ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது குறித்த தனது மௌனம் மூலமாக, இந்தியாவின் வரலாற்றுத் தருணம் ஒன்றைப் புறக்கணிக்கிறார் ஜெயலலிதா. பாஜகவுக்கு எதிராக எதிர்ப்பரசியல் செய்யும் கேரள, கர்நாடக, ஒரிஸா, மேற்கு வங்க முதல்வர்கள் தங்கள் வர இயலாமைக்கு சாக்குகளை தெரிவித்தது போன்ற சம்பிரதாயங்களைக் கூட தவிர்த்திருக்கிறார். அந்த முதல்வர்களின் நிலைப்பாடு இப்படி இருந்த போதும் கூட அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் பலர் தங்கள் விருப்பப் படி விழாவில் பங்கேற்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டு சர்வாதிகாரிணி தனது 37 ஏவல் அடிமைகளில் ஒருவர் கூட அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வேறு ஆணையிட்டிருக்கிறார்.

இந்தக் கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை. கடந்த கால கசப்புகளை விடவும் நிகழ் / எதிர் காலங்கள் பற்றிய கவலை தான் அவர்களிடம் முதன்மையாக உள்ளது. இந்த சூழலில் தமிழ் நாட்டின் முதல்வருக்கு எப்படி இது மற்ற அனைத்தையும் விட முக்கியமான *மைய* பிரசினை ஆகிறது?

jayalalitha1தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன? கண்டிப்பாக இல்லை. தமிழகத்தின் அதி முக்கிய சமூக பொருளாதார தேவைகளான வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, மின்சாரம், விவசாயம் ஆகியவற்றில் மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வார் என்பதற்காகத் தான். இதன் பொருள் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும் என்று தமிழக வாக்காளர்கள் நினைக்கிறார்கள் என்பதல்ல. ஆனால், அவர்களது பட்டியலில் *முதன்மையான* தேவை மேற்சொன்ன விஷயங்கள் தான். அதற்கும் அடுத்து வருவது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நல்வாழ்வு. அதற்கும் அடுத்து கீழே வேண்டுமானால் “ராஜபட்சே ஒழிப்பு” ஒருவேளை வரலாம்.

இதை மறந்து விட்டு, தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார். இதே போன்ற அணுகுமுறையை இனிவரும் நாட்களிலும் அவர் கடைப்பிடிப்பாரானால் தன்னை நம்பிய தமிழக மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலையைச் செய்தவராவார். 2009 இலங்கைப் போரின் போது கூட, ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு திரைப்படம் பார்த்துக் களித்துக் கொண்டு திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டளித்தவர்கள் தமிழகத்தின் சாமானிய வாக்காளர்கள். ஒருவகையில் அது தவறென்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் தங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத எந்த ஒரு விஷயத்திற்கும் சாமானிய மக்கள் முன்னுரிமை அளிப்பதில்லை, உலகெங்கும் அப்படித் தான் நடக்கிறது. அதுவே வரலாற்றின் நியதியும் கூட.

தமிழகத்தின் சாமானிய மக்களிடம் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள குறைந்த பட்ச பரிவும், நேசமும், நம்மவர்கள் என்ற பிணைப்பும் அற்றுப் போக வைக்கும் அளவுக்கு ஜெயலலிதா அரசின் தீவிர நடவடிக்கைகள் அமைந்து விடக் கூடாது. மோதியின் தலைமையிலான அரசு பதவியேற்றூக் கொள்ளூம் இந்தத் தருணத்தில் ஜெயலலிதா காட்டும் முரண்டு, எதிர்ப்பரசியலின் ஒரு குறியீடு என்ற அளவில் இருக்கட்டும். இது நீடித்த ஒன்றாக இருந்தால், இதனால் பாதிக்கப் படப் போவது தமிழகத்தின் மக்கள் மட்டுமே.

வரும் நாட்களில், இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது நல்லது நடந்தால், இலங்கை அரசு தமிழர் உரிமைகளையும் நலன்களையும் மதிக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுத்தால் (இது நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன்), அதற்கான ஒரே காரணம் மோதி தலைமையிலான உறுதியான இந்திய அரசு இலங்கை அரசுக்கு விடுக்கும் ராஜரீக எச்சரிக்கைகளாக மட்டுமே இருக்கும்.. அது மத்திய அரசின் உறுதியான வெளியுறவுக் கொள்கையின் சாதனையாக இருக்குமே அன்றி, தமிழக அரசியல்வாதிகளின் கூச்சலாலோ, நாம் டம்ளர் போன்ற உதிரி லும்பன் இயக்கங்களின் ஆரவாரத்தாலோ ஏற்பட்டதாக இருக்காது.

அத்தகைய நகர்வு எப்போது சாத்தியம்? அதற்கு முதலில் ராஜபட்சேவுடன் புதிய அரசு உட்கார்ந்து பேசக் கூடிய சூழல் உருவாக வேண்டும். பதவியேற்வு விழா அழைப்பு அந்த சூழலை உருவாக்குவதற்கான சிறந்த ராஜதந்திர நடவடிக்கை அன்றி வேறில்லை. சிங்கராஜன் காட்டில் முடிசூட்டிக் கொள்கையில் ஓரத்துப் புதர்களில் வாழும் ஓநாய்களையும் நரிகளையும் கூட அழைத்து வாலைச் சுருட்டிக் கொண்டிருக்க அறிவுறுத்துவது போன்ற செயல் இது.

எதிர்ப்பாளர்கள் என்னதான் நினைக்கிறார்கள்? ராஜபட்சே என்பது ஒரு நபர் மட்டுமல்ல, ஒரு மாபெரும் அரசியல் குடும்பம். அந்தக் குடும்பமே இலங்கை அரசியலில் அஸ்தமிப்பது வரையோ, (அல்லது சோழர்கள் பாண்டியர்களை முற்றிலுமாக “கருவறுத்தது” போல தமிழ் மாவீரர்களின் கற்பனைப் படை எழுந்து வந்து காடையர்களை கருவறுக்கும் வரையோ) ஒவ்வொரு இடத்திலும் போய் ராஜபட்சே ஒழிக கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருப்பது என்பது எதிர்ப்பரசியலுக்கு உதவும். ஆனால் இப்போதும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் நலனுக்கு ஒரு வகையிலும் உதவாது.

தமிழ் ஊடகங்களின் ஓலங்களுக்கு மத்தியில் தினமணி எழுதியுள்ள “பலிக்குமா மோடியின் ராஜதந்திரம்”, “வேண்டாமே விவாதம்” ஆகிய தலையங்கங்கள் நடுநிலையான பார்வையை வைத்துள்ளன

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

50 Replies to “ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?”

  1. ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா? — என்ன இப்படி ஒரு கேள்வி . சரிதான். ஆ தீ மு க எப்பொழுதெல்லாம் மத்திய ஆதரவோ அப்பொழுது எல்லாம் சனியன் தான் . MGR – மொரார்ஜி , சரண்சிங் / ஜெயா – ராஜீவ் , நரசிம்மராவ் .. போதும்டா சாமி . ஆ தி மு க இல்லாதா ஒரு மத்திய அரசுக்கு முதலில் நன்றி சொல்லுவோம் . ராசி அப்படி !!!!!

  2. சமூக நீதியை பலியிடாமல் பெரும்பாண்மை தமிழருக்கும் தமிழ் பிராமணர்களுக்கும் இடையில் உருவாகி வருகிற தவிர்க்க முடியாத சமரசத்தின் ஆரம்பபுள்ளியாகவே ஜெயலலிதா அம்மையாரை பார்க்கிறேன். அவர் அண்மையில் அணைத்து உலக தமிழர்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளார். 7 கோடி இந்திய தமிழர்களின் தலைவியாக உள்ளார். சீன பாகிஸ்தான் முகாமைச் சேர்ந்த இதுவரை 500 அதிகமான இந்திய தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்று வெறியாடிவருகிற 1.7 கோடி சிங்களவர்களின் ஆட்சியாளர்களைத் தண்டிக்காமல் திருப்திப் படுத்த 7 கோடி தமிழக தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்தும் உதாசீனம் செய்கிறது ஆபத்து அல்லவா. இதை உணர்த்துவதற்க்கு தமிழக அரசு எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனதே. அதுபற்றி பேசாமல் தமிழகத்தின் எதிர்ப்பை மட்டுமே விமர்சிப்பது சரியா?

  3. உண்மை தங்களின் கருத்து திரு முதலமைச்சர் அவர்கள் சிந்திக்கவேண்டும் சந்தோஷமான தருணத்தில்

  4. I feel TN CM is wrong in not going to Delhi; I dont thik the peole of Tamil NAdu would remove her from her post if she had gone to Delhi. Also, there are so many problems facing India; the fact many Hindus have come in spite of PAk minister’s presence . I am sure some of the delhites or kashmiris realtives lost their lives because of pak attack. TN CM should have htought of these points.

  5. மகிழ்ச்சியான நேரத்தில் ,, என்னை போன்று கருத்து எழுதுவது சிலருக்கு பிடிக்காது தான் , இருந்தாலும் தமிழ் ஹிந்து உணர்வுடன் சுதந்திர எண்ணமுடன் எழுதுகிறேன் ,,,, ஜெவின் நடவடிக்கை சரியே ,,, அப்பாவி தமிழர்களை கொன்றவருக்கு இப்போது அழைப்பு அவசியாமா? தமிழர்கள் உணர்வற்றவர்களா ? ஸ்ரீ .அத்வானிஜி 5 வருடம் முன்பு நாடாளும் மன்றம் முன்பு லங்கா தமிழருக்கு போராட்டம் நடத்தி காங் மிக கடுமையாக எச்சரித்தஆர் … அதை தான் நான் எதிர் பார்கிறேன் ,, தொண்டனாக மக்களின் உணர்வை அறிந்து சொல்கிறேன் ,,, கீழ் மட்டத்தில் தொண்டு பனி செபவர்களுக்கே வேலை செய்ய கடுமையாக இருக்கும் ,,, விருப்பம் இல்லாமல் இருக்கும் ,,, ஹிந்து தமிழன் லங்காவில் சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்தி வரவேற்று இருந்தால் என்னை போன்றவர்கள் வேலை செய்ய சுலபமாக இருக்கும் ,,, நாம் நேரம் , உடல் , பொருள் இழந்து வேலை செய்து பொறுப்புக்கு வரும் தலைவர்கள் ,,, அடி மட்ட தொந்ண்டர்களின் உண்மையான கருத்துக்கு ,,,,,, வாழ்க பாரதமாதா ,,,,, v

  6. இன்றையா துக்கம் நாளை சந்தோசமாக மாற்ற திரு. பிரதமர் ஜி நடவடிக்கை எடுத்தால் அளவற்ற மகிழ்ச்சி வரும் ,,,, அன்று வரை துக்கத்தை மனதிலே சுமப்போம் ,,,,,, வேறு வழி இல்லை ,,,

  7. நமது கட்டுரையாளர் திரு ஜடாயு அவர்கள் கேட்டிருக்கும் கேள்வி அனைவர் மனத்திலும் இருக்கிறது என்றாலும் ராஜபக்சே கலந்து கொள்ளும் ஒரு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது என்பது மிக்க நெருடலான விஷயம். இலங்கை தமிழருக்கு ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கவும், அவர்கள் அமைதியாக இனிமேலாவது வாழவும் இலங்கை அரசுடன் தொடர்பு இருப்பது நல்லதே. சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் காணாமல் போயும், இறந்தும், உடல் உறுப்புக்களை இழந்தும் சொல்லமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    பிரபாகரனை இலங்கை ராணுவம் கொன்றதற்கு யாரும் வருந்தவில்லை. ஏனெனில் அவர் துப்பாக்கி ஏந்திய போராளி. பிரபாகரன் மகனையும், மனைவியையும், மகளையும் கொன்றார்கள். செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவையும் கொன்றார்கள். வெள்ளைக் கொடியேந்தி வந்தஅரசியல் பிரிவுத்தலைவர் நடேசனைக் கொன்றார்கள். இவ்வளவு படுகொலைகளும் 5/2009 தேர்தல் முடிந்தபின்னர் தான் நடந்துள்ளன. இந்த படுகொலைகளுக்கு முன்னை நாள் சோனியா காந்தி தலைமையிலான யூ பி ஏ அரசும், அந்த அரசுக்கு சொம்புதூக்கிய முக, திருமா, சுபவீ போன்ற துரோகிகளும் மட்டுமே காரணம். ராஜபக்சே தமிழனின் எதிரி. ஆனால் இவர்களோ தமிழனின் துரோகிகள். எனவே தமிழக மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதுதான் நம் மக்கள் வெளிப்படுத்தினர். சார்க் அமைப்பின் பிரதிநிதிகளை அழைக்கிறேன் என்ற பெயரில் ராஜபக்சேயை அழைத்திருப்பது ஒரு தவறான போக்கு மட்டுமே. உடனே பாகிஸ்தான் பிரதமரும், இலங்கை அதிபரும் சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்துள்ளனர் என்பது ஒரு லாபமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன மதிப்பு ? அந்த தீர்மானத்துக்கு என்ன பதில் ? இது தமிழக சட்டசபையை அவமதிக்கும் செயல் தான். ராஜபக்சேக்கு தண்டனை வாங்கித்தருவது நமது நோக்கம் இல்லை என்று சொன்னால் , நீதி அமைப்புக்கள் உலகில் இருப்பதே பெரும் பாரம் என்று ஆகிவிடும். இவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்தில் , ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கும் முன்னர் தமிழக அரசுடன் மற்றும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீர்வு எட்டியிருந்திருக்க வேண்டும். நரேந்திர மோடி தமிழகத்துக்கும் சேர்த்துத்தான் பிரதமர் என்பதை கட்டுரையாளர் மனதில் கொண்டால் , ஜெயா மீது குற்றம் சொல்லியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. தமிழகத்துக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை கேவலமாக யாரும் நினைத்தால் அவர்களை நினைத்து வருத்தப்படுவதை தவிர ஒன்றும் சொல்ல முடியாது.

    ஒரு இனப்படுகொலை செய்த அதிபரின் மீது ஐ நா விசாரணை செய்யவேண்டும் என்று தீர்மானம் இயற்றி சட்டசபை மூலம் இயற்றப்பட்ட தீர்மான நகல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் பேரை படுகொலை செய்த அந்த அதிபர் மீண்டும் ஒரு இரண்டு லட்சம் பேரை வதை செய்து வருகிறார் என்பது கூட நமது இந்திய அரசின் வெளியுறவு துறைக்கு தெரியவில்லை. இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு, புத்தவிகாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழர்களின் நிலம் பறித்து எடுத்துக்கொள்ளப்பட்டு சிங்களவர்களை அங்கே குடிவைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் ஒரு நியாயமான தீர்வு கிடைத்தபின்னரே , அந்த அதிபரை அழைப்பதை நம்மால் ஏற்கமுடியும்.

    நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். ஆனால் தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானம் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காத மண்ணு மோகன் அரசால் தான் இந்த இழிநிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மத்தியில் இருந்த துரோகி சோனியா அரசினால் ஏற்பட்ட தீமைகள் விலக இன்னும் முப்பது ஆண்டுகள் ஆகும். சோனியா செய்த துரோகங்களுக்கு தலையாட்டி பொம்மையாக இருந்த மன்மோகன் சிங்கும் அவருக்கு ஊழியம் செய்த தமிழக ஏஜெண்டுகளையும் நாம் என்றும் மன்னிக்க மாட்டோம்.

  8. ஜெயலலிதாவிற்கு 37 எம்பிக்களை வைத்துக் கொண்டு மத்திய அரசை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தினால்தான் போகவில்லையே தவிர, வேறு காரணம் ஏதுமில்லை.

  9. ஜெயாவுக்கு அந்த ஆதங்கம் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் மந்திரி சபையில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று வருத்தம் இருந்தாலும், இந்த ராஜபக்ஷே நெருடல் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஜெயா அவர்கள் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருப்பார். ஆனானப்பட்ட ரஜினி கூட பதவி ஏற்புக்கு போகாமல் பயந்து ஓடியதன் காரணம் ராஜபக்ஷே கலந்துகொள்ளும் விழாவில் தானும் கலந்து கொண்டால் கோச்சடையானுக்கு நிச்சயம் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பாதுகாப்பு உணர்வுதான். தனித்து நின்று 37 இடம் வாங்கியதும் , திமுகவை சைபர் ஆக்கி விட்டதும் அம்மாவின் சாதனைப் பட்டியலில் என்றும் இடம் பெறும். திமுகவை முற்றிலும் கலைஞரே அழித்து ஊற்றிவிட்டார். எனவே திமுக வைத்திருந்த இரண்டாம் இடம் காலியாகத்தான் இருக்கிறது. அதனை பிடிக்க பாஜகவால் நிச்சயம் முடியும். மீண்டும் விஜயகாந்த் , ராமதாஸ் பின்னால் அலையாமல் அவர்களை பாஜகவில் சேர சொல்லி , பாஜகவை பலப் படுத்த வேண்டும். விஜயகாந்த், ராமதாஸ் இருவருமே மாநில முதல்வர் பதவியை பிடிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள். எனவே அவர்களுடன் கூட்டு சேர்ந்தால், சட்டசபை தேர்தலில் பாஜக கோவிந்தா கோவிந்தா தான். அந்த கட்சிகளை கலைத்து பாஜகவில் அவர்கள் சேரத்தயார் ஆனால் அப்போது அவர்களை முதலமைச்சர் பதவிக்கு ஆதரிக்கலாம். ஒரே உரையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது..

  10. ஜெயலலிதாவிற்கு 37 எம்பிக்களை வைத்துக் கொண்டு மத்திய அரசை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தினால்தான் போகவில்லையே தவிர, வேறு காரணம் ஏதுமில்லை.
    Mr.R.Nagarajan,congrats, you hit the nail on the head. My sentiments are the same. I am waiting for the day when TN will be free of all these Kazagams. JJ is an obnoxious, egocentric individual with absolute lack of dhamic morals. She will sell TN if it improves her political standing without any qualms.

  11. இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடும் இங்குள்ள தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் . தொண்டை மண்டலம் என்று ஒரு பிரதேசம் தமிழ் நாட்டில் உண்டு என்று உங்கள் யாருக்காவது தெரியுமா ? அது மெதுவாக பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பதாவது தெரியுமா ? மூன்று நதிகள் – பெண்ணை, சேயாறு, பாலாறு – இவைகளைக் கொன்றே விட்டார்கள். முதலில் இவைகளில் நீர் வர ( மழை வந்தால்தான் என்பது எங்களுக்குத் தெரியும் ) எந்த கழக ஆட்சியாவது முயற்சி செய்துள்ளதா ? திருப்பூர் – கேட்கவே வேண்டாம். ஆகையால் இலங்கை இனப் படு கொலை பற்றி தாராளமாகப் பேசுங்கள். அதற்காக மத்திய அரசைப் பகைத்துக் கொள்வோம் என்ற பாணியிலேயே தான் செல்வோம் என்றால் தெற்கு வாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

  12. திரு கதிரவன் வணக்கம். தேமுதிக மற்றும் பாமக ஆகியவற்றுடன் கூட்டு சேரவேண்டாம் என்று சொல்வது முற்றிலும் சரியே. ஆனால் அவர்கள் பிஜேபி கட்சி உடன் சேருவார்கள் என்பது ஆகாத காரியம். அப்படி சேர்ந்தாலும் முன்பு ஜனதா கட்சி சேர்ந்தது போலாகும். “”கூடி பிரிவோம்””என்றாகிவிடும். அது வேண்டாம் ஆகவே அது பற்றி பேசி பயனில்லை. காங்கிரஸ் போல அடுத்தவன் முதுகில் ஏறி பயணம் செய்தால் 45 ஆண்டுகள் அல்ல 450 ஆண்டுகள் ஆனாலும் பிஜேபி கட்சி வளராது. ஆகவே முறையாக தீவிர பிரச்சாரம் செய்தால் தமிழ் நாட்டில் பிஜேபி தனித்து வளர வாய்ப்புள்ளது. அது தமிழக பிஜேபி தலைவர்கள் கையில்தான் உள்ளது. இனிமேல் எவனோடும் கூட்டு வேண்டாம். மதிமுக வோடு கொள்கையில் பிஜேபி ஒத்து போக முடியாது. அது எலியும் பூனையும் போல பிஜேபி யும் பாமகவும் கூட்டு என்பது எண்ணெயும் தண்ணீரும் போல. விஜயகாந்த் ஒரு மண் குதிரைக்கு சமம். அவர் wavering mind உள்ளவர். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பவர். கூட்டணிக்கு முன்பு ஆடாத ஆட்டம் ஆடுவார். படாத பாட்டை படுத்துவார். ஆனால் கூட்டணி அமைந்து வேண்டிய சீட் கிடைத்தபின் பாடாத பாட்டுகளை பாடுவார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து கூட இருந்தே குழி தோண்டுபவர். பிஜேபி உடன் கூட்டணி வைத்து கொண்டு அவரது புதிய தலைமுறை டிவி யில் பிஜேபி க்கு எதிரான பச்சை துரோகிகளை அந்த பச்சமுத்து அழைத்து கண்டபடி பேசவைத்தார். ஆகவே தனித்து நின்று வளர்வதுதான் தான் நல்லது அதற்கான் வழிகளை வகுக்கவேண்டும். மோடிதான் நமக்கு முன்னுதாரணம். அவரது பிரச்சாரம் மூலம் எண்ணி பார்க்க முடியாத இடங்களில் (அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம்) கூட வெற்றி பெற முடிந்துள்ளது. என்ன ஒரே ஒரு குறை. நாம் இவ்வளவு கருத்துக்களை இங்கே கூறுகிறோம். ஆனால் அதை காதில் வாங்குவார்களா இந்த தமிழக பிஜேபி காரர்கள் என்பதுதான் ஒரு பெருத்த சந்தேகம். அவர்கள் மட்டும் சரியான யோசனைகளை கேட்டு சரியான (மோடி) பாதையில் சென்றால் நாளைய தமிழகம் நமதே. நமஸ்தே!!

  13. ஜெயலலிதாவிற்கு 37 எம்பிக்களை வைத்துக் கொண்டு மத்திய அரசை ஆட்டிப் படைத்து அதன் மூலம் தன்னைச் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கம்தானே அல்லாது, மக்கள் நலன் என்பதெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை.

    அவருக்கு வேண்டியது ஒன்றே ஒன்று ……. விடுதலை, விடுதலை, விடுதலை

  14. ///JJ is an obnoxious, egocentric individual with absolute lack of dhamic morals.///

    நிதானமாக யோசித்தால் ஜெயலலிதாவுக்கும் ஹிரண்யகசிபுவுக்கும் உள்ளா ஒற்றுமைகள் புரியும்.

  15. She already moved on to election 2016 — Priority is move the Tamilians in the emotional state and rig their votes — Still we are paying for remving Kamaraj. One of friend well educated, they are emotionally charged with issue — No one realise the prabakar killed more Tamilians than anyone. He ruined all the Tamilians in TamilNadu and created an image that Tamilians or not Indians. Our friends in North India look at us as different — they willing to accept pakisthanis who could able speak their languare and they are not willing to accept us — Probably all tamilians ask electricity, water from SriLankan Tamils

  16. இந்த அம்மையாரும் மம்தாவும் ஒன்று வலது என்றால் மற்றொன்று இடது. ஆணவம் மற்றும் அகம்பாவ சின்னங்கள். இந்த அம்மையாருக்கு என்ன ஈகோ என்றால் மோடி குறைந்த எண்ணிக்கையில் ஜெயித்து அரசமைக்க ஆதரவு கேட்டு இவரிடம் வந்து கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தார். காரணம் மோடியின் தமிழக் பிரச்சாரம். கடைசியில் வீறு கொண்டு எழுந்த கூட்டணி பிரச்சாரம். இதில் கல்வரம் அடைந்த ஜெ. ஒரு கட்டத்தில் ரஜினி,மற்றும் விஜய் இவர்களை சந்தித்தது இன்னும் ஆத்திரம் கொள்ள வைத்தது. 37 இடங்களில் வெற்றி பெற்றும் நாய் பெற்ற தெங்கம் பழம் என்கின்ற கதையாகிப்போன ஆதங்கம். எல்லாம் சேர்ந்து எதடா சாக்கு என்று இருந்தவருக்கு ராஜ்பக்‌ஷ விஷயம் கிடைத்தது. வை.கோ போன்ற தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு என்பது நடைமுறையாகிப்போன விஷயம். ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் இருந்து புலிகளையும், ஈழப்பிரச்னையையும் விமர்சித்து வந்தவர். கருணாநிதிக்காக இந்த விஷயத்தில் வெற்று அர்சியல் நடத்தி வருபவர். கொல்லப்பட்ட ஈழமக்களுக்காக உண்மையில் வருந்துபவர் என்றால் நெடுமாறன் அமைத்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏன் இடிக்க வேண்டும்? எந்த ஒரு விஷயத்திலும் வேறு யாரும் பெயர் வாங்கிவிடக்கூடாது என்பதில் இவர் ஒரு ஈகோயிஸ்ட். இவர் விரைவில் இன்கம்டாக்ஸ் வழக்கிலும்,சொத்து குவிப்பு வழக்கிலும் தண்டனை எதிர்கொள்ள இருக்கிறார். இது இவரின் ஆணவதிற்கு கிடைக்கும் சம்மட்டி அடியாக இருக்கும்.

    (Edited and published)

  17. தமிழகத்தில்பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய திரு ஹானஸ்ட் மேன் அவர்களின் மறுமொழியை படித்தேன். அவரது கருத்தினை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

  18. ‘ இவர் விரைவில் இன்கம்டாக்ஸ் வழக்கிலும்,சொத்து குவிப்பு வழக்கிலும் தண்டனை எதிர்கொள்ள இருக்கிறார்.’-

    இந்த தளத்தில் எதிர்காலப்பலன் சொல்லும் ஜோதிடர்களுக்கான பகுதி ஆரம்பிக்கப் படவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்டால் திரு பி ராமமூர்த்தி அவர்கள் அங்கு பலன்களை எழுதலாம். நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுக்கும் என்று முன்கூட்டியே உணரும் சக்தி யாருக்கும் கிடையாது. அப்படி இருந்தால் , அந்தமாதிரி பிரமுகர்கள் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பதை சரியாக சொல்லி இருப்பார்கள். பெங்களூரில் இருந்துவரும் ஒரு மாத ஜோதிடப்பத்திரிக்கையில் ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரையை எழுதி, அருண் ஜெட்லி அல்லது சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே இந்திய பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு வருடம் முன்னரே எழுதினார்கள். அதனை எழுதிய ஜோதிடரும் எனது பெருமதிப்பிற்குரிய நான் தெய்வம்போல மதித்து வணங்குபவர். இன்று மோடி அவர்கள் பிரதமர் ஆனபின் அந்த ஜோதிடமும் பொய்த்தது. எனவே திரு பி இராமமூர்த்தி அவர்களின் ஜோதிடம் சரியாக வருமா என்பது யாருக்கும் தெரியாது.

  19. ஒரு மாநில முதலமைச்சர் தன் மேல் போடப்பட்ட வழக்கை 12 வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கிறார் என்றால் இதிலிருந்தே அவரைப்பற்றி தெரிந்துகொள்ள முடியாதா. இங்கு யாருக்கும் யாரும் ஜொசியம் சொல்ல வரவில்லை. தர்மம் என்ற ஒன்று இருக்குமானால் இவர் தண்டிக்கப்படுவது நிச்சயம். இப்படி இழுத்தடிக்கலாம் என்று ஒரு சாதாரண பிரஜைக்கு ஒரு முதல்வராகப்பட்டவர் முன்னுதாரணமாக இருக்க்லாமா?

  20. JJ has taken the right decision in not attending the swearing-in. As pointed out, Modi is the PM for the whole country which includes TN. He should have realised that this is a very sensitive issue for the tamils & not acted in haste.

    If you say that JJ, by not attending the sweaing-in has antagonised modi, it is laughable. That means you are admitting that Modi also will succumb to petty politics?

    JJ had clearly stated that she wants to be on good terms with the centre to fulfill the needs of TN. She has single handedly fought or the rights oif tamils in the mullai periyar & cauvery water issues, inspite of non cooperation from the central govt.

    There was no Modi wave in TN. The people wholeheartedly supported JJ & gave a thumbs up to her govt performance.

    The BJP will never be able to make a dent in TN politics. At best, it can play second fiddle to the dravidian parties, like the congress.

  21. நாம் ஒவ்வொருவரும் பிறரை எடைபோடுவது தேவை அற்றது. ஆனால் அதேசமயம் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் விதத்தில் ஒருவரின் செய்கை அமைந்தால் அதனை கண்டிப்பது நியாயமானது. திரு பி இராமமூர்த்தி அவர்களின் கருத்து வன்மையாக கண்டிக்க தக்கது. நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரித்துவரும்போது, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னரே அந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று எல்லோரும் தனிப்பட்ட முறையில் அவரவர் விருப்பப்படி கனவு காணலாம். ஆனால் அந்த கனவினை பொதுவான விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் எழுத்தில் வெளிப்படுத்தக்கூடாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்- ‘ don’t wash the dirty linen in public’- நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னரே அவருக்கு தண்டனை கிடைக்க இருக்கிறது இவருக்கு தண்டனை கிடைக்க இருக்கிறது என்று எழுதுவது ஒரு contempt of court – போன்றதாகும். இவர் சொன்னபடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினால் இவர் என்ன செய்யப்போகிறார் ? தேவ கவுடா போல நரேந்திர மோடி பிரதமராகிவிட்டால் , நம் நாட்டை விட்டு ஓடப்போகிறேன்/ கர்நாடகத்தை விட்டு ஓடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு , டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பில் பங்கேற்றதைப் போல , ஐவரும் ஏதாவது செய்யப்போகிறாரா ? வெறுமனே எழுதினால் எப்படி ? ஏதாவது செய்யுங்கள் திரு பி. இராமமூர்த்தி அவர்களே . ஒரு வழக்கைப் பற்றி விமரிசனம் செய்யும் முன்னர் அந்த வழக்கைப் பற்றிய சாதக பாதகங்களை சட்ட ரீதியாக அலசி எழுதுதல் முறை. அதனையும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுதக்கூடாது. பண்பான முறையில் செய்ய வேண்டும். அய்யகோ !

  22. Tamilnatil B.j.p valara vendum endral muthalil hindu makkalidam otrumai vendum.atharku naam seiyavendiya ore kariyam muthalil hinduthuva thai patri veedu veedaga sendru ovvoru makkalidamum koora vendum.inum nam tamil natil hindu tharmam endral enna endre theriyamal etthanaiyo hindukal ullanar.ithai yellam seithaley B.j.p thanaga valarum.

  23. திரு.ஜடாயு அவர்களின் கருத்துடன் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன்.தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வியாதிகள் எல்லாம் இலங்கைத் தமிழர்களை ஒரு நாளும் நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்.’அனுகூல சத்தருக்கள்’ ஆக்கபூர்வமாக தானும் செய்யாமல் மற்றவர்களையும் செய்ய விடமாட்டாகள்.
    சுருக்கமாகச் சொன்னால் ‘உணர்ச்சி வயப்பட்ட முட்டாள்கள்”

  24. தமிழ் நாட்டு சர்வாதிகாரிணி தனது 37 ஏவல் அடிமைகளில் – என்ற வார்த்தைகள் தமிழக வாக்காளர்களை அவமதிப்பதுபோல் உள்ளது.1998க்குப்பிறகு தமிழக மீடியாக்களைப்போல் ஜெ யை எதிர்ப்பதுதான் அறிவாளித்தனம் என்பதில் தமிழக அரசியல் இந்துத்தவ்ர்களும் தற்போது ஜெ யை இந்து விரோதி என அடையாளபடுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இங்கு மட்டும் அல்ல மே.வ த்திலும் மம்தாவையும் இந்து விரோதி என அடையாளப்படுத்துவதில் வெற்றி. ஆனால் TN,WB யில் உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும் மோதிதான் பிரதமராக வ்ருவார் என்று பின் ஏன் அதிக ஓட்டு வித்தியாசித்தில் admk,tmc ஜெயித்தது.கருணாநிதி மாதிரி சோற்றால் அடித்தபிண்டங்கள் என் கூறலாமா?WB யில் 30 வருடங்களாக முற்போக்கு,இடதுசாரி,மார்க்கீஸ சுருக்கமாக் பூணூலிஸ்ட்கள் நடத்தியது கொலை அரசியல் அதை ஓடுக்கியவர் மம்தா ஆனால் அதை செய்ய வேண்டியவர்கள் பாஜக வினர் ஆனால் மம்தா வை எதிர்த்து அவரை மெல்ல மத சிறுபான்மை அரசியல் பக்கம் தள்ளிவிட்டுவிட்டார்கள் so WB யில் பாஜக விற்கு ஓட்டளிப்பது பூணுலிஸ்ட்கள் வளரவே உதவும்.அதைப் போல்தான் இங்கும் பாஜக கூட்டணிக்கு ஓட்டளிப்பது திமுக பல இடங்களில் வெற்றி பெற உதவியிருக்கும் இந்த யதார்த்த உண்மையை திரு.சோ அவர்கள் கூறப்போக அவருக்கு இணைய இந்துததவ்ர்களால் செம டோஸ் .மீண்டும் சில லாபிகள் மூலமாக மு.க- தே.ஜ.கூயில் இணைந்திருப்பார்.தமிழக பாஜக கூட்டணி உருவானதே பாஜக விற்கு வெளியே உள்ள சில லாபிகளால்தான்.அவர்களது நோக்கம் மோதியை ஜெயிக்க வைப்பது அல்ல அவ்ர் வடக்கே ஜெயிச்சுக்குவார் இங்கு ஜெ க்கு ஜெக் வைத்து மு,கவிற்கு வாழ்வளிப்பது. இலங்கையில் LTTE யை ஆதரிக்காதவர்கள் தமிழின் விரோதிகள் என்பதை மறைமுகமாக தமிழகத்தில் உருவாக்குவத்துதான் தமிழின அரசியல் ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்த்து போர் நடத்தும் அளவிற்கு எங்கிருந்து அவர்க்ளுக்கு ஆயுதபலம் கிடைத்தது அது சர்வதேசிய ஆயுத அரசியல் உண்மையில் அகதிகளாக உள்ளவர்களால் இவ்வளவு பணம் கொடுக்கமுடியுமா?அதைப்பற்றி வேண்டாம். தமிழகத்தில் அண்ணாதுரை உருவாக்கி மு.க வழியில் இடையில் எம்.ஜி.ஆரால் சறுக்கி உருவான அதிகாரத்தை பிடிக்கும் தமிழ் அரசியல் தற்போது பிரிவினை வாதமாக மாறுகிறது..ஆனால் சிவிலியன்களை கொன்றாவது தீவிரவாதத்தை ஒளிக்கமுடியும் என ஒரு ஜனநாயக நாடு கருதலாமா?பக்கத்திலிருக்கும் நாடுகள் அதை வேடிக்கை பார்க்கலாமா?அதன் பிறகும் நூற்றுக்கணக்கானவர்கள் நம் நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதை பெரும்பான்மை மக்களல் வெற்றி பெற்றவர் மறந்து விட வேண்டுமா?அல்லது தகுந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டாமா?மேலும் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு பிறகு, மு.க வுடன் கூட்டணி என பல கேள்விகள் கேக்கலாம். ஆனால் வேண்டாம் ஜெ க்கு ஓட்டளித்தவர்கள் முட்டாள்கள் என கூறி பிரிவினை அரசியல் பக்கம் தள்ளிவிடாதீர்கள்.

    “தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன? கண்டிப்பாக இல்லை. தமிழகத்தின் அதி முக்கிய சமூக பொருளாதார தேவைகளான வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, மின்சாரம், விவசாயம் ஆகியவற்றில் மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வார் என்பதற்காகத் தான்” – இதற்கு ஏன் ஜெ க்கு ஓட்டளிக்கவேண்டும் நேரடியாக பாஜக கூட்டணிக்கே ஓட்டளித்திருப்பார்களே?
    சிலருக்கு வருத்தமிருக்கலாம் அனைவரின் அன்போடும்தான் வளர்ச்சி பெறமுடியும் எம்ஜியார்,ராம்கிருஷ்ண ஹெக்டே போன்றவர்கள் மக்களின் அன்போடு வென்றவர்கள். இன்று நல்ல மனம் படைத்த, உறுதியான் தலைவ்ர்கள்தான் தேவை. புத்திசாலிகள்,அறிவாளிகள்,கொள்கை கோமான்கள் — சித்தந்திகள் என்ற போர்வையில் உலவும் அரசியல் கொள்ளையர்கள் அல்ல.எனவே தமிழக பாஜக வினர் லாபி அரசியலை விட்டு அமைப்பை சரி செய்து கொள்கைக்கு இணக்கமானவர்களை இனம் கண்டு வெற்றியடைய இறைவனை பிரார்திக்கிறேன்

  25. தமிழ் நாட்டு அரசியலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. சிங்களவர்களின் கொடுமையை மட்டும் நமக்கு நினைவு படுத்திக் கொண்டிருப்பதனால் தமிழர் எல்லோரும் இந்த அரசியல் போக்குக்குத் துணை போகவேண்டிய அவசியம் ஆகிவிட்டது. இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொலை செய்தது வேறு, அங்கு உள்நாட்டுப் போர் நடத்திய விடுதலைப் புலிகளை அழித்தது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் புரியாததாலும், தமிழர் தலைவர்களில் மரியாதைக்குரிய பெரியவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இலங்கையை ஒரு எதிரி நாடாக கருதுவதாலும், என்னதான் மோடி அவர்கள் மீது அம்மாவுக்கு நல்லெண்ணம் இருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கருத்துக்கு எதிராக நடந்து கொண்டு பதவி ஏற்பு விழாவுக்குப் போனால் இங்கு தன்னுடைய அரசியல் ஏற்றத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதுதான் அவர் போகாததற்குக் காரணம். இன்னும் ஒரு சில நாட்களுக்குள் மோடியைப் பொய் அவர் பார்ப்பது உறுதி. இன்னொரு காரணமும் உண்டு. இவர் போனால் அங்கு இவருக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர் இவர். அங்கு பல அயல்நாட்டுத் தலைவர்களும் அகில இந்திய தலைவர்களும் வருகின்றபோது இவருடைய முக்கியத்துவம் அங்கு இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதைத் தவிர்க்கவும் இவர் டெல்லி போகாமல் தவிர்த்திருக்கலாம். இது என்னுடைய கருத்து. இதில் உடன்பாடு இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தொடர் விவாதத்தில் எனக்கு விருப்பம் இல்லை.

  26. //ஐயாறப்பன் on May 26, 2014 at 8:15 pm
    இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு, புத்தவிகாரங்களாக மாற்றப்பட்டுள்ளன.//

    இந்து ஆலயங்கள் மிகுதி ஏதாவது இன்னும் இலங்கையில் இருக்கின்றதா!!!!!
    கொடூர புலி பயங்கரவாதிகள் அழிக்கபட்ட நாளில் இருந்தே கிறிஸ்தவ மதமாற்றிகளால் ஆரம்பிக்கபட்டு இந்தியாவில் மட்டும் செய்யபடும் பரப்புரை.
    https://www.infolanka.com/news/IL/1326.htm

  27. \\ The BJP will never be able to make a dent in TN politics. At best, it can play second fiddle to the dravidian parties, like the congress. \\

    dravidian parties!!!

    DMK is totally corporatised. The thondan or gundan of DMK has no role to play. The party work has totally been outsourced. In DMK democracy is for money by money of money. It is just a matter of time, when Karunanidhi kicks the bucket …………. the world would see the blast of this baloon. This election has seen the beginning of the end of the evil force of tamizhnadu. The story is not much different with respect to JJ.

    What is foremost important is the safety and well being of tamils of tamizhnadu and Ezham. And the flexboard part time shouting brigade is more concerned about showing themselves than having any concern for the hapless tamizh people.

    Have anybody heard a murmur about the fishermen released. Have any flexboard brigade people done anything worthwhile in real terms for the welfare of tamizh people?

  28. ராமமூர்த்தி அவர்களே ! சர்க்காரிய கமிசன் தீர்ப்பு என்ன ஆனது ! தர்மம் எங்கே போனது ! இன்று ஸ்பெக்ட்ரம் வரை வந்து விட்டது ! ஜெ கலந்து கொள்ளாதது நல்ல முடிவு . இல்லை என்றால் !தனக்கு தானே ! கேள்வி பதில் எழுதி பொழுதோ ஓட்டி கொண்டு இருக்கும் தாத்தா , பிரச்சனையை கிளறுவார் . தமிழ் நாடு நிலையை அறிந்து ரஜினியும் கலந்து கொள்ள வில்லை . மோடி — ஜெ நீண்ட கால நண்பர்கள் , தமிழகத்தின் தேவையை மோடி நிறைவு செய்வார் . படுதோல்வி அடைந்தவர்கள் புலம்பி என்ன பயன் ?

  29. moulisaran
    “சுருக்கமாக் பூணூலிஸ்ட்கள் நடத்தியது :
    So, you are also one of the run of the mill brahmin basher.
    Then you wax lyrical here
    “அனைவரின் அன்போடும்தான் வளர்ச்சி பெறமுடியும் ”
    Enough said.

  30. 30 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பன்மையோடு ஒரு மத்திய அரசு அமைந்துலதற்கு நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதிமுக ஆதரவோடு மத்திய அரசு அமைந்திருந்தால் அந்த அரசு 6 மாதங்களுக்கு மேல் இருந்திருக்காது.

  31. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு யாரிடம் பேச போகிறார்கள் ? ராஜபக்சேயிடம்தான் பேசவேண்டும் . அப்பொழுதுதான் ஒரு நல்ல தீர்வு காண முடியும்.

  32. moulisaran –

    தங்கள் கடிதத்தில் நல்ல பல கருத்துக்கள் இருந்தபோதும் வார்த்தைபிரயோகம் அதாவது நீங்கள் பயன்படுத்திய சொல் தவறானது என்று கருதுகிறேன். பூணூல் அணிந்தவர் என்ற சொற்பிரயோகம் இந்திய மக்களில் பல சாதிகளை சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக குறிக்கும் ஒரு சொல் ஆகும். நமது கருத்து என்ன என்பதை சொல்லவேண்டுமே தவிர இது போன்ற பிரயோகங்களால் , நாம் சொல்லவந்த கருத்து சரியானதாக இருந்தாலும் ஏற்கப்படாமல் போகக்கூடும். நமது நோக்கம் நல்ல கருத்துக்களை பிறர் அறியச்செய்ய வேண்டும் என்பது தானே. சம்பந்தம் எதுவும் இல்லாமல் ஒரு சாராரையோ, ஒரு கூட்டணியையோ தாக்குதல் தேவை இல்லாதது.

    தமிழ் நாட்டு சர்வாதிகாரிணி தனது 37 ஏவல் அடிமைகளில் – என்ற வார்த்தைகள் தமிழக வாக்காளர்களை அவமதிப்பதுபோல் உள்ளது.- இது மிகச்சரியானது. கம்யூனிஸ்டுகள் மேற்குவங்காளத்தில் , ( தமிழகத்தில் 2006-மாநகராட்சி தேர்தலில் திமுகவினர் வாக்கு சாவடியை கைப்பற்றியது போல ) எதிர்க்கட்சியினரை அடித்து விரட்டி கள்ள ஓட்டுப்போட்டுத்தான் ஆட்சியை கைப்பற்றினர். கம்யூனிசம் என்பதே ஒரு ரவுடி சித்தாந்தம் தான். ஆனால் இதற்கு ஏனுங்க பூணூலை இழுக்கிறீங்க ? பூணூல் அணிந்தோர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக , அதிமுக, திரினாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிவசேனா, என்று எல்லாக் கட்சியிலும் உள்ளனர். மம்தா கம்யூனிஸ்டுகளுக்கு இணையான ரவுடித்தனம் செய்யும் கட்சியை நடத்துகிறார். அது பாராட்டத்தக்கது. ஏனெனில் மேற்குவங்காளத்தில் வைரத்தை வைரத்தால் அறுப்பது போல அரசியல் செய்கிறார் அவ்வளவு தான். இவ்வளவு ஏனுங்க பூணூல் ஓட்டு வாங்கித்தான் தமிழகத்துக்குல்லுக பட்டன் இராசாசி ஆதரவுடன் திராவிடக்கட்சிகளே அரியணை ஏறின. இராசாசி செய்த மூடத்தனங்களுக்காக எல்லா பூணூலையும் குறை சொல்வது தவறு. ஏனெனில் இராசாசியின் சுதந்திரா கட்சி என்பது பணக்காரர்கள் கட்சி. அவர் பேச்சை கேட்டு, கோயம்புத்தூர் ஜி கே சுந்தரம் போன்ற தொழில் அதிபர்கள் தான் ஓட்டுப் போடுவார்கள். அவர்கள் மக்கள் தொகையில் அரை விழுக்காடு கூட இல்லை. சொல்ல வந்த கருத்தை நன்றாக சொல்லியுள்ள தாங்கள் , இப்படி தேவை இல்லாத சொல்லை பயன்படுத்தியது வருந்தத்தக்கது. கோவை குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் பின்னர் நடந்த 1999- பாராளுமன்ற தேர்தலில் வன்முறைக் கட்சியான , கோவை வெடிகுண்டு தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பல உதவிகளை செய்த திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததால் தான் , தமிழகத்தில் அந்த கட்சி அநாதையானது.

  33. Srilanka hindu’s comments appearing above is utterly incorrect. Just because Rajapakse visited hindu temple does not mean that he and his government are not against hindus. When Rajapakse visits a hindu temple anywhere in SriLanka, priest should welcome him. If not priest will be taken by a “white van” on the following day and “disappeared” thereafter. Any one reads tamil newspaper published in SriLanka will know the amount of destruction of hindu temples and civilisation by the State Armed Forces and Buddhist monks. The destruction is going on since 1956 riots. Hundreds of Buddhist viharas are built during the last five years in Hindu areas where there are no Buddhists to worship. Monks are very active in propagating Buddhism among young hindus and the government and Army supports them. No hindu will protest in fear of arrest and ill treatment by the Army. Srilanka hindu could remain as a Rajapakse supporter, that is his choise, but he should not tell lies to remain as a supporter.
    I fully agree with Aiyarappan’s comments above. Thanks.

  34. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது – 1990 அத்வானி ரத யாத்திரை பீகாரில் தடுக்கப்பட்டவுடன், பாஜக ஆதரவு வாபஸ் ஆனதால், V P சிங் அரசு கவிழ்ந்தது. அப்போது துணைப் பிரதமராக இருந்த தேவி லால், ஒரு அழகான கருத்தினைக் கூறினார். அவர் கூறியது “நாம் எல்லோரும் சேர்ந்து அத்வானியை பிரதமர் ஆக்கி விடுவோம். அவர் அயோத்தி பிரச்னையை எவ்வாறு கையாள்கிறார் என்று பார்க்க வேண்டும்”.

    அதே போல், ஜெயலலிதாவை பிரதமர் ஆக்கி விடுவோம் – எவ்வாறு இலங்கை விவகாரத்தை கையாள்கிறார் என்று பார்க்க வேண்டும்.

  35. இந்தியா கண்ட சிறந்த பிரதமர்கள் என்றால் லால்பஹதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், நரசிம்ம ராவ் ஆகிய நாலுபேர் மட்டுமே. அதிலும் முதல் இருநபர்கள் அப்பழுக்கற்ற தலைவர்கள் ( கொஞ்ச காலம் காங்கிரசில் இருந்தவர்கள் என்ற போதும்) .சிந்தனை செயல் இரண்டிலுமே தூய்மையானவர்கள். கடைசி இருவரும் காங்கிரசில் இருந்தவர்கள் என்றாலும் பொருளாதார சக்கரத்தை சிறப்பாக இயங்க செய்த முக்கிய தலைவர்கள். திரு சந்திரசேகர் அவர்களை செயல்பட இராஜீவ் காந்தி அனுமதித்திருந்தால், தற்பொழுது நாம் எல்லோரும் எப்படி நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசுகிறோமோ, அதேபோல மத்திய அரசில் வியக்கத்தக்க மாறுதல்களை செய்து வரலாறு படைத்திருப்பார். அதனை கெடுத்து , தானும் பரலோகம் போனார் இராஜீவ் பிரான்.

    ஜெயலிதாவை பிரதமர் ஆக்கினால் தேசவிரோத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, இராசீவ் காந்தி ,மன்மோகன் சிங்கு ஆகியோரை விட சிறந்த பிரதமராக இருப்பார். மூன்றாம் அணி என்று சொல்லி நாற்காலியை தேய்த்த வி பி சிங்கு, தேவகவுடா, ஐ கே குஜ்ரால், ஆகிய கூத்தாடிகளை விட இவர் நிச்சயம் நல்ல பிரதமர் ஆக இருப்பார்.

    இப்போது திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆகிவிட்டதால் இனி அடுத்த 15 வருடங்களுக்கு மாற்று பிரதமரை பற்றி பேசி புண்ணியம் இல்லை. எல்லாம் வெறும் பேச்சாகி விட்டது. பிரச்சனைகளை இவரால் தீர்க்கமுடியுமா, அவரால் தீர்க்க முடியுமா என்பதனை விட, பிரச்சினைகள் தீரவேண்டும் என்பதே அனைவரும் விரும்பும் விஷயம். கஞ்சி குடித்தோ, பொங்கல் சாப்பிட்டோ, இட்டலி சாப்பிட்டோ எப்படியோ பசி அடங்கவேண்டும் அவ்வளவுதான். எதனை தின்றால் பித்தம் தெளியும் என்பது தான் நம் நாடு இன்று உள்ள நிலை. நிச்சயம் இந்தியாவுக்கு இறை அருள் கை கூடும்.

  36. Aiyarappan, please note that Late Prime Minister Shastri was responsible for the forceful expatriation of nearly five hundred thousand Ceylon Tamils from SriLanka to India, by entering into a pact with Srilankan Prime Minister Mrs Srimavo Bandaranayake. India was having difficult times with its neighbours and it does not want to antagonise Srilanka, hence Shastri commited this crime to maintain good neighbourly relations. These Tamils are not Indians. They were born and brought up in Ceylon. They did caste their vote in 1947 Parliamentary election. They are Ceylon citizens but ultra nationalist Ceylon politicians deprived their citizenship and voting rights. As any other big powers, India too killed its conscience for its self interest.

  37. அன்புள்ள ரிஷி அவர்களே,

    லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் செய்தது நிச்சயம் தவறுதான். அவர் குறுகிய காலத்திலேயே இறந்து விட்டதால், அவர் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் இல்லை. இலங்கை விவகாரங்களில் காங்கிரஸ் அரசுகள் நேருகாலம் முதல் டம்மி/ மம்மி மன்மோகன்சிங்கு காலம் வரை ஒரே மூளை இல்லாத , அழுக்குகள் மாதிரிதான் செயல்பட்டுள்ளனர். லால் பகதூர் பற்றி சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் , தமிழர்களுக்கு எதிராகவும் மட்டுமே மத்திய காங்கிரஸ் அரசுகள் செயல்பட்டு வந்துள்ளன. காங்கிரஸ் என்றாலே இந்திய விரோதம் என்பது சரியான பொருளாகி விட்டது. காங்கிரஸ் எப்போதுமே மனசாட்சியில்லாத ஒரு ஜந்து. ஒரு அயோக்கியர்களின் கும்பல் தான் அது. அதனால் தான் காந்தியார் சுதந்திரம் அடைந்தவுடன் , காங்கிரசை கலைத்து விட்டு வேறு பெயரில் அரசியல் கட்சி ஒன்றை புதியதாக ஆரம்பித்து நடத்திக்கொள்ளுங்கள், காங்கிரஸ் என்ற பெயர் வேண்டாம் என்று சொன்னார். அதனை சதிகாரன் நேரு கேட்கவில்லை. நேருவால் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானங்களும் , துயரங்களும் கணக்கே இல்லை.

  38. நான் அதிகம் இணைய்த்தில் எழுதுவதில்லை.எனவே கருத்துக்கள் கோர்வையாக் இராது. இருந்தாலும் எனது பின்னூட்டத்தில் பூணுலிஸ்ட் என்ற வர்த்தையை உபயோகப்படுத்தியது பலரை சங்கடப்படுத்தியிருக்கும் என நினக்கிறேன்,அதற்காக வார்த்தைகளால் அல்ல உள்ளபடியே உள்ளத்தினால் வ்ருந்துகிறேன்.

  39. நேற்று பத்திரிகைகளில் வந்த செய்தி வயிற்றைக் கலக்கச் செய்கிறது. BJP அரசு அஇஅ திமுக வின் 10 ராஜ்ய சபை எம்பிக்களின் ஆதரவுக்காக , ஜெயலலிதா கட்சிக்கு மந்திரி பதவி கொடுக்கப் போவதாக வந்த செய்திதான் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

    ஆண்டவனே, BJPக்கு நல்ல புத்தியைக் கொடு.

  40. திரு நாகராஜன் அவர்களே,

    இதிலே வயிற்றை கலக்குவதற்கு என்ன இருக்கிறது ? புனிதமான ஆன்மாவாகிய திரு மொரார்ஜி தேசாய் அவர்களையே தாக்கி பேசிய சிவசேனாவை பாஜக கூட்டணியில் வைத்துக்கொண்டு , எம் ஜி ஆர் கட்சியின் உதவியை பெறுவது ஒன்றும் பெரிய தவறு அல்ல. லோக்சபாவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் ராஜ்யசபாவுக்கு போகும்போது திரும்பிவராமல் இருக்க இப்படி மற்ற கட்சிகளின் உதவி பெறுவது தவறல்ல. இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை திரும்பி வந்த போது, அப்போது முதல்வராக தமிழகத்தில் இருந்த மஞ்சள் துண்டு , அமைதிப்படையை வரவேற்க செல்லாமல், இந்திய அமைதிப்படையை இழித்துப் பேசியது. அந்த மஞ்சள் துண்டுடன் பாஜக 1999-லே கூட்டு சேரவில்லையா ? எனவே சிவசேனா, மற்றும் திமுக வைவிட , எம் ஜி ஆர் கட்சி எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை. மேலும் ஒன்றை புரிந்துகொள்ள பணிவுடன் வேண்டுகிறேன். ஒரு முறை தவறு இழைத்த யாராயினும் , அந்த தவறினால் ஏற்பட்ட பின்விளைவுகளில் இருந்து பாடம் கற்றிருக்க மாட்டார்களா ? பாஜக , எம் ஜி ஆர் கட்சி இரண்டுமே கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றிருப்பார்கள். எனவே தங்கள் பயம் தேவை இல்லாதது. பாஜகவில் நல்லவர்கள் இருக்கிறார்கள், எம் ஜி ஆர் கட்சிக்கோ நல்ல மனிதர்களின் ஆதரவு இருக்கிறது. இருவரும் தேவைகளைப் பொறுத்து, அதாவது நாட்டு நலனைக் கருதி , தேவைப் படும் சமயங்களில் கூட்டணி அமைப்பது நாட்டு முன்னேற்றத்துக்கு நல்லது.

  41. https://lankanewsweb.net/news/7729-modi-debased-me-at-swearing-in-president-rages

    நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்புக்கு வந்த திரு ராஜபக்ஷே அவர்கள் இலங்கை திரும்பியவுடன் எப்படி இருக்கிறார் என்ற இந்த செய்தியை மேலே உள்ள தளத்துக்கு சென்று படித்து விட்டு , கருத்துக்களை எழுதுமாறு நமது வாசகர்களை வேண்டுகிறோம். மோடியா கொக்கா ?

  42. மனுஷி ஆசிரியர் மதுகிஷ்வர் , நீதிபதி வி ஆர் கிருஷ்ணையர் பரிந்துரைகளின் பேரிலும்,அரசியலமைப்புச்சட்டத்தின் படி அரசாங்கம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில், எளிய மக்கள் அனைவரும் மோடிக்கு வாக்களித்துள்ளனர்.
    சாவர்க்கர் தலித்களுக்காக போராடியிருக்கிறார்.
    புள்ளிவிவரப்படி இந்தியாவில் தினமும் 2 தலித் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.
    2 தலித்களின் குடிசைகள் கொளுத்தப்படுகின்றன.
    2 தலித்கள் கொல்லப்படுகின்றனர்.
    தமிழ் நாட்டில் பிஜேபி யின் கூட்டாளிகள்-
    வட மா வட்டங்களில்-மரக்காணத்தில் தலித்கள் மீது வன்முறையையை நிகழ்த்தி சட்டசபையில் மாண்புமிகு முதல்வரால் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மரு.ராமதாஸ் ன் பாமக,
    அருந்ததியர்கள் தலித் சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள்.அவர்களை எழ விடாமல் நசுக்க நினைக்கும் கொங்கு கட்சியினர்,
    கல்விவியாபாரத்தில் கொள்ளையடிக்கும் வள்ளல்பாரி அவர்கள்-சூப்பர், சூப்பர்.
    மாண்புமிகு முதல்வரை குறை கூற நினைப்பதே குற்றம் ஜடாயு அவர்களே..
    உங்கள் கூடாரத்தை கொஞ்சம் சரிசெய்து விட்டு தமிழக முதல்வர் பக்கம் வாருங்கள்.
    வழக்காட வசதியில்லாதவர்கள் தலித்கள்.
    அரசாங்கம் அவர்கள் பக்கம் நின்றாலொழிய அவர்கள் எந்த வழக்கிலும் நீதியைப்பெறமுடியாது.
    வன்முறையைப்பிரயோகிக்க நியாயம் கொண்டவர்கள் ஹரிஜனங்கள் மட்டுமே என்ற மகாத்மாவின் மந்திரவார்த்தைகளை மறைத்துவிடலாம் என்று கனவிலும் நினைக்கவேண்டாம்.

  43. எந்த அரசியல் கட்சியும் ஒன்றை ஒன்று விமர்சித்துக் கொண்டவைதான்.
    ஜெயலலிதா தன் சுயநலக் கோரிக்கைகள் ஏற்கப் படாதலால், 1999ல், வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தார்.

    1977 ஜனதா அரசு, 1989 தேசிய முன்னணி அரசு, 1998 மற்றும் 1999 NDA அரசுகள் , 2004 மற்றும் 2009 UPA அரசுகள் – இந்த அரசாங்களுக்கும் ராஜ்ய சபையில் பெரும்பான்மை இருக்கவில்லை. ராஜ்ய சபை MP ஆதரவுக்காக, யாரும் மந்திரி பதவி குடுக்கவில்லை.

    ஜனதா அரசு 1978ல், BSRB மசோதா ராஜ்ய சபாவில் தோல்வி அடைந்த போது, இரு அவைகளையும் கூட்டி , அதில் BSRB மசோதாவை நிறைவேற்றியது.

    2002 ல், NDA அரசு POTA மசோதாவையும், இரு அவைகளையும் கூட்டியே நிறைவேற்றியது.

    இதே வழிகளை இப்போதைய NDA அரசு பயன் படுத்த வேண்டும்.

    ஏற்கெனவே, பிஜேபி யில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு போதிய மந்திரிகள் இல்லை என்ற குறை உள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

    ராஜ்ய சபை ஆதரவுக்காக , மந்திரி பதவி கொடுக்க அர்ரம்பித்தால், மோதி கூறிய குறைந்த பட்ச அரசு என்ற கோஷம் தமாஷாக முடிந்து விடும்.

    முக்கியமாக, ஜெயலலிதா மாறியிருப்பார் என்று கூறினால், ஜெயலலிதாவே நம்ப மாட்டார்.

    கடவுள் ஒரு முறைதான் உதவுவார் (282 and 336). பிஜேபி தானே குழியில் விழ முயற்சி செய்தால் (ஜெயலலிதா ஆதரவு ), கடவுள் உதவிக்கு வரவே மாட்டார்.

  44. //நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்புக்கு வந்த திரு ராஜபக்ஷே அவர்கள் இலங்கை திரும்பியவுடன் எப்படி இருக்கிறார் என்ற இந்த செய்தியை மேலே உள்ள தளத்துக்கு சென்று படித்து விட்டு , கருத்துக்களை எழுதுமாறு நமது வாசகர்களை வேண்டுகிறோம். மோடியா கொக்கா ?//

    LANKANEWSWEB இலங்கை அரசால் தடை செய்யபட்ட இணைய தளம்.
    இந்தியா பற்றிய செய்திகளை உண்மையை இந்தியாவால் தடை செய்யபட்ட புலிகளின் இணையதளங்களில் இருந்து அறிந்து கொள்ளலாமா?

  45. மாநில அரசுகள் மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு சாமரம் வீசினால் அல்லது தாஜா பண்ணினால் தான் அந்த மாநிலத்தின் நலன்களில் மத்திய அரசு அக்கறைப்படும் அல்லது அந்த மாநிலம் அபிவிருத்தியடையாமல் பின்தங்கி விடும் என்பது உண்மையானால், அது இந்தியா உண்மையில் ஒரு சனநாயக நாடு அல்ல என்பதைத் தான் காட்டுகிறது. தேர்தல் காலத்தில் எவ்வளவு வாக்குவாதங்கள், கசப்புணர்வுகள் இருந்தாலும், ஆட்சியில் அமர்ந்ததும், பிரதமராகப் பதவியேற்பவர், அதையெல்லாம் மறந்து முழு நாட்டுக்கும் பிரதமராக இருக்க வேண்டுமே தவிர, அவருக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தான் சலுகைகளை அளிப்பார் என்றால், அல்லது அவரது அரசு தனக்கு அதரவளிக்காத அல்லது அவரது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களைப் பாரபட்சமாக நடத்துவார் என்றால் அதைப் போன்ற வெட்கக்கேடு வேறெதுவுமிருக்க முடியாது. உதாரணமாக அமெரிக்காவில் Republican கட்சியின் Governors ஆளுகின்ற மாநிலங்களுக்கு Democrat கட்சியின் ஜனாதிபதி அபிவிருத்தி நிதிகளை ஒதுக்க மாட்டார் அதனால் அவர்கள் எல்லோரும், தமது கொள்கைகளை, அரசியல் விருப்பு, வெறுப்புகளை மறந்து Democrat கட்சியின் ஜனாதிபதி ஒபாமாவை ஆதரிக்க வேண்டும், அவர் அழைக்கும் விருந்துகள், விழாக்கள் எல்லாவற்றுக்கும், அவர்கள் விரும்பாது விட்டாலும் செல்ல வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி, முறையைக் கொண்ட கனடா, பிரான்ஸ்,ஜேர்மனி போன்ற எந்த மேலைநாட்டிலும் இப்படி யாரும் வாதாடுவதில்லை. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தாலும், அந்தந்த மாநிலத்துக்கு உரிய நிதிகளும் அபிவிருத்தித் திட்டங்களும் பாரபட்சமின்றி அந்தந்த மாநிலங்களுக்குச் சென்றடைவதில் தடையேதுமில்லை.

    இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை எதிர்த்தும், அவர்மீது சுமத்தபப்ட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யப்பட வேண்டுமெனவும் சட்டசபையில் தானே தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, ராஜபக்ச பங்கு பற்றும் விழாவில் கலந்து கொண்டு அதைச் சிறப்பித்தால் செல்வி. ஜெயலலிதா கொள்கைப் பிடிப்பற்றவர் என்றும் கூட அவரது எதிரிகள் விமர்சனம் செய்யலாம். தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பது என்ற விடயத்தில் மட்டும் செல்வி. ஜெயலலிதாவை யாரும் குறை கூற முடியாது. மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டவர்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழக்கமாகும். இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் நிலைப்பாடு என்னவென்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், அதைத் தெரிந்து கொண்டு தான் தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு 37/39 தொகுதிகளில் வெற்றியைக் கொடுத்தார்கள். அதனால் ஈழத் தமிழரின் நலன்களுக்காக ஜெயலலிதா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் தமிழ்பேசும் தமிழரல்லாதவர்கள் தான் தாய்த்தமிழகத்தின் முதலமைச்சர் உலகத்தமிழர்களின் நலன்களிலும் அக்கறை செலுத்துவதைக் கண்டு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார்கள்.

  46. //இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் நிலைப்பாடு என்னவென்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், அதைத் தெரிந்து கொண்டு தான் தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு 37/39 தொகுதிகளில் வெற்றியைக் கொடுத்தார்கள். //

    இலங்கைத் தமிழர் விஷயம் ஒரு உணர்ச்சி பூர்வமான தாக்கத்தைக் கண்டிப்பாகத் தமிழகத்தில் உண்டாக்கியது. ஆனால் அது வோட்டு வங்கியாக மாறவில்லை என்பது தான் உண்மை. இலங்கை விஷயங்களை எழுதுபவர்கள் கொஞ்சம் கிராமத்துப் புறங்களுக்குச் சென்று விட்டு பின் பேசவும்.

  47. ////ஆட்சியில் அமர்ந்ததும், பிரதமராகப் பதவியேற்பவர், அதையெல்லாம் மறந்து முழு நாட்டுக்கும் பிரதமராக இருக்க வேண்டுமே தவிர, அவருக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தான் சலுகைகளை அளிப்பார் என்றால், அல்லது அவரது அரசு தனக்கு அதரவளிக்காத அல்லது அவரது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களைப் பாரபட்சமாக நடத்துவார் என்றால் அதைப் போன்ற வெட்கக்கேடு///

    நிச்சயமாக மோடி அவர்கள் அது போன்று பாராபட்சமாக நடத்தமாட்டார். நேற்று ஓடிஸா முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தபோது “நானே ஒரு மாநில முதல்வராக இருந்துள்ளதால் மாநில அரசுகள் சந்திக்கும் கஷ்டங்களைப்பற்றி நான் நன்கு அறிவேன். மாநிலங்கள் செழிபுற்றால்தான் இந்த தேசமும் செழிப்படையும் என்பதிலே நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
    ஆனால் ஓடிஸா முதல்வர் மண் மோகன் சிங்கை சந்தித்து ((அவர் பிரதமர் பதவியில் இருந்தபோது)) “”தனது மாநிலத்திற்கு ஸ்பெஷல் status அளிக்க வேண்டும்”” என்று கோரியபோது சிங் “Money does not grow on trees ” என்று சொன்னார். இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று.

  48. We will have to wait & watch how Modi deals with issues like Mullaiperiyar & cauvery before we pass judgement.

    Talking of Tamilnadu BJP, they are no holy cows. They have had an alliance with both DMK & ADMK in the past. Even this time, they tried first for an alliance with the ADMK, then Vijaykanth. They would have had an alliance with the DMK also if mu.ka was willing.

    Talking of ministris, why did TN not get a single cabinet post. Ponnar could have been made cabinet minister.

  49. இலங்கைத் தமிழர் விஷயம் ஒரு உணர்ச்சி பூர்வமான தாக்கத்தைக் கண்டிப்பாகத் தமிழகத்தில் உண்டாக்கியது. ஆனால் அது வோட்டு வங்கியாக மாறவில்லை என்பது தான் உண்மை. இலங்கை விஷயங்களை எழுதுபவர்கள் கொஞ்சம் கிராமத்துப் புறங்களுக்குச் சென்று விட்டு பின் பேசவும்.

    Rangan,

    U are mistaken. It is not a question of just vote bank. An entire tamil race has been anhilated in Sri Lanka by Rajapakshe. The Jaffna library which housed some of the most precious tamil literature has been destroyed.

    That is not all.

    Today, many tamil youth are taken for questioning from camps, but they do not return. their whereabouts are still unknown.

    So may tamil girls are being raped & murdered.

    Do you know how many hindu temples have been demolished by Rajapakshe in the last 2 years?

    JJ is perfectly justified in avoiding sharing same stage with Rajapakshe who is an international war criminal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *