சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்

மீப காலங்களில் மோடி அரசை மைனாரிடிக்களுக்கு எதிரான ஒரு அரசாகக் காட்டுவதற்கும் அந்தப் பொய்யை உண்மை என்று நிறுவுவதற்கும் சர்ச்சுகளும், வெளிநாட்டு சக்திகளும், இந்தியாவில் உள்ள இந்திய துரோக இந்திய விரோத கம்னிய்ஸ்டுகளும், இந்தியாவின் மீடியாக்களும் ஓவர் டைம் வேலை செய்து முயன்று வருகின்றன. எந்தவொரு நாளிலும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான கோவில்கள் கொள்ளையடிக்கப் பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப் பட்டும் நாசப் படுத்தப் பட்டும் வருகின்றன. ஆனால் அது குறித்து எந்த பத்திரிகையும் ஒரு சின்ன செய்தி கூட விடுவதில்லை. ஆனால் எங்கேயாவது ஒரு சர்ச்சில் யாராவது ஒருவன் ஒரு சின்னக் கல்லை வீசினாலோ அல்லது எங்காவது ஒரு கன்னியாஸ்திரி யாராவது ஒரு வங்க தேச முஸ்லீம்களினால் ரேப் செய்யப் பட்டதாகச் சொன்னாலோ உடனே மோடி அரசு மைனாரிடி விரோத அரசு என்று மெழுகுவர்த்திகளைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் கிளம்பி விடுகிறார்கள். வாஷிங்டன் போஸ்ட் முதல் உள்ளூர் தினத்தந்திகள் வரை ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் அதே பத்திரிகைகளும் அமெரிக்க சர்ச்சுகளும் கென்யாவில் 150 கிறிஸ்துவர்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டது குறித்து வாய் திறப்பதில்லை.

மோடி அரசுக்கு எதிரான அந்த திட்டமிடப் பட்ட அவதூற்று பிரசாரத்துக்கு நேற்று ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி துணை போனார். இன்று ஒரு இந்நாள் ஜட்ஜ் துணை போயுள்ளார். இனியும் வரும் நாட்களில் ஏகப் பட்ட பேர்கள் இது போல கிளம்பி வருவார்கள். மோடி அரசு எப்படியாவது அகற்றப் பட வாய்ப்புண்டு என்று இவர்கள் நம்பும் வரை இந்தக் கேடு கெட்ட நாசகார அழிவு சக்திகள் ஓயப் போவதில்லைதான்

gavel of a judge in court“புனித வெள்ளி அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து விட்டார்கள். பா ஜ க வின் பாசிச ஆட்சியிலே மதச்சார்பினைக்கு பங்கம் வந்து விட்டது.  பார்த்தாயா மோடி அரசின் கிறிஸ்துவ விரோத போக்கை!”  என்றெல்லாம் மீடியாக்களும் முற்போக்குகளும் ஊளையிடுகிறார்கள். அமெரிக்கா ஒரு கிறிஸ்துவ நம்பிக்கை நாடு. இங்கு இந்த குட் ஃப்ரைடேக்கு என ஸ்பெஷல் லீவு எதுவும் கிடையாது. அரசு விடுமுறை கிடையாது என்பதை அறிக.

இந்தியாவில் ஏற்கனவே ஏராளமான அரசு விடுமுறைகள் வீணாக விடப் படுகின்றன. அரசு விடுமுறை என்பது அதிக பட்சம் வருஷத்திற்கு பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கிறிஸ்மஸ், ரம்ஜான், மஹாவீரர் ஜெயந்தி, ஹனுமான் ஜயந்தி போன்ற பண்டிகைகளுக்கான லீவுகளை அதைப் பின்பற்றுபவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஃப்ளோட்டிங் ஹாலிடேக்களை வைத்து விடலாம். தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொண்டால் போதுமானது. தீபாவளி, பொங்கல் போன்ற ஒரு சில பெரிய பண்டிகைகளுக்கு மட்டுமே பொதுவில் விடுமுறை விடுவது அவசியம். அன்றும் கூட வந்து வேலை செய்ய விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கப் பட வேண்டும். முக்கியமாக இந்தியாவின் நீதி மன்றங்களுக்கு ஒரு நாள் விடுமுறை கூட அளிக்கப் படக் கூடாது.

இந்த விஷயத்தில் குரியன் மோசமான மத அரசியலை செய்கிறார். இதே குரியன் அன்னை சோனியாவின் ஆட்சியிலே இதே போன்றதொரு ஜட்ஜுகளின் கூட்டத்தில் இதே புனித வெள்ளியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவருக்கு மதக் கடமைகள் ஏதும் அழுத்தவில்லை. அப்பொழுதெல்லாம் அவருக்கு சோனியா அரசு அவரது மத சுதந்திரத்தில் வழிபாட்டு உரிமையில் தலையிட்டதாக புகார் எழவில்லை. அப்பொழுது அவர் எந்த லெட்டரையும் எந்த பிரதமருக்கு எழுதவும் இல்லை. அதை மீடியாக்களுக்கு வெளியிட்டு சோனியா அரசு மைனாரிட்டிகளுக்கு எதிரானது என்று புகார் கூறவும் இல்லை. இப்பொழுது மட்டும் அவருக்கு திடீரென மத உரிமை எழுவானேன்? அப்பொழுது இதே குரியன் என்ன செய்து கொண்டிருந்தார்? இவர் கிறிஸ்துவ  டிவிக்களில் தோன்றி மத பிரசாரம் செய்து வரும் ஜட்ஜ். இவர் முதலில் இந்த பதவிக்கே அருகதையற்றவர். இப்பொழுது ஒரு தேவையில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, மோடியின் அரசு மைனாரிட்டிக்களுக்கு எதிரான அரசு என்றொரு பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கும் சதி வலையில் ஒரு அங்கமாக, இந்தியாவுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார். இவர் பதவியில் இருந்து உடனடியாக இம்பீச் செய்யப் பட வேண்டும்.

இவர் மட்டும் அல்ல, ஊழல் சோனியா மன்மோகன் மாஃபியா நியமித்த அத்தனை கேரள ஜட்ஜுகளுமே ஊழல்வாதிகளாகவும் கறை படிந்தவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பாத்திமா பீவி, பாலகிருஷ்ணன் என்று அனைவருமே மோசமான ஊழல் ஜட்ஜுகளாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்த பொழுதிலும் அவர்களை எவரும் எதுவும் செய்ய முடிந்ததில்லை. இந்தியாவில் கடவுளுக்கும் மேலான அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருக்கிறார்கள்.

முதலில் கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்கும் பொழுது இந்த நீதிபதிகளுக்கு ஹோலி கொண்டாட ஒரு வாரம், கோடை விடுமுறைக்கு 2 மாதம் என்று லீவு தருவது கிரிமினல் குற்றமாகக் கருதப் பட்டிருக்க வேண்டும். உடனடியாக மோடியின் அரசு இவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த லீவுகளை ரத்து செய்து இவர்களையெல்லாம் 24X7 ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மக்களின் வரிப்பணம் இவர்கள் தின்று விட்டுத் தூங்குவதற்காக வீணாவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். குரியனுக்கு அப்படியே கட்டாயமாக கேரளத்தில் போய்தான் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று இருந்தால் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லி விட்டுப் போயிருந்திருக்கலாம்.  கூட்டத்தை ஏற்பாடு செய்த தலைமை தாங்கி நடத்தும் நீதிபதி தத்து தடுத்திருக்கப் போவதில்லை. சோனியா ஆட்சியில் பொத்திக் கொண்டிருந்து விட்டு இப்பொழுது மோடியின் ஆட்சியில் மட்டும் அவதூறு சொல்வது திட்டமிட்ட சதி, உள்நோக்கம் உடையது, அயோக்கியத்தனமானது மட்டுமே

உலகின் மிக மிக மோசமான அபாயகரமான எல்லைப் பகுதியில் இந்தியாவின் லட்சக்கணக்கான போர் வீரர்கள் பனி, வெயில், புயல், மழை வெள்ளம், தீபாவளி, பொங்கல் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் இந்தியாவின் எல்லைகளை எதிரிகளின் குண்டுகளுக்குப் பலியாகிக் கொண்டு காத்து வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் நாங்கள் தீபாவளி அன்று வேலை பார்க்க மாட்டோம் என்று இந்த குரியன் மாதிரி விடுப்பு எடுத்தால் இந்த குரியன் என்ன ஆவார்? இதே குரியனுக்கு ஒரு புனித வெள்ளியின் பொழுது ஹார்ட் அட்டாக் வந்து, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் பொழுது, ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு மாத்யூசாக இருந்து, “இன்று புனித வெள்ளி ஆகவே நான் ஆம்புலன்ஸ் ஓட்ட மாட்டேடேன்” என்று சொன்னாலோ, அல்லது எமர்ஜென்சி டாக்டர்,  “இன்று புனித வெள்ளி. ஆகவே நான் வேலை பார்க்க மாட்டேன்” என்று சொன்னாலோ, இவர் ஒத்துக் கொள்வாரா? வெயிலோ மழையோ தீபாவளியோ பொங்கலோ கிறிஸ்மஸோ இரவோ பகலோ என்று கால நேரம், நாள் நட்சத்திரம் பார்க்காமல், இந்தியாவில் இவரை விட பல மடங்குக் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு ராணுவ வீரர்கள் முதல் ஹாஸ்பிட்டல் நர்ஸ்கள் வரை கோடிக்கணக்கானோர் வேலை பார்த்து வருகிறார்கள். வருடத்தில் 180 நாட்கள் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த குரியன் சொல்கிறார் –  இவரது மத உரிமையைப் பறித்து விட்டார்களாம்!

அப்படியொரு மத உரிமை இந்தியாவுக்குத் தேவையில்லை. அது நாசமாகப் போகட்டும். இதுதான் மத உரிமை என்றால், இதுதான் மதச்சார்பின்மை என்றால், அந்த மதச்சார்பின்மை நாசமாகப் போகட்டும். சூது செய்யும் குரியன்கள் ஐயோ ஐயோ என்று போகட்டும்.

(ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

11 Replies to “சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்”

 1. உமாசங்கர்கள் என்ன தமிழகத்துக்கு மட்டிலும் சொந்தமான சொத்துக்களா என்ன? உலகத்தில் சிலுவையை உறுதியாக விதைத்து………. மற்ற அனைத்து பாகன் வழிபாடுகளை அழித்தொழித்தாக வேண்டிய க்றைஸ்தவ தேவாலயத்துக்கு…………. அகில பாரத அளவிலான உமாசங்கர்களை தயார் செய்ய முடியாதா என்ன?

  https://indiafacts.co.in/india-is-not-the-vatican/

  \\ If we turn the clock back, we learn that similar Chief Justices conferences were held on Valmiki Day in 2007 and on Independence Day in 2009, both under the Sonia regime, a fact that Chief Justice of India, Dattu himself mentioned. There was no murmur of protest then either by Justice Kurian or anybody else in the judicial and legal fraternity.\\

  ஆப்ரஹாமியரின் அப்பட்ட மதவெறியாகப்பட்டது விலைக்குப்போன மீடியாவைக்கூட சில சமயம் முழித்துக்கொண்டது போல நடிக்கச் செய்யுமா தெரியவில்லை.

  கொல்கத்தாவில் பேளூர் மடத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் சமயத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். ந்யூஸ் எக்ஸ் டிவி மட்டிலும் இதை ஒளிபரப்பியுள்ளது. மற்ற அத்தனை விலை போன டிவிக்களும் இது பற்றி காஷ்ட மௌனம். ந்யூஸ் எக்ஸ் எப்படி இதை ஒளிபரப்பியது என்பது மர்மமே.

  அதீத பக்கசார்புடனான கட்டப்பஞ்சாயத்துக்களை ****விவாதம்*** என்ற போலிப்பெயரில் மீடியா தொடர்ந்து அரங்கேற்றி வரும் அவலம் தெரிந்ததே. போலி மதசார்பின்மையாளர்களும் ஆப்ரஹாமியத்துக்கு வால்பிடிக்கும் விலை போன அன்பர்களும் இந்த கந்தறகோளாதிகளை ****விவாதம்**** என்று துண்டு தாண்டி சத்தியம் செய்வது புரிந்துகொள்ள முடிகிறது. வாங்கிய பொட்டிக்கு கூவித்தானே ஆக வேண்டும்.

  ஹிந்துத்வ சக்திகள் இந்த ஏமாற்று வேலையை சில தசாப்தங்களாக சந்தித்தே வந்துள்ளனர். இப்போதாவது இந்த பித்தலாட்டத்தை திறமையாக எப்படி எதிர்கொள்வது என்று விவாதிக்க விழைந்தால் ………… there can be some light at the end of the dark tunnel.

 2. நாளொரு கொலையும், பொழுதொரு கலவரமுமாக இருந்த இந்த நாட்டில் என்று மோடி அரசு பதவி ஏற்றதோ அடுத்த வினாடி முதல் ஐயஹோ! இந்த நாட்டில் மதவெறி தாண்டவமாடுகிறது, சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் ஒருசில கூட்டம் அலறத் தொடங்கி விட்டது. முந்தைய நாள் வரை இங்கு என்ன அமைதி பூங்காவா பூத்துக் குலுங்கியது. எப்போதும் போல் தினம் தினம் நடப்பது நடந்தாலும் அதை இரும்புக் கரம் கொண்டு மோடி அடக்குவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அப்படி கூக்குரல் இடுவோர் யார் என்பதைச் சற்று அருகில் சென்று அந்த கோர முகங்களைப் பாருங்கள், அடையாளம் தெரியும். அன்றாடம் ஜாதி அரசியல் பேசி, ஜாதிக் கலவரங்களை உருவாக்கவும், தேவைப்பட்டால் உலகில் உள்ள அத்தனை ஜாதியிலும் தனக்கு உறவுகள் உண்டு என்றும் பேசும் சில அசிங்க முகங்கள், அரசியல் அரிச்சுவடியே இன வாதம், ஜாதிய வாதம் பேசும் சில வட நாட்டுக் கட்சிகள் இவர்களின் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தெரியும் கோர முகங்கள். இப்படி இவர்களின் கூக்குரல் மக்கள் நலம் நாட அல்ல, பூச்சாண்டி காட்டி, எப்படியாவது பா.ஜ.க. அரசுக்கு அவப் பெயர் உண்டாக்கி கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மோடியை மதவாதி என்று சொல்லி கவிழ்த்துவிட்டு தாங்கள் வந்து பதவி பவிசுகளைப் பெற்று கொண்ட மட்டும் மூட்டை அடிக்கச் செய்யும் சாமர்த்தியம் என்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இனி லொல்லுவும் முலாயமும் சரத் யாதவும் ஒன்றாகி விட்டார்களாம். இந்தியாவில் பாலும் தேனும் ஓடப்போகிறது. மத ஒற்றுமை எங்கும் மணக்கப் போகிறது. மாடுகள் செழிப்பாக வளரப்போகிறது. இந்த நாட்டு மக்கள் மட்டும் கடலை நோக்கி ஓடப்போகிறார்கள். ஐயோ பாவம்!

 3. விவிலியத்தைக் கையில் பிடிக்காத ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாத யு. எஸ். நாட்டில் கூட அவர்களுடைய உச்ச நீதி மன்றம் புனித வெள்ளியன்று பணியாற்றுகிறது. இம்மாதம் 3-ம் தேதி ” conference day” என்று அதன் வலைப் பக்கம் (www.supremecourt.gov) தெரிவிக்கிறது.

 4. Ethupontra Katuraikalai indhiyavin ella molikalilum notice adythu Railway station,Bus stand.Market place pontra etankalil makkaluku kodukkavendum. Evargalin hindu veri makkaluku theriyattum.

  Jagadeesan-Hosur

  I wish thirumalai.Edupontra katuraikalai ahikam eluthavendum

 5. Sonia Gandhi does not deserve to be described as “Annai Sonia” ( In what ever sense it was mentioned). It is an insult to the sacred word “Annai” and the motherhood. Is she a mother to all the Indians?
  It is atrocious to allow the judges to work only for 1/2 of the year. They are getting a fat salary to work only for half of the year. No wonder court cases are dragged for more than a mamangam.
  Shri Jagadeesan sir is right in saying that there should be wide publicity of such articles. May God give strength to our Prime Minister to overcome such evil plans to remove him from the prime minister’s post.
  Sakuntala

 6. அருமையான பதிவு, அனைத்து இந்துக்களும் ஒன்றுபட்டால் தான் நம் நாட்டையும் பண்பாட்டைய்ம் காப்பாற்ற முடியும். குரியன் போன்ற தேச விரோத சக்திகளை அகற்ற பகவான் கிருஷ்ணர் மீண்டும் ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்.

 7. நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :

  1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

  2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று
  வரையறுக்காத மதம்.

  3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

  4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
  வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

  5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

  6. ஒட்டு மத்த இந்து சமுகத்தை
  கட்டுபடுத்தும் மதத் அத்தலைவர் என்று யாரும் இல்லை.

  7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு இந்துகளுக்கு.

  8. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும்
  கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும் கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன், நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள் (வராகம்).

  9. நீயும் கடவுள். நானும் கடவுள் …பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

  10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள் , மண் ஆசையை ஒழிக்க இராமாயணம், பொன் ஆசையை ஒழிக்க
  மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த
  சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு கம சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா, ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல் நன்மைக்கு யோகா சாஸ்த்திரம், கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம், விண்ணியலுக்கு கொள் கணிதம்.

  11. வாளால் பரப்பப் படாத மதம்.

  12. எதையும் கொன்று உண்ணலாம் என்றுதொடங்கிய ஆதி மனித உணவு முறையிலிருந்து “கொல்லாமை “”புலால் மறுத்தல்”, ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த
  மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்.

 8. பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கை ஏன் நீங்கள் உங்கள் மதத்தில் இருக்கிறீர்கள் என்று பலரிடம் கேட்டார்கள். அவர்களின் பொதுவான பதில் என் பெற்றோர்களுக்கு பிறந்ததனால் அம்மதமே எனக்காயிற்று; வேறொன்றுமில்லை என்பதே. இதுதான் பேருண்மையும் கூட: ஏனெனில், உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் மதத்தை ஆராய்ந்து தெரிந்து இருக்க அவர்கள் வாழ்க்கையிடம் கொடுக்காது.

  நான் ஏன் இந்துமதத்தில் இருக்க விரும்புகிறேன என்ற் கேள்விக்கே இடமில்லை இவர்களைப்போன்றோருக்கு. என் கதையும் அதில்தான் பொதுவாக வரும். வளரவளர அந்நிலையிலிருந்து சிறிது விடுபட்டுத் தாமாகவே ஆராய்ந்து ஏற்கும் நிலை நிலை வரும்போது பதில் வேறுமாதிரி அல்லது அதன்மேலே கட்டப்பட்டதாக வரும்.

  நான் ஏன் இந்துமதத்தில் இருக்கிறேன் என்பது இருக்க விரும்புகிறேன் என்பதாக வளர்கிறது.

  அப்படி வளரும் போது என்பதில் கிட்டத்தட்ட திரு இசக்கி சொன்ன அனைத்தையும் உள்ளடக்கிக்கொண்டாலும் இன்னும் சிலவும் வரும்:

  அவை:

  அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தனிவழி போக இங்கு எனக்கிடமிருக்கிறது; சித்தர்கள் செய்து காட்டினார்கள்.

  வைதீக இந்துமதத்தில் வருணக்கொள்கையை முற்றிலும் புறந்தள்ள முடியும்.

  பிராமணர்களே வேண்டாம் என்று சொல்ல முடியும்.

  அல்லது வைதீக வழியை முற்றிலும் ஒதுக்க முடிகிறது. நாட்டார் வழிபாடு எனப்போக முடிகிறது.கருவாட்டை அம்மனுக்குப் படைத்து, சாராயத்தையும் அருவாளையும் கருப்பசாமிக்கு படைக்க முடிகிறது. எங்கே பிராமணன் என்ற தேடவேண்டிய அவசியமே இல்லை இவர்களுக்கு.

  நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசமுடியும் (நான் நாத்திகனறு என்றாலும், என் நிலையின் படி அனைத்து தெய்வங்களையும் புறந்தள்ளி விட்டு எனக்குப்பிடித்த ஒரே கடவுள் என்று போகமுடியும்)

  ஆழ்வார்களை படித்து, சைவ நாயன்மார்களை முற்றிலும் புறந்தள்ள முடிகிறது. எக்கடவுளும் வேண்டாம். பெருமாள் மட்டும் போதுமெனலாம். ஆழ்வார்கள் அப்படியே ஏற்கலாம். அவர்கள் சொல்லியவற்றில் குறிப்பிட்டவற்றை மட்டும் ஏற்கலாம்.

  கடவுள் நிந்தனை பண்ண முடியும். நிந்தித்த பின் மறு நாள் மீண்டும் போக முடியும். அனைத்தையும் விரும்பினால் விரும்பலாம்; வெறுத்தால் வெறுக்கலாம். விரும்பி வெறுக்கலாம்; வெறுத்து விரும்பலாம்.

  மூட நம்பிக்கை என்று பட்டால் புறந்தள்ளலாம். இல்லை நம்பிக்கையென்று ஏற்கலாம்.

  வடமொழியை வெறுக்கலாம். தமிழே போதுமெனலாம். என் கடவுள் என் மொழியை ஏற்பார் எனத் திடமாக நம்பலாம்.

  என் இக்கருத்துக்களின்படி ஈ வே ரா அவர்களும் பார்த்திருந்திருந்தால் அவர் பெற்றோரின் மதமான வைணவத்திலேயே நிலைத்திருப்பார்; மாறாக, அவர் வைதீக மதத்தையும் வைதீக பிராமணரையும் ஏற்காததால் அவர் வெறுக்கப்பட்டார். வைதிக மதத்தையும் பிராமணர்களையும் ஏற்றவனே இந்து என்ற போலித்தனமான வெறிகொண்டோரால் அவர் நாத்திகமும் பார்ப்ப்ன எதிர்ப்பையும் கைக்கொண்டார். பார்ப்பனருக்கு மட்டுமன்று இம்மதம். எல்லாருக்குமே என்ற கொள்கை இத்தளம் கொண்டிருப்பதால் ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்குமிடையே இம்மதத்தில் நிலைக்கமுடிகிறது. ஈவேராவும் என்னைப்போல நிலைத்திருப்பார். ஆனால் அவருக்கு அன்று இப்படிச் சொல்ல எவருமே முன்வரவில்லை: அதாவது. நாயக்கரே; இவர்களை வைத்தா இம்மதம் இருக்கிறது? இவர்களைச் சட்டை பண்ணாமல் நீர் இரும்; இம்மதம் உம் பெற்றோரால் உமக்குக்கொடுக்கப்பட்டது. சில வெறியர்கள் வந்து பறிப்பதா? என்று சொல்லப்பட்டிருந்தால் ஈவெரா மட்டுமன்று பலரும் இருந்திருப்பார்கள்.

  My one and only point is: This religion should be common to all. If this assurance should not only be given but should be actively pursued by effectively deterring those who want to make this religion for brahmins only. Beware of them !

 9. ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ………..

  ஹிந்து மதத்தை இழிவு செய்வதில் இனவெறி ஈ.வெ.ராமசாமிக்கு ஈடு கிடையாது.

  இனவெறி ஈ.வெ.ராமசாமி அதைப் பொய்கள் சொல்லிச் சொல்லியே …….. பொய்களையும் திரும்பத் திரும்பச் சொல்லியே …….. உங்களைப்போன்றே க்றைஸ்தவத்துக்குக் காவடி தூக்கும் முகமூடிகளின் துணைகொண்டு ………. ஆப்ரஹாமியரின் காசில்….. ஹிந்துமதத்தை இழிவு செய்தார்.

  \\ வைதீக இந்துமதத்தில் வருணக்கொள்கையை முற்றிலும் புறந்தள்ள முடியும். \\

  ஆர் எஸ் எஸ்ஸில் ஷாகாக்களில் ஈடுபட்டு அனைத்து ஹிந்துக்களுடன் ஒன்றாக உடற்பயிற்சி செய்து, உண்டு, விளையாடி, ஹிந்து நலனுக்காக விவாதங்கள் செய்து………. இவற்றை அன்றாட செயல்பாடாகக் கொண்டவர்களுக்கு மட்டிலும் ஜாதி இணக்கம் பற்றி பேசுவதற்குக் கூட அருகதை உண்டு.

  இனவெறி ஈ.வெ.ராமசாமிக்கு விசிலடிக்கும் த்ராவிட விசிலடச்சான் குஞ்சுகளின் செயல்பாட்டை கைக்கொண்டு ……. இனவெறி ஈ.வெ.ராமசாமியின் தலித் விரோத கந்தறகோளாதிகளை மறைக்க விழையும்……… முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கியாகிய ரெவ ரெண்டு ஜோ அமலன் போன்றோருக்கு ………..இப்படி ஒரு வாசகத்தை எழுத நிச்சயமாக அருகதை கிடையாது.

  தன் வாழ்நாள் முழுதும் தலித் சஹோதரர்களை இழிவாகப் பேசிய இனவெறி ஈ.வெ.ராமசாமிக்கு ……… அந்த இனவெறியரின்…….. கீழ்வெண்மணி அசிங்க ப்ரசங்கங்கள் ………. எமது தலித் சஹோதரிகள் ரவிக்கை போடுவதை……. இழிவாகப் பொது தளத்தில் பேசிய பேச்சுக்கள் இவற்றை……….. க்றைஸ்தவத்துக்கு விலை போன ரெவ ரெண்டு ஜோ அமலன் போன்றவர்கள் தான் ந்யாயப்படுத்த முடியும் …….. அல்லது மறைக்க விழைய முடியும். தன்மானமுள்ள ………. சுயமரியாதை உள்ள…….. எந்த ஹிந்துவும்…….. அவன் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் ந்யாயப்படுத்த முடியாது. இப்படிப்பட்ட இழி செயற்பாடுகளை மறைக்க முடியாது.

  \\ பிராமணர்களே வேண்டாம் என்று சொல்ல முடியும். \\

  யஹூதிகளே வேண்டாம். அவர்களை விஷம் கொடுத்து கொல்ல வேண்டும் என்று நாஸிகள் தான் சொன்னார்கள்.

  இன்றைய திகதியில் நவீன நாஸிகள் த்ராவிடக் கருங்காலிகள்.

  ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் ஊழியம் செய்ய விழையும் க்றைஸ்தவம்……….. யஹூதிகளை இரக்கமின்றி அழித்தொழிப்பதற்கு…….வாடிகனுடைய ஆசியில் செயல்பட்டது. முப்பது லக்ஷம் யஹூதிகளைச் சொல்லொணாத சித்திரவதைகள் செய்து கொன்றொழித்தது. அப்படிப்பட்ட க்றைஸ்தவத்துக்குத் தொண்டூழியம் செய்ய விழையும் ஜோ அமலன் இப்படித் தான் பேச முடியும்.

  நவீன நாகரீக உலகத்தில் ஜோ அமலன் சொல்லும் கருத்து சமூஹ விரோதக் கருத்து என்றே அடையாளப் படுத்தப்படும்.

  ஹிந்து மதத்தில் ………. அதன் அங்கமாகிய எந்த சமயத்திலும்……… வைதிகம், சைவம், சமணம், பௌத்தம், சீக்கியம்……. எதிலும் இப்படிப்பட்ட நாஸித்தனமான காழ்ப்புக் கருத்துக்கு இடம் கிடையாது. மாறாக இப்படிப் பட்ட காழ்ப்பாளர்களுடைய……… கலங்கிய மற்றும் இழிவுக் கருத்துக்களால் நசிந்து போன குறுமதியை சுத்திகரித்து……… இப்படிப்பட்ட சமூஹவிரோதக்கருத்துக்களைப் பேணுபவர்களுக்குக் கூட நல்வாழ்வு அளிக்குமுகமாகத் தான் *******கர் வாப்ஸி******* ஹிந்துத்வ இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது.

  இங்கு பி எஸ் என்ற பெயரில் காழ்ப்புக் கருத்துக்களை……….. ஈ.வெ.ராமசாமி பஜனை என்ற பெயரில் தலித் விரோதக் கருத்துக்களைப் பதியும் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களை…….. ஏதாவது ****** கர் வாப்ஸி****** நிகழ்ச்சியில் கலந்து கொண்டு க்றைஸ்தவத்துக்குத் தலைமுழுகி……… ஹிந்து மதத்தைக் கைக்கொள்ளுமாறு அன்புடன் விக்ஞாபிக்கிறேன்.

  எல்லோரும் இன்புற்றுருப்பதுவேயல்லாமல் வேறொன்றரியேன் பராபரமே…….. என்பதே ஹிந்துமதத்தின் சாரம். எவரொருவரையும் ஹிந்து மதம் வெறுக்கக் கற்றுக் கொடுக்கிறது இல்லை.

  \\ வைதீக வழியை முற்றிலும் ஒதுக்க முடிகிறது. \\

  யுக யுகாந்திரமாக வைதீகத்தை ஆச்ரயித்தவர்களும் உண்டு….. அதை மறுத்து வேறு வழியில் சென்றவர்களும் ஹிந்துஸ்தானத்தில் உண்டு.

  \\ வடமொழியை வெறுக்கலாம். தமிழே போதுமெனலாம் \\

  தமிழே போதுமென்பதில் எந்தத் தவறும் இல்லை. இல்லவே இல்லை.

  வடமொழியை வெறுப்பது என்பது பரங்கிய க்றைஸ்தவ ஏகாதிபத்ய அரசியல்.

  ஒரு மொழியை வெறுப்பது என்பது மதம் சார்ந்த விஷயம் இல்லை. ஏகாதிபத்ய பரங்கிய க்றைஸ்தவ அரசியல் தான் மொழிவெறுப்பை க்றைஸ்தவ மதமாற்ற சாதனமாக முன்னிறுத்துகிறது.

  வடமொழிவெறுப்பு என்பது ஹிந்துஸ்தான க்றைஸ்தவத்தின் அங்கம் இல்லை. நிச்சயமாக இல்லை.

  சமூஹத்தை மொழிக் காழ்ப்பு, ஜாதிக்காழ்ப்பு என்று காழ்ப்புகளால் கூறு போட்டால் சுலபமாக ஆன்ம அறுவடை செய்து ஹிந்து மதத்தை ஒழித்து……. க்றைஸ்தவத்தை நிலை நாட்ட முடியும் என்பது ………… பி எஸ் என்ற பெயரில் கருத்துப் பதியும் …….. முன்னாளில் இங்கு வேறு அவதாரத்தில் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரில் கருத்துப் பதிந்த அன்பர் அவர்களின் தப்புக் கணக்கு.

  தமிழோ சம்ஸ்க்ருதமோ ஹிந்துக்களுக்கு மட்டிலும் சொந்தமான மொழி கிடையாது. கிடையவே கிடையாது. மொழி என்பது ஒரு சாதனம் மட்டிலுமே.

  தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வைதிக, சமண, பௌத்த, க்றைஸ்தவ இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பி.ஸி.தேவஸியா அவர்களால் க்றிஸ்துபாகவதம் என்ற சம்ஸ்க்ருத காவ்யம் இயற்றப்பட்டு அது சாஹித்ய அகாதமி விருதும் பெற்றது.

  ஹிந்துஸ்தானத்தில் பெருமை உடைய ஒவ்வொரு ஹிந்துஸ்தானியும்……… அவன் ஹிந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி, க்றைஸ்தவராக இருந்தாலும் சரி……… எந்த மொழியையும் வெறுக்க மாட்டான்.

  பரங்கிய க்றைஸ்தவ தேவாலயத்துக்கு விலைபோன பதர்கள் மட்டிலும் தான் மொழியின் அடிப்படையில் தேசத்தைக் கூறுபோட்டு…….. மொழி வெறுப்பு என்ற சாதனத்தைக் கைக்கொண்டு……… உண்மையில் எந்த மொழியின் மீதும் பற்றில்லாது…….. க்றைஸ்தவத்தின் மீதுமட்டிலும் பற்றுக்கொண்டு…….. ஹிந்துஸ்தானத்தை பிளக்க மொழிக்காழ்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டு க்றைஸ்தவ மதமாற்றத்துக்கு தூபம் போடுவார்கள். ஹிந்துக்கள் கையெடுக்கும் *****கர் வாப்ஸி****** போன்ற நிகழ்வுகளை வெறுப்பார்கள்.

  இந்த தளத்தில் கருத்துப் பதிந்துள்ள பண்பட்ட தமிழ்ப்பற்றாளர்களான…….. சைவ சமயத்தை ஒழுகும் அன்பர்களான ……….பேரன்பிற்குரிய ஸ்ரீ தாயுமானவன் மற்றும் ஸ்ரீ வியாசன் போன்ற தமிழ்ப்பண்பில் ஊறிய பெருந்தகைகள் ……….. தாங்கள் எந்த மொழியையும் ……….சம்ஸ்க்ருதம் உட்பட…….வெறுப்பதில்லை என்று வெளிப்படையாக……….. இந்த தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்கள் என்பதையும் இங்கு நினைவு கூறுவது அவச்யம்.

  பொய்யிலே மட்டிலும் ஊறிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களது குறுமதி…….. காழ்ப்பு மதி….. பண்படுவதாக.

  \\ அவர் (ஈ.வெ.ரா) வைதீக மதத்தையும் வைதீக பிராமணரையும் ஏற்காததால் அவர் வெறுக்கப்பட்டார். \\

  பச்சைப்புளுகு. பொய்யாக வைஷ்ணவம் பேசும் ………முகமூடி க்றைஸ்தவராகிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களுக்கு ………இனவெறி ஈ.வெ.ராமசாமி அவர்கள் ராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விட்டது தெரியும். அப்படித் தெரிந்தே கூட ……… அதை முழுப்பூசணியில் மறைத்து……. அப்படி மறைக்க மட்டிலும் செய்யாது…….. தன்னை வைஷ்ணவன் என்றும் சொல்ல……… கணக்கில்லாத நெஞ்சழுத்தம் இருந்தால் தான் முடியும்.

  இனவெறி ஈ.வெ.ராமசாமி தலித் சஹோதரர்களை தமது வாழ்நாள் முழுதும் இழிவு செய்ததாலும் ஹிந்து மதத்தையும் தான் பிறந்த வைஷ்ணவ சமயத்தையும் தன் வாழ்நாள் முழுதும் இழிவு செய்ததால் தான் ஹிந்து மதத்தவர்களால்…….வைஷ்ணவர்களால்……… தொடர்ந்து கடும் கண்டனங்களுக்கு உள்ளானார்.

  \\ வைதிக மதத்தையும் பிராமணர்களையும் ஏற்றவனே இந்து என்ற போலித்தனமான வெறிகொண்டோரால் \\

  இது ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்று க்றைஸ்தவத்துக்கு ஊழியம் செய்ய வாக்கு தத்தம் செய்துள்ள ….. இங்கு இப்போது……… பி எஸ் என்ற பெயரில் கருத்துப்பதியும் ………. போலித் தனத்தில் உரையும் அன்பரின் பொய்க்கருத்து. பச்சைப் புளுகுக் கருத்து.

  உண்மையில் உலகத்தில் எவருமே அப்படி இல்லை. இல்லவே இல்லை.

  அந்தணர் என்ன மறவர் என்ன வணிகர் என்ன வேளாளர் என்ன……… அல்லது வேற்று மதத்தவராக இருந்தால் தான் என்ன……. என்ற படிக்கு க்றைஸ்தவ குடும்பத்தில் பிறந்த மாணிக்கமான ஸ்ரீ டி.எ.ஜோஸஃப் என்ற அன்பரை ஆட்கொண்டது ஸ்ரீ உ.வே.வீரராகவ ஐயங்கார் ஸ்வாமி. ஒரு க்றைஸ்தவருக்கு வைஷ்ணவத்தை போதித்து அவரை ஒவ்வொரு வைஷ்ணவ ஆசார்யரும் விதந்தோதும் படிச் செய்தவர்……. ஒவ்வொரு ஹிந்துவும் அவரை விதந்தோதும் படிச் செய்தவர்.

  பார்ப்பனராகப் பிறந்து ஹிந்து மதத்தை இழிவு செய்யும் பதிவுகளை எழுதியவர் அக்னிஹோத்ரம் தாத்தாசாரியார் என்ற பதர். பூஜ்ய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் தன் ஆசார்யனிடம் கற்ற கல்வியின் துணை கொண்டு ப்ராம்மணாராகப் பிறந்த இந்த தாத்தாசாரியாரின் ஹிந்து மதக்காழ்ப்புகளுக்கு சாஸ்த்ர ரீதியாகப் பதிலடி கொடுத்து ஒட்டு மொத்த ஹிந்து மதத்தவரது அன்பையும் மதிப்பையும் பெற்றவர். (அந்த எதிர்வினைப் பதிவுகள் விஜயபாரதத்தில் பதிவானது என்று என் நினைவு…… தவறானால் திருத்தவும்.)

  இங்கு முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கம் செய்யும் ……….ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்ட ஈ.வெ.ராமசாமியை துதி செய்து கொண்டே………….தன்னை வைஷ்ணவன் என்று பினாத்தும்……… ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ………….

  தன்னுடைய முந்தைய ப்ராம்மண அவதாரமாகிய அய் அய் எம் கணபதி ராம அவதாரத்தில் அக்னிஹோத்ரம் தாத்தாசாரியார் என்ற பதரை கொண்டாடோ கொண்டாடோ என்று கொண்டாடி ஆதரித்ததும் ………

  அந்த ப்ராம்மண அவதாரத்திலும்….. தற்போதைய …….. பால சுந்தரம் க்ருஷ்ணா என்ற நீண்ட அவதாரத்திலும்………அது டபக்கென்று கைவிடப்பட்டு மதி குறுகிய பி எஸ் என்ற அவதாரத்திலும்………. ஹிந்து மதத்திற்கு பெரும் சேவை செய்துள்ள பூஜ்ய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை ………. திண்ணை மற்றும் தமிழ் ஹிந்து என்று ஒவ்வொரு தளத்திலும் இழிவு செய்ததும்………..

  இந்த போலியான செயற்பாடுகளை மட்டிலுமே கைக்கொண்ட ……… பொய்மையையே தொழிலாகக் கொண்ட……..அன்பர் ஜோ அமலனின் அவதாரத்தைப் பின் தொடரும் ஒவ்வொரு அன்பரும் அறிவார்கள்.

  அன்பர் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் க்றைஸ்தவத்துக்கு ஊழியம் செய்ய விரும்பலாம். அல்லது தான் க்றைஸ்தவத்துக்கு செய்த வாக்கு தத்தத்தைத் துறந்து வைஷ்ணவத்தை ஏற்க விழையலாம். அல்லது ஹிந்துப் பெயரில் இருந்து க்றைஸ்தவத்துக்கு ஊழியம் செய்யவும் விரும்பலாம். இந்த தளத்தில் ஒரு காலத்தில் அசோக் குமார் கணேசன் என்ற பெயரில் ஒரு க்றைஸ்தவ ஊழியர் கருத்து பதிந்துள்ளார். அவருக்கு பிடித்த மதத்தைக் கைக்கொள்வது அவர் விருப்பம். ஏதாவது ஒரு மதத்தை ஒழுகி அவர் நற்கதி பெருவாராக.

  அன்பர் ரெவ ரெண்டு ஜோ அவர்கள் நேர்மையை முதலில் கைக்கொள்ள விழைவது அவருக்கும் அவர் சேவை செய்ய விழையும் எந்த ஒரு மதத்திற்கும் நன்மை பயக்கும். வெறுப்பு என்பது மனித குணமல்ல.

  வெறுப்பு என்ற இழி செயற்பாட்டிலிருந்து அன்பின் ஜோ அவர்கள் வெளி வந்து தன் வாழ்வில் அன்பு என்பதை ருசிக்கக் கற்றுக்கொண்டால் உலகமே அவரை அரவணைக்கும். நேர்மையைக் கைக்கொண்டு பொய்களை அவர் தலைமுழுகுவது ……… ஒவ்வொரு வ்யாசத்திலும் மடைமாற்றம் செய்வதைக் கைவிடுவது…….அவருடைய பரந்த வாசிப்பினை மெருகேற்றி அவருக்கும்……. அவருடைய கருத்துக்களை வாசிக்க விழையும் வாசகர்களுக்கும் பயனளிக்கும்.

  அன்பின் ஜோ அவர்கள் விதந்தோதும் எந்த மதத்தையும் சார்ந்த ஏக இறைவன் அவருக்கு சத் புத்தி அளிப்பாராக.

 10. மஹா கனம் ஸ்ரீ க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு முதற் கண் நன்றி. ஏனெனில் திரு esakki அவர்களின் 12 குறிப்புக்களையும் நகல் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டு தொடர்ந்து பஸ் என்பவரின் கருத்தை இரண்டுமுறை வாசித்தும் அவர் சொல்ல விளையும் கருத்தின் தாற்பரியத்தை புரியமுடியவில்லை. தங்களின் அவருக்கான பதிலின் முலமே அவர் யார் என்பதனை அறிந்துகொண்டேன். பின்புதான் விடையம் புரிந்தது.அன்பர் ரெவ ரெண்டு ஜோ அவர்கள் நேர்மையை முதலில் கைக்கொள்ள விழைவது அவருக்கும் அவர் சேவை செய்ய விழையும் மதத்திற்கும் நன்மை பயக்கும். தான் யார் என்பதை நேர்மையாக அடையளபடுத்திக்கொண்டு பதிவிடும்போழுது புரிந்து கொள்வது எமக்கு இலகுவாக இருக்கும்.
  ஸர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *