மானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்

விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலகத் தலைவர் மானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியின் அறிவிப்பு

8 Replies to “மானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்”

  1. அஷோக் சிங்கல்ஜி அருமையான கருத்தை சொல்லியிருக்கீறார். கூடவே இன்னொன்றையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

    மனுநீதி / மனுவின் நெறி போன்ற சொற்கள் நமது பல பண்டைய இலக்கியங்களில் பல இடங்களில் மிக்க மரியாதையுடன் பயன்படுத்தப் படுகின்றன.. கம்பராமாயணத்திலேயே நூற்றுக் கணக்கான இடங்களில் அப்படி வருகிறது. இந்த இடங்களில் அந்த சொற்கள் மனுஸ்மிருதி என்ற காலாவதியான புத்தகத்தையும் அதிலுள்ள கருத்துக்களையும் குறிப்பது அல்ல, மாறாக “மானவ தர்மம்” எனப்படும் மானுட அறத்தைக் குறிப்பவை என்ற விளக்கத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும். (மனு என்ற வேர்ச்சொல்லில் இருந்து தான் மனுஷ்யன் (மனிதன்) என்ற சொல்லே வருகிறது).

    இப்படி ஒரு விளக்கமும் சேர்த்து அளிக்காவிட்டால் அது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும்.. உதாரணாமாக, பண்பாடுள்ள சமுகத்தில் மனுநீதிக்கு இடம் இல்லை என்றால், மனுநீதியைப் போற்றி புகழ்ந்து கூறூம் ராமாயணத்துக்கு இடம் உண்டா? மகாபாரதத்துக்கு இடம் உண்டா? ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடம் உண்டா? மனுநீதிச் சோழன் கதையிலிருந்து ஆரம்பிக்கும் பெரியபுராணத்திற்கு இடம் உண்டா என்றெல்லாம் கேட்பார்கள்…

  2. இந்த மனு ஸ்மிருதி என்பது இந்துக்களின் வேத நூல் அல்ல. என்ன சொன்னாலும் சிலருக்கு தான் உரைக்கும். சில முண்டங்களுக்கு உரைக்காது. பெரியார் திடலில் திருட்டு பரிசுத்த ஆவி வியாபாரம் செய்யும் பொய்ப் பகுத்தறிவு செய்யும் சொம்பு வீரமணி போன்றோர் இதனை படித்து திருந்த மாட்டார்கள். இருந்தபோதிலும் திரு அசோக் சிங்கால் அவர்களின் செய்தி மகத்தான உண்மையை எடுத்து இயம்புகிறது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  3. // கம்பராமாயணத்திலேயே நூற்றுக் கணக்கான இடங்களில் அப்படி வருகிறது. இந்த இடங்களில் அந்த சொற்கள் மனுஸ்மிருதி என்ற காலாவதியான புத்தகத்தையும் அதிலுள்ள கருத்துக்களையும் குறிப்பது அல்ல, மாறாக “மானவ தர்மம்” எனப்படும் மானுட அறத்தைக் குறிப்பவை என்ற விளக்கத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும். //

    மேற்கூறப்பட்ட கருத்து ஒவ்வாது. யுத்த காண்டம் நாக பாசப் படலத்தில்,

    “வாழிய வேதம் நான்கும், மனு முதல் வந்த நூலும்,
    வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,
    ஆழி அம் கமலக் கையான் ஆதிஅம் பரமன்’ என்னா
    ஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம்.”

    எனும் செய்யுளில் “மனு முதல் வந்த நூலும்” என்பதற்கு அப்படிப் பொருள் உரைக்க முடியாது.

    வால்மீகி ராமாயணத்திலும் மனு ஸ்மிருதியை ராமர் மேற்கோள் காட்டுகிறார். (கிஷ்கிந்தா காண்டத்தில் வாலிக்கு இராமன் கூறும் பதிலில்). அங்கு ராமர் காட்டும் சுலோகங்கள் மனு ஸ்மிருதியிலேயே இடம் பெறுகின்றன. ஆகையால், மனு ஸ்மிருதி 2200 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதப்பட்டது என்பதும் ஏற்புடையதாகாது:

    “Had you pursued rightness you too would have done the same deed in imposing such a punishment, and we hear two verses that are given to the advocacy of good conventions, which the experts of rightness have also accepted, and which are said to be coined by Manu, and I too conducted myself only as detailed in those verses of law. [4-18-30]

    ” ‘When kings impose proper punishment on the humans who have sinned, they become sinless and enter heaven as with the pious souls with good deeds.’ So says one verse of Manu. [4-18-31]

    ” ‘Either by punishment or by clemency a thief will be absolved from sin, but the king who does not impose proper punishment will derive the blot of that sin.’ So says the other verse of Manu. [4-18-32]

  4. அன்புள்ள கந்தர்வன்,

    மனு என்ற தொல் மூதாதையின் நினைவும் அவர் அளித்த தர்ம நெறிகளும் குறித்து அனைத்து இதிகாச புராணங்களும் கூறுகின்றன. சூரிய வம்சத்தின் முதல்வராக, ஸ்ரீராமருடைய முன்னோராகவே மனு குறிப்பிடப் படுகிறார்.. ”ஆதித்தன் குலமுதல்வன் மனுவினை யார் அறியாதார்?” – (பாலகாண்டம், குலமுறை கிளர்த்து படலம்). கீதையில் “முன்னாளில் சப்தரிஷிகளும் நான்கு மனுக்களும்…” என்றூ வருகிறது. இந்த மனு ஒவ்வொரு யுகத்திலும் வரும் மன்வந்தரம் என்ற காலத்தைத் தொடங்கி வைப்பவர் என்பதும், அந்தந்த காலத்தின் நெறிகளை (யுக தர்மம்) வகுப்பவரும் அவரே என்பதும் புராண ஐதிகங்கள். நீங்கள் அளித்துள்ள மேற்கோள்களை இந்த அர்த்தத்தில் தான் நான் புரிந்து கொள்கிறேன்.

    இன்றைக்கு, மனுஸ்மிருதி என்ற பெயரில் தொகுத்தளிக்கப் படும் புத்தகத்தில் உன்னதமான அற நெறிகளைக் கூறும் அற்புதமான, தொன்மையான சுலோகங்கள் உள்ளன –

    ”புண்யம் எது? பாவம் எது? பிறர்க்கு உதவுவதே புண்யம், பிறரை வருத்துவது பாவம்” …. பெண்கள் பூஜிக்கப் படும் இடத்தில் தெய்வங்கள் மகிழ்கின்றன…. அகிம்சை, சத்தியம், கள்ளாமை, தூய்மை, புலனடக்கம் இவை எல்லாருக்குமான தர்மங்கள்..

    இதனுடன் கூடவே, சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் போன்ற காழ்ப்புணர்வு கொண்ட சுலோகங்களும் சேர்த்தே உள்ளன.. மிலேச்சர்கள் பற்றிய குறிப்பு கூட உள்ளது. இப்போது நாம் காணும் தொகுப்பு இடைக்காலத்தில் கட்டமைக்கப் பட்டது (பிரிட்டிஷ் காலத்தில் தான் வங்காளத்துப் பண்டிதர்களின் உதவியுடன் இந்த தொகுப்பு செய்யப் பட்டது என்றூ கூட ஒரு கருத்து உள்ளது).. ஏராளமான பிற்சேர்க்கைகளும், இடைச்செருகல்களும் அதில் உள்ளன. எனவே, வால்மீகி ராமாயணம் குறிப்பிடுவது மனுஸ்மிருதி என்பதன் இந்த வடிவத்தை அல்லவே அல்ல.

    “மனு இப்படிச் சொன்னார்” என்று வரும் இன்னும் பல சுலோக மேற்கோள்களை எடுத்து இட்டாலும், அடிப்படையில் நான் சொல்லவரும் கருத்தில் மாற்றமில்லை. அதை ஓரளவு தெளிவாகச் சொல்லி விட்டேன் என்றே நினைக்கிறேன்.

  5. ///மனுநீதிச் சோழன் கதையிலிருந்து ஆரம்பிக்கும் பெரியபுராணத்திற்கு இடம் உண்டா என்றெல்லாம் கேட்பார்கள்…///

    மனு நீதிச் சோனின் மனு நீதிக்கும் மனுச்மிருதிக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவர் தனது அரண்மனை வாயிலில் கட்டிய மணி நீதிக்காக மனுச் செய்யும் எளிய வழிமுறை என்பதால்தான் அவருக்கு இந்தப் பட்டம் வந்தது என்பதே செவிவழிச் செய்தி.

  6. மனுஸ்மிருதியும் யாக்யவல்கிய ஸ்மிருதியும் ஒன்றா ?
    வெவ்வேறல்லவா?

    யாக்யவல்கிய ஸ்மிருதியின் படியே சொத்துரிமை விஷயத்தில் தலித் சாதியினருக்கு அநீதி இழைக்கப் பட்டது.

  7. அத்விகா!

    முதலில் அனைவரும் ஆசிரியர் குழுவின் கருத்தை – அதாவது மனு ஸ்மிர்தி தேவையில்லை அதில் பல சமூகநல்வாழ்வுக்கு ஒவ்வாக்கருத்துக்கள் பலவுண்டு எனபதனால் – எல்லாரும் ஒத்துக்கொண்டனரா இல்லையா என்பதை கந்தர்வனின் மடல் சொல்கிறது மேலும் புதிய பதிப்பாக தமிழில் விற்ப்னையாகிறது.

    ஆக, ஒட்டுமொத்த கருத்து இன்னும் உருவாகவில்லையென்பது கண்கூடு. வீரமணியோ, பிறரோ, அப்படிப்பட்ட நூலை இன்னும் ஏற்றுக்கொள்பவர்கள் பலர் இருப்பதனால் சுட்டிக்காட்டுகிறார். அவரைப்போன்றே மிசுநோரிகள், இசுலாமியர்கள் செய்தார்கள். செய்கிறார்கள்.

    அவர்களை எப்படி குற்றம் சொல்லமுடியும்? இருப்பதைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லமலிருக்க வேண்டுமானால், இன்னூலைக் காலாவதியாக்க வேண்டும். அதை முதலில் செய்யுங்கள்.

  8. இவரது மகள் ஒரு முஸ்லீம்மை மணந்துள்ளாா் என்பது உங்களுக்கு தொியுமா.
    அத்வானியின் மகள் ஒரு முஸ்லீம்மை மறுமணம் செய்துள்ளாா்
    டாக்டா் முரளி மனோகா் ஜோசி யின் மகள் ஒரு முஸ்லீம்யை மணம் செய்துள்ளாா்.
    டாக்டா் சுப்பிரமணிய சுவாமி யின் மகள் ஒரு முஸ்லீம்யை மணம் செய்துள்ளாா்.

    என்ன படிக்க சங்கடமாக உள்ளதா ? தங்கமெல்லாம் தங்கம் அல்ல. காக்காய் பொன்னை தங்கம் என்று ஏமா்றவது இந்துக்கள்தாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *