தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1

தமிழ்ஹிந்துவில் வழக்கமாக எழுதுபவர்கள் இணையத்தில்  ஃபேஸ்புக்கிலும் மற்ற இடங்களிலும் பதியும் கருத்துக்களின் தொகுப்பு.. தேர்தல் முடியும் வரை இப்பகுதி தொடரும்.

மூன்று வருடங்கள் ஆகியும் கூட தினமும் 10 மணி நேரம் மின் வெட்டை மாநிலம் முழுவதும் செய்து வரும் ஜெயலலிதாவுக்கு இந்த முறை மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டாவிட்டால் அவர் அவர்களை இலவசங்களை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்களாக மட்டுமே வருங்காலத்திலும் நடத்துவார். இந்த தேர்தலில் தமிழ் நாட்டு வாக்காளர்கள் செயலின்மைக்காகவும், மோசமான நிர்வாகத்திற்காகவும் ஜெயலலிதாவை எதிர்த்தும் ஊழலுக்காகவும் மோசமான மத்திய நிர்வாகத்திற்காகவும் காங்கிரஸ் திமுகவை எதிர்த்தும் ஒட்டு மொத்தமாக வாகக்ளித்துத் தோற்கடிக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு எது தேவை அதை எப்படி செய்வது என்பதை அறிந்த பிரதம வேட்பாளர் மோடி மட்டுமே. அவருக்கு தமிழ் நாடு ஒட்டு மொத்தமாக 40 இடங்களையும் அளிக்கட்டும் இல்லாவிட்டால் இருண்ட கண்டத்தில் வாழட்டும்…

பீ.சிதம்பரம் கருணாநிதியிடம் ஒரு கேள்வியை வைக்கிறார். தேர்தலுக்குப் பிறகு தி மு க மோடியை ஆதரிக்குமா என்று? அது ஒரு மறைமுக மிரட்டல் என்பது சம்பந்தப் பட்ட கருணாநிதி குடும்பத்தாருக்கு மட்டுமே புரிந்த ரகசியம். சிதம்பரம் அப்படிக் கேட்டால் அதன் அர்த்தம் “ ஒழுங்கா நான் காங்கிரசைத்தான் ஆதரிப்பேன் என்று சொல்லுகிறாயா இல்லையா? சொல்லாவிட்டால் உன் மிச்சம் இருக்கும் உன் மகளின் கேசட் ரகசியங்கள் வெளி விடப் பட்டு அசிங்கப் படுவாய். உன் மனைவிக்கு தயாராக இருக்கும் நோட்டீஸ் சம்மனாக அனுப்பப் பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப் படுவார். கேஸ்கள் துரிதப் படுத்தப் படும். ஒழுங்காக ஆதரவைத் தரப் போகிறாயா இல்லை அசிங்கப் படப் போகிறாயா?” இப்படி ஒரு அப்பட்டமான ப்ளாக்மெயிலுக்கு உடனடியாக பணிந்து தமிழ் ஈனக் காவலர் உடனே காங்கிரசை மன்னித்து ஆதரவு தருவோம் என்று உரிய பதிலை அளித்து “ஐயா சிதம்பரம் செட்டியாரே என்னையும் என் பிள்ளைகளையும் ஒன்றும் செய்து விடாதே. அம்மா தாயே இத்தாலி அன்னையே என் குடும்பத்தார் அடித்த சொத்துக்களை ஏதும் செய்து விடாதே. நீ என்ன சொன்னாலும் செய்கிறோம். நான் வேண்டுமானால் மவுண்ட்ரோட்டில் குட்டிக்கரணம் போட்டுக் காண்பிக்கவா, ஆதரவு தருகிறோம் ஆதரவு தருகிறோம் ஆதரவு தருகிறோம்” இதுதான் கருணாநிதி அறிக்கையின் ரகசியம். ஏற்கனவே ஒரு டிராமா போட்டு அழகிரியை டிஸ்மிஸ் செய்வது போல செட்டப் செய்து பி ஜே பி யின் ஆதரவை அழகிரி மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் ஜெயித்தால் இந்த ஆதரவு அறிக்கை காக்கும். பி ஜே பி ஜெயித்தால் அழகிரியின் புது நட்பு மூலமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 91 வயதானாலும் கிரிமினல் மூளையில் மட்டும் எந்தப் பழுதும் இல்லை…

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பத்திரிகையாளர் ஞாநிக்கு ஒரு கேள்வி (ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்). முன்பு இவர் விகடனில் ஓ பக்கம் எழுதிக் கொண்டிருந்த பொழுது கருணாநிதிக்கு உடல் நலம் முடியவில்லை என்றும் கால்கள் வழியே மூத்திரம் போய் வேட்டியையெல்லாம் நனைத்து விடுகிறார் என்றும் அவரை கட்டாயப் படுத்தி அவரது குடும்பத்தார் முதல்வர் பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் ஒரு வயதான நோயாளி முதல்வராகத் தொடர்வது அநீதி என்றும் எழுதி தி மு க வினரிடம் வசை வாங்கினார். விகடனும் அவரை வெளியே அனுப்பியது. அதே ஞாநிக்கு இப்பொழுது உடல் நிலை சரியில்லை என்றும் வாரா வாரம் டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அவரும் சொல்லியுள்ளார். அப்படியாகப் பட்ட ஒரு சிறுநீரக நோயாளியினால் எப்படி சுறுசுறுப்பாக எம் எல் ஏ பணி ஆற்ற முடியும். கருணாநிதிக்கு அவர் சொன்ன அதே உபதேசம் தானே அவருக்கும். இவருக்கு ஒரு நியாயம் கருணாநிதிக்கு ஒரு நியாயமா? ஆகவே கருணாநிதிக்கு அவர் சொன்ன அதே உபதேசத்தின் படி ஞாநி போட்டியில் இருந்து விலகிக் கொண்டு ஒரு ஆரோக்யமான சுறுசுறுப்பான இளைஞருக்கு வழி விட்டு விலகுவாரா? அல்லது இவர் உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தானா? இதை ஞாநி சங்கரனிடம் அவரது அறிவுஜீவி ஆதரவாளர்கள் கேட்டு பதில் வாங்கிப் போடுவார்களா? ஞாநி எக்கேடும் கெட்டுப் போகட்டும் ஆனால் அவரது அளவுகோல் படியே ஒரு நோயாளியான ஞாநி சங்கரனினால் அந்தத் தொகுதி மக்கள் பாதிக்கப் பட்டு விடக் கூடாது அல்லவா? ஞாநி போட்டியில் இருந்து விலக வேண்டும், செய்வாரா? செய்வாரா?

ச. திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு? – ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே

நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் கிராம மக்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள, ‘கிராமங்கள் யார் பக்கம்?’ என்ற அடிப்படையில் சர்வே எடுக்கப் புறப்பட்டது ஜூ.வி. டீம். தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று 5,587 பேரை சந்தித்தோம்…

அ.தி.மு.க. ஆட்சியில் கிராம மக்களை அதிகம் பாதித்தது விலைவாசி உயர்வு என்றே பலரும் சொன்னார்கள். அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று அதிகம் பேர் டிக் அடித்தார்கள். கிராமங்களில் மோடியின் பெயர் தெரிந்துள்ளதை உணர முடிந்தது. யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்கிற கேள்விக்கு பி.ஜே.பி. கூட்டணிக்குதான் ஆதரவு என பெரும்பாலானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பி.ஜே.பி-க்கும் அ.தி.மு.கவுக்குமான வித்தியாசம் குறைவுதான்.

Juvee_rural_TN_survey

நன்றி: ஜுனியர் விகடன்

என்ன நடக்கிறது தமிழக பாஜக கூட்டணியில்?

கூட்டணியை உருவாக்குவதிலேயே தாவு தீர்ந்து விட்டதால் மாநிலம் முழுவதும் ஓடியாடி பிரசாரம் செய்யத் தெம்பில்லாமல் பொன்னார் ஜி உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் சோர்ந்திருக்கிறார்களோ? அல்லது தாங்கள் நிற்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்தால் மட்டுமே போதும் என்ற நினைப்பா? “தலைவர்” என்று அழைக்கப் படுவோர் அப்படி இருப்பது நல்லதல்லவே..

வைகோவும் தனது தொகுதி, கூடிப் போனால் தனது கட்சிக்கான தொகுதிகள் என்ற அளவில் மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார். பாமக குறித்து அதிகம் பேசாமலிருப்பதே நல்லது. தொகுதிக்கான பேரங்களையும் சண்டையையும் வாக்குப் பதிவு நாள் வரை தொடர அவர்கள் உத்தேசித்திருக்கிறார்கள் போல.

இந்தக் கூட்டணியிலேயே முனைப்பு, உத்வேகம், உழைப்பு, உறுதி என்று எல்லாத் தலைமைப் பண்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் என்றால் அது விஜயகாந்த் தான். அவரும் அவரது மனைவி பிரேமலதாவும் சளைக்காமல் பிரசாரம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல, நரேந்திர மோடி பிரதமராக ஆவதும், அந்த மத்திய அரசில் தமிழக நலன்கள் முன்னிலை பெறுவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை தீர்க்கமாக அந்த பிரசாரங்களில் முன்வைக்கிறார்கள். தனது கட்சி என்ற வட்டத்தைத் தாண்டி கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றீக்காக பாடுபட வேண்டும் என்ற Big Picture பற்றிய தெளிவு அவரிடம் உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைத்த சொத்து இவர். கூட்டணியின் மற்ற கட்சிகளின் ஒத்துழைப்பின்மையால் இவரும் சோர்ந்து விடாமல் இருக்கச் செய்ய வேண்டியது பாஜகவின் பொறுப்பு.

பெரிதாக ஆரம்பித்து தேய்ந்து குறுகும் காலை நிழல் போன்றது
போக்கிரிகள் இடையேயான நட்பு.
சிறிதாக ஆரம்பித்து வளர்ந்து பரவும் மாலை நிழல் போன்றது
நல்லோர் இடையேயான நட்பு

என்கிறது சுபாஷிதம். பாஜக கூட்டணி மாலை நிழல் போல வளர்ந்து வெற்றீ மாலை சூட வேண்டும். நரேந்திர மோதி தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரும் தருணம் இந்தக் கூட்டணியின் பிணக்குகளூம் தொய்வுகளும் மறைந்து ஊக்கம் பெற்று முழுவீச்சில் கூட்டணி செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவோம்…

தமிழகத்தில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பெண் ஒருவர் கூட இல்லை என்பது ஒரு பெரும் குறை. வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை அல்லது வானதி இருவரில் ஒருவர் அறிவிக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருவருமே நல்ல பேச்சாளர்கள். தொலைக்காட்சி விவாதங்களின் போது பாஜக தரப்பை பாராட்டுக்குரிய வகையில் முன்வைத்து வருபவர்கள்.

இப்போது இருவரும் இல்லாமல் “கல்வித் தந்தை” ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கூட்டணிப் பங்கீட்டில் இவ்வளவு போராடி இழுத்து வலித்துக் கிடைத்த எட்டு இடங்களில் ஒன்றையும் ஒரு உதிரிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பாஜக ஏன் போக வேண்டும்? அந்த அளவுக்கு தங்கள் கட்சி மீதும் மோடி அலை மீதும் இவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா என்ன? அல்லது இவ்வளவு நாள் கடலில் போராடிக் கொண்டிருப்பவர்களை விடவும், திடீரென்று உட்புகுந்து அலையைப் பற்றிக் கொண்டு மேலேறத் துடிக்கும் ஆள் ஒருவர் வென்று விட முடியும் என்ற அளவுக்கு மோடி அலை மீது நம்பிக்கை வைத்து அந்த ஆளை தூக்கி விட விரும்புகிறார்களா? புரியவில்லை.

அதுவும் வேலூர் இந்துத்துவ செயல்வீரர்களின் களம். 1980களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய மீட்சியின் மூலம் ஒரு மாபெரும் இந்து எழுச்சி இங்கு ஏற்பட்டது. சமீபத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் வெள்ளையப்பன்ஜி, டாக்டர் அர்விந்த் ரெட்டி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டதும், குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப் படாமல் இருப்பதும் மக்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பகுதியில் மேல்விஷாரம் போன்ற பல இடங்களில் இஸ்லாமியர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதை வைத்துக் கொண்டு பல அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் செய்து வருகிறார்கள். இவை உள்ளூர் இந்துக்களின் வாழ்வாதாரப் பிரசினைகளாக உள்ளன. இந்தத் தொகுதியில் பாஜக வளர்வதும் போட்டியிடுவதும் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் முக்கியமானது. ஆனால் இது எதையும் யோசிக்காமல் தமிழக பாஜக தலைமை செயல்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. மிகவும் வருத்ததிற்குரிய விஷயம்…

தமிழகத்தின் முற்போக்கு அரசியல் கலாசார நெறிமுறைகளின் படி மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைக்கு மட்டும் தான் மாலை அணிவிக்க வேண்டும். தெய்வத் திருவுருவங்களுக்கோ அல்லது மற்ற புனித சிலைகளுக்கோ மலர்சூட்டுவது பகுத்தறிவு அல்ல. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜனாப் ஞாநி சங்கரன் இன்று காலை உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்குகிறாராம். உழைப்பாளிகள் செத்து விட்டார்கள் என்கிறாரா? அல்லது தங்களுக்கு வாக்களித்தால் ஒரேயடியாக உழைப்பாளிகளுக்கு சங்கூதி விடுவோம் என்கிறாரா?

ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

(தேர்தல் முடியும் வரை இப்பகுதி தொடரும்..)

20 Replies to “தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1”

 1. “தி இந்து” என்று ஒரு தமிழ் நாளிதழ் வருவது அனைவருக்கும் தெரியும். “தி இந்து” என்பதற்கு கீழே “தமிழால் இணைவோம்” என்ற வாசகம் வருகிறது. “தி” என்பது தமிழ் வார்த்தையா? ஒரு ஆங்கில வார்த்தையை போட்டுவிட்டு எப்படி தமிழால் இணைவது? “தி இந்து” என்று பெயர் வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவான் செய்திகளையே வெளியிடுகிறார்கள். அதாவது மோடியை, பிஜேபி யை குறை சொல்வதே தன பிழைப்பாக கொண்டுள்ளனர்.அவர்கள் பேசாமல் “தி முஸ்லிம்” என்று பெயர் மாற்றி கொள்வது நல்லது. (to be continued)

 2. (தொடர்கிறது) 31-3-2014 அன்று P A கிருஷ்ணன் என்ற ஒரு நபர் “காந்தியின் இந்தியாவா மோடியின் இந்தியாவா?” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதசார்பின்மை மதசார்பின்மை என்று உளறிகொண்டிருக்கும் Antonio Albino Mino என்ற இத்தாலி நாட்டு lady யின் PA வா இவர் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இவர் சென்னையில் மின்சாரம் இல்லாமல் கஷ்டபடுகிறார். அங்கே ஒரு குஜராத்தி “24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது” என்று சொல்கிறார். இவர் அதற்கு மோடிக்கு ஒரு பாராட்டு தெரிவிக்கவேண்டாமா?. வேறு ஒருவர் “சாலைகளில் வெண்ணையின் வழு வழுப்பு தெரிகிறது” என்று சொல்கிறார்.. “அவன் முகத்தை பாரு. பளிச்சின்னு பால் மாதிரி இருக்கு” என்று ஒரு பேச்சுக்கு எல்லோருமே சொல்ல்வதுண்டு.. அதற்காக அவர் முகத்தில் பாலா இருக்கும்? அதற்கு இந்த அறிவாளி (கிருஷ்ணன்) “அது போல வெண்ணையின் வழு வழுப்பு இல்லை. ஆனால் சாலை மோசம் இல்லை” என்று எழுதுகிறார். தமிழ் நாட்டில் சாலை அனைத்தும் கரை வேட்டி கட்சிகார்கள் contract எடுத்து போடுகிறார்கள் (பாய வேண்டிய இடங்களுக்கு எல்லாம் லஞ்சம் பாய்ந்த பிறகு) சாலை போட்ட ஒரு மாதத்திலேயே ஜல்லி கல் எல்லாம் வெளியே தலை காட்டி பல் இளிக்கின்றன.அந்த அறிவாளிக்கு “சாலைகள் நன்றாக இருக்கின்றன” என்று சொல்ல மனம் வரவில்லை. மோசம் இல்லை (not bad ) என்று எழுதுகிறார். அங்கே முஸ்லிம்களுக் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்ற உண்மையை ஒரு முஸ்லிமே சாட்சியம் அளிக்கிறார். அந்த கிராமத்தில் முழுக்க முஸ்லிம்கள்தான் இருகின்றனராம். அவர்கள் அனைவரும் மோடிக்குதான் ஒட்டு போடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கே முஸ்லிம்களை மோடி பழி வாங்குகிறார் என்று இங்கே இருக்கும் சிலர் கூறுகின்றனர்.

  இப்படி மோடியை எப்படி குறை கூறுவது என்று இவரைப் போன்ற பலர் ரூம் போட்டு யோசிக்கிறார்கள். அதை வெளியிட தி இந்து காத்து கொண்டிருக்கிறது.அந்த அறிவாளியின் (கிருஷ்ணன்) மின்னஞ்சல் ::— tigerclaw@gmail.com

  இவர் தனது tigerclaw வினால் மோடியை பிராண்டியிருக்கிறார். வாசகர்கள் யாரேனும் இவருக்கு “சூடு” கொடுக்க விரும்பினால் அவரது மின்னஞ்சலுக்கோ அல்லது இங்கேயோ நன்றாக கொடுக்கலாம்.

 3. ஜி, ஞானி சங்கரன் என்று எழுதியிருக்கிறீர்கள். அவரது ஒரிஜினல் பெயர் “அந்தோனி சாமி” என்றல்லவா கேள்விப் பட்டேன். யாராவது என் சந்தேகத்தை தெளிவியுங்களேன்.

 4. ////தமிழகமும் 2104 தேர்தலும்///

  என்று எழுதி உள்ளீர்களே! சற்று கவனமாக எழுத வேண்டாமா? இது 2014 !
  2104 அல்ல!

 5. Parliament & Newspapers – In the vision of Mahatma Gandhi
  by neethiyaithedi.

 6. தமிழகத்தில் தேசிய ஜன நாயகக்கூட்டணி அதிமுகவை முந்திவருகிறதை ஜூவி கருத்துக்கணிப்பு காட்டுகிறது. இன்னும் பிரச்சாரம் சூடு பிடிக்கும் போது அதிலும் நமது மாண்புமிகு மோதிஜி மானிலமுழுதும் முக்கியமான நகரங்கலளில் பிரச்சாரம் செய்யும் போது மிகவலுவான முதன்மையானக்கூட்டணியாக நமது நமோ கூட்டணி விஸ்வரூபம் எடுக்கும். ஹர ஹர மஹாதேவ

 7. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இதுவரை பல கட்டங்களில் மொத்தம் 407 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சுமார் இருபது அல்லது முப்பது தொகுதிகளுக்கு மேலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். அதாவது அதிகப் பட்சம் அவர்கள் 450 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, காங்கிரசின் ஓட்டுக்களை ஏராளமாகப் பிரித்து, காங்கிரசை காலி செய்யப் போகிறார்கள். ஆம் ஆத்மிக்கு துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளம் பணம் வந்துள்ளது என்று , அதிகாரப் பூர்வமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

  இந்த 407 இடங்களில் அவர்கள் ஒரு பத்து அல்லது அதிகப்பட்சம் 15 இடங்களில் கூட வெற்றிபெறமுடியாது. இதுதான் உண்மை. ஆனால் நாடுமுழுவதும் இவ்வளவு இடங்களில் போட்டி போடுவதால், நிச்சயம் ஒரு அகில இந்திய கட்சி என்று பேர்வாங்கி விடுவார்கள். இனி காங்கிரஸ் காலிதான். பாஜகவின் ஓட்டுவங்கியில் பிளவை உருவாக்க ஆம் ஆத்மிக்கு பல மறைமுக உதவிகளை செய்த காங்கிரஸ் , அதே ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவாலால் விரைவில் காணாமல் போகும். தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு பத்து அல்லது பதினைந்து இடங்களில் வெற்றிபெற இறைவன் அருள்க. அம்மா 25, என் டி ஏ 14 என்று தமிழக முடிவுகள் அமையும் என்று தோன்றுகிறது. ஆனால் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றபின்னர் , இறுதிப் பட்டியல் அறிவிக்கப் பட்டபின்னர் தான், தமிழக நிலைமை தெளிவாகும். நரேந்திர மோடி தலைமையில் சிறந்த ஆட்சி அமைய எல்லாம் வல்லான் அருள்வான்.

 8. சகோதரர் மாணிக்கம் சிவகுமாருக்கு மட்டுமல்ல, மற்ற சகோதரர்களுக்கும், சொல்வது என்னவென்றால் ஞானி போல பலர் புனை பெயரில் உள்ளனர். அவர்களின் உண்மையான பெயர்கள் இதோ:-

  ஞானி – அந்தோணி சாமி
  மனுஷ்யபுத்திரன் – சாகுல் ஹமீது
  தா. பாண்டியன் – தாமஸ் பாண்டியன்
  டி. ராஜா – டேனியல் ராஜா
  சீமான் – செபஸ்தியான் சைமன்
  விஜய் (நடிகர்) – ஜோசப்
  ராஜசேகர ரெட்டி – சாமுவேல் ராஜசேகர ரெட்டி
  சோனியா காந்தி – அந்தோனியா மைனா
  ராகுல் காந்தி – ராகுல் வின்சி
  பிரியங்கா காந்தி – பினாகா ராஜீவ் ரோபெர்டோ
  – இவற்றை நாம் படித்து ரசிப்பதற்காக தெரிவிக்கவில்லை. இந்துக்களை ஏமாற்றும் கூட்டங்கள் எவ்வாறான யுக்திகளை எல்லாம் கையாள்கின்றனர் என்பதை தயவு செய்து நாலு பேருக்கு சொல்லுங்கள். அவர்களும் நான்கு இந்துக்களுக்கு சொல்வார்களே! அனாதையான இந்து சமுதாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு ஊட்டும் செயலையாவது செய்யலாமே?

 9. “கூட்டணியை உருவாக்குவதிலேயே தாவு தீர்ந்து விட்டதால் மாநிலம் முழுவதும் ஓடியாடி பிரசாரம் செய்யத் தெம்பில்லாமல் பொன்னார்ஜி உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் சோர்ந்திருக்கிறார்களோ? அல்லது தாங்கள் நிற்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்தால் மட்டுமே போதும் என்ற நினைப்பா? “தலைவர்” என்று அழைக்கப் படுவோர் அப்படி இருப்பது நல்லதல்லவே…………”
  மிகச் சரியான கருத்து.உண்மையிலேயே இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டணி அமைத்தும் ஒழுங்கான,முறையான திட்டமிட்ட பிரச்சாரம் இல்லாததால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத கதையாக போகும் போலிருக்கிறது தமிழ்நாட்டில் பி.ஜே.பி கூட்டணியின் வெற்றி. முதலில் தலைவர்களான பொன் ராதாக்ருஷ்ணன்,
  இல.கணேசன்,எச்.ராஜா,வைகோ போன்றவர்கள் இத் தேர்தலில் போட்டியிடாமல் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் மிகப்பெரும் வெற்றியை அறுவடை செய்து இருக்கலாம்.குறைந்த பட்சம் வைகோ அவர்களையாவது இத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க செய்து(அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுத்திருக்கலாம்)தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வைத்திருக்கலாம்.
  இப்பொழுதும் கெட்டுப்போகவில்லை,இக்கூட்டணி அமைய அரும்பாடுபட்டவரும்,
  சிறந்த மேடைப் பேச்சாளருமான திரு.தமிழருவி மணியன் அவர்களுக்கு வாய்ப்பும்,
  வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய வைக்கலாம்.
  இக் கட்டுரையில் எழுதியபடி திரு.விஜயகாந்த் அவர்களும்,அவர் மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தீவிரமான பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்கள். அதிலும் திருமதி.பிரேமலதா அவர்களின் கருத்தாழமிக்க பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அவர்களும் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் தங்கள் கட்சி வேட்பாளருக்கு மட்டும் இனி பிரச்சாரம் செய்ய போவதாகவும் செய்தி வந்துள்ளது. இது நல்லதல்ல.மேலும் பச்சைமுத்து(I .J .K ),எ.சி.சண்முகம் போன்றவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்து ஒரு உபயோகமும் இல்லை, பச்சைமுத்துவின் புதிய தலைமுறை நடுநிலைமை என்ற பெயரில் பி.ஜே.பி கூட்டணியை பற்றி தவறான கருத்தைதான் ஒளி பரப்பி வருகிறது.எனவே சம்பந்தபட்டவர்கள் இனியாவது உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை திரு.மோதி அவர்களின் அபிமானி என்ற முறையிலும்,நாட்டிற்கு ஒரு நல்ல மாற்றம்/தலைமை இத்தேர்தல் மூலம் வரவேண்டும் என்று நினைக்கும் நல்ல குடி மகன் என்ற முறையிலும் கேட்டு கொள்கிறேன்.

 10. அ.மார்க்ஸ் என்ற பத்திரிகைக் கட்டுரையாளரின் பெயர் தான் “அந்தோணிசாமி மார்க்ஸ்”. ஞாநியின் பெயர் ஞாநி சங்கரன் தான்.

  இணையத்தில் யாரோ உலவவிட்ட ஞாநி பெயர் பற்றிய பொய்யான தகவலை பல பாஜக ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள். இதைத் தவிர்க்கவும்.

 11. Mr.Seshagiri Rao கூறி இருப்பது மிக மிகச் சரி. பா.ஜ.கா. இனியாவது உறக்கத்தில் இருந்து விழித்து, செயல் படட்டும். புதிய தலைமுறை பற்றி கூறி இருப்பது 100% உண்மை. உண்மை.

 12. திரு கண்ணன் உங்கள் பட்டியலுடன் கீழ்கண்டவற்றையும் சேர்த்து கொள்ளுங்கள்.1) அம்பிகா சோனி 2)அஜித் ஜோகி 3) உமர் சாண்டி 4) ஜகதீஷ் டைட்லர் 5) பிரமானந்த ரெட்டி 6) கே எம் மணி (கேரளா) 7) இலியானா (நடிகை) 8) ஹரிஷ் ஜெயராஜ் (9) லாரா டட்டா 10) ஜெனிலியா 11) அமலா பால் 12) அசின் 13) விக்ரம் (கென்னெடி) 14) (ஜோசேப் ) விஜய் 15) கோபிகா 16) விஜய் அந்தோணி (மியூசிக் )17) நக்மா 18) மகேஷ் பூபதி (விளையாட்டு) 19) அருந்ததி ராய் (20)பிரணாய் ராய் ஆகிய அனைவரும் கிறிஸ்தவர்கள். 21) நடிகன் ஆர்யா (ஜாம்ஷெட்) 22) பிரேம் நசீர் (அப்துல் காதர்) 23) முகமது குட்டி (மம்முட்டி) 24) ராஜ்கிரண் (Qadir ) ஆகியோர் முஸ்லிம்கள்.
  1) ரஹ்மான் (மியூசிக்) என்பவர் சேகர் என்ற இந்துவுக்கு பிறந்தவர்.2) குஜராத்தில் மோடிக்கு எதிராக Teesta Setalvad என்பவர் போராடுகிறார். அது ஏனென்று தெரியுமா? அவர் ஜாவீத் என்ற முஸ்லிமை மணந்து கொண்டதால்தான். 3) இரண்டாம் உளறுவாயன் மனிஷ் திவாரி நஷ்ரீன் ஷிபா என்ற முஸ்லிமை மணந்தான் 4) அமீர் கான் (நடிகன்) ரீனா என்ற இந்துவை மணந்து பின் விவாக ரத்து செய்து விட்டு கிரண் ராவ் என்ற இன்னொரு இந்துவை மணந்தான் இவன் டிவியில் நீதி நியாயம் பேசுகிறான் ஒரு இந்து பெண்ணுக்கு அநியாயம் செய்து விட்டு. . 5) ஷாருகான் (இந்தி நடிகன்) கௌரி என்ற இந்து பெண்ணை மணந்தான் 6) நவாப் பட்டோடி (கிரிகெட்) ஷர்மிளா தாகூர் என்ற இந்துவை மணந்து அவள் பெயரை ஆயிஷா சுல்தான என்று மாற்றினான். 7) கிரிகெட் அசாருதின் (காங்கிரஸ்) சங்கீதா என்ற இந்துவை மணந்தான் அவளை விவாக ரத்து செய்துவிட்டு பிஜ்லாணியை மணந்தான்.8) கரீனா கபூர் என்ற “அலைஞ்ச பண்டாரம் ” நவாப் பட்டோடியின் மகன் செயப் அலி கானுக்கு இரண்டாம் தாரமாக போய் இருக்கிறாள்.

  மேற்கண்டவற்றில் ஒன்று நன்றாக தெரிகிறது. ஒரு முஸ்லிம் பெண்ணை ஒரு ஹிந்து ஆண் மணந்த பிறகு இந்து மதத்திற்கு எதிரி ஆகிவிடுகிறார்கள்.. மேலும் இந்துக்கள் எதற்கு முஸ்லிம்களை இப்படி போட்டி போட்டு மணக்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. அல்லது முஸ்லிம்கள் இந்து பெண்களை “வளைய போட்டு” பின் மணக்கிரார்களா? அதாவது லவ் ஜிகாத்.

  திரு ஜடாயு சொல்வது போல ஞானி சங்கரன்தான்.

 13. அண்ணா திமுகவின் உதவி இல்லாமல் மத்தியில் பாஜக ஆட்சி அமைய இறைவனை வேண்டுவோம் .

  1998 – அதிமுக கொடுத்த அசிங்கங்களை பாஜக மறந்து விடக் கூடாது .

 14. அப்படித்தானே எல்லோரும் இந்தியாவிற்கு வந்து சேருகிறார்கள். “டன் டன் டைன் காலையிலா விஸ்கி” என்ற பெயருடன் வருவான். ஆனால் இங்கே “கோரமாமுனிவர்” என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி, பூணூலும் போட்டுக் கொண்டு, நம் நாட்டின் குரு-சிஷ்ய நடைமுறைகளைப் பற்றி கிண்டல் அடித்து கதை எழுதுவான். நாமும் வெட்கம் கேட்டுப் போய் அந்தக் கதையை நம் பாட நூல்களில் வைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்தக் கதையை படிக்காமல், சாய்ஸில் விட்டு விட்ட வீரப் பரம்பரையில் வந்தவன் நானாக்கும்.

 15. ஹிந்து தமிழ் அவர்களே, ஹிந்து மதத்தில் மறு மலர்ச்சி வேண்டும்.
  என்றைக்கு பிராமணன் , பறையன் என்ற வேறுபாடு மாறுகிறதோ அன்று தான் மதமாற்றங்கள் நிற்கும். ஜாதியினால் முன்னோர்களால் மதம் மாற்றப்பட்ட நான், ஹிந்து மதத்திற்கு மாற தயார். சம அந்தஸ்து கிடைக்குமென்றால். ஜாதி முரண்பாடுகள் களைய பாடு படுங்கள் உங்கள் பத்திரிகை மூலம்.

 16. https://www.facebook.com/Kalaignar89
  ‘Official Facebook Page of Kalaignar M.Karunandhi,

  இத்தாலிக்காரி சோனியாவின் வரலாறு தெரியாமல் கலைஞ்ர் அவரை வாய்க்கு வாய் “சொக்கத் தங்கம்” என்றும், “அன்னை” என்றும், தியாகத் திருவிளக்கு என்றும் புகழ்ந்ததுதான் குற்றம்.

  சோனியாவின் தந்தை அந்தோனியோ மெயினோ ஒரு கட்டட மேஸ்திரி. அவர் முன்னதாக இத்தாலிச் சர்வாதிகாரியின் போர்ப்ப்டையில் வீரராக இருந்தவர். முசோலினியின் இனவாதக் கொள்கைகளுக்குப் புகழ்பெற்ற கட்சிதான் பாஸிஸ்ட் கட்சி. இன்று உலகெங்கும் பாஸிசம் என்றால் வெறுப்பு வருகிறதென்றால் அது முசோலினியின் பாஸிஸ்டுக் கட்சியால்தான். அப்படிப்பட்ட பாஸிஸ்டுக் கட்சியின் உறுப்பினரான அந்தோனியோ மெயினோ தான் அப்படிப்பட்ட கட்சியின் உறுப்பினர் என்பதால் பெருமிதம் கொள்வதாக மார்தட்டிக் கூறியவர்.

  பாஸிசத்தின் தொட்டிலில் பிறந்து வளர்ந்த சோனியாவை ‘சொக்கத்தங்கம்’ என்றும், ‘தியாகத் திருவிளக்கு’ என்றும், ‘அன்னை’ என்றும் தலைவர் சொல்லி மக்ழ்ந்தது சோனியாவின் பாஸிச வரலாறு, குணம், மனம் பற்றி அறியாமையால்தான். ஆனால் சோனியாவோ, 2009 மே 21ஆம் தேதிக்குள் பிரபாகரன் உயிரோடோ பிணமாகவோ எனக்கு வேண்டும், அதற்காக லட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் வான் வழித்தாக்குதலில் கொன்று குவித்தாலும் பரவாயில்லை என்று ராசபட்சேயிடம் கூறி, கூட்டணித்தலைவரான கலைஞருக்கு அழியா அவப் பெயரை உண்டாக்கி விட்டார்.

  இத்தாலிக்காரியின் ஐரோப்பிய பாசிச சதிவலையை இன்னமும் இந்தியா முழுமையாக உணரவில்லை என்பதுதான் வருத்தம்.

 17. பாஜக கட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஆந்திரா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரம், ஆகிய மாநிலங்களில் மட்டுமே உள்ளன. வரும் தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆகிய தெலுங்குதேசம், அகாலி தளம், சிவசேனா, விஜயகாந்த் கட்சி, வைகோ கட்சி, பாமக ஆகிய அனைத்தும் சேர்ந்து 25 இடங்களில் வெற்றி பெறும்.

  பாஜக மொத்தம் 290 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 290+ 25= 315 இடங்களை கைப்பற்றும்.

  காங்கிரஸ் 40 இடங்களையும் ,

  ஆம் ஆத்மி உட்பட எல்லா 3-ஆவது, 4-ஆவது, மற்றும் 5-ஆம் அணிகள் எல்லாம் சேர்ந்து 188 இடங்களைப் பெறும். எம் ஜி ஆர் கட்சி, மமதா கட்சி, மாயா கட்சி, முலயாம் கட்சி, நிதீஷ், நவீன், ஒய் எஸ் ஆர் ஜெகன் , கம்யூனிஸ்டுகள் 4-ஆவது அணியாகவும், ஆம் ஆத்மி ஐந்தாவது அணியாகவும் இருப்பார்கள். இந்தியா முழுவதும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நோட்டா- என்ற வெறுப்புக்கு ஒருசதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும்.

  இந்தியப் பொதுமக்கள் சுமார் 70 விழுக்காடுக்கும் அதிகமாக வாக்களித்து, இந்திய மீடியாக்களுக்கும், இந்திய அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்ய உள்ளனர். தேர்தல் பாதை திருடர் பாதை என்று கூறிப் புலம்பும் நண்பர்கள் இனியாவது , ஜனநாயகமே உலகில் உள்ள அமைப்புக்களில் மிக சிறிய தீமை என்பதை உணர்வார்களா ? ஜனநாயகம் வெல்லும், இந்தியா வெல்லும்,

  காங்கிரஸ் குடும்ப சர்வாதிகாரமும், நேரு குடும்ப எதேச்சதிகாரத்துக்கு காவடி தூக்கும் பெரியார்திடல் பூசாரிகள், மற்றும் சர்வாதிகாரத்துக்கு வால் பிடித்த மற்றும் வால் பிடிக்கும் திமுக , லல்லு போன்றோரின் கட்சிகள் நல்ல பாடம் பெறவிருக்கின்றன.

  தற்போதையப் பாராளுமன்ற தேர்தலில் , ஏற்கனவே இருக்கும் இடத்தில் பாதிக்கு மேல் இழக்கப்போகும் கம்யூனிஸ்டுகளுக்கும் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்.

 18. பாஜக ஏன் துடிப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்ற என் சந்தேகத்திற்கு சமீபத்தில் முகப்புத்தகத்தில் விடை கிடைத்தது. அதற்க்கு இரண்டு சம்பவங்கள் காரணமாக வைக்கபடுகின்றன.

  சம்பவம் ஒன்று : சமீபத்தில் தனிப்பட்ட காராணம் ஏதுமின்றி மதகாழ்புணர்ச்சி காரணமாக கொல்லப்பட்ட பாஜக தலைவர்கள்.

  சம்பவம் இரண்டு : சேலத்தில் சிருபான்மையினரிடம் ஓட்டு கேட்க போன தேமுதிக விற்கு கொடுக்கப்பட்ட மரியாதை.

  தமிழகம், கேரளா தவிர மற்ற அணைத்து மாநிலங்களிலும் பாஜக பலமான கட்சியாக இருப்பதால் அதன் மாநில தலைவர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை அந்த அரசே கொடுக்கும். ஆனால் திராவிட மாயை ஊறி திளைத்த நம் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர்களுக்கு அச்சுறத்தல் இருப்பது தெரிந்தும், ஒரு சிறிய உதிரி கட்சி தலைவருக்கு அளிக்கும் பாதுகாப்பை தான் இந்த அரசு கொடுத்துள்ளது.

  எனவே தான் பாஜக தலைமை பாதுகாப்பற்ற இந்த தமிழகத்தில் சூறாவளி பரப்புரை மேற்கொள்ளாமல் அடக்கி வசிப்பதாக ஒரு கருத்து உள்ளது.

  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெரும்பட்சத்தில் நிச்சயம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

 19. இன்றைய ஜூனியர் விகடன் 9-4-2014 தேதியிட்டு , சனிக்கிழமை காலை வெளிவந்துள்ள தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பில், அதிமுக முதலாவதாக 29.88 விழுக்காடும், இரண்டாவதாக மற்றவர்கள் 21.19 விழுக்காடும், பாஜக கூட்டணி 20.38 விழுக்காட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதற்கும் கீழே திமுக , துரோகிகள் மற்றும் சர்வாதிகாரிகள் கட்சி( இந்திரா கட்சி), கோமாளிகள் கட்சி (கம்யூனிஸ்டுகள்) ஆகியவை இடம் பிடித்துள்ளன.

  இதே நிலை தேர்தல் நாள் வரை நீடித்தால், மற்றவர்கள் என்ற பட்டியலில் உள்ளோர் தேர்தல் நாளன்று பத்து விழுக்காடு எம்ஜிஆர் கட்சிக்கு போய்விடும். எஞ்சிய பத்து அல்லது பதினொரு விழுக்காடை பாஜக உள்ளிட்ட எஞ்சிய கட்சிகள் பங்கிட்டுக்கொள்ளும். எனவே, இம்முறை எம் ஜி ஆர் கட்சிக்கு சுமார் 35 விழுக்காடும், எஞ்சிய 65 ஐ , 5 கட்சியாலும் பங்கிடப்படும். திமுக இரண்டாம் இடம் கிடைக்குமா என்பது இப்போது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் , தோற்றாலும் திமுகவே இரண்டாம் இடம் பெறுவது வழக்கம். இந்தமுறை குடும்பம் மற்றும் உள்கட்சிப்பூசல்கள் திமுகவில் ஏராளம் தலை தூக்கி உள்ளது. பாஜக கூட்டணி கடைசி நேரத்தில் அமைந்தாலும் , ஓரிடத்தில் வெற்றிபெறாமல் போனாலும் கூட, நிச்சயம் தமிழகம் முழுவதும் இரண்டாம் இடத்தினை பிடித்துவிடும் என்று பொது மக்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டுள்ளது. திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டால், தமிழகத்தில் புதிய அத்தியாயம் துவங்கும்.

 20. குமுதம் வார இதழில் இதுவரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 40- பாராளுமன்ற தொகுதிகளில் 37-தொகுதிகளுக்கு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளுக்கு 23-4-2014 அன்று , அதாவது தேர்தலுக்கு முதல் நாள் வெளியாகும் குமுதம் இதழில் கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளது. இந்த 37- லே, எம் ஜி ஆர் கட்சிக்கு 23, திமுகவுக்கு 10, பாஜக கூட்டணிக்கு 4 என்று கணித்துள்ளனர். இதில் 9 தொகுதிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள கட்சிகளுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசம் அரை விழுக்காடு முதல் இரண்டு விழுக்காட்டுக்குள் உள்ளது. இந்த இடங்களில் வாக்காளர் மனநிலையில் கடைசி நேர மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போணியாகாத காங்கிரஸ் ஆதரவு மனநிலை படைத்த வாக்காளர்களும் , கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களில் ஒரு சதவீதம் , தேசீயக்கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துடன் பாஜக வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பு உள்ளது.

  ஆம் ஆத்மி ஆதரவாளர்களும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களும் , தாங்கள் டெபாசிட் இழக்கும் ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லி, மனம் மாறி அதிமுக மற்றும் பாஜக அணிகளுக்கு ஓட்டை மாற்றிப்போடும் வாய்ப்பு உள்ளது. எனவே இறுதி வெற்றி வாய்ப்புக்கள், மே-16 அன்று ,

  1. அதிமுக 32, திமுக 6, பாஜக அணி 2

  2. அதிமுக 34 திமுக 4 பாஜக அணி 2

  3.அதிமுக 30 திமுக 5 பாஜக அணி 5

  4. அதிமுக 28 திமுக 7 பாஜக அணி 5

  இந்த 4-வகைகளில் ஏதாவது ஒன்றாக அமையும்.

  இதில் முக்கியமாக , கடைசி நாளில் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிப்போரும், 40- தொகுதிகளிலும் கட்டுத்தொகையை இழக்கவிருக்கும் , காங்கிரஸ் ஆதரவாளர்களும், பிற அணி வேட்பாளர்களை ஆதரிப்பதை பொறுத்துத்தான் இந்த மாறுதல்கள் ஏற்படும்.

  பாஜக திமுக அல்லது அதிமுக கூட்டு இல்லாமல் உதிரிக்கட்சிகளின் கூட்டுடன் ஒரு இடத்தைக் கூடப்பிடிக்க முடியாது என்ற கருத்து இம்முறை தவிடு பொடியாகப்போகிறது. பாஜக அணி இம்முறை 20 விழுக்காடுக்கும் மேல் வாக்குகளைப் பெற்று சாதனை புரியும். அதாவது , பாஜக அணி சுமார் 1,25,00,000 ( ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ) வாக்குகளைப் பெற்றும் பலமான அஸ்திவாரம் அமைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *