வன்முறையே வரலாறாய்… – 2

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

முந்தைய பகுதிகள்: பாகம் 1

இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சி இந்தியாவில் நிறுவப்பட்ட நூறு வருடங்களுக்குப் பின்னர் (1206) ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸியா மற்றும் கராஜ் (Jizya and Kharaj) போன்ற வரிகளின் கடுமை காரணமாக, ஹிந்துக்கள் முஸ்லிம்களின் வீடுகளின் முன்னால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஹிந்துக்கள் நினைத்திருந்தால் தங்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்து கொண்டு இந்தக் கொடுமைகளிலிருந்து அவர்களால் எளிதாகத் தப்பியிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்ய முயலவில்லை.

17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பயணம் செய்த பல ஐரோப்பியப் பயணிகள், ஹிந்துக்கள் வரி கொடுக்க இயலாமல் தங்களின் மனைவிகளைகளையும், குழந்தைகளையும் அடிமைச் சந்தையில் விற்பதனைக் கண்ணுற்றதாக எழுதுகின்றனர். இஸ்லாமிய வரி வசூல் செய்யும் அதிகாரிகள், ஹிந்துக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அந்தக் குழந்தைகளை அடிமைச் சந்தையில் விற்றதன் மூலம் பெற்ற பணம், வரியாக அரசு கஜானாவில் செலுத்தப்பட்டது. இருப்பினும், ஹிந்துக்கள் மதம் மாறித் தங்களை இஸ்லாமில் இணைத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவெங்கும் பரந்து, விரிந்திருந்த காடுகள் ஹிந்துக்கள் ஒளிந்து கொள்ள இடம் கொடுத்ததுடன், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் புகலிடமாக இருந்ததாகப் பல இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அவர்களின் குறிப்புகளில் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

islamic-invasion

சுல்தான் முகமது-ஷா-துக்ளக்கின் (1325-51) காலத்தில் இந்தியாவின் பலபகுதிகளுக்கும் பயணம் செய்த மொராக்கியப் பயணியான இப்ன்-பதூதா, மூல்தானுக்கு அருகில் ஹிந்துப் போராளிகள், எவரும் எளிதில் நெருங்கவியலாத மலைப்பகுதிகளில் அரணமைத்துத் தங்கியிருந்தனர் என்று குறிப்பிடுகிறார். டெல்லி சுல்தானின் பிரதிநிதியாக சீனாவிற்குச் செல்லும் வழியில் Kol (அலிகர்) பகுதியிலிருந்த குன்றில் ஒளிந்திருந்த ஹிந்துப் போராளிகள் அடிக்கடி அங்கிருந்து சென்று, இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் தாக்குதல் தொடுப்பதைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார். மேலும், அவர் சென்ற படையணியை ஒரு முஸ்லிம் கிராமத்திற்கருகில் ஹிந்துப் போராளிகள் தாக்கியதாகவும், எதிர் தாக்குதல் நடத்திய இஸ்லாமியப் படைகள் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இரக்கமற்ற தைமூரின் இந்தியப் படையெடுப்பு குறித்து அமிர்-குஸ்ரு, அவரது முல்ஃபுஸத்-இ-தைமூரி எனும் புத்தகத்தில் ஹிந்துக்களின் தடுப்புமுறைப் போர்த் தந்திரங்கள் மற்றும் அரண்கள் குறித்துக் கூறுகையில், “அவர்களின் (ஹிந்துக்களின்) பாதுகாப்பு அரண் காடுகளில் காட்டு மரங்களின் வேர்களை, விழுதுகளை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கட்டியிருந்தார்கள். அந்த அரண்களைத் துளைத்துச் செல்வதற்கு தைமூரின் படையகளுக்கு வெகு நேரம் பிடித்தது. ஹிந்து அரசர்களும், இளவரசர்களும், படைவீரர்களும் அந்தக் காடுகளில் விலங்குகளைப் போல ஒளிந்திருந்து போர் செய்தார்கள்” என்கிறார்.

1520-இல் இந்தியாவின் மீது படையெடுத்த முதலாவது முகலாய மன்னரான பாபர் தனது குறிப்புகளில், ஹிந்துகள் இந்தியக் காடுகளைத் தங்களைக் காக்கும் அரணாகப் பயன்படுத்தியதுடன், எளிதில் அடிபணியவைக்க இயலாதவர்களாக அவர்கள் இருந்ததையும் குறிப்பிடுகிறார். “நாங்கள் ஆக்ராவிற்கு வருகையில் அங்கு எங்களுக்குத் தேவையான உணவோ அல்லது குதிரைகளுக்குத் தேவையான சோளம்மோ கண்ணில் எங்கும் தென்படவில்லை. முஸ்லிம்களின் மீது ஆழ்ந்த வெறுப்புணர்வு கொண்ட கிராமத்தினர், சாலைகளில் திருடவும், வழிப்பறிக் கொள்ளைகள் செய்யவும் தலைப்பட்டனர். பிற கிராமவாசிகள் அனைவரும் காடுகளில் சென்று ஒளிந்து கொண்டனர்” என எழுதுகிறார்.

இந்தக் குறிப்புகள், ஹிந்துக்கள் எவ்வாறு தொடர்ச்சியாக தங்களின் எதிர்ப்புணர்வை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் மீதும், இஸ்லாமின் மீது காட்டி வந்தார்கள் என்பதற்கான ஒரு சிறு உதாரணமாகும். முஸ்லிம் ஆட்சியாளர்கள் விதித்த கடுமையான வரிகளைக் கொடுக்கவியலாத பல விவசாயிகள் தங்கள் விளை நிலங்களைக் கைவிட்டுக் காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். தாக்குப் பிடிக்க முயன்ற பிறர், தங்களை ‘திம்மி’க்களாக ஏற்றுக் கொண்டு இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் அவர்கள் ஒருபோதும் இஸ்லாமைத் தழுவிட எண்ணவில்லை என்பதே உண்மை.

மத அடிப்படைவாத எண்ணம் கொண்டவரான அவுரங்கசீப் 1679-ஆம் வருடம் மீண்டும் ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரிகையச் சுமத்தினார் (ஜிஸியா, பேரரசர் அக்பர் காலாத்தில் நீக்கப்பட்டிருந்தது). அதன் காரணமாக் துன்புற்று, துயருற்ற ஹிந்துக்கள், பெரும் கூட்டமாகக் கூடி, டெல்லி அரண்மனையின் முன்னால் அமர்ந்து சாத்வீகமான போராட்டத்தைத் துவக்கினர். எந்த விதமான மிரட்ட, உருட்டலுக்கும் அஞ்சாமல் அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தினர் மீது அவரங்கசீப் யானைகளை ஏவினார். யானையின் காலடியிலும், குதிரைகளின் குளம்புகளிலும் நசுங்கி ஏராளமானவர்க கொல்லப்பட்டனர். இறுதியில் அவர்கள் ஜிஸியா வரி செலுத்த சம்மதித்தனர் என்கிறார் அதனை நேரில் கண்ட காஃபிகான் என்பவர்.

இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்திய ஹிந்துக்கள் அதன் மீது எவ்விதமான மரியாதையையோ அல்லது பிரியத்தையோ கொண்டிருக்கவில்லை. இஸ்லாமியராக மதம் மாறினால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் குறித்து அவர்கள் அறிந்திருந்தும் அதனை அவர்கள் செய்ய முற்படவில்லை. தங்களை வதைக்கும் ஜிஸியாவையும், கராஜையும் எதிர்கொண்டு, தங்களின் முன்னோர்கள் வகுத்த பாதையிலேயே அவர்கள் தொடர்ந்து நடப்பதைத் தேர்ந்தெடுத்தனர்.

அதனையும் விட, இவ்வாறு வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம்களில் பலர் வாய்ப்பு கிட்டியதும் மீண்டும் தங்களின் தாய் மதத்திற்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். உதாரணமாக 1326-ஆம் வருடம் சுல்தால் முகமது ஷா துக்ளக், தக்காணத்திலிருந்து ஹரிஹரர்-புக்கர் என்னும் சகோதரர்களைப் பிடித்து அவர்களை இஸ்லாமியர்களாக்கினார். பத்து வருடங்களுக்குப் பின்னர் தக்காணத்தில் நிகழ்ந்த ஒரு கலவரத்தை அடக்க ஹரிகரரையும், புக்கரையும் அனுப்பி வைத்தார் சுல்தான். ஆனால் தில்லியிலிருந்து வெகு தூரத்திலிருந்த ஹரிஹரரும்-புக்கரும் மீண்டும் ஹிந்துக்களாகியதுடன், தென்னிந்திய முஸ்லிம் ஆட்சியாளர்களைத் துரத்தியடித்து விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவினர். இந்தியக் கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கிய விஜய நகரப் பேரரசு, தென்னிந்தியாவின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டு, அடுத்த 200 வருடங்கள் வரை செழித்திருந்தது.

மதச் சகிப்புத்தன்மை கொண்டவராக அறியப்படும் பேரரசர் அக்பர், கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைத் தளர்த்தியதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான, மதமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் முன்னோரின் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பினர். அத்துடன் முஸ்லிம் பெண்கள் ஹிந்து ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு, ஹிந்து மத வழக்கங்களைப் பின்பற்றத் துவங்கினர். இதன் உதாரணமாக, பேரரசர் ஷாஜஹான் காஷ்மீரத்திலிருந்து டில்லி திரும்பிவரும் வழியில், பாடூரி மற்றும் பிம்பா சாதியைச் சேர்ந்த ஆண்கள், முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருப்பதனை அறிந்தார். எனவே இம்மாதிரியான நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என அறிவித்ததுடன், ஹிந்துக்களை ஏற்கனவே திருமணம் செய்திருந்த முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவர்களிடமிருந்து உடனடியாகப் பிரித்து வைக்கவும் உத்தரவிட்டார் ஷாஜஹான்.

எனவே அக்பரின் மதச் சகிப்புத்தன்மை பிற முகலாய ஆட்சியாளர்களால் தொடரப்படாமல் போனது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத், அக்பரின் இந்த மதச் சகிப்புத் தன்மை இந்திய இஸ்லாமிற்கு ஒரு தற்கொலையைப் போன்றது எனக் கண்டிக்கிறார். மவுலானா ஆஸாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்ட, அக்பரின் காலத்தில் வாழ்ந்த, அக்பரின் மதச் சகிப்புத்தன்மையை எதிர்த்துப் போராடிய சூஃபியான ஷாய்க்-அகமது-ஷிரினிடியை புகழ்வதையும் காணலாம்.

காஷ்மீரி ஹிந்துக்கள் எவ்வாறு வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதனை விளக்கமாகக் கூறும் பஹாரிஸ்தானி-இ-ஷாஹி, சுல்தான் சிக்கந்தரால் கஷ்மீரிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்ட விவரங்களையும் எடுத்துரைக்கிறது. காஃபிர்களை சுல்தான் சிக்கந்தர் (1389-1413) இடைவிடாமல் கொலை செய்து அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றிய பிரதாபங்களை ஹைதர்-மாலிக்-சல்தாஹ் என்பவரின் குறிப்புகள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன.

சுல்தான் சிக்கந்தருக்கு அடுத்து பதவிக்கு வந்த சுல்தான் ஜயினுலாபிதீன் (அல்லத் ஷாஹிகான், 1417-67) அவருக்கு நேரிடையானவராக, மதச்சகிப்புத்தன்மை கொண்டவராக நடந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் மீண்டும் தங்களின் மதத்திற்குத் திரும்பவும் அனுமதி அளிக்கிறார். ஆனால் அவருக்கு அடுத்து வந்த மாலிக் ராணாவின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஹிந்துக்கள் கூட்டம், கூட்டமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். காஷ்மீரின் புகழ்பெற்ற சூஃபியான தின்-முகமத்-இராக்கியின் ஆணைப்படி காஜி சக் என்னும் படைத்தளபதி, ஒரு முகர்ரம் நாளில் 700 முதல் 800 ஹிந்துக்களை படுகொலை செய்தான்.

இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய ஹிந்துக்கள் மீது நிகழ்த்திய கொடூரங்களை மூடி மறைக்க முயன்றவர்களில் மிக முக்கியமான ஒருவர். அப்பட்டிப்பட்டவரான அவரே, அவரது டிஸ்கவரி-ஆஃப்-இந்தியா புத்தகத்தில், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்களில் பலர் மீண்டும் தங்களின் தாய்மதம் திரும்ப விருப்பமானவர்களாக இருந்தனர் என்று எழுதுகிறார்.

“காஷ்மீரில் நடந்த கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஏறக்குறைய 95 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தங்களின் பழைய ஹிந்து மத பழக்க வழக்கங்களையே தொடர்ந்து பின்பற்றி நடந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கூட, கஷ்மீரின் பெருவாரியான முஸ்லிம்கள தாங்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்ப விருப்பமுடையவர்களாக இருப்பதாக அவர்களின் ஹிந்து அரசரிடம் கேட்டுக் கொண்டனர்” என்று எழுதுகிறார் ஜவஹர்லால் நேரு.

மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புகள், இந்திய ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்தின் மீது எந்தவிதமான மதிப்போ அல்லது மரியாதையோ உடையவர்களாக இருந்ததில்லை என்பதனையே காட்டுகிறது. தங்களால் இயன்ற அளவிற்கு இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறி ஹிந்துக்களாக மாறவே அவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். இடைக்கிடையே மதவெறி குறைந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருகையில், இஸ்லாம் இந்தியாவில் தாழ்ந்தும், ஹிந்துமதம் மேலோங்கியும் இருப்பதையே வரலாற்றின் பக்கங்களில் காணலாம். இந்த உண்மை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலேயே கூட கசப்புடன் ஒப்புக் கொள்ளப்படுவதனையும் காணலாம்.

பல நூற்றாண்டுகள் இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆண்டிருந்தாலும், இன்றும் ஏறக்குறைய 80 சதவீத இந்தியர்கள் ஹிந்துக்களாகவே இருப்பது ஒரு பெரும் சாட்சியமாகும். கடுமையான வாழ்க்கை நெருக்கடிகளையும், வரிகளையும், கலாச்சார அழிப்புகளையும், அவமானங்களையும், இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டதையும் மீறி அவர்கள் இன்றும் தங்களின் முன்னோர்களின் மதமான ஹிந்துமதத்தினையே சார்ந்து நிற்கிறார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடிய அடக்குமுறைகள் அவர்களை மதம் மாறச் செய்ய இயலவில்லை.

இஸ்லாமியர்கள் இந்திய துணைக்கண்டத்தில் பதினொரு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தாலும், அவர்கள் ஒருபோதும் இந்தியா முழுவதனையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலவில்லை என்பதனையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். முகமது-பின்-காசிம் சிந்து சமவெளியைக் கைப்பற்றிய 1712-ஆம் வருடத்தைத் தொடர்ந்த மூன்று நூற்றாண்டுகளிலும் இஸ்லாம் இந்தியாவி வடமேற்குப் பிராந்தியத்தின் ஒரு சிறிய பகுதியிலேயே மட்டும் முடங்கிக் கிடந்தது. இன்றைய பாகிஸ்தானின் பெரும்பகுதி மக்கள் முஸ்லிம்களாக மாறியதற்கான அடிப்படைக் காரணம், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களின் நீண்ட கால ஆட்சியின் மூலமாக அவர்கள் ஆளும் பிராந்தியங்களின் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைக்க முடியும் என்பதற்கான ஒரு அத்தாட்சியாகும்.

கொடுங்கோலன் என்று அறியப்படுகிற, மதச் சகிப்புத்தன்மை கொண்ட பேரரசர் அக்பரின் பேரனான அவுரங்கசீப் (1658-1707) ஆட்சிக்கு வந்ததும் இஸ்லாமிய மயமாக்கமும், கட்டாய மத மாற்றமும் அரசாங்கத்தின் ஒரு முக்கிய வெலையாக மாற்றப்பட்டது. இருப்பினும் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பலபாகங்களிலும் அவருக்கெதிரான கங்ககங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

பெர்னியர் என்னும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர் எழுதியதன்படி, அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில், வலிமையான ராஜபுத்திர மற்றும் மராத்தா இளவரசர்கள் உடல் முழுவதும் ஆயுதம் தாங்கி, குதிரைகள் மீது அமர்ந்தபடியே அவுரங்கசீப்பின் அரசவைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். இதனைக் கண்டு எரிச்சலடைந்த அவுரங்கசீப், முஸ்லிம்கள் அல்லாதோர் தன் முன்னிலையில் ஆயுதம் தாங்கி வருவது கூடாது என கலிஃபா ஒமார் காஃபிரி கிறிஸ்தவர்களுடன் செய்து கொண்ட ‘ஒமாரின் ஒப்பந்தத்தை’ (Pact of Omar)-யும், ஷரியா சட்டத்தையும் காரணம் காட்டித் தடைவிதித்தபோதும், அந்தத் தடையிலிருந்து ராஜபுத்திரர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது இங்கு கவனிக்கத் தக்கது.

அவுரங்கசீப்பின் கொடுமையான ஆட்சிமுறை மற்றும் சட்டங்கள் அப்பாவி ஹிந்துக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும், ஜிஸியா வரி மீண்டும் விதிக்கப்படுவதை எதிர்த்தும் ராணா ராஜ்சிங் மற்றும் மராட்டிய சிவாஜி போன்றவர்கள் அவுரங்கசீப்பிற்க்குக் கடிதங்கள் எழுதினார்கள். மராட்டியத்தில் அவுரங்கசீப்பின் அதிகாரிகள் ஜிஸியா வரி வசூலிக்கச் சென்றபோது, அவர்களில் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட, மற்றவர்களின் தாடிகளை இழுத்து அவமானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

இந்தியர்களிடையே பிரபலமாக இருந்த பேரரசர் அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்திலேயே கூட இந்தியாவின் பெரும்பகுதிகளில் அவர்களின் செல்வாக்கு உடைபட்டே இருந்தது. ஜஹாங்கீர் தனது நினைவுக்குறிப்பான Taik-i-Salim Shahi-யில், “பேரரசில் அரசுக்கெதிரான கலவரங்கள் ஒருபோதும் ஓய்ந்தபாடில்லை; என்னுடைய தகப்பனாரின் ஆட்சிக்காலத்திலும், என்னுடைய ஆட்சியிலும் இந்தப் பேரரசின் எந்த ஒருபகுதியிலாவது ஏதாவதொரு சிற்றரசன் அல்லது இளவரசன் தொடர்ந்து முளைத்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். எனவே, ஹிந்துஸ்தானம் ஒருபோதும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை” என்கிறார்.

வரலாற்றாசிரியரான Dirk H. Kolf இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கெதிரான ஹிந்துக்களின் எதிர்ப்பைக் குறித்து எழுதுகையில், “பல இலட்சக்கணக்கான விவசாயிகளும், ஆயுதம் தரித்த போராளிகளும் அவரங்கசீப்பின் எதிரிகளாக மட்டுமே இருந்தார்களன்றி பேரரசிற்கு அடங்கிய குடிமக்களாக அல்ல” என்று குறிப்பிடுகிறார்.

பேரரசர் அக்பரின் அவையில் இருந்தவரான பதோனி (Badanoi) இதனையே, “இஸ்லாமியப் படைகளின் தாக்குதல்களைக் காடுகளில் ஒளிந்திருந்த ஹிந்துக்கள் பலமுறை முறியடித்தார்கள். காடுகளில் ஒளிந்திருந்த ஹிந்துக்கள் அங்கு விளைந்த காய், கனிகளையும், வேர்களையும், தானியங்களையும் உண்டு வாழ்ந்தார்கள்” என உறுதிப்படுத்துவதைக் காணலாம்.

இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு இந்தியாவின் 80 சதவீத மக்கள் இஸ்லாமியர்களாக மாறவில்லை எனக் கேட்பதனை விடவும், எவ்வாறு மற்ற 20 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று கேட்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்துக்களின் வெறுப்புணர்வையும் மீறி எவ்வாறு இஸ்லாமிய மக்கள் தொகை பெருகியது என்பதற்கான சில காரணங்களை இங்கு ஆராயலாம்.

இந்தியாவில் இஸ்லாமிய மதமாற்றங்கள் அமைதியான வழியில் ஒருபோதும் நிகழ்ந்து விடவில்லை. பல இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களே இவ்வாறு ஹிந்துக்கள் இன்னும் காஃபிர்களாகவே இருப்பது குறித்துக் கசப்புடன் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்திய இஸ்லாமிய மதமாற்றங்களில் பெரும்பாலானவை வாள்முனை மதமாற்றங்களே என்பதற்கான ஆதாரங்கள் இன்றைக்கு ஏராளமாக காணக்கிடைக்கின்றன.

islamic-war

வாள்முனை மதமாற்றமானது, இறைதூதர் என நம்பப்படும் முகமது நபியால் முதன்முதலில் துவங்கி வைக்கப்பட்டது. இவற்றில் சிலை வழிபாட்டளர்களுக்கு ஒன்று மதமாற்றம் அல்லது மரணம் என்கிற குரானின் (9:5) வசனமே ஹிந்துக்களின் துன்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

சிந்து சமவெளிப்பகுதியை முகமது-பின்-காசிம் வென்றபோது, காஃபிர்களை மதமாற்றம் செய்வதைத் தனது கடமையாகச் செய்ததால், சண்டைகள் மூளவும் அதன் காரணமாக பெருவாரியான இறப்புகள் நிகழவும் காரணமாயிற்று. எனவே, தன்னை எதிர்த்துப் போர்புரியாமல் மதம் மாறியவர்களுக்குப் பல நன்மைகள் செய்யத் தலைப்பட்டான் பின்-காசிம். அவனது இந்த நடவடிக்கை பாக்தாதிலிருந்த அவனது மாமனான ஹிஜாஜிற்குத் தெரியவந்தபோது அவன் அதனை மறுதலித்து, ஹிந்துக்களிடம் (காஃபிர்களிடம்) கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறான்.

ஹிஜாஜ், பின்-காசிமிற்கு எழுதிய ஒரு கடிதம் ஒன்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

“…..நீ (பின்-காசிம்) இஸ்லாமியச் சட்டங்களைத் தவறாமல் கடைபிடிப்பதனைப் பற்றி நான் அறிவேன். ஆனால் நீ எல்லாவருக்கும், அவர்கள் பெரியவரோ அல்லது சிறியவரோ அல்லது நண்பரோ அல்லது பகைவரோ என்ற எந்த பாகுபாடும் காட்டாமல் பாதுகாப்பளிப்பது எனக்குக் கவலையளிக்கிறது. அல்லாவின் கட்டளையானது ‘காஃபிர்களுக்கு எந்தவிதமான இரக்கமும் காட்டதே; அவர்களின் குரல்வளைகளை அறுப்பதைத் தவிர’ என்பதாகும். இந்தக் கட்டளையான உயர்ந்தவனான அந்த அல்லாவின் கட்டளையாகும் என்பதனை நீ ஒருபோதும் மறவாதே. இஸ்லாமை மறுக்கும் காஃபிர்களுக்கு நீ ஒருபோதும் பாதுகாப்பளித்தல் கூடாது. இஸ்லாமை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே அந்த பாதுகாப்பு உரித்தானதாகும் எனபதினை மறவாதே…..”

ஹிஜாஜின் இந்த பயங்கரமான, மனிதத்தன்மையற்ற கட்டளையைப் பெற்ற பின்-காசிம், அவனது அடுத்த வெற்றியான சிந்துவின் ப்ராஹ்மனாபாதில், இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத எவரையும் உயிருடன் விட்டுவைக்கவில்லை. அல்-பிலாதுரி என்கிற இஸ்லாமிய வரலாற்றாசிரியரின் குறிப்புகளின்படி, “எட்டு அல்லது சிலர் சொல்வது போல இருபத்தி ஆறாயிரம் காஃபிர்கள் அன்று வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்”.

இருப்பினும், ஹிந்துக்களின் தொகை மிகவும் அதிகமானதாக இருந்ததால் அவர்கள் அனைவரையும் கொல்வது என்பது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு இடம் கொடுத்துப் பின்னர் அவர்களிடமிருந்து வரி வசூல் செய்வதென்பது பின்-காசிமிற்கு லாபகரமான ஒன்றாகத் தெரிந்தது. எனவே, இது குறித்து ஹிஜாஜிற்குக் கடிதம் எழுத, ஹிஜாஜ் கீழ்க்கண்ட பதிலை அனுப்புகிறான்.

“என்னுடைய மருமகனான பின்-காசிமிடமிருந்து வந்த கடிதம் கிடைக்கப் பெற்று, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் புரிந்து கொள்ளப்பட்டன. ப்ராஹ்மனாபாதிலிருக்கும் முக்கிய பிரமுகர்கள் தங்களின் வழிபாட்டிடமான, இடிந்துவிட்ட Budh என்னும் கோவிலை செப்பனிட்டு சரிசெய்யவும், அவர்களின் மதச் சடங்குகளைத் தொடரவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் கலிஃபாவிற்கு அடிபணிந்து அவருக்கு வரிகள் செலுத்தவும் சம்மதித்திருக்கிறார்கள். இவர்கள் நமது பாதுகாப்பை ஏற்றுக் கொண்டபடியால் (‘திம்மிக்கள்’), நாம் அவர்களின் வாழ்விலும், அவர்களின் சொத்துக்களின் மீதும் எந்த உரிமைகளும் கொண்டாட இயலாது.”

Bilot_Fort_Temple_-_Closeup_of_Temple_2

சிந்து சமவெளி ஹிந்துக்கள் இப்படியாக இரண்டாம் தரக் குடிமக்களான ‘திம்மி’க்களாக ஆக்கப்பட்டு படுகொலைகளிலிருந்து தப்புகிறார்கள். இப்படியாக, இறை நம்பிக்கை அதிகமில்லாதவர்கள் எனக் கருதப்படுகிற உமாயத் ஆட்சியாளர்கள் தங்களின் கஜானாவை நிரப்புவதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்களேயன்றி, காஃபிர்களை மதம் மாற்றுவதில் அதிக ஆர்வமில்லாதவர்களாக இருந்தார்கள். உதாரணமாக, கலிஃபா அல்-ஹிஜாஜ் இஸ்லாமிற்கு மதம் மாறிய காஃபிர்களை மிகவும் கடுமையாக நடத்த ஆரம்பித்தான்.

ஒரு காஃபிர்களின் கூட்டம் அல்-ஹிஜாஜை அணுகித் தாங்கள் இஸ்லாம் மதத்தில் இணைய விரும்புவதாகக் கூறியபோது, அவன் அதனை மறுத்து, அவர்களை மீண்டும் அவர்களின் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிடுகிறான். “காஃபிர்கள் அனைவரும் உண்மையான மார்க்கமான இஸ்லாமிற்கு மாறினால் அதனால் அரசின் கஜானாவிற்கு ஜிஸியா மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைந்து போய்விடும்” என இதற்குக் காரணமும் சொல்கிறான்.

இறை நம்பிக்கை குறைந்த உமாய்யத்துகளின் இது போன்ற செயல்கள் இஸ்லாமிய, குரானிய சட்டங்களுக்கும், சுன்னாவிற்கும் எதிரானவை. இருப்பினும் இதுபோன்ற சலுகைகள் பிற்கால ஹனாஃபி சட்டங்களில் சேர்க்கப்பட்டன. பிற இஸ்லாமிய சட்டங்கள் இஸ்லாமியராக மதம் மாறாத ஒரு காஃபிருக்கு மரண தண்டனை அளிப்பதனை வலியுறுத்தினாலும், ஹனாஃபி போன்ற சட்டங்கள் இந்திய ஹிந்துக்களின் துன்பத்தின் வலிகளைச் சிறிதளவு குறைத்தன என்றே கூறலாம்.

உமாய்யத்துகளின் பரம்பரை 750-ஆம் வருடத்தில் முற்றிலும் அழிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த தீவிரவாத இஸ்லாமிய ஆட்சியாளர்கள், மதம் மாறாத ஹிந்துக்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்தார்கள். சஃபாரித் ஆட்சியாளரான யாகூப்லாய், 970-ஆம் வருடம் காபூலைக் கைப்பற்றி அதன் இளவரசரைச் சிறைப்பிடித்தார். ஆப்கானிய அரசர் அர்-ருஹாஜ் (Ar-Ruhaaj) கொலை செய்யப்பட்டதுடன், காபூலிலிருந்து அத்தனை கோவில்களையும் இடித்துக் கொள்ளையடித்த பின்னர், அங்கிருந்த அத்தனை குடிமக்களையும் கட்டாய மதமாற்றம் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பொருட்களுடனும், ஹிந்து அரசர்கள் மூவரின் தலைகளுடனும், ஏராளமான ஹிந்துக் கடவுளர்களின் சிலைகளுடனும் யாகூப்லாயிஸ் தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.

சுல்தான் முகமது (கஜினி முகமது) இந்தியாவின் கன்னோஜைக் கைப்பற்றியபோது அவனின் செயலாளராக இருந்த அபு-நாசர் அல்-உத்பா எழுதிய குறிப்புகளின்படி, கன்னொஜ் மக்கள் இஸ்லாமை அங்கீகரிக்கும்படியும் அல்லது தனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இஸ்லாமிய வாள்களுக்கு உணவாகும்படியும் அறைகூவல் விடுத்ததாகக் கூறுகிறார். இஸ்லாமியச் சட்டங்களை எல்லாம் மிகவும் அறிந்தவனாக அறியப்படும் சுல்தான் முகமது, தான் கைப்பற்றும் எந்தவொரு நகரத்திலும் அங்கிருக்கும் போரிடத் தகுதி வாய்ந்த அத்தனை ஆண்களையும் கொல்வதுடன், பெண்கள், குழந்தைகளை அடிமைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதற்குத் தப்பிப் பிழைத்தவர்கள் வாள்முனையில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்ட அப்பகுதியின் இளவரசனை அரியணையில் அமர்த்தி, அவனை இஸ்லாமியச் சட்டத்தின் அடிப்படையில் ஆள்வதற்கு வலியுறுத்துவான். சிலை வழிபாட்டைத் தடை செய்வதுடன், அந்நாட்டில் இஸ்லாம் மேலும் பரவ வழி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அங்கிருந்து தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்வான்.

அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்ட நவாஸ்-ஷா என்பவன், சுல்தான் முகமது தனது நாட்டிற்குத் திரும்பியதும் மீண்டும் தனது தாய் மதத்தினை பின்பற்றத் துவங்குகிறான். இது குறித்து அல்-உத்பி, “ஷைத்தான் நவாஸ்-ஷாவின் மனதில் குடிகொண்டு, அவன் மீண்டும் உருவ வழிபாட்டைத் தனது மக்கள் செய்து கொள்ள அனுமதித்தான். இதனைக் கேள்விப்பட்ட சுல்தான் முகமதின் வாள், காற்றை விடவும் வேகம் கொண்டு, இஸ்லாமிய எதிரிகளின் ரத்தத்தினால் தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டது” என்கிறார்.

சுல்தான் முகமது கஜினி, தான் கைப்பற்றிய நாட்டவர்களை மதம் மாற்றியதுடன் மட்டும் நில்லாமல், அவர்கள் மீண்டும் தங்களின் தாய் மதம் திரும்பி விடாமலிருக்கச் செய்ய வேண்டிய அத்தனை முயற்சிகளையும் செய்தான் என்பதுவே இதன் பொருளாகும்.

மதம் மாற்றுவதின் இன்னொரு முறையான அடிமைப்படுத்துதல் குறித்து இனிச் சிறிது காணலாம்.

mbqதனது முதலாவது வெற்றிகரமான படையெடுப்பின் காரணமாக முகமது-பின்-காசிம் ஏராளமான ஹிந்து ஆண்களை ப்ராஹ்மனாபாதிலும், டிபாலிலும், மூல்தானிலும் கொன்று குவித்தான் என்பதனை ஏற்கனவே அறிந்தோம். போரிடும் வயதுடைய ஹிந்து ஆண்களை இஸ்லாமியப்படையினர் கண் மூடித்தனமாகக் கொன்று குவித்தார்கள். இதன் காரணமாக திருமண வயதுடைய பல வயது வந்த ஹிந்து ஆண்கள் உயிர் தப்புவதற்காகத் தங்களின் பெண்களையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுத் தப்பியோடினார்கள். நிராதரவாக விடப்பட்ட அப்பெண்களும், குழந்தைகளும் பின்னர் இஸ்லாமியர்களின் அடிமைகளாகக்பட்டார்கள்.

பின்-காசிமின் வெற்றிகளை விளக்கும் ‘சச் நாமா’, ராவார் என்ற இடத்தில் மட்டும் அறுபதினாயிரம் அடிமைகள் பிடிக்கப்பட்டதாகச் சொல்கிறது. சிந்து சமவெளித் தாக்குதலின் இறுதியில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பெண்களும், குழந்தைகளும் இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டதாக சச் நாமா கூறுகிறது.

எத்தனை ஆயிரம் பெண்களும், குழந்தைகளும் இவ்வாறு பிடிக்கப்பட்டார்கள் என்பதற்கான துல்லியமான கணக்குகள் எவற்றையும் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் முன் வைக்கவில்லை. இருப்பினும், பின்-காசிமின் செஹ்வான், தாலியா, மூல்தான் மற்றும் ப்ராஹ்மனாபாதில் ஏராளமான எண்ணிக்கையில் அடிமைகள் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்களின் பொதுவான கருத்து.

குரானின் கட்டளைப்படி, பின்-காசிம் தான் பிடித்த அடிமைகளில் ஐந்தில் ஒரு பகுதியினரை டமாஸ்கசிலிருந்த அன்றைய கலிஃபாவிற்கும், மிகுதியானவர்களைத் தனது படையினருடனும் பகிர்ந்து கொண்டான். இந்த அடிமைப் பெண்களும், குழந்தைகளும் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். முக்கியமாக, இஸ்லாமியர்களாக வளர்க்கப்பட்ட இந்தக் குழந்தைகள், வயது வந்ததும் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டு, ஹிந்துக்களுக்கு எதிரான போர்களில் உபயோகப்படுத்தப்பட்டார்கள்.

அதாவது, பிடிபட்ட ஒரு பத்தாண்டுகளில் அல்லது மிக மிகக் குறுகிய காலத்திலேயே, முன்னாள் ஹிந்துக் குழந்தைகள் இஸ்லாமியப் போராளிகளாக மாறித் தங்களின் சொந்த மதத்தினரையே அழிக்க ஆரம்பித்தார்கள். இதுவே தொடர்கதையாக மாறி, 1947-ஆம் வருடம் இந்திய-பாகிஸ்தானியப் பிரிவினையின் போது ஏறக்குறைய ஒரு இலட்சம் ஹிந்து-சீக்கியப் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணமுடிக்கத் தூக்கிச் செல்லப்பட்டது வரை நடந்தது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.

போர்களில் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், குரானில் அல்லா இட்ட கட்டளையின்படி, பாலியல் அடிமைகளாக்கப்பட்டு (Sex Slaves) முஸ்லிம் ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டார்கள். இதன் விளைவாக இஸ்லாமிய மக்கள் தொகையானது இந்தியாவில் பெருக ஆரம்பித்தது. இவ்வாறு குழந்தை பெறும் வயதுடைய ஹிந்துப் பெண்கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட காரணத்தால், ஹிந்து ஆண்களுக்குத் தேவையான பெண்கள் கிடைக்காமல் போவது நிகழ்ந்தது. இதன் அடிப்படையால் இஸ்லாமியர்கள் தாக்குதல் கொடுத்து வெல்லும் நாடுகளிலுள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை சடாரென்று சரிவடைந்தது.

முகமது-பின்-காசிமுடன் இந்தியாவிற்குள் நுழைந்த அராபிய இஸ்லாமியர்கள் தங்களின் வெற்றிகளின் காரணமாக ஏராளமான ஹிந்துப் பெண்களுடன் உறவு கொண்டு பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளினார்கள். ஏன் பேரரசர் அக்பரே அவரது ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அழகான பெண்களைத் தனக்கென வைத்திருந்தார். மொராக்கோவின் சுல்தான் இஸ்மாயில் (1672-1727) தனது 4000 மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள் மூலமக 1200 குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக உலகில் பிற மதத்தினரின் எண்ணிக்கையை விடவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் பெருகியது. பெருகி வருகிறது.

(தொடரும்)

9 Replies to “வன்முறையே வரலாறாய்… – 2”

 1. நன்றி நண்பரே. வரலாற்றில் நன்கு தோண்டி வாசகர்களுக்கு அளியுங்கள். படித்து இந்துக்கள் தங்களது எதிரகால வாழ்க்கை திட்டத்தை முடிவு செய்ய வேண்டும்.

 2. நாடு முழுவதும் மது கடைகள். குடிப்பது பெருவாரியான ஹிந்துக்கள். மற்ற மதத்தினர் முக்கியமாக முஸ்லிம்கள் குறைவு. இந்நிலையில் மது போதையிலுள்ள ஹிண்டுக்களிளிடும் பழைய வரலாற்று பெருமைகள் தேவைஇல்லை. முதலில் மதுவிடமிருந்து விடுதலை தேவை

 3. நாம் தான் 80% இருக்கிறோமே என்று இந்துக்கள் கவலையின்றி உள்ளனர். அந்த 80% ல் சீக்கியர்கள் பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் (இந்து மத) நாத்திகர்கள் அனைவரும் அடக்கம். அதுமட்டுமல்ல. இயேசு தம்மை ரட்சிப்பார் என்று மதம் மாறிய பின்னும் தனது நிலை மாறாது போகவே அரசு சலுகை வேண்டி பெயரை மட்டும் இந்து பெயராக வைத்துக்கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துகொண்டு ஞாயிறு தவறாமல் சர்ச் செல்லும் இரண்டாங்கெட்டான்களும் இதில் அடக்கம்

  தனது தந்தை ஷாஜஹான் தனது சகோதரர்கள் மற்றும் மகன் ஆகியோரை கொன்ற ஒவ்ரங்கஷிப்புக்கு தனது பரம வைரியாக நினைக்கும் இந்துக்களை கொல்வது பெரிய விஷயமா? சிவாஜியின் மகன் சாம்பாஜியை 3 வாரங்கள் சித்திரவதை செய்து பின் 11.3.1689 அன்று துண்டு துண்டாக அந்த மாபாதகன் வெட்டி கொன்றான்.

  1697 ல் ஒவ்ரங்கஷீப் சொத்து 38,624,680 டாலர் ஆகும். இவ்வளவு சொத்துக்கு காரணம் இந்துக்கள் மீது விதித்த ஜசியா வரி மற்றும் pilgirimage tax ஆகும். அந்த காலத்தில் இந்துக்கள் மீது யாத்திரை வரி முஸ்லிம்கள் விதித்தனர். இப்போதோ (majority ) இந்துக்கள் செலுத்தும் வரியில் (மைனாரிட்டி) முஸ்லிம்கள் மெக்கா யாத்திரை செல்ல ஹஜ் மானியம் தருகிறது மதசார்பற்ற அரசு. எதுவானாலும் அபாக்கியவாதிகள் இந்துக்கள்தான்.

  ஜின்னாவின் தாத்தா ஒரு இந்து (Poonja Gokuldas Meghji ) ஜின்னாவின் தந்தை Mithibai என்ற இந்து பெண்ணை மணந்து 7 குழந்தைகளை பெற்றார். அதில் மூத்ததுதான் ஜின்னா.40 வயது கொண்ட ஜின்னா தனது நண்பர் Sir Dinshaw petit (பார்சி) என்பவறின்16 வயது மகளை (Ratan bai ) நண்பரின் எதிர்ப்பை மீறி 19.6.18 அன்று மணந்தான். ஆனால் அவளது வாழ்க்கை இனிக்கவில்லை. 10 ஆண்டுகள் கழித்து அவள் தற்கொலை செய்துகொண்டாள் “”ஜின்””னா “”wine “” மற்றும் வறுத்த பன்றிக் கறி ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார். பாம்பே assembly க்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது oath taking ceremony க்காக மட்டும் குரானை ஒரே ஒரு முறை கையால் தொட்டார். ஒருபோதும் namaz செய்ததில்லை மேலும் ரம்ஜான் நோன்பும் இருந்ததில்லை.

  நாடு துண்டாடப்பட்டபோது இந்தியா secular நாடானது. ஆனால் பாகிஸ்தான் Islamic state ஆனது இந்துக்கள் மட்டும்தான் இளிச்சவாயர்கள்.

 4. மோடி பிரதமரானால், ஓபாமா மோடியின் காலடியில் விழுவார் என்ற அளவுக்கு பேசுகிறார்கள். மோடி ஒரு சர்வரோக நிவாரணி. இந்தியாவை பீடித்திருக்கும் அத்தனை பிணிகளுக்கும் மோடி ஒருவர்தான் தீர்வு என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். இது உண்மையா ? மோடி இந்தியாவின் சர்வரோக நிவாரணியா ?

 5. நண்பர்களே .வன்முறை மூலம் வளர்ந்த முஸ்லிம் மதவாதத்தை விட இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் christ மதமாற்றம் மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்து அதை தடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.முஸ்லிம்கள் என்றும் பெரும்பான்மை ஆக முடியாது ஆனால் கிருத்துவர்கள் இன்னும் 100 ஆண்டுகளில் பெரும்பான்மை ஆகி விடுவார்கள்

 6. நல்ல கட்டுரை. இதனை ரெண்டு பாகமாக வெளியிட்டிருக்கலாம். முழுதாய்ப்படிக்க மூச்சு முட்டுகிறது. கொஞ்சம் படிப்பவர்களையும் மனதில் கொண்டால் நன்றாக இருக்கும்.

 7. இந்த மதவெறி கும்பலுக்கு , இந்திய அரசியல்வாதிகள் ஓட்டுக்காக , ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் ! மோடி வந்தால் தீர்வு ஏற்படும் . ஹிந்து மத பற்று இருப்பவரே ஆட்சிக்கு வரவேண்டும் . மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் . இந்தியாவை இந்து நாடு என அறிவிக்க வேண்டும் . மோடியால் இது முடியும் .

 8. இத்தகைய அதிமுக்கிய கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை புத்தகங்களாக்கி, நமது ஆலய விழாக்களிலும், இந்து இயக்க நிகழ்ச்சிகளிலும் விற்பனைக்கு தருதல் நலம் பயக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *