ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்

போலி மதச்சார்பின்மை (pseudo-secularism) எனும்  வார்த்தை 1990 இல் பாஜக தலைவர் திரு. லால் கிருஷ்ண அத்வானி அவர்களால் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலமாகியது. இந்திய அரசியல் சூழ்நிலையில் மதச்சார்பின்மை என்கிற பெயரால் நிலவி வரும் மிக கேவலமான வாக்குவங்கி அரசியலைக் குறிப்பிட பயன்படுத்தப் பட்ட வார்த்தை அது. morning_hindutva இன்றைக்கு இந்திய அரசியல் அகராதியில் தவிர்க்க முடியாத ஒரு பதமாகிவிட்டது. ஆனால் இந்த வார்த்தையை பிரபலப்படுத்தியது திரு அத்வானி அவர்கள் என்றாலும் இந்த வார்த்தையை உருவாக்கியது அவர் இல்லை. வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கும் மேலாக ஒரு ஆழ்ந்த கூட்டு மன வியாதியாகத்தான் போலி மதச்சார்பின்மையை பார்க்க வேண்டும். அந்த வார்த்தை அந்த விதத்தில்தான் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அந்த வார்த்தை உருவாக்கப்பட்ட போது நிலவிய சூழல் அத்தகையது.  அப்போது காங்கிரஸ் முழு பலத்துடன் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்து வந்தது. சொல்லும் படியான எதிர் கட்சிகள் என்று எதுவுமில்லை. காந்தி கொலையின் பெயரால்,   ஆர்.எஸ்.எஸ்  தடை செய்யப்பட்டு பின்னர் வேறு வழியில்லாமல் நீதி மன்ற தலையீடு, சமரசம் என  தடை நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பிறகு 1951 தீபாவளி அன்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ் குறித்த ஒரு ஆங்கில நூல் வெளியாகியது. ஆர்.எஸ்.எஸ் குறித்து வெளியாகிய முக்கியமான முதல் ஆங்கில நூல் அதுதான். இந்த நூலில்தான் நேருவின் மனநிலையை குறிக்க ‘pseudo-secularism’ எனும் வார்த்தை முதன் முதலாக பயன்படுத்தப் பட்டிருந்தது.

இந்த நூலை எழுதியவர் ஆர்.எஸ்.எஸ்காரரோ இந்து மகா சபை/ஜனசங்கம் சார்ந்தவரோ இல்லை.  அதை எழுதியவர் மகாத்மா காந்தியின் நேரடி சீடர். அது மட்டுமல்ல அவர் கேரளத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார்:  பாதர் அந்தோனி எலெஞ்சிமிட்டம் . padre_anthony1915 இல் கேரளாவில் பிறந்தவர். கிறிஸ்தவ இறையியல் படிப்புடன் இணைந்து இவருக்கு ஆன்மிக நாட்டமும் இருந்தது. காந்திய  ஈர்ப்பினால் அன்று தீவிரமாகிக் கொண்டிருந்த காந்திய இயக்கத்தில் இணைந்தார். காந்தியுடன் நவகாளி சென்றிருக்கிறார்.  இங்கிலாந்தில் இறையியல் பயின்றார். அதே காலகட்டத்தில் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்திருக்கிறார். தர்ம-அத்வைதம் எனும் தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். ஜான் பால்-II க்கு முந்தைய போப்புகள் இருவருமே இவரது முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். குறிப்பாக போப் ஜான் பால்-I. ’கிழக்கத்திய ஆன்மிக மரபுகளில்’ இந்த போப்புக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது என தெரிகிறது. தமது கத்தோலிக்க சபைக்கு  வெளியேயும் மனிதன் முக்தி-மோட்சம் அடைய முடியும் என்பதை உணர்ந்திருந்தவர் இவர் என்கிறார்கள். எதுவானாலும் கத்தோலிக்கத்தின் அண்மை வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மரணம் இந்த போப்புடைய மரணம்தான். 33 நாட்களே போப்பாக இருந்த இவர் அந்த குறுகிய காலகட்டத்தில் வாட்டிகனில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வந்தார். இவர்தான் எலெஞ்சிமிட்டத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர். ஆனால் இந்த போப்  சந்தேகத்துக்குரிய விதத்தில் பதவியேற்ற 33 நாட்களில் தூக்கத்தில் மரணமடைந்தார். போப் ஜான் பால்- I க்கு பிறகு வாட்டிகனில் பதவிக்கு வந்த போப் ஜான் பால் – II , பெனிடிக்ட் ஆகிய இருவருமே தீவிர கத்தோலிக்கர்கள். ஐரோப்பிய மேன்மைவாதத்தை உள்வாங்கியவர்கள். ஜான் பால் – II இந்திய ஆன்மிக மரபுகள் குறித்து கத்தோலிக்கர்களுக்கு செய்த எச்சரிக்கைகள் முக்கியமானவை. புத்தர் குறித்த அவரது கருத்துகளுக்கு கடுமையான எதிர்ப்பு புத்த நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் மிக மென்மையானவரான தலாய் லாமாவிடமிருந்து கூட கிளம்பியது. போப் பெனிடிக்ட் குறித்தோ சொல்லவே வேண்டாம். popesஇந்த சூழலில்தான் அந்தோனி எலெஞ்சிமிட்டம் பணி புரிந்தார்.  அஸிஸியில் அவர் சத்சித்தானந்த ஆஸ்ரமம் என்பதை உருவாக்கினார். பதஞ்சலி யோக சூத்திரங்களை கற்பித்தார். அவர் செய்தது என்ன? அதன் முக்கியத்துவத்தை இந்துத்துவராக நாம் எப்படி உணர்ந்து கொள்வது? இந்திய பண்பாட்டின் வெளி அம்சங்களை எடுத்து அவற்றை மதம் மாற்றத்துக்கு பயன்படுத்துவதோ அல்லது யோகா பிரபலமாக இருப்பதால் அதன் ஹிந்து வேர்களை இல்லாமல் ஆக்கி கிறிஸ்தவ மயப்படுத்தும் தந்திரமோ அல்ல அந்தோனி எலெஞ்சிமிட்டம் செய்தது. கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை கோட்பாடான ‘எம் மதநம்பிக்கையால்  மட்டுமே மீட்பு’  ஆன்மிக குறைபாடு கொண்டது என்பதை உணர்ந்து அதை  களைய  மென்மையாக சமன்வய கங்கையை ரோமுக்கு கொண்டு சென்ற ஒரு பகீரத நிகழ்வே  அவரது எளிய வாழ்க்கை. காவி உடை தரித்து ஆசிரமம் என பெயர் வைத்து திருச்சி சாந்திவன மிஷினரிகளை போல ஹிந்துக்களை மதம் மாற்றுவது அவரது நோக்கமல்ல. பாதிரியாகவே இருந்து கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிக மனமாற்றத்தை அளிக்க அவர் செயல்பட்டார்.

ஆர் எஸ் எஸ் குறித்த அவரது நூல் அவரது பார்வையின் தெளிவையும் ஆழத்தையும் காட்டுகின்றன. பொதுவாகவே ஆர் எஸ் எஸ்ஸும் சரி இதர இந்து அமைப்புகளும் சரி ஆவணப்படுத்துவதில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. இந்த விசயத்தில் மனிதனின் உள்ளார்ந்த நற்பண்பை முழுமையாக நம்புகிறவர்களாகவே சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளனர். அப்பிராணிகள் என்று உலக பொது வழக்கில் சொல்லலாம். குறிப்பாக 1951 இல் ஆர் எஸ் எஸ் குறித்து தவறான அபிப்பிராயங்களே நிறைந்திருந்த காலகட்டம். ஹிந்துக்களே ஆர் எஸ் எஸ்ஸை ஏதோ காந்தியை கொலை  செய்த இயக்கம் என காங்கிரஸ் பிரச்சார மாயையில் ஆழ்ந்திருந்த காலகட்டம். இந்த சூழலில் எலெஞ்சிமிட்டம் தன் நூலில் ஆர் எஸ் எஸ் உண்மையான ஹிந்து ஞான மரபுக்கு செயல்வடிவம் கொடுக்கும் இயக்கம் என்பதை உரத்த குரலில் சொல்கிறார். இந்நூலில் இருந்து சில வரிகள்:

book_titleஇந்த தேசத்தை முழு மனதுடன் நேசிக்கும் எவரும் ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினராகலாம். இன்றில்லாவிட்டால் நாளை தேசபக்தி திடமாக நிலை பெறும் நாளில் இது நிச்சயமாக நடக்கும்.

ஆரோக்கியமான ஹிந்து சமுதாயத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிலுள்ள பலவீனங்களை அகற்றுவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் தமமை ஹிந்து அல்லாதவர் என கருதும் சிறுபான்மையினரையும் தம் ஹிந்து அடையாளத்தை பெருமையுடன் இயல்பாகவே உணர வைக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சாதிக்கு இடமில்லை. எத்தனை உயர்ந்த சாதி என கருதப்படுகிறவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் இணைந்துதான்  தோளோடு தோள் சேர்ந்துதான் அமர்ந்திருக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்.

போலி-மதச்சார்பின்மை எனும் அரசியல் மன பிறழ்வை அவர் அவதானித்த இடத்துக்கு வரலாம். படேலின் மரணத்துக்காகவே காத்துக் கொண்டிருந்தது போல  ஜவஹர்லால் நேரு, படேல் இறந்தவுடன் அன்றைய காங்கிரஸ் செயற்குழுவின் தலைவரான மகரிஷி புருஷோத்தம்தாஸ்  தாண்டனின் tandon1கீழ் காங்கிரஸ் செயற்குழுவில் தாம் இயங்க முடியாது என அறிவித்து பெரும் கலாட்டா செய்கிறார். ஒரு ராஜினாமா நாடகத்தை முன்வைத்து காங்கிரஸ் செயற்குழுவை மிரட்டுகிறார். தாண்டன் தன்னால் ஒரு பிரச்சனை இந்த அளவுக்கு செல்வதை விரும்பவில்லை செப்டம்பர் 1951 இல் காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அமைதியாக நேரு தலைவராக வழி செய்கிறார். எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் நேரு காங்கிரஸ் செயற்குழு பதவியை ஏற்கிறார். நேருவின் இந்த செயலின் பின்னாலிருந்த அற்பமான அரசியல் தந்திரத்தை நேரு குறித்து மிகவும் புகழ்ந்து எழுதிய அவரது சரிதை ஆசிரியர் சங்கர் கோஷ் வியந்து வர்ணிக்கிறார்:

இலியாட் ஜியார்ஜிடம் ஜோசப் சாம்பர்லைன் கூறினார், “உனக்கு அரசியலில் எதை செய்ய விருப்பம் எழுந்தாலும் கட்சி எந்திரம் உன் பின்னால்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு செயல்படு. படேல் வாழ்ந்த காலகட்டத்தில் கட்சி எந்திரம் படேலுடன்தான் இருந்தது. ஆனால் படேலின் மரணத்துக்கு பின்னர் கட்சியின் தலைவர் தானோ அல்லது தான் முன்மொழிந்தவரோ ஒருவர்தான் இருந்து தனது விருப்பங்களை நிறைவேற்றும்படியாக நேரு பார்த்து கொண்டார்.

நேரு தாண்டனின் கீழ் தாம் காங்கிரஸில் செயல்பட முடியாது என அறிவித்தார். nehruஆனால் தாண்டனோ நேரு அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும் வேண்டுமென்றே தாம் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதை உணர்ந்தும் நேரு கைப்பற்றிய காங்கிரஸ் செயற்குழுவில் பணி புரிய ஒப்புதல் அளித்தார்.அதிகார விளையாட்டுகளில் அக்கறையற்ற எளிய காந்தியரான அந்தோனி எலெஞ்சிமிட்டம் இதை குறித்து வைக்கும் கண்ணோட்டம், உண்மையான ஆன்மிக அணுகுமுறை எவரிடம் இருந்தது என்பதை காட்டுகிறது :

பண்டிட் நேரு காங்கிரஸ் தலைமை அதிகாரத்தை புருஷோத்தம்தாஸ் தாண்டனிடமிருந்து கைப்பற்றிய்ருந்தாலும் தாண்டனின் பண்பாட்டு ஆன்மிக பிடிப்பே வெற்றி பெற்றது. சமயத்தின் மேன்மை போலி மதச்சார்பின்மையை விட சமயப் பண்பாடு வெகு நிச்சயமாக உயர்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் ’ஹிந்த் ஸ்வராஜ்’  எனும் ஆதர்சத்தை அதன் ஆத்மார்த்தமாக உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் கொண்ட தேசபக்த இயக்கம் ஆர் எஸ் எஸ் என்பதை உணர்ந்து அதனை உலகுக்கு ஆவணப்படுத்தியவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். அதுவும்  காந்தியுடன் பழகி அவரை தம் ஆதர்சமாக ஏற்ற ஒரு உண்மை காந்தியர்.   இந்த எளிய காந்தியரின் மென்மையான ஆனால் அழுத்தமான குரல் என்பது தம் அரசியல் பிழைப்புக்காகவும் , ஊடக பிராபல்யத்துக்காகவும், அறிவு ஜீவி வேடம் கட்டுவதற்காகவும் ஆர் எஸ் எஸ்ஸையும் இந்துத்துவத்தையும் வசை பாடும் ஒவ்வொருவருக்கும் வரலாறு அளிக்கும் மனசாட்சியின் சிறு உறுத்தல். (அவர்கள் அதை காலணியில் நுழைந்த சிறுபரலென தாண்டிச் சென்றுவிடுவார்கள் என்பது வேறு விசயம்.)

இந்த இறுதி காந்திய கிறிஸ்தவர் 2011 இல் இயற்கை எய்தினார். அவரது  நினைவு நமக்கு சொல்வது இதுதான்… இந்துத்துவம் இந்த மண்ணின் என்றென்றும் அழியாத தரிசனம், எல்லோரையும் இணைக்கும் சாஸ்வத சத்தியம்.

தேநீருடன் மீண்டும் நாளை சந்திக்கலாம்.

45 Replies to “ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்”

 1. ஆர்.எஸ்.எஸ். தமது செயல்பாடுகளை ஆவணப்படுத்துவதில் அக்கறை காட்டாவிட்டாலும், தங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் மூலமாக அது தொகுக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன்.

  இன்றைய தேநீர் சுவையாக இருந்தது…

 2. மாணவர் சமுதாயத்தில் ரா.சேவா சங்கம் செயல்பாடுகள் பரவவில்லை. இதனால் தேசிய ஒருமைப்பாடு பற்றிய அறிவு குறைந்துகொண்டு வருகிறது. தமிழ் ஒரு தெய்வீக மொழி. நாயன்மார் ஆழ்வார்களால் இறைவனை குறித்து ஆயிரகணக்கான பாடல்கள் உள்ளன. தி ஹிந்து மூலம் நாள்தோறும் சில பாசுரங்கள் பொலிபுரையுடன் பிரசுரம் செய்தால் நல்லது.

 3. ஆர் எஸ் எஸ்சின் மேன்மையை மேலும் அறிய இக்கட்டுரையில் அடங்கியுள்ள உண்மைகள் விளக்குகின்றன.

 4. RSS அமைப்பு பெரும் வளா்ச்சி அடைநது வருகின்றது. அரசியல்வாதிகள் ஆயிரம் பேசட்டும். இந்தியாவின் தலைசிறந்த சுதேசி இளைஞா்கள் அமைப்பு என்ற பெருமை RSS க்கு மட்டும்தான். திக்விஜய் சிங் போன்ற கலகக்காரா்களின் கூச்சலை யாருமே பொருட்படுத்தியது போல் தொியவில்லை. தகுதியால் தலை நிமா்ந்து நிற்கிறது RSS. அதன் தொண்டும் தியாகமும் அதனைக் காப்பாற்றும்.

 5. எனக்கு இது முற்றிலும் புதிய தகவல். அந்தோனி எலஞ்சிமிட்டம். பெயரும் புதியதாக இருக்கிறது. ஆர் எஸ் எஸ் ஏன் இவரைப் பிரபலப் படுத்தவில்லை? செய்திருந்தால் ஆர் எஸ் எஸ் ஸின் பிம்பம் கொஞ்சம் மாறியிருக்கும். கத்தோலிக்க கிறிஸ்தவர் இவரை அங்கீகரிக்கிறார்களோ. மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கும் இவரை நினைவில் கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  எதுவானாலும் அரவிந்தனின் எழுத்துக்கள் அச்சு வடிவில் வரவேண்டும். வேண்டியவர்களுக்கும் உடன் எப்போதும் படிக்கக் கிடைக்கும். வேண்டாதவர்கள் கண்ணை அதிக நாள் உறுத்தும்.

 6. REAL BHARATHEEYA KRISHTHUVAN WHO UNDERSTOOD THE GAME PLAYED BY EUROPEON COLONISTS IN THE NAME OF GOD AND HEAVEN.

 7. TRUE BHARATHEEYA KRISHTHUVAN WHO UNDERSTOOD THE GAME PLAYED BY EUROPEON COLONISTS IN THE NAME OF GOD AND HEAVEN.SERVING BHARATHA MATHA IS THE DUTY OF EVERY INDIAN IRRESPECTIVE OF THE DOGMAS OF ANY FOREIGN RELIGIONS.

 8. Antony Elanjumittam like patriotic priests are very less in number and their voice also simply ignored by majority of the community. It is unfortunate that we got selfish leader like rose flower nehru whose real heart is not known to many due to his dominative politics. A true democratic leader never like to hold the post of PM

 9. தங்களின் கட்டுரை சில தவறான தகவல்களை நம் சமுகத்திற்கு தருவதாக உள்ளது. ஆகவே, தமிழ் ஹிந்து வின் நோக்கம் தவறானது என்பதில் ஐயமில்லை . யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியனின் வரிகள் எங்கே ? பிற மதத்தை ஒப்பிட்டு குறை கூறுவது மிக தவறானது.

 10. என்னுடைய கருத்துக்களில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

 11. Continues…. A true democratic leader never like to hold the post of PM for many a terms whereas he should give equal oppurtunity to co-leaders of his party which was done by Sri.Kamaraj. So Nehru might not have liked the voice supported to Patel like patriotic leaders. It is the time which reveals everything. Let us hope time for RSS to be understood in its true sense.

 12. ஐயா ,

  அரவிந்தா , நீவிர் நீடூழி வாழ்ந்து, இதே போல மேலும் பல அற்புத கட்டுரைகளை அளித்து , தமிழ் ஹிந்துவையும், நல்லோர் உள்ளங்களையும் மகிழ்விக்க வேண்டும் என்று என்னை ஆளும் அம்மை ஆதிபராசக்தியை வேண்டுகிறேன். பராசக்தி உளம் கனிக.

 13. ஆர்.எஸ்.எஸ். எனும் தேசபக்தி, அர்ப்பணிப்பு இயக்கத்தில் நான் இதுவரை இல்லையே எனும் ஏக்கம் குற்ற உணர்வு மேலெழுகிறது. அருமையான கட்டுரை அரவிந்தன் அண்ணா நன்றி.

 14. உங்களின் அனைத்து பதிவுகளயும் தயவு செய்து முக புத்தகத்தில் சேர் செய்யும் முறையை வைக்கவும்…அருமையான பதிவு…..

 15. திரு.லெனின் …

  //ஆர்.எஸ்.எஸ். எனும் தேசபக்தி, அர்ப்பணிப்பு இயக்கத்தில் நான் இதுவரை இல்லையே எனும் ஏக்கம் குற்ற உணர்வு மேலெழுகிறது. அருமையான கட்டுரை அரவிந்தன் அண்ணா நன்றி.//

  ஏன் இப்படி…. லெனின் என்று பெயரை வைத்து கொண்டு நாட்டுக்கு பயன் இல்லாத ஆர்.எஸ்.எஸ் என்னும் ஒரு பிற்போக்கு தனத்தில் போய் விழுகிறீர்கள் ………

 16. கம்யுனிசம் நிச்சயம் வெல்லும்…. Да здравствует революция … град Ленин … град Сталин…..

 17. உலகில் உள்ள எல்லா சித்தாந்தங்களுமே வெற்றிபெற முடியும். அவை வெற்றிபெறும் முன்னர் , தங்கள் வழிமுறைகளில் என்ன கோளாறுகள் இருக்கின்றன என்பதை ஆத்மபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முதலாளித்துவம் அதாவது கேபிடலிசம் என்று சொல்லும் தத்துவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இன்று இல்லை. ஏராளம் மாற்றி விட்டனர். கம்யூனிசத்தின் முக்கிய கொள்கையே உழைப்பின் ( labour ) முக்கியத்துவத்தினை உணர்த்துவதுதான். இது சரி என உணர்ந்த முதலாளித்துவ நாடுகளில், மனித வளம் ( human resource ) ஒரு மதிப்புள்ள சொத்து எனக்கருதி, அவர்களுடைய கணக்குப் பதிவியல் பாடத்திட்டத்தில் ,( human resource accounting ) – ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு விட்டது. மேலும் கால மாற்றத்துக்கு தேவையானவாறு , பணவீக்கக் கணக்கீடுகளையும் (inflation accounting) பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டனர். கால மாறுதலால் புதிய கருத்தாக்கங்களை ஏற்று மாற்றிக்கொள்ள முதலாளித்துவம் முனைப்பு காட்டுகிறது. மேலும் social responsibility accounting – என்ற கருத்தும் கணக்குப் பதிவியலில் ஒரு புதிய பாடமாக சேர்த்து, ஒவ்வொரு வியாபாரி மற்றும் உற்பத்தியாளரும் தான் சார்ந்த சமூகத்துக்கு எவ்விதங்களில் கடமைப் பட்டுள்ளார் என்பதை விளக்கமாக அவர்களது வாணிகத் தத்துவங்களில் சேர்த்துக்கொண்டு விட்டனர். Free trade – சுதந்திர வாணிகம் என்பது இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் முழு அளவில் இல்லை. ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது. அமெரிக்காவில் அவர்களது நாட்டு தொழில்களை காப்பாற்ற, (PROTECTIONISM)- தேவையான அளவு பயன்படுத்தப் படுகிறது. MARKET DECIDES EVERYTHING – சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதில் தேவையான மாற்றங்களை செய்துவிட்டனர்.

  ஆனால் கம்யூனிசத்தில் முக்கியமாக சொல்லப்படும் அரசுக் கட்டுப்பாடுகள் ( government controls) இன்னமும் நீடிக்கின்றன. மூலதனத்தின் முக்கியத்தை கம்யூனிசம் குறைத்தே மதிப்பிடுகிறது. அவர்கள் அதனை இன்றுவரை மாற்றிக்கொள்ள முடிவு எடுக்கவில்லை. மேலும் தனிநபர் ஊக்கத்துக்கு போதிய ஆதரவு அளிக்கப்படாததால், கம்யூனிசம் இயற்கைக்கும், மனித எண்ணப் போக்குக்கும் சில இடங்களில் நெருடலாக இருக்கிறது. அந்த நெருடல்களை போக்க , தக்க சீர்திருத்தங்களினை கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டால், நிச்சயம் கம்யூனிசம் வெல்ல முடியும். ஆனால் தாஸ் கேபிடல் – போன்ற பழைய நூல்களையே ஓதிக்கொண்டிருந்தால், வளர்ச்சி கிடைக்காது. அரசே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று சொன்னால், ஒரு வேலையும் நடக்காது. இன்றைய உலகுக்கு தேவையான மாறுதல்களை செய்துகொண்டால், யார் வேண்டுமானாலும் வாழலாம். இன்றைய சீனாவில் தனிநபர் சொத்துரிமை ஓரளவுக்கு , அரசியல் சட்ட திருத்தம் மூலம் கொடுத்துள்ளனர். மேலும் வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்று எண்ணெய் தோண்டும் திட்டங்களில் வெளிநாட்டின் முதலீட்டாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இன்னும் பல மாறுதல்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். மாற மறுக்கும் தத்துவங்கள் எதுவாயினும், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். எதிர்கால உலகில் , தனிமனித சுதந்திரம், மக்களாட்சி ( ஜனநாயகம்), சமத்துவம், சஹோதரத்துவம் ஆகிய கொள்கைகளே உலகை ஆளும். இவற்றை அழிக்க நினைத்தால், எந்த தத்துவம் ஆயினும் மக்களால் தூக்கி வீசப்படும். எந்த தத்துவம் ஆனாலும், உற்பத்திப் பெருக்கத்தை தூண்டுவதாக அமைய வேண்டும்.உற்பத்தி பெருக்கமே மனித வாழ்வு சிறக்கச்செய்யும்.

 18. இன்று நேர்மையற்ற நேரு பிறந்த நாளாகும். அதுமட்டுமல்ல இன்று உலக நீரிழிவு தினமும் ஆகும். குழந்தைகள் தினத்திற்கு காரணமான நேரு குழந்தை தனமாக காஷ்மீர் பிரச்னையை கையாண்டதால் பிரச்சனைக்கு விடிவு இல்லாமல் உள்ளது. சர்க்கரை நோய் வந்து விட்டால் அதை குணப்படுத்த முடியாது. அந் நோய் இந்த கட்டை (=body ) வேகும் போதுதான் போகும். அதே போல் சர்க்கரை மாதிரி இனிக்க இனிக்க பேசிய போலி மதசார்பின்மைக்கு வித்திட்ட வித்தகர், ரோஜாக்களின் ராஜா (இங்கே உங்களுக்கு பழம் பெரும் பாடகி MLV மற்றும் Lady Mountbatten ஆகியோர் பற்றி நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல)) என்று போற்றி புகழப்படும் பெருமகனார் உண்டாக்கிய காஷ்மீர் பிரச்சனை யுகம் யுகமாக இருக்கும். இந்த ஜகம் அழியும்போதுதான் அதுவும் அழியும். ஆகவே (காஷ்மீர் பிரச்னைக்கு காரணமான) நேரு பிறந்த தினமும் (காஷ்மீர் பிரச்சனை போன்று என்றும் தீராத நீரிழிவு

 19. (தொடர்கிறது)
  தினமும் ஒரே நாளில் சேர்ந்து வருவதில் வியபோன்றும் இல்லை.
  ———————————நேரு பெருமகனார் எப்படிப்பட்டவர்?————————————
  1. தனது திருமணப் பத்திரிக்கையை உருதுவில் அச்சிட்டு தான் ஒரு “முஸ்லிம்தாசன்” என்பதை உலகுக்கு அறிவித்தார்.
  2. “REWA ” வில் நடந்த RSS பேரணியில் உரையாற்றியமைக்கு திரு எஸ்.ராதாகிருஷ்ணனை நேரு கடிந்தார்.
  3. RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு KUNDAN MALVIYA (S /O மதன் மோகன் மாளவியா)வை “பைத்தியகாரன் என்று நேரு கூறினார்.
  4. ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானோடு சேர விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அதனால் படேல் அவர்கள் ARMY அனுப்ப வேண்டும் என்று கூறியபோது நேரு படேலைப் பார்த்து “நீர் ஒரு மதவாதி” என்று பழித்தார் (MKK NAIR )
  5. அஜ்மீர் வகுப்பு கலவரம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு கெட்டாலும் பரவாயில்லை ஆனால் MILITANT MINORITY களை கனிவோடு நடத்த வேண்டும். எத்தனை முஸ்லிம்கள் கைது செய்யப்படுகிரார்களோ அதே அளவிற்கு இந்துக்களையும் கைது செய்து சிறுபான்மை இனத்தவரை திருப்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். (குறிப்பு:– இந்த ஆள் வழி வந்த நபர்கள்தான் இப்போது மத்தியில் ஆட்சியில் உள்ளனர். அவன் வழியிலேயே முஸ்லிம்களை திருப்தி செய்வது ஒன்றையே தலையாய நோக்கமாக கொண்டுள்ளனர்)

  ———————————-WHO IS PSEUDO -SECULARIST ?——————————————–

  1. டெல்லி இமாம் “பாரத மாதா ஒரு தேவிடியா” என்று பேசியபோது மௌனமாக இருந்துவிட்டு “நான் ஒரு இந்து தேசியவாதி” என்று மோடி சொன்னதும் வானத்திற்கும் பூமிக்கும் எவன் குதித்தானோ அவனே.
  2.ரம்ஜான் பண்டிகையின்போது குல்லாய் அணிந்து காஞ்சி குடித்து வாழ்த்து சொல்லிவிட்டு தீபாவளியின் பொது மெளனமாக இருப்பவன் எவனோ அவனே.
  3.குஜராத்தில் 1990 முதல் 1995 வரை நடந்த 245 கலவர்களை பற்றி மூச்சு விடாமல் இருந்துவிட்டு 2002 கலவரத்தை மட்டும் 24 மணி நேரமும் பேசுபவன் எவனோ அவனே.
  4. CHURCH க்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் கோவை ஒண்டிபுதூர் CSI பாதிரி ஜான் மார்க் (63) என்பவர் 17.3.2013 அன்று கைது செய்த செய்தியினை இருட்டடிப்பு செய்துவிட்டு இந்து சாமியார்கள் தவறாக நடக்கும் செய்திகளை மட்டும் 24 மணி நேரமும் 7 நாட்களும் மாத கணக்கில் ஒளிபரப்புபவன் எவனோ அவனே
  5. 1995 டிசம்பரில் SUPREME COURT “ஹிந்துத்வா என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைத்து ஒருமித்த ஒரு “இந்தியதனத்தை” உருவாக்குவதாகும் என்று கூறிய பிறகும் இந்துத்துவாவை கேவலப் படுத்திப் பேசுபவன் எவனோ அவனே.
  6. பாரத மாதாவை நிர்வாணமாக ஒரு முஸ்லிம் காம வெறியன் வரைந்தபோது “ஏனடா நாயே! உன் அம்மா, அக்கா தங்கச்சி ஆகியோரையும் முழு நிர்வாணமாக வரைய உனக்கு தைரியமுண்டா? என்று கேட்காமல் இருந்துவிட்டு “நபி” பற்றி ஒரு திரைப்படம் அமரிக்காவில் எடுத்தபோது இந்தியாவில் காலி கலாட்டா செய்தவர்களுக்கு (ஒரு பொட்டலம் புலாவு உணவிற்கு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு) ஆதரவு தெரிவித்தவன் எவனோ அவனே.
  7.”தமிழ் மூலம் இணைவோம்” என்று கூறிக்கொண்டு தனது தமிழ் நாளிதழில் “த இந்து” என்பதில் வரும் “த” என்பது தமிழா? அல்லது THE என்ற ஆங்கில வார்த்தையின் TRANSLITERATION ஆ? அப்புறம் எப்படி தமிழால் இணைவது? செய்தி தாளின் பெயருக்கு நேர்மாறாக கட்டுரைகள் எழுதி “த முஸ்லிம்” என்று மாற்றி கொள்ளாத இவர்கள் போலி மத சார்பின்மை வாதிகள்.
  8. மதம் ஒரு அபின் என்று சொல்லிவிட்டு இந்து மதத்தை மட்டும் கண்டித்து முஸ்லிம் மதத்தை போற்றி புகழும் அயோக்கியர்கள் உள்ள கட்சி எதுவோ அதுவே போலி மத சார்பற்ற கட்சி.
  9. சதா சர்வ காலமும் தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானை நட்பு நாடாகவும் நல்லதை செய்ய நட்பு கரம் நீட்டும் இஸ்ரேலை ஜென்ம பகை நாடாகவும் எந்த ஆட்சி கருதுகிறதோ அது போலி மத சார்பற்ற ஆட்சி.
  10. வன்னியர் தலைவர் என்றால் வாழ்க என்றும் தலித் தலைவர் என்றால் தலைக்கு மேல் வைத்து ஆடுவதும் அகிலேஷ் யாதவ் என்றும் ஜெயபால் ரெட்டி என்றும் மணி சங்கர் ஐயர் என்றும் சாதி பெயர்களை வைத்துகொண்டு இருக்கும் இவர்களை 24 CARRET SECULARISTS என்று கூறுவதும் அந்த அனைத்து ஜாதிகளையும் உள்ளடக்கியதாகவுள்ள “இந்து” என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் இந்த லோகமே அழிந்து விட்டது போல அலறி ஆர்ப்பரிப்பவன் எவனோ அவனே போலிமதசாற்பற்றவன்

  11. சாதிகள் என்ற பல சிறு சிறு வட்டங்கள் இருந்தால் பரவாயில்லை மதம் என்ற ஒரே ஒரு பெருவட்டம் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் சாதி ஒழிப்பையும் அவைகளின் ஒற்றுமையையும் விரும்பாதவன் ஆவான். அவன் தான் “”போலி மதசார்ப்பின்மைவாதி”” (=PSEUDO SECULARIST )

 20. ஸ்ரீ பாலசந்த்ரன், அருமை

  கம்யூனிஸம் என்பதனை முற்று முழுதாகக் கடாசாமல் அதில் உள்ள நிறை குறைகளை சரியாக நிறுத்து விளக்கியது மிகவும் ச்லாக்யம்.

  Human Resource Accounting, Inflation Accounting போன்ற பல Jargons – க்கு அழகான தமிழ்ப்பதங்களைப் பதிவு செய்ததற்கு நன்றி. ஒவ்வொரு பதத்திற்கும் தமிழ் மற்றும் ஆங்க்ல பதங்களை அடுத்தடுத்து பகிர்ந்தமை அழகு. இந்த உத்தரத்தை நான் save செய்து பல முறை மீள்வாசிப்பு செய்வேன்.

 21. ஸ்ரீ ராகுலன்

  உலகம் கருப்பு வெள்ளையினால் மட்டும் ஆனது இல்லை. முற்று முழுதாகக் கருப்பாகத் தீட்ட அல்லது முற்று முழுதாக வெள்ளையாகத் தீட்ட.

  ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் — அவர்களுடன் பழகுபவர்கள் எப்படி உலகத்தையும் உலகில் புழங்கும் கோட்பாடுகளையும் — அதில் உள்ள நிறை குறைகளையும் — யதார்த்தம் சார்ந்து அணுகவியலும் என்பதற்கு ஸ்ரீமான் பாலசந்த்ரன் அவர்களது உத்தரத்தை வாசித்து அறியவும்.

  ஒரு கொள்கைக்காக விசிலடித்து கோஷமிடுவது போன்ற தோரணையைக் கொடுப்பது தங்கள் உத்தரம்.

  ஆர்.எஸ்.எஸ் தேசத்திற்கு ஆற்றிய பணிகளை உங்கள் கண்களிடமிருந்து மறைப்பது கம்யூனிஸ இரும்புத்திரை — என்பதனையும் — ஸ்ரீ பால சந்த்ரன் அவர்கள் இந்த இயக்கம் பற்றி சொல்ல விட்ட குறையாக நான் சேர்த்துக் கொள்கிறேன்.

  ஆர்.எஸ்.எஸ் பற்றி குற்றம் சொல்லக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. மிகக் குறிப்பாக — மிகைப்படுத்தல் இல்லாது — குறித்த நிகழ்வுகள் — தரவுகள் சார்ந்து குற்றம் சாட்ட பழகிக்கொள்ளுங்கள்.

  அர்த்தமற்ற கோஷங்கள் முறையான உரையாடலுக்கு வெளியே தான் இருக்கும்.

  ரஷ்ய பாஷையில் ஏதோ பதிவு செய்துள்ளீர்கள். தமிழ் எழுத்து வரிவடிவத்தில் அல்லது ஆங்க்ல வரிவடிவத்தில் அதை பதிவு செய்தால் — அந்த வாசகம் என்ன என்பதனை எல்லோரும் அறிந்து கொள்ளலாமே. கம்யூனிஸம் வெல்லும் என்பது அதன் பொருளா?

 22. அன்புள்ள திரு கிருஷ்ணகுமார்,

  தங்கள் கடிதத்துக்கு நன்றி. தங்கள் வியாசங்களை விடாமல் படித்து மகிழ்கிறேன். திருப்புகழை விடாமல் ஓத வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு ஊட்டியவர்கள் இருவர். ஒன்று திருமுருக கிருபாவந்தவாரியார் சுவாமிகள், இரண்டு தாங்கள். தமிழ் இந்துவில் வெளியான தங்களின் கட்டுரைகளும், கடிதங்களும் என்னை திருப்புகழ் நோக்கி திருப்பின. வயதான காலத்தில் மனப்பாடம் செய்ய முடியவில்லை என்ற போதிலும், படித்து மகிழ முடிகிறது.

 23. // ரஷ்ய பாஷையில் ஏதோ பதிவு செய்துள்ளீர்கள். தமிழ் எழுத்து வரிவடிவத்தில் அல்லது ஆங்க்ல வரிவடிவத்தில் அதை பதிவு செய்தால் — அந்த வாசகம் என்ன என்பதனை எல்லோரும் அறிந்து கொள்ளலாமே. //

  Google மொழிபெயர்ப்பு சேவையை உபயோகித்துப் பார்த்தேன்… புதிதாக அவர் ஒன்றும் சொல்லவில்லை… “புரட்சி வாழ்க! லெனினைப் போற்றுவோம்! ஸ்டாலினைப் போற்றுவோம்!” இதே கூச்சல் தான்.

 24. மனிதர்களை அவர்களின் இயல்பிலே நோக்கிடின் நாம் பல அருமையான தகவல்களை உணர்ந்துகொள்ள இயலும். மாறாக அவர்தம் புற அடையாளங்களைக் கொண்டு நாம் ஒதுக்கிவிட்டால் பல நல்லவற்றை இழக்கக் கூடும். வள்ளுவனின் இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அது மெய்ப்பொருள் காண்பதறிவு.

 25. “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில் நடிகர் கமல் “ஆத்தா வைய்யும் நான் சந்தைக்கு போகணும் காசு குடு” என்று லூசு போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவான். நமது Comrade ராகுலன் முன்பு ஒரு கட்டுரைக்கு மறுமொழி எழுதும்போதும் இப்படித்தான் எழுதினர். அப்போது அவர் குற்றசாட்டுகளுக்கு பலர் தக்க பதில் கொடுத்தபிறகும் மீண்டும் அவர் கமல் மாதிரியே நடக்கிறார்..

  இந்தியாவில் பிறந்த சில ஈனப் பிறவிகளுக்கு இந்தியப பற்று கிடையாது அந்நிய மோகம் அதிகம்.அதிலும் குறிப்பாக தமிழர்கள் இந்த விஷயத்தில் படுமோசம். தமிழ் தெரிந்த ராகுலன் எதற்கு ரஷிய மொழியில் எழுத வேண்டும்? அடிமை புத்தி அகலவில்லையோ? இந்த நாட்டில் பிறந்த அறிவாளிகள் எத்தனையோ பேர் இருக்க “இத்தாலி நாட்டு சரக்கை” எதற்கு விரும்புகிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் நாட்டில் பிறந்த நடிகைகள் பலர் இருக்க பாம்பேவிலிருந்து இறக்குமதியான கூத்தாடிகளை மட்டும் விரும்புவதென்? (சில பைத்தியங்கள் குண்டு நடிகை குஷ்பூவிற்கு திருச்சியில் கோவில் கட்டின.) இந்த மண்ணுக்கேற்ற கொள்கைகளை ஒதுக்கிவிட்டு அந்நியநாட்டு கம்ம்யுனிச கொள்கையை சில ஜென்மங்கள் தலைமேல் வைத்து ஆடுவதேன்?

  கம்யுனிசம் தோன்றிய நாட்டிலேயே குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.செத்து போன ஒன்றைபபற்றி சில வெத்து வேட்டுகள் இன்னும் வீண் பெருமை பேசி திரிகின்றனர். நாய் வாலை நிமிர்த்தமுடியாது. A leopard cannot change its spot.

 26. திரு. பாலச்சந்திரன் ……..

  தங்களின் மறுமொழியினை கண்டேன் …மிகவும் தீர்கமான கருத்துக்கள் ………… காலத்திற்கு ஏற்றார் போல சில மாற்றங்களை கம்யுனிசத்தில் செய்யலாமே என்று கூறுகிறீர்கள்…

  கம்யுனிசம் என்பது அது யாரால் எந்த காலகட்டத்தில் உருவாக்க பட்டதோ ( மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ்) அப்போதே எல்லா காலத்திற்கும் எற்றதகாவே தான் அதை வடிவமைத்தார்கள்… அதன் அடிப்படை கோட்பாடுகளில் பிழை ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை… அனைவரும் சமதர்மதோடு வாழ வேண்டும் என்னும் உயரிய இலட்சியத்தை இலக்காக கொண்டு இயற்ற பட்டதே மார்க்சியம்.. அந்த மானுட சமதர்மத்தை குலைக்கும் விஷயங்கள் இரண்டு .. ஒன்று மதம்…. மற்றொன்று முதலாளித்துவம்…. இந்த இரண்டும் முற்றும் துடைத்து எரியபட்டால் ஒழிய உலகத்தில் அமைதியும் சமதர்மும் நிலவுவது மிக கடினமே…..

  //முதலாளித்துவம் அதாவது கேபிடலிசம் என்று சொல்லும் தத்துவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இன்று இல்லை. ஏராளம் மாற்றி விட்டனர். கம்யூனிசத்தின் முக்கிய கொள்கையே உழைப்பின் ( labour ) முக்கியத்துவத்தினை உணர்த்துவதுதான். இது சரி என உணர்ந்த முதலாளித்துவ நாடுகளில், மனித வளம் ( human resource ) ஒரு மதிப்புள்ள சொத்து எனக்கருதி, அவர்களுடைய கணக்குப் பதிவியல் பாடத்திட்டத்தில் ,( human resource accounting ) – ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு விட்டது. மேலும் கால மாற்றத்துக்கு தேவையானவாறு , பணவீக்கக் கணக்கீடுகளையும் (inflation accounting) பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டனர். கால மாறுதலால் புதிய கருத்தாக்கங்களை ஏற்று மாற்றிக்கொள்ள முதலாளித்துவம் முனைப்பு காட்டுகிறது. மேலும் social responsibility accounting – என்ற கருத்தும் கணக்குப் பதிவியலில் ஒரு புதிய பாடமாக சேர்த்து, ஒவ்வொரு வியாபாரி மற்றும் உற்பத்தியாளரும் தான் சார்ந்த சமூகத்துக்கு எவ்விதங்களில் கடமைப் பட்டுள்ளார் என்பதை விளக்கமாக அவர்களது வாணிகத் தத்துவங்களில் சேர்த்துக்கொண்டு விட்டனர். Free trade – சுதந்திர வாணிகம் என்பது இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் முழு அளவில் இல்லை. ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது. அமெரிக்காவில் அவர்களது நாட்டு தொழில்களை காப்பாற்ற, (PROTECTIONISM)- தேவையான அளவு பயன்படுத்தப் படுகிறது. MARKET DECIDES EVERYTHING – சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதில் தேவையான மாற்றங்களை செய்துவிட்டனர்.//

  இந்த மாற்றங்கள் ஏதோ முதலாளி வர்க்கம் இந்த சமுக நன்மைக்காகவோ அல்லது உழைப்பாளர் நலன்களுக்காகவோ தானாக மனமுவந்து செய்தது இல்லை… சுயநல முதலாளிகள் அனைவரும் தங்களை காத்து கொள்ள ஏற்படுத்திய நாடகம் தான் இது… இந்த சமுகத்திற்கு தாங்கள் ஒரு பெரிய நன்மை செய்துவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த தான் இந்த மாற்றங்களை ஏற்படுத்தினார்களே ஒழிய நாட்டின் மீதோ மக்களின் மீதோ அன்பினாலோ அக்கறையினாலோ அல்ல … இதை செய்யாமல் இருந்தால் ஏற்கனவே நாரி கொண்டு இருக்கும் மூலதன கொள்ளை மேலும் நாரி விடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் .. ஆகவே சீர்திருத்தம் என்கிற பெயரில் சில எலும்பு துண்டுகளை தூக்கி எரிந்து இருக்கிறது… புரியும்படி சொல்லவேண்டுமானால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கவேண்டியது ஒரு அரசின் கடமை … ஆனால் அதைவிட்டு பாட்டிலில் அடைத்து பாதுகாப்பான குடிநீர் என்று கூறி அதில் தன்னுடைய கட்சி சின்னத்தை வரைந்து பத்து ரூபாயில் பெரிய புரட்சி செய்து விட்டது போல் பம்மாத்து பண்ணும் ஜெயலலிதாவின் மனநிலைக்கு சற்றும் குறைந்தது அல்ல மேற்சொன்ன முதலாளித்துவத்தின் மாற்றங்களும் .. இதெல்லாம் சமுகத்தை ஏமாற்ற மக்களுடன் செய்து கொள்ளும் ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் அவ்வுளவுதான்.. ஆகவே இடத்திற்கு ஏற்றார் போல நிறத்தை மாற்றும் இந்த பச்சோந்தி தனங்கள் மக்களை சுரண்டும் Corporate முதலாளி வர்கத்திற்க்கு தான் தேவை … மார்க்சியத்திற்கு அல்ல ….

  Honest man என்னும் அதித நேர்மையாளருக்கு …….

  //இந்தியாவில் பிறந்த சில ஈனப் பிறவிகளுக்கு இந்தியப பற்று கிடையாது அந்நிய மோகம் அதிகம்.அதிலும் குறிப்பாக தமிழர்கள் இந்த விஷயத்தில் படுமோசம். தமிழ் தெரிந்த ராகுலன் எதற்கு ரஷிய மொழியில் எழுத வேண்டும்?//

  ஓஹோனானாம் ……. இந்திய பற்றுனா எப்படிங்க … இந்துவாக இருக்கணும் .. இந்துத்துவத்தை ஏத்துக்கணும் … மாறி இஸ்லாமியனாவோ கிறித்துவனாகவோ அல்லது கம்யுனிஸ்ட் ஆகவோ இருந்தால் தேச துரோகின்னு அர்த்தம் அப்படி தானே .. என் வீட்டில் என்னை ஹிந்தி கற்று கொள்ள சொல்லி வற்புறுத்தினார்கள். இந்தி அற்புதமான மொழி தான் இருந்தாலும் எனக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை … ரஷ்ய மொழி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் அந்த மொழியை என் ரஷ்ய தோழியின் முலமாக பழுதற கற்று கொண்டேன் … இங்கு மறுமொழியில் தட்டச்சு செய்யும் பொழுது அதற்க்கான தமிழ் அர்த்தத்தை கூறாமல் விட்டதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் …. அதை தான் கூகிளில் உள்ள மொழிமாற்ற வசதியின் மூலமாக கந்தர்வன் விளக்கி விட்டாரே…..

  //இந்த மண்ணுக்கேற்ற கொள்கைகளை ஒதுக்கிவிட்டு அந்நியநாட்டு கம்ம்யுனிச கொள்கையை சில ஜென்மங்கள் தலைமேல் வைத்து ஆடுவதேன்?//

  இது என்னடா வம்பா போச்சு….. கம்யுனிச கொள்கையை வரையறுத்த காரல் மார்க்ஸ் பிறப்பால் ஒரு ஜெர்மானியர் அதற்காக அவர் “என்னுடைய இந்த கொள்கையை ஜெர்மானியர்களை தவிர வேறு நாட்டை சேர்ந்தவர்களோ அல்லது இனத்தவரோ பயன்படுத்தக்கூடாது என்றா கூறினார் “. அது சரி உங்களை ஒன்று கேட்கிறேன் இந்தியாவை தாண்டி அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்து மதத்தால் ஈர்க்க பட்டு கிறித்துவத்தை விட்டு இந்து மதத்திற்கு மாறும் பட்சத்தில் இந்த மண்ணுகேற்ற கொள்கைகள் என்ற லாஜிக்கை அவர்களிடம் கூறி அவர்களை இந்து மதத்திற்கு வருவதை தப்பு என்று உங்களால் கூற முடியுமா …. ஏன்என்றால் மேற் சொன்ன நாடுகளில் சிலர் ( குறிப்பாக வெள்ளைகார கிருத்துவர்கள் ) இந்து மதத்தில் இருகிறார்கள் .. வேண்டுமானால் உங்கள் Corporate சாமியார்கள் நடத்தும் ஆசிரமங்களில் போய் பாருங்கள் நிறைய பேரை பார்க்கலாம் ..

  //கம்யுனிசம் தோன்றிய நாட்டிலேயே குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.செத்து போன ஒன்றைபபற்றி சில வெத்து வேட்டுகள் இன்னும் வீண் பெருமை பேசி திரிகின்றனர். நாய் வாலை நிமிர்த்தமுடியாது. A leopard cannot change its spot.//

  கம்யுனிசம் சாகவில்லை….இதே தமிழ்ஹிந்து தளத்தில் விஞ்ஞானி ஆல்பட் ஐன்ஸ்டீனையும் விவேகானந்தரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டு புளங்காகிதம் அடைந்தார்கள் .. அப்பேற்பட்ட விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சோசியலிசம் பற்றி கூறுவதை கேளுங்கள் …

  “[இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். மேலும்,

  “தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.//

  (ஆதாரம்;http://www.marxists.org/tamil/einstein/why-socialism.htm) ஐன்ஸ்டீனின் சோசியலிசம் குறித்த முழு கட்டுரையும் இதில் இருக்கிறது

  ஆகவே இப்போது ஏற்பட்டு இருப்பது ஒரு சிறு பின்னடைவு மட்டும் தான்… கற்பனை உலகில் சஞ்சரிக்கும் உங்கள் அணைத்து மதமும் உயிரோடு இருக்கும்போது… எதார்த்தத்தை மட்டுமே எடுத்துகொள்ளும் மார்க்சியம் நிச்சயம் வெல்லும்… அது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தோ பத்து ஆண்டுகள் கழித்தோ நடக்கலாம் எனக்கு தெரியாது..ஆனால் ஒரு நாள் நிச்சயம் உலகை வெற்றி கொள்ளும் ……

  //சில வெத்து வேட்டுகள் இன்னும் வீண் பெருமை பேசி திரிகின்றனர். நாய் வாலை நிமிர்த்தமுடியாது. A leopard cannot change its spot.//

  பார்த்தீர்களா … மதம் என்பது வெறி தரும் ஒரு அபின் என்பதை நீங்களே நிருபித்துவிட்டீர்கள் …இதை விட என்னாலும் பேச முடியும் அது நாகரிகம் கிடையாது … மறுமொழியில் இனி கொஞ்சம் பண்போடு பேசுங்கள் அது தான் நீங்கள் சார்ந்து இருக்கும் சனாதன மதத்திற்கு பெருமை… உங்களுக்காக ரஷ்ய மொழியில் ஒரு லெனினின் வாசகம் ….

  Коммунизм – это советская власть плюс электрификация всей страны.”
  – Владимир Ильич Ленин.

  Means:-“Communism is Soviet power plus the electrification of the whole country.”
  ― Vladimir Ilyich Lenin.

 27. // ஆகவே இப்போது ஏற்பட்டு இருப்பது ஒரு சிறு பின்னடைவு மட்டும் தான்… கற்பனை உலகில் சஞ்சரிக்கும் உங்கள் அணைத்து மதமும் உயிரோடு இருக்கும்போது… எதார்த்தத்தை மட்டுமே எடுத்துகொள்ளும் மார்க்சியம் நிச்சயம் வெல்லும்… அது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தோ பத்து ஆண்டுகள் கழித்தோ நடக்கலாம் எனக்கு தெரியாது..ஆனால் ஒரு நாள் நிச்சயம் உலகை வெற்றி கொள்ளும் …… //

  யப்பாஆஆஅ. போதும் சார், தாங்க முடியல.

 28. ஒரு சுயநலத்துக்காகவாவது நல்ல மாறுதல்களை செய்தாலும் , அந்த மாறுதல் நல்லது தானே.

  நிற்க, மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்துவோரை வேட்டையாடி கொன்றது கம்யூனிஸ்டு நாடுகளின் வரலாறு. பழங்கதை எப்படியாயினும் , இந்த நூற்றாண்டில் தேவையான அளவு மாறுவதே அவசியமான தேவை ஆகும். நம் காலத்திலேயே கேரளாவில் ஒரு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பொதுமேடையிலேயே , தாங்கள் தங்கள் கட்சியின் அரசியல் எதிரிகளையும் , உள்கட்சி அதிருப்தியாளர்கள் பலரையும் கொன்றதை , மேடையிலேயே பேசினார்.

  எனவே, காரல் மார்க்ஸ் கண்ட கம்யூனிசம் என்பது ஒரு utopian – சிந்தனை மட்டுமே.

  காரல் மார்க்ஸ் தனது உரையில், நூலில் அரசாங்கம் என்பதே இல்லாத ஒரு சமூகத்தை கற்பனை செய்கிறார். இது சாத்தியமற்ற ஒன்று. அரசு என்று ஒன்று இல்லாத அமைப்புக்கள் உலகில் எதுவாயினும் விரைவில் சிதறிவிடும்.

  தனி மனிதர்களின் உழைப்புக்கு எவ்வித அங்கீகாரமும் அரசிடம் இருந்து கிடைக்காது. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு உழைக்கவேண்டும் ஆனால் அரசு கூலி/சம்பளம் மட்டும் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் என்று சொல்வதை யாரும் ஏற்கமாட்டார்கள். அதன் விளைவு என்ன தெரியுமா ? எல்லோருக்கும் கிடைக்கும் கூலி தான் நமக்கும் கிடைக்கப்போகிறது, நாம் மட்டும் ஏனப்பா கூடுதலாக உழைக்கவேண்டும் என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு மன்னர் தொட்டிலில் பால் ஊற்ற சொல்லி, அனைவரும் தண்ணீரை ஊற்றிய கதை ஒன்றினை நாம் படித்திருக்கிறோம்..

  தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்த இசமும் உலகில் நிலைக்காது/ எந்த நாட்டிலும் செயல் படுத்த முடியாது.

  வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்க கூடாது என்பது கம்யூனிச சித்தாந்தம். இது சாத்தியமா ? இது சாத்தியம் இல்லை என்பதால் தான் செஞ்சீனம் பல துறைகளில் , கடலோர என்னை துரப்பணப் பணிகள் உட்பட , வெளிநாட்டு மூலதனத்தை ஏற்றுக்கொண்டது. அது மட்டுமல்ல, இன்று அமெரிக்காவில் சுமார் 36 விழுக்காடு சீனாவின் முதலீடு உள்ளது. ஆம் கம்யூனிஸ்டுகள் தங்கள் செல்வத்தையும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

  எல்லா சொத்துக்களும் அரசுக்கே உடமை என்பது கம்யூனிச சித்தாந்தம். ஆனால் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் காணப்பட்டதால், அவசியத்தை முன்னிட்டு தனிநபர் சொத்துரிமையை அளிக்க , சீன அரசே முன்வந்தது காலத்தின் கட்டாயம். அரசியல் அமைப்பையே திருத்தி, தனி நபர் சொத்துரிமையை அனுமதிக்க நேரிட்டது.

  இயற்கையிலேயே மனித இனம் பல்வேறு வித்தியாசமான சுவைகளையும், வித்தியாசமான சிந்தனைகளையும் கொண்டது. எல்லோருமே ஒரே நிற உடை உடுத்தவேண்டும் என்பதும், எல்லோரும் ஒரே உணவை உடுத்த வேண்டும் என்பதும், எல்லோரும் ஒரே மொழியை பேச வேண்டும் என்பதும், எல்லோரும் ஒரே அரசியல் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதும், உலகில் என்றுமே நடக்காது. தங்கள் வழிகளை ஏற்காதவர்களை அழிப்போம் என்பதும் , இனி உலகில் என்றுமே நடக்காது. கம்யூனிசம் இந்த தேவையான மாறுதல்களை செய்தால் நிச்சயம் வெல்ல முடியும். கம்யூனிசம் ஜனநாயகத்துக்கு எதிரி என்று சொல்லிக்கொண்டிருந்தால் , ஒரே ஒரு கட்சி மட்டுமே நாட்டில் இருக்க முடியும் என்று சொல்லி, மற்ற மாறுபட்ட இயக்கங்களை அழித்துவிட நினைத்தால் , அது நடக்காது.

  கம்யூனிசம் என்று அல்ல, எந்த தத்துவம் ஆனாலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற 3- அடிப்படைகளை ஏற்க மறுத்தால், நீடிக்க முடியாது. முதலாளிகள் தங்கள் சுயநலத்துக்காகவாவது மாறிவிடத் தயாராகிவிட்டனர். ஆனால் காரல் மார்க்ஸ் சொன்ன கம்யூனிசம் ஒரு உடோபியன் தாட் ஆகும். அனைவருக்கும் நிலத்தை பகிர்ந்து அளிப்பது என்ற ஒரே கொள்கை மட்டுமே கம்யூனிசத்தில் நடந்தது. அது வரவேற்பை பெற்றது . ஆனால் தனிமனித முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டால் தான், புதிய கண்டுபிடிப்புக்களும், புதிய உற்பத்தி திறனும் ஏற்பட்டு, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பெருகும். எனவே, கம்யூனிசத்தில் மேற் சொன்ன விவகாரங்களில் தக்க மாறுதல்களை ஏற்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிரமம்.

 29. அன்புள்ள ராகுலன்,

  நான் ஒரு பொருளாதார மாணவன் என்ற முறையில் என் கருத்துக்களை எழுதியுள்ளேன். மாறுபட்ட கருத்து கொண்டோர் தங்கள் கருத்தையும் எழுதினால் படித்துப்பார்த்து , பரிசீலனை செய்துகொள்ள உதவியாக இருக்கும்.

 30. கம்யூனிசம் சொல்லும் அடிப்படை விஷயம் என்ன என்ன ?-

  1. அரசாங்கம் இல்லாத சமுதாயம்.

  2. நாட்டிலுள்ள அனைத்து வளங்களும் அரசின் சொந்தம்.
  தனி மனிதனுக்கு எதுவுமே சொந்தம் இல்லை.

  3. ஜனநாயகம் இல்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை எதுவுமே இல்லை.ஒரே அரசியல் கட்சியான கம்யூனிஸ்டுகள் மட்டுமே இருப்பார்.

  4. வெளிநாட்டு மூலதனம் அழைக்கப்படக்கூடாது.

  5.தனி நபர்கள் தங்களால் முடிந்த அளவு உழைக்க வேண்டும். ஆனால் எவ்வளவு அதிகம் உழைத்தாலும் , எல்லோருக்கும் ஒரே அளவுதான் கூலி வழங்கப்படும்.

  6.வர்க்கப்போர் உருவாகும். அதாவது முதலாளித்துவ சமுதாயங்களில் , உழைக்கும் வர்க்கத்துக்கும், முதலாளிகளுக்கும் கிளாஸ் வார் எனப்படும் (class war ) வர்க்க யுத்தம் ஏற்படும்.

  ஆனால் யதார்த்தத்தில் நடந்தது என்ன ?

  1. கம்யூனிஸ்டு நாடுகளில் எல்லாவற்றிலும் அரசாங்கம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

  2. தனி மனிதனுக்கு சொத்துரிமை வழங்கி சீனா போன்ற நாடுகள் கம்யூனிசத்தை சிறிது மாற்றி விட்டன.

  3. தனி மனிதனின் உரிமைகள் எதுவுமே தொடர்ந்து சிறையில் தான் உள்ளன. சீனாவில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் 10000-க்கு மேற்பட்டவர்கள், ராணுவ டாங்குகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தான் பாஸ்டன் டி பார்டி எனப்படும் ( BOSTON TEA PARTY ) என்று சொல்லப்படும் மே தின( தொழிலாளர் தின )போராட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. கம்யூனிஸ்டு நாடுகளில் எந்த தொழிலாளர் யூனியனும் போராட்டம் நடத்த முடியாது. உடனே சுட்டு கொன்று விடுவார்கள்.

  4. வெளிநாட்டு மூலதனம் தீண்டத்தகுந்தது என்று சீனா மாற்றிவிட்டது.

  5. எல்லோருக்கும் ஒரே கூலி என்பது இன்று சீனாவில் நடைமுறையில் இல்லை. மாற்றிவிட்டனர்.

  6. பூர்ஷ்வாக்களுக்கும், ப்ராலடாரியாட் ( உழைக்கும் வர்க்கத்துக்கும் ) இடையே எந்த நாட்டிலும் வர்க்கப்போராட்டம் நடைபெறவில்லை.

  அரசியல் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்குத்தான் எல்லா நாட்டிலும் போராட்டம் நடக்கிறதே தவிர , கம்யூனிசம் என்பது தாஸ் கேப்பிடலில் காரல் மார்க்ஸ் சொன்னமாதிரி உலகில் எந்த நாட்டிலும் என்றுமே வரமுடியாது. ஏனெனில் முன்னுக்குப் பின் முரணான பல விஷயங்கள் அதில் தென்படுகின்றன. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் உழைப்பு ஒரு காரணியே தவிர , மற்ற காரணிகளுக்கும் உரிய பங்கு உள்ளது. உழைப்புக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, மற்றவற்றை மட்டம் தட்டினால், உற்பத்தி அதோகதி ஆகிவிடும். குறிப்பாக இந்தியா என்பது ஒரு union of states ஆகும். இங்கு மாநிலங்களின் உரிமை மிக முக்கியம். கம்யூனிசம் என்பது மாநில உரிமைகளை மதிக்காத ஒரு தத்துவம். இந்தியா போன்ற நாடுகளில் மாநிலக்கட்சிகள் கம்யூனிசத்தை முழு மூச்சுடன் எதிர்ப்பார்கள். ஏனெனில் மாநில கட்சிகளின் அரசியல் அதிகாரம் பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

  மேலும் ஆயுதம் தாங்கிய புரட்சியை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்து சென்ற 1917- மற்றும் 1949- காலக்கட்டங்கள் வேறு. இன்றைய காலக்கட்டங்கள் வேறு. எல்லாக் காலத்திலும் ஏற்புடைய தத்துவம் என்பது அரசியலில் எதுவுமே இல்லை. தேவைக்கேற்ப மாறாதவை மக்களால் நிராகரிக்கப்படும். -பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவரையினானே- என்ற முதுமொழி சரியானதே.

 31. ஐயா ராகுலன் அவர்களே.

  1. Honest man என்றால் “நேர்மையாளன்” என்றுதான் dictionary யில் உள்ளது. நீங்கள் கூறுவது போல “அதீத நேர்மையாளன்” என்று பொருள் அல்ல. EST என்று சேர்ந்து வரவே superlative degree என்று நினைத்து விட்டீராக்கும். பாவம்! இதில் ரஷிய மொழி மற்றும் ரஷிய தோழி வேறு.சரி அது போகட்டும். (குறிப்பு நான் நேர்மையாளனா இல்லையா என்பது இங்கே விவாதப் பொருள் அல்ல.)
  2. இந்திய பற்று பற்றி பேசும்போது இஸ்லாமியர்களை ஏன் துணைக்கு அழைத்து கொள்கிறீர்கள்? செய்திதாள்களில் அன்றாடம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது சீனாவிலும் ரஷியாவிலும் முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க துவங்கி இருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். அப்போது தெரியும் முஸ்லிம்களை ஏன் துணைக்கு அழைத்தோம் என்று. இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ல் 48 ஷியா முஸ்லிம்களை ஈராக் நாட்டில் கொன்று இருக்கின்றனர். சொந்த மதத்தை சார்ந்தவர்களுக்கே இந்த கதி என்றால் இது பற்றி நான் வேறு எதுவும் சொல்ல விரும்ப வில்லை.
  3. கண்ணதாசன் ஒரு முறை ஒரு திரை படத்தை காமராஜருக்கு போட்டு காட்டினாராம். காமராஜர் அதை பார்த்து விட்டு ரொம்ப நீளமா இருக்கு. இதை 2 அல்லது 3 படமா எடுத்து இருக்கலாம் என்று சொன்னாராம். காமராஜருக்கு அரசியல் நன்கு தெரியும். சினிமா பற்றி எதவாது தெரியுமா? ஐன்ஸ்டின அறிவியலில் ஹீரோ ஆனால் மற்ற பாடங்களில் அவர் ஜீரோ யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் . ஆனால் அவை சரியான கருத்துக்கள் என்று எப்படி கூறமுடியும்?

  4./// பொது உடமை கட்சி சாகவில்லை/// — ஆமாம் இன்னும் சாகவில்லை. But it is now on the deathbed .
  5.////இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் அது வெல்லும்.////— மரத்தடி கிளி ஜோசியம் இது. . இப்போது பின்னடைவு வந்ததுள்ளது. அடுத்த கட்டம் என்ன? வெல்லும் அல்ல (சுடுகாடு) செல்லும். என்பதே சரி.
  6. ஒரு தமிழ் பழமொழியை சொன்னால் “”பார்த்தீர்களா பார்த்தீர்களா! இவர் மத புத்தியை காட்டி விட்டார்” . என்று சொல்கிறீர்கள். பழமொழிக்கும் மதத்திற்கும் என்னையா சம்பந்தம்? மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறீர்கள் ஆங்கில பழமொழி தமிழர்கள் கண்டதல்ல. ஆங்கிலேயன் (கிறிஸ்தவர்கள்) கண்டது. அதில் சிறுத்தைப் பற்றி கூறியது கூட அனாகரிகம்தானா? அப்படியானால் “விடுதலை சிறுத்தைகள்” என்பதும் அனாகரிகம்தானா? போலீஸ் துறையில் sniffer dog வைத்து கொள்வதும் தப்புதான் போலிருக்கிறது. ” நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா” என்று கண்ணதாசன் பாடியதும் தவறுதான்.அப்பப்பா! தமிழ் பழமொழிகளை கண்டு பிடித்தவர்களை சொல்லவேண்டும். அவர்களுக்கு ராகுலன் என்று ஒருவர் வருவார். நாம் படைத்த பழமொழிகளை நமக்கு பின்னல் வரும் சந்ததியினர் சொன்னால் அது மத புத்தியின் வெளிப்பாடு என ராகுலன் கூறுவார் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது அதனால் வந்த வினை இது.

  சரி அய்யா எல்லாம் போகட்டும் திரிபுரா CPM தலைவர் Saman Acharjee பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்ட bed மீது (சினிமாவில் வருவது போல) படுத்து உறங்கினாராம். அது முக்கியமல்ல. அவர் கூறிய ஓர் statement தான் நமக்கு முக்கியமங்கோ. “I am not a hypocite like other party members who depict themselves as proletariat and yet have HUGE AMOUNTS OF MONEY”.

  Lio chonghua (a China millionaire) (27) gave 8,888,888 yuan which depict Mao Zedong, Communist China’s founding father to his future bride as an engagement gift. The families chose the amount of money beacuse the word for 8 is likned with tha meaning wealth in Chinese. A decades ling economic boom has created meassive wealth in China but many rural residents and urban poor have been left behind
  பாம்பின் கால் பாம்பு அறியும். என்பார்கள். அதனால் பொது உடமை வாதிகள் பற்றி Saman க்கு ரொம்பவே தெரியும். எனவே கம்யூனிஸ்ட்கள் எல்லாம் தேவ தூதர்கள் போல எண்ண வேண்டாம் பொது உடமை வாதம் எதோ சர்வரோக நிவாரணி என்பது போல பேச வேண்டாம். Please

 32. திரு ராகுலன் சாருடைய விவாதம் 14.11.13 அன்று தொடங்கியது. அதாவது அவர் திரு லெனின் அவர்களுக்கு advice கொடுத்ததில்ருந்து. லெனின் என்று பெயர் வைத்து கொண்டால் அவர் RSS ல் சேர கூடாது என்றால் ராகுலன் என்று பெயர் வைத்துள்ள நீங்கள் எப்படி? ராகுலன் என்பது ரஷ்யப் பெயரா? கோடீஸ்வரன் என்று பெயர் இருந்தால் கோவில் வாசலில் பிச்சை எடுக்க கூடாது என்று சட்டம் போடுவீர்கள் போல தெரிகிறதே! Father Anthoni ஐயா அவர்கள் RSS பற்றி கூறியது கூட அவர் பார்வையில் தவறு என்று தான் கூறுவார். யாராவது RSS பற்றிய ஒரு நூலை அவருக்கு அனுப்பி வையுங்களேன்அல்லது RSS ஷாகக்களுக்கு அவரை அழைத்து செல்லுங்கள்..
  communism பற்றிய book களைப் படித்து படித்து அவர் மனது communal mind ஆக மாறிவிட்டது
  திரு ராகுலன் அவர்களின் கேள்விக்கு திரு லெனின் பதில் சொன்னால் நன்றாக இருக்கும். Why do you keep mum, my dear brother Lenin? Come on , Lenin

 33. பெரியார் தமிழ் நாட்டில் மூடத்தனத்தை வளர்த்ததைப் போல, கம்யூனிஸ்டுகளும் மதம் அபின் போன்றது என்று சொல்லி, மத தீவிரவாதம் வளர வழி வகுத்தனர். பிள்ளையார் சிலைகளை உடைத்து , மேலும் நூற்றுக்கணக்கான பிள்ளையார் கோயில்கள் உருவாக வழி வகுத்தார். அறிவியல் சொல்லும் உண்மைகளை சில மதவாதிகளும் சில அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதில்லை. எதனையும் அழிக்க முடியாது. திருத்தப்பட வேண்டும். அபின் என்று சொல்லிக்கொண்டிருப்பதை விட, மதத்தில் கலந்துள்ள அபினை நீக்கி மக்களை காப்பாற்ற வேண்டும். மத தீவிரவாதம் என்பது ஒரு மூட்டைப்பூச்சி. மூட்டைப் பூச்சி நம் ரத்தத்தை குடிக்கிறது என்பது உண்மை. அதற்காக வீட்டையே கொளுத்தி விட்டனர் கம்யூனிஸ்டுகள். மதம் என்பது ஒரு உன்னத உயர்வு. அது மனிதனை உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் இறை நம்பிக்கை நம் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பிற மதத்தினரை அழிக்கவேண்டும் என்று ஆபிரகாமிய மதவெறியர்கள் அலைவது எல்லோருக்கும் நன்கு தெரிகிறது. வெறியர்களை திருத்த வேண்டுமே ஒழிய அழிப்பதால் ஒரு புண்ணியமும் இல்லை. திருந்தாதவன் தானே அழிவான். அவனை பிறர் அழிக்க வேண்டியதில்லை, கடவுள் இல்லை என்று நினைப்பவனும், கடவுள் இருப்பதாக நம்புபவனும் ஒன்றே. ஆனால் தன்னுடைய விருப்பங்களை பிறர் மீது திணிப்பவன் எவனாயினும் அவன் ஒரு காட்டுமிராண்டியே ஆவான். அத்தகையவன் தான் திருந்தாவிட்டால், உலகம் அவனைப் புதைகுழிக்கு அனுப்பிவிடும். சன்னி ஷியா இருவரும் முட்டிமோதி இதுவரை 28 கோடி மக்களை வெடிவைத்து , தற்கொலைப்படை மூலம் கொன்றுவிட்டனர். அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த இஸ்லாமிய அன்பு மதத்தினர் இன்னும் ஒரு நூறு கோடி மக்களை கொன்று, முற்றிலும் அழிந்து போவார்கள். இது விரும்பத்தக்க சூழல் அல்ல. ஆனாலும் இவர்களின் மதவெறி இவர்களை இந்த தகாத வழிக்கு தான் இட்டு செல்கிறது. எனவே, உலகில் எல்லா மத நம்பிக்கைகளும் அழிந்து, மனித இனம் ஒற்றுமையாக வாழ்வது ஒன்றே எதிர்காலத்துக்கு நல்லது என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆபிரகாமிய மதங்கள் இருக்கும் வரை , மதங்களிடையே உள்ள போராட்டம் முடியாது.

  முக்கியமாக மலாலாவை சுட்ட ஆணாதிக்க வெறியர்களை , நீதிமன்ற தண்டனையின் மூலமே ஒவ்வொரு அணுஅணுவாக வெட்டிக்கொல்ல வேண்டும். பெண்களை தாக்கும் பேடிகள் இவர்கள்.

 34. திரு .பாலச்சந்திரன் ,…………

  //ஒரு சுயநலத்துக்காகவாவது நல்ல மாறுதல்களை செய்தாலும் , அந்த மாறுதல் நல்லது தானே/

  முதலாளி வர்க்கம் செய்யும் நன்மையானது சுயநலத்திற்காக தான் என்பதை ஏற்று கொண்டதற்கு நன்றி … அந்த மாறுதல் நல்லது தானே என்று கூறி இருகிறீர்கள் .. இப்போது பிரச்சனயே யாருக்கு நல்லது என்பதில் தான்… மக்களுக்கா அல்லது இவர்களுக்கா.. உழைப்பின் மூலம் மக்களையும் … வரி ஏய்ப்பின் மூலம் நாட்டையும் சுரண்டுவதே இவர்களின் பிரதான லட்சியம் அதற்காக சீர்திருத்தம் என்கிற பெயரில் இவர்கள் கொண்டு வரும் சில்லறை மாற்றங்கள் அனைத்தும் வெறும் வெற்று கண்துடைப்புக்காக மட்டுமே …. இந்த மாற்றங்களை எல்லாம் முதலாளித்துவம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமே கம்யுனிசம் என்கிற ஒரு எதிர் தரப்பு இருப்பதால் தான்… கம்யுனிசம் என்பதே 18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவத்தின் தொழிலாளர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறைகளை எதிர்த்து எழுந்த ஓர் பேரெழுச்சி… ..அதனால் தான் இன்றைய முதலாளி வர்க்கம் வாலை சுருட்டி கொண்டு ஓரளவிற்கு கட்டுபாட்டில் இருக்கிறது …..

  இந்த மாற்றம் என்பது இப்போது ஏற்பட்டது கிடையாது ..ஆலைகளில் நேரம் காலம் இல்லாமல் இயந்திரங்களோடு இயந்திரமாய் தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கி வந்த முதலாளிகளை தினமும் 8 மணி நேர வேலை…. வாரம் ஒரு நாள் விடுமுறை .. பணி பாதுகாப்பு … Esi..pf grautity …பெண்களுக்கு பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஆகிய தொழிலாளர் நல மாற்றங்களை ஏற்படுத்தி முதலாளித்துவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது கம்யுனிசம் தான் ….

  //வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்க கூடாது என்பது கம்யூனிச சித்தாந்தம். இது சாத்தியமா ? இது சாத்தியம் இல்லை என்பதால் தான் செஞ்சீனம் பல துறைகளில் , கடலோர என்னை துரப்பணப் பணிகள் உட்பட , வெளிநாட்டு மூலதனத்தை ஏற்றுக்கொண்டது. அது மட்டுமல்ல, இன்று அமெரிக்காவில் சுமார் 36 விழுக்காடு சீனாவின் முதலீடு உள்ளது. ஆம் கம்யூனிஸ்டுகள் தங்கள் செல்வத்தையும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.//al

  வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிப்பதில் தவறொன்றும் இல்லை … ஆனால் அவை உள்நாட்டு மூலதனத்தை அழித்து விடாத அளவிற்கு தான் அதை அனுமதிக்க வேண்டும்… வெளிநாட்டு முலதனம் என்பதற்காக சொந்த நாடு மக்களை ஓட்டாண்டி ஆக்கி விட கூடாது…. இதற்க்கு நிச்சயம் சாத்தியம் இல்லை …. FOREIGN CAPITALஐ கொஞ்சம் அனுமதித்தாலும் கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகத்தின் கதையாக மாறிவிடும் இதற்க்கு சிறந்த உதாரணம் நம்மை அடிமை படுத்திய பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி ….. மறுகாலனியாக்கம் தான் இன்று ஆளும் காங்கிரஸ் மன்மோகன், சிதம்பரம்,அலுவாலிய கும்பல்கள் செய்து கொண்டு இருக்கின்றன……..

  //இன்று அமெரிக்காவில் சுமார் 36 விழுக்காடு சீனாவின் முதலீடு உள்ளது. ஆம் கம்யூனிஸ்டுகள் தங்கள் செல்வத்தையும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

  3. தனி மனிதனின் உரிமைகள் எதுவுமே தொடர்ந்து சிறையில் தான் உள்ளன. சீனாவில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் 10000-க்கு மேற்பட்டவர்கள், ராணுவ டாங்குகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தான் பாஸ்டன் டி பார்டி எனப்படும் ( BOSTON TEA PARTY ) என்று சொல்லப்படும் மே தின( தொழிலாளர் தின )போராட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. கம்யூனிஸ்டு நாடுகளில் எந்த தொழிலாளர் யூனியனும் போராட்டம் நடத்த முடியாது. உடனே சுட்டு கொன்று விடுவார்கள்.

  4. வெளிநாட்டு மூலதனம் தீண்டத்தகுந்தது என்று சீனா மாற்றிவிட்டது.

  5. எல்லோருக்கும் ஒரே கூலி என்பது இன்று சீனாவில் நடைமுறையில் இல்லை. மாற்றிவிட்டனர்.

  6. பூர்ஷ்வாக்களுக்கும், ப்ராலடாரியாட் ( உழைக்கும் வர்க்கத்துக்கும் ) இடையே எந்த நாட்டிலும் வர்க்கப்போராட்டம் நடைபெறவில்லை.//

  மன்னிக்க வேண்டும் ……. கம்யுனிஸ்ட் என்று கூறி கொள்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்டுகள் அல்ல ….. கம்யுனிச சாயத்தை பூசி கொண்டு வலம் வரும் ஒரு பிழைப்பு வாத கூட்டம்…. போலி கம்யுனிஸ்டுகளை தேட நீங்கள் ஏன் சீனா வரைக்கும் போக வேண்டும் நம் நாட்டிலேயே மலிந்து கிடக்கிறார்கள் … கேரளா மேற்கு வங்கம் ,திரிபுரா போன்ற மாநிலங்களில் இருக்கும் போலிகளே போதுமானது…..அவ்வுளவு ஏன் மக்கள் பணம் 20 லட்சத்தில் படுத்து புரண்ட திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆசார்ஜியை எடுத்துகொள்ளுங்கள் … அச்சுதானந்தன் , புத்ததேவ் பாட்டச்சர்யா போன்ற புல்லுருவிகளே போதுமான சான்றுகள்… இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல ஒட்டு பொறுக்கும் பிழைப்பு வாதிகள்… கம்யுனிச சட்டப்படி ஒழிக்க வேண்டிய விஷங்கள்….

  //கம்யூனிஸ்டு நாடுகளில் எந்த தொழிலாளர் யூனியனும் போராட்டம் நடத்த முடியாது. உடனே சுட்டு கொன்று விடுவார்கள்.//

  இதற்கும் கம்யுனிச கோட்பாடுகளுக்கும் என்ன சம்பந்தம் ….. உண்மையான கம்யுனிச கொள்கை உடைய ஆட்சியில் எந்த விதமான போராட்டங்களும் இருக்க வாய்ப்பில்லை.. ஒடுக்குமுறை இருக்கும் இடத்தில தான் போராட்டங்கள் இருக்கும் மார்க்சிய கோட்பாட்டில் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் இடம் ஏது….

  //குறிப்பாக இந்தியா என்பது ஒரு union of states ஆகும். இங்கு மாநிலங்களின் உரிமை மிக முக்கியம். கம்யூனிசம் என்பது மாநில உரிமைகளை மதிக்காத ஒரு தத்துவம். இந்தியா போன்ற நாடுகளில் மாநிலக்கட்சிகள் கம்யூனிசத்தை முழு மூச்சுடன் எதிர்ப்பார்கள். ஏனெனில் மாநில கட்சிகளின் அரசியல் அதிகாரம் பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.//

  எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் … மாநில உரிமைகள் என்பது ஒரு அளவிற்கு தான் … நான் ஏற்கனவே சொன்னது போல மனிதனை பிரித்து வைப்பது இரண்டு ஒன்று மதம் அதனோடு சேர்ந்து இயங்கும் முதலாளித்துவம் ,இன்னொன்று பேசும் மொழி .. நாம் தான் இந்தியன் என்று சொல்லி கொள்கிறோம் ஆனால் நிஜத்தில் நட்பது என்ன கர்நாடகா தமிழ்நாடிற்கு தண்ணீர் தர மறுக்கிறது காரணம், பேசும் மொழி அடிப்படையில் நாம் பிளவு பட்டு கிடப்பதால் தான் … எங்கள் மக்களுக்கே தண்ணீர் இல்லாத போது தமிழ்நாடிற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என்கிறார்கள்… இதில் எங்கள் மக்களுக்கு என்பது மொழி வழியாக அமைந்த கன்னட மக்களாகிய எங்களுக்கு என்று அர்த்தம்… அப்போது இந்தியன் என்கிற தேசிய அடையாளம் எதற்கு ….. ஆகவே மதவாதம், இனவாதம் ஆகிய இரண்டையும் உடைத்து எறிவதே கம்யுனிசத்தின் முக்கிய நோக்கம் ….

  //மேலும் ஆயுதம் தாங்கிய புரட்சியை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்து சென்ற 1917- மற்றும் 1949- காலக்கட்டங்கள் வேறு. இன்றைய காலக்கட்டங்கள் வேறு. எல்லாக் காலத்திலும் ஏற்புடைய தத்துவம் என்பது அரசியலில் எதுவுமே இல்லை. தேவைக்கேற்ப மாறாதவை மக்களால் நிராகரிக்கப்படும். -பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவரையினானே- என்ற முதுமொழி சரியானதே.//

  ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்த சொல்லி மார்க்சோ இல்லை எங்கெல்சொ கூறவில்லை… ஒற்றுமையாக சேர்ந்து அறிவை ஆயுதமாக்கி தான் போராட வேண்டும் … ஒரு வேலை அந்த அமைதி போராட்டத்தை நசுக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்கத்தின் துணை கொண்டு முதலாளித்துவம் ஒடுக்க நேர்ந்தால் அதற்க்கு ஆயுத(வன்முறை) போராட்டம் மட்டுமே தான் தீர்வு… உதாரணத்திற்கு மானேசரில் நடந்த மாருதி ஆலை போராட்டம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு..
  போராளிகள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரி தான் தீர்மானிக்கிறான் என்கிற மாஒவின் வாசகம் இங்கு நினைவு கூற தக்கது ….

  உங்களை போன்ற அறிவுசார் பொருளியல் மேதைகளுடன் விவாதம் நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் … எனக்கு தெரிந்ததை நான் கூறினேன் .. தவறுகள் இருந்தால் கூறவும் நன்றி

 35. திரு.Honest Man ………

  உண்மையில் நீங்கள் அதித நேர்மையாளர் தான் … அதை உங்களின் தெளிவான மறுமொழிகளில் நான் உணர்ந்தேன் …உங்களின் அணைத்து மறுமொழிகளும் சிறப்பானவை … அதிலும் போலி மத சார்பற்ற வாதிகளை தோலுரித்து காட்டும் உங்களின் மறுமொழியிலுள்ள போலி மதசார்ப்பின்மைவாதிகளுக்குகான அடையாளத்தை கூறிடும் 11 பாயிண்ட்களும் நெத்தியடி… நெத்தியடி என்பதை விட போலி மதசார்பின்மை வாதிகளுக்கு செருப்படி … குறிப்பாக போலி கம்யுனிஸ்ட்களுக்கு… மிக அற்புதம்… தன்னை அரசியலில் மதசாற்பற்றவன் என்று கூறி கொள்பவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள உங்களின் மறுமொழி சிறந்த உரைக்கல் …. ராகுலன்

 36. தோழர் திரு ராகுலன் அவர்களே!
  இன்று (15.11.13) 4.59 பிற்பகல் திரு பாலச்சந்திரன் அவர்களின் மறுமொழிக்கு எதிர்வினை எழுதுகையில் “””போலி கம்யூனிஸ்ட்களை தேட ———————————- ஒட்டு பொருக்கி பிழைப்பு வாதிகள்”””” என்று கூறியுள்ளீர்கள். இத இத இதத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன். அது போதும். Thanks awfully Mr Ragulan

  ////மனிதனை பிரித்து————————-பேசும் மொழி//////// ராகுலன் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். மனிதனை பிரிப்பது மொழி அல்ல. சுயநலம். கன்னட மொழி பேசுபவன் தமிழ் மொழி பேசுபவனுக்கு Water தராமல் “தண்ணி” காட்டுகிறான் என்று கூறுகிறீர்கள். சரி. ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரண்டு பேர் நிச்சயமாக ஒரே மொழி தான் பேசுவார்கள். ஒரே மொழி பேசும் அவர்கள் இருவரும் ஒத்து போகிறார்களா? 10 மாதம் கருவில் சுமந்து குழந்தையாக இருந்தபோது நிலாவை காட்டி சோறு ஊட்டிய அன்னை என்ற தெய்வத்திற்கு “நான் சோறு போட மாட்டேன் நீ சோறு போடமாட்டேன்” என்று தகராறு பண்ணுகின்றனர். காரணம் என்ன? சுயநலம். தான் மட்டும் வாழ வேண்டும். என்ற சுயநல எண்ணம்தான்.

  ////மதவாதம்——————————————————-முக்கிய நோக்கம்//////// உண்மையிலேயே கம்யூனிஸ்ட்கள் மதவாதத்தை, இனவாதத்தை ஒழிக்க நினைத்தால் அதை நான் மனதார வரவேற்கிறேன். ஆனால் டிவி “விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் பேர்வழிகள் இந்து மதத்தை திட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள் . முஸ்லிம் தீவிரவாதிகளை ஆதரித்து பேசுகின்றபோது இவர்கள் சொல்லும் “மதம் ஒரு அபின்” என்ற கூற்று போலியானது . அவர்கள் இரு மதங்களில் இருக்கும் குற்றம் குறைகளை சுட்டி காட்டி பேசினால் அல்லது இரண்டு மதங்களுமே அழித்து ஒழிக்கப் படவேண்டும் என்று கூறினால் கூட நான் வரவேற்பேன். ஆனால் அவர்களின் ஒரே குறி இந்து மதம் மட்டும்தான் மதம் ஒரு அபின் என்றால் இந்து மதம் மட்டும்தான் அபினா? இஸ்லாம் மதம் ஒரு வயாக்ராவா? நீங்கள் சொல்லுவது போல communism வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஆனால் “”இந்திய கம்யூனிஸ்ட்கள்”” ஒன்னா நம்பர் அயோக்கிய சிகாமணிகள்

  O.K. If I had hurt your heart by using some harsh words, I feel extremely sorry for it. Please dont mistake me.. Bye

 37. திரு.Honest man

  ஒரு உண்மையான கம்யுனிஸ்ட் என்பவன் முதலில் தான் பிறந்த தாய் நாட்டிற்க்கு உண்மையானவனாக இருக்க வேண்டும் …… என்னை பொறுத்த வரை எனக்கு பிடித்த தலைவர் லெனின் தான் அதற்காக அவரின் நாடான ரஷ்யா என் தாய்நாடாகி விடாது …… காரல் மார்க்சின் தத்துவம் தான் என்னுடைய உயிர் மூச்சு அதற்காக ஜெர்மனி என்னுடைய நாடகிவிடாது … நான் என்றுமே இந்தியன் என்பது தான் உண்மை … ஏன் ஒரு கம்யுனிஸ்டாக என்னால் ஒரு சிறந்த தேச பற்றாளனாக இருக்க முடியாதா … நிச்சயமாக முடியும் … “இலட்சியத்திற்காக வாழ்வை தியாகம் செய்யும் போது எதை நினைத்து நான் அறுதல் கொள்வது ? கடவுளை நம்பும் ஒரு இந்து மறு பிறவியில் ஒரு ராஜாவாக பிறக்க வேண்டுமென்று பிரார்த்திக்கலாம்; ஒரு முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் தங்கள் தியாகத்திற்காக சொர்க்க போக வாழ்வை அனுபவிக்கும் கனவு காணலாம். நான் எதை எதிர்பார்ப்பது? தூக்கு மேடையில் கழுத்தில் சுருக்கு கயிறு விழுந்ததும் எனது கால் பதிந்துள்ள பலகையை அகற்றும்போது கதை முடிந்து விடும். அதுவே கடைசி கட்டம் .. கருத்துமுதல்வாதிகள் கூறுவது போல எனது ஆன்மாவின் கதை முடிந்து போகும். அதன் பிறகு ஏதுமில்லை. ஒரு குறுகிய கால போராட்ட வாழ்வுக்கு கிடைக்கும் பரிசாக இதைவிட சிறந்த முடிவு வேறெதுவுமில்லை என்ற முடிவுக்கு நான் வரவேண்டும் அவ்வளவுதான். சுயநலமின்றி தேச சுதந்திரத்திற்காக வாழ்வை அர்பணித்தேன். வேறெதையும் நான் செய்திருக்க முடியாது”. என்று கூறி தான் 22ஆம் வயதில் தேசத்திற்காக உயிரைவிட்ட பகத்சிங்கின் வழி தான் என்னுடைய வழியும் ..

  ஒரு நாடு என்பது என்ன? அதில் வாழும் மக்கள் மட்டும் தானா.. நிச்சயமாக அது மட்டும் இல்லை ஒரு நாடு என்பது மக்களும் அந்த மக்களுக்கு உயிர் ஆதாரமாக இருந்து வாழ்வளிக்கும் அந்நாட்டின் இயற்கை வளங்களும் தான்(கடல்சார் புவிசார்) …. இந்த நாட்டின் பூமியில் இருந்து தோண்டி எடுக்க படும் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தான் பயன்பட வேண்டும் …. ஆனால் நடப்பது என்ன …. இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளை பொய் கொண்டு இருக்கின்றன … இந்நாட்டின் கனிம வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் இங்கு இருக்கும் தரகு முதலாளிகளுக்கும் கூறு போட்டு விற்று கொண்டு இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மன்மோகனின் திருட்டு கும்பல்கள் …. மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை… அவர்களை பொறுத்த வரை இந்த கோடீஸ்வர முதலாளிகள் மனம் நோக கூடாது … அதற்க்கு ஏற்றாற்போல் எங்கு பார்த்தாலும் தனியார்மயம் தாராளமயம் அமல்படுத்தபடுகிறது … மனிதனின் அடிப்படை உரிமைகளான கல்வியில் தனியார்மயம், மருத்துவத்தில் தனியார்மயம், குடிக்கும் நீரில் தனியார்மயம் உணவு துறையில் தனியார் மயத்தின் அட்டுழியங்கள் …. மக்களுக்காக அரசாங்கமா அல்லது முதலாளிகளுக்காக அரசாங்கமா யாருக்காக என்றே தெரியவில்லை .. அரசாங்கத்தின் செயல்பாட்டை விட தனியாரின் சேவை தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் பேசாமல் பாராளுமன்றத்தை இந்திய அரசமைப்பை தனியாரிடமே ஒப்படைத்து விடலாமே …. 5 ஆண்டுகள் அம்பானிக்கும் அடுத்த 5 ஆண்டுகள்TATA விற்கும் என்று நாட்டை ஆள கொடுத்துவிடலாமே..

  இந்நிலையில் மோடி பிரதமரானால் இப்போது இருக்கும் அணைத்து தேசிய பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு ஒரு விமோசனம் கிடைக்கும் என்று நினைகிறார்கள் …. கல்லுளிமங்கன் மன்மோகன் உருப்படியாக செய்யாததை எல்லாம் மோடி செய்து நாட்டை அணைத்து துறைகளிலும் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றி விடுவார் என்று நம்புகிறார்கள் .. செய்யமாட்டார் என்று கூறி மீண்டும் ஒரு விவாதத்தை இங்கு தொடங்க விரும்பவில்லை… முதலாளிகளுக்கான அரசாங்கமாக இல்லாமல் மக்களுக்கான அரசாங்கமாக இருந்து மோடி மீதான நம்பிக்கை மெய்யானால் சந்தோஷமே ….

  யார் பிரதமராக வந்தாலும் மக்கள் தொகையின் பெரும்பகுதியான சாதாரண உழைக்கும் மக்களை பற்றி கவலை படாதவர்கள் நிச்சயம் புரட்சியின் மூலம் தூக்கி அடிக்க படுவார்கள் என்பதே உண்மை… மார்க்ஸ் சொன்னது போல ” ‘பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’” அனைவருக்கும் நன்றி…

  என் கருத்துகளை கூற எனக்கு வாய்பளித்த தமிழ்ஹிந்து தளத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

 38. ஸ்ரீ பாலசந்த்ரன், ராகுலன் மற்றும் ஹானஸ்ட்மேன் இவர்களைடையே நடந்த சம்வாதங்கள் அருமை. மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் எப்படி கண்யமுடன் கருத்துப்பகிர முடியும் என்பதற்கு சிறந்த உதாஹரணம். இதற்கு வழிவகுப்பது ஒரு சமனநிலை சார்ந்து கருத்துப் பகிர வழிவகுக்கும் தமிழ் ஹிந்து தளம். அறிவு சார்ந்த வாதங்கள் தமிழ் ஹிந்து தளத்தில் வளர்க.

 39. கேரளாவில் இடதுசாரி கட்சி சேனல், தீம் பார்க், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், போன்றவற்றை நடத்துகிறது, இது முதலாளித்துவம் இல்லாமல் வேறென்ன?

 40. நம் ‘மதவெறி’ பற்றி மதச்சார்பற்ற தேசப்பற்றுள்ள கிறிஸ்தவ நண்பருடன் விவாதம்:
  [https://www.facebook.com/SriRajKashyap/posts/592199304151104]

 41. ராகுலன்
  “பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகமும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்”.
  யார் அந்தப்பாட்டாளி? இன்றுள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களில் எந்த ஒருவராவது பாட்டாளியாக இருக்கின்றாரா. உழைப்பை மட்டும் சொந்தமாக இருந்து வாழ்கின்றவன் பாட்டாளி என்பது மார்க்சிய இலக்கணம் என்பதை நினைவுகொண்டு சொன்னால் பாட்டாளிகளுக்கு பாட்டாளிகளால் நடத்தப்படுகிற இயக்கங்களே இல்லை என்றே சொல்லவேண்டும். பாட்டாளியின் பெயரைச்சொல்லி நடுத்தரவர்கத்தினரால் நடத்தப்படுகின்ற கட்சிகளே,அமைப்புகளே கம்யூனிஸ்டுகளுடையவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *