உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்

2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்.  இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன.  இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும்  இணைந்து  நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே.

ஹிந்தி நாளிதழ் செய்திகளின் மூலங்கள் இங்கே.

UP-reconversion

நன்றி: விஜயபாரதம் (17.1.2014)

25 Replies to “உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்”

  1. தமிழ்நாட்டிலும் இது நடக்க வேண்டும்.

  2. நல்ல பணி தொடரட்டும். தாய் மதம் திரும்பியோர் வாழ்க. வளர்க. இறை அருள் கூடட்டும்.

  3. புதிதாக தாய் மதம் திரும்பியவர்களை எந்த சாதியில் சேரக்கப் போகிறீர்கள்? அலிகர், காஸ்கஞ், பெரோஸாபாத்திலிருந்து கிறித்தவர்கள் மதம் மாறியதாக சொல்லி விட்டு இஸ்லாமிய இமாம்கள் அமைகளாக நடத்தியதாக தாய் மதம் திரும்பியவர்கள் சொன்னதாக செய்தி பதியப்பட்டுள்ளது. கிறித்தவர்கள் முஸ்லிம்களாக மாறியது எப்போது? இதிலிருந்தே செய்தியில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

    மேலும் கிறித்தவர்கள் இந்து மதம் திரும்புவது ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏறத்தாழ கிறித்தவத்தையும் சமண பவுத்த மதங்களை விழுங்கியது போல் ஆரியம் என்றோ விழுங்கி விட்டது. பெயர் மட்டும்தான் வித்தியாசம்.

  4. அரும்பணி.

    தமிழகத்திலும் ஹிந்து இயக்கங்களின் முயற்சியாலும் இறையருளாலும் மாற்றுமதத்தினர் பலர் சமீபத்தில் தாய்மதமான ஹிந்துமதத்தை தழுவியதை வாசித்தது நினைவுக்கு வருகிறது.

    வாராவாரம் செய்தித் தொகுப்புகள் முன்னர் நம் தளத்தில் தொகுக்கப்பட்டு பதிக்கப்பட்டதே.

    இயலுமானால் அதைத் தொடருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  5. suvanappiriyan, செய்தியை ஒழுங்கா படிக்க மாட்டீங்களா? bullet புள்ளிகளில் இருப்பது பல இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய விவரம். கடைசியாக கீழே இமாம்கள் அடிமைகளாக நடத்தியதாக கூறியுள்ளது *முஸ்லிம்களாக* இருந்து தாய்மதம் திரும்பியவர்கள் கூறிய செய்தி, பெரோசாபாத்தில் தாய்மதம் திரும்பிய முன்னாள் கிறிஸ்தவர்கள் சொன்னது அல்ல. சுட்டியில் உள்ள ஹிந்தி செய்திகளில் தெளிவாக உள்ளது.

    இவை முற்றீலும் உண்மையான செய்திகள். ஹிந்தி தெரிந்தால், அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு, இங்கே கொடுத்துள்ள சுட்டியில் உள்ள நாளிதழ் க்ளிப்பிங்க்ஸ் பாருங்கள். ஆயிரக் கணக்கில் வட இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்களாக மாறிய இந்த மண்ணின் மைந்தர்கள் இந்து தர்மத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஜாட்கள், ராஜபுத்திரர்கள்.

    20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்களாக இருந்த 70,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆரிய சமாஜத்தின் வாயிலாக தாய்மதம் திரும்பியுள்ளார்கள். இந்த வரலாற்றையாவது தெரிந்து கொள்ளுங்கள்.. இஸ்லாம் ஒன்றும் இரும்புக் கோட்டையல்ல. பொய்மையும், வன்முறையும் வெறியும் கலந்து கட்டப் பட்ட மண்கோட்டை. அதைப் புரிந்து கொண்டவர்கள் உடனடியாக வெளியேறி விடுவார்கள்.

  6. // புதிதாக தாய் மதம் திரும்பியவர்களை எந்த சாதியில் சேரக்கப் போகிறீர்கள்? //

    9ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை அராஜக காரனங்களால் முஸ்லிம்களாக மாறிய லட்சக் கணக்கான இந்து மக்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்பி வந்து கொண்டே தான் இருந்திருக்கிறார்கள் ! அதனால் தானே பாரதம் இன்று வரை இந்துப் பெரும்பான்மை தேசமாக உள்ளது? இந்த வரலாறூ தெரியாதவர்கள், அல்லது தெரிந்தும் பொய்யாக நடிப்பவர்கள் தான் ஏதோ இது ஒரு புதிய பிரசினை என்பது போல கேட்பார்கள் – அண்னன் சுவனப் பிரியனைப் போல.

    இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் விவேகானந்தர் கூறிய வழிகாட்டலைத் தான் பின்பற்றுகிறார்கள்.. அவர் கூறியது என்ன?

    ஏற்கனவே எழுமின் விழிமின் – 21ம் பாகத்தில் தமிழ் ஹிந்துவில் வந்திருக்கிறது.

    https://tamilhindu.com/2012/08/arise-awake-21/

    “எனது சொந்தக் கருத்துப்படி, வனவாசிகளான பரம்பரையினரின் கூட்டங்களையும், சுற்றியுள்ள நாட்டு மக்களையும், முகம்மதியர் வெற்றி பெறுவதற்கு முன்னர் நம்மை வெல்ல வந்த மக்களில் அநேகமாக எல்லோரையும் நாம் மதம் மாற்றியிருக்கிறோம். அது மட்டுமன்றி விசேஷமாகப் புராணங்களில் காணப்படுகிற எல்லா ஜாதிகளும் மதம் மாற்றப்பட்டவர்கள்தாம் என்பது எனது சொந்தக் கருத்து. அவர்கள் அந்நியர்களாக இருந்தவர்கள், பின்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவரகள் என்றே கருதுகிறேன்… தாமாக மனம் ஒப்பி பிறமதம் மாறிவிட்டு இப்பொழுது தாயகமான தமது தாய்க் கோயிலுக்குத் திரும்பி வர விரும்புகிறவர்களுக்குப் பிராயச்சித்தச் சடங்குகள் பொருத்தந்தான். ஆனால் காஷ்மீர், நேபாளம் போன்ற இடங்களில் எதிரிகளின் படையெடுப்பால் அந்நியராக்கப்பட்டவர்களுக்கும் அல்லது நம்முடைய மதத்தைத் தழுவ விழைகிற வெளியாருக்கும் யாதொரு பிராயச்சித்தமும் விதிக்கக் கூடாது.”

    “சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்களாவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். “ஏதாவதொரு ஜாதி இருக்கவேண்டும். இல்லாமற் போனால் பரந்த இந்த ஹிந்து மத உடலோடு அவர்கள் ஒருபோதும் ஒன்றி இணைய முடியாதல்லவா? அவர்களுக்குரிய தக்க இடத்தை நாம் எங்கே தேடலாம்?”

    சுவாமிஜி அமைதியாகக் கூறினார்: “நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக்கொள்வார்கள். வைஷ்ணவத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். வேறு வேறு ஜாதிகளிலிருந்து வந்தவர்களும் மதம் மாற்றப்பட்ட அந்நியர்களும் அதன் கொடிக்கீழ் இணைந்து ஒரு தனி ஜாதியாக, கௌரவம் வாய்ந்த ஒரு ஜாதியாக வைணவம் உள்ளது. இராமானுஜர் முதல், வங்கத்தில் சைதன்யர் வரையில் திகழ்ந்த பெரிய வைஷ்ணவ ஆசார்யர்கள் இம்முறையையே கடைப்பிடித்திருக்கிறார்கள்.

    “புதிதாக வந்த இவர்கள் எங்கே திருமணம் செய்து கொள்வார்கள்?”

    “இப்பொழுது செய்துகொள்வது போலத் தமக்குள்ளேயே செய்து கொள்வர்” என்று அமைதியாகப் பதிலளித்தார் சுவாமிஜி.

    “அவர்கள் எந்தப் பெயரை வைத்துக் கொள்வார்கள்? அந்நியர்களும் பிற மதத்தைத் தழுவிப் பிறகு திரும்பி வருகிறவர்களும் புதிதாகப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டுமே. அவர்களுக்கு ஜாதிப் பெயர்களைத் தருவீர்களா அல்லது வேறு ஏதாவது செய்வீர்களா?”

    “உண்மைதான். பெயரில் பெரும் பொருள் இருக்கத்தான் இருக்கிறது” என்று சிந்தனையில் ஆழ்ந்த சுவாமிஜி இந்தக் கேள்விக்கு பதிலாக ஒன்றும் கூறவில்லை.

    ஆனால் நான் கேட்ட அடுத்தக் கேள்வி அவரை வேகப்படுத்தியது. “சுவாமிஜி! பல வடிவங்கள் வாய்ந்த ஹிந்துமதக் கொள்கைகளிலிருந்து தமக்கு வேண்டிய ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்கும்படிப் புதிதாக வந்த இவர்களை விட்டு விடுவீர்களா அல்லது அவர்களுக்காக ஒரு சமய வடிவத்தை அமைத்துத் தருவீர்களா?

    “என்ன கேள்வி கேட்டீர்கள்! அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களே தேர்ந்தெடுத்துப் பின்பற்றாவிட்டால் ஹிந்துமதத்தின் உட்சக்தியே குலைந்து போய்விடும். நம் சமயத்தின் சாரமே இஷ்டதெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற இந்தச் சுதந்தரத்தில்தான் அடங்கியுள்ளது.”

    அவர் கூறியதில் இது மிகுந்த கருத்தாழம் வாய்ந்தது என்று நான் நினைத்தேன். என் முன் நின்ற அந்த மகான், உயிரோடிருக்கிற மற்றவர்களைக் காட்டிலும், பல ஆண்டுகள் ஆன்மிகத் துறையில் பாடுபட்டிருப்பவர். ஹிந்து சமயத்தின் பொதுவான அடிப்படைத் தத்துவங்களைப் பார்த்தால், அவரவர் இஷ்டத்திற்குச் சுதந்தரமளிக்கிற இந்தத் தத்துவம் உலகம் முழுவதையும் தழுவி நிற்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகத் திகழும் என்று எனக்குத் தோன்றுகிறது.

  7. நாத்திகர்களும் கூட இந்துக்களே ஆவார்கள். அப்படி இருக்கையில் மதம் மாறி இந்து மதத்துக்கு திரும்பியோரை எல்லா சாதிகளுமே வரவேற்கின்றன. நாத்திகர்களுக்கு சாதி இல்லை என்று மேடைகளில் சொல்லிக்கொண்டு, சாதி சான்றிதழை ஓசைப்படாமல் வாங்கி பலன் பெறுகிறார்கள் என்பது நாடு அறிந்த உண்மை. அதேபோல இந்துமதத்தில் இணைந்தோருக்கு என்னசாதி என்று ஆரிய சமாஜம் சுமார் இருநூறு வருடங்களாக மத சான்றிதழ் வழங்கி வருகிறது. மூதாதையர் என்ன சாதியில் இருந்து இஸ்லாம் அல்லது கிறித்தவராக மாறினார்களோ அதே சாதியை சேரலாம், அல்லது பழைய சாதி தெரியாவிட்டால், சாதி இல்லை என்று கூறலாம். ஏனெனில் கலப்பு திருமணங்கள் ஏராளம் நடக்கின்றன. சாதி என்பது வெள்ளைக்கார நாய்கள் செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்பது தான் உண்மை.

    எதிர்காலத்தில் பெண்ணடிமை, சாதிகளில் உயர்வு தாழ்வு இரண்டுமே முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும். சாதிகளை வாழவைத்துக்கொண்டிருப்போர் தமிழ் நாட்டு மோசடி திராவிட இயக்கங்களே. கலப்பு திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்கு மட்டுமே அரசு வேலை என்று அறிவித்தால், சாதிகளும் , மதங்களும் செத்துவிடும். திராவிட மோசடி இயக்கங்களும், மண்டையைப் போட்டுவிடும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினால், ஆபிரகாமியம் தலைமறைவாகிவிடும். இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியப் பெருமக்களும், கிறித்தவப் பெருமக்களும் உண்மையில் இந்துக்களே ஆவார். அவுரங்கசீப் போன்ற தீய சக்திகளின் ஆட்சியில் உயிருக்கு பயந்து மதம் மாறியோரே ஏராளம். ஆங்கிலேய ஆட்சியில் கிறித்தவ மெஷினரிகள் புகுந்து விளையாடின. எனவே அனைவரையும் தாய்மதம் திரும்ப வேண்டுவோம். ஏனெனில் இந்து என்பது all inclusive ஆகும். இந்தியா வெல்க/ உலகெங்கும் அன்பும் ,அமைதியும் , தவழட்டும். மனித இனமும் உயரட்டும்.

  8. சுவனப்பிரியன்,

    இஸ்லாத்தில் உள்ள ஜாதிப் பட்டியல் உங்களுக்கு நான் தரவா அல்லது உங்களிடம் இருக்கிறதா?
    நீங்கள் அரேபியா உங்களை அங்கே மதிக்கிறார்களா?

  9. சுவனப்பிரியன்,

    இஸ்லாத்தில் உள்ள ஜாதிப் பட்டியல் உங்களுக்கு நான் தரவா அல்லது உங்களிடம் இருக்கிறதா?
    நீங்கள் அரேபியா உங்களை சென்றால் அங்கே மதிக்கிறார்களா?

  10. ஆபிரகாம் மதங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இங்கே ஒருவர் புலம்புகிறார். எந்த ஜாதியில் சேர்த்தால், இவருக்கு என்ன கவலை! இஸ்லாமின் ஜாதிப் பட்டியலை அம்பேத்கர் புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளவும்.

    மோடி தலைமை ஏற்றால்- எல்லோரும் தாய் மதத்துக்கு வந்து விடுவார்கள். கஜினி, கோரி, அலாவுதீன் மற்றும் கிருத்துவப் பாதிரிகளால் மாற்றப்பட்டவர்கள் – மீண்டும் வருவதை வரவேற்போம் . இந்து அமைப்புகள் தீவிரமாக இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்.

  11. உங்களை நம்பி வந்த அந்த முன்னால் முஸ்லிம் கிறித்தவர்களை இனியாவது சாதி பாகுபாடு காட்டாமல் சகோதரனாக பாவியுங்கள்(இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில்)

    மற்றபடி இஸ்லாத்தில் தீண்டாமை இருப்பதாக ஏமனுக்கும், ஆப்ரிக்காவுக்கும் ஏன் ஓட வேண்டும். நமது தமிழகத்தில் அப்படி நிலை உள்ளதா? நமது வாழ்நாட்களிலேயே இஸ்லாமியராக மாறிய ஏ ஆர். ரஹ்மான் எந்த சாதி என்று யாருக்காவது தெரியுமா? இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? அட..நான் எந்த சாதியிலிருந்து மதம் மாறினேன் என்று எனக்கே தெரியவில்லையே….

  12. அப்படியா? இஸ்லாமில் சாதியே இல்லையா?. எங்கே முகமது நபியின் குரைஷி ஜாதியில் பெண் கேட்டுப் பாருங்களேன் சொப்பனம்! காயடித்து விடமாட்டார்களா?

    இதனை உணர சொப்பனப்பிரியன் “நிஜப்பிரியனாக” மாறவேண்டும். அது நடக்கக்கூடிய காரியம் இல்லை. எனவே அரைத்த மாவையே அரைப்பார். நாமும் பதில் சொல்லிச் சொல்லியே அலுத்துப் போகவேண்டும்.

    சரிதான். ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து, ஒன்பது வயதில் சாந்தி முகூர்த்தம் நடத்தும் மதமல்லவா சகோதர மதம்?

    “சாதி வேற்றுமையே இல்லாத” சகோதர மதத்தில் எதற்கைய்யா சுன்னி, ஷியா, அகமதியா என்று ஆளுக்காள் குண்டு வைத்துக் கொண்டு சாகிறான்கள் என்றால் பதிலே வராது.

  13. டியர் சுவனப்பிரியன் !!!

    உங்கள் கனவு தேசமான பாகிஸ்தானை உருவாக்கியவர் ராஜ்புத் என்னும் உயர் ஜாதி ஹிந்து மரபை சேர்ந்த ஜின்னா என்பதை அறிவீர்களா…? பாகிஸ்தானில் இன்று வரை பின்தங்கிய சமூகத்தவர் எவரும் பிரதமர் ஆனதில்லை என்பதையாவது அறிவீர்களா..?

  14. அராபிய பெண்ணை காதலித்ததால் ஆந்திராவை சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞர் சௌதியில் கடுமையாக தாக்கப்பட்டது நினைவில்லையா…?

  15. புத்த , சமண மதத்தை ஆரியம் விழுங்க வில்லை . முஸ்லிம் மன்னர்களின் மத வெறியால் தான் புத்த மதம் விழ்த்த பட்டது . அலாவுதீன் புத்த பிட்சுகளை கொன்று குவித்தான் . நாளாந்த பல்கலை கழகம் தீ வைத்து கொளுத்த பட்டது . ஒவ்ரகசிப் சீக்கிய மத குருவை படு கொலை செய்தான் . சில வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் மத வெறியர்கள் புத்தர் சிலையை வெடிகுண்டு வைத்து சிதைத்தனர் .

  16. தாய்மதம் திரும்புவது மிகவும் அவசியமானது அத்யாவசியமானது.சமூகப்பொருளாதாரப்பாதுகாப்பினை உறுதி செய்வதோடு ஹிந்து சமயத்தின் ஆன்மிகத்தின் தர்மத்தின் மேன்மையை அனைவரும் உணரச்செய்வதன் மூலம் அதில் நமது பரிவார அமைப்புகள் வெற்றி பெற்று வருகின்றன. அது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
    ஹிந்து சமயங்களின் சிறப்பு ஆன்மிகத்தில் சமூக வாழ்வில் ஏன் அரசியலில் ஹிந்துக்களுக்கு உள்ள சுதந்திரத்தினை கிறிஸ்தவ சமயம் பெரும்பான்மையினரது சமயமாகிவிட்ட பகுதிகளில் வாழுகிற உணர்வுடைய மக்களால் பெரிதும் உணரமுடியும்.ஆகவே சமூகவாழ்வில் மட்டுமன்று ஆன்மிகவாழ்விலும் சுதந்திரம் பெற்ற தாய்மதம் திரும்பிய மக்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறோம்.

  17. ஜனாப் சுவனப்பிரியன் அபிராஹாமிய மதங்களிலிருந்து தாய்மதம் திரும்பும் மக்களை எந்த சாதியில் சேர்ப்பீர்கள் என்று வினவியிருக்கிறார். அதற்கு அருமையான பதில்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. சாதிகள் ஹிந்து சமயத்தினரிடையே மட்டுமே காணப்படுவன என்ற பொய்யை ஆதாரப்பூர்வமாக மறுக்க இயலும். பட்டாணி, ராவுத்தர், லப்பை, மரைக்காயர் என்பன வெல்லாம் சாதிகளன்றி வேறு என்ன. வட இந்தியாவிற்கு அன்னிய நாட்டிலிருந்து படையெடுத்துவந்தவர்களின் வழிவந்த முஸ்லீம்கள் இந்திய பாரம்பரிய வம்சாவளியினரை இன்னும் கூட திருமணம் செய்வதில்லையாமே. அதனை தெரிந்துகொள்ளுங்கள். அன்சார் எனப்படும் நெசவாளிகளாக இருக்கும் முஸ்லீம் மக்கள் தாழ்ந்தவர்களாக வடதேசத்தில் கருதப்படுகிறார்களாமே. சுவனப்பிரியன் போன்றவர்கள் இந்த சாதிமுறை இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே தொடர்வதன் காரணங்களை விளக்கவேண்டும்.
    ஜனாப் சுவனப்பிரியன் ஜைன பவுத்த மதங்களை ஆரியம் விழுங்கிவிட்டது என்று வேறு அங்கலாய்த்திருக்கிறார். ஜனாப்ஜி உங்களைப்போன்றவர்கள் வரலாற்றை சரியாகப்படிக்கவில்லை என்பது புரிகிறது.பகவான் புத்தரும் பகவான் மகாவீரர்களும் ஆரிய புத்திரர்கள் என்று பௌத்த ஜைன நூல்கள் கூறுவதை ப்படித்துப்பாருங்கள். ஹிந்துப்பண்பாடும் ஸ்மாஜமும் தமக்குள் ஏற்பட்ட சீரழிவுகளைப், குற்றங்களை நீக்க தம்முள்ளிருந்தே மகானுபாவர்களை உற்பவிக்கவல்லன என்பதற்கு எடுத்துக்காட்டுகளே புத்தரும் மகாவீரரும். அவர்கள் ஏற்படுத்திய வழிகள் வைதீகத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும். அவர்கள் தர்மம் என்பதை போற்றுபவையே.

  18. தாய்மதம் திரும்புவது மிகவும் அவசியமானது அத்யாவசியமானது.சமூகப்பொருளாதாரப்பாதுகாப்பினை உறுதி செய்வதோடு ஹிந்து சமயத்தின் ஆன்மிகத்தின் தர்மத்தின் மேன்மையை அனைவரும் உணரச்செய்வதன் மூலம் அதில் நமது பரிவார அமைப்புகள் வெற்றி பெற்று வருகின்றன. அது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
    ஹிந்து சமயங்களின் சிறப்பு ஆன்மிகத்தில் சமூக வாழ்வில் ஏன் அரசியலில் ஹிந்துக்களுக்கு உள்ள சுதந்திரத்தினை கிறிஸ்தவ சமயம் பெரும்பான்மையினரது சமயமாகிவிட்ட பகுதிகளில் வாழுகிற உணர்வுடைய மக்களால் பெரிதும் உணரமுடியும்.ஆகவே சமூகவாழ்வில் மட்டுமன்று ஆன்மிகவாழ்விலும் சுதந்திரம் பெற்ற தாய்மதம் திரும்பிய மக்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறோம்.
    மேன்மைகொள் சனதான தர்ம நீதி ஓங்குக வுலகம் எல்லாம்

  19. The question raised by Suvanapriyan is valid and there is no direct answer other than creating one more caste with name or without name.

  20. ANNBARKALLUKKU NIKKAL AEN சுவனப்பிரியன் PONRAVARKKALUKKU PATHI KORI NERATHIAI VEENAKUUKIRIKKAL NAAM NAM VELLAIYAI PARTHUKKONDI IRUPPOM.

  21. இந்து என்பது மதம் அல்ல தர்மம். இந்து என்பது உலகத்துகே தாய் தர்மம் அதனால் உலகமே தாய் தர்மம் திரும்பும் நாள் விரைவில் நடக்கும். உலகமே தாய் தர்மம் திரும்பும். தீவிரவாதா முஸ்லிம் மதத்தை உலகில் தடை செய்வோம்.

  22. தாய் மதத்திற்கு திரும்புவோருக்கு நல்வாழ்த்துக்கள். அன்று அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப ஜாதி பாஹுபாடு நிலைத்துவிட்டது. இன்று காலம் மாறி யார் வேண்டுமானாலும் என்ன தொழிலும் செய்யலாம் என்ற நிலை வந்தாயிற்று. ஆனாலும், ஜாதி சான்றிதழ் கேட்கும் பழக்கம் நம்மை விட்டு மாறவில்லை. ஒன்றுபட்டு இந்த பழக்கத்தை மாற்றுவோம்!

  23. தாய்மதம் திரும்பியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள் . ஒருவர் இந்தசெய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று வினவியுள்ளார் ,இதற்கெல்லாம் கேள்விகேட்பார்,ஆனால் பாலைவனத்தில் எப்போதோ நடந்த தனிஒரு ஆள் சம்பந்தப்பட்ட சம்பவத்தை உண்மையா இருக்குமா? என்றெல்லாம் கேட்கமாட்டார் ஆராயவும் மாட்டார் அடுத்தவர்கள் , கேட்கவும் ஆராயவும் விடமாட்டார் .அதுபோக ,எந்தசாதியில் சேர்ப்பீர்கள் என்று வேறு கேட்கிறார்,கட்டுரையை ஆழமாக வாசிக்கமாட்டாரா, எல்லோருக்கும் பூணூல் போட்டு முறைப்படி தாய்மதம் சேர்த்தார்கள் என்றுதானே பத்திரிகையில் இருக்கிறது .
    எப்போதும் நுனிப்புல் மேய்வது — .கேள்விகேட்பது ,எதையும் ஏன் எப்படி என்று கேட்பது நல்லபழக்கம் தான் ஆனால் ,எதிராளியை மட்டுமல்ல, மனச்சாட்சியையும் கேட்கவேண்டும் . அவர்களெல்லோரும் சமமாக தாய் மதம் திரும்பியசாதியாக ஏன் சாதியே இல்லாதசமூகமாக இருந்துவிட்டு போகட்டுமே, சாதி இருந்தால் தான் உயிர் வாழமுடியுமா? உணவு செரிக்காதா? ஓ ;மத அரசியல்
    செய்யமுடியாதோ? பிறேமதாசன் திருமேனி .

  24. இஸ்லாமியர்கள் ஒரு சாதிக்காரர் மற்ற சாதிக்காரருக்கு பெண் கொடுப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *