வன்முறையே வரலாறாய்… – 3

மூலம் :  Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery  by M.A. Khan  (pdf, can be downloaded)
தமிழில் : அ. ரூபன்

சிறந்த வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் தனது நூலில் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன என்பதனைவும் மிக விளக்கமாக எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப் பட்டுள்ளன.

முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2

தொடர்ச்சி..

முகமது-பின்-காசிமின் மூன்று வருட இந்திய ஆக்கிரமிப்பின் விளைவாகப் பிடிக்கப்பட்ட அடிமைகள் வாயிலாக முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தது மட்டுமல்லாமல், அவ்வாறு கைப்பற்றப்பட்ட பெண்களின் மூலமாகப் பிறந்த குழந்தைகளாலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியதாக காண்கிறோம். இறைதூதர் என்று அறியப்படுகிற முகமது நபி, அவரது எதிரிகளான யூத பானு குரைஸா மற்றும் கைபார் பழங்குடிகளிடம் செய்ததின் அடிப்படையில் இது போன்ற செயல்களை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் செய்து முடித்தார்கள்.

ஆனால் இதற்கு ஒரு விதிவிலக்காக பேரரசர் அக்பர் 1566-ஆம் வருடம் இப்பழக்கத்திற்கு விதித்த தடை பெரும் தோல்வியிலேயே முடிவடைந்தது. அடிமைகளைக் கைப்பற்றி, அவர்களின் பெண்கள் மற்றும் செல்வங்களைச் சூறையாட குரான் அனுமதிக்கும் காட்டுமிராண்டித் தனமான செயல்களைச் செய்யாதிருக்க முஸ்லிம்கள் தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். சூறையாடல் அவர்களின் மதத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதனை இழக்க அவர்களுக்குச் சம்மதமில்லை.

சுல்தான் முகமதுவின் (கஜினி) 1001-02 ஆம் ஆண்டில் நடத்திய இந்தியப் படையெடுப்பின் போது ஏறக்குறைய ஐந்து இலட்சம் அடிமைகளைத் தன்னுடன் கொண்டு சென்றதாக வரலாற்றாசிரியர் அல்-குத்பி குறிப்பிடுகிறார். நின்மணாவில் (பஞ்சாப்) பிடித்த ஏராளமான அடிமைகள் காரணமாக அவர்களின் விலை மதிப்பு அடிமைச் சந்தையில் மிகவும் குறைந்து போனதாகச் சலிப்புடன் கூறுகிறார் அல்-உத்பி.

இதுபோலவே தனேகரில் (ஹரியானா) முகமது கஜினி இரண்டு இலட்சம் அடிமைகளைப் பிடித்தது, அவர்களில் விற்பனை செய்தது போக மீதமிருந்த 53,000 பேர்களுடன் 1019-இல் தனது தலை நகரான கஜினிக்குத் திரும்பிச் சென்றதாகத் தெரிகிறது.

இஸ்லாமிய அடிமை வியாபாரம்
இஸ்லாமிய அடிமை வியாபாரம்

இன்று கிடைக்கும் தகவல்களின்படி கஜினி முகமதுவின் படையெடுப்பால் மட்டுமே வட இந்தியாவில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ஹிந்துக்களின் ஜனத்தொகை குறைந்து போனதாகத் தெரிகிறது. புரெஃபசர் கே.எஸ். லால், “ஏராளமான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர், மீதமிருந்தவர்களை அடிமைகளாகவும், வாள் முனையில் உடனடியாக மதமாற்றம் செய்யப்பட்டனர்” என்று கூறுகிறார்.

பின்னர், குரசானைச் சேர்ந்த முகமது கோரி (முயஸ்சுதீன்) மற்றும் அவரது படைத் தலைவனான குத்புதீன் ஐபக்கும் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை நிரந்தரப் படுத்தும் நோக்குடன் எடுத்த படையெடுப்புகள் காரணமாக 1206-ஆம் வருடம் இந்தியாவில் டில்லி சுல்தான்களின் ஆட்சி நிறுவப்பட்டது. முகமது ஃபெரிஸ்டா என்பவரின் குறிப்புகளின் படி, இந்தப் படையெடுப்புகளின்போது ஏறக்குறைய நான்கு இலட்சம் கோகார்கள் (ஹிந்துக்கள்) வாள் முனையில் முயஸ்சுதீனால் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அவரது ஃபக்கிர்-இ-முதாபிர், முயாஸ்சுதீனின் இந்த வெற்றிகள் காரணமாக பரம ஏழைகளாக இருந்த முஸ்லிம்கள் கூட ஏராளமான அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களானார்கள்.

முன்பே கூறியபடி, அக்பர் இவ்வாறு அடிமைகளைப் பிடிக்கும் வழக்கத்திற்குத் தடை விதித்தார். ஆனால் அந்தத் தடைகளையும் மீறி இப்பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அக்பரின் ஆலோசகரும், சிந்தனையாளருமான அபுல்ஃபைசல் தனது அக்பர்-நாமாவில், “இரக்கமற்ற கொடூர மனம் கொண்ட படைத்தலைவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று அவர்களை (ஹிந்துக்களை) எந்த முகாந்திரமும் இன்றிக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்” எனக் குறிப்பிடுகிறார்.

அவ்வாறு கொல்லப்படுகையில் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள். வரலாற்றாசிரியர் மூர்லண்ட், “அக்பரின் ஆட்சிக் காலத்தில் எவ்வித நியாயமும் இல்லாத வகையில் பல கிராமங்கள் இவ்வாறு தாக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைகளாக்குவது ஒன்று மட்டுமே இவ்வித தாக்குதல்களுக்கு முகாந்திரமாக அமைந்தது” என்கிறார்.

அக்பரின் படைத் தலைவனான அப்துல்லாகான் உஸ்பெக் இந்தச் செயல்களைக் குறித்து மிகப் பெருமையாக, “நான் ஐந்து இலட்சம் காஃபிர் ஆண், பெண்களைப் பிடித்து அவர்களை அடிமைச் சந்தையில் விற்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் முகமதியர்களாக்கப்பட்டார்கள். இது இப்படியே தொடர்ந்தால் பல கோடிக்கணக்கான காஃபிர்கள் ‘நீதி நாளுக்கு முன்’ (Day of Judgement) மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாவார்கள் என்பது உறுது” எனச் சொல்கிறான்.

மதச் சகிப்புத்தன்மை கொண்டவராக அறியப்படுகிற பேரரசர் அக்பரின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதம் மீண்டும் இந்தியாவில் தலைதூக்கத் துவங்கியது. ஜஹாங்கிர் மற்றும் ஷாஜஹான் காலத்தில் இது சிறிது, சிறிதாக வலிமையடைந்ததைக் காண்கிறோம். ஓரளவுக்கு மதச் சகிப்புத்தன்மையும், இளகிய மனமும் கொண்டவராக அறியப்படுகிற ஜஹாங்கிரே கூட அவரது ஷாஹ்-பத்-கி-கங்ராவில், “எனது வாழ்நாள் முழுமையும் இஸ்லாமிய மதத்தை விரிவுபடுத்துவதற்கு மட்டுமே செலவிட்டேன். சிலை வழிபாடு செய்யும் பாகன்களை (ஹிந்துக்களை) அழிப்பதையே எனது குறிக்கோளாகக் கொண்டு நடந்தேன்” என்கிறார்.

ஔரங்கசீப் ஆணையால் மதுரா கோயில் உடைப்பு
ஔரங்கசீப் ஆணையால் மதுரா கோயில் உடைப்பு

இந்திஹாப்-இ-ஜஹாங்கிர்-ஷாஹியின் ஒரு குறிப்பின்படி, குஜராத்தில் ஜைனர்கள் ஒரு அழகான பெரும் கோவிலைக் கட்டியதாகவும், அது பல ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதாகவும் கேள்வியுற்ற பேரரசர் ஜஹாங்கிர், அந்த ஜைனர்களை நாட்டை விட்டு விரட்டியடித்து, அவர்கள் கட்டிய கோவிலை இடித்துத் தள்ளவும் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தும் தொழுகைக்குச் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் காலடியில் ஏறி மிதித்துச் செல்ல வசதியாக, மசூதிகளின் உயரமான படிக்கட்டுகளின் கீழ் புதைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு, அதன்படியே நடத்தப்பட்டது.

aurangzeb_temple_destruction_2
உடைக்கப் பட்ட கோயில்களின் பகுதிகள் மசூதியின் படிக்கட்டுக்களாக ஆக்கப் பட்டன

ஜஹாங்கீருக்குப் பின் வந்த ஷாஜஹான் அவரது தகப்பனாரை விடவும் மத அடிப்படைவாதியாக இருந்தார். ஆனால் அவர்கள் எல்லோரையும் மிஞ்சும்படியாக, ஹிந்துக்களைத் தாங்கவொண்ணாத் துன்பத்தில் தள்ளியவர் அவுரங்கசீப்பே (1658-1707). அவுரங்கசீப்பின் காலத்திலேயே கட்டாய மதமாற்றங்களும், அடிமைகளைப் பிடிப்பதையும் தனது அரசாங்கத்தில் கொள்கையாகவே நடத்தப்பட்டது. அந்த வழக்கம் பிரிட்டிஷ்காரர்கள் 1757-ஆம் வருடம் வங்காளத்தைப் பிடித்த காலகட்டத்திலும் நடந்து கொண்டிருந்ததாகக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

சியார்-உல்-முடாக்கிரின் என்னும் நூலின் படி, 1761-ஆம் வருடம் அகமது-ஷா-அப்தாலி மூன்றாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு, உணவும், நீருமின்றித் தவித்த ஒரு பெருந்திரளான காஃபிர்களை (ஹிந்துக்கள்) நீண்ட தூரம் வரிசையில் நடத்திச் சென்றதாகவும், பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, அவர்களின் தலைகள் வாளால் துண்டிக்கப்பட்டதாகவும் சொல்கிறது. பின்னர் அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு உயிரிழந்த, அடிமைப்படுத்தப்பட்டவர்களில் ஏறக்குறைய இருபத்தைந்தாயிரம் பேர்கள் அரசாங்கத்தில் உயர்பதவியும், ராஜ குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஆவார்கள்.

அதற்கு இரு நூறு வருடங்களுக்கு முன்னர், இரானைச் சேர்ந்த நாதிர்-ஷா (1738) இந்தியாவின் மீது படையெடுத்தான். இந்தப் படையெடுப்பின்போது வார்த்தைகளால் விளக்கமுடியாத பல கொடுஞ்செயல்களுடன், ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஹிந்துக்கள் படு கொலை செய்யப்பட்டனர். பின்னர் ஆயிரக்கணக்கான அடிமைகளுடன் இரானுக்குத் திரும்பிச் சென்ற நாதிர்-ஷா, அளவிட முடியாத பொக்கிஷங்களையும் அள்ளிச் சென்றான்.

எனவே, அடிமைகளைப் பிடித்து அவர்களை கட்டாயமாக மதம் மாற்றியதால் மட்டுமே இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியது என்பது குறித்துச் சந்தேகம் எதுவுமில்லை. இதனையே மேற்கூறிய தகவல்களும், ஜெனரல் அப்துல்லாகான் உஸ்பெக் போன்றவர்களின் பேச்சுக்களும் உறுதிப்படுத்துகின்றன. அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் குழந்தைகளும், அந்தப்புரத்திற்குப் பிடித்துச் செல்லப்பட்ட ஹிந்துப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப்பட்டார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் தொகை இந்தியாவில் பல்கிப் பெருகியது என்பது ஒரு சரியான கூற்றாகும்.

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு:

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், குறிப்பாக பாகிஸ்தான், நைஜீரியா, இந்தோனேஷியா, சவூதி அரேபியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் படும் வேதனைகளைச் சொல்லி மாளாது. படுகொலைகளும், கட்டாய மதமாற்றங்களும் தினசரி சம்பவங்கள் அங்கே. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் கையில் பைபிள் வைத்திருந்தாலேயே கூட முத்தவாக்கள் பிடித்துக் கொண்டு போய் விரல் நகங்களைப் பிடுங்கியோ அல்லது கைகளை பாளம் பாளமாக பிளேடால் அறுத்தோ அமைதி மார்க்கத்தின் மேன்மையை நிலை நாட்டுவார்கள். நம்பாதவர்கள் இணையத்தில் தேடிப்பாருங்கள்.

இந்திய, குறிப்பாக தமிழ் நாட்டுக் கிறிஸ்தவர்கள் இதுகுறித்தான சிறிதளவு அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள். இணையவெளியிலும், ஃபேஸ்-புக்கிலும் இஸ்லாமியர்களை தங்களின் உடன் பிறவா சகோதரர்கள் போல வழியும் “கிறிஸ்தவ அறிவு சீவிகள்” நகைப்பிற்கு உரியவர்கள். இந்தியாவில் ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரை மட்டுமே கிறிஸ்தவ, பவுத்த, ஜைன, சீக்கிய இன்ன பிற மதத்தினர் பாதுகாப்பாக இருக்கமுடியும் என்பதுவே மறுக்க முடியாத உண்மை.

ஒருவேளை முஸ்லிம்கள் இந்தியாவில் மெஜாரிட்டியாக ஆகிப் போனால் (அவ்வாறு நினைக்கவே அச்சமாக இருக்கிறது!), கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ‘திம்மி’க்களாக, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள். இதில் இஸ்லாம் ஆபிரகாமிய மதங்களான (monothestic) யூத, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ‘திம்மி’ எனும் அந்தஸ்தை அளிக்கிறது. ஆனால் சிலை வழிபாடு (Polytheists) செய்யும் ஹிந்து, பவுத்த, ஜைன மதத்தவர்களுக்கு அவ்வாறான சலுகை எதனையும் இஸ்லாம் அளிப்பதில்லை. ஒன்று அவர்கள் மதம் மாறி இஸ்லாமைத் தழுவ வேண்டும்; அல்லது மரணம் என்னும் ஒரு கொடிய வாய்ப்பு மட்டுமே அவர்களுக்கு உண்டு. எனவே ஹிந்துக்களுக்கு கஷ்ட காலம்தான்,

அமைதி மார்க்க வழிகாட்டியான குரானில் (9:20) ‘திம்மி’க்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என வழிகாட்டுதல்கள் உண்டு. அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இஸ்லாமின் இரண்டாவது கலிஃபா உமர் (அல்லது ஒமர்) அளித்த கட்டளைப்படியே இன்றுவரை இஸ்லாமிய நாடுகளில் ‘திம்மி’கள் நடத்தப்படுகிறார்கள். “உமரின் ஒப்பந்தம்” என்று அழைக்கப்படும் ‘திம்மி’க் கட்டளைகளை இங்கு காண்போம்,.

– அ. ரூபன்

இறை நம்பிக்கை அதிகமற்ற உமாயத்துக்களின் கலிஃபாவான உமரால் (717-20) யூத, கிறிஸ்தவ திம்மிக்களுக்கு அளிக்கப் பட்ட சட்டங்கள், ஷஃபி இஸ்லாமிக் பள்ளிகளைத் தோற்றுவித்த இமாம்-ஷஃபியால் Kitab-Ul-Umm (Mother of all Books) என்னும் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. அவையே இந்தக் கட்டுரைக்கு அடிப்படை. ஒரு காஃபிரி கிறிஸ்தவனுக்கு இஸ்லாமிய நாட்டில் என்ன மாதிரியான விஷேஷ கவனிப்பு இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

அரேபியர்கள் சிரியாவை வென்றபின், அப்போதைய கலிஃபா உமருக்கும், சிரிய கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்த ஒருவருக்கும் இடையில் நடந்த ஒரு ஒப்பந்தமே ‘உமரின் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முழுமையுமே உமர் சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பது கவனிக்கத்தக்கது. சிரிய கிறிஸ்தவத் தலைவரின் பங்களிப்பு என்று எதுவுமில்லை, கையொப்பம் இட்டதைத் தவிர.

இந்த ஒப்பந்தத்தின்படி, திம்மிக்கள் அனைவரும் இஸ்லாமியர்களின் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடிபணிய வேண்டும் என்கிறது. மேலும் தங்களின் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரி கொடுப்பதுடன், சமுதாயத்தின் கடைநிலையில் வைக்கப்பட்டு தொடர் அவமதிப்புகளுக்கு ஆளாக வேண்டும் என்றும் ஆணையிடுகிறது. கலிஃபா உமர், தோல்வியடைந்த சிரியர்களுக்கு கீழ்க்காணும் கட்டளைகளை அளிக்கிறார்.

“நீங்கள் (சிரிய கிறிஸ்தவர்கள்) இங்கு அளிக்கப்பட்டிருக்கும் கட்டளைகளை மீறி நடக்காதவரை, நானும் எனது சகோதர முஸ்லிம்களும், உங்களுக்கும், உங்களின் பிற கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் எல்லாவிதமான பாதுகாப்பும் அளிக்க உத்தரவாதம் அளிக்கிறேன்.

1. நீங்கள் இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிபணிவதுடன், முஸ்லிம்கள் சொல்லும் எதற்கும் எதிரான செயல்கள் எதனையும் செய்யக்கூடாது.

2. நீங்கள் இறைதூதர் முகமது நபியைக் குறித்தோ அல்லது குரானைக் குறித்தோ கேவலமாகப் பேசுதல் கூடாது. அவ்வாறு நீங்கள் செய்தால், நம்பிக்கையாளர்களின் தலைவனான நான் அளிக்கும் இந்த பாதுகாப்பு உத்தரவாதம் விலக்கப்படும். அவ்வாறு பேசியவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள்.

3. உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தாலோ அல்லது நெடுஞ்சாலையில் ஒரு முஸ்லிமைக் கொள்ளையடித்தலோ அல்லது ஒரு முஸ்லிமை அவனது மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றினாலோ அல்லது எதிரிகளுக்கு உதவினாலோ அல்லது உளவு பார்த்தாலோ இந்த ஒப்பந்தத்தை மீறியவர்களாகிறீர்கள். அவ்வாறு கணிக்கப்படுபவர்களின் வாழ்க்கையும், சொத்துக்களும் அத்தனை பாதுகாப்பு உத்தரவாதங்களையும் இழக்கும்.

jizya-against-hindus

4. எந்தவொரு முஸ்லிமையும் மரியாதை குறைவாக நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

5. நாங்கள் தொடந்து உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்போம். நீங்கள் முஸ்லிம்களுக்கு ஏதேனும் அநீதி இழைத்தால் அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்பட்டால் நீங்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.

6. நீங்கள் ஒரு காஃபிராயிருந்து உங்களுக்கு நீதி வழங்கும்படி கேட்டால், இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படியே உங்களுக்கு நீதி வழங்கப்படும்,

7. நீங்கள் எந்த ஒரு இஸ்லாமிய ஊரிலும், நகரிலும் சிலுவைகளை அமைக்கக் கூடாது. அல்லது உங்கள் கடவுளின் சிலைகளைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செல்லக்கூடாது. ஒரு கிறிஸ்தவ சர்ச்சையோ அல்லது பிரார்த்தனை கூடத்தையோ கட்ட உங்களுக்கு அனுமதியில்லை. ஒருபோதும் சர்ச்சின் மணிகளை ஒலிக்கக்கூடாது. ஏசு கிறிஸ்துவை வாழ்த்திப் பாடும் பாடல்களைப் பாடவும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேரியின் புதல்வன் ஏசு என எந்த முஸ்லிமிடமும் சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை.

8. கிறிஸ்தவர்களான நீங்கள் எப்போதும் Zunnar என்னும் இடுப்பில் கட்டும் துணிக்கச்சையை அணிந்து, முஸ்லிம்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கச்சையானது அனைவரும் பார்க்கும்படியாக, வெளியில் இருக்கும்படி மட்டுமே அணியப்பட வேண்டும். அது ஒருபோதும் மறைக்கப்படுதல் கூடாது.

9. நீங்கள் குதிரையில் செல்லுகையில், நீங்கள் அமர்ந்து செல்லும் முறையும், சேனங்களில் கால்களை இருத்தி வைக்கும் முறையும் முஸ்லிம்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் முஸ்லிம்கள் அல்ல என்று பிறருக்கு உணர்த்த உங்கள் மீது வேறு வகையான, வெளித் தெரியும் குறியீடுகள் இருக்க வேண்டும்.

10. சாலையில் பயணம் செய்கையில் நீங்கள் ஒரு போதும் சாலையின் மையப்பகுதியில் செல்லவே கூடாது. மேலும் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சபையில் காஃபிரான நீங்கள் தலைமை இடத்தினை எடுத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

11. ஒவொரு புதுவருடம் துவங்குகையில், ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணும் ஒரு தினார் ஜிஸியா வரியைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். அந்த வரியைச் செலுத்தாதவரை நீங்கள் நகரத்தை விட்டுச் செல்ல உங்களுக்கு அனுமதியில்லை.

12. ஏழைக் கிறிஸ்தவனுக்கும் ஜிஸியாவிலிருந்து விலக்கில்லை. எனவே வறுமை ஜிஸியா அளிப்பதிலிருந்து திம்மிக்களான உங்களுக்கு விலக்கு அளிக்காது. வரி செலுத்துவதற்காக உங்களிடன் என்ன பொருட்கள் இருந்தாலும் அதனை நாங்கள் எடுத்துக் கொள்வோம். நீங்கள் முஸ்லிம்களின் நாடுகளில் வசிக்கும்வரை ஜிஸியா கொடுத்துத்தான் ஆக வேண்டும். வியாபாரிகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.

13. மெக்காவிற்குள் நுழைய உங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை. நீங்கள் வியாபாரப் பொருட்களுடன் பயணம் செய்தால், அதில் பத்தில் ஒரு பங்கினை முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும். மெக்காவைத் தவிர எல்லா நகரங்களுக்கும் செல்ல உங்களுக்கு அனுமதியுண்டு. இருந்தாலும் நீங்கள் ஹெஜாஸ் நகரில் மூன்று நாட்களுக்கு மட்டுமே தங்க முடியும்.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹனீஃபி நீதிபதியான அபு-யூசஃப், ஒமாரின் இந்தச் சட்டங்கள் குரானின் வழி வந்தவையாதலால் ‘இறுதி நாள் வரை நிலைத்து நிற்கும் (stands till the day of resurrection)” எனக் குறிப்பிடுகிறார்.

கிறிஸ்தவர்களும், யூதர்களும் எவ்வாறு ஜிஸியா வரியைச் செலுத்த வேண்டும், செலுத்தினார்கள் என பதினாராம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபியான அஷ்-ஷரானி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“யூத, கிறிஸ்தவ திம்மிக்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், ஜிஸியா வரி வசூலிக்க நியமிக்கப்பட்ட எமிரானவனிடம் செல்வார்கள். அவர் ஒரு உயரமான அரியாசனத்தில் அமர்ந்திருப்பார். திம்மியானவன் தான் செலுத்த வேண்டிய ஜிஸியா வரியை தனது உள்ளங்கையில் வைத்தபடி, அந்த எமிரின் முன் பணிவுடன் நிற்பான். இதனால் வரியை எடுத்துக் கொள்ளும் கை மேலும், ஜிஸியா கொடுக்கும் திம்மியின் கை கீழும் இருக்கும். வரியை எடுத்துக் கொண்ட எமிரானவன், பின்னர் திம்மியின் கழுத்தில் ஓங்கி அடிப்பான். அதன் பின்னர் அவனை அங்கிருந்து விரட்டியடிப்பான். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் (முஸ்லிம்கள்) கூட்டமாக கூடி நிற்பார்கள்”.

இனி இந்தியாவில் ஜிஸியா எவ்வாறு வசூலிக்கப்பட்டது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)

3 Replies to “வன்முறையே வரலாறாய்… – 3”

  1. My God, what an atrocious barbaric religion Islam is. This article is a must read for all pseudo secular Hindus and peace loving Muslims in India. To live in peaceful co existence, Islam should owe up to their atrocious past. The first peaceful gesture from Indian Muslims should be handing over of Ayodhya temple back to Hindus. Thank you Shri Rupan, waiting for your next article.

  2. In SCHOOL text books (what I studied), only two sentences were mentioned. ie Akbar removed the tax and Aurangazeb restored. The article given is informative. Are the same procedure is followed in Muslim countries (NOW)?

  3. Islam is not just a religion. It is a political organization. Its goal is to establish Islamic rule and to destroy other religions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *