பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை – 2

இதன் முதல் பகுதி

3. இந்து விரோதப் போக்கு

அடுத்தபடியாகத் தமிழ் நாட்டு வாக்காளர் கருத வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை இந்து விரோதப் போக்கு. கடந்த ஐந்து வருடங்களில் காங்கிரஸ் தி.மு.க. ஆட்சியில் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கடுமையான இந்து விரோத நடவடிக்கைகளும் இந்து மதத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் கூடிய சதித் திட்டங்களும் நடந்துள்ளன. இங்கே ஒரு சிறிய பட்டியலில் அதை அடக்க முடியாதென்றாலும், முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடலாம்.

சேது சமுத்திரத் திட்டம். இந்தத் திட்டம் கோடி கோடிப் பணத்தைப் பெறத் தகுதியான பயனுள்ள திட்டம் அல்ல என்பது பல ஆராய்ச்சிகளின் முடிவு. இருந்தும் மத்திய அரசும், தி.மு.க. அரசும் சேதுப் பாலத்தை இடித்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் காரணம் சேதுப் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கைச் சின்னமாக இருப்பதினால்தான். பாமியான் புத்தர்களை பீரங்கி கொண்டு பிளந்த தாலிபான்களின் காட்டுமிராண்டித் தனமான செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்தச் சேதுப்பால இடிப்பு. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் சோனியா தலைமையிலான காங்கிரசும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.வும்கூட்டணி அமைத்துச் செய்த சதித்திட்டம் இது. (இதனால் தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலுவுக்குப் பெரிய ஆதாயம் இருக்கிறது என்பது மற்றொரு விஷயம்). மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் முதலில் அழிக்கப் போவது ராமர் பாலமாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ராமர் பால இடிப்பினை எதிர்த்துப் போராடினார்கள்.

தமிழ் வருடப் பிறப்பைச் சித்திரை மாதத்தில் இருந்து ஆங்கில வருடப் பிறப்பான ஜனவரிக்கு மாற்றியது மற்றும் ஒரு முக்கியமான இந்து எதிர்ப்பு நடவடிக்கையாகும். இந்தச் சதிச் செயலைச் செய்தது கருணாநிதியின் தி.மு.க. அரசு; மறைமுக ஆதரவு கொடுத்தது சோனியாவின் காங்கிரஸ் அரசு. இந்த ஒரு நடவடிக்கைக்காகவே தமிழ் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓட்டளித்து இந்த இந்து விரோத சதிகாரச் சக்திகளை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்.

அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இடவசதி ஏற்பாடு செய்ய ஒரு துண்டு நிலத்தை அளிக்குமாறு கோரிக்கை வைத்த பின்னும் அதைக் கடுமையாக எதிர்த்து அந்த நிலத்தைத் தர மாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில இஸ்லாமிய அரசு தீர்மானம் போட்டதுடன், அங்கு வாழும் இந்துக்களின் மீது கடுமையான இனவெறித் தாக்குதலை நிகழ்த்தியது. அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு ஆதரவு அளித்தது. இந்தியாவில் இந்துக்கள் வழிபட ஒரு சின்ன நிலத் துண்டைக் கூட பெற முடியாத மிகக் கேவலமான நிலையில் இன்று இந்துக்களை வைத்திருப்பது இந்தக் காங்கிரஸ் அரசே.

ஒரிஸ்ஸா மாநிலத்தில் இந்துத் துறவி லக்ஷ்மணாநந்தாவை மாவோயிஸ்டுகளின் உதவியுடன் கிறிஸ்துவ அமைப்புகள் சுட்டுக் கொன்றதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு, அதை எதிர்த்துப் போராடிய இந்துக்களைத் தீவீரவாதிகள் போலச் சித்தரித்து அவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு. ஒரிஸ்ஸா மாநில அரசை மிரட்டி அங்கிருக்கும் இந்துக்களைக் கொடுமைப் படுத்தியது. கற்பழிப்பு போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தொடுத்தது

ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான ஜார்ஜ் ராஜசேகர ரெட்டி என்பவரின் மாப்பிள்ளை ஒரு தீவீரமான கிறிஸ்துவ மதமாற்ற ஏஜண்ட் மற்றும் பிரச்சாரகர். அவர் தூண்டுதலில் ஆந்திராவை முழுக்க முழுக்கக் கிறிஸ்துவ மாநிலமாக மாற்றவும், திருப்பதி மலையையே கிறிஸ்துவ மையமாக மாற்றவும் மிக வேகமான சதித் திட்டம் ஒன்று அரங்கேறி வருகிறது.

ஆகவே, தமிழ் நாட்டு இந்துக்கள் தங்களது இந்து அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்கள் வாரிசுகள் மாற்றப் படமால் காப்பதற்கும், தங்கள் கோவில்கள் அழிக்கப் படாமல் பாதுகாக்கவும், இந்து மதத்தின் நம்பிக்கையுள்ள ஒரு வலுவான அரசு மத்தியில் அமைய ஓட்டளிக்க வேண்டும். இன்று இந்தக் கடமையை நாம் செய்யத் தவறினால் நாளைக்கு நாம் இந்துக்களாக இந்தியாவில் வாழ முடியாத நிலையை காங்கிரசும், கருணாநிதியும், கம்னியூஸ்டுகளும் செய்து விடுவார்கள். தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது காஷ்மீர பண்டிட்டுகள் மட்டுமல்ல, பிற இந்துக்களும்தான் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

நம் வோட்டை எப்படிப் பயன்படுத்துவது?

1. இந்துக்களை ஆதரிக்கும், இந்துக்களுக்கு துரோகம் செய்யாத, பாரதீய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் தாமரைச் சின்னத்துக்கு வாக்களித்து இந்து ஒற்றுமையை நிறுவி நம்மை நாமே அழிவிலிருந்து காத்துக் கொள்வது.

2. பா.ஜ.க. போட்டியிடாத இடங்களில் காங்கிரஸ், தி.மு.க. கம்னியூஸ்டுகளைத் தவிர்த்து அடுத்து வலுவான கட்சி எது இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு வாக்களிப்பது. அ.தி.மு.க. இந்த விஷயத்தில் கொஞ்சம் குறைவான தீமையாகவே இருக்கும். காங்கிரஸ், தி.மு.க. அளவுக்கு இந்து விரோதப் போக்கை ஒரு சில விஷயங்களில் தவிர அந்தக் கட்சி இதுவரை கடைப்பிடித்ததில்லை. ஆகவே இருக்கும் தீமைகளில் குறைவான தீமைக்கு நாம் ஓட்டுப் போட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டுள்ளோம்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், உங்கள் உயிரைக் கருதியும், இந்து தர்மத்தின் பாதுகாப்புக் கருதியும் ஒரு தீர்மானமான, நல்ல முடிவை எடுத்து ஓட்டளியுங்கள். சிந்தித்துச் செயல்படுங்கள்.

முற்றும்.

2 Replies to “பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை – 2”

 1. //இந்த விஷயத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ராமர் பால இடிப்பினை எதிர்த்துப் போராடினார்கள். //

  பா ஜ க ராமர் பாலம் அல்லாத வேறு பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று நேற்று வரை உளரிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் கோடியில் ஆரம்பித்த திட்டம் இப்போது அய்யாயிரம் கோடியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. இத்திட்டத்தினால் நாட்டுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லை என்பது தெளிவு. இது பா ஜ க விற்கும் தெரியும். இருந்தாலும் திட்டம் வேண்டாம் என்று சொன்னால் ஒட்டு போய்விடுமோ என்று பயந்து கொண்டு உளறுகிறது.

  ஆனால் இத்திட்டம் உருப்படாதது என்று தெளிவாகப் புரிந்து கொண்ட அ தி மு க மற்ற பல காரணங்களுக்காகத்தான் இத்திட்டத்தை எதிர்கிறதே ஒழிய, ராமர் பாலத்தின் மீது உள்ள அக்கறையினால் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  //தமிழ் வருடப் பிறப்பைச் சித்திரை மாதத்தில் இருந்து ஆங்கில வருடப் பிறப்பான ஜனவரிக்கு மாற்றியது மற்றும் ஒரு முக்கியமான இந்து எதிர்ப்பு நடவடிக்கையாகும்…. இந்த ஒரு நடவடிக்கைக்காகவே தமிழ் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓட்டளித்து இந்த இந்து விரோத சதிகாரச் சக்திகளை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்//

  இந்தச் சட்டம் சட்டசபையில் தாக்கல் செய்த போது அ தி மு க எதிர்க்கவில்லை. இப்போதும் தன் தேர்தல் அறிக்கையில் இதைப் பற்றி அ தி மு க வாய் திறக்கவில்லை. நாங்கள் பழையபடி வருடப் பிறப்பை மாற்றி அமைப்போம் என்று சொல்லவில்லை.

  சிதம்பரம் கோவிலை தீக்ஷிதர்களிடம் இருந்து தி மு க அரசு பிடுங்கிக்கொண்டதற்கும், அ தி மு க வாய் திறக்கவில்லை. அக்கோவிலை மீண்டும் அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வழி செய்வோம் என்று சொல்லவில்லை. தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடவில்லை.

  காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தை அழிக்க நினைத்து, அதன் மேல் புழுதியை வாரி இறைத்து களங்கப் படுத்தியது அ தி மு க அரசு. தற்போது தி மு க அரசும், அப்பொய் வழக்குகளை விரைந்து முடிக்காமல் வேண்டுமென்றே தாமதப் படுத்தி வருகிறது.

  அ தி மு க அரசு தானே கொண்டு வந்த மதமாற்றத் தடை சட்டத்தை வாபஸ் பெற்றதையும் நாம் மறந்து விடக் கூடாது.

  அ தி மு க வின் தேர்தல் அறிக்கையில், ஹிந்துக்களுக்கான ஒரு வாக்குறுதியும் அளிக்கப் படவில்லை. அதற்கு நேர்மாறாக, கிறிஸ்துவ/இஸ்லாமிய (மதம் மாறிய) தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுப்போம் என்றும், ‘அனைத்து ஆன்மாக்கள் தினம்’ (All Souls Day) விடுமுறையாகப் பெற்றுத் தருவோம் என்றும், ஜெருசேலம் யாத்திரை செல்ல மானியம் வழங்குவோம் என்றும் சிறுபான்மையினரின் சமயச் சுற்றுலாத் தலங்களில் பல வித வசதிகளை செய்து தருவோம் என்றும் பல வாக்குறுதிகள் வழங்கப் பட்டுள்ளது.

  ஆகவே கட்டுரை ஆசிரியர் சொல்வது போல தி மு க அளவிற்கு அ தி மு க ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல என்று சொல்வது சரியானது அல்ல என்பது அன் தாழ்மையான அபிப்பிராயம். நம்மைப் பொறுத்தவரை அனைத்து திராவிடக் கட்சிகளும் நமக்கு எதிரானவை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற படி, விஸ்வாமித்ரா அவர்களின் வாதங்கள் அனைத்தையும் நான் ஆமோதிக்கிறேன்.

  பா ஜ க, அல்லது கூட்டணிக் கட்சிகள் அல்லது நல்ல சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோருக்கே நாம் வாக்களிக்க வேண்டும். எந்தத் திராவிடக் கட்சிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *