விஷவிதை தூவும் காங்கிரஸ்

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன.

கொலைவெறி பேசுக்காக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்
கொலைவெறி பேச்சுக்காக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்

நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப் பேச்சில் இருந்தே புரிந்துகொள்ளலாம். அரதப் பழசான  மகாத்மா காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் தேர்தல் பிரச்னையாக்க முயன்றிருக்கிறார் காங்கிரஸின் இளவரசர்.

காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது நீதிமன்றத்திலேயே உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், கபூர் கமிஷன் உள்ளிட்ட பல விசாரணை ஆணையங்களில் ஆர்.எஸ்.எஸ். நிரபராதி என்று தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும், இதனை 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுப்பி வருகிறது காங்கிரஸ். தாங்களே நாட்டின் அறிவுஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் முற்போக்குகளும் இதே அவதூறு பிரசாரத்தை பன்னெடுங்காலமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தான் நீதிமன்றத் தீர்ப்புகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறுபவர்கள்!

லோக்சபா தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை இப்போதே கண்டுவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இப்போதே ஜன்னி கண்டுவிட்டது. அதன் விளைவாக ராகுல் மீண்டும் காந்தி கொலைவழக்கு விவகாரத்தை எழுப்ப முயன்றிருக்கிறார். ஆனால், இதுவரை நடைபெற்றது போலல்லாமல், இம்முறை அதற்கு நல்ல குட்டுப் பட்டிருக்கிறார்.

எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். தன் மீதான அவதூறுப் பிரசாரங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இம்முறை, ராகுலின் அபவாதத்தைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தவிர, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, ராகுலிடம் எந்தச் சத்தத்தையும் காணோம். அநேகமாக, தேர்தல் முடிவத்ற்குல் ராகுல் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கலாம். வழக்கமாக இத்தகைய உளறல்களை அதற்கென்றே தயாரிக்கப்பட்டவரான திக்விஜய் சிங் கொட்டுவது தான் வழக்கம். இப்போது ராகுல், சோனியா வரை உளறல் வியாதி பரவிவிட்டது.

தலையே இப்படி இருந்தால், அதன் வால்கள் எப்படி இருக்கும்? உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரத்தில் பேசிய முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மோடியை கொல்லப் போவதாகக் கொக்கரித்ததை, ராகுலின் தொடர்ச்சியாகவே காண வேண்டும். உ.பி.யின் சஹரான்பூரில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மசூத் தான் இவ்வாறு முட்டாள்தனமாகவும் வெறித்தனமாகவும் உளறியவர். உளறல் திலகம் திக்விஜய் சிங்கே இம்ரானைக் கண்டித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

குற்றப் பின்னணி:

இந்த இம்ரான் மசூத் காங்கிரஸ் வேட்பாளரானது எப்படி என்று படித்தாலே தலை சுற்றும்! நடப்புத் தேர்தலில் கொலை மிரட்டலுக்காக கைது செய்யப்பட்டுள்ள முதல் வேட்பாளரின் பின்னணி குறித்து அறியாமல் இருக்கலாமா? இதோ அவரது சிறப்புக் குறிப்பு…

இந்த இம்ரான் மசூத் மீது உ.பி.யில் மட்டுமே பல குற்றவியல் வழக்குகள் உள்ளன.  காங்கிரஸ் கட்சிக்குத் தோதான வேட்பாளர் தான்.

இவரது மாமா ரஷீத் மசூத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஊழல் குற்றத்திற்காக  சிறைத்தண்டனை பெற்றதற்காக, முதன்முதலாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ரஷீத் மசூத். திரிபுரா மருத்துவக் கல்லூரியில் தகுதியில்லாத மாணவர்களை பணம் பெற்றுக்கொண்டு சேர்த்துவிட்ட ஊழல் வெளிப்பட்டு, அதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின் இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2013-ல் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ரஷீத். அதையடுத்து காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ரஷீத் மசூத்தின் பதவி பறிக்கப்பட்டது. அவரது சகோதரர் மகன் தான், மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இம்ரான் மசூத்.

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முதல் எம்.பி. ரஷீத் மசூத்.
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முதல் எம்.பி. ரஷீத் மசூத்.

லோக்தளம், ஜனதா, ஜனதாதளம் கட்சிகளில் அரசியல் செய்து அலுத்த ரஷீத் மசூத், பிற்பாடு முலாயமின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் லோக்சபா உறுப்பினரானார். அங்கிருந்து 2011-ல் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற சட்டசபைத் தேர்தலின்போது தாவிய ரஷீத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளித்து அழகு பார்த்தது காங்கிரஸ். தனது சித்தப்பாவுடன் அப்போது காங்கிரஸில் அடைக்கலம் புகுந்தவர் தான் இம்ரான் மசூத்.

ஆனால், தனக்கு காங்கிரஸில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, மீண்டும் சமாஜ்வாதிக்குத் தாவினார் இம்ரான். அங்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் பெஹித் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். இன்னிலையில், ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த ரஷீத்தும் மீண்டும் சமாஜ்வாதிக்கு இடம் பெயர்ந்தார். எந்தக் கேள்வியும் இன்றி அவரைச் சேர்த்துக்கொண்டு மதச்சார்பின்மையைக் காத்தார் முலாயம்.

முதலில் சஹரான்பூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக இம்ரான் மசூத் தான் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், ரஷீத் மசூத்தின் நிர்பந்தத்தால், அவரை மாற்றிவிட்டு, அவரது மகன் ஷாஜன் மசூத்தை வேட்பாளராக்கினார் முலாயம்.  சகோதரர் மகனைவிட சொந்த மகன் தானே ஜனநாயகத்திற்கு முக்கியம்? சிறைத் தண்டனை பெற்ற ரஷீத் மசூத் தேர்தலில் சஹரான்பூரில் போட்டியிட முடியாவிட்டால், அவரது சொந்த மகன் அங்கு போட்டியிடுவது தானே மதச்சார்பின்மை நியாயம்?

திடீரென வேட்பாளர் மாற்றப்பட்டவுடன் கொந்தளித்த இம்ரான் மசூத், மீண்டும் காங்கிரஸ் முகாமில் சேர்ந்தார். எந்தக் கேள்வியும் இன்றி மீண்டும் அவரை சேர்த்துக் கொண்டார் ராகுல். அவரையே சஹரான்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவித்தார். அதாவது, ஒரே தொகுதியில் ரஷீத்தின் மகனும் சகோதரர் மகனும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகிறார்கள். எவர் வென்றாலும் குடும்பத்தில் ஒருவர் எம்.பி!

ஆனால், காலம் ரஷீத் மசூத்தை விட புத்திசாலித்தனமானது. இப்போது வீசும் மோடி அலை, சஹரான்பூர் இஸ்லாமிய வாக்குவங்கியை அடித்துக்கொண்டு போய்விடும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஏற்பட்ட பதற்றமே, இம்ரானின் கொலை மிரட்டலில் வெளிப்பட்டிருக்கிறது. தவிர இஸ்லாமிய வாக்குகளை அள்ளுவதில் ஏற்பட்ட போட்டியும் அவரை ஆத்திரக்காரராக மாற்றிவிட்டது.

மார்ச் 28-ல் தனது தொகுதியில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய இம்ரான் மசூத், தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவர் பேசியதன் சாராம்சம் இது:

“உத்தரப்பிரதேசத்தை குஜராத் போலக் கருதுகிறார் மோடி. குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரப்பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டு விடுவேன். நான் தெருவிலிருந்து வந்தவன். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்…” என்று பேசினார்.

இந்தத் திடுக்கிடும் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது உள்ளூர் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய குறுந்தகடு சஹரான்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தியா திவாரிக்கு கிடைத்தது. அவர் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, உள்ளூர் போலீசார் இம்ரான் மசூத் மீது வழக்குப்பதிவு செய்து, மார்ச் 29, அதிகாலையில் கைது செய்தனர்.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின்கீழ், இரு தரப்பினரிடையே பகைமை உணர்வைத் தூண்டுதல், வன்முறை, மத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,  மத நம்பிக்கைக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துதல்,  குற்றம் செய்யும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ், இம்ரான் மசூத் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டமும் மசூத் மீது பாய்ந்துள்ளது.

பல்டி மன்னர்கள்:

இதனிடையே தனது பேச்சுக்கு இம்ரான் மசூத் மன்னிப்பு கேட்டிருந்தார். பிரசாரச் சூட்டில் அப்படிப் பேசிவிட்டேன். தேர்தல் காலத்தில் இவ்வாறு நான் (மற்ற சமயத்தில் பேசலாமா?) பேசியிருக்கக் கூடாது. நான் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்தார்.ஆனால், கைதான உடனே தியாகிப் பட்டம் பெற வேண்டி, “நான் தவறுதலாக எதுவும் பேசவில்லை. இது எல்லாமே பாஜக-வின் சதி. இதற்காக மோடியிடம் நான் வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை” என்று இம்ரான் மசூத் கூறி இருக்கிறார்.

இவர்களும் உளறல் திலகங்களே!
இவர்களும் உளறல் திலகங்களே!

இம்ரான் மசூத் கைதாகியுள்ளதால், அங்கு மார்ச் 29-ல் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த ராகுல் தனது பிரசாரத்தை ரத்து செய்வதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சஹரான்பூர் வந்த ராகுல், இம்ரான் மனைவியுடன் அதே மேடையில்  ‘கர்ஜனை’ செய்தார்.  வெறுப்பூட்டும் பேச்சுக்களை காங்கிரஸ் விரும்புவதில்லை என்று பெரும்போக்காகக் கூறிய ராகுல்,  இம்ரான் பேச்சுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால்,  சஹரான்பூர் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்தை ராகுல் உடனடியாக மாற்றியிருக்க வேண்டுமே?

இப்போது காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் உ.பி. மக்களுக்கு புலப்படத் துவங்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 40-க்கு மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் 40 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர். அவர்களது வாக்குகளை கபளீகரம் செய்ய அக்கட்சி எந்த அளவிற்கு தரம் தாழவும் தயாராக உள்ளது. ஆனால், வாக்காளர்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸின் இப்போக்கு இந்து மக்களை பாஜக-வுக்கு சாதகமாக ஓரணியில் தானாகவே திரட்டிவிடும் என்பதை முட்டாள் இளவரசர் உணராமல் இருக்கிறார்.

கடநத 6 மாதங்களாகவே, காங்கிரஸின் துஷ்பிரசாரம் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறுகளை ராகுலின் மதச்சார்பினமி குருவான திக்கிராஜா பரப்பிக்கொண்டே இருக்கிறார். மோடியின் பால்ய மணத்தை பற்றியும் கூட விவாதிக்கப்பட்டது. இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக பிரச்னை எழுப்பியும் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. மோடியை டீக்கடைக்காரர் என்று ஏளனம் பேசியது. இவை அனைத்துமே காங்கிரஸுக்கு எதிர்மறையான பலன்களையே தந்தன.

சென்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது மோடியை  ‘மரண வியாபாரி’ என்று விமர்சித்தார் சோனியா. கர்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய சோனியா, தேர்தலுக்காக விஷவிதைகளை பாஜக தூவுவதாகவும் குற்றம் சாட்டினார். இப்போது மரண வியாபாரி யார் என்பதும், விஷவிதை தூவும் கட்சி எது என்பதும் இம்ரான் மசூத் மூலமாக அம்பலமாகிவிட்டது.

இந்தத் தேர்தல் களம், மோடி ஆதரவு- மோடிக்கு எதிர்ப்பு என்று இருகூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒருபுறம் மோடியின் அபார சாதனைகள் பிரசாரம் செய்யாமலே மக்களை ஈர்க்கின்றன. மறுபுறம், மோடியின் பிராபல்யத்தால் நடுங்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட மதச்சார்பின்மை வியாதி கட்சிகள் மோடியின் புகழைக் குலைக்க அவதூறுப் பிரசாரங்களை அள்ளித் தெளிக்கின்றன. 2002 குஜராத் கலவரத்தை இஸ்லாமியர்கள் மறந்தாலும் இவர்கள் மறக்க விட மட்டார்கள்.

இத்தனைக்கும் குஜராத் கலவரங்களில் அம்மாநில முதலவராக இருந்த நரேந்திர மோடிக்கு எந்தப் பங்கும் கிடையாது எனப் பல ஆணையங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்திவிட்டன. குஜராத் கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 250-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டதையோ (கலவரத்தை மோடி வேடிக்கை பார்த்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா?), சபர்மதி ரயில் எரிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட 59 கரசேவகர்களைப் பற்றியோ இக்கட்சிகளுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.

இத்தனையையும் செய்துவிட்டு,  “வெவ்வேறு மதத்தினரிடையே மோதலை ஊக்குவிக்கும் வெறுப்பு அரசியலை பாஜக கட்டவிழ்த்துவிடுகிறது” என்று பேச ராகுலுக்கு எத்துணை துணிவு வேண்டும்? மண்டபத்தில் யார் எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே மேடையில் படிக்கலாமா ராகுல்?

கடந்த சனிக்கிழமை (மார்ச் 29) கூட, பிரதமர் மன்னுமோகனார் அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “பிளவுபடுத்தும் அரசியல் நடத்தும் பாஜக-வால் ஒருபோதும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது” என்று கூறி இருக்கிறார். என்ன நெஞ்சழுத்தம்! எல்லாப் பிளவு அரசியலையும் செய்துவிட்டு, அதையே எதிரணி மீது தூக்கிப் போடுவது  எவ்வளவு  மோசமான தந்திரம்? இந்த மன்னுமோகனைத் தான் எந்த அரசியலும் தெரியாத அப்பாவி என்று செய்தி வாசிக்கின்றன ஊடகங்கள்.

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே, தேர்தலில் வெல்லவும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் நடத்தும் இத்தகைய நாடகங்கள் தான், சமுதாயத்தில் ஆழமான பிளவை உருவாக்குகின்றன. இதை இஸ்லாமியர்கள் உணரத் துவங்கிவிட்டனர் என்பதையே, பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர்,  மஹாராஷ்டிராவின் அனைத்திந்திய ஹஜ் கமிட்டி தலைவர் சலீம் ஜக்காரியா உள்ளிட்டவர்கள் பாஜக-வில் சேர்ந்துள்ளது காட்டுகிறது.

ஆனால், படிப்பறிவற்ற, வறுமை நிலையில் தவிக்கும் முஸ்லிம் மக்களை செக்யூலர் அரசியல்வாதிகளின் பொய்யான பிரசாரம் திசைதிருப்பிவிடும் வாய்ப்பு உள்ளது. அவர்களை நம்பித்தான் இப்போது செக்யூலர் படை தங்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறது.

ஏற்கனவே, மோடியைக் கொல்லத் திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நால்வர் (மார்ச் 23) ராஜஸ்தானிலும்,  மேலும் இருவர் உ.பி.யின் கோரக்பூரிலும்  (மார்ச் 27) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த விழைவோருக்கு தூண்டுகோலாக இருக்கின்றன, செக்யூலர் பித்தலாட்டக்காரர்களின் மாய்மாலங்கள். சேலத்தில் மசூதி ஒன்றின் முன்பு வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் சுதீஷை, திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் திட்டமிட்டு தகராறு செய்து துரத்தியுள்ளது (மார்ச் 28), இதற்குத் தகுந்த உதாரணம்.

இந்த நேரத்தில் மோடி ஆதரவாளர்களும், பாஜக கூட்டணியினரும் நிதானம் காப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் இன்னதென்று தெரிந்தே தான் தவறு செய்கிறார்கள். தோல்விமுனையில் இருக்கும் அவர்களுக்கு, இழப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, வெற்றிச் சிகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.

இப்போது அவர்கள் தங்கள் பொய்முகங்களை தாங்களாகவே தோலுரிக்கிறார்கள். அதை மட்டும் மக்களிடம் பிரசாரம் செய்தாலே-நாட்டு மக்களை கூறுபோட்டு அரசியல் நடத்த முயலும் எத்தர்களை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டினாலே- போதும். இனிமேலும் அவதூறுப் பிரசாரங்களினாலும், மிரட்டல் அரசியலாலும் இந்திய மக்களை முட்டாளாக்க முடியாது. 16-வது லோக்சபா தேர்தல் முடிவு அதை நிச்சயம் காட்டும்.

***

சவடால் மன்னர் அரவிந்த் கேஜ்ரிவால்

ஒரு திரைப்படத்தில் (நகரம்)  “தைரியம் இருந்தா எங்க ஏரியா பக்கம் வந்து பாரு’’ என்று கதாநாயகன் சுந்தர்.சி-யிடம் சவடால் விடுவார்  ‘வைகைப்புயல்’ வடிவேலு. அதுபோலத் தான் இருக்கிறது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்  ‘தில்லிப்புயல்’ அரவிந்த் கேஜ்ரிவாலின் சவால்களும்.

குஜராத்திலும் உ.பி.யிலும் இருவேறு தொகுதிகளில் மோடி போட்டியிடுவதை விமர்சித்துள்ள கேஜ்ரிவால், தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இரு தொகுதிகளில் மோடி போட்டியிடுகிறார். அவர் வாரணாசியில் மட்டும் போட்டியிடத் தயாரா? என்று வம்புக்கு இழுத்திருக்கிறார். மோடியின் வெற்றி இரு தொகுதிகளிலும் உறுதியான நிலையில், அவர் அவ்வாறு போட்டியிடுவதே ஒரு தேர்தல் உத்தி என்பதை உணராதவர் அல்ல கேஜ்ரிவால். ஆனாலும், வாய் நமநமக்கிறதே?

எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

கிராமப்புறங்களில் சில போக்கிரி சண்டியர்கள் இருப்பார்கள். அந்த ஊரில் அமைதியாக இருக்கும் பயில்வானிடம் சென்று வம்புக்கிழுத்து உதையும் அடியும் வாங்குவார்கள். பிறகு அந்த பயில்வானிடமே சண்டை போட்டவன் நான் என்று கூறிக்கொண்டு ஊரில் திரிவார்கள். அப்படித்தான் இருக்கிறது அரவிந்தின் பேச்சு.

மோடியை எதிர்த்துப் போட்டியிட்டால் கிடைக்கப்போகும் ஊடக வெளிச்சத்திற்காகவே வாரணாசியில் போட்டியிடும் கேஜ்ரிவால், நாடு முழுவதும் 200-க்கு மேற்பட்ட தொகுதிகளுக்கு ஆஆக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தி தில்லி சட்டசபை தேர்தலில் செய்தது போல பாஜக-வின் வெற்றிப்பாதையில் முட்டுக்கட்டை போட முயல்கிறார் அவர்.

அதேசமயம், வாரணாசி மக்கள் முட்டாள்கள் அல்ல; கேஜ்ரிவால் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து அவரது பகல் கனவை தவிடுபொடியாக்கி வருகிறார்கள். பல இடங்களில் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது; செருப்பு வீச்சுகளும், கருப்புமை பூசும் சம்பவங்களும் தொடர்கின்றன. இத்தனைக்கும் பிறகும் கேஜ்ரிவால் சாமர்த்தியமாக அரசியல் செய்கிறார்.

மற்றொரு  திரைப்படத்தில் (வின்னர்) சவடால் விடுத்து பயில்வான்களிடம் அடி வாங்கிய வடிவேலுவைப் பார்த்து, “அடித்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம் என்றால், அடி வாங்கியவனுக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கும்?’’ என்று அப்பாவித்தனமாக இருவர் கூறுவார்கள். அப்போது வடிவேலு கேட்பார், “ஏம்ப்பா இன்னமுமா இந்த ஊர் நம்மை நம்புது?” என்று.  “அது அவர்களின் விதி” என்பார் கைப்புள்ளையின் எடுபிடிகள். அரவிந்த் கேஜ்ரிவாலை தில்லிக் கூத்துகளுக்கும் பிறகும் நாடு நம்புகிறதா? நாட்டின் விதி மே 16-ல் தெரிந்துவிடும்.

15 Replies to “விஷவிதை தூவும் காங்கிரஸ்”

  1. அன்பின் சேக்கிழான், அருமையான வ்யாசம்.

    ஜெனாப் மசூத் அவர்களின் கட்சித்தாவல் பின்னணி அன்னாரது மற்றும் அன்னாரது குடும்பத்தினர் பலரின் குற்றப்பின்னணியைப் பிட்டுப்பிட்டு வைத்துள்ளீர்கள்.

    \\ வழக்கமாக இத்தகைய உளறல்களை அதற்கென்றே தயாரிக்கப்பட்டவரான திக்விஜய் சிங் கொட்டுவது தான் வழக்கம். இப்போது ராகுல், சோனியா வரை உளறல் வியாதி பரவிவிட்டது. \\

    ஏக் மியான் மே ஏக் ஹி தல்வார் என்று ஒரு வசனம் உண்டு. ஒரு உறையில் ஒரு வாள் மட்டிலும் இருக்க முடியும். அரசியல் அரங்கு என்ற மைதானத்தில் ஈடு இணையற்ற கோமாளி என்றும் இணையற்ற உளறு வாயர் என்றும் ஏகபோக உரிமை படைத்தவர் திக்கிராஜா. அதற்கு போட்டி வந்தால் பொறுக்க இயலும்?. பொறுத்தது போதும் பொங்கி எழுவாய் இல்லாவிட்டால் போண்டியாவாய் என்று பொங்கியுள்ளார் திக்கிராஜா அவ்வளவே.

    ஒரு சில தகவல் பிழைகள். தகவல் பிழை என்று மட்டிலும் திருத்துகிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

    \\ காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ரஷீத் மசூத்தின் பதவி பறிக்கப்பட்டது. அவரது சகோதரர் மகன் தான், மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இம்ரான் மசூத். \\ காங்கிரஸ் கட்சிக்கு சென்ற சட்டசபைத் தேர்தலின்போது தாவிய ரஷீத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளித்து அழகு பார்த்தது காங்கிரஸ். தனது மாமாவுடன் அப்போது காங்கிரஸில் அடைக்கலம் புகுந்தவர் தான் இம்ரான் மசூத்.\\

    ஜெனாப் ரஷீத் மசூத் – ஜெனாப் இம்ரானுடைய சாசா / தாவு. சித்தப்பா / பெரியப்பா. மாமாவாக இருக்க முடியாது அல்லவா? பொதுவழக்கில் பண்டித நேருவை உத்தரபாரதத்தில் சாசா நேரு என்று குறிப்பிடுவர். தமிழகத்தில் நேரு மாமா என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் நினைவுக்கு வருகிறது.

    \\ குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர் \\

    ம்ஹும். உத்தரப்ரதேசத்தில் 24 சதமான முஸல்மான் உள்ளனர் என்று சொன்னதாக நினைவு.

  2. ஸ்ரீமான் அரவிந்த கேஜ்ரிவால் — சுருக்கமாக ஸ்ரீமான் வால் — அவர்களின் ஜகதலப்ரதாபங்களை ஏதோ தொட்டுக்கொள்ள ஊறுகாய் போலக் கொடுத்துள்ளீர்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று வசனம் உண்டு. கொதிக்கும் எண்ணெயில் குதிக்கின்ற கடுகாய் ஹிந்துஸ்தானம் முழுதும் குதித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமான் வால் அவர்களை இப்படி ஊறுகாயாக நீங்கள் ஏதோ ஒரு வ்யாசத்தின் பகுதியாக சுருக்கி விட்டமையை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

    ஸ்ரீமான் வால் அவர்களின் மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதன்றோ

    குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றி விட்டு கொடிக்கு சலாம் கூட போடாத கீர்த்தியுடைய மாவோவாத அனுதாபி.

    எல்லா கட்சியினரும் இவரது லோக்பால் மசோதாவை ஆதரிக்க விழைந்தாலும் தில்லி அரசாங்க முறைப்படி கவர்னருக்கு அதை அனுப்பாமல் ஏதோ அனைத்து கட்சியினரும் லோக்பால் மசோதாவையே எதிர்ப்பது போல் நாடகமாடி நாட்டின் கௌரவம் மிக்க குடியரசு தின பேரணியைக்கூட தர்ணா செய்து நிறுத்தப்போவதாக தம்கி கொடுத்த கீர்த்தி உடையவர் ஸ்ரீமான் வால்.

    கஷ்மீர் பகுதியை பாகிஸ்தானைச் சேர்ந்ததாக தனது இணைய தள தேச வரைபடத்தில் காண்பித்து தனது தேச பக்தியை பறைசாற்றிய பெருமையை உடையவர் அன்றோ ஸ்ரீமான் வால்.

    அடுத்த கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது அபவாதம் சொன்னாலேயே போதும். அவர்கள் அரசியல் பதவிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று சாதிப்பவர் ஸ்ரீமான் வால். ஆனால் ஸ்ரீ சோம்நாத் பாரதி மீது அடுக்கடுக்காக புகார்கள் எழும்பியும் அவர் பதவியில் நீடிக்க வக்காலத்து வாங்கிய பெருமை உடையவர் ஸ்ரீமான் வால்.

    தேர்தல் விண்ணப்பங்களில் தனது சொந்த தகவல்களை புளுகுமூட்டைகளாகப் பகிர்ந்தவர் ஸ்ரீமான் வால்.

    கங்கையில் நீராடி திருமுகத்தில் சந்தனம் பூசி காசி விச்வநாத ஸ்வாமியை தர்சனம் செய்த பெருந்தகை ஸ்ரீமான் வால். இவரது எத்தனையோ நாடகமாடுதல்களில் இந்த நாடகமும் ஒன்றாக இருப்பதற்கு முழு சாத்யக்கூறுகளும் இருக்கிறது. இது போன்றே முஸல்மான் சஹோதரர்களது ஓட்டுக்களைக் கவரவும் பல நாடகம் போட்டுள்ளார்.

    நாடகமாடுவதற்காகவேனும் சரி — பப்பரப்பா டுபாக்கூர் மதசார்பின்மை வாதி என்று கூத்தாடும் மணி சங்கர ஐயர் போன்ற நாடகமாடிகளை விட மணிசங்கர ஐயர் போன்ற இஸ்லாமிய மத வெறியர்களது செயல்பாடுகளை விட ஸ்ரீமான் வால் என்ற ஸ்ரீ AK – 49 அவர்களது கங்கை நீராடி காசி விச்வநாத ஸ்வாமியைத் தொழுத செயல்பாடு போற்றுதலுக்குறியது. புனித கங்கையும் ஆனந்தவனத்தீசனும் இவரது மனதில் உள்ள மாசுகளைக் களைந்து ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடம் வாங்கிய காசுக்கு கூத்தடிக்காது எந்த தேசத்தின் உப்பைத் தின்னுகிறாரோ அதற்குப் பாடுபட இவருக்கு அருள் புரியட்டும்.

    இவரது திடீர் அரசியல் ப்ரவேசம் தேசத்தின் பொது அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் வரவேற்கத்தகுந்த மாறுதல்களையும் கொணர்ந்துள்ளது. தில்லியில் மின்சாரம் விதரணம் செய்யும் தனியார்களது கணக்குகளை சிஏஜியின் தணிக்கைக்கு தடாலடியாக இவர் உட்படுத்தியது அதில் ஒன்று. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம் இருக்க வேண்டும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மின்சார பில்லை ஏற்றிக்கொண்டிருக்கும் தனியார் மின்சார விதரண கொள்ளைக்கார கும்பலுக்கு இவர் கொடுத்த சாட்டையடி வரவேற்கத் தகுந்ததே. இது வரை தனியார் கொள்ளைக்கார கும்பல் சிஏஜிக்கு தங்கள் கணக்கு வழக்குகளைக் காண்பித்துள்ளதா அல்லது ந்யாயாலயத்தின் படிகள் ஏறி இறங்குகிறதா தெரியவில்லை.

    இவரது சாதக பாதகங்களை முழுமையான ஒரு வ்யாசமாகப் பகிர வேண்டும் என்று விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  3. \\ பல இடங்களில் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது; செருப்பு வீச்சுகளும், கருப்புமை பூசும் சம்பவங்களும் தொடர்கின்றன. \\

    யார் இதைச்செய்திருந்தாலும் மிகவும் கண்டனத்திற்குறிய பித்துக்குளித்தனம்.

    இது போன்ற பித்துக்குளித்தனமான செய்கைகள் கட்சி வேறுபாடின்றி எல்லாக்கட்சிகளிலும் பெருகி வருவது அவலம்.

    இது போன்ற கண்யமற்ற செயல்பாடுகளை எல்லாக் கட்சியினரும் கட்சி வேறுபாடி இன்றி கண்டிக்க வேண்டும். இது போன்ற பித்துக்குளி கார்யங்களில் ஈடுபடும் கட்சிக்காரர்களை அந்தந்தக் கட்சிகள் குறைந்த பக்ஷம் குறிப்பிட்ட காலத்திற்கு கட்சிப்பணியிலிருந்து ஒதுக்க வேண்டும். எல்லாக்கட்சியினரும் இது சம்பந்தமாகப் பொதுவில் பேசி ஒரு நேர்மையான தண்டனை முறைமையை புழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

    மசி வீசுவது. செருப்பு ஜூத்தா வீசுவது. கன்னத்தில் அறைவது. ஸ்ரீமான் ஷரத் பவார் அவர்களை பரபரப்பிற்காகவோ விளம்பரத்திற்காகவோ அதீதமாகப் பாதிக்கப்பட்டதாலோ ஒரு நபர் கன்னத்தில் அறைந்துள்ளார். ஸ்ரீமான் அன்னா ஹஜாரே போன்ற பெரியோர்கள் இந்த செய்கையை கண்டிக்காது கசப்பு மிகப் பேசியது தவறான செயல்பாடு.

    இது போன்ற அவலங்களுக்கு கிட்டத்தட்ட எல்லா கட்சியினரும் இலக்காகியுள்ளனர் என்பதும் நினைவு கூறத்தக்கது.

    அசிங்கமான கண்யமற்ற செய்கைகளை கட்சி வேறுபாடின்றி எல்லா கட்சியினரும் எதிர்க்காவிடில் இன்று ஒருத்தருக்கு நிகழ்வது நாளை வேறொருவருக்குக் கண்டிப்பாக நிகழும் என்பதனை மறவாது நினைவில் கொள்ள வேண்டும்.

  4. Rahul reminds me of Prince VASANTHAN of MANOHARA(Sambanda Mudaliar’s famous drama) Best place for him is a mental asylam, not lok sabah

  5. ///ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே தன் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லுவதில்லை/// உண்மையில் அதுதான் அது செய்த மிகப் பெரிய தவறு.Silence means consent . நீதிமன்றமே நல்ல தீர்ப்பு சொல்லியிர்க்கும்போது அதை மக்களுக்கு தெரியபடுத்தாதது ஏனுங்க? எதற்கு இப்படி “ஊமைக் கோட்டான்”மாதிரி அவர்கள் இருக்கிறார்கள்? புரியாத புதிராக இருக்கிறது.

    2. இந்த ஊழல் பேர்வழி ரஷீத் மசூத் (கொலைவெறி பேச்சுகாரனின் மாமா) டில்லியில் 5 ரூபாய்க்கு வயிறார உணவு கிடைக்கிறது என்று சொன்ன நல்லவன்.

    3. “திக் விஜய”பேசி வரும் உளறல் பேச்சுகளின் மூலமாக இந்த அராஜக காங்கிரஸ் திக்கு தெரியாத இடத்திற்கு தள்ளப்படும். திக் விஜய் ஏறக்குறைய தி க வீரமணி மாதிரி ஒரு லூசு.

    4. ////குஜராத்தில் 4% முஸ்லிம்கள். ஆனால் UP யில் 42% முஸ்லிம்கள் உள்ளனர்//// இன்னும் கொஞ்சம் நாள் போனால் 51% ஆகிவிடுவார்கள் அவர்களுக்குத்தான் குடும்ப கட்டுப்பாடு கிடையாதே!. ஒரு மனைவிக்கு 3 பசங்க எனில் 4 மனைவிகளுக்கு (அல்லா குர்ஆனில் அனுமதித்தபடி) மொத்தம் 1 டஜன் பசங்க உருவாகி விடுகிறார்கள். அப்புறம் UP ஒரு காஷ்மிராகி விடும்.(காஷ்மீரில் முஸ்லிம்கள் 67%) மேலும் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிக மாகிவிட்டால் அவர்கள் அந்த மாநிலத்தை பொறுத்த வரையில் minority கிடையாது. ஆகவே அவர்களுக்கு சலுகைகளை நிறுத்தவேண்டும். “”UP யை மட்டும் பார்க்க கூடாது. இந்தியா பூரா பார்த்தால் முஸ்லிம்கள்தான் MINORITY “” என்று அவர்கள் வாதாடினால் நாம் இந்தியாவை மட்டும் பார்க்க கூடாது. உலகம் பூரா பார்க்க வேண்டும். என்று வாதாட வேண்டும். அப்படி பார்த்தால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் majority இனத்தவர். ஒரு இந்துவுக்கு உலகில் இரண்டு முஸ்லிம்கள் உள்ளனர். இன்னும் சொல்ல போனால் United Nations ன் வரையறைப்படி ஒரு நாட்டின் ஜனத்தொகையில் 10%க்கு குறைவாக இருக்கும் மத அல்லது இனப் பிரிவினரையே MINORITY என்று அழைக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் 13.4% (2011 ன் படி) உள்ளனர்.

    5. முஸ்லிம்கள் அல்லது காங்கிரஸ் எப்படி வேண்டுமானாலும் கொலை வெறியோடு பேசி கொள்ளட்டும். பிஜேபி காரர்கள் (தொண்டர் முதல் தலைவர் வரை) உணர்ச்சி வசப் படாமல் அமைதி காக்க வேண்டும். பிரச்சர்ரங்களில் சாந்தமாக பேசவேண்டும். மத சம்பந்தமான் கருத்துக்களையே பேசக் கூடாது. வளர்ச்சி பற்றி மட்டுமே பேசவேண்டும்.இந்திய மக்கள் அனைவரும் அறிவாளிகள். வேட்பாளர்களின் பேச்சு மூலமே யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை தீர்மானித்து அதை வாக்கு இயந்திரத்தில் reflect செய்வார்கள். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக பிஜேபி யினர் பேச வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நுணல் தன வாயால் கெடும் என்பார்கள் அது போல காங்கிரஸ் கெட்டு அழியட்டும்.

  6. As I have always been advocating TAMIL HINDU need to be extended/expanded to all regions of this country to hasten the much needed awakening. A wellwritten piece telling and tocuhing upon the actual happenings.

  7. முற்றிய குடிகாரர்களுக்கு போதையில் இருந்தால் தெளிவாகவும், போதை தெளிந்தால் உளறுவதும் இயற்கை. காங்கிரஸ்காரர்களுக்கு பதவி, ஆட்சி என்பவை போதை. அதில் இருந்தால் ஊருக்கும் உலகத்துக்கும் பொன்மொழிகளை உதிர்ப்பார்கள். பதவி இல்லையென்றால் நீருக்கு வெளியே போடப்பட்ட மீனைப் போல மூச்சு முட்டும். வாயில் வந்ததைப் பிதற்றுவார்கள். பிதற்றல் மன்னர்கள் அங்கு ஏராளம். அவர்களுக்குத் தலைமை தாங்குபவர் ஸ்ரீமான் ராகுல் காந்தி, சோனியாவின் மகன்.துணைத் தலைவர்கள் ஏராளம். திக்விஜய் சிங், மனீஷ் திவாரி போன்றவர்கள். மத்திய அரசு என்னவோ சோனியாவின் பாட்டன் வீட்டு சொத்து போலவும், அதிலிருந்து மாநிலங்களுக்குக் கொடுத்த நிதி என்னவாயிற்று என்று மேடைக்கு மேடை ராகுல் முழங்குவதைப் பார்த்தா, இவருக்கு ஏதாவது, அரசியல் அல்லது நிதி நிர்வாகம் பற்றி தெரியுமா என்று ஐயப்பாடு வருகிறது. திக்விஜய் சிங் எனும் மேதாவிக்கு பெரிய மனுஷ தோற்றம், சின்ன மனுஷ புத்தி. இவர்களது முகங்களைப் பார்க்காமல் இருந்தாலே அந்த நாள் நல்ல நாள். அந்த நாள் என்று வரும்?

  8. ஏ.கே.49 கொடுத்த காசுக்கு மேலே கூவுறாரய்யா கூவுறாரு. என்ன கூவினாலும் இந்த சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட்டால மோதி அலையை எதிர்த்து வெல்ல முடியாது.

  9. என்னவோ காங்கிரஸ் மட்டும்தான் இப்படி என்று Holier than thou மனப்பான்மை வேண்டாம். நானும் சளைத்தவனில்லை என்பதுபோல ஒரு பா.ஜ.க ஜந்து குரைத்திருக்கிறது, ‘ராகுலையும் சோனியாவையும் ஆடைகளை களைந்துவிட்டு இத்தாலிக்கு விரட்ட வேண்டும்’ என்று.

    https://tamil.oneindia.in/news/india/sonia-gandhi-rahul-gandhi-should-be-stripped-sent-back-italy-lse-196872.html

    கருமம்.

  10. “ராகுலையும் சோனியாவையும் ஆடைகளை களைந்துவிட்டு இத்தாலிக்கு விரட்ட வேண்டும்’ என்று.”
    (On a lighter note)
    I do not agree.Undies and bra should be provided!
    BTW, Is there a possibility of getting Sonia Maino’s looted money back when NaMo comes to power? I believe it is around 19 billion dollars.

  11. // I do not agree.Undies and bra should be provided! //

    Vulgar to the core, though on a lighter note, and doesn’t deserve to have a place in here. my 2 cents.

  12. தரம் தாழ்ந்து பேசி பிறர் மனங்களைப் புண்படுத்துவோர் யாராயினும் அவர்களைக் கண்டிப்பதில் தவறு இல்லை. ஆனால் காங்கிரஸ்காரர்களின் பிதற்றல்தான் ஊடகங்களில் அதிகம் வருகிறது. இங்கு ஒருவர் குறிப்பிட்டது போல பா.ஜ.கவினரும் தரம் தாழ்ந்து பேசினால் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதற்காக காங்கிரஸ் காரனின் உளறலைச் சொன்னவுடன் ஏட்டிக்குப் போட்டியாக பா.ஜ.கவினர் சொல்லவில்லையா என்று கேட்டால், அதை நியாயப் படுத்துவது போல ஆகும். யார் அப்படிப் பேசினாலும் தவறு தவறுதான். ஏட்டிக்குப் போட்டியாக சொல்லாமல், தனித்தனியாக அதையும் சொன்னால் நிச்சயம் அவர்களைக் கண்டிப்போம்.

  13. ஒரு படத்தில் போ லி சார் ரவுடிகளை கைது செய்வார்கள் .அப்போது வடிவேலு தானும் போலிஸ் வண்டியில் ஓடி வந்து ஏறுவார் .போலிஸ் தள்ளி விடும் , இருந்தாலும் வாண்டேடா வந்து கைது ஆவார் .பின் கூடி இருக்கும் மக்களை பார்த்து ‘ மக்களே நல்லா பாருங்க நானும் ரவுடிதான் என்பார் .அரசியலில் கேஜ்ரிவால் ;படத்தில் வடிவேல் ,இதான் வித்தியாசம் .

  14. நம்ம காங்கிரஸ் அண்ணன்மார் குமரியில் செய்யும் பிரச்சாரத்தையும் பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க ….
    https://www.facebook.com/pages/Kanyakumari-West-District-Congress-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/1383513078562148

  15. சகோதரர் ஸ்ரீ க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு,
    தாங்கள் குறிப்பிட்ட பிழை சரிசெய்யப்பட்டுவிட்டது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *