தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்… ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்டவும் பிராம்மண – அப்பிராம்மண, சைவ – வைணவ சண்டையாகவும், மாற்றவும் முயற்சி செய்தனர். அவை பெரும் தோல்வி அடைந்தன. அந்த நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்….

View More தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.

View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

பால.கௌதமனுக்கு விருது

தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பால.கௌதமன், 09-06-2013 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி…

View More பால.கௌதமனுக்கு விருது

வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?

View More வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

(தமிழில்: மது) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று… பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.

View More புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்…

View More மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை