குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

morning_hindutvaபொதுவாக ஒரு எண்ணத்தை ஊடகங்களும் காலனிய வரலாற்றாசிரியர்களும் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். சமஸ்தான மகாராஜாக்கள் என்பவர்கள் எப்போதும் அந்தபுரத்தில் தங்கள் காலங்களை கழித்தபடி மக்களை உறிஞ்சி கொழுத்தவர்கள். வெள்ளைக்காரர்களின் அடிவருடிகள். காமக் கொடூரர்கள். இத்தகைய ஒரு சித்திரமே தொடர்ந்து காலனிய ஆதிக்கவாதிகளால் படித்த மக்கள் மனதில் உருவாக்கப்பட்டு வந்தது. ஏனெனில் காலனிய ஆதிக்கத்துக்கு முதல் எதிர்ப்பு குரல் படித்த வர்க்கத்திடமிருந்து வரும் என காலனியவாதிகள் எதிர்பார்த்தனர். அத்தகைய சூழலில் அவர்கள் மனதில் பிரிட்டிஷாரின் ஒழுக்கம் தார்மீகம் ஆகியவை குறித்த ஒரு உயர்ந்த சிந்தனையும் சுதேச அரசுகள் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருப்பது அவசியம் என்பது அவர்களுக்கு புரிந்திருந்தது. சமஸ்தான அரசர்கள் குறித்த இந்த சித்திரத்தில் ஒரு உண்மையும் உண்டு. எந்த வித தீர்மானம் எடுக்கும் உரிமையும் இல்லாமலாக்கப்பட்டிருந்தனர் இந்த மன்னர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வரிவசூல் செய்து கொடுக்கும் அலங்கார பொம்மைகள் என்கிற ரீதியில் இவர்கள் நடத்தப்பட்டனர். இவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக மக்களிடம் இவர்கள் பெரிய அளவில் இணங்கி நடந்துவிட முடியாது. எனவே இவர்கள் தேங்கிய சமூக சொந்த சூழலில் சுகபோகிகளாக மாறினர். செல்வம், செயலின்மை, சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுதல் இவை எல்லாமே அவர்களை ஒரு எதிர்மறை சித்திரமாக மாற்றின. என்ற போதிலும் அந்த சூழல் சிறைக்குள் மக்களுக்கு நன்மைகளை செய்ய முயன்றவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள் உண்டு. அந்த சாதனைகள் பெரும் ஆபத்துகளின் நடுவில் செயல்படுத்தப்பட்டன. ஒரு பக்கம் பிரிட்டிஷார் மறுபக்கம் பிரிட்டிஷாரின் தேக்கநிலை சமூக சூழலில் உருவான மேல்மட்ட வர்க்கம். இரண்டையும் ஒருசேர சமாளித்தே சமூக நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் சூழலில் இந்த சமஸ்தான மன்னர்கள் இருந்தனர்.

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருவிதாங்கூர் சமஸ்தானம் -இன்றைய கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கன்யாகுமரி மாவட்டம்- கல்வி அறிவில் சிறப்பாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக விடுதலைக்காக போராடிய ஐயா வைகுண்டரும்,ஸ்ரீ நாராயண குரு தேவரும், ஐயன் காளியும் இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். அடுத்த நிலையில் அதனை ஏற்று கல்வியை ஏழை எளிய சிறுவர்களிடம் கொண்டு செல்வதற்கான செயல்திட்டம் சமஸ்தானத்தால் வகுக்கப்பட்டது. பெரியவர் பாரதிமணி பதிவு செய்கிறார்:

1940-களிலிருந்தே, திருவிதாங்கூர் சமஸ்தான அரசுப்பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு மதிய வேளைகளில் வயிறு நிறைய ’கஞ்சியும் சம்மந்தியும்‘ (தேங்காய்த்துவையல்) இலவசம். mani1 இதற்காகவே, Vanchi Poor Fund என்ற அமைப்பை அரசே ஆரம்பித்து, மைய சமையல் கூடத்தில் சுடச்சுட கஞ்சி தயாரித்து, தினமும் பள்ளிகளுக்கு வினியோகித்தார்கள். (சம்பா அரிசிக்கஞ்சி, தேங்காய் சம்மந்தி வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனால் ஆசிரியர்களுக்குப்பயந்து ஒருநாள்கூட நான் சாப்பிட்டதில்லை!)இன்றைய ’மூன்று முட்டை‘ சத்துணவுத் திட்டத்தின் தாத்தா இது! ஆம், சித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் C.P.யும் தான் இதற்கு காரண கர்த்தாக்கள்! raja1 திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகளான கன்யாகுமரி, தேவிகுளம், பீருமேடு, செங்கோட்டை இவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்க, திரு. நேசமணி தலைமையில் பட்டம் தாணுபிள்ளை அரசுக்கெதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் மாணவனாக நானும் கலந்து கொண்டு ஒருநாள் முழுதும் சிறையிலிருந்திருக்கிறேன்! அப்போது நாகர்கோவிலுக்கு அடிக்கடி வரும் காமராஜர், இந்தத்திட்டத்தின் நன்மைகளை மனதில் கொண்டு, ‘வயத்துக்கில்லேன்னா, எவன் பள்ளிக்கூடம் வருவான்னேன்?‘ என்று அவர் முதலமைச்சரான போது ஆரம்பித்தது தான் மதிய உணவுத்திட்டம்! இந்தியாவிலேயே பள்ளிகளில் இலவச மதிய உணவுத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர் தான்!

இந்த பீடிகை எல்லாம் நம் சமஸ்தான ராஜாக்கள் நம் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களித்த ஒரு பரிமாணம் நம் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டத்தான்.

குஜராத்தை உருவாக்கியவர் என்றே அவரை சொல்லலாம். இன்றைக்கு குஜராத்தில் பார்க்கும் பல கல்லூரிகள், sayaji1மருத்துவ சாலைகள், நூலகங்கள் இவை எல்லாம் அவர் உருவாக்கியவைதாம். ஆனால் அவர் இதை எல்லாம் உருவாக்கிய போது அது குஜராத் இல்லை. பரோடா எனும் சமஸ்தானமாகவே அது இருந்தது. அந்த சமஸ்தானத்தின் அரசர் மூன்றாம் சாயாஜி ராவ் கெய்க்வாட்தான் குஜராத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியவர். அவர் வாழ்ந்த காலம் 1863-1939. கெய்க்வாட் ஒரு சாதாரண குடும்பத்தை சார்ந்த சிறுவனாக இருந்தவர். ஆங்கில அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தத்தெடுக்கப்பட்டார்.  1881 இல் பட்டமேற்றது முதல் தனது கடும் உழைப்பினால் சமஸ்தான நிர்வாகத்தை நடத்துவதில் நல்ல திறமையை வளர்த்துக் கொண்டார்.  சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. பெரிய ஏரிகள் வெட்டப்பட்டன. இன்றைக்கும் பரோடாவின் விவசாய வாழ்வாதாரமான அஜ்வா ஏரி ராஜா கெய்க்வாட் அவர்களால் வெட்டப்பட்டதுதான். சிறுவிவசாயிகள் வங்கிக் கடன் வாங்கும் வசதிகளை இவர் ஏற்படுத்தினார்.  குடிசை தொழில்களை வளர்க்க அவரது காலத்தில் அவர் சமஸ்தானத்தில் உருவாக்கப்பட்ட வங்கிதான் ‘Bank of Baroda’. அவரது சமஸ்தானமெங்கும் நூலகங்களையும் கல்விசாலைகளையும் நிறுவினார். சமஸ்தான அரண்மனைகளில் அடங்கி கிடந்த கலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வர வேண்டும் என்பதற்காக கலை மையங்களை உருவாக்கினார். கல்விசாலைகளை ஏற்படுத்தினார்.

சமுதாய நீதியின் தேவையையும் அது நமது சமுதாயத்தில் குறைபடுவதையும் வேதனையுடன் உணர்ந்தவர் கெய்க்வாட்.  வேதங்கள் பிராம்மணர்களுக்கு மட்டும் உரியதல்ல வேதமும் வேதம் ஓதும் உரிமையும் அனைத்து இந்து சமுதாயத்துக்கும் உரியது எனும் கொள்கையில் அவர் தெளிவாக இருந்தார்.  ஆச்சாரவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தலித்துகள் மேல் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதற்காக பல சகாயங்களை அவர் செய்து வந்தார்.  தொடக்கக் கல்வி கட்டாயமாக்கி அது இலவசமாகவும் வழங்கப்பட்டது. 1883 இலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்ப கல்விசாலைகளை அவர் திறந்தார். பெண் விடுதலையும் அவர் கவனித்திலிருந்து விலகவில்லை. குழந்தை திருமணம், பர்தா முறை இரண்டையும் ஒழிக்க போராடினார். அரசரின் மனைவி திரை மறைவில்தான் இருக்க வேண்டும் என்னும் முறையை ஒழித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

ஒரு நாள் அவர் முன்னால் மெட்ரிக் தேர்வில் நன்றாக மதிப்பெண் வாங்கிய ஒரு இளைஞன் தோன்றினார். நல்ல அறிவு, தீட்சண்யமான பார்வை, ஆனால் வாழ்க்கை சூழலோ படிப்பை மேற்கொண்டு தொடர முடியாது எனும் நிலை. பம்பாய் கல்லூரியில் சேர்ந்து படிக்க அந்த இளைஞனுக்கு ஆர்வம். ஆனால் முடியாது ஏனெனில் அந்த மாணவன் மகர் – தீண்டப்படத்தகாதவன் என ஒடுக்கப்பட்ட சமுதாயம். babasaheb1அந்த இளைஞன் தன் நிலையை நேரடியாக அவரை கண்டு கூற முடிந்தது. மகாராஜா உடனடியாக அனைத்து அட்மிஷன் செலவுகளுக்குமாக ரூபாய் நூறும் பின்னர் மாதாமாதம் உபகார சம்பளமாக ரூபாய் இருபத்தி ஐந்தும் கொடுத்தார். 1912 இல் அந்த மாணவன் பட்டப்படிப்பை முடித்தார். அந்த மாணவனின் தந்தையார் இறந்துவிட்டிருந்தார். இந்த சூழலில் தான் மேலும் படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் அந்த மாணவன். மகாராஜாவை மீண்டும் சந்தித்தார். அப்போது கெய்க்வாட் சிறந்த இந்திய மாணவர்களை அமெரிக்காவுக்கு கொலம்பியா பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். இந்த மாணவன் நிச்சயமாக தகுதி உடையவன். பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் கெய்க்வாட்டினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பாரதத்தின் வரலாற்றில் பாபா சாகேப் மூலமாக அமரத்துவம் அடைந்தார் கெய்க்வாட்.  பாபா சாகேப் அம்பேத்கர் தனது முனைவர் பட்டபடிப்பை முடிப்பது வரை கெய்க்வாட்டின் உதவி தொடர்ந்தது.

ராஜா கெய்க்வாட் சிறந்த தேசபக்தரும் கூட.  மகாராஷ்டிரத்தில் அப்போது இயங்கிய ரகசியமான தீவிர தேசபக்த இயக்கமான அபிநவ பாரத சங்கத்துடன் அவருக்கு தொடர்பிருந்தது. அதனை உருவாக்கியவ மாணவனின் பெயர் விநாயக தமோதர சாவர்க்கர். சாவர்க்கரின் அபிநவபாரத சங்கத்தில் மாணவர்கள் மட்டும் இருக்கவில்லை.savarkar10 நாவிதர்கள், கூலி தொழிலாளிகள், டோபிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் இருந்தனர். அபிநவபாரத சங்கத்துக்கும் மகாராஜா கெய்க்வாட்டுக்கும் தொடர்பிருக்கிறது என்பது பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரிந்தது. கெய்க்வாட் எச்சரிக்கப்பட்டார். கெய்க்வாட்டும் எச்சரிக்கையை அமைதியாக கேட்டு அதனை ஆமோதித்தார். ஆனால் எப்படியோ அபிநவபாரத சங்கத்துக்கும் கெய்க்வாட்டுக்கும் செய்தி பரிமாற்றம் நடந்தது. மட்டுமல்ல மறை முக உதவியும் அபிநவ பாரத சங்கத்துக்கு செய்யப்பட்டு வந்தது.  இறுதியில் பிரிட்டிஷார்கள் கண்டுபிடித்தனர். கெய்க்வாட்டின் நாவிதர் சங்கர் வாஹ். இவர் வீர சாவர்க்கரின் அபிநவபாரத சங்கத்துடன் தொடர்புடையவர். இவர் மூலமாகவே வீர சாவர்க்கரும் கெய்க்வாடும் தகவல்கள் பரிமாறிக் கொள்ள முடிந்தது. பிரிட்டிஷார் இது குறித்து உஷாரானார்கள். சங்கர் வாஹ்ஹை உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்தது. அவரை வேலை நீக்கம் செய்ய மறைமுக நிர்ப்பந்தங்கள் அவை. ஆனால் கெய்க்வாட் அவரை  இறுதிவரை வேலையிலிருந்து விலக்கவே இல்லை.

எங்கிருந்து வந்தது கெய்க்வாட்டுக்கு இந்த தேசபக்தியும் சமூக நீதி குறித்த பிரக்ஞையும்? ஆரிய சமாஜம் தொடங்கிய இந்துத்துவ வேர்கள் அவருக்கு இருந்தன. பண்டித ஆத்மாராம் என்கிற ஆரியசமாஜ அறிஞர் மகாராஜா கெய்க்வாட் அவர்களால் பிரத்யேகமாக1905 இல்  பரோடாவிற்கு அழைக்கப்பட்டார். அவரது பொறுப்பு தலித்துகள் மேம்பாடும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவ முஸ்லீம்களை மீண்டும் தாய்மதம் திருப்புவதும் ஆகும். குஜராத்தில் இந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் வித்திட்டவர் கெய்க்வாட் அவர்களே என்றால் அது மிகையல்ல. 1908 இல் பதிதார் யுவக் மண்டல் எனும் சாதி பேதமற்ற இந்து இளைஞர்களுக்கான அமைப்புகள் உருவாக்கபப்ட்டன. தலித் விடுதலைக்காக இவை பாடுபட்டன. 1911 இல் சூரத்தில் சாதி பேதமற்ற இந்து இளைஞர்கள் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று உருவாக்கப்பட்டது. குறிப்பாக பல்வேறு தலித் சாதிகளை சார்ந்தவர்கள் தம்மிடையே இருக்கும் பிரிவுகளை மறந்து ஒருங்கிணைந்து உரிமைகளுக்காக பாடுபட வேண்டும் எனும் செயல்திட்டத்துடன் இயங்கும் கேந்திரங்களாக இவை விளங்கின. (துரதிர்ஷ்டவசமாக பரோடாவில் நிலை மோசமாகவே இருந்தது என்பதை பாபா சாகேப் அம்பேத்கரின் அனுபவங்கள் மூலமாக அறிகிறோம்.) சாதி பேதமில்லாமல் தலித்துகளும் தலித்தல்லாத இந்துக்களும் அனைத்து இந்து வைதீக சடங்குகளையும் செய்வதன் மூலமாக இந்து ஒற்றுமையையும் சாதியற்ற இந்து சமுதாயத்தை உருவாக்கவும் யுவக் மண்டல் உழைத்தது.

சாயாஜி ராவ் கெய்க்வாட் குஜராத்துக்கு மட்டும் சொந்தமல்ல. வளர்ச்சி-சமூகநீதி-பண்பாட்டு தேசியம் என இன்றைக்கு நாம் பேசும் அனைத்துக்கும் மூலமுதல் வித்தாக விளங்கியவர் இந்த குஜராத் மகாராஜா… வரலாறு மீண்டும் திரும்பட்டும்… குஜராத்தின் ஆலவிதை பாரதமெங்கும் நிழல் அளிக்கும் பெரும் தருவாகட்டும்.  அதற்கான காலம் கனிந்து வருகிறது. நம் உழைப்பையும் அதற்கு நல்குவோம்.

14 Replies to “குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா”

 1. குஜராத்தின் ஹிந்துத்துவ மகாராஜா வை பொதுவாகவே திராவிட இயக்கத்தினர் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் என்பதாகவே சித்தரித்து வந்துள்ளனர். அதற்கு மாற்றாக பரோடா மகாராஜருக்கு ஹிந்துத்துவ தேசிய ப்பரிமானமும் உண்டு என்பதை மிகத்தெளிவாக வரைந்துள்ளார் அன்புக்குரிய அரவிந்தன். வாழ்துக்கள். திருவாங்கூர் அரசைப்போன்றே மைசூர் அரசரும் மக்களின் கல்வி முன்னேற்றத்தில் பணியாற்றினார் என்பதும் இன்கே குறிப்பிடத்தகுந்தது.

 2. நான் பரோடாவில் தங்கிப் படித்திருக்கிறேன் , ஆனால் எனக்கே தெரியாதுபோன விஷயம் அம்பேத்கருக்கு சயாஜிராவ் அவர்கள் செய்த உதவிகள் தான் . நன்றி அரவிந்தன் அவர்களே.

 3. குஜராத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் இந்தச் செய்தியை அறிந்திருக்கவில்லை. 🙂

 4. அம்பேத்கர் வாழ்கையில் மூன்று பிராமிணர்கள் முக்கிய உந்து சக்தியாக இருந்தார்கள் என்று திரு.கே.சி.லஷ்மிநாராயணன் தனது ”தலித்துகளும் பிராமிணர்களும்” என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். முதலில் அவரது ஆரம்பகால பள்ளி ஆசிரியர் அப்பேத்கர் என்ற பிராமிணர் செய்த கல்வி உதவியால் அவரது ஞாபகமாகவே தன் பெயரான பீமாராவுடன் அம்போத்கர் என்ற அடைமொழியையும் இணைத்துக் கொண்டார். இரண்டாவதாக அவரது மேல்படிப்பிற்கு உதவ திரு.கிருஷ்னாஜி அர்சுண் கேலுஸ்கர் என்ற பிராமிணர்தான் அவரை பரோடா மன்னரிடம் அழைத்துசென்று உதவிசெய்ய சிபாரிசு செய்தார். மூன்றாவதாக அம்பேத்கர் உடல்நலம் குன்றிய தனது கடைசி நாட்களில் டாக்டர் சாரதா என்ற பிராமிண பெண் அவரைமணந்து அவருக்கு கடைசிவரை பணிவிடைகள் செய்தார்.

 5. அம்பேத்கர் அவர்களின் மனைவியின் பெயர் சவீதா ஆகும். சாரதா அல்ல.

 6. சாயாஜி ராவ் கெயிக்வாட் அவர்களைப் பற்றி திரு அம்பேத்காரின் வாழ்க்கை வரலாற்றில் படித்துள்ளேன். அவரைப்போன்ற பெரியோரைப் பற்றி நம் வரலாற்றில் பள்ளிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க இடமில்லை. ஏனெனில் மெக்காலே யின் எள்ளுப் பேரன்களின் ஆட்சி தான் நம் நாட்டில் நடந்துவருகிறது. இந்தியாவின் உண்மை சரித்திரம் எழுதப்பட்டு நம் மாணவர்களுக்கு போதிக்கப்படவேண்டும். பிறரை அழித்து தான் மட்டும் வாழமுடியும் என்று நினைப்பது ஒரு அறியாமை.

  இந்த அறியாமையின் உச்சக் கட்டமே ஆபிரகாமிய மதங்கள். அவர்கள் திட்டமிட்டு நம் பாரத நாட்டின் செல்வங்களை சூறை ஆடினர். நம் கலாச்சாரத்தை சீரழித்தனர். நம் நாட்டு மக்களை ஒற்றுமைப் படுத்தி அரசாள வேண்டும். ஆனால் இவர்களோ பிரிவினை உணர்ச்சியை தூண்டி , டிவைட் அண்ட் ரூல் ( divide and rule ) என்ற வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சியையே இந்திரா காங்கிரஸ் காரர்கள் கடைப்பிடித்து நாட்டை ஊழலிலும், பதற்றத்திலும் ஆழ்த்திவிட்டனர். இந்தநிலை மாற அனைவரும் பிரார்த்திப்போம். பாரதம் உயரும். இது உறுதி.

 7. V T Krishnamachari was the Dewan of the Baroda State from 1927 – 1944. Like CPR in Travancore he contributed to the growth of Baroda. His Daughter in Law was instrumental in starting Vidya Mandir in Chennai

 8. The free meal scheme must have started long ago in Hindu gurukul system wherein students stayed with the Gurus 24 * 7 and learnt. The students/disciples must have paid the fees as Gurudhakshina as per their individual capacity during & at the end of education. Food must have been arranged common and must have been served free atleast for few.

 9. பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற கதைகளை எழுதி நம் பாரம்பரியமான குருகுலங்களை, குரு-சிஷ்ய பரம்பரையைச் சிறுமைப்படுத்தியதும் இதே காலனிய ஆதிக்கவாதிகள் தான். ஒட்டுமொத்தமாக நம் தேசத்தின் அனைத்து மன்னர்களையும் சுகபோகிகளாகவும், அடக்குமுறையின் மூலம் மக்களைச் சுரண்டியவர்களாகவும், முட்டாள்களாகவும் காட்டியவர்களும் இதே அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் தான். நம் தேசத்தின் அனைத்து பாரம்பரிய அமைப்புகள் மீதும் சேற்றைவாரி இறைத்த அந்நியர்களை நம் நாட்டின் அறிவுஜீவிகளிலேயே சிலர் பின்தொடர்ந்ததும், அதே பொய்ப்பிரச்சாரங்களை உக்கிரமாகச் செய்ததன் மூலம் திறமையும், தேச பக்தியும் மிகுந்த மன்னர்களையும் வெளித்தெரியாதவாறு கிண்டல்களால் மூடிமறைத்ததும் வரலாற்றுச் சோகம்.

  நம் நாட்டின் தலைசிறந்த முன்னோர்களுள் ஒருவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் சிறப்பான கட்டுரை. குஜராத்திலிருந்து தேசத்தை வழிநடத்தி முன்னேறச் செய்யும் இன்னொரு தேசபக்த தலைவன் வரப்போகும் தக்க சமயத்தில் ராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட் அவர்களை நினைவுபடுத்தியமைக்கு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு மிக்க நன்றி.

 10. If any one doubts how was it possible for free education in the Gurukul ..
  All the village people in and around the location used to give some portion of harvest by way of product or money during the harvest period. During Chithirai, new clothes were given to Gurus. (It might have been redistributed to students ). Even without the contribution from the kings, it was made possible in the old system. this was apart from individual student fees. (there might be exceptions in major/ elite gurukuls in major town)….. . Any teacher who worked in rural areas/ forest areas might have experienced the gifts of rice/vegetables/ clothes from rural people upto 1970s.

 11. வாக்குச்சீட்டு என்னும் ஆயுதம் கொண்டு இசுலாமியப் பகைவர்களையும் கொலைகாரர்களையும் கூட்டாளிகளையும் அரசியல் தளத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.
  முசுலீம்கள் தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

 12. நமது தோல்.திருமாவளவன் அவர்கள் இக் கட்டுரையை படிக்க வேண்டும். அவர் என்னவோ வேறு எண்ணத்தில் இருந்து கொண்டு பேசுகிறாரே. அவருக்கு அனுப்பு-கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *