வன்முறையே வரலாறாய்… – 1

islamic-jihad-a-legacy-of-forced-conversionமூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

“அமைதி மார்கமென” அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள். M.A. Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன், படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

****

மதீனாவைச் சேர்ந்த யூதர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்த போது இறைத் தூதர் முகமது நபி யூதர்களைத் தாக்கியதுடன் மட்டுமின்றி, பானு கைனுகா மற்று நாதிர் (Banu Qaynuqa and Nadir tribes) பழங்குடிகளை மதீனாவிலிருந்து விரட்டியடித்தார். அவர்களது பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக்கப் பட்டார்கள். முகமது நபியைப் பின்பற்றி கலிஃபா உமர் 634-ஆம் ஆண்டு ஜெருசலத்தைத் தாக்கி அழித்ததினால் உண்டாகிய பஞ்சத்தால் பல ஆயிரக் கணக்கானோர் செத்து மடிந்தார்கள். அதற்கு சற்று முன்னர் 634-ஆம் வருடம் நடந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் காரணமாக, காஸா நகருக்கும் சிசெராவிற்கும் (Gaza and Caesarea) இடைப்பட்ட பகுதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், தங்களின் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான ஏழை கிறிஸ்தவ, யூத மற்றும் சமேரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

மெசபடோமியா மீது 635-6420-ற்கு மத்தியில் நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகளால் பல கிறிஸ்தவ மடாலயங்கள் தகர்க்கப்பட்டதுடன், பல பாதிரியார்கள் கொல்லப்பட்டனர். அங்கே இஸ்லாமியர்களல்லாத பிற மதத்தவர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் கட்டாய மத மாற்றமும் செய்யப்பட்டனர். அதே ஆண்டுகளில் எலாம் (Elaam) என்ற ஊரிலிருந்த அத்தனை பேர்களும் இஸ்லாமியப் படைகளால் வாளுக்கு இரையாக்கப்பட்டனர்.

முகமது-பின்-காசிம் இந்தியாவில் பெற்ற முதலாவது வெற்றிக்குப் பின் நிகழ்ந்தவற்றை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அல்-பிலாதுரி மற்றும் முகமது அல்-குஃபி (Al-Biladuri and Mohamed Al-Kufi) போன்றவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, பின்-காசிம் சிந்துவிலுள்ள டிபால் நகரைக் கைப்பற்றிய பின்னர், அந் நகரிலிருந்த அத்தனை கோவில்களும் இடிக்கப்பட்டதுடன், இடைவிடாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கைதிகளாக சிறை பிடிக்கப்படுகிறார்கள். பின்னர் நைரூன் என்னும் இடத்திலிருந்த கோவில்களும் இடிக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி நிறுவப்படுகிறது. ராவர் மற்று அஸ்கலந்தா என்ற ஊர்களில் இருந்த அத்தனை ஆண்களும் வெட்டிக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள். அதுபோல மூல்தானில் போரிடும் வயதுடைய ஆண்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு வாளுக்கு இரையாக்கப்பட்டதுடன், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்களும், பண்டிதர்களும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர்.

கலிஃபா உமர் 641-ஆம் ஆண்டு எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரைக் கைப்பற்றிய பின் நிகழ்த்திய மூன்று நாள் வெறியாட்டமே பின்னாளில் நிகழ்ந்த அத்தனை இஸ்லாமிய வெற்றிகளுக்கு அடுத்து நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கலிஃபா உமரின் உத்தரவின்படி அலெக்ஸாண்ட்ரியா நகரம் இடித்து நொறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் படுகொலைகள் நடந்தேறியது.

அந்த உதாரணத்தைப் பின்பற்றி 1453-ஆம் வருடம் சுல்தான் முகமது கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியபின் அதன் தெருக்களில் தென்பட்ட அத்தனை ஆண், பெண், குழந்தைகளைப் படுகொலை செய்தான். அதன் காரணமாக கான்ஸ்டாண்டிநோபிளின் சரிவான தெருக்களில் ஓடிய ரத்தம் ஆற்றில் கலந்து சென்றதாக குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

அமீர் தைமூர் அல்லது டாமெர்லென் (Tamerlane) டிசம்பர் 1399-ஆம் வருடம் இந்தியாவின் டெல்லியில் காஃபிர்களின் மேல் தொடுத்த ஜிகாதின் போது, ஏறக்குறைய ஒரு இலட்சம் இந்திய காஃபிர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள்.

அலெக்ஸாண்ட்ரியா நகரில் கலிஃபா உமர் நிகழ்த்திய வெற்யாட்டத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பிற பகுதி எகிப்தியர்கள், இஸ்லாமியப் படைகளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரணடைந்தனர். அல்-கரடாவி (Al-Qaradawi) எகிப்தை வெல்ல வெறும் 8000 இஸ்லாமியப் படைகளே போதுமானதாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அதே சமயம் இப்ன்-வராக் (Ibn-Warraq), இஸ்லாமியப் படைகள் ஃபய்யும் நகருக்கு அருகிலுல்ல பெஹ்னஸ்ஸா என்னும் நகரைக் கைப்பற்றிய இஸ்லாமியர்கள் அங்கிருந்த அத்தனை பேர்களையும் கொலை செய்ததாகக் கூறுகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டவர்களாக இருந்தாலும், சரணடைந்தவர்களாக இருந்தாலும், வயதானவரகவோ அல்லது இளம் பெண்ணாகவோ இருந்தாலும் அதனைக் கணக்கில் கொள்ளாமல் வகை தொகையின்றி அவர்களைக் கொன்றதாக எழுதுகிறார் இப்ன்-வராக். அதே நிலை ஃபய்யும் நகருக்கும் அதனருகே இருந்த அபாய்ட் நகருக்கும் சிறிது காலம் கழித்து ஏற்பட்டது.

ஆர்மீனியாவின் மொத்த அஸ்ஸீரிய மக்களும் வாள் முனையில் எவ்வாறு இஸ்லாமிற்கு மாறும்படி செய்யப்பட்டார்கள் என்பதை ஆர்மீனிய வரலாற்று ஏடுகள் எழுதி வைத்திருக்கின்றன. ஆர்மீனியாவிலிருக்கும் யூச்சைட்டா என்ற பகுதி மக்களை அராபியர்கள் எவ்வாறு கொன்றனர் என்ற தகவல்களை இப்ன்-வராக் மிக விளக்கமாக எழுதிவைத்துச் சென்றிருக்கிறார். அதைப் போலவே டிரொன் என்ற ஆர்மினிய நகரில் நடந்த அட்டூழியங்களைப் பற்றியும், 642-643 இல் ட்வின் நகரில் நடந்த படுகொலைகள் சொல்லில் அடங்காதவை எனச் சொல்லுகிறார் வராக்.

IslamicJihad

இவ்வாறாக இஸ்லாமியர்கள் தங்களின் படையெடுப்புகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் “அமைதியையும், நீதியையும்” நிலை நாட்டினார்கள். அவர்களால் பிடிக்கப்பட்ட நாடுகளை ஆண்ட அரசர்கள் இஸ்லாமியக் கோட்பாட்டின்படி “கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள், அநீதி புரிபவர்கள்” என அழைக்கப்பட்டனர்.

வெல்லப்பட்ட நாடுகளின் மக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய கொடுமைகள் கணக்கில் அடங்காதவை. உதாரணமாக, கலிஃபா உமரின் காலத்தில் அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கடுமையான வரி விதிப்பு முறை நடைமுறையிலிருந்தது. குடிமக்களால் தாங்க இயலாத அளவிற்கு வரிச்சுமைகள் அவர்களைத் துன்புறுத்தின.

முஸ்லிம் வரலாற்றாசிரியரான புரஃபசர் ஃபசல் அகமது என்பவர் எழுதிய ஒரு குறிப்பின்படி, பாரசீக அடிமையான அபு-லுலு-ஃபிரோஸ் என்பவன் ஒரு நாள் கலிஃபாவிடம் சென்று இந்தத் தாங்க முடியாத வரிச்சுமையைப் பற்றிக் கூறி, அதனைக் குறைக்கும்படி மன்றாடுகிறான். ‘என்னுடைய உரிமையாளர் எனக்குச் தர வேண்டிய சம்பளத்தின் பெரும்பகுதியை உங்களுக்குச் செலுத்த வேண்டிய வரிக்காகப் பிடித்தம் செய்து கொள்கிறார். அதனால் நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே, தயவு செய்து வரியைக் குறையுங்கள்’ எனக் கேட்கிறான் லுலு-ஃபிரோஸ்.

கலிஃபா உமரானவர் அவ்வாறு செய்ய மறுத்து, லுலு-ஃபிரோசை அங்கிருந்து விரட்டியிருக்கிறார். கோபமுற்ற லுலு-ஃபிரோஸ் அடுத்த நாள் ஒரு கத்தியுடன் வந்து கலிஃபா உமரைக் குத்திக் கொலை செய்துவிட்டான்.

இதிலிருந்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் விதித்த வரிகள் எத்தனை கடுமையாக இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவைப் பிடித்த சிறிது காலத்திலேயே இஸ்லாமிய நீதியும், ஆட்சியும் அக்காலத்தில் மிக செல்வ வளம் பொருந்திய, நாகரீக முன்னேற்றமடைந்த ஹிந்துக்களை மிகக் குறுகிய காலத்திலேயே பிச்சைக்காரர் களாக்கியதுடன், ஹிந்துப் பெண்கள் முஸ்லிம்களின் வீட்டின் முன் தங்கள் குழந்தைகளுடன் வந்து பிச்சையெடுக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது. வெல்லப் பட்ட இந்தியர்களின் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரிச்சுமைகள் காரணமாக இந்தியர்கள் தங்கள் மனைவிகளையும், குழந்தைகளையும் அடிமைச் சந்தையில் விற்கும் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். மேலும் பல இலட்சக்கணக்கானோர் காடுகளுக்குத் தப்பியோடி விலங்குகளைப் போல வாழ்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களாகவும், காட்டில் கிடைப்பதை உண்டு வாழ்பவர்களாகவும் ஆனார்கள்.

Al-Qaradawi போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களால் வெல்லப்பட்ட நாட்டு மக்களால் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டார்கள் என்று கூறுவதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதே உண்மை. போரிடத் தெரியாத ஏழை விவசாயிகள் கூட இஸ்லாமியப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள். காஸா மீது இஸ்லாமிய அரேபியர்கள் படையெடுத்தபோது ஏறக்குறைய 4000 விவசாயிகள் அவர்களை எதிர்த்துப் போர் புரிந்ததால் கொல்லப்பட்டார்கள்.

இந்தியாவிலும் இதுவே நடந்தது. முன்பே கூறியபடி சிந்துவில் பின்-காசிம் இந்துக்களை மூன்று நாட்கள் படுகொலை செய்தான். ஹிந்துகள் இஸ்லாமியர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றால் பின்-காசிம் எதனால் ஹிந்துக்களைக் கொன்றான்? என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் சித்தூரில் ஏறக்குறைய 30,000 விவசாயிகள் ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு ஆயுதம் தாங்கிப் போர் புரிந்தார்கள்.

இந்தியாவின் பேரரசராக அறியப்படுகிற, அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்பவராக சொல்லப்படுகிற மொகலாயப் பேரரசரான அக்பரை எதிர்த்து இந்த விவசாயிகள் போரிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. மொகலாயப்படையுடன் இவர்கள் போரிட்டுத் தோற்று, சரணடைந்த போது அவர்கள் அத்தனை பேர்களையும் படுகொலை செய்ய அக்பர் உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை நமக்கு விளக்குகிறது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் நாட்டைப் பிடிக்க விடாமல் அந்தந்த நாட்டு மக்கள் கடுமையாகப் போராடினார்கள் என்றே பல இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, அல்-குஃபி, ‘சச் நாமா’வில், பின்-காசிம் படையினை (டிபாலில்) காஃபிர்கள் நான்கு புறங்களிலும் சூழ்ந்து கொண்டு மிகத் தீரத்துடன் போரிட்டதால், இஸ்லாமியப் படையணிகள் பல முறை நிலைகுலைந்து பின் வாங்க வேண்டிய நிலை இருந்தது என்று எழுதுகிறார்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் போது, இந்திய மக்கள் மிக மிக அபூர்வமாகவே, விருப்பத்துடன் தங்களை இஸ்லாமியர்களுடன் இணைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. தொடர்ந்து ஹிந்து ஆண்கள் போரிட்டு மடிய, அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்படுவதுவே தொடர்ந்து நடந்து வந்தது. சிற்சில இடங்களை முஸ்லிம் படைகள் எளிதாகக் கைப்பற்றியதற்கான காரணம், இவர்களின் ஈரமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு அருவருப்புற்று, போரிடுவதைத் தவிர்த்ததாலேயே நிகழ்ந்தது.

சுல்தான் முகமது என்கிற கஜினி முகமது 1024-இல் சோம நாத் ஆலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைக் குறித்து, வரலாற்றாசிரியர் இப்ன்-அசிர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘ஏராளமான ஹிந்துக்கள் தங்களின் கைகளைத் தங்களின் கழுத்துகளில் கட்டிக் கொண்டு அணி, அணியாகக் சோம நாதர் ஆலயத்தினுள் நுழைந்தார்கள். கண்களில் கண்ணீர் வழிய, தங்களின் ஆலயத்தைத் தாக்க வேண்டாமென்று சுல்தான் முகமதுவிடம் கெஞ்சினர். இறுதியில் போர் ஒன்றே முடிவு என்ற நிலையில் போரிட்ட ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சோம நாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொல்லப்பட்டனர்.’

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் சாதாரண ஹிந்துக்கள். தங்களின் கோவிலின் புனிதத்தையும், மரியாதையையும் காப்பதற்கு உறுதி பூண்ட பக்தர்கள். அதே சோம நாதர் ஆலயம் மூன்று முறை இடித்து நொறுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது. இறுதியில் அதுவும் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டது.

இவை போன்ற சம்பவங்களே இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களால் வரவேற்கப்படவில்லை என்பதற்கான உதாரணங்கள்.

சுல்தான் முகமது என்கிற கஜினி முகமதின் முக்கிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர் அல்-புரூனி (Al-Berunei 973-1050). அடிப்படையில் புரூனி ஒரு சிறந்த கல்வியாளர். பாரசீக நாட்டைச் சேர்ந்தவர். 1070-ஆம் வருடம் மத்திய ஆசியாவில் இருந்த க்வார்ஸிம் (Kwarizm) நாட்டின் மீது கஜினி முகமது படையெடுத்தபோது அவரால் சிறைப்பிடிக்கப்பட்டவர். சுல்தான் முகமது அவரைத் தனது தலை நகரான கஜினிக்குக் கொண்டு வந்து, தனது மந்திரி பரிவாரத்தில் ஒரு முக்கிய இடம் கொடுத்து வைத்திருந்தான். இந்தியாவை நோக்கிப் படையெடுத்தபோது தன்னுடன் அல்-புரூனியையும் கஜினி முகமது அழைத்து சென்றான்.

அந்தப் படையெடுப்புகள் குறித்து அல்-புரூனி எழுதியிருக்கும் குறிப்புகள் மிக முக்கியமானவை. வெல்லப்பட்ட இந்திய மக்களின் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் சுமத்திய கடுமையான சுமைகள், வரிகள் குறித்து அவரெழுதிய குறிப்புகள், இஸ்லாமியப் படையெடுப்புகளின் கோர முகத்தைக் காட்டுகின்றன. அல்-புருனீ ஏறக்குறைய இருபது வருடங்கள் வரை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து இந்திய தத்துவங்களையும், இதிகாசங்களையும், கணித முறைகளையும், மதக் கோட்பாடுகளையும் இந்திய பண்டிதர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்.

அவ்வாறான அல்-புரூனி, சுல்தான் முகமதின் இந்தியப் படையெடுப்புகள் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘முகமது கஜினி தனது இந்தியப் படையெடுப்புகளின் மூலம் அந்நாட்டின் செல்வ வளத்தைச் சூறையாடியதுடன் அதன் முன்னேற்றத்தையும் அழித்து, இல்லாமலாக்கினான். அதன் காரணமாக ஹிந்துக்கள் அணுத்துகள்களைப் போலச் சிதறியோடினார்கள். இதனாலேயே அவர்கள் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களை வெறுத்து ஒதுங்கினார்கள்’ என்கிறார்.

இந்தியர்களிடையே இஸ்லாம் ஒரு பெரிய மதிப்பையோ அல்லது மரியாதையையோ பெற்றதில்லை. அல்-கரடாவி சொல்கிறார், ‘வாளின் துணை கொண்டு ஒரு நாட்டை வெல்வது எளிது. ஆனால் ஒரு போதும் அதன் சாதாரண மக்களை ஒரு மதத்தை நோக்கித் திருப்ப இயலாது’. ஆக்கிரமிப்புகள் கடந்து, கொலைகள் மனதில் மறைந்த பின், சாதாரண மக்களுக்கும் இஸ்லாமிற்கும் இடையிலிருந்த இடைவெளிகள் நீக்கப்பட்டு இஸ்லாம் ஓரளவிற்குத் தான் ஆக்கிரமித்த பகுதிகளில் பரவ ஆரம்பித்தது.

அல்-புரூனி, ‘முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகளை ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளிடம் காட்டி, அவர்கள் பிசாசுகள் என மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மேலும் முஸ்லிகள், தாங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் தாங்கள் செய்வதற்கு எதிரானதாகவும், மோசமானதாகவும் இருக்கிறது என்பார்கள். இதன் காரணமாக குரசான், பரசீகம், இராக், மோசுல், சிரியா மற்றும் பல நாடுகளிலிருந்து முதலில் பவுத்தர்களும், அதனைத் தொடர்ந்து ஜொராஸ்டிரியர்களும் வெளியேறினர். மொகமது-பின்-காசிம் ப்ராஹ்ம்னாபாத், மூல்தானிலிருந்து கன்னோஜ் வரை கைப்பற்றி நடத்திய பேரழிவுகள் ஹிந்துக்களிடையே மிகப் பெரும் எதிர்ப்பையும், ஆழமான வெறுப்பையும் தோற்றுவித்தன’ என்கிறார்.

ஹிந்து போராளிகள் இஸ்லாமியர்களிடம் அடிபணிவதற்குப் பதிலாக, எளிதில் நெருங்க முடியாத மூல்தானுக்கு அடுத்துள்ள மலைப்பகுதிகளிலும், அலிகர் போன்ற பகுதிகளிலும் சென்று தங்கிக் கொண்டனர். முகலாய அரசர் பாபர் தான் ஆக்ரவிற்கு அருகில் இது போன்ற போராளிகளை எதிர்கொண்டதாகவும் எழுதி வைத்திருக்கிறார்.

இரக்க குணம் மிகுந்தவராக சொல்லப்படுகிற மொகலாய அரசர் ஜஹாங்கீர் (1627) காலத்தில் பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் முகலாயர்களை எதிர்த்து நாட்டை விட்டு வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். “இரக்கமுள்ள” ஜஹாங்கீர் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர்களைப் பிடித்து அவர்களை 1619-20-ஆம் ஆண்டுகளில் இரான் நாட்டில் அடிமைகளாக விற்றுவிட்டார்.

அல்-புரூனி மேலும் சொல்கிறார், ‘சுல்தான் முகமது கஜினி படையெடுத்து வந்து பல பத்து ஆண்டுகள் கடந்த பின்னும், இந்திய ஹிந்துக்களில் பெரும்பாலோர் “அமைதி மார்க்கமான” இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமை அமைதி மார்க்கமாக நினைத்திருந்தால் தயக்கமில்லாமல் அதனை அரவணைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாறாக அவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை அறவே வெறுத்து ஒதுக்கினர்.’

இதே நிலமை, இந்தியா இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் நீடித்தது. இந்தியாவின் பயணம் செய்த பல இஸ்லாமியப் பயணிகளும், வியாபாரிகளும் பெரும்பாலான இந்தியா இன்னும் ஹிந்து இந்தியாவாகவே இருப்பது குறித்தான தங்களில் அதிருப்தியை எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு பத்தாம் நூற்றாண்டு இஸ்லாமியப் பயணி, இஸ்லாம் இதுவரை ஒரே ஒரு இந்தியனைக் கூட மதமாற்றம் செய்ய இயலவில்லை என்கிறார்.

851-ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த சுலைமான் என்னும் அராபிய வியாபாரி அவரது குறிப்பில், ‘எனக்குத் தெரிந்து ஒரெயொரு இந்தியனோ அல்லது சீனனோ இதுவரை இஸ்லாமைத் தழுவியதாகவோ அல்லது அரபு மொழி பேசுவதாகவோ எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதியிருக்கிறார்.

இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்து ஆறிலிருந்து எட்டு நூற்றாண்டுகள் ஆன பிறகு, மொகலாய அரசர் பாபரும், மொராக்கிய பயணியான இப்ன்-பதூதாவும் இதே நிலையைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு ஒன்பது நூற்றாண்டுகள் கழிந்து ஜஹாங்கீரும் இதனையே கண்டார்.

(தொடரும்).

19 Replies to “வன்முறையே வரலாறாய்… – 1”

 1. இஸ்லாம் என்பது அமைதியை அழிக்கும் மார்க்கமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் வன்முறை மூலம் இன்று நம் கண்ணெதிரே கோடிக்கணக்கான ஷியா முஸ்லீம்களையும், லட்சக்கணக்கான அகமதியாக்களையும், லட்சக்கணக்கான பஹாயிக்களையும் படுகொலை செய்து அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். இதைவிட கேவலம் என்னவென்றால் , இஸ்லாமிய குருமார்கள் வன்முறை மூலமாகவாவது உலகில் அனைவரையும் இஸ்லாத்துக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று துர்ப்போதனை செய்வது தான். திரு எம் .ஏ .கான் அவர்களின் புத்தகம் மட்டுமல்ல, tamil.alisina.org – தளத்தில் உள்ள அற்புதமான கட்டுரைகளும் இதற்கு ஏராளம் சான்றுகளை அழகாக தருகின்றன.இந்த மத மாற்றப் பேய்களை எப்படி ஓட்டுவது என்பதை அனைவரும் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது.

 2. முகமது பண்பாடற்ற அரேபிய மண்ணில் பிறந்தாா். அக்கால அரேபிய மக்கள் கொள்ளையடிப்பது, பெண்களைக் கடத்தி விற்பனை செய்வது, கணவனைக் கொன்று அழகிய பெண்களை வன்புணா்வது, வைப்பாட்டிகள் வைப்பது, சதா பழிக்குப் பழி என்று கொலை வெறி கொண்டு அலைவது என்று வாழ்ந்து வந்தாா்கள். முகமதுவும் தனது சமய பிரசாரத்தை செயயும்போது யாரும் அவருக்கு ஆதரவு தரவில்லை. எனவே அவரும் கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டு ஆதரவு திரட்டினாா்.

  முகமது நடத்திய முதல் யுத்தம் -பதா் யுத்தம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இது யுத்தம் அல்ல. மெக்காவைச் சோ்ந்த வியாபாரிகள் வியாபாரப் பொருட்களுடன் பாலைவனத்தில் பயணம் செய்கிறாா்கள். தன்னை ஆதரிக்காத மெக்கா மக்களை பழிவாங்கவே முகமது பல குதிரை வீரா்களுடன் வியாபாரப் பொருட்களைக் கொள்ளை அடித்தாா். கொள்ளைஅடித்த பொருட்களை பங்கு போட்டுக் கொண்டாா்.கொள்ளைப்பொருட்களில் 5% முகமதுவுக்கு.

  இதுபோல் 9-க்கு மேற்பட்ட பகல் கொள்ளை நடத்தியிருக்கின்றாா். ஆனால் ஒரு பகல் கொள்ளையை முஸ்லீம்கள் யுத்தம் என்று சிலாகித்துப் பேசிவருகின்றனா். எவ்வளவு ஏமாற்று வேலை!

 3. முகமதுவின் வரலாற்றை விரிவாக அலிசேனா மற்றும் பலநபர்களில் விமா்சனங்களின் அடிப்படையில் விரிவாக எழுத வேண்டுகிறேன்.

 4. அமெரிக்கவில் நடந்த இரட்டை குண்டு வேடிபிட்கு பிறகு அவர்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் மற்றவர்களும் கூடிய சீக்கிரத்தில் விழித்துகொண்டுவிடுவார்கள்; இவ்வளவு காலம் நடந்து வந்த துயரங்களுக்கு முடிவு வந்தே தீரும்.

 5. —–இஸ்லாம் ஒரு அமைதி மதமா இல்லையா என்பதை கீழே படித்து அறிக —–

  1. ஆப்கானிஸ்தானில் Logar மாநில கவர்னர் ஜமால் என்பவர் Eid prayer க்கு பிறகு மசூதியில் உரை நிகழ்த்துகையில் microphone ல் வைக்கப்பட்ட ஒரு bomb வெடித்து கொல்லப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 16-10-2013)
  2. ரஷ்யாவில் ஒரு chemical storage facility யை வெடி வைத்து தகர்க்க 2 மாத காலமாக திட்டமிட்டுருந்த 2 இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தது.(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 16-10-2013) (இந்த செய்தியை முஸ்லிம்களுக்கு சதாசர்வ காலமும் வக்காலத்து வாங்கும் கம்யூனிஸ்ட் commrade களின் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்)
  3. நைஜீரிய ராணுவம் 95 முஸ்லிம் தீவிரவாதிகளை கொன்றது. (நாள் 27-10-13)
  4. பாக்தாத்தில் ரவா எனும் பகுதியில் 8 தற்கொலை படையினர் 6 பேரை குண்டு வைத்து கொன்றனர். (21.10.13)
  5. ஈராக்கில் ஒரு தற்கொலை படையினர் 15 கிராம மக்களை குண்டு வைத்து கொன்றனர். ((18-10-13)
  6. ஈராக்கில் 2 நாட்களில் தீவிரவாதிகள் 48 பேரை குண்டு வைத்து மற்றும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்,(24.10.13)
  7. Southern Russia வில் Volgograd city யில் முஸ்லிம் தற்கொலை படையினர் ஒரு passenger bus ல் இருந்த 6 பேரை குண்டு வைத்து கொன்றனர்.23 நபர்கள் படுகாயமடைந்தனர்.(24.10.13) (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் கனிவான் பார்வைக்கு இந்த செய்தியினை சமர்பிக்கின்றேன்)
  8. பாக்தாத்தில் 10 கார் குண்டுகள் வெடித்து 56 பேர் இறந்தனர். 90 பேர் காயமுற்றனர். இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இதுவரை 630 பேர் இறந்தனர்,(28-10-13)
  9. பிகாரில் மோடி வருகையின் போது தொடர் குண்டு வெடிப்பினால் 6 பேர் இறந்தனர் பல பேர் காயமுற்றனர்.

  நேற்று புதிய தலைமுறை டிவி யில் விவாத விகழ்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முஸ்லிம் முனேற்ற கழக நபர் பிகாரில் குண்டு வைத்தது RSS தான் என்று கூறுகிறான் உலகம் பூராவும் வெடி வைத்து மக்களை கொல்லும் முஸ்லிம்கள் இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக ஆக்கிட வெறி கொண்டு குண்டு வைத்து மக்களை கொல்வதில் வியப்பேதும் இல்லை. மேலே உள்ள 8 விஷயங்களை படித்த பின்னரும் அந்த டிவி யில் ஒரு துலுக்கன் பிகாரில் முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வைக்கவில்லை என்று சொன்னால் பைத்தியக்காரன் கூட நம்பமாட்டான். ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் காரர்கள் மட்டும் நம்புவார்கள். காரணம் அவனது ஒட்டு.

 6. Copy pasted from ” Indian realist site”. It will help if someone can translate the dialogue.

  Here is a video of a pure Saudi Arabian muslim, highest on the totem pole in the global Muslim fraternity, thrashing an impure, converted, South Asian Muslim, a tribe which is mocked by Arabs as “Hindu Muslims” because they are converted from Hindus and are of inferior racial stock compared to Arabs who are considered as original Muslims. And these “Hindu Muslims” spend their life copying Arabs, aspiring to be like them, learning their language, wearing their clothes, carrying their names and supplying their women to them. Monotheism is colonization of other races, considered inferior, by one master race — Arabs are the master race of Islam, Whites are the master race of Christianity. All the converts have to copy them and try to become their mirror image, but the master race is careful to maintain distance.
  Mr SP always proclaims that Indian Muslims are treated well in Saudi!

  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=10uW38cm_g0

 7. இன்று மோடி அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்லும் இஸ்லாமியர்கள் ஏன் தமிழனை கொன்று குவித்த காங்கிரேச்சையும் தி மு க விற்கும் ஒட்டு போட மாட்டோம் என்று சொல்லவில்லை. காரணம் இலங்கையில் செத்தவர்கள் தமிழர்கள் , முஸ்லிம்கள் அல்ல. இதிலிருந்தே அவர்களின் மத வெறி நமக்கு பற்றி தெரிய வேண்டும். இனிமேலாவது ஹிந்துக்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி மோடிக்கு வாக்களிக்க வேண்டும்

 8. all the Hindus need to join together to fight against the Islamic terrorists in our country

 9. திரு கான் அவர்கள் புத்தகம் / பதிப்பகம் எங்கு கிடைக்கும் என தெரிவிக்க வேண்டுகிறேன்

 10. வேற்று நாட்டவர்களின் பயங்கர செயல் மிகவும் வருத்தம் அதிர்ச்சி ஏற்படுத்திகிறது . இந்த இடத்தில எனக்கொரு கேள்வி…. நாம் அனைத்துலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக தானே இருந்தோம் …பிறகு இவர்களை தடுத்து சரியான பதிலடி ஏன் கொடுக்கவில்லை … நம் பலம் என்னவாயிற்று? நம் பெரியவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்.

 11. புத்த மதத்தின் தாக்கத்தால் இந்துக்கள் புலால் உண்பதை விட்டார்கள் ஆதலால் பல அன்னியர்களிடம் அடிமை பட நேர்ந்தது என்று சுவாமி விவேகா நந்தர் கூறுகிறார்.

 12. Pal khuzhuvum pazh seyyum utpagaimum thaan Indha naattin seerazhivukkuk kaaranam aagum.

 13. திரு தனசேகரன் அவர்களின் கடிதத்தின் தமிழாக்கம் :

  “பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும் தான் இந்த நாட்டின் சீரழிவுக்குக் காரணம் ஆகும் “.
  பல் குழு உலகெங்கும் இருக்கிறது. பாழ் செய்யும் உட்பகை என்பதை ஏற்கிறேன்.

 14. திரு தனசேகரன் அவர்களின் கடிதத்தினை தமிழாக்கம் செய்ததற்காக அத்விகா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். நான் எனது 50 வருட வாசிப்பில் எழுத்தாளர் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களைப் பார்த்து வியந்துகொண்டு இருக்கின்றேன். அவர் அண்மையில் இந்து பத்திரிகையில் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழை எழுதுவதன் மூலம் தமிழை வாழவைக்கமுடியும் என்று எழுதியிருந்தார். அல்லது தமிழை நீண்ட காலத்திற்கு பிழைக்கவைக்க, இப்படியும் யோசிக்கலாமா? என்று எழுத்யிருந்தார்.அது அவர்மேல் எனக்கிருந்த பிம்பந்தின்மெல் படிந்த அல்லது பட்டு பறந்துவிட்ட தூசியாக கருதிவிட்டிருந்தென். ஆனல் அது எவ்வளவு விபரீதமான கருத்து என்பதனை திரு தனசேகரன் அவர்களின் ஆங்கில எழுத்து மூலமான தமிழை வசிக்கும் பொழுது உணர்ந்துகொள்கின்றேன். மீண்டும் அதவிகாவிற்கு நன்றிகள்.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 15. ISLAM is always teaching their people to kill non-muslim people,rape women and steal someone’s property,then how dare they proudly say that islam is a peaceful religion in the world,it’s completely Satan religion and people who are following this idiotic religion should be considered as Satan.

 16. மிக முக்கியமானதும், மிக அவசியமானதுமான நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளீர்கள். பாராட்டுகளும், நன்றிகளும்.

  இஸ்லாமிய மதப் பிரச்சாரகர்கள் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இஸ்லாம் அமைதி மார்க்கம், இனிய மார்க்கம் என்று அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை, வரலாற்று அறிவும், வாசிப்பு அறிதலும், உண்மை அறிவதற்கான தேடலும் அற்ற இந்துக்கள் மத்தியில் பல்லாண்டுகளாக தொடர் பிரச்சாரம் செய்து, அவர்களை நம்ப வைத்துள்ளார்கள். கல்வி அறிவும், வாசிப்புப் பழக்கமும், இணையப் புழக்கமும் உள்ள அனேக இந்துக்களும் கூட, உண்மை அறியாமல், அதைத் தேடி அறிய முனையாமல், அதற்கான தேவையை உணராமல் அந்த பொய் பிரச்சாரத்தை நம்பியிருப்பது வேதனைக்குரியது. ஓட்டு வங்கிக்கான இஸ்லாமிய ஆதரவு அரசியல் + கட்சிக்காரர்கள், இஸ்லாமிய ஆதரவு சமூக சித்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்துத்துவத்தை மட்டும் எதிர்த்து இஸ்லாமியத்துவா, கிறிஸ்துவத்துவா ஆகியவை பற்றி வாயே திறக்காத இந்துக்கள் ஆகியோரும் இந்த அமைதி வேடப் பிரச்சாரத்துக்கு துணைபோகின்றனர்.

  தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக தந்திரமாகப் பரப்பப்பட்டு, அப்பாவி இந்துக்களால் நம்பப்படுகிற இந்த ‘அமைதி மார்க்க’ பிரச்சாரத்தை பாரம்பரிய மற்றும் மதம் மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்ட கிறிஸ்துவர்கள் எவரும் நம்ப மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு அவர்களின் மத வரலாறும், இஸ்லாம், குரான், ஹதீஸ், நபி ஆகியவற்றின் மத துவேஷம், மதவெறியாட்டம், இஸ்லாமிய ஆட்சிக் கொடுங்கோன்மைகள், ஜிகாத் கொடூரங்கள் ஆகியவை குறித்தும் தெரிந்திருக்கும்.

  இந்துப் பொது மக்களுக்கு தங்களின் மத வரலாறு தெரியாது. இஸ்லாமியர்களால் தங்கள் முன்னோர்கள் கணக்கற்ற வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதும், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதும்,
  இந்துமத அடையாளங்கள் அழித்தொழிக்கப்பட்டதுமான கொடுங்கோன்மையை, இந்துக்களின் ரத்தத்தாலும் கண்ணீராலுமே அவர்களின் வரலாறு எழுதப்பட்ட இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத அராஜகத்தை, ஒவ்வொரு இந்துக்களுக்கும் அவசியம் தெரிந்தாக வேண்டும். அதை அவர்களுக்குத் தெரிவிக்கும் விதமாகவும், இஸ்லாத்தின் அமைதி முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான ஓநாய் முகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

  இது தொடர்பாக நம் அனைவராலும் செய்யப்பட வேண்டிய காரியங்கள் என எனக்குத் தோன்றும் ஆலோசனைகள்:

  1. இது போன்ற நூல்களும், இறையில்லா இஸ்லாம், (தமிழ்) அலிசினா, செங்கொடி போன்ற இஸ்லாமிய நாத்திகத் தள கட்டுரைகளும் இணையவாசிகளால் தங்களின் முகநூல், ட்விட்டர், யூ ட்யூப், வலைத்தளம், வாட்ஸ் ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக பகிரப்படவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவற்றை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இணைப்பு தரவாவது வேண்டும்.

  2. பதிப்பகம் வைத்துள்ளவர்கள், இது போன்ற ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து மலிவு விலைப் பதிப்பு நூல்களாக வெளியிட்டு, இந்து மக்களிடம் பரப்ப வேண்டும்.

  3. இறையில்லா இஸ்லாம், (தமிழ்) அலிசினா, செங்கொடி போன்ற இஸ்லாமிய நாத்திகத் தள கட்டுரைகளைத் தொகுத்து மலிவு விலையில் பரப்ப வேண்டும்.

  4. முக்கியமான தனிக் கட்டுரைகளை, நோட்டீஸ் அல்லது சிறு கையேடுகளாக அச்சிட்டு இலவசமாக விநியோகிக்க வேண்டும்.

  5. எழுதக் கூடிய அனைவரும் இஸ்லாம் அமைதி மார்க்கமா? / இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல! – என்கிற பொதுத் தலைப்பில், தொடர்ந்து கட்டுரைகள், நூல்கள் எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக, இயலுமெனில், இவற்றை பிரச்சாரக் கூட்டம் நடத்தி, இந்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

  – ஷாராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *