்தனமான சொல்லாட்சி. ‘உருவ வழிபாடு’ அல்லது ‘அர்ச்சா மூர்த்தி ஆராதனை’ எனும் சொற்கள் இருக்க, இப்படி ஏன்? ஏனென்றால் மூர்த்தி பூஜைக்குப் பின் உள்ள ஆழத்தை மறைக்க அல்லது மறுக்க வேண்டும் அதனால் தான்.

    கிறிஸ்தவத்தை எந்த ஆராய்ச்சியாளனாவது ‘பிரேத வழிபாடு’ (necromancy) என்று கூறத் துணிவானா?

    // மரம், விலங்கு, நீர்நிலை, மலை, காற்று ஆகியவற்றை புனிதம் என்று போற்றுதல் //

    இந்த இலக்கணத்திலும் ‘worship the creator, not the created’ என்று ‘பிரார்த்தனைக்’ கூட்டங்களில் கத்துபவர்களின் சத்தம் தான் காதில் விழுகிறது.

    ‘சிருஷ்டித்தவன் சிருஷ்டியினுள்ளே தானும் உட்புகுந்து உறைகிறான்’ என்ற ஆழமான தத்துவத்தின் வெளிப்பாடே மரம், விலங்கு, நீர்நிலை, ஆகியவற்றைப் புனிதமேனப் போற்றுதலின் காரணம்.

    பழங்குடி வழிபாடு என்று ஒன்று கிடையவே கிடையாது என்று நான் கூற வரவில்லை. தத்துவ அடிப்படை இல்லாத பழங்குடி வழிபாடு இன்றளவும் உலகில் பல இடங்களில் காணப்படுவது அனைவரும் அறிந்தது.

    இந்து மதத்தின் முக்கியமான வழிபாட்டுக் கூறுகள் – குறிப்பாக இங்கு நரசிம்ம வழிபாடு அத்தகைய பழங்குடிக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியது என்பதற்கு வலுவான சான்று என்ன என்று தான் கேட்கிறேன். சான்று இல்லை என்றால் நரசிம்ம வழிபாட்டைப் பழங்குடி வழிபாட்டிலிருந்து தோன்றியதாகக் கூறுவதில் எந்த வித உண்மையும் இல்லை.

  25. அன்புள்ள சிவஸ்ரீ.விபூதிபூஷண் அவர்களுக்கு, பழங்குடி வழிபாட்டுக் கூறுகள் என்று பொதுவாக அறியப் படுபவை குறித்த தங்கள் தெளிவன விளக்கத்திற்கு மிக்க நன்றீ.

    கந்தர்வன், ”பழங்குடி வழிபாட்டுக் கூறுகள்” என்பது கடவுள் கோட்பாடுகள், சமயங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து பேசும்போது, மானுடவியல் (anthropology) மற்றும் வரலாற்று துறைகள் பயன்படுத்தும் ஒரு சொல்லாட்சி. சமய, ஆன்மீக ரீதியாக இந்த சொல்லாட்சிகள் அர்த்தமற்றவை. சமய, ஆன்மீகப் பார்வையில் தெய்வீக வடிவங்களை இப்படி deconstruct செய்வதில்லை, முழுமையாகவே நோக்குகிறார்கள். இந்த இரு துறைகளுக்குமிடையே உள்ள வேறூபாட்டை கருத்தில் கொண்டு இதனை அணுக வேண்டும்.

    அறிவுத் தளத்தில் மானுடவியல் சார்ந்த பார்வைக்கு, வரையறைக்குட்பட்ட (limited) உபயோகம் உள்ளது என்றே நான் கருதுகிறேன். பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ள அது ஓரளவு உதவுகிறது.

    பழங்குடி என்பதற்கு ஈடான சொல் tribal என்பது (aboriginal என்பது இப்போது வழக்கொழிந்து விட்ட ஒரு காலனிய சொல்). Tribal என்ற அர்த்தத்தில் அது கட்டாயம் மோசமான, அருவருக்கத்தக்க சொல் அல்ல.

    அந்த அர்த்தத்தில் நரசிம்மர் மட்டுமல்ல, விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு என்று எல்லா தெய்வ வழிபாடுகளும் பழங்குடி வேர்கள் கொண்டவையே. ஏன், ரிக்வேதம் கூட பழங்குடிகளின் தொல்வழிபாட்டு தோத்திரப் பாடல்களே ஆகும். யஜுர்வேதத்தின் விரிவான யாக சடங்குக்ளும், அதர்வ வேதத்தின் தாந்திரீக அம்சங்களும் எல்லாமே பழங்குடித் தன்மை கொண்டவை தான். இந்தியப் பண்பாட்டை மேல்/கீழ் கலாசாரங்களாக (High culture and Low culture) என்று பகுப்பது காலனிய பார்வை.. வேறுபட்ட கூறுகளை தொகுத்து, ஒன்று சேர்த்து திரண்டெழும் ஒருங்கிணைந்த பண்பாட்டுத் தொடர்ச்சியாக கருதுவதே பாரதிய மரபு சார்ந்த பார்வை. எனது கட்டுரையில் பாரதிய மரபு சார்ந்த பார்வையையே வைத்துள்ளேன் என்று கருதுகிறேன்.

    பழங்குடிக் கடவுள் (Tribal God), சர்வசக்திமானான, ஆளுமை கொண்ட கடவுள் (Almighty, Personal God), தத்துவக் கடவுள் (Philosophical God) என்று கடவுள் கருத்தாக்கங்களின் பரிணாம வளர்ச்சியைக் குறித்த ஒரு மானுடவியல் கருத்தாக்கம் உண்டு. ஆபிரகாமிய மதங்களின் முதல் இரண்டு வகை மட்டுமே உண்டு. இந்து, பௌத்த, ஜைன மதங்களில் மட்டுமே மூன்றாவது வகையான தத்துவக் கடவுள் என்ற கருத்தாக்கம் உண்டு.. அதிலும் குறிப்பாக, இந்து மதத்தில் மட்டுமே ஒரே நேரத்தில் ஒரே கடவுள் இந்த மூன்று வகைப்பாடுகளிலும் வைத்து வழிபடுவது நிகழ்கிறது. இது ஒரு அற்புதமான பண்பாட்டுக் கூறு என்பதையே விளக்க முயல்கிறேன்.

    இத்தகைய பரிணாம வளர்ச்சி எப்படி உருவாகி வந்திருக்கீறது என்பதற்கு நமது பழைய இலக்கியங்களில் இருந்தே நிறைய உதாரணங்கள் தரலாம்.. நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் கொற்றவை குறித்த சிலப்பதிகாரப் பாடல் –

    ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
    கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
    வானோர் வணங்க மறைமேல் மறையாகி
    ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்;

    இதில் முதல் இரண்டு அடிகளை மட்டும் எடுத்தால் அவை குறிப்பது ஒரு பழங்குடிப் பெண் தெய்வம். மூன்றாம் அடியில் தேவர்களும், வேதமும் தொழும் பெருந்தெய்வம். கடைசி அடியில் ஞானக் கொழுந்தாக மிளிரும் தத்துவ ஸ்வரூபம்.

    என்ன ஒரு அற்புத இணைப்பு பாருங்கள். உண்மையில் இந்தக் கண்ணோட்டத்தோடு பகுத்துப் பார்த்தால் தான் இப்படி ஒரு பிரிவினை இருப்பதே புலப்படும்!

  26. அன்புக்குறிய ஸ்ரீ கந்தர்வன்.
    1. பழங்குடி என்ற கருத்தாக்கம் சரியானது என்று ஸ்ரீ ஜடாயு கருதுவது ஏற்புடையது. ஆதிவாசி என்பது indigenous people என்பதற்கு இணையானது. பழங்குடி என்பது tribal என்ற தரக்குறைவான மேற்கத்திய காலனியாதிக்க செல்லின் தமிழாக்கமன்று.
    2. நட்டகல்லை வழிபடுதல் என்பது சித்தர் பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டது. நடுகல் வழிபாடு என்பதும் தமிழகத்தில் இன்னும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    3. உருவ வழிபாடு என்பது கூட கொச்சையான idol worship என்ற ஆபிராகாமிய் சொல்லாட்சிதான். விக்ரகாராதனம் என்பது மூர்த்தி வழிபாடு என்பது சரி. அர்ச்சை என்ற பாகவத கருத்தாக்கம் ஏற்புடையது.
    4. படைத்தவன் படைப்பு என்ற பேதம் பழங்குடி தொல் சமயங்களில் இல்லவே இல்லை. அடியேனும் எள்ளளவிலும் ஆபிராகாமியத்தினை ஏற்பவன் அல்லன்.
    5.பழங்குடி வழிபாட்டில் சமயத்தில் தத்துவம் இல்லை என்பது தவறு. ஸ்ரீ பாகவதம் போற்றும் அந்தர்யாமி பழங்குடியினருக்குத்தெரிந்திருக்கிறது. mana என்றும் bonga என்றும் பழங்குடியினர் பரம்பொருளின் எங்கும் நிறைந்த தன்மையைப் போற்றுகின்றனர்.
    அன்புக்குறிய ஸ்ரீ ஜடாயு,
    1. அறிவியல் பார்வைக்கும் ஆன்மிகப்பார்வைக்கும் வேறுபாடு உள்ளது அறிவியல் பார்வை வரையரைக்குட்பட்டது என்ற கருத்தில் அடியேனுக்கு மாறுபாடு இல்லை. ஆறிவியல் பாரதிய ப்பார்வையில் ஆன்மிகத்திற்கு எதிரானது அன்று மாறானதும் அல்ல. எல்லா ஆன்மிகக்கூறுகளையும் அறிவியல் பகுத்தாய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்பது அவசியமற்றது. பொறி புலன் கடந்து செல்ல விளைவது ஆன்மிகம் அல்லவோ.
    2. வேதத்தில் காணப்படும் யக்ஞங்கள் பழங்குடி கூறு என்பதும் ஏற்புடையது. வைதீகர் நோக்கில் தாந்ரீகம் என்பது வேறு வைதீகமல்லாதது தாந்ரீகம். தனிமனித முயற்சியால் உருவானது தாந்தீகமுறை. பலியிடுதல், மச்சம், மது போன்றவற்றை ஆன்மிக சாதன்மாகக்கொண்ட வாமாச்சாரம் தாந்ரீகம் எனப்படும். அதாவது வேதங்களில் மூலத்துவத்தினை க்கொள்ளாத வழிபாட்டுமுறைகள் தாந்த்ரீகம் எனப்படும்.
    3. இந்தியப்பண்பாட்டை மேல்(great tradition) கீழ்(little tradition) என்பது காலனியாதிக்க மனனிலை என்பதும். “வேறுபட்ட கூறுகளை தொகுத்து, ஒன்று சேர்த்து திரண்டெழும் ஒருங்கிணைந்த பண்பாட்டுத் தொடர்ச்சியாக கருதுவதே பாரதிய மரபு சார்ந்த பார்வை”. என்பதும் மிகவும் ஏற்புடையக்கருத்துக்கள். ஹிந்து சமயம் என்று இன்று நாம் கருதுவது பல்வேறு பழங்குடி சமயங்களி இணைப்பு தொடர்ச்சியாகும்.
    அபிரகாமிய காலனிய சிந்தனை அதன் தாக்கத்தினை நாம் சமாளிக்கவேண்டுமானால் இத்தகு அறிவியல் பூர்வமான ஆய்வுகள், கட்டுரைகள் ஆயிரமாயிரம் வேண்டும்.
    அன்புடன்
    விபூதிபூஷண்

  27. நரசிம்ம வழிபாடே புத்த மதத்தை,புத்தரை கேள்விக்குட்படுத்தும் அவர்களின் கூற்றுக்களை அடித்து உடைக்கும் வழிபாட்டாக தான் வந்திருக்க வேண்டும்
    நரசிம்ஹரால் கிழிக்கப்படும் சிலைகளை பார்த்தால் புத்தர் போல தெரியவில்லையா

    கடவுள் எங்கே,அவன் இல்லை,நான் தான் கடவுள் ,அவன் இந்த இறப்பில் இருக்கின்றானா,அதற்க்கு காரணமாக இருக்கின்றானா
    இந்த மக்களின் துயரத்தில் இருக்கின்றானா
    இந்த தூணில் இருக்கின்றானா என்ற கேள்விகள் மக்கள் மனதில் விதைக்கபட்டத்ர்க்கு எழுந்த பதில் தான் நரசிம்மர்

  28. அன்புள்ள ஜடாயு,

    ரொம்பக் கேள்வி கேட்கிறேன் என்று வருந்த வேண்டாம். கொஞ்சம் தெளிவு பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்:

    ஆக, ‘பழங்குடி வழிபாடு’ (tribal religion) என்பதற்கு நீங்கள் சிவஸ்ரீ அவர்கள் குறிப்பிட்டுள்ள இலக்கணத்தை ஒரு empirical test போன்று பயன்படுத்திக் கொண்டு ‘எனவே இன்ன இன்ன வழிபாட்டு முறைகள் பழங்குடி வழிபாடு’ என்று அடையாளம் கண்டுபிடிக்கிறீர்கள் போல. இருக்கட்டும்.

    என் வாதத்தைக் கொஞ்சம் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    “கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சி வரவேற்கத்தக்க ஒன்றா?”, “ஞான/யோக/வேதாந்த மார்க்கத்தில் பழங்குடி வழிபாட்டு முறைகளையும் அரவணைத்துக் கொள்வது வரவேற்கத்தக்க ஒன்றா?” என்பதெல்லாம் என் கேள்வி அல்ல.

    இக்கட்டுரையில் குறிப்பாக நரசிம்ம மூர்த்தி வழிபாடு ஒருவித பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கென்ன ஆதாரம்? ஞான, யோக அம்சங்கள் பரிணாம வளர்ச்சியால் வந்தது என்றால், அந்த அம்சங்கள் இல்லாத நரசிம்ம வழிபாடு இருந்ததற்குத் திட்டவட்டமான சான்று உண்டா? இல்லை என்றால் பின்வருவதற்கு என்ன பொருள்:

    // பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். //

    பிறகு,

    ‘பழங்குடிக் கடவுள்’, ‘ஆளுமை கொண்ட கடவுள்’, ‘தத்துவக் கடவுள்’ என்று தனித்தனியாகக் குறிப்பிட்டு,

    // ஏன், ரிக்வேதம் கூட பழங்குடிகளின் தொல்வழிபாட்டு தோத்திரப் பாடல்களே ஆகும். //

    என்று கூறுவது கொஞ்சம் (மன்னிக்கவும்) வேடிக்கையாக இருக்கிறது எனக்கு. விஸ்வகர்மா சூக்தம் (ஆளுமை கொண்ட கடவுள்), புருஷ சூக்தம் (தத்துவக் கடவுள்) ரிக் வேதத்தில் இல்லையா? நான் சொல்வது இருக்கட்டும்,

    // ஆனால் ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன என்பதே வேத அறிஞர்கள் பலர் கொண்டுள்ள கருத்தாகும். வேத இலக்கியத்திற்கும் உலகின் மற்ற பல கலாசாரங்களின் பழங்குடிப் பாடல்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் இதுவே. ரிக்வேதத்தின் தொல்பழம் பாடல்கள்கூட காலம் கடந்து இன்றளவும் நமது கூட்டுப் பிரக்ஞையில் சிந்தனைகளாகவும், உணர்வுகளாகவும் நிற்பதும் வேத இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.//

    என்றும்,

    // உதாரணமாக, இந்த சூக்தத்தின் முதல் மந்திரத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி வேத ரிஷியின் வேள்விச் சடங்குக்கான இந்தத் துதிப் பாடலிலேயே கூட, இந்து மெய்ஞானம் கண்டடைந்த தத்துவத்தின் உச்சமாக உள்ள ஒரு தரிசனம் இருக்கிறது. //

    எழுதியது நீங்கள் தானே?

  29. நல்லக் கட்டுரை. அஹோபிலம் சென்று வந்தவர்களுக்கு தெரியுமோ என்னவோ. நான் 18 வருடங்களுக்கு முன் சென்றபோது அங்கு வந்த ஒரு பழங் குடி குழுவினர் நரசிம்மர் எங்கள் மாப்பிள்ளை என்று பெருமையுடன் மொழிந்தனர். அவர்களின் பக்தி முகமூடி இல்லாதது. திருவல்லிக்கேணி நரசிம்மர் சந்நிதியில் நரசிம்மரை ஓளி உருவாய் கண்ட கோவில் காவலர் மெய்சிலிர்க்க தனது அனுபவத்தை சொன்னது எனது நினைவுக்கு வருகிறது. ஆந்திரா பல இடங்களில் பக்தவத்சலனான நரசிம்மருக்கு அற்புதமான கோவில்கள் உள்ளன, திரு ஜடாயு ஒரு ஷேத்ராடனம் சென்று வந்தால் இது போன்ற நல்ல கட்டுரைகளை வாசித்து மகிழலாம்.

  30. அன்புள்ள கந்தர்வன்,

    // இக்கட்டுரையில் குறிப்பாக நரசிம்ம மூர்த்தி வழிபாடு ஒருவித பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கென்ன ஆதாரம்? //

    மிக ஸ்தூலமான ஆதாரம் – நரசிம்ம சிற்பங்களில் உருவங்களில் ஏற்பட்ட மாறுதல். அது தான் இக்கட்டுரையின் மையப் பொருள் அல்லவா? மதுரா நரசிம்மருக்கும் ஹம்பி நரசிம்மருக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்களேன்.. இந்த வித்தியாசம் பொ.பி 1 முதல் 15ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்துடையது. அதற்கும் முந்தைய பரிணாம வளர்ச்சிக்கு இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் கிடைக்காது – அது தொல்பழங்கால வரலாற்றுக்குள் போய்விடும். சிந்துவெளி முத்திரைகளீல் *இப்போது கிடைத்துள்ளவற்றில்* சிங்கமுகம் இல்லையென்று குறீப்பிட்டிருக்கிறேன்.. சிந்து வெளிப் பண்பாட்டின் விஸ்தீரணம் முன்பு கருதப் பட்டதை விட மிகப் பெரியது என்பதே இப்போதைய புரிதல்.. இனி நடக்கும் அகழாய்வுகளில் ஒருவேளை அப்படி ஏதேனும் கிடைத்தால் அதுவே நரசிம்ம வழிபாடு குறித்த ஆகத் தொன்மையான ஆதாரமாக ஆகக் கூடும்.

    // ஞான, யோக அம்சங்கள் பரிணாம வளர்ச்சியால் வந்தது என்றால், அந்த அம்சங்கள் இல்லாத நரசிம்ம வழிபாடு இருந்ததற்குத் திட்டவட்டமான சான்று உண்டா? //

    *சிற்பங்களில்* ஞான, யோக அம்சங்கள் எப்போது இணைந்தன என்பதற்கான சான்றூ இந்தக் கட்டுரையிலேயே உள்ளதே… ஆனால் சிற்பங்கள் மிகவும் பிற்பட்ட காலத்தியவை… இலக்கிய ஆதாரங்கள் ராமாயணம் மகாபாரதத்திலேயே உள்ளன. அந்த காலகட்டத்திலேயே நரசிம்ம வழிபாடு அதன் ”பழங்குடி” தன்மையிலிருந்து வளர்ச்சியுற்று விட்டிருக்கிறது.

    என் முந்தைய மறுமொழியிலேயே கூறியிருந்தேனே – அந்த மூன்று வகை கடவுள் கருத்தாங்கள் *மானுடவியல்* துறை சார்ந்தவை – சமயத் துறையில் அதற்கு பெரிய மதிப்பு கிடையாது என்று.. ரிக்வேதத்தைப் பொறுத்த வரை அதில் இந்த மூன்று வகை கடவுள் கருத்தாக்கங்களுமே உள்ளன என்றூ வேத ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.. ஆனால், அந்தக் கருத்தாங்கள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து பிரித்தெடுக்க முடியாதபடி கலந்துள்ளன.. ஒரு சாரார் ரிக்வேதம் முதல் மண்டலத்திலிருந்து பத்தாம் மண்டலத்திற்கு நேர்கோட்டு (linear) ரீதியில் பரிணமிப்பதாக கருதினார்கள்.. ஆனால் முதல் சில மண்டலங்களிலேயே ஆழ்ந்த தத்துவக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் சிலதும் வந்து விடுகின்றன என்பதால் அந்த ‘தியரி’யும் அடிபட்டு விடுகீறது.

    ஆனால், பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துள்ளது என்பது கண்கூடு. ஏனென்றால் அ) எல்லா மனித அறிவுத் துறைகளும் அப்படித் தான் வளர்ச்சியுறுகின்றன ஆ) அதற்கான தேவையான அளவு தடயங்கள் வேத,புராண, இதிகாச இலக்கியங்களிலேயே உள்ளன….. ஸ்ரீஅரவிந்தர் உள்ளிட்ட இந்து அறிஞர்களும், துறவிகளுமே கூட இந்தக் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

  31. //நல்ல கட்டுரை.இந்த நரசிம்ம புராணம் இப்போது எங்காவது கிடைக்கிறதா?என்று அறிய விரும்புகிறேன்//

    போகன் அவர்களே, நீங்கள் சென்னை வாசி என்றால், மைலாபூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிராக உள்ள கிரி டிரேடிங் அஜென்சியில் விசாரிக்கவும். சில நாட்களுக்கு முன்னால் அங்கு பார்த்த நியாபகம்!

  32. ஸ்ரீநரசிம்மர் மடியில் புத்தரா. அஹா நல்ல கதை. திரு பூவண்ணன் நன்றாக கற்பனை செய்திருக்கிறார்.திராவிட இயக்கத்தவர் புனைவதிலும் பொய் உரைப்பதிலும் வல்லவர்களன்றோ. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. திரு பூவண்ணன் புத்தரின் வரலாறு தத்துவம் ஆகியவற்றையும் படிக்கவேண்டும். புத்தர் கடவுள் மறுப்பாளர் அல்லர். அவர் கடவுளைப்பற்றிக்கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான். கடவுளைப்பற்றியக்கேள்விக்கும் அவர் கண்ணை மூடி மௌணம் சாதித்தார். ஹிரண்ய காசிபையும் ஸ்ரீ புத்தரையும் வைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிப்பலிக்காது.

  33. தென்னிந்தியாவில் ஆந்திராவில் தான் தொன்மையான புத்த ஸ்தூபிகள்,புத்தர் சிலைகள் அதிகம்.ஒரு காலத்தில் புத்த மதம் அங்கு பெரும்பான்மையாக இருந்தது
    மிகவும் பழமையான புத்த மதம் சம்பந்தப்பட்ட பொருள்கள் அங்கு அதிகம் கிடைத்துள்ளன.கிடைத்தும் வருகினறன
    பல புத்த விஹாரங்களில் ஹிந்து கடவுள்களின் சிலையை வைத்து பூசை நடப்பதும் உண்டு
    போஜன கொண்டா போன்ற இடங்களில் மிக பழமையான புத்த ஸ்தூபி இருந்த இடங்களில் இன்று சிவன் விஷ்ணு பூசை நடைபெறுகிறது
    ஸ்ரிமுகலிங்கம் என்று 1200 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த விஹாரங்களிலும் இப்போது ஹிந்து கடவுள் விக்கிரகங்களுக்கு தான் பூசை
    அவை வெகு சமீபத்தில் கோவில்கள் ஆகி விட்டன

    நரசிம்ஹர் கோவில்கள் ஆந்திராவில் தான் மிக அதிகம்.
    புத்த மதம் எப்படி தோல்வியுற்று அழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரிய வரும் போது நரசிம்ஹர் வரலாறு பிறந்த கதையும் வரலாம்
    நம்ம ஊர் நரகாசுரன் கதைகள் வடக்கில் கிடையாது.அங்கு ராமர் அயோத்திக்கு திரும்பி வருவது தான் தீபாவளி
    இரண்டு நிகழ்வுகளை ஒன்றிணைப்பது நமக்கு புதிது இல்லையே
    புத்தர் இரண்ய கசிபு ஒருங்கிணைப்பு எப்படி உருவானது என்பதும் ஆராய்ந்தால் சுவாரசியமான வரலாறு கிடைக்கலாம்

    கடவுளுக்கு ஹிந்துக்கள் மேல் மட்டும் என்ன அவ்வளவு பரிவு
    அவர்களை மிகவும் நல்லவர்களாக வேறு மத கடவுள்களை ,விகாரங்களை கைப்பற்றுவதை தவறு என்று என்னும் குணம்

  34. //நரசிம்ம வழிபாடே புத்த மதத்தை,புத்தரை கேள்விக்குட்படுத்தும் அவர்களின் கூற்றுக்களை அடித்து உடைக்கும் வழிபாட்டாக தான் வந்திருக்க வேண்டும்
    நரசிம்ஹரால் கிழிக்கப்படும் சிலைகளை பார்த்தால் புத்தர் போல தெரியவில்லையா

    கடவுள் எங்கே,அவன் இல்லை,நான் தான் கடவுள் ,அவன் இந்த இறப்பில் இருக்கின்றானா,அதற்க்கு காரணமாக இருக்கின்றானா
    இந்த மக்களின் துயரத்தில் இருக்கின்றானா
    இந்த தூணில் இருக்கின்றானா என்ற கேள்விகள் மக்கள் மனதில் விதைக்கபட்டத்ர்க்கு எழுந்த பதில் தான் நரசிம்மர்//

    பூவண்ணன் சார், முதலில் திரு.விபூதிபூஷன் கூறியதுபோல புத்தர் ஒன்றும் நாட்தீகவாதியல்ல.
    அடுத்து ‘கடவுள் எங்கே?’ என்று கேட்பது நாட்தீகமுமல்ல. விவேகானந்தரும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். உங்களுக்கு புராணங்களில் நம்பிக்கை இருக்காது என்று நினைக்கிறேன். விஸ்வரூபத்தைக் காட்டும்வரையில் அர்ஜுனன் கண்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை! அதனால் அர்ஜுனனை நாட்தீகனென்று கூறமுடியாது..
    இரண்யனும் நாத்தீகநல்ல. சிறந்த சிவபக்தன். மேலும் அவன் பிரம்மதேவநிடம்தான் அந்த பிரபலமான வரத்தைப் பெற்றான். ‘ஜெயா-விஜய’ர் களாக அவன் பெற்ற சாபத்திர்கேற்ப திருமாலை வெறுத்தான். திருமால் தன்முன் வர பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று யூகித்துக் கொண்டான். அதனால் தான் ‘உன் கடவுள் எங்கே இருக்கிறான், அவனைக் காட்டமுடியுமா?’ போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டான்.

    //,நான் தான் கடவுள்//

    புத்தர் தன்னைக் கடவுள் என்று கூறிக்கொள்ளவில்லை.

    ‘கடவுள் எங்கே?’ என்று கேட்பவர்களெல்லாம் இரண்யகசிபு என்றால், ஈ.வே.ராவும் இரண்யனா???

  35. // இரண்யனும் நாத்தீகநல்ல. சிறந்த சிவபக்தன். //

    இரணியன் சிவபக்தன் என்று எந்தப் புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது? எனக்குத் தெரிந்து ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகிய நூல்களில் உள்ள எந்த நரசிம்மாவதார சித்தரிப்பிலும் அப்படி இல்லை.. எல்லா அரக்கர்களும் சிவ பக்தர்கள் என்று குத்து மதிப்பாக ஒரு புராண ஊகத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களோ?

    // மேலும் அவன் பிரம்மதேவநிடம்தான் அந்த பிரபலமான வரத்தைப் பெற்றான் //

    ஆம், பிரம்ம தேவனிடம் வரம் பெற்றது தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

  36. பூவண்ணன், உங்களது ஊகங்களுக்கு ஆதாரம் என்ன? இப்படிப் பட்ட ஊகங்களை முதலில் உருவாக்கிக் கொண்டால், பிறகு எந்தப் புராணத்தையும், ஐதிகத்தையும் அதற்கேற்றவாறு மாற்றி விளக்கம் அளித்துக் கொள்ளலாம்.. உதாரணமாக, காளி வழிபாடு ஏன் ஏற்பட்டது – புத்தமதத்தை அழிப்பதற்காக.. அதீத அகிம்சைக் கோட்பாடு, போர்களிலும் ஊனுணவிலும் ஊறிய சமூகத்திற்கு போரடித்து விட்டது, எனவே பயங்கர ரூபிணியான பெண் தெய்வ வழிபாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலமாக புத்தமதத்தை வீழ்த்துவதற்கு வைதீக சமயத்தவர்கள் செய்த தந்திரம்…

    நரசிம்ம தொன்மம் & வழிபாடு பௌத்தத்திற்கு முந்தைய காலத்தியது என்பதற்கு தெளிவான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. இரணியகசிபு புத்தர் என்றால் அவன் அண்ணன் இரண்யாட்சன் யார், மகாவீரரா? அப்போது மகாபலி யார்> கார்த்தவீரியன் யார்? அவர்களும் புத்தர்களா?

    நீங்கள் குறிப்பிடும் ஆந்திர நரசிம்ம கோயில்கள் மிக மிகப் பிற்காலத்தியவை.. ஸ்ரீகூர்மம், மங்களகிரி ஆகியவை ஸ்ரீராமானுஜர் காலத்தில் தான் பிரபலமாயின (10ம் நூற்றாண்டு), அகோபிலம் ஸ்ரீவண்சடகோபரால் அதற்கும் பிற்பட்ட காலத்தில் வைணவத் தலமாக ஆனது.. இவையெல்லாம் புத்தமதத்தின் வீழ்ச்சிக்கு பல நூற்றாண்டுகள் *பின்பு* நிகழ்ந்தவை. நான் இக்கட்டுரையில் குறீப்பிட்டிருக்கும் மதுரா, எல்லோரா, புதுக்கோட்டை/ஆனைமலை, பேலூர்/ஹளேபீடு நரசிம்மங்கள் அனைத்தும் ஆந்திர நரசிம்மர்களை விட காலத்தால் முற்பட்டவை.

    குப்தர் காலம் தொடங்கி சாளுக்கிய, ஹொய்சள காலம் வரை விஷ்ணுவின் வராக, நரசிம்ம மூர்த்திகளே இந்தியாவின் எல்லா பகுதிளிலும் சிற்பங்களில் பெருவாரியாக சித்தரிக்கப் பட்டன. இதற்குப் பிற்பட்ட காலகட்டத்தில் பக்தி இயக்கம் மேலெழுந்து ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய அவதார மூர்த்தங்கள் முன்னணிக்கு வந்தன. இதனூடாக ஏற்பட்ட அரசியல், சமூக மாற்றங்களையும் இணைத்து இதனை அவதானிக்க வேண்டும்.

  37. //இரணியன் சிவபக்தன் என்று எந்தப் புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது? எனக்குத் தெரிந்து ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகிய நூல்களில் உள்ள எந்த நரசிம்மாவதார சித்தரிப்பிலும் அப்படி இல்லை.. எல்லா அரக்கர்களும் சிவ பக்தர்கள் என்று குத்து மதிப்பாக ஒரு புராண ஊகத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களோ? //

    ஜடாயு சார், எங்கோ படித்த நியாபகம். தவறெனில், என்னை மன்னிக்கவும். அரக்கர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், தேவர்கள், யக்ஷர்கள் என அனைத்து இனத்தினரும் சிவபெருமானை வழிபடுவதால்தான் அவனை ‘மகாதேவன்’ என குறிப்பிடுகிறோம்..

    ஜலந்தரன் என்ற அரக்கன் விஷ்ணுவிடம் துவேஷம் கொள்ளவில்லை, ஆனால் சிவபெருமான் தான் அவனை சம்மரித்ததாக கேள்விப்பட்டுள்ளேன்..

    சிவனும் பிரம்மாவும் எளிதில் வரமளிக்கக்கூடியவர்கள். எனவேதான் அரக்கர்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

    நான் கூறியதில் பிழையிருந்தால், மீண்டும் மனிக்கவும்…

  38. ஜடாயு சார்
    திருப்பதியில் இருக்கும் மூலவர் புத்தர் சிலை தான்,இல்லை காலி சிலை என்றும் பல புத்தகங்கள் ,ஆதாரங்கள் வெளி வந்துள்ளன
    நாம் வரலாற்றை நமக்கு வேண்டிய மாதிரி பார்க்கிறோம்,படிக்கிறோம்.
    தவறே செய்யாத சில குழுக்களை உருவாக்கி கொள்கிறோம்
    புத்த மதத்தின் பரவலில் இன்றைய ஒரிசாவும்,ஆந்திரதிர்க்கும் முக்கிய பங்கு உண்டு .அவை முழுவதுமாக ஒழிக்கப்பட்டு பத்து நூற்றாண்டுகள் ஆயினும் பல எச்சங்கள் மீதி உள்ளன
    ஆந்திராவில் மட்டும் அல்ல முழு இந்திய துணை கண்டத்திலும் புத்தர் சிலைகள்,விகாரங்கள் தான் மிகவும் பழமையானவை
    பத்ரிநாத் கோவில் கூட புத்த விகாரமாக இருந்து ஆதிசங்கரரால் கோவிலாக மாற்றப்பட்ட ஆதாரங்கள் உண்டு

    நரசிம்ஹர் மிகவும் கோவமுள்ள கடவுளாக,உக்கிரமுள்ள தெய்வமாக ஆந்திராவில் உள்ளார்.பல கோவில்களிலும் உக்கிரத்தை தணிக்க நடக்கும் முயற்சிகள் பல்வேறு வகை
    கடவுள் இல்லை என்ற கேள்விக்கு பெருமளவில் காரணமே புத்தர் தான்
    நாம் தான் அவரையே அவதாரம் ஆக்கியவர்கள் ஆயிற்றே.அவரை சிவ பக்தர் ,விஷ்ணு சொரூபம் என்று கூறி அவரை போய் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்று சொல்வது பாவம் என்று மாற்ற முடியாதா என்ன

    நம் நம்பிக்கையை வரலாறு ஆக்குவது தான் எல்லாராலும் இன்று வரை நடந்து வந்துள்ளது.
    அது தான் பழங்குடி வழிபாட்டு முறைகள் இன்றைய வழிப்பாட்டு முறைகளாக மாறியது என்ற நம்பிக்கையும்
    புத்த விஹாரங்கள் கோவில்கலானது இந்தியாவில்,குறிப்பாக தென்னகத்தில் பெருமளவில் நடைபெற்ற உண்டு
    விருப்பு வெறுப்பற்ற ,நடுநிலையான ஆய்வுகள் நடந்தால் உண்மைகள் வெளி வரும்

  39. கடவுள் நம்பிக்கையை பயம் கலந்து உருவாக்கியதில் நரசிம்மருக்கு பெரும் பங்கு உண்டு
    யாரை கேள்வி கேட்கிறாய் என்று தான் அந்த உருவம்,அந்த வயிற்றை கிழிக்கும் தண்டனை
    ஒவ்வொரு அவதார கதைகள்,கடவுள் பற்றிய பாடல்களுக்கு பின் அந்த வட்டாரம் சார்ந்த வரலாறு உண்டு .அது மிகைபடுத்தப்பட்டதாக இருக்கலாம்
    ஆனால் அதில் வெற்றி,தோல்வி,அழிக்கப்பட்ட எதிரி அனைத்தும் உண்டு
    விருப்பு வெருப்பிலாமல் கடவுள் வழிபாடு எப்படி உருமாறி வந்திருக்கிறது என்று பார்த்தால் கடவுள்களுக்குள் நடந்த சண்டையும் அதன் விளைவாக வெற்றி பெற்ற கடவுள்களும்,அதற்கு காரணமான அவதார கதைகளும் ,கோவில் கதைகளும் அதற்கான காரணங்களும் வெளி வரலாம்
    இங்கிருந்த இங்கிருக்கும் பல கடவுள்களின் தொகுப்பு தான் இந்து மதம் .அவை எப்படி ஒருங்கிணைக்கப்பட்டன ,முரண்பாடான சில எப்படி அழிக்கப்பட்டன என்பதை அறிந்தால் பல மர்ம முடிச்சுகள் அவிழலாம்

  40. பூ வண்ணன்

    //
    கடவுள் நம்பிக்கையை பயம் கலந்து உருவாக்கியதில் நரசிம்மருக்கு பெரும் பங்கு உண்டு
    //

    பகத்தறிவு பேத்துகிட்டு கூடுவது என்பது இததான்.

    பயம் காட்டினா கிட்ட வருவான தூரம் போவானா? நரசிம்மர் உக்கிர மூர்த்தி என்பதால் பலரும் நரசிம்மர் படத்தை கூட வீட்டிற்குள் வைப்பதில்லை. எங்கே இதில் கடவுள் நம்பிக்கை வளர்க்கப்பட்டுள்ளது.

    புத்த மதத்தின் வீழ்ச்சி கடவுள் நம்பிக்கை உள்ள பக்திமான்களால் வந்தது என்று சரடு கட்டுவது பகுத்தறிவு வாதிகள் மட்டுமே.

    புத்த மதத்திற்கு இந்தியாவில் ஆப்பு வைத்தது இஸ்லாமியர்கள் தான்.

    சித்தாந்த ரீதியாக புத்தம் தோற்கடிக்கப்பட்டது மீமாம்ச, வைசெஷிகர்களால். இவர்கள் இருவருமே கடவுள் மறுப்பாளர்கள் கோஷ்டி தான்.

    ஜடாயுவின் உதாஹரணம் உத்தமம் (அவரே அந்த தவறில் சிலதை இந்த கட்டுரையில் செய்திருக்கிறார் அது இருக்கட்டும்… ).

    நீங்களா ஒரு கான்செப்ட்ட கண்டுபிடிக்க வேண்டியது அப்புறம் அதுல எல்லாத்தையும் பொருத்தி பார்க்க வேண்டயது. உண்மையா போருந்தாவிடிலும் தமிழால் பொருத்துவது.

    ஜடாயு சொன்னதுபோல் அல்லாமல் பக்தி மார்க்கம் புத்த காலத்திலேயே தழைத்திருந்தது. சிலப்பதிகாரம் வடவரையை மத்தாக்கி ஒன்றே போதாதா. அங்கே ராம க்ருஷ்ணாதிகள் தான் அதிகமாக போற்றப்படுகின்றனர்.

    நாயமா நீங்க ஒரு கேள்வி கேக்கணும். பாத்தீங்களா பாத்தீங்களா நான் தான் சொன்னேனே நரசிம்மர் எல்லாம் புத்தருக்கு அப்புறம் இட்டுக்கட்டினதுன்னு அதான் சிலப்பதிகார பாட்டிலேயே காணோம்ன்னு? கேளுங்க கேளுங்க

  41. \\\\நாம் வரலாற்றை நமக்கு வேண்டிய மாதிரி பார்க்கிறோம்,படிக்கிறோம்.\\\

    ஹிந்துத்வர்களுக்கு எதிராக நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் இடதுசாரிகள் என்றால் வரலாற்றை அவர்களுக்கு வேண்டிய மாதிரி பார்ப்பது, படிப்பது என்பதோடல்லாமல் அரசு யந்த்ரத்தை கைவசமாக்கி தங்களுடைய துஷ்ப்ரசாரங்களை இளம் சிறார்களுக்கு வரலாறு என்ற பெயரில் அரசு பாட நூல் நிறுவனங்கள் மூலம் திணிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது நீங்கள் அறிந்தது தான்.

    \\ஆந்திராவில் மட்டும் அல்ல முழு இந்திய துணை கண்டத்திலும் புத்தர் சிலைகள்,விகாரங்கள் தான் மிகவும் பழமையானவை\\

    ஆதாரமெல்லாம் கேழ்க்கக்கூடாது இல்லை?

    \\பத்ரிநாத் கோவில் கூட புத்த விகாரமாக இருந்து ஆதிசங்கரரால் கோவிலாக மாற்றப்பட்ட ஆதாரங்கள் உண்டு\\

    ஆதாரங்களா அல்லது கதைகளா?

    \\நாம் தான் அவரையே அவதாரம் ஆக்கியவர்கள் ஆயிற்றே.அவரை சிவ பக்தர் ,விஷ்ணு சொரூபம் என்று கூறி அவரை போய் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்று சொல்வது பாவம் என்று மாற்ற முடியாதா என்ன\\

    ஒன்று புரிந்து கொள்ளுங்கள். அது இஸ்லாம் ஆகவே இருப்பினும் ஹிந்துஸ்தானத்தில் புழங்குகையில் ஹிந்து வழிபாட்டு முறைகளை உள்வாங்கியே மேல் நகரும். வஹாபிகள் இதைக் களைய முற்படுகிறார்கள் என்பது வேறு விஷயம். வெகுஜன வழிபாட்டில் ஒன்றிலிருந்து இன்னொன்றை உள்வாங்குவது என்பது இயல்பான விஷயம்.

    அவலோகிதேஸ்வரர், மஞ்சுஸ்ரீ மற்றும் மைத்ரேய பௌத்தரை லாமாக்கள் வழிபடுவதில் சிவ விஷ்ணு ஸ்வரூபம் என்றில்லாவிடினும் வழிபாடு என்பது முக்யமான அம்சம்.

    பௌத்தர் இவர்களால் ஏன் வழிபடப்படுகிறார் என்பது சமூஹம் ஒற்றைப்படையான ஒரு அசேதனமான கல் அல்ல மாறாக பல குழுக்கள் இணக்கமுடன் ஒன்றுடனொன்று இணைந்து முன்னகரும் இயக்கம் என்பதே.

  42. //இத்தகைய பரிணாம வளர்ச்சி எப்படி உருவாகி வந்திருக்கீறது என்பதற்கு நமது பழைய இலக்கியங்களில் இருந்தே நிறைய உதாரணங்கள் தரலாம்.. நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் கொற்றவை குறித்த சிலப்பதிகாரப் பாடல் –

    ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
    கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
    வானோர் வணங்க மறைமேல் மறையாகி
    ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்;

    இதில் முதல் இரண்டு அடிகளை மட்டும் எடுத்தால் அவை குறிப்பது ஒரு பழங்குடிப் பெண் தெய்வம். மூன்றாம் அடியில் தேவர்களும், வேதமும் தொழும் பெருந்தெய்வம். கடைசி அடியில் ஞானக் கொழுந்தாக மிளிரும் தத்துவ ஸ்வரூபம்
    //

    பழங்குடி வாழ்க்கையென்னும்போது, நாம் சிலம்பையெடுத்துக் காட்டக்கூடாது. சிலப்பதிகாரம் பழைய இலக்கியமன்று என்பது நம் தமிழறிஞர்கள் சிலரின் கருத்தாகும். அவர்களுள் சிலர்: இது கடைச்சங்கநூலென, சிலர் சங்கமருவி காலத்ததென, வையாபுரிப்பிள்ளை போன்றோர், இது 12ம் நூற்றாண்டுக்காவியம் – இராமானுஜருக்கெல்லாம் பின்பு!- என்கிறார். மேலும், கதை மாந்தர்கள் கற்ப்னை, சேரனில் இளவல் இளங்கோ என்பது புரட்டு என்றும் சொல்கிறார்.

    அவர்கள் இல்லாமால் நாமே சிலம்பை ஆராயும்போது, சிலம்பு காட்டும் காலத்தில் வைதீக மதம் நிலைபெற்று ஆழ்வேர்களைப்போட்டுவிட்டது. எனவேதான் கோவலனுக்கும் கண்ணகிக்கும் வைதீகமுறைப்படியே மணம்.

    சிலம்பில் வைதீகமத்ததையும் பெருந்தெய்வ வழிபாட்டையும் போற்றும் செயல்களும் பல பார்ப்ப்னரகள் கதாபாத்திரங்களாக வருவது நிகழும். மாடல மறையோன்.

    எனவே தமிழ்ப்பழங்குடியினரின் வாழ்க்கையை சிலம்பு பேசவில்லை. நன்கு வளர்ச்சியும் வைதீக நெறியும் நிறைந்த தமிழகத்தையே பேசுகிறது.

    ஜடாயு வேறு பழமையான சங்க நூலைக்காட்டலாம். ஆனாலும் என்ன செய்ய? முதறசங்கமே கி பி இரண்டில்தான் என்கிறாரே இரா. பி. சேதுப்பிள்ளை.

  43. ஆழ்வார்கள், நாயன்மார்கள், பல்லவர்கள் காலங்களெல்லாம் தமிழகத்தின் பழங்குடி மக்கள் காலமல்ல.

    பூவண்ணன் கருத்து நுட்பமாக உள்ளது. தெலுங்கு மக்களின் தெய்வமே நரசிம்மர். பன்னெடுங்காலமாக. திருப்பதி வெங்கடேசரை அவர்கள் தொழ ஆரம்பித்த காலம் வெகு பின். எங்கு பார்த்தாலும் நரசிம்மர் கோயில்களே. அஹோபிலமும் அங்கேதான்.

    திருமாலைப்பற்றி பரிபாடல் சொல்கிறது. நரசிம்மரைப்பற்றி ஏதேனும் சங்கப்பாடல் உண்டா ஜடாயு? இருந்தால் சொல்லுங்கள்.

    இதைப்பற்றிப்பின்னர் எழுதுகிறேன். எப்படி தொடர்கிறது என்று பார்க்கலாம்.

  44. சாரங் ,கிருஷ்ணகுமார் சார்

    இந்த புத்தகத்தில் பல ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை ஆணித்தரமான ஆதாரங்கள் என்று யாரையும் நம்ப சொல்லவில்லை. ஆனால் எழுப்பும் கேள்விகளை மறைக்கும் வேலைகள் தான் இன்றும் நடந்து வருகிறது
    பத்ரிநாத் கோவில்,ஆதிசங்கரர் ஜோஷிமேதில் தவம் செய்த குகை என்று அங்கேயே எப்படி அவர் புத்த விஹாரத்தை மாற்றினார்,சிலையை கண்டடுத்தார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்
    ஆந்திராவில் புத்த விஹாரங்களின் பழமையையோ,அல்லது அசோகரின் காலத்திற்கு முந்தைய கோவில்கள் ஏதாவது உண்டா என்று சற்று தேடி பாருங்கள் .உண்மை உங்களுக்கே விளங்கும்

    https://ambedkar.org/Tirupati/

    Precedents of usurping Buddhist Temples for Brahmanic use

    It was shown that Image Worship originated amongst the Buddhist and that the struggle between Brahmins and Buddhists was the cause of it. Brahmanism took over many Buddhist Temples for Brahmanical use, for example Ter, Chezarala, Aihole, Undavali, Ellora. It was shown that chiseling out Buddhist images was the method used in many temples, and Shaivas and Vaishnavas were together in this. Various other examples from Bengal, Puri, Badrinatha, Delhi, Nalanda, Ayodhya, Bodh Gaya, Sarnath and Sringeri are also seen, with special reference to Guntepalli, and also role of Puranas in claiming the Buddhist places and retaining them. We summarized the scholars’ views who have proved that Jagannatha of Puri, Vitthala of Pandharpur, Lord Ayyappa of Sabarimala in Kerala, Draksharama and Srisailam in Andhra were once Buddhist Temples. The relation of Tribals with Buddhism with reference to Puri, Srisailam, and Pandharpur was also discussed.

  45. தமிழ், சிலப்பதிகார காலம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலம் மட்டுமல்ல இன்று கூட பழங்குடிகள் நம் தமிழ் நாட்டில் உள்ளனர். பழங்குடியினர் மக்கள் தொகை இந்தியத்திருனாட்டில் 8 சதவீதத்துக்கும் அதிகம். பழங்குடியினர் அல்லாத மக்களின் பண்பாட்டில் சமயத்தில் பழங்குடிக்கூறுகள் நிறையவே உள்ளன. அப்படியானால் சிலப்பதிகாரம் தேவாரம், திவ்ய பிரபந்தக்காலத்தில் எத்துணை பேர் பழங்குடியினராக இருந்திருப்பார்கள் என்று சிந்திக்கவேண்டும். பழங்குடிகள் அந்தக்காலத்தில் இல்லை என்பது முற்றிலும் தவறு.

  46. புத்தசமயம் அழிக்கப்பட்டது போல் பூவண்ணன் கதைவிடுகிறார். அபிர்காமிய மதங்களான கிறித்தவம் இஸ்லாம் பல்வேறு பழங்குடி சமயங்களை அழித்தொழித்தன. அதனால் பேகன் சமயங்களின் எச்சம் கூட ஐரோப்பாவில் இல்லை. சொராஸ்டிரிய சமயத்தின் எச்சம் பார்சிகள் தஞ்சம் புகுந்த இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் பௌத்தமும் ஜைனமும் இந்தியாவில் இன்னும் வாழ்கின்றன. அவற்றின் நூல்கள் தத்துவம் உயிர்ப்போடு உள்ளன. வைதீகம் இவற்றை அழித்திருந்தால் இவை மிச்சமின்றி இல்லாமல் போயிருக்கும். அங்கே நடந்ததை இங்கே பொருத்தி ப்பார்க்கும் பூவண்ணன் போன்றவர்கள் ஆதாரம் இன்றி பிதற்றுவது மட்டுமே தெரிகிறது.

  47. // திருமாலைப்பற்றி பரிபாடல் சொல்கிறது. நரசிம்மரைப்பற்றி ஏதேனும் சங்கப்பாடல் உண்டா ஜடாயு? இருந்தால் சொல்லுங்கள். //

    சார், ஜடாயு கட்டுரையிலேயே கூறியிருக்கிறார். அதே பரிபாடல் தான் நரசிம்மரையும் சொன்னது. பரிபாடல் – 4 ஐப் பாருங்கள்:

    புகைந்த நெஞ்சிற் புலர்ந்த சாந்திற்
    பிருங்கலாதன் பலபல பிணி பட
    வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
    அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
    இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
    நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
    ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
    படிமதம் சாம்ப ஒதுங்கி,
    இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
    வெடி படா ஒடி தூண் தடியொடு,
    தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;
    புருவத்துக் கரு வல் கந்தத்தால்
    தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
    ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்:

    இதன் விளக்கம்:

    பிருங்கலாதன் நிற் புகழ் – பிரகலாதன் நின்னைப் புகழா நிற்ப,

    புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின் – அது பொறாது சினத் தீயால் புதைந்த நெஞ்சோடும் புலர்ந்த சாந்தோடும் இரணியன் அப்பிரகலாதனை,

    பல பல பிணிபட வலந்துழி – பற்பல பிணிகள் படும்படி பிணித்தபொழுது,

    மலர்ந்த நோய்கூர்நடுக்கத்து அலர்ந்த புகழோன் – அப் பிணிப்பாலே மிகுந்த துன்ப மெய்திய காரணத்தானே நடுக்கத்தையுடைய விரிந்த புகழையுடையோனாகிய அப்பிரகலாதன்,

    இகழ்வோன் தாதையாகலின் – தன்னை இகழ்பவன் தன் தந்தையே
    ஆகலின்;

    இகழா நெஞ்சினன் ஆக – தான் இகழாதவனாய் நிற்ப,

    நீ இகழா – நீ அவ்விரணியனை இகழ்ந்து,

    நன்றா நட்ட அவன் நன்மார்பு முயங்கி – நின்னோடு நன்றாக நண்புசெய்த அப்
    பிரகலாதன் வருந்தாமல் அவனுடைய நல்ல நெஞ்சத்துப் பொருந்தி,

    ஒன்றாக நட்டவன் உறுவரை மார்பில் – நின்னோடு ஒன்றாக வரங்கொண்ட அவ் விரணியனுடைய பெரிய மலை போன்ற மார்பின்கண்,

    படிமதம் சாம்ப ஒதுங்கி – பகைவலி அழியப் பாய்ந்து,

    இன்னல் இன்னரொடு – துன்பத்தைக் காட்டும் உற்பாதங்களொடு பொருந்தி,

    இடி முரசு இயம்ப -அவ் விரணியனது இடியை ஒத்த முரசு ஒலியாநிற்ப,

    வெடிபடா ஒடி தூண் தடியொடு – நீ பிளவுபட்டு வெளிப்படுதலாலே ஒடிந்த தூணினது பிளப்பினோடே,

    தடிதடி- நின்னால் பிளக்கப்பட்ட அவ்விரணியனது தசை,

    பலபட – பற்பல வீழாநிற்ப,

    வகிர் வாய்த்த உகிரினை – வகிர்தல் பொருந்திய நகத்தினை உடையை;

    இப்போ எங்கே போய் ஒளிந்துக் கொள்ளப் போகிறீர்கள் தமிழ், பூவண்ணன்?

  48. கந்தர்வன்!

    பரிபாடலில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் சரி. சங்கப்பாடல்களில் காலமெது? அதற்குமுன் நரசிம்மர் தமிழர் தெய்வமா என்பதை விளக்கவும்.

    அதற்குமுன், தமிழ்ப்பழங்குடியென்றால் எக்காலத்திலிருந்து வரும் என்பதையும் ஜடாயு விளக்கவும்.

    இது தெரியாமல் விவாதித்துப்பலனில்லை. ஏனெனில், வைதீகமதமும் வைதீகத்தெய்வங்களும் தமிழ்ப்பழங்குடியினரின் வழிபாட்டிலில்லை. முதலில், இந்து என்ற சொல்லே வெள்ளைக்காரன் தந்தது. அப்படியிருக்க, தமிழ்ப்பழங்குடியினருக்கு எப்படி இந்து தாங்கள்; தங்கள் மதம் இந்து எனத்தெரியும்? வைதீக மதம் வேதங்களையும் உபநிடதங்களையும் இதிகாசங்களையும் நம்புகிறது. அவை தமிழர்களால் எழுதப்பட்டவையல்ல. அவை தமிழ்மொழியிலில்லை. வடமொழியில். அம்மொழி தமிழர் மொழியன்று. திருமாலில் அவதாரங்கள் வடக்கிருந்து வந்தவை. அவ்விறக்குமதி எப்போது நிகழுந்தது? சங்ககாலம் அல்லது அதற்கு முந்தி எனலாம். எனினும், பழங்குடித்தமிழர்கள் ஆர்? எக்காலம்? அக்காலத்திலேயே வந்தது என்றால் வைதீக மதம் 200000 ஆயிரமாண்டுகளுக்கு முந்தியதாக இருக்கவேண்டும். எனவே தான் கேட்கிறேன்; பழங்குடியினர் என்றால் ஆர்?

    தமிழ்ஹிந்து என்ற சொல்லே ஒரு போலி. ஏனென்றா,ல் சிவவிபூதிபூஷண் காட்டிய வழிபாட்டுமுறைகள் இருந்தன; ஆனால் அவை என்ன மதம்? பேகன் என்றுதான் சொல்லமுடியும்.

    நான் பூவண்ணன் அன்று. காவ்யா @ ஜோ அமலன் ராயன் பர்னான்டோ@திருவாழ் மார்பன்

    நாமங்கள் பலவென்றாலும் கருத்து ஒன்றே. கருத்தோடு கருத்து மோதட்டும், ஒரு தெளிவு பிறக்க ஏதுவாகும்.

    பூஷண்1

    உங்கள் மடலில் ஒரு அறியாமையைக்காண்கிறேன்.

    பழங்குடியினர் என்பதை மலைஜாதியினர் என்ற அளவில்தான் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறீர்கள். அதாவது இன்று நீலகிரியில் வாழும் தோடர்களைப்போல.

    தமிழ்ப்பழங்குடியினர் எம்மதத்தைக் கொண்டவர்கள் என்றால், அதன் பொருள் உங்கள் (நீங்கள் தமிழரென்று கொண்டு பேசினால்) மூதாதையர்களைக்குறிக்கும். முதுமக்கள் என்ற சொல்லே சாலப்பொருத்தம். முதுமக்கள் தங்கள் முதியோரை தாழிகளில் நிறக வைத்து அடக்கம் (அல்லது புதைத்தல்) செய்தார்கள் என்று படிக்கிறோம். அத்தாழிகளையும் அருங்காட்சியயங்களின் பார்க்கிறோம். அதன் கீழ் இத்தாழ் இங்கு கிடைத்தது. இதன் காலம் 30000 ஆயிரமாண்டுகளுக்கு முன் இருக்கலாமென்று எழுதியிருப்பார்கள். இவர்கள் எப்படி இறைவழிபாடு கொண்டிருந்தார்கள் என்பதை உங்கள் முதல்மடல் கோடிட்டிக்காட்டுகிறது.

    கேள்வி:

    இம்முதுமக்கள், அதாவது தமிழர்களின் ஆதிமூதாதையர்களுக்கு வைதீகக்கடவுளான நரசிம்மர் தெரியுமா?

  49. காவ்யா @ தமிழ்

    //
    , இந்து என்ற சொல்லே வெள்ளைக்காரன் தந்தது. அப்படியிருக்க, தமிழ்ப்பழங்குடியினருக்கு எப்படி இந்து தாங்கள்; தங்கள் மதம் இந்து எனத்தெரியும்//

    ரெம்ப புளிச்சு போன விஷயம். இதை கையில தூக்கி கிட்டு மேடம் மாற்றம் கும்பல் ஒண்டி தான் அலையுது.

    பரிபாடல்களின் காலம் சங்ககாலத்தையும் முற்பட்டது.

    சேரமான் பெரும்சேரலாதன் கௌரவ பாண்டவ சேனைகளுக்கு உணவு தந்ததாக பரிபாடல் உள்ளது, இது சும்மா வெட்டி பரிபாடல் கிடையாது. ஒரு அரசனை புகழ வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் அவர் பாண்டவ சேனைக்கு உணவு தந்தார் என்று மட்டும் தான் இருக்கும்.

    //
    @ ஜோ அமலன் ராயன் பர்னான்டோ@திருவாழ் மார்பன்

    நாமங்கள் பலவென்றாலும் கருத்து ஒன்றே
    //

    அட அப்போ சனாதன தர்மம் ஹிந்து மதம் என்று ஆகக் கூடாதோ. பெயர் என்னவா இருந்தா என்ன சார்.

  50. இந்து மதம் கோகோ கோலா போல ஒரு multinational கம்பெனி
    அது பரவும் போது முன்பே அங்கிருக்கும் goldspot கம்பனியை முழுவதுமாக வாங்கி விடும்,எடுத்து கொள்ளும்
    ஒரே மாதிரி இருக்கும் பாண்டா ,goldspot இன் மூலவர் என்று கோல்ட்ச்போட்டை வழிபாட்டை நிறுத்தி விடும்,மாற்றி பாண்டா பக்கம் திருப்பி விடும்
    thums up சில விஷயங்களில் உதவும் என்றால் அதை வைத்து கொள்ளும் .அதில் தன் கதைகளை,தன் வழிப்பாட்டு முறைகளை புகுத்தும்
    trio ,சோலோ ,போவொண்டோ போன்றவற்றை விட உயர்ந்தது என்ற விளம்பரத்தை பெருமளவில் நடத்தி அவற்றை அழிக்கும்

    பன்னீர் சோடாவும்,கோலி சோடாவும் கெடுதல்,அவை உருமாறி சுகாதார முறையில் தயாராவது தான் கோலா என்று அதனோடு இணைத்து வரலாறு உருவாக்கும் .அவை மறைந்த பிறகு அவற்றை பண்டைய பழங்குடி தெய்வங்கள் என்று மரியாதை கொடுக்கும்

    நாம் வார்த்தைகளை புகுத்தி தேடினால் ரஜினிகாந்த் கூட வேதத்தில் கிடைப்பார்

    புத்த மதம் முற்றிலும் தோல்வியுற்ற காலகட்டம் பத்தாம் நூற்றாண்டிலேயே நடந்து விட்டது.அதற்கு பிறகு தான் பெருமளவில் பெருமாள் வழிபாடு ஆந்திராவில்.இங்கே இஸ்லாமியர் எப்படி நுழைகிறார்கள் திரு சிவஸ்ரீ புஷன்

  51. திரு தமிழ்
    “தமிழ்ப்பழங்குடியினர் எம்மதத்தைக் கொண்டவர்கள் என்றால், அதன் பொருள் உங்கள் (நீங்கள் தமிழரென்று கொண்டு பேசினால்) மூதாதையர்களைக்குறிக்கும். முதுமக்கள் என்ற சொல்லே சாலப்பொருத்தம்”.
    முதுமக்கள் என்பதும் பழங்குடி என்பதும் வேறல்ல. தமிழ்! பழங்குடி என்பது அன்று வாழ்ந்த மக்கள் என்பதன்று. அது ஒரு வாழ்க்கை முறை. இன்று வாழ்கிற மக்களும் தோடர், கோத்தர்(கோவ்), இருளர், குறும்பர், மீனா பழங்குடிகளாக மானுடவியலாளர்களால் கருதப்படுகின்றனர். நாட்டில் உள்ள சாதிகள் உப சாதிகள் ஆயிரம் ஆயிரம் இவையும் தனிப்பழங்குடிகளாக இருந்தன. இப்படிப்பட்ட பல்வேறு பழங்குடிகள் சமய சமூகப்பொருளாதரரீதியில் ஒன்றின. ஒரு சில அப்படியே இருக்கின்றன. அவையும் வேகமாக தமது தனித்தன்மையை இழந்து வருகின்றன.

  52. திரு தமிழ்! தமிழ் ஹிந்து என்பது போலியல்ல அது உண்மை. ஏன் என்றால் ஹிந்துவாக இருக்கிற தமிழர்கள் மட்டுமே தங்களை முழுமையாகத் தமிழர்கள் என்று நம்புகிறார்கள் தமிழ் பண்பாட்டில் வாழ்கிறார்கள். ஆக ஹிந்துக்கள் மட்டுமே தமிழர்கள். எந்த தமிழ் பண்டிகையையும் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கொண்டாடுவதில்லை இங்கே குறிப்பிடத்தகுந்தது. இலங்கையில் தமிழே பேசினாலும் முஸ்லீம்கள் தமிழர் என்று சொல்வதில்லை. மொழி என்பது நிச்சயம் சமயத்தோடு இணைந்ததுதான். தமிழ் ஹிந்து என்பது மக்களை அடையாளப்படுத்துவதற்கு மட்டுமல்ல தமிழர்கள் தங்கள் பண்பாட்டு சுதந்திரத்தை வழிபாட்டு சுதந்திரத்தை காப்பதற்காகத்தான். இன்றைக்கு திருதிரு தமிழ் போன்றவர்கள் ஹிந்து என்பது போலி என்று கூவுவது ஹிந்து என்ற அடையாளம் உறுதிப்பட்டுவிட்டதால் மதமாற்றம் செய்ய முடியவில்லை என்பதால்தான். போலி மதச்சார்பின்மை வாதிகளும் இதில் ஆமாம் போடுகிறார்கள்.

  53. ////”இந்து மதம் கோகோ கோலா போல ஒரு multinational கம்பெனி
    அது பரவும் போது முன்பே அங்கிருக்கும் goldspot கம்பனியை முழுவதுமாக வாங்கி விடும்,எடுத்து கொள்ளும் ஒரே மாதிரி இருக்கும் பாண்டா ,goldspot இன் மூலவர் என்று கோல்ட்ச்போட்டை வழிபாட்டை நிறுத்தி விடும்,மாற்றி பாண்டா பக்கம் திருப்பி விடும் thums up சில விஷயங்களில் உதவும் என்றால் அதை வைத்து கொள்ளும் .அதில் தன் கதைகளை,தன் வழிப்பாட்டு முறைகளை புகுத்தும்
    trio ,சோலோ ,போவொண்டோ போன்றவற்றை விட உயர்ந்தது என்ற விளம்பரத்தை பெருமளவில் நடத்தி அவற்றை அழிக்கும்”////

    பூவண்ணன் இப்போது புரிகிறது நீங்கள் அக்மார்க் அபிராகாமியர் என்று. ஹிந்து மதம் அனைத்தையும் உள்வாங்கும் அழிக்காது. இது கிறிஸ்தவ மிசனரிகளின் நாட்டாரியல் கட்டுக்கதை. அப்படி அழிப்பது அழித்தது அபிராகாமியமே. ஹிந்து மதத்தில் மட்டுமே குலதெய்வம், ஊர்தெய்வம், முன்னோர்வழிபாடு ஆகியவை சாத்தியம். ஒருகுலத்தின் தெய்வம் தேசமுழுதும் வழிபடப்படும் தெய்வத்தோடு இணையும் மேல்னிலையாக்கம் அதனால் பெருமையன்றி சிறுமையில்லை. கிறிஸ்தவம் போல் சாத்தான் என்று சாடாது. கிறித்தவம் அழித்த பண்பாடுகள் ஆயிரம்மாயிரம். அப்படி அழிப்பதற்கு கிறிஸ்தம மதம் பரப்ப வழி செய்ய உங்களைப்போன்றோர் விடும் கதைகளை உடைத்தெரியவே முனைகின்றோம். இன்று ஹிந்து சமய்த்தின் பெருந்தெய்வங்களாகப் போற்றப்படும் அத்துணை தெய்வங்களும் சிவபெருமான், பராசக்தி, திருமால் அனைவரும் பழங்குடிகளால் வணங்கப்பட்டவையே. பாலைவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன அல்ல. வடநாட்டில் பல பேர் நம்மைப்போல கறுப்பாக இருக்கிறார்கள். அன்னை காளியும் திருமாலும் நம்மைப்போல் கருப்பாக இருக்கிறார்கள். அவதார புருசர்களாம் ஸ்ரீ ராமனும் திரு கண்ணணும் கறுத்த நிறத்தவர். ஆக இதில் இறக்கு மதி என்பது மதமாற்றும் உலகை ஓரே சமயம், புத்தகம் தூதுவரின் கீழ் கொண்டுவரும் அபிராகாமிய கற்பனைக்கதை. அதைத்தமிழ் பெயரில் வெளியிட்டாலும் பகுத்தறிவோம்.

  54. அன்பு சிவபூஷன்
    இப்ப கூட அந்தமானில் பழங்குடிகள் வாழ்கிறார்கள்.கிருத்துவ மிஸ்ஸிஒநரியொ ஹிந்து மிஸ்ஸிஒநரியொ அவர்களை சென்று அடையவில்லை
    அவர்களிடம் ராமர்,நரசிம்மர்,வேதங்கள் இருக்குமா
    வட கிழக்கில் பழங்குடிகள் உண்டு.சிலர் இப்போது தான் சில ஆண்டுகளாக வெளி மனிதர்களோடு தொடர்பு கொள்கிறார்கள்.அவர்கள் தொடர்பு கொள்ளும் கிருத்வர்கலாக இருந்தால் கிருத்துவர் ஆகிறார்கள் ,ஹிந்துக்களாக இருந்தால் ஹிந்துக்கள் ஆகிறார்கள்
    அதே தானே இந்திய துணை கண்டம் முழுதும் நடந்திருக்கும்
    இந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் வேதங்கள்,ராமன்,நரசிம்ஹன்,இரண்ய கசிபு சுயம்புவாக தெரிந்திருக்கும் என்று எப்படி என்னை நம்ப சொல்கிறீர்கள்
    ஒரே சாதியை சேர்ந்த வேறு மாவட்டங்களில் வாழும் என் உறவினர்கள் ஒரு மாவட்டத்தில் இறந்தவர்களை புதைக்கிறார்கள்,இன்னொருவர் எரிக்கிறார்கள்
    அவர்களை சென்றடைந்த பாதிப்புகள் அப்படி,ஆண்ட மன்னனுக்கு வந்த வியாதிகள்,வராத வியாதிகள் காரணமாக மாறியவை அவை
    கடவுள்களை ,வழிப்பாட்டு தெய்வங்களை ஒன்றோரோன்று தொடர்பு ஏற்படுத்தும் கதைகள் உருவான வரலாறு வந்தால் பல குழப்பங்கள் தீரலாம்
    மேலே நான் தந்த இணைப்பில் திருப்பதி கோவில் பற்றி உள்ளதே படித்தீர்களா
    ஆந்திராவிற்கு வந்தீர்கள் என்றால் இன்றும் பல பாழடைந்த புத்த விஹாரங்களில் லிங்கங்கள் வைத்து வழிபாடுகள் செய்யும் வழக்கம் வந்து விட்டதை பார்க்கலாம்
    நமக்கு நாமே திட்டம் தான் என் கடவுள் கதைகள் முதலில் துவங்கியது,பழைமையான சிலை எங்கள் சாமி சிலை,ஆதி மனிதன் வழிபட்டது எங்கள் கடவுள் தான் என்ற கூற்றுக்கள்
    நான் ஹிந்து மதத்தை குறைவாக சொல்லவில்லையே.இந்த கேள்வி கேட்கும் உரிமை ஹிந்துக்களுக்கு என்றும் இருந்தது தானே
    சில இடங்களில் மட்டும் புத்தர் எப்படி அவதாரமானார்,பல இடங்களில் புத்த விஹாரங்கள் கோவிலாக மாற்றப்பட்டது என் என்ற கேள்விகளுக்கு விடை தேடுவது தவறா
    பத்ரிநாத் மூலவர் சிலை ஏன் மிகவும் வித்தியாசமாக உள்ளது,ஆதி சங்கரர் எப்படி புத்த விஹாரத்தை கோவிலாக மாற்றினார் (அவர் சிவா,விஷ்ணு ,ஸ்ரிங்கேரியில் சாரதாம்பாள் கோவில் என அனைத்து கடவுள்களுக்கும் கோவில் எழுப்புவதும் ஆச்சரியம் தான் ).அசோகர் காலத்தில் இருந்து அது புத்த விகாரமாக இருந்தது என்பதை படித்தீர்களா
    இந்த கேள்விகளில் தவறு எங்கே வருகிறது.விருப்புவெறுப்பற்ற ஆராய்ச்சிகள் செய்து இல்லை அவை புத்த விஹாரங்கள் அல்ல என்று மறுப்பு தாருங்களேன்

  55. சாரங்கன் அல்லது சாரங்கபாணி!

    நல்ல பெயர். கும்பகோணத்துப்பெயர். வாழ்த்துக்கள்.

    போகட்டும்.

    புளித்தால் உண்மை பொய்யாகுமா? பொய் உண்மையாகுமா? ஆகாது.

    ஹிந்து என்ற பெயர் ஒரிஜனல் அன்று என்பதே நான் சொல்வது. இதைப்பொய் என்றால் சொல்லி விடுங்கள். உண்மையென்றால், அதென்ன புளிச்ச உண்மை புளிக்காத உண்மை? எனக்குத் தெரியவில்லை. இட்லியா இது?

    சனாதன தர்மம் என்பதே வைதீக மதத்தின் பெயர். இல்லயென்றால் தெளிவு படுத்தவும். சும்மா வெள்ளைக்காரன் தந்த பெயரை வைத்துக்கொள்வோம் என்றாலும் சரி. எப்படிச்சொன்னாலும் ஒரிஜனல் வேறே என்பதுதான் நான் சொல்வது.

    பரிபாடல் சங்கப்பாடலுக்கும் முன் என்ற மாபெரும் உண்மையை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அளித்திருக்கிறீர்கள். ஆனால் ஆதாரம் தாருங்கள். அக்காலமெது என்பதற்கும் ஆதாரம் தாருங்கள். முதற்சங்க நூலே என்றெடுத்தாலும், அச்சங்க காலம் கி.பி 2 லிருந்துதான் என்கிறார் ரா பி சேதுப்பிள்ளை. அதற்கும் பின் தள்ளுகிறார் வையாபுரி பிள்ளை.

    சும்மா திராவிட வியாதி உங்களுக்கு வரவேண்டாம்: கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே என்ற வியாதி ஏன்?

    சொல்க: பரிபாடலில் காலமெது? சங்ககாலத்துக்கு முன்னென்றால் அப்படி எத்தனை நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன? உங்கள் தமிழறிவை எங்களுக்குக்காட்டுங்கள்.

  56. //சேரமான் பெரும்சேரலாதன் கௌரவ பாண்டவ சேனைகளுக்கு உணவு தந்ததாக பரிபாடல் உள்ளது, இது சும்மா வெட்டி பரிபாடல் கிடையாது. ஒரு அரசனை புகழ வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் அவர் பாண்டவ சேனைக்கு உணவு தந்தார் என்று மட்டும் தான் இருக்கும்//

    சாரங்கன்!

    தமிழ்ஹிந்து காமின் நான் படித்தவரை எவரும் தமிழறிஞர் கிடையாது. ஆராய்ச்சியாளரும் கிடையாது. ஆராய்ச்சியாளர்களெனில், அவர்கள் இங்கு மட்டும் அதைச்சொல்ல மாட்டார்கள். பல சபைகளில் சொல்வார்கள். நூலகளாகவும் வெளியிடுவார்கள். ஏனென்றால், தங்கள் தங்கள் ஆராய்ச்சி நான்கு பின்னூட்டக்காரர்களுக்கு மட்டும் தெரிந்தால் மட்டும் போதுமென நினைக்கமாட்டர்கள்.

    இங்கு எழுதுவோர் அப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தந்த நூல்களைப்படித்துதான் சொல்கிறோம். அவைகள் இரகசியார்த்தங்களோ பகவத் விஷயங்களோ அல்ல சாரங்கனுக்கு மட்டும் தெரிவதற்கு.

    நூலகங்களில் இலகுவாக படிக்கலாம்.

    எனவே சாரங்க் பரிபாடலில் அப்படிச் சொல்லியிருப்பதற்கு நீங்களே அர்த்தம் சொல்லக்கூடாது. நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது ஒரு தமிழறிஞராகவோ இல்லாவிட்டால் உங்களுக்குத் தகுதியில்லை.

    தமிழாராய்ச்சியாளர்கள் எவரேனும் சொல்லியிருக்கிறார்களா என்றுதான் காட்டவேண்டும். அப்படி பாண்டியன் குருசேத்திரப்போருக்கு உதவினான் என்று எவரேனும் சுட்டியிருக்கிறார்களா? அதாவது பரிபாடலில் சொல்லப்பட்ட அரசன் ஆர் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் காலம் எக்காலம்? அதை கண்டுபிடிக்க என்ன என்ன ஆராய்ச்சிகள் செய்திருக்கிறீர்கள்?

    குருச்சேத்திரப்போரின் காலமெது? சேரனின் காலமெது? பரிபாடலில் சொல்லப்பட்ட போர் எப்போர்? குருச்சேத்திரப்போர்தானா?

    இவைகளை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? அல்லது வேறு ஆரேனும் உங்களுக்குச் சொன்னார்களா எல்லாவற்றையும் ஆதரத்தோடுதான் பேசனும். சும்மா அடிச்சுவிடக்கூடாது.

  57. திரு பூஷண்!

    வார்த்தை ஜாலங்கள் நமக்கு வேண்டா. நான் குறிப்பிடுவது இன்று வாழம் பழங்குடிகளை அல்ல. வாழ்ந்து மறைந்த உங்கள் ஆதி மூதாதையர்களைத்தான். அவர்களுக்கு நரசிம்மரைத் தெரியுமா?

  58. திரு பூஷன்
    புரிதல் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறது. அரைகுறையாகப் புரிந்துவிட்டு எங்கெல்லாமோ போய் விட்டீர்கள்.

    நான் சொன்னது:

    “தமிழ் ஹிந்து என்ற சொல் போலியென்றால், அதிலுள்ள ஹிந்து என்ற சொல்லையும் தமிழ் என்ற சொல்லையும் இணைக்கமுடியா. ஏனெனில் தமிழ் என்ற மக்கள் ஆதிகாலந்தொட்டு நீங்கள் வாழும் நிலவுலகில் வாழ்ந்து வருகிறார்கள். (தமிழ்நாட்டிலிருந்துதானே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?) ஹிந்து என்ற சொல் ஆதிகாலச்சொல் அன்று. அது வெள்ளைக்காரன் எழுதியது. அவனுக்கு முன் இச்சொல் இருந்த்தா?; எங்கிருந்தது? அதுஃ ஆதி தமிழ் மக்களுக்குத் தெரியுமா? இக்கேள்விகளுக்கு உங்கள் விடைகள் ‘ஆம்’ என்றால், தமிழ் ஹிந்து என்ற கூட்டுச்சொல் போலியாகாது. இல்லையென்றால் போலி.”
    இதற்கும் சமயம், மதமாற்றம் போன்றவைகளுக்கும் தொடர்பில்லை.

    என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஹிந்து என்ற பெயர் ஆர் கொடுத்தது? எப்போது கொடுத்தது? முதுமக்களைத் தாழியில் வைத்துப் புதைத்த, நடுகல்லை வணங்கிய ஆதி தமிழருக்கு இச்சொல் தெரியுமா?

    டைரக்ட் ஆன்ஸர்ஸ் ப்ளீஸ் சுவாமி!

  59. Dear puvaanan,
    Hindusiam came first .Then only Buddhisam. Due to islamic invansion ,buddhists abandoned in many places in andra pradesh in later period after 1300CE. Tribal people might use abandoned places.
    you have any evidence ,only buddishts are living in whole people after Gauthama buddha arrival.
    Buddihsts is part of people population not full population of India. Many buddhists reconvert into Hindus due to devotional movement. If not,like muslim accounts clealy kings and other personalities proudly mentioned how demolished their structures and killed many people then forcely converted people.
    In silapathikaram, clearly mentioned Tirupathi,Srirangam and Kanchi are three important places of Vaishnava worship. I am not unknowingly whether you read Tamil sangam text books properly or not.

  60. இரண்டு நாட்கள் இங்கு வர முடியாத சூழல்.. நிறைய விவாதம் நடந்திருக்கிறது என்றூ பார்க்கிறேன்.

    அன்புள்ள தமிழ், உங்களது மறூமொழிகளில் சவடால் இருக்கும் அளவுக்கு சாரம் இல்லை.

    அ) ரிக்வேத காலம் முதல் இன்று வரை பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பன்முகப்பட்ட பண்பாட்டு, கலாசார, சமய வாழ்க்கை நெறியைக் குறிக்க ஹிந்து என்ற அந்தச் சொல் உலகளவில் இவ்வாழ்க்கை நெறியைக் கைக்கொள்பவர்கள் அனைவராலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.. எனவே, அனாவசியமாக அது குறித்து உங்கள் காழ்ப்புணர்வை மீண்டும் மீண்டும் வெளீப்படுத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது இந்த விவாதத்திற்கு உதவப் போவதும் இல்லை. “ஹிந்து” என்ற சொல் வெள்ளைக் காரன் தந்ததல்ல, குறைந்தது 1200 ஆண்டு வரலாறு கொண்ட சொல் அது.. ஹிந்து மதம், ஹிந்து அடையாளம் குறித்து ஏற்கனவே ஒரு விரிவான கட்டுரையை இதே தளத்தில் எழுதியுள்ளேன். அக்கட்டுரைக்கு முதலில் தர்க்க பூர்வமாக எதிர்வினையாற்றூங்கள் –

    https://tamilhindu.com/2011/11/hindu_identity_what_and_why_1/
    https://tamilhindu.com/2011/11/hindu_identity_what_and_why_2/

    ஆ) பழந்தமிழனுக்கு தான் “ஹிந்து” மதத்தவன் என்று தெரியுமா என்கிறீர்கள்.. வரலாற்றில் ஏசு என்று ஒருவர் இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம், அவரது சீடர்களுக்கு தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் பெயர் “கிறிஸ்தவம்” என்று அப்போதே தெரிந்து விட்டதா என்ன? இப்படியெல்லாம் தெள்ளத் தெளிவாக ஜம்மென்றூ எழுதி வைத்து இருந்தால் தான் ஒத்துக் கொள்வேன் என்ற உங்கள் “ஆய்வு தராசு” புல்லரிக்க வைக்கிறது.. ஒரு பண்பாட்டு, கலாசார உருவாக்கம் எப்படி படிப்படியாக உருவாகி நிகழ்கிறது என்பது பற்றீய அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவன் தான் இப்படி அபத்தமாக கேள்வி கேட்பான்.

    இ) உண்மையில், பழந்தமிழனுக்கு தான் “தமிழன்” என்று பிரக்ஞைபூர்வமாகத் தெரிந்தபோது அவன் பதிவு செய்து வைத்ததில் இருந்து அவன் “ஹிந்து” மதத்தவனே என்றூ தெளிவாகத் தெரிகிறது. இன்றூ நமக்குக் கிடைக்கும் ஆதிப் பழந்தமிழ் வாழ்க்கைப் பதிவுகள் என்றால் சங்க இலக்கியங்களே.. “அதற்கும் முன்பு அப்படி இருந்தது இப்படி இருந்தது” என்றேல்லாம் ஏதாவது சொன்னால், நல்ல கற்பனை என்றூ பாராட்டலாம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை *ஆதாரமாக* கொள்ளப் படாது.

    ”சங்கத் தமிழர் வாழ்வும் சடங்குகளும்” என்று ஒரு சிறந்த நூலை பேரா. சண்முகம் பிள்ளை எழுதியிருக்கிறார் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு). அதில் சங்க இலக்கியங்களில்
    – வேதங்கள், வேள்விகள்
    – அக்னி, வாயு, வருணன் முதலான முப்பத்து மூவர் தேவர்கள்
    – பிரம்மா, விஷ்ணு, சிவன், சக்தி ஆகிய தெய்வங்கள்
    – ராமாயண, மகாபாரத குறிப்புக்கள்
    – புராணக் கதைகள்
    – இமயமலை, கங்கை ஆறு பற்றிய குறிப்புகள்

    எங்கெங்கெல்லாம் உள்ளன என்று ஒரு encyclopedia போல தொகுத்திருக்கிறார்., ஏதோ ஒன்றிரண்டு நூல்களீல் அல்ல, பொருனராற்றூப் படை, அகநானூறூ, புறநானூறு, பரிபாடல் முதலானஎல்லா நூல்களிலும் நூற்றுக்கணக்கான வரிகளில் இந்தக் குறிப்புகள் உள்ளன.

    எனவே, சங்க காலத் தமிழர்கள் வேத வேள்விகள் செய்து, சிவனையும் விஷ்ணுவையும் கோயிலில் கும்பிட்டு, நதிகளையும் காடுகளையும் கோள்களையும் மீன்களையும் வணங்கி, இதிகாசங்களையும் புராணங்களையும் கற்று, மிருக பலியிட்டு, மலர் தூவி, வெறியாட்டு ஆடி, பொங்கல் வைத்து – இப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்று தமிழாய்வுகள் ஐயம் திரிபற நிரூபிக்கின்றன.

    மொத்தத்தில், இன்றைக்கு, 2012ம் வருடம் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பின்பற்றும் சமய வாழ்க்கைக் கூறுகள் அனைத்தையும் அப்படியே சங்கத் தமிழர்கள் பின்பற்றீயிருக்கிறார்கள்.

    என்ன அநியாயம் இது என்றூ நீங்கள் கேட்கலாம். ஆனால் என்ன செய்வது, உண்மை அப்படித் தானே இருக்கிறது?

  61. தமிழ், நான் சிலப்பதிகார வரிகளை *உதாரணமாக* என்று குறீப்பிட்டிருப்பதைக் கவனிக்கவும். உடனே, நான் ஏதோ அது ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கூறியது போலவும், சிலப்பதிகாரம் பிற்காலத்தியது என்றூ நீங்கள் மடக்கி விட்டது போலவும் எழுதுகிறீர்கள்..

    ஆம், சிலப்பதிகாரம் “பிற்காலத்தியது” தான். அது பொ.பி 5-6ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவோ, அல்லது அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு களப்பிரர் காலத்தின் முற்பகுதியில் எழுந்ததாகவோ இருக்கலாம்.

    எப்படியானாலும், தொல்தமிழர் வாழ்வு, வர்லாறு, பண்பாடு பற்றிய முதல் முழுமையான நூல் என்றால் சிலப்பதிகாரம் தான். கிரேக்கத்துக்கு இலியட்/ஒடிஸி போல, சம்ஸ்கிருததத்திற்கு ராமாயணம்/பாரதம் போல, தமிழுக்கு சிலம்பு. அதுவே தமிழின் முதல் காவியம். அதன் முக்கியத் துவத்திற்கும் தனிச்சிறப்பிற்கும் காரணமும் இதுவே.

    தமிழ்ச் சமூகம் சிறு சிறு குடித்தலைவர்களால் ஆளப்பட்ட காலத்திலிருந்து மூன்று முடிமன்னர்களால் ஆளப் படும் காலகட்டத்தை நோக்கிய நகர்வின் சித்திரத்தை சிலம்பு அளிக்கிறது. சங்க இலக்கியங்களின் பரிமாண வளர்ச்சியின் கடைசிக் கண்ணி சிலம்பு. எனவே அந்த நூல் குறீப்பிடும் விஷயங்கள் அனைத்தும் தமிழரின் தொல் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப் படுவது மிக இயல்பானதே. நான் முந்தைய மறுமொழியில் குறிப்பிட்ட அதே சங்ககால சமயக் கூறுகளின் தொடர்ச்சியையே சிலம்பில் காண்கிறோம், அதனுடன் கூட சமண, பௌத்த, வேதாந்த தத்துவங்களும் சேர்ந்து கொள்கின்றன.. அது சங்க கால சமயத்துடன் முரண்பட்டதாக அல்ல, அதிலிருந்து பரிணமித்ததாகவே உள்ளது.

  62. பூவண்ணன், இனி உங்கள் வாதம் குறித்து,.

    ”இன்றைக்கு காணப்படும் எல்லா புராதன இந்து பெருங்கோயில்களும் ஒரு காலத்தில் புத்த விகாரங்களே” போன்ற பொத்தாம்பொதுவான கருத்துக்களுக்கு மதிப்பில்லை. அவை அண்ணல் அம்பேத்கர் போன்ற சிறந்த ஒரு வரலாற்று ஆய்வாளரால் கூறப்பட்டிருந்த போதிலும் கூட,. பல்வேறு ஆதாரங்களையும் தொகுத்து அலசிப் பார்த்துத் தான் அத்தகைய முடிவுகளுக்கு வர முடியும்.

    ஆம், வைதீக வேள்வித் தூண்கள் (யூப ஸ்தம்பங்கள்) புத்த ஸ்தூபங்களானது போலத் தான், பிற்காலத்தில் விஹாரங்கள் கோயில்களாயின. இந்திய சிற்பக் கலை மரபு வளர்ந்த போது, அதன் கூறுகளை இந்து, புத்த, ஜைன மதங்கள் அனைத்தும் கைக்கொண்டன. எனவே ஒன்றூ போலுள்ள கலைக் கூறூகளை அவற்றில் காணமுடியும்..

    பூரி ஜகன்னாதர் கோயில் புத்த விகாரமாக இருந்து விஷ்ணு கோயிலானது என்று விவேகானந்தரே ஒரு ஊகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் திருப்பதி குறித்து இப்படி எதுவும் தரவுகள் இல்லை. மகாபாரதத்திலும், சிலப்பதிகாரத்திலும் திருப்பதி விஷ்ணு தலமாகத் தான் குறிப்பிடப் படுகிறது. ஆந்திராவில் நாகார்ஜுனகொண்டா, அமராவதி ஆகிய பகுதிகளில் தான் புத்தம் செழித்திருந்தது.. திருப்பதி தனித்திருந்த ஒரு மலை/வனப் பகுதி,. அங்கு புத்தத்தின் சுவடுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை.

    பொ.மு 4 முதல் பொ.பி 4-5ம் நூற்றாண்டுகள் வரை வைதீக, சமண, பௌத்த சமயங்கள் ஒன்றுக்கொன்று விவாதித்தும், கொண்டும், கொடுத்தும் இந்திய நிலப்பரப்பெங்கும் வளர்ந்தன. புத்தர் விஷ்ணு அவதாரமாக ஆனது பற்றித் தான் இங்கு அதிகம் பேசப்படுகிறது. ராமர் தசரத ஜாதகத்தில் போதிசத்வராகவும், ஜைன ராமாயணத்தில் ஜைன முனியாகவும் மாறியது ராமாயணத்தை பௌத்த, ஜைன மதங்கள் தங்கள் மதப்பரப்பலுக்கு கடத்தியதால் தான் என்பது பெரிதாக சொல்லப் படுவதில்லை.. மகாயான பௌத்தத்தின் அத்தனை கூறுகளும் வைதீக இந்து மதத்திலிருந்து கடன் வாங்கியதே ஆகும். புத்தரை பிரபஞ்சமே உடலாகக் கொண்டவராக (தர்மகாய:) வழிபடும் மரபின் வேர் ரிக்வேதத்தின் விராட் புருஷன் என்ற கருதுகோளிலும் அதிலிருந்து கிளைத்த விஷ்ணு வழிபாட்டிலும் தான் உள்ளது.. இந்திரனும், குபேரனும், யட்சர்களும், கந்தர்வர்களும் வைதீக மதத்திலிருந்து தான் ஜைன, புத்த புராணங்களிலும் சிற்பங்களிலும் புகுந்தார்கள்.. இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.. பல ஆய்வாளர்கள் இவற்றை பதிவு செய்திருக்கீறார்கள்.

    இன்றும் ஆயிரக் கணக்கான புத்த, ஜைன சமயச் சின்னங்கள் இந்திய நிலப்பரப்பெங்கும் பரந்திருப்பதே, அவை எவையும் முழுமையாக :ஆக்கிரமிக்கப் படவில்லை என்பதற்குச் சான்று, மேலும் இது எதுவுவே வன்முறை மூலம் நிகழவில்லை, இயல்பாக நிகழ்ந்தது, இது இந்திய சமயங்களுக்கிடையே உள்ள ஒரு System. இதனை கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய ஆக்கிரமிப்புகளுடன் ஒப்பிட முடியாது.

  63. வைதீக இந்து மதம் புத்தெழுச்சி கண்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட பௌத்தம் முழுமையாக அழியவில்லை.. அது பல பகுதிகளிலும் உயிர்த்துடிப்புடனேயே விளங்கியது. புத்த கலையின், ஞானத்தின் உச்சங்களாக திகழும் அஜந்தா் ஓவியங்களும், நாலந்தா பல்கலைக் கழகமும் வைதீக இந்து மத அரசர்களான குப்தர்களின் காலத்தில், அவர்களது பேராதாரவுடன் தான் நிகழ்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.. இது குறீத்து மேலும் அறிய பண்பாட்டைப் பேசுதல் (தமிழ்ஹிந்து வெளியீடு) நூலில் உள்ள ”வைதீகம் பௌத்த மதத்தை அழித்ததா”? என்ற அரவிந்தன் நீலகண்டன் கட்டுரையைப் பார்க்கவும்.

    பௌத்தம் உண்மையில் அழிந்தது, இஸ்லாமியப் படையெடுப்பின் போது தான்.. அண்ணல் அம்பேத்கர் இதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.. நாலந்தாவின் மரணம் என்ற எனது பழைய கட்டுரை ஒன்றில் இதனை மேற்கோள் காட்டியிருக்கிறேன் –

    https://jataayu.blogspot.in/2006/10/blog-post_116196775122737411.html

    “முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள்.

    ” பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்.”

  64. பூவண்ணன்,

    பழங்குடி வழிபாட்டு முறைகளை பெருமதத்துடன் இணைத்து அவற்றுக்கு தத்துவ ரீதியான விளக்கங்கள் அளிப்பது என்பது எல்லா இந்திய மதங்களிலும் உள்ளது தான்.. திபேத்திய பௌத்த மதத்தில் தாரா தேவி, பத்ம பாணீ, அவலோகிதேஸ்வரர், வஜ்ரயானம் இதெல்லாம் எப்படி உருவாயிற்று? தாய்லாந்திலும், வியட்னாமிலும், இலங்கையிலும் உள்ள பௌத்த மதத்தில் பல தனிப்பட்ட தெய்வங்களும் கூறுகளும் வந்ததெப்படி? நீங்கள் குறிப்பிடும் “கோகோ கோலா” வேலையை இந்து மதம் மட்டுமல்ல், பௌத்தமும் மானாவாரியாக செய்திருக்கீறது எனப்தால் தான். அதையாவது புரிந்து கொள்ளுங்கள்.

    இதுவே கிறிஸ்தவம், இஸ்லாமாக இருந்தால் பழங்குடிகளையும், அவர்களது சமயத்தையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து அழித்திருக்கும்.. ஆனால் இந்து, புத்த, ஜைன மதங்கள் அவற்றை உள்வாங்கி தனது பகுதியாக ஆக்கிக் கொண்டன.

    கோகோ கோலா அழிவு சக்தி,, எனவே உங்கள் உதாரணம் தவறு. எனக்குத் தோன்றும் உதாரணம் பொன்பட்டு நூல். வேதாந்த தத்துவம் எப்படி எல்லா இந்து சமய மரபுகளையும் தத்துவரீதியாக இணைக்கிறது என்று விளக்கும் ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பயன்படுத்தியுள்ள அற்புதமான உதாரணம் அது.

  65. ஸ்ரீ பூவண்ணன் உங்களுடையா ஆய்ந்தறியும் ஆர்வத்தை தகவல்களோடு விவாதிக்கும் பாங்கினைப்பாராட்டுகின்றேன்.
    ஸ்ரீ பூவண்ணன்
    “இப்ப கூட அந்தமானில் பழங்குடிகள் வாழ்கிறார்கள்.கிருத்துவ மிஸ்ஸிஒநரியொ ஹிந்து மிஸ்ஸிஒநரியொ அவர்களை சென்று அடையவில்லை. அவர்களிடம் ராமர்,நரசிம்மர்,வேதங்கள் இருக்குமா”.
    ஆம் அந்த மானின் ஓங்கே போன்ற எண்ணிக்கையில் மிக அருகிய தொல்பழங்குடிகள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களையும் மதம் மாற்றும் முயற்சியில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபட்டுள்ளார்கள் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்களிடம் ஸ்ரீ ராமர் இருக்கும் என்று யாரும் கூறவில்லை. மாறாக நாம் சொல்வது சிவபெருமான், திருமால், சக்தி போன்றதெய்வங்கள் பாரதப் பழங்குடிகளில் தோன்றியவை. சமூகக்கலாச்சார பொருளாதார ஊடாட்டத்தின் மூலம் நாடுமுழுக்க நிறந்தவை என்பதே.
    ஸ்ரீ பூவண்ணன்
    “வட கிழக்கில் பழங்குடிகள் உண்டு.சிலர் இப்போது தான் சில ஆண்டுகளாக வெளி மனிதர்களோடு தொடர்பு கொள்கிறார்கள்.அவர்கள் தொடர்பு கொள்ளும் கிருத்வர்கலாக இருந்தால் கிருத்துவர் ஆகிறார்கள் ,ஹிந்துக்களாக இருந்தால் ஹிந்துக்கள் ஆகிறார்கள் அதே தானே இந்திய துணை கண்டம் முழுதும் நடந்திருக்கும் இந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் வேதங்கள்,ராமன்,நரசிம்ஹன்,இரண்ய கசிபு சுயம்புவாக தெரிந்திருக்கும் என்று எப்படி என்னை நம்ப சொல்கிறீர்கள்”.
    வடகிழக்கு மானிலங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரு சிலவற்றில் பெரும்பான்மையினராக உள்ளவர்கள் பழங்குடிகளே. நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிகள். அங்கே தான் வாழ்கிறார்கள். அடியேனும் அவர்களில் ஒருசிலவற்றைப்பற்றி ஆய்ந்து வருகிறேன். பழங்குடிகள் தொடர்பின் மூலம் ஹிந்துக்களாவது வேறு. கிறிஸ்தவ மதப் பரப்பிகளால் மதமாற்றப்படுவது வேறு. தங்களைத்தாங்களே ஹிந்து சமயத்தோடு அவர்கள் இணைகிறார்கள். கிறிஸ்தவ மிசநரிகளால் இல்லாத்தும் பொல்லாததும் சொல்லி மதம்மாற்றப்ப்டுவது வேறு. தங்களது முன்னோர்கள், பண்பாடு, கலை ஆகியவற்றை குறித்த தாழ்வு மனப்பாண்மை கிறிஸ்தவ மிசனரிகளால் ஏற்படுத்தப்பட்டது. பழங்குடி அறிவு நுட்பம், நடனம்,இசையாவும் சாத்தானுடையவை என்று அழிக்கப்பட்டன. ஒரே ஊரில் நன்கைந்து கிறிஸ்தவ சமயப்பிரிவுகள் ஒரே சமூகத்தினை கூறுபோட்டு ஒற்றுமையை குலைத்தும் விட்டன.
    திரு பூவண்ணன்
    “ஒரே சாதியை சேர்ந்த வேறு மாவட்டங்களில் வாழும் என் உறவினர்கள் ஒரு மாவட்டத்தில் இறந்தவர்களை புதைக்கிறார்கள்,இன்னொருவர் எரிக்கிறார்கள் அவர்களை சென்றடைந்த பாதிப்புகள் அப்படி,ஆண்ட மன்னனுக்கு வந்த வியாதிகள்,வராத வியாதிகள் காரணமாக மாறியவை அவை”.
    எரிப்பது புதைப்பது என்பது இரண்டு முறைகளும் இந்த நாட்டில் உள்ளன. துறவிகளை வைதீகர்கள் கூட சமாதி செய்கிறார்கள். ஆன்மீக சாதனையில் ஈடுபட்டுள்ள குடும்பஸ்தர்களையும் புதைப்பது மரபு. ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீ அரவிந்த அன்னை ப்போன்றோர் இறந்தோரைப் புதைத்தலையே வலியுறுத்துகின்றனர். தென்னகத்து வீரசைவர்கள், வடனாட்டு நாத சித்தாந்திகள் போன்றோறும் இன்றும் இறந்தவர்களைப் புதைத்தலையே செய்கிறார்கள்.
    மன்னன் மாறியதால் மதம் மாறியவர்கள் சிறுபான்மையினறே. இல்லை என்றால் இஸ்லாம் இந்தியாவை ஆண்டபோது எல்லோரும் மாறியிருப்பர். வெள்ளையர்கள் நாடுமுழுதும் ஆண்டதால் அனைவரும் கிறிஸ்தவராயிருப்போம். ஸ்ரீ கூன்பாண்டியன் சைவனானாய் நின்றசீர் நெடுமாறன் ஆனது வெப்பு நோயால் என்றால்? சைவர்களை கிண்டல் செய்து மத்தவிலாசபிரகடனம் எழூதிய மகேந்திரவர்ம பல்லவன் சைவன் ஆனது எதனால்.

  66. ஸ்ரீ ஜடாயு உங்கள் பதில் சிறப்பாக அமைந்துள்ளது. சான்றுகள் சரியாகப்பொருந்துகின்றன. ஸ்ரீ கந்தர்வன் சரியான பரிபாடலை கொடுதுள்ளார். பாராட்டுக்கள் வாழ்துக்கள்.
    அன்புடன்
    விபூதிபூஷண்

  67. அன்புக்குரிய ஜடாயு,
    பல்லவ சக்கரவர்த்தி மகேந்திரவர்மன் ஜைனராக இருந்தக்காலத்தில் எழுதிய மத்தவிலாசப்பிரகடனம் தமிழில் கிடைக்கிறதா. அந்த நூலைப்பற்றிய அதிகப்படியான செய்திகள் ஏதேனும் தங்களுக்கு கிடைத்துள்ளனவா. அறிய ஆவல்.
    அன்புடன்
    விபூதிபூஷன்

  68. தமிழ் சார்

    முதலில் இந்த பெரும் சேரலாதன் என்று எழுடியடை படிக்காமலேயே சங்க காலம் பரிபாடல் காலம் யாது. புச்சா கண்டு சொன்னதுக்கு டாங்க்ஸ் என்றெல்லாம் நையாண்டி முடித்து பிறகு இப்போ விஷயத்துக்கு வருவோம்.

    குருக்ஷேற்ற போரின் காலம் யாது என்று நானே கண்டுபிடித்து விடவில்லை. எந்த ஒரு தனி மனிதனும் அப்படி கண்டு பிடித்து சொல்லிவிடவில்லை. ஒரு வித கூட்டு முயற்சியின் மூலம் நிர்ணயம் செய்துள்ளார்கள். அது சுமார் 3067 CE.

    இதை பற்றிய ஆராய்ச்சி புத்தகங்கள் நிறைய உள்ளன [அகழ்வாராய்ச்சி முடிவுகள், மொழியியல், குறிப்பீடுகள், அரச பரம்பரை, கலாசார பரிவர்டனங்கள், வானியல் இதை எல்லாம் ஆதாரமாக வைத்து பலரும் இதை ஒத்துக் கொண்டாகிவிட்டது இந்திய மிசனரிகளை தவிர (ரொமில டாபுரம் ஒத்துக்கவே போறதில்ல] . அதை படித்து விட்டு தான் நானும் சொல்கிறேன். சத்தியாமாக குருக்ஷேத்திரப் போரில் நான் பங்கு கொள்ள வில்லை. அடயார் லைப்ரரியில் படிக்கலாம்.

    பெரும் சேரலாதன் என்பது உண்மையிலேயே ஒரு எம் ஜி யார் படம். அந்த படிபாடல் என்பது கண்ணதாசன் உண்மையிலேயே எழுதிய வரிகள். அதாவது எம் ஜி யார் ஸ்டுடியோவில இருக்குற எல்லாருக்கும் சோறு போடுவாராம். ஒரு தபா கர்ணன் படம் நடுக்குரப்போ கௌரவாலாகவும் பாண்டவாலாகவும் வேஷம் கட்டின எல்லாருக்கும் சோறு போட்டாராம். அத பாத்து மனசு சந்தோசப்பட்டு எழுதின பிட்டு தான் அது.

    எல்லா காலத்தையும் கிறிஸ்துவுக்கு பின் தள்ளினா தான நம்ம ஜோலி நடக்கும்.

    நான் கேக்கர கேள்விக்கெல்லாம் நீங்க ஆம் என்று பதில் சொல்வீர்கள் பாருங்களேன்

    சங்க காலம் கீ பீ தானே ?
    பரிபாடல் காலம் கீ பீ தானே ?
    ஏசுவும் திருவள்ளரும் சந்தித்தார்கள் தானே ?
    ஏசுவும் புத்தரும் சமகாலத்தவர் தானே ?
    இயேசு காஷ்மீருக்கு வந்து பிரச்சாரம் செய்தார் தானே ?
    தமிழ் பழங்குடியினர் கிறிஸ்தவர்கள் தானே?

  69. ஜடாயு சார்
    புத்த மதமும் செய்திருக்கிறது,மற்ற மதங்களாக இருந்தால் இன்னும் அதிகமாக பழைய நம்பிக்கைகளை இன்னும் சிதைத்திருக்கும் எனபது சரியான பதிலா

    மொத்த வேதங்கள் எதனை,அதன் பெயர்கள் என்ன என்று கேட்டால் தொண்ணூறு சதவீதம் மக்களுக்கு தெரியாது.அந்த வேதாகம வழிப்பாடு பொன்பட்டு நூல் போல என்று பழங்குடி வழிப்பாடுகளோடு அவற்றை தொடர்பு படுத்துவது எந்த விதத்தில்
    குறிப்பிட்ட மாமிச வகைகளை ஒதுக்குவது பழங்குடியினர் செயலா
    பசுவை முன்னிலை படுத்தும் எந்த மதத்துக்கும் பழங்குடிகளுக்கும் தொடர்பு காத தூரத்திற்கு மேல்

    பத்ரிநாத் கோவிலின் முகப்பு கோவில் மாதிரி உள்ளதா இல்லை இன்றும் leh லடாக் அருணாச்சல் திபெத் போன்ற இடங்களில் உள்ள புத்த கோம்பாக்கள் போல் உள்ளதா .மற்ற விஷ்ணு விக்கிரகங்களுக்கும் அங்குள்ள விக்கிரகதிர்க்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா
    இன்று புத்த வழிப்பாட்டை அங்கு அனுமதிக்க வேண்டியது தானே
    திருப்பதி கோவிலை பற்றி பல விஷயங்களில் கேள்வி எழுப்பும் நூலை அப்படியே தள்ளி விடுவது சரியா
    நரசிம்மர் கோவில்களின்,புராணத்தின் புராதனம் புத்தரின் காலத்தை விட முன் தோன்றியது என்று என்ன ஆதாரம் உள்ளது
    கோவில் என்பதே புத்த விகாரங்களை பார்த்து,விக்கிரகங்கள் வழிபாடே புத்த மதத்தின் பாதிப்பு தான் என்றும் பல கருத்துக்கள் உண்டு

  70. அருமையான விளக்கங்கள் ஸ்ரீமான் ஜடாயு மஹாசய,

    \\\\\\பழந்தமிழனுக்கு தான் “ஹிந்து” மதத்தவன் என்று தெரியுமா என்கிறீர்கள்.. வரலாற்றில் ஏசு என்று ஒருவர் இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம், அவரது சீடர்களுக்கு தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் பெயர் “கிறிஸ்தவம்” என்று அப்போதே தெரிந்து விட்டதா என்ன? \\\\உண்மையில், பழந்தமிழனுக்கு தான் “தமிழன்” என்று பிரக்ஞைபூர்வமாகத் தெரிந்தபோது\\\\

    மதங்கள், கோட்பாடுகள் இவற்றின் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு புரியாத புதிர் போலத்தான் இருக்கிறது முழுமையான விளக்கங்கள் அன்றி. பின்னிட்டும், இதை மேலோட்டமாகக் காட்டுவது போன்ற மேற்கண்ட வாசகங்கள் அடிக்கோடிட்டு உள்வாங்கவேண்டியவை.

    \\\\திபேத்திய பௌத்த மதத்தில் தாரா தேவி, பத்ம பாணீ, அவலோகிதேஸ்வரர், வஜ்ரயானம் \\\\

    அவலோகிதேஸ்வரர் தான் பத்மபாணி என்று அழைக்கப்படுவதாக என் நினைவு.

    \\\\மகாயான பௌத்தத்தின் அத்தனை கூறுகளும் வைதீக இந்து மதத்திலிருந்து கடன் வாங்கியதே ஆகும். புத்தரை பிரபஞ்சமே உடலாகக் கொண்டவராக (தர்மகாய:) வழிபடும் மரபின் வேர் ரிக்வேதத்தின் விராட் புருஷன் என்ற கருதுகோளிலும் அதிலிருந்து கிளைத்த விஷ்ணு வழிபாட்டிலும் தான் உள்ளது.. இந்திரனும், குபேரனும், யட்சர்களும், கந்தர்வர்களும் வைதீக மதத்திலிருந்து தான் ஜைன, புத்த புராணங்களிலும் சிற்பங்களிலும் புகுந்தார்கள்.. \\\\

    ஹிந்து மதத்தின் வைதீக சமயக்கூறுகளை பௌத்தம் உள்வாங்கியதுபோலவே தாந்த்ரீக பௌத்தத்தின் உட்கூறுகளை தாந்த்ரீக சாக்தம் உள்வாங்கியுள்ளது. தாராதேவி, வஜ்ரவாராஹி போன்ற தேவதைகள் தாந்த்ரீக பௌத்தம் மற்றும் தாந்த்ரீக சாக்தம் இரண்டிலுமே வழிபடப்பெறுகின்றனர். இன்றும் கூட.

    ஸ்ரீமான் பூவண்ணன் அவர்கள் ஹிந்து சமயம் பௌத்தத்தை கபளீகரம் செய்துவிட்டது என்று கூறுவதை அப்பட்டமாக மறுதலிக்கும் சமாசாரங்கள் மேற்கண்ட விஷயங்கள். அன்பரே தவறான தகவல்.

    பௌத்த க்ரந்தங்களை பௌத்தர்கள் எந்தளவு வாசிக்கிறார்களோ அந்தளவு இல்லாவிடினும் வைதிகர்களும் பௌத்தக் கருத்துக்களை பூர்வ பக்ஷம் என்றளவுக்கு வாசிக்கிறார்கள் இன்றைக்கும் என்பது முக்யம். ஜைமினியின் பூர்வமீமாம்ச சூத்ரங்களுக்கான பட்டரின் வார்த்திகத்தில் பௌத்தக் கருத்துக்கள் பூர்வ பக்ஷமாக விசாரிக்கப்பட்டு மறுதலிக்கப்படுகின்றன.

    பூர்வபக்ஷமாகவேனும் வைதிக சமயத்தில் பௌத்தம் குஹ்யமாக இன்றும் உள்ளது என்பது மறுதலிக்க இயலாத விஷயம்.

    \\\மகேந்திரவர்மன் ஜைனராக இருந்தக்காலத்தில் எழுதிய மத்தவிலாசப்பிரகடனம் தமிழில் கிடைக்கிறதா.\\\
    சிவஸ்ரீ மஹாசய, க்ரந்தத்தின் பெயர் மத்தவிலாஸ ப்ரஹஸனம். இது மஹேந்த்ரவர்மன் ஜைனனாக இருக்கும் போது எழுதியதா தெரியவில்லை.

    மேற்படி நாடகத்தில் பௌத்தம், காபாலிக சைவம் இரண்டும் பரிஹஸிக்கப்படுகிறது.

    ஆங்க்ல லிபியில் மேற்படி நாடகத்தின் மூலம் கீழ்க்கண்ட சுட்டியில்

    https://ignca.nic.in/sanskrit/matta_vilasa_prahasanam.pdf

    வரலாறு தளத்தில் தமிழில் இந்த நாடகம் சம்பந்தமாக

    https://www.varalaaru.com/default.asp?articleid=39

    அன்பர் தமிழ்,

    \\நான் பூவண்ணன் அன்று. காவ்யா @ ஜோ அமலன் ராயன் பர்னான்டோ@திருவாழ் மார்பன்\\

    திண்ணை தளத்தில் ஸ்ரீமான் / ஸ்ரீமதி காவ்யா தான் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ எ திருவாழ்மார்பனா என வினவியிருந்தேன். பதிலிறுத்துள்ளீர்கள். நன்றி.

    “எழுகடல் மணலை அளவிடின் அதிகம்” என்ற எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் திருப்புகழ் நினைவுக்கு வருகிறது.

    \\\கருத்தோடு கருத்து மோதட்டும், ஒரு தெளிவு பிறக்க ஏதுவாகும்.\\\

    அப்படியா?

    அப்படியெனில் கீழ்க்கண்ட வாசகங்களுக்கு இடமில்லை

    \\\தமிழ்ஹிந்து காமின் நான் படித்தவரை எவரும் தமிழறிஞர் கிடையாது. ஆராய்ச்சியாளரும் கிடையாது. ஆராய்ச்சியாளர்களெனில், அவர்கள் இங்கு மட்டும் அதைச்சொல்ல மாட்டார்கள்.\\\

    காட்டமாக மறுக்கப்பட வேண்டிய விஷயம்.

    வித்யா ததாதி வினயம் – கல்விக்கு அணிகலன் பணிவு. அதை நினைவிலிறுத்தவும்.

    கருத்துக்களை பதியுங்கள். விவாதியுங்கள். இங்குள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை எடைபோடும் துலாக்கோலாக நீங்கள் இருக்கத் தக்கவரா என்பதை விட அவர்கள் பதிவு செய்த விஷயங்களுக்கு அறிவுபூர்வமான கண்யமான உங்களது ப்ரதிவாதங்களைத் தான் இங்கு கருத்துப்பதியும் மற்றைய அன்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நினைவிலிறுத்தவும்.

    அன்பரே, உங்களின் வயக்ரமத்திற்கு இரு பங்கு மூன்று பங்கு வயதுள்ள மதிக்கத்தக்க பெரியோர்களை இத்தளத்திலும் அன்ய தளங்களிலும் நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற விஷயத்தை இங்கு கருத்துக்கள் பதியும் மற்றைய அன்பர்களிடம் விட்டு விடுகிறேன்.

    கருத்துக்களை நீங்கள் அறிவுபூர்வமாகவோ விதண்டாவாதமாகவோ மறுதலியுங்கள். தவறில்லை. வாதே வாதே ஜாயதே தத்வபோத: – வாதம் செய்யச் செய்ய தத்துவம் துலங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

    இங்குள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பதியும் விஷயங்கள் அதே விஷயங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்றைய அறிஞர்களால் ஏற்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் உள்ளது என்பதை அறிவீர்களாக. சங்கரர் கால ஆராய்ச்சி மற்றும் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய விவாதங்கள் இவற்றை வாசிக்கவும். ஸ்ரீமதி ஜெயஸ்ரீ அவர்கள் தமிழ்ப்புத்தாண்டு சம்பந்தமாக இங்கு சமர்ப்பித்த வ்யாசம் வரலாறு தளத்தில் ஆராய்ச்சியாளர்களால் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு நினைவு கூர்கிறேன்.

    இத்தளத்தின் பீஷ்ம பிதாமஹர்கள் முனைவர் ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி, ஸ்ரீ வெ.சுவாமிநாதன், ஸ்ரீ மலர்மன்னன் மேலும் நீர்வை ஸ்ரீ மயூரகிரி சர்மா, ஸர்வ ஸ்ரீமான்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, கந்தர்வன், சேக்கிழான், விஸ்வாமித்ரர், பாலகௌதமன், பாலாஜி மற்றும் ஸ்ரீமதி ஜெயஸ்ரீ சாரநாதன் போன்று பல தமிழறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் நிறைந்த தளம் இது. கருத்துக்களை விவாதியுங்கள். தனிநபர் த்வேஷம் நிந்தனை தவிர்க்கவும்.

    தமிழ் ஹிந்து தளத்தை நீங்கள் திண்ணை தளத்தில் குறைவாகப் பேசியுள்ளீர்கள்.

    பின்னிட்டும் தங்களது மீள்வரவு இத்தளத்தில் கண்யத்துடன் தொடர பரலோகத்தில் இருக்கும் ஏக இறைவனை இறைஞ்சுகிறேன்.

  71. அன்பு பூவண்ணன் அவர்களே, மகேந்திரன் மத்த விலாசப் பரிகசனம் எழுதியது சைவன் ஆன பிறகு. அந்தப் புத்தகத்தில் அவன் கிண்டல் செய்திருப்பது சித்தாந்த சைவத்தையோ, வைதீக சைவத்தையோ அல்ல. அவன் கிண்டல் செய்திருப்பது காளமுகம் என்ற பிரிவையே.
    மகேந்திரன் தன்னை சைவனாகச் செய்த பிரகடனம் திருசிரப்பள்ளிக் கல்வெட்டு.
    https://www.tamilartsacademy.com/articles/article09.xml

    மத்த விலாசம்
    https://www.indianetzone.com/22/mattavilasa_prahasana_sanskrit_work_mahendravarman_i_pallava_south_india.htm
    இந்த விக்கி லிங்கில் இதன் சமஸ்க்ரித்த மூலம் ஆங்கில எழுத்தில் உள்ளது
    https://en.wikipedia.org/wiki/Mattavilasa_Prahasana

    நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்.

  72. புத்தர் ஹிரண்ய கசிபுவா? கடவுளே? சொல்லப்போனால் பெரும்பாலான ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பாகவே ( முதல் மற்றும் திருமழிசை ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்பு – மற்ற ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பு ) ராஜசிம்ஹா பல்லவனால் கட்டப்பட்ட மகாபலிபுரம் வராஹர் குஹையில் தசவதார சுலோகம் கல்வெட்டாக உள்ளது. அதில் புத்தர் ஒன்பதாவது அவதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த மரபில் கிருஷ்ணரை அவதாரமாககக் குறிப்பிடுவதில்லை. கிருஷ்ணர் பூர்ணாவதாரம். அதாவது வைகுண்டத்தில் இருந்து திருமாலே கீழே இறங்கி கிருஷ்ணராக வந்ததாக கருத்து.
    https://tamilartsacademy.com/journals/volume12/articles/article5.xml

  73. பூ வண்ணன் சார்

    நரசிம்ம வழிபாடு ஆந்திராவில் தான் பேசல் என்று நீங்கள் கண்டுபிடித்த உண்மைக்கு மாறாக விஷ்ணு தர்மொத்தர புராணம் சொல்றதை கொஞ்சம் பாருங்கள்.

    அயோத்யாயாம் தத: ராமம் நைமிசே தர்மமேவ ச
    கர்நாடே சாச்வசிரசம் மாத்ரதேசே ந்ருகேசரிம்

    அயோத்தியில் ராம பக்தர்கள் ஜாஸ்தியாம் மாத்ர தேசத்தில் (பஞ்சாப்) தான் நரசிம்ம பக்தர்கள் ஜாஸ்தியாம். பஞ்சாபிலும் நிறைய நரசிம்மர் கோவில்கள் உண்டு. பாகிஸ்தானில் நிறைய அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

    நரசிம்ம உபாசனை பஞ்சாபிலிருந்து தான் பரவி இருக்கிறது என்று உடனே சொல்லாதீர்கள். மன்னர்களுக்கு நரசிம்மர் முக்கிய தெய்வம். பலர் நரசிம்ம பூஜை செய்துவிட்டு தான் போருக்கு செல்வார்கள். நாட்டார் தெய்வமாக நரசிம்மர் இருப்பதற்கும் இது ஒரு காரணம். அவர்கள் நரசிம்மர் விக்ரஹத்தை அதிக அளவில் வடித்ததர்க்கும் இது ஒரு காரணம்.

    ஒரிஸ்ஸாவிலும் நிறைய நரசிம்மர் கோவில்கள் உண்டு. நரசிம்ம வழிபாடு அங்கு பெருகியது ராமனுஜரின் வரவுக்கு பின்னரே.

  74. சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களுக்கு

    மகேந்திர வர்மன் எழுதிய அந்த சம்ஸ்கிருத நூல் மத்த விலாசப் பிரகடனம் அல்ல. அதன் பெயர் மத்தவிலாசப் பிரஹாசனம். அவர் எழுதியது மத்தவிலாசம், பகவதஜ்ஜுகம் என்ற இரண்டு அங்கத நாடகங்கள். இதிலே மத்தவிலாசம் எள்ளுவது சைவத்தை அல்ல. கபாலிகத்தையும் பாசுபதத்தையும்தான் என்பர்.

    சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் தமிழக்கம் செய்தது ஒரு கிறித்துவர். E.ஜான் ஆசீர்வாதம் என்பவர். எனவே அது எள்ளல்தானா என்பதை மூலத்தைப் படித்துப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். தமிழாக்கம் செய்யும்போது bias வந்திருக்க வாய்ப்பு உள்ளது. வெளியிட்டவர்கள் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்! மைக்கேல் லாக்வுட் என்பவரிடம் காப்புரிமை உள்ளது.

    இதன் பதிப்பு ஒன்று என்னிடம் இருந்தது. படித்த நினைவு உள்ளது. தேடி தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவுக்குத் தகவல் அனுப்புகிறேன். பெற்றுக் கொள்க.

  75. சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களுக்கு

    //பல்லவ சக்கரவர்த்தி மகேந்திரவர்மன் ஜைனராக இருந்தக்காலத்தில் எழுதிய //

    இரு தமிழாக்க நூல்களும் கிடைத்து விட்டன. இவை இரண்டிலும் கடவுள் வாழ்த்துப்பா சிவத் துதியாகவே இருக்கின்றன. எனவே இவை மகேந்திரவர்மன் ஜைனராக இருந்த காலத்தில் எழுதியதாகக் கருத வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். ஆனால் மத்தவிலாசப் பிரஹாசனம் புத்தத்தையும் எள்ளுவதாகவே உள்ளது. மேலும் அவர் அப்போதும் சைவராகவே இருந்திருக்கிறார் என்பதும் தெளிவு.

  76. அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    மத்தவிலாஸ ப்ரகாஸனம் பற்றி தெளிவு படுத்து தகுந்த இணைய முகவரிகளைத்தந்து அந்த ஹாஸ்ய நாடகத்தை தமிழில் படிக்க வகை செய்த ஸ்ரீ க்ருஸ்ணக்குமார் மஹாசயர், ஸ்ரீ உமாசங்கர், மற்றும் ஸ்ரீ ரமேஸ் ஸ்ரீநிவாஸன் ஆகியோறுக்கு நன்றிகள். வரலாறு.காம் இல் பகவதஜ்ஜுகம் முழுமையாகத்தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பகுதி மட்டுமே மத்தவிலாஸம் காணக்கிடைத்தது. ஆனால் அதன் கதை கருத்து விளங்குகிறது. இந்த இரு மொழிபெயர்ப்புகளும் மைக்கேல் லாக்வுட்டுடையது தான் அது. இரண்டு மூன்று மாதங்களுக்குமுன் தூர்தர்சன் கன்னடா சந்தனாவில் தற்செயலாக பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தைக்கண்டது இதனைப்படிக்கும் போது நினைவில் வந்தது. அனைவருக்கும் நன்றி.

  77. ஜடாயு எழுதியது:
    //தமிழ், நான் சிலப்பதிகார வரிகளை *உதாரணமாக* என்று குறீப்பிட்டிருப்பதைக் கவனிக்கவும். உடனே, நான் ஏதோ அது ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கூறியது போலவும், சிலப்பதிகாரம் பிற்காலத்தியது என்றூ நீங்கள் மடக்கி விட்டது போலவும் எழுதுகிறீர்கள்..
    ஆம், சிலப்பதிகாரம் “பிற்காலத்தியது” தான். அது பொ.பி 5-6ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவோ, அல்லது அதற்கு சில நூற்றாண்டுகள் முன்பு களப்பிரர் காலத்தின் முற்பகுதியில் எழுந்ததாகவோ இருக்கலாம்.
    எப்படியானாலும், தொல்தமிழர் வாழ்வு, வர்லாறு, பண்பாடு பற்றிய முதல் முழுமையான நூல் என்றால் சிலப்பதிகாரம் தான். கிரேக்கத்துக்கு இலியட்/ஒடிஸி போல, சம்ஸ்கிருததத்திற்கு ராமாயணம்/பாரதம் போல, தமிழுக்கு சிலம்பு. அதுவே தமிழின் முதல் காவியம். அதன் முக்கியத் துவத்திற்கும் தனிச்சிறப்பிற்கும் காரணமும் இதுவே.
    தமிழ்ச் சமூகம் சிறு சிறு குடித்தலைவர்களால் ஆளப்பட்ட காலத்திலிருந்து மூன்று முடிமன்னர்களால் ஆளப் படும் காலகட்டத்தை நோக்கிய நகர்வின் சித்திரத்தை சிலம்பு அளிக்கிறது. சங்க இலக்கியங்களின் பரிமாண வளர்ச்சியின் கடைசிக் கண்ணி சிலம்பு. எனவே அந்த நூல் குறீப்பிடும் விஷயங்கள் அனைத்தும் தமிழரின் தொல் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப் படுவது மிக இயல்பானதே. நான் முந்தைய மறுமொழியில் குறிப்பிட்ட அதே சங்ககால சமயக் கூறுகளின் தொடர்ச்சியையே சிலம்பில் காண்கிறோம், அதனுடன் கூட சமண, பௌத்த, வேதாந்த தத்துவங்களும் சேர்ந்து கொள்கின்றன.. அது சங்க கால சமயத்துடன் முரண்பட்டதாக அல்ல, அதிலிருந்து பரிணமித்ததாகவே உள்ளது.//

    என் பதில்:

    இங்கு மடக்கல், அடக்கல் எதுவும் கிடையா. கருத்து பரிமாற்றம் மட்டுமே. கற்பனை பண்ணாமல் கருத்துக்களுக்கு மட்டுமே வருக வருகவென அழைக்கிறேன்.

    சிலம்பு எக்காலத்து நூல் என்பதை ஆதாரமாகத்தான் நீங்கள் காட்டவேண்டும். பொ.பி என்றால் கி பி என்று நினைக்கிறேன். அதன்படி 5 அல்லது 6 என்றிருக்கிறீர்கள். பரவாயில்லை. அப்போது நாயன்மார்களும் ஆழவார்களும் உண்டே. அவர்கள் ஏதாவது சிலம்பைப் பற்றிச் சொல்லியிருப்பார்களே? திருக்குறளை கோடிட்டுக்காட்டியிருக்கிறார் நம்மாழ்வார் இல்லையா அதைப்போல.

    சங்க்காலமெது? சங்க நூல்கள் என்று சொல்லப்படும் நூல்களுள் தொல் காப்பியம் தவிர மற்ற நூல்களை கடைச்சங்கமென்கிறார்களே கவனித்தீர்களா? அச்சங்கம் எக்காலம்?

    அதைத் தீர்மானிப்பதில் ஒரு நிரந்தர முடிவேதுமில்லை. தமிழறிஞரகள், அல்லது ஆராய்ச்சியாளர்கள் பலவாறாகச் சொல்கிறார்கள். நீங்கள் எப்படி?
    அது நிற்க. பழந்தமிழர்கள் என்பதற்கு என்ன வரையறை கொடுக்கிறீர்கள்? சங்க கால மக்களா? அப்படியெனில் முதற்சங்கத்தையே எடுத்தால் எக்காலம் அது? கி மு 2 அல்லது 3 என்றாலும் ஒத்துக்கொள்ளாமல் கி. பி 2தான் என்கிறாரே ரா பி சேதுப்பிள்ளை ? (History of Tamil Literature)

    நான் இந்த சங்க காலத்தையே சொல்லவில்லை. நான் குறிப்பிடுவது அதற்கும் முன். தோராயமாக, கி மு 1 என்றால், அப்போதே பல நாகரிகங்கள் உலகில் பலவிடங்களில் தோன்றி மறைந்து விட்டன சார். அப்போதும் தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். தமிழ்நாடு பாலைவனமாக ஆளில்லாமலில்லை என்பது முதுமக்கள் தாளிகளும் அவர் மட்பாண்டங்களும் நிரூபிக்கின்றன. கல்வெட்டுகள் கிடைத்திரா ஏனெனில் மொழிவளர்ச்சியடையாமலிருந்திருக்கலாம். அவர்களைத்தான் திரு சிவபூதி விபூஷணின் ஆதி மூதாதையர்கள் என்றேன். அவர்களுக்கு சமசுகிருதம் தெரியாது ஜடாயு அவர்களே.

    சமசுகிருதமே வைதீக மத மொழி. இம்மதம் வேதங்களையும் உபநிடந்தங்களையும் அடிப்படையாக்க்கொண்ட்து. Any objections from any one here? அவை தமிழில் எழுதப்பட்டவையல்ல. ஆதி தமிழருக்குத் தமிழே தெரியாது என்று வாதிட்டாலும், அல்லது அப்போது தமிழ் என்ற மொழியே இல்லையென்றாலும், அவர்களுக்குக் கண்டிப்பாக சமசுகிருதம் தெரியாது. ஒத்துக்கொண்டால், மேலே சொல்வேன். எனவே வைதீகமதம் தெரியாது. ஆனால் ஆதிமனிதர்கள் இறைவணக்கம் செய்தார்கள். எனவே திருமால் தெரிந்திருக்கலாம் மாயோன் என்ற பெயரில், ஆனால் திருமாலின் அவதாரங்கள் வடக்கிலிருந்து வந்தவை அவர்களுக்குத் தெரியா. எனவே நரசிம்மர் தெரியாது. இதுதான் என் வாதம்.

    சிலம்பு காட்டும் தமிழர் வாழ்வு பழந்தமிழர் வாழ்வன்று. திரு சிவபூதி விபூஷண் சுட்டிக்காட்டிய நடுகல் வழிபாடு, முதுமக்கள் தாழியே போன்றவையே நாம் காண முடியும் பழந்தமிழர் வாழ்வு. அருங்காட்சியகங்களில் ஆராய்ச்சியாளர் அவைகளில் காலத்தை சங்க்காலத்துக்கு பல்லாயிரமாண்டுகளுக்கு முன் தள்ளி வைக்கிறார்கள்.

    சிலம்பு காலம் உங்கள் கூற்றுப்படி ஆழ்வார்கள் நாயன்மார் சங்கரர் காலமே. அப்போது தமிழ்மொழி பேரிலக்கியங்களைப்படைக்கும் வலிமை பெற்று விட்டது.. தமிழர்கள் பெருநகரங்களில் நாகரிக வளர்ச்சியடைந்து, கலை கேள்விகள், கேளிக்கைகள், என்று வாழ்ந்தார்கள் என்பதை சிலம்பே காட்டிவிட்டது. காவிரிபூம்பட்டினம் ஒன்று போதுமே.

    இப்படியிருக்க இளங்கோ காலத்து தமிழர்கள் எப்படி பழந்தமிழர்கள் ஆவார்கள்? தமிழில் காவிய இலக்கியம் என்பது மிகவும் பிற்பட்ட கால இலக்கிய வளர்ச்சி சிலம்பு சங்க காலத்து பரிமாணத்தின் நன்கு வளர்ச்சியடைந்த பகுதி. ஆனால் தொல் தமிழர் வாழ்க்கையைக்காட்டவில்லை.

    அம்மி மிதித்து அருந்ததி காட்டி தீ வலம் வந்து மந்திரங்கள் ஓதப்பட தாலி கட்டினார்கள் என்று கண்ணகி-கோவலன் மணத்தை வைதீக மணம் என்று காட்டுகிறார் இல்லையா? முதுமக்கள் தாளியில் புதைத்து, நடுகல் வணக்கம் செய்த தமிழர்களும் இவர்களும் ஒன்றா? ஆமென்று எவரேனும் எழுதியிருக்கிறார்கள் என்று காட்டுங்கள் நான் உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

  78. //எனவே, சங்க காலத் தமிழர்கள் வேத வேள்விகள் செய்து, சிவனையும் விஷ்ணுவையும் கோயிலில் கும்பிட்டு, நதிகளையும் காடுகளையும் கோள்களையும் மீன்களையும் வணங்கி, இதிகாசங்களையும் புராணங்களையும் கற்று, மிருக பலியிட்டு, மலர் தூவி, வெறியாட்டு ஆடி, பொங்கல் வைத்து – இப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்று தமிழாய்வுகள் ஐயம் திரிபற நிரூபிக்கின்றன.

    மொத்தத்தில், இன்றைக்கு, 2012ம் வருடம் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பின்பற்றும் சமய வாழ்க்கைக் கூறுகள் அனைத்தையும் அப்படியே சங்கத் தமிழர்கள் பின்பற்றீயிருக்கிறார்கள்
    //
    ஜடாயு!

    சங்ககாலத்தில் வைதீக இந்துமதம் நன்கு வேரூன்றி விட்டது. சிலம்பின் காலத்தில் மக்களின் வாழ்வில் நீககமற நிறைந்து விட்டது. ஆயினும் பழந்தமிழர்களின் இறைவழிபாட்டை முற்றிலும் அழிக்கவில்லை. இதைச்சொல்வதற்கு தமிழ்ஹிந்து காமில் கட்டுரைகள் தேவையில்லை. சங்ககாலத்துக்கு முன் தமிழர்கள் இறைவழிபாடு எப்படி?

    வைதீக மதக்கூறுபாடுகள் இருந்திருக்கலாம் அவர்களுக்குத் தெரியாமலே. ஏனெனில் ஆதிமதங்கள் பிரிமைட்டிவ். அவைகளின் கூறுபாடுகள் பலபல ஒன்றாகத்தான் இருக்கும். இதை ஆந்திரபாலாஜிஸ்டுகள் சொல்லத்தேவையில்லை. ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகள் மூலம் சொல்வார்கள். அவ்வளவே.

    வைதீக இந்து மதமும் அது வந்தவழியான ஆதி வடநாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் மதமும் பிரிமெட்டிவ் மதங்கள் அங்கிருப்பது இங்கிருந்தது எனப்து ஒன்றும் வியப்பன்று.

    வியப்பென்னவென்றால் திருமாலில் அவதாரங்கள் தமிழ்நாட்டில் ஆதிமனிதர்களிடை இருந்தது என்பதுதான். ஒருவேளை இருந்தால், அது ஆங்கிலத்தில் சொல்வது போல, க்ரேட் மென் தின்க் அலைக்.

    ப்ளீஸ் கோ எர்லியர் தான் சங்கம் ஜடாயு இஃப் யு கேன்.

  79. //\\\தமிழ்ஹிந்து காமின் நான் படித்தவரை எவரும் தமிழறிஞர் கிடையாது. ஆராய்ச்சியாளரும் கிடையாது. ஆராய்ச்சியாளர்களெனில், அவர்கள் இங்கு மட்டும் அதைச்சொல்ல மாட்டார்கள்.\\\

    காட்டமாக மறுக்கப்பட வேண்டிய விஷயம்.
    //

    கிருஸ்ணகுமார்1

    நான் படித்தவரை என்று எழுதியதைப் படிக்கவில்லையா?
    அப்படி அறிஞர்கள் இருப்பின் நல்ல சமாச்சாரம்தானே சார்.

    நான் படித்தவரை அவர் சொன்னார் அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது; இவர் சொன்னார்; இவ்வாராய்ச்சியில் தெரிகிறது என்றுதான் சொல்கிறார்களே தவிர, தாமே ஒரு பத்தாண்டுகளாக பல கல்வெட்டு சாசனங்களை ஆராய்ந்து கண்டதாக எவரும் வெளியிடவில்லை. ஜடாயு சங்கநூல்களையும் மற்றும் அதைப்பற்றி எழுதியவர்களையும்தான் அடித்தளமாக வைத்துப் பேசுகிறார்.

    ஆராய்ச்சிக்கு ஒரு உதாரணம் தருகிறேன். நேற்றொரு நூல் படித்தேன். எஸ். வையாபுரிப்பிள்ளையினது. அவர் சிலம்பில் உள்ள தமிழ் சொற்களையும் அவற்றின் இலக்கணத்தையும் ஆராய்ந்தார். ஏனெனில் தமிழின் தோற்றம் வளர்ச்சி இவற்றின் ஆழங்கால் பட்டவராதனால், அவருக்கு அவ்வாராய்ச்சி இலகுவாகிறது.

    அந்த ஆராய்ச்சியின் முடிவாக சிலம்பு சங்ககால நூலன்று என்று சொல்கிறார். இவரிடம் நீர் செய்தது அமெச்சூர் ஆராய்ச்சி என்று வாதிட முடியாது. அவருக்குத் தமிழ் இலக்கணம் தெரியும். அதன் படி நிரூபிக்கிறார். அதாவது தமிழ்ச்சொற்களை வைத்தே.

    இப்படி ஒரு சாலிடான நிரூபணம் அல்லது நிரூபணங்களை வைத்து ஆராய வேண்டும். அதை அமெச்சூர்கள் செய்வரிது.

    இங்கே அப்படி எவராது செய்திருக்கிறார்களா? ஜடாயு அனைத்துக்கட்டுரைகளும் இலக்கிய ஆதாரங்களே. அது ரொம்ப சுலபம். இல்லாவிட்டால் ஏற்கனவே தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடமிருந்தவை. He should give up his regular job and enter into the world of research proper. If he does, and then, write here, that will be interesting and, who knows, may give him different conclusions !

    நான் ஒரு சில்லாண்டுகளாகத்தான் தமிழ் நூலகளைப்படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சில்லாண்டுகள் போகட்டும். நான் எழுதுவதை நீங்கள் மறுக்க ஒன்றுக்கு பலமுறை நினைக்க வேண்டும்!

  80. கிருஸ்ண குமார்!

    இணையதளமென்பது ஒரு இருண்ட இடம்.. இங்கு ஒருவர் முகம் இன்னொருவருக்கு தெரியவேண்டுமென்பதில்லை. அப்படித்தெரிந்துதான் எழுத வேண்டுமென்று எத்தளமாவது சொன்னால், அத்தளத்தில் அக்கட்டுப்பாட்டுக்கு உடந்தையானவர் மட்டுமே அங்கெழுதச்செல்வர்.

    இத்தளத்துக்கு அக்கட்டுப்பாடு உண்டா என்பதை மேலே சிவப்பு எழுத்துக்களை படித்துப் புரிந்து கொள்ளுங்கள். வெறும் ‘நணபர்கள்’ என்று மட்டும் சொல்லி வாளாவிருந்து விட்டார்கள். ஏன்? என்று சிந்தித்தால் புரியும், கருத்தென்று எவர் சொல்ல வந்தாலும் அது நாகரிகமான முறையில் சொல்லப்பட்டால் ஏற்புடைத்தே எமக்கு என்பதுதான் இவர்தம் கொள்கை. ஏதாவது மாற்று உண்டா என் இப்பேச்சுக்கு?

    ஆனால் நீங்களோ, இத்தளத்தின் நிருவாகிகளுள் ஒருவரைப்போல கட்டளையிடுகிறீர்கள்.

    இங்கு நீங்கள் சுட்டிக்காட்டிய நபர்கள் எவராயிருந்தாலும் சரி, அவர், அவரின் பாண்டித்தியம், அவரின் அகவை முதலியன தெரிந்துதான் அவருக்கு மாற்றுக்கருத்து வைக்கவேண்டுமென்று எவருமே, ஏன் அவரும்கூட நினைப்பது கிடையாது!. ஏன் நீங்களாகவே கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். என்னைப்பொறுத்தவரை அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதே நோக்கமுடைத்து. அதற்கே என் மறுபதிலும். அவர் அகவைக்கன்று; அவரின் பாண்டியத்தக்கன்று. இதைப்புரிந்து கொள்ளவேண்டும்.

    நீங்கள் இன்னொரு கருத்தையும் திணிக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் நபர்களை மெத்த மேதைகள் என்று சொல்கிறீர்கள். அஃது உங்கள் கருத்தாகவும் மற்றும் பலர் கருத்தாகவும் இருக்கலாம். ஏன் எல்லாருடைய கருத்தாகவும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இது அராஜகமனறோ! அவர்கள் எனக்கு சாதாரணமாகத்தெரிந்தால் அதை உங்கள் மீது திணித்தால் சரியா? பலர் பெயர்களைச்சொல்லியிருக்கிறீர்கள். வெ சாவினதுமிருக்கிறது. அவருக்கு நானிட்டா மறுபதிலை கநாசு கட்டுரையில் பாருங்கள். அவரை நான் எப்படி மேதையென்று ஏற்றுக்கொள்ளமுடியும்,? ஒரு சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தி தன் ஜாதிப்பற்றைக்காட்டி இன்னொரு தமிழறிஞரை இழிமகன், ஒரு சாதாரண மனிதனாக வாழும் தகுதிகூட இல்லையென்று திட்டுகிறார். பார்த்துக்கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?

    என் ஹீரோதான் உன் ஹீரோகாவும் இருக்க வேண்டுமெனப்து இசுலாமியத்தீவிரவாதம் போலல்லவா?

    நான் பல தமிழறிஞர்களைத் தொடர்ந்து ஆர்வமாகப்படித்துக்கொண்டு வருகிறேன். மிக மகிழ்ச்சியைத் தருகின்றார்கள் அவர்களுள் சிலரை நான் நேரிலும் கண்டிருக்கிறேன். ஒரு மாபெரும் தமிழறிஞரை சென்னை கடற்கரைச்சாலையில் என் குழந்தைகளோடு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மரியாதை செய்திருக்கிறோம். ஏன்? அவர் தமிழுக்கு. எனவே இங்கு எவரேனும் என் கண்ணில் அபபடித்தெரிந்தால் அவருக்கென தனியாக ஒரு இடம் என்னிடம் இருப்பது மட்டுமன்றி அவரைப்பற்றி எங்கும் பேசுவேன். அவரின் தமிழை. தமிழுக்காக. என் தேடலில் எவரும் இன்னும் மாட்டவில்லை. ஆராய்ச்சியென்ற பெயரில் முன்முடிபுகளோடுதான் எழுதுகிறார்கள்.

    பணிவு என்பது இங்கே எழுத்தில் காட்டப்படவேண்டுமென்பதில்லை. தள நிருவாகிகளே சொல்லிவிட்டார்கள் இப்படி // தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத//

    அஃது இருந்தால் போதும், நீங்கள் போடும் பல அடைகளையே எல்லாரும் முன்சொல்லி ஒருவருக்கு பதில் போட வேண்டுமென்று சொல்லப்படவில்லை.
    உங்களுக்கு எது விருப்பமோ, அதைச் செய்யுங்கள். உங்கள் பார்வையில் எப்படியும் எதுவும் தோன்றலாம். எடுத்துக்காட்டாக, நான் ஒரு வில்லனாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் மட்டும் எனக்கு உலகமன்று. நல்லவருக்கெல்லாம் சாட்சிகல் இரண்டு; ஒன்று மனசாட்சி; மற்றொன்று தெய்வத்தின் சாட்சி. ஆங்கிலத்தில், one and God make majority என்பார்கள். கைதட்டல்களை எதிர்ப்பார்த்து எழுதுபவன் பொய்யன். ஏமாற்றுகிறான். ஜாக்கிரதை.

    ”பெரியோரை வியத்தலுமிலம் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனபது தொல்தமிழர்ப்பண்பாடு.

    ”நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்பது அவர்தம் ஆச்சரியமான பணபாடு.

    நன்றி.

  81. தமிழ்

    வேதம் சமஸ்க்ருத மொழியில் உள்ளது என்ற உண்மையை விளம்பியமைக்கு நன்றி நன்றி நன்றி.

    தமிழ் இலக்கியங்களில் எல்லாம் தமிழன் வைதீக மதத்தை சார்ந்தவன் தான். தனது மூதாதையரும் அவ்வண்ணமே என்று உள்ளது. தமிழ் நாட்டில் கூட ரிக் வேத கால நடைமுறையான அஸ்தியை பானையில் வைத்து புதைப்பார்கள் அல்லாவா அப்படிப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. உண்மையில் பார்க்கப் போனால் தமிழனே ஒரிஜினல் வைதீக மதத்தை சார்ந்தவன்.

    நீங்கள் புதுசா எதாவது வேச்சிரிந்தா சொல்லுங்கள். அப்படிப்பட்ட விஷயத்தை எப்படி நிறுவுவீர்கள், இளையக்கிய வழியில் முடியாது அகழ்வாராய்ச்சி வழியிலும் முடியாது. உங்களால் குருட்டாம் போக்கு கதை தான் சொல்ல முடியும். ஆடி திராவிடன் பச்சை கிறிஸ்தவன் என்று அவிழ்த்து விடுவீர்கள்.

    சோழர்களின் மன்னர் பரம்பரை எங்கிருந்து ஆரம்பமாகிறது என்று உங்களுக்கு தெரியுமா. பழன்குயினர் என்பதற்கு பரிமேலழகர் என்ன அர்த்தன் சொல்லி உள்ளார் என்று படித்திஎருகிரீர்களா?

  82. திரு தமிழ் – மன்னிக்கவும். ஆழ்வார்கள் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு. முதல் மற்றும் திருமழிசை ஆழ்வார்கள் மட்டுமே ஐந்தாம் நூற்றாண்டு. எந்த சங்க நூலை எடுத்தாலும் அதில் இறை வழிபாடு இருக்கும். நீங்கள் சொல்லும் நடு கல் வழிபாடு ஏதோ தமிழ் நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல. இன்றும் இறந்தவர்களுக்கு கல் நட்டு பத்து நாள் வழிபடுவது – கருமாந்திரம் கல் எடுப்பு – எல்லா ஜாதியினருக்கும் உண்டு. கல்லை நட மற்றும் எடுக்க மந்திரங்களும் உண்டு. அது மட்டும் அல்ல தமிழ் நாட்டில் வீரனுக்கு நடு கல் வைப்பது வெள்ளைக்காரன் வந்த பதினாறாம் நூற்றாண்டு வரை இருந்தது. இறந்த வீரனுக்கும், சதி மாதாவுக்கும் சிலை வைத்து வழிபாடு செய்வது இந்தியா முழுவதும் உள்ளது. அங்கே சதி மாதா இங்கே தீப் பாய்ஞ்ச அம்மன்.

  83. சாரங்கன்!

    நீங்கள் எழுதியவை:

    //நீங்கள் புதுசா எதாவது வேச்சிரிந்தா சொல்லுங்கள். அப்படிப்பட்ட விஷயத்தை எப்படி நிறுவுவீர்கள், இளையக்கிய வழியில் முடியாது அகழ்வாராய்ச்சி வழியிலும் முடியாது. உங்களால் குருட்டாம் போக்கு கதை தான் சொல்ல முடியும். ஆடி திராவிடன் பச்சை கிறிஸ்தவன் என்று அவிழ்த்து விடுவீர்கள்.

    சோழர்களின் மன்னர் பரம்பரை எங்கிருந்து ஆரம்பமாகிறது என்று உங்களுக்கு தெரியுமா. பழன்குயினர் என்பதற்கு பரிமேலழகர் என்ன அர்த்தன் சொல்லி உள்ளார் என்று படித்திஎருகிரீர்களா?//

    வேண்டுமென்றே இப்படி தமிழை நகையாடுகிறீர்கள் ! தமிழ் மீதும் கோபமா? உணர்ச்சி வசப்படாமல் நல்ல தமிழில் கருத்துக்களை வையுங்கள். உங்கள் ஆசைக்காக ஆதி தமிழருக்கு சமசுகிருதம் தெரியும் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

    நன்றி என்ற நல்ல தமிழ்ச்சொல்லை பலமுறை பயன்படுத்தியதற்காக மிகவும் நன்றி. இப்படியே நல்ல தமிழைக் காதலிக்கவும். தமிழ் இனிமையான மொழி.

    சங்க காலத்திலேயே வைதீகமதம் ஊடுருவி விட்டது. அதே வேளையில் ஆதிதமிழர்களில் தொல் இறைவழிபாட்டு முறைகள் ஒரேயடியாக அது சாகடிக்கவில்லை. இன்னும் அவ்வழிபாடு தொக்கி நிற்கிறது பலவிடங்களில் அன்றாட வாழ்க்கையிலும். தமிழர் என்று ஒரு இனம் உண்டு. அவருக்கென்று தனியே ஒரு வாழ்க்கை முறையும் உண்டு. இது பால பாடம்.

    நமக்குக்கிடைத்த முதல் தமிழ் நூல் தொல்காப்பியம். அஃது எக்காலம்? அக்காலத்தை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சொல்லி விட முடியாது. ஆதாரத்தோடுதான் சொல்ல வேண்டும். பரிபாடலின் காலத்தை முதலில் சொல்லுங்கள். பின்னர் தொல்காப்பியம்.

    சங்க நூல்களின் காலம் கி.மு என்பதே ஐயம். ரா பி சேதுப்பிள்ளையின் ஆங்கில நூலில் சங்க நூல்கள் கி பி இரண்டுதான் என்கிறார். எவருமே ஆதிகாலத்திற்குத் தள்ளவில்லை. ஆதிகாலத்துக்குத் தள்ளுவது திராவிட தலைவர்கள் என்போருக்குப் பீடித்த வியாதி. உங்களுக்கேன்?

    தமிழன் வைதீகமதத்தை தெரிந்து கொண்டான. அஃது இங்கு கொண்டுவரப்பட்டு ஆட்சியாளர்களின் ஆதரவைப்பெற்றது எனவே. பின்னர் அதன் கூறுகளை ஏற்றுக்கொண்டான். இவை நடந்தது ஆதிகாலமன்று. சங்ககாலம் அல்லது அதற்கு சற்று முன்புதான். ஆதிகாலம் என்றெல்லாம் சொல்லவே முடியாது.

    அதே வைதீக மதமும் இன்று அப்படியே இல்லை. தமிழரின் தொல்வழிபாட்டு முறையும் வைதீகமதத்தின் முறைகளும் இணைந்தே இன்றைய தமிழன் இந்துமதத்தைக்கொள்கிறான். அதைத்தான் இத்தளம் தமிழரின் தாய்மதம் என்கிறதே தவிர, தமிழரின் தாய் மதம் வைதீக ஹிந்து மதம் என்று சொல்லவில்லை. அவர்களிடமே கேட்டு சாரங்கன் தெளியலாம்.

    எப்படி தமிழன் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் இணைத்தான்? இப்படி, மதுரை மீனாட்சிக்கருகில் மதுரை வீரனுக்கு ஒரு இடம் வழிபாட்டுக்கு. கோயிலுக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம். அம்மீனாட்சி சொல்லியே இவன் காக்கப்பட்டான் என்று நம்பிக்கை. சுடலைமாட சாமி, சிவனின் மகன். இப்படியாக, தமிழர் வழிபாடு, வைதீக மத வழிபாட்டோடு இணைந்தது.

    வைதீக மதமே என்றால், தமிழகத்தில் உங்கள் ஜாதிக்காரர்கள் மட்டுமே அம்மதத்தைக்கொள்ள முடியும். இது ஹிந்து மத்ததை தமிழர்களிடமிருந்து சுருக்கிவிடும். ஹிந்து மதம் பார்ப்பன மதமாகிவிடும் !

    வடமொழியில்லாமல் வைதீக மதம் இல்லை. வடமொழி தமிழனுக்குத் தெரியாது. இன்றும் அப்படித்தான் நிலை.

    சோழர்கள் வைதிக மதத்தை பெரிதும் போற்றியவர்கள். பிராமணர்கள் சொற்படியே அவர்கள் நடந்தார்கள். நீங்கள் நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ என்ற வரலாற்று நூலைப் படிக்கவும். பரிமேலழகர் ஆர்? காஞ்சிபுரத்து பெருமாள் கோயில் அர்ச்சகர். வரலாற்றறிஞரா? அவர் உரைகாரர் மட்டுமே. அவர் காலம் எது? தெரிந்து கொண்டு வாருங்கள். ஆனால் சோழர்களின் காலம் எக்காலம் சாரங்கன்? நான் அவர்களைப்பற்றியா பேசிக்கொண்டிருக்கிறேன்?

  84. இங்கு தமிழர்களும் இந்துமதமும் வேறு என்று சொல்பவர்களுக்கு:- சம்ஸ்க்ருதமும் தமிழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது என்றோ வைதீக தெய்வங்களும் கிராமிய தெய்வங்களும் ஒன்றோ அல்லது ‘உறவினர்கள்’ என்றோ கூறமுடியாது. அதேபோல தமிழர்கள் ‘பழங்குடியினர்’ என்றோ திராவிடர்கள் என்றோ கூறி ஒதுக்கிவிட முடியாது. கிராமிய தெய்வங்கள் உள்ள மக்களெல்லாம் பழங்குடியினர் என்றும் சொல்லமுடியாது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கூட பிள்ளையார், முருகன், சிவன், பெருமாள், அம்மன் அல்லாத கிராமிய தெய்வங்கள் உண்டு. சரி, ஆந்திரா கர்நாடகம் கூட தமிழ்நாட்டிலிருந்து பிறந்தவை என்று சொல்லலாம். மகாராஷ்டிரத்தில் கண்டோபராயன் என்ற கிராமிய தெய்வம் உண்டு. அப்படியானால் மாராட்டியர்கள் பழங்குடிகளா? இதுபோல கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் உண்டு.
    எனவே வைதீகமதத்தை ஆரியர்கள் என்ற கற்பனை இனம் கொண்டுவந்து நிறுவினர் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை!

  85. தமிழ்

    பாத்தீங்களா பாத்தீங்களா. அதாரம் கேட்ட தமிழ் பேசுகிறீர்கள். தமிழ் என்று வசதியாக பெயர் வைத்துக் கொண்டு விட்டதால் மட்டும்டமிழ் பேச முடியாது.

    சங்ககாலத்திலேயே வைதீக matham ஊடுரிவியடு என்பதற்கு என்ன ஆதாரம் ஆராய்ச்சியாளர் தமிழ் அவர்களே.

    சஞ்சயனம் என்று வைதீக மதத்தவர் அதுவும் ருக் வேத கால மதத்தவர் பழக்கம் தமிழ் பழக்கம் ஆனது எப்போது? சங்ககாலத்திலா? அல்லது ருக் வேத காலம் தொட்டே வா? இன்றைய வைதீக மதத்தினர் ருக் வேத கால பழக்கங்களை கொண்டவர்கள் இல்லை, பௌராநீக நடைமுறைகளை (சஞ்சயனம் போன்ற காரியங்களுக்கு) பயன் படத்தைத் தொடங்கிவிட்டனர்.

    சோழர்களின் பரம்பரையை பற்றி தானே கேட்டேன். அவர்கள் பிராமண அடிவரூடுடிகளா அல்ல த்வேஷிகளா என்றா கேட்டேன். பரிமேலழகர் உரை ஆசிரியர் மட்டும் தானாம். அவர் என்ன கலைஞர் போன்ற உரை ஆசிரியர் என்று நினைத்தீரா. வரலாறு தெரியாமல் உரை எழுத வில்லை அவர்.

    சும்மா உக்கார்ந்த இடத்திலிருந்து அவர் என்ஜினியரா டாக்டரா வரலாற்று ஆசிரியாரா என்று கேள்வி எழுப்பிவிட்டால் உங்கள் மனம் வேண்டுமானால் சாந்தி அடையாளாமம் அம்புட்டுதேன்.

    நாம் கிட்டே வரலாற்று இலக்கிய அகழ்வாராய்ச்சி ஆதாரம் எதுவும் கிடையாது ஆனால் நான் “தமிழ்” பேசுகிறேன் என்று வந்துவிய வேண்டியது.

  86. ஒரே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் மீனா சாதியினர் பழங்குடியினர் கீழ் வருவார்கள்.ஆனால் நரி குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு தான்.
    அரசு வகுத்துள்ள ST (scheduled tribes )வைத்து யார் பழங்குடியினர் என்று வாதம் செய்வது சரியல்ல.
    நம் மூதாதையர் அனைவரும் பழங்குடியினர் தான்.
    அவர்கள் தமிழ் பேசினார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை(தமிழோடு சிறிது தொடர்புடைய மொழி இருந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்),
    வட மொழி பேசினார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை
    பல முறை கேட்டாலும் மறுபடியும்
    இந்திய துணை கண்டம் முழுவதும் காஷ்யப பாரத்வாஜ கோத்திரம் இருக்கிறது.அவர்களுக்கும் வேதத்திற்கும் தொடர்பு இருக்கலாம் ஆனால் அப்படி அந்த கோத்திரம் இல்லாத மக்களுக்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு.ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவி இருக்க வேண்டும் அல்லவா
    அவர்கள் வேதத்தை எல்லா இடங்களுக்கும் எடுத்து சென்றுள்ளார்கள் என்று கூறுவது தவறா
    அதே போல் மீனாக்களுக்கும் சாணார்களுக்கும் பள்ளர்களுக்கும் பேடியாக்களுக்கும் மராதாக்களுக்கும் ஏதாவது தொடர்பு,இணைக்கும் திரிகள் இருக்கிறதா
    (புதிதாக உருவாக்கப்பட்ட திரிகள்,திரிபுகளை தவிர்த்து)

  87. \\\ஆனால் நீங்களோ, இத்தளத்தின் நிருவாகிகளுள் ஒருவரைப்போல கட்டளையிடுகிறீர்கள்.\\\

    \\\என்னைப்பொறுத்தவரை அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதே நோக்கமுடைத்து. அதற்கே என் மறுபதிலும். அவர் அகவைக்கன்று; \\\

    அன்பர் தமிழ்,

    நான் தங்களைப்போல ஒரு வாசகன் தான். நிர்வாகி இல்லை தான். தங்களது பல கருத்துக்கள் என்னைப்போலவே இங்கு கருத்துப்பதியும் பல வாசகர்களால் ஏற்கவியலா அலகீடுகளை உடையவை என்ற படிக்கு என் அபிப்ராயங்கள் பதியப்பட்டது. நீங்கள் அவற்றிலிருந்து வேறுபடலாம் தான். இதில் திணிப்பேதுமில்லை.

    அகவையன்றி கருத்துக்கே எல்லோரும் மதிப்பளிக்கிறோம் அன்பரே. கருத்துக்களின் உத்தேசம் விஷயத்தில் தெளிவு. ஆனால் பல சமயம் உங்களது கருத்துக்கள் காழ்ப்புக்களின் வெளிப்பாடாக மட்டும் இருக்கிறது. பல சமயம் நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக தனிநபர் நிந்தை என்பது தொக்கி நிற்கிறது. தமிழ் என்ற பெயர் மாற்றத்தில் மாற்றத்தை நோக்கி ப்ரயாணிப்பதாய் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    \\\நீங்கள் இன்னொரு கருத்தையும் திணிக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் நபர்களை மெத்த மேதைகள் என்று சொல்கிறீர்கள். அஃது உங்கள் கருத்தாகவும் மற்றும் பலர் கருத்தாகவும் இருக்கலாம். ஏன் எல்லாருடைய கருத்தாகவும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? \\\

    கருத்து மாறுபாடு இருக்கலாம் தான். ஆனால் தளம் ஆராய்ச்சியாளர்களன்றி ஏதோ வெற்றிடத்தில் இயங்குவது போன்ற ஒரு த்வனி தங்களது கருத்தில் தென்பட்டது. அதில் எனக்கு உடன்பாடில்லை.

    \\\ஒரு சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தி தன் ஜாதிப்பற்றைக்காட்டி இன்னொரு தமிழறிஞரை இழிமகன், ஒரு சாதாரண மனிதனாக வாழும் தகுதிகூட இல்லையென்று திட்டுகிறார். பார்த்துக்கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?\\\

    அன்பரே எனக்கு தமிழ் இலக்கியத்தில் பெரும் ஞானம் ஏதுமில்லை. க.நா.சு வ்யாசம் நானும் வாசித்தேன். இன்னொரு தமிழறிஞரை ஸ்ரீ. வெ.சா அவர்கள் விமர்சித்தது தன் ஜாதிப்பற்றால் தான் என்ற தங்களது கருத்தை நான் ஏற்க வேண்டும் என ஏன் திணிக்கிறீர்கள்?

    தமிழிலக்கியத்தில் ஈடுபாடுடைய அன்பர்கள் தான் இது சம்பந்தமாக தெளிவான நிலைப்பாடு எடுக்கவியலும்.

    பின்னும், எதோ தாங்கள் அன்பை மட்டும் அடிப்படையாக வைத்து ஜாதித்வேஷம் என்ற சமாசாரமே அன்றி கருத்துக்களோ வ்யாசங்களோ பகிர்வதாகவும் ஸ்ரீ வெ.சா அந்த அலகீட்டிலிருந்து விலகியுள்ளதாகவும் மேற் கண்ட கருத்து தொனிக்கிறது. தமாஷ் தானே செய்கிறீர்கள்? தங்களுக்கு தாங்களே அறியாது ஹாஸ்ய ரசம் பொலியவும் எழுத இயலும் போல.

    ஏன் இந்த இரட்டை அளவுகோல்?

    \\\நான் எழுதுவதை நீங்கள் மறுக்க ஒன்றுக்கு பலமுறை நினைக்க வேண்டும்!\\\

    வித்யா ததாதி வினயம் – அடக்கம் அமரருள் உய்க்கும்!!!!

  88. //திரு தமிழ் – மன்னிக்கவும். ஆழ்வார்கள் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு. முதல் மற்றும் திருமழிசை ஆழ்வார்கள் மட்டுமே ஐந்தாம் நூற்றாண்டு. எந்த சங்க நூலை எடுத்தாலும் அதில் இறை வழிபாடு இருக்கும். நீங்கள் சொல்லும் நடு கல் வழிபாடு ஏதோ தமிழ் நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல. இன்றும் இறந்தவர்களுக்கு கல் நட்டு பத்து நாள் வழிபடுவது – கருமாந்திரம் கல் எடுப்பு – எல்லா ஜாதியினருக்கும் உண்டு. கல்லை நட மற்றும் எடுக்க மந்திரங்களும் உண்டு. அது மட்டும் அல்ல தமிழ் நாட்டில் வீரனுக்கு நடு கல் வைப்பது வெள்ளைக்காரன் வந்த பதினாறாம் நூற்றாண்டு வரை இருந்தது. இறந்த வீரனுக்கும், சதி மாதாவுக்கும் சிலை வைத்து வழிபாடு செய்வது இந்தியா முழுவதும் உள்ளது. அங்கே சதி மாதா இங்கே தீப் பாய்ஞ்ச அம்மன்.//

    மன்னிப்பெல்லாம் வேண்டாம். சும்மா ஸ்டெயிட்டா எழுதிக்கொண்டே போங்கள்.
    நாளை உங்களுக்குப் பதில் போடுகிறேன்.

  89. பாலாஜி!

    வைதீக மதம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? வைதீகம் என்றால் வேதங்களின் வழிவந்தது என்றுதான் பொருள். நாம் வைதீக மதமென்பதை, ஆங்கிலத்தில் வேதிக் ரிலிஜன் என்பர் இல்லையா?

    அவ்வேதங்களை எவர் எழுதினார்? எழுதாக்கிளவியென்றாலும் எவர் சொன்னார் அல்லது சொல்லிப்போனார் அது வழிவழியாக வருவதற்கு என்று கேள்வி எழுகிறதே?

    பதில்கள் நன்கு உண்டு. வெள்ளைக்காரர் மட்டுமன்றி, இந்தியரும் சொல்லியிருக்கிறார். சிந்து சமவெளியில் வாழ்ந்த இருடிகள் (ரிஷிகள்) எழுதினார் அல்லது சொல்லிச்சென்றாரென்ப. எப்போது என்று திட்டவட்டமாக எவராலும் நிரூபிக்கமுடியவில்லையென்றாலும், எங்கே என்பதில் கருத்து வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. எனவே வைதீக மதம் என்பது அங்குதான் தோன்றியது. அவற்றை உருவாக்கியோருக்கு என்ன பெயரென்பது முக்கியமேயில்லை. அம்மதத்தின் கூறுகள் எங்கும் காணப்படுவது என்பதுவே – இன்றென்றால், அவை வைதீக மதம் மெல்லமெல்ல பயணப்பட்டு இந்தியாவெங்கும் வியாபித்ததால். மற்றபடி ஆதிகாலத்திலென்றால், அதாவது அது பயணப்படும் முன்பு, அக்கூறுகள் காணப்பட்டிருந்தால், அவை, கிரேட் மென் திங்க் அலைக் அல்லது, ப்ரிமைட்டிவ் ரிலிஜன்ஸ் பலகூறுகள் ஒன்றாகத்தான் கொண்டிருக்கும் எனலாம்.

  90. தமிழ் ஹிந்து.காமில் எழுதுபவர்களின் தாய்மொழி தமிழ். அத்தாய்மொழியை தெரிந்தே பிழைபோட்டெழுதி இழிவுபடித்தி அற்ப இன்பம் காணும் சாரங்கனனுக்கு என் பதில் கிடையாது. இவரின் இச்செயல், கருநாநிதியின் பாணியைக் காப்பியடிக்கிறது.

    ”தமிழ்ப்பார்ப்பனர்களைப் பிடிக்காது. தமிழ்பார்ப்பனர்களுக்கு ஹிந்து மதம் பிடிக்கும். எனவெ அம்மதத்தைப் போட்டுத்தாக்கு. தமிழ்ப்பார்ப்ப்னரகள் மனவேதனை கொள்வார்கள். இப்படியே அவர்களை நெட்டியெடுக்கலாம்” என்பதுதான் கருனாநிதி அவர் போன்ற பிறரின் பாணியாகும்.

    சாரங்கன் அதையே செய்கிறார். என்னைப்பிடிக்கவில்லை. அதாவது என் கருத்துக்களை. எனக்குத் தமிழ் பிடிக்கும். தமிழை நக்கலெடு. நான் வருந்துவேன்.

    இதில் இன்னொரு பலனும் இவருக்குக் கிடைக்கலாமென கருதுகிறார். தமிழ்ப்பார்ப்பனர் திருப்பி ஒன்றும் செய்யவில்லை. அதைப்போல நானும் மிகவும் மனவேதனையடைந்து எழுதுவதை நிறுத்திவிடுவேனாம். அவர் தமிழிலேயே அவருக்குப்பதில் போட்டு சணடையிடுவேனாம். தமிழ் காற்றில் பறக்க சாக்கடைத்தமிழை நானும் குடிப்பேனாம்.

    அப்படியெல்லாம் நடக்காமிலிருக்க ஒரே வழி சாரங்கனுக்குப் பதிலே கிடையாது.

  91. தமிழ்

    விஷயம் ரொம்ப சிம்பிள். எனக்கு தெரிந்த தமிழ் அவ்வளவுதான். கேள்விக்கு பதில் சொல்லுங்க சார். நான் தப்பு தப்பா எழுதிய தமிழ்நால கேள்வி புரியலேன்ன சொல்லுங்க. எதுக்கு புள்ளரிக்கிறீங்க.

  92. தமிழ் சார்

    //
    சிந்து சமவெளியில் வாழ்ந்த இருடிகள் (ரிஷிகள்) எழுதினார் அல்லது சொல்லிச்சென்றாரென்ப
    //

    பாருங்களேன் எப்படி தப்பு பண்ணுகிறீர்கள் என்று.

    ரிக் வேதம் கொடுத்தவர்கள் சிந்து சமவெளிக்காரர்கள் இல்லை சார். சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்களே ரிக் வேதம் அருளியவர்கள். சிந்து சமவெளி கதை எல்லாம் இப்போ பொந்துக்குள்ளே தான் இருக்கு. தயவு செஞ்சு உங்களை கொஞ்சம் அப்டேட் செய்துகொள்ளுங்கள். சரஸ்வதி நதி ராஜஸ்தான் வரை ஓடியது. யாஜ்யவல்கர் தான் சுக்ல யசுர் வேத த்ரஷ்டா அவர் காலத்தில் சரஸ்வதி நதி பெரும் பகுதி வற்றியே போய் விட்டது. இவர் கங்கைக் கரை காரர். இவருக்கும் தென் தேசத்தில் கிருஷ்ண யசுர் வேதம் அதிகம் இருப்பதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. இவரது காலத்திற்கு முன்பே பூம்புகார் இருந்தது அங்கு மன்னர் இருந்தார், மக்கள் இருந்தார்கள் அவர்கள் எந்த கலாசாரத்தை பின்பற்றினார்கள் என்பதைஎல்லாம் தோண்டி எடுத்து விட்டார்கள் அகழ்வாராய்ச்சிகாரர்கள்.

  93. பூவண்ணன்

    //நம் மூதாதையர் அனைவரும் பழங்குடியினர் தான்.//

    பின்றீங்க சார்

    நமது சமகாலத்தவர் அனைவரும் சமகாலத்தவரே
    எதிகாலத்தவர் அனைவரும் புதுக்குடியினர் ஆவார்கள்

    சரி வட மொழி பேசியதாக ஆதாரம் இருக்கிறது இல்லை என்பதற்கு என்ன ஆதாரத்தை காட்டுகிறீர்கள் நீங்கள்.

    வட மொழி என்பது வடக்கு மொழி அல்ல. வட வ்ருக்ஷத்தின் கீழ் சொல்லிக் கொடுக்கப்பட்டதால் வட மொழி என்றாயிற்று. இதை நான் மட்டும் சொல்லலை சார். சாலமன் பாப்பையா மற்றும் பல தமிழரின்ஞர்களே நிறுவி ஒப்போக்கொண்ட ஒரு விஷயம். மொழி பிரச்சனைக்குள் புக வேண்டாமே.

  94. சாரங் சார்

    இப்பவும் காஷ்மீர்ல இருந்து கன்யாகுமரி வரை இருக்கின்ற பிராமணர்கள் ஒரே மாதிரி கோத்ரம் வெச்சு முனிவர்களை தங்கள் மூதாதையர் ஆக வழிபடுகிறார்களே ஆனால் மற்றவர்கள் எல்லாரும் ஏன் சிவ கோத்ரா /விஷ்ணு கோத்ரா என்று காந்தி ஹரிஜன் பேர் வெச்ச மாதிரி ஒரே கோத்ரத்தின் கீழ் வருகின்றனர்.
    அந்தமானில் இருப்பவர்களுக்கும் பாரத்வாஜ காஷ்யப கோத்ரம் இருக்குமோ
    ஜ்ஹர்க்ஹாந்து மாநிலத்தில் கோத்ரம் என்று வருவது என்ன என்று பாருங்கள்
    https://www.tribalstuff.in/2011/04/oraons-the-gotra-system-part-i/

    இப்போது யார் யாரெல்லாம் சிந்து நாகரீகத்திற்கு உரிமை கொண்டாடலாம்.இந்தியரா/பாகிஸ்தானியாரா/பர்மா நாட்டுகாரரா
    வேறு வேறு முறையில் திருமணம்/இறந்தவர்களை அடக்கம் செய்தல்/இறைவனை வணங்குதல்/அவனுக்கு படைக்கும் உணவுகள்/பேசும் மொழி கொண்ட பல குழுக்களில் யார் இதற்கு சொந்தம் கொண்டாடலாம்

    இப்போதும் அந்தமானில் பழங்குடியினர் வசிக்கின்றனர். சில மைல்கள் தொலைவில் உள்ள தீவுகளில் பல்வேறு பிரிவினர்,வேறு வேறு மொழிகள்,பழக்க வழக்கங்கள்.
    வடகிழக்கிலும் பல பழங்குடிகள் இப்போது தான் வெளி உலகோடு தொடர்புக்கு வருகிறார்கள்.அவர்கள் எல்லாருக்கும் வட மொழி,நரசிம்மர் தெரியுமா
    ஒரு குழுவினரின் கடவுள்கள்,வேதங்களை ஏன் எல்லார் மேலும் திணிக்கிறீர்கள்.அதே போல கோத்திரங்களை திணித்திருக்க வேண்டியது தானே
    அது மட்டும் தனியாக வைத்து தனியாக காட்டி கொள்வோம். ஆனால் பல்லாயிரம் சதுர மைல் கொண்ட நாட்டில் ஒரே கலாசாரம்,கடவுள்கள்,உணவு பழக்கங்கள் ஒன்று தான் என்று சாதிப்போம்
    மாட்டு கறி சாபிடுபவன்,மாட்டை பலி கொடுப்பவன்,மாட்டை தெய்வமாக கும்பிடுபவன் அனைவரும் ஒன்று தான்,மாட்டை கும்பிடுவது தான் மூலம் மற்றது எல்லாம் அந்நிய சதி என்று சாதிப்போம் எனபது சரியா

    அனைவருக்கும் ஒரே கலாசாரம் தான் இருந்தது வெள்ளையரும்/இஸ்லாமியரும் வருவதற்கு முன் என்கிறீர்களா

  95. திரு தமிழ், வைதீகமே ஹிந்து சமயம் என்று வேதமே கூறவில்லை. வேதத்தை நிந்தனை செய்பவர்களையும் அது தன்னிலே கொண்டுள்ளது. சமஸ்க்ரிதம் ஒரு பொது மொழியாக இருக்கிறது. நீங்கள் காசிக்குப் போனாலும் சிவாய நமஹா, ருத்ராய நமஹாதான். ராமேஸ்வரத்திலும் அதுதான். அய்யப்பனுக்கு மலையாள வழிபாடு, திருப்பதியில் தெலுங்கு, புரியில் ஒரியா என்று இல்லை. சமஸ்க்ருதம் ஒரு பொது மொழி.

  96. நமது தளத்தில் யாரும் வைதீகம் மட்டுமே இந்துமதம் என்று கருதவில்லை. வைதீகமும் இந்துமதமே என்பதே நமது நிலை. இந்து என்றாலே ஆல் இன்க்ளுசிவ் ( all inclusive).

    கடவுள் இல்லை என்பவரும் கூட இந்துவே. கிறித்தவர்களும், முஸ்லீம்களும் மட்டும் இந்து என்ற வரைமுறைக்குள் வர பயப்படுகிறார்கள். ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் – அவர்களின் மதமாற்ற மாய்மால வேலைகள் அடிபட்டு போய்விடுமே என்ற பயம்.

    எதிர்காலத்தில், பிற மதம், பிற மொழி, பிற இனம், பிற கலாச்சாரம் , இவற்றை அழிக்க நினைக்கும் எல்லா சக்திகளையும் இறைவன் ஒழித்துவிடுவார். எனவே, கடவுளுக்கு , இது மட்டுமே உருவம், இது மட்டுமே மொழி, இது மட்டுமே புனித நூல், இது மட்டுமே வழிபாட்டுமுறை என்று எல்லைகள் வகுக்கும் குறுகிய புத்திக்காரர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.

    சீக்கியமும், பவுத்தமும், ஜைனமும் கூட இந்து மதத்தின் பிரிவுகளே. கடந்த சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக , வெளிநாட்டார் படை எடுப்பால், நமது வாழ்வில், இந்திய மொழிகளின் பங்களிப்பு குறைந்து வருகிறது. அடிமை வாழ்வில் சுகம் கண்ட திராவிட இயக்கங்கள், அடிமைச்சேறு பூசிக்கொண்டு, ஆங்கிலமே வருக, தமிழ் படிக்காதே, படித்தால் நாசமாய் போவாய் என்று பகுத்தறிவு சாபம் கொடுத்து, தமிழகத்தை நாசமாக்கினார்கள். உலகத்தில் மூன்றில் இரண்டு பகுதியை, தனக்கு அடிமை நாடுகளாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் , இருபதாம் நூற்றாண்டில் உலகெங்கிலும் இருந்து அடித்து விரட்டப்பட்ட போது, வெள்ளையனுக்கு கால்கழுவி , மாமா வேலை பார்த்தோர் தான் திராவிட இயக்கத்தினர். சுதந்திர தினத்தை துக்க தினமாக கொண்டாடியவர்கள் தான் திக போன்ற மடிசஞ்சி கும்பல்கள்.

    எல்லா மொழிகளும் ஒரு தொடர்பு கருவி மட்டுமே. ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு மொழி பொது கருவியாக இருந்துள்ளது. ஆனால், சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாகத்தான் கலந்துள்ளது. எல்லாமொழிகளிலும், சமஸ்கிருதத்தின் கூறுகள், நீக்கமற நிறைந்துள்ளன. சமஸ்கிருதம் என்றுமே , அழியாது. ஏனெனில் அது ஒரு அற்புதமான மொழி.

    நம் நாட்டில் சில புல்லுருவிகள் தமிழுக்கு பிற மொழிகள் எதிரி என்று பொய்ப்பிரச்சாரம் செய்து, இந்தி போன்ற முக்கிய மொழிகளை கற்கவிடாமல், சதி செய்து, தமிழனை அழிக்க முயன்றனர். ஆனால், தமிழ் மக்கள், பிற மொழிகளின் முக்கியத்துவத்தை அறிந்து, இந்தி உட்பட ஏராளமான பிற மொழிகளை கற்று , பல வெளிநாடுகளிலும், பல வெளிமாநிலங்களிலும் சிறப்பாக வாழ்ந்துவருகின்றனர். தமிழே படிக்காமல், தமிழ் நாட்டில் ஆங்கில வழி பள்ளிகளையும், கல்லூரிகளையும் , ஏராளமான எண்ணிக்கையில் துவக்க வழிவகை செய்து, தமிழை சிம்மாசனத்திலிருந்து இறக்கியது தான் திமுக மற்றும் திக போன்ற அரைகுறைகளின் திருப்பணி. விரைவில் தமிழ் அரியணை ஏறும். மக்கள் திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை தெளிவாக புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டனர். விரைவில் நல்ல மாற்றங்கள் வர உள்ளன. இந்தியாவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.

  97. ///நமது தளத்தில் யாரும் வைதீகம் மட்டுமே இந்துமதம் என்று கருதவில்லை. வைதீகமும் இந்துமதமே என்பதே நமது நிலை. இந்து என்றாலே ஆல் இன்க்ளுசிவ் ( all inclusive). நமது தளத்தில் யாரும் வைதீகம் மட்டுமே இந்துமதம் என்று கருதவில்லை. வைதீகமும் இந்துமதமே என்பதே நமது நிலை. இந்து என்றாலே ஆல் இன்க்ளுசிவ் ( all inclusive). ///

    இந்தக் கருத்தை அத்விகா மாத்திரம்தான் கூறுவார். இதே தளத்தில் முன்னர் வெளிவந்த கட்டுரைகள், அவற்றுக்கான மறுமொழிகள், குறிப்பாக அக்கட்டுரைகளின் ஆசிரியர்களே கூட, இந்து மதம் என்பது வைதீக மதம் என்ற கோட்பாட்டை நிறுவும் வண்ணம்/ எண்ணம் கொண்டனவாகவே இருக்கின்றன. இதே கட்டுரையில் கூட கட்டுரையின் ஆசிரியர் தனது மறுமொழி ஒன்றில் இந்து வைதீக மதம் என்றே கூறுகிறார். இந்து மதத்தை வைதீக மதம் என்று நிறுவுவதில் மேல்சாதியினருக்கு சில அவசியங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. சாதியமும் பிரிவினைகளும் பாகுபாடுகளும் நீங்க வேண்டுமானால் அத்விகா சொல்லும் கருத்து உண்மையாக வேண்டும். எனக்கு நம்பிக்கை இல்லை.

    ///வைதீகமே ஹிந்து சமயம் என்று வேதமே கூறவில்லை.///

    ரமேஷ் சீனிவாசன் சொல்வது போன்ற இக்கருத்துக்கள் எப்போதெல்லாம் அழுத்தமான ஆழமான கேள்விகள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் வெளிப்படும். ஆனால் அடிப்படையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி வைதீகம் இல்லாமல் இந்து மதமே இல்லை என்று முழங்கும்.

    கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் இந்துக்கள் என்றால், மீதம் இருக்கும் அறுபத்தைந்து சதவிகிதம் மக்கள் பிற சாதி இந்துக்கள். இவர்களிலும், வைதீகத்தை மட்டுமே முன்னிருத்தாத சாதியினர் இருக்கிறார்கள். இப்படி இருக்க இந்து சமுதாயம் ஒற்றுமையாக இருக்கவேண்டுமானால், தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும். அதன் முதல்படி, இந்த மொழிதான் முதன்மையானது, வைதீகமே இந்து மதத்தின் அடிப்படை ஆதாரம் என்கின்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் முன்னெடுத்துச் சொல்லுதல் கூடாது. எததனை சொன்னாலும் சிலர் / பலர் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    சாதிக் கொடுமைகளால் பாதிக்கப் பட்டவர்கள் மதம் மாறும்போது குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுவதில் என்ன பயன்?

  98. தமிழ் அல்லது பூவண்ணன் இருவரும் ஒருவரா அல்லது இருவர்தானா என்பது தெரியவில்லை. ஆனால் ஜோ அமலனின் வாசனை எங்கோ வருகிறது!

    ஆனால் இவர்கள் எழுப்பிய கேள்விகளில் நரசிம்ம வழிபாடு புத்தர் காலத்துக்கு முந்தையது என்பதற்கான வலுவான இலக்கிய ஆதாரங்கள் இருப்பதாக ஜடாயு சொன்னார். அவற்றை வெளியிடுதல் நல்லது.

  99. நவராத்திரி திருவிழாவில் பிஸியாக இருக்கிறேன், எனவே அடிக்கடி வந்து இங்கு மறூமொழிகளைப் பார்க்க இயலவில்லை.

    தமிழ், நான் வைத்த வாதகதியின் சாரம் எதையும் உள்வாங்காமல் வளவள என்று ஏதோ எழுதிக் கொண்டே போகிறீர்கள். நான் குறிப்பிட்ட ஆய்வுத் தரவுகள் (உதாரணமாக, சண்முகம் பிள்ளை நூல்) குறித்து எதுவும் சொல்லாமல் வேறெங்கோ தாவுகிறீர்கள்..

    தமிழ்ப் பழங்குடிகளுக்கு முதுமக்கள் தாழி, வேட்டையாடுதல், நெருப்பு மூட்டுதல் தான் தெரியும் வேறெதுவும் தெரியாது – என்று நீட்டி முழக்கி சொல்கிறீர்கள்.. இதைச் சொல்வதற்கு எந்தப் புலமையும் தேவையிலட்லை. இது ஒரு சராசரி, பாமர ஜல்லி.. மேலும் தமிழ்ப் பழங்குடிகள் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லாப் பழங்குடிகளுமே இதெல்லாம் தான் செய்து வந்தார்கள் :)) நாம் இங்கு பேசும் பொருளான “பண்பாட்டு வரலாறு” ஆராய்ச்சிக்கு இந்த ஜல்லியால் ஒரு பயனும் இல்லை..

    ஒரு நிலப்பரப்பின், சமூகத்தின் பண்பாட்டு வரலாறு பற்றி ஆராய்வதற்கு, அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளின் தொடக்க காலத்தை விளக்கக் கூடிய சான்றுகள் தேவை.. அவை தான் அத்தகைய ஆராய்ச்சியின் “கச்சாப் பொருள்கள்” .. இவை அகழாய்வுகள், இலக்கிய சான்றூகள், கல்வெட்டுகள், சிற்பங்கள் என்று பலவற்றை வைத்து *ஊகிக்கப் படுகின்றன*.. அந்த வகையில் தான் சங்க இலக்கியம் தமிழின் முதல் நூல்களாகின்றன.. மேலும் சங்க இலக்கிய காலம் என்பது ஒரு குறுகிய காலகட்டம் அல்ல, 3-4 நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கியது அது.. அத்தகைய இலக்கியத் தொகுதியில் எல்லா நூல்களிலும் ”இந்து” சமயக் கூறுகள் இருப்பதைத் தான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் மண்டை டைனோசர் ஆராய்ச்சிக்கு போகிறீர்கள்.. மீண்டும் சொல்கிறேன், இங்கு செய்வது natural history, palentology ஆராய்ச்சி அல்ல, பண்பாட்டு ஆராய்ச்சி.

    நான் இந்தக் கட்டுரையை எழுதியது *சிற்பங்கள்* பற்றீ, மண்டை ஓடுகள் பற்றீ அல்ல.. அதில் நரசிம்ம வழிபாட்டின் தொன்மையைக் குறிக்க “பழங்குடி வேர்கள்” என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் எந்த வரலாற்றூ பூர்வமான பிழையும் கிடையாது.. ஆனால் இதை வைத்துக் கொண்டு, உங்கள் முன்முடிவுகளையும், நிலைப்பாடுகளையும் சளைக்காமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.. அயர்ச்சி தான் ஏற்படுகிறது.

  100. பூவண்ணன்,

    ஏதோ நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அது 1800 வருட கலாசாரமா அல்லது 2400 வருட கலாசாரமா என்று தீவிர ஆராய்ச்சி செய்து விட்டுத் தான் செய்கிறீர்கள் என்பது போல சீறிப் பாய்ந்து எழுதுகிறீர்கள். பல சமயங்களில் பரிதாபம் கூட ஏற்படுகிறது.

    // ஆனால் மற்றவர்கள் எல்லாரும் ஏன் சிவ கோத்ரா /விஷ்ணு கோத்ரா என்று காந்தி ஹரிஜன் பேர் வெச்ச மாதிரி ஒரே கோத்ரத்தின் கீழ் வருகின்றனர். //

    ஓ அப்படியா? இந்தியாவில் உள்ள எல்லா சமூகத்தினரிடமும் போய்க் கேட்டுப் பார்த்து உறூதி செய்து விட்டீர்களா? பலே கில்லாடி சார் நீங்க. ஏதோ உள்ளூர் கோயிலில் காதில் விழுந்த ஒரு உதிரி் தகவலை வைத்து இஷ்டத்துக்கு எடுத்து விடுகிறீர்கள்.

    இதோ இந்த தமிழ்நாட்டிலேயே பிராமணர் அல்லாத எத்தனை சமூகங்கள் தங்கள் கோத்ரத்தின் / வமிசத்தின் மூதாதைகளாக விதவிதமான முனிவர்களையும் சித்தர்களையும் ரிஷிகளையும் சொல்கிறார்கள் என்று அந்தந்த குல ஐதிகங்களைப் படித்துப் பாருங்கள்.. மலைத்து விடுவீர்கள்.. சேலம் பகுதியில் தேவாங்கர் சாதிக் காரர்கள் “அகஸ்திய மகரிஷி கோத்திரம்” என்று தங்களை சொல்லிக் கொள்கிறார்கள். கொங்கு கவுண்டர்கள், ஆரிய வைசியர்கள் குறித்த இணைய தளங்களில் எல்லாம் போய் அவர்களது கோத்திரங்களைப் பற்றீ தெரிந்து கொள்ளுங்கள். தலித் சாதியினரான வள்ளூவர்கள் தங்களை திருவள்ளுவ மகரிஷியின் கோத்ரத்தில் வந்ததாகவும், தேவேந்திர குலவேளாளர்கள், தாங்கள் தேவேந்திரனிடமிருந்து வந்தததாகவும் கருதுகிறார்கள்.

    பீகாரில் பால்மீகி என்ற தலித் சாதியினர் வால்மீகி மகரிஷியின் கோத்திரத்தில் வந்ததாக தங்களை சொல்லிக் கொள்கின்றனர். வ்யாஸ் என்று பெயர் வைக்கும் வட இந்திய சாதிக் காரர்கள் பிராமணர்கள் மட்டும் அல்ல.. பல வட இந்திய சத்திரிய சாதிகளின் குல புராணங்கள் விஸ்வாமித்திரருடன் தொடர்புடையவை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    இந்த ஐதிகங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் உருவாகி மக்கள் சமூகங்கள் அவற்றுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.. அது தான் அறிவியல் பூர்வமான கருத்து. மற்றபடி, இன்றைக்கு பாரத்வாஜ கோத்ரம் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் பாரத்வாஜர் என்ற ரிஷி வழியாக மர்பணு ரீதியாக தொடர்பு கொண்டவர்கள் என்றூ நீங்கள் நினைக்கிறீர்களா என்ன? அப்படி பயங்கரமான கற்பனைகளை எல்லாம் வைத்துக் கொண்டு நீங்கள் பகுத்தறிவு பூர்வமாக இப்படியெல்லாம் பயங்கரக் கேள்வி கேட்டால் நான் விடு – ஜூட் என்று ஓட வேண்ர்டியிருக்கும்..

    By the way, மரபணு ஆய்வாளர்கள் இந்தியாவின் எல்லாவிதமான மக்கள் சமூகங்களில் இருந்தும் மரபணுக்களை எடுத்து Indian Genome Variation Project என்ற திட்டத்தின் கீழ் ஆராய்ந்து அதில் சாதி-ரீதியாக எந்த பொதுத் தன்மையும் இல்லை என்று அறிவித்து விட்டிருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் படிக்க வேண்டியது அதைத் தானே தவிர, கோத்ரங்களைப் பற்றி மக்கள் கூறும் கதைகளை அல்ல.

    // ஒரு குழுவினரின் கடவுள்கள்,வேதங்களை ஏன் எல்லார் மேலும் திணிக்கிறீர்கள்.அதே போல கோத்திரங்களை திணித்திருக்க வேண்டியது தானே //

    இந்தியா போன்று ஒரு பரந்து விரிந்த தேசத்தில், மதங்களும் ஐதிகங்களும் எப்படிப் பரவின, சிற்றரசுகளும் பேரசுகளும் எப்படி உருவாயின, கலாசார பரிவர்த்தனை எப்படி நிகழ்ந்தது போன்றவை குறித்த எந்த அடிப்படைகளையும் கற்காமல், அல்லது கற்றதைத் திரித்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எல்லாவற்றீலும் உங்கள் வழக்கமான காழ்ப்புணர்வும் துவேஷமும் முன்முடிவுகளும் தான் கோலோச்சுகிறது..

    // ஆனால் பல்லாயிரம் சதுர மைல் கொண்ட நாட்டில் ஒரே கலாசாரம்,கடவுள்கள்,உணவு பழக்கங்கள் ஒன்று தான் என்று சாதிப்போம் //

    இந்துக்கள் அப்படி சாதிக்கிறார்களா? என்ன உளறுகிறீர்கள்?? இதோ இப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நவராத்திரி/தசரா திருவிழாவையே எடுத்துக் கொள்ளுங்கள்.. கல்கத்தா காளிக்கு பலி கொடுக்கும் இந்துவும், அன்னை மீனாட்சிக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யும் இந்துவும் ஒரே மகாசக்தியின் திருவுருவைத் தான் வணங்குகிறார்கள்.. வட இந்தியாவின் ராம்லீலா, குஜராத்தின் கர்பா/தாண்டியா நடனம், வங்கத்தின் துர்கா பூஜா, தென்னிந்தியாவின் தேவி வழிபாடுகள், கொலு – எத்தனை விதமான வண்ணமயமான கொண்டாட்டங்கள், வழிபாடுகள்! உங்களைப் போன்ற ஒரு கருத்துக் குருடருக்கு இதெல்லாம் தெரியாது தான்.

    // மாட்டு கறி சாபிடுபவன்,மாட்டை பலி கொடுப்பவன்,மாட்டை தெய்வமாக கும்பிடுபவன் அனைவரும் ஒன்று தான்,மாட்டை கும்பிடுவது தான் மூலம் மற்றது எல்லாம் அந்நிய சதி என்று சாதிப்போம் எனபது சரியா //

    அப்படி எவனும் சொல்லவில்லை… ஆனால், மாட்டை உண்ணும் ஆதிகால கலாசாரத்திலிருந்து மாட்டைப் போஷிக்கும், போற்றும் ஒரு கலாசாரத்திற்கு இந்திய சமூகம் பரிணாம வளர்ச்சியடைந்தது என்பது நிறுவப் பட்ட உண்மை. மார்வின் ஹாரிஸ் போன்ற மானுடவியல் பேரறிஞர்களும் கூட சொல்லும் விஷயம் இது. வைதீக மதங்கள் மட்டுமல்ல, முழு நாஸ்திக மதங்களான பௌத்தமும், சமணமும், பிற்காலத்தில் வந்த சீக்கிய மதமும் கூட பசுவதையை கடுமையாக நிராகரிக்கின்றன்வே – ஏன் என்று யோசித்தீர்களா? அதன் காரணம் பசு என்ற மிருகம் மீதான குருட்டு பக்தி அல்ல, இயற்கை, விவசாயம், பால் உணவு, ஜீவகாருண்யம் என்று பல அம்சங்களும் கலந்த ஒரு பண்பாட்டுக் கூறு அது.

    மேலும், இந்து மதம் என்ற மாபெரும் மதத்தின் ஒட்டுமொத்த சாரமும் ஒரு மிருகத்தை உண்பதா, உண்ணக் கூடாதா என்பதில் தான் உள்ளது என்று கூமுட்டைத் தனமாக நீங்கள் எண்ணுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது, ஆனால் அதை பொதுவில் எழுதினால் ஏளனத்திற்கு ஆளாவீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

  101. ஜடாயு சார்

    இது இந்து நாடு இங்கு பசு வதை தடை செய்ய வேண்டும் என்று போராடுபவர்கள் யார்.

    சாப்பிடும் பழக்கம் உள்ள குழுக்களையும் இங்கு அப்படி செய்ய கூடாது,செய்ய முடியாது என்று கூக்கரிக்கும் குழுவில் இருந்து கொண்டு என்னை குற்றம் சொல்வது சரியா
    அரசியல் நிர்ணய சபையில் பழங்குடி இனத்தை சார்ந்தவரும் ஹாக்கி பிளேயர் உமான முண்டா அவர்கள் பசு எப்படி வர்களின் உணவு அதை தடை செய்ய கூடாது என்று பேசியதை கொஞ்சம் படியுங்களேன்
    விடுதலைக்கு முன்பே நாகா மக்களின் தலைவர்கள் வெள்ளை அரசிடம் பசுவையும் ,பன்றியையும் உண்பதால் ஹிந்துக்களின் பிரதிநிதியான கோங்க்றேச்சும் எங்களை சேர்த்து கொள்ள மாட்டார்கள்,முஸ்லிம் லீகும் எங்களை சமமாக நடத்தது .எங்களை தனியாக கருத வேண்டும் ,தனி நாடு வேண்டும் என்று போராடியது நிகழாத ஒன்றா
    மாட்டு கறியை பெரிய போராட்டமாக ஆக்குவது உங்கள் சங்க பரிவாரம் தான் .
    NDA அரசு பதவி ஏற்கும் தள்ளி வைத்த மூன்று அடிப்படைகளில் ஒன்று என்ற உண்மையை மறைத்து பேசுவது உங்களுக்கு அழகா

    கோத்திரங்களை பற்றிய உங்களின் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்வது போல அஸ்வின்,ஸ்ரீ ராம் என்று எல்லா சாதியினரும் இன்று பெயர் வைத்து கொள்வதை போன்றவற்றை எடுத்துகாட்டாக கூறுவது சரியா
    பிராமணர்களுக்கு இந்தியா முழுவதும் ஒரே கோத்திரம் வருகிறதே
    ஆனால் மற்ற குழுக்களுக்கு அது போல எந்த ஒற்றுமையும் இல்லையே என்று கேட்டால் சில வைஷ்ய சாதிகளுக்கு இருக்கும் கோத்திரத்தை சுட்டி காட்டுவது சரியா
    சோரேன் களுக்கும் தோடர்களுக்கும் ,குஜ்ஜர்களுக்கும் சானர்களுக்கும்,பாச்வான்களுக்கும் பள்ளர்களுக்கும் அதே போல் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று தானே கேட்டேன்

  102. //தமிழ் அல்லது பூவண்ணன் இருவரும் ஒருவரா அல்லது இருவர்தானா என்பது தெரியவில்லை. ஆனால் ஜோ அமலனின் வாசனை எங்கோ வருகிறது!//

    அஞசன் குமார்!

    பூவண்ணன் வேறு; நான் வேறு.

    இங்கு தொடர்ச்சியாக நான் எழுதுவது கிடையாது. ஒரு நீண்ட தொடர்ச்சி, விடுப்பு, மற்றுமொரு தொடர்ச்சி என்று போகுபவை என எழுத்துக்கள். முன்பு, நீங்கள் சுட்டிய ஜோ அமலன் ராயன் பெர்ணான்டோ என்று கத்தோலிக்கப்பெயர்; பின் திருவாழ்மார்பன் என்ற வைணவப்பெயர்; தற்போது தமிழ் என்ற மதம்சாராபெயர்.

    இதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு. தளத்தார் எழுதுபவர் ஒரே பெயரில்தான் எழுதவேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை. பெயரில் ஒன்றுமே இல்லை. கருத்தில்தான் எல்லாமே என்பது என் நம்பிக்கை. என் பெயர்களுக்கு நான் அடிமையன்று. என் பெற்றோர் வைத்த பெயருக்கும் நான் அடிமையன்று. அது ஒரு குறீயீடு மட்டுமே. பெயர்களைப் பெரிதுபடுத்திப்பேசுவோர், தும்பை விட்டு வாலைப்பிடிப்பவர்கள்; மட்டும் தனிநபர் தாக்கத்தில் இறங்கி கருத்தைத் திசை திருப்பும் உள்ளொக்கம் கொண்டோர்.

    தற்போது தமிழ் என்ற பாவனைப்பெயர். என் பொழுதைப்போக்குபதே என் முதல் நோக்கம் இணயதள விவாதங்களில் பங்கேற்பதனால். ஓரிருவர் படித்து என் கருத்தை ஒத்துக்கொண்டு விட்டால் மாதம் மும்மாறி பொழியப்போவதில்லை.

  103. ஏன் என்று யோசித்தீர்களா? அதன் காரணம் பசு என்ற மிருகம் மீதான குருட்டு பக்தி அல்ல, இயற்கை, விவசாயம், பால் உணவு, ஜீவகாருண்யம் என்று பல அம்சங்களும் கலந்த ஒரு பண்பாட்டுக் கூறு அது. //

    ஜடாயு!

    இயற்கை, விவசாயம், பாலுணவு, உயிரின் மேல் கருணை என்ற பல அம்சங்கள் எருமையிலும், குதிரையில், ஆடுகளிடமும் உண்டு.

    பால் என்றால் இன்று எருமைப்பால்தான். பசுப்பால் அரிது. கேட்டால்தான் கிடைக்கும் தில்லியில். காளைமாடுகள். தமிழகத்து ‘ஆவின்’ மட்டுமே பசுப்பாலையும் பயன்படுத்துகிறது. மற்ற மாநில பால் தொழிலில் எருமைப்பாலே.

    விவசாயத்துக்கு பசுக்களைவிட உதவுவன காளைமாடுக்ளே. பசுக்களை வைத்து ஆதிகாலத்திலோ இன்றோ நிலத்தை உழமுடியாது. அறுவடை செய்து தானியங்களை எடுத்துச்செல்லும் மாட்டுவண்டிகளில் காளைகள்தான்; பசுக்கள் அல்ல. எருமைகளை வைத்து உழுதலையும் பார்க்கலாம். இப்படிப்பார்க்கையில் விவசாயத்துக்கு பசுக்களை விட காளைகளே.

    ஆனால், பசு மட்டுமே கோமாதா என்று வணங்கப்படுகிறது. ஏன்? தமிழர்கள் பொங்கலில் காளைமாட்டைத்தொழுகிறார்கள் என்று திசைதிருப்ப வேண்டாம். வைதீகமதம் ஏன் பசுவைக் கோமாதா என்று தொழுகிறது? பசுவதையை மட்டுமே இந்து அமைப்புகள் எதிர்ப்பதேன்?

    அக்காலத்தில் ’பிராமணர்கள்’ வைதீகத் தொழிலைச்செய்தனர். அப்படியே வேறெந்த தொழிலைச்செய்தாலும் அதுவும் அறிவைமட்டும் பயன்படுத்தும் தொழிலாகும். உடலைவருத்தும் தொழில்களை அவர்கள் செய்ததில்லை. பிராமணத்தத்துவத்தின்படி அவர்கள் இரந்துண்ண வேண்டும். அவர்களுக்கு கொடுப்பது பிக்‌ஷை அளிப்பதென்றாகியது. அது புனிதமான கடமையென மக்களுக்குச்சொல்லப்பட்டது. இப்படியான பிராமணத்தனத்தில் ஒன்றுதான் அவர்களுக்குப் பசுவைத்தானமாகக்கொடுத்தல். அப்பசு தரும் பால், அவர்களுக்கு முக்கியமான உணவுகளாகிய தயிர், வெண்ணை, பால்.

    எனவேதான் பசு கோமாதா என்று அவர்களால் போற்றப்பட்டது. வசிட்டர் ஒரு பசுவை வைத்திருந்தார். அதன் அசாதராண செயலால் அதைப்பெற முய்ன்றார் ஒரு பிராமணரல்லாத முனிவரான விசுவாமித்திரர் இல்லையா? வசிட்டர் பிராமணரன்றோ!

    எனவே புராணக்கதைகளில் புனிதமான இடத்தை பசுவுக்குப் பிராமணர்கள் அளித்தார்க்ள்.

    எருமைக்கு அப்படி அளிக்கப்படவில்லை. எருமைக்கும் பிராமணருக்கும் தொடர்பில்லையாதலால். அரசர்களும் தனவந்தர்களும் பிராமணர்களுக்கும் பசுவையே தானமாகக்கொடுத்தார்கள். எருமையன்று. எனவே எருமையை காலனின் வாஹனமாக்கிக்கொண்டு, பசுவை சிவபெருமானோடு சேர்த்துக்கொண்டார்கள்.

    ஜடாயும் நான் எழுதியவைகளைக் கொஞ்சம் சிந்திக்கலாம்.

    கோத்திரங்களைப்பற்றி பூவண்ணன் எழுதியதற்கு, ஜடாயு, தலித்துகளுக்கும் ஆசாரிகளுக்கும் உண்டு என்று பதில் சொல்கிறார். தலித்துக்களிடமும் ஆசாரிகளிடம் கோயில்களில் கோத்திரங்கள் கேட்பதில்லை. அர்ச்சகருக்கே தெரியும் அது அசிங்கமென்று. கேட்பவரிடம்தான் கேட்கவேண்டும்.

    எந்த ஆசாரியும் எந்த தலித்தும் தன் மகளுக்கோ, மகனுக்கோ தன் கோத்திரத்தின் பெயரைச்சொல்லி மணவிளம்பரம் செய்வதில்லை. பார்ப்னர் மட்டுமே செய்கிறார்.

    பெர்சப்ஷன் என்பார்கள் ஆங்கிலத்தில். ஜடாயு அதையும் எடுத்துக்கொண்டுதான் பேச வேண்டும். பூவண்ணன் பெர்ஷப்ச்னையும் சொல்கிறார் என்பதேன் தெரியவில்லை.

    அதன்படி, கோத்திரமென்றாலே நினைவுக்கு வருவது பார்ப்னர்கள் மட்டுமே. அவர்களுக்கென்றே லிஃப்கோ என்ற தமிழ்ப்பார்ப்ப்னர்களால் நடாத்தப்படும் பதிப்பகத்தார், உங்கள் கோத்திரத்தை மறவாதீர் என்று முனிவர்கள் வரலாற்றை எடுத்துப்போடுகிறது. அந்நூலின் முன்னுரையை ஜடாயு படிக்கவும்.

    மடங்களில் அடிக்கடி ஒரு பிரபல சாமியார் சிறப்புப்பூஜை நடத்தவருவார். அங்கே கோத்திரம் சொல்லித்தான் முன்சீட்டு வாங்க வேண்டும் அப்பூஜையில் சேர. தமிழகத்தில் இருக்கிறதோ இல்லையோ, வெளியில் உண்டு.

    பூவண்ணனைப்போன்று பலர் வைக்கும் விமர்சனங்களினாலேயே தமிழ்ப்பார்ப்ப்னர்கள் இறங்கி வர, கோயில்களிலும் மாறிக்கொண்டு வருகின்றன எனப்து நிதர்சன் உண்மையாகும். தமிழ்கத்தில் மட்டுமன்றி, அப்பாலும் தென்னிந்தியர்களால் நடாத்தப்படுபவையில்களில் உண்டு. தில்லி காமாட்சியம்மன் கோயில் காஞ்சி மடத்துக்கோயில். அங்கு கோத்திரம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. சுமங்கலிப்பூஜைக்கு சீட்டுண்டு. First come First Served என்ற கோட்ப்பாடு மட்டுமே. இப்படி காலமாறுவதற்கு பூவண்ணன் போன்றோரே காரணம். ஜடாயு அன்று. இவ்வகையில் பூவண்ணனுக்குத்தான் இந்துக்கள் நன்றி சொல்லவேண்டும்.

    விமர்சிப்பவரைக் கருத்துக்குருடரென்றும் உலறல்கள் என்றும் ஆவேசப்படாமல், அவ்விமர்சனங்களிலை, உண்மையில்லாவிட்டாலும் கூட, அல்லது அறியாமையினால் எழுதப்பட்டதென்றாலும் கூட, பெர்ஷப்பன்களே அவையென்று எடுத்துக்கொண்டு, அப்பெர்ஷப்பனைக்களைவது எப்படி என ஆராய்ந்து செயல்படுத்துவதே இன்று இந்தமதம் செழிக்கவேண்டுமென்ற அவாக்கொண்டோரின் கடமை.

  104. அன்பார்ந்த ஸ்ரீ அஞ்சன்குமார்,

    \\\இந்தக் கருத்தை அத்விகா மாத்திரம்தான் கூறுவார். இதே தளத்தில் முன்னர் வெளிவந்த கட்டுரைகள், அவற்றுக்கான மறுமொழிகள், குறிப்பாக அக்கட்டுரைகளின் ஆசிரியர்களே கூட, இந்து மதம் என்பது வைதீக மதம் என்ற கோட்பாட்டை நிறுவும் வண்ணம்/ எண்ணம் கொண்டனவாகவே இருக்கின்றன.\\\

    தவறு. நான் எழுதும் பல உத்தரங்களில் ஹிந்து மதம் என்பது வைதிகம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற பல கருதுகோள்களை உடையது என்று எழுதியுள்ளேன். கருத்துக்கள் பதியும் பலரும் அவ்வாறே பதிந்து வருகின்றனர் என்பது முக்யம். ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் ஸ்ரீ பூவண்ணனுக்கான இன்னொரு உத்தரத்தில் அவலோகிதேஸ்வரர் மற்றும் வஜ்ரயான பௌத்தத்தின் கூறுகளைப் பற்றி பகிர்ந்துள்ளதையும் வாசிக்கவும்.

    என்னுடைய 13ம் திகதிய உத்தரமும் கீழே கொடுத்துள்ளேன். வாசிக்கவும்.

    |||||||||ஹிந்து மதத்தின் வைதீக சமயக்கூறுகளை பௌத்தம் உள்வாங்கியதுபோலவே தாந்த்ரீக பௌத்தத்தின் உட்கூறுகளை தாந்த்ரீக சாக்தம் உள்வாங்கியுள்ளது. தாராதேவி, வஜ்ரவாராஹி போன்ற தேவதைகள் தாந்த்ரீக பௌத்தம் மற்றும் தாந்த்ரீக சாக்தம் இரண்டிலுமே வழிபடப்பெறுகின்றனர். இன்றும் கூட.

    ஸ்ரீமான் பூவண்ணன் அவர்கள் ஹிந்து சமயம் பௌத்தத்தை கபளீகரம் செய்துவிட்டது என்று கூறுவதை அப்பட்டமாக மறுதலிக்கும் சமாசாரங்கள் மேற்கண்ட விஷயங்கள். அன்பரே தவறான தகவல்.

    பௌத்த க்ரந்தங்களை பௌத்தர்கள் எந்தளவு வாசிக்கிறார்களோ அந்தளவு இல்லாவிடினும் வைதிகர்களும் பௌத்தக் கருத்துக்களை பூர்வ பக்ஷம் என்றளவுக்கு வாசிக்கிறார்கள் இன்றைக்கும் என்பது முக்யம். ஜைமினியின் பூர்வமீமாம்ச சூத்ரங்களுக்கான பட்டரின் வார்த்திகத்தில் பௌத்தக் கருத்துக்கள் பூர்வ பக்ஷமாக விசாரிக்கப்பட்டு மறுதலிக்கப்படுகின்றன.

    பூர்வபக்ஷமாகவேனும் வைதிக சமயத்தில் பௌத்தம் குஹ்யமாக இன்றும் உள்ளது என்பது மறுதலிக்க இயலாத விஷயம்.|||||||

    பன்முகம் உடைய சமூஹம் தனித்து என்றும் இயங்கவியலாது என்பது நிதர்சனம். ஹிந்துஸ்தானத்தில் (அகண்ட ஹிந்துஸ்தானம் – இன்று பாக்கி ஸ்தானம் மற்றும் பாங்க்ளா தேசம் போன்ற நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு) புழங்குகையில் இஸ்லாம் மதத்திலும் கூட இத்தேசத்து மக்களுடைய வழிபாட்டு முறைகளை உள்வாங்கும் போக்கு இருந்துள்ளது. மூதாதையர் வழிபாடு / பித்ருக்கள் வழிபாடு என்ற அம்சத்தை இஸ்லாமியரின் தர்க்கா வழிபாடுகளில் காண்க. பாலைவனத்திலிருந்து படையெடுத்து வந்த இஸ்லாமிய கொடுங்கோலர்களுக்கு இசையையும் கலைகளையும் போதித்து அவர்களை மென்மையாக்கி அவர்களின் மத வழிபாடுகளில் பெரும் மாற்றத்தையும் ஸூஃபி வழிபாட்டு முறை போன்ற புது கருத்துக்களையும் உருவாக்க காரணம் நம் பன்முக சமூஹம்.

    வஹாபி ஸுன்னி முஸல்மான்கள் தர்க்காவில் வழிபாடுகளை எதிர்க்கின்றனர் தான். ஆனால் இது போன்றதொரு வழிபாடு அகண்ட ஹிந்துஸ்தான நிலப்பரப்பிற்கு முக்யமாக உரித்தானது என்பது முக்யம். உலகின் மற்றைய இஸ்லாமிய நாடுகளில் காணக்கிட்டாதவை. பரேல்வி ஸுன்னி முஸல்மான்கள் இவ்வழிபாட்டு முறைகளை ஸுன்னத் வழியாக நிர்த்தாரணம் செய்து இவற்றில் ஹராம் (பாபம்) என்று ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

    \\\அதன் முதல்படி, இந்த மொழிதான் முதன்மையானது, வைதீகமே இந்து மதத்தின் அடிப்படை ஆதாரம் என்கின்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் முன்னெடுத்துச் சொல்லுதல் கூடாது. எததனை சொன்னாலும் சிலர் / பலர் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.\\\\

    ஸ்ரீமான் ஜடாயு அவர்களது 21ம் திகதிய ஸ்ரீ பூவண்ணன் அவர்களுக்கான உத்தரத்தில் துர்க்கை வழிபாடு ஹிந்துஸ்தானம் முழுதிலும் எப்படி விதவிதமாக கொண்டாடப்படுகிறது என்பதில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

    நமது சமூஹம் பன்முகம் உடையது தான். இப்பன்முகத்தில் ஹிந்துஸ்தானத்து இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவத்துக்கு கூட இடமுண்டு. ஆனால் இப்பன்முக தர்சனத்தை அழித்து ஒழித்து அதை அடாவடித்தனமாக ஒருமுகமாக்க விழையும் க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமிய இவாஞ்சலிக்கல் மற்றும் ஜிஹாதிய / வஹாபிய ஆப்ரஹாமிய சக்திகளை களையறுப்பது தான் உலக ஒற்றுமைக்கு கூட வழிவகுக்கும். இப்பணியை ஹிந்து இயக்கங்கள் சரியாகத் தான் நிறைவேற்றி வருகின்றன என்பது என் கணிப்பு.

  105. //ஒரு நிலப்பரப்பின், சமூகத்தின் பண்பாட்டு வரலாறு பற்றி ஆராய்வதற்கு, அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளின் தொடக்க காலத்தை விளக்கக் கூடிய சான்றுகள் தேவை.. அவை தான் அத்தகைய ஆராய்ச்சியின் “கச்சாப் பொருள்கள்” .. இவை அகழாய்வுகள், இலக்கிய சான்றூகள், கல்வெட்டுகள், சிற்பங்கள் என்று பலவற்றை வைத்து *ஊகிக்கப் படுகின்றன*.. அந்த வகையில் தான் சங்க இலக்கியம் தமிழின் முதல் நூல்களாகின்றன.. மேலும் சங்க இலக்கிய காலம் என்பது ஒரு குறுகிய காலகட்டம் அல்ல, 3-4 நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கியது அது.. அத்தகைய இலக்கியத் தொகுதியில் எல்லா நூல்களிலும் ”இந்து” சமயக் கூறுகள் இருப்பதைத் தான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் மண்டை டைனோசர் ஆராய்ச்சிக்கு போகிறீர்கள்.. மீண்டும் சொல்கிறேன், இங்கு செய்வது natural history, palentology ஆராய்ச்சி அல்ல, பண்பாட்டு ஆராய்ச்சி.

    நான் இந்தக் கட்டுரையை எழுதியது *சிற்பங்கள்* பற்றீ, மண்டை ஓடுகள் பற்றீ அல்ல.. அதில் நரசிம்ம வழிபாட்டின் தொன்மையைக் குறிக்க “பழங்குடி வேர்கள்” என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் எந்த வரலாற்றூ பூர்வமான பிழையும் கிடையாது.. ஆனால் இதை வைத்துக் கொண்டு, உங்கள் முன்முடிவுகளையும், நிலைப்பாடுகளையும் சளைக்காமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.. அயர்ச்சி தான் ஏற்படுகிறது.
    //

    அயர்ச்சி வேண்டாம். உண்மை தான் எழுதுபவ்ருக்கு அயர்ச்சிவராது. அஃதொரு வேள்வி. ஒரு தாஹம்.

    நிற்க.

    பண்பாட்டு ஆராய்ச்சிதான் நானும் சொல்வது. இலக்கியங்களை வைத்துப்பண்பாட்டு ஆராய்ச்சியைத் தோண்டுவது தவறன்று. அப்பண்பாடு எப்போதிருந்து காணமுடியும்? அதன் விடையை வைத்தே அதன் இயறகையை அளவிட முடியும்.

    சங்க நூல்கள் 3-4 நூற்றாண்டுகள் என்று எழுதியிருக்கிறீர்கள். கி.முவா, கி.பிஆ?

    கி.மு என்று உங்களுக்கு ஆர் சொன்னார்? ஆதாரம்? முதற்சங்க நூலகே கிடைத்தில என்றும் கிடைத்தவை கடைச்சங்க நூலக்ள் மட்டுமே என்றும் சொல்லப்படுகின்றன. ப்தினென்கணக்கு நூல்களைந்த்தும் கடைச்சங்க நூலகள். க்டைச்சங்கம் கி.பிதான். கி.மு அன்று.

    ஆக, உங்க சங்க் நூல்களை வைத்து தமிழர்பண்பாடைக்கணிக்கிறீர்கள் இல்லையா? அக்காலத்திற்கு முன்பே உலகில் பல பகுதிகளில் வளர்ச்சியடந்த நாகரிகங்கள் தோன்ற் விட்டன. மேலும், சங்க் நூல்கள் காட்டுவது பண்டைத்தமிழ்கமன்று. நன்கு வளர்ச்சியடைந்த நாகரிகமே.

    சிலம்பு க்டைச்சங்க நூல்கூட கிடையாது. வையாபுரிப்பிள்ளையிடமிருந்து ஆதாரம் தரத்தயார்.

    உலகிலுள்ள பண்டைக்காலக் கூறுகள் ஒன்றாயினும், சில தனித்த்ன்மையைக்காட்ட உதவும். அதில் ஒன்றுதான், இறந்த முதியோரை நிற்க வைத்து புதைக்கும் முதுமக்கள் தாழிகள். அதற்கு பல காரணங்கள் இருக்கும். அக்காலத்தில் தமிழ் இருந்திருக்கிறது. பேசப்பட்டிருக்கிறது. இலக்கணமும் எழுத்ப்பட்டிருக்கிறது என்பது தொல்காப்பியர் ‘என்ப’, என்மனார் புலவ’ என்ற் சொற்களில் காட்டுகிறார்.

    என் கருத்து: நீங்கள் காட்டும் காலம் பண்டைக்காலமன்று. பண்டைக்காலத்தைக்காட்ட நம்மிடம் இலக்கியமில்லை. சிலம்பு மிகவும் பிறகாலத்து நூல்.

    நரசிம்ம வழிபாடு தொன்மையாக இருக்கலாம். தமிழக்த்தில் இருந்ததா என்பதை சொல்லமுடியாது. சிற்பங்களைப்படங்களில் போட்ட் நீங்கள் ஹம்பியின் நர்சிம்மரையும் போட்டிருக்கிறீர்கள். விஜய ந்கரப்பேரரசு 17ம் நூற்றாண்டு.

    நீங்கள் போட்ட மற்ற சிற்பப்படங்களும் மன்னராட்சிகாலத்தவை.. வேதங்கள் தோன்றிய காலமன்று. அதைக்காட்ட உங்களுக்குச் சிற்பங்கள் கிடைக்கவில்லை போலும்.

    அக்காலமோ, இக்காலமோ, நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் சோபிக்கவில்லை என்பதே உண்மை.

  106. அன்பர் பூவண்ணன்

    \\\இது இந்து நாடு இங்கு பசு வதை தடை செய்ய வேண்டும் என்று போராடுபவர்கள் யார்.\\\

    ஸ்ரீமான் பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்கள் ஹிந்துஸ்தானத்துக்கு அளித்த கொடையான அரசியல் சாஸனத்தில் பசுவதைத் தடைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசியல் சாஸனத்தை ஏற்கும் மாண்புடையவர்கள் இதற்குப் போராடுகிறார்கள்.

    தேசத்தின் உச்ச ந்யாயாலயம் இதை ஏற்றுள்ளது. பார்க்க சுட்டி

    https://www.rediff.com/news/2005/oct/26sc.htm

    \\\மாட்டு கறியை பெரிய போராட்டமாக ஆக்குவது உங்கள் சங்க பரிவாரம் தான் .\\\

    ஏதோ சட்டவிரோதமான காரியம் போல பேசுகிறீர்களே?

    மஹாத்மா காந்தி உள்ளிட்ட பல தேசத்த்லைவர்கள் பசுவதைத் தடையை ஏற்றுள்ளனர் என்பதை ஒதுக்கவியலாது.

  107. அன்பார்ந்த தமிழ்,

    \\\தளத்தார் எழுதுபவர் ஒரே பெயரில்தான் எழுதவேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை. பெயரில் ஒன்றுமே இல்லை. கருத்தில்தான் எல்லாமே என்பது என் நம்பிக்கை.\\\

    உண்மைதான். தளம் இவ்வாறெல்லாம் நிர்ப்பந்திக்கவில்லை தான். ஏனென்றால் இப்படியெல்லாம் கூட் குயுக்தியாக ஒருவர் செயல்படுவார் என யோசித்திருக்க முடியாது போலும். ஆனால் ethics என்று இருக்கிறது பாருங்கள். அதற்கு இப்போக்கு விரோதமானது. ஒரே கருத்தை வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து எதோ பலபேர் அக்கருத்துக்கு வலு சேர்ப்பது போன்ற ஒரு ப்ரமிப்பை ஏற்படுத்துவது என்பது ந்யாயத்திற்கு எதிரானது மட்டுமல்ல சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலும் கூட என்று நீங்கள் அறியீரா?

    பஹுரூபியாய் பல பெயர்கள் ஏன் தவறானது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டாகி விட்டது.

    \\\ பெயர்களைப் பெரிதுபடுத்திப்பேசுவோர், தும்பை விட்டு வாலைப்பிடிப்பவர்கள்; மட்டும் தனிநபர் தாக்கத்தில் இறங்கி கருத்தைத் திசை திருப்பும் உள்ளொக்கம் கொண்டோர்.\\\

    கருத்தை திசை திருப்புவதா. யார் செய்கிறார்கள் சொல்லுங்கள். இந்த வ்யாசத்தின் கருதுபொருள் யாது?
    நரசிம்மர் வழிபாடு பற்றியதானது இவ்யாசம். ஜாதி, கோத்ரம், பசுவதை இத்யாதி இத்யாதி கருதுகோள்கள் விவாதிக்கப்பட வேண்டியவை தான். அதற்கென்று தனியாக ஒரு திரியில் அது சம்பந்தமாக பேசலாமே?

    நரசிம்மர் பற்றிய வ்யாசத்தில் சம்பந்தமே இல்லாது கருத்தை திசை திருப்பி பேசுபொருளிலிருந்து வெகுதூரம் விலகி பின்னும் கருத்து திசை திருப்பம் பற்றி இப்படியொரு கருத்தை பகிர்வது தவறு.

    தாங்கள் சொல்வது போல் என் கருத்தை மறுக்க பத்து தடவை யோஜனை செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான் சொல்லியதில் தவறு ஏதும் இருந்தால் தெரிவியுங்கள்.

    \\என் பொழுதைப்போக்குபதே என் முதல் நோக்கம் இணயதள விவாதங்களில் பங்கேற்பதனால்\\\

    மன்னிக்கவும். அதனால் தான் இத்திரியில் மட்டும் என்றில்லாது தங்களது பல விவாதங்களின் முக்ய அம்சமாய் காணப்படுவது திசை திருப்பப்பட்ட ஆதாரமில்லாத அல்லது ஆதாரம் அளிக்கப்பட்டும் அவற்றை ஏற்கவொண்ணாது மனம் போன போக்கில் கருத்து தெரிவிக்கும் போக்கு.

    இங்கு கருத்துப்பதியும் எழுத்தாளர்களும் என்னைப் போன்ற பலரும் விஷய ஞானத்தை பகிர்வதற்காகவும் தெளிவடைவதற்காகவும் தான் கருத்துக்கள் பகிர்கிறோம். ஒருக்கால் தங்களது கொள்கையில் மாறுபாடு கொணர்ந்தீர்கள் என்றால் வெறும் பொழுது போக்காக இல்லாது திசை திருப்பல்கள் இல்லாது பேசு பொருளிலிருந்து விலகாது கருத்துத் தெளிவு பிறக்கும் வண்ணம் தாங்களும் கருத்துக்கள் பகிர இயலும்.

  108. கிருஷ்ணகுமார் சார்

    அதே அரசியல் நிர்ணய சபையில் பழங்குடி இனத்தை சார்ந்த முண்டா அவர்களின் பசுவதை தடை எதிர்ப்பு பேச்சை குறிப்பிட்டு இருந்தேனே நீங்கள் கவனிக்கவில்லையா
    தொண்ணூறு சதவீதம் உயர்சாதியினர் இருந்த குழு அரசியல் நிர்ணய சபை.ஒரு சிலவற்றை அம்பேத்கரால் போராடி பெற முடிந்தது.ஒரு சிலவற்றை பெற முடியவில்லை
    அதிலிருந்து நாம் வெகு தூரம் வந்து விட்டோம்.இன்று பா ஜ க ,சிவசேனா சேர்த்து 125 எம் பி கூட கிடையாது.அவர்களை தவிர யாரும் பசுவதை தடையை ஆதரிக்கவில்லை
    உச்ச நீதிமன்றம் ஆரம்ப முதல் இட ஒதுக்கீடிற்கு கூட தான் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்தி வந்துள்ளது.அதிலும் அனைத்து சமூகத்தவரும் இடம் பெரும் நிலை வரும் போது அதன் கண்ணோட்டமும் மாறும் .ஜடாய அவர்கள் மாட்டு கறி ஒரு பெரிய பிரட்சினையே இல்லை எனபது போல பேசியதற்கு தானே எதிர்வினையாற்றினேன்.அதை பிரச்சினை ஆக்குவது யார்

  109. //ஆனால் ethics என்று இருக்கிறது பாருங்கள். அதற்கு இப்போக்கு விரோதமானது. ஒரே கருத்தை வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து எதோ பலபேர் அக்கருத்துக்கு வலு சேர்ப்பது போன்ற ஒரு ப்ரமிப்பை ஏற்படுத்துவது என்பது ந்யாயத்திற்கு எதிரானது மட்டுமல்ல சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலும் கூட என்று நீங்கள் அறியீரா?//

    நன்கறிவேன்.

    ஒரே கருத்தை வெவ்வேறு பாவனைப் பெயர்களில் ஒருவரேயிடும்போது அந்தப் பிரமிப்பை ஏற்படுத்த முடியும்! அக்குயுக்தியைக் கண்டுபிடித்து தளத்தார் நிறுத்துவது நன்று. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரே நபர் பல பாவனைப் பெயர்களில் ஒரே நேரத்தில் எழுதுகிறார் என்பதை கண்டிபிடித்தால் அவரைத் தளத்தாருக்குக் காட்டிக்கொடுத்து விட வேண்டும். நான் ஏற்கனவே கொடுத்த விளக்கத்தின்படி, ஒரு தொடர்ச்சியாக எழுதும்போது ஒரு பெயரிலே நான் எழுதுகிறேன். அதாவது, இப்போது எழுதுகிறேன். சில காரணங்களுக்காக ஒராண்டு நிறுத்திவிடுகிறேன். பின்னர் வரும்போது வேறோரு பாவனைப் பெயரில் எழுதுகிறேன். அப்போது இங்கெழுதப்படுபவை வேறாக இருக்கலாம். இல்லையா? எனவே ஒரே நபர் ஒரே நேரத்தில் பல பாவனைப் பெயர்களில் வந்தால்தான் நீங்கள் சொல்லும் பிரமிப்பை உருவாக்க முடியும். 2012ல் வந்தவர் 2014ல் அப்படி உருவாக்க முடியாது. எப்போது வந்தாலும் என் கருத்துக்கள் ஒன்றாகவே இருக்கும். எ.கா. இந்துமதத்தில் இருந்து கொண்டு தன் ஜாதியை வளர்க்க ஆராவது முனைவார்களேயாயின் அவர்களை நான் வெளிக்காட்டி விமர்சிப்பேன். ஏனென்றால் அவர்கள் உள்ளிருந்துகொண்டே குழிவெட்டும் வேலையைச்செய்பவர்கள் என்பது என் கருத்து. நான் ஜாதிகளுக்கு எதிரானவன். ஒரு கவிஞனைக்கூட கவிஞனாகப்பார்க்கும் திராணியில்லாதவர்கள்.
    \\\கருத்தை திசை திருப்புவதா. யார் செய்கிறார்கள் சொல்லுங்கள். இந்த வ்யாசத்தின் கருதுபொருள் யாது?

    நரசிம்மர் பற்றிய வ்யாசத்தில் சம்பந்தமே இல்லாது கருத்தை///
    தலைப்பு இந்துமதக்கடவுளைப் பற்றியது. அதையொட்டிய விவாதத்தில் பல பொருட்கள் வந்து போகும் தவிர்க்கவியலா. ஜாதிகள், கோத்திரங்கள், கோயில் வழிபாடுகள் எல்லாமே இந்துமதத்திலிருந்துதான் பேசப்படுகின்றன. கட்டுரைப் பொருளுக்கு நேராகப் பொருந்தாவிட்டாலும், இடையில் வந்து மோதுகின்றன என்பதை பூவண்ணன் எப்போது அதையெடுத்தாரென்பதிலிருந்து தெரியலாம். இஃதொன்றும் பெரிய குற்றமன்று. உண்மையில் விவாதக்களத்தையும் கட்டுரையும் மெருகூட்டும்.

    \\ . அதனால் தான் இத்திரியில் மட்டும் என்றில்லாது தங்களது பல விவாதங்களின் முக்ய அம்சமாய் காணப்படுவது திசை திருப்பப்பட்ட ஆதாரமில்லாத அல்லது ஆதாரம் அளிக்கப்பட்டும் அவற்றை ஏற்கவொண்ணாது மனம் போன போக்கில் கருத்து தெரிவிக்கும் போக்கு.
    இங்கு கருத்துப்பதியும் எழுத்தாளர்களும் என்னைப் போன்ற பலரும் விஷய ஞானத்தை பகிர்வதற்காகவும் தெளிவடைவதற்காகவும் தான் கருத்துக்கள் பகிர்கிறோம்.//

    நீங்கள் பலகருத்துக்களை அறிய படிக்கலாம். நானும்தான். அதே வேளையில் எனக்கு இணைய தள விவாதங்கள் முழு நேர வேலையில்லை. பலருக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் காரணம் உங்களுக்கு. என் காரணம் எனக்கு. நான் பொழுதுபோக்கத்தான் நூலகள் படிக்கின்றேன். தேர்வு எழுதி பாசாகி விட்டாச்சு. அப்படிப் படிக்கும்போது பலவற்றையும் தெரியவும் நேரிடுகிறது. அதைப்போலவே இங்கும்.

    சிலம்பு சங்ககால நூலன்று; அது பண்டைத்தமிழக மக்கள் வாழ்க்கையைக் காட்டவில்லை. என்பதற்கு நான் படித்த ஆதாரமிருக்கிறது. ஆதாரமில்லாமல் எழுதுகிறேன் எப்படிச்சொல்கிறீர்கள்? நரசிம்ம துதி பண்டைத்தமிழகத்திலுண்டு என்பதை நிலைநாட்ட சிலம்பைக் காட்டுகிறார்.

    முடிவாக,

    நான் எழுதுவதை விரும்பினால் படியுங்கள். பாவனைப்பெயரைப்பற்றிக் கவலை கொண்டு வேதனையடையத் தேவையில்லை. கருத்தென்ன? என்று நோக்கி மாறுபட்ட கருத்திருந்தால் வையுங்கள். இங்கெழுதுபவகளெல்லாரையும் சந்தேக்கண்களோடு பார்க்க்க் கூடாது. இந்துமதம் ஒரு தனி நபர் அல்லது ஒரு கூட்ட்த்தாரின் மோனோப்பளி என்ற நினைப்பும் கூடாது. இதை நான் சொல்லக்காரணம் இவ்வெண்ணங்கள் உங்கள் காட்டமான எழுத்துகளுக்கு வித்துக்களோ என ஐயுறுவதால்.

  110. தமிழ்,

    தமிழ்தான் ஜோ அமலன் என்ற தோற்றம் எனக்கு வந்ததாலேயே அதனை எழுதினேன். வெறுமனே பெச்சுக்காகவே கூட பூவண்ணனைச் சேர்த்தேன்.

    வெளிப்படையாக ஒப்புக்கொண்டதோடு அல்லாமல் ஜோ அமலன் ராயன் பெர்ணான்டோ, திருவாழ்மார்பன், தமிழ் என மொத்தம் மூன்று பெயர்களில் நீங்களே எழுதுவதை சொன்னதற்கு நன்றி.

    தமிழ் மதம் சாராதது என்பதுதான் வியப்பாக இருக்கிறது! ஹீப்ரூ, லத்தீன், அராபிக் ஆகியவையும் மதம் சாராதவைதானா என்று அறிய ஆவல்!

  111. மகாசயர் கிருஷ்ணகுமாருக்கு

    வைதீகம் மட்டுமே இந்து மதம் என்கிற ரீதியில் நீங்கள் கூறியிருக்கும் பன்னிரண்டு பேர்களிலே கூட இந்து மதம் வைதீகம் மட்டுமே என்று இதே தளத்தில் கட்டுரை/ மறுமொழி எழுதியவர்கள் உண்டு. இதே திரியில் கூட ஜடாயு, கந்தர்வன் உள்ளிட்டோரின் மறு மொழிகள் சில அந்த பாதையில்தான் உள்ளன.

    இந்து மதம் என்பது வைதீகத்தையும் தாண்டி பல உட்கூறுகளை உள்ளடக்கியது என்ற உண்மையை மேல்சாதியினர் ஏற்க மறுப்பதால்தான் இந்து ஒற்றுமை இன்னமும் முழுமையாக அடைய முடியவில்லை. நான் குரிப்பிட்ட 25% சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வைதீகம் சாராத ஆனால் முழுக்க முழுக்க இந்து மக்கள்தான். இதை ஏற்றால், வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் வைதீகத்தால் மட்டுமே உயர் சாதி நிலையை எட்டியவர்களுக்கு அது ஒரு பலவீனம் ஆகிவிடும் என்பதால் தான் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். அதற்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு காப்பியத்துக்கு/ இலக்கியத்துக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். வேதத்தின் சில பகுதிகளுக்கு (புருஷ சுக்தம் உதாரணம்) சில நூற்றாண்டுகளுக்கு முன் கொடுத்த விளக்கம் ஒன்று இப்போது தரப்படும் விளக்கம் வேறு. விளக்கங்கள் மாறுவது தவறல்ல, ஆனால் மாற்றத்தின் காரணம் இன்னதென்று நேர்மையாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவாவது வேண்டும் அல்லவா? நீங்களே கூட வைதீகம் பவுத்தத்தையும் உள்ளடக்கியது என்கிற ரீதியில்தான் “பூர்வபக்ஷமாகவேனும் வைதிக சமயத்தில் பௌத்தம் குஹ்யமாக இன்றும் உள்ளது என்பது மறுதலிக்க இயலாத விஷயம்”
    என்று கூறுகிறீர்கள். ஆக வைதீகம்தான் இந்துமதம், பவுத்தம், சமணம் எல்லாம் என்கிற கருத்தைத்தானே நீங்களும் வலியுறுத்துகிறீர்கள்? அதுதான் ஏற்புடையதாக இல்லை. அதனால்தான், இன்றும் கூட சில தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘நாங்கள் இந்துக்கள்தானா’ என்கிற வினாவை எழுப்பிகிறார்கள். அவ்வினா வரும்போது, மேல்சாதியினர் ‘ஆமாம், நீங்கள் இந்துக்கள்தான்’ என்று சத்தமாகக் கூறுவார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை முறைகளும், நம்பிக்கைகளும், வழிபாட்டு சடங்குகளும் வைதீகத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதை மட்டும் மேச்சாதியினர் ஏற்க மறுப்பார்கள். இத்தகைய இரட்டை வேடம்தான் தாழ்த்தப்பட்டவர்களை அன்னியப்படுத்தி வருகிறது.

  112. ஒரு நபரே பல பெயர்களில் எழுதுவது எதிர் காலத்தில் ஏதேனும் பிரச்சினை வருமானால் அது நானல்ல என்று ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒரு குறிப்பிட்ட நபர் பதிவு செய்தபின் தப்பித்துக்கொள்ள வழி செய்வதாகும். எனவே தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு இப்போக்கை ஊக்குவிக்கலாகாது எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரே வேறு வேறு பெயர்களில் பல மின்னஞ்சல் முகவரிகளை வைத்துக்கொள்வதும் சாத்தியமாதலால் எப்படியும் ஒரே நபர் மறுமொழி இடுகையில் அவரது எழுதும் முறையும் கருத்துத் தெரிவிக்கும் விதமும் அவர் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுமாதலால் ஆசிரியர் குழு பல பெயர்களில் எழுதும் ஒரே நபரைக் கண்டுபிடிப்பது எளிதுதான். பத்திரிகைகளில் சில சமயங்களில் உபரி இடத்தை நிரப்புதல் போன்ற அவசியம் ஏற்படுகையில் ஒரு பெயரே திரும்பத் திரும்ப வருதல் நன்றாக இராது என்பதால் ஒரு நபரே வேறு வேறு பெயர்களில் எழுதுவதுண்டு. இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மறுமொழி இடுகையில் ஒரு நபர் இது என் கருத்து எனப் பொறுப்பு ஏற்க வேண்டியவராவார். எனவே கூடியமட்டில் அவர் தன்னை இன்னார் என்று அடையாளம் காண்பித்துக் கொள்வதுதான் முறையாக இருக்கும். இவ்வாறின்றி ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் மனம் போகும் போக்கில் மறுமொழி இடுவது பொறுப்பற்ற செயல் என்பதை ஆசிரியர் குழு சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே பெயரில்தான் எழுதி வருகிறேன். இதை அறியாத ஒரு அதிகப் பிரசங்கி, நான் ஏதோ வாசகர்களை திசை திருப்புவதற்காக எனது அசல் பெயரின் மூலம் அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே தூய தமிழ்ப் பெயரைப் பயன்படுத்தி வருவதாக ஒரு முறை எழுதியது!
    -மலர்மன்னன்

  113. அன்புள்ள திரு தமிழ், நீங்கள் கூறுவது போல் கடைச்சங்க காலம் பொ ச முதல் நூற்றாண்டு முதல்தான். ஆனால் நீங்கள் அதற்கு முன்பு தமிழர் கலாச்சாரம் வேறு என்று சொல்வது எந்த ஆதாரத்தில்? உங்களிடம் உள்ள சங்க காலத்திற்கு முற்ப்பட்ட ஆதாரங்களைத் தந்தால் எங்களுக்கும் உதவியாக இருக்குமே?

  114. பசு என்ற சொல் பொதுவாக எல்லா விலங்குகளையுமே குறிக்கும். கோ என்பதுதான் பசு மாட்டைக் குறிக்கும். அருகி வரும் விலங்கினம் என்று காரணங் காட்டிக் கால்நடைகளைக் கசாப்புப் போடுவதற்கும் உண்பதற்கும் தடைவிதிக்க முடியும். ஏனெனில் நம் நாட்டில் ஓர் ஆண்டுக்கு மட்டும் 80 லட்சம் கால்நடைகள் இளம் கன்றுகள் உள்ளிட்டவை இறைச்சிக்காகக் கொல்லப் படுகின்றன. இந்த வேகத்தைப் பார்த்தால் வெகு விரைவில் கால்நடைகளே நம் நாட்டில் இல்லாது போய்விடும்! உண்பதற்காகவே கால்நடை களை வளர்க்கும் நிலை உருவாகும். இது தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட ஓர் ஆவணப்படம் யூடியூபில் ஏற்றப்பட்டுள்ளது. அதனைக் கீழ்க்கண்ட முகவரியில் காணுங்கள்:
    https://www.youtube.com/watch?v=eGHfPQGbUlc&feature=youtu.be
    மேலும் சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சிக்குத் தடை உள்ளது. அங்கு முகமதியர் மட்டும் வாழவில்லை. அரேபியரில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இன்று சவூதியில் பல்வேறு பிரிவினரும் வாழ்கின்றனர். அவர்கள் பன்றிக் கறியை விரும்பி உண்ணக் கூடியவர்கள்தான்!
    நமது தேசம் ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்கப்பட்டால்தான் கால்நடை வதைக்குத் தடை விதிக்க இயலுமானால் அதி சீக்கிரமாக அவ்வாறே அறிவிக்கப்படுவதாக!
    -மலர்மன்னன்

  115. அன்பார்ந்த ஸ்ரீ அஞ்சன் குமார்,

    \\\வைதீகம் மட்டுமே இந்து மதம் என்கிற ரீதியில் நீங்கள் கூறியிருக்கும் பன்னிரண்டு பேர்களிலே கூட இந்து மதம் வைதீகம் மட்டுமே என்று இதே தளத்தில் கட்டுரை/ மறுமொழி எழுதியவர்கள் உண்டு. இதே திரியில் கூட ஜடாயு, கந்தர்வன் உள்ளிட்டோரின் மறு மொழிகள் சில அந்த பாதையில்தான் உள்ளன.\\\

    மிகவும் தவறான புரிதல். இந்த தளத்தில் யாரும் தங்களுடைய வ்யாசங்களிலோ அல்லது உத்தரங்களிலோ வைதிகம் மட்டுமே ஹிந்து மதம் என்று கூறியதில்லை. சைவ வைஷ்ணவ கருத்து வேறுபாடுகள் காட்டமாக பதியப்பட்ட சில திரிகளிலும் கூட வைதிகக் கோட்பாட்டின் படி சைவ வைஷ்ணவ கருத்துக்கள் விசாரிக்கப்பட்டனவேயன்றி தளத்து மூத்த எழுத்தாளர்கள் யாரும் ஸ்ரீமான் கந்தர்வன் உட்பட வைதிகம் மட்டுமே ஹிந்து மதம் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வ்யாசத்திலுமோ அல்லது உத்தரங்களிலுமோ சொன்னதில்லை

    \\\\நீங்களே கூட வைதீகம் பவுத்தத்தையும் உள்ளடக்கியது என்கிற ரீதியில்தான் “பூர்வபக்ஷமாகவேனும் வைதிக சமயத்தில் பௌத்தம் குஹ்யமாக இன்றும் உள்ளது என்பது மறுதலிக்க இயலாத விஷயம்”\\\\

    மீண்டும் தவறான புரிதல். என் பழக்க தோஷத்தில் சம்ஸ்க்ருத பதங்கள் நிறைந்து வந்த வாக்யத்தால் வந்த குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

    பூர்வபக்ஷம் என்பது மாற்றான கருத்து; புறம்பான கருத்து.

    பூர்வ மற்றும் உத்தர மீமாம்சைக் கருத்துக்களை விளக்குபவர்கள் கருத்தை விளக்குமுகமாக முதலில் மாற்றுக்கருத்து என்ன என்பதைக் கூறி அக்கருத்து ஏன் தவறானது புறம்பானது என்று விசாரித்து சரியான கருத்து எது என நிறுவுவார்கள்.

    புறம்பான கருத்து என்ற படிக்கு வைதிக சமயத்தில் பௌத்தம் மறைமுகமாக இன்றும் உள்ளது என்பது மறுதலிக்க இயலாத விஷயம் என்பது நான் சொல்ல வந்தது.

    வைதிகமே பௌத்தம் என்று நான் சொல்லவில்லை. அது உண்மைக்குப் புறம்பானது. என் புரிதலுக்கும் புறம்பானது. அவ்வாறு நான் சொன்னதாக தாங்கள் புரிந்து கொண்டது தவறு.

    இப்பொழுது தங்களுக்கு மீண்டும் சொல்கிறேன். ஹிந்து மதம் என்பது வைதிகம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற பல தர்சனங்களை தன்னுள் கொண்டுள்ளது. பௌத்தமும் ஜைனமும் அவைதிகமான தர்சனங்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அதாவது வேதங்களை இந்த தர்சனங்கள் ப்ரமாணமாகக் கொள்வதில்லை. ஆனாலும் வைதிக அவைதிக தர்சனங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் இவைகளிடையேயான உரையாடல்களுக்கு தடையாய் இல்லை. இந்த உரையாடல்கள் இவ்வேறு வேறு தர்சனங்களைச்சார்ந்த சான்றோர்கள் எழுதிய பற்பல சம்ஸ்க்ருத நூல்களில் பதியப்பெற்றுள்ளன. இவை இன்று வரை போற்றிப் பாதுகாக்கப்பட்டும் உள்ளன.

    வைதிக தைவங்களின் வழிபாட்டு முறைகளில் கூட வைதிகம் மற்றும் தாந்த்ரிகம் என உள்ளதே. தாந்த்ரிகம் அவைதிகமான வழிபாட்டு முறை. ஆனால் அதுவும் கூட ஹிந்து மதத்தின் அங்கமாகத் தானே கருதப்படுகிறது. பஞ்ச மகர யுக்த வாமாசார வழிபாட்டு முறை என்று வைதிகத்திலிருந்து வேறுபாடான என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் ஹிந்து மதத்தின் முக்யமான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறதே.

    குமரிலபட்டரின் ஜைமினி பூர்வ மீமாம்ச சூத்ரங்களின் வார்த்திகம், கௌடபாதர் மற்றும் சங்கராசார்யரின் நூல்களில் பௌத்தக் கருத்துக்கள் விசாரிக்கப் பட்டு மறுதலிக்கப்படுகின்றன. இன்றும் பாஷ்ய பாடங்கள் வாசிப்பவர்கள் இவற்றை வாசிக்கிறார்கள்.

    இவ்வளவு ஏன் பாகிஸ்தானைச்சார்ந்த மறைந்த உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலிகான் சாஹேப் அவர்களின் “அல்லாஹூ அல்லாஹூ” பந்திஷ் (பாடல்) மற்றும் தைத்ரீய உபனிஷதத்தில் உள்ள ஆனந்த வல்லியில் “ஆகாசாத் வாயு:” இத்யாதி வாக்யங்களுக்கும் உள்ள சாம்யதையைக் கூட ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுடனான ஒரு உரையாடலில் பகிர்ந்து கொண்டேனே. அதன் படி வைதிகக் கருத்துக்களின் சாயல் ம்லேச்ச மதங்களில் கூட காணக்கிடைக்கின்றனவே.

    இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இறைத்தத்துவார்த்த தேடல் என்ற தளத்தில் உலகில் உள்ள மானுடர்கள் அனைவரின் கருத்துக்களும் ஏதோ சில புள்ளிகளில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன என்பதே. விவித தத்துவார்த்தங்களிடையே ஒற்றுமைகள் உள்ளது என்பதால் அவை ஒன்றே என்றும் ஆகாது. அவற்றிடையே வேற்றுமைகளும் உள்ளனவே. அதனால் தானே உலகம் என்ற பூந்தோட்டத்தில் வித விதமான தத்துவங்கள் என்ற பூச்செடிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன.

    \\\ஆக வைதீகம்தான் இந்துமதம், பவுத்தம், சமணம் எல்லாம் என்கிற கருத்தைத்தானே நீங்களும் வலியுறுத்துகிறீர்கள்? \\\

    இல்லை. மாறாக பௌத்தம் மற்றும் சமணம் அவைதிக தர்சனங்கள்.

    என் மேற்கண்ட விளக்கங்கள் இதை தெரிவு செய்திருக்கும் என நம்புகிறேன்.

    \\\\ஆனால் அவர்களது வாழ்க்கை முறைகளும், நம்பிக்கைகளும், வழிபாட்டு சடங்குகளும் வைதீகத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதை மட்டும் \\\\

    அன்பார்ந்த ஸ்ரீ அஞ்சன் குமார், வேறுபாடுகள் மட்டும் உங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. எனக்குக் கூட வேறுபாடுகள் உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனால் நான் மிகச்சொல்பமாக ஒழுகும் வைதிக வழிபாட்டு முறைகளுக்கும் நீங்கள் வைதிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை எனக்கருதும் க்ராம தேவதைகள் / நாட்டார் வழிபாட்டு முறைகள் இவற்றினிடையே உள்ள ஒற்றுமைகளையும் நான் எங்கள் க்ராமத்தில் க்ராம பூஜாரி மஹாசயர் நடாத்தும் வழிபாடுகளில் அனுபவ பூர்வமாக கண்டுள்ளேன். வைதிக வழிபாட்டு முறைகளை ஆழ்ந்து ஸ்ரத்தையுடன் ஒழுகும் சான்றோர்கள் என்னை விட மேலும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.இஸ்லாத்தில் உள்ள தர்கா வழிபாடுகளில் கூட நான் நமது ஹைந்தவ மூத்தோர் வழிபாடு / பித்ருக்கள் வழிபாடு அம்சத்தைக் காண்கிறேனே.

    வேற்றுமைகள் இல்லை என நான் சொல்ல வரவில்லை. ஒற்றுமைகளையும் நான் காண்கிறேன்

    விவிதமான வழிபாட்டு முறைகளில் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையையும் காண்பதை நீங்கள் தோஷமாகக் கருதுகிறீர்களா?

  116. வைதிகம் என்ற பெயரால் பிற்காலத்தில் விருமபத் தகாத, விலக்கப்பட வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் புகுத்தப்பட்டதால் வந்த வினைதான் இந்த மன மாச்ச்சரியங்களுக்குக் காரணமாகிவிட்டது. ஸனாதனிகள் என்ற பதப் பிரயோகமும் பிற்போக்காளர்கள், பழமைவாதிகள் என்கிற பொருளைத் தருவதாக அமைந்துவிட்டது. ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும், வழிபாட்டு முறைகளும் சரி சமானமானவையே. வழிபாட்டு முறைகளில் உயிர்ப் பலி, சுருட்டு,சாராயப் படையல்கள் இருந்தாலும் கண்ணப்ப நாயனாரை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். கால்நடைகளை பலிகொடுக்கும் வழக்கம் இருந்தால் அதன் பின் விளைவுகளை இன்முகத்துடன் விவரித்தால் ஏற்றுக்கொள்ளப் பலரும் இணங்குவர். நான் விசுவ ஹிந்து பரிஷத்தில் ஞான வேல் முருகனை வனவாசிகளிடமும், தாழ்த்தப்பட்டோரிடமும் எடுத்துச் சென்று அவர்களைக் கொண்டே அர்ச்ச்சனை செய்வித்த போது, பல இடங்களில் ஊர்ப் பெரியவர்கள் கால்நடைகளை இனி பலியிட மாட்டோம் எனக் கூறி, ஞானவேல் முருகன் வழிபாட்டில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்க ஊக்குவித்தனர்.
    நீலகிரியில் தோடர்களிடையே நான் பேசுகையில், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காக்கும் பரம்பொருள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பையே அன்றி வேறு என்ன இருக்க முடியும், நம்மாலும்தான் என்ன கொடுக்க முடியும், நமது சந்தோஷத்துக்காகக் காட்டுச் செடிகளில் பூத்த பூவோ, இலையோ, வெறும் நீரோ கொடுத்தாலே தெய்வம் மகிழ்ச்சி அடையாதா என்று கேட்டபோது, மக்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு பஜனை செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்கள் எனது பேச்சை விரும்பவில்லையோ என்று சந்தேகப்பட்டுக் கேட்டபோது, இல்லையில்லை. அவர்கள் நீங்கள் சொல்வதை ஆமோதிக்கும்விதமாகவே அவ்வாறு பஜனை செய்கிறார்கள் என்று ஊர்ப் பெரியவர் சொன்னார். அவர்களால் தமிழைப் புரிந்துகொள்ள இயலும், பேசத்தான் சிரமப்படுவார்கள் என்றார். பின்னர் தென் மாவட்டங்களில் பயணத்தைத் தொடர்ந்தபொழுது, நான் தமிழிலேயே அர்ச்சனை செய்து வழிபடலாம் என்று சொன்னபோது பலர் சினம் அடைந்து, ஏன் நாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினர் என்பதால்தான் வழக்கமான முறையில் அர்ச்சனை செய்வதைத் தவிர்க்கிறீர்களா, எங்களுக்கு வழக்கமான முறையில் அர்ச்ச்சனை செய்விக்க உரிமை இல்லையா என்று கேட்டனர். இதற்கெல்லாம் சாட்சி நண்பர் ஆர் பி வி எஸ் மணியன்! நல்ல வேளையாக அர்ச்சகர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றிருந்ததால் அவரைக் கொண்டு அர்ச்சனை செய்வித்தேன். இன்று நான் வசிக்கும் பகுதியில் உள்ள திருவீதியம்மன் கோயில் பூசாரி எவ்வித வற்புறுத்தலும் இன்றி, எவர் கட்டபாடு காரணமாகவும் அல்லாமல் சமஸ்க்ருத அர்ச்சனைத் தோத்திரங்களைக் கறறுக் கொண்டு அழகாக அர்ச்சனை செய்வதை அனைவரும் மனமுவந்து ஏற்கவே செய்கிறார்கள். நாட்டார் தெய்வங்களை ஸான்ஸ்கிரிடைஸ் செய்து விட்டார்கள் என்று யாரோ திட்டமிட்டு அப்படி யொரு சதியை நடத்திவிட்டார்கள் என்பதுபோல் குற்றம் சுமத்துவது துவேஷம் ததும்பும் உள்நோக்கம் கொண்டதேயன்றி ஆய்வுப் பூர்வமானது அல்ல!
    -மலர்மன்னன்

  117. சென்னை மந்தைவெளியில் உள்ள ஆண்டி மானியத் தோட்டம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் உள்ள நகாத்தம்மன், கங்கையம்மன் கோயில்களில் முன்பு பலியிடும் வழக்கம் இருந்தது. எவர் வற்புறுத்தாலும் இன்றிப் பின்னர் அது ஒருமனதான தீர்மானத்தின் பேரில் கைவிடப்பட்டது. எல்லாம் பிராசர முறையில் உள்ளது.
    -மலர்மன்னன்

  118. தமிழ்

    வெறுமனே நான் தமிழ் பேசுகிறேன் என்று மட்டும் தான் நீங்கள் இது வரை சொல்லி உள்ளீர்கள். நீங்கள் சங்ககாலத்தை பற்றி ஒரு ஆதாரம் கூட வைக்கவில்லை. கேட்டால் நான் படித்தேன் என்கிறீர்கள் – பாதிரி புத்தகத்தை தானே?

    இரண்டாம் சங்க காலம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் இருந்ததாக நக்கீரனார் சொல்கிறார்.

    இரண்டாம் சங்கம் கூடியது கபாடபுரம் என்ற பாண்டிய நாட்டில் (கன்னியாகுமரியை ஒட்டி இருந்த இடம்). இது அப்பமே முழுகிட்டு? அதை ஆராய்சிகள் உறுதி செய்கின்றன. கீ பீயில் எந்த கபாடபுரமும் முழுகவில்லை. முழுகின காலமமும் நக்கீரனார் சொல்லும் காலமும் ஒன்றாக உள்ளது.

    பரிபாடலில் பல தொல்காப்பிய இலகனத்தை ஒட்டி இல்லாததை பற்றி உவேசா சொல்லிக்கிறார் (அவர் மட்டுமல்ல நிறைய பேர் – நாமலேகூட பட்சு கண்டுகிரலாம்). அப்பன்காட்டி பரிபாடல்கள் தொல்காப்பிய காலத்திற்கு முன் தானே!. பரிபாடல்கள் நரசிம்ம வழிபாட்டை சொல்கிறது ! அப்படின்னா தமிழ் என்ன சொல்வார் – tholkaappiyame கிபீ பதினோராம் நூற்றாண்டு தான் எழுதப்பட்டது என்று தானே? இல்லாங்காட்டி தமிழ் என்ன சொல்வார், சாரங் எழுதிர தமிழ்கூட தொல்காப்பிய இலக்கணப்படி இல்லை (தமிழே இல்லை) அப்பம் பரிபாடகள் காலம் கீ பீ 2000 என்பார் 🙂

    இங்கே இலக்கிய அகழ்வாராய்ச்சி தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் படித்த பாதிரி புத்தகத்தின் பெயரை சொல்ல முடியுமா ?

    மதுரையை ஜைனர்கள் பிடித்துக் கொண்டது நான்காம் நூற்றாண்டில். அதற்க்கு முன்னே தான் கடை சங்கம் இருந்திருக்க vendum. ஒவ்வொரு சங்கத்திற்கும் நூறு ஆண்டுகள் கொடுத்தாலே கீமூவுக்கு போய்விடுகிறது.

  119. அன்புள்ள பூவண்ணன் சிவ கோத்திரம் விஷ்ணு கோத்திரம் பிராமணர்கள் மீது பிராமணர்களால் பிராமணர் அல்லாதவர்கள்மீது திணிக்கப்பட்டதாக க்கதைவிடுகிறீர்களே. அதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்ன? இல்லை. திணித்தல் அல்ல சுத்தமாக கலாச்சாரத்தை, பண்பாட்டை, சமயத்தை அழித்தொழித்தல் உங்கள் குருநாதர்கள் கால்டுவல், ஜியூ போப் போன்றவர்களால்தான் ஆப்பிரிக்கா, அமெரிக்கா கண்டங்களில் நடத்தப்பட்டன(Washbrook போன்ற அறிஞர்கள் திராவிட இயக்கத்தின் சித்தாந்த மூலம் இக்கிறித்தவ புனைந்துரை என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது). அதையே மாதிரியாகக்கொண்டு இங்கும் அதையேகாட்ட முயல்கிறீர்கள்.
    கோத்திரம் என்பது புறமணக்குழு சமூகமானுடவியல் அறிஞர்களால் exogamous sept என்றும் Clan என்றும் கூறப்படுவதுவும் இதுவே. பழங்குடிகளிடையே குலங்கள் காணப்படுகின்றன. தமிழில் கூட்டம், கிளை என்றும் புறமணக்குழுக்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு சாதியும் பல்வேறு புறமணக்குழுக்களைக் கொண்டுள்ளது. இவற்றின் ஒருங்கிணைப்பு சமூக அமைப்பு(social organisation) எனப்படுகிறது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குலதெய்வம் உள்ளது. ஒரு பகுதியில் பல்லாண்டுகள் வாழும் ஒரு சில சாதிகளில் ஒரே குலப்பெயர் குலதெய்வ வழிபாடும் காணப்படுகிறது. பெரும்பாலும் சாதிக்கு சாதி குலங்கள் மாறுபடுகின்றன அவற்றின் ஒருங்கிணைப்பு மாறுபடுகிறது. பிராமண, சத்ரிய, வைசியர் போன்ற இருப்பிறப்பாளர் வர்ணங்களின் உள்வரும் சாதிகளில் தான் கோத்திரங்கள் காணப்படுகின்றன. மற்ற சாதிகளில் குலம்/கூட்டம்/கிளை தான் காணக்கிடைக்கிறது. குலம் என்பது கோத்திர அமைப்பின் ஒரு சிறு பிரிவாகக் காணப்படுகிறது. ஆகக்குலதெய்வ வழிபாடு கோத்திரங்களைக்கொண்டவர்களுக்குள்ளும் நடைபெருகிறது ஆனால் அவர்களிடையே குலப்பெயர்கள் பெரும்பாலும் இல்லை.
    பழங்குடிகளாக இருந்த மக்கள் தொகுதிகள் குழுக்கள் பெரும் சமூகமாக பொருளியல் அரசியல் ரீதியில் இணைகின்ற பொழுது. கோத்திரப்பெயர்களை ஏற்றுக்கொண்டனர். ஒருசில வேளாண்குடிகள் கூட கோத்திரங்களைக்கொண்டுள்ளன. சில சாதிகளில் மகரிஷிகளின் கோத்திரப்பெயர்களோடு பூர்வீக குலப்பெயர்களும் ஒருங்கே காணப்படுகின்றன.
    இனி உங்கள் சிவகோத்திரம் விஷ்ணு கோத்திரம் பற்றிய செய்திக்கு வருகிறேன் இந்த பாகுபாட்டை பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் அர்ச்சனை காட்சியில் கண்டேன். இது மைசூர் பகுதியிலும் காணப்படுகிறது. சைவம் வைணவம் ஆகிய வழிபாட்டு நெற்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டபோது குல அடையாளங்களை மறந்துவிட்டு வெறும் வழிபாட்டு நெறியையே கோத்திரமாக கூறத்தலைப்பட்டுவிட்டார்கள். ஸ்ரீ இராமானுஜ ஆச்சாரியார் வைணவ நெறியை பரப்பிய போது சைவர்கள் பல மைசூர் பகுதியில் வைணவர்களாயினர். ஒரே குலத்தில் சைவம் வைணவம் ஆகிய இரண்டும் காணப்படுகின்றன என்றாலும் அவர்கள் சகோதரர்களாகவே தாயாதிகளாக கருதப்படுகிறார்கள். மைசூர்பகுதியில் குலங்கள் குலப்பெயர்கள் இன்றைக்கு இல்லை மறந்துவிட்டார்கள். ஆனால் கொங்கு மண்டலத்தில் காணப்படும் அதே மக்களில் பெரும்பாலானவர்கள் குலம், குலதெய்வம் இவற்றைக்கொண்டுள்ளன.
    தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லம் ஊர் நகரமெல்லாம் குலதெய்வ வழிபாடு இன்னும் சிறப்பாகக்காணப்படுகிறது. ஆனால் ஒரு குலதெய்வக்கோயிலுக்குப்போய் குலத்தின் பெயர்கேட்டால் அவர்களுக்குத்தெரியாது. இதற்கு மாற்றாகவே சிவ கோத்திரம் அல்லது விஷ்ணு கோத்திரம் என்று அம்மக்கள் அர்ச்சனையின் போது சொல்கிறார்கள். ஆனால் கல்லூரிவிடுதிகளில் கூட குலதெய்வத்தின் ஊர் பெயர்கேட்டு முன்பின் தெரியாத மாணவர்களிடையே சகோதர பாச மழைப்பொழிவதை நாம் காணமுடியும். இருவேறு சாதியினரிடையே கூட மாமன் மச்சான் அண்ணன் தம்பி உறவுமுறைகள் ஒத்த குலதெய்வவழிபாட்டினால் காணமுடியும்.
    ஒரு சமூகப்பொருளியல் ஆய்வாளனாக நான் இதில் காண்பதெல்லாம் கோத்திரத்தை யாரும் யார்மீதும் திணிக்கவில்லை. திணித்திருந்தால் கோத்திரங்கள் மட்டுமே இன்றைக்கு இருந்திருக்கும். குலதெய்வ வழிபாடுகள் காணாமல் போயிருக்கும். குலதெய்வத்தை, அதன் வழிபாட்டை விட்டுவிடு என்று சமய சன்றோர்கள் யாரும் கூறி யாம் கேட்டதில்லை.ஒரு சிவாலய குடமுழுக்கின் போது கூட அந்த ஊரில் உள்ள அத்துணை தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யப்படுவதைக் காணமுடியும்.
    திராவிட கால்டுவெல்லிய மாயைகளால் அறிவை என்னாளும் மறைக்கவியலாது.
    சிவஸ்ரீ.

  120. திரு அஞ்சன் குமார்

    அரபிக் நிச்சயமாக மதம் சாராதது தான்

    மொதல்ல இஸ்லாம் ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்பே அரபிக் இருந்தது
    ரெண்டாவது இஸ்லாம் மதமல்ல மார்க்கம் எனவே இதன் ரெண்டு விசயத்தின் படியும் அரபிக் மதம் சாராதது தான்.

  121. வைதீகம் மட்டுமே ஹிந்துமதமென்று பல ஹிந்துத்துவர்கள் கருதுகிறார்களே என்று ஸ்ரீ அஞ்சனக்குமார் கூறுகிறார். இல்லை அப்படி இல்லை. ஸ்ரீ அஞ்சனக்குமார் அவர்களுக்கு ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மாஹாசயர் பதிலாக வைதீகம் தாந்த்ரீகம் ஆகியவற்றைப்பற்றி விளக்கியுள்ளார். அவரது கருத்துக்கள் எமக்கும் ஏற்புடையன.
    ஹிந்துமதம் என்பது இந்த பாரதப்புண்ணியில் காலம் காலமாக இருந்துவரும் தொடர்ந்துவரும் வழிபாட்டுமுறைகள் நம்பிக்கை ஆகியவற்றின் தொகுப்பே. அதில் தீக்ஷை போன்ற சடங்குகள் மூலம் வைதீக அவைதீக தாந்த்ரீக மார்கங்களின் செல்வோர் ஒரு சிலரே பெரும்பாலான மக்கள் அப்படியில்லாம் தங்கள் விருப்பம் போல வழிபாடு செய்து சமய நம்பிக்கைகளைக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொதுவானதே ஹிந்துசமயம். ஹிந்து என்று அழைக்கப்படுதலுக்கு யாருடைய சான்றிதழும் அத்தாட்சியும் யாருக்கும் தேவையில்லை.
    சிவஸ்ரீ

  122. பண்டைய ரோமாபுரியில் வாழ்ந்த ஒரு குழுவினர் மித்ராயிசம் எனும் மதத்தை சார்ந்தவர்கள். அவர்கள் சிங்க முகம் மனித உடலுடன் கூடிய ஒரு கடவுளை வழிபட்டனர். அந்த கடவுளின் பெயர் அரிமானயுஸ். அரிமானயுசின் உடலில் ஒரு நாகம் சுற்றி உள்ளது. அதன் படம் கடவுளின் தலையில் உள்ளது – நமது ஆதிசேஷன் நரசிம்மரின் தலையில் உள்ளது போலவே இதுவும் உள்ளது. இந்த கடவுளின் உருவ அமைப்பும், பெயரும் நரசிம்மரை ஒத்து உள்ளது – அரிமா என்பது சிங்கத்தை குறிக்கும் சொல் (ஹரி எனும் வடமொழி சொல்லும் சிங்கத்தை குறிக்கும்). இந்த ஒற்றுமையை குறித்தும் ஆசிரியரை ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

  123. \\\ஒரு சிலவற்றை அம்பேத்கரால் போராடி பெற முடிந்தது.ஒரு சிலவற்றை பெற முடியவில்லை\\\

    கத்தியின்றி ரத்தமின்றி மஹாத்மா காந்தியடிகள் ஹிந்துஸ்தானத்திற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக கதை சொல்லும் காந்தியவாதிகள், ஹிந்துஸ்தானப் பிரிவினைக்கு மட்டும் அவர் காரணமில்லை என்று கை கழுவதைப் போல உள்ளது உங்கள் வாதம். அரசியல் சாஸனம் என்ற ஒட்டு மொத்த ஆவணத்திற்கு எந்த அளவுக்கு பெருமை பாபாசாஹேப் ஸ்ரீ அம்பேத்காருக்கு உண்டோ அதே அளவு பொறுப்பும் உள்ளது. உங்களுக்கு சில ஷரத்துக்களில் ஒப்புமை இல்லாததால் அந்த முன் தீர்மானத்தின் படி அரசியல் சாஸனம் ஜாதிமுறைப்படி நிறைவேற்றப்பட்டது என்று சொல்வது ஜோடுக்குத் தகுந்த படி பாதங்களை செதுக்கும் வேலை தான். சார், அது எப்படி 90% என்று கணக்கெல்லாம் கொடுக்கிறீர்கள்? இது சம்பந்தமாக ஏதும் ஆவணம் உள்ளதா? அல்லது உங்கள் முன் தீர்மானத்தின் படியா?

    \\\அதே அரசியல் நிர்ணய சபையில் பழங்குடி இனத்தை சார்ந்த முண்டா அவர்களின் பசுவதை தடை எதிர்ப்பு பேச்சை குறிப்பிட்டு இருந்தேனே நீங்கள் கவனிக்கவில்லையா\\\

    சார், முண்டாவோ பண்டாவோ நான் அறியேன். நான் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக உத்தர பாரதத்தில் பல மாகாணங்களில் வசித்து வருகிறேன். பசுவதை எதிர்ப்பு என்பது ஜீவ காருண்யம் என்ற கோட்பாட்டில் ஈடுபாடுடைய அனைத்து மானுடர்களும் ஈடுபாட்டுடன் அணுகும் விஷயம் என நான் அறிவேன். இதை நீங்கள் ஜாதி ரீதியாக அணுகுவது குயுக்தியாக தெரிகிறது. ஏதோ அனைத்து உயர்ஜாதிக்காரர்களும் ஜீவ காருண்யர்கள் போலும் மாறானவர்கள் அனைத்து பேரும் ஜீவ ஹிம்சையை ஆதரிப்பவர் போலும் நீங்கள் அணுகுவது அசட்டுத்தனமாகத் தான் தெரிகிறது.

    மாறாக பாபா ராம்தேவ் அவர்கள் கோ சம்ரக்ஷண யாத்ரா நடத்திய போது ஹிந்துக்களில் அனைத்து ஜாதியினரும் (உங்கள் கணக்குப்படி உயர்ந்த அட்டவணை வனவாசி இத்யாதி) அதில் பங்கெடுத்துள்ளார்களே? ஊனுடனும் உயிருடனும் பசுப்பாதுகாப்பில் ஜாதிவித்யாசமின்றி அனைத்து ஹிந்துக்களும் பங்கெடுத்தமையை அது தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட விஷயத்தையும் கண்டு கொள்ளக் கூடாது என் கிறீர்கள்? அது மட்டுமில்லை சார், மிகப்பல முஸல்மான் சஹோதரர்கள் கூட இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் தான் பார்த்தேன். சங்க பரிவார் காரர்களே தாடி ஒட்டிக்கொண்டு தலையில் தொப்பி போட்டுக்கொண்டு நாடகமாடுகிறார்கள் என்பீர்களோ?

    இப்போது தெரிகிறது ஹிந்துக்களை ஜாதி வித்யாசமில்லாது மேலும் ஹிந்துக்கள் இல்லாதவர்கள் பலரையும் கூட ஒன்று சேர்க்க ஹிந்துத்வ இயக்கங்கள் முனையும். இப்படி எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டால் இடது சாரி அடிதடி கொலைவெறி வ்யாபாரம் படுத்து விடுமே? அதற்கு வேட்டு வைக்க வேண்டாம்?

    \\\\இன்று பா ஜ க ,சிவசேனா சேர்த்து 125 எம் பி கூட கிடையாது.அவர்களை தவிர யாரும் பசுவதை தடையை ஆதரிக்கவில்லை
    உச்ச நீதிமன்றம் ஆரம்ப முதல் இட ஒதுக்கீடிற்கு கூட தான் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்தி வந்துள்ளது.அதிலும் அனைத்து சமூகத்தவரும் இடம் பெரும் நிலை வரும் போது அதன் கண்ணோட்டமும் மாறும் \\\

    பசுவதைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக்கு உங்கள் அளவுகோல் படி ஜாதி தான் காரணி? இல்லை? சபாஷ், பா ஜ க மற்றும் சிவசேனா கட்சிகளில் அனைத்து ப்ரதிநிதிகளும் உயர்ஜாதியினர் என்பது உங்கள் தியரி போலும். அதே போல் காங்க்ரஸ் மற்ற கட்சிகளில் எல்லா ப்ரதிநிதிகளும் அட்டவணை மற்றும் வனவாசி இத்யாதி ஜாதிகள். பலே பலே!!!

    அது சரி சார், நரேந்த்ரபாய் மோடியை விளாச வேண்டும் எனும் போது மட்டும் நீதிமன்றம் தீர்ப்பு என்ற கைத்தடியை எடுத்துக்கொள்கிறீர்கள். அது ஏன் பசு வதைத் தடைக்கு ஒதுக்கப்படுகிறது. பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்களே அளித்த அரசியல் சாஸனமாக இருக்கட்டும் உச்ச ந்யாயாலயமே ஆகட்டும். உங்கள் பெட் தியரி சமாசாரங்களுக்கு வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்வீர்கள். இல்லையென்றால் இல்லை. அப்படித்தானே!!!!!

    கோத்ரங்கள் பற்றி சில வரிகள்.

    அன்பர் பூவண்ணன் அவர்கள் கருத்து உலகமுழுதும் இது பார்ப்பனர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரே கோத்ரம் ஆசேது ஹிமாசலம் பார்ப்பனர்களில் மட்டும் காணக்கிட்டும் என்பது இவர் கருத்து. அன்பரின் பெட் தியரி.

    மாற்றுக்கருத்துக்களைப் பார்ப்போம்.

    உத்த்ராஞ்சல் மாகாணத்தில் குமாவ் மற்றும் கட்வால் பகுதிகளில் பார்ப்பனர்கள் மற்றும் ராஜ்புத் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களிடையே பிஷ்ட் என்ற கோத்ரம் காணக்கிடைக்கிறது. ஆனால் அதேகோத்ரம் பார்ப்பனர்கள் மற்றும் ராஜ்புத் இருவரிடையேயும் உண்டு. ரமேஷ் சிங்க் பிஷ்ட் என்றால் ராஜ்புத். ரமேஷ் சந்த்ர பிஷ்ட் என்றால் பார்ப்பனர். ஒரே கோத்ரம் இரண்டு ஜாதிகளிடையேயும் புழங்குகிறது.

    ஜாட் என்ற சமூஹத்தினர் உத்தர பாரதம் முழுதும் காணக்கிட்டுவர். இன்றைய பாக்கி ஸ்தானத்திலும் கூட இருக்கின்றனர். இவர்கள் வேளாளக்குடி மக்கள். பார்ப்பனர்களில் புழங்கும் கோத்ரங்களில் ஒன்று “ஆத்ரேய” கோத்ரம். அதாவது “அத்ரி” மஹரிஷியை சார்ந்த கோத்ரம். இதே அத்ரி கோத்ரம் ஜாட் சமூஹத்தினரிடையேயும் உண்டே. பார்ப்பனர்களில் புழங்கும் இன்னொரு கோத்ரம் “கர்க்ய கோத்ரம்”. உத்தர பாரதத்தில் பனியா – வைஸ்ய (வ்யாபாரி) சமூஹத்தை சேர்ந்தவர்களிடையே 18 கோத்ரங்கள் முக்யமானவை. கர்க், கோயல், மித்தல், ஜிண்டல், சிங்கல் என்ற படிக்கு 18 கோத்ரங்கள். இதில் பாருங்கள் பார்ப்பனர்களுக்கான அதே கர்க்ய கோத்ரம் பனியா சமூஹத்திலும் உண்டு. அப்புறம் பாருங்கள் பனியா கோத்ரத்தில் உள்ள கோயல் கோத்ரம் உத்தர பாரதத்து ஜாட் சமூஹத்திலும் உண்டு. அப்புறம் ஜாட் சமூஹத்தினரிடையே உள்ள ஒரு கோத்ரம் அஃப்ரிடி. ஐயா பாருங்கள் நான் முன்னமே சொன்னபடி பாக்கி ஸ்தானத்திலும் ஜாட் முஸல்மான் சஹோதரர்கள் உண்டு என்று சொல்லியிருந்தேன். பளிச்சுனு பலப் எரியணுமே. ப்ரபல கிரிக்கெட் மட்டையாளர் ஷாஹித் அஃப்ரிடி இதே கோத்ரத்தை தன் சர்நேம் ஆகக் கொண்டுள்ளார். தலை சுத்துதில்ல

    பூவண்ணன் சாரின் பெட் தியரி கோத்ரம் என்ற சதி பார்ப்பனர்களால் ஆசேது ஹிமாசலம் பார்ப்பனர்களை இணைக்கும் ஆயுதம். ஜாதி மீறி பொதுவாக கோத்ரம் என ஏதும் கிடையாது.

    ஆனால் வாஸ்தவத்தில் விஷயம் முற்றிலும் வேறானது. நான் கொடுத்துள்ளது சில உதாரணங்களே.

    தமிழகத்து பல ஜாதிகளிலும் கூட ஆராய்ந்து பார்த்தால் பார்ப்பனரிடையே புழங்கும் கோத்ரங்கள் காணவியலும்.

    சார் பாதங்களுக்கு ஏற்ப ஜோடு தயார் செய்ய வேண்டும். ஜோடுக்கு ஏற்றபடி பாதங்களை செதுக்குவது அசட்டுத்தனம்.

  124. //எனவே தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு இப்போக்கை ஊக்குவிக்கலாகாது எனக் கேட்டுக் கொள்கிறேன்//

    மலர்மன்னனின் இக்கோரிக்கையை ஆசிரியர் குழு கவனித்தல் நன்று.

  125. திரு கிருஷ்ணகுமார் அவர்களின் விளக்கம் மிக தெளிவாக அமைந்துள்ளது. நன்றிகள் பல. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல நடிப்போரை எழுப்பமுடியாது. கோத்திரம் என்பது பல சாதிகளிலும் உள்ளது. இந்தியாவின் சமூக அமைப்பை பற்றி ஒன்றுமே தெரியாத , திராவிட மூட இயக்கங்கள் கட்டிவிட்ட புளுகு மூட்டை ஏராளம். அதை நம்பி சில அன்பர்கள் ஏமாந்து, நமது தளத்தில் மறுமொழிகள் இட்டுள்ளனர். அவ்வளவு தான்.

  126. Dear Krishnakumar,
    HInduisam haters in Tamil Nadu having poor knowledge.Their mind set like that al north Indians are brahmins or all north Indain parties having only high caste people,They cannot digest,in hindusiam having all castes of people. Even they are not ready to believe that sanskrit language supported by Dr.Ambedkar. They are only targeting only particular caste also because they believe this particular caste only supporting hindusam.
    They refuse to understand they are in loosing side. Awakening starts in Hinduisam. They are repeatly told that kannda,telugu and malayalam came from Tamil. But,reality they do not ready to understand what realy other language people saying. They are living like a frog in wall.

  127. //திராவிட மூட இயக்கங்கள் கட்டிவிட்ட புளுகு மூட்டை ஏராளம்//

    இதனுடன் லிஃப்கோ வெளியிட்ட கோத்திரங்கள் என்ற நூலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்பட்டமான ஜாதிப்பிரச்சாரம். எப்படி தமிழ்ப்பார்ப்ப்னர்கள் தங்களைப்பிறரிடமிருந்து தனித்துக்காட்ட கோத்திரங்கள் உதவும் என்று புரியும். லிப்கோ ஐயங்கார்களால் நடத்தப்படுவது.

    இப்புத்தகத்தையே புளுகு மூட்டை என்று எடுத்துக்கொள்ளலாமா?

  128. //அதில் தீக்ஷை போன்ற சடங்குகள் மூலம் வைதீக அவைதீக தாந்த்ரீக மார்கங்களின் செல்வோர் ஒரு சிலரே பெரும்பாலான மக்கள் அப்படியில்லாம் தங்கள் விருப்பம் போல வழிபாடு செய்து சமய நம்பிக்கைகளைக்கொண்டுள்ளனர். //

    இப்படி நன்றாக ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால், எவரோ ஒரு கூட்ட மக்களுக்கு வைதீக மத வழிபாடே தெரியவில்லை என்று காட்டப்பட்டால் ஏன் கோபடுகிறீர்கள்?

  129. //எங்களுக்கும் உதவியாக இருக்குமே?
    //

    இரமேஷ்! எனக்கும் உதவியாக இருக்குமே என்றெழுதப்பழகுங்கள். இல்லாவிட்டால் தமிழ்ஹிந்து காமில் கோஷ்டிப்பூசல் என்று சொல்லிவிடுவார்கள். கோஷ்டிகள் சேர்க்கக்கூடாது. எப்படி நான் தனியாக நின்று என் கருத்தை மட்டுமே சொல்கிறென் அப்படி!

  130. மாட்டுக்கறியப்பற்றிய விவாதம் கன ஜோர்.

    நன்று.

    வழக்கம்போல பார்ப்ப்னர்கள், மற்றும் சைவ பிள்ளைகள் மாட்டுக்கறியுணவுக்கு எதிரிகள். வடக்கே இவர்களுடன் ஜெயின்களும் சேர்ந்து கொள்வார்கள்.

    இங்கு ஆதரிப்போருக்கு ஒன்று தெரிந்தே ஆகனும்: ஜைன மதத்தில் மக்கள் எண்ணிக்கை குறைந்த காரணம் வெஜிடேரியன் ஒன்லி பாலிசிதான்.

    நான் வெஜிட்டேரியனா இருந்துகொண்டு பசுவதையைப் பற்றி பேச முடியுமா? வெஜிட்டேரியானக இருந்து கொண்டு மாட்டுக்கறி உண்பதை ஏற்க முடியுமா?

    ஆனா ஒன்னு பாருங்க. ஹிந்து மதம் ஜைன மதம் மாறி ஆயிரும். அவா மட்டும்தான் இருப்பா. மத்தவாயெல்லாம் கிருத்துவ மதம் இசுலாமுன்னு போயிடுவா. அங்கே நான் வெஜிட்டேரியனா இருக்கலாமென்று.

    ஆக, உங்களுக்குப்பிடித்தால் பசுவதை கூடாதென்று கவிதைகள், கட்டுரைகள், காவியங்கள் எழுதிக்கொள்ளுங்கள். அதை உங்களுக்குள் விமர்சித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஹிந்துமதத்துக்கு எதிராகவே போய்விடும். ஐ மீன். நான் வெஜிட்டேரியனெல்லாம் வெளியே போ என்றால், எத்தனை பேர் மிஞ்சுவார்கள்?

    எல்லாருமே ஹிந்துதான் என்று நீட்டிமுழக்கும் இவர்கள் ஏன் இந்த விசயத்தில் உட்குத்து வேலை பண்ணுகிறார்கள்?

  131. //வைதிகம் என்ற பெயரால் பிற்காலத்தில் விருமபத் தகாத, விலக்கப்பட வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் புகுத்தப்பட்டதால் வந்த வினைதான் இந்த மன மாச்ச்சரியங்களுக்குக் காரணமாகிவிட்டது. ஸனாதனிகள் என்ற பதப் பிரயோகமும் பிற்போக்காளர்கள், பழமைவாதிகள் என்கிற பொருளைத் தருவதாக அமைந்துவிட்டது. //

    இந்த மாபெரும் உண்மையைச் சொன்னதற்கு ஜோரா எல்லாரும் மலர்மன்னனுக்கு கைதட்டுங்கோ. :-))))

    இதையே நான் சொன்னேன்; அல்லது பூவண்ணன் சொன்னாரென்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் ”ஆபிராகமிய பாலவனம்” என்று தொடங்கிவிடுவார். இன்னொருவர் இந்த கிருத்துவ பாதிர்யென்பார்.
    மற்றொருவரோ, ஹிந்துப்பெயர்களில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பார்.

    நான் இன்னைக்கு நகைச்சுவை மூடு.

  132. //மேலும் சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சிக்குத் தடை உள்ளது. அங்கு முகமதியர் மட்டும் வாழவில்லை. அரேபியரில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இன்று சவூதியில் பல்வேறு பிரிவினரும் வாழ்கின்றனர். அவர்கள் பன்றிக் கறியை விரும்பி உண்ணக் கூடியவர்கள்தான்!
    நமது தேசம் ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்கப்பட்டால்தான் கால்நடை வதைக்குத் தடை விதிக்க இயலுமானால் அதி சீக்கிரமாக அவ்வாறே அறிவிக்கப்படுவதாக!
    //

    சவுதி அரேபியா ஒரு இசுலாமை அடிப்படையாகக்கொண்ட தியாக்கிரசி . இந்தியாவும் அப்படியொரு தியாக்கிரசியாக ஹிந்துமதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆனபின் மலர்மன்னனின் ஆசை நிறைவேறலாம். மாட்டுக்கறி சாப்பிடற தலித்துகளையெல்லாம் கழுவிலேற்றிக்கொன்று ஹிந்துமத்தில் மக்கள் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போகலாம்.
    ஏன் சொல்றேன்னா, மாட்டுக்கறி அவங்க மட்டுமில்லாமல், மற்றவர்களும் சாப்பிடறாங்க. வெளிநாடு சென்ற பார்ப்ப்னர்களும் ஒரு கைபிடிக்கிறாங்க. அப்போன்னா பாத்துக்காங்களேன்.

    ஹிந்து மதத்தை இந்தியமண்ணில் வலுவிழக்கச்செய்ய ஒவ்வொரு யோசனையாச் சொல்லிக்கொண்டுவாராங்களே

    (edited and published)

  133. Dear Tamil alis poovannan –> hindusiam hater –> chirstian Evanglist
    you are saying that all communities having exact Gothras .how’s possible. some Gothras common to some communties .ForEg,bharatvaja gothra and kowisk Gothara commn to devangar and brahmins who is residing in south India.Apart from ,Devangas have their own gotharas(check Devanga.org)
    Gothras also in diffrent name in many communites.(for eg 24 manyas in chettiyars and kottams in mudaliyars)
    First try to get concepts clearly.Then ,come for argument.Even, you people cannot understand Bible’ meaning.Still saying Jesus is God but condratory to teaching of Bible.

  134. அன்புள்ள தமிழ்,

    லிப்கோ புளுகினாலும் புளுகு புளுகு தான். லிப்கோ அல்லது அதன் முன்னோடிகள் யாரும் எங்கள் மதத்தின் அத்தாரிட்டி அல்ல. அது சரி புளுகுவதற்கு ,திராவிட இயக்கங்களுக்கு மட்டும் தான் உரிமையா ? லிப்கோ வுக்கு உரிமை கிடையாதா ? யார் புளுகினாலும் , பொய் எப்போதும் பொய் தான். லிப்கோ வெளியிட்ட நூல்களில் இருந்த தவறான கருத்துக்களும், பொய்களும் நமது தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளன. அது புளுகு மூட்டை என்று கொள்வதில் தவறு எதுவும் இல்லை அப்பா.

  135. //Dear Tamil alis poovannan –> hindusiam hater –> chirstian Evanglist
    you are saying that all communities having exact Gothras .how’s possible. some Gothras common to some communties .ForEg,bharatvaja gothra and kowisk Gothara commn to devangar and brahmins who is residing in south India.Apart from ,Devangas have their own gotharas(check Devanga.org)
    Gothras also in diffrent name in many communites.(for eg 24 manyas in chettiyars and kottams in mudaliyars)
    First try to get concepts clearly.Then ,come for argument.Even, you people cannot understand Bible’ meaning.Still saying Jesus is God but condratory to teaching of Bible.//

    முதலில் உண்மையென்று தெரிந்தால் மட்டுமே பேசவேண்டும். நாந்தான் பூவண்ணன் என்று எப்படி தலைக்கட்டினீர்கள்?

    இங்கு பூவண்ணனோ மற்றவர்களோ, கோத்திரங்கள். ஆருக்கு, எப்படி என்றெல்லாம் கதைக்கிறார்கள். நான் அதில் தலையிடவில்லை. நான் பேச நினப்பதெல்லாம், பெர்ஷப்பன்களே. எப்படி சமூகத்தில் பொதுவாக நம்பப்படுகிறது.

    மேட்ரிமோனியல் விளம்பரங்களில், எல்லாப்பார்ப்பனர்களும், பரத்வாஜ கோத்திரம், என்று பல பல முனிவர்களின் கோத்திரங்கள் என்ற ஊரறியச் சொல்கிறார்களே? பொய்யா? மற்றவர்கள் விளம்பரம் எந்த முனிவரைச்சொல்லிக் கோத்திரம் என்று போடுகிறது?

    இப்படிப்பட்ட சூழலில் என்ன பெர்ஷப்சன் தோன்றும் பொது ஜனத்துக்கு? No need to say that. Gothirams and Tamil paarppnars are linked.

  136. மலர்மன்னன் சார்
    நான் சொல்ல நினைத்ததை அற்புதமாக விளக்கி விட்டீர்கள்
    கறி நான் சாப்பிடும் உணவு.அதை கடவுளுக்கு படைப்பதை தடை செய்வது ஏன் எனபது தானே கேள்வி.உலகில் வேறு யாராவது இதை செய்கிறார்களா

    நீ பன்றி சாப்பிட கூடாது,சுறா சாப்பிட கூடாது அது தேவதூதனுக்கு பிடிக்காது என்றால் அது எல்லாருக்கும் தானே

    நீ வீட்டில் சாப்பிடலாம் நான் கோவிலில் வெட்டுவது வேண்டாம் .ஏன் என்றால் கடவுள் அன்பே உருவானவர் என்பதை யோசித்து பார்த்தால் குழப்பம் தானே
    குறுந் தெய்வத்தில் இருந்து பெருந்தெய்வம்,பழங்குடி தெய்வத்தில் இருந்து இன்றைய தெய்வம் என்பதில் இந்த குழப்பம் தானே முன்னணியில் இருக்கிறது
    உறவினர்கள் இறந்தால் மிகவும் விருப்பப்படும் உணவான மாமிசத்தை தவிர்த்து காரியம் முடிந்த பிறகு அனைவரையும் வரவழைத்து ஒரு கட்டு கட்டுவார்கள்.
    பிடித்தமான பொருளை கடவுளுக்கு படைப்பது தவறு எனபது ஏன்.

    நரபலி தவறு,நரமாமிசம் தவறு எனபது பொது.அதே தானே இதிலும் இருக்க வேண்டும்.அனைவரும் சைவர் ஆகுங்கள் எனபது ஞாயம் .ஆனால் வீட்டில் வெட்டி ருசித்து சாப்பிடு ஆனால் கோவிலில் வேண்டாம் ஏன் என்றால் கறி சாப்பிடாத நிலை தான் இந்த மதத்தில் உயர்ந்த நிலை என்பதில் தானே குழப்பமும்
    சில வருடங்களுக்கு முன் என் தாயை பத்ரிநாத்,கேதர்நாத் அழைத்து சென்ற பிறகு கறி சாப்பிடுவதை விட்டு விட்டார். ஏன் தந்தையும் திருப்பதி சென்ற பிறகு இந்த வருடத்தில் கறி சாப்பிடுவதை விட்டு விட்டார். அது என் குறுந் தெய்வங்களுக்கு கறி உணவாகவும் பெருந் தெய்வங்களுக்கு அவை தவறாகவும் ஆகின்றன
    மலர்மன்னன் சார் அந்த தலைமுறைக்கு இரண்டு ஐயர்மார் வந்து சொல்வது எல்லாம் வேதவாக்கு.வடமொழி எல்லாம் பெருமை.மகன்களுக்கு பிராமண நண்பர்கள் இருந்தாலும் மிக பெருமை.அவர்களோடு மட்டும் சேர் மற்றவர்களோடு சேர்ந்தால் குடித்து குட்டிசுவராவாய் என்று தான் திருவாய் மலர்வார்கள்
    அந்த தலைமுறை முடிந்து விட்டது.ஆடு வெட்டி அனைவருக்கும் எடுத்து வந்து கொடுக்கும் பண்டிகை இப்போது தான் முடிந்தது .அதே போல் செய்வது ஏன் இந்து மதத்தில் குறைவாக ஆனது.ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு நாள்,மாதம் என்று கறி சாப்பிடுவதை தவிர்ப்பது ஏன்
    இந்து மதம் என்பதில் கறி சாபிடாமல் இருப்பது உயர்ந்த நிலை என்பதற்கு காரணம் என்ன
    ருத்ரமான எதிரியை அழித்த கடவுளான நரசிம்மருக்கும் சுத்த சைவ பிரசாதங்கள் ,படையல்கள் தானே
    அது குழப்பமாக இல்லையா

  137. கிருஷ்ணகுமார் சார்
    கோத்திரம் எனபது சூத்திரர்களுக்கு தான் கிடையாது.க்ஷத்ரிய ,வைஷ்ய சாதிகளுக்கு உண்டு.அவர்கள் பூணூலும் போட்டு கொண்டிருந்தார்கள்.கொண்டிருக்கிறார்கள்

    நான் சூத்திரன் இல்லை க்ஷத்ரியன் என்று முயற்சித்த சிவாஜி முதற்கொண்டு பல சாதிகள் கொதிரதிர்க்காக பல நூற்றாண்டாக போராடி வந்திருக்கிறார்கள்.பல கோத்திர மூலங்களை உருவாக்க,சிலரோடு சேர்ந்து கொள்ள முயற்சித்தும் இருக்கிறார்கள்

    சாட் இன மக்களுக்கு ஆயிர கணக்கில் கோத்திரங்கள்.அவற்றின் கதை வேறு.அவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் இருக்கிறது
    அவர்களை சப்த ரிஷியோடு இணைப்பது சரியான வேலையா ,அட்ரி,கத்ரி,ரதி,செஹ்வாக்,டாஹியா,ஜாக்கர் எனபது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தான்.ராஜஸ்தானில் இருக்கும் சாட் கோத்திரம் ஹரியானாவில் இருப்பது கடினம் .அதே போல கோத்திரம் இங்கு நாயர்களுக்கோ,நாடார்களுக்கோ ,தோடோர்களுக்கோ இருக்கிறதா எனபது தானே கேள்வி

    ஜ்ஹார்க்ஹாந்து பழங்குடிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கோத்திரம் போன்ற குடும்ப மூலத்தை அடையாளம் காட்டும் வழக்கம் இன்றும் இருக்கிறது.கேரளாவில் பெயரோடு வீட்டு பெயர் வரும்.அவை குறிப்பிட்ட நில பகுதிகளுக்கு சொந்தமானவை.அதே போல அரக்கபரம்பில் என்று ராஜஸ்தானில் இருக்குமா

    ஆனால் பாரத்வாஜ காஷ்யப வசிஷ்ட பிருகு என்று இந்தியா முழுவதும் இருக்கிறதே அது எப்படி என்பதற்கு நேரடியான பதில் என்ன
    ஏன் சகோத்திரத்தில் திருமணம் செய்வதில்லை .சிவா விஷ்ணு கோத்திரம் என்று கோத்திரம் சொல்லும் சாதிகள் எல்லாம் அதே கோத்திரத்தில் தானே திருமணம் செய்து கொள்கிறார்கள்.தென்னிந்தியாவில் உள்ள பழக்கமான உறவில் திருமணம் அனைத்து சாதிகளுக்குள்ளும் புகுந்து விட்டாலும் ரிஷி கோத்திரம் உள்ள சாதிகள் அதே கோத்திரத்தில் திருமணம் செய்வது கிடையாதே அது ஏன்
    வட இந்திய பழக்கம் இங்கும் இருக்கிறது என்றால் அங்கிருந்து வந்து பல நூற்றாண்டாகியும் விடாத பழக்கம் என்று எடுத்து கொள்வது தவறா

  138. ஸ்ரீ பூவண்ணன். யாரும் யாருடைய கோத்திரத்தினையும் யார் மீதும் திணிப்பது கிடையாது. பலி கொடுப்பதும் புலால் உண்பதுவும் அவரவர் விருப்பம். புலால் உண்கிற குடியில் பிறந்தவர்கள் சைவர்களாகவிரும்புகின்றபோது அதனைவிட்டுவிடுகிறார்கள். யாரும் அவர்களைக்கட்டாயப்படுத்துவது இல்லை. கோத்திரம் இல்லாதவர்கல் குலம் கூட்டம் கிளை என்றுகொண்டு புறமணம் புரிகிறார்கள். ஹிந்துக்கள் யாரும் சித்தப்பன் பெரியப்பன் மகளை அல்லது மகனை மணப்பதில்லை. ஸ்ரீ பூவண்ணன் சும்மா உதார் விடாதீர்கள். இதைப்பற்றி அடியேன் எழுதியுள்ள பின்னூட்டத்தை மறுபடியும் வாசியுங்கள்.
    சிவஸ்ரீ

  139. சைவ உணவு என்பது ஜைன சமயத்தினுடைய தாக்கத்தால் சைவர்களும் வைணவர்களும் ஏற்றுக்கொண்டது என்பது ஸ்ரீ பூவண்ணன் போன்ற கிறிஸ்தவர்கள அறிவது அவசியம். சைவர்களிடையும் வீரசைவர் களிடையேயும் சைவ உணவு அவசியம் என்றாலும் வைணவர்களிடம் கட்டாயம் இல்லை. ஒடிசா வுக்கு வடக்கே பிராமணர்களும் பூணூல் போட்டுக்கொண்டு ஆச்சரியமாக புலால் சாப்பிடுவதைக்கண்டதுண்டு. ஹிந்துக்களாக இருக்கப்புலால் உண்ணக்கூடாது ஆகவே கிறிஸ்தவர்களாவது அல்லது இசுலாமியராவது நலம் என்று ஸ்ரீ பூவண்ணன் போன்றவர்கள் கூறுகிறார் போலும்
    சிவஸ்ரீ

  140. சிவஸ்ரீ சார்
    கோவில்களில் மட்டும் சைவத்தை திணிக்கிற மாதிரி(அசைவம் கடவுளுக்கு வேண்டாம் என்றால் பக்தர்களுக்கு மட்டும் எதற்கு ) ,கடவுள்களை திணிக்கிற மாதிரி கோத்திரத்தை ஏன் திணிக்கவில்லை எனபது தானே கேள்வி
    புத்த மதம் பெரும்பான்மையான மக்களின் உணவு பழக்கங்களை மாற்ற முடியாமல் நாய் பூனை பாம்பு,மாடு என்று எல்லாவற்றையும் சாப்பிடும் மக்களின் பழக்கங்களை அப்படியே ஏற்று கொண்டது. தலாய் லாமா கூட மாட்டு கறியை வெளுத்து வாங்குவார் .இங்கே கறி சாப்பிடாத நிலை உயர்ந்த நிலை எனபது பெரும்பான்மையான மக்களின் பழக்கம்,உணவு,கலாசாரத்திற்கு எதிரானது தானே .அது எப்படி நுழைந்தது ,ஆழமாக வேர் கொண்டு கறி சாப்பிடுபவர்,படைப்பவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ,தவறு செய்கிறோம் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு விடை என்ன .

    திருப்பதிக்கு போய் விட்டு வந்தால் அன்று கறி சாப்பிட மாட்டார்கள் .மாட்டை வீட்டிற்கு அழைத்து வரும் பழக்கம்,பிராமணரை வைத்து புதுமனை புகுவிழா நடக்கும் வழக்கம் வந்த பிறகு விழாவில் கறி சோறு கிடையாது.ஆனால் காலையில் வீடு கட்டிய மேஸ்திரியை வைத்து கோழி பலி இன்றும் உண்டு .பிராமணரை வைத்து திருமணம்,சைவர்களை வைத்து தமிழ் திருமணம் நடத்தும் மக்கள் இல்ல திருமணங்களில் கறி சோறு கிடையாது.அதற்கு தனி நாள்.
    இது போன்ற பழக்கங்கள் ,நம்பிக்கைகள் எப்படி துவங்கின

    எந்த பாலூட்டும் விலங்கினமும் (mammals )பாலை தன குட்டிகளுக்காக தான் தருகிறது .குட்டி போடாமல் பால் கிடையாது. ஆண் கன்றாக இருந்தால் குட்டியை விற்று விட்டு,வைக்கோல் பொம்மை செய்து ,பெண் கன்றாக இருந்தால் சில நொடிகள் பால் சுரப்பதற்காக கன்றை மடியை சப்ப விட்டு பின் வலுக்கட்டாயமாக பிரித்து கறக்கப்படும் பாலை அபிசேகம் செய்வதில் எந்த குற்ற உணர்வோ,அன்பே உருவான கடவுளுக்கு வேண்டாம் என்ற முயற்சிகளோ இல்லையே .அது ஏன்

  141. //பலி கொடுப்பதும் புலால் உண்பதுவும் அவரவர் விருப்பம். புலால் உண்கிற குடியில் பிறந்தவர்கள் //

    அவரவர் விருப்பமென்பது தனிமனித விருப்பமென்பதே. இது தவறான கருத்து. இந்துமத்தை கூட்டம்கூட்டமாகத்தான் அனுசரிக்கிறார்கள். அப்படிச்செய்யும் போது ஒரு சாமியார் அல்லது ஒரு ஆன்மிக இந்து ஒருவகை வழிபாட்டை ஆதிகாலத்தில் காட்ட இன்று அஃது ஒரு வழிபாடாக ஒரு சிறிய அல்லது பெரிய கூட்டத்தில் வந்து கடைபிடிக்கப்படுகிறது. தனிமனித விருப்பத்தினால் கோயில்களில் கிடா வெட்டுவது கிடையாது. அக்கோயிலின் வழிபாட்டு முறையே அது.

    பெரிய பாளையத்தம்மன் கோயிலுக்குச்சென்று மட்டன் கறி சமைத்துச் சாப்பிடுவது ஆசைக்காக அன்று. அது அக்கோயிலுள்ள ஐதீகம். ஆடிக்கூளுற்றி, கருவாடு சமைத்து அம்மனுக்கு படையலிடுவது வழிபாட்டு முறை ஒரு தனிநபரின் கருவாட்டு உணவு ஆசையன்று. அம்மன் மகிழ்வாளென்று தமிழர்கள் நம்புகிறார்கள். இவையெல்லாம் ஹிந்து மதமே. இதை எவரும் தள்ளிவைத்துக்கொண்டு பகடி பண்ண முடியாது.

    உங்கள் விருப்பப்படி நீங்கள் வழிபடுங்கள். அவர்கள் விருப்பப்படி அவர்கள் வழிபடுகிறார்கள். நாங்கள்தான ஹிந்து என்பது ஹிந்து மதத்துக்கு எதிரான பேச்சு.

    சைவர்களெனறால் சைவ உணவு உட்கொண்டோரே என்பது தமிழகத்தைப்பொறுத்தவரை சரியாக இருக்கலாம். பிறமாநிலங்களில் சரிவராது. கார்வார் பிராமணர்களுள் சைவர்கள் உண்டு. காஸ்மீரில் சைவர்கள், வங்காளத்தில் சைவர்கள் என்றெல்லாம் உண்டு. இவர்கள் அசைவர்கள்தான்.

    சிவனை வழிபடுவோர் சைவ உணவு உட்கொள்வோராகத்தான் இருக்கவேண்டுமெனபது என்பது புதுக்கதை. அசைவ உணவையும் உட்கொண்டு சிவனை வழிபடலாமெனபது பழங்கதை. அக்கதையைச் சேக்கிழார் சொல்லக்கேட்டு திரு சிவபூதி விபூதி பூஷண் மகிழலாம்.

  142. //ஹிந்துக்களாக இருக்கப்புலால் உண்ணக்கூடாது//

    Absolutely wrong.

  143. My bilingual software was inadvertantly deleted and I am finding to type in tamizh in our website a bit difficult. Pardon me to share my views in English.

    Dear Sh.Poovannan,

    I have shared my ideas as per my understanding of having been in North in various states for the past 3 decades and not as sort of a sociologist.

    First, The same gothras as are prevalent among brahmins are also found in other communities. So, please no blah blah that gothra is a common lineage peculiar and peculiar only among brahmins through out Hindusthan. The few examples of so much interconnection of gothras among various communities disproves this. The nuances of how and why this is so as per sociological angle may well be deliberated by those knowledeable in this field.

    \\\சாட் இன மக்களுக்கு ஆயிர கணக்கில் கோத்திரங்கள்.அவற்றின் கதை வேறு.அவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் இருக்கிறது
    அவர்களை சப்த ரிஷியோடு இணைப்பது சரியான வேலையா ,அட்ரி,கத்ரி,ரதி,செஹ்வாக்,டாஹியா,ஜாக்கர் எனபது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தான்.\\\

    No stories. Only Facts. examples of Jats having a gothra common with brahmins and baniya was shared by me. This is a simple fact. There may be more such instances.

    \\\அதே போல கோத்திரம் இங்கு நாயர்களுக்கோ,நாடார்களுக்கோ ,தோடோர்களுக்கோ இருக்கிறதா எனபது தானே கேள்வி\\\

    You should be well aware that Namboothiri brahmins marry girls from Nayar communities. Here Gothra is no impediment?

    \\\ஏன் சகோத்திரத்தில் திருமணம் செய்வதில்லை \\\திருமணம் அனைத்து சாதிகளுக்குள்ளும் புகுந்து விட்டாலும் ரிஷி கோத்திரம் உள்ள சாதிகள் அதே கோத்திரத்தில் திருமணம் செய்வது கிடையாதே அது ஏன்
    வட இந்திய பழக்கம் இங்கும் இருக்கிறது என்றால் அங்கிருந்து வந்து பல நூற்றாண்டாகியும் விடாத பழக்கம் என்று எடுத்து கொள்வது தவறா\\\

    Marriage in different communities and the role of gothra have different customs in different regions of Hindusthan. It seems that You just know that among jats, sagothra marriage is banned. You are wrong. In entire Hindi belt, the custom is while arranging marriages, normally they avoid alliances which either belong to the gothra of father’s side as well as mother’s side.

    In south, marrying the son/daughter of maternal uncle (maaman magal / magan) parternal aunt (athai magan / magal) is prevalent among almost all communities. However, the same is totally banned among almost all communities in North India. On hearing about such marriages, they ridicule as if such marriages are between brother and sister.

    No doubt, throughout Hindusthan, gothras play an important role at the time of marriage. But bracketing it under convenient pet theories is wrong. At different places, there are different customs.

    Most important, try to understand that you would find same gothra prevalnet among brahmins being prevalent also among various other communities. There are so many interconnections. A few examples which just came to my mind were shared. If somebody takes pain, may be one would find a lot of commonalities.

  144. உலகமே இன்று தாவர உணவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. பாலையும் பால் பொருள்களையும் கூட உண்ணாத வேகானிஸம் வேகமாகப் பரவி வருகிறது. கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் தாவர உணவே பாதுகாப்பானது, உடலுக்கு உகந்தது என ஆய்வு முடிவுகளோடு அறிக்கை செய்கிறது. ஆனால் இங்கே இறைச்சி உணவுக்கு வாழ்த்துப்பா வாசிக்கப்படுகிறது! ஆட்டிறைச்சி விலை அதிகம் என்பதாலேயே மாட்டிறைச்சியை உண்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் அதற்கும் வழி இல்லாததாலேயே இறந்துபோன மாடுகளைப் புசிக்கிறார்கள். மாட்டிறைச்சி உண்போர் கேரளத்தில்தான் அதிகம். அங்கிருந்துதான் மாட்டிறைச்சியை ஏற்றுமதியும் செய்கிறார்கள். முக்கால்வாசி யும் கள்ளக் கடத்தலாகக் கொண்டுவரப்படும் கால்நடைகள்தாம்! இறைச்சி உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் நுல்களைப் படித்தால் தாவர உணவுப் பக்கம் திரும்பிவிடக் கூடும். எனக்குத் தெரிந்து, என் மீது அன்பு செலுத்தும் ஓர் இளைஞர் வள்ளலாரின் அடியவராகச் சென்னை யில் சமரச சன்மார்க்க சபை ஒன்றை நடத்தி வருகிறார். சென்னை மாநகராட்சியின் தேர்தல் பிரிவில் வேலை பார்க்கிறார். அவர் ஒரு முகமதியர்! அல்லா பிச்சை என்ற பிரமுகர் ஒருவர் எனது இளைமைக் காலத்தில் சென்னையின் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு முக்கிய பிரமுகராய் இருந்தார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். அவர் தாவர உணவு மட்டுமே உண்பவர் என்பதோடு அனைவரிடமும் தாவர உணவே உண்ணுமாறு வலியுறுத்தி வந்தவரும் ஆவார்!
    இறைச்சி உண்ணும் பழக்கம் எல்லா கலாசாரங்களுக்கும் உரித்தானதுதான். ஜைனம் தவிர வேறு எந்த சமயத்துக்கும் இறைச்சி உணவுக்கும் சம்பந்தமில்லை. ஆலயத்தின் தூய்மை, சுகாதாரம் கருதியே ஆலயங்களில் உயிர் பலி தவிர்ப்பது நலம் எனக் கருதுகிறேன்.

    நரசிம்மம் குடலை உருவிப் போட்டு மறக் கருணை காட்டியதேயன்றி, நர அல்லது அசுர மாமிசம் புசிக்கவில்லை!
    -மலர்மன்னன்

  145. திரு தமிழ், நீங்கள் எனக்கு ஒரு நாளில் திரும்ப பதில் சொல்கிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது கோத்திரத்துக்குப் பொய் விட்டீர்கள். சரி. இந்த விச்வாமித்ர @ கௌசிக கோத்திரம் என்று ஒன்று இருக்கிறதே. இந்த விஸ்வாமித்திரர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  146. கிருஷ்ணகுமார் சார்

    நானும் வட இந்தியாவில் வசிப்பவன் தான்.சாட் மக்களோடும் வேலை செய்திருக்கிறேன்
    அவர்கள் கோத்திரம் வேறு.நீங்கள் அதை அத்ரி முனிவர் வழி வந்தவர்கள் என்று கூறுவது தவறு.ஒரே ஒலியை கொண்டதால் அவற்றை இணைப்பது சரியான ஒன்றா
    சாட் மக்கள் திருமணம் செய்யும் போது தந்தை கோத்திரம்,தாயின் கோத்திரம்,தந்தையின் தாயின் கோத்திரம் என்று மூன்றிலும் திருமணம் செய்ய மாட்டார்கள்.அவர்களிடம் ஆயிரக்கணக்கில் கோத்திரங்கள் இருப்பதால் இது சாத்தியம்.ஆனால் ரிஷிமூல குழுக்களிடம் இந்த பழக்கம் கிடையாது
    நம்பூதிரிகள் வர்மா இனபெண்களை தவிர வேறு யாரை திருமணம் செய்தாலும் அவர்கள் வாரிசுகள் நம்பூடிரிகளாக கருதப்பட மாட்டார்கள்.சாதி கடந்த உறவுகளின் வாரிசுகள் ஆயிரகணக்கான வருடங்களாக தாயின் சாதியில் தான் சேர்த்து கொல்லப்பட்டனர்
    கண் இல்லாமல் இருந்தாலும் திருதராடினருக்கு பட்டம் வந்ததும் விதுரருக்கு மறுக்கப்பட்டதும் அதனால் தான்
    உயர் சாதியினரின் வாரிசை வயிற்றில் சுமப்பதை பெருமையாக என்னும் நிலையில் மக்கள் இருந்ததை திருமணம் என்று எழுதுவது சரியா
    திரு எம் எஸ் அவர்களின் தாயார் மதுரை ஷண்முக வடிவு.அவர் தந்தை அவர் தாயை திருமணம் செய்து கொண்டவரா இல்லை பத்தோடு பதினொன்றாவதாக சேர்ந்து வாழ்ந்தவரா
    எம் எஸ் அவர்களின் சகோதரர் எந்த சாதியில் வருவார் .அவருக்கு கோத்திரம் உண்டா

  147. மலர்மன்னன் சார் கம்முநிச்ட்கள் கூட உலகம் முழுவதும் அவர்கள் பக்கம் திரும்புவதாக கூறி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை.அதே போல் தான் உங்கள் உலகம் முழுவதும் தாவர உணவு பக்கம் திரும்பும் கூற்றும்
    மாமிச உற்பத்தி பற்றி கூகுள் செய்து பாருங்களேன்.பாலுக்கும் ரத்தத்திற்கும் என்ன வித்தியாசம்.ஒரு ஏழை குழந்தையின் தாயிடம் பணம் கொடுத்து அவர் குழந்தைக்கு பால் தராமல் ,பணக்கார குழந்தைக்கு அவரின் தாய்பாலை வாங்கி கொடுப்பதை நாம் நியாயபடுத்த முடியுமா .ஆனால் மாடுகளின் விஷயத்தில் இதை தானே நாம் ஆயிரக்கணக்கான வருடங்களாக செய்து வருகிறோம்.என்ன சிறு நிகழ்ச்சி நடந்தாலும் என் தாய் வடபழனி முருகனுக்கு பாலபிஷேகம் செய்து விடுவார்.அதை நாம் இன்று வரை தவறாக எண்ணவில்லையே.அது ஏன்
    பால் குடிக்கும் மக்கள் தங்களை சைவர்கள் என்று கூறி கொள்வது நகைச்சுவை தான்

  148. திரு பூவண்ணனின் புலம்பல் கேள்விகள்
    “கோவில்களில் மட்டும் சைவத்தை திணிக்கிற மாதிரி(அசைவம் கடவுளுக்கு வேண்டாம் என்றால் பக்தர்களுக்கு மட்டும் எதற்கு ) ,கடவுள்களை திணிக்கிற மாதிரி கோத்திரத்தை ஏன் திணிக்கவில்லை எனபது தானே கேள்வி”
    திணிப்பு திணிப்பு என்பதெல்லாம் பாலைவனத்து சமாச்சாரம். இங்கே திணிப்பு இல்லை இல்லவே இல்லை. கடவுளைத்திணித்தது யார்? கோத்திரத்தை திணிப்பதற்கு யாரும் இல்லை.
    “இங்கே கறி சாப்பிடாத நிலை உயர்ந்த நிலை எனபது பெரும்பான்மையான மக்களின் பழக்கம்,உணவு,கலாசாரத்திற்கு எதிரானது தானே .அது எப்படி நுழைந்தது ,ஆழமாக வேர் கொண்டு கறி சாப்பிடுபவர்,படைப்பவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ,தவறு செய்கிறோம் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு விடை என்ன “.
    அதைக்கேட்க நீவிர் யார் என்று முதலில் கூறும். கறியை அதிகம் தின்றால் உடலுக்கு நல்லது அல்ல என்ற புரிதல் காரணம். எல்லாவற்றையும் அனுபவிப்பது அல்ல எதையும் துறப்பது உயர்வு என்பதும் காரணம். இந்தக்குற்ற உணர்ச்சியை யாரும் ஏற்படுத்தவில்லை என்றாலும் தினசரி கறித்தின்று உடலைக்கெடுத்துக்கொள்ளாமல் மக்கள் நல்லபடிவாழ்கிறார்கள். தினமும் கறிதின்பது பெரும்பான்மை மக்களின் கலாச்சாரம் அல்ல எப்பொழுதாவது கறிதின்பதே பெரும்பாலான மக்களின் கலாச்சாரம். அதை எப்பொழுதும் கறிதின்னு எல்லா கறிதின்னு என்று மாற்றுவது கெடுதல் செய்யும் அபிராகாமிய கலாச்சாரம்.
    “திருப்பதிக்கு போய் விட்டு வந்தால் அன்று கறி சாப்பிட மாட்டார்கள் ……….இது போன்ற பழக்கங்கள் ,நம்பிக்கைகள் எப்படி துவங்கின”
    அதனால் கெட்டுப்போனது என்ன? இன்றைக்கு கறி விற்கும் விலையில் பொருளாதார ரீதியில் கூட இது நல்லது தான். ஸ்ரீ பூவண்ணன் என்ன கறிகடை பாயா என்ன?
    பசுவதையைப்பற்றி கவலைப்படாத பூவண்ணன் பாய் பாலபிசேகம் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்.

  149. தமிழ்
    “அவரவர் விருப்பமென்பது தனிமனித விருப்பமென்பதே. இது தவறான கருத்து. இந்துமத்தை கூட்டம்கூட்டமாகத்தான் அனுசரிக்கிறார்கள்”.
    தமிழ் இது அப்பட்டமாக அபிராகாமிய நோக்கு. கூட்டம் கூட்டமாக் நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறைகளும் ஹிந்துக்களாலும் அனுசரிக்கப்டுவது உண்மைதான். ஆனால் ஹிந்து சமயங்கள் ஆன்ம விடுதலையை குழு சார்ந்ததாக கொள்ளவில்லை. கிறித்துவை நம்புபவர்களுக்கு நபிகளை நம்புபவர்களுக்கு எல்லாம் ஒரே நாளில் விடுதலை என்பதில் இங்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை. அது தனிமனிதனின் தனிப்பயணம். அது மட்டுமன்று ஒரு தனிமனிதன் தனது குடும்பத்தின் வழிபாட்டு முறைகளில் கொள்வதைக்கொண்டும் வேண்டாததை விட்டும் விடலாம். தனது வழிபாட்டு முறையை மாற்றவும் செய்யலாம். சைவ உணவு உண்ணாத குடியில் பிறந்த நான் சைவனாக இருக்கிறேன். அதற்கு முழு உரிமை எனக்கு உள்ளது.
    தமிழ்
    “சைவர்களெனறால் சைவ உணவு உட்கொண்டோரே என்பது தமிழகத்தைப்பொறுத்தவரை சரியாக இருக்கலாம். பிறமாநிலங்களில் சரிவராது”.
    பரவாயில்லையே தமிழ் கூட பூவண்ணனுக்கு பதில் கொடுத்துள்ளாரே. சைவ சமயத்தில் ஆறு பெரும் பிரிவுகள். அபிராகாமியப்பார்வையில் அவை ஒவ்வொன்றும் தனித்தனி சமயம் என்று கருதும் அளவிற்கு மாறுபாடுகளைக்கொண்டுள்ளன. சைவ சித்தாந்தம், வீரசைவம், ஆராத்யாய சைவம், பாசுபத சைவம், காஸ்மீரசைவம் என்பன. தீக்ஷை பெற்று முறையான சாதனை செய்பவர்கள் மட்டுமே சைவர் அதாவது சமயிகள் ஆவர். மற்றவர் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே. நான் அறிந்தவரை தீக்ஷை பெற்ற சைவர்கள் புலால் உண்பதில்லை. அவ்வளவுதான். சிவவழிபாடு செய்பவர்கள் புலால் உண்ணக்கூடாது என்பது கட்டாயம் அன்று. காளாமுகம், மாவிரதம், கபாலிகம் போன்ற சைவப்பிரிவுகள் புலால் உண்பதை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

  150. பூஷன் சார்
    ஏன் இவ்வளவு கோவம்.பழங்குடி தெய்வங்களில் இருந்து ஆகி வந்த தெய்வங்களில் ,மெருகேற்றப்பட்ட தெய்வங்களில் பால் உண்டு,பாலாபிஷேகம் உண்டு ,ஆனால் மாமிசம் இல்லை எனபது எதனால்
    பெரும்பான்மை மக்களின் உணவை கடவுளுக்கு படைக்காமல் புறக்கணிப்பது எப்படி ,எப்போது யாரால் நடைபெற்றது.மலர்மன்னன் ஐயா போல சில நூற்றாண்டுகளுக்கு முன்னும் இதற்கு எதிராக பிரச்சாரம் நடந்து அவை விலக்கப்பட்டதா
    வட இந்தியாவில் மொட்டை அடிப்பது எனபது நெருங்கிய உறவினர்களின் மரணத்தின் போது தான்.
    கடவுளுக்கு முடி காணிக்கை எனபது மிகவும் அபூர்வம்.புத்த மத வழக்கம் தான் முடி காணிக்கை,மொட்டை அடித்தல் என்ற கூற்றும் உண்டு.அதில் இருந்து தான் அப்படியே இந்து மதத்திலும் தொடர்கிறது எனபது சரியா
    மொட்டை அடிக்கும் வழக்கம் நரசிம்மர் கோவில்களிலும் உண்டு,முருகர் கோவில்களிலும் உண்டு .அதை ஏற்று கொண்டது போல மாமிசத்தை ஏன் ஏற்று கொள்ளவில்லை

    https://hill-temples.blogspot.in/

    The temple is very old and the place Rajrappa finds mention in the Vedas, Puranas and Hindu scriptures as a “Shakti Peeth” which is flocked by devotees from Bihar, Jharkhand, West Bengal Assam and Nepal for worship of Goddess Chinnamastika. Vedic book Durga Saptashati also mentions the temple. The art and architectural design resembles the design of temples of Tantrik importance. The temple is considered as notable as the tantrik site of Kamakhya Temple of Assam which has a similar architecture. The temple is one of the 10 Mahavidhyas. The ancient temple of Goddess was destroyed and later a new temple was constructed and the original idol of Goddess was placed in it. Animal sacrifice is still practised in the temple. The sacrificial animals are killed on Tuesdays, Saturdays and during Kali puja.

    பூரி ஜெகநாதர் படையலில் பூண்டு,வெங்காயம் கிடையாது ,ஆனால் கஸ்தூரி மான்களை கொன்று எடுக்கும் கஸ்தூரி நறுமணம் பூசைகளுக்கு மிகவும் முக்கியம்
    புலி தோலில் தான் மத குருக்கள் அமரும் வழக்கம் இன்றும் தொடர்கிறது

    https://articles.timesofindia.indiatimes.com/2009-06-16/bhubaneswar/28203748_1_nepal-government-puri-shrine-balabhadra

    Kasturi, according to temple insiders, is extracted from the navel of a certain breed of deer found in Nepal and is used for different rituals including mukha singar (facials) of the temple’s presiding deities during the annual Rath Yatra.

    Temple sources said about five grams of kasturi powder is mixed with different herbs to make a paste before the same is applied on the faces and bodies of the deities, who “fall ill” every summer before the Rath Yatra.

    இதை எல்லாம் விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க சொன்னால் ஏன் இவ்வளவு கோவம் வருகிறது

  151. //நான் அறிந்தவரை தீக்ஷை பெற்ற சைவர்கள் புலால் உண்பதில்லை. அவ்வளவுதான். சிவவழிபாடு செய்பவர்கள் புலால் உண்ணக்கூடாது என்பது கட்டாயம் அன்று//

    நானறிந்தவரை, கட்டாயம் அன்று.

    சரியாக எழுதிவிட்டீர்கள். பிரச்சினையேயில்லை.

    புலால் உண்பவரும் ஹிந்துவாக இருக்கட்டும்.

  152. நீங்கள் எனக்கு ஒரு நாளில் திரும்ப பதில் சொல்கிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது கோத்திரத்துக்குப் பொய் விட்டீர்கள். சரி. இந்த விச்வாமித்ர @ கௌசிக கோத்திரம் என்று ஒன்று இருக்கிறதே. இந்த விஸ்வாமித்திரர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.//

    இரமேஷ் என்னைப்புரிந்து கொள்ளவேயில்லை. இங்கு நான் ஒரு பாமரனின் சார்பாகத்தான் பேசுகிறேன். அல்லது ஒரு பாமர இந்துவின் சார்பாகத்தான். இப்பாமரர்களுக்கு வேதங்கள் தெரியாது; வடமொழி தெரியாது. தேவாரம் படிக்கவில்லை. நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் அறியார்.

    இவர்கள் கோயிலுக்குப்போக, அர்ச்சகர் என்ன கோத்திரம் என்று கேட்டால் இவர்களை பலர் முன்னிலையில் அவமானப்படுத்துவது போல கூனிக்குறுகுவர்.

    ”இல்லை. அப்படி இவர்கள் செய்ய வேண்டாம், சிவ கோத்திரம் விஸ்ணுகோத்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம்!” என்றால், அதன் பொருள் கூட இவர்களுக்குத் தெரியாது.

    இவர்களுக்கு இந்துமதம் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்பதே என் பதில்.
    கோத்திரங்கள் நீங்கள் வைத்துப்பெருமைபட்டுக் கொள்ளுங்கள். மேட்ரிமோனியலில் போட்டுக்கொள்ளுங்கள். இவர்களுக்கில்லை.

    கோத்திரங்கள் என்றால் நினைவுக்கு வருவது நீங்கள்; அவர்களல்ல என்பதுதான் நான் சொல்வது. இதையே பூவன்ணன் வேறுவிதமாகச் சொல்கிறார்.

    நீங்கள் எதார்த்தத்தையே எதிர்த்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உதாரணம் விசுவாமித்திரர் எந்த கோத்திரம என்பத்ற்கும் அன்றாட எதார்த்த நான் சொல்லும் இந்துமக்களின் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு?

  153. எது சைவம்? யார் சைவர்கள்? பெரியபுராணம், சாக்கிய நாயனார்புராணம் தெளிவாகச் சொல்லுகின்றது. இது குரித்து முன்னமேயே தமிழ் இந்துவில் எழுதியிருப்பதாக நினைக்கின்றேன்..”செய்வினையும் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதிஹ்தபொருளெனக் கொண்டே,இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென,உய்வகையால் பொருள்சிவனென் றருளாலே உணர்ந் தறிந்தார்” இவ்வாறு அறிந்தவர் பவுத்த சந்நியாசியாகிய சாக்கிய நாயனார். அவர் பவுத்தநெறியைல் வாழ்ந்தே, இவ்வுண்மையை அறிந்து கடைப்பிடித்தமையால் சவ நாயனார் ஆயினார். (துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம், தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்) புலால் உண்ணாமை ஆன்மநெறிக்குத் துணை செய்யும். புலால் உண்ணாமை மட்டுமே சைவநெறி அன்று. அதிபத்த நாயனார் செம்படவர். மீன் பிடிக்கும் தொழில் செய்த அவர் மின்ன் உண்பவரே. சிறுத்தொண்ட நாயனார் இல்லத்தில் க்றிசமிப்பவரின் திறம் அப்புரானத்தில் காணலாம். மகேந்திரவர்மபல்லவன், நரசிம்மவர்மபல்லவன், இராஜசிம்ம பல்லவன், இராஜராஜசோழன், இராசேந்திர சோழன், முதாலாம் குலோத்துங்க சோழன்,இராசாதிராசன் போன்ற சைவப் பேரரசர்கள் , போரில் வெற்றியைக் குவித்தவர்கள் புலாலுணவு உண்ணாமல் இருந்திருப்பார்கள் என என்னால் எண்ணமுடியவில்லை. மேலே சுட்டிக்காட்டிய பெரியபுராணச் செய்யுளும், “ஏகன் (கர்த்தா) அநேகன்(உயிர்கள்), இருள் (ஆணவமலம்), கருமம்( இருவினைKஅள்), மாயை இரண்டு(சுத்தமாயை, அசுத்தமாயை இரண்டும்) ஆக இவை ஆறு ஆதி இல்” ( ஆக இவை ஆறுமநாதியாகவே உள்ளன என்று சைவசாத்திரம் குறுவதையும் கடைப்பிடிப்பவர் எவரோஅவர் சைவர். பிற அனைத்தும் புறக்கோலமே.

  154. கோத்திரம் பற்றி. நான் பிறந்துள்ள சமுதாயத்தில் கோத்திர முறை கிடையாது. கூட்டம் என்றுதான் சொல்லுவோம்.அது பழங்குடிநிலையினைக் குறிக்கும் என்னுடைய கூட்டம் ‘காடை’ என்னும் பறவையின் பெயர். இதுபோன்ற குலக்குறிச்சின்னமே எங்கள் கூட்டங்களை வகைபிரித்து அறியக் கூறப்படுகின்றது. மூன்று தலைமுறையாகத் திருமுறை ஓதியும் சைவத் துறவிகளை அண்டி அருள் பெற்றும் சைவராக வாழ்ந்து வருகின்றோம். திருக்கோவிலுக்குச் சென்றால் நான் அருச்சனை செய்வதில்லை. ஒருமுறை குருக்கள் (சிவாச்சாரியார் அல்லர்) என் கோத்திரத்தைக் கேட்டார். நான் கவுண்டின்னிய கோத்திரம் என்றேன். எம்பந்த வல்வினை தீர்க்கும் சம்பந்தரின் கோத்திரமே எம் கோத்திரம். ஆச்சாரியரின் பெயரால் மாணாக்கரின் கோத்திரமமைதல் சம்ய மரபு.

  155. பூவண்ணன்
    “அதை ஏற்று கொண்டது போல மாமிசத்தை ஏன் ஏற்று கொள்ளவில்லை”
    இந்தக்கதையை திரும்ப திரும்ப சொல்லவேண்டாம். மாமிசம் சாப்பிடுபவர்களும் உண்டு மாமிச படையலை ஏற்கும் தெய்வ வழிபாடும் உண்டு. பலிகொடுப்பது நாடுமுழுக்க இன்று நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. மாமிச ப்படையல் ஆலயத்தின் கருவரையிலேயே வைக்கப்பட்டிருந்ததை அஸ்ஸாமில் உள்ள ஸ்ரீ காமக்யா கோயிலில் நேரடியாகக்கண்டேன். எல்லோரையும் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று எப்படி க்கட்டாயப்படுத்தவில்லையோ அப்படியே அதை உண்ணும் படியும் கட்டாயப்படுத்தக்கூடாது முடியாது என்பதே எம் நிலை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று சொன்னாலும் அதைக்கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கவில்லை ஹிந்து மதம். திருவிழா, பண்டிகை விரதம் அனைத்தும் அப்படித்தான்.வழிபாட்டில் வழிபாட்டு முறைகளில் முழு சுதந்திரம் உலகில் ஹிந்துக்களுக்கு மட்டுமே உண்டு. சர்ச்சுக்கு போகாத கிறித்தவர்களை அல்லது பள்ளிவாசல் தொழுகைக்கு செல்லாத இசுலாமியர்களின் நிலையென்ன என்று அவர்களைக் கேடுக்கொள்ளலாம். இப்படி இருக்க ஹிந்துமதம் திணிக்கிறது திணிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்ய கோபம் வரத்தானே செய்யும்.
    தமிழ் புலால் உண்பவர்களும் ஹிந்துக்கள் என்பது மட்டுமல்ல ஹிந்துக்களுக்கு வழிபாட்டில், வழிபடுதெய்வத்தில், வழிபடு முறையில் முழுசுதந்திரம் உள்ளது என்பதே அடியேன் வலியுறுத்துகிறேன்.

  156. //ஒருமுறை குருக்கள் (சிவாச்சாரியார் அல்லர்) என் கோத்திரத்தைக் கேட்டார். நான் கவுண்டின்னிய கோத்திரம் என்றேன். எம்பந்த வல்வினை தீர்க்கும் சம்பந்தரின் கோத்திரமே எம் கோத்திரம். ஆச்சாரியரின் பெயரால் மாணாக்கரின் கோத்திரமமைதல் சமய மரபு. -C.N.Muthukumaraswamy //

    ஆகா, ஒரு பேருண்மையை ரத்தினச் சுருக்கமாகச் சொன்னீர்கள். வாழ்க நீவிர் வாழ்வாங்கு!

    ஹிந்து சமூகத்தைப் பிரித்தே வைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் காரணமாக எதையெல்லாம் ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள்! மூன்று வர்ணங்களுக்குத் தான் கோத்திரம் உள்ளது, நான்காவது வர்ணத்திற்கு அது இல்லாததால அவர்களை நாங்கள் கொண்டுபோய் விடுகிறோம் என எவ்வளவு பேராசையுடன் சொல்கிறார்கள்! இவர்களுக்கு வேண்டியதெல்லாம் எப்படியாவது தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கி அரசியல் சூதாடிகளிடம் பேரம் பேசும் வாய்ப்புதானேயன்றி, ஆன்மிகத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஹிந்துக்கள் கும்பிடும் தெய்வங்களை யெல்லாம் பேய் பிசாசு சாத்தான் என்று வர்ணித்துத்தானே இவர்கள் மத மாற்றம் செய்வதே! எப்படியாவது உள்ளே நுழைய வேண்டியது, எதையாவது சொல்லி திசையைத் திருப்பிக் கொண்டு போக வேண்டியது! இல்லாவிட்டால் காலந்தோறும் நரசிம்மத்துக்கும் குலம் கோத்திரம் பேசவும் , மாட்டிறைச்சி உண்பது எமது பிறப்புரிமை என முழங்குவதற்கும் என்ன சம்பந்தம்? இந்த திசை திருப்பல்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நானும் வாளா விருந்தேன். ஆனால் கட்டுரையின் அடிப்படையையே மறக்கடித்துத் தங்கள் பிரசாரத்தைத் தொடரும் அளவுக்கு அல்லவா இந்த முன்னேற்பாடு இருக்கிறது? கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத மறுமொழிகளை இடவேண்டாம், அத்தகைய மறுமொழிகள் இடம் பெற மாட்டா என்று சொல்ல தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவை எது தடுக்கிறது? தாராளமயக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு வரம்பு, நியாயம் எல்லாம் வேண்டாமா?
    திசை திருப்பும் மறுமொழிகளுக்கு பதில் அளித்து அதை ஊக்குவிக்கலாகாது என்று பேசாமல் இருந்தால் இவர்களிடம் பதில் இல்லை அதனால்தான் மெளனமாகிவிட்டார்கள் என்கிற அல்ப சந்தோஷம் வேறு! ஆசிரியர் குழு இதில் இன்னும் சகிப்புத்தன்மையைத் தொடர்ந்தால் எழுதப் படும் கட்டுரைகளுக்கு அவசியமான கருத்துப் பரிமாற்றங்களுக்கே இடம் இல்லாது போய்விடும்! அவ்வாறு கருத்துப் பகிர்வு செய்துகொள்ள விரும்புவோர் சலிப்புற்று மறுமொழி இடுவதையே கைவிட நேரிடலாம்!

    இக்கட்டுரை ஓர் ஆழ்ந்த தத்துவ ஆய்வுக்கு வாய்ப்பளிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நரசிம்ம அவதாரம் புறத்தே தெரியும் புராணக் கதை மட்டுமல்ல. நரசிம்ம தத்துவம் சொல்லும் செய்தி என்ன என்பது விரிவாகப் பேச வேண்டிய விஷயம். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் வெறும் வாதப் பிரதிவாத மேடையாகப் போயிற்று இந்த இடம்! இதனால் என்ன லாபம்?
    போகிற போக்கைப் பார்த்தால் போலி சாது செல்லப்பா புருஷ ஸூக்தத்துக்குப் பொழிப்புரை சொல்கிற மாதிரி அல்லவா இந்த இடம் ஆகிவிடும் போல் இருக்கிறது!
    -மலர்மன்னன்

  157. முனைவர் கோ .ந .முத்துக்குமாரசுவாமி அவர்கள் இங்கே பதிவிட்டதைப் பார்த்த போது, எனக்கும் இவ்விஷயமாக சிலவற்றைச் சொல்ல வேண்டும் போலத் தோன்றுகின்றது… (கோத்திர விஷயமல்ல.. புலாலுண்ணல் தொடர்பானது..)

    இங்கே அவர்கள் அதிபத்தநாயனாரை மேற்கோள் காட்டியிருந்தார்கள்.. அதிபத்தர் பரதவகுலத்தைச் சேர்ந்தவர்.. இந்த குலத்தவர்கள் பற்றித் தான் சிறிது வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.. தனிக்கட்டுரையே எழுதலாம் என்று நினைத்தேன்.. சரியான தரவுகள் கிடைக்காததால் மறுமொழியாகவே இடுகின்றேன்.

    உண்மையில், மீனவ(பரதவ) சமுதாயம் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகப்பரந்திருக்கிறது.. என்றாலும், இவர்களுக்கு ஹிந்து மத உயர்பீடங்;களிலோ, பெரியவர்களிடமோ அங்கீகாரம் இருக்கிறதா..? என்பது மிகவும் கேள்விக்குரியதே…

    புலாலுண்பவர்கள், அதிலும் புலாலாக கருதப்படும் மீனைப்பிடிக்கிறவர்கள் என்ற அளவில் இந்து மத வழிபாட்டிடங்களில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. (தமிழகத்தைப் பொறுத்த வரையில், எனக்குச் சரியாகத் தெரியா விடினும் இலங்கை விஷயத்தில் தெளிவாகச் சொல்ல முடியும்)

    இப்போது தொடங்கியிருக்கிற பிரபல பாடகி சின்மயி அவர்கள் தொடர்பான விவாதத்தின் ஆரம்பமாகவும் இந்த பிரச்சினையே இருந்தது என்றும் நம்பப்படுகிறது..

    எப்படியோ, மத விஷயத்தில், இந்த மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டதால் கரையோரப்பகுதியான இவர்கள் வாழ்விடங்கள் அன்னிய மதங்களில் பிடிக்குள் உள்வாங்கப்பட்டன… கிறிஸ்துவ, முகமதிய மதங்கள் அதிகளவில் இப்பிரதேசத்தையே முழுமையாக தன்வயப்படுத்தியிருக்கிறது..

    இதன் தாக்கத்தை பரந்து விரிந்ததும், ஒரு பகுதியே கரையோரமாயிருக்கிறதுமான தமிழகத்தில் காண முடியாதவிடத்தும், சுற்றிலும் கடலால் சூழப்பட்ட இலங்கையின் ஹிந்து மத நிலமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதைக் காணலாம்..
    இதனால் திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், போன்ற புகழ்பெற்ற ஈஸ்வராலயங்கள் அமைந்துள்ள இடங்கள் கூட (அவை கடற் கரையோரமாக இருப்பதால்) கிறிஸ்துவ மயமாகி விட்டது..

    ஆனால், விஷ்ணுவாலயங்களான பொன்னாலை, வல்லிபுரம் பகுதியில் மீனவமக்கள் மிகவும் பக்தியோடு வழிபாடாற்றுகிறார்கள்.. அவர்கள் தங்களுக்காக, தங்களைக் காப்பாற்ற பெருமாள் கடலில் பள்ளி கொள்வதாக நம்புவதும், பகவான் கடல் வண்ணனாய் தங்களுடையவராய் இருப்பதாக கருதுவதும், அது சார் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதுமே அதற்கான காரணமாகும்..

    ஆக, இந்த விஷயத்தில் இனியாவது நம் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.. ஆனால், இந்த தொழில் ஒரு பாவச்செயல் என்ற முடிவில் அவர்கள் இருக்கும் வரையில் இது சாத்தியமோ..,? அறியேன்..

    எனவே, இது தொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஜடாயு முதலிய பெரியவர்கள், எழுத்தாளர்களிடம் எதிர்பார்க்கின்றேன்..

    ஏதும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்..

    அனையதாகிய அந்நுளைப்பாடியில் அமர்ந்து
    மனைவளம்பொலி நுளையர் தம்குலத்தினில் வந்தார்
    புனை இளம்பிறை முடியவர் அடித் தொண்டு புரியும்
    வினை விளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர்

    ஆங்கவன்பர்தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்
    ஏங்கு தெண்திரைக் கடலிடைப் பலபட இயக்கிப்
    பாங்கு சூழ்வலை வளைத்து மீன்படுத்துமுன் குவிக்கும்
    ஓங்கு பல்குவை உலப்பில உடையராய் உயர்வார்

    முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்தவர் வலை முகந்து
    பட்ட மீன்களில் ஒருதலை மீன்படுந் தோறும்
    “நட்டமாடிய நம்பருக்”கென நளிர் முந்நீர்
    விட்டு வந்தனர் விடாத அன்புடனென்றும் விருப்பால்
    (அதிபத்த நாயனார் புராணச் செய்யுள்கள் 09,10,11)

    நன்றிகளுடன்..

    தி.மயூரகிரி சர்மா
    யாழ்ப்பாணம்

  158. அன்பர் மயூரகிரி சர்மா சொல்வதில் உள்ள உண்மையை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். எனினும், நம் ஸ்ரீ அமிர்தானந்த மயி அம்மா மீனவர் வகுப்பில் பிறந்தவர்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இன்று அவருக்கு ஹிந்து சமூகத்தின் சகல ;பிரிவுகளிலும் அன்பர்கள் உள்ளனர் என்பதோடு, எங்கும் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர் ஹிந்து சமய, சமூக அமைப்புகளால் மிகுந்த மரியாதையுடன் கெளரவிக்கப்படுகிறார். அவரால் அரவணைக்கப்படுவதை அனைத்துத் தரப்பினரும் தமக்குக் கிட்டிய நற்பேறாகக் கருதுகின்றனர். என்னைவிட வயதில் மிகவும் இளையவர். எனினும் நமது கலாசாரத்தில் ஒன்பது வயதுச் சிறுமியையும் அம்மாவாகக் காண்பதே வெகு இயல்பு. ஒருமுறை அவரை தரிசிக்கும் அரிய வாய்ப்புப் பெற்றேன். வா, மகனே என்று அழைத்து, அடிக்கொரு தரம் என் கூடவே இருந்துவிடேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் பிரிய மனம் இன்றித்தான் பிரிந்து வந்தேன். போகும்போதுகூட, போகத்தான் போகிறாயா, சரி என்று சொல்லித்தான் வழி அனுப்பினார். அவரைச் சூழ்ந்திருந்த பெருங் கூட்டத்தில் உயர் சாதியினர் என்று முத்திரை குத்தப்பட்ட பல தரப்பினரோடு பல வெளிநாட்டினரும் இருக்கக் கண்டேன். அம்மாவை ஒருமுறை சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் தலைமை வகிக்கச் செய்து கெளரவித்திருக்கிறர்கள்.
    -மலர்மன்னன்

  159. “புலாலுண்பவர்கள், அதிலும் புலாலாக கருதப்படும் மீனைப்பிடிக்கிறவர்கள் என்ற அளவில் இந்து மத வழிபாட்டிடங்களில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.”

    தற்போதைய தமிழக கோயில்களில் இப்படிப்பட்ட புறக்கணிப்புகள் இல்லை.
    சென்ற காலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்
    நம் சரித்திரம் பல கோணங்கள் கொண்டது. இதே தளத்தில் கிழவன் சேதுபதி பற்றி கட்டுரை உள்ளது
    .இதனால் தான் இப்படி நிலைமை அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடியாது. இது விரித்து வைத்திருக்கும் வலையில் நாமாக வே விழும் வேலை.

    பாடகி சின்மயி விவகாரம் தமிழ் நாட்டின் ஸ்பெஷலான கழக கலாசாரத்தின் முகம்.
    கூடவே பிராமணாள் கபே என்று தன குடும்ப ஹோட்டலுக்கு பெயர் வைத்த மனிதரின் கடையை தாக்கிய செய்தியும் உண்டு.

    தற்போதைய ஆட்சி அரசியல் காரணங்களுக்காக சில தேவையற்ற கூட்டங்களை வளர விட்டு கொண்டுள்ளது. அவ்வபோது அவர்கள் வழக்கமாக நடத்தும் சில நாடகங்களை நடத்துகிறார்கள்.

    தமிழ் பேசும் இந்தியர்கள் வேண்டுவது அவர்கள் கடின உழைப்பு செய்ய வாய்ப்பு -நிம்மதியான , பிரிவினை கோஷங்கள் அற்ற முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் தலைவர்கள், நாத்திகம் பேசும் நரிகள் இல்லாத ,ஆத்திகர்களால் சரியாக நிர்வாகம் செய்யப்படும் பாரம்பரிய கோயில்களில் வழிபாட்டு உரிமை.

    கடந்த ஆயிரம் வருடங்கள் நம் முன்னோர்கள் சந்தித்த அவலங்கள் நிறைய. நம் என்று நான் சொல்லும் பொது எல்லா ஹிந்துக்களையும் சொல்கிறேன்.
    இந்த இணைப்பில் ஆங்கிலத்தில் திரு அரவிந்தன் கொற்கை என்ற திரு க்ரூஸ் எழுதிய நூலுக்கு எழுதிய புத்தக விமர்சனம் உள்ளது.

    https://centreright.in/2012/10/a-mother-searching-her-lost-children-2/#.UJH7hobjvNs

    மீனவர்கள் வழிப்பட்ட மாரி அம்மன் மேரி ஆக்கப்பட கதை . இன்றைக்கும் கடலுக்குள் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்தால் கரைக்கு வந்தால் மேரி சர்ச்சுக்கு தான் அவர்கள் போக வேண்டும் என்ற நிலைமை . அதற்கு காரணம் ஹிந்து பெரியவர்கள் அல்ல. அந்த எளியவர்களின் வழிப்பாட்டு உரிமையை மறுக்கும் அவர்கள் தற்போது சார்ந்துள்ள மத தலைவர்கள். கட்டுரை இதை தெளிவாக விளக்குகிறது.

    நண்பர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டுகிறேன்.

    கட்டுரைக்கு சம்பந்தம் இல்ல விடினும் அடியேனுக்கு தெரிந்த கோணத்தை பகிரவே இதை எழுத வேண்டியதை உள்ளது.

    கட்டுரை ஆசிரியர் திரு ஜடாயுவிற்கும் , சம்வாதம் நிகழ்த்தும் பெரியவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நிஜமாக தூங்கி கொண்டிருந்தவர்கள் இவர்கள் ஊதிய சங்கில் என்றோ விழித்து விட்டோம்.

    நரசிங்கம் மறுமொழிகள் போகும் திசையை பார்த்து மெல்ல சிரிப்பது போல் இருக்கிறது!

  160. திரு கந்தர்வன் அவர்கள் பழங்குடி தெய்வமாக இருந்து என்ற வரிகளை
    பற்றி ஆரம்பித்த விவாதம் இது.
    இதில் நரசிம்மருக்கு என்ன பிரசாதம்,எந்த நூற்றாண்டில் இருந்து கோவில்கள் அவருக்கு உருவாகியது,மொட்டை அடித்தல் இருந்ததா ,கறி சாப்பிடும் மக்கள் எப்போதிருந்து கறியை படைப்பதை நிறுத்தினார்கள்.இல்லை ஆரம்பத்திலிருந்தே கறி படைக்கப்பட்டது இல்லையா என்ற கேள்விகளில் தவறு எங்கே வருகிறது.
    ஒருவரை பற்றி ஒன்றும் தெரியாமல் வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டுவது,இகழ்வது பெரியவர்களுக்கு அழகா .

  161. அதிபத்த நாயனாரைப்பற்றிய விடயங்கள் பலரது கண்களைத்திறக்ககுமென நம்புகிறேன்.

    பகவத் கீதையில் ஒரு புகழ்பெற்ற வாசகம் அனைவருக்கும் தெரிந்தவொன்று: தன்னை ஒரு சில மலராலும் வழிபடலாம் என்று பகவான் சொல்வது.

    இதன் திரண்ட பொருள்: அவரவர் தங்கள் தங்கள் திறனுக்குத்தக்கவாறு வழிபடலாம். எக்கட்டாயமுமில்லை. ஒரு பிராமணன் தனக்குத் தெரிந்த அனைத்து பனுவலகளின்படி வழிபட, ஒன்றுமே தெரியாத ஒரு மீனவன் தான் பிடித்த மீனையே படையலாக வைத்தும் வழிபடலாம் என்பதே கீதாச்சாரம். இதையே சேக்கிழாரும் தமிழருக்குச் சொல்கிறார் தம் பெருங்காப்பியத்தில்.

    புலாலுண்ணாமை ஆன்மீகத்தை வளர்க்க ஹேதுவாகும் என்று ஒரு கருத்து இங்கே படிக்கிறோம். இது பற்றி:

    மனித வாழ்க்கையில் அனைவரும் ஒரே திறன் கொண்டு பிறப்பதில்லை. அறிவுத்திறன்; உடல்திறன் என்பது போல ஆன்மிக அடைவுக்கும் ஒரு திறன் தேவை. அத்திறன் மனிதருக்கு மனிதர் மாறுபடலாம் இயற்கையிலேயே. செயறகையிலேயேயும் மாறுபடலாம். அஃதாவது அவர் பிறந்த இடம், வளர்ந்த சூழல், வாழுமிடம் மற்றும் மக்கள். இவைகொண்டு. அவ்வாழ்க்கைக்கட்டாயங்களினால் அவனுக்கு ஆன்மிக வளர்ச்சிக்கு ஹேதுவாகும் விடயங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

    புலாலுண்ணும் கட்டாயம் ஒரு மீனவனுக்கு. காலை சென்று இரவில் திரும்பும் தொழிலாளி ஆன்மிகத்தை எப்போதும் கண்டறிய முடியாது. அவனுக்குச் சொல்லப்பட வேண்டியது ”உன் வேலை, அதனால் உன்னைச்சார்ந்தவரும், உலகத்தாரும் அதனால் பெறும் நன்மை இவையே உன் ஆன்மிகம்” எனச்சொல்லப்படவேண்டும். மாறாக, அவன் தலையில் பொதுவாக ஆன்மிகவாதிகளுக்குச் சேர்க்கப்படவேண்டியவைகளைக்கட்டல் தவறு. அதிலொன்றுதான் புலாலுண்ணாமை. ”நீ மீனைச்சாப்பிடாதிருந்தாலே உனக்கு ஆன்மிக உயர்வு அடையலாமம்”மென்பது தவறு.

    எல்லாரும் ஞானிகளாக முடியாது. எல்லாரும் ஆன்மிகத்தை ஒரே பாதையில் சென்று கடைபிடிக்கவியலாது. எல்லாருக்கும் ஒரே பாதை என்பது பிறமதக்கொள்கை. அதை இந்துமதத்தில் திணித்தால், மதத்துக்கு எதிராக வேலை செய்யும் என்பது ஒரு எச்சரிக்கை.

    சொல்லும் செயலும் தம்மை விட பல சமூகக்காரணிகளால் கீநிலையில் வாழ்வோரை மனம்வருந்தச் செய்யக்கூடாதென்பதே திரு மயூரகிரி சர்மாவின் மடலில் திரண்ட கருத்து. அவர் இன்னொரு கருத்தையும் தெரிவிக்கிறார். சைவத்தில்தான் தாம் இம்மக்களைக் கவனிக்கா நிலையைக்காண்பதாகவும், வைணவத்தில் இல்லையென்பதும்.

    இஃது உண்மை. இங்கேயே காணலாம். புலாலுண்ணல் பிறப்புரிமையென்று எவருமே இங்கெழுதவில்லை. புலாலுண்ணல் வாழுமிடத்தால், வாழும்வகையால் தவிர்க்க முடியாதென்றுதான் சொன்னேன். வாழ்க்கை பலருக்கு தங்கள் தங்கள் விருப்பப்படி அமைவதில்லை. உங்களைக்கேட்டு உம்பெற்றொர் உம்மை பெற்றெடுக்கவில்லை; வளர்க்கவில்லை. நீர் வேறு; அவர் வேறு; ஆனால் இருவருக்கும் இந்துமதம் இருக்க வேண்டும்

    இவ்வுண்மையை அறிந்து இந்து மதத்தை புலாலுண்ணும் மக்களிடையே பரப்பிடுக. அம்மககளை அணைக்கும் முயற்சியையும் அப்படிச்செய்பவரையும் எள்ளாதீர். சுடுசொற்களால் திட்டாதீர்.

    – தமிழ் / காவ்யா / ஜோ அமலன் ராயன் ஃபெர்ணாண்டோ / திருவாழ் மார்பன்

  162. // இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டே இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்… //

    நமது தளத்தில் இன்றூ வந்திருக்கும் எழுமின் விழிமின் – 26ம் பகுதியில் உள்ள வாசகங்கள் இவை. இந்துமதத்தை சித்தரிக்கும் அந்த ஒரு வாக்கியத்திலும் கூட “அன்பிற்கினிய கிருஷ்ணன்” முதல் “அன்னை காளியின் மிருகபலி” வரை அனைத்தையும் சேர்த்து விவேகானந்தர் பேசுவதைக் கவனியுங்கள் நண்பர்களே. இதெல்லாம் சேர்ந்தது தானே இந்து மதம்!

    இந்த விவாதத்தில் பேசப்படும் விஷயங்கள் குறீத்தும் ஒரு தீர்க்கமான பார்வையை விவேகானந்தரின் அறைகூவல்கள் முன்வைக்கிறது. உண்மையில் நாம் படித்து சிந்திக்க வேண்டியது, அந்தப் பதிவில் விவேகானந்தர் கூறுவதைத் தான் – https://tamilhindu.com/2012/11/arise-awake-26/

  163. தமிழ் ஹிந்து தளத்தில் மாம்ச உணவு பற்றி பல வ்யாசங்கள் வந்துள்ளன. பன்றி மாம்சத்தைப் பற்றியும் விரிவாக ஒரு வ்யாசம் பதிப்பிக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. அதே போல அசைவம் என்ற போதிலும் வெட்டுமுறைகளான ஜட்கா (ஒரே போட்டில் வெட்டுவது) ஹலால் (சிறிது வெட்டிவிட்டு விலங்கை துடிதுடித்து சாக விடுவது) இரண்டு விஷயங்கள் பற்றியும் விவாதங்கள் நமது தளத்தில் நடந்துள்ளன. பாரபக்ஷமின்றி தள நிர்வாகத்தினர் இரு கருத்துக்களையும் பதிந்துள்ளமையும் நினைவுக்கு வருகிறது.

    சைவ உணவு அசைவ உணவு (உத்தர பாரதத்தில் வைஷ்ணோ போஜன் மாம்ச போஜன்) ஹிந்துஸ்தானம் முழுதும் பரவலாக இருந்து வந்துள்ளது. இருக்கப்போகிறது. தனித்தனி சமய ஒழுகுமுறைகள் அவற்றின் உட்பிரிவுகளில் மாறுபட்ட விவிதமான ஒழுகுமுறைகள் இவைகளில் உணவு முறை எப்படி இருப்பினும் ஒருவர் ஹிந்துவா என்ற கேழ்விக்கு உணவுமுறை என்பது என்றும் அளவுகோலாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. வைதிக சமயத்திலும் கூட அசைவ உணவு என்பது ஜாதி சார்ந்த விஷயமாய் இருந்ததில்லை. பாரதம் முழுக்கப்பார்க்கையில் வைதிகத்தின் உட்பிரிவுகள் ப்ரகாரம் அந்தந்த சமய உட்பிரிவு ஒழுகுமுறை சார்ந்து அசைவ உணவு விலக்குதல் அசைவ உணவு ஏற்பது என்பது பொதுவில் காணும் நிலை.

    எந்த சமயத்தை சார்ந்திருந்தாலும் தனிமனித விருப்பு வெறுப்புகளும் உணவுமுறையில் முக்ய பங்கு வகிப்பதையும் ஒதுக்க இயலாது. என்னுடைய முஸல்மாணிய நண்பர்களிலும் கூட சைவர்களும் உண்டு. எது அசைவம் எது சைவம் என்பதிலிருந்து இடம், சமய சாஸ்த்ரங்கள், தனிமனிதரின் மனப்பாங்கு இவைகள் உணவு முறைகளை ஊக்குவிக்கும் காரணிகள்.

    போஷாக்கு என்பது சைவம் அசைவம் என்று உணவு முறை சார்ந்தது அல்ல.

    க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு வங்காளத்தில் அவதரித்து வைஷ்ணவ சமயத்தை பரப்பிய பின் மாம்ச உணவு உண்ட பல வங்காளிகள் முற்றும் சைவ உணவு உண்பவர்கள் ஆனார்கள். ஆயினும் வங்காளத்தில் வெகுவாகக் காணப்படும் சாக்தர்கள் அசைவ உணவுப்ரியர்களே. ஒருக்கால் வாமாசார சாக்த வழிபாட்டுமுறை இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

    ஜீவ காருண்யம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சைவ உணவு உட்கொள்வதை ஊக்குவித்தல் நன்று தான்.

    ஆனால் அசைவ உணவு என்பது ஆன்மிகப்பாதையில் முன்னேற்றத்திற்குத் தடை என்பது மிகவும் தவறான கருத்து. வைதிக சமயத்தில் யாகப்ரசாதமாய் ஏற்கப்படும் அசைவ உணவிலிருந்து தாந்த்ரிகமார்க்கத்தில் (காளாமுக சைவம் மற்றும் சாக்தம்) மாம்ஸ மத்ஸ்ய ஆஹாராதிகளை வழிபாட்டுக்கேற்ப உண்பதிலும் ஆன்மீக முன்னேற்றம் தான் காணப்படுகிறதே அன்றி தடையேதுமில்லை.

    கோத்ரம், Sri Poovannan, please pardon me to type out in English for better articulation.

    It seems you base many of your conclusions (what are they? it is not clear!!!!) on a premise that gothras are common among brahmins throughout the length and breadth of Hindusthan.

    Your basic premise holds that this is a unique feature among brahmins. I gave you a few examples of athri, gargya, goyal gothras which are cross connected among many communities. On further chat with friends there are innumerable gothras like, kashyapa, gauthama, vishvamitra gothras which are commonly found among other communities.

    you said athri gothra of brahmin is different from that of Jat. How and why? In south one would say kashyapa and in North they say Kashyap. You may say these are different. Similar with respect to Gautham. As I already made it clear, what I share is on the basis of my interactions with my north Hindusthani friends.

    What I gather from your write ups is that on the simple co incidence of the fact that througout Hindusthan one find commonality in gothras among brahmins, you jump to so many conclusions which I hope you authoritatively assert as sort of researched facts. Well you might have researched or depended upon secondary sources. What I share is on the basis of my common knowledge, you may say laymen’s point of view, but prima facie there are flaws in your basic premises and the conclusions.

    First, your basic premise seems to be flawed. You put forth a point that gothras are among brahmins and they are unique to them. It is flawed. I have given some examples. kashyapa of brahmin and kashyap of kayasth how is it different? athri of brahmin and atri of Jat? gargya of brahmin and garg of bania? goyal of baniya and goyal of jat? how different they are? simply by saying that they are different takes us nowhere unless and untile you substantiate them with facts from PRIMARY SOURCES. Do not try to just quote a few urls which says so and so said so and so and endlessly the chain goes on.

    Second, from the basic premise of commonality gothras to the end point of deriving conclusions, there can not be gap in between. You have to establish as to how the commonality of gothras lead one to finally conclude that one can reach certain conclusions. But, you straight away jump from your basically flawed premises to your final conclusions. That can be a wild guess, that may be a hypothesis on your part for further study, but to give it a colour of established fact is erroneous.

    மிக முக்யமான கருத்து. பேசு பொருளிலிருந்து விலகுவது. கோத்ரம் பற்றி பேசுவதோ அல்லது சைவ அசைவ உணவு பற்றி பேசுவதோ ஹிந்துக்களுக்கு மிகவும் அவசியமான விஷயம் தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அன்பர் தமிழ் (எ) திருவாழ்மார்பன் (எ) ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களும் அன்பர் பூவண்ணன் அவர்களும் நரசிம்மர் பற்றிய வ்யாசமாகட்டும் அல்லது நாரத்தங்காய் ஊறுகாய் பற்றிய வ்யாசம் ஆகட்டும் அங்கே மாட்டுக்கறி பற்றியும் கோத்ரம் பற்றியும் பேசுவது சலிப்பையே தருகிறது. சொல்ல வேண்டாம் என இருந்தேன். ஆனால் digression தொடர்வதால் சொல்லி விடுகிறேன். திண்ணை தளத்தில் ஸ்ரீமான் லெட்சுமணன் அவர்கள் மைசூர் போண்டா பற்றிய ஒரு வ்யாசத்தில் கருத்துப்பதிபவர்கள் எப்படி ஜபர்தஸ்தியாக ஜாதியை நுழைக்கின்றனர் என்பதை நகைச்சுவையுடன் தனியொரு வ்யாசமாக விளக்கியுள்ளார். நமது தள வாசகர்கள் இதை அவசியம் வாசிக்க வேணும்.

    திருமாலிருஞ்சோலை அழகனைப் பற்றிய வ்யாசத்தில் அழகனை விட்டு விட்டு அவரவர்களும் சைவம் வைஷ்ணவம் என்று காட்டமாக விவாதித்து அழகரை வைகையாற்றில் ஓசைப்படாது இறக்கி விட்ட அழகையும் அவலத்தையும் நான் மறக்கவில்லை. அந்த வ்யாசத்திலும் பேசுபொருளிலிருந்து விலகுவதைப் பற்றி வருத்தம் தெரிவித்து உள்ளேன்.

    ஸ்ரீமான் மலர்மன்னன் மஹாசயர் அவர்கள் தள நிர்வாகிகள் இது சம்பந்தமாய் கடுமையான முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    என்னைப்பொருத்தவரை வாசகர்களாகிய நாம் இது சம்பந்தமாய் தீர்மானமாக பேசுபொருளிலிருந்து விலகாமல் இருக்க ப்ரயாசிக்கலாம் என படுகிறது. பின்னும் தமிழ் ஹிந்து தள விவாதங்களில் அது நரசிம்மராக இருக்கட்டும் நாரத்தங்காய் ஊறுகாயாக இருக்கட்டும் இட்டலியாக இருக்கட்டும் அல்லது இந்த்ரனாக இருக்கட்டும் பேசு விஷயம் கோத்ரம் மற்றும் மாட்டுக்கறியாக இழுத்து செல்லப்படும் என்ற நிலை இருந்தால் தள நிர்வாகிகள் கண்டிப்பாக தலையிட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதே கருத்து தான் ஒரு நபர் பல பெயர் என்ற unethical விஷயத்திலும்.

    இது எமது கருத்துக்களே. விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் முறையாக ஆழமாக சுவையாக விவாதிக்கப்படாது போகின்றதே என்ற ஆதங்கத்தில் இவை சொல்லப்பட்டன. யாரையும் புண்படுத்த அல்ல. பின்னும் யாரேனும் புண்பட்டிருந்தால் எனது க்ஷமாயாசனம்.

  164. நண்பர் தமிழ், நீங்கள் சும்மா அடித்து விடுகிறீர்கள். கோத்திரம் என்று ஆரம்பித்ததும் நீங்கள். முதலில் நடுகல் வழிபாடு என்றீர்கள். அப்புறம் ஆழ்வார் என்றீர்கள். அப்புறம் இதெல்லாம் சாதாரண மக்களுக்கு தெரியாது என்று சொல்கிறீர்கள். அடித்து விடுங்கள்.

    திரு ஜடாயு – நாம் மற்ற விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். இந்தக் கட்டுரையோடு ஒத்துப் போகிறேன். நல்ல ஒரு கட்டுரைக்கு நன்றி.

  165. மூத்த எழுத்தாளர்களால் பழங்குடி என்ற பதப்ரயோகம் நமது தளத்தில் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வ்யாசத்திலும் வ்யாசத்தின் துவக்கத்திலேயே இப்பதப்ரயோகம் உள்ளது கவனிக்கப்பட்டு ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களால் விசாரிக்கப்பட்டது.

    \\\\பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இத்தெய்வ வடிவம் மிகத் தொன்மையான ஒன்று என்பதில் ஐயமில்லை.\\\

    சில விளக்கங்களும் அளிக்கப்பட்டன. வேறு ஒரு கோணத்திலிருந்து இப்பதப்ரயோகத்தை நான் புரிந்து கொள்ள விழைகிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் விளக்கவும்.

    ஹிந்துத்வ இயக்க பரிபாஷைகளில் பழங்குடி என்ற பதப்ரயோகத்தை நான் கண்டதில்லை. ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், க்றைஸ்தவர்கள் இவர்கள் அனைவரையும் ஹிந்துஸ்தானியராகத்தான் ஹிந்துத்வ இயக்கங்கள் கருதுகின்றன.

    ஆதிவாசி, பழங்குடி போன்ற பதப்ரயோகங்கள் இடதுசாரி சரித்ர ஆய்வாளர்களால் உள்நோக்குடன் ஜபர்தஸ்தியாகச் சொருகப்பட்ட பதப்ரயோகம் என்பது என் புரிதல். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது போன்ற வ்யாபார யுக்தி போன்று பழங்குடி என்ற திணிக்கப்பட்ட சொல்லுடன் இலவசமாய் இணையும் இன்னொரு பதம் வந்தேறி.

    இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய மதங்கள். மதக் கோட்பாடுகள் எப்படியிருப்பினும் கலாசாரத்தால் இங்கிருக்கும் முஸல்மான் களும் க்றைஸ்தவர்களும் ஹிந்துக்கள் தான் என்பது ஹிந்துத்வ கோட்பாடு. இதை நீர்த்துப்போகச் செய்வதற்காக த்ராவிடர்கள் என்பவர்கள் இத்தேசத்து மக்கள் எனவும் ஆரியர்கள் என்பவர்கள் இங்கு வந்தேறியவர்கள் என்றும் குசும்பு சரித்ரம் புனைந்தவர்கள் இடதுசாரிகள். இப்பொய்யின் அஸ்திவாரம் ஹிந்துத்வ இயக்க எழுத்தாளர்களின் ஆய்வுகளால் அசைக்கப்பட்டமையும் அவர்கள் விஷயத்தை புத்திபூர்வமாக அணுகாது அச்சுறுத்தல் மற்றும் பினாத்தல் போன்ற ஹாஸ்ய யுக்திகளால் அணுகியதையும் தளத்து வாசகர்கள் கவனித்திருக்க வேண்டும்.

    மலைப்ரதேசத்து மக்கள் காட்டில் வாழும் மக்கள் இவர்களை ஹிந்துத்வ இயக்கங்களில் பஹாடி (பர்வதவாசி) வனவாசி என்றே குறிப்பிடுவதை முக்யமாக நினைவு கூர்கிறேன். வனவாசி கல்யாண் ஆச்ரம் – tribals – என்று அறியப்படும் ஹிந்து சஹோதரர்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக ஹிந்துத்வ இயக்கங்களால் நடத்தப்பெறும் இயக்கம்.

    பழங்குடி என்ற சொல்லை தொடர்ந்து மூத்த எழுத்தாளர்கள் பயன்படுத்தி வருவதால் தயவு செய்து ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அல்லது இருந்த பழங்குடிகள் யார். மேலும் அதன் இலவச இணைப்பு சுட்டும் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய சமூஹத்தினர் என ஹிந்துத்வ இயக்கங்கள் யாரைச் சொல்லும் என அறிய விழைகிறேன்.

  166. \\\\Rama
    // ” There is no animal sacrifice in Vedas”

    they are in poorva mimamsa is it\\\\

    And it is in vogue.

    \\\ஆசாரவாதம் போன்ற பொதுவான சொற்களுக்கே இப்படியெல்லாம் நீங்கள் ஆட்சேபம் சொன்னால் பிறகு எங்கு போவது?\\\ மேட்டிமைவாதம் குறித்து இந்துத்துவம் சார்ந்து எழுதும் எழுத்தாளன் அதற்கான புதிய கலைச்சொல்லையும் சொல்லாடலையும் (discourse) சேர்த்தே உருவாக்க வேண்டியுள்ளது. \\துரதிர்ஷ்டவசமாக தமிழில் இந்துத்துவ இயக்கம் இதுவரை எந்த நீடித்த, தொடர்ச்சியான சிந்தனாபூர்வ படைப்புகளையும் சொல்லாடலையும் உருவாக்கவே இல்லை. கடந்த சில வருடங்களாக, அநீயையும், தமிழ்ஹிந்துவையும் முன்னோடியாகக் கொண்டு தான் லேசாக ஒரு நவீன இந்துத்துவ அறிவியக்கம் துளிர்விடவே ஆரம்பித்திருக்கிறது. \\\\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜடாயு, என்னுடைய தெளிவிற்காகத் தான் இதை எழுதுகிறேன். மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்று சொல்வார்கள். புதிய சொல்லாடல்கள் அல்லது பழைய சொல்லாடல்கள் இவற்றை முதிய எழுத்தாளர்கள் கையாளும் போது ஒரு புறம் எதிர் சிந்தனையாளர்களும் மறுபுறம் ஹிந்துக்களும் அதை அவரவர் பாங்கில் நோக்குவர். நான் வாதத்தை வீணாக வளர்த்துவதாக எண்ண வேண்டாம்.

    என்னுடைய ஆதங்கமெல்லாம் புதிதாக புழக்கத்தில் வரும் சொல்லாடல்கள் நமது ஹைந்தவ மதத்தின் ஒரு அங்கமாகிய வைதிக சமய கலாசார தொடர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கத் தக்கவையா என்பதே?

    ப்ராம்மணர்களில் சிலர் தவறு செய்கின்றனர் என்றால் அவர்கள் செய்யும் தவறை நிச்சயம் யார் வேண்டுமானால் கண்டிக்க வேண்டும் தான். கண்டிக்கப்பட வேண்டியது தவறுகள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் தவறிழைக்கும் ப்ராம்மணர்கள். ஆனால் த்ராவிட கழகங்கள் இதற்கு நேர் எதிர் நிலையை எடுத்திருந்தனர். நாங்கள் ப்ராம்மணர்களுக்கு எதிரி இல்லை ஆனால் பார்ப்பனீயத்திற்கு எதிரி.

    பார்ப்பனீயம் என்று சாஸ்த்ரங்கள் (உடனே கலியுகத்திற்கு என்று விதிதமாகாத மனுதர்ம சாஸ்த்ரம் பற்றி இறங்காமல் இருக்கலாம்) முதல் திருவள்ளுவர் வரை சொல்வது ஒன்று. இவர்கள் வைத்த வ்யாக்யானம் முற்றிலும் வேஊ. வடக்கே எல்லா ஜாதியினரும் ஆண் பெண் என்று லிங்க வித்யாசம் கூட இல்லாது ஓதுதல் ஓதுவித்தல் இவற்றில் முன்னே முன்னே சென்று கொண்டிருக்கையில் தமிழகத்தில் வேதமாகட்டும் திருமுறையாகட்டும் பௌரோஹித்யமாகட்டும் ஜாதிதாண்டி பளிச்சிட்டிருக்கிறதா சொல்லுங்கள்? ஏன்? பார்ப்பனீயம் என்ற வார்த்தையை அசிங்கப்படுத்தியதில் சில ப்ராம்மணர்கள் செய்த அக்ரமங்களை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக வைதிக கலாசாரமான ஓதல், ஓதுவித்தல், பௌரோஹித்யம் இவை எல்லாம் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளன. புணே மற்றும் காசியில் பெண் புரோஹிதர்கள் இன்று மிகவும் உத்ஸாஹத்துடன் கார்யத்தில் உள்ளனர். ஹரியாணா, பஞ்சாபில் ஆர்ய சமாஜிகளால் தயார் செய்யப்பட்ட அனைத்து ஜாதியினரும் பௌரோஹித்யத்தில் உள்ளனர். தமிழகத்தில் எப்படி?தக்ஷிண பாரதத்தில் எப்படி?

    ஆசாரம், பௌரோஹித்யம் இவை வைதிக சமயத்தின் முக்யமான அங்கங்கள். தவறுகளை கண்டிப்பாக சுட்ட வேண்டும். May be in better words. I can surely understand that my respected senior writers take utmost care. I just hope for, may be, still better care.

    புனிதமான வார்த்தைகளை இழிவு படுத்துவதன் மூலம் வெறும் வார்த்தைகள் இழிவு படுத்தப்படுவதில்லை. மாறாக அந்த வார்த்தைகள் மூலம் பொதுவில் புரிந்து கொள்ளப்பட்ட கலாசாரக் கூறுகளும் சேர்ந்தே இழிவு படுத்தப்படுகின்றன.

    முதுமையை நோக்கி பயணத்தில் இருக்கும் எனக்கு வைதிக ஆசாரங்களும் அதன் முக்யமான அங்கமாகிய பௌரோஹித்யமும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பதில் anxiety உண்டு. சர்வ ஸ்ரீமான் கள்ன வீர ராகவ ஐயங்கார் ஸ்வாமி, ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி, செம்பை வைத்யநாத ஐயர், ஏசுதாஸ் போன்ற குரு சிஷ்யர்கள் நமது சிஷ்டாசாரம் எப்படி பகிரப்பட வேண்டும் என்பதில் எனது ஆதர்சங்கள். நான் எழுதியதில் தவறேதும் இருந்தால் தாங்களோ ஸ்ரீமான் அ.நீ அவர்களோ என்னை க்ஷமிக்கவும்.

    இதே தெளிவின்மை, பழங்குடி என்ற வார்த்தை ப்ரயோகம். நரசிங்கம் வ்யாசத்தில் எழுதியிருந்தேன். விவாதம் முடிகையில் நீரிலிட்ட உப்பாகி விட்டது. கீழே அதுவும்.

    மூத்த எழுத்தாளர்களால் பழங்குடி என்ற பதப்ரயோகம் நமது தளத்தில் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

    \\\\பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இத்தெய்வ வடிவம் மிகத் தொன்மையான ஒன்று என்பதில் ஐயமில்லை.\\\

    சில விளக்கங்களும் அளிக்கப்பட்டன. வேறு ஒரு கோணத்திலிருந்து இப்பதப்ரயோகத்தை நான் புரிந்து கொள்ள விழைகிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் விளக்கவும்.

    ஹிந்துத்வ இயக்க பரிபாஷைகளில் பழங்குடி என்ற பதப்ரயோகத்தை நான் கண்டதில்லை. ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், க்றைஸ்தவர்கள் இவர்கள் அனைவரையும் ஹிந்துஸ்தானியராகத்தான் ஹிந்துத்வ இயக்கங்கள் கருதுகின்றன.

    ஆதிவாசி, பழங்குடி போன்ற பதப்ரயோகங்கள் இடதுசாரி சரித்ர ஆய்வாளர்களால் உள்நோக்குடன் ஜபர்தஸ்தியாகச் சொருகப்பட்ட பதப்ரயோகம் என்பது என் புரிதல். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது போன்ற வ்யாபார யுக்தி போன்று பழங்குடி என்ற திணிக்கப்பட்ட சொல்லுடன் இலவசமாய் இணையும் இன்னொரு பதம் வந்தேறி.

    இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய மதங்கள். மதக் கோட்பாடுகள் எப்படியிருப்பினும் கலாசாரத்தால் இங்கிருக்கும் முஸல்மான் களும் க்றைஸ்தவர்களும் ஹிந்துக்கள் தான் என்பது ஹிந்துத்வ கோட்பாடு. இதை நீர்த்துப்போகச் செய்வதற்காக த்ராவிடர்கள் என்பவர்கள் இத்தேசத்து மக்கள் எனவும் ஆரியர்கள் என்பவர்கள் இங்கு வந்தேறியவர்கள் என்றும் குசும்பு சரித்ரம் புனைந்தவர்கள் இடதுசாரிகள். இப்பொய்யின் அஸ்திவாரம் ஹிந்துத்வ இயக்க எழுத்தாளர்களின் ஆய்வுகளால் அசைக்கப்பட்டமையும் எதிர் தளத்தினர் விஷயத்தை புத்திபூர்வமாக அணுகாது அச்சுறுத்தல் மற்றும் சம்பந்தமில்லாத விளக்கங்கள் போன்ற ஹாஸ்ய யுக்திகளால் அணுகியதையும் தளத்து வாசகர்கள் கவனித்திருக்க வேண்டும்.

    மலைப்ரதேசத்து மக்கள் காட்டில் வாழும் மக்கள் இவர்களை ஹிந்துத்வ இயக்கங்களில் பஹாடி (பர்வதவாசி) வனவாசி என்றே குறிப்பிடுவதை முக்யமாக நினைவு கூர்கிறேன். வனவாசி கல்யாண் ஆச்ரம் – tribals – என்று அறியப்படும் ஹிந்து சஹோதரர்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக ஹிந்துத்வ இயக்கங்களால் நடத்தப்பெறும் இயக்கம்.

    பழங்குடி என்ற சொல்லை தொடர்ந்து மூத்த எழுத்தாளர்கள் பயன்படுத்தி வருவதால் தயவு செய்து ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அல்லது இருந்த பழங்குடிகள் யார். மேலும் அதன் இலவச இணைப்பு சுட்டும் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய சமூஹத்தினர் என ஹிந்துத்வ இயக்கங்கள் யாரைச் சொல்லும் என அறிய விழைகிறேன்.

  167. வேறொரு விஷயத்தை இங்கு பதிவிட வந்த பொழுது திரு கிருஷ்ணகுமார் அவர்கள் திரு ஜடாயு அவர்களுக்கு விடையாகக் கீழே எழுதியதை முதல் முறையாகப் படித்தேன். அபாரம். மிக்க நன்றி.

    //
    ஹிந்துத்வ இயக்க பரிபாஷைகளில் பழங்குடி என்ற பதப்ரயோகத்தை நான் கண்டதில்லை. ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், க்றைஸ்தவர்கள் இவர்கள் அனைவரையும் ஹிந்துஸ்தானியராகத்தான் ஹிந்துத்வ இயக்கங்கள் கருதுகின்றன.

    ஆதிவாசி, பழங்குடி போன்ற பதப்ரயோகங்கள் இடதுசாரி சரித்ர ஆய்வாளர்களால் உள்நோக்குடன் ஜபர்தஸ்தியாகச் சொருகப்பட்ட பதப்ரயோகம் என்பது என் புரிதல். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது போன்ற வ்யாபார யுக்தி போன்று பழங்குடி என்ற திணிக்கப்பட்ட சொல்லுடன் இலவசமாய் இணையும் இன்னொரு பதம் வந்தேறி.
    //

    //
    பழங்குடி என்ற சொல்லை தொடர்ந்து மூத்த எழுத்தாளர்கள் பயன்படுத்தி வருவதால் தயவு செய்து ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அல்லது இருந்த பழங்குடிகள் யார். மேலும் அதன் இலவச இணைப்பு சுட்டும் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய சமூஹத்தினர் என ஹிந்துத்வ இயக்கங்கள் யாரைச் சொல்லும் என அறிய விழைகிறேன்.
    //

  168. காளிதாசர், பாணர் முதலான கவிகளால் போற்றப்பட்டவரும், சாணக்யரால் அர்த்த சாஸ்திரத்தில் மேற்கோளாக எடுக்கப்பட்டவரும், மிக பிராசீனருமான பாஸ கவியால் நரசிம்மர் விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்பட்டமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    இக்குறிப்பு பாஸ கவியின் ‘கர்ண பரம்’ எனும் நாடகத்தில் மங்கள சுலோகமாக இடம்பெறுகிறது. இதுவும் வரலாற்றுச் சான்றுகளில் முக்கியமானதெனக் கருத வேண்டும் – பொ. மு. 4-ஆம் நூற்றாண்டிற்கும் முந்தையது இக்குறிப்பு என்பது தெளிவாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *