தாமிரபரணி முதல் பரமகுடி வரை…

23-07-1999 இல் திருநெல்வேலி மாநகரில் தலித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஊர்வலத்தில் காவல்துறை நடத்திய தடியடியும் அதன் விளைவாக 17 பேர் பலியானதும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சோக நினைவுகள். அன்றைய செய்தி தாள்களில் வெளியான கொடுமையான படங்கள் என்றும் river1நம் மனசாட்சியை உலுக்கி கேள்வியை எழுப்பிக் கொண்டிருப்பவை. ஊர்வலம் சென்றவர்களின் நடத்தையே இந்த தடியடிக்கும் படுகொலைக்கும் காரணமானது என ஒரு வாதம் அப்போது பரவலாக வைக்கப்பட்டது. அன்று நடத்தப்பட்டது சாதி ஊர்வலமோ அல்லது ஒரு சாதி தான் ஆண்ட சாதி என பெருமையடித்துக் கொண்ட ஊர்வலமோ அல்ல.  எந்த ஒரு ஆதிக்க சாதி ஊர்வலத்தைப் போல (தேவர், வன்னியர் … என எந்த சாதியையும் அதில் போட்டுக் கொள்ளுங்கள்)  இங்கு நடத்தையோ கோஷங்களோ மோசமாக  இருந்திட வாய்ப்பில்லை. என்றாலும் தலித்துகள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் பெண்கள் கரையேறத் தவிப்பதையும் அவர்களை காவலர்கள் லத்தியால் அடித்து உள்ளே தள்ளுவதையும் அன்றைய செய்தி தாள்கள் வெளியிட்டிருந்தன. தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் சின்னங்களாக அவை என்றென்றும் அமைகின்றன. இதனையொட்டி அண்மைக்கால சோக நிகழ்வையும் மறந்திட முடியாது. செப்டம்பர் 11 2011 இல் நடந்த பரமக்குடி படுகொலை. அதிலும் ஏழு தலித்துகள் கொல்லப்பட்டனர். போலீஸ் துப்பாக்கிச் சூடு.

இது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். தலித் சமுதாயத்தினரின் ஊர்வலத்துக்கும் பிற சாதிய ஊர்வலங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. பல நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட சமுதாயம். paramakutiஅது இன்று தன் உரிமைகளை கோருகிறது. அப்போது அந்த ஊர்வலங்களில் உணர்ச்சி வேகம் இருப்பது இயல்பானது இயற்கையானது. அவர்கள் தம்மை ஆண்ட பரம்பரையினர் என சொல்லவில்லை. அன்று திருநெல்வேலியில் ஊர்வலம் சென்றவர்கள் எவரும் தம்மை ‘ஆண்ட பரம்பரை’ என்று பேசவோ ‘மீண்டும் ஆளுவோம்’ என்று சவால் விடவோ இல்லை. அவர்கள் கேட்டது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு. அதற்கு கொடுக்கப்பட்ட பரிசு படுகொலை. அன்றைய திமுக அரசு பின்னர் விசாரணை கமிஷன் என்கிற வழக்கமான சம்பிரதாயத்தை நடத்தியது.  பதினோரு மாதங்கள் விசாரணை. 27.06.2000 அன்று  நீதிபதி மோகன், ”இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்துதான்” என அறிவித்தார். புதியதமிழகம் கிருஷ்ணசாமி அந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

தலித் அரசியல் எழுச்சி என்பது சரியா? ஹிந்து ஒற்றுமைக்கு அது ஊறு விளைவிக்காதா? என சிலர் கேட்கலாம். இயற்கையான தலித் அரசியல் எழுச்சி ஹிந்து ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காது என்பது மட்டுமல்ல. இறுதியில் ஆரோக்கியமான ஒற்றுமையான ஹிந்து சமுதாயத்தை ஏற்படுத்தும்.  ptk1’எனது அரசியல் பயணம்’ என்கிற தலைப்பில் 14-08-2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எழுதிய கட்டுரையில் ‘புதிய தமிழகம்’ டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகிறார்:

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் தீண்டாமை கொடுமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளைத் தட்டிக் கேட்கின்ற நிலை இல்லாததால், மத மாற்றம்தான் இதற்குத் தீர்வு என்று கருதக்கூடிய மனநிலை அந்த மக்களிடம் இருந்தது. ஆனால், மதமாற்றம் அதற்குத் தீர்வாகாது என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்ட உணர்வை வளர்த்திருக்கிறோம். எங்கள் பணி மூலம் தென் தமிழகத்தில் மதமாற்றம் என்பது பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் சாதிய மோதல்களைத் தடுத்து நிறுத்தி சமூக நல்லிணக்கத்திற்கான சூழலை வளர்ப்பதற்குத் தொடர்ந்து முயற்சி எடுத்து, பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறோம்.

STATUEசில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ஹிந்து இணையதளம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு தலித்துகளுக்கும் தலித்தல்லாத சாதிகளுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே அது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் real_culpritsசிலைக்கு செருப்பு மாலை போட்டு, பழியை தலித் இந்துக்கள் மீது போட்டு எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கலவரங்களை தென் மாவட்டங்களில் உருவாக்கினார்கள் என்பது குறித்ததே அது. முத்துராமலிங்க தேவர், தம் சமுதாயத்துக்கும் தேவேந்திரகுல வெள்ளாளர் சமுதாயத்துக்குமான மோதலில் எடுத்த நிலைபாடு சமுதாய ஒற்றுமைக்கு ஏற்றதல்ல என்பது ஒரு கசப்பான உண்மை. அதே நேரத்தில் டாக்டர் அம்பேத்கரை அன்றைய காலகட்டத்தில் தீவிரமாக ஆதரித்த, அவர் பக்க நியாயங்களை வெளிப்படையாக ஏற்ற ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதும் உண்மை.  இதோ டாக்டர். அம்பேத்கர் குறித்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியவை:

மத்திய அரசாங்க சட்ட மந்திரி கனம் அம்பேத்கர் ஒரு காலத்தில், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராக இருந்தார் எனச் சொல்கிறார்கள். ambedkarதேச விடுதலைக்காக உழைத்தவர்கள் என்று மார்தட்டும் வீரப் புலிகளின் யோக்யதையை, அந்தரங்க எண்ணத்தை ஆதியிலிருந்து இன்று வரை அலசிப் பார்ப்போமானால், அம்பேத்கர் அவர்கள் மற்றெல்லோரையும் விட தேச பக்தியில் சிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். … “இந்த ஜாதிகள் pasumpon.jpg_480_480_0_64000_0_1_0தேசத்தின் சத்ருக்குக்களாகும். ஏனெனில் சமுதாய வாழ்வை இந்த சாதிகள் பிளவுபடுத்துகின்றன. அதோடு பல்வேறு ஜாதிகளிடையே துவேசத்தையும்,பொறாமையையும் ஜாதிமுறை ஏற்படுத்துகிறது. நாம் உண்மையிலேயே ஒரு ஜன சமுதாயமாக ஒன்றுபட வேண்டுமானால் இத்தீமைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். ஜன சமுதாயமாக ஒன்றுபட்டு சகோதரத்துவம் நிலைத்தாலன்றி சுதந்திரம் வேரூன்றாது”. மேலேயுள்ள வேத வாக்கெனத் தகும் அறிவுரையைக் கூறிய டாக்டர் அம்பேத்கர்… சுட்டிக்காட்டும் குற்றங்கள் அனைத்தும் உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதே முத்துராமலிங்க தேவரின் பரம்பரை என்றும் சொந்த சாதி என்றும் சொல்கிறவர்கள் அதிகம் இருக்கிற இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலை பாதுகாப்பு கருதி கூண்டுக்குள் வைக்கப்படுகிறது. ஒரு நடிகர் அவர் ஒரே சாதியில் பிறந்தவர் என்பதால் முன்னிறுத்தப்படுகிறார். sekaranarஇதைவிட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவுக்கு மிகப் பெரிய அவமரியாதை செய்யமுடியுமா? பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்தவர்; நேதாஜியுடன் கை கோர்த்தவர்; டாக்டர் அம்பேத்கரை மதித்தவர். இவைதான் அவரை வரையறை செய்யும் விசயங்களாக இருக்க வேண்டும். அவரது புகழ் ஒளியைக் குறைக்கும் நிகழ்வான தியாகி இம்மானுவேல் சேகரன் சம்பவத்தை தேவரின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாக நினைக்க வேண்டும். இன்னும் சொன்னால் தேவர் சமுதாய தலைவர்கள் இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொண்டு இதுவரை நடந்துவிட்ட சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிப்பது நல்ல விஷயமாகவே இருக்கும்.   காவல்துறையும்  தாமிரபரணி சம்பவத்தில் நிகழ்ந்த கொடுமைக்கு தலித் சமுதாயத்தினரிடம் வருத்தம் தெரிவிக்கலாம். தாமிரபரணியில் சமூகநீதிக்காக உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசே ஒரு நினைவுத்தூணை அல்லது நடுகல்லை ஏற்படுத்தலாம். இனி இத்தகைய நிகழ்ச்சிகள் நடவாமல் இருக்க.

இருநூறு ஆண்டுகள் காலனிய ஆதிக்கமும் அதற்கும் மேலாக சில நூற்றாண்டுகளாக இருந்த சமூக தேக்கநிலையும் பல அண்டை சமுதாயங்களை எதிரித் தீவுகளாக மாற்றியுள்ளன. ஒரு இந்துத்துவனின் கடமை இந்த மோதல்களுக்கு அப்பால் சமரச உறவுகளை உருவாக்குவதுதான். திருமணப்பாலங்களாக அது இருக்கலாம், நீர்நிலைகளையும் இயற்கை ஆதாரங்களையும் பகிர்வதாக அவை அமையலாம். இறை வழிபாட்டுத்தலங்களில் பாரம்பரிய அடுக்குமுறை ‘கடமை’களைத் தவிர்த்து பரஸ்பரமாக சமுதாயங்கள் ஒன்றுக்கொன்று மரியாதை காட்டுவதாக அது அமையலாம்.

நம் சமுதாயத்தில் நிலவும் சாதியத்தின் தீமைகளை நாம் வெளிப்படையாக அலசுகிறோம். பேசுகிறோம். விவாதிக்கிறோம். தீர்வுகளை முன்வைக்கிறோம். சமுதாயம் மெல்ல என்றாலும் தீர்க்கமாக சமூகநீதியின் திசையில் பயணிக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி ஆபிரகாமிய மதவாதிகள் சாதியமே இந்து மதம் என ஒரு மாயையை உருவாக்கி குழம்பிய குட்டையில் wasp_kulavi_cartoonமீன்பிடிக்க பார்க்கிறார்கள். இந்து சமுதாயத்தில் நிலவும் எந்த தீமையும் அதிக அளவிலேயே இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் இருக்கின்றன. அண்மையில் சுவனபிரியன் என்கிற பெயரில் தமிழ்ஹிந்துவில் வந்து இஸ்லாமிய தாவா செய்யும் நபர் தான் இந்துவாக பிறந்திருந்தால் இன்னும் சமூக நீதிக்காக போராடிக் கொண்டிருந்திருப்பேன் என கூறினார். ஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜிகாத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக போராடும் இந்துவாக இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் அது ஆபிரகாமிய அடிப்படைவாதிகளின் அராபிய அடிமைத்தனம் நிரம்பி வழியும் மூளையில்  ஏறாதது ஆச்சரியமல்ல.

6 Replies to “தாமிரபரணி முதல் பரமகுடி வரை…”

 1. அண்ணா அருமை. நமது சஹோதரர்கள் மத்தியில் நாம் இன்னும் எவ்வளவு ஆழமாக, வேகமாக, இனணந்து வேலை செய்ய வேண்டும் என்பதன் அவசியத்தை இக்கட்டுரை உணர்த்தியுள்ளது. நன்றி.

 2. “நம் சமுதாயத்தில் நிலவும் சாதியத்தின் தீமைகளை நாம் வெளிப்படையாக அலசுகிறோம். பேசுகிறோம். விவாதிக்கிறோம். தீர்வுகளை முன்வைக்கிறோம். சமுதாயம் மெல்ல என்றாலும் தீர்க்கமாக சமூகநீதியின் திசையில் பயணிக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி ஆபிரகாமிய மதவாதிகள் சாதியமே இந்து மதம் என ஒரு மாயையை உருவாக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறார்கள்.” உங்கள் கருத்துக்கள் அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறிர்கள். தலித்கள் படும் கஷ்டங்களுக்காக ஒரு உண்மையான இந்து என்ற முறையில் வெட்கி தலைகுனிகிறேன். நிலைமை மாறவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

 3. naattu makkkalin utrumaikkum , thanathu samuthaayatthin utrumaikkum paadupaduvathai vittu vittu immaathiriyaana makkalidaiye pilavu etpadutthum seyalkalil unkalai pondroor irankuvathaal yaarukku enna nanmai amaiyum. unkalin ulnokkatthai arintha iraivan unklaukkaana kuuliyai tharattum.

 4. நாம் நம் சகோதரர்களை புறக்கணித்து விட்டு சும்மா இருக்காமல் அவர்கள் மேம்பாட்டிற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும். அது மட்டுமே தீர்வு.

 5. நல்ல கட்டுரை .
  நல்ல பதிவு . தாமிரபரணி முதல் பரமக்குடி வரை அரச பயங்கரவாதத்த்தில் பாதிக்கப்பட்டது இந்து சமூகத்தின் ஆணி வேர்க்களில் ஒன்றான மள்ளர் எனும் தேவேந்திர குல சமூகத்தினர்தான்.

  இந்த பதிவில் கூட தலித் என்று தனிமைப்படுத்தபட்டுள்ளது. எங்களை பற்றிய வரலாற்று மற்றும் இலக்கிய குறிப்பில் மருத நில மக்கள் ,மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் என்றும் இந்திரகுலம் விவசாயம் என்று தான் எங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் என்பது தாழ்த்தப்பட்டவர் என்பது கூட எங்களை மற்ற தமிழ் ஹிந்து சமூகங்களிடம் இருந்து எங்களை பிரித்து பிளவு படுத்தி காட்ட பயன் படுத்திய ஒரு தாக்குதலாகவே நாங்கள் எண்ணுகின்றோம் .

  இனி மறந்தும் நீங்கள் எங்கள் மீது தலித் எனும் ஆயுதத்தை தொடுக்காதீர்கள்.

 6. தலீத் மக்கள் கூலி உயா்வு போராட்டம் என்ற வரம்பை மீறி சட்ட ஒழுங்கு பாதிப்பு என்ற நிலையை எட்டிவிட்டாா்கள். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குள் அவர்கள் செய்த அத்துமீறல்கள் போலீஸ் தடிஅடி என்று சுழ்நிலை மாறக்காரணம் தலீத் மக்களே. சுவாமி விவேகானந்தா் கூறியதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் . ஆவேசம் கொண்டவா்கள் பெரும் நட்டத்தையே கொண்டு வருவார்கள்.மனதில் அமைதியும் விவேகமும் இருக்கும் இடத்தில்தான் சிறந்த உயா்ந்த காரியங்கள் நிறைவேற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *