அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்

கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் மாநில சட்டப்படி தான் குற்றம் என்பதால் மாநில நீதிமன்றங்களிலேயே பிரச்சினை முடிந்துவிடும். இங்கிருப்பது போல் காசு இருக்கிறது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் வழக்கு நடத்தும் பஜனை எல்லாம் கிடையாது… இங்கிருப்பது போல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிப்பார்கள். அரசு வக்கீல் வாதாட மட்டும் வருவார் என்ற நிலை அங்கே கிடையாது. நீதித்துறையின் கீழ் தான் போலீஸும் மற்றைய துறைகளும் மாநில, மத்திய அளவிலே இயங்கும். நீதித்துறைக்கு தலைவராக ஒரு வக்கீல் இருப்பார். மாநில அளவில் அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்…. ஒரு சட்ட மீறல் நடக்கிறது என்றால் (உதா: ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது), உடனே அமெரிக்க மத்திய வியாபார கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.அவர்களாகவே தானாகவே முன்வந்து நீதிமன்றத்திலே அந்த கம்பெனி மேல் வழக்கு தொடுப்பார்கள்…

View More அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்

சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்

சோனியா மன்மோகன் மாஃபியா நியமித்த அத்தனை கேரள ஜட்ஜுகளுமே ஊழல்வாதிகளாகவும் கறை படிந்தவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கடவுளுக்கும் மேலான அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருக்கிறார்கள். முதலில் கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்கும் பொழுது உடனடியாக மோடியின் அரசு இவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த லீவுகளை ரத்து செய்து இவர்களையெல்லாம் 24X7 ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மக்களின் வரிப்பணம் இவர்கள் தின்று விட்டுத் தூங்குவதற்காக வீணாவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். குரியனுக்கு அப்படியே கட்டாயமாக கேரளத்தில் போய்தான் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று இருந்தால் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லி விட்டுப் போயிருந்திருக்கலாம். தத்து தடுத்திருக்கப் போவதில்லை. சோனியா ஆட்சியில் பொத்திக் கொண்டிருந்து விட்டு இப்பொழுது மோடியின் ஆட்சியில் மட்டும் அவதூறு சொல்வது திட்டமிட்ட சதி. உள்நோக்கம் உடையது அயோக்கியத்தனமானது மட்டுமே….

View More சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்

தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்

தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம்.

View More தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்