பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க  7-4-2014 அன்று வெளியிட்டது.  பல்துறை பொருளாதார வளர்ச்சி,  தேசப் பாதுகாப்பு, மக்கள் நலன்,  கலாசார உணர்வு என்று பல அம்சங்களிலும் சிறப்பான கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை உள்ளது.  பாஜகவின் தேர்தல் அறிக்கை நாடெங்கும் புதிய நம்பிக்கை அலையை உருவாக்கியுள்ளது.  பொதுத் தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த 52 பக்க அறிக்கையின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து தினமலர்  ஒரு நேர்த்தியான 8-பக்க சிறப்பிதழை  ஏப்ரல்-8 அன்று வெளியிட்டது.  அந்த சிறப்பிதழை ஒவ்வொரு பக்கமாக இணையத்தில்  இங்கு படிக்கலாம்.

வாசகர்களின் வசதிக்காக அந்த சிறப்பிதழின் பக்கங்களைத் தொகுத்து ஒரே pdf கோப்பாக வழங்குகிறோம்.  இந்த கோப்பை   இங்கு தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

https://tamilhindu.com/wp-content/uploads/2014/04/BJP_Manifesto_2014_Tamil_Dinamalar_Special.pdf

BJP_Dinamalar_image

நன்றி: தினமலர் நாளிதழ்.

4 Replies to “பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)”

  1. அறிக்கையில் உள்ள மற்ற எல்லா விஷயங்களயும் விட்டு விட்டு ராம் மந்திர் ஐப் பிடித்துக்கொண்டு எல்லா ஊடகங்களிலும் அலசோ அலசு என்று அலசுகிறார்கள். ஸுப்ரீம் கோர்ட்டை மீறி ஒன்றும் செய்துவிடமுடியாது என்று தெரிந்தும் கூட. இருக்கிற எல்லா ராம் மந்திர்களையும் இடித்துவிடுவோம் என்று கூறி இருந்தால் ஒரு வேளை secular மாஹானுபவர்களுக்கு சந்தோஷமாக இருந்திருக்குமோ என்னவோ !!

  2. குமுதம் வார இதழில் வெளியாகிவரும் மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு தமிழகத்தின் 22 தொகுதிகளுக்கு வெளியாகி உள்ளது. அதனை உற்று நோக்கும் போது, சில உண்மைகள் தெளிவாகின்றன.

    நரேந்திர மோடி பிரதமர் ஆகவேண்டும் என்று விரும்புவோர் பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிக்கும் தங்கள் வாக்குகளை பிரித்து வழங்குகின்றனர்.

    22 கணிப்புகளில் 15 அதிமுக , 1 பாஜக , 5 திமுக, 1 விடுதலை சிறுத்தை என்று வந்துள்ளது. இதில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுகவினர் முன்னணியில் உள்ள நாமக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய 3 தொகுதிகளும் , அதிமுகவுக்கு போய்விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    பொதுவாக பிழை எல்லை ( margin of error ) 3 % வரை வர வாய்ப்பு இருக்கிறது. எஞ்சிய 18 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முன்தினம் வரும் குமுதத்துக்குள் அதாவது ஏப்ரல் 23- ஆம் நாள் புதன்கிழமை வெளிவரும் இதழில் 40க்கும் கணிப்பு வந்துவிடும். 22-லே பாஜக வுக்கு ஒன்று ( கன்னியாகுமரி) மட்டுமே வாய்ப்பு உள்ளது. எஞ்சிய 18-லும் இன்னும் ஒன்று கிடைத்தாலும் மொத்தம் இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

    அதிமுக 30+திமுக 8 +பாஜக 2 ஆக மொத்தம் 40 . இந்த கணக்கில் ஒன்று கூட அல்லது ஒன்று குறையலாம் . பெரிய வித்தியாசம் வராது.

    காங்கிரஸ் 40 தொகுதியிலும் கட்டுத்தொகையை இழக்கும்.நம் தமிழினம் தீபாவளித்திருநாள் போல, இனிப்பு வழங்கி மே-16- ஆம் நாள் காங்கிரஸ் என்ற நரகாசுரன் அழிவை கொண்டாடும்.

    1977-ஆம் ஆண்டு பாண்டியில் அரவிந்த பாலா பழனூர் என்ற அதிமுக எம் பி வெற்றி பெற்றதாக ஞாபகம். அதன் பின்னர் இந்தமுறை 2014-ஆம் வருடம் , அதாவது 37- வருடங்களுக்கு பிறகு , அதிமுக பாண்டியில் வெற்றி பெற உள்ளது.

    துக்ளக் சோ கூட, இருவாரங்களுக்கு முன்னர் வந்த இதழில், பாஜக கூட்டணி சுமார் 10- இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் . இப்போது வரும் கருத்துக்கநிப்புக்களைப் பார்த்தால் , அவரது கணிப்பு பொய்க்கும் என்று தோன்றுகிறது. தமிழக முடிவுகள் எப்படி இருப்பினும், அகில இந்திய அளவில், பாஜக 300-310 இடங்களை தனியே வென்று, நரேந்திர மோடி பிரதமர் ஆவது காலத்தின் தீர்ப்பு. இந்திய மக்களாட்சி வெல்லும். ஜனநாயகத்துக்கு தொடர் துரோகம் செய்த காங்கிரஸ் அழிந்து , புதிய கட்சிகள் தோன்றட்டும். வாழ்க இந்தியா. வெல்க மக்களாட்சி.

  3. காங்கிரஸ் 10 ஆண்டு கால ஆட்சியில் நாடு நாட்டுமக்களின் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியதற்கு அந்த கட்சி இனி ஆட்சிக்கு வரவே கூடாது இதுதான் இந்திய மக்களின் ஒட்டு மொத்த ஆசை

  4. கும்மியடித்தமிழ் நாடுமுழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி!!! நம்மை பிடித்த போலி மதவாதிகள் ஓடி ஒழிந்திட கும்மியடி!!
    பாரத நாட்டிலங்சிங்கங்களே உங்களை நலம் உயர்த்தியே கும்மியடி!!!!! வெள்ளையனை வெளியேற்றிய மக்கள் நாம் என்று உற்சாகம் பொங்கிட கும்மியடி!!!
    இத்தாலி நாட்டவரை வெளியேற்ற இன்று உற்சாகத்துடன் கும்மியடி!
    கொள்ளை கும்பலை நாடுகடத்திட கைகொட்டி கைகட்டி கும்மியடி!!!
    இளவரன் ஆட்சியை முறியடிப்போம் என்று நம்மை உயர்த்தி கும்மியடி!
    குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்களை வாழ்த்தி கும்மியடி!!! நம்மை பிடித்த ஊழல்வாதிகளை சிறைக்குள் அடைக்க கும்மியடி!
    பாரத நாட்டிளம் சிங்கங்களே பாரினில் நாமே உயர்ந்திருப்போம்!!
    நம்மை பிடித்த பிசாசுகளை ஓட்ட கைகொட்டி கைகொட்டி கும்மியடி!
    நல்லவர்களை நாம் வரவேற்க மக்கள் உற்சாகத்துடம் கும்மியடி!! வீரர்கள் வாழும் பாரதநாட்டில் ஒற்றுமை ஒங்க கும்மியடி!!
    மோடியை பார்த்து வீரராக்கி நாம் உற்சாகத்துடன் கும்மியடி!! மோடியைப் பார்த்து கேவலமாக பேசும் இளவரசரை ஒழிப்போம் என்று கும்மியடி!!
    போலி மதசார்பின்மை வாதிகளை ஒழித்துக்கட்டவும் கும்மியடி!! நல்லவர்கள் வாழ்க்கையை நாசப்படுத்தும் இந்த நாசகார கும்பலை வீழ்த்திடுவோம்!!! வரலாற்று நாயகன் மோடியின் சக்தியை வளப்படுத்த கும்மியடி!!!!
    பாரதநாட்டு மக்களே நாம் நல்ல முறையில் வாழ்த்திடுவோம்!!
    கும்மியடித்தமிழ் நாடுமுழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *