அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….

மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு,

வணக்கம்.

மோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இதை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறு சிலரும் செய்துள்ளனர். ஆனால்  குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது ஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும் குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது.  thiruma3சில மாவட்டங்களில் நிலவும் இரட்டை டம்ளர் முறையை ஒழித்ததில் விடுதலை சிறுத்தைகளுக்கு உள்ள பங்கு மிக சிறப்பானது. வரலாற்று முக்கியத்துவமுடையது. அதையும் எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதது. அதற்காக அக்கட்சியின் தலைவராக உங்களை குளவி கையெடுத்து வணங்குகிறது.  ஈஷா யோகா சத்குரு ஜக்கி வாசுதேவ் உடனான தங்கள் உரையாடல் மிகச் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு ஹிந்து ஆன்மிகத்தலைவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அவை. அவற்றை பொது ஊடகத்தில் அருமையாக முன்வைத்த தங்கள் குரலுக்காகவும் குளவி உங்களுக்கு கடன் பட்டிருக்கிறது. [காணொளி இங்கே] மேலும் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் படுகொலையைக் கண்டித்துள்ளீர்கள் அதற்கும் நன்றி.

ஆனால் உங்கள் இஸ்லாமிய ஆதரவு நிலைபாடு ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளுக்கான குரல் என்பதை தாண்டி ஒரு மதவாதத்தின் ஆதரவு, மத ஏகாதிபத்தியத்தின் ஆதரவு  என்பதாக மாறுவதை குளவி காண்கிறது.  பாரதமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போதிசத்வரான பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரை தினமும் காலை பிரார்த்தனையில் குளவி சொல்லி வருகிறது.  ambedkarஅண்ணலின் படத்தையே பயன்படுத்தி அரசியல் செய்யும் முதன்மையான தமிழக அரசியல்வாதியாக நீங்கள் இன்று விளங்குவதால் நீங்கள் செய்யும் செயல்களைக் குறித்து  இக்கடிதத்தை எழுத வேண்டியதாகிறது. நீங்கள் தொடர்ந்து தீவிர இஸ்லாமிய ஆதரவு நிலைபாட்டை எடுத்துக் கொண்டிருப்பதை தமிழகம் அறியும். கோவை குண்டுவெடிப்பின் முக்கிய மூளை என கைது செய்யப்பட்ட மதானியை ஆதரிக்கிறீர்கள். ’நான் இஸ்லாமியன் ஆவேன்’ என கூறுகிறீர்கள்.  இதை நீங்கள் செய்வது  உங்கள் உரிமை. ஆனால் இதை நீங்கள் அண்ணல் அம்பேத்கரின் பெயரில் செய்யும் போது இந்த மனநிலை குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் வருகிறது.  இது பாபா சாகேப் அம்பேத்கரின் குரல்:

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு அவர்கள் ஹிந்துக்களை எதிர்க்கிற காரணத்தினாலேயே முஸ்லீம்களை நண்பர்களாக பார்க்கிற ஒரு வழக்கம் வந்திருக்கிறது. இது ஒரு தவறு. முஸ்லீம்கள் ஒடுக்கப்பட்ட மகக்ளின் ஆதரவை விரும்புகிறார்களே அல்லாமல் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதில்லை. (டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர், Writings and Speeches, பாகம்- 17, பகுதி 1, Education Dept., Govt. of Maharashtra,பக்.367)

இதன் சத்தியத்தன்மையை அறிய உங்களுக்கு பல சந்தர்ப்பங்கள் வாய்த்துள்ளன. ஆனால் அவற்றிலெல்லாம் மிக வேதனை தரும் ஒரு சம்பவத்தை இப்போது நினைவுபடுத்துகிறேன்.

கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள பழையப்பட்டினம் என்ற கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள், 35 இஸ்லாமிய குடும்பங்கள், 40 கோனார் சமூக குடும்பங்கள், 20 ரெட்டியார் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராமப் பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபா கூட்டம் தலைவர் சி.தர்மலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் பஞ்சாயத்து நூலகம் எதிரில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் பின்னர் சில இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே அந்த சிலையை பிரச்சனைக்குள்ளாக்குகின்றனர்.  இஸ்லாமியர்கள் உருவவழிபாட்டை மேற்கொள்ளாத காரணத்தால் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு முன் அந்த சிலை இருக்கக்கூடாது என்கின்றனர். சிலைக்கு மாலையோ, மரியாதையோ செய்ய ஊர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  தலித் மக்கள் தவித்தனர். தலித் தலைவர்களை சந்தித்து முறையிடுகின்றனர். ஆனால்  விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?thiruma1 அந்த சிலையை அங்கிருந்து அகற்றி தலித் மக்கள் பகுதியிலே வைத்துக்கொள்ள வலியுறுத்தினீர்கள்.  பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு சாதியின் தலைவர் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் இருப்பதால் இந்த தேசத்தின் இதயமாகவும் அவர் இருக்கிறார். அவர் சிலையை ஊர் மத்தியில் அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக் கொண்ட சூழலில் மதவாத சக்திகளுக்காக தலித் பகுதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என சொல்வது எவ்விதத்தில் நியாயம்? ஒரு படி மேலே போய் அண்ணலின் சிலையை அகற்றுவதாக நீங்களே இஸ்லாமிய ஜமாத்துக்கு கடிதமும் எழுதினீர்கள்.

இன்றைக்கு நீங்கள் ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் காவல்துறையிலும் ராணுவத்திலும் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கோருகின்றனவே. ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

இந்தியா ராணுவத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிப்பை குறைக்கவும் இந்தியாவை பாதுகாப்பாக்கவும் இந்த விரோத சக்திகளை வெளியேற்றுவதே நல்லது. நாம் நம் தேசத்தை பாதுகாப்போம். பாகிஸ்தான் அதன் இஸ்லாமியத்தை இந்தியாவில் பரப்ப முடியும் எனும் தவறான எண்ணத்தை கைக்கொள்ள வேண்டாம். ஹிந்துக்கள் அதனை மண்ணைக் கவ்வ வைப்பார்கள். எனக்கு சில விஷயங்களில் சாதி இந்துக்களுடன் மோதல் இருக்கிறது.  உண்மைதான். ஆனால் நான் உங்கள் முன் சபதமேற்கிறேன். என் உயிரை தேசத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்பேன் என்று சபதமேற்கிறேன். (டாக்டர்.பீமராவ் ராம்ஜி அம்பேத்கர், Writings and Speeches, பாகம்-17, பகுதி- 3 Education Dept., Govt. of Maharashtra, பக்.233)

இன்றைக்கு நீங்கள் இங்கு ஆதரிக்கும் அதே மதவாத இயக்கங்கள்தான் 2010 இல் கேரளத்தில் ஒரு தலித் இளைஞனை ரத்தம் கசிய 23 வெட்டுகளுடன் பிணமாக்கின. (Dalit youth executed ‘Taliban-style’ in Kerala, The Times of India, 20-Oct-2010) ஆனால் அவையே இங்கே தலித்துகளுக்கு சட்ட உதவி வழங்குவோம் என கூறுகின்றன.

சரி இவற்றையெல்லாம் மீறி உங்களுக்கு ஒரு நியாயம் கோபம் உள்ளது. தர்மபுரியில் வீடுகள் எரிந்த போது எந்த இந்து அமைப்புகளும் இந்து ஆதீனங்களும் பார்க்கவில்லை என. இளவரசன் மரணம் விசயத்தில் இந்து அமைப்புகளின் நிலைபாடு என்ன என்று. இதே வருத்தம் வேதனை ஆத்திரம் குளவிக்கும் இருக்கிறது. அதை நீங்கள் நேரடியாக கேட்கலாம். ஆனால்  எங்கே சங்கம் வலுவாக உள்ளதோ அங்கே இவ்விசயம் எப்படி கையாளப்படுகிறது என்பதை நீங்கள் நோக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாபா சாகேப் பெயரை மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைப்பது என முடிவு செய்த போது அதை சிவசேனா எதிர்த்தது. ஆனால் ஆர். எஸ்.எஸ் பாஜக அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றின. பாபா சாகேப் அம்பேத்கரின் அனைத்து எழுத்துக்களையும் மகாராஷ்டிர அராசங்கம் வெளியிட்ட போது 123அதில் ‘ரிடில்ஸ் இன் ஹிந்துயிசம்’ எனும் பகுதி இண்டு மதத்தை கடுமையாக தாக்குவதால் அதை வெளியிடக்கூடாது என பல பழமைவாதிகள் கூறினார்கள். ஆனால் அப்போது ஆர்.எஸ்.எஸ் அதிகாரபூர்வமாக அதை வெளியிட ஆதரவு தெரிவித்தது.  ஆர் எஸ் எஸ்ஸின் மூன்றாவது சர்சங்கசாலக்காக இருந்த பாளா சாகேப் தேவரஸ் அவர்களின் முதல் பேச்சிலேயே பாபா சாகேப் முன்வைத்த சமூக ஆன்மிக சமத்துவத்தைதான் மேற்கோள் காட்டினார். ஆம்! இன்றைக்கு திராவிட இயக்கங்களும் கம்யூனிஸ்ட்களும் பாபா சாகேபை தங்கள் போஸ்டர்களில் போடுவதற்கு முன்னால் 1970களிலேயே தன் பிராத்தனையில் அவரது புனித நினைவை போற்றும் இயக்கம் ஆர் எஸ் எஸ். பாபா சாகேப் ‘நான் ஹிந்துவாக மடிய மாட்டேன்’ என்று சொன்னார். அந்த பிரகடனத்துக்கு பிறகே அவரை ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க டாக்டர் ஹெட்கேவார் அழைத்தார். பாபா சாகேப் அம்பேத்கரும் அதற்கு சம்மதித்து ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பாபா சாகேப் மும்பையில் போட்டியிட்ட போது அவரது தேர்தல் ஏஜெண்டாக செயல்பட்டவர் பாரதிய மஸ்தூர் சங்க அமைப்பின் நிறுவனரான தத்தோ பந்த் தெங்கடிஜி அவர்கள்.  புகழ்பெற்ற தலித்திய இலக்கியவாதி நாமதேவ் தியோல் ஆர்.எஸ்.எஸ்ஸை தலித் விடுதலைக்கு உகந்த ஒரு அமைப்பாக கருதி கை கொடுத்தது அண்மையில் நிகழ்ந்த நிகழ்வு.  அனைத்து முக்கிய இந்து கோவில்களிலும் முதன்மை பூசகராக தலித்தை நியமிக்க வேண்டுமென்று அண்மையில் காலமான சுதர்ஷன்ஜி கூறியதையும் நீங்கள் தெரிந்திருக்கலாம்.photo.cms_thumb

ஹிந்துத்துவத்தின் இந்த பாரம்பரியத்தை நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டுமென ஒரு சகோதர உரிமையுடன் உங்களுக்கு குளவி கோரிக்கை வைக்கிறது.

இந்து மதத்தை தாக்குவதாகவே இருந்தாலும் பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்துக்களை வெளியிட ஆதரவு தெரிவித்த இந்துத்துவர்கள் எங்கே அதற்கு மாறாக அவர் சிலையை சட்டபூர்வமாக நீதி மன்ற அனுமதியுடன் பொதுஇடத்தில் வைக்க மதவாத எதிர்ப்பு தெரிவிக்கும் சக்திகள் எங்கே? இதில் நீங்கள் யாருடன் எங்கே இணைந்து நிற்கிறீர்கள்?

குஜராத்திலும் தலித்துகள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆனால் அங்கே நீங்கள் எந்த மோடியை எதிர்க்கிறீர்களோ அவர்தான் தலித்துகள் மீதான சம்பிரதாய கொடுமைகளை களைய எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தார். ஆம் தலித்துகளை கோவில் பூசகர்களாக்க குஜராத் அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது.  காணொளியை இங்கே காணவும்.  மனித உரிமை கமிஷன் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பாலகிருஷ்ணன் குஜராத்தில் தலித்துகளின் நிலை மற்ற இடங்களை விட நன்றாக உள்ளதென கூறியுள்ளார். (பார்க்கவும்:https://www.dnaindia.com/india/1688964/report-gujarat-doing-well-in-dalit-welfare-says-nhrc-chairman)

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து இந்திய தலைவர் ஒருவருக்கு எதிராக அமெரிக்க அதிபருக்கு கையெழுத்திட்டு நீங்கள் அனுப்பியுள்ள கோரிக்கை ஏனோ பாபா சாகேப் இந்திய அரசியல் நிர்ணய சட்ட குழுமத்தில் இறுதியில் ஆற்றிய உரையை நினைவூட்டியது:

என்னை மிகவும் சங்கடப்படுத்தும்  ஒரு விஷயம் உண்டு. அது இந்தியா இதற்கு முன்னர் தன் சுதந்திரத்தை இழந்திருக்கிறாள் என்பது மட்டுமல்ல அது அவளுடைய சொந்த மக்களின் துரோகத்தால் நம்பிக்கைத் துரோகத்தால் நடந்தது என்பதுதான்.  முகமது பின் காசிம் இந்த தேசத்தின் சிந்து பிரதேசத்தின் மீது படையெடுத்து வந்த போது  தாஹிர் அரசனின் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு தனது அரசனுக்காக போரிடாமல் இருந்தார்கள்.  ஜய்சந்தின் துரோகமே முகமது கோரியை இந்தியாவுக்குள் அழைத்து ப்ருத்விராஜனுக்கு எதிராக போரிட செய்தது  வீர சிவாஜி ஹிந்துக்களின் விடுதலைக்காக போராடிய போது சில மராட்டிய பிரபுக்களும் அரசர்களும் மொகலாய பேரரசர்களுடன் இணைந்து செயல்பட்டனர். சீக்கிய அரசுகளுக்கு shivajiஎதிராக பிரிட்டிஷ் செயல்பட்ட போது குலாப் சிங்  பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்தார். 1857 இல் பாரதத்தின் பெரும் பகுதி பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் விடுதலை போரில் எழுந்த போது சீக்கியர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. வரலாறு மீண்டும் இவ்வாறு நிகழுமா? இந்த பரிதவிப்புக்கு காரணம் இன்றும் நம் பழைய எதிரிகள் சாதியமாகவும் சித்தாந்தபிடிப்புகளாகவும்  இருக்கபோவதும் நாம் பல்வேறு கட்சிகளாக பிரிவுபட்டு நிற்கபோவதுமே காரணம். தங்கள் கொள்கைகளுக்கு மேலாக இந்தியர்கள் பாரதத்தை முன்னிறுத்துவார்களா? எனக்கு தெரியாது.  ஆனால் இது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும். அரசியல் கட்சிகள் தேசத்தை தேசத்தின் தனியாண்மையை தங்கள் கோட்பாடுகளுக்கு மேலாக வைக்க வேண்டும்.  இல்லாவிடில் நம் சுதந்திரம் இரண்டாவது முறையும் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டு நாம் அதை நிரந்தரமாக இழந்துவிடுவோம். அத்தகைய ஒரு சூழல் எழுவதற்கு எதிராக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இயங்க வேண்டும். நம் சுதந்திரத்தை நம் இறுதிச் சொட்டு ரதத்ததால் பாதுகாக்க வேண்டும்.

கீழே உள்ள இந்த இரண்டு கடிதங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே கேள்வியைத்தான் உங்கள் மனசாட்சியிடம் கேட்கவைக்கிறது. பாபா சாகேப் அம்பேத்கர் மேலே கூறிய உரையில் பட்டியலிடும் விடுதலை வீரர்களான தாஹிர், பிருத்வி ராஜன், வீர சிவாஜி, மஹாராஜா ரஞ்சித் சிங் ஆகியோருடன் உங்கள் அணியா? அல்லது அன்னிய ஆக்கிரமிப்பாளருடன் இணைந்தவர்களுடன் உங்கள் அணியா? thiruma2

அண்ணன் திருமாவளவன் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தகுதியான வெகுசில அரசியல்வாதிகளில் ஒருவர். அது சமூக ஒருங்கிணைப்பின் மூலம் பாபா சாகேப் அம்பேத்கரின் வாரிசாக நிகழட்டும். பெருந்தலைவர் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜானந்தரும் ஐயா வைகுண்டரும் பாரதியும் உருவாக்கிய பாதையில் நிகழட்டும். தீராவிடத்தின் பாதையில் அல்ல.

வேதனை கலந்து இன்னும் நம்பிக்கையுடன்

ஜெய் பீம் ஜெய் ஹிந்த்

wasp1குளவி

41 Replies to “அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….”

 1. தலித் சகோதரர்களை இந்து சமுதாயம் அரவணைத்து செல்வதோடு அவர்களுக்கு உரிய மரியாதையையும் பெற்று தருவது ஒவ்வொரு இந்துத்துவரின் கடமையாகவே இருக்க வேண்டும் என குருஜி விரும்பினார். அதை அனைத்து சமய குருமார்களையும், ஆச்சார்யர்களையும் இணைத்து பொது வெளியில் பேச வைத்தார். நாம் குருஜியின் பணிகளை செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் நிஜமான அஞ்சலியாக இருக்கும். திருமாவளவன் அவர்கள் மிகவும் மதிக்கத்தக்க தலித் தலைவர். அண்ணலின் கோட்பாடுகளை கையில் கொண்டு தலித் சகோதரர்களுக்கு உரிய நியாயத்தை பெற்று தர வல்ல தலைவராக இருப்பவர் ஆனால் அவரின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு நிச்சயம் தவறானது. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை பொறுத்த வரை அவர்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப்புகள் தான் தேவை. அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கரும் தேவையில்லை.சகஜானந்தரும் தேவையில்லை. அவர்களின் நோக்கம் ஒன்று பட்ட பாலை வன ராஜ்யம் தான். உலகம் முழுக்க ரத்தத்தால் பேரழிவை தோற்றுவிப்பது தான் அவர்களின் நோக்கம். அவர்களை கொண்டு தலித்களுக்கான சுதந்திரத்தையோ, உரிமையையோ பெற்று தர முனைவதாக நீங்கள் சொன்னால் அல்லது நினைத்தால் அது தலித்களுக்கு நீங்கள் செய்யும் மிக[ப்பெரிய துரோகமாகவே இருக்கும்.

 2. அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கூடாது என்ற குளவியின் வ்யாசமும் பரமக்குடி சம்பந்தமான வ்யாசத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை முழுமையாக முன்வைக்காத குளவியின் பக்ஷபாதமும் என்னை வெகுவாக நோகடித்தது என்றால் மிகையாகாது.

  ஆனால் இந்த வ்யாசத்திற்காக குளவிக்கு சபாஷ்.

  அன்பு சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் அவர்களை நான் இந்த தளத்தில் முன்பு உகந்துள்ளேன்.

  தமிழ் என்ற பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கூத்தாடிகளுக்கு மத்தியில் ஹிந்துஸ்தானத்தில் லோக்சபையில் தமிழில் பேசிய சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் என்ற வ்யக்தியின் பால் எனக்கு மிகுந்த பெருமை.

  இதைச் சொல்ல கலப்பு மொழிநடையில் (மணிப்ரவாளம் என்று சொல்பவர் சொல்லிக்கொள்ளலாம்) எழுதும் எனக்கு என்ன யோக்யதை என்று கேழ்க்க விரும்புபவர்கள் ஆனந்தமாக எழுதித் தங்கள் தமிழ்ப்பற்றினை பறைசாற்றிக்கொள்ளலாம். ஆனால் உண்மை உண்மை தான். சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் செயல்பாடு எனக்கு மிகப்பெருமிதம் தந்தது என்றால் மிகையாகாது.

  ஈழத்தில் தமிழர்கள் வழிபடும் சைவத் திருக்கோவில்கள் இடித்துத் தள்ளப்படுவதை த்ராவிட த்ராபைகள் கேள்வி கூட கேட்காது இருக்கையில் சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் பொதுத்தளத்தில் தொலைக்காட்சிகளில் கேள்வி கேட்டது; ஈழத்துத் தமிழ்ச் சைவர்களுக்காக அவர் குரல் கொடுத்தது என்னை மிகவும் நெகிழச் செய்தது.

  தற்பொழுது ஹிந்துஸ்தானத்தில் வடகோடியில் எனது ஆருயிர்க் குடும்ப நண்பர் மானனீய ரமேஷ்ஜீ அவர்களை ஜிஹாதி மதவெறிக்கு பறிகொடுத்து ஆராத்துயரில் இருக்கையில்……..வசவு தளங்களில் இறந்த ஹிந்துஇயக்கப் பொறுப்பாளர்களை….. மனிதன் இறந்த பின்பும் காழ்ப்பு மாறாது காழ்ப்புகளை கக்குகையில்……….

  சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன், ஸ்ரீமான் வை.கோபால்சாமி, மருத்துவர் ஐயா ஸ்ரீமான்.ராமதாஸ் போன்றோர் ஆதுரத்துடன் மனிதநேயத்துடன் தங்கள் இரங்கல்களைப் பகிர்ந்துகொண்டது எங்களது புண்பட்ட ஆராத்துயர் கொண்ட மனதிற்கு சற்றே இளைப்பாற்றல் கொடுத்தது என்றால் மிகையாகாது.

  சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் அவர்களுடைய செயல்பாடுகளில் ஏற்கவொண்ணா செயல்பாடுகளை…….ததாகத அம்பேத்கர் அவர்களுக்குக் கூட ஏற்கவொண்ணா செயல்பாடுகளை……….சஹோதரர் அவர்கள் ஜிஹாதி சக்திகளுடன் சேர்ந்து செயல் படுவதை குளவி கொட்டியுள்ளது. சஹோதரர் அவர்கள் “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற ரீதியில் குளவிக்கொட்டை ஏற்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  முஸல்மான் சஹோதரர்களுடன் தங்கள் சம்வாதத்தை சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் தொடரவும். ஆனால் அந்த சம்வாதங்கள் மூலம் முஸல்மான் சஹோதரர்களூடே இருக்கும் ஜிஹாதி மதவெறியை அழிக்க அவசியம் முயற்சி செய்யவும். அதுதான் நீங்கள் அமரர் ரமேஷ்ஜி அவர்களுக்குச் செய்யும் உகப்பான அஞ்சலியாக இருக்க இயலும்.

  சஹோதரர் திருமாவளவன் எனக்கு மட்டிலும் அன்று மருத்துவர் ஐயா ஸ்ரீமான் ராமதாஸ் அவர்களுக்கும் உகந்த சஹோதரர் என்று அறிவேன். ஒரு புறம் வயறு பதறடிக்கக்கூடிய தம்பி ஸ்ரீ இளவரசனின் துர்மரணத்தில் வெதும்பி பா.ம.க வினருக்கு எதிராகவும் பா.ம.க தலைமைக்கு எதிராக நீங்கள் பேசினாலும் மருத்துவர் ஐயாவின் பால் தங்கள் மனதில் இருக்கும் மரியாதையும் தங்கள் தொலைக்காட்சிப் பேட்டிகளில் கவனித்துள்ளேன். பழையபடி தாங்களும் மருத்துவர் ஐயாவும் இணைந்து செயலாற்றினால் வடதமிழகம் எப்படி அன்புடன் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.

  நம்பினோர் கெடுவதில்லை இது நான் கு மறைத் தீர்ப்பு.

  ரமேஷ் ஜீ அவர்கள் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த பாரபக்ஷமின்மைக்கும் மனிதத் தன்மைக்கும் சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் அவர்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள். வாழி நீ எம்மான். கசப்புகளை ஒழித்து உயர்ந்த ஒரு தலைவராக தாங்கள் வளர எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரன் அருள்வானாக.

 3. //அண்ணன் திருமாவளவன் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தகுதியான வெகுசில அரசியல்வாதிகளில் ஒருவர். // குளவி அண்ணே! இது உங்களுக்கே ஓவரா தெரியல… குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதியின் தலைவராக இருப்பவர் எவ்வாறு சாதி இந்துக்களை ஒருங்கிணைப்பார்…. ஒருங்கிணைக்க முடியும்? மேலும் இவரின் கட்சியின் ஒரே தகுதி “கட்டபஞ்சாயத்து”!! நல்ல விஷயமா சொல்லுங்க…

 4. பாராட்டுக்கு உரியவர் சஹோதரர் ஸ்ரீமான் திருமாவளவன் மட்டுமன்று.

  ஸ்ரீ திருமாவளவன் நாணயத்தின் ஒருபக்கம் என்றால் அதன் மறுபக்கம் மருத்துவர் ஐயா ஸ்ரீ ராமதாஸ்.

  இவர்கள் இருவரின் செயல்பாடுகளில் பல ஹிந்துத்வர்களுக்கு ஏற்பில்லாது இருக்கலாம்.

  ஆனால் மானனீய ரமேஷ் ஜி அவர்களின் மரணத்திற்கு மனிதப்பண்போடு இரங்கல் தெரிவித்தவர்கள் ஒருகாலத்தில் ஒன்றாய் அரசியல் அரங்கில் உலா வந்த இந்த இருவரும்.

  குளவியின் கண்களுக்கு மருத்துவர் ஐயா அவர்களிடம் தற்போது காணப்படும் இழந்த தன் ஹிந்துப் பாரம்பர்யம் மீட்ட நற்குணங்களும் தெரிய வருமா என்று பார்க்கிறேன்.

  மருத்துவர் ஐயாவின் ஜாதிப்பேச்சு அவரிடம் காணப்படும் குறையாய் குளவி கொட்டலாம். கீழ் விஷாரத்து வன்னிய சஹோதரர்கள் மேல் விஷாரத்து ஆப்ரஹாமிய மத ஆதிக்கத்துக்கு இறையாக இருந்தபோது ஜிஹாதி மதவெறிக்கு அடிபணிந்து சொந்த சஹோதரர் பக்ஷம் பாராமுகமாய் இருந்த அவரின் போக்கை கொட்டலாம். ஆனால் இந்த மனிதரிடமும் அவரிடம் காணப்படும் நிறைகளுக்காக போற்றவும் வேண்டுமே.

  தமிழகத்தில் த்ராவிட சாக்கடையின் நிண நாற்றமிகுந்த ஓட்டம் முடிக்கப்பட்டு பொன்னி நதி வலம் வர பிரிந்தவர்கள் மீண்டும் கூடலாமே

 5. அன்பார்ந்த ஸ்ரீ சிவகுமார்

  \\குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதியின் தலைவராக இருப்பவர் எவ்வாறு சாதி இந்துக்களை ஒருங்கிணைப்பார்…. ஒருங்கிணைக்க முடியும்? \\

  தக்ஷிணாமூர்த்திகாரு எங்கிற தெலுகுபிட்டவான தமிழினத்தலைவர்…… த்ராவிட மடத்தின் மடாதீசர் கலைஞர் கருணாநிதி அவர்கள்…… ஒரிஜினல் பெத்த க்ஷத்ரிய வாள்ளு பலிஜவார் நாயுடுகாரு ஈ.வெ.ராமசாமி நாயக்குலு அவர்களுக்கும் அண்ணாத்துரை முதலியாருக்கும் அத்தனை அரவாள்ளுக்கும் பெத்த பெத்த நாமம் போட்டு ஒட்டு மொத்த தமிழகத்தையும் பல தசாப்தங்களுக்கு குத்தகை எடுக்கமுடியுமானால் ஒரிஜினல் தமிழரான ஸ்ரீ திருமாவளவன் அவர்களால் ஏன் அது முடியாது?

  ஸ்ரீ திருமாவளவன் அவர்களும் மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் அவர்களும் ஒருங்கிணைந்து அரசியலில் இருந்தார்களே. சரி…..அது சுயநலத்திற்காக என்று நீங்கள் சொல்லலாம். சுயநலத்திற்காக இருவர் ஒருங்கிணைந்தால் பொதுநலத்திற்காக ஒருங்கிணையக்கூடாது என்று விதியேதும் உண்டோ?

  \\மேலும் இவரின் கட்சியின் ஒரே தகுதி “கட்டபஞ்சாயத்து”!! நல்ல விஷயமா சொல்லுங்க…\\

  ம்……இவரிடம் உள்ள வாஸ்தவமான ஒரு பெரிய குறையை நக்கலா குத்திக் காண்பிக்கிறீர்கள். உண்மை தான் இது நல்ல விஷயம் இல்லை தான். ம்……..குறைகள் ஒரு மனிதனை கீழே தள்ளும். அவன் அதை குறை என்று ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி. அதே போன்று ஒரு மனிதனிடம் காணப்படும் நிறைகள் அவனை உயர்த்தும். அவன் அவற்றை உணர்ந்தாலும் சரி உணராவிட்டாலும் சரி. உங்களுக்கு ஸ்ரீ திருமாவளவன் அவர்களிடம் காணப்படும் குறைகள் மட்டிலும் ஏன் தெரிகின்றன. அவரிடம் காணப்படும் பல நற்பண்புகள் ஏன் தென்படமாட்டேனென் கிறது? அவை ஏன் அவரை உயர்த்தாது?

  இதை எழுதிய உங்களிடமும் எழுதும் என்னிடமும் கூட என்ன நிறைகள் மட்டிலுமா மண்டியுள்ளது. மனதைத் தொட்டு சொல்லுங்கள் நம்மிடமும் கூட குறைகளும் இல்லை?

 6. சிவகுமார்.

  எனக்கு திருமாவளவன் அரசியலில் உடன்பாடு இல்லை. ஆனால் அதே நேரத்தில் சில கருப்பு சட்டைகளையும் காக்கி சட்டைகளையும் பார்க்கும் பொழுது இவர் எவ்வவோ பரவாயில்லை.

 7. மணிப்பிரவாளப் பொட்டு (திலகம்) அவர்களே, குளவி இங்கே கொட்டுகிற நோக்கம் திருமாவளவன் இஸ்லாமியருக்கு அடிக்கும் ஜால்ரா பற்றியது. திருமாவின் மோடி எதிர்ப்பு ஊர் அறிந்த செய்தி. அதிலும் இந்தக் கூட்டுக் கையெழுத்துக் கடிதத்தில் அவரும் சேர்ந்திருப்பது அவரது கொள்கைகளுக்கும் அவர் கடவுளைப்போல் பின்பற்றும் அம்பேத்கர் அவர்களுடைய சிந்தனைகளுக்கும் எவ்விதம் நேர்மாறானது என்பதை திருமா வெட்கும்படிக்கு திருவாளர் குளவியார் கொட்டு கொட்டு என்று கொட்டியிருக்கிறார். இதில் //இளவரசனின் துர்மரணத்தில் வெதும்பி பா.ம.க வினருக்கு எதிராகவும் பா.ம.க தலைமைக்கு எதிராக நீங்கள் பேசினாலும் மருத்துவர் ஐயாவின் பால் தங்கள் மனதில் இருக்கும் மரியாதையும் தங்கள் தொலைக்காட்சிப் பேட்டிகளில் கவனித்துள்ளேன். பழையபடி தாங்களும் மருத்துவர் ஐயாவும் இணைந்து செயலாற்றினால் வடதமிழகம் எப்படி அன்புடன் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.// சாதீயத்தையே தனது அரசியல் கருவியாகக் கொண்ட ராமதாசையும் ஒடுக்கப்பட்ட ராமதாசைப் போன்றோரால் வஞ்சிக்கப்படுகிற சமுதாயத்தையும் ஒன்று சேர்ந்து செயலாற்றச் சொல்லும் யோசனை ஏன் வருகிறது? நீங்கள் ஒன்றுசேரச் சொல்லும் ராமதாசும் இஸ்லாமிய ஜல்லி அடிக்க சற்றும் தயங்காதவர்தான். சிலநாள் முன்புவரையிலும் கூட பெரியார் பெரியார் என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தவர்தான்.

 8. //அண்ணன் திருமாவளவன் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தகுதியான வெகுசில அரசியல்வாதிகளில் ஒருவர். //

  வெளங்கிடும்.

 9. ஓகை நடராஜன்:-

  \\ அவர் கடவுளைப்போல் பின்பற்றும் அம்பேத்கர் அவர்களுடைய சிந்தனைகளுக்கும் எவ்விதம் நேர்மாறானது என்பதை திருமா வெட்கும்படிக்கு திருவாளர் குளவியார் கொட்டு கொட்டு என்று கொட்டியிருக்கிறார்\\

  சிறியேனின் கருத்து :-

  \\.ததாகத அம்பேத்கர் அவர்களுக்குக் கூட ஏற்கவொண்ணா செயல்பாடுகளை……….சஹோதரர் அவர்கள் ஜிஹாதி சக்திகளுடன் சேர்ந்து செயல் படுவதை குளவி கொட்டியுள்ளது. சஹோதரர் அவர்கள் “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற ரீதியில் குளவிக்கொட்டை ஏற்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.\\

  எங்கே வேறுபாடு ?

  ஸ்ரீ திருமாவளவன் அவர்களது சில செயல்பாடுகள் தவறு என்பதால் அவர் லோக்சபாவில் தமிழில் பேசுவதோ அல்லது ஈழத்தமிழ்ச் சைவர்களுக்குக் குரல் கொடுப்பதோ அல்லது மனிதப்பண்பு குறையாது மானனீய ரமேஷ் ஜீ அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோ அன்பார்ந்த ஸ்ரீமான் நடராஜன் அவர்களுக்கு ஏற்பில்லையோ?

  ஓகை நடராஜன் :-

  \\சாதீயத்தையே தனது அரசியல் கருவியாகக் கொண்ட ராமதாசையும் ஒடுக்கப்பட்ட ராமதாசைப் போன்றோரால் வஞ்சிக்கப்படுகிற சமுதாயத்தையும் ஒன்று சேர்ந்து செயலாற்றச் சொல்லும் யோசனை ஏன் வருகிறது? நீங்கள் ஒன்றுசேரச் சொல்லும் ராமதாசும் இஸ்லாமிய ஜல்லி அடிக்க சற்றும் தயங்காதவர்தான். சிலநாள் முன்புவரையிலும் கூட பெரியார் பெரியார் என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தவர்தான்.\\

  சிறியேனின் கருத்து:-

  \\கீழ் விஷாரத்து வன்னிய சஹோதரர்கள் மேல் விஷாரத்து ஆப்ரஹாமிய மத ஆதிக்கத்துக்கு இறையாக இருந்தபோது ஜிஹாதி மதவெறிக்கு அடிபணிந்து சொந்த சஹோதரர் பக்ஷம் பாராமுகமாய் இருந்த அவரின் போக்கை கொட்டலாம். \\

  ஸ்ரீமான் ஓகை நடராஜன் அவர்களுக்கும் குளவிக்கும் ஜிஹாதி சக்திகளுக்கு ஹிந்துக்கள் உதவுவதில் என்ன கவலை உள்ளதோ அது என் கருத்திலும் ப்ரதிபலிக்கப்பட்டுள்ளது.

  ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த அனைத்துப் பிரிவு மக்களும் தங்களுக்கிடையே வேற்றுமைகள் இருப்பினும் அவற்றுக்கிடையே ஒற்றுமையுடனும் ஓருங்கிணைந்து வாழ்வதற்குத் தான் ஹிந்துத்வ இயக்கங்கள் முயற்சி செய்கிறது. அதற்கு இரு வேறு சமூஹங்களுக்கிடையே சம்வாதம் தொடர்ந்து நிகழ வேண்டும். இரு வேறு சமூஹங்களிடையே பகை உண்டாகி விட்டது என்றாலும் அந்தப் பகையை போக்க வழி ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது ஹிந்து இயக்கத்தவரின் வேலை.

  பகைமை பாராட்டும் இரு ஹிந்து சமூஹங்கள் எக்காரணம் கொண்டும் சேர்ந்து விடவே கூடாது; அவர்கள் பிரிந்தே இருக்க வேண்டும் என்று பாடுபடுவது கம்யூனிஸ மதவெறி இயக்கங்களின் வேலை.

  ஸ்ரீமான் ஓகை நடராஜன் அவர்கள் இரு சமூஹங்களும் பிரிந்தே இருக்க வேண்டும் என நினைப்பது அவர் உரிமை. பிரிந்த சஹோதரர்கள் இணைய வேண்டும் என நினைப்பது என் அவா. தமிழ்த்ரய விநோதப் பெருமான் என் அவாவை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை உண்டு.

  சிலநாள் முன்பு வரை ஸ்ரீ திருமா அவர்களும் ஸ்ரீ ராமதாஸ் அவர்களும் அரசியலில் இணைந்து தானே செயல்பட்டார்கள். நேற்று ஈ.வே.ரா அவர்களைப் போற்றிய ஒரு அன்பர் இன்று ஹிந்துப்பாரம்பர்யத்தைப் போற்ற விழைகிறார் என்றால் அவரிடம் இருக்கும் ஜாதி அபிமானப்போக்கு என்ற விரும்பத்தகாத குணத்திற்காக அவரிடம் காணப்படும் ஹிந்துப்பாரம்பர்யத்தைப் போற்றும் போக்கினை நான் உதாசீனம் செய்ய மாட்டேன். அவரிடம் இருக்கும் நல்ல மனமாற்றத்தை அடிப்படையாக வைத்து அவரிடம் காணப்படும் (முன்பு காணப்படாத – ஸ்ரீ திருமாவும் ஸ்ரீ ராமதாஸும் இணைந்து தானே இருந்தனர்) ஏற்கவொண்ணாப் போக்கை களைய முற்படுவது ஒருங்கிணைந்த ஹிந்து சமூஹத்துக்காக பாடுபடுவோர் செய்ய வேண்டிய வேலை.

  ஸ்ரீ ராமதாஸ் ஸ்ரீ திருமா — இவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை அடிப்படையாகக் கொண்டு — இவர்களிடம் இருக்கும் ஏற்கவொண்ணாப் பண்புகளைக் களைய ஏன் முனையக்கூடாது.

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஓகை நடராஜன் அவர்களுக்கும் என்னைப்போலவே அகண்டபாரதத்திலும் ஒருங்கிணைந்த ஹிந்து சக்தியிலும் நம்பிக்கை இருக்கும் என்ற ஒத்த கருத்தின் பாற்பட்டு நான் பதிலளித்துள்ளேன். அவரது தனி நபர் நிந்தை மொழிநடைக்காழ்ப்பு போன்ற துர்க்குணங்களை என்னால் உதாசீனப்படுத்தி ஒத்த கருத்துக்களுடன் இயைந்து உரையாட இயலும் என்றால் ……ஒரு காலத்தில் இணைந்து பின்னர் பிரிந்திருக்கும் எனது ஹிந்து சஹோதரர்களான ஸ்ரீ திருமாவும் ஸ்ரீ ராமதாஸும் கூட மீண்டும் இணைந்து செயல்பட முடியும்.

  நேற்று ஈ.வே.ரா வைப் போற்றிய ஒருவர் இன்று எங்கள் தமிழ்த்ரய விநோதப் பெருமானைப் பாட வந்தால் அவனது கோவில் ஆதுரத்துடன் அந்த அன்பரை வரவேற்கும். வரவேற்காது என்று ஸ்ரீமான் ஓகை நடராஜப்பெருமான் கருதினால் அதற்கான ப்ரமாணங்களைப் பகிரவும்.

  தனி மனிதனான என்னை நிந்தை செய்ய விழைவது அதைத் தொடர முனைவது மொழிநடைக்காழ்ப்பில் உகப்பது மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஓகை நடராஜன் அவர்களது விருப்பப்படி. கண்யத்துடன் உரையாடல் நிகழ்த்த முனைவது என் ப்ரயாசை. எனது உரையாடலில் கண்யக்குறைவு இருக்குமாயின் க்ஷமிக்குமாறு அன்பர் அவர்களை விக்ஞாபித்துக்கொள்கிறேன். மொழிநடை எனது உரிமை. அடுத்தவருக்குப் புரிய வேண்டும் என்பது மட்டும் அலகீடு.

  அருணகிரிநாதரும் பெரியவாச்சான் பிள்ளையும் ஜைன சமயத்தில் கமழும் ஸ்ரீபுராணமும் வளர்த்தெடுத்து சாமுவேல் வேதநாயகம் பிள்ளை முதல் இன்றைய பொதிகையில் மணிப்ரவாளத்தில் பைபள் ப்ரசங்கம் செய்யும் பாஸ்டர் சாம் செல்லதுரை வரை இந்த மொழிநடை சமயம் மதம் போன்ற விலங்குகளில் அகப்படாதது. இது ஒழிய வேண்டும் என்று கோடி பேர் ஆசைப்படினும் இது இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவர் இப்புவியில் இருக்கும் வரையிலும் இது இருந்தே தீரும்.

  வேண்டுமானால் ஸ்ரீமான் ஓகை நடராஜன் திருப்புகழை மொழிநடைக்காக வெறுத்து ஒதுக்கலாம். ஓகை நடராஜன் வெறுத்தால் என்ன திருப்புகழை ஓதுவதற்கு இஷ்மித் சிங்க் போன்று மாற்று சமயத்தவர் தயார் தில்லியில்.

 10. டில்லியைச் சேர்ந்த உயர்ந்த உள்ளம் கொண்ட ஹிந்து ஒருவர் பாகிஸ்தானிலிருந்து துரத்தி அடிக்கப் பட்ட 482 தலித் ஹிந்துக்களுக்கு தன் சொந்த செலவில் உணவளித்து ,இருக்க இருப்பிடம் தந்து, அவர்களுக்கு முப்புரி நூல் அணிவித்த மாபெரும் செயலை திருமாவளவன் அறிவாரா?
  ( http://www.agniveer.com, agniveer@facebook.com)

  ( நமது ஹிந்து விரோத அரசு அவர்களுக்கு விசா வழங்க மறுத்து வருகிறது.
  பாகிஸ்தான் திரும்பிப் போனால் அவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? )
  .
  முஸ்லீம்கள் பெரும்பன்மையானால் மற்றவர்கள் -அவர்கள் யாராயிருந்தாலும்- தலித்துகள் உட்பட ஒன்று மதம் மாற வேண்டும், இல்லையென்றால் மேலுலகம் செல்ல வேண்டும் . திருமாவளவனுக்கு இது தெரியாததல்ல .ஆகவே அவர் தன்னை நம்பும் ஒன்றுமறியா, ஏழை தலித்துகளை சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்

 11. தமிழ்நாட்டின் முதல்வராக வரத் தகுதி பெற்றிருக்கும் தமிழர் *அண்ணன்* திருமாவளவனின் பேட்டி (மாலைமலரில் வந்துள்ளது)

  ———————–
  இந்த கடிதத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் கையெழுத்து போட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:–

  குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன.

  அதை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் எம்.பி.க்களிடையே கையெழுத்து வாங்கும் முயற்சி நடந்தது. கடந்த 18–12–2012 அன்று நான் பாராளுமன்றத்தில் இருந்தபோது கையெழுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட சில எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டனர்.

  அதில் நானும் கையெழுத்து போட்டேன். அதில் இருப்பது என்னுடைய கையெழுத்துதான்.

  இந்த மாதிரி தடை விதிப்பதற்கான தார்மீக தகுதி அமெரிக்காவுக்கு கிடையாது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது இந்த மாதிரி முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்க அரசும் இலங்கை அதிபருக்கு வரவேற்பு அளித்தது.

  இருந்தாலும் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது வரவேற்க கூடிய ஒன்று என்பதால் நானும் கையெழுத்து போட்டேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  https://www.maalaimalar.com/2013/07/25131336/i-singed-obama-letter-thirumav.html
  ——————–

  நமக்கு வாய்க்கும் முதல்வர்கள் – வாஹ் வாஹ்.

 12. இவர்கள் தொலைகாட்சியில் தான் எப்பொழுது பார்த்தாலும் ஒன்னு JESUS CALL அல்லது ALLA CALL போன்ற நிகழ்ச்சிகள் எந்நேரமும் பார்க்கலாம். தொலைகாட்சியின் பெயர் தமிழன் என்று வைத்து விட்டு , இப்படிபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்வார்கள். இவர்களை என்ன வென்று சொல்லுவது

 13. படுகொலைசெய்யப்பட்ட திரு ரமேஷின் மரணத்திற்கு இரங்கல்த் தெரிவித்தார்கள் என்ற காரணத்திற்காக திருமாவையும் ராமதாசையும் இந்துமதத்தின் பாதுகாவலர்களைப் போல கருதினால், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மற்றும் பல இஸ்லாமிய ஜிகாதிகளின் அமைப்புகளின் தலைவர்கள் இரங்கல்த் தெரிவித்தாலும் அவர்களையும் இந்துமத அபிமானிகள் என்று கருதுவீர்களா? ராமதாசும் திருமாவும் இந்நேரம் காங்கிரஸ் கூட்டணியில் இனைந்து வளமான அமைச்சர் இலாகவைப் பெற்று இருந்தால், “இதுக்கொலையே அல்ல. ரமேஷ் தன்னைத்தானே வெட்டிக்கொண்டுள்ளார். காவிக்கட்சிகளின் கபட நாடகம் இது” என்று சிதம்பரம் திக் விஜய் சிங்குடன் இணைந்து பேட்டியளித்துக்கொண்டிருப்பார்கள். திருமாவின் ஈழப் போர் நாடகத்தைப் பாரதப் பிறகும் அவரை முதல்வர்ப்பதவிக்கு பொருந்தியவர் என்றக் கருத்து எப்படிதோன்றியது உங்களுக்கு?

 14. குளவி ஓவராக உணர்ச்சி வசப்பட்டு அவ்வப்போது சுவற்றை கொட்ட ஆரம்பித்து விடுகிறது……

  இந்த திருமாவளவனெல்லாம் , தீராவிட கும்பலால் நன்கு மூளைச்சலவை செய்யப்பட்டவர்…… நீங்கள் என்ன குழாயடித்தாலும் ஹிந்து மதத்தின் மீதான காழ்ப்பை அவர் விடப்போவதில்லை….

  இவரை போன்றவர்களை தலைவராக ஏற்பதுதான் உண்மையில் தலித்களுக்கு மிக அபாயகரமானது…..

  அடங்க மறு.அத்துமீறு …என்று சக தலித்தை உசுப்பேற்றிவிட்டு , ராஜபக்ஷேவிடம் குழைந்து பரிசை பெற்று வருவார்…..அரசியலில் தூய்மை பற்றி வாய்கிழியப்பேசிவிட்டு கருணாநிதி கும்பலை தூக்கிப்பிடிப்பார்…..கட்டப்பஞ்சாயத்து செய்வதையே முழு நேர தொழிலாக கொண்டவர்…….. சாதாரண காதல் விவகாரமாக இருந்த திவ்யா – இளவரசன் காதல் விவகாரத்தை முதன்முதலில் பிரச்சினையானதே இவரது கட்சியினரால்தான்……

  இவர் சார்ந்த சமூகம் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டது…..மீதியுள்ள பத்து சதவீதத்தை [ இதர சாதி ஹிந்துக்கள் உடனான மோதலை தூண்டிவிடுவதன் மூலம் ] மதம் மாற்றுவதுதான் இவரது அஜெண்டா…..

  என்னதான் தமிழர்களின் நிலைமை மோசமானாலும் , இவரெல்லாம் தமிழக முதல்வராகும் அளவுக்கு தமிழகம் செல்லாது என்று நினைக்கிறேன்……

  கக்கன் போன்றவர்களையே முன்னுதாரணமாக கொள்வோம்…..

 15. திருமாவளவன் ஒரு தேச துரோகி. இந்த ஆளை பாராளுமன்றதுக்கு அனுப்பியதற்கு கிடைத்த பரிசுதான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இவர் தரும் வெளீப்படையான ஆதரவு. தமிழ் சமுதாயத்துக்கும், தாழ்த்தப்பட்ட நம் உடன்பிறப்புகளுக்கும் திருமாவால் தலைகுனிவுதான். தமிழ் நாட்டின் கரும்புள்ளி இந்த திருமா …

  (edited and published)

 16. தலித் மக்களுக்கு சேவை செய்வதையும், உரிமைகளை பெற்றுத்தர உழைத்ததற்கும், உழைத்துக்கொண்டிருப்பதற்கும் பாராட்டுகள் திருமாவளவனுக்கு என்றும் உண்டு. ஆனால் தேசத்துரோகம் செய்வோருடன் கூட்டு அமைத்துக்கொண்டு தேசத்துரோகத்தை தெரிந்தே செய்யும் திருமாவளவனை பிரதமர் ஆகத் தகுதியுடையவர் என்பதையெல்லாம் கேட்டால் திருமாவளவனே சிரிப்பார். ஏனெனில் அவர் தேசத்தை நாசம் செய்யும் கூட்டத்துடன் சேர்ந்து சுயலபத்துக்கோ, இல்லை வாக்கு வங்கிக்காகவோ செய்யும் செயல்கள் ஏற்புடையதாக இல்லை.

 17. இந்த இஸ்லாமிய கால்நக்கி, காலனீய அடிமை புத்தி திருமாவளவன்தான் தலித்துகள் அத்தனை பேரிலும் தமிழ்நாட்டு முதல்வராகத் தகுதியுள்ள ஒரே நபரா? அய்யா வைகுண்டரையும் அப்பழுக்கற்ற தேசியவாதி கக்கனையும் தந்த தலித் சமூகங்களை இதைவிட கேவலப்படுத்தி எழுத முடியாது.

 18. Very Good article….it’s a duty to remembering the past for the present leaders…

 19. இந்த குளவிக்கு “மீசை முறுக்கி” உடன் கொஞ்சி குலவிட ஆசை போலும். இந்து மதத்தை மிக கேவலமாக பேசிய நல்லவன். அவனை திருந்திய மைந்தன் என்று நினைக்க வேண்டாம். A leopard cannot change its spots. மோடிக்கு நுழைவிசைவு (=visa ) வழங்க கூடாது என்ற letter ல் கையெழுத்து போட்ட உத்தமன். சாதி வெறியை தூண்டும் சாகசக்காரன். Ramadoss is second to none.
  2. நேற்று சன் நியூஸ் டிவியில் விவாத மேடையில் நான்கு எதிரிகளுக்கு(debate நடத்துபவன் உள்பட) ஒரே ஒரு பிஜேபி ஆள் பதில் சொல்ல வேண்டி உள்ளது. ரொம்ப கஷ்டம். பிஜேபி காரர்கள் ஏன் இப்படிபட்ட debate களில் பங்கேற்கவேண்டும்? Debate களில் கலந்துகொள்ள இவர்களுக்கு ஏதும் பணம் தருகிறார்களா? அல்லது தங்கள் முகம் டிவியில் தினம் வரவேண்டும் என்று நினைகிரார்களா? ஒரு தெருவில் இருக்கும் 4 நாய்கள அடுத்த தெருவை சேர்ந்த ஒரு நாய் வந்தால் அந்த நான்கும் ஒன்று சேர்ந்து அந்த ஒரு நாயை பிலு பிலு என்று பிடித்து கொள்ளும். அதனால் அந்த ஒற்றை நாய் அங்கே போனது தவறு என்பது வாதம். (குறிப்பு:: இதற்கு நாய் உதாரணம் தான் கிடைத்ததா என்று நினக்கவேண்டாம் விஷயத்தை புரிந்த கொண்டால் போதும் அதற்காக தன்னை ஒரு நாயாக கூறுகிறார்களே என்று வருதபடவேண்டாம்.) அப்படி போய்தான் தீருவேன் என்று அடம் பிடித்தால் ஒரு subject குறித்து விவாதம் என்றால் அந்த பொருள் குறித்து ஆதரவாக 2 பேரும் எதிராக 2 பேரும் வேண்டும் என்றாவது ஒரு condition போடுங்கள்..அப்படி எதுவும் கூறாமல் அங்கே போய் உட்கார்ந்தால் எப்படி? Do you understand what I say?
  2. நேற்று “தந்தி டிவியில் “ஆயுத எழுத்து ” நிகழ்ச்சியில் நடந்த விவாதம் மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அமெரிக்கா என்ன சொர்க்க பூமியா?
  அங்கே மோடி போயே ஆகவேண்டுமா? திரு ராஜ்நாத் சிங் ஏன் தேவை இல்லாமல் அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்கவேண்டும்.? I am of the opinion that Mr modi should not visit America even if he happens to become PM of India. அவர் யார் சொன்னாலும் விசாவிற்கு மனு போடவே கூடாது. இதில் அவர் உறுதியாக இருக்கணும். நல்லவர்கள் போல் நடிக்கும் “அராபிய அடிமைகள்” (=முசல்மான்கள்) எவ்வளவு கீழ்மையான வேலைகளை செய்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. இவை எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியான சுயேச்சை MP யான துலுக்கன் Mohammed Adeep .என்பவனை சும்மா விடக்கூடாது நமது பிஜேபி கட்சியினர். அதோடு அதில் கையெழுத்து போட்டு விட்டு இப்போது இல்லை என்று மழுப்பும் “துலுக்க தாசர்”களையும் (=கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சிகாரர்கள்) சும்மா விடகூடாது. இது போன்ற Fraud பசங்கள் எல்லாம் MP கள் ஆகிவிட்டால் இந்த நாடு விளங்குமா? இவர்கள் நாட்டை காட்டி கொடுக்கும் கயவாளிகள். அப்படிப்பட்ட கயவாளிகளில் ஒருவன் தான் “மீசை முறுக்கி” என்பதை உணருங்கள்.
  4. ஜெயா டிவியில் ஒரே கருது கொண்ட 3 பேரை உட்கார வைத்து Debate நடத்துகிறார்கள். அது போல Lotus News டிவியில் அது போல செய்தால் என்ன? நன்றாக விளம்பரபடுத்த வேண்டும் ஆரம்பத்தில். அதற்கு பிறகு பிரபலம் ஆகிவிடும். பிஜேபி கட்சி நடவடிக்கை எடுக்குமா? (எனக்கு ஒரு சந்தேகம். அதாவது இந்த இணையத்தை நமது பிஜேபி கட்சியின் சென்னை தலைவரகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்கிறார்களா? )
  அப்போதுதான் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல பணி செய்ய முடியும்.

 20. குளவியின் அருமையான வ்யாசம் இது.

  உத்தபுரத்தில் ஹிந்து இயக்கங்கள் பணியாற்றி ஒருங்கிணைந்த ஹிந்து சக்தியை நிலை நாட்டியதை நான் உறுதியான அளவுகோலாகக் கொள்வேன்.

  ஹிந்து மதத்தைப் பேணுபவர்களில் தலித் சமூஹத்தைச் சார்ந்த சஹோதரர்கள் மற்றைய சமூஹத்தைச் சார்ந்த சில சஹோதரர்களால் தொல்லைக்கு உள்ளாவதால் தலித் சஹோதரர்களிடம் அதிக கரிசனம் மிகவும் அவசியமே. ஆயினும் ஹிந்து மதத்தைச் சார்ந்த அனைத்து சஹோதரர்களையும் ஒருசேர இணைக்கும் ஹிந்துக்களின் முயற்சியில் உத்தபுரம் பிள்ளையார் சுழி. அது முற்றுப்புள்ளி அல்ல.

  \\ இந்த இஸ்லாமிய கால்நக்கி,\\

  குளவி இந்த பாஷையில் பேசவில்லையானாலும் ததாகத அம்பேத்கரைத் துணைகொண்டு இந்த விஷயத்தை… யார் காலை அண்டுதல் தகாது என நறுக்குத் தெரித்தார் போல் கொட்டியுள்ளதே.

  \\ திருமாவளவன்தான் தலித்துகள் அத்தனை பேரிலும் தமிழ்நாட்டு முதல்வராகத் தகுதியுள்ள ஒரே நபரா? அய்யா வைகுண்டரையும் அப்பழுக்கற்ற தேசியவாதி கக்கனையும் தந்த தலித் சமூகங்களை\\

  குளவியின் வ்யாச சமாப்தம்:-

  \\ அண்ணன் திருமாவளவன் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தகுதியான வெகுசில அரசியல்வாதிகளில் ஒருவர். அது சமூக ஒருங்கிணைப்பின் மூலம் பாபா சாகேப் அம்பேத்கரின் வாரிசாக நிகழட்டும். பெருந்தலைவர் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜானந்தரும் ஐயா வைகுண்டரும் பாரதியும் உருவாக்கிய பாதையில் நிகழட்டும். தீராவிடத்தின் பாதையில் அல்ல.
  வேதனை கலந்து இன்னும் நம்பிக்கையுடன்\\

  ஒரு மனிதனிடம் குறை இருந்தால் அவன் குறைகளிலேயே மூழ்கிப்போவான் என்று எப்படி நினைக்க இயலுமோ தெரியவில்லை?
  குளவி ஒன்றும் ஜிஹாதி சஹிதமாகவோ அல்லது த்ராவிட சாக்கடை சகிதமாகவோ ஸ்ரீ திருமாவளவனை முதல்வராக அக்ஷதை போடவில்லையே. ததாகத அம்பேத்கர், ஸ்ரீ எம்.சி.ராஜா, ஸ்வாமி சஹஜானந்தர் மேலும் ஐயா வைகுண்டர் மற்றும் பாரதி பாதையில் தானே ஸ்ரீ திருமாவை முதல்வராக வர தன் அபேக்ஷையைத் தெரிவித்துள்ளது. அப்படி ஸ்ரீ திருமாவளவன் முதல்வராகின் அருணகிரிநாதருக்கு என்ன ஆக்ஷேபம் இருக்கவியலும்? அப்படி ஸ்ரீ திருமாவளவன் ஆகவே முடியாது என்ற கருத்தை ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்குப் பாடுபடும் ஒரு நபரால் சொல்ல இயலாது.சொல்லவும் கூடாது.

  \\ சாதீயத்தையே தனது அரசியல் கருவியாகக் கொண்ட ராமதாசையும் ஒடுக்கப்பட்ட ராமதாசைப் போன்றோரால் வஞ்சிக்கப்படுகிற சமுதாயத்தையும் ஒன்று சேர்ந்து செயலாற்றச் சொல்லும் யோசனை ஏன் வருகிறது? \\

  அதே அலகீடு மேற்கண்ட கருத்துக்கும். ஜாதீயத்தை………யே………..அல்ல…..இன்று தன் ஹிந்துப்பாரம்பர்யத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டுள்ளார் மருத்துவர் ஐயா……..ஜாதி ஹிந்து சஹோதரர்களும் தலித் ஹிந்து சஹோதரர்களும் ஒன்றிணைவது தானே ஒருங்கிணைந்த ஹிந்து சக்தி……ஹிந்துப்பாரம்பர்யம் போற்றுதல் ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்குத் தேவையான விஷயம் தானே……..ஜாதீயத்தை………..யே…….கருவியாகக்கொள்ளுதல் தவறு தான்…… உத்தபுரத்தில் அது போன்ற தவறைக் களைய முடியுமென்றால் வட தென் தமிழகத்தில் அது ஏன் முடியாது?

  \\நீங்கள் ஒன்றுசேரச் சொல்லும் ராமதாசும் இஸ்லாமிய ஜல்லி அடிக்க சற்றும் தயங்காதவர்தான். சிலநாள் முன்புவரையிலும் கூட பெரியார் பெரியார் என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தவர்தான்.\\

  அது எப்படி முன்பின் முரணாக ஓகை நடராஜப்பெருமானால் பேச முடிகிறது. நேற்று மருத்துவர் ஐயா பெரியார் பெரியார் என்று பேசியது நிஜம் என்று சொல்கிறார். சரி. இன்று அவர் தன் ஹிந்துப்பாரம்பர்யத்தைப் போற்றுவது மட்டிலும் பொய் என்று ஏன் கொள்கிறார். நேற்று உண்மை இன்று பொய் என்பது நடராஜப்பெருமானின் அலகீடு என்றால் நாளையைப்பற்றிய நம்பிக்கை எப்படி வரும். சரி. நேற்று நிஜம் என்றால்…… நிஜமான நேற்றில் மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் சஹோதரர் ஸ்ரீ திருமாவுடன் நேற்றுவரை ஒருங்கிணைந்து தானே அரசியலில் உலா வந்தார்……அது அவர் அலகீட்டில் இடிக்கிறதே. நம்பிக்கை மற்றும் இணக்கத்தை அலகீடாக வைத்தால் நல்ல எதிர்காலமும் நம்பிக்கையான கருத்துக்களும் முன்வரும். வெறுப்பும் காழ்ப்பும் அலகீடாக அமைந்தால் நிந்தையும் முன் பின் முரண் கருத்துக்களும் மட்டிலும் எஞ்சி நிற்கும். நடராஜப்பெருமானுக்கு வணக்கங்கள். சிவபெருமானது நடுநெற்றிப்பொட்டு எமது மணிப்ரவாளத்துப்பொட்டு. திலகம். அது உங்களுது நிந்தைக்குப் பாத்ரமாகலாம். அதுவே எமது ஸ்துதிக்குப் பாத்ரமானது. வந்தனம். நீங்கள் கண்யம் குறைந்தாலும் நான் கண்யம் குறையும் படி எமது முருகப்பெருமான் என்னை வழநடத்தக்கடவனல்லன்.

  ஒருங்கிணைந்த ஹிந்து சக்தி……….சமூஹ நல்லிணக்கம்………..இவை இலக்கு என்றால்……….ஜிஹாதி சக்திகளை விலக்கி……ஜாதீயப் பார்வையிலிருந்து விலகி……. ஸ்ரீ திருமாவும் ஸ்ரீ ராமதாஸும் இணைந்து பணியாற்ற வேண்டும்……….அவ்வளவு மட்டும் ஏன்……….ஜிஹாதி சக்திகள் எனப்படும் பாதை தவறிய சக்திகள்……படுகொலை மனப்பான்மையை விடுத்து……..தங்களுடன் கூட வாழும் ஹிந்து சஹோதரர்களுடன் பகைமை விடுத்து அன்பு கொண்டு………தோளொடு தோள் கொடுத்து தேசமுன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும். அதுவே அசைக்க முடியாத உறுதியான ஒருங்கிணைந்த ஹிந்து சக்தி……….இதைத்தான் டாக்டர்ஜியும், குருஜியும், சாவர்க்கரும், அம்பேத்கரும் வலியுறுத்தியுள்ளனர்……சங்கமும் இதையே வலியுறுத்தி வந்துள்ளது.

  \\\ இவர் சார்ந்த சமூகம் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டது…..\\\

  ஐயன்மீர் ஸ்ரீமான் சான்றோன், அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் இன்று நம்மிடையே இருப்பின் அந்த தொண்ணூறு சதமானத்தையும் தாய்மதமான ஹிந்து மதத்திற்குக் கொணர்ந்து தீருவேன் என்று சொல்வார். அந்த நம்பிக்கையை நாம் ஏன் இழக்கிறோம். அந்த நம்பிக்கையை அளிக்கத்தானே ஹிந்து இயக்கங்கள். அதற்குத்தானே மானனீய ரமேஷ் ஜீ பாடுபாட்டார். எங்கள் மதிப்பிற்குறிய நீங்களும் பாடுபடுகிறீர்கள்

  அன்பின் ஸ்ரீ ராஜு, நாம் பகிரும் கருத்துக்கள் மாற்றுக்கருத்துக் கொண்டவரை மறுதலிப்பதாக இருப்பினும் அறவே கண்யம் குறையலாகாது. தங்களது கருத்துக்கள்- 25ம் திகதியது– திருத்தப்பட்டு பதிப்பிக்கப்பட்டன என்று வாசிக்கையில் அயர்வு வருகிறது. இதை விதிவிலக்காகவே கருதுகிறேன். வேறு வ்யாசத்தில் தங்கள் உத்தரத்தில் காணப்பட்ட கண்யத்தைக் குறையாது தொடரவும். தவறான போக்கை குளவி எங்காவது கொட்டாது விட்டுக்கொடுத்துள்ளது? ஆனால் அதன் பாஷையைப் பாருங்கள்? குளவி ஏன்? உங்களது 13 பாயிண்டு அருமையான உத்தரத்தின் பாஷை. அப்படியே தொடருங்கள்.

  மிகவும் சோகமான தருணத்தில் உள்ளோம். ஆனால் பண்பு பிறழோம்.

  கண்யக்குறைவான மிகப்பல உத்தரங்களை அப்படியே திருத்தாது பதிப்பித்த ஆசிரியர் குழுவின் போக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. வ்யாசத்தின் சாரம் அது போன்ற உத்தரங்களால் மிதிபடுகிறது என்றால் மிகையாகாது. என்னுடைய இந்த கருத்தில் காரமிருந்தால் க்ஷமிக்கவும்.

  வெற்றி வேல் வீர வேல்.

 21. திருமாவளவன் தமிழக முதல்வராகத் தகுதியானவர் என்று இந்தத் தளத்தில் கட்டுரை வெளியாகிறது. அவரை மிக மிக லேசாக விமர்சனமும் செய்கிறது.

  இந்துக்களின் பண்டிகைகள் தமிழர்களின் பண்டிகைகள் கிடையாது என்று திருமாவளவன் சொன்னார். எங்களுடைய கோவில்களுக்கு அவர் வந்ததே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களையே அவர் பேசி வருகிறார். ஒரு முறைகூட இந்துக்களுக்கு ஆதரவாக அவர் கருத்துச் சொன்னதோ குரல் கொடுத்ததோ இல்லை. தன்னுடைய சாதி மக்களை இந்து மதத்திற்கு எதிரானவர்களாகவே அவர் உருவாக்கி வருகிறார்.

  இந்துக்களை அழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லுகிற, இந்துக்களை கொல்லுகிற இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். கிருத்துவர்களின் மதமாற்ற வேலைகளையும் அவர் எதிர்ப்பது கிடையாது.

  இந்தக் கட்டுரையில் அவரைப் பற்றிய விமரிசனமும் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இதே போன்ற விமரிசன நிலையைத்தான் அனைத்துத் தலைவர்கள் மேலும் கட்சிகள் மேலும் இந்தக் கட்டுரை ஆசிரியர் கடைபிடிக்கிறாரா ? அவரது முந்தைய கட்டுரைகளைப் படித்தால் அப்படி இல்லை. மற்ற கட்டுரைகளில் குளவி எழுத்தாளர் கொட்டினார். இந்தக் கட்டுரையில் குளவி எழுத்தாளர் கொஞ்சுகிறார். படிக்கவே வருத்தமாக பரிதாபமாக இருக்கிறது.

  இந்தக் கட்டுரையைப் படிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் யாரும் தங்கள் தலைவரின்மேல் குறை இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தலித்துகளின் எதிரியான பார்ப்பனீய இந்துத்துவாவை ஒழிக்க முஸ்லீம்களின் ஆதரவு நமக்கு வேண்டும் என்கிற அவரது பிரச்சாரத்தை அவர்கள் நம்புகிறார்கள். அவரைமீறி பேசுகிற தைரியம் அங்கு யாருக்கும் கிடையாது.

  எல்லா தலித் சாதியினரும் ஒன்றாக இணைந்து விடக்கூடாது என்பதற்காகப் பல தில்லாலங்கடி அரசியல்கள் செய்தவர் அவர்.

  தெலுங்கு பேசும் தலித்துகளான நாங்கள் தமிழர்களே இல்லை என்று அவர் தன்னுடைய சாதி சனங்களுக்கு போதித்து வருகிறார். இவரது அடாவடியான அரசியல் செயல்பாடுகளால் எங்களுக்கு இடையே முன்பு இருந்த ஒற்றுமை இப்போது இல்லை. அவரது ஆதிக்கத்தில் இருக்கும் இடங்களில் இருந்து மற்ற சாதியினரை அவர் விரட்டி வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அங்கே வேறு யாரும் அவர் கட்சித் தலைவர்கள் அனுமதி இன்றி போக முடியாது. ஆனால், கிருத்துவர்களும் முஸ்லீம்களும் போக முடிகிறது. ரியல் எஸ்டேட் பஞ்சாயத்துக்களில் அவர் ஈடுபட்டு வருவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

  தமிழ்நாட்டு தலித்துகளில் அவர்தான் மிகப் பெரிய பணக்காரர் என்றும், ஒரு தொழிலதிபருக்கு இணையான செல்வம் அவரிடம் சேர்ந்து இருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன.

  அவருக்கு ஆதரவான நிலையை இந்தத் தளம் கடைப்பிடித்து வருவதால் மற்ற தலித் சாதியினரால் இந்துத்துவாவானது வெறுக்கப்படும் கொள்கையாகப் பார்க்கப்படுமே ஒழிந்து, கொஞ்சம்கூட ஆதரவு கிடைக்காது. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதால் மற்ற எல்லா தலித் சாதிகளாலும், மற்ற சாதிகளாலும் இந்துத்துவம் ஒதுக்கப்படும்.

  இப்படி சொல்லுவதற்கு குளவி எழுத்தாளர் என்னை மன்னிக்க வேண்டும். நண்பர்கள் யார் முதுகில் குத்தும் எதிரிகள் யார் என்பது தெரியாமல் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது.

  சென்றாயப் பெருமாள், பெங்களூர்

 22. திரு.சென்றாயப் பெருமாள் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்….

  சமீபத்திய தருமபுரி காதல் விவகாரம் பற்றிய விவாதம் ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம்……

  கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவத்தை , ஒத்திசைவு திரு.ராமசாமி அவர்கள் தமது தளத்தில் குறிப்பிட்டிருந்தார்……..அதை சற்று படியுங்கள்…….

  // ஒரு இணைப்புச் சாலை வழியாக மல்லச்சந்திரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம் – ஹோசூர்-கிருஷ்ணகிரி சாலையை நோக்கி. காலை மணி 11. திடீரென்று அந்தச் சிறு சாலையில் விர் விர்ரென்று SUV வண்டிகள் (மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா சுமோ, டாடா சபாரி இன்னபிற மகாமகோ வாகனங்கள் – மொத்தம் 11 அல்லது 12 இருந்திருக்கலாம்) எங்கள் பள்ளிச் சிறார்கள் நிரம்பிய சிறு வாகனங்களை அபாயகரமாக இடமிருந்தும் வலமிருந்தும் முந்திச் சென்றன – ஒரே புழுதிப் படலம்.

  இந்த பிணிவகுப்பில் முதல் வாகனங்கள் திமுகவினுடையவை. பின் காங்கிரஸ். பின் பாமக வண்டிகள். கடைசி இரு வண்டிகள் தொல்(லை) திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்.

  இந்தப் படை ஒரு சாலையோர உடம்பொடுங்கின ஏழை தலித் கிராம மக்களின் கூட்டத்தருகில் நின்றது.

  ஒரு சுமோவிலிருந்து இறங்கிய ‘ஊர் கவுடர்’ – “அல்லாம் எப்டி இருக்கீங்க? ‘வேணுங்றது’ கிடச்தா? ” என்றபடி இறங்கினார்.

  ஒரு குளிரூட்டப்பட்ட வண்டியிலிருந்து வெளியே வராமல் அமைச்சர் முல்லை வேந்தன், இப்பாவப்பட்ட மக்களை நோக்கி கைஅசைத்து, அலுங்காமல், நலுங்காமல் கை விரித்து ‘உதய சூரியன்’ காட்டினார். திமுக வினரால் கூட்டி வரப்பட்ட உதிரிகள் விசிலடித்தனர்.

  பின்பு இன்னொரு சுமோவிலிருந்து கட்டு கட்டாக திமுக நிறங்களுடைய மப்ளர்கள் (கருப்பு-சிவப்பு) கூட்டத்தை நோக்கி விட்டெறியப் பட்டன. அத்தலித் மக்கள் ஒருவருடன் ஒருவர் முண்டிக்கொண்டு, அவசரம் அவசரமாக தங்களுக்கு ஒரு துணியாவது கிடைக்குமா என்று அல்லாடினர். ஊர் கவுடர் அவர்களை வெறுப்புடன் பார்த்தார்…

  நான் சிறிது தள்ளி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் ‘தொண்டர்களுடன்’ பேசினேன் – இதை, – மமதையுடன் நாய்களுக்கு விட்டெறியும் ரொட்டித் துண்டுகளைப் போல திமுகவினர் அம்மக்களை அசிங்கப் படுத்துவதை – சுட்டிக் காட்டி, இப்படி உங்கள் மக்களை பிச்சைக் காரர்கள் போல உதாசீனம் செய்கிறார்களே, ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

  அதற்கு அவர்கள் “பெருசு, இந்த ஜனங்க இப்படித்தான், இவங்க தெளுங்கனுங்க, ஆடு ஒட்ரவனுங்க. தமிள் ஆதி திராவிடர் இல்லை – எங்க மக்களை இப்படி செஞ்சா பொறுத்துப்போமா என்ன ? “., என்று சொன்னார்கள். “இருக்கலாம், ஆனால் இவர்களும் தலித்துகள் தானே” என்றேன். அதற்கு அவர்களில் ஒருவர் வண்டி ஓட்டுனரிடம், “வண்டியை எட்றா!” என்றார்…

  இச்சமயம் அந்த பாவப்பட்ட கூட்டத்திலிருந்து வந்த ஒரு வேகமான இளைஞர், இவர்களிடம் கை குலுக்கிப் பரவசமாகி “திருமா வாழ்க” என்றார். நான் வி.சி. ‘தொண்டர்களைப்’ பார்த்தேன். அவர்கள் திரும்பி வேறு எங்கோ பார்த்தனர்…

  இவர்களா தலித் இயக்கத்தவர்கள்? இவர்களா அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போடுவது? இவர்களா சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்கப் போகிறார்கள்? பதர்கள்.- அவர்களின் வாய்ப்பேச்சு வீரத் தலைவன் எவ்வழி, இத்தொண்டர்கள் அவ்வழி.//

  சாதி படி நிலையில் தங்களுக்கு கீழ் உள்ள அருந்த‌தியர்களை, ”சமூகப் புரட்சியாளர்கள்” நடத்திய லட்சணத்தைப் பாருங்கள்……… வன்னி அரசுவின் சாதியைச் சேர்ந்த பெண்ணை ஒரு அருந்ததிய இளைஞர் காதலித்திருந்தால், அப்போது தெரியும் ……இவர்களின் உண்மையான முகம்…….

 23. சிறுத்தைகாரர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அடியொற்றி நடப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவருக்கு நேர்மாறாகச் செய்கிறார். அவர் இஸ்லாம் மதத்திற்கோ கிறிஸ்தவ மதத்திற்கோ மாறவில்லை. புத்த மதத்திற்கு மாறினார். ஆனால் இந்த “மீசை முறுக்கி” SC இனத்தவரை கிறிஸ்தவ இனத்திற்கு மத மாற்றம் செய்ய ஒரு agent ஆகச் செயல்படுகிறார் இதுதான் அவர் வழியில் நடப்பதற்கு அடையாளமா? இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இஸ்லாம் மதத்திற்கு வால் பிடிக்கிறார் “அடங்க மறு -அத்து மீறு” என்ற இவரது கோஷத்தின் மூலம் இவர் ஒரு Human being இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் இவர் Flex board களில் சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களின் பக்கத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.

 24. நமது பிரச்சனிகளை நமக்குள் பேசி சமாதனம் செய்து கொள்வதே அந்த தேசத்தின் சிறந்த குடிமகனாக இருக்க முடியும்.anaal
  இதனை நன்கு கட்ற்றாரிந்த்வர் mp கள் எனபடுபவர்கள் உச்ச நிதிமன்றதல் குற்றமற்றவர் என்று நிருபிகபடவரை, ஒரு மாநில தொடர் முதல்வரை அந்நிய தேசதிரடிம் குற்றம் chattuvadhu
  என்பது தேச விரோத செயல் ஆகும் . நமது desa
  தை சார்ந்த ஒரு சாதாரண குடிமகனை அந்நிய தேசத்தவர் சோதனை செய்வத் குற்றமாக கருதுபவர்கள், America வை உலகின் சர்வதிகாரஉருவாக படுத்தி பேசுபவர்கள் இப்போது மட்டும் என்ன அமெரிக்காவின் மிது பாசமழை பொழிகிறார்கள் இவர்கள் மோடி குட்ட்ராவளி என கூறி அந்நிய தேசதிர்டம் குறுவது தேசப்பற்றில்லாத தேசவிரோத செயல் , அம்பேத்கர் அரசியல் சட்டமேதையை பின்பற்றும் நாம் அனைவரும் ஒன்றை மறந்து விட்டோம் , அண்ணல் அவர்கள் சாதியை ஒழிக்க அந்நிய கலாச்சாரத்துக்கு அடி பணிய வில்லை மாறாக நமது பாரத கலாச்சாரத்தில் இருந்து வழி தேட வேண்டும் என்று கடைசி வரை உறுதியாக இருந்துள்ளார்

 25. செங்காயப் பெருமாளுக்கு ஒரு சபாஷ்.

 26. திருமா மற்றும் ராமதாஸை ஆதரிப்போர் கவனத்திற்கு

  தெலுங்கானா மாநிலம் அமைவது இன்று மாலை (30.7.2013) தெரிந்துவிடும். அணைத்து அரசியல்வாதிகளின் கண்களும் தெலுங்கானா நோக்கியே உள்ளன.

  தெலுங்கானா மாநிலம் மட்டும் அமைந்துவிட்டால், அரசியலில் இப்பொழுது முகவரி இல்லாத ராமதாஸும் திருமாவும் வடத்தமிழ்நாடை தனி மாநிலமாக்க அரசியல் செய்யப்போவது உறுதி. சாதி அரசியலை அறிமுகம் செய்தவர்களுக்கே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகரராவ் மாநிலத்தைப் பிரித்து அரசியல் செய்யும் வித்தையை கற்றுக்கொடுக்கிறார்.

  அதன்பின்னர், கடலூரின்ப் பெயர் தோமையார்புரம் என்றும் விழுப்புரம் ஹமீதாபாத் என்றும் மாறலாம்.

  கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

 27. மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பது பற்றி பிறகு பார்க்கலாம் திருமாவளவன் அவர்களே, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ரஜபக்சேவுக்கு, ஆயுதங்களை அள்ளி வழங்கிய காங்கிரஸ் கூட்டணியில் தானே நீங்கள் இருந்தீர்கள். ரஜபக்சே நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்துகொண்டிருந்தானே அப்போதும் நீங்கள் காங்கிரஸ் கூட்டணியில் தொங்கிக்கொண்டிருந்தீரே. ஓ உங்களுக்கு குஜராத் முஸ்லீம் மட்டும்தான் பாசமா? தமிழர்கள் மேல் இல்லையா. சரி விசயத்திற்கு வருவோம் எந்த கட்சி மத்தியில் ஜெயித்தாலும் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வாரே கருணாநிதி (அதற்கு இப்போது அச்சாரம் போட்டுக்கொண்டிருக்கிறார் அதனால்தான் மோடிக்கு எதிராக கையெழுத்து போட்டவர்களை கட்சியை விட்டு நீக்க போகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்) அப்போது நீங்களும் கூட்டணி கட்சி என்ற முறையில் மோடி காலில் விழுவீர்களா? கடந்த ஆண்டுகளில் சோனியாவின் காலில் விழுந்து கிடந்ததை போல!

 28. இந்த இஸ்லாமிய கால்நக்கி, காலனீய அடிமை புத்தி திருமாவளவன்தான் தலித்துகள் அத்தனை பேரிலும் தமிழ்நாட்டு முதல்வராகத் தகுதியுள்ள ஒரே நபரா?
  ////அய்யா வைகுண்டரையும் ///////
  அப்பழுக்கற்ற தேசியவாதி கக்கனையும் தந்த தலித் சமூகங்களை இதைவிட கேவலப்படுத்தி எழுத முடியாது./////

  !)AYYA VAIKUNDAR DALITHA?
  ITHU KUDA THERIYATHA NEENGAL YEPPADI VIMARSANAM SEYYURINGA

  2)YAAR KATTAPANCHAYATTU?
  UNMAI UDUPPU ANIYATHA NERUPPU.
  ODUKKAPATTA MAKKALUKKAAGA PORAADUM THALAIVAN METHU SETRAI VAARI VISATHENGA?
  ATHU SARI,KATTAPANCHAYAT YENNRAAL YENNA?
  AMERICA SEYYVATHARKU PERU YENNA?
  FIVE STAR HOTELIL NADUKKUM KODIKKANAKKANA PERUNKALUKKU PERU YENNA?
  NALLA PANCHAYATTA?

  3)THIRUMAAVALAVAN AVARKALUKKU MUTHALVAR AGA YENNA THAGUTHI ILLAI?
  APPADI KULAVI SONNATHUM YEN VEDIKKIRIRKAL?
  ODUKKAPATTAVAN NAATTAI AALA KUUDATHA?

  4)VIMARSANAM SEYYTHAVARKALAI PANIVODU KETKIREN.AVARUDAN PAZHAGI PAARUNGKAL.AVARAI PADIYUNGAL ALLATHU AVAR EZHUTHAI PADIYUNGAL.APPURAM VIMARSANAM SEYYUNGAL

 29. பெயரில் மதம் தெரியக்குடாது என தன் தந்தை பெயரையே மாற்றியவர் திருமாவாளவனார்.

  ஆனால் குல்லா போட்டு ரம்ஜான் கஞ்சிக்கு செல்வார். பாதிரிகளுடன் செல்வார்.

  அம்பேத்காரையே விட்டுக்கொடுப்பார். ஆபிரகாமிய மதங்களின் ஆணிவேர் மோசே சட்டங்கள் மோசே எழுதவில்லை என பைபிளை கொண்டு சொல்வதை எல்லோரும் படிக்கவேண்டும்.
  https://chennaipluz.in/pivotx/?e=2#body-anchor

 30. திருமாவளவன் அவர்கள் அம்பேத்கார் வழி நடப்பவர் என்பது உண்மையானால் அவர் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடாது. புத்த மத வழிபாடுகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் புத்தம் கடவுள் நம்பிக்கை பற்றி மவுனம் சாதிக்கிறது. திருமாவுக்கு பகுத்தறிவு என்பது இல்லை என்பதால் தான் அவர் ஆபிரகாமிய மோசடிகளின் பின்னால் சென்று மதமாற்ற ஏஜெண்டுகளின் வால் பிடித்து வாழ்கிறார். இது ஒரு வாழ்வா ?

 31. குழவியின் அங்கலாய்ப்புகள் தமாஷாக இருக்கின்றன. குலவியிடம் கேட்ட்க்கபடும் கேள்விகளுக்கு கிருஷ்ணகுமார் பதில் அளிப்பதை பார்த்தால் சந்தேஹமாக இருக்கிறது.செங்காய பெருமாள் பதில் குளவிகளின் கண்களை திறக்கட்டும்.திருமா ஒன்றும் ஒட்டுமொத்த தலித்துகளின் பாதுகாவலநல்ல. அது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க குழவிகள் அரும்பாடு படுவது தெரிகிறது. சுயநல வாதிகளுக்கு அம்பேத்கார் தன சமூகம் எல்லாமும் வியாபாரத்துக்கான பொருட்கள்தான். எந்த விதத்திலும் ஹிந்து சமுதாயத்திற்கு நன்மை செய்யாத இது போன்ற கயமை அரசியல்வாதிகளை தூக்கி பிடிப்பதை போன்ற கட்டுரைகளை தமிழ் ஹிந்து வெளியிடுவது அதன் மேல் உள்ள நம்பிக்கையை போக செய்யும்.

 32. \\ குழவியின் அங்கலாய்ப்புகள் தமாஷாக இருக்கின்றன\\
  \\ குலவியிடம் கேட்ட்க்கபடும் கேள்விகளுக்கு கிருஷ்ணகுமார் பதில் அளிப்பதை பார்த்தால் சந்தேஹமாக இருக்கிறது.\\
  \\ செங்காய பெருமாள் பதில் குளவிகளின் கண்களை திறக்கட்டும்\\

  ஸ்ரீமான் பாலா, குழவி, குலவி, குளவி………ம்……..

  சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். வழியில் ஆந்த்ரா பகுதியை கடக்கையில் பொதுவிலான பேச்சுகளில் கேள்விப்பட்ட விஷயம்……..ஆந்த்ராவில் ரெட்டி சமூஹத்தில் மிகப்பெரும்பான்மையினரை க்றைஸ்தவர்களாக மாற்றி விட்டார்கள் என …..என் ஆந்த்ர ஹிந்து ரெட்டி சமூஹ மித்ரர்களிடம் விஜாரித்ததில் இது அபாண்டப் புளுகு என்றார்கள். இப்படி சொல்லிக்கொண்டே இருந்தால் அப்படியே ரெட்டி சமூஹத்தில் பெரும்பான்மையினரை க்றைஸ்தவர்களாக மாற்றிவிட முடியுமே என்பது மதமாற்ற வ்யாபாரிகளின் உத்தியாம்………

  ஸ்ரீ திருமா பற்றி குழவி/குலவி/குளவி அல்லது க்ருஷ்ணகுமார்……….யாருமே…… அவர் செய்யும் அடாவடிகளையோ அல்லது மாற்று மதத்தவருடன் கொஞ்சிக்குலாவுவதையோ ச்லாகிக்கவில்லை. அப்படி ஒரு வாசகம் அல்லது அரை வாசகம்…..என்னாலோ அல்லது குளவியாலோ எழுதப்பட்டிருந்தால்….. அதை பாலா இங்கு வாசித்திருந்தால் பகிரலாமே. அல்லது அவர் விஷயமாக ச்லாகிக்கப்பட்ட விஷயங்களில் அபிப்ராய பேதம் இருந்தால் அதைத் தெளிவு படுத்துங்களேன்.

  ஈழத்துச் சிவாலயங்களுக்கு அவர் குரல் கொடுத்தது ஊரறிந்த விஷயம் தானே. எனக்கு அது கசக்கவில்லை. சிவாலயங்களில் அக்கறை உள்ள யாருக்கும் அது கசக்கலாகாதே. அல்லது டமிலக டமில் ட்ராமாபாஜிகளின் மத்தியில் லோக்சபையில் அவர் தமிழில் பேசி வருவது கசக்கிறதா?

  ஒரு மனுஷ்யனிடம் விரும்பத்தகாத விஷயங்கள் இருந்தால் அதற்காக வேண்டி அவரிடம் காணப்படும் நல்ல விஷயங்களையும் அறவே விஸர்ஜனம் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. Thats like throwing the baby out with bathwater.

  ஜாதிஹிந்துசஹோதரர்கள் மற்றும் தலித் ஹிந்து சஹோதரர்கள் இவர்களை ஒருங்கிணைக்க ஹிந்து இயக்கங்கள் உத்தபுரத்தில் எடுத்த முயற்சி ஒரு பிள்ளையார் சுழி என்பது என் புரிதல். ஒருவேளை தாங்கள் அதை முற்றுப்புள்ளி என்று புரிந்து கொண்டீர்களோ?

  குளவியின் முந்தைய பரமக்குடி வ்யாசத்திலும் இந்த வ்யாசத்திலும் அது தலித் ஹிந்து சஹோதரர்களுக்கு மட்டிலும் ரீங்காரமிடும். அந்த வ்யாசமாக இருக்கட்டும் இந்த வ்யாசமாகட்டும் என் அபிலாஷை அனைத்து ஹிந்து சமூஹ மக்களும் ஒருங்கிணையும் (உத்தபுரம் போன்ற) ஒரு சக்தி பற்றி. பாலாவுக்கு அது எள்ளி நகையாடப்பட வேண்டிய விஷயமாக இருக்கலாம். பரம பூஜனீய டாக்டர்ஜி, குருஜி முதல் மறைந்த எனது ஆருயிர் நண்பர் ரமேஷ் ஜி வரை ஒருங்கிணைந்த ஹிந்து சக்தி என்பது ஆதர்சம்.

  ஸ்ரீ திருமா ஸ்ரீ ராமதாஸ்……… இவர்களிடம் ஆயிரம் குறைகள் இருப்பினும்……காணப்படும் சில நிறைகளை அடிப்படையாகக் கொண்டு குறைகளைக் களைந்து ஹிந்து மஹா சாகரத்தில் இவர்களை இணைக்க வேண்டியது ஹிந்து இயக்கங்களின் வேலை. அமரர் மலர்மன்னன் மஹாசயர் அவர்கள் சொல்லி வந்தது போன்று பாதை மாறிய இஸ்லாமிய க்றைஸ்தவ சஹோதரர்களையும் தாய்மதமான ஹிந்துமதத்திற்கு மீட்க வேண்டும் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

  மனிதர்களிடம் காணப்படும் குறைகளுக்காக அவர்களை ஒதுக்க வேண்டும் என்றால் நிறைகள் மட்டிலும் நிரம்பிய தமிழ் ஹிந்துவாக பாலா மட்டிலும் மிஞ்சலாம். நிறைகள் மட்டுமே தன்வசம் கொண்ட அப்படிப்பட்ட ஒரு அசாத்ய மனுஷ்யருக்கு எமது வந்தனங்கள்.

 33. \\\\ செங்காய பெருமாள் பதில் குளவிகளின் கண்களை திறக்கட்டும்\\\

  ஸ்ரீமான் பாலா. குழவி/குலவி/குளவி…… சென்றாய பெருமாளை “செங்காய” பெருமாள் என்று ஆக்கி விட்டீர்கள்……பெருமாள் மீது உங்களுக்கு என்ன கரிசனமோ…. நல்ல வேளையாக “செ” ….க்குப் பதில் “வெ” ….. போடாமல் இருந்தீர்களே. என்னைப்போலக் கலப்புத் தமிழில் எழுதுபவர்கள் தமிழை ஏகபோக குத்தகைக்கு எடுத்துள்ள ஸ்ரீமான் பாலாவின் உத்தரங்களில் இருக்கும் பிசகுகளை சொல்ல வேண்டியுள்ளது. என் செய்ய. க்ஷமிக்கவும்.

  \\\ எந்த விதத்திலும் ஹிந்து சமுதாயத்திற்கு நன்மை செய்யாத இது போன்ற கயமை அரசியல்வாதிகளை தூக்கி பிடிப்பதை\\\\

  நொட்டை சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும். குளவியின் வ்யாசத்தையும் வ்யாச சமாப்தத்தையும் வாசித்து இருப்பீர்கள் தானே. அருணகிரிநாதருக்கு சொன்ன உத்தரத்தையாவது வாசித்திருக்கலாமே

  \\ அண்ணன் திருமாவளவன் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தகுதியான வெகுசில அரசியல்வாதிகளில் ஒருவர். அது சமூக ஒருங்கிணைப்பின் மூலம் பாபா சாகேப் அம்பேத்கரின் வாரிசாக நிகழட்டும். பெருந்தலைவர் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜானந்தரும் ஐயா வைகுண்டரும் பாரதியும் உருவாக்கிய பாதையில் நிகழட்டும். தீராவிடத்தின் பாதையில் அல்ல.
  வேதனை கலந்து இன்னும் நம்பிக்கையுடன்\\

  ஸ்ரீ திருமா அவர்களை மேற்சொன்ன சான்றோர்களின் வாரிசாக வரத்தான் குளவி அக்ஷதை போட்டுள்ளது. கயமை அரசியல்வாதிகளை தூக்கிப்பிடிப்பது என்று பொத்தாம் பொதுவாக குளவியின் மீது அத்யாரோபம் செலுத்தாது….. கயமை / கசடுகள் நீங்கி…… என்று குளவி அக்ஷதை போட்டுள்ளதை எப்படி கபள சோற்றில் பூஷணிக்காயைப்போட்டு மறைப்பது போல மறைக்க முயலுகிறீர்களோ…….பெருமாளே………

  வக்காலத்து வாங்குவது குளவியா க்ருஷ்ணகுமாரா என்று பார்க்காதீர்கள். பேசப்படும் விஷயத்தில் உள்ள ந்யாயத்தை அவதானியுங்களேன்.

  \\\ போன்ற கட்டுரைகளை தமிழ் ஹிந்து வெளியிடுவது அதன் மேல் உள்ள நம்பிக்கையை போக செய்யும்.\\\

  பரமக்குடி வ்யாசத்தில் ஸ்ரீ தமிழ்செல்வன் அவர்கள் குளவியின் பக்ஷபாதத்தை குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. குளவி நம்பிக்கை வைக்க வேண்டியது ஸ்ரீ திருமா அல்லது மற்றைய ஹிந்து தலித் சஹோதரர்கள் மீது மட்டிலும் அல்ல சிலப்பல கசடுகள் நீங்கி தங்கள் ஹிந்துப்பாரம்பர்யத்தை மீட்டுக்கொள்ள விழையும் வன்னிய ஹிந்து சஹோதரர்களையும் கூட. பிணக்குகள் இந்த இரண்டு சஹோதரர்கள் மத்தியில் இன்று இருக்கலாம். அந்தப்பிணக்குகளைக் களைய வேண்டியது என்பது ஹிந்துக்களின் கடமையா அல்லது இவர்களிடம் உள்ள குறைகளை மட்டிலும் உயர்த்திப்பிடித்து நிறைகளை அறவே ஒதுக்கி நீ அப்படி நீ இப்படி என்று விரல் சுட்டி விலகுவது தான் ஹிந்துக்களின் கடமையா என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

  மாற்றுக்கருத்தைச் சொல்வதற்காக சேற்றை வாங்கிக் கொள்வது ஒன்றும் எனக்குப் புதிதும் அல்ல. அல்லது என் படிக்கு எனக்கு ந்யாயமாகப் பட்ட கருத்தைப் பகிர்வதில் எனக்கு தயக்கமும் இல்லை.

  வளர்க ஒருங்கிணைந்த ஹிந்து சக்தி. அழிக ஹிந்துக்களிடையே இருக்கும் பிணக்குகளும் குறைகளும்.

  வெற்றி வேல்.

 34. கிருஷ்ணகுமார் அய்யா….
  குழவி குலவி என்று மண்டையை உருட்ட வேண்டாம்.மன்னிக்கவும். தட்டச்சுப்பிழை. அதை திருத்த மனமில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.
  உங்கள் பதில் எனக்கு பிடித்திருந்தது. (உங்கள் மணிப்ப்ரவாள நடையும் கூட).இதே கருத்தை நானும் கொண்டிருப்பதால் கூட இருக்கலாம். நான் கூற வந்தது குளவி திருமாவை திருத்துகிறேன் பேர்வழி என்று அவரை கொஞ்சம் ஓவராக புகழ்கிறாரோ என்றுதான்.ஏனென்றால் திருமாவின் வீடியோக்களை ( இஸ்லாமியர்கள் கூட்டத்தில் நான் வந்தால் தனியாக அல்ல, என் சமூக மக்களை கும்பலாக அழைத்து கொண்டுதான் வருவேன்) பார்த்து நொந்து போன பல ஹிந்துக்களில் நானும் ஒருவன். இந்த ஆளை நம்பி ஒரு ஜன சமூஹம் இருக்கிறதே. இவனுக்கு மாற்றாக ஒரு நல்ல மனிதனை தலைமையாக காட்ட நம்மால், நம் ஒருங்கிணைந்த ஹிந்து சக்தியால்,முடியவில்லையே என்று புழுங்கி கொண்டிருக்கும் போது. வேறு யாரையும் தலைமைக்கு வர இயலாத படி இந்த ஆளுக்கு அரணாக இருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய கும்பல் இவனை தூக்கி பிடித்த படி இருக்கும் வேளையில் நாமும் இந்த நபருக்கு மகுடம் சூட்ட வேண்டுமா என்பதே என் கவலை.. அவர் கோவிலுக்கு குரல் கொடுத்ததெல்லாம் சரி. உங்கள் நண்பரும் எங்கள் சகோதரரும் ஆன ரமேஷ்ஜி கொலை செய்யப்பட்டு இறந்த போது கூட சில இஸ்லாமிய இயக்கங்கள் அதனை கண்டித்தன. அது போலத்தான் என்று நினைக்கிறேன். என் பயங்கள் பொய் என்று நிரூபணமானால் நான் சந்தோஷப்படுவேன். ஆனால் இன்றிருக்கும் நிலையில் பயத்தினால் சில சிந்தனைகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க நான் முயலவில்லை. அப்படி உங்களுக்கு தோன்றும் படி என் மறுமொழி இருந்திருந்தால் மன்னிக்கவும்.

 35. அன்பார்ந்த ஸ்ரீமான் பாலா,

  நேற்றே உங்கள் உத்தரத்தை வாசித்து விட்டேன். கண்யமான நிறைவான கருத்துக்களை அசை போட்டுக்கொண்டிருந்தேன். இன்று காலை உயர்ந்த சாஸ்த்ர வ்யாக்யானங்களை கேட்ட படிக்கு மேலும் நிறைந்த மனதுடன் இந்த உத்தரத்தைப் பதிவு செய்கிறேன்.

  \\ உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க நான் முயலவில்லை. அப்படி உங்களுக்கு தோன்றும் படி என் மறுமொழி இருந்திருந்தால் மன்னிக்கவும்.\\

  ம் ஹும். இது தங்களது பெருந்தன்மை. அருமை நண்பரை படுகொலைக்குப் பறிகொடுத்துவிட்டு நிலைகுலைந்திருக்கும் பரதேசியாகிய எனக்கு “காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்ற படிக்கு பார்ப்பதிலெல்லாம் தோஷம் தென்பட்டிருக்கும். தோஷம் என்மீது தான். தங்கள் மீதல்ல. மாறாக “நொட்டை” போன்ற அபசப்தங்களைச் சிறியேன் ப்ரயோகம் செய்திருப்பினும் பண்பு குறையாது அன்புடன் உத்தரம் பகிர்ந்த தங்களுடைய பாங்கிற்கு எனது வந்தனங்கள். திதிக்ஷை – சகிப்புத்தன்மை – பொறுமை என்ற உயர்ந்த ஆத்மகுணம் சம்பந்தமாய் ஒரு வ்யாசத்திற்கு அசை போட்டுக்கொண்டிருக்கும் நான் வாஸ்தவத்தில் உள்வாங்க வேண்டிய பண்பு இது.

  \\ குழவி குலவி என்று மண்டையை உருட்ட வேண்டாம்.மன்னிக்கவும். தட்டச்சுப்பிழை. அதை திருத்த மனமில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். உங்கள் பதில் எனக்கு பிடித்திருந்தது. (உங்கள் மணிப்ப்ரவாள நடையும் கூட).\\

  என் பணிவார்ந்த நன்றிகள். சட்டியிலிருப்பது தானே அகப்பையில் வரும். தற்சமயம் எனக்கு தமிழுடன் உள்ள பரிச்சயம் அமுதினுமினிய திருப்புகழ் மற்றும் மகனீயர்களின் சாஸ்த்ர வ்யாக்யானங்கள். இவை பெரும்பாலும் மணிப்ரவாளத்தில். சிறியேனுடைய சூழ்நிலையில் அன்ய பாஷைகளின் ப்ரபாவம் இருப்பதால் எனது கலப்பு மொழிநடை.

  மேலும் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானுடைய அருள்வாக்கு “இருந்தபடி இருங்கோள்” என்பது. ஆகையால் என் ஸ்வபாவத்தை மாற்றிக்கொள்ள ப்ரயாசிப்பதில்லை. அதே சமயம் அழகு தமிழில் யாரும் எழுதினால் ஆசையுடன் வாசிப்பேன். தங்களுடைய உத்தரங்கள் நறுக்கென்று நாலுவரியில் அழகு தமிழில் தெளிவாக எளிமையாக சாரத்துடன் பிசகுகளில்லாது இருப்பதை கவனித்து வந்துள்ளேன். “இருந்தபடி” இல்லாமலிருந்த படிக்கே பிசகுகளை சுட்டிக்காட விழைந்தேன். தங்களுடைய உத்தரத்தில் பிழைகள் தூய வெண் வஸ்த்ரத்தில் ஆங்காங்கு தென்படும் கறைகள் போன்று தோன்றியபடியால்.பின்னும் என் உத்தரத்தில் அதிகப்ரசங்கம் இருந்ததற்கு க்ஷமிக்கவும்.

 36. \\ நான் கூற வந்தது குளவி திருமாவை திருத்துகிறேன் பேர்வழி என்று அவரை கொஞ்சம் ஓவராக புகழ்கிறாரோ என்றுதான்.ஏனென்றால் திருமாவின் வீடியோக்களை ( இஸ்லாமியர்கள் கூட்டத்தில் நான் வந்தால் தனியாக அல்ல, என் சமூக மக்களை கும்பலாக அழைத்து கொண்டுதான் வருவேன்) பார்த்து நொந்து போன பல ஹிந்துக்களில் நானும் ஒருவன். \\

  பரதேசியாகிய எனக்கு தமிழகத்தில் நித்யப்படி நடக்கும் விஷயங்கள் பற்றிய பரிச்சயம் குறைவே. ஸ்ரீ திருமாவும் ஸ்ரீ ராமதாஸும் இணைந்து செயலாற்றிய போது ஜாதிஹிந்து சக்தியும் தலித்துக்களும் சேர்ந்து பணியாற்றினர் என்ற போதிலும் ஸ்ரீ ஈ.வெ.ரா அவர்களது நாஸ்திக மற்றும் த்வேஷக் கோட்பாடுகளையே இருவரும் முன்னிறுத்திப் பணியாற்றினர் என அறிகிறேன். ஸ்ரீ ஈ.வெ.ரா அவர்கள் போலவே ஆப்ரஹாமியரிடம் குலவும் பாங்கு அன்பர் திருமா அவர்களிடம் இருப்பதை தாங்கள் மேலே பகிர்ந்த விஷயம் காண்பிக்கிறது.

  ஆயினும் த்ராவிட பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் (இது அவர்களுடைய சொல்லாடல் – என்னுடையதன்று- இணையத்தில் வாசித்தறிந்தது) சமயம் கிடைத்த போதெல்லாம் என்று அல்லாது ஒவ்வொரு ஹிந்துத் திருவிழாக்களின் போதும் மிகக் குறிப்பாக ஹிந்துக்கடவுட்களை அவஹேளனம் செய்வது வழக்கம். த்ராவிட மடத்தின் மடாதீசர் ஸ்ரீ கருணாநிதி அவர்களின் வழியொற்றி.

  அதிலிருந்து மாறி ஸ்ரீ திருமா அவர்கள் ஈழத்துச் சிவாலயங்களுக்குக் குரல் கொடுத்தமை நான் வாஸ்தவத்தில் ச்லாகிக்கும் விஷயம். ஸ்ரீ ரமேஷ்ஜி வதம் செய்யப்பட்டதும் முதன் முதலாக வருத்தம் தெரிவித்த பெருந்தகைகள் ஸர்வ ஸ்ரீமான் கள் வை.கோ, திருமா மற்றும் ராமதாஸ். இதுவும் த்ராவிட மற்றும் உக்ரவாத இடதுசாரியினரின் போக்கிலிருந்து விலகி மானுடம் போற்றும் பண்புகள். ச்லாகிக்கப்பட வேண்டிய பண்புகள். கல்லுக்குள் ஈரம் என்று சொல்லிக்கொள்ளலாம். நல்லவை நல்லவையே. யாரிடம் காணப்படினும். அவை வணக்கத்திற்குறியவையே போற்றுதலுக்குறியவையே.

  த்ராவிடப் பாஷாணத்திலிருந்து விலகல்கள் பாராட்டுக்கு உரியவை. ஊடாகவே கசடுகள் கண்டனத்துக்கு உரியவை என்பதையும் நான் முற்றிலும் ஏற்கிறேன். குளவியார் கிட்டத்தட்ட கத்தியில் நடக்கும் சாஹஸம் செய்துள்ளார் இந்த வ்யாசத்தில். கசடுகளைக் கண்டித்தும் நற்பண்புகளைப் போற்றியும் —- பக்ஷபாதமில்லாத ஒரு பகிர்வு. ஸ்ரீ திருமா பற்றிய ஸ்துதி கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ என்ற தங்கள் அபிப்ராயத்தைப் புறக்கணிக்கவில்லை. தங்கள் பார்வையில் அது சரியாக இருக்கலாம்.

 37. \\ இந்த ஆளை நம்பி ஒரு ஜன சமூஹம் இருக்கிறதே. இவனுக்கு மாற்றாக ஒரு நல்ல மனிதனை தலைமையாக காட்ட நம்மால், நம் ஒருங்கிணைந்த ஹிந்து சக்தியால்,முடியவில்லையே என்று புழுங்கி கொண்டிருக்கும் போது. வேறு யாரையும் தலைமைக்கு வர இயலாத படி இந்த ஆளுக்கு அரணாக இருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய கும்பல் இவனை தூக்கி பிடித்த படி இருக்கும் வேளையில் நாமும் இந்த நபருக்கு மகுடம் சூட்ட வேண்டுமா என்பதே என் கவலை.. \\

  ஹிந்துஸ்தான சரித்ரத்தில் இரண்டு விஷயங்களை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

  ஸ்ரீ பாளாசாஹேப் டாக்ரே அவர்களது சிவசேனை ஆரம்பத்தில் மதராஸிகளுக்கு எதிரான இனவாதம் பேசும் ஒரு இயக்கமாக மட்டிலும் இருந்தது. நிந்தனீய விஷயம் இது. ஆனால் வளர்ந்து வருகையில் டாக்ரே சாஹேப் அவர்களுக்கு எந்த நல்லிதயங்களின் தொடர்பு கிடைத்ததோ……அவர் தனது வழியை மிகப்பெரும்பாலும் ஹிந்து நலன் சார்புடைய ஒரு வழியாக மாற்றிக்கொண்டார். இறக்கும் வரை அது தொடர்ந்தது. மதராஸிகளுக்கு எதிரான போக்கு பெரும்பாலும் விலகியது. பீஹாரிகளுக்கு எதிராக புது த்வேஷம் ஒட்டிக்கொண்டது என்பதனையும் உதாசீனம் செய்யலாகாது. பின்னும் பெரிதாக அவர் வாழ்வில் ப்ரகாசித்த விஷயம் ஹிந்து சார்பு.

  ஹிந்துஸ்தானத்தின் வடகிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் க்றைஸ்தவ மதமாற்ற வ்யாபாரிகள் கொழுத்த வேட்டையாடி இந்த ப்ரதேசங்களை நூறு சதமானம் க்றைஸ்தவ மயமாக்கி விட்டோம் என கொக்கரித்து துஷ்ப்ரசாரம் செய்து வந்த வேளையில் பெரும் பாலைவனத்திடையே உள்ள சோலை போன்று மணிப்பூர் ப்ரதேசத்திலும் அஹோமிலும் (ஆஸாம்) பகவன் ஷங்கர் தேவ் மஹராஜ் அவர்களால் வைஷ்ணவம் உறுதியாக ஸ்தாபிக்கப்பெற்றது.

  பெரும் தனம் மற்றும் க்யாதி போன்றவை எந்த ஒரு மனிதனையும் உயர விடாது அழுத்துபவை. இஸ்லாமிய க்றைஸ்தவ மதமாற்ற வ்யாபாரிகளிடமிருந்து கிடைக்கும் தனம் மற்றும் இவர்களது போலித்தனமான போற்றுதல்கள் போன்றவை ஸ்ரீ திருமா மற்றும் ஸ்ரீ ராமதாஸ் போன்றோருக்கு தாத்காலிகமாக ஒரு நிறைவுத்தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் ததாகத அம்பேத்கர் மற்றும் பூஜனீய ஸ்ரீ கக்கன் ஜி போன்றோரின் ஸ்தானம் இவர்களது இலக்கு என்றால் ஆப்ரஹாமிய மதமாற்று வ்யாபாரிகளின் வலைகளிலிருந்து இந்தப் பக்ஷிகள் வெளிவர உந்துதல் அளிக்கும். அதற்கு நல்லுள்ளங்கள் அக்ஷதை போட வேண்டும்.

  மாற்றுத்தலைமை என்பது மிகவும் ப்ரயாசித்து முன்னிறுத்தப்பட வேண்டிய விஷயம். அபூர்வமான விஷயம். இருக்கும் தலைவர்களில் நற்பண்புகள் விகஸிப்பது சற்று எளிதானது. இதற்கும் மிகுந்த ப்ரயாசை அவசியம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். இதற்கு ப்ரயாசிப்பது நல்லது.

  ஈழச் சிவாலயங்களுக்குக் குரல் கொடுத்தமை மற்றும் ஸ்ரீ ரமேஷ் ஜி வதத்துக்கு உடன் கண்டனம் தெரிவித்தமை போன்ற நற்பண்புகளால் தான் த்ராவிட பாஷாணத்தில் ஊறிய புழு அல்ல மாறாக சுயசிந்தனை உள்ள நற்பண்புகளை ஸ்வபாவமாக உடைய அன்பர் என்ற பரிச்சயத்தை ஸ்ரீ திருமா தெரிவித்திருக்கிறார். திருவரங்கத்தெம்மான் அருளால் வர்த்ததாம் வர்த்ததாம் என நற்பண்புகள் வளர்ந்து இவருடைய கசடுகள் அழியட்டும்.

  ஸ்ரீ ராமதாஸ் அவர்களும் ஸ்ரீ ஈ.வெ.ரா அவர்களது ஹிந்து த்வேஷ பாரம்பர்யத்திலிருந்து விலகி தனது ஹிந்துப்பாரம்பர்யத்தைப் போற்றும் வழியை நாடியுள்ளார். ஹிந்துப்பாரம்பர்யத்தைப் போற்றுபவர்கள் மற்றைய ஹிந்து சஹோதரர்களுடன் அன்பு பாராட்டுதல் முக்யமான விஷயம். தலித் சஹோதரர்களுடன் இவருக்கு முன்னிருந்த இணக்கம் கை கூட வேண்டும்.அதுவும் விரைவில் கை கூடுவதாக என நல்லுள்ளங்கள் இவருக்கு அக்ஷதை போடட்டும்.

  மேலே உள்ளது நடக்க வேண்டும் என்பது குளவியாரின் அபிலாஷை. நான் மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் நடக்க வேண்டும் என்பது என் அபிலாஷை. ஒருங்கிணைந்த ஹிந்து சக்தி தமிழகத்தில் உதயமாகி திருப்புகழும், தேவாரமும், திவ்யப்ரபந்தமும் தமிழகமெங்கும் முன்னெப்போதில்லாத படிக்கு ஓங்கி ஒலிக்க பழனிப்பதிவாழ் பாலகுமாரனை இறைஞ்சுகிறேன்.

 38. அருமையான பதிவு. அவசியம் இக்கட்டுரையை திருமா அவர்களின் Email க்கு அனுப்பவேண்டும்.

 39. டாக்டர் அம்பேத்கர் , முஸ்லிம் கும்பலை, நெருங்கவிடவில்லை . இஸ்லாமிய மதம் பரப்பினால் , இந்துக்கள் மண்ணை கவ்வ வைப்பார்கள் . அவர் சொன்னது வெற்றிபெற வேண்டும் . திருமா போன்ற காலி குடங்கள் , திராவிட கட்சிகளுக்கு , ஆபிரகாம் மத வெறி கும்பலுக்கு , ஜால்ரா அடித்தே பழகி விட்டது .

 40. we can criticise all political leaders on their opportunistic stands and alliances at the cost of nationalism. quite surprisingly they do all these things in the name of nationalism. please tell me one leader including rajaji and kamaraj who did not make a mess of their names at times in the name of “alliance”. there are lot of human beings who have nothing to do with politics but just render service without asking for recognition. i think the people should be made aware of self-less persons than selfish political outfits and selfish politicians.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *