‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?

முந்தைய பகுதி – ‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”

தொடர்ச்சி: 

புதிய தலைமுறையின் நடுநிலை நாணயம்

புதிய தலைமுறை டிவி நடுநிலையானது என்றும் அதில் சகல தரப்பினருக்கும் இடம் அளிக்கப் படுகிறது என்றும் நான் மதிக்கும் நண்பர் பானு கோம்ஸ் கூறியுள்ளார். அதில் உண்மை கிடையாது. புதிய தலைமுறை கம்னியுஸ்டுகளினாலும், தி க கும்பல்களினாலும் இன்னும் சகல விதமான இந்திய இந்து விரோதிகளினாலும் பொறுக்கிகளினாலும் கேவலமான ஆட்களினாலும் நடத்தப் பட்டு வரும் ஒரு டி வி கம்பெனியே.

தேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அவர் அளிக்கும் பிச்சைக்காசு நிதிக்காக அவருக்கும் இரண்டு சீட்டுக்களை பா ஜ க விற்று சோரம் போயிருந்தது. அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது. அதாவது பாக்கிஸ்தானில் நிர்வாண நடனம் போன்ற ஒன்றை சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோ க்ளிப்பிங்கை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அதைப் பார்ப்பவர்கள் கர்நாடக பா ஜ க எம் எல் ஏக்கள் என்று பொய் பிரசாரத்தைச் செய்தது. அப்பொழுதே மானம் கெட்ட பா ஜ க பச்சமுத்துவை வெளியில் தள்ளியிருந்திருக்க வேண்டும். மானம் ரோஷம் கெட்டுப் போய் அவனுடன் உறவினைத் தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் அந்த விடீயோவை ஒளிபரப்பி பா ஜ க கட்சிக்காரர்கள் அனைவரும் பலான படம் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அது பாக்கீஸ்தானிய வீடியோ என்றும் அதில் இருப்பவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானிய முஸ்லீம்கள் என்றும் உண்மை வெளி வந்த பின்னரும் அது இந்த டி வி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப் பட்ட பின்னரும் கூட அந்தக் கேவலமான பொய் பிராசரத்தை அந்த டி விக்காரர்கள் செய்து வந்தார்கள். தொடர்ந்து அந்த பொய்யான வீடியோவைப் போட்டு பா ஜ க வை அசிங்கப் படுத்தினார்கள். பின்னர் அதற்காக எந்தவொரு மன்னிப்போ வருத்தமோ கூட அவர்கள் ஒரு மரியாதைக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. இதுவே புதிய தலைமுறையின் மீடியா அறம், தார்மீகம், யோக்கியதை, கண்ணியம் எல்லாமே.

puthiya_thalaimurai_under_raid

இன்னொரு உதாரணம் இந்த டி வி ஓனர் பச்சமுத்துவின் கட்சியின் ஊதுகுழலாக செயல் பட்டு வருவது. நண்பேண்டா என்ற படத்தில் ஏதோ ஒரு வசனத்தில் பச்சமுத்து என்ற பெயரில் நடிகர் காமெடி செய்திருப்பதை எதிர்த்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தி அந்தப் படத்தை தடை செய்யக் கோரினார்கள். காமெடியில் வருவதோ பச்சமுத்து என்ற பெயர் மட்டுமே ஆனால் இந்த டி வி ஆட்கள் மீண்டும் மீண்டும் பார்வகுலம் என்னும் ஜாதியினரையே அந்த சினிமா இழிவு படுத்துகிறது என்று சொல்லி மீண்டும் மீண்டும் பொய் பிரசாரத்தை நடத்தினார்கள். அந்த அளவுக்குக் கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இந்த புதிய தலைமுறை டி வி.

இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்

ஆக இப்படி பொய் புனைச் சுருட்டு ஆகியவற்றை மட்டுமே விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இந்த டி வி இதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் இயல்பான இந்து வெறுப்பினால் இப்பொழுது இந்து நம்பிக்கைகளைக் கேவலப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த ஒரு நிகழ்ச்சியே புதிய தலைமுறை அயோக்கியர்களினால் மக்களை ஏமாற்ற நடத்தப் பட்டு வரும் டி வி என்பதை எவருமே புரிந்து கொள்ள முடியும். இந்த டி வி யை ஆதரிக்கும் எவரும் இந்த கேடு கெட்டத்தனத்தை மறைத்து அது ஒரு தரமான டி வி என்று ஏமாற்றுகிறார்கள் பொய் சொல்கிறார்கள். கிடையாது இந்த டி வி பொய் செய்திகளைத் திட்டமிட்டு பரப்பி வரும் ஒரு மோசடி டி வி மட்டுமே

அடுத்ததாக இந்த டி வியின் முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நபர்கள் அனைவருமே கடுமையான இந்து வெறுப்பு உடையவர்கள். கம்னியுஸ்டு மற்றும் திக நிலைப்பாடு உடையவர்கள். அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள். இவர்களினால் எப்படி நடுநிலையான நிகழ்ச்சிகளை அளிக்க முடியும்? புது புது அர்த்தங்கள் என்ற நிகழ்ச்சியை அளிக்கும் ஜென் ராம் ஒரு கம்னியுஸ்டு காரர். நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிச ஆதரவாளர். அவர்களை ஆதரித்தும் இந்து அமைப்புகளை கடுமையாக விமர்சித்தும் ஜுனியர் விகடன் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவர். அவர் நிகழ்ச்சி நடத்தினால் அது எப்படி நடுநிலையான நிகழ்ச்சியாக இருக்கும்? இதையே அவர் கம்னியூஸ்டுகளுக்கான டி விக்களில் செய்தால் எவரும் கேள்வி கேட்க்கப் போவதில்லை. அவர் கம்னியுஸ்டாக இருப்பதிலோ அதன் கொள்கைகளை பிரசாரம் செய்வதிலோ எனக்கு ஆட்சேபணை இல்லை அது அவர் உரிமை, அவர் சுதந்திரம். அதை தீக்கதிரில் போய் செய்து கொள்ளட்டும். அனைத்து தரப்பினரும் பார்க்கும் ஒரு டி வி யில் நடுநிலையாக நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று பம்மாத்து செய்ய வேண்டாம். அதன் பெயர் மோசடி. மக்களை ஏமாற்றும் வேலை.

puthiya_thalaimurai_jainulabideen

சரி இதுநாள் வரை செய்யவில்லை. இப்பொழுது சாயம் வெளுத்து வருகிறது. இனியாவது அப்படி அறிவித்துக் கொள்ளும் நேர்மை இந்த டி விக்கு உண்டா? புகை பிடித்தால் கான்சர் வரும் என்றொரு விளம்பரத்தை சினிமா காட்சிகளில் வரும் புகை பிடிக்கும் சீன்களில் காண்பிப்பது போல ஜென் ராம் வரும் காட்சிகளில் எல்லாம் இவர் ஒரு கம்னியுஸ்டு என்று உண்மையை அறிவித்து விட்டு நிகழ்ச்சி நடத்தும் நேர்மை அந்த டி வி க்கு உண்டா? இதை ஜென்ராம் செய்ய முடியாது டி வி நிர்வாகிகள் செய்ய வேண்டும். செய்வார்களா?

ஆனால் ஒரு நடுநிலையான டி வி என்று அறிவித்துக் கொண்ட டி வி யில் ஒரு கம்னியுஸ்டு கட்சிக்காரர் பொது மக்களிடம் கருத்து உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது தன் கட்சி தன் கொள்கைகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்தினால் அதை எப்படி நேர்மையான தரமான நடுநிலையான டி வி என்று சொல்ல முடியும்? அவரது சார்பு நிலை அவர் அழைத்து வரும் பேசாளர்கள் மூலமாகவும் அவரது இடையூறுகள் மூலமாகவும் மிகத் தெளிவாக வெளிப்படும். அப்படியானால் அது நிஜமாகவே நடுநிலையான டி வி என்றால் என்ன செய்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு கம்னியுஸ்டு என்று அறிவித்து விட்டு அதை அவர் கழுத்தில் எழுதி மாட்டிக் கொண்டு அல்லவா நிகழ்ச்சி நடத்தியிருக்க வேண்டும். கேட்க்கும் அப்பாவி பொது மக்கள் இது நடுநிலையான டி வி என்று நம்பி ஏமாற மாட்டான் அல்லவா? அப்படி ஒரு கட்சி அபிமானியை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்துவதும் அதை பொது மக்களிடம் திணிப்பதும் அயோக்கியத்தனம் அல்லவா? மோசடி வேலை அல்லவா? இதை எப்படி நடுநிலையான டி வி என்று பானு கோம்ஸ் போன்றோர் சொல்கிறார்கள். அப்படியானால் நடுநிலையின் அர்த்தத்தை அகராதியில் மாற்றி விட்டார்களா என்ன?

புதிய தலைமுறை நடுநிலையான டி வி என்று எவரேனும் சொன்னால் நான் தான் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பேன் அதை ஏற்றுக் கொண்டால் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

மேலும் இவர்களின் பத்திரிகையில் முன்பு இணையத்தில் உள்ள பெண்களின் படங்களை எடுத்து நிர்வாணமாக்கி காமக் கதைகள் எழுதி அவர்களை மிரட்டிக் கொண்டிருந்த ஒரு பொறுக்கியைத்தான் நிருபராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை நிருபனாக வைத்துக் கொண்டுதான் வெட்க்கமில்லாமல் கற்பழிக்கு எதிராகப் பேசுகிறார்கள் இந்த அயோக்கிய சிகாமணிகள். இன்னொரு முக்கியமான ஆள் நடிகைகளின் அந்தரங்கங்களை கதைகளாக எழுதி வியாபரம் செய்ததற்காக இன்னொரு பத்திரிகையில் இருந்து அடித்து விரட்டப் பட்ட நபர். இதுதான் இவர்களின் யோக்கியதை தகுதி தராதரம் நேர்மை எல்லாமே.

puthiya_thalaimurai_seeman

இன்னொரு முக்கியமான நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரு தி க கட்சிக்காரர், தி க குடும்பத்துக்காரர். ஒரு தி க காரர் எப்படி இந்து மதத்தை அணுகுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவர் தி க காரர் என்பதை அறிவித்து விட்டு அல்லவா பொது நிகழ்ச்சிகளை நடத்தியிருந்திருக்க வேண்டும்? அதுதானே ஊடக நேர்மை?

இந்த இருவரும் நடத்தும் நிகழ்ச்சிகளில் நடு நிலமை என்ற பெயரில் மோசடித்தனம் செய்து வந்தார்கள். ஒரு பா ஜ க அல்லது இந்த்துவரை அழைத்தால் அவருக்கு எதிராக ஐந்தாறு கம்னியுஸ்டு, தி க , திமுக கட்சி ஆட்களை நடத்தி நிகழ்ச்சி நடத்தி இந்து தரப்பு பேச்சாளர் பேசும் பொழுது நடுவர் இடையூறு செய்து திசை திருப்புவார். நடுநிலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு தரப்பினரை மட்டும் அவமானப் படுத்தும் கேவலப் படுத்தும் கேலிக் கூத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தன. அதையும் வெட்க்கமில்லாமல் பொறுத்துக் கொண்டு இந்து தரப்பினர் கலந்து கொண்டனர். அது அவர்களின் தவறு.

பா ஜ க கட்சி உடனடியாக பச்சமுத்துவுடன் உள்ள கூட்டணியை முறிக்க வேண்டும். அவர் நடத்தும் நிறுவனங்களின் மீதுள்ள அனைத்து புகார்களையும் விசாரிக்க வேண்டும். நடுநிலை இல்லாமல் ஒரு தரப்பாக நிகழ்ச்சி நடத்தும் ஆட்களின் நோக்கங்களையும் பின்புலன்களையும் விசாரித்து இந்த டி வி யின் உண்மையான நோக்கங்களை அம்பலப் படுத்த வேண்டும்.

இந்து அமைப்பினர்கள் இந்த டி வி யை எதிர்த்து போராடுவதுடன் கூடவே தங்கள் கட்சித் தலைவர்களை வற்புறுத்தி உடனடியாக மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். மக்களிடம் இந்த டி வி நிகழ்ச்சிகள் நடுநிலையானைவ அல்ல அது கம்னியுஸ்டுகளினாலும் தி க வினராலும் நடத்தப் படுகின்றன என்பவற்றை விளக்க வேண்டும்

புதிய தலைமுறையின் இந்து விரோதப் போக்குகள்:

புதிய தலைமுறை என்றொரு டி வி கம்பெனியை கல்வி பிஸினெஸ் டிராவல்ஸ் பிஸினெஸ் போன்ற பல தொழில்கள் செய்து வரும் பச்சைமுத்து அண்ட் சன்ஸ் நடத்தி வருகிறது. இவர்கள் ஆரம்பித்த புதிதில் தாங்கள் நடுநிலை டி வி என்றும் அனைத்து தரப்பினர்களுக்கும் இடம் கொடுப்போம் என்றும் சொல்லிக் கொண்டார்கள். இன்னும் அதில் கலந்து கொண்டு பேசும் சிலர் அதற்காக சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்கள்.

அந்த டி வி யில் இருந்து முன்பு தீபாவளி கொண்டாடுவது அவசியமா என்றொரு விவாத நிகழ்ச்சியை நடத்தினார்கள். அவர்கள் போலவே இன்னொரு பிரபலமான டி வி யான விஜய் டி வி யில் அந்தோணி என்னும் கிறிஸ்துவரும் இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து விவாத நிகழ்ச்சிகளை நீயா நானா பேயா பிசாசா போன்ற நிகழ்ச்சிகளில் நடத்தினார்கள். ஏற்கனவே தி மு க வின் டி வி கம்பெனிகளில் காசி குறித்தும் இந்துக்கள் நம்பிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் நிகழ்ச்சிகளும் நடந்தேறி வருகின்றன. இவை அனைத்தும் ஏதோ தனித்தனியாக நடப்பவை கிடையாது. இவை அனைத்துமே இந்துக்களின் ஆதார நம்பிக்கைகளைக் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து இந்து இளைய தலைமுறையிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை இந்து மதத்தில் இருந்து பற்றின்றி நம்பிக்கை இன்றி போக வைத்து மதமாற்றம் செய்யும் ஒரு மாபெரும் சதியின் ஒரு அங்கமே. குல தெய்வங்கள் குறித்தும் சிறு தெய்வங்களைப் பிரித்து நாட்டார் தெய்வங்கள் என்று ஆராய்ச்சி செய்து பெருந்தெய்வம் சிறு தெய்வம் என்று பிரிப்பதும், மாதொருபாகன் போன்றொரு நாவல்கள் எழுத வைப்பதும் இந்த சதிகாரர்கள் நிதியுதவி அளித்து செய்து வரும் வேலைகளே.

puthiya_thalaimurai_pachamuthu

இந்தச் சதிச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இதற்கு முன்பாக விஜய் டி வி யில் ஆழமற்ற மேலோட்டமான விவாத நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மொண்ணைகளாக்கி வரும் ஆண்டனி கோட்டு கோபி கம்பெனி பெண்களுக்கு தாலி அவசியமா என்றொரு நிகழ்ச்சியை நடத்தியது. அதை இந்து இயக்கங்கள் பலரும் ஆட்சேபித்தவுடன் முஸ்லீம் பெண்களுக்கு பர்தா அவசியமா என்றொரு நிகழ்ச்சியை நடத்துவது போல நடத்தி விட்டு அதற்கு டைரக்டர் அமீர் தலமையில் முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று சொல்லி அந்த நிகழ்ச்சியையே வெளியிடாமல் நிறுத்தியும் கொண்டது. இப்படி பாரபட்சமாக இந்துக்களின் நம்பிக்கையை மட்டும் கேவலப் படுத்தி நிகழ்ச்சிகள் நடத்துவதையும் பிற மதங்களைத் தொடாத போக்கையும் இந்து அமைப்பினர் கண்டித்து வந்தார்கள்

தாலி உட்பட இந்துக்களின் எந்தவொரு நம்பிக்கை குறித்தும் தாராளமாக விவாதிக்கட்டும், நிகழ்ச்சி நடத்தட்டும் ஆனால் அது போலவே பிற மதங்களின் நம்பிக்கைகளையும் குறைந்தது பிற மதத்தினரின் மூட நம்பிக்கைகளையாவது விவாதித்து விட்டு இந்து மதத்தினரையும் விமர்சிக்கட்டும். மாறாக அவர்களை விமர்சிக்க மாட்டேன் இந்து நம்பிக்கைகளை மட்டுமே விமர்சிப்பேன் என்று சொன்னால் அது அயோக்கியத்தனம். அதைக் கண்டிக்கவே செய்வார்கள். முஸ்லீம் பெண்கள் தமிழ் நாட்டின் வேகாத வெயிலில் கண்கள் மட்டுமே தெரியுமாறு கருப்பு பர்தா அணிய வைக்கப் படுகிறார்கள். அது குறித்தோ கத்தோலிக்க மதத்தின் திருமணச் சட்டம் குறித்தோ முஸ்லீம் ஆண்களின் பலதார மணம் குறித்தோ இதே மீடியாக்கள் விமர்சிக்க நிகழ்ச்சி நடத்த தயாராக இல்லாத பொழுது தேர்ந்தெடுத்து இந்துக்களின் நம்பிக்களை மட்டும் விமர்சித்து விவாதிப்பார்களேயானால் அதில் உள்நோக்கம் உள்ளது சதி எண்ணம் உள்ளது என்று சந்தேகித்து கண்டிக்கப் படுவார்கள். அப்படி கண்டிப்பதில் தவறேதும் கிடையாது. என்றைக்கு உங்களுக்கு அனைத்து மதங்களையும் ஒரே சமமாக விமர்சிக்கும் உரிமை சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றைக்கு நீங்கள் தாராளமாக இந்துக்களைப் பற்றியும் நிகழ்ச்சி நடத்தி விட்டுப் போங்கள். அது வரை நடிகைகளின் தொப்புள்களை ஆராய்வதுடன் மட்டுமே உங்கள் நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொள்ளுங்கள்

ஏன் புதிய தலைமுறை டி வி தாலி குறித்த நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் அவர்கள் நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்காக உரிமைக் குரல் கொடுத்திருக்கிறார்கள்  சில முற்போக்குகள்.  தாராளமாகக் கொடுக்கட்டும். ஆனால் விஜய் டி வி பர்தா நிகழ்ச்சியை நிறுத்திய பொழுது இதே அக்கறையை  எந்தவொரு முற்போக்கு அறிஞர்களும் காண்பிக்கவில்லை என்பதே உண்மை. இந்த இரட்டை வேடங்கள் இருக்கும் வரையிலும் புதிய தலைமுறையின் இந்து விரோத நிகழ்ச்சிகளுக்கு எதிரான கண்டனங்களை அதில் மெரிட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் ஆதரிக்கவே செய்வேன்.

********

புதிய தறுதலை டி வி மீது குண்டு வீசியதாக மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள். எந்தவொரு இந்து அமைப்புகளிலும் இல்லாமல் திடீரென்று தோன்றி ஏற்கனவே கோவை பகுதிகளில் ஃப்ராடு செய்து விட்டு சென்னைக்கு வந்து ஒரு திடீர் இந்து அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் பஸ் ஏஜெண்ட் ஒருவரும் அவரது பஸ் ப்ரோக்கர்கள் சிலரும் தாங்கள்தான் குண்டு வீசியதாகச் சொல்லி கைதாகியிருக்கிறார்கள். அவர்கள் வீசியது வெடி குண்டு அல்ல தீபாவளிக்கு வெடிக்கப் படும் பட்டாசுகள் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜும் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஒரு மீடியா மீது தீபாவளி பட்டாசாகவே இருந்தாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் வளாகத்தில் வீசி எறிந்தது குற்றமே. அதற்காக அப்படி வீசியவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இவை போன்ற ரவுடித்தனங்கள் கடுமையாகக் கண்டிக்கப் பட வேண்டும். இதில் எந்தவொரு இந்து ஆதரவாளர்களுக்கும் ஆட்சேபணை கிடையாது. மேலும் அவனை அனைத்து இந்து அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்தும் உள்ளார்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிஜ குண்டுகள் வைத்து மக்களைக் கொல்லும் பொழுதெல்லாம் அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது என்றும் போலீஸ் பொய் கேஸ் போடுகிறது என்றும் சொல்லி அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் போலி மதவாதக் கட்சிகள் போல் இல்லாமல் செய்த ஆள் இந்துவாக இருந்தாலும் அவன் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று இன்று அனைத்து இந்து கட்சியினரும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த டிபன்பாக்ஸ் குண்டுவீச்சு முழுவதும்  புதிய தலைமுறை டிவிக் காரர்களே திட்டமிட்டு செய்த ஒரு நாடகம் என்றும் சொல்கிறார்கள். அதையும் போலீசார் விசாரித்து அது உண்மையென்றால் இந்த செட்டப்பை செய்த பச்சமுத்து மற்றும் அந்த டி வி யின் சம்பந்தப் பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டு கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்.

(ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

9 Replies to “‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?”

 1. இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் மனதில் உள்ளவற்றை அப்படியே பிரதிபலிக்கிறது.

  1. காற்பந்து விளையாட்டில் பெண்கள் கலந்துகொள்ள கூடாது என்றும் அதற்கு ஷரியத்தில் அனுமதி இல்லை என்றும் கூறி West Bengal ல் ஒரு இமாம் fatwa வெளியிட்டுள்ளார். அதற்கு சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகமும் ஆமாம் போட்டு அந்த விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது. இதைப்பற்றி இந்த கேடுகெட்ட பயல் (=பச்சை முத்து) நடத்தும் (நடுநிலை டிவி என்று கூறிகொள்ளும்) ‘புதிய தலைமுறை டிவி’ சூடான விவாதம் நடத்துமா? அப்படி நடத்தினால் அந்த டிவி building ஐ குண்டு போட்டு தகர்த்துவிடுவார்கள்.(சில ”தடம் மாறிய” இந்துக்கள் வெறும் பட்டாசு மட்டும் வெடித்து விட்டு சென்றனர்)

  2. இந்து சாமியார்கள் தவறு செய்தால் 24 மணி நேரமும் அந்த செய்தியை போட்டு போட்டு காட்டும் இவர்களுக்கு ஒரு சவால். ஈரோட்டில் TN பாளையத்தில் Franklin Paul (இவர் ஒரு Pastor ) என்பவன் முதல் மனைவியை விவாக ரத்து செய்த பிறகு ((((அதற்கு காரணம் அருளாளன்(பேரை பார்த்தால் இவன் ஒரு கிறிஸ்தவன் என்று தெரிகிறது) என்ற கல்லூரி மாணவன்.))) இன்னொரு பெண்ணை காதலிக்கிறான். இந்த பெண்ணோடும் அந்த மாணவன் கள்ள தொடர்பு வைத்து கொள்கிறான். அதனால் கோபமடைந்த அந்த Pastor (இவர்களுக்கு பேரை பாருங்கள்) கல்லூரி மாணவனை விஷம் கொடுத்து சாகடித்து ஒரு வேனில் எடுத்து சென்று body ஐ dispose செய்து விடுகிறான். டிவி காரர்களுக்கு இது ஒரு சாதாரண செயலா? இதை 24 மணி நேரமும் செய்தியாக ஒளிபரப்புவார்களா? அப்படி செய்யவே மாட்டார்கள். ஏனென்றால் ஏமார்ந்தவன் இந்து சாமியார்தான்.

  “BS ” என்பவர் நான் தலைமுறை டிவி குடும்பத்தினரை பற்றி கேவலமாக எழுதிவிட்டேனாம்! தாலி பிடிக்கவில்லையென்றால் அந்த ”இந்துமத பச்சை துரோகி” பச்சமுத்து தன மனைவி கழுத்திலுள்ள தாலியை கழற்றி எறிந்துவிட்டு அதன் பின்ன அந்த ஆள் நடத்தும் டிவி யில் தாலி பற்றி விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்?

  ”தீபாவளி கொண்டாடுவது அவசியமா?” என்று விவாதம் நடத்தும் அந்த டிவி காரர்கள் நெஞ்சில் துணிவிருந்தால் பக்ரித் கொண்டாடுவது அவசியமா என்று விவாதம் நடத்த தயாரா?

  சன் டிவி யில் வீரபாண்டியன் என்பவன் ஆடாத ஆட்டம் ஆடினான். இப்போது அவன் விவாத மேடையில் வருவதில்லை (காரணம் பிஜேபி எதிர்ப்பு தெரிவித்ததனால்) அதேபோல பிஜேபி காரர்கள் இனி அந்த தறுதலை டிவி யில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுக்க வேண்டும். பிஜேபி ஆரர்கள் ஒரு புதிய டிவி யை உடனடியாக துவக்க வேண்டும் (ஆமாம் ஒரு தமிழ் தினசரியை துவக்க வேண்டும் என்று சொல்லி அதை அப்படியே செய்து விட்டார்கள் பாருங்கள்) பிஜேபி காரர்கள் முழு செவிடர்கள். அவர்களின் காதில் எது பேசினாலும் விழவே விழாது.

 2. I knew about the puthia thalaimurai T.V. Its going one side way for against of Hindu society I hate the t.v program.
  jagadeesan

 3. அந்த ‘குண்டு வெடிப்புக்கு ‘பிறகு நாலைந்து நாய்கள் தெறித்து ஓடுவதை பார்த்தால் ,அவை சிரித்துக்கொண்டே ஊடுவதைப்பார்களாம்,அவை பச்சை முத்துவின் ரகசியங்களை அறிந்திருக்கலாம் .அவர்களின்’செய்திச்சேவை ‘தெரு நாய்களை மட்டுமல்ல ,ஜெயம் பாண்டியனை போல கிருக்கன்களையும் கிளப்பி விட்டிருக்கின்றன .

 4. pacha muthu invited modi to stay in his hotel when modiji came to address first public meeting at chennai near vandalur during the national election. But modi refused and did not stay over there. pachai muth paid Rs 1 crores for p m fund for jammu kashmir relief funds and asked him help in getting land allotment in ahemdabad for starting his SRM university in gujarat but bjp state government never obliged this fellow. Also pachimuth hold in konggu desam lost its hold among his community gounders after perumal murugan affair as bjp has hijacked this issue seriously through sangh parivar outwits with the support of community associations in this region. so this person become jittery. Christian missionaries after seeing the wedge between him and BJP, approached him with their usual tricks ,,,,,,,, and bracketed this person. Hence his TV channel has become a anti hindu channel. surprisingly without BJP participation now in debates in the morning times, the chairs have been filled with DK fellows and minortities to talk abusing hinduism which irked and irritate hindus resulting the viewers have switched over to other channels now.

  BJP must severe connections with this fellow and investigate the frauds of this person and expose him and book this person to the law of land.

 5. சமீபத்தில் (2015-ல்) பச்சமுத்து நடத்தும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் உயிர் தொழில் நுட்பத் துரையின் மூலமாக சுமார் 16 கோடிக்கும் அதிகமான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. வேறெந்த பல்கலைக்கழகத்திற்கும் இவ்வளவு பெரிய நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்படவில்லை. மத்திய அறிவியல் துறையின் அதிகாரிகளும் அடிக்கடி இப்பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்து மேலும் நிதியுதவி செய்வதாக கூறிச்சென்றுள்ளனர். இதற்காக ஒரு கமிஷன் கூட்டமே இங்கு நடக்கிறது. மோடி அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் ஆராய்ச்சி செய்வதைவிட அப்பணத்தை சுருட்டுவதில் தான் ஆர்வம் உள்ளது. மோடியையும் மோடி அரசையும் ஏமாற்றிவிட்ட வெற்றிப்புன்னகையில் வலம் வருகின்றனர். ஏன் இதுபோன்ற கொழுத்த பணவெறி குற்றப் பின்னணி கொண்ட அமைப்புகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவவேண்டும் என்பதுதான் புரியவில்லை. மோடி அரசு உடனடியாக உணரவேண்டும் இந்த பச்சோந்திகளை.

 6. Well puthiya thalaimurai channel might be hosting one sided debates where incendiary remarks are made but that does not warrant any hindu outfit to render it’s own style of justice. We claim to represent an alternative style of politics other than the usual violent activism associated with dravidar

 7. Kazhagam and seeman. Media liberty is indeed at risk but laying the blame for it squarely on hindu outfits is a lopsided assessment.tamil outfits like ntk , dalit outfits like vck , vaiko are also known to bring down the roof when shows ‘offending’ tamil sentiments are aired. Ltte was a terrorist outfit calling it what it is irks these savages

 8. சரியான சமயத்தில் அணைத்து ஹிந்துகளிடம் இந்த தொலைகாட்சி பற்றி உண்மையை அறிய தாங்கள் எழுதிய கட்டுரை உதவிபுரியும் ,வாழ்த்துகள்

 9. மாதொருபாகன் நாவல் பற்றி பெருமாள் முருகனின் கூற்றுக்களை விமர்சானம் செய்ய தகுதி, ஆய்வு, கள-அனுபவம் உடையவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை வீடியோ ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இதைப்பார்க்கவும். முற்போக்கு மாபியாவின் கூச்சலில் உண்மை இறந்துவிடாது..

  https://www.karikkuruvi.com/2015_04_01_archive.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *