பால.கௌதமனுக்கு விருது

தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பால.கௌதமன், 09-06-2013 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் இந்து தர்ம சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

bala_gautham1

பால.கௌதமனுக்கு தமிழ்ஹிந்து சார்பாக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். திண்டுக்கல் தலித் இளைஞர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை ஆவணமாக எடுத்து உலகுக்கு காட்டியவர் பால. கௌதமன். தமிழ்ப் புத்தாண்டு, ஹிந்துக்களை திமுக தலைவர் இழிவு படுத்தியதற்கு எதிரான வழக்கு, கிறிஸ்தவர்களின் தேவசகாயம் பிள்ளை புரட்டுக்கு எதிரான கருத்தரங்கம், திப்பு சுல்தான் குறித்த உண்மை வரலாறு பற்றிய பதிவுகள், பெரிய புராண தொடர் சொற்பொழிவு ஆகியவை மூலமாகவும், இணைய தளக் கட்டுரைகள், ஹிந்து சமுதாய விஷயங்களுக்காக தொலைகாட்சிகளில் அவர் பங்கேற்று சிறப்பாக கருத்துகளை வழங்கும் விவாதங்கள் என, ஹிந்து சமுதாயத்துக்கு அவர் ஆற்றிவரும் தொண்டுகள் மகத்தானவை. தமிழ்ஹிந்து தளத்தில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த விருது அவரைப் போல மேலும் சிறப்பான அறிவுசார்ந்த இளைஞர்கள் இந்து தர்மத்துக்காக போராடவும், செயல்படவும் வழி வகுக்கும் என தமிழ்ஹிந்து நம்புகிறது. பால.கௌதமனை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

8 Replies to “பால.கௌதமனுக்கு விருது”

 1. பால கவுதமனுக்கு நம் வாழ்த்துக்கள். உமது தொண்டு தொடர இறை அருள் உமக்கு என்றும் கை கொடுக்கட்டும்.

 2. மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. அவருடைய தொண்டு மேலும் விர்வடைந்து ஹிந்து தர்மத்தை நன்கு விளக்கவேண்டும்.

 3. அன்புக்குறிய ஹிந்துத்துவ அறிஞர் ஸ்ரீ பாலகவுதமன் அவர்களுக்கு ஹிந்து தர்ம சேவாரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்து. ஸ்ரீ பாலகவுதமன் அவர்களுக்குப்பாராட்டுக்கள். அவரது வரலாற்று ஆய்வுப்பணி ஆன்மீகப்பணி தர்மத்தினை காக்கும் பணி சிறக்கவேண்டுகிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி!
  சிவஸ்ரீ.

 4. அண்ணன் பாலகௌதமன் அவா்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 5. மனதார்ந்த வாழ்த்துக்கள். பூஜ்ய ஸ்ரீ காஞ்சி சுவாமிகள் விருதால் தங்களை ஆசீர்வதித்தமை தங்களை தாங்கள் ஆற்றி வரும் தொண்டில் மென்மேலும் உத்சாஹமுடன் பணியாற்ற ஹேதுவாகும். என்றென்றும் யசஸ் வியாக பெருமையுடன் பீடு நடை போட வள்ளி மணாளப் பெருமானை ப்ரார்த்திக்கிறேன்.

 6. அன்பு நண்பர் பாலாகௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…..

 7. வாழ்த்துக்கள் சார் உங்கள் பனி தொடரட்டும்

 8. அன்பு பாலாகௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…
  மேலும் அவர் பனி தொடரவாழத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *