இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்

சென்னையில் Global Foundation for Civilizational Harmany (GFCH) என்கிற தன்னார்வ அமைப்பு, பிப்ரவரி 6,7,8 ஆகிய நாட்களில், 40 இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் ஒரு சம்மேளனம் மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. மாதா அம்ருதானந்தமயி மடம், வாழும் கலை அமைப்பு, ஈஷா அறக்கட்டளை, விவேகானந்த கேந்திரம், சேவா பாரதி, வனவாசிகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கு கொள்கின்றன. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்ற இந்து இயக்கங்கள் செய்யும் பணிகள் பற்றி அறிந்து கொள்ளவும், மற்றும் பரஸ்பரம் இணைந்து பணியாற்றவும் இந்த சங்கமம் வழிவகுக்கும். மேலும், அனைத்து மக்களும் இந்த அமைப்புகள் ஆற்றும் பணிகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் இது உதவும்.

நிகழ்ச்சித் தொடக்கம்: பிப்ரவரி 6, மாலை 2:55 மணி ஆன்மிகப் பெரியோர்கள் முன்னிலையில். மூன்று நாட்களும் மாலை கலைநிகழ்ச்சிகளும் உண்டு.

இடம்: ஜெயகோபால் கரோடியா விவேகானந்த வித்யாலயம், 7வது தெரு, அண்ணா நகர், சென்னை – 600 040.

அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் கீழே காணலாம் –

பக்கம் 1:

chennai_hindu_mela_2

பக்கம் 2:

chennai_hindu_mela_1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *