உலக இந்து சம்மேளனம் 2014

லக இந்து சம்மேளனம் (World Hindu Congress) நேற்று தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை விட்டுப் போனாலும் அரசியல் மொழியை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது போலிருக்கிறது. போகட்டும். இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று.

* தொடக்க விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டது உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள் அனைவரையும் பெருமைப் பட வைக்கும் விஷயம். சிறப்பிடம் தந்து அவரை இந்த விழாவுக்கு அழைத்த அமைப்பாளர்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள். “2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை” என்று தனது உரையில் சி.வி. குறிப்பிட்டார். தம் மக்களின் வாழ்வுரிமைப் பிரசினையை, “இந்துக்களின் துயரம்” என்று தமிழ் மாகாண முதல்வர் ஒருவர் உலக அரங்கில் முன்வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான பௌத்தர்கள் வாழும் நாடான இலங்கையின் அரசு, இதுவரை மரியாதைக்குரிய தலாய் லாமா அவர்களை சீனாவில் மிரட்டலுக்குப் பயந்து கொண்டு தன் நாட்டுக்கு அழைக்கவில்லை என்பதையும் குத்திக் காட்ட அவர் மறக்கவில்லை. காலனிய ஆட்சி கிறிஸ்தவ மதமாற்றங்களின் மூலம் இலங்கைத் தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முயன்றதையும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

world_hindu_congress_2014_1

* 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல். இந்த அடைமொழி நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், அந்த ஆட்சி தற்காலிக கூட்டணிகளின் பிடிமானத்தில் அமைந்த ஒன்று. எனவே, இந்தப் புகழுரைக்கு இப்போதைய அரசே முற்றிலும் தகுதியுடையதாகிறது.

* இந்துக்கள் ஒன்றிணைந்து பாரதத்தை உலக குருவாக ஆக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்தார். “ஒரு உண்மையான இந்து ஒவ்வொரு வேற்றுமையிலும் ஒருமையைக் காண்கிறான். வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைக் காணும் இந்த இந்து தர்மத்தின் இயல்பே நமது சமூகத்தை சமநிலையுடனும் அமைதியாகவும் வைத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

* உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார். இந்துக்களுடனும் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்களுடனும் நீடித்த அன்புடனும் பரிவுடனும் இருப்பவர் அவர். சீனத்தின் வல்லாதிக்கத்தால் உரிமை இழந்து அலையும் திபெத்திய மக்களுக்கு இந்து தேசம் அன்பும் ஆதரவும் அளித்து வருவதை என்றும் மறக்காதவர். இந்து, பௌத்த மதங்களிடையேயான நல்லுறவுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்பவர். பௌத்தத்தின் பெயரால் இந்துப் பண்பாட்டின் மீதும், இந்து தெய்வங்களின் மீதும் வெறுப்பையும் வன்மத்தையும் உமிழும் பகுத்தறிவு ஜந்துக்களும், அம்பேத்கரிய புரட்சியாளர்களும், சிங்கள இனவெறியர்களும் பௌத்த ஞானத்தின் நடமாடும் திருவுருவாகத் திகழும் தலாய் லாமாவின் கூற்றுக்கு செவிமடுக்கப் போவதில்லை தான். ஆயினும், இந்த முக்கிய நிகழ்வில் அவர் தனது கருத்தைத் தெளிவாக இவ்வாறு முன்வைத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.

* 50 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், கலைப் பிரபலங்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், பல்துறை அறிஞர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டின் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர். 45 தனிப்பட்ட அமர்வுகளில் 200 பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர்.

* இளைஞர் சக்தி, பொருளாதாரம், அரசியல், கல்வி, அமைப்புகள், மகளிர், ஊடகம் ஆகிய துறைகளை மையப் படுத்தி தனித்தனி மாநாடுகள் இந்த சம்மேளத்தினூடாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

Hindu Youth Conference
Hindu Economic Conference
Hindu Political Conference
Hindu Educational Conference
Hindu Organizational Conference
Hindu Women Conference
Hindu Media Conference

இந்துக்களைப் பாதிக்கும் அடிப்படையான பிரசினைகளை மனதில் கொண்டு மிகச் சரியாக இந்தத் துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் அமைப்பாளர்கள். இந்த மாநாடுகளில் நடைபெறும் விவாதங்கள் இந்துப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும், உலகின் பல பகுதிகளில் ஒடுக்கப் பட்டு துயருறும் இந்துக்களின் மீட்சிக்கும், உலக நன்மைக்கும் வலு சேர்க்கட்டும்.

ஸங்கச்சத்வம், ஸம் வதத்வம் – ஒன்றிணைந்து பயணிப்போம், ஒன்றிணைந்து மொழிவோம்.
யதோ தர்ம: ததோ ஜய: – அறம் எங்குளதோ, அங்குளது வெற்றி.

2014ம் ஆண்டின் உலக இந்து சம்மேளனம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !

சம்மேளனத்தின் வலைத்தளம்: https://www.worldhinducongress.org/

சம்மேளனம் குறித்த செய்திகள்:

https://www.thehindu.com/…/unite-to-make-…/article6623672.ece

https://samvada.org/20…/news/vhp-world-hindu-congress-begins/

https://lokmarg.com/hindus-persecuted-in-sri-lanka-wigneswa…/

‪#‎WorldHinduCongress‬ ‪#‎WorldHinduCongress2014‬

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

27 Replies to “உலக இந்து சம்மேளனம் 2014”

 1. பௌத்தமும் சைவமும் இந்து மதத்தின் குழந்தைகளே ஆனால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்துக்கள் முஸ்லிம்களால் ஆகிரமிக்கபடுவதை சி வீ அவர்கள் குறிப்பிடாதது வருத்தமாய் உள்ளது.
  தினமும் இந்துக்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறுவதும் இந்து பிரதேசம் முஸ்லிம்களால் அபகரிக்கபடுவதும் கண்டும் காணமல் இருக்கும் தமிழ் தளமைத்துவங்கள் கிழக்கு இந்துக்களுக்கு துரோகம் செய்கின்றது.

 2. என்னை போன்ற கோடி கணக்கான உணர்வுகளை தான் ஈழத்து முதல்வர் பகிர்ந்துகொன்டுள்ளார். ஈழ தமிழரின் பிரச்சினை உலக இந்துக்களின் பிரச்சினையாக VHP கருதி அங்குள்ள தமிழரை காப்பாற்றவேண்டும்

 3. பௌத்தமும் சமணமும் இந்து மதத்தின் குழந்தைகள். சைவம், இந்து மதத்தின் அங்கம், i

 4. பௌத்தமும் சமணமும் இந்து மதத்தின் குழந்தைகள். சைவம், இந்து மதத்தின் அங்கம்.

 5. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அவர் ஒரு ஈழத்துச் சைவர் என்ற தனிப்பட்ட முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதில் தவறேதுமில்லை. ஆனால் இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் இந்துக்களாகவோ, கிறித்தவர்களாகவோ இறக்கவில்லை, தமிழர்களாகத் தான் இறந்தார்கள் என்பதை அவர் மறந்து விடக் கூடாது. அதே வேளையில் தவிர்க்க முடியாத காரணங்களால், விரும்பியோ விரும்பாமலோ, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகள் தமிழ்நாட்டுத் திராவிட அரசியல்வாதிகளின் சால்வைத் தலைப்பில் தொங்கியதால், சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல பிரியக் கூடாதவை என்று நம்பும், பெரும்பான்மைச் சைவர்களாகிய ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம்- பார்ப்பன எதிர்ப்பு, பெரியாரிய, திராவிடப் போராட்டத்தின் தொடர்ச்சி என்ற எண்ணம் இன்றும் தமிழ்நாட்டுக்கு வெளியே நிலவி வருகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் இந்திய மக்களின் ஆதரவைப் பெற ஈழத்தமிழ்த் தலைவர்கள் தவறி விட்டனர். அந்த தவறை திரு. விக்னேஸ்வரன் திருத்திக் கொள்ள முயல்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

  இந்தியாவில், ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு வேண்டுமானால் பெளத்தம் இந்துமதத்தின் குழந்தைகளாக இருக்கலாம், ஆனால் சிங்களவர்களிடம் அந்தக் கதையெல்லாம் எடுபடாது. இலங்கையில் இந்துக் கோயில்களை அழிப்பதும், கோயில்களை ஆக்கிரமிப்பதும், இந்துக் கோயில்களின் வரலாற்றைத் திரித்து, இராணுவ துணையுடன் புத்தர் சிலைகளைப் புதைத்து, பின்னர் அவற்றைத் தோண்டியெடுத்து, அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் இந்துக் கோயில்களை புத்தர் கோயில்களாக்குவதும், சிங்கள பெளத்தர்களும், பெளத்த பிக்குகளும் தானே தவிர, கிறித்தவர்களோ அல்லது முஸ்லீம்களோ அல்ல. இலங்கையில் இந்துமதத்துக்கெதிராக போர் தொடுப்பது பெளத்தம் தான். அந்தப் பெளத்தத்தை இந்துமதத்தின் குழந்தைகள் என்று சில ஆர் எஸ் எஸ் காரர்கள் வர்ணிப்பதைப் பார்த்து, நான் மட்டுமல்ல சிங்களவர்களும் கூட சிரிப்பாய் சிரிக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதை விட சிங்கள பெளத்தத்தின் படி, இந்துக் கடவுளர்கள் அனைவருமே புத்தருக்கு வேலைக்காரர்கள் தான். புத்தர் இந்துக்கடவுகளின் அவதாரமென சிங்களவர்கள் கருதுவதில்லை.

 6. //ஆனால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்துக்கள் முஸ்லிம்களால் ஆகிரமிக்கபடுவதை சி வீ அவர்கள் குறிப்பிடாதது வருத்தமாய் உள்ளது.//
  இலங்கையில் இந்துக்கள் முஸ்லிம்களால் அடையும் துன்பங்கள் பற்றியோ, கிறிஸ்தவர்களால் இந்துக்கள் மதம் மாற்றம் அடைவது பற்றியோ அவர் ஒரு போதும் பேச மாட்டார். அவர்களுடைய அரசியலுக்கு இவர்கள் உதவி தேவை. இந்துக்களின் மாகாநாட்டையும் தனது அரசியல் தேவைக்காக பாவித்துள்ளார்.மகாநாட்டில் மட்டும் தான் இலங்கை இந்துக்கள். இலங்கை வந்ததும் பாதிரிகளுக்கு கீழ்படிந்து நடக்கும் தமிழ் தேசிய தமிழனாக மாறிவிடுவார்.

 7. In srilanka Hindus are living in north east and central provinces. Their plight is not revealed to the outside world owing to their indifference and shameful quietism . There is hardly anyone among the hindu community who could write articles in English language. Whoever writes in tamil has no interest in the social welfare of ordinary Hindus. They write about gods and guru poojahs which has no relevance to the poverty and misery of Hindus affected by war. Thousands of Hindus have become victims of state terror but none of the hindu temples or hindu organisations has raised its voice in protest. Exceptionally one or two organisations from eastern province are voicing their concern against Buddhist and Islamic encroachments. The war has given ample opportunity to the Christians to convert Hindus into their religion; and Buddhist Sinhalese to build temples in each and every junction in the north and east provinces. In every function you could see the presence of christian priests now. They are active in social political human rights fields whereas the Hindus have become modern kumbakarnas. Hindus to be blamed for their predicament and not others. Hindus have given free space for others to play . This will go on until the Hindus realise their mistakes and to alleviate it to form a strong organisation with social political educational wings. Of course the priority should be given for economic improvement of war victims.

 8. Dilhi hindu mahaa naadu nadaipettathatku waazhththukkal, ulahaththil kooduthalaaha indukkialum bowddarhalum thaan matham maattappaduhiraarhal, ithu thodarpaaha ulaha naaduhal anaiththilum waaluhinra hindu makkalukku wilihippunarwunarwayum ottumayayum eattpaduththa wendum. ilankayilum bowdda indhu nallurawai peanuwathatkaana seyatpaaduhalaum nadaimuraippaduththa wendum. kurippaaha india naaddile jammu cashmeer maanilaththileay ahathihalaaha, pirassaa urimai attawarhalaaha waazhnthu waruwathu miha miha wedhanayai alikkirathu. ulahaththileye indhukkal athiham waluhinra indiawileyea innilai eatpattathattku neenda kaalamaaha aadshi seitha congress kadshithan ithathu poruppu koora
  wendum. indru indiawin indhu thalaimaiththuwamum perumpaanmai palam konda aadshi amainthu iruppathanaal wiraivu paddu seystpaduwathan moolam iwwaaraana nilamayinai maatta mudiyumum athumattumallaamal aasiya piraanthiyaththil indhu bowdda saamraajjiyam ondrai kaddi eluppawum mudium.

 9. வியாசன் என்ற புனை பெயர் தாங்கி இங்கு கருத்துரைத்த நபர் இந்துவாக இருக்கமுடியாது என்பது அவரின் வரிக்கு வரி எழுத்துக்கள் மூலம் புலனாகின்றது. தமிழர்கள் இலங்கையில் அனுதினமும் கிறிஸ்தவர்களாக மதமாற்றபடுவது பற்றி அந்த ஆள் வாய் திறக்கவில்லை. அங்கே இவர்கூறிய படி எந்த ஆலயமும் இடிக்கப்படவில்லை. ‘இலங்கையில் துக்ளக்’ என்ற துக்ளக்கின் ஆதார பூர்வமான தொடர் கட்டுரை இதனை அம்பல படுத்தியது. அது பற்றி எந்த போலி தமிழ் பற்றாளர்களும் இதுவரை வாய் திறக்காதது நமக்கு ஆச்சரியம் தரவில்லை. மேற்படி கட்டுரையை இதுவரை படிக்காத இந்துக்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவும். பிரிவினை பேசி, பள்ளிக்கு செல்லும் பச்சிளம் குழந்தைகள் பயணித்த பாடசாலை வாகனத்தை, அவர்கள் சிங்கள குழந்தைகள் என்பதற்காகவே கண்ணி வெடிகுண்டால் தகர்த்த மனிதகுல விரோதி, பிரபாகரனின் படுபாதக செயலை இவர்களெல்லாம் என்றாவது கண்டித்தார்களா?

 10. Kennan, please read the books titled The plight of hindu society in srilanka published by Tamil refugees rehabilitation organisation in April 1982 and Destruction of hindu temples published by Federation of saiva temples uk in July 1998 for details hindu temples destroyed by Srilankan government forces and Sinhala Buddhists. There were many articles in virakesari News paper published in Colombo that reveal continuous damage to the hindu temples by Sinhala Buddhists, monks with the help of State Army, even now.

  Please ask Thuglak editor to read these books and Virakesari articles. Let him start to read from Tarzie Vittachi’s book Emergency 58 to know how Hindus and priests were killed by Sinhala Buddhists.

 11. அன்பின் ஸ்ரீ கண்ணன்

  \\ வியாசன் என்ற புனை பெயர் தாங்கி இங்கு கருத்துரைத்த நபர் இந்துவாக இருக்கமுடியாது என்பது அவரின் வரிக்கு வரி எழுத்துக்கள் மூலம் புலனாகின்றது. \\\

  க்ஷமிக்கவும். ஸ்ரீ வியாசன் அவர்கள் ஆழ்ந்த சைவ சமயப்பற்றுள்ளவர். ஆழ்ந்த தமிழ்ப்பற்றுள்ளவர்.

  இதே தளத்தில் ஜெனாப் சுவனப்ரியன் என்ற இஸ்லாமிய சஹோதரர் இடக்கு மடக்காக வஹாபியர்களின் பொய்யான தமிழ்ப்பற்றை முன் வைத்த போது……… மிகத்தெளிவான தமிழக இஸ்லாமிய சஹோதரர்கள் எப்படி அராபிய மயமாகி வருகின்றனர் என்ற கருத்தை முன்வைத்தார்.

  தீரா விட சக்திகள் தமிழ் இணைய தளங்களில் சைவ சமயத்தை இழிவு செய்யும் போதெல்லாம் மிகத் தெளிவாக எதிரடி கொடுப்பவர் அன்பர் ஸ்ரீ வியாசன்.

  அன்பர் அவர்களுடைய சில கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு.

  ஆனால் தமிழும் சைவமும் பிரிக்கமுடியாதவை என்ற கருத்தைக்கொண்டவர் அன்பர் அவர்கள். உயர்வான கருத்து தானே இது.

  \\ அங்கே இவர்கூறிய படி எந்த ஆலயமும் இடிக்கப்படவில்லை. \\

  கிழக்கு மாகாணத்தில் பிள்ளையார் விக்ரஹத்தை ஜபர்தஸ்தியாக பௌத்தர்கள் கவர்ந்து செல்லும் அவலப் புகைப்படத்தை இதே தளத்தில் நான் பார்த்ததாக நினைவு.

  ஹிந்து மதத்தில் பௌத்தம் ஒரு முக்யமான அங்கம். இதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது தான்.

  ஆனால் ஈழத்தில் தேராவாத பௌத்தர்கள் தமிழ் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் ஜபர்தஸ்தியாக சிங்களக் குடியிருப்புகளை பெருக்கி வருவதையோ சைவ ஆலயங்களில் இருக்கும் விக்ரஹாதிகளைக் கவர்ந்து செல்வதையோ மறைக்க முயல்வது நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டுவதற்கு சமானமாகும்.

 12. அன்பின் ஸ்ரீ வியாசன் அவர்கள் பௌத்தம் ஹிந்து மதத்தின் ஒரு அங்கம் என்பதை மறுக்க முடியாது.

  அன்னாருடைய வலைத்தளத்திலேயே ஈழத்தில் எவ்வாறு ஒரு காலத்தில் பௌத்தமும் தழைத்தோங்கியிருந்தது என்ற கருத்தை அன்பர் அவர்களே பதிந்திருந்தார் என்பதை நினைவு கூர்கிறேன்.

  திப்பத்திய வஜ்ரயான / தாந்த்ரிக பௌத்தர்களுக்கும் ஹிந்துஸ்தானத்தின் சைவ / சாக்த தந்த்ரவாத மார்க்கத்தில் ஈடுபாடுடைய அன்பர்களிடையேயும் இன்றளவும் சம்வாதம் நிகழ்வது தொடர்கிறது. வஜ்ரயான / தாந்த்ரிக பௌத்த சமயத்தினரின் ஆழ்ந்த சமயக்கல்வியும்…….. அதனுடன் ஒற்றுமை மற்றுமை வேற்றுமைகளும் உள்ள சைவ / சாக்த தந்த்ரவாதத்தினை இவர்கள் அறிய விழைதலும்……… இப்படிப்பட்ட ஒரு சம்வாதத்துக்கு வழி வகுக்கிறது.

  சிலோனில் உள்ள தேராவாத பௌத்தமும் ஹிந்துஸ்தானத்தில் நவயானம் என்ற பெயரில் கிளர்ந்து வரும் பௌத்தமும் எந்த அளவுக்கு தம்மை ஒரு இறையியல் கோட்பாடாக முன்னிறுத்துகின்றன…….. எந்தளவுக்கு தம்மை ஒரு அரசியல் சக்தியாக மட்டிலும் முன்னிறுத்துகின்றன ……..என்பதைக் கவனித்தால் நிலவரம் துலங்கும்.

  \\ இலங்கையில் இந்துமதத்துக்கெதிராக போர் தொடுப்பது பெளத்தம் தான். அந்தப் பெளத்தத்தை இந்துமதத்தின் குழந்தைகள் என்று சில ஆர் எஸ் எஸ் காரர்கள் வர்ணிப்பதைப் பார்த்து, நான் மட்டுமல்ல சிங்களவர்களும் கூட சிரிப்பாய் சிரிக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதை விட சிங்கள பெளத்தத்தின் படி, இந்துக் கடவுளர்கள் அனைவருமே புத்தருக்கு வேலைக்காரர்கள் தான். புத்தர் இந்துக்கடவுகளின் அவதாரமென சிங்களவர்கள் கருதுவதில்லை. \\\

  ஈழத்தில் தேராவாத பௌத்தர்கள் ஹிந்து மதத்துக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் ஈழத்து தமிழ் ஹிந்துக்களுக்கு ஈழத்திலுள்ள தமிழ் பேசும் முஸல்மாணியர் மற்றும் க்றைஸ்தவர்கள் இழைத்து வரும் தொல்லைகளும் கணக்கிலடங்காதவை என்பதை அன்பர் ஸ்ரீ வியாசன் அவர்களது கவனத்துக்கு கொணர விழைகிறேன்.

  ஈழத்தில் தமிழ் பேசும் இஸ்லாமிய சஹோதரர்கள் சிங்களக்காடயர்களுடன் சேர்ந்து ……..கிழக்கு மாகாணத்தில் எத்துணை சிவாலயங்களையும் அம்மன் கோவில்களையும் தகர்த்து நொறுக்கியிருக்கிறார்கள்…….. தமிழ் மாணவர்கள் வாசிக்கும்பாடசாலைகளை த்வம்சம் செய்திருக்கிறார்கள்…….. தமிழ் ஹிந்துக்களது காணிகளைக் கபளீகரம் செய்திருக்கிறார்கள் என்பதனை ஸ்ரீ ராஜ் ஆனந்தன் என்ற அன்பர் இரு பகுதிகளாலான வ்யாசத்தில் பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீ வியாசன் அவர்கள் அதை ஒரு முறை வாசிக்க வேண்டும்.

  க்றைஸ்தவ மதத்துக்கு பிள்ளை பிடிப்பது என்ற வேலையை எந்தக்கூச்சமும் இல்லாது எல்லாவிதமான பித்தலாட்ட கந்தறகோளங்களுடன் செய்வது க்றைஸ்தவம். அதற்கு ஈழமும் விதிவிலக்கல்ல.

  ஈழத்தமிழர்களின் ப்ரச்சினையை ஹிந்துஸ்தானத்தின் மற்ற மாகாணத்து மக்களுக்குத் தெரிவிக்கும் பணியை செவ்வனே செய்து வருவது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் அதனைச் சார்ந்த ஹிந்துத்வ இயக்கங்களும். வடக்கு மாகாண முக்யமந்த்ரி ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் ஹிந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டது……… ஈழத்தமிழர் ப்ரச்சினையை ஹிந்துஸ்தானத்தின் மற்ற மாகாணத்து மக்களுடன் பகிர விழையும் ……..ஹிந்துத்வ இயக்கங்களது செயல்பாட்டுக்கு நிச்சயம் உந்துதல் அளிக்கும்

  புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக கீத கோவிந்தம் காட்டுகிறது.

  தேராவாத பௌத்தம் என்று மட்டிலும் என்ன வஜ்ரயான பௌத்தத்தின் படி சிவன், விஷ்ணு, யமன், சக்தி, இந்த்ரன் ……….. எல்லோரும் ஆர்ய அவலோகிதேஸ்வரரை கரந்தவ்யூஹ சூத்ரத்தில் (spelling may be wrong) ஸ்துதி செய்வதில் ………. அப்படி என்ன வியப்பு உள்ளது. பௌத்தம் மறைகளை ஏற்பதில்லை. ஆனால் ஆர்யதாரா அஷ்டோத்தரத்தில் ஆர்யதாராவை (பெண் போதிசத்வர்) வேதமாதா என்று சொல்லப்பட்டுள்ளது.

  இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது.

  சித்தாந்த ரீதியில் பௌத்தத்துடன் நாம் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் சைவமாகட்டும், வைஷ்ணவமாகட்டும் அல்லது வேதாந்தமாகட்டும்…….. இவையனைத்துக்கும் பௌத்தவாதம் என்பது சமயரீதியில் மிக முக்யமான பூர்வபக்ஷம் என்பதை நாம் மறுதலிக்க முடியாது.

  சமய ரீதியாக வெறும் சாமான்ய நீதிகளை மட்டிலும் ஆங்காங்கே சொல்லும் ஆப்ரஹாமிய மதங்களுக்கும் ஆழமான இறையியல் கருத்துக்களை பேசும் சைவ , வைஷ்ணவ, பௌத்த மற்றும் ஆஜீவக சமயங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஹிந்துமதத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு.

  ஹிந்து மதத்தின் பற்பல சமயங்களிடையே சித்தாந்த வேறுபாடுகள் உண்டு. ஆனால் செறிவான இறையியல் கருத்துக்கள் உண்டு. இவை இச்சமயங்களிடையே வேறுபாடுகளுக்கு இடையேயும்…….. அவற்றையும் மீறி……….. தொடர்ந்த ஒரு சம்வாதத்துக்கு வழி வகுக்கிறது.

 13. நன்றி ஸ்ரீ க்ருஷ்ணகுமார்ஜி. நான் சீன தேசத்தில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் இருந்தேன். அங்கேயுள்ள பௌத்தர்கள் நம் தேசத்தின் மீதும், நமது இந்துக்கள் மீதும் வைத்துள்ள மரியாதையும், அன்பும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அப்பப்பா! தமிழர்கள் மத்தியில் ஐரோப்பிய ஆபிரஹாமிய சமயத்தொரையோ அல்லது அரேபிய இஸ்லாம் சமயத்தொரையோ குடியிருத்துவதுதான் ஆபத்தானது என்பதை தாங்களும் உணர்ந்துள்ளது உவகையே. எனினும் தாங்கள், ‘இலங்கையில் துக்ளக்’ என்ற நூலை அவசியம் படிக்க பணிவோடு கேட்டுகொள்கின்றேன். வைகோ, திருமா, சீமான் போன்றோரின் உண்மையான நோக்கம் பற்றி அந்த நூலில் ஆதார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 14. புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக காட்டியதெல்லாம் புத்த மதத்தை ஹிந்து மதம் கபளீகரம் செய்ய மேற்கொண்ட யுக்தி. ,இப்படி ஒரு நிலைமை ஏசுவுக்கும் சீக்கிரம் வரும்.
  புத்திஸ்டுகள் விஷ்ணுவின் அவதாரங்களை உல்ட செய்து அது புத்தர் எடுத்த அவதாரங்கள் என்று காட்ட நினைத்தால் இந்த பதிலடி.

  புத்தர் பேசியதெல்லாம் அனாத்ம வாதம். அவரை எங்கனம் விஷ்ணுவின் அவதாரம் எனலாம்.

  வியாசன் தமிழர் அவர் ஹிந்துவாக எவ்வளவு தூரம் பேசுவார் என்பது எனக்கு தெரியாது. அவர் ராமனை ஆரியக் கடவுள் என்பார். ராமயண மெல்லாம் புளுகு என்பார். அல்லது தமிழ்ல இருந்த ஒரு கதைய சமஸ்க்ருதத்தில் காப்பி அடித்து விடு அவனையே கடவுள் ஆக்கி விட்டார்கள் என்பார்.

 15. இலங்கையில் ஹிந்து மதத்தினர் ஏனைய மூன்று மதங்களினாலும் பாதிக்கப்படுவதை பலரும் அறிவர். புத்தரின் பௌத்தம் இலங்கையில் நடைமுறையில் இல்லை. அங்கு இருப்பதெல்லாம் இனவாத அரசியல் கலந்த பௌத்தமே . இந்நிலை அநாகரிக தர்மபாலவுடன் ஆரம்பித்து இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளதை சில பௌத்தர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர் .மத மாற்றம் நிஹல்வதட்கு காரணம் அக்கரைஅற்ற சோம்பேறியான மத அறிவோ பற்றோ இல்லாத இந்துக்கள்தான். இவர்கள் திருந்தும்வரை இந்நிலை தொடரும். புலம் பெஅர்ந்த இந்துக்களின் நிலையும் இதுதான் .

 16. திரு க்ருஷ்ணகுமார்!

  //இதே தளத்தில் ஜெனாப் சுவனப்ரியன் என்ற இஸ்லாமிய சஹோதரர் இடக்கு மடக்காக வஹாபியர்களின் பொய்யான தமிழ்ப்பற்றை முன் வைத்த போது……… மிகத்தெளிவான தமிழக இஸ்லாமிய சஹோதரர்கள் எப்படி அராபிய மயமாகி வருகின்றனர் என்ற கருத்தை முன்வைத்தார்.//

  இங்கு தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளாகத்தான் வஹாபிய (தவ்ஹீத்) சிந்தனை தமிழ் இஸ்லாமிய மக்களிடத்தில் வேரூன்றியுள்ளது. இதனால் தமிழகம் அடைந்த நன்மைகள் என்னென்ன?

  1. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இஸ்லாமியரிடத்தில் இருந்த அரசுக்கெதிரான எண்ணங்கள் களையப்பட்டு அவர்களை சமூக நீரோட்டத்தில் கலக்க வைத்துள்ளது. இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை காக்கப்பட்டுள்ளது.

  2. இன்று வரை தமிழகத்தில் இரத்த தானம் அளிப்பதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது வஹாபிய இயக்கமான ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’. இந்த குருதிக் கொடையினால் இந்துக்களும் கிருத்தவர்களும் பெரும் பலனடைந்துள்ளார்கள். அரசு பொது மருத்துவ மனை கூட தங்களுக்கு உடனடி ரத்தம் தேவைப்பட்டால் முதலில் அணுகுவது வஹாபிய இயக்கத்தைத்தான்.

  3. தமிழக கிராமங்கள் தோறும் ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்துக்களையும் கிருத்தவர்களையும் அழைத்து அவர்களுக்கு உள்ள முஸ்லிம்களின் மேல் உள்ள சந்தேகங்களை போக்க வைத்து அவர்களை சகோதரர்களாக பாவிக்க வைத்துள்ளது இதே தவ்ஹீத் ஜமாத் தான்.

  4. ‘தமிழ் இந்துக்களின் மொழி: அரபி இஸ்லாமியரின் மொழி’ என்ற எண்ணம் பல இஸ்லாமியரிடத்தில் இருந்தது. ஆனால் குர்ஆனோ நபி மொழிகளோ இதனை ஆதரிக்கவில்லை. ‘உலக மொழிகள் அனைத்தையும் படைத்தது இறைவனான நானே’ என்று இறைவன் குர்ஆனில் கூறுகிறான். அடுத்து முகமது நபி தனது போதனையில் ‘குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபி, அரபி அல்லாதவன், வெள்ளையன், கருப்பன் என்று எதிலும் பாகுபாடு காட்டக் கூடாது. இறைவனை தூய உள்ளத்தோடு நெருங்குபவனே உயர்ந்தவன்’ என்ற போதனையை அனைத்து மக்களிடத்திலும் கொண்டு சென்று இன மொழி பாகுபாட்டை இஸ்லாமியரிடத்தில் குறைத்துள்ளது இதே வஹாபிய இயக்கமான ‘தவ்ஹீத் ஜமாத்’.

  5. முதியோர் இல்லம், அனாதை இல்லம் என்று பல இடங்களில் தமிழகத்தில் ஆதரவற்று அலைந்து திரிந்த பல இஸ்லாமியர்களை ஒன்றினைத்து உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் கொடுத்து பராமரித்து வருவதும் இதே வஹாபிய அமைப்புதான்.

  6. தர்ஹா, தட்டு, தாயத்து, புரோகிதம் என்று இந்து மதத்தில் உள்ள அனைத்தையும் இஸ்லாமியரும் தழுவி பல காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து குர்ஆன் காட்டும் இஸ்லாமியர்களாக பெரும்பாலானோரை மாற்றியமைத்ததும் இந்த தவ்ஹீத் அமைப்புதான்.

  7. இது போன்ற மிகக் குறுகிய அழகிய மாற்றத்தை பார்த்த தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் சாரை சாரையாக தினமும் இஸ்லாத்தினுள் தங்களை இணைத்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மாத இலவச பயிற்சி தங்குமிடமும் சாப்பாடும் கொடுத்து சிறந்த முஸ்லிம்களாக வெளியாக்குவதும் இதே வஹாபிய அமைப்பான ‘தவ்ஹீத் ஜமாத்’ தான்.

  8. நீங்களோ அல்லது உங்களின் சாதியான பார்பன இனத்தைச் சார்ந்த மற்றவர்களோ இதனை விரும்ப மாட்டீர்கள். காலாகாலமாக இந்த மக்களை அடிமைகளாக நடத்தி பழக்கப்பட்ட உங்களைப் போன்றவர்கள் இதனால் கோபமுற்று ‘அராபிய கலாசாரம் தமிழகத்தில் வஹாபியத்தால் புகுத்தப்படுகிறது’ என்று கூச்சலிடுகிறீர்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதும் ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்’ என்ற சிவ வாக்கியரின் வாக்கும் இந்த மண்ணுக்கு சொந்தமான கொள்கை. அதனைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. அதனை அராபிய கலாசாரம் என்று சொன்னால் அதனை உங்கள் மனசாட்சியே முதலில் ஒத்துக் கொள்ளாது.

 17. To: suvanappiriyan
  டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து தற்போது நாடு திரும்பிக் கைதாகியுள்ள மும்பையைச் சேர்ந்த அரீப் என்கிற அரீப் மஜீத், தான் சொர்க்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்துச் சென்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நரகமாக இருந்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் இவ்வாறு கூறியுள்ளார் மஜீத். சிவில் என்ஜீனியரிங் மாணவரான மஜீத், ஈராக் போய்ச் சேர்ந்ததும் பல்வேறு கடினமான வேலைகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளார். பின்னர் ஈராக்கில் உள்ள முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவர் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.மஜீத்திடம் நடத்தப்பட்ட விசாரணை, அவர் கூறிய தகவல்கள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையாளர்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவிக்கையில், அங்கு போன பின்னர்தான் மஜீத்துக்கு உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. தான் வேலை பார்க்க வரவில்லை, போரிடவே வந்ததாக கூறியுள்ளார் மஜீத். ஆனால் துப்பாக்கிப் பயிற்சியின்போது அவர் காயமடைந்துள்ளார். இதை மஜீத்தின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், நான் அவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் உதவவில்லை. சொர்க்கத்தில் இருக்கலாம் என நினைத்துச் சென்றேன். ஆனால் நரகம் போல உணர்ந்தேன் என்று கூறியுள்ளார் மஜீத்.யாரும் யாருக்கும் அங்கு ஆதரவாக இல்லை. குரூரமே மேலோங்கியிருந்தது. இதனால்தான் அங்கிருந்து தப்பி வர வேண்டும் என்ற முடிவுக்கு தான் வந்ததாக மஜீத் கூறினாராம்.போரிட விரும்பினேன்மஜீத் வாக்குமூலத்திலிருந்து…. ஒரு மசூதிக்கு நான் நண்பர்களுடன் போயிருந்தேன். அது 2013ம் ஆண்டின் இறுதியில் நடந்தது. அங்கு போனபோது ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. சிரியாவில் நடந்த போரை நான் பார்க்க விரும்பினேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு புதிய இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதாக நான் கருதினேன். எனது மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்பினேன். மதத்தைக் காக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தினந்தோறும் போராடி வருவதாக உணர்ந்தேன்.அப்போதுதான் இந்த அமைப்பில் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு எனக்குள் எழுந்தது. ஆனால் யார் மூலம் அங்கு போவது, இணைவது என்பது எனக்குத் தெரியவில்லை. பல மணி நேரம் இதற்காக இணையதளத்தில் நான் மூழ்கிக் கிடந்தேன். பல முக்கியமான தகவல்களைச் சேகரித்தேன். கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்குப் போய்ப் பார்த்திருப்பேன். முடிவில், நான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கான சாத்தியத்தைக் கண்டுபிடித்தேன். முடிவெடுத்தேன்.இந்தியத் தொடர்புமகாராஷ்டிர மாநிலம் பிவான்டியில் ஒருவர் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டேன். அவரது தொலைபேசி எண்ணை இணையத்தில் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு ஏஜென்ட். அவர் முதலில் எனது போனை எடுக்கவில்லை கிட்டத்தட்ட 20 முறை முயற்சித்தேன். பல எஸ்எம்எஸ்களையும் அனுப்பினேன். ஆனால் கடும் போராட்டத்திற்குப் பின்னரே அவரை பிடிக்க முடிந்தது. அவர் பிவான்டியில் ஒருவரைப் பார்க்கச் சொன்னார். அவர் நிதியுதவி உள்பட அனைத்தையும் செய்வதாக தெரிவித்தார். அனைத்தும் முடிந்த பிறகு, தெற்கு மும்பையில் உள்ள டோங்கிரி பகுதிக்குப் போய் தேவையா ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதன் பின்னர் மே 25ம் தேதி ஈராக் கிளம்பிச் சென்றோம். கர்பலாவுக்கு முதலில் போனோம். பின்னர் 27ம் தேதி பாக்தாத் பயணமானோம். அங்கிருந்து ஹிந்த் முகாமுக்கு அனுப்பப்பட்டோம். அங்கு எங்களது வேலைகள் என்ன என்பது கூறப்பட்டது.எதிர்பார்த்த வேலை தரப்படவில்லைமுதலில் எங்களைப் போரில் ஈடுபடுத்தவில்லை. காரணம், இந்தியர்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்று கூறி போரிட அனுப்பவில்லை. இருப்பினும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் வைத்த அனைத்து சோதனையிலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். பின்னர் கட்டுமானப் பணிக்கு என்னை அனுப்பினர். நான் சூப்பர்வைசராக இருந்தேன். மற்ற மூவரும் இணையதளங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் ஈடுபட்டிருந்த மற்றவர்களின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது, குடிநீர் எடுத்துத் தருவது போன்ற வேலைகளையும் நாங்கள் செய்ய வேண்டி வந்தது.எல்லாம் மாயைகொலை செய்வது, பாலியல் பலாத்காரம் செய்வது இதுதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு தெரிந்த ஒரே வேலை. இதையெல்லாம் நேரில் பார்த்தபோது நாங்கள் முற்றிலும் உடைந்து போனோம். எங்களது கற்பனை எல்லாம் தகர்ந்து போனது. எல்லாம் மாயை போல தெரிந்தது. அவர்கள் புனிதப் போரில் ஈடுபட்டிருப்பதாக நினைத்தோம். ஆனால் அது அப்படி இல்லை. இந்தப் போரால் எந்தப் பயனும் கிடைக்காது என்பது தெரிந்தது. போர்க்களத்திற்குச் செல்லக் கூட எங்களுக்கு அனுமதி இல்லை.நான் துப்பாக்கிப் பயிற்சியின்போது காயமடைந்தபோது யாரும் எங்களுக்கு உதவவில்லை. மருத்துவமனைக்கு அனுப்பியதோடு சரி. எங்களைப் பற்றிக் கவலைப்படக் கூட இல்லை. உடனடியாக மருத்துவ உதவியும் கூட கிடைக்கவில்லை. பலரை சிகிச்சை தராமலேயே சாகடித்து விடுகின்றனர்.திருப்பி அனுப்புமாறு கெஞ்சினேன்என்னை மருத்துவமனைக்கு அனுப்புமாறு நான் பலமுறை கெஞ்சிய பிறகே அனுப்பிவைத்தனர். முதலில் துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எனக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களுக்குத் தெரியாமல் நான் எனது வீட்டுக்குப் போன் செய்தேன். பெற்றோரிடம் பேசியபோது அழுதேன். திரும்பி வர விரும்புவதாக கூறினேன். அவர்கள் தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளிட்டோருடன் தொடர்பு கொண்டு என்னை மீட்க முயற்சித்தனர் என்று கூறியுள்ளார் மஜீத்.

 18. //தர்ஹா, தட்டு, தாயத்து, புரோகிதம் என்று இந்து மதத்தில் உள்ள அனைத்தையும் இஸ்லாமியரும் தழுவி பல காலமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து குர்ஆன் காட்டும் இஸ்லாமியர்களாக பெரும்பாலானோரை மாற்றியமைத்ததும் இந்த தவ்ஹீத் அமைப்புதான்.///

  see his lies on this article
  https://puthu.thinnai.com/?p=27007
  and the reaction from ajis

 19. சுவனம்

  அடுத்த ஜமாளுதீனாக முயற்சிக்கிறீர்களா. அண்டப் புலகுகளுக்கும் அளவு வெச்சு தான்னே புளுகோனும். அல்லவே இவன் ஓவரா தாக்கிய செய்யறான்னு டென்சிஒனாகி உங்களுக்குடைய எழுவத்தி இரண்டு உருப்படிகளை கொறச்சிட போறாரு.

  //
  ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதும் ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்’ என்ற சிவ வாக்கியரின் வாக்கும் இந்த மண்ணுக்கு சொந்தமான கொள்கை. அதனைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.
  //

  அப்பாடா அப்பாடா என்னமா பிட்டு காட்டுறீங்க

  யாவரும் கேளீர் என்பது இஸ்லாத்துக்கு எங்கு பொருந்தும். அடுத்தவன் யாராக இருந்தாலும் அவனையும் சொந்தமாக பாவிக்கும் பாவி பசங்க தமிழர்கள். இஸ்லாமின் நோக்கம் எதிரிய வெட்டு அவன் பொண்டாட்டிய தூக்கு அப்புறம் மதம் மாத்து அப்பம் அடுத்தவன் பொண்டாட்டி நமக்கு சொந்தமாயிருவா இல்லையா இப்போ எல்லாரும் நமது கேளீர் தானே. நட்ட கல்லும் என்று வரும் பாடலை முழுசா என்னிக்காச்சும் படிச்சதுண்டோ.

  ஒன்றே குலம் அது இஸ்லாம்தான் இருக்கணும் இல்லாட்டி அங்கு ரத்தக் குளம் தான் மிஞ்சும். இது தானே இஸ்லாத்தின் கொல்கை.

  //
  அரபி, அரபி அல்லாதவன், வெள்ளையன், கருப்பன் என்று எதிலும் பாகுபாடு காட்டக் கூடாது.
  //
  இது வெறுமனே மதம் வளக்க நீங்க விடும் சவுடால். அம்புட்டு பயலுகளும் குரான அரபிலா ஒதுரானுவா. காலலைல அஞ்சு மணிக்கு ஆரமிச்சு அரபிலா தான் எல்லா மசூதி ஸ்பீகரும் சவுண்டு போடுது. நாங்க தாங்க எல்லா மொழிலயும் வழிபாடு நடத்துறவங்க. ஓவ்வொரு மொழிலேயும் கடவுளை துதித்து பா மாலைகள் ஏராளம்.

  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று முட்டாள் இளிச்சவாயன் வேணும்னா நம்புவான், உலகத்தில இப்போது 1.2 பில்லியன் இருக்காங்க.

  தொழுகைக்கே போகாம கல்லா கட்டும் அண்ணனை வழி நடந்து செல்லும் தவுஹீத் ஜமாத் வால்க.

  இவ்வளோ செய்த தவ்ஹீத் அண்ணன், ஏன் கள்ளக்கடத்தலையோ, பாம் செய்வதையோ, ஹிந்து தலைவர்களை கேவேலமாக வெட்டிக் கொள்வதையோ தடுக்க முடியல. போன வாரம் கூட திருவல்லிகேநில ஒரு ஹிந்து பெண்ணை மானபங்க படித்திட்டாங்க உங்க ஆளுங்க. கேள்வி கேட்டவரை உங்களை சார்ந்த நாப்பது கிறுக்கு பிடிச்ச பயலுவ அடிச்சிருக்கானுவ. உங்களின் மாதர் திலகங்கள் போலிஸ் வண்டி ஏறி கற்பழித்தவன காப்பற்றி வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். என்னே மார்க்கம் என்னே மார்க்கம்.

 20. அடடா இந்த சிவவாக்கியர் இப்படி வந்து எல்லார் வாயிலேயும் விழுகிறாரே ! அய்யா சுவனப்ரியன் – மற்றும் பொது மஹா ஜனங்களே இதனால் நான் அறிவிப்பது என்ன வென்றால்:

  நட்ட கல் பேசாவிட்டால் பரவயில்லை ஆனால் :

  “நட்ட கல்லோடு நானும் பேசுவேன் – நாதம் (ன்) என்னுளே ஒலிக்கத் தொடங்கும் வரையில்.”

  ஆள விடுங்க சாமி !!

 21. @paandiyan
  “எல்லாம் மாயைகொலை செய்வது, பாலியல் பலாத்காரம் செய்வது இதுதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு தெரிந்த ஒரே வேலை”
  AS if SP does not know this!!!! Sorry SP but we are living in the age of internet and all lies get exposed at the click of the mouse.
  Paandiyan Sir, ISIS are just following the foot steps of their founder and what Islam has been doing for centuries. Nothing new.

 22. ஆழமான பதில் கருத்துக்கள் பதித்த சாரங்கன் அவர்களுக்கு நமது வந்தனங்கள்.

 23. மதிப்புக்குரிய கண்ணன்,
  //நான் சீன தேசத்தில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் இருந்தேன். அங்கேயுள்ள பௌத்தர்கள் நம் தேசத்தின் மீதும் நமது இந்துக்கள் மீதும் வைத்துள்ள மரியாதையும்இஅன்பும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.//
  இலங்கையிலும் பௌத்தர்கள் இந்த ஆலயங்களில் வழிபாடு நடத்துவது சாதாரண விடயம். சில இந்து ஆலயங்கள் புதுப்பிப்பதற்கும் பெரிதாக அமைப்பதிற்ற்கும் பௌத்தர்கள் -சிங்களவர்கள் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார்கள். மேலை நாட்டு கிறிஸ்தவ சக்திகளின்பின்னனியில் செயல்படும் விடுதலை புலி ஆதரவாளர்கள் இந்தியாவில் இலங்கை இந்துக்களின் எதிரி சிங்கள பௌத்தர்கள் என்று தமது கடும் பிரசாரங்களை திட்டமிட்டு செய்கின்றனர். இந்துக்களை கொள்ளைகாரர்கள் என்று கூறிய கருணாநிதியே இலங்கையில் இந்து ஆலயங்கள் அழிக்கபடுவதாக மனம் வருந்திய நாடகத்தையும் அறிந்திருப்பீர்கள்.இலங்கையில் மதமாற்றும் கிறிஸ்தவ சக்திகளுக்கு பிடிக்காது என்பதினாலும் முஸ்லிம்களுக்கு பிடிக்காது என்பதினாலும் இந்து என்று சொல்வதையே விடுதலை புலி ஆதரவாளர்கள் தவிர்த்து கொள்வார்கள்.
  //‘இலங்கையில் துக்ளக்’ என்ற துக்ளக்கின் ஆதார பூர்வமான தொடர் கட்டுரை இதனை அம்பல படுத்தியது.//
  உண்மையான தங்கள் புரிதலுக்கு நன்றி.

  மதிப்புக்குரிய க்ருஷ்ணகுமார்,
  //சைவ ஆலயங்களில் இருக்கும் விக்ரஹாதிகளைக் கவர்ந்து செல்வதையோ மறைக்க முயல்வது நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டுவதற்கு சமானமாகும். //
  மன்னிக்கவும். தவறு. ஒரு இந்து ஆலயத்தில் இந்து குற்றவாளி ஒருவரால் விக்ரகம் களவாடபடுகிறது அதே போல் ஒரு சிறு ஆலயத்தில் உள்ள விக்ரகம் பௌத்தனால் களவாடபட்டது. அதை வைத்து ஈரை பேனாக்கி பேனை பூதமாக்கி ஆயிரத்துக்கு மேற்பட்ட கதைகளை உருவாக்கி இந்தியாவில் பிரசாரம் செய்து வருகின்றனர். உலகத்தில் பொய் பரப்புரைகள் செய்வதில் விடுதலை புலி ஆதரவாளர்கள் வல்லுணர்கள்.இந்து, ஆலயம் ,விக்ரகம் இவற்றை இந்தியா தவிர வேறுநாடுகளில் இவர்கள் உச்சரிப்பதில்லை.

 24. சாரங்கன் அவர்கள் உண்மை தெரியாமல் பேசுகிறார்.சுவாமி விவேகானந்தர் இந்துக்களின் மைல் கல்.புதிய இந்தியாவின் சிற்பி.அவர் தனது ஞானதீபம் இலக்கியத்தில் “இறவன் மீண்டும் ஒரு முறை உலகத்தில் புத்தராக அவதரித்தார் ” என கூறியுள்ளார். அது மட்டுமல்ல சுவாமிஜி அவர்கள் பலமுறை போதி மரத்தடியில் தியானம் செய்த சம்பவங்களும் உண்டு. பகவத்கீதையில் 10(26)இல் மரங்களில் நான் அரசு எனவும் ஸ்கந்த புராணத்தில் அரச மரத்தின் பெருமையும் கூறப்பட்டுள்ளது.இலங்கை அரசியல் வாதிகள் இந்து பௌத்த மக்களை பிரித்து அரசியல் வியாபாரம் செய்ததால் இந்த நிலைமை. இலங்கையில் இந்து தலங்கள் அனைத்திலும் பௌத்தர்கள் வணங்குவது வரலாற்று உண்மை. இந்துக்களையும் பௌத்தர்களையும் சேர்ந்து வாழவிடாமல் தடுத்து அரசியல் லாபம் பெறுவதை நிறுத்தசொல்லாமல் பிரிவினையை வளர்ப்பதால் என்ன லாபம்.

 25. யோகராஜ்

  புத்தர் முன்வைத்த கொள்கை அனாத்ம கொள்கை. அதாவது ஆத்மா என்று ஒன்று கிடையாது “simultaneous dependency” என்பது தான் உண்மை அதாவது கிட்ட தட்ட சாங்க்ய வாதம். புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் ஞானம் பெற்றார் என்கிறோமே இது தான் அந்த ஞானம்,.

  கிருஷ்னர் ஆத்மா உண்டு என்கிறார். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் புத்தர் இறைவனின் அவதாரமா என்று.

  புத்தர் கேட்ட ஒரு கேள்வி உங்களுக்காக. கங்கைல குளிச்சா பாவம் போகும்னா கங்கைலேயே ஏராளமான மீன்கள் இருக்கே அதுக்கெல்லாம் பாவமே இருக்கக்கூடாதே. (அவர் walking மெடிடடிஒன் என்பதை வலியுறுத்துகிறார் அதாவது மெல்ல நடக்கனுமாம், ஆமை கூட தான் ரொம்ப மெல்ல நடக்குது அப்போ அது எப்போதும் த்யானத்திலேயே இருக்கும் இல்லையா என்பது என் கேள்வி. )

  போதி மரத்தடியில் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது ரிஷிகள் த்யானம் செய்துள்ளனர். இதெல்லாம் புத்தருக்கு முந்திய பழக்கம்.

  புத்தரை பற்றி மேலோட்டமாக நிறைய விஷயங்களை நாம் தெரிந்து வைத்துள்ளோம் ஆழ படித்தால் நிறைய விளங்கிக் கொள்ளலாம்,

  இதே பைரப்பா அவர்கள் சார்த்த என்று வணிகர்களை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவருடைய புத்தகங்களுள் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது அற்புதமான கதை களம், எண்ணற்ற திருப்பு முனைகள். கண்ணடம் மூலம், சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. பௌத்தர்களின் வண்டவாளம் பற்றி இதில் நிறைய வரும்.

 26. அமைதி மார்க்கம் மொத்தமாக உலா வரும் பாகிஸ்தானில் நேற்று பள்ளிக் கூடத்தில் புகுந்து தாலிபன் ஜிஹாதிகள் 132 மாணவர்கள் உள்பட 145 பேரைக் கொன்றிருக்கின்றனர்.

  சுவனப்பிரியன் இப்போது இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பாரா ?
  இந்த 145 பேர் சுவனத்துக்குச் செல்வார்களா?
  அல்லது
  இவர்களை குரானின் ஆணைப்படிக் கொன்ற தாலிபன் ஜிஹாதிகள் சுவனத்துக்குச் செல்வார்களா?
  அல்லது
  இவர்கள் அனைவரும் (கொல்லப்பட்டவர்களும், கொன்றவர்களும்) அல்லாவுக்கு “இணை வைக்காமல்” அல்லாவை மட்டுமே தொழுது வந்ததால்/ வருவதால் அனைவர்மே சுவனம் செல்வார்களா ?
  அப்படி அனைவரும் சுவனம் சென்றால் அங்கே இப்போது கொல்லப்பட்டவர்களும், கொன்றவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து …

  அஸ்ஸலாமு அலைக்கும் (இஸ்லாம் தழைக்கட்டும் )
  அலைக்கும் அஸ்ஸலாம் ( அப்படியே … தழைக்கட்டும் இஸ்லாம்)

  என்று வாழ்த்தி ஆரத் தழுவிக் கொள்வார்களா ?

  அதெல்லாம் சரி, அதைவிடப் பெரிய சந்தேகம்…
  வழக்கம் போல சுவனப்பிரியன் இதைப்பார்த்ததும் பார்க்காதது போலக் கொஞ்சநாள் காணாமல் போவாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *