வன்முறையே வரலாறாய்… – 15

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்த படுபயங்கர ஜிகாதிகள் என்பதே வரலாறு நமக்குக் கூறும் உண்மை. எனவே அவர்களைப் பற்றி (இந்திய சூஃபிக்களை) இனி சிறிது ஆராய்வோம்.

முதலில், புகழ்பெற்ற இந்திய சூஃபியான நிஜாமுதீன் அவுலியா.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீது நம்பிக்கையுடையவரான நிஜாமுதீன் அவுலியா (1238-1325), காஃபிர் இந்துக்கள் நரகத் தீயில் எரியவேண்டும் என்று சாபமிட்டவர். “காஃபிர்கள் தங்கள் மரணத்தின்போது கடுமையான தண்டனையை அடைவார்கள். அந்த நேரத்தில் தண்டனையிலிருந்து தப்ப காஃபிர்கள் தங்களை முஸ்லிம்கள் என அறிவித்துக் கொள்வார்கள். ஆனால் அதனை அல்லா ஏற்றுக் கொள்ளமாட்டான்”. மேலும் காஃபிர்களை அயோக்கியர்கள் என அழைக்கும் அவுலியா அவரது குத்பாவில் (sermon), “அல்லா நம்பிக்கையாளர்களுக்கு சுவனத்தையும், காஃபிர்களுக்கு நரகத்தையும் படைத்தான். காஃபிர்கள் அவர்களின் அயோக்கிய நடவடிக்கைகளுக்காக நரகத்தில் தள்ளப்படுவார்கள்” என்கிறார்.

அவுலியா, சூரா ஃபாத்தியா கூறும் (குரானின் முதல் பகுதி) கூறும் “சிலை வழிபாடு செய்யும் காஃபிர்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும்” என்பதினை முழுமையாக ஏற்றது மட்டுமன்றி, அவரது சிஷ்யர்களுடன் இந்திய காஃபிர்களுக்கு எதிரான ஜிகாதினை நடத்துவதற்காக மட்டுமே இந்தியாவிற்கு வந்தவர். நிஜாமுதீன் கிபாச்சா என்பவர் மூல்தானுக்கு அருகில் காஃபிர்களுக்கு எதிராக நடத்திய போரில் அவுலியா பங்கெடுத்தார். கிபாச்சாவின் படை காஃபிர்களிடம் தோல்வியடையும் கட்டம் நெருங்கி வருகையில் அவரிடம் ஓடிய நிஜாமுதீன் அவுலியா ஒரு மந்திர அம்பினை அவருக்குக் கொடுத்து, காஃபிர்களின் படையை நோக்கி எறியச் சொன்னதாகவும், அதன்படியே கிபாச்சா அம்பை எய்ததாகவும், பொழுது புலர்வதற்குள் அத்தனை காஃபிர்களும் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தெரியவருகிறது.

காஜி மொஹிசுதீன், தென்னிந்தியாவில் மாலிக் கபூர் காஃபிர்களுக்கு எதிராகப் பெறும் வெற்றிகளைக் குறித்து நிஜாமுதீன் அவுலியாவிடம் கேட்டபோது, “இதெல்லாம் ஒரு வெற்றியா? நான் இதனை விடவும் அதிகமான வெற்றிகளுக்காகக் காத்திருக்கிறேன்” என்று அவுலியா பதிலளித்தார் எனத் தெரிகிறது. சுல்தான் அலாவுதீன் காஃபிர்களிடம் கொள்ளையடித்த பொருட்களில் பெருவாரியானவற்றை அவுலியாவிற்குப் பரிசளித்த போது, அவற்றை அவுலியா அவற்றைத் தனது இருப்பிடத்தில் பிரதானமான இடங்களில் வைத்துத் தன்னைக் காண வரும் அத்தனை நம்பிக்கையாளர்களிடமும் பெருமையுடன் காட்டி மகிழ்ந்தார்.

க்வாஜா மொஹினுதீன் சிஸ்தி (1141-1230) இந்தியாவில் நிஜாமுதீன் அவுலியாவிற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சூஃபிக்களில் ஒருவர். இந்திய இந்து காஃபிர்களுக்கும், அவர்களின் மதத்திற்கும் எதிரான மனம் நிறைந்த மிகப் பெரும் வெறுப்புடன் வாழ்ந்து மறைந்தவர் மொஹினுதீன் சிஸ்தி. அஜ்மீரின் அனசாகர் ஏரிக்கருகில் வந்து சேர்ந்த சிஸ்தி, அந்தப் பகுதியில் காணப்பட்ட பல சிலை வழிபாடு செய்யும் இந்துக் கோவில்களைக் கண்டு கசப்புடன் அங்கிருக்கும் அத்தனை கோவில்களையும் அல்லாவின் உதவியாலும், “இறைதூதரின்” உதவியாலும் உடைத்தெறிவதாக சபதம் செய்தார்.

அனசாகருக்கு அருகில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்ட மொஹினுதீன் சிஸ்தியும், அவரது சீடர்களும் தினந்தோறும் ஒரு பசுவினை இந்துக்களின் கோவில்களுக்கு அருகே கொன்று, அவற்றின் இறைச்சியை உண்டு மகிழ்ந்தார்கள். பசு, இந்துக் காஃபிர்களுக்குப் புனிதமான ஒன்று என்னும் ஒரே காரணத்திற்காக. இஸ்லாமின் பெருமையைக் காஃபிர்களுக்குக் காட்டுவதற்காக சிஸ்தி, இந்துக்கள் புனிதமாகக் கருதிய இரண்டு பெரும் ஏரிகளான அனசாகர் மற்றும் பன்சீலாவை தனது மந்திர சக்தியின் சூட்டினால் வற்றிப் போகச் செய்த்தாகத் தெரியவருகிறது.

சிஸ்தியும் அவரது சிஷ்யர்களும் சுல்தான் முகமது கோரியுடன் ஜிகாத் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தவர்கள். முகமது கோரி, இந்து அரசனான ப்ரித்விராஜ் சவுஹானை அஜ்மீருக்கு அருகில் வென்ற பிறகு, தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத சிஸ்தி அந்த வெற்றியை தனதாக பீற்றிக் கொண்டார். “நாங்கள் பித்தொவுராவை (பிரித்விராஜ்) உயிருடன் பிடித்து அல்லாவின் இஸ்லாமியப் படைகளிடம் ஒப்படைத்தோம்” என்றார் சிஸ்தி.

நிஜாமுதீன் அவுலியாவின் சீடரான அமிர் குஸ்ரு (1253-1325) இன்னொரு புகழ் பெற்ற இந்திய சூஃபிகளுலுள் ஒருவர். பல இந்திய சுல்தான்களில் கீழ் பணி புரிந்த குஸ்ரு ஒரு நல்ல கவிஞகராக அறியப்படுபவர். இந்திய தபலாவைக் கண்டுபிடித்த பெருமையும் குஸ்ருவைச் சார்ந்தது. ஆனால், இத்தனைக்கும் மேலாக குஸ்ருவின் இந்து காஃபிர்களின் மீதான வெறுப்பு மிகப் பிரசித்தி வாய்ந்தது.

கற் சிலைகளையும், மரங்களையும் வழிபடும் இந்துக்களின் மதவழக்கத்தைக் கேலி செய்யும் குஸ்ரு, அவர்களின் மீதான முஸ்லிம் அரசர்களின் வெற்றிகளைப் பெருமை பொங்க எடுத்துரைக்கிறார். போரில் கைப்பற்றப்பட்ட இந்துக் கைதிகளைக் கொல்லும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் மீதான் அவரது பெருமிதம் சொல்லில் அடங்காதது. 1303-ஆம் வருடம் சித்தூர் போரில் வெற்றி பெற்ற கிஸ்ர் கான், அங்கு கைப்பற்றப்பட்ட 30,000 இந்துக்களைக் கொலை செய்யும்படி உத்தரவிட்டான். அதனைப் பற்றிக் கூறும் அமிர் குஸ்ரு, “அல்லவிற்கே எல்லாப் புகழும்! இவ்வாறு இந்துஸ்தானத்தின் காஃபிர்களைக் கொல்ல ஆணையிட்டதால் இஸ்லாமில் ஒளி துலங்குகிறது! காலிஃபாவின் கடவுள் மீது ஆணையாக, இந்துக் காஃபிர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை!” எனப் பெருமைப்படுகிறார்.

muslim-warriors

தென்னிந்தியாவில் மாலிக் கபூரின் படை ஒரு பெரும் இந்துக் கோவிலை இடித்துத் தகர்த்துப் பின்னர் பல்லாயிரம் இந்துக்களையும், அக்கோவிலின் அர்ச்சகர்களையும் கொன்றதைக் குறித்து கவிபாடப் புறப்படும் அமிர் குஸ்ரு, “இஸ்லாமியப் படைகளால் வெட்டப்பட்ட பிராமணர்கள் மற்றும் இந்துக்களின் தலைகள் அவர்களின் கழுத்துக்களில் நடனமாடிப் பின்னர் அவர்களின் காலடியில் வீழ்ந்தன. வெட்டப்பட்ட அவர்களின் கழுத்துக்களிலிருந்து ஊற்றினைப் போல இரத்தம் பொங்கி வழிந்தது” என மகிழ்கிறார்.

அப்பாவி இந்துக்களைப் படுகொலை செய்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பெற்ற காட்டுமிராண்டித்தனமான வெற்றிகளைக் குறித்துப் பேசும் அமிர் குஸ்ரு,

“இந்த நாடு முழுவதும் இஸ்லாமியப் புனிதப் போராளிகளின் வாள் முனைகளின் முன்னால், முள் முனையில் தீப்பிடித்த காடுகளைப் போல மாறிவிட்டது. இஸ்லாம் பெற்ற பெரு வெற்றியின் காரணமாக சிலவழிபாடு முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. ஜிஸியா கொடுப்பவர்கள் உயிர் பிழைக்கலாம் என்னும் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்துஸ்தான் என்னும் இந்த நாட்டின் பெயரே உலகிலிருந்து, முழுமையாக, வேரோடு அழிக்கப்பட்டிருக்கும்”

அமிர் குஸ்ரு, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் அப்பாவி இந்துக்களுக்கு நேர்ந்த பல எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்கும் பல குரூரமான காட்டுமிராண்டித்தனங்களைப் பற்றி ஏராளமான குறிப்புகளை எழுதிச் சென்றிருக்கிறார். ஆனால் எந்தவொரு இடத்திலும் அந்த அப்பாவி இந்துக்களுக்கு நேர்ந்த துன்பங்களைப் பற்றிய எந்தவிதமான பரிதாபத்தையும் காட்டாத குஸ்ரு, அதனைப் பற்றிய (கொலைகளைப் பற்றிய) பெருமிதத்துடனேயே குறிப்பிடுகிறார். இந்தக் கொடுமைகளைக மகிழ்வுடன் குறிக்கும் குஸ்ரு, அல்லாவின் கருணையையும், “இறைதூதரின்” பெருமையையும் பாடுவதுடன், இதனைச் செய்து முடிக்கும் இஸ்லாமியப் படைகள் குறித்து வானளாவப் புகழ்கிறார்.

இன்னொரு முக்கியமான சூஃபியான ஜலாலுதீன்-பின்-முகமது (ஹஸ்ரத் ஷா ஜலால் என்று அறியப்படுகிற) இந்தியாவின் வங்காளத்திலிருக்கும் சில்ஹிட்டில் வாழ்ந்து மறைந்தவர். அவரைப் பற்றி பின்னர் பார்க்கலாம். மேற்கூறிய சூஃபிக்களைப் போலவே இந்தியாவில் பெயர் பெற்ற ஷேக் பஹாதுதின் ஜக்காரியா, ஷேக் நூருதீன் கஸ்னாவி, ஷேக் அகமத் ஷிரிண்டி, ஷேக் ஷா வலியுல்லா போன்ற அனைவரும் இந்துக்களின் மீது வன்மத்துடன் வாழ்ந்து மடிந்தவர்கள்.

உதாரணமாக ஷேக் முபாரக் கஸ்னாவி – சுஹாரவர்த்தி பரம்பரையைச் சேர்ந்தவர் – இந்துக்களின் மீதும் அவர்களின் மத வழிபாடுகளின் மீதும் வன்மம் கொண்டவர், இஸ்லாமிய சுல்தான்களிடம் செல்லும் கஸ்னாவி, “இந்துக் காஃபிர்களை அழித்து ஒழிக்காமல் இஸ்லாமிய அரசர்கள் தங்களின் மதக் கடமையைச் சரிவர செய்ய இயலாது” என அவர்களுக்கு நினைவூட்டுகிறார். “எல்லா இந்துக் காஃபிர்களையும் ஒழிக்க முடியாத பட்சத்தில், இஸ்லாமிய அரசர்கள் அவர்களை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்துவதனைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். சிலை வழிபாடு செய்யும் இந்துக் காஃபிர்களே அல்லாவின் மோசமான எதிரிகள்” என்கிறா கஸ்னாவி.

(தொடரும்)

4 Replies to “வன்முறையே வரலாறாய்… – 15”

  1. ஆங்கிலத்தில் படித்தபோது இல்லாத துக்கம், தமிழில் படிக்கும்போது பீரிட்டு எழுகிறது. மாலிக் கபூரினால்தான் தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருந்தும், இதை அறிந்தும், சுதந்திர இந்தியாவில் அடக்கி ஒடுக்கப்பட்டும், இந்துக்களுக்கு இன உணர்வு வரவில்லை என்பதை நினைத்தால் நெஞ்சை அடைக்கிறது.

  2. ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். சில இடங்களில் மொழிபெயர்ப்பாளர் என்ன சொல்லுகிறார் என்றே புரியவில்லை. குறைந்தபட்சம் எழுத்துப் பிழைகளையாவது சரிசெய்து வெளியிட தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவினர் முயன்றால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *