தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்

நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை.

இது தொடர்பாக அதிரை ஹிந்துக்கள் என்ற வலைப்பதிவின் மூலம் நமக்குத் தெரிய வரும் தகவல்:

தஞ்சை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கட்சியின் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் நேற்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் பள்ளிவாசல் வழியாக ஊருக்குள் போக வாகனங்கள் திரும்பியது.

அப்போது பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்தவர்களும், உள்ளே இருந்தவர்களும் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் கூட வந்தவர்களை ஊருக்குள் வரக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.

karuppu_muruganandam_attack_1

இந்த நிலையில் திடீரென சிலர் கூட்டத்தினர் மீது கற்களையும், பாட்டில்களையும், கட்டைகளையும் சரமாரியாக வீசினர். ரோடு ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் பக்கத்தில் இருந்த குளத்திற்குள் தூக்கி வீசப்பட்டது. அந்த இடம் போர்க்களமாக மாறியது. பக்கத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இது திட்டமிடப் பட்ட தாக்குதல் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வந்தது.

கற்கள் வீசப்பட்டதால் சுற்றுப்பயணத்தில் சென்ற பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் அண்ணாதுரை, வெளிமடத்தைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயம்பட்ட பலர் வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டனர். பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தின் மீதும் ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. இதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

karuppu_muruganandam_attack_2

சம்பவம் அறிந்ததும் மற்ற கிராமங்களில் உள்ள பா.ஜ.க மற்றும் கூட்டனி கட்சி தொண்டர்கள் அங்கு வந்தனர். திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர். திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் அமைதிகாக்குமாரும் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொண்டதாலும் தொண்டர்கள் அமைதிகாத்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் தொண்டர்களிடம் பிடிபட்டனர். அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டமையாலும் திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் அமைதிகாக்கும்படி வேண்டிக்கொண்டமையாலும் தொண்டர்கள் அமைதியடைந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சில இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், அதிவீரராமபட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் அதிரடிப்படை போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மல்லிப்பட்டினம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

*****

இந்தக் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து பொன்.ராதா கிருஷ்ணன் (பாஜக), வைகோ (மதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக) ஆகிய தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது தாங்கள் போட்டியிடும் எந்தப் பகுதிக்கும் சென்று பிரசாரம் செய்வது வேட்பாளர்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையாகும். அதை முடக்கும் வகையில் திட்டமிட்டு இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்தும் உள்ளூர் பயங்கரவாதிகளை காவல் துறை கைது செய்ய வேண்டும். குறிப்பாக இந்தப் பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதால், பாஜக வேட்பாளருக்கும் தொண்டர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை அரசும் காவல்துறையும் உடனடியாக வழங்க வேண்டும்.

5 Replies to “தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்”

  1. பள்ளிவாசல் இருக்கும் வழியாக சாமி ஊர்வலம் போக கூடாது காவடி ஊர்வலம் போக கூடாது என்று இது வரை சொல்லி வந்தவர்கள் இப்போது ஒட்டு கேட்க கூட வரக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இது பாகிஸ்தானா? அல்லது மதசார்பின்மை பேசும் இந்திய நாடா? இவ்வளவு தைரியம் அவர்களுக்கு வருவதற்கு காரணம் இந்த கருணாநிதியின் அராஜகமான அட்டூழியமான அடாவடியான அயோக்கியத்தனமான அநீதியற்ற பேச்சுகள்தான். இன்று ஒட்டு கேட்க வரக் கூடாது என்பவர்கள் நாளை அந்த தெரு வழியாக நடந்து போக கூடாது என்றும் அந்த தெருவில் இந்துக்கள் யாரேனும் வீடு வைத்திருந்தால் அவர்கள் உடனயாக அடிமாட்டு விலைக்கு முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு ஊரை காலி செய்துவிடவேண்டும் என்றும் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது இந்த முட்டாள் இந்து ஜனங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? அவன் தரும் ஒரு பிரியாணி பொட்டலத்திற்கு நாக்கை தொங்க போட்டுகொண்டு அவனை “”பாய் பாய்” என்றும் ” எஜமான்” என்று கூறிக்கொண்டு திரிகின்றனர். இந்துக்கள் 80% ஆகவும் அவர்கள் 15%ஆகவும் இருக்கும்போதே இந்த அராஜகம் என்றால் அவர்கள் 40% நாம் 45% என்று ஆனால் (ஆனால் என்ன? அப்படி விரைவில் ஆகத்தான் போகிறது. — Illegal Infiltration from Bangladesh, No family planning, 4 wives allowed in Kuran. illegal conversion, Killing of Hindus by bombs, love jehad etc மூலம்) நம் கதி என்னாகும்? நம் சந்ததிகள் எவ்வளவு கஷ்டப் பட போகிறார்களோ? கடவுளே! இதை நினைத்தாலே வயிற்றில் புளியை கரைக்கிறதே!

  2. நாம் தமிழ் நாட்டில் தானே இருக்கிறோம்?

  3. KAAVITHIVIRAVATHAM , HINDUTHUTHVA, IPPADIYALLAM PESUM ISLAMIYA JALRAKKAL ARIVUJIVIGAL YALLARUM VAAITHIRAKKAMAL YENGE SENDRANAR? …. ISLAM ORU AMAITHI MAARGAM YENDRU SOLLUM SOOTHU SORANAI ILLATHA OTTU PORUKKIGAL YENGE SENDRANAR …. IPPOTHU VAYATHERAKKAMA VAILAYANNANGADA VACHIRUKINGA? THAPPA NENACHIKATHINGA NA BIRIYANIYATHA SONNEN

  4. போலி மதச்சார்பின்மை பேசித்திரியும் மஞ்ச துண்டு கருணாநிதி, ரஷ்ய சீன அடிவருடி கூட்டமான கம்யுநிச்டுகளான தாமஸ் பாண்டியனோ, டேனியல் ராஜாவோ, முதலமைச்சர் என்ற ஆணவத்தோடு வலம் வரும் ஜெயலலிதாவோ, நாத்திகம் என்ற போர்வையில் வலம் வரும், வேற்று மத ஏஜென்ட் வீரமணி போன்றோர் இப்பொழுது கள்ள மௌனம் கொள்வதேன்? குற்றவாளிகள் இவர்கள் அல்ல. ‘எதை பற்றியும் கவலைப்படாமல், இத்தகைய கட்சிக்காரன் கொடுக்கும் பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் தன் வாக்கை அடகு வைத்து சொரனையற்று இருக்கும் இந்துக்களாகிய நாம்தான் அனைத்து தீமைகளுக்கும் அடிநாதம். கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிடுவோம், சொரணையோடு இருப்போம். இதே ஒரு வேற்று மத வேட்பாளரை இந்துக்கள் தாக்கியிருந்தால் நிலைமை என்னவாயிருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *